எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணகியின் கோவலன் - கதை திரி

Status
Not open for further replies.

NNK-92

Moderator
வணக்கம் நண்பர்களே NNK-92
உங்கள் ஆதரவுகளை தர வேண்டிக் கொள்கிறேன்...
 

NNK-92

Moderator
கண்ணகியின் கோவலன்….


அத்தியாயம் 1


ஒரு மார்கழி மாதம் பனி படர்ந்த காலை வேளை உத்தமப்பாளையம் கிராமம்,

இல்லத்தரசிகள் வீட்டிற்க்கு வெளியே வாசல் தெளித்து கோலம் போட்டு கொண்டிருந்தனர் காக்காய் குருவிகள் தூக்கத்தில் இருந்து விழித்து ஒலி எழுப்பி கொண்டிருந்தன

நிலவு பிரியா விடைபெற்றுக் கொண்டு இருந்தது

சூரிய பகவான் தன் ஒளிக்கற்றைகளை பரப்ப தயாராகி கொண்டிருக்க

அந்த‌ காலை வேளையில்

“பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று பகல் 12 மணி அளவில் வெளியாகிறது”

என்று சன் டிவியில்

செய்தி வாசிப்பாளர் ரத்னாவின் கணீர் குரல் அந்த வீடேங்கும் ஒலித்து கொண்டிருந்தது.


தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய செய்தியை கேட்டு பதறி அடித்து கொண்டு எழுந்தாள் கண்ணகி.


நேரே குளியலறைக்கு சென்று குளித்து முடித்து வந்தவள் பூஜை அறையில் சென்று அமர்ந்து கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தாள்.


“இப்போ சாமி கும்பிட்டு என்ன பிரயோஜனம் படிக்கும் போதே ஒழுங்கா படிச்சிருக்கனும்” என்று அவளை பார்த்து புலம்பிக் கொண்டே சென்றார் கண்ணகியின் தாய் குருவம்மாள்.


நேரம் பன்னிரெண்டை நெருங்க நெருங்க அவளுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது சரியாக 12.15க்கு “எங்க அந்த எரும மாடு” என்று கத்திக் கொண்டே உள்ளே வந்தார் அந்த வீட்டின் தலைவர் சுப்புரமணி.


அவரை பார்த்த கண்ணகிக்கு பயத்தில் வியர்வை வடிய ஆரம்பித்தது துடைத்துக் கொண்டே இருந்தவளை பார்த்த சுப்புரமணி “அடி கழுதை” என அடிக்க வர அவள் அந்த வீட்டின் உள்ளே ஓட ஆரம்பித்தாள் அவரும் அவளை தூரத்தி கொண்டே ஒடி வந்தவர் ஒரு வழியாக அவளை பிடித்தவர் அவள் காதை பிடித்து திருக ஆரம்பித்தார் “அப்பா வலிக்குது பா” என்றாள் அழுது கொண்டே

“நல்லா வலிக்கட்டும் வாத்தியார் புள்ளை மக்கு”


“என்னங்க என்னாச்சி?” என்றார் குருவம்மா

“உன் பொண்ணு உன்னை மாறி தான இருப்பா இந்த வருஷமும் ஃபெயில் ஆகி நிக்குது கழுதை உங்க அப்பன் உன்னை மாறி ஒரு மக்க என் தலையில் கட்டுனான் என் நேரம் புள்ளையும் உன்னைய மாறியே பொறந்து இருக்கு” என்றார்.


“எங்க அப்பன பத்தி பேசலன்னா உங்களுக்கு தூக்கமே வராதே இது எப்பவும் நடக்குறது தான போய் வேலையை பாருங்க” என்ற குருவம்மா சமயலறைக்கு சென்றுவிட்டார்.


இந்த சம்பவம் இன்று மட்டும் அல்ல இரண்டு வருடமாக ஒவ்வோரு முறையும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் போதும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது அதனால் தான் குருவம்மாள் கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டார்.


குருவம்மாள்-சுப்புரமணி தம்பதியின் ஒரே மகள் தான் கண்ணகி

சுப்புரமணி தமிழ் வாத்தியார் ஆக தொடக்கப்பள்ளியில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்

தமிழ் மீது கொண்ட காதலால் தன் மகளுக்கு கண்ணகி என பெயர் சூட்டியுள்ளார் குருவம்மாள் மழைக்கு பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் அந்த காலத்திலேயே நன்றாக படித்தவர் என ஏமாற்றி அவர் தந்தை சுப்பிரமணியின் தலையில் கட்டிவிட்டார்.


அழுது கொண்டு இருந்த கண்ணகி இது தான் சமயம் என வீட்டை விட்டு ஓடிவிட்டாள்

அவள் ஓடுவதை பார்த்த சுப்புரமணி “கழுதை கொட்டிக்க இங்க தான வரனும் நீ வா உன்னை கவனிச்சிக்கிறேன்” என்றார்.


நேரே ஒடியவள் ஓடையின் கரையில் சென்று அமர்ந்து கொண்டாள்.


அவள் அங்கே அமர்ந்து இருக்க “என்ன இந்த வருஷமும் போச்சா”

என குரல் கேட்க திரும்பாமலேயே அது யார் என கண்டுபிடித்தவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள் அவள் நண்பன் குட்டிமணி தான் வந்திருந்தான் அவனை பார்த்து முறைத்தவள்

முகத்தை திருப்பி கொண்டாள்

“அட விடு கண்ணகி நானும் தான் எல்லா பரீட்சையிலையும் ஃபெயிலாகுறன் எங்க அம்மாவும் தான் என்னை அடிக்குது நான் எல்லாம் உன்ன மாறி அழுதுட்டா இருக்கேன்”


“டேய் நீ எழுதுறது ஸ்கூல்ல வைக்கிற பரீட்சை டா நான் எழுதறது பப்ளிக் எக்ஸாம் டா” என்றாள் “இதெல்லாம் நல்லா பேசு பரீட்சையில மட்டும் ஃபெயில் ஆகிடு” என்றான் குட்டிமணி.


குட்டிமணி சுப்பரமணி வேலை பார்க்கும் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்.


“நான் என்ன டா பண்ண இந்த இங்கீலிசு மட்டும் எனக்கு வரவே மாட்டாங்குது” என்றாள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு “சரி தான் அப்புறம் ஏன் கணக்கு பரீட்சையில ஃபெயில் ஆன?”

என்றான்.


“டேய் அதுவும் கஷ்டம் தான் டா” என்றாள்.

“உனக்கு தான் படிப்பே வரலையே நீ பேசாமா பக்கத்து வீட்டு வினோதினி அக்கா மாறி கல்யாணம் பண்ணிக்க வேண்டி தான” என்றான்.


“எங்க டா எங்க அப்பன் பண்ணி வைக்குறான் வர மாப்பிள்ளை எல்லாத்தையும் துரத்திவிட்டுட்டு இருக்காரு” என்றாள்.


“விடு நானே உனக்கு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றான்.


“உனக்கு எந்த மாறி மாப்பிள்ளை வேணும்?” என்றான்.


“எனக்கு என்ன டா ரொம்ப ரொம்ப நல்லவரா இருக்கனும் நம்ம ஊர்ல இருக்கவனுங்க மாறி சின்ன வீடுலாம் வைச்சிக்க கூடாது கண்ணகி கண்ணகின்னு என்னையே சுத்தி வரனும் அம்மா அப்பா தம்பி தங்கச்சின்னு கூட்டு குடும்பமா இருக்கனும் அவ்வளோ தான்”


“அவ்வளோ தான விடு மாப்பிள்ளைய பார்த்துருவோம்

பக்கத்து தோப்புல நெறைய மாங்காய் இருக்கு உப்பு மிளகாய்த்தூள் போட்டு சாப்பிடலாம் வரியா” என்றான்.


“அப்படியா வா போலாம்” என அங்கே ஓடினாள்.


கண்ணகிக்கு படிப்பு சுத்தமாக வராது சுப்புரமணியால் தான் இரண்டு வருடமாக பரீட்சை எழுதி கொண்டு இருக்கிறாள் வீட்டுக்கு ஒரே மகள் அடங்காத மகளும் கூட காலையில் இருந்து மாலை வரை ஊர் சுற்றுபவள் இரவு தான் வீட்டிற்க்கு செல்வாள்.


இதே நேரம் சென்னை மாநகரம்

“எவ்வளோ பெரிய ஆளு இப்படி சாதாரணமா நம்ம கூட பஸ்ல வராரு”


“யாருங்க இவரு?”

“இவரை தெரியாதா இவரு தான் வில்லியம் குரூப்ஸ் ஆஃப் கம்பெனியோட ஒரே வாரிசு ஆரோன் வில்லியம் தமிழ்நாட்டிலேயே டாப் 10 பணக்காரர்களில் ஒருத்தர்” என அங்கிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருக்க மொத்த மீடியாவும் அந்த பேருந்தை பின் தொடர்ந்து ஆரோன் வில்லியம் படம் பிடித்துக் கொண்டு இருந்தனர்.


ஆரோன் பேருந்தை விட்டு அவன் கம்பெனி வாசலில் இறங்கியவுடன் மொத்த மீடியாவும் அவனை சூழ்ந்து கொண்டனர்.


அவன் முன் மைக்கை நீட்டிய பெண் ஒருத்தி “எப்படி சார் இவ்வளவு சாதரணமாக இருக்கிங்க” என்றாள்.


“எனக்கு எப்பவும் இப்படி இருக்கத்தான் பிடிக்கும்” என்றான் மெலிதாக புன்னகைத்து கொண்டே.


இன்னொரு நிரூபர் “எப்போ சார் மேரேஜ் பண்ண போறிங்க உங்களுக்கு கல்யாணம்ன்னு சொல்லிட்டு இருக்காங்களே” என்றான்.


அதை கேட்டவுடன் எதுவும் கூறாமல் விறு விறுவென உள்ளே சென்றுவிட்டான்.


“என்னடா கல்யாணம்ன்னு சொன்ன உடனே இந்த ஓட்டம் ஓடுறாரு” என்றான் அந்த நிருபருடன் இருந்தவன்.


“அவரு பக்கா ஜென்டில்மேன் பொண்ணுங்கனாளே பிடிக்காது 28 வயசுலயே எல்லா பிரஷரையும் ஹேன்டில் பண்றாரு சோ இப்படி தான் இருப்பாரு”


“இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா பணக்கார வீட்டு பசங்கன்னா பொண்ணுங்க சரக்குன்னு சுத்துவாங்க இந்த வயசுல இவ்வளோ பொறுப்பா இருக்காரு”


“நான் தான் சொன்னனே ஹி இஸ் ஜென்டில்மேன்” என்றான்.


மாலை ஆறு மணி…


தனது லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஆரோன் தனது ஐபோனில் மணியை பார்த்தவன் “ஷிட்” என பதறி அடித்துக் கொண்டு தனது காரில் வெளியே கிளம்பினான்.


நேரே தனது பிச் ஹவுஸிற்க்கு சென்றவன் தனது கோட் ஷீ அனைத்தையும் தூக்கி எறிந்தவன் தனது அறைக்கு சென்று பெட்டில் விழுந்தவன் தனது பெட்டுக்கு அருகில் இருந்த டின் பீர் எடுத்து குடிக்க ஆரம்பித்தான் தனது ஐபோனை எடுத்து பி.ஏவிற்க்கு அழைத்தவன் “ரெடியா” என்றான்

பதிலுக்கு “இதோ இப்போ வருவாங்க பாஸ்” என்றான்.


அவன் கதவை தட்டும் சத்தம் கேட்டு “கம் இன்” என்றான்.


கதவை திறந்து கொண்டு வெள்ளை நிற அழகி ஒருத்தி அரைகுறை ஆடையுடன் அவன் மேலே வந்து விழுந்தாள்.


ஆரோனால் மது,மாது இல்லாமல் ஆறு மணிக்கு மேல் இருக்க முடியாது.


தன்னை வெளியே நல்லவன் என காட்டிக் கொண்டாலும் அவன் கோவலனே.


தொடரும்….
 
Last edited:

NNK-92

Moderator
அத்தியாயம் 2

தன் மேல் விழுந்த வெள்ளை நிற அழகியின் இடையில் கை கொடுத்து தூக்கியவன் அவள் இதழை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான் பரபரவென அவளை படுக்கையில் தள்ளி தன் உடைகளை கலைந்தவன் அவள் மேல் படர ஆரம்பித்தான்
“பேபி ஸ்லோ” என்றாள் அந்த அழகி சிணுங்கி கொண்டே
“ஷட் அப்” என்றவன் அவளின் பெண்மையை களவாட ஆரம்பித்தான்
அன்று இரவு முழுவதும் அவளுடன் கூடிக் களைத்தவன்.

மறுநாள் காலை தனது அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு அடித்து பிடித்து எழுந்து தனது ஐபோனில் மணியை பார்த்தான் 8.20 எனக் காட்ட “ஷிட்” என்றவன் உடை மாற்றி தன் வீட்டிற்க்கு கிளம்ப ஆரம்பித்தான்.

இவன் கிளம்பும் அரவம் கேட்டு எழுந்த அந்த வெள்ளைக்கார பெண்ணோ தன் வெற்று உடம்பில் வெறும் பெட்ஷிட்டை மட்டும் சுற்றி ஒரு பக்கம் திரும்பி படுத்து கொண்டு தன் முன் அழகு மொத்தமும் தெரிய காட்டிக் கொண்டே ஆரோனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்.

“ஆரு பேபி வில் யூ மேரி மீ” என்றாள் அவனை பார்த்து வழிந்து கொண்டே.

அவளை நிமிர்ந்து பார்த்தவன் “நோ வே டார்லிங்” என்றவன் அவளுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை பரிசாக கொடுத்துவிட்டு வெளியே சென்றான்.

தனது ஆடி காரை எடுத்துக் கொண்டு தன் பங்களாவிற்க்கு கிளம்பினான்.

இது ஆரோனின் தினசரி வழக்கமே தினமும் காலை முதல் மாலை வரை பிஸ்னஸின் பின்னே ஓ‌டுபவன் இரவானால் தன் பீச் ஹவுஸில் தினமும் ஒரு பெண்ணுடன் இருப்பான்
ஆரோனிற்க்கு திருமணத்தில் பெரிதாக நாட்டம் இல்லை என்பதால் திருமணத்தை பற்றி யோசிக்காமல் இப்படியே மது, மாது,பிஸ்னஸ் என காலத்தை ஓட்டி கொண்டு இருக்கிறான்.

கார் நேரே வில்லியம் ஃபேமிலி என்று தங்க நிற எழுத்துகளில் பொறிக்கப்பட்ட பங்களாவின் உள்ளே நுழைந்தது கேட்டில் இருந்த ஆட்டோமேட்டிக் சென்சார் கேட்டினை திறக்க அதன் வழியே உள்ளே காரை ஓட்டிக்கொண்டு வந்தான் ஆரோன், போர்ட்டிக்கோவில் அவன் காரை நிறுத்தியவுடன் அவன் வீட்டு வேலைக்காரன் ஓடி வந்து கதவை திறக்க பங்களாவின் உள்ளே நுழைந்தான் ஆரோன்.

மூன்று அடுக்குகள் கொண்ட அந்த பங்களாவில் அனைத்து நவீன வசதிகளும் இருந்தன ஜிம், நீச்சல் குளம், லிஃப்ட், தனி தியேட்டர் என ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலை போல அவனுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளேயே இருந்தன அவனுக்கு சேவை செய்ய பத்து வேலைக்காரர்கள் என அனைத்தையும் தன் ஒரே மகனுக்காக பார்த்து பார்த்து செய்திருந்தார் வில்லியம்.

வரவேற்பறையில் நுழைந்தவன் அவனுக்காக காத்திருந்த வில்லியம்மை கண்டு கொள்ளாமல் மேலே செல்ல பார்த்தவனை தடுத்த வில்லியம் “ஆரோன் நில்லு” என்றார்.

“வாட் டாட்” என்றான்.
“தாய் இல்லா பிள்ளைன்னு உன்னை செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு” என்றார் வில்லியம்.

“கொஞ்சமாச்சும் புரியுற மாறி பேசுறிங்களா டாட்” என்றான்.

“நேரா விஷயத்துக்கே வரேன் எதுக்காக டெய்லி பீச் ஹவுஸ் போற?”

“ஏன் உங்களுக்கு தெரியாதா?”

“தெரிஞ்சதால தான் கேட்குறேன் நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ ஆரோன்” என்றார்.

“சாரி டாட் எனக்கு மேரேஜில் இன்ட்ரஸ்ட் இல்லை” என்றான் கோபத்துடன்.

“இது தான் உன் முடிவா”
“எஸ் லேட் ஆகிருச்சி வேற எதாச்சும் பேசனுமா” என்றான் புருவத்தை உயர்த்தி
“நத்திங்” என்று வில்லியம் கூறியவுடன் விறுவிறுவென தன் அறைக்கு சென்றுவிட்டான்.

அவனையே பார்த்துக் கொண்டு இருந்த வில்லியம் ‘இவன் இப்படியே இருந்தா சரி வராது' என மனதில் நினைத்தவர் என்ன செய்யலாம் யோசித்து கொண்டு இருந்தார்.

கடந்த ஆறு மாத காலமாக ஆரோனின் நடவடிக்கையை கவனித்து கொண்டு தான் இருக்கிறார் வில்லியம் இப்போது திருந்துவான் அப்போது திருந்துவான் என காத்திருந்தவருக்கு எமாற்றமே மிஞ்சியது பின் நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர் மறுநாள் காலை தனது நண்பர் ஸ்டீஃபனை போன் செய்து வரவழைத்தார்.

ஆரோன் வில்லியம்-ஸ்டேல்லா தம்பதியின் ஒரே மகன் வில்லியம் தமிழ்நாட்டின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவர்
வில்லியம்க்கு மனைவி ஸ்டேல்லா என்றாள் உயிர் யார் கண் பட்டதோ ஆரோன் சிறு வயதில் இருக்கும் போதே ஸ்டேல்லா ரத்த புற்றுநோயில் இறந்து விட அன்றிலிருந்து ஆரோனை தனி ஆளாக வளர்க்கிறார் தாயில்லா பிள்ளை என்று அதிக செல்லம் கொடுத்து வளர்த்ததில் இன்று இப்படி வந்து நிற்கிறான்,
தன் மகன் தன்னொழுக்கம் இன்றி இருப்பதை எந்த தகப்பனால் தான் தாங்கி கொள்ள முடியும்.

மறுநாள் காலை வழக்கம் போல் ஆரோன் வீட்டிற்க்கு வரும் போது அவனுக்காக அவனுடைய குடும்ப வழக்கறிஞர் ஸ்டீஃபன் மற்றும் அவன் தந்தை வில்லியம் ஆகியோர் காத்திருந்தனர்.

ஸ்டீஃபனை பார்த்த ஆரோன் “ஹாய் அங்கிள் எப்படி இருக்கிங்க என்ன விஷயம் காலையிலேயே வந்துருக்கிங்க” என்றான்.

“நல்லாருக்கேன் ஆரு உங்க அப்பா வர சொல்லி இருந்தாரு அதனால தான் வந்தேன்” என்றார்.

“ஆரோன் என்னோட எல்லா சொத்தையும் அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன்” என்றார் வில்லியம்.

அதை கேட்ட ஆரோன் “வாட்” என்றான் அதிர்ச்சியுடன்.

“எனக்கு வேற வழி தெரியல உனக்கு பணத்தோட அருமையும் தெரியல குடும்பத்தோட அருமையும் தெரியல நீ செலவு பண்ற ஒவ்வொரு ரூபாயும் என்னோட உழைப்பில் நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்சது”

“ஒஹோ அப்போ நான் இந்த பிஸ்னஸ்க்காக உழைக்கலன்னு சொல்றிங்களா” என்றான் கோவத்துடன்.

“நான் அப்படி சொல்ல வரல ஆரு உழைப்போட அருமை என்னன்னு உனக்கு தெரியல” என்றார் வில்லியம் விரக்தியுடன்.

“இப்போ நான் என்ன பண்ணனும்” என்றான் ஆரோன் புருவத்தை உயர்த்தி
“சிம்பிள் உனக்கு இந்த சொத்து எல்லாம் வேணும்னா சில கண்டிஷன்ஸ் இருக்கு” என்றார் வில்லியம்.

“என்ன கண்டிஷன்”
“ஒரு இரண்டு மாசம் உன்னோட அடையாளத்தை எல்லாம் விட்டுட்டு ஒரு சாதாரண மனுஷனா உன்னோட உழைப்பில் நீ சாப்பிடனும் இந்த இரண்டு மாசத்துல என்னோட பெயரையோ இல்லை உன்னோட அடையாளத்தையோ பயன்படுத்தினா எல்லா சொத்தும் அனாதை ஆசிரமத்துக்கு போகும்” என்றார்.

“இது தான் உங்க முடிவா?”
“எஸ்” என்றார் வில்லியம்.
“எனக்கு இதில் விருப்பம் இல்லை” என்றான் ஆரோன் திமிருடன்.
“பிறகு உன் விருப்பம்” என்ற வில்லியம்
“ஸ்டீஃபன் அந்த ஃபார்ம் எல்லாம் எடுங்க நான் சைன் பண்றேன்” என்றார்.

“வில்லியம் உனக்கு இருக்குறது ஒரே மகன் கொஞ்சம் யோசி டா” என்றார் தயங்கி கொண்டே ஸ்டீஃபன்.

“இதுக்கும் மேல யோசிக்க ஒன்னும் இல்லை” என்றார் விரக்தியுடன் வில்லியம்.

யோசைனையுடன் நின்று கொண்டு இருந்த ஆரோன் வில்லியம் கையெழுத்திட போகும் போது “சரி நான் உங்க கண்டிஷனுக்கு ஒத்துக்கிறேன் இரண்டு மாசத்துக்கு அப்புறம் பிராப்ர்ட்டி எல்லாம் எனக்கு வரும்ன்னு என்ன நிச்சயம்” என்றான்.

“அதுக்காக தான் ஸ்டீஃபனை வர சொல்லிருக்கேன் அக்ரிமென்ட் சைன் பண்ணிப்போம் பட் ஒன் கண்டிஷன் உன்னோட டிகிரியை கூட நீ இந்த இரண்டு மாசத்துக்கு யூஸ் பண்ணக்கூடாது இதுக்கு எல்லாம் ஓகேன்னா சைன் பண்ணு” என்றார் வில்லியம்.

ஒரு கணம் யோசித்தவன் ‘டூ மந்த்ஸ் தான மேனேஜ் பண்ணிக்கலாம்' என்று நினைத்தவன் அக்ரிமென்டில் கையெழுத்திட்டான்.

“சரி கிளம்பு” என்றார் வில்லியம்.
“இப்போவா” என்றான் அதிர்ச்சியுடன் ஆரோன்.
“எஸ் உன்னோட ஐபோன் வால்ட் எல்லாத்தையும் கொடு என்னோட சொந்த ஊர் உத்தமபாளையம் அங்க தான் நீ போக போற அங்கே உன்னோட தாத்தா பாட்டி பூர்வீக வீடு ஒன்னு இருக்கு அங்க தான் நீ தங்கனும்”

“வாட் வில்லேஜ்லயா” என்றான் கோவத்துடன்
“ஆமா இது எல்லாமே அக்ரிமென்டில் இருக்கு” என்றார் வில்லியம்.
“ஒகே டாட் அந்த ஊர் பெயர் என்ன உ…ம..” என இழுத்தான்
“உத்தமபாளையம்” என்ற வில்லியம் இந்த டிரஸ் எல்லாம் ரிமுவ் பண்ணிட்டு இதை போட்டுட்டு போ என அங்கிருந்த சாதாரண வேஷ்டி சட்டையை எடுத்து கொடுத்தார் தன் பாக்கெட்டில் இருந்த ஒரு ஐநூறு ரூபாய் தாளை எடுத்து அவன் கையில் கொடுத்தவர் அதனுடன் ஒரு டிராவல் பேக்கையும் கொடுத்தார் இதை தவிர நீ வேற எதையும் உன்னோட எடுத்து போக கூடாது” என்றார்.

“சரி” என்றவன் வெறுமையுடன் அவர் கொடுத்த உடையை எடுத்து கொண்டு தன் அறைக்கு சென்றான்.

தன் விலையுயர்ந்த உடைகளை கலைந்தவன் அவர் கொடுத்த உடையை அணிந்து தன்னை கண்ணாடியில் பார்த்து முகம் சுளித்து நின்று இருந்தான்.

பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வெளியே வந்தான் அவனை பார்த்த வில்லியம் “நீ கிளம்பு இன்னையில் இருந்து அறுபது நாள்க்கு அப்புறம் பார்ப்போம்” என்றார்.

வில்லியமை பார்த்துக் கொண்டே சென்றவன் அந்த வீட்டின் கேட்டை ஒரு முறை திரும்பி பார்த்தவன் டிராவல் பேக்கை எடுத்து கொண்டு கிளம்பினான்.

ஆரோன் சென்றவுடன் “ஏன் டா இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க எப்படி இருந்த பையன்” என்றார் கவலையுடன் ஸ்டீஃபன்.

“உனக்கு இருக்க கவலை எனக்கு இருக்காதுன்னு நினைக்குறியா ஸ்டீஃபன் என் பையன் புது மனுஷனா திரும்பி வரனும் அதுக்காக தான் இவ்வளோ கஷ்டப்பட்றேன்” என்றார் வில்லியம் சோர்ந்த முகத்துடன்.

வீட்டை விட்டு வெளியே வந்த ஆரோன் சுற்றி முற்றி பார்த்து கொண்டே நடந்து வந்தான் முதன் முதலாக நடை பழகும் ஒரு குழந்தையை போல சாலையில் நடக்கும் ஒவ்வொன்றும் அவனுக்கு புதிதாக தெரிந்தது.

சாலையில் மட்டும் அல்ல முதல் முறையாக ஆரோன் வாழ்க்கையிலும் தனித்து நடக்க போகிறான்.

பேருந்து நிலையத்திற்க்கு சென்றவன் உத்தமபாளையம் பேருந்து எங்கே நிற்கிறது என கேட்டு விசாரித்து சென்று அமர்ந்தவன் தன் முதல் பயணத்தை பேருந்தில் இருந்து தொடங்கினான்.
தொடரும்……
 

NNK-92

Moderator
அத்தியாயம் 3


பேருந்தில் அமர்ந்த ஆரோன் ‘இந்த இரண்டு மாசத்தை எப்படி சமாளிக்க போறோம்' என்று யோசித்துக் கொண்டே அமர்ந்து இருந்தான்.


“யோவ் எந்த ஊருக்கு போகனும்?” என்ற பேருந்து நடத்துனரின் குரல் கேட்டு சுய நினைவிற்கு வந்தவன் “ஹான் என்ன கேட்டிங்க?” என்றான் ஆரோன் தன் நினைவில் இருந்து மீண்டு.


“சரி தான் எனக்குன்னே வருவிங்களா டா எந்த ஊருக்கு போகனும்?”

அவர் திடீரென்று கேட்டவுடன் எந்த ஊர் என தெரியாமல் முழித்துக் கொண்டே யோசித்தவன் பின் நினைவு வந்து “உத்தமபாளையம்” என்றான்.


“அந்த ஊர்ல பஸ் நிக்காது டவுன்ல தான் நிக்கும்” என்றார்.

“அங்கே இருந்து உத்தமபாளையம் எப்படி போகனும்?”

“அங்க இருந்து ரெண்டு கிலோமீட்டர் மினி பஸ் ஒன்னு வரும் அதுல போகனும்” என்றவர் அவன் கையில் டிக்கெட்டை கொடுக்க அவனிடமிருந்த 500 ரூபாய் தாளை எடுத்து கொடுத்தான் ஆரோன்.


அதை வாங்கியவர் “சாவு கிராக்கி சில்லரையா கொடு 150 ரூபாய்க்கு 500 ரூபாய நீட்டுற” என்றார்‌ கோபத்துடன்.


அவர் தன்னை திட்டியதை கேட்டவன் கோபத்தில் எழுந்து நடத்துனரின் சட்டையை பிடித்து அவரை ஓங்கி அறைந்தான்.


அவன் அடித்ததில் அதிர்ச்சி அடைந்தவர் “யோவ் டிரைவர் பஸ்ஸ நிறுத்தியா” என நடத்துனர் குரல் கொடுக்க ஓடும் பேருந்தை நிறுத்தினார் டிரைவர் தன் சட்டையில் இருந்த ஆரோனின் கையை எடுத்தவர் அவனை அடிக்க கையை ஓங்க அவரின் கையை பிடித்து வளைத்தான் ஆரோன்,

அவரோ “ஆஆஆ” என்று வலியில் துடிக்க

தனது சீட்டில் இருந்து ஓடி வந்த டிரைவர் ஆரோனை தடுக்க பேருந்தில் இருந்த சில பயணிகளும் சேர்ந்து அவனை தடுத்து அமர வைத்தனர்.


ஒரு வழியாக இருவரையும் சமாதான படுத்தி அமர வைத்தனர் இருப்பினும் கோபம் குறையாமல் நடத்துனரை முறைத்துக் கொண்டே அமர்ந்து இருந்தான் ஆரோன்.


சிறு வயதில் இருந்தே ஆரோனை யாரும் ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசியது இல்லை

தன்னிடம் அடங்கி போகும் வேலையாட்களையும் தந்தையுமே பார்த்து பழகியவன்

தன்னை ஒருவன் திட்டிவிட்டான் என்றவுடன் கோபத்தில் கை நீட்டி அறைந்துவிட்டான்.


நடத்துனர் ஆரோனை முறைத்துக் கொண்டே அவனிடம் வாங்கிய 500 ரூபாயை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்து ‘உனக்கு இருக்கு டா' என மனதில் நினைத்துக் கொண்டான்.


அடுத்த மூன்று மணி நேரத்தில் “டவுன் பஸ்டான்ட் வந்துருச்சு எல்லாரும் இறங்குங்க” என நடத்துனர் குரல் கொடுக்க அனைவரும் இறங்க கடைசியாக இறங்கிய ஆரோன் “மீதி சில்லரை” என்றான் திமிராக

“கீழே இறங்கு தரேன்” என்றவர்

ஆரோன் கீழே இறங்கியவுடன் “ரைட் ரைட்” என குரல் கொடுத்து விசில் அடிக்க பேருந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தது

உடனே அதிர்ச்சியடைந்த ஆரோன் “இடியட் மை மணி” என கத்திக் கொண்டே பின்னே ஓட பேருந்தை நிறுத்தாமல் அந்த டிரைவர் மற்றும் நடத்துனரும் சென்றிருந்தனர்.


ஒரு கட்டத்திற்க்கு மேல் ஓட முடியாமல் மூச்சு வாங்க நின்றிருந்தான் ஆரோன்.


கோபத்தில் தன் காலை தரையில் உதைத்தவன் களைத்து நடந்து வந்து பேருந்து நிலையத்திற்க்கு சென்று அமர்ந்து கொண்டான்.


'என்ன ஊரு டா இது இந்த இரண்டு மாசம் மட்டும் முடியட்டும் டேய் தகப்பா உனக்கு இருக்கு' என மனதில் நினைத்துக் கொண்டான்.


என்ன நடந்தும் தன் ஆணவத்தினால் தான் இந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அவன் உணரவேயில்லை.


பேருந்து நிலையம் என எழுதப்பட்ட ஒரு சிறிய கூடாரம் அது ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது

ஆரோன் மட்டுமே அமர்ந்து இருந்தான் வெயில் வேறு பல்லை காட்டி கொண்டிருந்தது.


ஆரோன் வியர்வை வடிந்து களைத்து அமர்ந்து இருக்க அவன் அருகே வயதான பெரியவர் ஒருவர் வந்து அமர்ந்தார்.


“எந்த ஊர் போற ராசா” என பேச்சு கொடுத்தார் “உத்தமபாளையம்” என்றான் ஆரோன்

“அந்த ஊரு பஸ் போய்ட்டுச்சி பா நான் பக்கத்துல கிடாரிப்பட்டி நானும் நடந்து தான் போகனும்”

என்றார்.


அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆரோன் “அடுத்த பஸ் எத்தனை மணிக்கு”

என்றான்.


“அடுத்த பஸ் நாளைக்கு தான் அந்த ஊருக்கு ஒரே பஸ் தான் சரி நான் வாரேன்” என்று கூறி அவர் செல்ல எத்தனிக்க “நானும் உங்க கூட வரவா என்னை உத்தமபாளையத்தில் விட்ருங்க தாத்தா” என்றான்.


“சரி வா” என அவருடன் ஆரோனை அழைத்து சென்றார் அந்த பெரியவர்.


ஆரோன் வெயிலில் பாதி தூரம் கூட நடக்க முடியாமல் தவித்தான்

புதிதாக வெயிலில் நடக்க அவன் முகமெல்லாம் சிவக்க ஆரம்பித்தது வியர்வை வடிய தண்ணீர் தாகம் எடுத்தது “தாத்தா வாட்டர் தண்ணீ” என மூச்சு வாங்கி கொண்டே கேட்க தன்னிடமிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தார் அதை வாங்கி குடித்து மீண்டும் நடக்க ஆரம்பித்தான் ஒரு வழியாக இரண்டு மைல் தூரத்தை கடந்து உத்தமபாளையம் என்ற பெயர் பலகையை பார்த்த உடன் தான் அவனுக்கு உயிரே வந்தது.


“இது தான் உத்தமபாளையம் இந்த வழியா நேரா போ தம்பி” என்றார் அந்த பெரியவர்.


“ரொம்ப தேங்க்ஸ் தாத்தா” என்று அவரிடம் நன்றியை தெரிவித்து விட்டு ஊரின் எல்லையில் நுழைந்தான் ஆரோன்.


உத்தமபாளையம் என்ற பெயர் எழுதப்பட்ட பலகையுடன் செம்மண் தரையில் உள்ளே வழி சென்றது

அந்த பாதையில் நடக்க ஆரம்பித்தான் ஆரோன்

நடக்கும் பாதையை சுற்றி இருபுறமும் வயல்கள் இருந்தன அதிலிருந்து வந்த சில்லென்ற காற்று அவன் முகத்தில் பட்டு குளுமையை ஏற்படுத்தியது

வயலை தாண்டியவுடன்

சிறிய ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளும் தெரிய ஆரம்பித்தது

பெண்கள் குளத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்தனர் சாலைகளில் ஆங்காங்கே மாட்டு வண்டி, ஸ்கூட்டரில் மக்கள் சென்று கொண்டு இருந்தனர் அனைவரையும் பார்த்து கொண்டே சென்றான் ஆரோன்.


நகரத்தின் பரபரப்பில் வாழ்ந்தவனுக்கு இந்த கிராமத்தின் நிதானம் புதிதாக தான் தெரிந்தது.


அவன் சென்று கொண்டு இருக்கும் போது ஊரின் நடுவே ஒருவன் வெறும் வேஷ்டி மட்டும் அணிந்து மேல் சட்டையில்லாமல் கழுத்தில் சிறிய மேளம் ஒன்றை மாட்டி கொண்டு நின்றான் “வாத்தியார் ஐயா பொண்ணு கண்ணகி, மூக்கன் மவன் குட்டி மணி மேலையும் பிராது வந்துருக்கு ஊர் ஜனம் எல்லாம் அரச மரத்தடிக்கு வந்துருங்க சாமியோ” என கத்திவிட்டு சென்றான்.


அவன் அருகே சென்ற ஆரோன் “ஊர் தலைவர பார்க்கனும் அவரு எங்கே இருப்பாரு?” என்றான்

“அரசமரத்தடியில் இருப்பாரு போய் பாருங்க ஆமா நீங்க யாரு?” என்றான் அந்த மேளக்காரன்.


அவனை ஏளனமாக ஒரு பார்வை பார்த்த ஆரோன் எதுவும் கூறாமல் அந்த இடத்தை விட்டு சென்றான் ‘இவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனும்மா’ என்று மனதில் நினைத்து கொண்டு அரச மரத்தடிக்கு சென்றான்.


கூட்டத்தின் உள்ளே நுழைந்த ஆரோன் என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்


இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்து பழகிய அதே அரசமரத்தடி

அதன் நிழலில் இருக்கும் திண்ணையில் ஊர் பெரியவர் ஒருவர் வெள்ளை வேஷ்டி சட்டையில் முறுக்கு மீசையுடன் அமர்ந்து இருந்தார் ஊர் மக்கள் அனைவரும் அங்கே ஒன்று கூடி இருந்தனர்.


“ம்க்கும்” என்று தொண்டையை செருமி கொண்டு

“இன்னைக்கு என்ன பா பிராது?”

என்றார் அந்த பெரியவர்.


“ஐயா என் மாமரத்துல இருக்க மாங்காய திருடி சந்தையில வித்துட்டாங்கய்யா இந்த வாத்தியார் மகளும் குட்டிமணியும்” என்றான் பிராது கொடுத்தவன்.


“எங்க அந்த ரெண்டு பேர்” என்று பெரியவர் அழைக்க அவர் முன்னே வந்து நின்றனர் அந்த இருவரும்.


கண்ணகி பெரிதாக அளட்டிக் கொள்ளாமல் தன் தாவணியை சுற்றிக் கொண்டு இது எப்போதும் நடப்பது தானே என்று நின்றிருந்தாள்.


அவள் எதிரே இருந்த சுப்புரமணி அவளை பார்த்து முறைப்பதை பார்த்தவள் தலையை குனிந்து கொண்டாள்.


“எதுக்காக குப்புசாமி தோட்டத்தில் இருந்து மாங்காயை திருடி வித்திங்க?” அவர்களை பார்த்து கேள்வி கேட்க.


“பக்கத்து ஊர் சந்தைக்கு போலாம்ன்னு வித்தோம்” என்றான் குட்டிமணி.


அதை கேட்ட குட்டிமணி தந்தை மூக்கன் பிரம்பை எடுத்து கொண்டு அவனை அடிக்க வர அவன் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டான்.


“வாத்தியார் ஐயா அவன் சின்ன பையன் எல்லாம் உங்க பொண்ணு பண்ணுறது தான் மாங்காய்க்கு சேர வேண்டிய காசை பஞ்சாயத்துல கட்டிட்டு உங்க பொண்ண கூட்டி போங்க” என்றார் ஊர் பெரியவர்.


கண்ணகியை முறைத்துக் கொண்டே தனது பாக்கெட்டில் இருந்த 500 ரூபாயை பஞ்சாயத்தில் கட்டிய சுப்பிரமணி

தன் மகளின் காதை பிடித்து திருகி அடிக்க ஆரம்பிக்க அவளோ “அப்பா அடிக்காத பா வலிக்குது” என அழ ஆரம்பித்தாள் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து சுப்புரமணியை தடுத்து நிறுத்தினர்.


“வீட்டு பக்கம் வந்த தோளை உருச்சிடுவேன் கழுதை” என்றவரை பார்த்து அழுது கொண்டே நின்று இருந்தாள் கண்ணகி.


அவர் அவளை திட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நகரவும் தன் கண்ணை துடைத்துக் கொண்டு

“இங்கே என்ன டான்ஸ்ஸா ஆடுறேன் எல்லாரும் என்னையே பார்க்குறிங்க போய் வேலையை பாருங்கய்யா” என்றவள் தன் தாவணியை சுற்றி இடுப்பில் செருகிவிட்டு தன் முன்னிருந்த நீள கூந்தலை பின்னே தூக்கி போட்டு நடந்து சென்றாள்.


அவளை பார்த்த ஊர் மக்கள் “இவளுக்கு எல்லாம் பாவமே பார்க்க கூடாது” என்று தங்களுக்குள் திட்டிக் கொண்டே சென்றனர்.


கண்ணகியை பார்த்த ஆரோன் அவள் பின்னே அந்த நீள கூந்தல் ஆடுவதை பார்த்து கண்ணகியின் பின்னழகை பார்த்து கொண்டே நின்று இருந்தான் ‘பா செம்ம ஸ்டக்ச்சர்' என மனதில் நினைத்துக் கொண்டான்.


ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று கூறுவர் ஆரோனின் வாழ்வில் என்ன நடக்குமோ.


தொடரும்….
 

NNK-92

Moderator
அத்தியாயம் 4


கண்ணகியின் பின்னழகை பார்த்து ரசித்து கொண்டே நின்றிருந்தவனின் தோளில் யாரோ கை வைக்க “எவன்டா அது” என்று எரிச்சல் பட்டுக் கொண்டே திரும்பினான் ஆரோன்.


அவன் பின்னே மல்லு வேட்டி மைனர் போன்ற தோற்றத்தில் பஞ்சு முட்டாய் கலரில் சில்க் சட்டை அணிந்து அதற்க்கு தோதாக வேஷ்டி உடன் கழுத்தில் புலி பல் தங்க சங்கிலியுடன் கருமேக நிறத்தில் நின்றிருந்தான் ஒருவன்

அவனை பார்த்த ஆரோன் ‘யாரு டா இது ஜோக்கர் மாறி’ என்று மனதில் நினைத்தவன் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவன் தன் தோளில் வைத்திருந்த கையை தட்டி விட்டு “என்ன?” என்றான் புருவத்தை உயர்த்தி.


“ஊருக்கு புதுசா” என்றான் அவன் ஆரோனை ஏற இறங்க பார்த்து கொண்டே

“அதெல்லாம் உன் கிட்ட சொல்லனும்ன்னு அவசியம் இல்லை” என்றான் இவன் திமிராக

“அடிங்க என் அக்கா மகள சைட் அடிச்சிட்டு என் கிட்டையே திமிரா பேசுறியா” என்றவன் தன் கை முஷ்டியை மடக்கி ஆரோனின் முகத்தில் குத்த போனான்

அவன் கை தன் முகத்தில் படுவதற்க்கு முன்பே கையை பிடித்து வளைத்துவிட்டான் ஆரோன்.


இவன் தான் கண்ணகியின் தாய்மாமன் குருவம்மாளின் ஒரே தம்பி வீரவேலு திருமணம் என்ற ஒன்று நடந்தாள் அது தன் அக்கா மகளுடன் தான் என்று ஊரை சுற்றி வலம் வந்து கொண்டு இருக்கிறான் கண்ணகியோ இவனை பார்த்தாலே அலறி அடித்து ஓடிக் கொண்டிருக்கிறாள் இப்படி இருக்க வீராவுக்கு தன் முறைபெண்ணை யாராவது பார்த்துவிட்டாள் மூக்கின் மேல் கோபம் வந்துவிடும்.


ஆரோன் தன் கையை வளைத்தவுடன் வலியில் துடிக்க ஆரம்பித்தான் அவன் அலறல் சத்தம் கேட்டு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி விட இருவரையும் தடுத்து நிறுத்தினர்.


ஊர் தலைவரும் அந்த இடத்திற்க்கு வந்து சேர “என்ன வீரவேலு என்ன பிரச்சனை இங்கே” என்றவர் ஆரோனை பார்த்து “யாரு பா நீ பார்க்க இந்த ஊர்க்காரன் மாறி இல்லையே” என்றார் இருவருக்கும் நடுவில் வந்து நின்று கொண்டு ஊர் மக்கள் அவர்களை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.


“ஆமாங்க நான் வெளியூர் வில்லியம் சார் வீட்டுக்கு வந்திருக்கேன் இந்த ஊரில் எதாச்சும் வேலை பார்க்கலாம்ன்னு இந்த ஆளு தான் என்னை முதல்ல அடிக்க வந்தாரு அதனால தான் நான் திரும்பி அடிச்சேன்” என்றான் ஆரோன் அவனை பார்த்து முறைத்து கொண்டே

“யோவ் வீரவேலு நீ சும்மாவே இருக்க மாட்டியா எப்ப பாரு எதாச்சும் பிரச்சனை பண்ணிக்கிட்டே” என்றார் அந்த பெரியவர்.


“ஆமா எல்லாரும் என் கிட்டையே வாங்க நான் தான் கெட்டவன் அவன் என் அக்கா மகள பார்த்தான் அதான் நான் அவனை அடிக்க போனேன் அதுக்கு என்ன இப்போ” என்றான் திமிராக.


“ரோட்டுல ஒரு பொண்ணு போனா பார்க்க மாட்டோமா நானும் அதே மாறி தான் பார்த்தேன்” என்றான் இலகுவாக ஆரோன்

அவன் பேசியதை கேட்ட வீரவேல் திரும்பவும் அவனை அடிக்க போக ஊர் மக்கள் இருவர் சேர்ந்து தடுத்தனர்.


“வீரா அந்த புள்ள இன்னும் உன்னை கல்யாணம் கட்டல அது உன்னை கட்டிக்கிட்ட பிறகு வந்து சொல்லு எவனும் அந்த புள்ளைய பார்க்க கூடாதுன்னு இப்போ போய் சோளிய பாரு இதெல்லாம் ஒரு பஞ்சாய்த்துன்னு என்னைய வேற கூட்டிட்டு வாராய்ங்க போங்கய்யா எல்லாரும்” என்ற பெரியவர் கும்பலை கலைத்து விட்டார் வீரவேலையும் அந்த இடத்தை விட்டு அனுப்பி வைத்தார்.


வீரவேல் ஆரோனை பார்த்து ‘உனக்கு இருக்கு டா ஒரு நாள்’ என்று மனதில் நினைத்தவன் அவனை முறைத்து கொண்டே சென்றான்.


அனைவரும் சென்ற பிறகு அந்த பெரியவர் ஆரோனிடம் வந்து “தம்பி நீ வருவன்னு வில்லியம் என்கிட்ட சொல்லி இருந்தார்” என்றார்

“என்ன சொன்னாரு என்னை பத்தி” என்றான் ஆரோன் ஆர்வத்துடன் “நீ அவங்க வீட்டில் வேலை செஞ்சிட்டு இருந்தியாமே இப்போ இங்கே வேலைக்கு வந்திருக்கன்னு சொன்னாரு உனக்கு வேலை போட்டு கொடுக்க சொன்னாரு” என்றார்.


அதை கேட்ட ஆரோனின் முகம் காற்று இல்லாமல் சுருங்கி போன பலுனை போல ஆனது “அவ்வளோ தானா” என்றான் சோர்வாக முகத்தை வைத்து கொண்டு

“ஆமா தம்பி என் பெயர் அண்ணாமலை இந்த ஊர் தலைவர் அதோ தெரியுதே அந்த மச்சி வீடு அது தான் என் வீடு நாளைக்கு காலையில் வா வேலை எதாச்சும் போட்டு தரேன்,

இப்படியே நீ நேரே போய் இடது பக்கம் திரும்புனா வாத்தியார்

வீடுன்னு கேளு அதுக்கு எதிர் வீடு வில்லியம் சார் வீடு இந்தா சாவி” என்று அவன் கையில் கொடுக்க அதை வாங்கி கொண்டான்.


“தேங்க்ஸ் ஐயா நாளைக்கு வரேன்” என்றவனை தடுத்து

“தம்பி உன் பெயர் என்ன சொன்ன நீ என்ன படிச்சிருக்க?” என்றார் அவனை பார்த்து.


என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்தவன் “என் பெயர் சத்யா நான் பத்தாவது படிச்சிருக்கேன் ஐயா” என்றான் பொய்யாக சிரித்துக் கொண்டே “சரி தம்பி நாளைக்கு வா பார்த்துக்கலாம்” என்றவர் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டார்.
ஆரோன் தன் தாய் ஸ்டேல்லாவை போன்ற தோற்றம் உடையவன் நல்ல நிறம் அழகான வசீகரிக்கும் தோற்றத்தை உடையவன் அவன் வில்லியம் போன்று இல்லாததால் அங்கிருந்த யாருக்கும் சந்தேகம் வரவில்லை.


நேரே நடக்க ஆரம்பித்தவன் ஒரு வழியாக தன் பாட்டி வீட்டை தேடி கண்டுபிடித்து சென்றான் அந்த வீட்டை பார்த்தவன் பேய் அறைந்ததை போல அப்படியே நின்றுவிட்டான் பழைய சிறிய ஓட்டு வீடு சுற்றுச்சுவருடன் கூடிய சிறிய கேட் அதுவும் கேட்பார் அற்று திறந்து கிடந்தது.


கேட்டை திறந்து உள்ளே சென்றவன் சாவியை வைத்து கதவை திறந்தான் உள்ளே நுழைந்தவனுக்கு இருமல் வர ஆரம்பித்தது உள்ளே ஒரே தூசி ஒட்டடை பல நாள் பூட்டி கிடந்த வீடு வேறு ஒரு ஹால் அதையே தடுத்து சிறிய சமயலறை வைத்து கட்டி இருந்தனர் பின்னால் ஒரு வாசற்படி அதன் வழியே பின்னே சென்று பார்த்தாள் சிறிய கிணறு அதற்கு பக்கத்தில் தகர கதவு வைத்த குளியலறை மற்றும் கழிவறை தனித்தனியாக இருந்தது இவை அனைத்தும் தூசி படிந்து இருந்தது.


இதையெல்லாம் பார்த்தவனுக்கு தன் தந்தை மீது கோபம் தலைக்கேறியது ‘இப்போதே சென்று விடலாமா இதெல்லாம் தனக்கு தேவை தானா’ என்று நினைத்தவன் ‘இல்லை நமக்கு சொத்து வேண்டும்’ என்று நினைத்தவன்.


“ஐ கேன் மேனேஜ்” என்று தனக்கு தானே கூறிக் கொண்டவன்

தன் மூக்கில் கர்சீப் ஒன்றை கட்டி தான் அணிந்திருந்த வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு

அங்கிருந்த துடப்பத்தை எடுத்து சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.


தன் அரண்மனையில் ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்தவன்

தன் சட்டையில் கரை பட்டால் கூட அதற்க்கு ஆள் வைத்து துடைப்பவனுக்குள் இன்று இப்படி ஒரு மாற்றம்.


ஓரளவுக்கு வெளியே உள்ளே பின்வாசல் என அனைத்தையும் சுத்தம் செய்து முடிக்க மாலை ஆகியிருந்தது.


வீட்டை துடைக்கலாம் என்று நினைத்தான் அங்கிருந்த வாளியை எடுத்தான் அதுவும் உடைந்து போய் இருந்தது ‘என்ன செய்யலாம்’ என்று வெளியே வந்து யோசித்தவன் எதிரில் வீடு இருப்பதை பார்த்தான் ‘சரி இந்த வீட்டில் கேட்டு பார்ப்போம்’ என்று நினைத்தவன்.


கண்ணகியின் வீட்டு வாசலில் சென்று நின்றவன் “யாராச்சும் இருக்கிங்களா” என்று கதவை தட்டினான் அது தாழ் போடாமல் விட்டதால் அப்படியே திறந்து கொண்டது உள்ளே சென்றவன் “ஹலோ யாராச்சும் இருக்கிங்களா” என்று குரல் கொடுத்தான் உள்ளே யாரும் இல்லை தொலைக்காட்சியில் சன் மியூசிக்கில் வசிகாரா பாடல் மட்டும் ஓடிக் கொண்டு இருந்தது.


‘என்ன டா இது’ என்று மனதில் நினைத்தவன் ஹாலிற்க்கு வந்தான் அறையின் உள்ளே இருந்து ஏதோ குரல் கேட்க உள்ளே சென்று

அறை வாசலில் இருந்து எட்டி பார்த்தான்.


அங்கே கண்ணகி குளித்து முடித்து வந்து வெறும் பாவடையை மட்டும் தனது அங்கத்தை மறைக்க கட்டிக் கொண்டு கண்ணாடியின் முன்னே நின்று தன் கூந்தலை துடைத்துக் கொண்டு “எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்” என்று பாடிக் கொண்டே திரும்பியவள் தன்னை பார்த்துக் கொண்டே நின்றிருந்த ஆரோனை பார்த்தவள்.


“யாருடா நீ?” என்று கேட்டு கொண்டே வேகமாக வந்தவள் கால் ஈரமாக இருந்ததால் வழுக்கி அவன் மேலே விழுந்து விட்டாள் அவள் திடீரென தன் மேல் விழவும் ஆரோனால் நிற்க முடியாமல் இருவருமாக சேர்ந்து தரையில் விழுந்தனர்.


ஆரோன் கீழே விழுந்து கிடக்க அவன் மேலே கண்ணகி இலவம் பஞ்சு மெத்தை போல் விழுந்து கிடந்தாள் அவளை பார்த்தவன் கண் இமைக்காமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான் எந்த வித ஒப்பனையும் இன்றி வெறும் மஞ்சள் மட்டும் பூசி மாநிறத்தில் இடது கண்ணின் கீழ் மச்சத்துடன் தன் நீள கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்ட சொட்ட அதில் ஒன்று இரண்டு முடிகற்றைகள் ஆரோனின் முகத்தில் பட்டு அவனுக்கு முத்தமிட்டு கொண்டு இருந்தது.


ஆரோன் தன் வாழ்வில் இதுவரை பார்த்த பெண்கள் அனைவரும் முகத்தில் ஒன்றரை டன் முகப்பூச்சுடன் உதட்டில் சாயத்தை பூசிக் கொண்டு இவன் வா என கூப்பிடும் முன்னே கட்டிலில் வந்து விழுவார்கள்.


இவை அனைத்திலும் இருந்தும் கண்ணகி மட்டும் அவனுக்கு தனித்து மற்றும் வேறுபட்டு தெரிந்தாள்

எத்தனையோ பெண்களை தன் வாழ்வில் சாதரணமாக கடந்தவன் இவள் ஒருத்தியிடம் மட்டும் ஏனோ தடுமாறி கொண்டு இருந்தான் அவள் வெட்கத்துடன் தவிப்பதை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் ரசனைக்காரன்.


அவளை பார்த்து கொண்டே இருந்தவன் அவள் தலையில் இருந்து வழிந்த ஈரத்துளி அவள் கழுத்தில் வழிந்தோடுவதை பார்த்தவன்

வழிந்து கொண்டே சென்று அவள் மார்பில் மறைந்தது அது வழிந்த இடத்தில் மச்சமா மருவா என்ற தெரியாத ஏதோ ஒன்று இருக்க “என்ன இது மச்சமா?” என்று அந்த இடத்தை தொட்டு கேட்க அவன் தொட்டதில் சுய நினைவு வந்து அவனிடமிருந்து துள்ளி எழுந்தாள் கண்ணகி.


அவள் எழும் போது பாவடை அவிழ பார்க்க தன் இரு கை கொண்டு பிடித்து கொண்டாள்

திடீரென யாரோ கதவை திறந்து கொண்டு உள்ளே வர யார் என்று அதிர்ச்சியுடன் இருவரும் திரும்பி பார்க்க அங்கே வீரவேலு கண்களில் கோபம் கொப்பளிக்க நின்றிருந்தான்.


தொடரும்….
 
Status
Not open for further replies.
Top