எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

யுத்தம் செய்வோமா யுவராணி - கதைத்திரி

Status
Not open for further replies.

NNK-96

Moderator
Hi friends.. யுத்தம் செய்வோமா யுவராணி கதை எழுதப்போறது நான் தான், எண் 96.

கதை இப்படி இருக்கும், அப்படி இருக்கும்ன்னு நான் சொல்றத விட, கதை போடப் போட அது எப்படி இருக்குன்னு நீங்களே சொன்னா நல்லா இருக்குங்க.

சீக்கிரமே டீஸர், டிரெய்லர், பாடல் வெளியீட்டு விழா எல்லாத்துலயும் சந்திப்போம்.

அப்பறம் இது ஒரு பக்கா ஆன்டி ஹீரோ கதை.

Stay tuned!

உங்களுடைய கருத்துக்களை மறக்காம இங்கே பதிவிடுங்க பிரெண்ட்ஸ்.
👇👇👇https://www.narumugainovels.com/index.php?threads/யுத்தம்-செய்வோமா-யுவராணி-கருத்துத்திரி.10564/
 
Last edited:

NNK-96

Moderator
Hi hi hi..

வாங்க ஒரு ஆன்டி ஹீரோ கதைக்கு டீஸர் படிக்கலாம்.

கதை பெயர் யுத்தம் செய்வோமா யுவராணி , பேர்லயே சண்டையை வச்சுகிட்டு சீனுக்கு சீன் சண்டை போடலன்னா எப்படி? அதான் டீசரே ஒரு சண்டை காட்சி தான். உடனே கத்தி, கடப்பாரை, துப்பாக்கி வச்சு சண்டை செய்யப் போறாங்கன்னு தப்பா நினைக்காதீங்க. ஆன்டி ஹீரோக்களின் ஆயுதமே " தாலி" தானே! அதை வச்சு தான் சண்டை. பாக்கலாமா?

டீஸர் 1:

"உங்க எல்லாருக்கும் கல்யாணம்னா விளையாட்டா போச்சா? என்கிட்ட சம்மதம் கேட்கணும்னு உங்க யாருக்குமே தோனலையா? இன்னும் எந்த காலத்துல எல்லாரும் வாழ்ந்துட்டு இருக்கீங்க?" சுற்றி நின்ற உறவுகள் அனைவரையும் தன் கனல் கக்கும் பார்வையால் சுட்டெரித்துக் கொண்டே கையில் கிடைத்த பொருட்களை அங்கே நின்றிருந்தவன் மீது வீசி எறிந்தாள் யுவனி.

நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் என்ன? இங்கே இவர்கள் செய்யத்துணியும் செயல் தான் என்ன? என்ற உட்சபட்சக் கோபத்தில் இருந்த யுவனிக்கு எதிரே நிற்பவனைப் பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை.

ஆனால் அவளது வார்த்தைகளோ செயலோ தன்னையும் எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்புடன் நின்றிருந்தான் அவன்.

அவளது செயலைக் கண்டு வெகுண்ட அவளது தந்தை, "ஏய் யார் கிட்ட என்ன பேசுற? யார் மேல கண்டதையும் வீசுற? அவர் யார் தெரியுமா? அவரை கல்யாணம் பண்ணிக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்." என்று தான் பெற்ற மகளை அடக்க முன்னே வந்தார்.

அவரை அதே கனல் பார்வையில் தள்ளி நிற்க வைத்தவள், "இப்படித் தானே அக்காவையும் கட்டாயப்படுத்தி இவங்க குடும்பத்துல கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சிங்க? அவ எங்க? இப்போ இங்க என்ன நடந்துட்டு இருக்கு? அவளோட பதினாறாவது நாள் காரியம். இப்போ என்னை இவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க ஏன் இப்படி துடிக்கிறீங்க?" என்று அவரை நேர்கொண்டு வினவினாள்.

அவளது கேள்வியில் அவளது சித்தியும் அவளை இத்தனை நாட்கள் தன் கண்ணின் கருமணி போல வளர்த்தவருமான சாரதா தன் சகோதரியையும் அவள் கணவரையும் பார்த்து, அவர்களின் செயலால் தான் மனம் வருந்தி இருந்தாலும் மகள் வருத்தத்தில் கூட பயமில்லாமல் கேள்வி கேட்பதில் பெருமிதம் கொண்டு ஜாடை காட்டினார்.

அவள் தந்தை பசுபதி பதில் சொல்ல முடியாமல் கையைப் பிசைந்தபடி நிற்க, அவருக்கு முன்னே தன் கம்பீரமான உயரத்துடன் வந்து நின்று அவளது கண்ணோடு கண் நோக்கி,"ஏன்னா நான் என்ன சொல்றேனோ அதான் இங்க நடக்கும். நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னேன். அதான் நடக்கவும் போகுது. உன்னோட சம்மதம் இங்க யாருக்கும் தேவையில்ல." என்றான் .

அத்தனை நேரமும் தைரியமாக எதிர்த்து பேசிக்கொண்டிருந்தாள் யுவனி, இபொழுதும் அவனது அதிகாரமான பேச்சில் எரிச்சல் கொண்டு, அவனை எச்சரிக்கும் எண்ணத்துடன் விரலை உயர்த்தி ஏதோ கூற வந்தாள்.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் கையில் பசும்மஞ்சள் தாலியுடன் அவளை நோக்கி நடந்து வந்தான் அவன்.

அவன் முன்னேற முன்னேற நா வறண்டு, முதல் முறை அவலது நெஞ்சம் பயத்தில் துடித்தது. தன்னை காக்க இங்கே அவளது வளர்ப்பு அன்னையைத் தவிர யாருமில்லை. ஆனால் அவரும் இப்பொழுது கையறு நிலையில் நிற்க, அவனது அழுத்தமான நடையைக் கண்டு அவள் பின்னோக்கிச் சென்றாள்.

வேண்டாம் என்பதாக தன் தலையை குறுக்கே ஆட்டி, கைகளை அவனை நோக்கி தடுக்கும் முயற்சியில் இருந்த யுவனி,அந்த அறையின் சுவரில் மோதி நின்றாள்.

"ராஜா கொஞ்சம் யோசிப்பா" என்று மெல்லிய குரலில் அவனது அன்னை அவனைத் தடுக்க முனைந்தார்.


ஆனால் அவனது மொத்தக் குடும்பமும், "ஆர்.வி நீ கட்டு டா." என்று கூற,

இதோ அவளை சமீபித்து அவளது மென்மையான கைகளை தன் இடக்கரத்தால் வளைத்து அவளை சுவருடன் நிறுத்தி, அவளது மறுப்பைச் சற்றும் சட்டை செய்யாமல் அவளின் கழுத்தில் திருமாங்கல்யத்தைப் பூட்டினான் ராஜவினோதன்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

நம்ம ராஜாவுக்கு ஏத்த ராணியா நம்ம யுவனி என்ன பண்ணுவான்னு கதை வரும்போது

தெரிஞ்சுக்கலாம்.

Stay tuned!!!!!


உங்களுடைய மேலான கருத்துக்களை இங்கே பதிவிடுங்க பிரெண்ட்ஸ்
.

 

NNK-96

Moderator
யுத்தம் 1

வாகன நெரிசல் நிறைந்த அண்ணா சாலையில் வெளியே ஒலிக்கும் எந்த ஒலிப்பானின் ஒலியும் கேட்காது அமைதியாக அந்த உயர்ரக காரின் பின் இருக்கையில் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் அவன்.

அலுவலகத்திற்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் நேரமாவதால் வாகன நெரிசலில் ஹாரனின் மேலிருந்து பலரும் விரலை விலக்குவதே இல்லை. இறக்கை இருந்திருந்தால் வானத்தில் கூட கூட்ட நெரிசலால் காற்றுக்கும் இடமில்லாது போயிருக்கும்.

வாகன ஓட்டுநர் கண்ணப்பன் கண்ணாடி வழியே பின்னே அமர்ந்திருந்தவனைக் கண்ணெடுக்காமல் கண்டார்.

அவர் அவர்களின் வீட்டிற்கு டிரைவராக வேலையில் சேரும்போது அவனுக்கு வயது பத்து இருந்திருக்கலாம். இந்த பதினாறு வருடங்களில் அவனை எண்ணி அவர் வியக்காதே நாளே இல்லை.

இத்தனை பணம் கையில் உள்ள ஒருவன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்து மகிழ்ச்சியோடு இருந்திருக்கலாம். ஆனால் குடும்பமும் அவர்களின் தொழிலும் அவனுக்கு இரு கண்களாக இருப்பதைக் கண்டு அவனை தொலைவில் இருந்தே மெச்சிக் கொள்வார். ஏனெனில் அவனை நெருங்கி, நினைத்ததெல்லாம் அன்பாய் பேசிவிட முடியாது. ஒரு பார்வையில் தள்ளி நிறுத்தி விடுவான்.

அவன்.. அவன் தான் ராஜவினோதன்.

ராஜலிங்கம் குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனத்தின் சேர்மேன்.

இவர் அவனை பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சாலையில் போக்குவரத்து சமிஞ்சை சிவப்பில் இருந்து பச்சைக்கு மாறி இருக்க,

"ஹ்ம்ம், கண்ணா அண்ணா ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க." என்று சற்று கண்டிப்பான குரலில் கூறினான் ராஜவினோதன் என்ற ஆர். வி.

அவனது கைபேசி சரியாக அந்த நேரத்தில் மணி ஒலிக்க, ஓட்டுநரின் வேறேதும் பேசாமல் கைபேசியை காதுக்குக் கொடுத்தான்.

"சித்தப்பா அந்த பொண்ணு வந்துட்டாளா?" என்று எடுத்தவுடன் அவன் கேட்ட கேள்விக்கு எதிர்த்தரப்பில் இருந்த அவனது சித்தப்பா ரங்கராஜன் கொடுத்த பதில் அவனுக்கு ரசிக்கவில்லை என்பது அவனது இறுக்கமான முகத்தில் இருந்தே தெரிந்தது.

"எனக்கு தெரியாது நாளைக்கு அவ அவங்க வீட்ல இருக்கணும். யாரும் எனக்கு எந்த எக்ஸ்கியூசும் சொல்லாதீங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல எனக்கு மும்பை பிளைட். இன்னிக்கு மிட் நைட் நான் வரும்போது இதே பதிலை நான் கேட்கக் கூடாது. அவங்க அப்பா கிட்ட சொல்லிடுங்க." என்றான் கோபமாக.

அவன் அப்படி கூறியதும் இங்கே ராஜவிலாசத்தில் இருந்த அனைவர் முகமும் விழுந்து விட்டது.

'ராஜவிலாசம்' பெரியவர் ராஜலிங்கம் பார்த்துப் பார்த்து தன்னுடைய வாரிசுகளுக்காக ஏற்படுத்திய மாளிகை.

ராஜலிங்கம் - வள்ளி தம்பதிகளுக்கு ராஜரத்தினம், ரங்கராஜன் என்ற இரு புதல்வர்கள்.

ராஜலிங்கம் தொட்ட அனைத்து தொழிலும் துலங்கியது. அவரை தொழில் வட்டத்தில் 'மிடாஸ்' என்று அழைக்கும் அளவுக்கு அவர் கால் பதித்த தொழில்களில் சாதனைகளை செய்து குவித்தார்.

ஆனால் அவரது மகன்களான ராஜரத்தினமும் , ரங்கராஜனும் அவ்வாறு இல்லாமல் அவரது மனைவி வள்ளியைப் போல மென்மையும், நேர்மையும் மிக்கப் பொருந்தி இருந்தனர்.

அதனால் தொழிலை மகன்களிடம் ஒப்படைக்காமல் தானே பார்த்து வந்தவர் ராஜரத்தினத்தின் மகன்களான நித்யவினோதன் மற்றும் ராஜவினோதன் ரங்கராஜனின் மகள் அஞ்சலி மூவரையும் தன் மேற்பார்வையில் தொழில் சாம்ராஜியத்திற்கு வாரிசுகளாக வளர்த்தார்.

அதிலும் ராஜவினோதன் ராஜலிங்கத்தின் பிரதி பிம்பமாகவே வளர்ந்தான். அதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ராஜலிங்கத்திடம் என்ன பயமும் மரியாதையும் இருந்ததோ அது அப்படியே ராஜவினோதனிடம் தொடர்ந்தது.

ராஜரத்தினம் அவரது மனைவி காஞ்சனா. அவர்கள் மகன்கள் நித்யவினோதன், ராஜவினோதன்.

ரங்கராஜன் அவரது மனைவி ஈஸ்வரி அவர்களது ஒரே மகள் அஞ்சலி.

ராஜலிங்கம் நான்காண்டுகளுக்கு முன் மாரடைப்பால் மரணித்திருக்க, வீட்டின் முழு ஆளுமையும் இளையவர்கள் நித்யன், ஆர். வி மற்றும் அஞ்சலியிடம் வந்து சேர்ந்தது.

வீட்டில் அனைவரின் பெயரும் ராஜ என்று இருப்பதால் அவனது பெயர் சுருங்கி ஆர்.வி என்றானது. பெரியவன் நித்யன் ஆனான்.

வீட்டின் கடைக்குட்டி அஞ்சலி அண்ணன்கள் இருவருக்கும் செல்லப் பிள்ளை.

பெற்றோர் நால்வரும் பொம்மைகள். பாட்டி வள்ளியின் அழுத்தமான சொல்லுக்கு மட்டுமே ஆர். வி சற்று அடங்குவான்.

இப்படி மொத்த வீட்டையும் தன் விரலசைவில் வைத்திருக்கும் ஒருவன் ஒன்றை கேட்டு இல்லை என்று யாராலாவது மறுக்க முடியுமா?

ஆனால் இன்று அவன் கேட்பது வேறு வீட்டுப் பெண்ணை. அதிலும் கட்டாயம் செய்தாவது திருமணம் செய்வேன் என்று அவன் கூறியதைக் கேட்ட அனைவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

நள்ளிரவில் வீடு திரும்பி அவன் கேள்வி கேட்டால் என்ன செய்வதென்று ரத்தினமும், ரங்கனும் யோசித்துக் கொண்டிருக்க,

"அவன் சொல்றத செஞ்சிட்டு போறது தான் நமக்கு நல்லது." என்று அங்கிருந்து விலகிக் கொண்டார் ரங்கனின் மனைவி ஈஸ்வரி.

ஆனால் ஆர்.வியின் அன்னையான காஞ்சனா,

"அவன் என்ன சொன்னாலும் நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேங்க. நாம அந்த பொண்ணை பார்த்தது கூட இல்ல. அதுவும் இல்லாம இப்ப குடும்பம் இருக்குற நிலையில இந்த கல்யாணம் அவசியமா?" என்று மனம் பொறுக்காமல் கண்ணீருடன் வினவினார்.

ரத்தினம் ஒரு பெருமூச்சை விட்டு, "உனக்கு புரியல காஞ்சனா. நித்யன் இருந்திருந்தா அவனை கொஞ்சமாவது யோசிக்க சொல்லி சொல்லுவான். ஆனா அவன் இப்போ இதெல்லாம் பண்றதே நித்யனுக்காகன்னு சொல்லும்போது அவனை தடுக்க எனக்கு தோணல." என்றார்.

"அண்ணன் சொல்றது உண்மை தான் அண்ணி. அவன் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு கேட்கல. அவன் கேட்கறது நம்ம குடும்பத்துக்காக. நமக்காக கேட்கறான். எப்படி அவனை எதிர்த்து பேசுறது?" என்றார் ரங்கன் வருத்தமாக.

"உங்க அப்பா பிஸ்னஸ் எல்லாத்தையும் உங்களுக்கு கொடுக்காம அவனுங்களுக்கு கொடுக்கும் போதே நான் சொன்னேன், சின்னப்பசங்க நம்ம கைமீறி போயிடுவாங்கன்னு. அவர் தான் என் பேச்சை கேட்கவே இல்ல. நீங்க ரெண்டு பேரும் தொழில்ல நெளிவு சுழிவா நடக்காம இருக்கறது பெருசா அவர் வளர்த்து வச்சதை பாதிக்கும்ன்னு சொல்லி என் வாயை அடைச்சிட்டார்.

அன்னைக்கு நித்யன் இப்படித்தான் வந்து ஒரு பொண்ணை பிடிச்சிருக்குன்னு நின்னான். கல்யாணம் பண்ணி வச்சோம். என்னத்த வாழ்ந்தான் சொல்லுங்க. அவனாவது பிடிச்சு கல்யாணம் பண்ணினான். ஆனா இவன்.. அந்த பொண்ணுகிட்ட சம்மதம் கூட கேட்கல. கேட்க வேண்டாம்னு சொல்றான். எல்லாம் உங்க அப்பா கொடுத்த இடம்." என்று கோபமாக பேசினார் வள்ளி.

இப்படி இவர்கள் அனைவரும் மாய்ந்து மாய்ந்து பேசிக்கொண்டிருக்கும் அந்த ஆர். வி திருமணம் செய்து கொள்ளக் கேட்ட பெண் அதே நேரத்தில் நாளை தன் விதியை மாற்றப் போவது இவன் தான் என்று தெரியாமல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அவன் மீதே தெரியாமல் மோதிவிட்டு 'சாரி' என்று காற்றில் கூறி வேகமாக சென்று மறைந்தாள்.

மும்பை செல்லும் விமானத்திற்கு வந்த கடைசி அறிவிப்பின் போது உள்ளே நுழைந்த ஆர். வி தன்னை வேகமாக இடித்து விட்டுச் செல்லும் பெண்ணைக் கண்டு சற்றே புருவம் உயர்த்தி நொடிப்பொழுது அதே இடத்தில் நின்றான்.

பின் நாளை அவன் நினைத்தது சரியாக நடக்க அவனுக்கு தேவையான அவள் சென்னை வந்து இறங்கி விட்டதைக் கண்டு மெல்லிய முறுவல் பூக்க விமானத்தின் எண்ட்ரி கேட் நோக்கி நடக்கலானான்.

யார் மீதோ மோதியதில் லேசாக தோள்ப்பட்டையில் ஏற்பட்ட வலியை மற்றொரு கை கொண்டு தேய்த்தபடி தன் தந்தை தெரிகிறாரா என்று வெளியே வந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

பதினைந்து நாட்களுக்கு முன்னே இவளை யார் பார்த்திருந்தாலும் சினிமாவில் வாய்ப்பு வந்தால் நடிப்பாயா என்று கேட்கும் அளவுக்கு அழகில் அல்லி ராணி போல இருந்தவள் தான்.

ஆனால் இன்று முகமெல்லாம் வாடி, யோசனையில் நெற்றி சுருங்கி, தூங்காத காரணத்தால் சிவந்து போன விழிகளும், அதனை எடுத்துக் காட்டும் அளவுக்கு கண்ணைச் சுற்றி மெல்லிய கருவளையமும் கொண்டு சோக உருவாக நின்றிருந்தாள் யுவனி்.

அவளது அன்னை தந்தை இருவரும் அவளை அழைத்துக் கொண்டு போக விமான நிலையம் வந்திருக்கவில்லை. ஆனால் அவளை எடுத்து வளர்த்த அவளது வளர்ப்புத்தாயும் உறவில் சித்தியுமான சாரதா அவளைக் கண்டு கையசைத்தார்.

அவரைக் கண்டதும் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டவள்,

"மம்மி. என்ன திடீர்னு இப்படி நடந்திடுச்சு? அப்பா என்னை வர வேண்டாம்னு சொன்னாரு மம்மி. எனக்கு தான் மனசு கேட்கல. உங்களையும் அம்மாவையும் பார்க்கணும் போல இருந்தது." என்று சிறு குழந்தை போல இடம் பொருள் கூட பார்க்காமல் சாரதாவை கட்டிக்கொண்டு மௌனமாக கண்ணீர் உகுத்தாள் யுவனி்.

"நம்ம கையில என்ன இருக்கு யுவனிம்மா. எல்லாம் கடவுள் போட்டு வைக்கிற கணக்கு படி தான் நடக்கும்." என்று பெருமூச்சு விட்டு அவளை சமாதானம் செய்தவர்,

"வா எல்லாத்தையும் வீட்டுல போய் பேசிக்கலாம்." என்று அவர் வந்த வாடகை காரை கைபேசியில் அழைத்தார்.

"அப்பா என்கிட்ட எதையும் தெளிவா சொல்லவே இல்ல மம்மி. அம்மா நேத்து போன் பண்ணி ஒரே அழுகை. அப்பவும் 'எனக்கு எதுவும் தெரியாம போச்சு யுவனி் இல்லன்னா இப்படி நடக்கற வரைக்கும் விட்டு இருப்பேனா'ன்னு அழறாங்க." என்று அவள் நிறுத்தாமல் பேசிக்கொண்டு வந்தாள்.

"எனக்கு உன் நிலைமை புரியுது யுவனிம்மா. ஒரு வருஷக் கதை. ஆனா அது எல்லாத்தையும் இப்போவே பேசி முடிக்க முடியாது. வீட்டுக்கு போய் நிதானமா பேசுவோம்." என்றவர் அவளது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்க,

அவளோ, "அது எப்படி மம்மி கல்யாணம் நடந்து முழுசா ஒரு வருஷம் தான் ஆகுது. ஆனாலும் இப்படி நடந்ததுக்கு அவங்க யார் மேலையும் எந்த நடவடிக்கையும் இல்லையா?" என்று ஆற்றாமையில் அவள் வினவ,

"ஏன் யுவனி்? கொஞ்சம் பொறு. நீயும் தான் உன் அக்கா கல்யாணத்துக்கு வரவே இல்ல. சொல்லப் போனா ஒரு வருஷம் இல்ல ஒன்றரை வருஷமா நீ இந்தியா வரவே இல்ல. இப்போ திடீர்னு வந்து உனக்கு எல்லாமே உடனே புரியணும்னா எப்படி?"என்றார் சற்றே கோபமாக.

அவருக்கு என்னவென்றால் இவள் இங்கே இருந்திருந்தால் இது போன்ற ஒரு அசம்பாவிதம் நடந்தே இருக்காதே என்ற வருத்தம்.

"என் வேலை அப்படின்னு உங்களுக்கு தெரியாதா மம்மி. நான் ரெண்டு வருஷ காண்ட்ராக்ட்ல பிரான்ஸ் போனேன். அப்படியே இங்கிலாந்து முழுக்க எல்லா நாட்டுக்கும் டிராவல் பண்ணி போய் அந்த எக்ஸ்பீரியன்ஸை அப்படியே எழுதுறது தானே என் வேலை. வந்து வந்து போக முடியுமா? இப்போ கூட அக்கா இறந்து போனதும் ஆபிஸ்ல சொல்லிட்டு அடுத்த ஜர்னல்க்கு தேவையானதை எழுதிக் கொடுத்து அப்பறம் தான் டிக்கெட் கிடைச்சதும் கிளம்பி வந்திருக்கேன். அப்போ கூட ஆபிஸ்ல நேரா அங்க வந்து ரிப்போர்ட் பண்ணிட்டு போக சொன்னதால டெல்லி போயிட்டு தான் இங்க வந்திருக்கேன்.

டிராவல் பண்றது ஒரு சுகமான அனுபவம் மம்மி. ஆனா இந்த ஒரு பயணம் எனக்கு இவ்வளவு அவஸ்தையாவும் வேதனையாவும் இருந்ததுன்னு என்னால சொல்ல முடியல. உங்களை பார்த்தும் எல்லா கேள்வியும் என்னையும் மீறி வருது மம்மி" என்று அவரின் தோள் சாய்ந்து கண்ணீர் விட்டாள்.

இளையவளை ஒன்றும் சொல்லவும் முடியாமல், நடந்த நிகழ்வுகளை மறக்கவும் முடியாமல், வீட்டில் தற்போது நிகழ்வதைத் தடுக்கவும் முடியாமல் இருக்கும் தன் நிலையை எண்ணி அந்தப் பெண்மணி மிகவும் நொந்து போனார்.

சில நாட்களாக தூக்கம் இல்லாமல் உழன்றவள் தன்னை வளர்த்த அன்னையின் தோளில் சேர்ந்ததும் உறக்கமும் அவளது இமை சேர்ந்தது.

நாளை நடக்க இருக்கும் எந்த நிகழ்வைப் பற்றிய சிறு துப்பும் இல்லாமல் இறந்து போன தன் மூத்த சகோதரியின் நினைவில் இத்தனை நாள் தொலைத்த தூக்கத்தை அவளையும் அறியாமல் தூங்கத் துவங்கி இருந்தாள் யுவனி்.
 

NNK-96

Moderator
யுத்தம் 2

அந்த வாடகைக் கார் சென்னை சாலைகளில் நீந்தி விருகம்பாக்கத்தை அடையும் வரையில் தன் தோளில் துயில் கொண்டிருந்த தன் வளர்ப்பு மகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் சாரதா.

சாரதா- சபேசன் தம்பதிக்கு திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு செய்த மருத்துவப் பரிசோதனையில் அவர்களுக்கு குழந்தை பிறக்க சாத்தியமில்லை என்று தெரியவந்தது.

அந்த நேரத்தில் தான் சாரதாவின் அக்கா பார்வதி இரண்டாவது முறையாக கருவுற்றிருந்தாள்.

பார்வதியும் பசுபதியும் அவர்களது முதல் குழந்தையான அவந்திகாவை வளர்க்கவே சிரமப்பட்டுக்கொண்டிருந்த நேரமது.

அதனால் இரண்டாவதாக பிறக்கும் குழந்தையை தங்களுக்கு தத்துக் கொடுக்க முடியுமா என்று சபேசனும் சாரதாவும் கேட்டுக்கொள்ள, ஆண் குழந்தை பிறந்தால் அவந்திகாவை வளர்த்துக் கொள்ளும்படியும், பெண் குழந்தையாக இருந்தால் பிறந்ததும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சாதாரணமாகவே ஒப்புக் கொண்டார் பசுபதி.

இரண்டாவதாக பிறந்த யுவனி் சாரதாவிடம் வளர ஆரம்பித்தாள். அடுத்த ஆறு வருடங்கள் அவர்கள் வாழ்வில் வசந்தகாலம். சபேசன் மனைவியை ஆரம்பத்தில் இருந்தே தைரியமானவராகவும் வேலைக்கு அனுப்பி திடமானவராகவும் இருக்க உதவி இருந்தார். யுவனியின் ஆறாவது வயதில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் சபேசன் காலமானார்.

அதன் பின் சாரதாவின் வாழ்க்கைக்கு இருந்த ஒரே பிடிப்பு யுவனி் தான்.

சாரதா யுவனி்யையும் தன்னைப் போலவே வளர்க்க திட்டமிட்டு நல்ல கல்வி, அவளுக்கு விருப்பமான கலைகள் என்று மகளை பொக்கிஷம் போல வளர்த்தார்.

ஆனால் என்ன பயன்? இன்றளவும் யவனியின் சான்றிதழ்களில் தாய் தந்தை என்று பார்வதி பசுபதி பெயர் தான் உள்ளது. அதனை மாற்ற ஆரம்பத்தில் இருந்தே பசுபதி சம்மதிக்கவில்லை. அப்போது சபேசனும் இதனை பெரிதாக நினைக்கவில்லை. ஊரறிந்து தானே தத்து எடுக்கிறோம் பேப்பரில் என்ன இருந்தால் என்ன, என் மகள் மனதில் நான் தானே தந்தையாக இருப்பேன் என்று வெள்ளந்தியாக இருந்துவிட்டார்.

அதன் விளைவை இப்பொழுது சாரதா அனுபவிக்கப் போகிறார். நினைக்க நினைக்க சாரதாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

அவரது கண்ணீர் யுவனியின் கன்னத்தில் பட்டு மெல்ல இமை கொட்டி கண் விழித்தாள்.

அவள் எழுவதை உணர்ந்த சாரதா, "நானே எழுப்ப நினைச்சேன். நீயே எழுந்துட்டியா? நான் உன்னை அக்கா வீட்ல விடறேன், நீ அவகிட்ட பேசிட்டு அப்பறம் கிளம்பி நம்ம வீட்டுக்கு வா" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வாகனம் வேகம் குறைந்து அவர் கூறிய சின்மயா நகரில் இருக்கும் பாரிஜாத தெருவுக்குள் நுழைந்தது.

ஒரு பழையகால சிறிய வீட்டின் முன்னே வாகனம் நின்றதும்,

"லக்கேஜ் நான் எடுத்துட்டு போறேன். நீ அக்காவை பார்த்துட்டு அப்பறம் வா" என்று சாரதா இறங்கி மகளை அக்கா வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

மகள் அந்தத் துருப்பிடித்த இரும்புக் கதவைத் திறந்துவிட்டு உள்ளே செல்லும் முன் திரும்பிப் பார்த்ததைக் கண்டு அவர் கண்கள் குளமானது.

இத்தனை வருடம் உயிராய் வளர்த்த மகளை மீண்டும் அக்காவிடம் விட்டுக் கொடுக்கிறோம் என்ற எண்ணத்தை விட, அவளுக்கு ஏதோ தீங்கு செய்கிறோம் என்ற உணர்வே மேலே எழுந்து வந்தது.

யுவனி் சாரதாவை நோக்கி முறுவலித்து விட்டு உள்ளே செல்ல, அதே வாகனத்தில் ஏறி அந்த தெருவின் அடுத்து இருந்த சம்பங்கி தெருவில் உள்ள அவரது அபார்ட்மெண்ட் வாயிலில் இறங்கிக் கொண்டார்.

யுவனி் ஒரே ஒரு பெட்டி மட்டுமே எடுத்து வந்திருக்க, அவரே அதனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார்.

ஆளில்லாத அந்த வீடு இத்தனை வருடம் கொடுக்காத வெறுமையை இன்று அவருக்குப் பரிசளித்தது.

இங்கே பசுபதி - பார்வதி இல்லத்துக்கு வந்த யுவனியைக் கண்டதும் பார்வதி பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டு அழுகையைத் துவங்கினார்.

பசுபதி என்றுமே யுவனியுடன் அதிகம் பேசுவதில்லை. இன்றும் அவளை ஏற இறங்கப் பார்த்தவர்,

"உன் லகேஜ் எங்க?" என்றதும்,

ஏற்கனவே தன்னை வர வேண்டாம் என்றவர், அதையும் மீறி கிளம்பி வந்த தன்னை விமான நிலையம் வந்து அழைத்துக் கொள்ளாதவர் கேள்வி மட்டும் எந்த உரிமையில் கேட்கிறார் என்று யுவனியின் மனதில் கோபம் கனன்றது.

"அதை மம்மி கிட்ட கொடுத்து விட்டுட்டேன். நான் அம்மாவை பார்க்க தான் இங்க வந்தேன்." என்று முகத்தை வெட்டி பதில் கூறியவள், தன்னைப் பெற்றவளிடம்,

"ஏம்மா திடீர்னு அக்காவுக்கு கல்யாணம் பேசினீங்க. சீக்கிரமே கல்யாணம் வச்சிங்க. அவளும் இந்த ஒரு வருஷத்துல அஞ்சு தடவை கூட என்னோட போன்ல பேசி இருக்க மாட்டா. ரெண்டு தடவை வீடியோ கால் பண்ணும்போது கூட நல்லா இருக்கேன்னு தான் சொன்னா. எப்படிம்மா திடீர்னு குடும்பமா போன காருக்கு ஆக்ஸிடென்ட் நடந்தது? அது எப்படி அந்த ஆக்ஸிடென்ட்ல அவ மட்டும் செத்து போவா? எனக்கு புரியவே இல்ல" என்று யுவனி் மனதில் தேங்கி இருந்த கேள்விகளை அடுக்கினாள்.

"அவ நல்லா இருந்தான்னு தான் நானும் நினைச்சேன் யுவனி். ஒரே ஒரு நாள் தான் என்கிட்ட ஏதோ சொல்ல போன் பண்ணி அழுதா ஆனா எதுவும் சொல்லல. அப்பவே என் பொண்ணை நான் கூட்டிட்டு வந்திருக்கணும். விட்டுட்டேன். இன்னிக்கு என் பொண்ணு இல்லாம போயிட்டா" என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு பார்வதி கண்ணீர் விட,

"ஏய் உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? அவங்க வீட்ல அவளை நல்லா தான் வச்சிருந்தாங்க. அன்னைக்கு எதுக்கு அழுதாளோ?சும்மா அதையே சொல்லாத. நாளைக்கு அவங்க வீட்ல அவளுக்கு சாமி கும்பிடுறாங்க. அங்க வச்சு நீ எதுவும் வாயை திறக்க கூடாது புரியுதா?" என்று மனைவியை அடக்கினார்.

"இதென்ன அநியாயம்? கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தான் ஆகுது. ஆக்ஸிடென்ட்ன்னு சொன்னிங்க, போலீஸ் கேஸ் என்னாச்சு? அவங்க வீட்டு ஆளுங்க மேல எதுவும் சந்தேகம் இருந்தா அரஸ்ட் பண்ணி இருப்பாங்கல்ல. கேஸ் டீடெயில்ஸ் சொல்லுங்க, என் பிரெண்ட்ஸ் வச்சு நான் என்னன்னு விசாரிக்கிறேன்." என்று யுவனி் பொதுவாகக் கூற,

"ஏய் உனக்கு தனியா சொல்லணுமா? பொம்பள பிள்ளையா லட்சணமா வாயை மூடிட்டு என் பின்னாடி வரணும். அவங்க பெரிய குடும்பம். மரியாதை குறைவா ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது. ஏன் வாயைத் திறந்து நீ அங்க பேசவே கூடாது. புரியுதா? இனி நீ இங்க எங்க கூட தான் இருக்கணும். சாரதா தனியா திரியறது மாதிரியே உன்னையும் வளர்த்து விட்டிருக்கா. இனி நீ அப்படியெல்லாம் இருக்க முடியாது" என்று பசுபதி கண்டிப்பான குரலில் கூறிக்கொண்டிருந்தார்.

அவர் பேசியதைக் கேட்டு ஏதோ நகைச்சுவைக்கு சிரிப்பது போல யுவனி் சிரித்து விட்டாள்.

பின் பார்வதியிடம் திரும்பி, "அம்மா இவர் என்ன நினைச்சுகிட்டு இருக்காரு? நான் இங்க இருக்கணுமா? அது கூட உங்களுக்காக நான் இருப்பேன் தான். ஆனா சாரதா மம்மி பத்தி இவர் ஏன் பேசுறாரு? எனக்கு அவங்க தான் எல்லாமே. நீங்க சொல்றதெல்லாம் என்னால கேட்க முடியாது. என்னை அவங்களுக்கு தத்து கொடுத்துட்டீங்க நினைவு இருக்கா? நான் இப்போ அவங்க பொண்ணு. உங்க இஷ்டத்துக்கு என்னை வளைக்க ட்ரை பண்ணாதீங்க." என்று கோபமாகக் கத்திவிட்டாள்.

அவள் வீட்டை விட்டு வெளியேறி சாரதாவின் அபார்ட்மெண்ட் நோக்கி வேகமான நடந்தாள்.

உண்மையில் அவள் மனம் உலைகலம் போல உள்ளே கொதித்துக் கொண்டிருந்தது.

'இவர்களுக்கு நான் என்ன விளையாட்டு பொம்மையா? பிள்ளையை வேண்டாம் என்று கொடுப்பதும், அவர்கள் வளர்த்த மகள் இறந்ததும் தன்னை மீண்டும் உரிமை கொண்டாடுவதும்?'

பிறந்தது முதலே அவள் அறிந்த ஸ்பரிசம் சாரதாவினுடையது. அவள் கைபிடித்து நடந்தது சபேசனுடன். அவரை தான் தந்தையாக என்றும் மனதில் நினைத்திருக்கிறாள்.

பசுபதியை தந்தையாக அல்ல, ஒரு உறவினர் என்ற எண்ணம் கூட யுவனிக்கு ஏற்பட்டதில்லை. அதற்கு அவர் தான் காரணமும் கூட.

விடுமுறை நாட்களில் அவந்திகாவோடு விளையாடச் செல்லும்போது பசுபதி அவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். அன்பாக தன்னிடம் இல்லாதவரிடம் தான் ஏன் அன்பு காட்ட வேண்டும் என்று சிறு வயது முதலே அவரிடம் ஒதுங்கி தான் வளர்ந்தாள் யுவனி்.

சிந்தனைகளின் இடையே அவள் சாரதாவின் இல்லம் வந்து சேர்ந்திருக்க, அங்கே அவரோ கைபேசியில்,

"நான் அவ கிட்ட சொல்லி பார்க்கறேன் அக்கா. நீ சொல்ற மாதிரி சொல்லி புரிய வைக்க அவ குழந்தை இல்ல அக்கா. நீ உன் புருஷன் கிட்ட சாரதா அவளை சமாதானம் பண்ணுவான்னு எந்த நம்பிக்கையில வாக்கு கொடுத்த? ம்ச் நீ போனை வைக்கா. என் பொண்ணு நொந்து போய் வருவா" என்று சொல்லிக்கொண்டே திரும்ப, அவரை ஆழமாக நோக்கியபடி கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு நின்றிருந்தாள் யுவனி்.

"யுவனிம்மா. பிளீஸ் இதெல்லாம் அப்பறம் பேசலாம். எதுவும் எங்கயும் போயிடாது. முதல்ல குளிச்சிட்டு வா. உனக்கு பிடிச்ச பூரி கிழங்கு செஞ்சு வச்சுருக்கேன்." என்று அவளை குளியலறை பக்கமாகத் தள்ளினார்.

"மம்மி நான் உன் பொண்ணு. இதுல எந்த மாற்றமும் இல்ல." என்று அழுத்தமாகக் கூறியவள் குளித்து புத்துணர்வாக சாரதா கொடுத்த உணவை உண்ணலானாள்.

அவள் வந்து சோபாவில் அமர்ந்ததும், அவள் மனதை அறிந்தவராக அவளது கேள்விகளுக்கு அவரே பதிலளிக்க ஆரம்பித்தார் சாரதா.

"அவந்திகாவுக்கு இந்த சம்பந்தம் தானே தேடி தான் வந்தது. அவளை எங்கேயோ பார்த்து பிடிச்சு பொண்ணு கேட்டு வந்தாங்க. ரொம்ப பெரிய குடும்பம். நல்ல வசதியும் கூட. அவந்திகாவுக்கு இதுல பெருசா விருப்பம் இல்ல போல. அவ அதை என்கிட்ட சொன்னப்ப உங்க அப்பா கிட்ட தைரியமா பேசுன்னு நான் சொன்னேன். ஆனா உங்க அப்பாவைப் பத்தி தான் உனக்கு தெரியுமே. அவர் சொன்னா சொன்னது தான். யாரும் எதிர்த்து பேசக் கூடாது. அந்த குணத்தால தான் உன்னை என்கிட்ட அவர் கொடுத்தப்ப எங்கக்கா வாயை மூடி மௌனியா நின்னா.

ம்ச் அவந்திகா கல்யாணம் ஆனதும் அந்த வீட்ல நல்லா தான் பார்த்துகிட்ட மாதிரி இருந்தது. அவ.." என்று இழுத்தார் சொல்ல வந்த தகவல் இந்த சூழ்நிலைக்கு ஏற்றதல்ல என்று நினைத்தாரோ என்னவோ அப்படியே மென்று விழுங்கினார்.

"சொல்லுங்க மம்மி. அம்மா என்னவோ ஒருநாள் அவ போன்ல அழுதான்னு சொன்னாங்க." என்று யுவனி் அவரை உலுக்க,

"ம்ம் அவ போன்ல அழுததா அக்கா என்கிட்டயும் சொன்னா. அதுக்கு ரெண்டு நாள் கழிச்சு தான் அந்த ஆக்ஸிடென்ட் நடந்தது. அவளும், உன் அத்தான் நித்யனும் அடிபட்டு ஹாஸ்பிட்டல இருக்கறதா தகவல் வந்தது. அங்க போனா அவந்திகா ஏற்கனவே இறந்து போயிருந்தா. நித்யன் உயிருக்கு போராடிட்டு இருந்தார்." என்று பெருமூச்சு விட்டார்.

'அம்மா அன்னைக்கு அவந்தி இறந்த தகவலை சொல்லும்போது அவளை கொன்னுட்டாங்கன்னு தான் அழுதாங்க. ஆனா அத்தானுக்கு அடிபட்டதை சொல்லவே இல்லையே!' என்று மனதில் நினைத்தவள் சாரதா வேறு என்ன சொல்லப் போகிறார் என்று பார்க்க,

"அவந்தி இறந்தது ஆக்ஸிடென்ட் தான். ஆனா அவளும் நித்யனும் தனி தனி கார்ல போய் அந்த ஆக்ஸிடென்ட் நடந்திருக்கு. அதான் எனக்கு மனசுக்கு உறுத்தலா இருக்கு." என்றார் யோசனையாக.

"என்ன மம்மி சொல்றீங்க? அப்ப அந்த குடும்பம் தான் என் அக்காவை என்னவோ பண்ணி இருக்கணும். அத்தான் சீரியஸ்ன்னு சொல்றது கூட ஏன் டிராமாவா இருக்கக் கூடாது?" என்று வேகமாகக் கேட்டாள் யுவனி்.

"இப்படி எதையும் நாளைக்கு அவங்க முன்னாடி நீ பேசக் கூடாதுன்னு உங்க அப்பா உன்கிட்ட சொல்ல சொன்னாரு." என்று வெறுப்பாகக் கூறினார் சாரதா.

'அவர் என்ன எனக்கு ஆர்டர் போடுறது? நாளைக்கு நான் உண்மை என்னன்னு கண்டு பிடிக்கிறேன். என் அக்கா சாவுக்கு நியாயம் கிடைக்கணும்.' என்று மனதில் உறுதியாக எண்ணினாள் யுவனி்.
 

NNK-96

Moderator
யுத்தம் 3

'ராஜவிலாசம்' பெயருக்கு ஏற்றது போல ராஜாக்களைக் கொண்ட ஒரு இடம் எந்த அளவுக்கு ஆடம்பரமாக இருக்குமோ அதே அளவு சிறந்தவற்றின் குவியலாகவும் அது திகழ்ந்தது. ராஜ வாழ்க்கை வாழும் ஒரு விலாசமாக இருந்தது. எல்லாம் அவந்திகா இறக்கும் வரையில் தான்.

ஆரம்பத்தில் அவந்திகாவின் வருகை அந்த இல்லத்தை எந்த விதத்திலும் மாற்றவில்லை. குடும்ப உறுப்பினர்கள் அவந்திகாவுக்கு கொடுத்த கவனத்தையும் அன்பையும் அவள் திருப்பிச் செலுத்தவில்லை என்பது தான் அந்த குடும்பத்தின் மிகப்பெரிய வருத்தமே.

அவளது இறப்பு வீட்டின் நிம்மதியை அசைத்துப் பார்த்துவிட்டது. நித்யனின் மருத்துவமனை வாசம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வீட்டிற்கு வந்த மருமகள் இன்று இல்லாமல் போனாலும் அவளுக்கு செய்ய வேண்டிய காரியங்களை முறையாக செய்ய வேண்டும் என்று வள்ளி கூறியதால் அரை மனதாகவே இடைத்தலைமுறையான ரத்தினமும் ரங்கனும் அவந்திகாவின் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யத் துவங்கினர்.

நித்யன் இல்லாமல் இதையெல்லாம் செய்கிறோமே என்று அதுவே அவர்களை உறுத்திக் கொண்டிருக்க அதை விட அவர்களை உலுக்கும் ஒன்றை அவர்களிடம் கொண்டு வந்து ஆர்.வி கூறியதும் செய்வதறியாது நின்றனர் அக்குடும்பத்தினர்.

அஞ்சலி தான் ஆர்.விக்கு முழு ஆதரவை முதலில் தெரிவித்தவள்.

"அண்ணா சொன்னா சரியா தான் இருக்கும். யோசிக்காம இப்படி சொல்லுவானா? நித்தி அண்ணா எழுந்திருந்தா கூட ஆர். வி அண்ணா சொல்றதை வேண்டாம்னு சொல்ல நியாயம் இருக்கு. ஆனா இப்போ நமக்கு எது முக்கியம்? அதை தான் அண்ணா சொல்றான். தயவுசெஞ்சு நீதி, நேர்மை, நியாயம்ன்னு பேசாதீங்க. இது அதுக்கான நேரமில்லை." என்று அடித்துப் பேசினாள்.

மகளை முறைத்த ஈஸ்வரி, "இதுல நீ கருத்து சொல்லாம இருக்கறது உனக்கு நல்லது அஞ்சு. நீ இன்னொரு வீட்டுக்கு போகப் போற பொண்ணு, அவனுங்க ரெண்டு பேரும் தான் வீட்டு வாரிசுங்க. நீ பேசி நாளைக்கு ஏதாவது தப்பா நடந்தா எல்லா பழியும் உன் மேல தான் விழும். ஒதுங்கி இருந்து உனக்கானத வச்சு பிழைக்கிற வழியைப் பாரு." என்று மனதில் இருந்ததை மறைக்காமல் கூறினார்.

ராஜலிங்கம் பேரன்கள், பேத்தி இடையே வித்தியாசம் பார்க்காமல் அவர் இருந்த வரையில் தன் ஆளுமைத் திறன்களை அவர்களுக்குள் இறக்கிக் கொண்டிருந்தார். ஆனால் ஈஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்து, அடுத்து குழந்தை பிறக்க வாய்ப்பில்லாது போனதும் இந்த வீட்டின் வாரிசை தான் தரவில்லை, அஞ்சலி என்றும் அந்த இருவருக்கு நிகராக இந்த வீட்டில் நடத்தப்படப் போவதில்லை என்ற எண்ணம் அவரை ஆட்கொண்டது.

அன்று முதலே மகளுக்கு வேண்டிய சொத்து, நகை என்று பார்த்து பார்த்து ஒதுக்கி எடுத்து வைத்துக் கொள்வார்.

வள்ளி அவரிடம் தன் பேத்திக்கு அனைத்தையும் தானே செய்வேனென்று பலமுறை கூறியும் ஈஸ்வரி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று போல என்றும் இருக்க மாட்டார்கள், அதனால் தங்கள் வழியை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற தனித்த மனப்பான்மை மிகுந்து போனது அவரிடம்.

ஏற்கனவே ராஜலிங்கம் மகன்களுக்கு தனி தொழில் துவங்கிக் கொடுத்து அவர்களை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி விட்டதால் நாம் தனியே சென்று விடுவோம் என்று அவர் கணவரிடம் கூறாத நாளில்லை. ஆனால் குடும்பத்தின் மேல் அதீத அன்பும் பாசமும் கொண்ட ரங்கன் அதனை என்றும் ஏற்றுக் கொண்டதில்லை.

இப்பொழுது ஈஸ்வரி மகளுக்குக் கூறும் அறிவுரையைக் கேட்டு முதியவரான வள்ளிக்கு சலிப்பு கூடியது.

"அம்மா ஈஸ்வரி, ஏற்கனவே போதுமான பிரச்சனை நம்மளை சுத்தி நிக்குது. இதுல நீ வேற புதுசா எதையும் தூக்கிட்டு வராத." என்றார் வெறுப்பாக.

"பாட்டி அம்மாவை விடுங்க. ப்ளீஸ் சின்ன அண்ணா சொல்றத கேளுங்க." என்று அஞ்சலி தன் பாட்டியை தன் அண்ணனுக்கு சாதகமாகப் பேசத் தூண்டினாள்.

"நீயும் ஒரு பொண்ணு தானே அஞ்சலி. இப்படி செய்யறது எந்த விதத்துலையும் நியாயம் இல்ல." என்றார் வள்ளி அவளுக்கு புரிய வைக்கும் நோக்கில்.

"நித்தி இருந்தா இந்த சூழ்நிலையை அழகா அமைதியா சமாளிச்சு இருப்பான்." என்று பெருமூச்சு விட்டார் ராஜரத்தினம்.

"பெரியப்பா நித்தி அண்ணா இப்போ இங்க இல்ல. அதான் பிரச்சனையே. சின்ன அண்ணா சொல்றது தான் ஒரே வழி. மணி இப்போவே எட்டு ஆகுது. அவந்தி அண்ணி வீட்டுல இருந்து ஒன்பது மணிக்கு வந்திடுவாங்க. அவங்க முன்னாடி நாம யாரும் மாத்தி பேச முடியாது. அதுனால தான் அண்ணா உங்க கிட்ட இப்போவே இதை பேசச் சொன்னான். இதுல நம்ம குடும்ப மானம், மரியாதை, கவுரவம் இதையெல்லாம் தாண்டி நம்ம அன்பு இருக்கு. அது நமக்கு எப்பவும் இருக்கணும்ன்னா ஆர்.வி அண்ணா சொல்றத நாம ஒத்துக்கணும். அண்ணா நமக்காக அவன் வாழ்க்கையையே அடகு வைக்கிறான். அது ஏன் உங்க யார் கண்ணுக்கும் தெரியல." என்று தன் அண்ணன் குடும்பத்துக்காக செய்யும் தியாகத்தை குடும்ப உறுப்பினர்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் குரல் ஓங்க கத்தினாள் அஞ்சலி.

ஏனெனில் அவளுக்கு அவளது அண்ணன்கள் தான் உலகமே.

"நாங்களும் அதுக்கு தான் கவலைப்படுறோம் அஞ்சு. ஏற்கனவே ஒருத்தன் வாழ்க்கை அந்தரத்தில் இருக்கு. இப்போ இன்னொருத்தன் வாழ்க்கையையும் இப்படி ஆக்கணுமா?" என்றார் ரங்கன் வருத்தமாக.

ஆனால் இந்த கோணத்தில் இதுவரை யோசிக்காத ஈஸ்வரி இப்பொழுது தெளிவான முகத்துடன்,

"என்னவோ பண்ணுங்க. ஆனா ஆர்.வி சொல்றதுல இருக்குற உண்மையை மறுக்க முடியாது. அவன் சொன்னது போல நடந்துட்டா நாளைக்கு எல்லாருக்கும் வருத்தம் தான் மிஞ்சும். அப்பறம் நித்தி கண் முழிச்சு கேட்டா என்ன பதில் சொல்றது?" என்றார் நயமாக.

அவ்வளவு தான். அத்தனை நேரம் இது எதுவும் வேண்டாம், பையன்களின் வாழ்க்கை, ஒரு பெண்ணின் வாழ்க்கை என்று ஆளுக்கு ஒரு சிவப்புக் கொடி தூக்கி மறுத்தவர்கள் எல்லாம் சத்தம் காட்டாமல் வெள்ளைக் கொடிக்கு மாறி இளைய மகனின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இருந்த போதிலும் காஞ்சனா மட்டும் மூத்த மகனை காரணம் காட்டி, இளையவனின் வாழ்க்கையை யோசிக்காமல் முடிவு செய்யக் கூடாது என்று தீர்மானமாக இருந்தார். ஆனால் அவர் சொல் அம்பலம் ஏறாமல் போனதற்கு அந்த குடும்பம் நித்யன் மேல் வைத்திருக்கும் அதீத அன்பே காரணமானது.

இவர்கள் பேசி முடித்து அந்த அறையில் இருந்து வெளியே வருவதற்கும் வேலையாட்கள் அன்றைய நிகழ்வுகளுக்கான ஆயத்தப் பணிகளை முடித்து நகர்வதற்கும் சரியாக இருந்தது.

"இப்போ ஆர் வி எங்க அஞ்சு?" என்றார் ரங்கன் தன் கைகடிகாரத்தைப் பார்த்தபடி.

"அண்ணா ஏர்லி மார்னிங் தான் வந்தான். நான் தான் எட்டு மணிக்கு மேல எழுப்புறேன் அது வரைக்கும் தூங்குன்னு செல்லை கூட பிடுங்கி வச்சு ரூமுக்கு அனுப்பி விட்டேன். நான் அண்ணாவை எழுப்பி கூட்டிட்டு வர்றேன். அவந்தி அண்ணி வீட்டுக்கு போன் பண்ணி கிளம்பியாச்சான்னு நீங்க கேளுங்க." என்று தந்தைக்கு உத்தரவு பிறப்பித்து விட்டு நகர்ந்தாள் அஞ்சலி.

"அப்படியே தன்னைப் போலவே பேரன் பேத்தியை மாத்தி வச்சிருக்காரு. அப்பா கிட்ட பேசுறோம்ன்னு பயம், மரியாதை ஏதாவது இருக்கா பாரு? பெரியவங்க நாம என்ன செய்யணும்னு சின்னவங்க சொல்ற நிலையில உங்க அப்பா நம்மளை நிறுத்திட்டு போயிட்டாரு." என்று தன் மூத்த மகனிடம் மனவருத்தம் பாதியும் சலிப்பு மீதியுமாகக் கூறினார் வள்ளி.

"நீங்க உங்க பசங்களை இப்படி வளர்த்து விட்டிருந்தா மாமா ஏன் இப்படி பேரன் பேத்தியை மாத்தி விட்டுருக்க போறாரு?" என்று தன் மாமியாரை குற்றம் சுமத்திவிட்டு விலகினார் ஈஸ்வரி.

வள்ளியிடம் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்று எழுந்து அடங்கியது.

தன் மாமியார் மனநிலையும், ஓரகத்தியின் மனநிலையையும் நன்கறிந்த காஞ்சனா,

"விடுங்க அத்தை, மாமா முழு நேரமும் வியாபாரம் பார்க்க போகும்போது அப்பா கூட இல்லன்னு இவங்க வருத்தப்படக் கூடாதுன்னு நீங்க பார்த்து பார்த்து வளர்த்தீங்க. அவங்களும் உங்களைப் போல அன்பா, அனுசரணையாக வளர்த்துட்டாங்க. மாமாவுக்கு அந்த குணம் வியாபாரத்துக்கு தோதுப்படாதுன்னு தோனிடுச்சு. எதுவும் நம்ம கையில இல்ல அத்தை. வர்ற பொண்ணாவது அவந்தி மாதிரி இருக்கக் கூடாது. அது ஒண்ணு தான் என் மனசுல இருக்கு." என்று மாமியாரின் மனபாரத்தை குறைக்க பேச்சைத் துவங்கி தன் மனபாரத்தை இறக்கி வைத்தார்.

இவர்கள் அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வை அறிந்து அதற்காகக் காத்துக் கொண்டிருக்க, அங்கே யுவனி் இது எதுவும் அறியாமல் தன் பள்ளித் தோழர்களில் வழக்குரைஞராக இருக்கும் நவாஸிடம் தன் தமக்கை மரணத்துக்கு எந்த வழியில் நியாயம் பெறமுடியும் என்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.

"நான் அந்த கேஸ் என்னன்னு பாக்கறேன் யுவா. கோர்ட்ல கேஸ் எஃப்.ஐ.ஆர் காப்பி கேட்டு பெட்டிஷன் போட்டுட்டு உனக்கு சொல்றேன். சினிமா மாதிரி போன்லயே கேஸ் டீடெயில்ஸ் முழுசா வாங்க முடியாது. கேஸ் நம்பர், மேம்போக்கான ரிப்போர்ட் மட்டும் தான் சொல்லுவாங்க, எஃப்.ஐ.ஆர் காப்பி வந்தா தான் முழு நிலைமையும் தெரியும். உன் அக்கா புருஷன் வீட்டு ஆளுங்க வேற பசையுள்ள பார்ட்டின்னு சொல்ற, பணம் விளையாடி இருந்தா நம்ம கிட்ட ப்ராப்பர் பேப்பர் இருந்தா மட்டும் தான் கோர்ட்ல வேலைக்கு ஆகும்." என்று நிதர்சனத்தை உரைத்தான் அவளின் நண்பன் நவாஸ்.

"சரி நவாஸ். நீ என்ன செய்யணுமோ செய். நானும் இன்னிக்கு அவங்க வீட்டுக்கு போய் என்னால முடிஞ்ச உண்மையை தெரிஞ்சுகிட்டு வரப் பாக்கறேன்." என்றாள் தீவிரமாக.

நவாஸ் ஒரு நீண்ட அமைதிக்குப் பின், "அவசியம் நீ இதெல்லாம் பண்ணனுமா யுவா? உனக்கு நல்ல வேலை இருக்கு. அதுக்கு நாளைக்கு பெரிய ஸ்கோப் இருக்கு. இவ்வளவு பெரிய ஆளுங்களை நீ எதிர்த்தா, அதெல்லாம் உனக்கு பிரச்சனையை இழுத்து விடாதா?" என்றான் அக்கறையாக.

"அதுக்காக அக்கா ஏன் செத்தா? எப்படி செத்தான்னு கூட தெரிஞ்சுக்காம போக முடியுமா நவாஸ்?" என்றாள் யுவனி் வேகமாக.

"அக்கா... உனக்காக ஒரு விரலை கூட அசைக்காத உன் அக்காவுக்காக உன் வாழ்க்கையை சிக்கலாக்கிக்க போறியோன்னு பயமா இருக்கு யுவா. பேசாம அவங்க காரியம் முடிஞ்சதும் நீ உன் வேலையை பார்க்கக் கிளம்பு. அதான் உனக்கு நல்லது." நவாஸின் குரலில் இருந்தது தன் தோழிக்கான அக்கறை மட்டுமே.

ஆனால் யுவனி் தன் முடிவில் தெளிவாக இருந்தாள்.

"இங்க என்ன நடந்ததுன்னு அம்மா, அப்பா ஏன் சாரதா மம்மி கூட முழுசா சொல்ல மாட்டேங்கறாங்க. எல்லாரும் ஏதோ ஒவ்வொரு விஷயத்தை என்கிட்ட மறைக்கிறது போல எனக்கு ஃபீல் ஆகுது. அக்கா என்கிட்ட கடைசியா வீடியோ கால் பேசும்போது அவளோட அனிவர்சரிக்கு விஷ் பண்ணினேன். அவ கண்ணுல எனக்கு சந்தோஷம் தெரியல. ஆனா வேற ஏதோ ஒரு உணர்வு இருந்தது. அன்னைக்கு என் வேலை அவசரத்துல அதை கவனிச்சு கேள்வி கேட்டு அவளுக்கு துணையா இல்லாம போயிட்டேன். ஒருவேளை நான் அப்பவே கவனிச்சிருந்தா அக்கா உயிரோட இருந்திருப்பாளோ? இந்த கேள்வி என்னை ரொம்ப அரிக்கவும் தான் நான் இந்தியா கிளம்பி வந்தேன் நவாஸ். அட்லீஸ்ட் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா என் மனசும் கொஞ்சம் சமாதானம் ஆகும்." என்று அவளது மனக்கிலேச்சத்தை வெளியிட்டாள் யுவனி்.

"சரி உனக்கு நீ செய்யறது மன ஆறுதலா இருக்கும்ன்னா செய். எப்பவும் ஒரு நண்பனா நான் உனக்கு துணையா இருப்பேன்." என்று அவளுக்கு தன் ஆதரவை தெரிவித்தான் நவாஸ்.

அவள் மனதில் எழுந்த அரிப்பு அவளது வாழ்க்கையையே அரிக்கக் காத்திருப்பதை அந்த நொடி அறியாமல் போனாள் யுவனி்.
 

NNK-96

Moderator
யுத்தம் 4

சாரதா மகள் தயாராகிவிட்டாளா என்று நாலாவது முறையாக அறைக்குள் எட்டிப் பார்த்தார்.

நவாஸிடம் பேசிவிட்டு கைபேசியை சார்ஜரில் சொருகிய யுவனி்யின் மனம் சஞ்சலம் கொண்டது.

காரணம் இல்லாமல் நெஞ்சில் கூடுதல் பாரம் ஏறி அவளை அழுத்தியது.

தலையை உலுக்கி தன்னை நிதானித்துக் கொள்ள முயன்றாள் யுவனி்.

என்ன நடந்துவிட முடியும்? ஒருவேளை தமக்கை இறப்புக்கான காரணம் தெரிய வந்து அதனால் வருத்தம் வருவதன் அறிகுறியாக இந்த மனபாரம் இருக்குமோ? என்ற அவள் சிந்தனையை மூளை ஒதுக்கி வைத்துவிட்டு உண்மையை கண்டுபிடிக்கச் செல்லுமாறு கூறியது.

சாரதா இம்முறை உள்ளே தலையை நீட்ட, "உள்ள வாங்க மம்மி" என்றாள் இன்முகமாக.

"மணி எட்டு பத்து யுவனிம்மா. அவந்திகா வீட்டு கார் வந்து பத்து நிமிஷம் ஆகுது. ஒன்பது மணிக்கு அவங்க அங்க இருக்கச் சொல்லி இருக்காங்க." என்று மெதுவாகக் கூறினார்.

"அம்மாவையும் அப்பாவையும் அந்த கார்ல போக சொல்லுங்க. நாம ரெண்டு பேரும் கால் டாக்சில போகலாம்." யுவனியின் பதில் எரிச்சலாக வெளிவந்தது.

"இதுல எரிச்சல் பட என்ன இருக்கு டா? அவங்க குடும்பம் நல்ல மாதிரி தான். உனக்கு அவங்களை பிடிக்கலன்னாலும் அதை காட்டுற நேரம் இது இல்ல. நாம அவங்க கூட உறவு கொண்டாட போகல. அவந்திக்கு அவங்க செய்யப் போற கடைசி மரியாதை இது. இதுல வீம்பு பிடிக்க என்ன இருக்கு?" என்றார் மகளை சமாதானம் செய்யும் நோக்கில்.

"கடைசி மரியாதை. இந்த நிலைமைக்கு இழுத்து விட்டுட்டு என்ன மரியாதை வேற வேண்டி இருக்கு? கல்யாணமாகி ஒரே வருஷத்துல சும்மாவே அவந்தி எப்படி சாக முடியும் மம்மி?" கண்ணில் நீர் திரையிட வினவினாள் யுவனி்.

"டேய் அவ காரை வேகமாக ஓட்டிகிட்டு போய் ஆக்ஸிடென்ட் ஆகி இறந்ததுக்கு நாம அந்த குடும்பத்தை மட்டுமே குறை சொல்ல முடியாது டா. உனக்கு சொல்ல நிறைய விஷயம் என்கிட்ட இருக்கு. ஆனா எதையும் இப்போ, இந்த சூழ்நிலையில் சொல்ல முடியல. உங்க அப்பா என் கையை கட்டிப் போட்டு வச்சிருக்காரு யுவனி். எதுனாலும் அவந்தி காரியம் முடியட்டும்ன்னு சொல்லி இருக்காரு. அவரை மீறி உன்கிட்ட சொல்றதுல எனக்கு எதுவும் இல்ல. ஆனா அவரு தான் உன்னை எனக்கு கொடுத்தது. அந்த மரியாதைக்கு தான் நான் அமைதியா இருக்கேன். இத்தனை நாள் பொறுத்த, இன்னும் மூணு மணி நேரம் காத்திரு. வீட்டுக்கு வந்ததும் எல்லாமே சொல்றேன்." என்று அவளது கையை ஆதுரமாகப் பற்றிக் கொண்டார்.

அவர் கூறியதில் முழுவதுமாக சமாதானம் ஆகவில்லை என்றாலும் அரைமனதாக, "ஓகே மம்மி. டூ மினிட்ஸ்ல ரெடியாகி வர்றேன்." என்று அவள் தயாராக ஆரம்பித்தாள்.

ஹாலில் வந்தமர்ந்த சாரதா தன் கைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதனை கையில் எடுத்தவர் அதில் பசுபதியின் எண்ணைக் கண்டு முகம் சுழித்தார்.

ஏற்கனவே காலை ஆறு மணி முதல் இதுவரை பத்து அழைப்புகளுக்கு மேல் செய்து யுவனியை வீட்டுக்கு அனுப்பும்படியும் அவந்திகா வீட்டில் கார் அனுப்புவது பற்றியும் கூறிவிட்டார். எப்பொழுது என்ன? என்ற சலிப்புடன் பட்டனை அழுத்தி காதில் பொருத்தினார்.

"என்ன சாரதா இன்னுமா யுவனி் ரெடியாகல. ரங்கன் சார் நாலு தடவை போன் பண்ணிட்டார். சீக்கிரம்." என்றவர்,

"யுவனிகிட்ட நல்ல சேலையா கட்டிக்கிட்டு வர சொல்லு." என்றார் வேகமாக.

"மாமா அவ ரெடியாக ஆரம்பிச்சுட்டா. ஏற்கனவே கேட்ட எந்த கேள்விக்கும் நாம யாரும் சரியா பதில் சொல்லலன்னு கோவத்துல இருக்கா. அதுவும் இல்லாம நாம என்ன விசேஷத்துக்கா போறோம், சேலை கட்டுன்னு சொல்ல?" என்று மனதில் இருந்ததை மறைக்காமல் கூறினார்.

"சேலையை விசேஷத்துக்கு தான் கட்டணும்ன்னு உனக்கு யார் சொன்னது சாரதா? இப்படி சொல்லி தான் என் பொண்ணை நீ வளர்த்து வச்சிருக்கியா? யுவனி் என்னோட பொண்ணு அவளை சேலைல கூட்டிட்டு வான்னு சொன்னா கூட்டிட்டு வர்றது மட்டும் தான் உன் வேலை." காட்டமாக கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தார் பசுபதி.

அவர் பேச்சில் மிகவும் உடைந்து போனார் சாரதா.

யுவனி் அவர் மகளாமே! இத்தனை ஆண்டுகளில் அவளை நிமிர்ந்து கூட அவர் பார்த்து பேசியதில்லையே! இன்று எந்த விதத்தில் உரிமை கொண்டாடுகிறார்? மனம் குமுறினாலும் யுவனி் அவர் பெற்ற மகள் அல்லவா? என்று மூளை நினைவுறுத்த, யுவனி் தன் மகள், தன் உயிரில் கலந்தவள் என்று அவர் உள்மனம் கதறியது.

அவர் மனம் சோர்ந்து அமர்திருக்க, அறைக் கதவு திறந்து இளமஞ்சளில் ரோஜா மலர்கள் பிரிண்ட் செய்யப்பட்ட காட்டன் டாப்சும் அடர் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து வெளியே வந்தாள் யுவனி்.

"யார் மம்மி போன்ல?" என்று தலையைக் கோதி ஒரு கேட்ச் கிளிப் மாட்டியவள் அன்னையிடம் பதில் வராமல் போனதால் அவரை நோக்கி வந்தாள்.

"உங்க அப்பா போன் பண்ணி உன்னை சேலை கட்டி கூட்டிட்டு வரச் சொன்னாரு." என்றார் இயந்திரத்தனமாக.

உயிர்ப்பில்லாத அவர் குரல் மூலமும் ஏற்கனவே அவளிடம் அவர் பேசியதை வைத்தும் கோபத்தில் இருந்தவள் சீற்றம் மிக்கப் பெற்றவளாக,

"நான் என்ன ட்ரெஸ் போடணும்னு நான் தான் மம்மி டிசைட் பண்ணுவேன். நீங்க வாங்க." என்று அவரை கைப்பற்றி எழுப்பி தன்னைப் பெற்றவர்கள் வீடு நோக்கி நடந்தாள்.

சாரதா வழி நெடுகிலும், "அவர் கிட்ட கோவமா பேசாத யுவனிம்மா ஏற்கனவே அவந்தியை இழந்த சோகத்துல இருக்காங்க" என்று மகளின் கோபம் அறிந்தவராக கூறிக்கொண்டே வந்தார்.

யுவனியை ஜீன்ஸில் பார்த்ததும் சாரதாவை பசுபதி முறைக்க,

"அங்க என்ன பார்வை? எதுனாலும் என்கிட்ட பேசுங்க." என்று அவர் முன்னே யுவனி கைகட்டி நிற்க, அவர் பேச வாயைத் திறந்த நேரம் அவரது கைபேசி அழைத்தது.

"அச்சோ, ரங்கன் சார் தான் கூப்பிடுறாரு. நேரமாகுது. கார்ல ஏறுங்க." என்று பெண்களை நோக்கி கத்தியவர்,

"சார் இதோ கார்ல ஏறிட்டோம் சார். வந்துட்டே இருக்கோம்." பவ்வியமாக கைபேசியில் பதிலளித்தார்.

அவர் இப்படி கூழைக்கும்பிட்டு போடவேண்டிய அவசியம் என்ன? என்று எண்ணியபடி காரின் முன் பக்க இருக்கையில் அமர்ந்தாள் யுவனி.

பேசிவிட்டு காரில் ஏற வந்த பசுபதி பெண்பிள்ளை முன்னே அமர்ந்திருக்கக் கண்டு தொண்டையைச் செருமினார்.

"பின்னாடி உங்க மனைவி பக்கத்துல இடம் இருக்குல்ல. அங்க உட்காருங்க. என்கிட்ட பேசணும்னா என் பேர் சொல்லி கூப்பிட்டு விஷயத்தை சொல்லணும். உங்க மனைவி கிட்ட காட்டுற ஜம்பத்தை என்கிட்ட காட்டக் கூடாது. அதுக்கு அடங்கி நடக்க நான் பார்வதியும் இல்ல, அவந்திகாவும் இல்ல. யுவனி, டாட்டர் ஆஃப் சபேசன்."
என்றாள் தீர்க்கமாக.

மகள் கணவரிடம் நடந்து கொள்ளும் விதம் கண்டு பார்வதி பயந்து பதற, சாரதா பெருமிதம் கண்களில் நீராக நிறைய அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் மரியாதை குறைவாக அவள் நடப்பது தவறென்று சுட்டிக் காட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டவர் தன் கணவரை அவளின் தகப்பன் என்று பெற்றவரிடமே கூறும் அவள் தைரியத்தைக் கண்டு உள்ளம் பூரித்தார்.

காரில் பசுபதி பின்னால் ஏறிக்கொண்டார். இப்பொழுது அவளுடன் மல்லுக்கு நிற்க அவருக்கு நேரமில்லை. அங்கே ஆர். வி இவரின் வருகைக்காக காத்துக் கொண்டிருப்பான். நேரம் சற்று அதிகமானாலும் அவனது பார்வையே அவரை கூறு போட்டு விடும். அதுவும் இல்லாமல் இன்று ஏதோ முக்கியமான நிகழ்வு உள்ளது என்று தன் செகரெட்டரி மூலம் தகவல் கொடுத்திருக்க, ஒன்பதுக்கு ஒரு நிமிடம் தாமதமானாலும் அவனுக்கு எந்த விளக்கமும் தரயியலாது என்று சகித்துக் கொண்டு அந்த பயணத்தை தொடர்ந்தார்.

நேரம் செல்ல செல்ல, செல்வந்தர்கள் மட்டுமே குடியிருக்கும் அந்த பகுதிக்குள் கார் நுழைந்ததும் ஒவ்வொரு வீட்டின் வாயில் கதவுகளே அவர்களது செல்வ செழிப்பை பறை சாற்றியது.

புரியாமல் பார்த்துக் கொண்டே வந்த யுவனி அதில் 'ராஜவிலாசம்' என்று பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வீட்டின் கதவின் முன் காரை நிறுத்தி டிரைவர் ஹார்ன் அடிப்பதைக் கண்டு திகைத்தாள்.

வீட்டின் கதவு பத்து அடி உயரத்துக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலின் உதவியில் ஜொலித்தது.

கதவு திறக்கப்பட்டதும் கார் வீட்டின் நிலைக்கதவுக்கு சென்று நிற்க அரை நிமிடம் பிடித்தது. வழி நெடுகிலும் நந்தவனம் போல பூத்துக் குலுங்கும் செடி கொடிகள், அதற்கு நீர் இறைத்துப் பார்த்துக்கொள்ள பணியாள், வீட்டு வாயிலில் இரண்டு பணியாட்கள் என்று அவர்கள் குடும்பம் மேல்தட்டிலும் மேலும் உயர்ந்தது என்று தெரிந்தது.

இத்தனை பணம் படைத்தவர்கள் தங்கள் வீட்டில் ஏன் வந்து பெண்ணெடுக்க வேண்டும் என்ற கேள்வி அவள் முகத்தில் அறைந்தது.

வீட்டைப் பார்த்து அதிசயித்து நிற்பாள் என்று எண்ணிக் கொண்டு வந்த சிலருக்கு அவளது குழப்ப முகம் சற்றே ஏமற்றத்தை அளித்தது என்றால் மிகையல்ல.

அவளருகில் வந்த பசுபதி, "வீட்டை பார்த்தல்ல. பார்த்து மரியாதையா நடக்கணும். உன் திமிரை இங்க காட்டக் கூடாது." என்று கறார் குரலில் கூறினார்.

பேசாமல் இருந்திருந்தால் கேட்க நினைத்த கேள்விகளுக்கான விடையை மட்டும் பெற்றுக் கொண்டு விலகி இருப்பாள் யுவனி. இவரின் இந்த வேண்டாத பேச்சால்,

"அப்படித்தான் பண்ணுவேன்." என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு எப்பொழுதும் போல நிமிர்ந்த நடையோடு அவ்வீட்டினுள் நுழைந்தாள்.

அவர்களை வரவேற்க அங்கே யாரும் காத்து நிற்கவில்லை. பொதுவாக வெளியாட்கள் வந்தால் அமரவைத்துப் பேச ஒரு பெரியா ஹால் இருக்க, அதில் தங்க நிற குஷன் சோஃபாக்கள் சில ஆக்கிரமிப்பு செய்திருந்தது. அதற்கு அப்பால் இருந்த சுவரில் பெரிய அளவில் அவந்திகாவின் புகைப்படம் மாட்டப்பட்டு அதற்கு ரோஜா மாலை போட்டு இருந்தது. கீழே மேசை வைத்து சில பூஜைப் பொருட்கள் இருந்தது. அங்கும் ஒரு கூடை நிறைய மலர்கள்.

அந்த மலர்களின் வாசம் அவ்வறையை நிறைத்திருக்க, அப்புகைப்படத்தில் இருந்த அவந்திகா ஆடம்பர புடவை உடுத்தி, பல அடுக்கு நகைகளை கழுத்தில் பூட்யிருக்க, முகம் மட்டும் புன்னகை இல்லாமல் இருந்தது.

"போட்டோவை பாரு. உன் அக்கா கழுத்துல எவ்வளவு நகைன்னு. உன் அத்தான்... அதான் நித்யன் தம்பி உன் அக்காவுக்காக ஒரு நகைக்கடை அளவுக்கு வாங்கி குவிச்சு இருந்தாரு." என்று பெருமை பேசினார் பசுபதி.

"என்ன வாங்கிக் கொடுத்து என்ன? என் மக இப்ப இல்லையே?" என்று பார்வதி கண்ணீர் உகுக்க,

"உங்க கண்ணுக்கு பொன்னகை இருக்கறது தான் தெரியுது. ஆனா எனக்கு என் அக்கா படத்துல புன்னகை இல்லாம இருக்கறது தான் தெரியுது. அவளோட புன்னகையை தொலைச்சு அவ்வளவு நகை வாங்கிக் கொடுத்து என்ன ஆகப்போகுது?" என்றாள் யுவனி காட்டமாக.

"நீயும் உன் அக்கா மாதிரி தானா?" என்று பின்னால் இருந்து ஏளனமாக வந்த கேள்வியில் சட்டென்று திரும்பிய யுவனி அங்கே நின்ற அஞ்சலியைக் கண்டு,

"என் அக்கா மாதிரியா? நெவர்." என்ற யுவனியின் பதிலைக் கேட்டு சிரித்தவள்,

"கல்யாணம் ஆனதும் நகையெல்லாம் வேண்டாம்னு முகத்தை திருப்பிக்கிட்டு போன உன் அக்காவுக்கு நீ எந்த விதத்துல வித்தியாசமா இருந்துடப் போற? அதையும் நான் பார்க்க தானே போறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து பெரியவர்களை அமரும்படி கைகாட்டினாள் அஞ்சலி.

"ஆர்.வி தம்பி வர சொன்னாரு மா" என்று அஞ்சலியிடம் மரியாதையோடு கூறினார் பசுபதி.

"அண்ணா இப்போ வருவான். அம்மா அப்பா பெரியப்பா எல்லாம் உள்ள பேசிட்டு இருக்காங்க. வர சொல்றேன். நீங்க என்ன சாப்பிடுறீங்க?" என்று தன்மையாகவே வினவினாள்.

"ஒன்னும் வேண்டாம் மா. தம்பி பேசணும்னு சொன்னாரு" என்று இழுத்தார்.

"ம்ம் பேச வேண்டி இருக்கே! பேசுவோம்." என்று பெருமூச்சு விட்ட அஞ்சலி உள்ளே செல்லலானாள்.

"மம்மி யாரு இது? அவந்தி பத்தி இப்படி பேசுறாங்க, இவரும் அவங்க கிட்ட பம்மி பம்மி பேசுறார். யாரு அந்த ஆர்.வி.?" என்றாள் அடுக்கடுக்காக.

"அது" என்று சாரதா ஆரம்பிப்பதற்குள் உள் அறையில் இருந்து வள்ளி, ராஜரத்தினம், காஞ்சனா, ரங்கராஜன், ஈஸ்வரி வெளியே வர அவர்களுக்குப் பின்னால் ஆர். வி என்பவனையும் அஞ்சலியையும் எதிர்பார்த்தாள் யுவனி.

பார்வதி அருகே வந்து கைப்பற்றிக் கொண்ட வள்ளி, "நாங்க இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நினைக்கவே இல்ல பார்வதி. உன் மகளை நாங்க நல்லா தான் பார்த்துக்கிட்டோம். இப்படி திடீர்னு எல்லாமே நடந்து முடிஞ்சு போச்சு." என்றார் வருத்தமாக.

"இல்லம்மா என் பொண்ணு அன்னைக்கு போன்ல அழுதா. உடனே இப்படி" என்று பார்வதி வாய் திறக்க,

"ஏய் வாயை மூடு." என்று அடக்கினார் பசுபதி.

"ஏன்? ஏன் அம்மாவை அடக்குறீங்க? கேட்கட்டுமே. அவங்க பக்கம் தப்பு இல்லன்னா அவங்க பதில் சொல்லப் போறாங்க. இதுல நீங்க ஏன் நடுவுல வர்றீங்க?" என்றாள் யுவனி காட்டமாக.

வள்ளி யுவனியை ஆச்சரியமாக நோக்கினார். அவந்திகா அவள் தந்தை முன் வாய் திறந்து பேசி ஒரு வருட காலத்தில் அவர் பார்த்ததேயில்லை. ஆனால் இந்த பெண் அவரது பேச்சை ஒரு நொடியில் நிறுத்தி விட்டாளே என்று சிந்திக்க,

காஞ்சனா முன்னே வந்து, "அவந்திகா இந்த வீட்ல யார் கூடவும் ஒட்டிப் பழகவே இல்லம்மா. தனியாவே தான் இருப்பா. அன்னைக்கு அவசரமா அவ கார் எடுத்துட்டு கிளம்பவும் நான் தான் பயந்து நித்தி கிட்ட என்னன்னு பார்க்க சொன்னேன். அவனும் போனான். ஆனா ரெண்டு பேர் காரும் ஆக்ஸிடென்ட் ஆகி, உன் அக்கா இறந்து போயிட்டா, ஆனா எங்க நித்தி இன்னும் எழுந்துக்கவே இல்லம்மா. அவன் பொண்டாட்டி செத்துப் போனது கூட அவனுக்கு தெரியாது." என்றவர் கண்களில் கண்ணீர் கரகரவென்று இறங்கியது.

அவரைப் பார்க்க பாவமாக இருந்தாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் அவள் அப்படி கிளம்பி போக வாய்ப்பில்லையே! தன்னிடமே அஞ்சலி எத்தனை அதிகாரமாக பேசினாள் என்று பார்த்தாயிற்று, இதே போல அவந்தியிடம் பேசி இருந்தால் கண்டிப்பாக அவள் பயந்து போயிருப்பாள். அப்பாவின் ஏய் என்ற குரலுக்கே நடுக்கும் குணம் கொண்டவள் அவந்தி என்ற எண்ணம் யுவனியின் மூளையில் வலம் வரும் நேரம், டக் டக் என்ற பூட்ஸ் சத்தம் அவ்வறையை நொடியில் நிசப்தம் கொள்ளச் செய்தது.

ஆழ்ந்த நீல நிற ஃபார்மல் பேண்ட்டும் வெள்ளை நிற முழுக்கை சட்டையும் அணிந்து, பக்கங்களில் ட்ரிம் செய்யப்பட்டு நெற்றிக்கு மேல் மட்டும் சற்று அடர்ந்திருந்த கேசத்தை ஜெல் கொண்டு செட் செய்திருக்க, சுத்தமாக மழிக்கப்பட்ட தாடையும் கூர்மையான விழிகளும் உதட்டின் ஓரத்தில் ஏளனச் சிரிப்பும் பூசிய அவனைக் கண்டதும் யுவனியின் உள்ளத்தில் சில்லென்று குளிர் பரவியது. அது பயமா? மரியாதையா? அல்லது அதற்கு வேறு பெயர் உண்டா என்று பட்டிமன்றம் நடத்த யுவனிக்கு அவன் நேரம் கொடுக்கவில்லை.

"எல்லாரும் வந்தாச்சா?" என்று கணீர் குரலில் அவன் வினவ,

"வந்தாச்சு அண்ணா" என்று அவனுக்கு பதில் தந்தது அவனது தங்கை அஞ்சலி.

"ஏதோ ப்ரோசீஐர் எல்லாம் பண்ணனும்ன்னு சொன்னிங்கல்ல பாட்டி, அதை ஆரம்பிக்க சொல்லுங்க" என்று சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அவன் அமர்ந்துகொள்ள, அவனது இடக்கரத்தில் இருந்த கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்துவிட்டு சோஃபாவின் இருபுறமும் கைகளைப் பரவ விட்டான்.

அந்த தங்க நிற குஷன் சேரில் அவன் அமர்ந்திருந்த விதத்தைக் கண்டு ஒரு திகைத்த பார்வையோடு,

"அவன் பேர் என்ன மம்மி?" என்று சாரதாவின் அருகில் வந்து வினவினாள் யுவனி.

"ஆர்.வி. முழு பேரு ராஜவினோதன்." என்றார்.

பெயரைக் கேட்டதும் சுருக்கென்று நெஞ்சில் ஏதோ தைத்தது போல உணர்ந்தாள் யுவனி.

"வினோத்" என்று அவள் உதடு முணுமுணுக்க, அவனோ அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை.
 

NNK-96

Moderator
யுத்தம் 5


அவனது பெயரை முழுமையாகக் கேட்டதும் நினைவில் வந்த 'வினோத்' என்ற சொல்லை அவளால் மெல்லவும் முடியவில்லை விழுங்கவும் இயலவில்லை.

இணையவழி நட்பில் இருந்த அவன் பெயர் வினோத் தானே! ஆனால்.. என்ற அவள் எண்ணம் அதற்கு மேல் செல்ல வழியில்லாமல் நின்றது.

அவளறிந்த அந்த பெயருக்குச் சொந்தக்காரன் இவன் தானா? அல்லது இவளாக எதுவும் யூகிக்கிறாளா? கேள்விகள் தலைக்குள் வண்டாகக் குடைய,

எப்பொழுது அங்கே பூஜை ஆரம்பம் ஆனது, என்ன நடந்தது என்று அவள் அறியவில்லை. அவள் விழி அகற்றாமல் அவனை மட்டுமே பார்த்திருந்தாள்.

நேரம் கடந்து போக, அவள் கையில் சாரதா மலரை திணித்த போது தான் அவந்திகா புகைப்படத்துக்கு மலர் தூவச் சொல்கிறார்கள், அவள் வந்த அந்த சடங்கு முடிவுக்கு வந்துவிட்டது என்பதனை உணர்ந்தாள்.

ஏனோ அவந்திகாவின் அந்த புகைப்படத்தைக் காணக் காண அவள் இந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழவில்லை என்ற எண்ணம் மட்டும் யுவனி மனதில் ஆழமாக இறங்கியது.
புகைப்படத்துக்கு அருகே வந்தாள், மலர்களை அதன் கீழே இருந்த மேஜையில் நிதானமாக வைத்தாள்.

உயிர்ப்பில்லாத புன்னகையற்ற அப்புகைப்படம் அவள் மனதை ரம்பமாக அறுத்தது.

இப்போதாவது தன் கேள்விக்கு பதில் கிடைக்குமா என்று அவள் தன் தந்தை பக்கம் திரும்ப, அவரோ ரங்கராஜன் சொல்வதை தலையசைத்து கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர்கள் வீட்டில் அனைவரின் முகமும் ஏதோ தீவிரத்தன்மை பொருந்தி இருப்பதை கவனித்த யுவனி சாரதாவை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

"பார்வதி யுவனியை மேல அழைச்சுட்டு போறாங்க, நீயும் கூட போ." என்று பசுபதி கட்டளையாக மனைவியிடம் கூறிவிட்டு,

"இதோ அனுப்பிடுறேன் சார்" என்று ரங்கனிடம் தெரிவித்தார்.

பார்வதிக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் கணவர் கூறிவிட்டதால் மகள் அருகே வர முயல,

"அங்கேயே நில்லு மா. நான் ஏன் மாடிக்கு போகணும்?" என்று கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு நேரடியாக பசுபதியை நோக்கினாள் யுவனி.

"நீ மேல போ. அஞ்சலி மேடம் எல்லாம் சொல்லுவாங்க" என்று பசுபதி அவளை அனுப்ப அவசரம் காட்டினார்.

"இவங்க எனக்கு யாரோ எவரோ, நான் ஏன் அவங்க கூட மேல போகணும். நான் வந்தது அவந்தி ஆத்ம சாந்திக்காக. எல்லாம் முடிஞ்சது தானே? நீங்க என்னோட வீட்டுக்கு வாங்க. உங்க கிட்ட கேட்க என்கிட்ட ஆயிரம் கேள்வி இருக்கு." என்று பசுபதியை நோக்கி திடமாக நின்றாள் யுவனி.

சாரதா என்ன நடக்கிறது என்று புரியாமல் தவிப்புடன், "அக்கா இங்க என்ன நடக்குது? மாமா யுவனி கிட்ட எதையும் சொல்ல வேண்டாம்னு நீங்க சொன்ன வார்த்தைக்கு மரியாதை கொடுத்து தான் எதையுமே சொல்லாம இங்க கூட்டிட்டு வந்தேன். இப்போ என் பொண்ணு கிட்ட என்ன தனியா பேசப் போறீங்க?" என்று கோபமாக வினவினார்.

"என்னது உன் பொண்ணா? அவளை பெத்தது நாங்க. அவ எங்க பொண்ணு. நான் தான் காலைலயே அவளை சேலையில கூட்டிட்டு வான்னு சொன்னேன்ல. இப்போ சேலை மாத்த தான் மாடிக்கு கூப்பிடுறாங்க அஞ்சலி மேடம்." என்று விளக்கம் கொடுத்தார்.

"என்ன சேரி கட்டணுமா? எதுக்கு?" என்று யுவனி பாய்ந்து வர,

"கல்யாணம் பண்ணும்போது இப்படி ஜீன்ஸ் டாப்ஸ்ல இருந்தா நல்லா இருக்காதுல்ல" என்று அழுத்தமாக பதில் வந்தது அஞ்சலியிடமிருந்து.

"வாட்? கல்யாணமா? புல் ஷிட்." என்று நொடியில் யுவனி காளியாக அவதாரம் எடுத்தாள்.

"இங்க பாரும்மா. எங்க நித்யன் அவந்திகாவை பிடிச்சிருக்குன்னு சொன்னதும் எந்த அந்தஸ்தும் பார்க்காம அவளை அவனுக்கு கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தோம். ஆனா இப்போ எங்க சூழ்நிலை. உன்னை எங்க ஆர்.விக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க உங்க அப்பா கிட்ட கேட்டோம். அவரும் சம்மதம் சொல்லிட்டாரு. நீ புடவை மாத்திட்டு வா." என்று ரங்கராஜன் பொறுமையாக அவளுக்கு கூறினார்.

"என்ன? என்னை கல்யாணம் பண்ணிக்க அப்பா கிட்ட கேட்டிங்க, அவர் ஓகே சொல்லிட்டா, எனக்கும் உங்க வீட்டு பையனுக்கும் கல்யாணமா? மை ஃபுட்." என்று தரையை உதைத்தவள் சாரதா அருகில் செல்ல முயல, அவளை அப்படியே இழுத்து தன் அருகில் இருந்தினார் பசுபதி.

"இங்க பாரு யுவனி அப்பா உன்னோட நல்லதுக்கு தான் சொல்லுவேன். அடம் பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கோ, அவங்க வீட்ல உன்னை நல்லா பார்த்துக்குவாங்க." என்று அவர் கூற, ஒரே உதறலில் அவரிடம் இருந்து விலகியவள்,

அவர்கள் வீட்டு பெண்களை நோக்கி, "என்ன இதெல்லாம்? ஒரு பொண்ணை இப்படி தான் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப்படுத்துவிங்களா?" என்று கேட்க யாரும் வாய் திறந்து பதில் பேசவில்லை.

"எங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது.." என்று அஞ்சலி ஆரம்பிக்க, அவளை தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்தபடி கைப்பற்றித் தடுத்தான் ஆர். வி.

வள்ளியோ இதற்கு மேல் இதனை யாரும் பேசி சூழ்நிலையை சிக்கலாக்கும் முன்,

"நான் இந்த வீட்டுக்கு பெரியவ மா. நான் சொல்றேன். ஏன்... உனக்கு நான் வாக்கு கூட தர்றேன். என்னை நம்பி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு." என்றார் யுவனியிடம்.

"ஐயோ பாட்டி.. என்ன பேசுறீங்க? சும்மா கல்யாணம் கல்யாணம்ன்னு எல்லாரும் பேசாதீங்க" என்று அவள் காதை அடைத்துக் கொண்டு,

"மம்மி வாங்க நாம போகலாம்" என்று சாரதாவை அழைக்க,

"நீ எங்க பொண்ணு, சாரதாவுக்கு உன் மேல எந்த உரிமையும் இல்ல. இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதம் சொல்லி தான் ஆகணும்." என்றார் பசுபதி காட்டமாக.

"நீங்க பேசாதீங்க" என்று அவரை தள்ளிவிட்டு நேராக ராஜவினோதன் அருகில் வந்து நின்றாள்.

"இங்க என்ன நடக்குது? எனக்கு உன்னை தெரியுமா? இல்ல உனக்கு என்னை தெரியுமா? கல்யாணம் என்ன சின்னப்பசங்க விளையாட்டா?" என்று அவனை நேருக்கு நேராகப் பார்த்து வினவினாள்.

அவள் எதிரே வந்து நின்று கேள்வி கேட்கத் துவங்கியதும் அந்த சோஃபாவில் இருந்து எழுந்து கொண்டவன்

"தெரியுமோ தெரியாதோ? இந்த கல்யாணம் இப்போ, இங்க நடக்கணும்." என்று கூர்மையான விழிகளால் அவளைத் துளைத்தபடி கூறினான்.

அவன் கண்கள் அடுத்து சந்தித்தது அஞ்சலியை. அவள் அவன் பார்வை புரிந்து உள்ளே சென்று விட்டு வர,

"ச்சீ. நீ எல்லாம் என்ன மனுஷன்? உனக்கு சப்போர்ட் பண்ணுற இவங்களை எதுல சேர்க்க? நான் கிளம்பறேன்." என்று வாசலை நோக்கி நடக்க முயன்றாள்.

அடுத்த நொடி கதவு படாரென்று வெளியில் இருந்து மூடப்பட்டது. இதனை யுவனி எதிர்பார்க்கவில்லை. நொடியில் உடல் பதற ஆரம்பித்தது.

"உங்க எல்லாருக்கும் கல்யாணம்னா விளையாட்டா போச்சா? என்கிட்ட சம்மதம் கேட்கணும்னு உங்க யாருக்குமே தோனலையா? இன்னும் எந்த காலத்துல எல்லாரும் வாழ்ந்துட்டு இருக்கீங்க?" சுற்றி நின்ற அனைவரையும் தன் கனல் கக்கும் பார்வையால் சுட்டெரித்துக் கொண்டே கையில் கிடைத்த பொருட்களை அங்கே நின்றிருந்தவன் மீது வீசி எறிந்தாள் யுவனி.

நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் என்ன? இங்கே இவர்கள் செய்யத்துணியும் செயல் தான் என்ன? என்ற உட்சபட்சக் கோபத்தில் இருந்த யுவனிக்கு எதிரே நிற்பவனைப் பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை.

ஆனால் அவளது வார்த்தைகளோ செயலோ தன்னையும் எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்புடன் நின்றிருந்தான் அவன்.

அவளது செயலைக் கண்டு வெகுண்ட அவளது தந்தை, "ஏய் யார் கிட்ட என்ன பேசுற? யார் மேல கண்டதையும் வீசுற? அவர் யார் தெரியுமா? அவரை கல்யாணம் பண்ணிக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்." என்று தான் பெற்ற மகளை அடக்க முன்னே வந்தார்.

அவரை அதே கனல் பார்வையில் தள்ளி நிற்க வைத்தவள், "இப்படித் தானே அக்காவையும் கட்டாயப்படுத்தி இவங்க குடும்பத்துல கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சிங்க? அவ எங்க? இப்போ இங்க என்ன நடந்துட்டு இருக்கு? அவளோட பதினாறாவது நாள் காரியம். இப்போ என்னை இவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க ஏன் இப்படி துடிக்கிறீங்க?" என்று அவரை நேர்கொண்டு வினவினாள்.

அவளது கேள்வியில் சாரதா தன் சகோதரியையும் அவள் கணவரையும் பார்த்து, அவர்களின் செயலால் அவர் மனம் வருந்தி இருந்தாலும் மகள் வருத்தத்தில் கூட பயமில்லாமல் கேள்வி கேட்பதில் பெருமிதம் கொண்டு ஜாடை காட்டினார்.

அவள் தந்தை பசுபதி பதில் சொல்ல முடியாமல் கையைப் பிசைந்தபடி நிற்க, அவருக்கு முன்னே தன் கம்பீரமான உயரத்துடன் வந்து நின்று அவளது கண்ணோடு கண் நோக்கி,"ஏன்னா நான் என்ன சொல்றேனோ அதான் இங்க நடக்கும். நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னேன். அதான் நடக்கவும் போகுது. உன்னோட சம்மதம் இங்க யாருக்கும் தேவையில்ல." என்றான் .

அத்தனை நேரமும் தைரியமாக எதிர்த்து பேசிக்கொண்டிருந்தாள் யுவனி, இப்பொழுதும் அவனது அதிகாரமான பேச்சில் எரிச்சல் கொண்டு, அவனை எச்சரிக்கும் எண்ணத்துடன் விரலை உயர்த்தி ஏதோ கூற வந்தாள்.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் அஞ்சலி அவன் கையில் கொடுத்த பொன் பூட்டிய பசும்மஞ்சள் தாலியுடன் அவளை நோக்கி நடந்து வந்தான் அவன்.

அவன் முன்னேற முன்னேற நா வறண்டு, முதல் முறை அவளது நெஞ்சம் பயத்தில் துடித்தது. தன்னை காக்க இங்கே அவளது வளர்ப்பு அன்னையைத் தவிர யாருமில்லை. ஆனால் அவரும் இப்பொழுது கையறு நிலையில் நிற்க, அவனது அழுத்தமான நடையைக் கண்டு அவள் பின்னோக்கிச் சென்றாள்.

வேண்டாம் என்பதாக தன் தலையை குறுக்கே ஆட்டி, கைகளை அவனை நோக்கி தடுக்கும் முயற்சியில் இருந்த யுவனி, அந்த அறையின் சுவரில் மோதி நின்றாள்.

"ராஜா கொஞ்சம் யோசிப்பா" என்று மெல்லிய குரலில் அவனது அன்னை அவனைத் தடுக்க முனைந்தார்.

ஆனால் அவனது மொத்தக் குடும்பமும், "ஆர்.வி நீ கட்டு டா." என்று கூற,

இதோ அவளை சமீபித்து அவளது மென்மையான கைகளை தன் இடக்கரத்தால் வளைத்து அவளை சுவருடன் நிறுத்தி, அவளது மறுப்பைச் சற்றும் சட்டை செய்யாமல் அவளின் கழுத்தில் திருமாங்கல்யத்தைப் பூட்டினான் ராஜவினோதன்.

அவனது இந்த செயலில் திகைத்த யுவனி அவன் அவளை விட்டு விலகியதும்,

"ஏய் யூ.. ஹவ் டேர் யூ?" என்று கழுத்தில் கிடந்த அந்த மஞ்சள் கயிறை கோபமாக பற்றி இழுக்க முயல,

பார்வதி பாய்ந்து வந்து மகளைத் தடுத்தார்.

"ஐயோ யுவனி என்ன பண்ற? அது விளையாட்டு பொம்மை இல்ல. நீ வேண்டாம்ன்னு தூக்கிப் போட, தாலி." என்று பதறினார்.

"என்ன தாலியா? ச்சீ. நீயெல்லாம் ஒரு அம்மாவா? உன் வயித்துல தான் நான் பிறந்தேனா? என்னை இங்க கூட்டிட்டு வந்து என் சம்மதம் இல்லாம இதை என் கழுத்துல கட்டிட்டா, இவன் என் புருஷன், இது என் குடும்பம்னு இங்கேயே உட்கார்ந்து இருப்பேனா? என்னை என்ன உன்னை மாதிரி நினைச்சியா?" என்று கத்தியவள்,

"ஏய் மிஸ்டர் ஒழுங்கு மரியாதையா கதவைத் திறக்க சொல்லு. இல்ல என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது." என்று ஆர். வியை விரல் நீட்டி எச்சரித்தாள்.

அவனுக்கு அவளது செயல் சிறுபிள்ளையின் செயலாகத் தோன்ற அமைதியாக நின்றான்.

"நீ செஞ்சது எவ்வளவு பெரிய தப்புன்னு நீ புரிஞ்சுக்குவ. நான் புரிய வைப்பேன். கட்டாயப்படுத்தி தாலி கட்டி வீட்டுக்குள்ள பூட்டி வைக்க நினைச்சியா? தைரியமான ஆம்பளைன்னா என்னை வெளில போக விடுடா." என்று சவால் விட்டாள்.

அதுவரை அவளை எள்ளல் பார்வை பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலிக்குக் கூட அவளது இந்த தைரியமான பேச்சு வியப்பைக் கொடுத்தது.

ஆர்.வி ஏதோ பேச வாய் திறந்தவன், பசுபதி அவனிடம் ஏதோ காதில் கூறியதைக் கேட்டு,

"அங்கிள் உங்களுக்காக அனுப்பி வைக்கிறேன். நாளைக்குள்ள பேசி சரி பண்ணி கொண்டு வந்து விடுங்க." என்று கூறிவிட்டு மடமடவென்று நிற்காமல் மாடியேறிச் சென்றான்.

போகும் அவனை நெருப்பை உமிழும் பார்வை பார்த்த யுவனி, 'உன்னை என்கிட்ட வந்து கதற வை
க்கிறேன் டா.' என்று அவன் அவள் கழுத்தில் வலுக்கட்டாயமாகக் கட்டிய தாலியை இறுக்கமாகப் பிடித்தபடி தனக்குள் சபதம் செய்து கொண்டாள்.
 

NNK-96

Moderator
யுத்தம் 6

காரில் வீட்டிற்கு வரும் வழியில் சாரதாவும் பார்வதியும் யுவனியை சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றனர். அவள் யாரையும் சட்டை செய்யவில்லை. கார் பசுபதி வீட்டு வாயிலில் நின்றதும் சாரதாவிடம் இருந்த கைப்பையை பிடுங்கிக் கொண்டு நேராக சாரதாவின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

பார்வதியிடம் அவளை தங்கள் வீட்டிற்கு வரச் சொல்லும்படி பசுபதி கட்டளை பிறப்பிக்க அதையெல்லாம் காதில் கூட போட்டுக்கொள்ளவில்லை யுவனி.

சாரதா அவளது நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமாக அவள் பின்னே சென்றார்.

வீட்டைத் திறந்தவள் நேராக அறைக்குள் சென்று கதவை அறைந்து சாற்றினாள்.

சாரதா வேகமாக கதவைத் தட்டத் துவங்கினார்.

"கண்ணு கதவை திற டா. அவங்க இப்படி பண்ணுவாங்கன்னு மம்மிக்கு தெரியாது டா. தெரிஞ்சிருந்தா உன்னை கூட்டிட்டு போயிருக்கவே மாட்டேன். இப்பவும் எதுவும் கெட்டுப் போகல. உனக்கு என்ன கேட்கணுமோ கேளு. மம்மி பதில் சொல்றேன். நீ அந்த வீட்டுக்கு போக வேண்டாம். உன் விருப்பம் என்னவோ செய். உன்னை மீறி மம்மி எதுவுமே செய்ய மாட்டேன் டா." என்று கதவில் சாய்ந்து கதறினார்.

படாரென கதவைத் திறந்தவள்,

"நீ என்னை அவங்க கிட்ட இருந்து வாங்கியதும் எனக்கும் அவங்களுக்கும் உள்ள பந்தம் வெறும் டி.என்.ஏ அளவுக்கு தான். உனக்கு தான் என் மேல முழு உரிமை மம்மி. அவங்க என்னை கட்டாயப்படுத்தி அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க டிரை பண்ணும்போது நீ அதை ஏன் தடுக்கல? அதான் உன் மேல எனக்கு கோபம். வேற எதுவும் இல்ல. அந்த ராஸ்கல் என்னையும் மீறி தானே எனக்கு தாலின்னு இந்த கயிறை கட்டிட்டான். அவனை கதற விடுறேனா இல்லையான்னு பாரு மம்மி. இந்த யுவனி யாருன்னு அவனுக்கு காட்டாம விட மாட்டேன்." என்று சாரதாவிடம் சபதம் போட்டுக் கொண்டிருந்தாள்.

"கிழிச்ச. பொம்பள பிள்ளை உன்னால என்ன முடியும்? வீட்டுப் பெரியவங்க முன்னாடி உனக்கு தாலி கட்டி இருக்காரு. இனி அவர் தான் உன் புருஷன். ஒழுங்கா பொம்பளையா லட்சணமா அவரோட போய் குடும்பம் நடத்து. சும்மா இந்த சவடால் விடுற வேலையெல்லாம் வச்சுக்காத" என்று எகத்தாளமாகக் கூறினார் பசுபதி.

"என்ன சொன்ன? யோவ் உன்னைத் தான் கேட்டேன்? இப்போ நீ என்ன சொன்ன? பொம்பள என்னால என்ன பண்ண முடியுமா? அவனை மட்டுமில்ல உன்னையும் நான் ஓட விடுறேனா இல்லையான்னு பாரு. பெத்துட்டா நீ அப்பனா? நீ சொல்லி அவன் என் கழுத்துல கட்டினது தாலியா?" என்றவள் "நீ முதல்ல என் வீட்டை விட்டு வெளில போ. இனி ஜென்மத்துக்கும் உன் மூஞ்சில நான் முழிக்க விரும்பல." என்று பசுபதி வாசல் நோக்கி கை நீட்டி திடமாக உரைத்தாள் யுவனி.

அவர் அவளை நோக்கி வந்து, "ஓங்கி அடிச்சேன்னா தெரியுமா? நாளைக்கு காலைல வரைக்கும் தான் ஆர். வி. சார் டைம் கொடுத்திருக்கார். அதுக்குள்ள ஒழுங்கா அவங்க வீட்டுக்கு வாழ கிளம்பு. அங்க போனாலே உனக்கு ஏன் இந்த கல்யாணம் நடந்ததுன்னு புரியும்." என்று கை ஓங்கி வந்தார்.

"அந்த வீட்டுக்கு போகும் போது என் போனை சாரதா மம்மி பர்ஸ்ல எடுத்து வச்சுட்ட. அதான் அங்க இருந்தே என்னால போலிஸுக்கு போன் பண்ண முடியல. இப்போ என் போன் என் கையில தான் இருக்கு. ஒழுங்கா வெளில போங்க. இல்லன்னா இப்போவே போலிஸை கூப்பிடுவேன்." என்று அவள் செல்போனை எடுக்க,

"என்ன வளர்த்து வச்சிருக்க சாரதா? பெத்த அப்பாவை போலீஸ்ல பிடிச்சுக் கொடுப்பேன்னு சொல்றா. அவந்திக்கு கூட அந்த கல்யாணம் பிடிக்கல தான். ஆனா அப்பா சொன்னாருன்னு பேசாம தானே கல்யாணம் பண்ணிட்டு போனா?" என்று கணவனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பார்வதி சாரதாவிடம் பாய்ந்தார்.

"சரி நல்லபடியா வளர்த்து அப்பன் பேச்சை கேட்க வச்சல்ல? உன் பொண்ணு எங்க? சொல்லு.. இப்போ பேசு" என்று பார்வதியை உலுக்கினாள் யுவனி.

"நீ தானே என் பொண்ணுக்கு என்னவோ ஆச்சு, அவளை கொன்னுட்டாங்க போலன்னு போன் பண்ணி அழுதது. இப்போ அவ நல்லவ, தைரியமா எதிர்க்கற நான் கெட்டவளா?" என்று கத்தினாள்.

பார்வதிக்கு பதில் கூறத் தெரியவில்லை. அவர் வாய் மூடி அழ ஆரம்பித்தார்.

"இங்க பாருங்க. இது என் வாழ்க்கை. நடந்தது அநியாயம். அதுவும் எனக்கு. நான் என்ன முடிவு பண்றேனோ அதான். யாராவது ஏதாவது பண்ணலாம்னு நெனச்சிங்க மொத்தமா தூக்கி உள்ள வச்சிடுவேன்." என்று கூறிவிட்டு தன் கைப்பையும் கைபேசியையும் எடுத்துக்கொண்டு வெளியேறினாள் யுவனி.

போகும் அவளை வெறித்த பசுபதி, "உனக்கு இப்ப சந்தோஷமா சாரதா? மூத்தவ தான் கிடைச்ச நல்ல வாழ்க்கையை வாழாமலே போயிட்டா. அவளுக்கு பின்னாடி.." என்று குரல் உடைந்து பின் செருமிக்கொண்டு,

"இவளுக்கும் அதே வீட்ல வாழ்க்கை கிடைச்சது எல்லாருக்கும் நல்லதுன்னு உனக்கு புரியலையா? அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பன்னு பார்த்தேன். ஆனா நீ இவ்வளவு சுயநலமா நின்னுட்டியே!" என்று சாரதாவை குற்றம் சாட்டினார்.

"மாமா கல்யாணம் அவளோட விருப்பத்துக்கு தான் நடக்கணும். இப்படி பண்ணி வச்சா அவ எப்படி நல்லா வாழுவா?" என்று சாரதாவும் மனம் பொறுக்காமல் வினவினார்.

அவர் ஒன்றும் பசுபதி கூறியது போல சுயநலமாக எண்ணவில்லையே! அதே நேரம் இந்த திருமணம் யுவனிக்கு மட்டுமல்ல பல பேருக்கு நன்மை செய்திருக்கும் தான். ஆனால் அதனை யுவனிக்கு புரிய வைத்து பின் திருமணத்தை நிகழ்த்தி இருக்க வேண்டும் என்று பொறுமையாகக் கூறினார்.

"அதெல்லாம் நடக்காதுன்னு ஆர். வி சார் சொல்லிட்டார். இனி பேச எதுவும் இல்ல. அவளை எப்படியாவது மாத்து. அது உன் பொறுப்பு. அவளுக்காக மட்டும் இல்ல, அவந்தி.." என்றவர் கண்ணீருடன்,

"எல்லாத்தையும் நெனச்சு பாரு சாரதா." என்று வெளியேறினார்.

பார்வதி கண்ணீர் விழிகளுடன் தங்கையையும் கணவரையும் மாற்றி மாற்றி பார்த்தபடி கணவன் பின்னே சென்றார்.

கணவர் நிழலில் அண்டி வாழ்ந்தவர் அவர். எதிர்க்கவோ, தவறென்று எடுத்துக் கூறவோ தைரியம் இல்லாதவர்.

சாரதா வேரறுந்த மரமாக சோஃபாவில் அப்படியே சாய்ந்தார். தான் வளர்த்த மகளின் மனதை பார்த்து அவளுக்கு சார்பாக இருப்பதா, அல்லது அந்த மகளையே அவருக்குக் கொடுத்த அக்கா குடும்பம் அவர்களின் மூத்த மகளை இழந்து ஒரே பிடிப்பாக யுவனியை நம்பி இருப்பதால் அவர்களுக்கு சார்பாக இருப்பதா என்று தெரியாமல் சஞ்சலம் கொண்டார்.

வீட்டை விட்டுக் கிளம்பிய யுவனியின் மனம் நெருப்பின் குணம் கொண்டது போல் பற்றி எரிந்து கொண்டிருந்தது.

வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறியவள் ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து நிதானம் அடைய முயன்றாள். அவள் மார்பு மூச்சுக்காக வேகமாக ஏறி இறங்கும் போது தன் இயல்பாக ஏறி இறங்கிய அந்த மஞ்சள் கயிற்றில் இருந்த தங்கத் தாலி இரும்பு குண்டாக நெஞ்சில் கனத்தது.

கைபேசியை எடுத்து நவாஸுக்கு அழைத்தாள். அவளது மூன்றாவது ரிங்கில் எடுத்தவனிடம்,

"எங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷன் எது நவாஸ்? வாட்ஸ்ஆப்ல லோகேஷன் ஷேர் பண்ணிட்டு உடனே கிளம்பி நீயும் வந்திடு" என்று அனல் தெறிக்கக் கூறினாள்.

தோழியின் குரலில் இருந்த அழுத்தம், வேகம், கோபம் எல்லாம் எதிர்த்தரப்பில் இருந்தவனுக்கு லேசாக பயத்தைக் கிளப்பி இருந்தது.

"என்னாச்சு யுவா? இப்போ தான் உன் அக்கா கேஸ் ஃபைல் வாங்கினேன். பாதி தான் வாசிச்சு இருக்கேன். அதுக்குள்ள நீ போன் பண்ணி வர சொல்ற? எதுவும் பிரச்சனையா? அப்படியே இருந்தாலும் அவசரப்படாத யுவா. உன் அத்தான் வீடு சாதாரணம் இல்ல. முக்கியமா அவங்க வீட்டு ரெண்டாவது பையன். ஐயோ எல்லாத்தையும் போன்ல சொல்ல முடியாது. நீ என் ஆபிஸ் வா சொல்றேன்." என்று தோழிக்கு நேரில் விளக்க நினைத்தான்.

"அந்த டேஷுக்காக பயந்து என்னால சும்மா இருக்க முடியாது. உன்னால வர முடியுமா முடியாதா? உனக்கு பயம்ன்னா ஒதுங்கிக்கோ. நானே விசாரிச்சு போயிக்கிறேன். " என்று கைபேசியை அணைத்தாள்.

அடுத்த நொடியே அது அலற, நவாஸின் எண்ணைக் கண்டு எரிச்சலோடு எடுத்தாள்.

"என் குடும்பம் தான் என்னை ஏமாத்திடுச்சு. நீயாவது நல்ல நண்பனா எனக்கு கூட நிப்பன்னு நினைச்சேன் நவாஸ்" என்று குரல் உடைந்து மெல்ல கண்ணீர் சிந்தினாள் யுவனி.

"யுவா என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியல. ஆனா எதுனாலும் பார்த்துக்கலாம். நான் இருக்கேன். ஆனா அவசரப்படாத. நேரா என் ஆபிஸ் வா. தேவைப்பட்டா நானே உன்னை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போறேன். என்னை நம்பி வா யுவா." என்றான் நவாஸ் இறைஞ்சுதலாக.

"உன் ஆபிஸ் அட்ரஸ் சொல்லு. ஆட்டோ டிரைவர் கிட்ட சொல்லணும்." என்றபடி கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் யுவனி.

அவன் கூறிய விலாசத்திற்கு வந்து இறங்கியவளின் நிலை கண்டு அவளுக்காக வாயிலில் காத்திருந்த நவாஸ் ஆடிப் போனான்.

கழுத்தில் தாலி, கலைந்த சிகை, கண்ணீர் நிறைந்த கண்கள் என்று பல ஆண்டுகள் கழித்துக் காணும் தன் தோழியின் நிலை கண்டு பதறினான்.

"என்ன யுவா இது?" என்று அவன் அவளை நோக்கி ஓடி வர,

"வா உள்ள போய் பேசுவோம்." என்று அவனுடன் அவனது கேபினுக்கு நடந்தாள்.

அவந்திகாவின் காரியம் என்று அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததை அவள் உரைக்க,

"உனக்கு தாலி கட்டினது யாரு அந்த ஆர்.வி.யா?" பயத்துடன் வினவினான் நவாஸ்.

"ஆமா அந்த இடியட் தான். அவனை போலீஸ்ல சொல்லி.." என்று பல்லைக் கடித்தாள் யுவனி.

"யுவா. அவசரப்படாத யுவா. நீ நினைக்கிறது அவ்வளவு சுலபம் இல்ல." என்று தயக்கமாக உரைத்தான்.

"என்ன டா சொல்ற? என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி இருக்கான். அவன் கூட போய் வாழ சொல்றியா? முடியாது. இப்போவே அவன் மேல போலீஸ்ல கேஸ் கொடுக்கணும்." என்று கனன்றாள்.

"உன் அக்கா கேஸ் பத்தி தெரியுமா?" என்று நவாஸ் வினவ,

"இங்க பாரு அந்த குடும்பத்துல கண்டிப்பா அவ நல்லா வாழ்ந்திருக்க வாய்ப்பே இல்ல. இப்போ அவ இல்லவும் இல்ல. அவளுக்காக நான் என் வாழ்க்கையை இழக்க முடியாது. ஒருவேளை அவளை அவங்க கொன்னுருப்பாங்கன்னு நான் கேஸ் போடுவேன்னு பயந்து இப்படி செஞ்சானோ என்னவோ? எனக்கு தெரியாது. ஆனா என்னை இப்படி செஞ்சவனை நான் சும்மா விட மாட்டேன்." என்று கொதித்தாள்.

"நீ போடுற கேசுக்கு பயப்படுறவன்னு நெனச்சியா அவனை. அவங்க அண்ணன் ஆக்ஸிடென்ட் கேஸை சத்தமே இல்லாம ஊத்தி மூட வச்சிருக்கான். அவனுக்கு அப்ப எவ்வளவு செல்வாக்கு இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கோ. உன் அக்கா ஒன்னும் சாதாரணமா ரோட் ஆக்ஸிடென்ட்ல சாகல. அங்க என்னவோ நடந்திருக்கு. இதை அப்படியே மறச்சு போலீசுக்கு என்ன கொடுக்கணுமோ கொடுத்து, கீழ இருந்து மேல வரைக்கும் யாரும் இதைப் பத்தி மூச்சு கூட விடாத அளவுக்கு செஞ்சிருக்கான். யாருன்னு நினைக்கிற. இதோ இதை உன் கழுத்துல அவ்வளவு தைரியமா கட்டி வெளில வேற அனுப்பி இருக்கானே அதே ஆர். வி. தான்." என்று கூறினான்.

இப்படிப்பட்டவன் தன்னை ஏன் கட்டாயத் திருமணம் செய்ய வேண்டும் என்று விளங்காமல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள் யுவனி.
 

NNK-96

Moderator
யுத்தம் 7

"நீ கடைசியா என்ன தான் சொல்ல வர்ற நவாஸ். அவனை எதிர்த்து போலிஸுக்கு போக முடியாதுன்னு தானே?" என்றாள் எரிச்சலுடன்.

"ஆமா யுவா. அவங்க குடும்பம் மூணு தலைமுறையா பிஸ்னஸ் பண்றவங்க. இந்த சிட்டில அவங்களுக்கு தெரியாத பெரிய மனுஷங்க இல்ல. அவனைப் பத்தி நீ கம்பிளைன்ட் கொடுத்தா எடுக்கவே மாட்டாங்க யுவா." என்று நிதர்சனத்தை உரைத்தான்.

"அப்ப என்னை அவனுக்கு பயந்து ஓட சொல்றியா? இல்ல அவனோட போய் குடும்பம் நடத்த சொல்றியா?" என்று வெடித்தாள்.

"ரெண்டும் பண்ண சொல்ல மாட்டேன் யுவா. நீ எங்க ஓடினாலும் அவன் உன்னை துரத்திட்டு வருவான். அவன் ஏன் உன்னை கல்யாணம் பண்ணி இருக்கான்னு நமக்கு தெரியாது. அதுனால அவ்வளவு சீக்கிரம் உன்னை போக அவன் விட மாட்டான். அதே நேரம் நீ அவனோட போய் வாழவும் முடியாது. கூடாது." என்று திட்டவட்டமாகக் கூறினான்.

"டேய் என்ன டா சொல்ற? போலீசுக்கும் போக முடியாது, ஓடவும் முடியாது, வாழவும் முடியாது. அப்பறம் கோழை மாதிரி சாக சொல்றியா? நான் யுவனி டா. அவனை கொல்லுவேனே தவிர நான் சாக மாட்டேன்." என்று திடமாக உரைத்தாள்.

"நீ ஏன்டி சாகணும்? போலீஸுக்கு தான் போக முடியாது. ஆனா நேரா கோர்ட்டுக்கு போகலாம். அவன் மேல கேஸ் எழுதி, கோர்ட் ஆர்டர் அனுப்பி அவனை ஆஜராக சொல்லலாம்." என்று தீவிரமாக உரைத்தான்.

"டேய் போலீஸ் கேஸ் இல்லாம கோர்ட்ல நாம என்ன டா பண்றது?" என்று புரியாமல் வினவ,

"ஃபேமிலி கோர்ட்ல மேரேஜ் நல்லிஃப்பிகேஷன் ஃபைல் பண்ணலாம் யுவா.." என்றான் அழுத்தமாக.

"என்ன டா சொல்ற?" என்று புரியாமல் வினவினாள்.

அவளுக்கு சட்டப்பிரிவுகளை சுருக்கமாக விளக்கத் துவங்கினான் நவாஸ்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அவ்வப்போது மாற்றங்கள் செய்வதும், புதிய சட்டங்கள் இயற்றப்படுவதும் வழக்கமே. அப்படி 1995 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் தான் 'ஹிந்து மேரேஜ் ஆக்ட் '. அந்த சட்டத்தின் 12வது செக்ஷன் படி ஒரு பெண்ணை அவளது சம்மதம் இல்லாமலோ, கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ திருமணம் செய்வது குற்றமாகும். அப்படி நடைபெற்ற ஒரு திருமணத்தை ரத்து செய்ய நீதிமன்றத்துக்கு முழு உரிமை இருக்கிறது. அதை 'வாய்டு மேரேஜ் ' என்று கருதி திருமணத்தை செல்லாது என்று அறிவித்துவிடும்.

அவன் கூறியதைக் கேட்டு சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள் யுவனி. பின் அவளுக்கு அவன் கூறியதில் இருந்தும் அவளது சூழலிலிருந்தும் சந்தேகங்கள் பிறந்தன.

"டேய் தப்பா நினைக்காத. கல்யாணம் நடந்ததுக்கு அவங்க கிட்ட சாட்சின்னு எதுவும் இருக்காது. ஆனா வீட்டு பெரியவங்க வந்து சொல்லுவாங்கல்ல, ஒருவேளை நான் திடீர்னு பைத்தியமா மாறிட்டேன்னு சொல்லிட்டா?" என்று இழுத்தாள்.

"ஏன் கேட்கறேன்னா அவனோட பேக்ரவுண்ட் என்னன்னு நீ சொன்ன பின்னாடி, எது செய்யறதா இருந்தாலும் நான் எல்லா பக்கமும் யோசிக்கணும்ன்னு நினைக்கிறேன்." என்றாள் நண்பனுக்கு புரிய வைத்துவிடும் நோக்கில்.

"நீ சொல்றதுல தப்பே இல்ல. அப்படி ஒருவேளை அவங்க சொன்னாலும் இந்த கல்யாணம் செல்லாது. ஏன்னா மெண்டலா முடிவு செய்ய முடியாத பெண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சாலும் அதே சட்டப்படி செல்லாது." என்றான் தீர்க்கமாக.

"ஓ ஓகே. வேற ஏதாவது பிரச்சனை வர வாய்ப்பு இருக்கா டா?"

"இன்னிக்கே கேஸ் கொடுத்துட்டா எந்த பிரச்சனையும் இல்ல. கல்யாணம் முடிஞ்சு நீ அவங்க வீட்ல கொஞ்ச நாள் வாழ்ந்துட்டு வந்து கேஸ் கொடுத்தா அது கோர்ட் ஏத்துக்காது. நீ நேத்து தான் இந்தியா வந்தன்னு நிரூபிக்க உன் பாஸ்போர்ட் போதும். அவங்களால எதுவும் செய்ய முடியாது." என்று உறுதியாகக் கூறினான்.

"சரி வா போகலாம். எனக்கு அவனை சும்மா விடக் கூடாது. முக்கியமா அவனுக்கு சொம்பு தூக்குன என் அப்பாவை சும்மாவே விடக் கூடாது." என்று எரிச்சலுடன் கூறினாள்.

"நாம கேஸ் போட்டதும் அவனுக்கு சம்மன் போகும். அடுத்து எப்ப கோர்ட் தேதி சொல்லுதோ அப்ப ரெண்டு பார்டியும் கோர்ட்ல ஆஜர் ஆகணும். நீ அப்பவும் கேஸ்ல ஸ்ட்ராங்கா இருந்தன்னா இந்த கல்யாணம் செல்லாதுன்னு தீர்ப்பு வந்துடும்." என்று தோழிக்கு சட்டம் பற்றி எடுத்துரைத்து குடும்பநல நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று மனுத்தாக்கல் செய்தான்.

கிளார்க் அவர்களது மனுவை வாங்கி விட்டு அவளை ஏறிட்டார். அவள் முகமே அவள் கதையைக் கூறியது.

"சம்மன் அனுப்பிடலமா பாய்? பெரிய இடம் போல இருக்கு. யோசிச்சு சொல்லுங்க." என்று நவாஸிடம் பழகிய பழக்கத்துக்காக வினவினார்.

"அனுப்பிடுங்க சார்." என்று அவன் பணிவாய் கூற,

"எப்படியும் தேதி உடனே இல்ல. ஒரு வாரம் ஆகும். பொண்ணை பத்திரமா வச்சுக்கோங்க." என்று அக்கறையாகக் கூறிவிட்டு யுவனியிடம் கையொப்பம் வாங்கினார்.

வெளியே வந்ததும் யுவனியை ஆழமாக நோக்கினான் நவாஸ்.

"எந்த சூழ்நிலையிலும் இந்த கேசை வாபஸ் வாங்க மாட்ட தானே யுவா?" என்று தோழியிடம் வினவினான்.

"கண்டிப்பா நவாஸ். எனக்கு அவனோட போய் வாழ எந்த ஆசையும் இல்ல. யாருக்காகவும் நான் ஒத்துக்க மாட்டேன்." என்று அழுத்தம் திருத்தமாக கூறிய அவளுக்குத் தெரியாது கண்ணீருடன் வந்து இவனிடம் 'இந்த கேஸ் வேண்டாம் நவாஸ்' என்று திரும்பப் பெறுவோம் என்று.

"சரி யுவா. நீ எந்த காரணம் கொண்டும் அவன் வீட்டுக்கு போயிடக் கூடாது. கேஸ் வர்ற வரையிலும் நீ தனியா எங்காவது இரு. இல்லன்னா உங்க அம்மா வீட்ல இரு. என்ன நடந்தாலும் அவன் வீட்டுக்கு போக கூடாது. உன் செல்போனை எப்பவும் கையில வச்சுக்கோ. உன் செல் லோகேஷன் வச்சு தான் நீ அவன் வீட்ல இல்லன்னு நான் கோர்டுக்கு எவிடென்ஸ் காட்ட முடியும்." என்று தெளிவாக அவளுக்கு எடுத்துரைத்தான்.

"சாரதா மம்மி நான் என்ன முடிவு செஞ்சாலும் என் பக்கம் இருப்பேன்னு சொன்னாங்க நவாஸ். அதுனால நான் அவங்க கூடவே இருந்துப்பேன். அவன் வீட்டுக்கு போக மாட்டேன்." என்று கூறிவிட்டு அவளுக்காக இந்த அளவுக்கு உதவி செய்த நண்பனுக்கு நன்றியை தெரிவித்து அங்கிருந்து கிளம்பினாள்.

இதெல்லாம் நடந்து கொண்டிருந்த வேளையில் ராஜவிலாசத்தில் சிறிய மாநாடு ஒன்று நடந்து கொண்டிருந்தது.

"எதுக்கு அந்த பொண்ணுக்கு அவ்வளவு அவசரமா தாலி கட்டி கடைசில அவங்க வீட்டுக்கே அனுப்பணும்? இதுக்கு அந்த காமெடில சொல்லுவனே அது போல அந்த பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் ஆர். வி." என்றார் ஈஸ்வரி எகத்தாளமாக.

"அம்மா நாம அவளை இங்கேயே இருக்க வச்சிருக்கலாம். ஆனா அவங்க அப்பா தான் அவளை எப்படியாவது சமாதானம் பண்ணி அனுப்புறேன்னு வாக்கு கொடுத்தார். அதான் அண்ணா கிட்ட அனுப்பி விட சொன்னேன்." என்று அஞ்சலி வந்தாள்.

அவனுக்கு வக்காலத்து வாங்கும் தன் மகளை முறைத்தார் ஈஸ்வரி.

"என்ன இருந்தாலும் நீ செஞ்சது தப்பு ராஜா" என்று காஞ்சனா மகனை கண்டிக்கும் குரலில் கூறினார்.

"அக்கா இதெல்லாம் நீங்க முன்னாடி சொல்லி இருக்கணும். இப்போ அந்த பொண்ணு தான் உங்க இளைய மருமக. வேணும்ன்னா பாருங்க அவளும் அவங்க அக்கா மாதிரி சுருண்டு சுருண்டு படுத்து, வீட்டை விட்டு ஓடுறாளா இல்லையான்னு" என்று ஈஸ்வரி வேகமாகக் கூறினார்.

என்ன தான் அவர் தன் மனதில் இருக்கும் வன்மத்தை மறைக்க நினைத்தாலும் தீ ஜுவாலை போல அவரையும் மீறிக்கொண்டு அது அவர் வார்த்தைகளில் வெளிப்பட்டது.

காஞ்சனா கலங்கிய விழிகளோடு, "அந்த பொண்ணுக்கு நான் எந்த பாவமும் செய்யல. ஏன் அப்படி நடந்ததுனு இன்னும் கூட எனக்கு புரியவே இல்ல. இதுல இவன் வாழ்க்கையும் இப்படி ஆகும்னு சாபம் மாதிரி சொல்றியே ஈஸ்வரி?" என்று கேட்டு அவ்வறையை விட்டு வெளியேறினார்.

தன் மூத்த மருமகள் மனம் நோகச் செல்வதைக் கண்டு, "ஏன் ஈஸ்வரி உன் நாக்கு என்ன தேளா? வார்த்தையால ஏன் இப்படி கொல்ற? நாங்களே என்ன பண்றதுன்னு தெரியாம தானே உட்கார்ந்து இருக்கோம்." என்று இளைய மருமகளை கடிந்து கொண்டார் வள்ளி.

"எனக்கு ஏன் அத்தை வேண்டாத பொல்லாப்பு? என்னவோ பண்ணுங்க. அவ பேசிட்டு போன அழகைப் பார்த்தா அவளெல்லாம் திரும்பி வருவான்னு எனக்கு நம்பிக்கையே இல்ல. எப்படியும் நாளைக்கு ஆர். வி தரதரன்னு இழுத்துட்டு வந்தா தான் உண்டு." என்று கூறிவிட்டு அவர் பேச வேண்டியதை பேசி விட்ட திருப்தியில் அங்கிருந்து விலகினார்.

ரத்தினம் இளைய மகனை ஓய்ந்து போன பார்வை பார்த்தார்.

"நான் நித்தயனை பார்க்க ஆஸ்பத்திரிக்கு போறேன் ஆர். வி. அவன் இருந்திருந்தா இந்த சூழ்நிலையை நல்லபடியா கையாண்டு இருப்பான்னு தோணுது. நீ வேகமாவும் தேவைக்கும் முடிவு செய்யற. ஆனா நித்யன் நிதானமாவும் அவசியத்துக்கும் முடிவு செய்வான். அவனை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் பா" என்று கூறி மெல்ல தோள் குலுங்க கண்ணீரை மறைத்தார்.

ரங்கன் அண்ணனின் கண்ணீரைக் கண்டு, "அண்ணா ஆர்.வியும் இப்ப அவசியத்துக்கு தான் இந்த முடிவை எடுத்திருக்கான். அவனை நாம நம்பணும்." என்று தேற்றி அவருடன் மருத்துவமனைக்குக் கிளம்பினார்.

"நித்யனை வீட்டுக்கு மாத்தணும் அஞ்சலி" என்று கூறி எங்கோ வெறித்தான் ஆர்.வி.

அஞ்சலி தன் அண்ணன் அருகே வந்து, "நீ ஒன்னும் யோசிக்காத அண்ணா. எல்லாமே சரியா நடக்கும். நாளைக்கு அவ வருவா. உன் விருப்பம் எதுன்னு புரியும் போது இன்னிக்கு அவ கிட்ட இருந்த கோபம் போயிடும். நான் டாக்டர்ஸ் கிட்ட அண்ணாவை பத்தி பேசுறேன்" என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துவிட்டு கிளம்பினாள்.

பாட்டி மட்டும் தன்னிடம் எதுவும் பேசாமல் அமர்த்திருக்கக் கண்டவன், "நீங்க மட்டும் ஏன் பாட்டி எதுவும் சொல்லாம இருக்கீங்க?" என்று அருகே வந்து சோஃபாவின் கைப்பிடியில் அமர்ந்தான்.

"என்னோட இத்தனை வருஷ அனுபவத்தை வச்சு சொல்றேன். நீ அந்த பொண்ணை ரொம்ப சாதாரணமா எடை போட்டுட்டன்னு தோனுது ஆர். வி.
அவ பேசும்போது இருந்த தெளிவும் தைரியமும் எனக்கு பயமா இருக்கு. கண்டிப்பா உன் விருப்பத்துக்கு வளைஞ்சு கொடுத்து இந்த வீட்டுக்கு அவ வாழ வர மாட்டான்னு என் மனசு சொல்லுது." என்று நெஞ்சில் சுட்டு விரலும் நடுவிரலும் கொண்டு லேசாக நீவி விட்டுக் கொண்டார்.

அவர் பேசியதைக் கேட்ட ஆர்.வியின் முகம் பாறை போல இறுகியது.

"நீங்க சொல்றது போல எல்லாம் நடக்காது பாட்டி. யுவனி அந்த அவந்திகா போல கிடையாது. தைரியமானவ தான். ஆனா முட்டாள் இல்ல. இந்த கல்யாணம் அவளுக்கு பிடிக்காம போகலாம். ஆனாலும் அவ என்னோட வந்து இந்த வீட்ல வாழ்ந்து தான் ஆகணும். வர வைப்பேன்." என்று அழுத்தமாகக் கூறிவிட்டு நீளமாக எட்டுக்கள் எடுத்து வைத்து வீட்டை விட்டு வெளியேறினான் ராஜவினோதன்.

அவன் மனதுக்குள் நடந்து கொண்டிருப்பது என்னவென்று அவனால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. அதே போல அவனால் யுவனியை விட்டுவிடவும் முடியாது.

'நீ தைரியசாலியா இருக்கலாம் யுவனி. அப்படித்தான் இருக்கணும். ஏன்னா நீ இப்போ இந்த ஆர்.வியோட மனைவி. அப்படி இருந்தா தான் எனக்கும் கெத்து. ஆனா நீ என்னோட வந்து வாழ்ந்து தான் ஆகணும். வாழ வைப்பேன். அதுக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன். எதை செய்யவும் இந்த ஆர். வி தயங்க மாட்டான்.' என்று மனதிற்
குள் சூளுரைத்தான்.

அவன் மனதிற்குள் சிரித்த முகமாக நித்யன் வந்து போக அவனது வெறி இன்னும் கூடியது.
 

NNK-96

Moderator
யுத்தம் 8

கோர்டில் இருந்து நேராக சாரதாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் யுவனி. வெளியே சென்ற மகள் நெடுநேரமாக எந்த தகவலும் இல்லாமல் இருந்ததால் பெரும் கவலையில் இருந்த சாரதா, மகளைக் கண்ட நிம்மதியில்,

"வா யுவனிம்மா. என்ன டா மம்மி மேல இன்னும் வருத்தமா? எப்ப வெளில போன, எப்ப வர்ற பாரு? மம்மி பயப்பட மாட்டேனா?" என்று அவளின் அருகில் அமர்ந்து கைகளைப் பற்றிக்கொண்டார்.

"மம்மி ஒன்றரை வருஷமா வெளிநாடுகளுக்கு தனியா போயி அதை பத்தி எழுதிக்கிட்டு இருக்கேன். இந்த சென்னைக்குள்ள போயிட்டு வரத் தெரியாதா? திடீர்னு ஏன் டிபிக்கல் அம்மா மாதிரி பிஹேவ் பண்றீங்க?" என்று சலித்தவள், ஒரு பெருமூச்சுக்குப் பின்,

"உங்க மேல எனக்கு கோவமோ வருத்தமோ இல்ல மம்மி.எந்த காரணம் கொண்டும் உங்க அக்காவுக்கும் அவங்க புருஷனுக்கும் சப்போர்ட் பண்ணி என்கிட்ட பேசிடாதீங்க. அதை விட இனி அவங்க முகத்துல விழிக்க கூட நான் தயாரா இல்ல." என்று சோஃபாவில் பின்னால் தலையை சாய்த்து கண்களை மூடிக் கொண்டாள்.

சாரதாவுக்கு தன்னை யாரோ முட்புதரில் எறிந்து விட்டது போல உள்ளமும் உடலும் சுருக்கென்று தைத்தது. பசுபதி அவருக்கு சாதகமாக நடக்கச் சொல்கிறார். இவள் அப்படி செய்யாதே என்கிறாள்.

வளர்த்த மகளை பார்ப்பதா? வளர்க்கக் கொடுத்தவர்களின் சூழ்நிலையைப் பார்ப்பதா? என்று நொந்தார்.

"நீ என்ன முடிவு பண்ணி இருக்கன்னு தெரியல. ஆனா இத்தனை நாளும் உன்கிட்ட சொல்லாம மறைச்ச எல்லாத்தையும் நான் சொல்றேன். கேட்டுட்டு நீயே நல்ல முடிவா எடு." என்று ஆழ்ந்த குரலில் கூறினார் சாரதா.

அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த யுவனி சட்டென்று விறைப்புடன் எழுந்து அமர்ந்தாள்.

அவரின் வார்த்தைகள் அவளை அப்படி அமர வைத்தது. உண்மைகளை சொன்ன பின் முடிவெடு என்றால் என்ன அர்த்தம்? இவரும் பசுபதி கூறுவது போல யுவனியை அந்த வீட்டில் சென்று வாழச் சொல்லப் போகிறாரா? மனதின் எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் சுற்றித் திரிய, அவளின் அசைவில்லா நிலை கண்டு தான் சொல்ல வந்ததை ஆரம்பித்தார் சாரதா.

"அவந்தி அந்த வீட்டுக்கு.. " என்று அவர் கூறும்போது கை நீட்டி அவரைத் தடுத்தாள் யுவனி.

"போதும் மம்மி. அவந்திக்கு அங்க என்ன நடந்திருந்தாலும் அதுக்கு என் வாழ்க்கையை பணயமா வைக்க நான் தயாரா இல்ல. உங்களுக்கும் உங்க அக்கா குடும்பத்துக்கும் விளக்கங்கள் இருக்கலாம். ஏன்னா எல்லாருக்கும் அவங்க செயலுக்கு ஒரு நியாயம் இருக்க தான் செய்யும். ஆனா அந்த நியாயம் எல்லாருக்கும் பொதுவான நீதிக்கு எதிரா இருக்க நிறையவே வாய்ப்பு இருக்கு. என்னை அந்த வீட்டுக்கு போய் வாழ சொல்ல யாருக்கும் உரிமை இல்ல. என்னோட சம்மதம் இல்லாம, என்னை சுவரோடு சுவரா நிறுத்தி கட்டாயமா தாலி கட்டின அவனுக்கு என்னை அங்க வாழ வர சொல்லி கூப்பிட தகுதியே இல்ல. இன்னும் பத்து நாள் தான். எல்லாத்துக்கும் ஒரு முடிவு வந்திடும். நான் என் வேலையை பார்க்க கிளம்பிடுவேன்." என்றாள் திட்டவட்டமாக.

"யுவனி பிளீஸ் நான் சொல்றத ஒரே ஒரு தடவை காதுல வாங்கிட்டு முடிவு செய் டா." என்று கெஞ்சினார் சாரதா.

"நான் கேள்வி கேட்டப்ப சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும். அவன் என்னை கையாலாகாத நிலையில நிக்க வைக்கிறதுக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா கூட உங்க பக்கமோ, இல்ல அவங்க பக்கமோ உள்ள நியாயத்தை நான் யோசிக்கவாவது செய்திருப்பேன். எப்போ என்னோட எண்ணம் என்ன? அங்க உள்ள பிரச்சனை என்னன்னு கூட சொல்லாம என்னை பொம்மை மாதிரி, ஏதோ கடையில கடைக்காரன் கிட்ட காசு கொடுத்து தூக்கிட்டு போற மாதிரி அவர் கிட்ட சொல்லிட்டு எனக்கு தாலி கட்டினானோ அப்பவே உங்க யாரைப் பத்தியும் சிந்திக்க எனக்கு அவசியம் இல்லாம போச்சு." என்று பெருமூச்சொறிந்தாள்.

அவள் கழுத்தில் பாரமாகக் கிடந்த அந்த மஞ்சள் கயிறை கட்டை விரலால் தூக்கிக் காட்டி,

"ஒரு பொண்ணை மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடுறது போல அழுத்தி வச்சு இதை கட்டிட்டா பின்னாடியே வந்திடுவான்னு எண்ணம் இருக்கப் போய் தானே இப்படி செஞ்சான்? அவன் கிட்ட பணம் இருக்கு போலீஸ் அவனை ஒன்னும் செய்யாதுன்னு திமிர்ல தானே செஞ்சான்? அதான் அவனை நேரா கோர்ட்டுக்கு இழுத்திருக்கேன். சட்டம் எல்லாருக்கும் சமம் தான். அவனை அங்கே வந்து காரணம் சொல்லி புரிய வச்சுக்க சொல்லுங்க. ஆனாலும் என் முடிவுல மாற்றம் இல்ல." என்று இத்தோடு பேச்சு முடிந்தது என்பதாக அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

அவளது பேச்சில் மலைத்துப் போனார் சாரதா. 'கோர்ட்டா? ' என்று அவர் மனம் ஒருபுறம் மகளின் தைரியத்தை மெச்சினாலும் இதனால் என்ன பின்விளைவு இருக்குமோ? என்று பயந்தார்.

அவருக்கும் யுவனியை அந்த வீட்டிற்கு கட்டாயத்தின் பேரில் அனுப்ப விருப்பம் இல்லை தான். ஆனால் பசுபதி குறிப்பிட்ட அந்த ஒரு காரணத்தை ஒதுக்கி விட முடியாதே! என்று இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தார்.

ஒரே நாளில் எந்த பிரச்சனையும் முடிந்து விடாது, தீர்வு கிட்டி விடாது என்பது அவரது அனுபவத்தில் அவர் அறிந்ததே! ஆனாலும் மகளின் நிலையும் அவளது எதிர்கால வாழ்வையும் நினைக்க நினைக்க அவருக்கு படபடப்பு அதிகமானது.

நெஞ்சில் யாரோ கூரான அம்பைத் தைத்தது போல வலி பிறந்தது.

"யுவனி" என்று ஈனஸ்வரத்தில் அழைத்தவர் மெல்ல நினைவை இழந்தார்.

அன்னையின் அழைப்பில் இருந்த வித்தியாசத்தை உள்ளறையில் அமர்ந்திருந்த யுவனி உணர்ந்த நொடி படாரென கதவைத் திறந்து ஓடி ஓடி வந்தாள்.

சோபாவிலிருந்து சரிந்து தரையில் விழ இருந்த சாரதாவை தாவி வந்து தாங்கிப் பிடித்தாள்.

கன்னத்தில் தட்டியபடி, "மம்மி, கண்ணைத் திறந்து பாரு. என்னாச்சு ம்மி" என்று லேசாக உலுக்க, கண்கள் மேலே சொறுகிய வண்ணம் மயங்கிய அன்னையைக் கண்டு பயந்து போய் ஆம்புலன்ஸ் சர்வீசுக்கு அழைத்தாள்.

ஐந்து நிமிடத்தில் அது வந்துவிட, பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்து விட்டு காத்திருப்போர் அறையில் நின்ற அவளுக்கு உடலெல்லாம் சில்லிட்டுப் போனது.

காலையில் இருந்து எத்தனை அதிர்ச்சி. தன்னுடைய வயதிற்கு தானே தளர்வாய் உணரும்போது, தன்னையே உலகம் என்று எண்ணி வாழும் அன்னைக்கு அது எத்தகைய பாதிப்பைக் கொடுத்திருக்கும் என்று எண்ணிய யுவனி சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.

பார்வதிக்கோ பசுபதிக்கோ சொல்ல வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

அரை மணி நேரம் கழித்து வந்த மருத்துவர், "அவங்க இதயம் கொஞ்சம் பலவீனமா இருக்கு. இரத்த நாளங்களில் அடைப்பு இருக்குற மாதிரி தெரியல. ஆனாலும் இரத்த ஓட்டத்தின் வேகம் குறைவா இருக்கு. கொஞ்சம் டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு என்ன பண்ணலாம்னு சொல்றேன் மா. அவங்க கண் முழிச்சதும் போய் பாருங்க." என்று அவளுக்கு தைரியம் சொல்லிச் சென்றார்.

யுவனி கண்களை மூடி அமர்ந்து கொண்டாள். அதனுள் வந்து சென்ற அவந்திகாவைக் கண்டதும் அவளுக்கு ஆத்திரம் வந்தது. உடன்பிறந்தவள் தான். ஆனால் பசுபதியின் விழி அசைவுக்கு ஏற்றபடி ஆடும் குரங்காக இருந்தாள். சிறுவயது முதலே இவள் அக்கா என்று பிரியமாகச் சென்றால் அவருக்கு பயந்து பயந்து விளையாடக் கூட வராதவள் தான் அவந்தி.

திருமணம் நிச்சயமானதும் உரிமையாக யுவனி அவந்தியை அழைத்து கேலி பேசியபோது, 'இப்படி எல்லாம் பேசாத யுவனி' என்று அழைப்பைத் துண்டித்தவள் தான். திருமணம் முடியும் வரை அவளது அழைப்புகள் ஏற்கப்படாமலே போனது.

அதில் கோபம் கொண்ட யுவனி அவந்திகாவை அதன் பின் அழைத்துப் பேசவில்லை. திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்குப் பின் சாரதா சமாதானம் செய்து இருவரையும் பேச வைத்தார். அன்று முதல் அவள் இறக்கும் வரை மூன்று நான்கு முறை வீடியோ காலில் பேசி இருக்கிறார்கள்.

அதிலும் அவந்தியின் பேச்சு மிகக் குறைவே. 'நல்லா இருக்கியா? எந்த நாட்டுல இருக்க? குளிருதா? நேரத்துக்கு சாப்பிடுவ தானே? பத்திரமா இரு.' இதைத் தவிர அவள் வேறு பேசியதாக யுவனிக்கு நினைவே இல்லை எனலாம்.

இப்படியான ஒருவரின் மரணம் தன்னை பாதிக்கிறது என்பதே யுவனிக்கு லேசான எரிச்சலைக் கொடுக்கத்தான் செய்தது. ஒருமுறை அவளது பிரச்சனைகளை என்னிடம் பகிர்ந்திருக்கலாமே என்ற அவளின் ஆதங்கம் போய், பகிர்ந்திருந்தால் இன்று தனக்கு இந்த நிலை இல்லையே என்ற கோபம் துளிர்த்தது.

செவிலியர் வந்து அவளிடம் சில பார்ம்களைக் கொடுத்து நிரப்பச் சொல்லி விட்டுச் சென்றார்.

அவள் அதனை நிரப்பும் நேரம் பதற்றமாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர் பார்வதியும் பசுபதியும்.

பார்வதி மகளைக் கண்டு வேகமாக வந்தவர், "என்னாச்சு யுவனிம்மா? சாரதாவுக்கு என்ன?" என்று பதறினார்.

"ஒன்னும் இல்ல. டாக்டர் பாத்துட்டு போயிருக்கார். டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு சொல்லுவாங்க." என்று மரத்த குரலில் கூறினாள்.

"எங்களுக்கு தகவல் சொல்லணும்ன்ற அறிவு இல்லையா உனக்கு? ஆம்புலன்ஸ் வந்ததா தெருவுல பேசிக்க, யாருன்னு பார்த்தா சாரதான்னு சொல்லவும் அடிச்சு பிடிச்சு வர்றோம்." என்று கோபமாக ஆரம்பித்த பசுபதி அவளது பொசுக்கும் பார்வை கண்டு வாயை மூடிக் கொண்டார்.

அத்தனை தீர்க்கமாக அவரைப் பார்த்தாள் யுவனி.

"அவங்க என்னோட அம்மா. அவங்களை பார்த்துக்க எனக்கு தெரியும். எந்த மூணாவது மனுஷனும் எனக்கு சொல்லத் தேவையில்ல, நானும் தகவல் சொல்லத் தேவையில்ல." என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு,

"இது தான் உங்க லிமிட். இதை மீறி இனி ஒரு அடி நீங்க எடுத்து வைக்க கூடாது. மீறினா விளைவு விபரீதமா இருக்கும்." எச்சரிக்கையாக சொல்லி விட்டு யுவனி ரிசப்ஷனில் அந்த ஃபாரங்களைக் கொடுக்கச் சென்றாள்.

"என்ன டி பேசிட்டுப் போறா இவ? நாளைக்கு காலைல இவ அந்த வீட்டுக்கு போகலன்னா என்ன ஆகும் தெரியுமா? இந்த சாரதா வேற இப்படி வந்து படுத்துட்டா. இவளை சரிகட்டி அனுப்பிடுவான்னு நம்பிக்கையா இருந்தேன்." என்று பசுபதி கூற,

"ஏங்க ஏற்கனவே ஒருத்தியை இழந்து நிக்கிறோம். இவளும் கோவமா இருக்கா. இப்போவே இவளை அந்த வீட்டுக்கு அனுப்பலன்னா என்னங்க? இவளுக்கும் ஏதாவது ஆச்சுன்னா.." என்று பார்வதி கண்ணீர் விட ஆரம்பித்தார்.

"அவந்திகா என்ன பண்ணினான்னு மறந்துட்டியா நீ? அவ செத்ததுக்கு அந்த குடும்பம் என்ன செய்யும்? அவங்க இவளை ஏன் கல்யாணம் பண்ணிக்க கேட்டாங்கன்னு உனக்கு நான் சொன்னேன் தானே? யோசிச்சு தான் டி அவளை கல்யாணம் பண்ணிக் கொடுக்க சம்மதம் சொன்னேன். ஒரு அப்பனா ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் நல்லா இருக்கணும்னு தான் நான் நினைச்சேன், நினைக்கிறேன் எப்பவும் நினைப்பேன். அடாவடியாக செய்யறதனால நான் கெட்டவனா அவங்க கண்ணுக்கு தெரிஞ்சாலும் நல்லா வாழும் போது சந்தோஷப்படுற முதல் ஆள் நான் தான் டி. உங்களுக்கு அதெல்லாம் எங்க புரியப் போகுது." என்று வெறுப்பாக கண்களை மூடிக் கொண்டார்.

பின் மெல்லிய குரலில், "சாரதாவுக்கு உடம்பு சரி இல்லன்னு சொல்லி ரெண்டு நாள் ஆர்வி சார் கிட்ட டைம் கேட்கறேன். நீயும் சாரதாவும் எப்படியாவது அவளை சமாதானம் பண்ணிடுங்க. இந்த வாரத்துல நித்யன் தம்பிக்கும் நினைவு திரும்பிடும். அதுக்குள்ள அவ அங்க இருக்கணும்." என்று கூறினார் பசுபதி.
 

NNK-96

Moderator
யுத்தம் 9

"அவன் கிடைச்சானா இல்லையா? " என்று சிம்மக் குரலில் எதிரில் நின்றவர்களை மிரள விட்டுக் கொண்டிருந்தான் ஆர்வி.

"சார் நாங்களும் எவ்வளவோ தேடிட்டோம், எங்க ஒளிஞ்சிருக்கான்னு கண்டுபிடிக்கவே முடியல சார்." என்று தயக்கமாக வந்த பதிலில் தன் டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை அவர்களை நோக்கி அதிவேகமாக எறிந்தான் அவன்.

அதில் அடிபட்டுக் கொள்ளாமல் தப்பிக்க எண்ணி அவர்கள் நகர்ந்து கொள்ள, அந்த கண்ணாடியாலான அறையின் ஒரு பக்கத்தில் சென்று சிலீர் என்று பட்டுத் தெறித்தது.

அந்தப் பக்கத்தின் கண்ணாடி முழுவதும் கோடு கோடாக விரிசல் விட்டுக் கிடக்க, அந்த கண்ணாடியாலான பேப்பர் வெயிட் என்னவோ ஒய்யாரமாக அடிபட்ட இடத்தில் மாட்டிக் கொண்டிருந்தது.

"அவனைத் தூக்க உங்களை கூப்பிட்டது மாதிரி உங்களைத் தூக்க வேறு யாரையும் நான் கூப்பிடணுமா? சொன்ன வேலையை ஒழுங்கா செய்ய முடியாதா?" என்று அவன் கர்ஜிக்க எதிரில் நின்றவர்களோ,

"சார் நீங்க சொன்ன நாள்ல இருந்து சாப்பாடு தூக்கம் எல்லாத்தையும் ஓரமா வச்சுட்டு அவனை தான் சார் தீவிரமா தேடிக்கிட்டு இருக்கோம்." என்று உள்ளே போன குரலில் பதில் கூறினார்கள்.

"இன்னும் ஒரே நாள் தான் உங்களுக்கு டைம். அதுக்குள்ள அவனை என் கண்ணு முன்னாடி நிறுத்தணும். இல்லன்னா நடக்கறதே வேற. கெட் லாஸ்ட்." என்று தன் மனதில் இருந்த மொத்தக் வெறுப்பையும் வார்த்தைகளால் உமிழ்ந்தான் ராஜவினோதன்.

வந்திருந்த நால்வரில் மூவர் அமைதியாக வெளியே செல்ல, கடைசியாக வெளியேற இருந்தவன் அந்த பேப்பர் வெயிட்டை எடுத்து டேபிளில் வைத்துவிட்டுச் செல்லும் நல்ல எண்ணத்தில் அதன் மீது கை வைத்தான்.

அடுத்த நொடி பொலபொலவென்று அந்தப் பக்க கண்ணாடிச் சுவர் உதிர்ந்து விழுந்ததும், செய்வதறியாது விழித்தான்.

அவனை எரித்து விடுவது போல முறைத்த ஆர்வி.

"கெட் தி ஹெல் அவுட் ஆஃப் ஹியர்."என்று கொதிக்க, பேப்பர் வெயிட்டை தரையில் போட்டுவிட்டு ஓட்டம் எடுத்தான்.

கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அங்கே வந்த அஞ்சலி,

"என்ன அண்ணா இது? ஏன் இவ்வளவு கோபம்?" என்று அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.

"இல்ல அஞ்சு. எனக்கு ஒன்னும் இல்ல. நீ உன் வேலையை கவனி. நித்தி இல்லாத குறை தெரியவே கூடாது. நம்ம கம்பெனி ஷேர் வேல்யூ அவனுக்கு ரொம்பவே இம்பார்டெண்ட். அவன் வந்து பார்க்கும் போது நாம ப்ளக்சுவேட் ஆனோம்ன்னு தெரிஞ்சாலே நம்மளை ஒரு வழி பண்ணிடுவான். கோ.. கண்டின்யூ யுவர் வொர்க்." என்று தங்கையை அவளது அலுவல் அறைக்கு செல்லும்படி தள்ளினான்.

சரியாக அந்த நேரம் அஞ்சலியின் கைபேசி ஒலித்தது. அதில் தெரிந்த பசுபதியின் எண்ணைக் கண்டு நெற்றியில் முடிச்சு விழ, அழைப்பை ஏற்று காதில் பொருத்தினாள்.

"சொல்லுங்க" என்று அவள் மொட்டையாக பதிலளிக்க,

"அஞ்சலி மேடம், நான் பசுபதி பேசுறேன்." என்று தயங்கினார்.

"தெரிஞ்சு தான் போன் எடுத்தேன். நேரத்தை வீணாக்காம விஷயத்தை சொல்லுங்க." என்று அவசரம் காட்டினாள்.

"இல்லம்மா எங்க சாரதா திடீர்னு மயங்கி விழுந்துட்டா. ஹாஸ்டல்ல சேர்த்து இருக்கோம்." என்று அவர் மீண்டும் தயங்க,

"என்ன... பணம் கட்டணுமா? இல்ல ஸ்பெசலிஸ்ட் டாக்டர் யாரையும் பார்க்கணுமா?" என்று சாதாரணமாகவே வினவினாள்.

"அதெல்லாம் நாங்க பார்த்துட்டோம் மா. ஆனா.. யுவனி. அவ அவங்க அம்மாவை விட்டு அசைய மாட்டேன்றா. சாரதா டிஸ்சார்ஜ் ஆக ரெண்டு நாள் ஆகும். வீட்டுக்கு வந்ததும் நானே யுவனியை உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றேன்." என்று தயக்கத்தை மீறி கூறி முடித்தார்.

அவர் பேசத் துவங்கியதும் போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டிருந்த ஆர்வி செங்கனலாக சிவந்தான்.

"என்ன குடும்பமா சேர்ந்து நாடகம் போடுறீங்களா?" அவன் வாயிலிருந்து சாட்டையாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

"ஐயோ தம்பி. நாடகம் போட எனக்கு என்ன அவசியம்? உங்களுக்கு தெரியாததா? யுவனி வளர்ந்தது சாரதா கிட்ட தானே! அவ படுத்துக் கிடக்கும் போது புது வாழ்க்கை தொடங்குன்னு சொன்னா அவளாலையும்.." என்று அவர் முடிக்கும் முன்,

"இந்த கல்யாணம் நடக்க என்ன காரணம்னு சொல்லிட்டேன். காலைலையே நித்யன் கிட்ட நல்ல முன்னேற்றம் இருந்தது. நாளைக்கு எப்படியும் கண்ணு விழிச்சிடுவான். அப்ப உங்க பொண்ணு, இல்ல என் மனைவி எங்க வீட்டுல இருக்கணும். இல்ல நேரா அங்க வந்து இழுத்துட்டு வர கூட தயங்க மாட்டேன். நான் சொன்னா சொன்னது தான். காலைலயே அவளை அனுப்பி இருக்கக் கூடாது." என்று அவன் பல்லைக் கடித்தான்.

"கோவப்படாதீங்க. எப்படியும் பேசி கூட்டிட்டு வரப் பாக்கறேன்." என்று இழுத்தார்.

"உங்க பெரிய பொண்ணு அவந்திகா விஷயத்துல உங்க கிட்ட காட்டின கோவத்தோட அளவை வச்சு என்னை கணிக்காதீங்க. நான் நித்யன் மாதிரி நல்லவன் கிடையாது. மோசமானவன்." என்ற எச்சரிக்கையுடன் அழைப்பை துண்டித்தான்.

"அண்ணா.. நீ அவர் கிட்ட என்ன பேசுற? எனக்கு புரியவே இல்ல." என்று அஞ்சலி திகைக்க,

"அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல அஞ்சு. இவரையெல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்காம நித்யன் தப்பு பண்ணிட்டான். அதான் நான் இப்போ அவருக்கு மந்திரிக்க வேண்டியதா இருக்கு." என்று கூறி தங்கையை அனுப்பி வைத்தான்.

வெளியே குயூபிக்கிலில் இருந்த செக்ரட்டரியை அழைத்து கண்ணாடியை மாற்றும்படி பணித்துவிட்டு தன் லேப்டாப் பேகுடன் கான்பரன்ஸ் அறைக்குள் சென்று அமர்ந்தான்.

தலைக்குள் வண்டு போல காலையில் யுவனி் அவனைப் பார்த்த அந்த பார்வை குடைந்தவண்ணம் இருந்தது.

லேப்டாப்பை எடுத்து டேபிளில் வைத்து அதனை கடவுச்சொல்லிட்டுத் திறக்க அங்கே பச்சைப் புல்வெளியின் மத்தியில் வெள்ளை நிற லாங் கவுனும் இளநீல ஸ்ரக்கும் அணிந்து தலையில் அதே நீலத்தில் பெரிய தொப்பியும், கண்ணாடி அணிந்த கண்களும் உதட்டில் நியூட் லிப்ஸ்டிக்கும் அணிந்து தேவதை போல அமர்ந்திருந்தாள் யுவனி.

"உனக்கு என்ன தான் டி பிரச்சனை? அதான் தாலி கட்டிட்டேன்ல? என்னோட இல்லாம ஏன்டி இப்படி பண்ற? நாளைக்கு மட்டும் நீ என்கிட்ட வரலன்னா உன்னை வர வைக்க என்ன வேணாலும் செய்வேன்." என்று கடுப்புடன் புகைப்படத்துடன் பேசிக்கொண்டிருந்தான்.

தன்னை ஒருவன் புகைப்படத்தில் மிரட்டுவது பற்றி எந்த குறிப்பும் அறியாத யுவனி சாரதாவின் கையைப் பற்றிக்கொண்டு மருத்துவமனையில் அமர்ந்திருந்தாள்.

அன்றைய நாள் அவ்வாறே கழிந்து போக, காலை ஒன்பது மணிக்கே ஆர்வியின் கட்டளையின் பேரில் பசுபதிக்கு அழைத்து எப்பொழுது யுவனி வருவாள் என்று கேட்டிருந்தாள் அஞ்சலி.

அவரோ கையைப் பிசைந்து, மாலை அழைத்து வருவதாக கூறிவிட்டு அந்த இயலாமையையும் கோபத்தையும் தங்கைக்காக சமையல் செய்து கொண்டிருந்த மனைவியிடம் காட்டினார்.

பதில் பேசாத பார்வதி அன்று அதிசயமாக, "அவ கிட்ட சொல்றேன். ஆனா அவ கேட்டா தானே!" என்று சலித்துவிட்டு நகர்ந்தார்.

மருத்துவமனை சென்ற இருவரும் ஜாடை மாடையாகவும், நேராகவும் ராஜவிலாசத்துக்கு கிளம்பும்படி யுவனியை நெருக்கிக் கொண்டே இருந்தனர்.

மதிய உணவு வரை கண்டுகொள்ளாமல் இருந்த யுவனிக்கு பசுபதி விடாமல் அவளை கிளம்பச் சொல்வது எரிச்சலின் உச்சத்துக்கு அழைத்துச் சென்றது.
அவரைக் கடித்துக் குதறும் எண்ணத்துடன் இருந்தவளை நிதானத்துக்கு அழைத்து வந்தது நவாஸின் அழைப்பு.

"சொல்லு நவாஸ்" என்று அவனுக்கு காதைக் கொடுத்தவள், அவன் கேட்ட சில விபரங்களை கூறிவிட்டு தாயின் நிலையையும் அவனுக்கு விளக்கினாள்.

"நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. இவங்க தொல்லையை என்னால தாங்க முடியல. நாளைக்கு ஈவினிங் பிளைட்ல கிளம்பி டெல்லி ஆபிஸ் போயிடலாமான்னு கடுப்பா இருக்கு." என்று கூறிக்கொண்டிருந்தாள் யுவனி.

அதை வேண்டாம் என்று நவாஸ் கூறி இருக்க, அவள் ம்ம் மட்டும் கொட்டி அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

ஆனால் பிற்பாதியை அறியாத அவளுக்குப் பின்னால் இருந்த மறைவில் இருந்து ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த பசுபதிக்கு இவள் கிளம்பி விட்டால் அந்த குடும்பத்துக்கு யார் பதில் சொல்வதென்று பயம் பிடித்துக் கொண்டது.

அதே நேரம் முக்கியமான மீட்டிங்கில் இருந்த ஆர்வியை உடனே அலுவலகத்தின் வரவேற்பறைக்கு வருமாறு ரிசப்ஷனிஸ்ட் அழைக்க, எரிச்சலுடன் வந்தவனைக் கண்டு எழுந்து வந்தார் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க மனிதர்.

"சார் நான் ஃபேமிலி கோர்ட்ல இருந்து வர்றேன் சார். உங்களுக்கு சம்மன் கொடுக்கச் சொல்லி இருக்காங்க. இந்த நோட்டீசை வாங்கிட்டேன்னு கையெழுத்து போடணும் சார் நீங்க. அதே போல சரியான நேரத்துக்கு உங்க வக்கீலோட ஆஜராகிடுங்க." என்று விவரித்து அவனிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு ஒரு அரைப்பக்க அளவுள்ள காகிதத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

அதில் வழக்கு எண், வழக்கு வகைக்கான குறியீடு, தேதி, இடம் மட்டுமே குறிப்பிட்டிருக்க, உடனே தங்கள் லாயரை தன்னை வந்து பார்க்கும்படி கைபேசியில் அழைத்துவிட்டு மீட்டிங்கை தொடராமல் தன்னுடைய அலுவல் அறைக்கு வந்தான் ராஜவினோதன்.

அவனுக்கு கையிலிருந்த காகிதத்தின் அவசியமும் அவசரமும் புரியவில்லை. லாயர் வரும்வரை காத்திருக்க அவனுக்கு பொறுமையும் இல்லை. கூகிளில் இது என்னவென்று தேட கைபேசியை அவன் எடுக்க, அப்பொழுது பசுபதி அவனை அழைத்தார்.

அவன் எடுத்ததும், "தம்பி யுவனி நாளைக்கு ஆபிஸ் விஷயமா டில்லிக்கு போறேன்னு போன்ல பேசிட்டு இருந்தா. எப்படியும் இன்னிக்கு அழைச்சிட்டு" என்று அவர் பேசி முடிப்பதற்குள்,

"அவளை நான் தனியா மீட் பண்ணணும். இன்னிக்கு சாயங்காலம். அவ கிட்ட சொல்லிட்டுன்னாலும் ஓகே இல்லன்னாலும் நோ பிராப்ளம்." என்று இறுகிய குரலில் கூறினான்.

ஒரு சிறு அமைதிக்குப் பின், "நான் உங்களை மறுபடி கூப்பிடுறேன்." என்று அவர் வைக்கவும் லாயர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

அவருக்கு விருந்து உபசாரத்துக்கு இல்லையென்றாலும் அவனது தலையை உடைக்கும் அளவுக்கு இருக்கும் தலை வலிக்காக பியூனை அழைத்து இரண்டு காபி சொல்லி விட்டு அவரிடம் கோர்ட் நோட்டீசை கொடுத்தான்.

காபியை பருகியபடி வாங்கிப் பார்த்தவர் அவனிடம் விபரம் கூறவும் அவனது முகம் ரௌத்திரத்தைப் பூசிக் கொண்டது.

இதற்கு என்ன செய்ய வேண்டுமோ செய்யும்படி வக்கீலை அனுப்பிய வினோதனின் மனம் சீற்றத்தில் துள்ளி வரும் கடலலை போல ஆர்ப்பரித்தது.

இவ்வளவு தைரியம் இருந்தால் அவள் கழுத்தில் தான் தாலி கட்டிய சில மணி நேரங்களில் அதனை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகி இருப்பாள்? இவளுக்கு எத்தனை துணிச்சல்? வேறு விஷயங்களில் அவளது துணிச்சலைக் கண்டிருந்தால் பாராட்டி அவளை ஊக்குவிக்கவும் செய்திருப்பான். ஆனால் அவள் அதனைக் காட்டுவது அவனிடம். அதுவும் அவளது கணவனிடம் என்று உள்ளே பொங்கினான்.

மணி மாலை ஐந்தைத் தொட்டிருக்க தீவிர சிந்தனையில் இருந்தவனைக் கலைத்தது பசுபதியின் அழைப்பு.

"அவளை வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வான்னு சொல்லி அனுப்பி இருக்கேன். வீட்டுக்கு போனீங்கன்னா அவளைப் பார்க்கலாம்." என்றவர்,

"தம்பி, அவ கோவமா பேசினாலும் நீங்க எதுவும் செய்திடாதீங்க.ரொம்ப தைரியமான பொண்ணு, அதான் திடீர்னு கல்யாணம் பண்ணினது ஏத்துக்க முடியலை போல. நீங்க உள்ள நிலையை சொன்னாலே அவளை சமாதானம் செய்திடலாம்." என்று அவனது கோபம் அறிந்து கூறினார்.

பதிலே கூறாமல் அழைப்பைத் துண்டித்தவன், தன் காரின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

லாபியில் அவனைக் கண்ட அஞ்சலி எங்கே என்று ஜாடையாக விசாரிக்க,

"போய் அவளை கூட்டிட்டு வர்றேன்" என்று அவன் கூறிய விதமே அவளை இழுத்து வரக் கூட தயாராக இருக்கிறான் என்று பறை சாற்றியது.
 

NNK-96

Moderator
யுத்தம் 10

சாரதாவை மருத்துவமனையில் விட்டுவிட்டு வீட்டுக்கு வரவே யுவனிக்கு விருப்பமில்லை. ஆனால் பசுபதி அந்த இடத்தை விட்டு நகராமல் இருப்பதோடு அவளையும் ராஜவிலாசம் செல்லும்படி நச்சரித்துக் கொண்டே இருப்பதால் தலைவலி ஒருபுறமும் முதல் நாள் இரவெல்லாம் தூங்காமல் இருந்ததால் ஏற்பட்ட சோர்வு ஒருபுறமும் அவளை அழுத்தியது.

சாரதாவை பார்வதியிடம் ஒப்படைத்து விட்டு வீட்டில் சற்று நேரம் ஓய்வெடுத்து குளித்து உடை மாற்றிச் செல்லலாம் என்று வீட்டிற்கு வந்து விட்டாள் யுவனி.

வீட்டினுள் நுழைந்ததும் அனிச்சையாக கதவைத் தாழிட்டாள். எதிரே இருந்த சோஃபா அவளை தன்னிடம் வந்து அமர்ந்து இளைபாரச் சொல்லி அழைப்பது போல இருந்தது அவளுக்கு.

கையிலிருந்த கைப்பையை டீபாயில் வைத்துவிட்டு சோஃபாவில் சரிந்தாள்.

மனம் ஒரே நாளில் தன் வாழ்க்கை மாறிப்போன மாயத்தை எண்ணி வேதனை கொள்ள தயாரானது. ஆனால் ரோஷம் ஒருபுறம் அவளை அதில் வீழ்ந்து போகாமல் இருக்க உந்தியது. மனதின் போராட்டத்திற்கு ஒத்துழைக்க உடலில் ஏதேனும் சக்தி வேண்டுமல்லவா?

அவள் தான் முதல் நாளில் இருந்து காபியை தவிர எதுவும் உண்ணவே இல்லையே! பார்வதி தங்கையை கவனித்துக் கொண்டார். பசுபதி அவளை அனுப்பவதில் குறையாக இருந்தார். சாரதா மகளிடம் சாப்பிட்டாயா என்று முனகலாகக் கேட்கும்போதெல்லாம் கேஃபிடீரியா சென்று சூடான தண்ணீர் போல இருந்த காபியை பருகிவிட்டு வந்து அமர்ந்திருந்தாள்.

மனம் வேதனையிலும் துவண்டு போகாமல் இருந்தது. ஆனால் உடல் துவண்டு போனது.

அவளையும் அறியாமல் சோஃபாவில் அப்படியே கண்ணயர்ந்தாள். சற்று நேரத்தில் வாசல் கதவு தட்டும் ஓசை வெகு தொலைவில் மிகவும் மெல்லிய அளவில் கேட்டது.

எழுந்து கதவைத் திறக்க வேண்டும் என்று மனம் உந்த கால்கள் மூளையிடும் எந்த கட்டளைகளுக்கும் அடிபணியவில்லை.

தொடர்ந்த கதவின் ஒலியில் தட்டுத்தடுமாறி எழுந்து தாழ்ப்பாளை விலக்கியவள் அப்படியே மறுகதவில் சரிந்து மயங்கினாள்.

கதவு திறக்க வெகுநேரமான கோபத்தில் கையை முறுக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த ஆர். வி. அவள் விழுந்து கிடக்கும் நிலையைக் கண்டு துணுக்குற்றான்.

'தவறான முடிவுக்கு சென்று விட்டாளோ?' என்று ஒரு நொடி மனதில் எழுந்த எண்ணத்தை அவன் சட்டையில் இருந்த நீதிமன்ற நோட்டீஸ் அடித்து நொறுக்கியது.

மெல்ல அவள் கன்னத்தில் தட்டினான். கண்களில் சோர்வு தெரிய திறக்க இயலாமல் சிரமப்பட்டாள் யுவனி.

அவளை நகர்த்து அமர வைத்துவிட்டு உள்ளே சென்று அவளது டிராவல் பேகையும் டீபாயில் இருந்த கைப்பையையும் எடுத்து வந்து தன் காரில் வைத்தான்.


வாடிய பூங்கொத்து போல சுவரில் சரிந்து அமர்ந்திருந்தவளை தன் கைகளில் ஏந்தினான்.

அவளின் நறுமணம் அவன் நாசியை நிறைத்த நேரம், தன்னை யாரோ தீண்டுவதை உணர்ந்து எதிர்க்கும் விதமாக கைகால்களை அசைக்க முயன்றாள் யுவனி.

அந்தோ பரிதாபம் உடலில் கிஞ்சித்தும் வலுவில்லை. அவளை காரின் பேசெஞ்சர் சீட்டில் அமர வைத்து சீட் பெஸ்ட் போட்டுவிட்டு கதவைப் பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டுக் கிளம்பி விட்டான் ஆர்வி.

அவனைப் பொறுத்தவரை அந்த குடும்பத்திற்கு இதை அவன் செய்ததே பெரிய விஷயமாக எண்ணினான். ஆனால் இப்படி நினைவு தப்பி கிடப்பவளை நினைக்க மனம் வலித்தது.

காரை வீட்டை நோக்கிச் செலுத்த, இப்பொழுது கார் முழுவதும் அவளது சுகந்த மணம் வீசியது.

"உன்னை" என்று அவனையும் அறியாமல் எழுந்த உணர்வை அடக்க ஸ்டியரிங் வீலில் ஓங்கிக் குத்தினான்.

வீட்டின் வாயிலில் கார் வேகமாக வந்து நின்றதும் அஞ்சலியின் உபயத்தால் இன்று யுவனியை ஆர்வி வீட்டிற்கு அழைத்துவர இருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது வீட்டினர் அனைவரும் கூடத்தில் தான் அமர்ந்திருந்தனர்.

மருமகளை ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும் என்று வள்ளி கூறி இருக்க, வேண்டா வெறுப்பாக அதனை கரைத்து வைத்து வாயிலுக்கு கொண்டு வந்த காஞ்சனா திகைத்தார் .

"என்ன ராஜா இது?" என்று அதிர்ந்து கேட்டதும் வீட்டினர் வெளியே வந்து ஆர்வி நின்ற கோலம் கண்டு சிலையாகினர்.

கையில் யுவனியை ஏந்தியபடி வேலையாளிடம் அவளது உடமைகளை தனது அறையில் வைக்குமாறு பணித்தான் ஆர்வி.

"என்ன டா பண்ணின அந்த பொண்ணை? ஏன் இப்படி செய்யற?" என்று காஞ்சனா மகனை கண்டிக்க,

வள்ளி கண்ணீர் விழிகளுடன், "இதெல்லாம் பெரிய பாவம் டா. சொல்லாமலே கல்யாணம் பண்ணின. அதுக்கு எங்க கிட்ட ஒரு காரணமும் சொன்ன. அது அந்த பொண்ணுக்கு நல்லதோ கெட்டதோன்னு தெரியலன்னாலும் கண்டிப்பா நாம கெட்டதா பண்ண மாட்டோம்ன்னு நம்பி அமைதியா இருந்தேன். இப்போ என்ன டா இப்படி தூக்கிட்டு வர்ற?" என்று மனம் வருந்தினார்.

"பாட்டி இவ பார்க்க தான் ஈர்க்குச்சி மாதிரி இருக்க, ஆனா தூக்கினா நல்ல கனம். இவளை ரூம்ல விட்டுட்டு வந்ததும் பேசுவோமா?" என்று அவளை அப்படியே கொண்டு அவனது அறையின் கட்டிலில் இறக்கி விட்டுவிட்டு ஹாலுக்கு வந்தான்.

அனைவரையும் அவன் ஒரு பார்வை பார்த்துவிட்டு பாட்டியின் முன் வந்து நின்றான்.

"அவளை அப்படித் தூக்கிட்டு வந்ததுக்கும் காரணம் வச்சிருக்கியா ஆர்வி?" என்று கேட்டதும்,

"காரணம் ஆயிரம் இருந்தாலும் இனிமே நான் எதையும் சொல்றதா இல்ல. நான் அவளுக்கு கட்டாயமா தாலி கட்டப்போறேன்னு சொல்லிட்டு தான் செஞ்சேன். அவ என்னோட வாழ வரலன்னா அது நமக்கு அவமானம். அதையும் மீறி.. அப்ப நான் சொன்ன காரணம் அப்படியே தான் இருக்கு." என்றவன் மீண்டும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

"நான் உங்களை மாதிரி ரொம்ப நல்லவன்ல்லாம் இல்ல. இதை நான் அவந்திகா விஷயத்துலயே சொன்னேன். மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். இப்போ நடக்கறது என்னோட பர்சனல். குடும்பத்துக்காக நான் எல்லாம் செய்வேன். ஆனா எனக்குன்னா இன்னும்.. இன்னுமே.. கவனமா இருப்பேன். யுவனி இந்த குடும்பத்துக்கு இப்போ தேவை. அதை விட எனக்கு." என்று கூறிவிட்டு தன் அறை நோக்கிச் செல்லலானான்.

அவன் பேசிவிட்டு மற்றவர்க்கு சந்தர்ப்பம் அளிக்காமல் செல்வதில் இருந்தே இதைப் பற்றி இனி யாரும் பேசுவதில் அவனுக்கு விருப்பமில்லை என்பது வெளிப்பட்டிருந்தது.

காஞ்சனா கணவரை கோபமாக முறைத்து, "ஏற்கனவே வீட்டுக்கு வந்த மருமகளை வாரிக் கொடுத்தாச்சு. அந்த பழி பாவமே இன்னும் தீரல. அதுக்குள்ள இப்படி பண்றானே? நீங்க அவனுக்கு அப்பா தானே அதட்டிக் கேட்டா என்னவாம்?"

"அதட்டறதா? நடக்கறத பேசுங்க அக்கா. இந்த வீட்ல அவனுங்களும் நான் பெத்தவளும் வைக்கிறது தானே சட்டம். மாமாவும் இவரும் வேடிக்கை மட்டும் தானே பார்ப்பாங்க. புதுசா நியாயம் பேசுறீங்க. நான் சொன்னப்ப யாருக்கும் புரியல. ஆனா ஒன்னு... இவளும் அந்த பொண்ணு அவந்திகா மாதிரி தான் இருக்கப் போறா. எழுந்ததும் வீட்டை விட்டு ஓடுறாளா இல்லையான்னு பாருங்க." என்று முகத்தை வெட்டிக் கொண்டு போனார் ஈஸ்வரி.

எரியும் தீயில் எண்ணெயை சேர்த்த அவரது வார்த்தைகள் யாரை சுட்டதோ இல்லையோ வள்ளியை வெகுவாக சுட்டது.

அவரால் அல்லவா இந்த குடும்பம் இப்பொழுது இப்படி ஒரு நிலையில் இருக்கிறது. அன்றே அவந்திகா விஷயத்தில் ஆர்வி அத்தனை முறை கூறினானே! அவர் தானே சின்னவன் அவனுக்கென்ன தெரியும் என்று அதனையெல்லாம் ஒதுக்கித் தள்ளினார்.

இன்று அவன் இப்படி கோபம் கொள்வதற்கும் நடந்து கொள்வதற்கும் அவரல்லவா காரணம்!

மனம் வெதும்பி நின்றார் வள்ளி. மாமியாரின் நிலை கண்டு அருகே வந்து தாங்கிக் கொண்டார் காஞ்சனா.

"விடுங்க அத்தை. நடக்கறது தான் நடக்கும். நாம வருத்தப்பட்டு எதுவும் மாறப்போறது இல்ல." என்று அவரின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

ராஜரத்தினமும் ரங்கராஜனும் மனதில் இருக்கும் பாரத்தை இறக்க வழியற்றவர்களாக அமைதியாக நகர்ந்தனர்.

அந்த வீடு நித்யன் எனும் பசை போட்டு தான் இத்தனை நாளும் ஒட்டி இருந்தது. அவன் படுக்கையில் நினைவில்லாமல் கிடக்க, குடும்பம் ஒரு பிடிப்பில்லாமல் செல்கிறது.

தன்னை வைத்து ஒரு வீடே சண்டையிட்டுக் கொண்டதோ அல்லது அவளை அவளுடைய வீட்டில் இருந்து இங்கே கொண்டு வந்ததோ தெரியாமல் சோர்வினால் ஏற்பட்ட மயக்கத்தில் இருந்தாள் யுவனி.

மதியம் பாதியில் விட்ட மீட்டிங்கில் பேசி முடிக்க வேண்டிய விஷயங்களை ஈமெயிலில் அனுப்பிக் கொண்டிருந்தான் ராஜவினோதன்.

படுக்கையில் இருந்த யுவனி அசைவதைக் கவனித்தவன், இண்டர்காம் மூலம் சமையல் செய்பவரிடம் பழச்சாறு எடுத்துக்கொண்டு தன் அறைக்கு வருமாறு பணித்தான்.

அவரும் பத்து நிமிடத்தில் அறைக் கதவைத் தட்டிவிட்டு அவன் வேலை பார்த்த மேசையில் வைத்துவிட்டுச் சென்றார்.

யுவனி மெல்ல கண் விழித்தாள். உடல் சோர்வால் எழுந்து கொள்ளும் வலு இல்லாமல் அவள் திண்டாட, தான் இருக்கும் இடத்தைப் புரிந்து கொள்ள இயலாமல் திகைத்தாள்.

அவள் சிரமப்படுவதைக் கண்டு அவளை எழுப்பி அமர்த்தினான் ஆர்வி.

அவனைக் கண்டதும் உடல் உதற, மனம் பதற கண்களை நன்றாக திறந்து நடப்பது நிஜமா என்று புரியாமல் விழித்தாள்.

"சும்மா உன் முட்டைக் கண்ணை உருட்டிப் பார்க்காத. நான் தான். உன் புருஷன்."

அந்த 'புருஷன் ' என்னும் வார்த்தையில் அவன் அழுத்தம் சேர்க்க,

அவளோ , "ஏய் நீ என்ன பண்ற என் வீட்ல? ஏன் வந்த?" என்று எழுந்து கொள்ள இயலாமல் மீண்டும் மடங்கி படுக்கையில் அமரும்போது தான் கவனித்தாள் அது அவள் வீடல்ல என்று.

அவளது பார்வையை வைத்தே அவள் நினைப்பதை கணித்தவன்,

"ம்ம். பாரு பாரு நல்லா பாரு. இது என் ரூம் தான். சொல்லப் போனா இனிமே நம்ம ரூம். பிடிச்சிருக்கா? " என்று நிதானமாக வினவினான்.

"டேய் என்னை கடத்திட்டு வந்துட்டியா? ஏன் டா இப்படி பண்ற? உனக்கு நான் என்ன டா செஞ்சேன்? எனக்கு உன்னை யாருன்னு கூட தெரியாதே டா?" என்று கோபம் பாதியும் இயலாமை மீதியுமாக உரைத்தாள் யுவனி.

"சில் பேபி. சில். தெரியுமோ தெரியாதோ இப்போ நான் உன் ஹஸ்பண்ட். நீ என் வைஃப். நீ சரியா சாப்பிடவே இல்லன்னு நீ இருக்குற கண்டிஷனை பார்த்தாலே தெரியுது. முதல்ல இந்த ஜூசை குடி. நாம நிதானமா பேசிக்கலாம்." என்று ஜூசை அவள் புறம் நீட்டினான்.

அதனை தட்டிவிட்டு இங்கிருந்து ஓட வேண்டும் என்று தான் யுவனிக்கு தோன்றியது.

ஆனால் உடல் ஒத்துழைக்காது என்று புரிந்ததாலும், அவளுக்கு வேறு வழியே இல்லை என்று விளங்கியதாலும் அமைதி காத்தாள்.

சண்டை ஓட்டம் என்று எத்தனை நாள் இவனுடன் போராடுவது அதுவும் காரணமே தெரியாமல். ஒருவேளை இன்று இவன் காரணத்தை கூறுவானேயானால் 'ஐயா உனக்கு உதவும் ஆள் நானல்ல' என்று புரிய வைத்துவிட்டு அடுத்து கிடைக்கும் விமானத்தில் வேலையைப் பார்க்க பறந்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவன் தந்த பழச்சாறை வாங்கிக் கொண்டாள்.

"குட். இப்படி தான் சொன்னபடி கேட்டு சமத்தா இருக்கணும்." என்று அங்கிருந்து அகன்று அதே அறையில் இருந்த தன் அலுவல் அறைக்குள் நுழைந்தான்.

அவன் போவதை கண்ணெடுக்காமல் கண்டாள் யுவனி.

நல்ல உயரம், திடகாத்திரமான தேகம், பார்த்த நிமிடத்தில் இருந்து கண்களில் அவள் காணும் அலட்சியம். இதையெல்லாம் விட இந்த நொடி வரை தன்னிடம் தவறாக ஒரு வார்த்தை கூட பேசாத அந்த பாங்கு இது எதுவும் அவளைக் கட்டாயப்படுத்தி மணந்து கொண்ட குணத்துடன் ஒத்து வராமல் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியது.

எப்படியும் இந்த பழச்சாறை குடித்து முடித்தவுடன் இந்த குழப்பங்களுக்கெல்லாம் விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அதனை பருகி முடித்தாள்.

அலுவல் அறையில் இருந்து அதன் பக்கத்து அறைக்கு சென்றவன் ஃபார்மல் உடையைக் களைந்து விட்டு இலகுவான இரவு உடைக்கு மாறி இருந்தான்.

வெள்ளையில் ஊதா நிற வரிகளிட்ட அந்த சட்டையும் பேண்ட்டும் அவன் உடலுக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தது . அவனையே பார்த்திருந்தவளைக் கண்டவன் நேராக அறைக்கதவை தாழிட்டு விட்டு அவளுக்கு மிக அருகில் வந்து அமர்ந்தான்.

அதுவரை பேசி பிரச்சினையின் அடிவேரை அறிந்து இங்கிருந்து செல்ல வேண்டும் என்று மட்டுமே எண்ணி இருந்த யுவனிக்கு, இந்த நொடி சிங்கத்தின் குகையில் அகப்பட்ட மான் போன்ற உணர்வைக் கொடுக்க, பயத்தில் இதயம் தொண்டையில் வந்து அடைத்து கொண்டது போல இருந்தது.
 

NNK-96

Moderator
யுத்தம் 11

அவன் கதவைத் தாழிட்டதும் யுவனியின் மனம் அவன் என்ன செய்வானோ என்று மிரண்டது.

அவள் கற்ற கராத்தே எல்லாம் மனதின் ஓரத்தில் கூட நினைவுக்கு வரவில்லை.

அவன் அவளை சற்றும் மதிக்காமல் கட்டாயமாக திருமணம் செய்தது மட்டுமே கண்களுக்குள் வந்து வந்து போனது. அவனை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதோ, சட்டத்தின் பிடியில் அவனை நிறுத்தி கேள்வி கேட்க வேண்டும் என்ற அவளின் உறுதியெல்லாம் பஞ்சாக காற்றில் பறந்து போயிருந்தது.

பலவீனம் என்பது உடலிலோ மனதிலோ தானாக ஏற்படுவதில்லை நமக்கு நாமே ஏதோ ஒரு வழியில் தேடிக் கொள்வது தான். அதனை கடந்து வருவதெல்லாம் அது இரண்டிற்கும் பெரிய விஷயமே இல்லை. நாம் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோமா என்பது தான் முக்கியம்.

நேற்று இருந்த பலம் இன்று காணாமல் போயிருந்தது யுவனியிடம், அவனது பார்வையை சந்திக்க பயந்தாள்.

அவன் அவளுக்கு அருகே வந்து மெத்தையில் அமர்ந்தான். அவனது அருகாமை அவளை பயத்தில் சில்லிட வைக்க, அவனோ சட்டமாக சம்மணம் போட்டு அமர்ந்தான்.

"காலைல இருந்து இன்னிக்கு ஏகப்பட்ட வேலை. நித்தி இல்லாததால ரொம்பவே ஹெக்டிக் டே. அதுக்காக உனக்கு பதில் சொல்லாம போக மாட்டேன். ஆனா ஒரே ஒரு கண்டிஷன். நீ என்கிட்ட இரண்டு கேள்வி தான் கேட்கலாம். அதுக்கு பதில் சொல்லுவேன். அப்பறம் நான் தூங்கணும். டிஸ்டர்ப் பண்ண கூடாது." என்று கூற யுவனி விழிக்கலானாள்.

'நான் ஏன் டா உன்னை தொந்தரவு பண்ண போறேன்? நீ பதில் சொல்லிட்டா நான் கிளம்பி போயிட மாட்டேனா?' என்று எண்ணிக் கொண்டு,

"என் கிட்ட சம்மதம் கேட்காம ஏன் கல்யாணம் பண்ணினீங்க?" என்றாள் எப்படியும் விடை கிடைத்துவிடும் என்ற முடிவில்.

"கேட்டா கண்டிப்பா நீ ஒத்துக்க மாட்ட. அதான் கேட்காம பண்ணினேன்." என்று சர்வசாதாரணமாகக் கூறினான் ஆர்வி.

அவன் காரணம் சொல்வான் என்று நம்பி இருந்தவளுக்கு இந்த பதில் மிகுந்த கோபத்தை விளைவித்தது.

"வாட்? ஹவ் டேர் யூ? நீயெல்லாம் ஒரு மனுஷனா?" என்று எக்கி அவன் சட்டையைப் பிடித்தாள் யுவனி.

"நீயே நல்லா பாரு, இரண்டு கால், கை, கண் ,காது, ஒரு மூக்கு, வாய், தலை எல்லாம் மனுஷனுக்கு இருக்குற மாதிரி தானே இருக்கு. அப்ப நான் மனுஷன் தான்." என்று கூலாக பதில் கூறி அவளது கைகளை அலட்சியமாக தன் மீதிருந்து பிரித்து எடுத்தான்.

"ஐயோ எனக்கு தலையே வெடிக்குது. என்ன காரணத்துக்காக என்னை இப்படி பண்ணினிங்க?" என்று அவள் மீண்டும் கேள்வி எழுப்ப,

"உன்னோட இரண்டு கேள்விக்கான கோட்டா ஓவர். ஏற்கனவே சொல்லி இருந்தேன் . நான் டயர்டா இருக்கேன். தூங்கணும்." என்று அவளுக்கு அருகில் கிடந்த தலையணையில் தலை வைத்து தன் நீளமான உடலை அக்கட்டிலின் மீது நீட்டி முழக்கி கண்களை மூடி அவன் படுத்துக்கொள்ள, யுவனிக்கு ஐயோ என்று இருந்தது.

காரணம் சொல்லி விட்டால் எப்படியும் பேசி வெளியே சென்று விடலாம் என்று எண்ணியதற்கு மாறாக அவன் நிகழ்த்தி இருக்கும் நிகழ்வு அவளை வெகுவாக சோர்வுறச் செய்தது.

அவன் கண்களை இறுக்கமாக மூடி இருப்பதைக் கண்டு மெல்ல கட்டிலை விட்டு இறங்கியவள் தாழ்ப்பளை விலக்கினாள்.

ஆனால் கதவைத் திறக்க குமிழை திருகினால் அது அவளுக்கு ஒத்துழைக்க மறுத்தது. அங்கும் இங்கும் அந்தக் கதவில் அவள் தாழ்ப்பாளைத் தேட,

"நீ என்ன திருகினாலும் அது திறக்காது. அந்த டோர் டிஜிட்டல் லாக்ல இருக்கு. நான் தான் சொன்னேன்ல என்னை டிஸ்டர்ப் பண்ணாதேன்னு." என்று சலிப்பாக சொல்லி அவன் ஒருபக்கமாக திரும்பிப் படுக்க யுவனிக்கு அவன் மேல் கொலைவெறி பிறந்தது.

"ஏன் டா என்னை கடத்திட்டு வந்து வச்சதும் இல்லாம உன்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு சொல்ற நீயெல்லாம் கண்டிப்பா மனுஷனே இல்ல. ஒழுங்கா என்னை போக விடு. ஏற்கனவே உன் மேல கோர்ட்ல கேஸ் கொடுத்திருக்கேன். நீ இப்படி செய்தா உனக்கு தான் பிரச்சனை." என்று அவனை மிரட்ட முயன்றாள்.

சட்டென்று எழுந்து அவளுக்கு அருகில் வந்தவன், "இங்க பாரு நான் இப்போ உனக்கு காரணம் சொன்னாலும் புரியாது. அதுனால நடந்ததை ஏத்துக்கிட்டு இந்த வீட்டு மருமகளா இருக்கப் பாரு. கொஞ்ச நாள்ல உனக்கே புரியும். ஏன்னா.." என்று இழுத்தவன்,

"உங்க அக்கா செய்த குளறுபடியை சரி செய்ய வேண்டிய கடமை உனக்கு இருக்கு. நீ தான் செய்யணும்." என்று அழுத்தமாக கூறினான்.

"அக்கா.. அவ என்ன செய்தா? அவ தான் இந்த கல்யாணம் பிடிக்கலன்னு முதல்லயே சொன்னாளே!" என்று யுவனி கோபத்துடன் வினவினாள்.

"யார் கிட்ட? உன் அப்பா கிட்ட தான். எங்க கிட்ட இல்ல. அதுவும் இல்லாம.." என்று மறுபடி நிறுத்தியவன்,

"நீ என் மனைவி, இப்போ என் நிலைமையை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. உன் அக்காவை பத்தி நான் என்ன சொன்னாலும் இப்போ அதை உன்னால ஏத்துக்க முடியாது. கொஞ்சம் வெயிட் பண்ணு உனக்கே புரியும். நாளைக்கு எனக்கு முக்கியமான இன்வெஸ்டர் மீட்டிங் இருக்கு. ஏற்கனவே இன்னிக்கு மீட்டிங்கை பாதில விட்டுட்டு வந்தேன். ஹஸ்பண்ட் பிஸ்னஸ் நல்லா இருக்கணும்னா ஒய்ஃப் புரிஞ்சு நடந்தா தான்." என்று அவளை தோளோடு அணைத்து படுக்கையில் அமர வைத்தான்.

"நீ கத்தி, நான் கத்தி, நீ இங்க இருந்து போக ட்ரை பண்ணி.. எல்லாமே வேஸ்ட் ஆஃப் டைம். பேசாம தூங்கு. எனக்கும் தூக்கம் வருது." என்று கூறிவிட்டு கட்டிலைச் சுற்றிச் சென்று அந்த பக்கத்தில் அவன் படுத்துக் கொண்டான்.

இத்தனை பொறுமையாக அவன் கூறியது எதுவும் யுவனியை அசைக்கவில்லை.

'நான் என்ன சின்னக் குழந்தையா? இவன் சொல்றதை கேட்டு அமைதியா இருக்க? இது சுதந்திர நாடு. நான் விருப்பட்ட இடத்தில் இருக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. என்னை இந்த அறைக்குள்ள அடைச்சு வைக்க அவனால் முடியாது.' என்று மனதில் நினைத்தாள்.

கதவைத் திறக்க அவளால் முடியாது. ஆனால் அவனைத் திறக்க வைக்க அவளால் கண்டிப்பாக முடியும் என்று எண்ணி, கதவை பலமாகத் தட்ட ஆரம்பித்தாள்.

முதல் இரண்டு தட்டுகளை கேட்டதும் ஆர்வி எழுந்து வந்து அவளை இடையோடு தூக்கி படுக்கையில் சேர்த்திருந்தான்.

"ஏய் என்னை விடு டா. விடு" என்று அவள் கத்த,

"உனக்கு நல்ல விதமாக சொன்னா புரியாதா? நீ இங்க தான் இருக்கணும். பேசாம படு" என்று அவளை படுக்க வைத்து அவள் இடையோடு இறுக்கமாக அணைத்துப் பிடித்துக் கொண்டு கண்களை மூடினான்.

"டேய் விடு" என்று அவன் கைகளை அவள் கிள்ளி வைக்க முயல, தினமும் உடற்பயிற்சி செய்து திரண்டிருந்த அவன் சதையை அவளால் பிடிக்க முடியவில்லை. நகங்கள் கூட இரும்பு போன்ற அவன் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது கண்டு பயந்து போனாள்.

இவனிடமிருந்து தப்பிக்க வழியே இல்லையா என்று எண்ணியவளின் எதிர்ப்பு மெல்ல குறைந்தது.

ஆர்வி நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனது பிடி தளரவில்லை என்றாலும் ஆரம்பத்தில் இருந்த இறுக்கம் இப்பொழுது இல்லை. தனக்கு மிக அருகில் ஒரு ஆண்மகனின் ஸ்பரிசம். அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் வலுக்கட்டாயமாக வளைத்துப் பிடித்திருப்பவனிடம் திமிறி தப்பிக்க கூட இயலாத அவளது கையறு நிலை. எல்லாம் சேர்ந்து அவளது கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

அவளது கண்ணீர் வழிந்து அவனது தோள்ப்பட்டையை அடைந்ததும், அனிச்சை செயலாக அவன் அவளது கண்ணீரை துடைத்து விட்டான்.

"நான் உனக்கு வில்லன் தான். ஆனா கொடுமைக்காரன் இல்ல. உன் விருப்பம் இல்லாம கழுத்துல தாலி கட்டியிருக்கலாம். ஆனா தப்பா நடந்துக்க மாட்டேன்" என்று மெல்லிய குரலில் கூறினான்.

"அப்ப இது என்ன?" என்று அழுகையுடன் கூடிய கோபத்தில் அவனது கையைக் காட்டி வினவினான்.

"இது என் பொண்டாட்டி என்னை விட்டு போகக் கூடாதுன்னு உரிமையா அவ மேல கை போட்டிருக்கேன். தொடுறதுன்னா மேல விரல் படுறதுன்னு நினைக்கிற அளவுக்கு நீ குழந்தை இல்ல தானே? இத்தனை வருஷம் வெளிநாட்டில் இருந்திருக்க உனக்கு அந்தரங்க விஷயமெல்லாம் ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லாதே!" என்று அவளை சீண்டினான்.

"ஏய் ஸ்டாப் யுவர் புல் ஷிட். வெளிநாட்டுக்கு போயிட்டு வந்த பொண்ணுன்னா அவ எல்லா தப்பையும் பண்ணி இருப்பா, அவளுக்கு எல்லாமே தெரியும்ன்னு நினைக்கிற இந்த சீப் மென்டாலிட்டி மாறவே மாறாதா? நான் ஒரு பெரிய பப்ளிஷிங் கம்பெனில டிராவல் அண்ட் டூரிசம் பத்தி ஆர்டிகிள், புக் எழுதுற வேலை பாக்கறேன். என் வேலையே வெளிநாடுகளில் உள்ள சுற்றுலா தளங்கள் மட்டும் இல்லாம ஹிடன் நேச்சுரல் பிளேஸஸ் எல்லாம் கண்டுபிடிச்சு அதைப் பத்தி போட்டோவோட எழுதுறது தான். ஒவ்வொரு ஊர் ஆம்பளையையும்.." என்று இழுக்க,

"நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே! கேள்விப்பட்டு இருப்ப, மேல கைபோடுறதெல்லாம் நீ சொன்ன கேட்டகரில வராதுன்னு தான் சொன்னேன். அதுக்கே இவ்வளவு பிரசங்கமா? நான் ரொம்ப பாவம்." என்று அப்பாவியாகக் கூறினான்.

"டேய் நீ உன்னை என்ன வேணாலும் சொல்லிக்கோ ஆனா பாவம்ன்னு சொல்லாத டா. அது நான் தான் டா. பாரு நல்லா பாரு. யாருன்னு கூட தெரியாத ஒரு ஆம்பளை என்னைக் கேட்காமலே கல்யாணம் பண்ணி, எனக்கு தெரியாம வீட்டை விட்டு தூக்கிட்டு வந்து, இப்படி ஒட்டி உரசி படுத்துட்டு.. ச்சீ. எனக்கு அவமானமா இருக்கு டா . இதை எதிர்க்க கூட முடியாத நிலையில என்னை வச்சிருக்க பாரு. நான் தான் டா பாவம்." என்று கண்ணீருடன் அவன் மார்பில் அடிக்கத் துவங்கினாள்.
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த ராஜவினோதன்.

அவள் விடாமல் அடிக்கவே இழுத்து இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவளால் நகரவே இயலவில்லை.

எதிர்க்க வழி இல்லாமல் வாயில் வந்த வார்த்தைகள் கொண்டு அவனை வசை பாட ஆரம்பித்தாள்.

சற்று நேரம் அதை கண்டுகொள்ளாதவன் போல படுத்திருந்த ஆர்விக்கு தூக்கம் வந்து தொலைக்க, அதை அவள் குரல் தடுத்துக் கொண்டே இருந்தது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் இதற்கு மேல் இவளை பேச விட்டால் நாளைய பொழுது வேலையெல்லாம் கெட்டுவிடும் என்று அவள் வாயை தன் கை கொண்டு மூட முயன்றான்.

ஆனால் அவளோ அவன் மீதிருந்த
கடுப்பில் கடித்து வைக்க, கோபம் துளிர்த்து இம்முறை இதழ்களை கொண்டு அவளது இதழ்களை மூடி விட்டான்.
 

NNK-96

Moderator
யுத்தம் 12

அவன் இதழை அணைத்தது அவள் வாயை அடைக்கத் தான். ஆனால் பெண்ணவளின் விழிகள் இரண்டும் விரிந்து பயத்தில அப்படியே உறைந்து போனது.

சில நிமிடங்களுக்குப் பின் அவளது இதழ்களை தன் இதழ் சிறையிலிருந்து விடுவித்தவன், "நான் அத்துமீறி நடக்கக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன். நீ என்னை அதையும் மீறி தப்பு பண்ண வைக்கிற. இதெல்லாம் நல்லதுக்கில்ல. இனி வாய் திறந்து ஒரு வார்த்தை நீ பேசினாலும் மறுபடி இதே தான் நடக்கும். உனக்கு இந்த அத்தான் மேல ஆசை இருந்தா தாராளமா பேசு." என்று நிதானமாக கூறிவிட்டு அவளது இடையில் இருந்த கரத்தின் இறுக்கத்தை சற்றும் தளர்த்தாமல் தன் அருகிலேயே இழுத்துக் கொண்டு கண்ணயர்ந்தான்.

இனி அவள் உதடுகள் எதற்காகவும் பிரிந்து சின்ன சத்தத்தைக் கூட எழுப்பாது. இது அவளுக்கும் தெரியும், அவனுக்கும் நன்றாகவே தெரியும்.

விதியை நொந்து கொண்டு அவனது ஆண்மையின் வாசனையை சகிக்கவும் முடியாமல் தவிர்க்கவும் இயலாமல் அவன் கைகளுக்குள் அடங்கிக் கிடந்தாள் யுவனி.

கண்களை திறந்து வைத்தால் எதிரே தெரியும் உறங்கிக் கொண்டிருக்கும் அவனின் அமைதியான முகமும், காற்றில் மெல்ல அசையும் அவன் கூந்தலும் இவன் தான் அப்படிச் செய்கிறானா என்ற சந்தேகத்தை விளைவிக்க, மூளையோ,

'கண்ணை இழுத்து மூடுடி முட்டாள். அவன் உன்னை என்ன பண்ணி வச்சிருக்கான். நீ அறிவில்லாம அவன் மூஞ்சியை உத்து உத்து பார்த்துகிட்டு இருக்க?' என்று காறி உமிழ்ந்தது.

கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். கண்களுக்குள்ளும் அவன் பிம்பமே தெரிய, உதடு பிரித்து கடவுளை வேண்டினால் கூட எங்கே மறுபடி ஏதும் செய்வானோ என்று பயந்து மனதிற்குள் தனக்கு தெரிந்த கடவுளர் அனைவரையும் துணைக்கு அழைத்தாள்.

அவளையும் அறியாமல் உறக்கம் அவளை ஆட்கொள்ள, அவனது மார்பில் தலை சாய்த்து உறங்கினாள் யுவனி.

பகலவன் வெளிச்சம் பாரெங்கும் பரவத் துவங்க, பக்கத்தில் இருந்தவன் மேல் கொண்ட பயத்தால் தன்னை அறியாமல் உறங்கியவள் சோர்வின் காரணமாக இப்பொழுது கண் விழித்தும் எதையும் சீராக பார்க்க முடியாமல் தவித்தாள்.

'பக்கத்துல அந்த பக்கி இருக்கானான்னு தெரியல. வாய் திறந்தா ஏதும் செய்வானோன்னு பயம்மா வேற இருக்கு. கடவுளே என்னை காப்பாத்து' என்று அவள் கண்களை தேய்த்தபடி மனதில் புலம்பினாள்.

அவளுக்கு அருகில் ஒரு குஷன் சேரில் அமர்ந்து வார இதழ் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.

அவரை இந்த வீட்டிற்கு வந்த அன்று பார்த்ததாக அவளுக்கு நினைவுக்கு வந்தது.

அவளது அசைவை உணர்ந்தவர், "எழுந்துட்டியா மா?" என்று அவள் கையைப் பற்றினார்.

"ஆன்ட்டி பிளீஸ் என்னை விட்டுடுங்க. என் மம்மி அங்க ஹாஸ்பிடல்ல இருக்காங்க. அவன் எனக்கே தெரியாம என்னை தூக்கிட்டு வந்துட்டான்." என்று வேகமாக கூறியவள் சட்டென்று வாய் பொத்தி அறை முழுவதும் நோட்டமிட்டாள்.

"ஆர்வி இங்க இல்ல மா. பயப்படாத." என்று பெருமூச்சு விட்டவர், இண்டர்காமில் அவளுக்கு உணவு கொண்டு வரும்படி வேலையாளைப் பணித்தார்.

"அங்க ரெஸ்ட் ரூம்ல உனக்கு பேஸ்ட் பிரஷ் எல்லாம் இருக்கு. ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வா மா. வந்து சாப்பிடு. பார்த்தா சாப்பிட்டு ரெண்டு நாள் ஆனது போல முகம் அவ்வளவு சோர்வா இருக்கு." என்று அக்கறையாகப் பேசினார் காஞ்சனா.

அவளுக்கும் இயற்கை உபாதையை கழிக்க வேண்டி இருந்ததால் ஏதும் பேசாமல் எழுந்து சென்றுவிட்டாள்.

குளியல் அறையே ஒரு தனியறை போல விசாலமாக இருந்தது. இது போன்ற அறைகளை அவள் சென்ற பல ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிகளில் பார்த்திருக்கிறாள். அப்பொழுதெல்லாம் அதை புகைப்படம் மட்டுமே எடுக்க சுவீட் ரூம்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவாள். அவள் என்றுமே எகனாமி அறையில் தான் தங்க வைக்கப்படுவாள். இந்த ஆடம்பரங்கள் ஒன்றும் அவளை ஆச்சரியப்படுத்தவில்லை.

முகம் அலம்பி அங்கிருந்த டவலில் அதனை துடைத்தபடி வெளியே வந்தபோது ஆவி பறக்க வெண் பொங்கலும் இரு கிண்ணங்களில் சட்னி சாம்பாரும் அவளுக்காகக் காத்திருந்தது. கூடவே காஞ்சனாவும்.

வயிறு அவளை பசியால் பிராண்டிக் கொண்டிருந்தது. ஆனாலும் உணவில் கை வைக்காமல் அமைதியாக காஞ்சனாவை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

"சாப்பிடு மா" என்று அவர் அன்பாய் கூற,

"ஆன்ட்டி பிளீஸ் புரிஞ்சுக்கோங்க." என்று அவள் ஆரம்பித்தபோதே,

"பசிச்ச வயிறு நம்மளை புத்திசாலித்தனமா சிந்திக்க விடாது. முதல்ல சாப்பிடு. அப்பறம் நீ என்ன சொல்லணுமோ சொல்லு." என்று அவர் அந்த நாற்காலியில் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

"உங்க வீட்ல சாப்பிட்டா அப்பறம் நன்றியோட இருக்கணும். அவன் எனக்கு செஞ்ச வேலைக்கு என்னால அப்படி இருக்க முடியாது. எனக்கு சாப்பாடு வேண்டாம். என்னை வெளில போக விடுங்க." என்று பிடிவாதமாகக் கூறினாள் யுவனி.

இதுவரை மூத்த மருமகளின் தங்கை, அவளைப் போலவே குணமிருக்கும் என்று எண்ணி பட்டுக்கொள்ளாமல் இருந்த காஞ்சனாவின் மனதில் அவளது வார்த்தைகள் அவள் மீதான அபிப்பிராயத்தை மாற்றியது.

"நீ இந்த வீட்ல சும்மா சாப்பிட வேண்டாம். நான் உனக்கு ஏதாவது வேலை தர்றேன். அப்பறம் அதை செய்து கொடு. இப்போ சாப்பிடு" என்று அவரும் குரலில் பிடிவாத்தைக் காட்டினார்.

அதற்குப் பின் ஏதும் பேசாமல் உணவை அள்ளி உண்டவளுக்கு ஒரு கவளம் உள்ளே சென்ற பின் தான் பசியின் வலியே தெரிந்தது. வேகமாக உண்டு முடித்தாள்.

அவளிடம் திரும்பி அமர்ந்த காஞ்சனா, "இப்போ சொல்லு" என்று கதை கேட்கத் தயாராவது போல அமர,

அவள் பெயர், அவளது வேலை, அவள் வளர்ந்த விதமெல்லாம் கூறி, "நேத்து அவந்திகா செஞ்ச குளறுபடியை நான் தான் சரி பண்ணணும்னு அவன் சொன்னான்." என்று கோபத்துடன் அவள் கூற,

"நீ ராஜா மேல கோபமா இருக்கறது புரியுது. ஆனா இந்த வீட்ல எப்பவும் பேர் சொல்லியும் மரியாதையாவும் பேசி தான் பழக்கம். உன்கிட்ட அப்படி அவன் நடந்துக்க ஒரு காரணம் இருக்கு. ஆனா அதை உன்கிட்ட சொல்ல எனக்கு அனுமதி இல்ல. உன் மம்மி இப்போ நல்லா இருக்காங்க. அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க உன் பேரண்ட்ஸ்." என்றதும்,

"ஆன்ட்டி இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்க, அன்பா பேசுறீங்க, ஆனா அவன் செய்தது தப்புன்னு சொல்ல மாட்டேன்றீங்க. போனது போகுது. எனக்கும் அவந்தி குணத்துக்கும் துளி சம்பந்தம் கூட இல்ல. அவ என்ன செய்தாளோ எனக்கு தெரியாது, ஆனா எனக்கு பார்க்க ஒரு வேலை இருக்கு. நான் போகணும். ப்ளீஸ் உங்க வீட்டு பையன் கிட்ட பேசி என்னை போக விட சொல்லுங்க." என்று கெஞ்சிக் கொண்டிருக்க,

வேகமாக கதவைத் திறந்து உள்ளே வந்த அஞ்சலி, "பெரியம்மா வாங்க நித்தி அண்ணா கண் முழிச்சாச்சு." என்று காஞ்சனாவுக்கு தகவல் கூறியதோடு யுவனியின் கை பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்.

"ஏங்க, என் கையை விடுங்க." என்று அவள் திமிர,

"ஒரே ஒரு நிமிஷம் உன்னை உன் ஹஸ்பண்ட் கிட்ட விட்டுட்டு நான் போயிடுவேன் மா" என்று அஞ்சலி கூறியபோது யுவனிக்கு எரிச்சல் மண்டியது.

"அவன் என் புருஷன் இல்ல. என்னை விடுங்க." என்று அவள் கத்த,

"ஷ். என்ன சத்தம்?" என்றபடி ஹாலில் நின்றிருந்த ஆர்வி வினவ வாயை கப்பென்று மூடிக் கொண்டாள் யுவனி.

அவளை அவன் கைகளுக்கு மாற்றி விட்ட அஞ்சலி,

"டாக்டர்ஸ் நித்தி அண்ணா ரூமுக்கு போயிருக்காங்க. வந்தும் நாமெல்லாம் போய் பார்க்கலாம். அண்ணா முதல்ல என்ன கேட்பாங்க?" என்று அவள் ஆர்வியின் மறுபக்கம் நின்று பதட்டத்துடன் வினவினாள்.

"அவன் என்ன கேட்கப் போறான், அவன் பொண்டாட்டி எங்கன்னு கேட்பான். இடியட். எல்லா விஷயத்திலும் புத்திசாலி இதுல மட்டும் கடைஞ்சு எடுத்த அடி முட்டாள்." என்று பல்லைக் கடித்தான் ராஜவினோதன்.

அவன் கூறியதைக் கேட்ட யுவனி துணுக்குற்றாள். அடிபட்ட கணவன் மனைவியைக் கேட்க மாட்டானா? அதை ஏன் இவன் இப்படி குறிப்பிடுகிறான். இவனுக்கு ஒருவேளை அவந்திகாவைப் பிடிக்காதோ? என்று இவள் எண்ணம் ஊர்வலம் வரும் பொழுதே மருத்துவர்கள் அறையில் இருந்து வெளியே வந்தனர்.

"நீங்க போய் பாருங்க. ஆனா ரொம்ப ஸ்ட்ரெஸாகாம பார்த்துக்கோங்க. அவர் மனைவி பத்தி பொறுமையா சொல்லுங்க." என்று குடும்பம் மொத்ததிற்கும் சேர்த்து கூறிவிட்டு அகன்றார்.

அவர்கள் போனதும், "யாரும் எதுவும் பேசக் கூடாது. நான் நித்தி கிட்ட பேசிக்கிறேன்." என்று ஆர். வி அழுத்தமாக கூற, மொத்த குடும்பமும் அமைதி காத்தது.

'இது குடும்பமா குட்டி சுவரா? இவன் என்ன சொன்னாலும் பேசாம இருக்காங்க. இவன் என்ன பெரிய தாதாவா?' என்று வீரப்பாக அவள் எண்ணியதெல்லாம் மனதிற்குள் மட்டுமே. வாய் திறந்தால் என்ன செய்வான் என்று அறிந்தவள் அவன் இருக்கும்போது வாயே திறக்கவில்லை.

அந்த அறைக் கதவைத் திறந்தபடி அஞ்சலி நிற்க ராஜரத்தினம், ரங்கராஜன் இருவரும் முன்னால் செல்ல காஞ்சனாவும் வள்ளியும் அதன் பின் உள்ளே நுழைந்தனர்.

ஆர்வி யுவனியின் கைப்பற்றி அழைத்துக்கொண்டு பின்னே செல்ல, ஈஸ்வரியும் அஞ்சலியும் உள்ளே வர அறைக் கதவு மூடிக் கொண்டது.

நித்யனைக் கண்ட அனைவர் கண்களிலும் கண்ணீர் திரையிட்டது. காஞ்சனா மகன் அருகில் சென்று அவன் கன்னத்தை மென்மையாக வருடினார். வள்ளி அவனது கட்டுப் போட்ட தலையை தடவிக் கொடுக்க, அவனது அப்பாவும் சித்தப்பாவும் வருத்தமாக அவனைப் பார்த்தபடி நின்றனர். அஞ்சலி அவனது வலது கால் அருகே அமர்ந்து கொண்டாள். கட்டிலுக்கு எதிரே ஆர்வி யுவனியுடன் நின்றான்.

வீட்டினர் அனைவரையும் தன் வலி மிகுந்த விழிகளால் நோக்கினான் நித்யவினோதன்.

அவன் உதடுகளைப் பிரிக்க சிரமப்பட,

"ஒன்னும் இல்ல நித்தி." என்று கட்டிலை சுற்றி வந்து அவன் கையை தடவி கொடுத்தான் ஆர்வி.
பதினைந்து நாட்களுக்கு மேலாக ட்ரிப்ஸ் ஏற மாற்றி மாற்றி நரம்பில் ஐவி சொருகியதில் அவன் புறங்கை முழுவதும் காயமாக இருந்தது.

அது மட்டுமா? நடந்த விபத்தில் வலது பக்க தலையில் காயம், அதனால் தான் இத்தனை நாள் நினைவு திரும்பாமல் கோமாவில் இருந்தான். இடது தோள்ப்பட்டை எலும்பு விலகி அதற்கு கட்டு போடப்பட்டிருக்க இடது கால் எலும்பு முறிந்து துளியில் தொங்கிக் கொண்டிருந்தது.

அவனைப் பார்க்கவே யுவனிக்கு பரிதாபமாக இருந்தது. அவன் முகத்தில் அத்தனை அமைதி. வலியின் சாயலைத் தவிர ஒரு சிறு குழந்தையின் பால் வடியும் முகம் போல அத்தனை சாந்தம்.

அவள் அவனையே பார்த்திருக்க, "அவந்தி எங்க? அப்பறம் என் கார்ல.." என்று அவன் கேட்டதும் அனைவரும் அமைதி காக்க,

"அந்த ஆக்ஸிடென்ட்ல உன்னை தான் காப்பாத்த முடிந்தது நித்தி. அவங்களுக்கு காரியம் கூட செய்தாச்சு. உன் உடம்பு இருக்குற நிலையில நீ அவங்களை நினைச்சு கவலைப்பட்டா நாங்க இத்தனை நாள் உன்னை நினைச்சு கவலைப்பட்டு இப்ப நீ எழுந்திருக்கறதுக்கு புண்ணியம் இல்லாம போகும். பார்த்துக்க." என்று அழுத்தமாக வந்தது ஆர்வியின் வார்த்தைகள்.

அவனைக் கண்ட யுவனி 'இவனெல்லாம் மனுஷன் தானா? அவர் பொண்டாட்டி இறந்து போனதை ஏதோ நியூஸ் ரிப்போர்ட் போல சொல்லிட்டு அவரை வருத்தப்படக் கூடாதுன்னு ஆர்டர் போடுறான். இவனெல்லாம் என்ன மேக்ன்னு தெரியலயே!' என்று எண்ணிக்கொண்டாள். அதுவும் மனதில் மட்டும் தான்.

அடுத்து அவன் அவள் கைப்பற்றி, "இதோ பாரு நான் அவங்க தங்கச்சியை கல்யாணம் பண்ணிட்டேன். இப்போ இவ என் மனைவி. அதுனால நீ எதையும் யோசிக்காம உடம்பு தேற என்ன பண்ணனுமோ அதை செய்." என்று வாய் கூறினாலும் கண்களில் வேறு செய்தி இருந்ததோ?

'ஹான். இவன் லூசா? என்ன பேசுறான்?' என்று அவள் விழிக்கும் போதே அறைக் கதவு வேகமாக தட்டப்பட்டது.
 

NNK-96

Moderator
யுத்தம் 13

கதவு தட்டும் ஓசை கேட்டு அஞ்சலி யாரென்று அறைக்கதவைத் திறக்க வேலையாள் ஒருவர் தயக்கமாக நின்றிருந்தார்.

"அம்மா நம்ம புது சின்னம்மாவை தேடி ஒருத்தர் வந்திருக்காரு. ரொம்ப சத்தம் போடுறாரு. எங்களால சமாளிக்க முடியலம்மா" என்று கையைப் பிசைந்தார்.

அவள் நேராக ஆர்வியின் காதில் சென்று தகவலைக் கூற,

"எல்லாரும் வெளில போகலாம் நித்தி ரெஸ்ட் எடுக்கட்டும்." என்றவன் நித்யனிடம்,

"அண்ணா நீ எதையும் போட்டுக் குழப்பிக்க வேண்டாம். பார்த்தல்ல நான் அவளை கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன். நீ நல்லா ரெஸ்ட் எடு. அப்ப தான் சீக்கிரம் எழுந்து நடக்க முடியும்." என்று ஆறுதலும் தேறுதலும் கூறிவிட்டு அனைவரையும் பார்த்து அவன் கண் காட்ட அத்தனை பேரும் அவன் பார்வைக்கு அடிபணிந்து நித்யனிடம் கண்களால் விடைபெற்றுக் கிளம்பினர்.

தன் அன்னை மருத்துவமனையில் மயங்கி கிடந்து பின் விழித்தபோது தான் எப்படி பேசினோம் என்று எண்ணிய யுவனிக்கு இவர்களின் செய்கை கண்டதும் நெஞ்சை அடைத்தது.

'உயிர் தப்பிச்சு இத்தனை நாள் கழிச்சு கண் முழிச்ச வீட்டோட மூத்த வாரிசை இப்படியா டா பார்த்தும் பேசாம வருவீங்க? அப்படி என்ன இந்த ஆர்வி சொல்றது தான் இந்த வீட்ல சட்டம்? ச்சீ. அன்பை வெளிப்படுத்த கூட தடை போடுற இவனெல்லாம் என்ன மனுஷன்?' என்று உள்ளே புகைந்தாள்.

வீட்டு மனிதர்களுக்கான ஹாலில் அனைவரும் வந்து நின்றதும், "இங்க என்ன நடந்தாலும் யாரும் எதுவும் பேசக் கூடாது." என்று ஆர். வி கூற வள்ளியோ,

"மார் மேல போட்டு வளர்த்த என் பேரன் கிட்டையே பேசக் கூடாதுன்னு நீ சொன்னதுக்கு நானும் இங்க இருந்த எல்லாரும் பேசாம தானே இருந்தோம்? இப்போ அதை விட என்ன பெருசா இருந்திடப் போகுது?" என்று சோஃபாவில் தளர்வாக அமர்ந்தார்.

'பாட்டி பரவாயில்ல. அப்பப்ப இவனை ஆஃப் பண்ற மாதிரியே கவுண்ட்டர் கொடுக்கறாங்க. மத்த யாரும் இவனை ஒரு வார்த்தை சொல்றதில்ல.' என்று மனதிற்குள் முரண்டினாள் யுவனி.

"உள்ள கூட்டிட்டு வாங்க" என்று அங்கிருந்த வேளையாளிடம் கட்டளையாக கூறிவிட்டு அவன் ஒரு சோஃபாவில் அமர, மொத்த குடும்பமும் அவரவர் இடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்க தயாரானது.

காஞ்சனாவின் கண்கள் மட்டும் நித்யன் இருந்த அறைக் கதவை அடிக்கடி தழுவிக் கொண்டது.

யுவனி ஒரு ஓரமாக நின்றிருந்தாள். இங்கே அடுத்து அரங்கேற இருக்கும் நாடகம் முடிந்ததும் எப்படியாவது பேசி இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்று அவள் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் அந்த அறைக்குள் பிரசன்னமானான் அவளது நண்பன் நவாஸ்.

"நவாஸ்" என்று முணுமுணுத்தவள் வேகமாக அவனை நோக்கி நடக்க, அமர்ந்த இடத்தில் இருந்து தன்னைக் கடக்க இருந்தவள் கைப்பற்றி தன் அருகே இருந்த சோஃபாவில் அமர வைத்தான் ஆர். வி.

"சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்?" என்று ஏதும் அறியாதவன் போல வினவினான்.

"யுவனியை அனுப்புங்க சார். யாரைக் கேட்டு அவளை இங்க கூட்டிட்டு வந்தீங்க?" என்று நவாஸ் கேள்வி கேட்க,

"என் மனைவியை என் வீட்டுக்கு கூட்டிட்டு வர நான் யார் கிட்ட கேட்கணும்?" என்று எள்ளலாக பதிலளித்தான் ஆர்வி.

"அவளைக் கேட்கணும் சார். அவளுக்கு விருப்பம் இருக்கான்னு கேட்கணும்." என்று அவன் அழுத்தமாக கூற,

"என் பக்கத்துல தான் உட்கார்ந்து இருக்கா. அதெல்லாம் அவளுக்கு விருப்பம் தான். எங்க இல்லன்னு வாயை திறந்து சொல்ல சொல்லு பார்ப்போம்." என்று நவாஸிடம் கூறினாலும் 'வாயைத் திறந்து ' என்ற இடத்தில் அவன் கொடுத்த அழுத்தம் யுவனிக்கு பயத்தைக் கொடுத்தது.

நேற்றாவது நாலு சுவற்றுக்குள் பலவந்தமாக முத்தமிட்டான். இன்று இத்தனை பேர் மத்தியில் நான் பேசினால் அவன் நேற்று போல நடந்தால் என்ன செய்வதென்று அவள் திகைத்து விழித்தாள்.

அவள் அமைதியாக இருப்பதை சுட்டிக்காட்டிய ஆர்வி

"பாருங்க அமைதியா தான் இருக்கா. என் மனைவியை பார்த்துக்க எனக்கு தெரியும். நீங்க கிளம்பலாம்." என்று வாயிலை நோக்கி கை நீட்டினான்.

"என்ன சொல்லி பயப்படுத்தி வச்சிருக்கீங்க? உங்க மேல கோர்ட்ல கேஸ் போட்டவ இன்னிக்கு நீங்க கூட்டிட்டு வந்ததும் உங்க மனைவியா மாறிட்டாளா?" என்று கோபமிகுதியில் அவன் வினவியது ஆர்வியிடம் மட்டுமில்லை அது யுவனிக்கும் சேர்த்து கேட்கப்பட்டது தான்.

ஆனால் அவன் சொன்ன கோர்ட் கேஸ் அந்த குடும்பத்துக்கு புது தகவல் என்பதால் அனைவரும் துணுக்குற்று எழுந்து கொள்ள, ரத்தினம் ஒருபடி மேலே சென்று,

"என்ன தம்பி சொல்றீங்க? கேஸ் கொடுத்திருக்கா? என்னன்னு? நீங்க யாரு?" என்றார் வேகமாக.

"நான் அவளோட ஸ்கூல் பிரெண்ட். இப்போ அவளோட வக்கீல். தன்னை வலுக்கட்டாயமா திருமணம் செய்ததா சொல்லி இந்த கல்யாணம் செல்லாதுன்னு கோர்ட்ல மனுத்தாக்கல் பண்ணி இருக்கா யுவனி. இந்நேரம் உங்க வீட்டு பையனுக்கு நோட்டீஸ் வந்திருக்கணுமே!"என்று அவன் பார்வை ஆர்வியின் பக்கம் திரும்ப,

பல்லைக் கடித்து தன் கோபத்தை அடக்கியவன், "கேஸ் கொடுத்தவளே இங்க சும்மா தான் உட்கார்ந்து இருக்கா. நீ ஏன் பா இந்த கூவு கூவுற? உனக்கு வேற கேஸ் இல்லையோ?" என்று அவனை நக்கல் செய்துகொண்டிருக்க அவனது கைபேசி அலறியது.

எடுத்தவன் காதில் நல்ல செய்தி வந்து விழுந்தது.

"சார் அவன் இருக்குற இடம் தெரிஞ்சு போச்சு சார்." என்று அவனிடம் அன்று திட்டு வாங்கிய நபர்களில் ஒருவன் தகவல் தர,

"நானே நேர்ல வர்றேன். நீங்க போக வேண்டாம். லோகேஷனை எனக்கு அனுப்பு." என்று அவன் பேசிய குரலில் அத்தனை கொடூரம்.

ஆனால் இதெல்லாம் கவனிக்காத நவாஸ், "யுவனி எழுந்து வா. உன்னை இவன் இப்போ விடலன்னா நான் நேரா கமிஷ்னர் ஆபிஸ்ல கம்பிளேன்ட் பண்ணிடுவேன்." என்று கூற,

"எங்க வேணாலும் போய் சொல்லிக்கோ. அவ இங்க தான் இருப்பா." என்று அவனிடம் சவாலாக கூறிவிட்டு,

"வாசலை திறந்து வச்சுட்டு தான் போறேன். உனக்கு வெளில போகணும்னா தாராளமா போயிக்கோ. நீ இந்த வாசலை தாண்டும்போது அங்க உங்க செல்ல மம்மி, அதான் சாரதா மேடம் அவங்களை தூக்க சொல்லிடுவேன். அப்பறம் நீ என்ன உருண்டாலும் அவங்க இருக்குற இடத்தை இந்த ஜென்மத்துல உன்னால கண்டுபிடிக்க முடியாது. செய்ய மாட்டேன்னு நினைக்காத. ஏற்கனவே அந்த வீட்டு வாசல் பக்கத்துல என் ஆளுங்க இருக்காங்க." என்று யுவனியை மிரட்டி விட்டு வெளியே சென்றான்.

'இவன் என்ன ஏதோ குண்டாஸ் தலைவன் ரேஞ்சுல மிரட்டுரான்?' என்று எண்ணியவர்களுக்கு தெரியவில்லை அவன் கைபேசியில் அப்படிப்பட்ட ஆட்களையே மிரட்டி கொண்டிருக்கிறான் என்று.

ஆர்வி அதன் பின் ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை. நவாஸ் இருப்பதை ஒரு பொருட்டாகக் கூட எண்ணாமல் வெளியேறிவிட்டான்.

வீட்டினருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஈஸ்வரி தான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல,

"கம்பெனி எல்லாம் கட்டி ஆளுறான்னு அவனைக் கண்டாலே அமைதியா இருந்திங்க. இப்போ அவன் ஏதோ ரௌடி கூட்டத்துக்கு தலைவன் மாதிரி பேசிட்டு இருக்கான். இதெல்லாம் எங்க போய் முடியுமோ? ஏங்க சீக்கிரம் நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை பாருங்க. இனியும் அவ இங்க இருந்தா அவளுக்கு கல்யாணம் நடந்த மாதிரி தான்." என்று நொடித்துக் கொண்டு உள்ளே சென்றார்.

ரங்கராஜன் அவள் பேச்சை முகம் சுளித்து திரும்பிக் கொள்ள, ரத்தினம் நவாஸிடம் வந்தார்.

"தம்பி கேஸ் எதுவும் போட வேண்டாம். நாங்க இதை பேசி சரி பண்றோம்." என்று மிகவும் தன்மையாக கூறினார்.

"சார் உங்க மேல எனக்கு பெரிய மரியாதை இருக்கு. ஆனா உன் பையன் செய்தது ரொம்ப தப்பு. அதுவும் இல்லாம கேஸ் போட்டது நான் இல்ல. யுவனி."என்றவன் அவளை முறைத்தான்.

வந்தது முதலே வாய் மூடி நிற்பவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்குள் கோபம் கொப்பளித்தது.

"முறைக்காத நவாஸ். நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்தப்ப டயர்ட்ல லேசா மயங்கிட்டேன். அப்ப இங்க தூக்கிட்டு வந்துட்டான். போக விட மாட்டேன்றான். வாய் திறந்தாலே எதையோ சொல்லி மிரட்டிகிட்டு இருக்கான். நீ கமிஷ்னர் ஆபிஸ்ல கம்பிளேன்ட் பண்ணு. போலீஸ் வந்தா நான் கண்டிப்பா எல்லாத்தையும் சொல்லிட்டு இங்கிருந்து வர்றேன். நீயே பார்த்தல்ல மம்மியை கடத்திடுவேன்னு மிரட்டிட்டு போறான்." என்று பல்லைக் கடித்தாள்.

தன் அண்ணன் அத்தனை தூரம் சொல்லியும் இவள் போலீஸில் புகார் கொடுக்கச் சொல்கிறாளே என்று கடுப்பான அஞ்சலி,

நவாஸின் அருகில் வந்து, "கமிஷ்னர் கிட்ட என்ன நேரா சி.எம் கிட்ட கூட போய் சொல்லு. அவங்க வந்து செக் பண்ணனும்ன்னா இங்க தானே வரணும்? இவளை ஒளிச்சு வச்சா நீங்க லைஃப் லாங் தேட வேண்டியது தான். அண்ணன் சொன்னது மாதிரி உங்க யாருக்கும் இவ கிடைக்கவே மாட்டா. சும்மா சொல்றாங்க செய்ய மாட்டாங்கன்னு நினைக்காத.என் அண்ணனுங்க வாழ்க்கைக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்." என்று அஞ்சலி சவால் விட்டாள்.

நவாஸ் யுவனியைப் பார்க்க, "இன்னிக்கு ஒரு நாள் பாரு. இல்லன்னா எல்லாத்தையும் சேப்டி பண்ணிட்டு போலீஸூக்கு போயிடு." என்று தீர்க்கமாகக் கூறி விட்டாள்.

அவனும் அமைதியாக வெளியேற,
"உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? அண்ணன் உன் கழுத்துல தாலி காட்டிட்டான்னு மரியாதை கொடுத்து அமைதியா இருக்கேன். அவன் எவ்வுளவு நல்லவன் தெரியுமா? அவன் கிடைக்க நீ தவம் பண்ணி இருக்கணும்." என்று அஞ்சலி யுவனியிடம் கொதித்தாள்.

"ஆமா உன் அண்ணன் பெரிய இவன். அவனைக் கட்டிக்க நாங்க தவமெல்லாம் வேற இருக்கணுமா? யாருன்னு கூட தெரியாத பொண்ணு கிட்ட என்னென்ன பண்ணிட்டு இருக்கான். ரௌடிப்பய மாதிரி மிரட்டுறான், கடத்துறான். இவன் நல்லவனாம்." என்று அவளும் அஞ்சலிக்கு சரியாக நின்றாள்.

"உன்னை ஏன் கல்யாணம் பண்ணினானு சொல்ல எங்களுக்கு அரை செகன்ட் ஆகாது. ஆனா தெரிஞ்சதும் நமக்கு மதிப்பில்லன்னு நீ ஃபீல் பண்ணக் கூடாதுன்னு தான் சொல்லல." என்று அஞ்சலியும் அவளிடம் சண்டைக்கு நின்றாள்.

"கேட்காம கல்யாணம் பண்ணினதுக்கு மட்டும் மதிப்பு குடுத்ததா இங்க பூரிச்சு போய் திரிகிறோமா?" என்று எள்ளலாக வினவினாள் யுவனி.

அஞ்சலி ஏதோ பேச வர, காஞ்சனா அவளைத் தடுத்தார்.

"அஞ்சு பேசப் பேச வளர்த்துகிட்டே தான் போகும். நித்யன் எழுந்துட்டான். இனி எல்லாமே சரியா வரும். நீ விடு." என்றார்.

அவர் யுவனியிடம் ஏதோ பேச வர, ரங்கராஜன் வேகமாக,

"முதல்ல அந்த கேசை வாபஸ் வாங்கும்மா. எதுனாலும் வீட்டு விஷயம் வீட்டோட இருக்க வேண்டாமா? இப்படியா பொம்பள பிள்ளை கோர்ட் வாசல் ஏற தயாரா இருக்கறது? கொஞ்சம் கூட குடும்ப மானம், மரியாதை, கவுரவம் பத்தி பயமே இல்லையே!" என்றார்.

எங்கிருந்து வந்ததோ யுவனிக்கு அத்தனை கோபம், "ஆமா சார் உங்க வீட்ல இல்லாத அநியாயம் எல்லாம் செய்வீங்க. முதல் மருமக திடீர்னு சாகும், சாவுக்கு வந்த அவ தங்கச்சியை உங்க அடுத்த பையன் பலவந்தமா கல்யாணம் பண்ணுவான், கடத்தி வீட்டுல வச்சு மிரட்டுவான். இதெல்லாம் தப்பில்ல. ஆனா என்னை கஷ்டப்படுத்துறது தப்பு அதுக்கு நியாயம் வேணும்ன்னு நான் நீதி கேட்டு கோர்ட்டுக்கு போனா எனக்கு குடும்ப மானம் மரியாதை பத்தி பயமில்லன்னு சொல்றது? ரொம்ப நல்லா இருக்கு சார் உங்க நியாயம். உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்குல்ல அவளுக்கு இப்படி நடந்தாலும்.. ச்சி அப்படி ஒரு நிலை யாருக்கும் வரக் கூடாது. ஆனாலும் பேச்சுக்கு கேட்கறேன் , அந்த சூழல்ல அவளுக்கும் இதே அட்வைஸ் தான் பண்ணுவிங்களா?" என்று ஆடித் தீர்த்தாள்.

அவள் பேச்சில் ரங்கன் அமைதியாகி விட, ரத்தினம் மனம் நொந்து போனார்.

காஞ்சனாவும் வள்ளியும் யுவனியை சமாதானம் செய்ய நினைக்க,

"யாரும் என்கிட்ட பேச வேண்டாம். என்ன குடும்பம் இது?" என்று வேகமாக ஆர்வியின் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.

கதவருகில் நின்று காஞ்சனா கெஞ்சியும் அவள் அவர் சொல்ல வருவதைக் கேட்கவில்லை.
 
Status
Not open for further replies.
Top