எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைமதி வாழ்வின் நிறைமதி அவள் -7

Padma rahavi

Moderator
அன்று முழுவதும் வேலையே ஓடாமல் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே கிளம்பி விட்டாள் சிவகர்ணிகா.

என்ன இருந்தாலும் இவன் நம்மிடம் ஒரு வார்த்தை கூறி விட்டு சென்றிருக்கலாம் என்று மனம் தவித்துக் கொண்டே இருந்தது.

ஒரு மிகப்பெரிய அலுவலகத்தின் முதலாளி ஒரு தனிப்பட்ட முறையில் வேலை செய்பவரிடம் கூறி விட்டு செல்வது எப்படி நடக்கும்! அதுவும் தான் வேலைக்கு சேர்ந்து 4,5 மாதங்கள் தான் ஆகியிருந்தது. பொதுவாக சி. இ. ஓ விடம் தானே கூறி விட்டுச் செல்ல முடியும். இவை எல்லாம் அவள் மூளைக்கு உறைத்தாலும், மூளை அதை இதயத்திற்கு புரிய வைக்க முடியாமல் குழம்பியது.

ஒப்புக்கு சாப்பிட்டு விட்டு அறைக்கு அமைதியாகச் சென்றவளை வித்தியாசமாக பார்த்த வாசுகி, தான் கணவரிடம்,

என்ன ஆச்சுங்க உங்க பொண்ணுக்கு. அதிசயமா அமைதியா இருக்கா என்றார்.

உனக்கு வேற வேலை இல்லை வாசுகி. அவ பேசுனா அடங்காம பேசுறானு சொல்ல வேண்டியது, பேசலைன்னா இப்படி. அவளை நிம்மதியா விடேன் என்றார்.

ஆமா! பொண்ணை சொன்னா அப்டியே பொத்துகிட்டு வந்துரும் என்று கூறிவிட்டு சென்றார் வாசுகி.

தூக்கம் வராமல் அலைபேசியை நோண்டிக் கொண்டு இருந்தவள், புதிய எண்ணில் இருந்து அழைப்பு வரவும் சற்று நேரம் யோசித்தாள்.

எனினும் அட்டன் செய்து காதில் வைத்தாள்.

ஹலோ யாரு?

சற்று நேரம் அந்த பக்கம் மௌனமாக இருந்தது.

பொறுமை இழந்து, ஹலோ, யாரு பேசுறது? ஒன்னு பேசுங்க இல்லனா போனை வைங்க. உங்களுக்கு வேணா வேலை இல்லாம இருக்கலாம். எனக்கு நிறைய வேலை இருக்கு என்று எரிச்சலாக பேசினாள் சிவகர்ணிகா.

அட அட என்ன கோவம். என் கிட்ட மட்டும் தான் இந்த கோவம்னு நினைச்சா, எல்லார் கிடைக்கும் இப்படித்தான் போலயே என்று கம்பீரமாக ஒரு குரல் கேட்டது.

எரிச்சலான மனநிலையில் இருந்த சிவகர்ணிகா மேல் ஒரு வாளி ஐஸ் தண்ணீர் வாரி இறைத்தது போல் சட்டென மனம் குளிர்ந்து போனது. பின்னே இந்தக் குரலைக் கேட்காமல் தானே அவள் எரிச்சல் ஆனதே.

எனினும் தன் கெத்தை விடாமல்,

சொல்லாம போனவங்க கிட்ட நான் பேசுறதா இல்லை என்றாள்.

அது மேடம் கம்பெனி டிரான்ஸ்போர்டல வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்.. நீங்க தான் வம்பா பஸ்ல வறீங்களே என்றான்.

ஓஹோ! அதான் அலுவலகத்துல எல்லாரும் அமைதியா அவங்க வேலையை பார்த்துட்டு இருந்திருக்காங்க. கம்பெனி மூலமா வர்றவங்களுக்கு கம்பெனி சொல்லிருக்காங்க போல என்று யோசித்தாள்.

இருந்தாலும் உங்க கம்பெனி வண்டில வர்றவங்க தவிர மத்தவங்க எப்படி தெரிஞ்சிக்கிறதாம். எனக்கு சொல்லணும்னு நீங்க யோசிக்கலைல என்றாள் சிவகர்ணிகா.

அதான் மத்த எல்லாருக்கும் அபிசியலா சொன்னா விஷயத்தை உனக்கு பர்சனலா, என் போன்ல இருந்து சொல்றேன் என்றான். நான் இங்க வந்த நேரம் காலைல. அங்க அப்போ நைட். நீ தூங்கிட்டு இருப்ப. அதான் பொறுமையா சொல்லலாம்னு இருந்தேன் என்றான்.

மத்த எல்லாருக்கும் அபிசியல். உனக்கு மட்டும் பர்சனல் என்று அவன் கூறியது என்ன அர்த்தத்தில் என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால் தான் அவனை நினைப்பது போலவே அவனும் தன்னை நினைத்திருக்கிறான் என்று புரிந்தது.

என்னமோ தெரில. காலையில இருந்து வெறுமையா இருந்துச்சு. அது ஏன்னு இப்ப தான் தெரியுது. உன் இந்த கோவக்கார குரலை கேக்காம தான் அந்த வெறுமை போல என்று அவளுக்கு ஐஸ் தண்ணீரை வாரி இறைப்பது போல் பேசிக் கொண்டே சென்றான்.

இவளோ நேரம் ஏன் எதுக்குனே தெரியாம எரிச்சலா இருந்தேன். அது ஏன்னு எனக்கும் இப்ப தான் புரியுது சார் உங்க சிடுமூஞ்சி முகத்தை பார்க்காம தான் என்று அவளும் பதிலுக்கு கூற,

அங்கிருந்து கல கல வென அவன் சிரிக்கும் சத்தம் கேட்டது.

அவன் இப்படி சிறிது அவள் பார்த்தது இல்லை. இப்போதும் பார்க்க முடியவில்லை என்றாலும் அவன் குரலை வைத்தே அவன் முகத்தை கற்பனை செய்து கொண்டவள் புன்னகை பூத்தாள்.

அப்புறம் ஜெர்மனி எல்லாம் எப்படி இருக்கு என்றாள்.

என்னத்தை சொல்றது. கூட ஆள் இருந்தா நல்லா சுத்தி பார்க்கலாம். நான் தனியா என்ன பாக்கிறது என்று புலம்பினான்.

அட. அவன் அவன் இப்படி வாய்ப்பு கிடைக்காம இருக்கான். நீங்க என்ன எப்ப பாரு சோக கீதம் வாசிச்சிட்டு இருக்கீங்க. தனியா என்ன காட்டுக்கா போயிருக்கீங்க? அப்படி போனா கூட தனிமையை ரசிக்கலாம்.

கூட ஆள் இருந்தா கூட அவங்க ரசனைக்கும் ஏத்த மாதிரி நீங்க எல்லாம் பண்ணனும். ஆனா இப்ப நீங்க தான் ராஜா. உங்க தனிமை தான் உங்களுக்கான ரசனையை எடுத்துக் காட்டும். மலை, அருவி, காடு, மக்கள் கூட்டம் இதையெல்லாம் தனியா ரசிச்சு பாக்கிரதுலயும் ஒரு நிம்மதி இருக்கு சார். சும்மா புலம்பாம அதை அனுபவிச்சிட்டு வாங்க.

அவள் பேசியதை கேட்ட பிறகு தான் இருப்பதை அனுபவிக்கத் தெரியாமல் இல்லாததை நினைத்து ஏங்கிக் கொண்டு இருப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தானம் என்று நினைத்தான்.

சரிங்க மேடம். நான் நல்லா என்ஜாய் பண்ணி போட்டோஸ் அனுப்புறேன். அதை பாருங்க என்றான்.

போட்டோஸ் அனுப்புனா பத்தாது. வரும் போது ஜெர்மனி ஸ்பெஷல் எதாவது வாங்கிட்டு வரணும் என்றாள்
சிவகர்ணிகா.

உனக்கு மட்டும் வாங்க முடியுமா! வாங்குன மொத்த ஆபிஸ்கே வாங்கணும். ஆக மொத்தம் எனக்கு செலவு வைக்கணும்னே பொறந்து வந்திருக்கா இவ என்று கூறிவிட்டு சிரித்தான்.

அவளும் உடன் சிரித்தாள்.

சிறிது நேரமா அலுவல் விஷயம் பேசியவன் அவளுக்கு குட்நைட் கூறிவிட்டு போனை வைத்தான்.

ஏதோ மனதில் இருந்த பெரும் பாரங்கல்லை இறக்கி வைத்தது போல் மனம் தெளிவடைந்து இருக்க நிம்மதியாக உறங்கினாள் சிவகர்ணிகா.

அலுவலகத்தில் அவன் இருக்க மாட்டான் என்று இன்று தெரிந்து விட்டாலும், ஏதோ அவன் இல்லாத சமயம் நாம் தான் எல்லாவற்றையும் சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

காலையில் அவனுக்கு குட் மார்னிங் என்று மெசேஜ் செய்ய கைகள் துடித்தாலும், இப்போது அவன் உறங்கிக் கொண்டு இருப்பானே தொந்தரவு செய்யலாமா என்ற எண்ணமும்,

ஏதோ நம்மிடம் போன் பேசினான் என்று அதிகப்படியாக உரிமை எடுத்துக் கொண்டு மெசேஜ் செய்வதா என்றும் மாறி மாறி தோன்றிக் கொண்டே இருந்தது.

சரி எதற்கும் ஒரு ஹாய் போட்டு வைப்போம் என்று அவள் அலைபேசியை எடுக்கவும், அவள் உள்பெட்டியில்

"குட்மார்னிங். இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துகள் " என்று ஆங்கிலத்தில் சிவநந்தனிடம் இருந்து செய்தி வந்து விழுந்தது.

நெஞ்சில் பூமாலை மோதியது போல உள்ளம் மகிழ அவனுக்கு பதியோ அனுப்பி விட்டு தான் யோசித்தாள் அவன் பெயரை இன்னும் சேமித்து வைக்கவில்லையே என!

என்னவென சேமிக்க!

பாஸ்? சார்? எம். டி?

இது எல்லாம் அவனை அலுவல் ரீதியாக மட்டும் பார்ப்பதாக இருந்தால் சரி. ஆனால் நாம் என்ன வைப்பது?

அவன் பெயரை அப்படியே சேமிப்பது கொஞ்சம் தயக்கமாக இருந்தது. பெயரை சுருக்கினால்?

பலவறாக குழம்பி இறுதியாக சேமித்தாள்,
"நந்து" என!

அவனும் அத்தனை நேரம் யோசித்து விட்டு அப்போது தான் சேமித்து இருந்தான்,
"கர்ணி" என!

பெயரை சுருக்கியவர்கள் மனதை சுருக்காமல் வெளிப்படையாக இருந்தால் கதையை முடிச்சிரலாம். என்ன மக்களே!
 

Kalijana

Member
Superb Superb ♥️
MEME-20220924-091903.jpg
 

Attachments

  • MEME-20220924-092948.jpg
    MEME-20220924-092948.jpg
    272.5 KB · Views: 0
  • MEME-20220924-093716.jpg
    MEME-20220924-093716.jpg
    292.2 KB · Views: 0
  • MEME-20220924-094733.jpg
    MEME-20220924-094733.jpg
    246.9 KB · Views: 0
  • MEME-20220924-095119.jpg
    MEME-20220924-095119.jpg
    205.2 KB · Views: 0
  • MEME-20220924-095913.jpg
    MEME-20220924-095913.jpg
    286.5 KB · Views: 0
  • MEME-20220924-101548.jpg
    MEME-20220924-101548.jpg
    266 KB · Views: 0
  • MEME-20220924-120937.jpg
    MEME-20220924-120937.jpg
    275.7 KB · Views: 0
  • MEME-20220924-122428.jpg
    MEME-20220924-122428.jpg
    254.1 KB · Views: 0
  • MEME-20220924-123044.jpg
    MEME-20220924-123044.jpg
    239.5 KB · Views: 0

Kalijana

Member
Simply Superb Episode ♥️ I love it
 

Attachments

  • MEME-20220924-123622.jpg
    MEME-20220924-123622.jpg
    326.9 KB · Views: 0
  • MEME-20220924-125118.jpg
    MEME-20220924-125118.jpg
    305.7 KB · Views: 0
  • MEME-20220924-010248.jpg
    MEME-20220924-010248.jpg
    262.8 KB · Views: 0
  • MEME-20220924-010755.jpg
    MEME-20220924-010755.jpg
    287 KB · Views: 0
  • MEME-20220924-011332.jpg
    MEME-20220924-011332.jpg
    250.1 KB · Views: 0
  • Picsart_22-09-24_14-04-56-491.jpg
    Picsart_22-09-24_14-04-56-491.jpg
    278.7 KB · Views: 0
  • MEME-20220924-022013.jpg
    MEME-20220924-022013.jpg
    248.6 KB · Views: 0
  • MEME-20220924-023454.jpg
    MEME-20220924-023454.jpg
    272.8 KB · Views: 0
Top