எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

செந்தணலாய் நீ வெண்பனியாய் நான் - டீஸர்

நான் உங்கள் NNK 93. கால் மீ சக்கர கட்டி😁

செந்தணலாய் நீ வெண்பனியாய் நான்!
MEME-20231226-103158.jpg
உன்னால் ஒரு சதவீதம் கூட என் காதலை பெற முடியாது என சுட்டெரிப்பவனிடம் , உனக்கும் சேர்த்து நானே உன்னை காதலிக்கிறேன் என உருகுபவளின் காதல் கதை.

வண்ணங்கள் வேறென தோன்றிடும்
போதிலும் எண்ணங்கள் சேருமா அன்பே
வண்ணத்து பூச்சியின் சிறகுகள் மோதவே
இதழ்களும் உள்ளதே இங்கே ஆயினும்
காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே!💔
 
Last edited:
டீஸர்

செந்தணலாய் நீ வெண்பனியாய் நான்!
Pink Floral Feminime Notes Diary (1).png

கதையின் நாயகி நயனிக்கா தென்றலின் டைரி..

நேரம் : 12.00 AM

தேதி : 15.07.2017

காதல்! உச்சரிக்கும் பொழுதே ஒரு இனம் புரியா உணர்வு அல்லவா? மனிதன் மட்டுமல்ல ஐந்தறிவு விலங்கு கூட காதல் ஒன்றை உணராமல் இருந்ததில்லை . காதல் மூச்சுக் காற்றை போன்றவை. புவியில் காற்று ஒன்று இல்லை என்றால் மனிதர்கள் இல்லை . எனக்கும் அவன் மூச்சுக்காற்று போன்றவன். அவன் இல்லையேல் இவ்வுலகில் நானும் இல்லை .



அந்த அளவிற்கு அவன் மேல் காதலா ? ஆமாம் என அடக்கிட முடியாது என் காதலை. அவனை நினைத்தாலே என் இதயத்தின் படபடப்பை உப்ஃப் வார்த்தையால் கூட விவரிக்க முடியாது . மொத்த பட்டாம்பூச்சிகளும் என் வயிற்றுக்குள் பறப்பது போல் உணர்வதை என்னவென்று சொல்ல.



இப்போதும் எனக்கு நினைவு இருக்கிறது அவனை கண்ட முதல் நாள். அவனின் அந்த சிரித்த முகம் . காந்த கண்கள்னு வர்ணிக்கும் அளவிற்கு நான் ஒன்றும் கவிஞர் அல்ல . ஆனால் அவனை நினைத்தாலே மனம் என்னென்னவோ யோசிக்கிறது. அவன் பெயர் தெரியாது . அவன் யாருனு தெரியாது . இன்னையோட பத்து வருஷம் . என்னோட ஒரே ஆசை அவன் யாரையும் காதலிச்சிட கூடாது. சீக்கிரம் என் சக்கர கட்டியை தேடி கண்டு பிடிப்பேன் .



Please don't be in love with someone else

Please don't have somebody waiting on you ☹



என்பதோடு அந்த டைரி முடிய மூச்சை இழுத்து விட்ட நயனி அதை பத்திரமாய் தன் கபோர்ட்டில் வைத்து மூடினாள். அவளின் சக்கரகட்டியை அவள் கண்டு விடுவாளா ?

*-*-*-*-*

நாள் : 01.01.2023

நேரம் : இரவு 11.55

ஆள் அரவம் இல்லாத நெடுஞ்சாலையில் யாருக்கோ காத்திருந்தான் அவன். கையும் கால்களும் அவன் பேச்சை கேட்கவில்லை. இரவின் குளிரில் கைகளை உரசி காரில் சாய்ந்து நின்றவன் தன் போன் சினுங்கவே திரையை பார்த்தான். நண்பன் ஹர்ஷன்.



“ சொல்லு ஹர்ஷா “

“ ஆமா அவளுக்காக தான் வெயிட் பண்ணுறேன் “

“ கண்டிப்பா இன்னைக்கு அவகிட்ட உண்மையை சொல்லிருவேன்”

“ னோ வே ஹர்ஷா . ஓகே நான் அப்றம் பேசுறேன் பை “ பட்டென அழைப்பை துண்டிக்க டாக்ஸியில் வந்து இறங்கினாள் அவள்.



கையில் ஒரு லக்கேஜ்ஜும் அவள் வைத்திருக்க , அவளை பார்த்த ஆர்வத்தில் நெருங்கியவன் அவள் கையில் இருக்கும் லக்கேஜ்ஜை கேள்வியாய் பார்த்தான் அவன்.



அவன் பார்வையிலே அர்த்தம் புரிந்தவள் “ சாரி , உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் . ரொம்ப நாளா நான் ஆசைபட்ட மாதிரி லண்டன்ல எனக்கு பிடிச்ச வேலை கிடைச்சிருக்கு . கண்டிப்பா நீ இல்லாம சாத்தியம் இல்ல. சடனா என்னை வர சொல்லிட்டாங்க . அதான் உனக்கு சொல்ல முடியல . ஆனா உன் பெர்த் டே அப்போ நான் உன் பக்கதுல தான் இருப்பேன் “ அவள் கண்கள் மின்ன பேசிட தான் பேச வந்ததையே முழுங்கி விட்டான் அவன்.



“ ஐம் ரியலி ஹாப்பி ஃபார் யு விரோ . நானே உன்ன ஏர்போர்ட்ல டிராப் பண்ணுறேன் “ வலியை மறைத்து சொல்ல அவளும் புன்னகையோடு அவன் உடன் கிளம்பினாள் .



செக்கிங் எல்லாம் முடிந்து அவளுக்கான விமான நேரம் அறிவிக்க தவிப்பாய் அவளை பார்த்தவனை அவளும் அணைத்து கொண்டு விலகியவள் “ ஐ கோன்ன மிஸ் யு தேவ் .. சீ யு சூன் “ என்பவளை புன்னகையோடு வழி அனுப்பி வைத்தவன்



“ ஐம் வெயிட்டிங் ஃபார் யு விரோ “ என்பவனின் பார்வையில் இருந்து அவள் மறைந்திட , கனத்த இதயத்தோடு வீட்டிற்கு வந்தவனுக்கு பேரதிர்ச்சியானது தொலைகாட்சியில் ஓடிய செய்தி.



சற்று முன்பு அவனின் விரோ சென்ற விமானம் இஞ்ஜின் பழுதடைந்து விபத்துக்கு உள்ளாகியதும் பயணம் செய்த அனைவருமே இறந்து விட்டதையும்.


உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளவும் தங்கமே
 
Last edited:
Top