எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக - கதை திரி - முன்னுரை

Status
Not open for further replies.

NNK-64

Moderator
இனிய தோழமைகளே,

#திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக…

பெண்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை கையாள அவர்களுக்கு திமிரும் தேவைபடுகிறது.. அது ஆணவ திமிர் அல்ல..பாரதி சொன்னது போல திமிர்ந்த ஞான செருக்கும் தேவைபடுகிறது..

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் - மகாகவி பாரதியார்


பெயருக்கேற்றாற் போல பேரழகியாக இருக்கும் நம் கதையின் நாயகி எழிலழகி எப்படி திமிரழகியாக மாறுகிறாள்..பெண்களின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் உண்மையான ஆண்மகனாக நாயன் நிரஞ்சன் இருப்பானா? என்பதை சுவராசியமான நடையில் கொடுக்க திட்டமிட்டுள்ளேன்..இந்த கதையில் வரும் நிகழ்ச்சிகளை கண்டிப்பாக ஒரு தாக்கத்தையும் விழிப்புணர்வையும் தரும் என்று நம்புகிறேன்..

புதிய எழுத்தாளராக களம் இறங்கி இருக்கும் என்னை உங்களுடன் சேர்த்து கொள்வீர்களா தோழமைகளே? உங்களின் மேலான கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.. உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!


இப்படிக்கு
NNK 64
 
Status
Not open for further replies.
Top