எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்தமற்ற ஆதரமே!- கதைத்திரி

Status
Not open for further replies.

NNK-04

Moderator
காதலுக்கும் போருக்கும் இடையிலான போரில் வெற்றிப் பெறப் போகும் அந்தமற்ற காதலின் கதை...
 
Last edited:

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-01

சுற்றிலும் யுத்தம் நடந்ததர்கான அடையாளமாய், குருதிகறை படிந்து, ஆங்காங்கே பூமி பிளந்து, மழை பொழிய மனமற்றபோதும் வானம் கருத்து காட்சியளித்தது.

எங்கும் சோக ஓலங்களின் ஒலிகள் மட்டுமே பிரதிபலிக்க, அனைத்தையும் கண்களில் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர், அவ்விருவர்.

வழிமாறிப் போன தன் செயலில் இப்பேற்பட்ட பலி நடந்துவிட்டதை சற்றும் ஜீரணிக்க இயலவில்லை அந்த ஒருவரால்!

தான் இத்தனை பெரிய பேரழிவுக்கு காரணியாகுமளவு வசியப்படுத்தப்பட்டதை சற்றும் ஏற்க மனமின்றி கண்களில் கண்ணீரோடு நின்றிருந்தார்.

அவர் தோளில் கைபோட்ட மற்றயவர், "நீ அழறது ஒரு அண்ணனா பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தாலும் உனக்கு ஆறுதல் சொல்ல துளியும் எனக்கு மனசில்லை. சொல்ல வருத்தமா இருந்தாலும் இந்த பேரழிவுக்கு நீ ஒருத்தன் தான் காரணம்" என்று ஜோயல் கூற, கண்ணீரோட மண்டியிட்டு அமர்ந்து அவர் கால்களை பற்றிக்கொண்டு கதறினார் காஸ்மோ.

அந்த மொத்த கூட்டமும் கதறியழும் காஸ்மோவை கண்களின் கணல் வெறியோட பார்க்க, அவரால் மன்னிப்பை கூட கேட்க இயலவில்லை.

தன்னால் நடந்த இழப்பினை மன்னிப்பால் ஈடுகட்ட இயலாது என்று தெரிந்தும் அதை கேட்க இயலுமா என்ன?

சுற்றி சிதைந்து கிடந்த பூமியையும் சிதைவுகளோடு சிதைவுகளாக கிடந்த உடல்களையும் கண்டவருக்கு, தத்தமது இணையை, உயிரை பறிகொடுத்து கதறித் துடிக்கும் உயிர்களுக்கு ஆறுதல் கூட கூற இயலவில்லை.

"இ..இதுக்கு நீங்க எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்குறேன்" என்று காஸ்மோ கூற, "தண்டனையா? என்ன தண்டனை கொடுத்து என்ன செய்ய முடியும்? போன உயிரை உங்களால மீட்டு கொடுக்க முடியுமா?" என்று கர்ஜித்தாள், சைரா.

அவளை வேதனையோடு பார்த்த காஸ்மோ, "என்னால எதையும் செய்ய முடியாது சைரா. நான் செஞ்சது தப்பு தான். அதை மாற்றியமைக்க கூட முடியாத நிலையில இருக்கேன்" என்று கூறி தலைகுனிய, "அவ்வளவு கெஞ்சினானே அவன்.. ஒரு வார்த்தை எங்க பேச்சை நீங்க கேட்டிருந்தா இப்படியொரு பேரழிவு நிகழ்ந்திருக்குமா? இத்தனை மாவீரர்களையும், வீராங்கனைகளையும், அப்பாவி ஜீவன்களையும் இழந்திருப்போமா? சொல்புத்தியும் இல்லாம சுயபுத்தியும் இல்லாம நீங்க செஞ்ச ஒரு செயல், இன்னிக்கு எப்படியொரு சர்வநாசத்தை ஏற்படுத்திருக்கு பாருங்க" என்று கர்ஜித்தாள், லூமி.

அவள் வார்த்தைகளின் தீ, அவரை சுட்டதில் துடிதுடித்து போனவர், "லார்ட் ஜோயல்.. என்னை கொன்னுடுங்க. இந்த வேதனையை என்னால தாங்க முடியலை. நா.. நான் இப்பேர்பட்ட பேரழிவுக்கு காரணமானவன்.. இதை பார்க்க பார்க்க என் உடல் எரியுது" என்று கதறினார்.

"அவ்வளவு சீக்கிரம் உங்களை சாகவிட முடியாது. இத்தனை உயிர்களை துடிக்கவிட்ட நீங்க எப்படி அவ்வளவு சீக்கிரம் இறந்து போகலாம்?" என்று ஈடன் கர்ஜீக்க, தன் காதுகளை பொத்திக் கொண்டு காஸ்மோ மேலும் கதறி அழுதார். தனது பேராசை நடத்திய போராட்டத்தின் பேரழிவு அவர் கண்முன் வந்து காட்சியாக, அங்கு சிதைந்திருந்த உயிர்களிலிருந்து, சாம்பல் நிற கங்குகள் எழுந்தன.

யாவரும் அந்த சத்தத்தில் திரும்பிப் பார்க்க, அந்த கங்குகள் ஒன்று சேர்ந்து இறந்து போனோரின் ஆன்மாவாக மாற, அந்த ஆன்மாக்களின் முகங்களில் அத்தனை சோகம் தாண்டவமாடியது. அத்தனை ஆன்மாக்களும் காஸ்மோவை பார்க்க, அதில் மனதால் மறித்துப் போனவர், "ஆ…" என்று கத்தினார்.

அதிகப்படியான வலியால் அவரது சக்திகள் வடிந்து போக, அதில் மேலும் வலியெடுத்து முற்றிலும் சோர்ந்து மயங்கினார். அனைவரும் சுற்றி இருந்த ஆன்மாக்களை நோக்க, யாவரது மனமும் சில காலங்களுக்கு முன்னே சென்றது…

*********

அழகியதோர் காலைப் பொழுதது! குயில்கள் தன் இனிமையான குரலில் கூவ, கிளிகளின் கீச்சிடும் சத்தமும் அதற்கு இணையாக கேட்டது. ஸ்லீவ்லெஸ் டீ-ஷர்டும், ஸ்போர்ட்ஸ் பேன்டும் அணிந்துக் கொண்டு காதுகளில் மாட்டிய ஹெட்ஃபோனின் வழி கேட்ட பாடலை முனுமுனுத்தபடியே தனது ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டிருந்தாள், அவள்.

தனது பயிற்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்பியவள், இரண்டு பிரட்டை டோஸ்ட் செய்துக் கொண்டு, உடன் ஒரு பெரிய டம்பிளரில் 'ஹெல்த் மிக்ஸ்' பொடி கலந்த பாலையும் எடுத்து வைத்துவிட்டு குளித்து வந்து உண்டாள். உணவை முடித்துக் கொண்டு தயாராகியவள், தனது புத்தகங்களை எடுத்துக் கொண்டு அந்த அழகிய ஆரஞ்சு வர்ண மிதிவண்டியில் புறப்பட, அவளது செல்லப்பிரணியான 'குவாட்செல்' என்று அழைக்கப்படும் மத்திய அமேரிக்க இனத்தை சேர்ந்த பச்சை நிறப் பறவை 'கிரீச்' என்று கத்தியது.

அதில் வண்டியை சட்டென நிறுத்திவிட்டு திரும்பியவள், தன் பச்சை நிற விழிகள் பளபளக்க அதைக் கண்டு "ஸ்ஸ்.. சாரி ஆர்காட்" என்க, தன் சிறகுகளை அடித்து பறந்து வந்த 'ஆர்காடியா' என்று அவளால் பெயர் சூட்டப்பட்ட பறவை அவள் தோளில் அமர்ந்துகொண்டது.

அதை தடவிக் கொடுத்தவள், "சாரி ஆர்காட். இன்னிக்கு அந்த ஹேன்சம்ம லைப்ரேரில பார்க்க முடியும் இல்லையா? அதான் எக்ஸைட்மென்ட்ல உன்னை மறந்துட்டேன்" என்று உண்மையை ஒப்புக்கொள்ள, தன் முடிகளை சிலிர்த்துக் கொண்டு தன் கோபத்தினை வெளிப்படுத்தியது.

அதில் சிரித்துக் கொண்டவள் தன் மிதிவண்டியை அழுத்தி மதித்துக் கொண்டு புறப்பட, சில நிமிடங்களில் அந்த பெரிய பல்கலைக்கழகத்தினை அடைந்தாள். தன் மிதிவண்டியை நிறுத்திவிட்டு பையை ஒருபக்கமாக மாட்டிக் கொண்டு லைப்ரேரி நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தவளை நூலக வாசலிலேயே நிறுத்திவிட்டார் நூலக காவலாளி.

அந்த முதிய காவளாலி, "ஏம்மா.. எத்தனை தடவ சொல்றது உனக்கு? இந்த பறவையை வெளிய விட்டுட்டு உள்ள போம்மா" என்று கூற, "என் ஆர்காட்ட எப்பப்பாரு எதாவது சொல்லிகிட்டே இருக்கீங்க ஓல்ட் மேன்" என்றபடி அதை தடவிக் கொடுத்து பறக்கவிட்டாள். பின் தடதடவென படிகள் ஏறி மேலே சென்றவளது எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காத வண்ணம் அங்கு அமர்ந்து ஓர் ஆங்கில காதல் கதையை படித்துக் கொண்டிருந்தான், அவன்.

அவனை பார்ப்பதற்கு வசதியாகவும் சற்று தொலைவாகவும் இடம் பிடித்தவள், ஒரு புத்தகத்தினை விரித்து வைத்துக் கொண்டு அவனை சைட்டடிக்க, பொழுது போனதே தெரியவில்லை! சில நிமிடங்களில் அவள் முன் ஓர் உருவம் வந்து நிற்க, 'ப்ச் யாரு இந்த டிஸ்டபென்ஸ்' என்றபடி நிமிர்ந்தவள் திடுக்கிட்டு போனாள்‌‌.

"ச..சைரா" என்று அவள் தடுமாற, "என்ன பண்ற அடாமினா?" என்று சைரா பல்லைக் கடித்தாள்.
அதில் முதலில் பயந்தாலும், அவளை மெல்ல விலக்கிவிட்டு அவனை ஓர் பார்வை பார்த்துக் கொண்டவள், "வா போகலாம்" என்றபடி அவளை இழுத்துக் கொண்டு கீழே வர, "ஏன் அடாமினா இப்படி பண்ற?" என்று சைரா கர்ஜித்தாள்.

"ஏ கேர்ள்.. கால் மீ ஃப்ளோரா" என்று ஃப்ளோரா அடாமினா கூற, "அது நீயா வச்சுகிட்ட பெயர். லார்ட் உனக்கு வச்சது அடாமினா தானே" என்று குறைந்த சத்தத்தில் சைரா கூறினாள்."சரி இருந்துட்டு போகட்டும். இப்ப எதுக்கு இவ்வளவு கோபம் உனக்கு?” என ஃப்ளோரா அடாமினா வினவ, "நீ செஞ்சது உனக்கு புரியுதா இல்லையா?" என்று சைரா வினவினாள்.

"ஓ கம்மான் சைரா. ஐம் ஜஸ்ட் சைட்டிங்" என்று ஃப்ளோரா அடாமினா கூற "விளையாட்டுத்தனமா பண்ணாத அடாமினா. உன் பார்வைய சமீப காலமா அவர் நோட் பண்ணிட்டு இருக்கார். தேவையில்லாம ஒரு மனிதரோட மனசுல சலனத்தை ஏற்படுத்திடாத. நம்ம மிஞ்சிபோன ஒரு மூனு நாலு வருஷம் தான் இங்க இருப்போம்" என்று சைரா அறிவுறுத்தினாள்.

"அவர் என்னை நிமிர்ந்து கூட பார்த்தது கிடையாது சைரா. நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காத" என்றபடி அவள் தோழியுடன் நடக்க, "எக்ஸ்கியூஸ்மி லேடீஸ். ப்ளீஸ் மூவ்" என்றான், ஜான் ஃபேர்லே.


3fca1b721e17938ebfc2c25a6dae9f1e.jpg

அதில் இருவரும் சட்டென விலக, இருவரையும் தாண்டிச் சென்றவனை ஆர்வம் ததும்பும் விழிகளுடன் அடாமினா நோக்கினாள்.

அதில் அருகில் இருந்தவளது கருவிழிகள் தன் இயல்பு நிறமான சிவப்பிற்கு மாற, அவளை திரும்பிப் பார்த்த அடாமினா, "சைரா சில்.. உன் கருவிழி சிகப்பா மாறுது" என்று பதறினாள். தன் கண்களை மூடித்திறந்து தன்னை சமன் செய்த சைரா, "காலைல இவர பார்க்க வரும் ஆர்வத்துல ஆர்காட்ட கூட மறந்துட்டு போற. உன்னோட ஆவலான பார்வை வேற எந்த எண்ணத்தையும் உன் மனசுல பதியவிடாம பார்த்துக்கோ" என்று கூறி விருட்டென்று சென்றாள்.

செல்லும் தோழியை வேதனையுடன் பார்த்த அடாமினா, 'நீ பயப்படுறது ஏற்கனவே நடந்துடுச்சு சைரா. நான் என் மனசை அவர்கிட்ட தொலைச்சுட்டேன். அவர் எனக்கு கிடையாதுன்னு எனக்கு புரியுது. நம்ம விதிமுறைகளை மீறி என்னால அவரை அடையவே முடியாது. ஆனா இங்க இருக்கப் போகும் கொஞ்ச நாட்கள் அவரை கண்ணார பார்த்துட்டு போயிடலாம்னு ஆசைப்படுறேன்' என்று மனதோடு கூறிக் கொண்டு தன் கழுத்தில் அணிந்திருக்கும் செயின் டாலரை வருடிக் கொண்டு, "சாரி லார்ட் ஜோயல்" என்று முனுமுனுத்துக் கொண்டாள்.

அவள் ஃப்ளோரா அடாமினா! 'பாரடைஸ்' உலகத்தின் 'லேன்ட் ஃபேரீஸ்' வம்சத்தினை சேர்ந்தவள்.


6d3e6d1c9c565fbb222a6764fdc3d8a2.jpg

அவளுடன் இருக்கும் அவளது உற்ற தோழியான சைரா 'பாரடைஸ்' உலகத்தின் 'ஃபயர் ஃபேரீஸ்' வம்சத்தினை சேர்ந்தவள்.

978286b071daba49f64e58695d1b2782.jpg


'லேன்ட் ஃபேரீஸ்' இனத்தை சேர்ந்தோரின் பிராணியாக இருப்பதே, ரேகல் டிராகன்ஸ். தங்கள் உலகை விட்டு வெளியேரும்போது 'குவாட்சல்' இணப்பறவையாக உருமாறிவிடும்.


InShot_20240101_084102096.jpg

'ஃபயர் ஃபேரீஸ்' இனத்தை சேர்ந்தோரின் பிராணியாக இருப்பது, 'ஸ்மாக்' இன டிராகன்கள். இவ்வகை டிராகன்கள் தங்கள் உலகை விட்டு வெளியேரும்போது, 'கார்டினாலிடே' என்ற பறவைகளாக உருமாறிவிடும்.

InShot_20240101_084411011.jpg


தன்னை கடந்து சென்றவனை மனதோடு எண்ணி மருகிய அடாமினா, ஒருபெருமூச்சை இழுத்து விட்டுக்கொண்டு செல்ல, அங்கு அடாமினா மீது தனது அபார காதலை சுமந்துகொண்டு துள்ளலுடன் அவன் தன் நேரத்தினை கடத்தினான்.

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவிடவும் தோழர்களே🤩

 

Attachments

 • 7a9a76ef4c6239f42dd43d976ecc2f8d.jpg
  7a9a76ef4c6239f42dd43d976ecc2f8d.jpg
  125.3 KB · Views: 1
 • InShot_20240101_084411011.jpg
  InShot_20240101_084411011.jpg
  387 KB · Views: 1
 • InShot_20240101_084102096.jpg
  InShot_20240101_084102096.jpg
  561.1 KB · Views: 0
 • 978286b071daba49f64e58695d1b2782.jpg
  978286b071daba49f64e58695d1b2782.jpg
  152.8 KB · Views: 0
 • 6d3e6d1c9c565fbb222a6764fdc3d8a2.jpg
  6d3e6d1c9c565fbb222a6764fdc3d8a2.jpg
  131.7 KB · Views: 0
Last edited:

NNK-61

Moderator
அந்தமற்ற ஆதரமே-01

சுற்றிலும் யுத்தம் நடந்ததர்கான அடையாளமாய், குருதிகறை படிந்து, ஆங்காங்கே பூமி பிளந்து, மழை பொழிய மனமற்றபோதும் வானம் கருத்து காட்சியளித்தது.

எங்கும் சோக ஓலங்களின் ஒலிகள் மட்டுமே பிரதிபலிக்க, அனைத்தையும் கண்களில் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர், அவ்விருவர்.

வழிமாறிப் போன தன் செயலில் இப்பேற்பட்ட பலி நடந்துவிட்டதை சற்றும் ஜீரணிக்க இயலவில்லை அந்த ஒருவரால்!

தான் இத்தனை பெரிய பேரழிவுக்கு காரணியாகுமளவு வசியப்படுத்தப்பட்டதை சற்றும் ஏற்க மனமின்றி கண்களில் கண்ணீரோடு நின்றிருந்தார்.

அவர் தோளில் கைபோட்ட மற்றயவர், "நீ அழறது ஒரு அண்ணனா பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தாலும் உனக்கு ஆறுதல் சொல்ல துளியும் எனக்கு மனசில்லை. சொல்ல வருத்தமா இருந்தாலும் இந்த பேரழிவுக்கு நீ ஒருத்தன் தான் காரணம்" என்று ஜோயல் கூற, கண்ணீரோட மண்டியிட்டு அமர்ந்து அவர் கால்களை பற்றிக்கொண்டு கதறினார் காஸ்மோ.

அந்த மொத்த கூட்டமும் கதறியழும் காஸ்மோவை கண்களின் கணல் வெறியோட பார்க்க, அவரால் மன்னிப்பை கூட கேட்க இயலவில்லை.

தன்னால் நடந்த இழப்பினை மன்னிப்பால் ஈடுகட்ட இயலாது என்று தெரிந்தும் அதை கேட்க இயலுமா என்ன?

சுற்றி சிதைந்து கிடந்த பூமியையும் சிதைவுகளோடு சிதைவுகளாக கிடந்த உடல்களையும் கண்டவருக்கு, தத்தமது இணையை, உயிரை பறிகொடுத்து கதறித் துடிக்கும் உயிர்களுக்கு ஆறுதல் கூட கூற இயலவில்லை.

"இ..இதுக்கு நீங்க எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்குறேன்" என்று காஸ்மோ கூற, "தண்டனையா? என்ன தண்டனை கொடுத்து என்ன செய்ய முடியும்? போன உயிரை உங்களால மீட்டு கொடுக்க முடியுமா?" என்று கர்ஜித்தாள், சைரா.

அவளை வேதனையோடு பார்த்த காஸ்மோ, "என்னால எதையும் செய்ய முடியாது சைரா. நான் செஞ்சது தப்பு தான். அதை மாற்றியமைக்க கூட முடியாத நிலையில இருக்கேன்" என்று கூறி தலைகுனிய, "அவ்வளவு கெஞ்சினானே அவன்.. ஒரு வார்த்தை எங்க பேச்சை நீங்க கேட்டிருந்தா இப்படியொரு பேரழிவு நிகழ்ந்திருக்குமா? இத்தனை மாவீரர்களையும், வீராங்கனைகளையும், அப்பாவி ஜீவன்களையும் இழந்திருப்போமா? சொல்புத்தியும் இல்லாம சுயபுத்தியும் இல்லாம நீங்க செஞ்ச ஒரு செயல், இன்னிக்கு எப்படியொரு சர்வநாசத்தை ஏற்படுத்திருக்கு பாருங்க" என்று கர்ஜித்தாள், லூமி.

அவள் வார்த்தைகளின் தீ, அவரை சுட்டதில் துடிதுடித்து போனவர், "லார்ட் ஜோயல்.. என்னை கொன்னுடுங்க. இந்த வேதனையை என்னால தாங்க முடியலை. நா.. நான் இப்பேர்பட்ட பேரழிவுக்கு காரணமானவன்.. இதை பார்க்க பார்க்க என் உடல் எரியுது" என்று கதறினார்.

"அவ்வளவு சீக்கிரம் உங்களை சாகவிட முடியாது. இத்தனை உயிர்களை துடிக்கவிட்ட நீங்க எப்படி அவ்வளவு சீக்கிரம் இறந்து போகலாம்?" என்று ஈடன் கர்ஜீக்க, தன் காதுகளை பொத்திக் கொண்டு காஸ்மோ மேலும் கதறி அழுதார். தனது பேராசை நடத்திய போராட்டத்தின் பேரழிவு அவர் கண்முன் வந்து காட்சியாக, அங்கு சிதைந்திருந்த உயிர்களிலிருந்து, சாம்பல் நிற கங்குகள் எழுந்தன.

யாவரும் அந்த சத்தத்தில் திரும்பிப் பார்க்க, அந்த கங்குகள் ஒன்று சேர்ந்து இறந்து போனோரின் ஆன்மாவாக மாற, அந்த ஆன்மாக்களின் முகங்களில் அத்தனை சோகம் தாண்டவமாடியது. அத்தனை ஆன்மாக்களும் காஸ்மோவை பார்க்க, அதில் மனதால் மறித்துப் போனவர், "ஆ…" என்று கத்தினார்.

அதிகப்படியான வலியால் அவரது சக்திகள் வடிந்து போக, அதில் மேலும் வலியெடுத்து முற்றிலும் சோர்ந்து மயங்கினார். அனைவரும் சுற்றி இருந்த ஆன்மாக்களை நோக்க, யாவரது மனமும் சில காலங்களுக்கு முன்னே சென்றது…

*********

அழகியதோர் காலைப் பொழுதது! குயில்கள் தன் இனிமையான குரலில் கூவ, கிளிகளின் கீச்சிடும் சத்தமும் அதற்கு இணையாக கேட்டது. ஸ்லீவ்லெஸ் டீ-ஷர்டும், ஸ்போர்ட்ஸ் பேன்டும் அணிந்துக் கொண்டு காதுகளில் மாட்டிய ஹெட்ஃபோனின் வழி கேட்ட பாடலை முனுமுனுத்தபடியே தனது ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டிருந்தாள், அவள்.

தனது பயிற்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்பியவள், இரண்டு பிரட்டை டோஸ்ட் செய்துக் கொண்டு, உடன் ஒரு பெரிய டம்பிளரில் 'ஹெல்த் மிக்ஸ்' பொடி கலந்த பாலையும் எடுத்து வைத்துவிட்டு குளித்து வந்து உண்டாள். உணவை முடித்துக் கொண்டு தயாராகியவள், தனது புத்தகங்களை எடுத்துக் கொண்டு அந்த அழகிய ஆரஞ்சு வர்ண மிதிவண்டியில் புறப்பட, அவளது செல்லப்பிரணியான 'குவாட்செல்' என்று அழைக்கப்படும் மத்திய அமேரிக்க இனத்தை சேர்ந்த பச்சை நிறப் பறவை 'கிரீச்' என்று கத்தியது.

அதில் வண்டியை சட்டென நிறுத்திவிட்டு திரும்பியவள், தன் பச்சை நிற விழிகள் பளபளக்க அதைக் கண்டு "ஸ்ஸ்.. சாரி ஆர்காட்" என்க, தன் சிறகுகளை அடித்து பறந்து வந்த 'ஆர்காடியா' என்று அவளால் பெயர் சூட்டப்பட்ட பறவை அவள் தோளில் அமர்ந்துகொண்டது.

அதை தடவிக் கொடுத்தவள், "சாரி ஆர்காட். இன்னிக்கு அந்த ஹேன்சம்ம லைப்ரேரில பார்க்க முடியும் இல்லையா? அதான் எக்ஸைட்மென்ட்ல உன்னை மறந்துட்டேன்" என்று உண்மையை ஒப்புக்கொள்ள, தன் முடிகளை சிலிர்த்துக் கொண்டு தன் கோபத்தினை வெளிப்படுத்தியது.

அதில் சிரித்துக் கொண்டவள் தன் மிதிவண்டியை அழுத்தி மதித்துக் கொண்டு புறப்பட, சில நிமிடங்களில் அந்த பெரிய பல்கலைக்கழகத்தினை அடைந்தாள். தன் மிதிவண்டியை நிறுத்திவிட்டு பையை ஒருபக்கமாக மாட்டிக் கொண்டு லைப்ரேரி நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தவளை நூலக வாசலிலேயே நிறுத்திவிட்டார் நூலக காவலாளி.

அந்த முதிய காவளாலி, "ஏம்மா.. எத்தனை தடவ சொல்றது உனக்கு? இந்த பறவையை வெளிய விட்டுட்டு உள்ள போம்மா" என்று கூற, "என் ஆர்காட்ட எப்பப்பாரு எதாவது சொல்லிகிட்டே இருக்கீங்க ஓல்ட் மேன்" என்றபடி அதை தடவிக் கொடுத்து பறக்கவிட்டாள். பின் தடதடவென படிகள் ஏறி மேலே சென்றவளது எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காத வண்ணம் அங்கு அமர்ந்து ஓர் ஆங்கில காதல் கதையை படித்துக் கொண்டிருந்தான், அவன்.

அவனை பார்ப்பதற்கு வசதியாகவும் சற்று தொலைவாகவும் இடம் பிடித்தவள், ஒரு புத்தகத்தினை விரித்து வைத்துக் கொண்டு அவனை சைட்டடிக்க, பொழுது போனதே தெரியவில்லை! சில நிமிடங்களில் அவள் முன் ஓர் உருவம் வந்து நிற்க, 'ப்ச் யாரு இந்த டிஸ்டபென்ஸ்' என்றபடி நிமிர்ந்தவள் திடுக்கிட்டு போனாள்‌‌.

"ச..சைரா" என்று அவள் தடுமாற, "என்ன பண்ற அடாமினா?" என்று சைரா பல்லைக் கடித்தாள்.
அதில் முதலில் பயந்தாலும், அவளை மெல்ல விலக்கிவிட்டு அவனை ஓர் பார்வை பார்த்துக் கொண்டவள், "வா போகலாம்" என்றபடி அவளை இழுத்துக் கொண்டு கீழே வர, "ஏன் அடாமினா இப்படி பண்ற?" என்று சைரா கர்ஜித்தாள்.

"ஏ கேர்ள்.. கால் மீ ஃப்ளோரா" என்று ஃப்ளோரா அடாமினா கூற, "அது நீயா வச்சுகிட்ட பெயர். லார்ட் உனக்கு வச்சது அடாமினா தானே" என்று குறைந்த சத்தத்தில் சைரா கூறினாள்."சரி இருந்துட்டு போகட்டும். இப்ப எதுக்கு இவ்வளவு கோபம் உனக்கு?” என ஃப்ளோரா அடாமினா வினவ, "நீ செஞ்சது உனக்கு புரியுதா இல்லையா?" என்று சைரா வினவினாள்.

"ஓ கம்மான் சைரா. ஐம் ஜஸ்ட் சைட்டிங்" என்று ஃப்ளோரா அடாமினா கூற "விளையாட்டுத்தனமா பண்ணாத அடாமினா. உன் பார்வைய சமீப காலமா அவர் நோட் பண்ணிட்டு இருக்கார். தேவையில்லாம ஒரு மனிதரோட மனசுல சலனத்தை ஏற்படுத்திடாத. நம்ம மிஞ்சிபோன ஒரு மூனு நாலு வருஷம் தான் இங்க இருப்போம்" என்று சைரா அறிவுறுத்தினாள்.

"அவர் என்னை நிமிர்ந்து கூட பார்த்தது கிடையாது சைரா. நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காத" என்றபடி அவள் தோழியுடன் நடக்க, "எக்ஸ்கியூஸ்மி லேடீஸ். ப்ளீஸ் மூவ்" என்றான், ஜான் ஃபேர்லே.


View attachment 2165

அதில் இருவரும் சட்டென விலக, இருவரையும் தாண்டிச் சென்றவனை ஆர்வம் ததும்பும் விழிகளுடன் அடாமினா நோக்கினாள்.

அதில் அருகில் இருந்தவளது கருவிழிகள் தன் இயல்பு நிறமான சிவப்பிற்கு மாற, அவளை திரும்பிப் பார்த்த அடாமினா, "சைரா சில்.. உன் கருவிழி சிகப்பா மாறுது" என்று பதறினாள். தன் கண்களை மூடித்திறந்து தன்னை சமன் செய்த சைரா, "காலைல இவர பார்க்க வரும் ஆர்வத்துல ஆர்காட்ட கூட மறந்துட்டு போற. உன்னோட ஆவலான பார்வை வேற எந்த எண்ணத்தையும் உன் மனசுல பதியவிடாம பார்த்துக்கோ" என்று கூறி விருட்டென்று சென்றாள்.

செல்லும் தோழியை வேதனையுடன் பார்த்த அடாமினா, 'நீ பயப்படுறது ஏற்கனவே நடந்துடுச்சு சைரா. நான் என் மனசை அவர்கிட்ட தொலைச்சுட்டேன். அவர் எனக்கு கிடையாதுன்னு எனக்கு புரியுது. நம்ம விதிமுறைகளை மீறி என்னால அவரை அடையவே முடியாது. ஆனா இங்க இருக்கப் போகும் கொஞ்ச நாட்கள் அவரை கண்ணார பார்த்துட்டு போயிடலாம்னு ஆசைப்படுறேன்' என்று மனதோடு கூறிக் கொண்டு தன் கழுத்தில் அணிந்திருக்கும் செயின் டாலரை வருடிக் கொண்டு, "சாரி லார்ட் ஜோயல்" என்று முனுமுனுத்துக் கொண்டாள்.

அவள் ஃப்ளோரா அடாமினா! 'பாரடைஸ்' உலகத்தின் 'லேன்ட் ஃபேரீஸ்' வம்சத்தினை சேர்ந்தவள்.


View attachment 2166

அவளுடன் இருக்கும் அவளது உற்ற தோழியான சைரா 'பாரடைஸ்' உலகத்தின் 'ஃபயர் ஃபேரீஸ்' வம்சத்தினை சேர்ந்தவள்.

View attachment 2167


'லேன்ட் ஃபேரீஸ்' இனத்தை சேர்ந்தோரின் பிராணியாக இருப்பதே, ரேகல் டிராகன்ஸ். தங்கள் உலகை விட்டு வெளியேரும்போது 'குவாட்சல்' இணப்பறவையாக உருமாறிவிடும்.


View attachment 2168

'ஃபயர் ஃபேரீஸ்' இனத்தை சேர்ந்தோரின் பிராணியாக இருப்பது, 'ஸ்மாக்' இன டிராகன்கள். இவ்வகை டிராகன்கள் தங்கள் உலகை விட்டு வெளியேரும்போது, 'கார்டினாலிடே' என்ற பறவைகளாக உருமாறிவிடும்.

View attachment 2169


தன்னை கடந்து சென்றவனை மனதோடு எண்ணி மருகிய அடாமினா, ஒருபெருமூச்சை இழுத்து விட்டுக்கொண்டு செல்ல, அங்கு அடாமினா மீது தனது அபார காதலை சுமந்துகொண்டு துள்ளலுடன் அவன் தன் நேரத்தினை கடத்தினான்.

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவிடவும் தோழர்களே🤩

சூப்பரோ சூப்பர் பேரெல்லாம் கொஞ்சம்மனப்பாடம் பன்னிக்கிட்டா படிக்கும் போது இன்னும் நல்லா இருக்கும்னு நெனக்கறேன் டா
 

NNK-04

Moderator
சூப்பரோ சூப்பர் பேரெல்லாம் கொஞ்சம்மனப்பாடம் பன்னிக்கிட்டா படிக்கும் போது இன்னும் நல்லா இருக்கும்னு நெனக்கறேன் டா
ரொம்ப நன்றி பா🤩 படிக்க படிக்க மனப்பாடம் ஆயிடும்🤩
 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-02

கலகலப்பான சிரிப்பொலியே அந்த இடமெங்கும் ஒலித்தது! தன் கையில் நீரை பந்துபோல் உருட்டிப் பிடித்துக் கொண்ட கார்டிலியா "அக்வா" என்றபடி அதை வீசி எறிய, "டௌஸ் (douse)" என்று பதில் மந்திரம் போட்டு அந்த நீரை அவள் மீதே வீசியிருந்தான், ஃபோர்ட் (Ford).

InShot_20240103_072913391.jpg


நீர்ப்பந்து வந்து வீசிய வேகத்தில் இரண்டடி பின்னே சென்று வீழ்ந்தவள், "ஆஹா ஃபோர்ட்.. ஆனாலும் உங்க காதலி மேல உங்களுக்கு கருணையே இல்ல" என்று கூற, வாய்விட்டு சிரித்தவன், "வேவ்" என்று மந்திரச்சொல் உதிர்த்ததில் ஓர் அலை உருவாகி அவளை தூக்கிக் கொண்டு வந்து அவனிடம் சேர்த்தது.


அவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டு முத்தமிட்ட ஃபோர்ட், "காதல் மனைவி சண்டை கலைகள்ல கொஞ்சம் மக்கா இருக்காளே. அதனால பாடம் சொல்லிக் கொடுக்கும்போது கண்டிப்பு இருப்பதுல தப்பில்லை" என்று கூற, “என் காதல் கணவர் காதலில் மக்கா இருக்காரே! அப்போ நானுமில்ல கண்டிப்பா இருக்கனும்?" என்றவள் அவன் முகம் பற்றி கன்னத்தினை அழுந்த கடித்து வைத்தாள்.


"ஆ.." என்றபடி அவளை கீழே விட்ட ஃபோர்ட் "வரவர உனக்கு விளையாட்டு கூடிபோச்சு கார்டிலியா" என்று கூற, "ஆஹா.. விளையாட்டு கலைகள் கத்துக்காமலே வந்துடுச்சு பார்த்தீங்களா ஃபோர்ட்" என்றுவிட்டு கண்சிமிட்டினாள்.


அதில் சிரித்துக் கொண்ட ஃபோர்ட் "தப்பில்லை ஃபேர்ரி" என்று அவளை அணைத்துக் கொள்ள, அவர்கள் முன் இரண்டு பனி கத்திகள் வந்து விழுந்தன. அதில் இருவரும் திடுக்கிட்டு திரும்ப, "பயிற்சி நேரத்துல இப்படி வேற பயிற்சி எடுத்துகிட்டு இருந்தா இந்த அலாஸ்காவுக்குப் பிடிக்காது" என்று கூறினாள், அலாஸ்கா.

e14f9d41e04f1770a19eeca69f9f2445.jpg


அதில் வாய்விட்டு சிரித்த கார்டிலியா, "ஏ அலாஸ்கா.. நிஜமா சொல்லு. உனக்கு ஒரு ஆள் கிடைக்கலையேனு பொறாமைல தானே சொல்ற" என்று கூற, தோழி தன்னை கண்டுகொண்டதில் வெட்கமடைந்து "ஆமா ஆமா.. படுறாங்க பொறாமை" என்று சமாளித்தாள்.


அதில் சிரித்துக் கொண்ட ஃபோர்ட் "உனக்கோ யாரையும் காதலிக்க வரலை, அப்ப லார்ட் ஜோயலை பார்க்க சொல்லிட வேண்டியது தானே?" என்று வினவ, "லார்ட் பார்த்து கொடுத்த வரனை வேண்டாம்னு சொல்லிட்டா ஃபோர்ட்" என்று கார்டிலியா கூறினாள்.


"ஏன் அலாஸ்கா?" என்று ஃபோர்ட் வினவ, "எனக்கு அவர் மேல எந்த ஒரு அபிப்ராயமும் வரலை. எனக்கு உங்களை தோரா (Thora), ரெய்டன் (raiden), ஐலா அன்ட் ஆலிஸ் போல காதலிச்சு கைபிடிக்கனும்னு ஆசை" என்றாள்.


அப்போதே அங்கு தோரா தன் காதல் கண்ணாலனான ரெய்டனுடன் வந்து சேர, "என்ன எங்கள பத்தின பேச்சு ஓடுது" என்றான் ரெய்டன். "ஜஸ்டு மிஸ்ஸு ரெய்டன்.. நான் மட்டும் தன்டர் ஃபேரியா இருந்திருந்தேன், உங்கள தான் தூக்கிட்டு போய்ருப்பேன்" என நக்கலாக அலாஸ்கா கூறியதும், அவளருகே இரண்டு மின்னல்களை அனுப்பி வெடிக்க வைத்த தோரா, "பார்த்து பேசு அலாஸ்கா" என்றாள்.

InShot_20240103_073136705.jpg


அவள் கோபத்தில் அங்குள்ள யாவரும் சிரிக்க, அவளை வந்து கட்டியணைத்த அலாஸ்கா, "என் தோழிக்கு இவ்வளவு கோபம் ஆகாது" என்றாள்.‌ அதில் அவளை முறைக்க முயன்ற தோரா தானும் சிரித்திட, தோராவை தன்னோடு இழுத்துக் கொண்ட ரெய்டன், "ம்ஹும்.. என் தோராவை என் முன்னாடியே கட்டிப்பிடிக்க உனக்கு உரிமையில்ல அலாஸ்கா" என்றான்.


மேலும் அங்கு சிரிப்பொலி பரவவே, "ச்ச.. நான் ஐலா, சைரா அன்ட் அடாமிய ரொம்ப மிஸ் பண்றேன். அவங்க எப்ப வருவாங்கனு இருக்கு" என்று கார்டிலியா கூறியதை அனைவரும் ஆமோதிப்பாக தலையசைத்தனர்.


அது பாரடைஸ்!!!


கனடாவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மக்கள் வாழாத தீவான, டேவோன் தீவிலியே அந்த சொர்க பூமி அமைந்துள்ளது.


மக்கள் வசிக்காத உலகப்பகுதிகளில் மிகப் பெரிய தீவான டேவோன் தீவில் அமைந்திருக்கும் இந்த மாயாஜால உலகத்தில், ஆறு மாய பிரிவுகளை சேர்ந்த ஃபேரிகள் வாழ்ந்து வருகின்றனர்.


'வாடர் ஃபேரீஸ்' என்ற இணத்தை சேர்ந்த தேவதைகளின் பெயரைப் போலவே அவர்களது மாயாஜாலங்கள் நீரை வைத்தே அமையும். 'டால்பின்' என்ற நீர்வாழ் உயிரினமே, அவர்களது இணத்தை சேர்ந்த தலைமை பிராணி.

8dc78f826df278c84abe675b11706e24.jpg


'ஸ்னோ ஃபேரீஸ்' என்ற இணத்தைச் சேர்ந்த தேவதைகள், பனியைக் கொண்டு தங்கள் மாயாஜாலக் கலைகள் கற்றுத் தேர்ந்தவர்கள்.

'வெள்ளை சிங்கம்' என்ற உயிரினமே இவர்களது தலைமை பிராணி.

ada8f0bd504f2e6ebd58bbabf6bf6fb5.jpg


'வின்ட் ஃபேரீஸ்' என்ற இணத்தை சேர்ந்த தேவதைகள், காற்றைக் கொண்டு தங்கள் மாயக் கலைகளை கற்றுத் தேர்ந்தவர்கள். 'யுனிகார்ன்' என்ற பறக்கும் குதிரையே இவர்களின் தலைமைப் பிராணி.

1cd7ab6b6950c97697b0156758cdee94.jpg


'ஃபயர் பேரீஸ்' என்ற இணத்தைச் சேர்ந்த தேவதைகள், தீயை கொண்டு தங்கள் மாயாஜாலக் கலைகள் கற்றுத் தேர்ந்தவர்கள். 'ஸ்மாக் டிராகன்' என்ற உயிரினத்தை தங்கள் தலைமை பிராணியாகக் கொண்டுள்ளனர்.


5727a568a708616df5914a19a520a1d9.jpg

'லேன்ட் ஃபேரீஸ்' என்ற இணத்தைச் சேர்ந்த தேவதைகள், பூமி மற்றும் செடி கொடிகளைக் கொண்டு தங்கள் மாய வித்தையைப் பயன்படுத்துபவர்கள். 'ரேகல் டிராகன்' என்ற உயிரினத்தை தங்கள் தலைமை பிராணியாகக் கொண்டுள்ளனர்.

3cdb1879b0232700201c705f320e598c.jpg


'தன்டர் ஃபேரீஸ்' என்ற இணத்தைச் சேர்ந்த தேவதைகள், இடி மற்றும் மின்னலைக் கொண்டு தங்கள் மாயவித்தைகளை உபயோகிப்பர். 'பனி நரிகள்' என்ற உயிரினத்தை தங்கள் தலைமை பிராணியாகக் கொண்டுள்ளனர்.

447aae71dd9004446178068b36f6ced6.jpg


பாரடைஸ் உலகம் லார்ட் விக்டோரியா வம்சத்தினை சேர்ந்த, லார்ட் செபாஸ்டின் விக்டோரியா என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு இயற்கை ஆக்கங்களுக்கும் ஒரு மாயாஜால தேவதைகளை படைத்தவர், ஒவ்வொரு வமசத்தின் ஆற்றலையும் ஒவ்வொரு கற்களில் பூட்டி வைத்தார்.

d11685e87288012e7291e174ecd3d9f5.jpg


அந்த ஆறு கற்களையும் ஒரே கோலில் பொருத்தி அதன் பொருப்பை தனது வம்சத்தினரின் பேரில் ஒப்படைத்தார்.


லார்ட் விக்டோரிய வம்சத்தினை சேர்ந்த தற்போதைய தலைமுறையினர், விக்டோரியா ஜோயல் மற்றும் விக்டோரியா காஸ்மோ என்ற இரட்டையர்களே!


உருவ ஒற்றுமை அற்ற இந்த இரட்டையர்களில் பாரடைஸிற்கு அடுத்த தலைமுறையாக யார் பொறுப்பேற்பது என்ற பேச்சுவார்த்தை துவங்கியதிலிருந்தே பகை முட்டிக் கொண்டது.


காஸ்மோவின் குணமும், பொறுப்பற்ற தன்மையும் ஜோயலுக்கு எப்போதுமே ஓர் அதிருப்தியை கொடுத்ததால், பாரடைஸை விட்டுக்கொடுக்க இயலாது என்றிட, உடன் பிறந்தோரின் சண்டையால், பாரடைஸே இரண்டாக பிளவுபட்டது.


பாதி தேவதைகள் காஸ்மோவை பின்பற்றி சென்றிட, பாதி தேவதைகள் ஜோயலை பின்பற்றி வந்திருந்தனர். ஆனால் இவர்களது தந்தையான விக்டோரியா சாண்டா என்பவர் 'பாரடைஸ் கிரிஸ்டோ' என்ற அந்த மந்திரக்கோலின் பொறுப்பை ஜோயலிடமே ஒப்படைத்து சென்றிருக்க, அந்த கோபத்தினால் இன்றளவும் பாரடைஸ் இரண்டாக பிளவுபட்டே உள்ளது.


அவ்வப்போது காஸ்மோவை சேர்ந்தோருக்கும் ஜோயலை சேர்ந்தோருக்கும் மோதல்கள் நிகழ்ந்த போதும், அவரவர் கூட்டில் மகிழ்ச்சியாகவே இருந்தனர். ஒவ்வொரு ஆக்கத்தை சேர்ந்த தேவதைகளும் அதே ஆக்கத்தை சேர்ந்தோரையே காதலித்து சேர வேண்டும் என்பது பாரடைஸ் விதி. அப்படி வேறு ஆக்கத்தை சேர்ந்தோர் மீது காதல் கொண்டால், இருவரில் யாரேனும் ஒருவர் இணம் மாறிக்கொண்டு இணையலாம் என்ற பாரடைஸின் விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால் இணம் மாறியவர், அந்த இணத்தின் மந்திரங்களை கற்று தேருவதற்கு பலவருட காலங்கள் ஆகலாம் என்பதால் யாரும் இதுவரையில் அவ்வாறு மாறியதில்லை.


அங்கு யாவரும் தோழிகள் மூவரின் வருகைக்காக காத்திருக்க, இங்கு பூமியில் முகத்தில் சுரீரென்று வெயில் அடிப்பதை இதமாய் ரசித்தபடி உறங்கிக் கொண்டிருந்த சைராவை கடுப்புடன் பார்த்திருந்தனர், தோழிகள் இருவரும்.


"அடியே.. இவ எழுந்திரிக்குற போல தெரியலை" என்று அடாமினா கூற, "என்ன பண்ணலாம்" என்று ஐலா வினவினாள்.


"உன் வேலையை காட்டு" என்று அடாமினா கூற, "ரைட்டு. என் புருஷன்கிட்ட என்னைய கோர்த்து விடுறதுல உங்க ரெண்டு பேருக்கும் அப்படி என்னத்தான் ஆனந்தமோ. தேவையில்லாம வெளியிடத்துல மந்திரசக்திய யூஸ் பண்ணாதனு பக்கம் பக்கமா பேசுவான்டி" என்று ஐலா புலம்பினாள்.


"வெளியிடத்துல தானே யூஸ் பண்ணக்கூடாது. நம்ம வீட்டுக்குள்ள இருந்தே யூஸ் பண்ணலாம்" என்று அடாமினா கூற, "அதுசரி" என்று புலம்பியபடி ஜன்னலருகே சென்று "ப்ளோ (blow)"என்று கைகளை அசைத்து கூறினாள்.


அத்தனை நேரம் அவர்கள் சாளரம் வழியே வந்துகொண்டிருந்த கதிரவனின் ஒளியை, இவளது மந்திரத்தால் காற்றடித்து நகர்ந்த மேகம் மறைத்துவிட, சட்டென முழித்துக் கொண்டாள், சைரா.


தோழிகள் இருவரையும் முறைத்த சைரா, "ஏ.. ஏன்டி" என்க, "காலேஜ் போகனும் சைரா. நீ இப்படி வெயில பார்த்தாளே மல்லாந்து படுத்துடுற" என்று ஐலா புலம்ப, "சரிசரி நிறுத்து வரேன்" என்றாள்.


மூவரும் தயாராகி வெளியே வர, அடாமினாவின் ஆர்காடியாவும், சைராவின், காலிடாவும் வந்து தத்தமது உரிமையாளரின் தோளில் அமர்ந்து கொண்டது.


"அட.. எங்க நம்மால காணும்" என்ற ஐலா, "ப்ரிஸா (brisa)" என்று அழைக்க, ஓர் புதரிலிருந்து துள்ளிக் குதித்துக் கொண்டு ஓர் முயல் வந்தது. (வின்ட் ஃபேரீஸின் தலைமை பிராணியான யூனிகார்ன், வெளியிடங்களில் முயலாக மாறிவிடும்).


அதனை தூக்கிக் கொண்டு முத்தமிட்டு தடவிக் கொடுத்த ஐலா, "என்னோட படிப்பு முடியப் போகுது. இன்னும் கொஞ்ச நாட்கள்ல நான் பாரடைஸ் போயிடுவேன். நீங்க ரெண்டு பேரும் தான் லாஸ்ட். ஏற்கனவே நம்ம மூனு பேரையும் அங்க ரொம்ப மிஸ் பண்றதா ஆலிஸ் சொன்னான்" என்று கூற, "ஏ.. ஆலிஸ் வந்தானா ஐலா?" என்று இருவரும் உற்சாகமாக கேட்டனர்.


"இல்ல. ஓட்(தூது) வந்தது" என்று கூறியவள், மூச்சுக் காற்றை இழுத்து விட்டாள். புன்னகையாக தோழியை கண்ட இருவரில், "அலாஸ்கா மிஸ் யூ போத் மோர்‌. நம்ம கேங்லயே இன்னும் சிங்கில்ஸ் நீங்க மூனு பேர் தான்" என்று கேலி செய்ய அடாமினாவின் மனதில் அவன் முகம் மின்னி மறைந்தது.


அதில் பதறிப்போனவள், தன் மனதோடு "சாரி லார்ட் ஜோயல்" என்று கூறிக் கொண்டு "சரிசரி வாங்க கிளம்பலாம்" என்று கூறினாள்.


எப்போதும்போல் சென்று முதல் வகுப்பில் வருகைப்பதிவை மட்டும் போட்டுக் கொண்டு நூலகத்திற்கு விரைந்தவள், "ஆர்காட்.. சைரா வந்தா மட்டும் சிக்னல் கொடு சரியா?" என்க அது தன் பிடறி முடிகளை சிலிர்த்துக் கொண்டு பறந்தது. ஆர்காட் பறந்த திசையை கண்டு சிரித்துக் கொண்டவள், "கோவக்காரியாகிட்ட ஆர்காடியா" என்று கூறியபடி மேலே சென்றாள்.


ஆர்வத்தோடு வந்தவளுக்கு ஏமாற்றம் கொடுக்காது அவனும் அங்கு இருக்க, அவன் பார்வை வட்டத்தில் தான் படாதவாறும், தன் பார்வை வட்டத்தை விட்டு அவன் செல்லாதவாறும் ஒரு இடத்தை பிடித்துக்கொண்டு அமர்ந்து தன் வேலையை துவங்கினாள்.


அவளது பச்சை நிற விழிகள் அவனை காணும் நேரங்களில் சற்று கூடுதலாகவே பளபளப்பது போன்று ஒரு பிம்பத்தினை ஏற்படுத்தும். இங்கு புத்தகத்தில் மூழ்கியது போல் இருந்தாலும் அவள் பார்வையின் வட்டத்தில் இருப்பதை உணர்ந்து இதழ் பிரித்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தான், ஃபேர்லே (Farley).


பார்ப்பதற்கு புத்தகத்தை படித்துவிட்டு அவன் சிரிப்பது போல் இருந்தாலும், அவன் மகிழ்ச்சியின் காரணம் அவளது பார்வை தான். அந்த பார்வையின் வீச்சு அவனை அழகாய் சுருட்டிக் கொள்ள, இன்றாவது அவளிடம் பேசிவிடும் ஆர்வத்துடன் எழுந்தான். ஆனால் அதற்குள் சைரா வருவதாக ஆர்காட் அனுப்பிய தூது மலர் ஒன்று அடாமினா புத்தகத்தில் வந்து விழ, அதை எடுத்துக் கொண்டு விறுவிறுவென கீழே சென்றிட்டாள் அவன் ஃப்ளோரா.


உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும்🤩

 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-03

ei6IMGK17034.jpg

தன் தோள் பையின் வார் பகுதியை பதட்டத்துடன் தேய்த்தபடியே அந்த பூங்காவில் அமர்ந்திருந்த அடாமினா, 'அய்யோ.. சைராவுக்கு தெரிஞ்சா கொன்னே போட்டுடுவாளே. லார்ட் ஜேயல்.. ஏன் எனக்கு இப்படியொரு சோதனை' என்று மனதோடு புலம்ப, ஃபேர்லே அங்கு வந்து சேர்ந்தான்.

அவனைக் கண்டதும் சட்டென எழுந்து நின்றவள் பதட்டம் மேலும் ஏறிவிட, இதயம் பந்தையக்குதிரையின் வேகத்தில் துடித்தது. "ஏ நான் என்ன ப்ரொபசரா எழுந்து நிக்குறதுக்கு? சிட்டவுன் டியர் (உட்காரு அன்பே)" என்றபடி ஆடவன் அந்த கல்லிருக்கையில் அமர, சற்று இடைவெளி விட்டு தானும் அமர்ந்தாள்.

6bb9db634315395ecae77f6c811b3a44.jpg

"ஐம் ஜான் ஃபேர்லே" என்று அவன் கூற, "ஃப்ளோ.. ஃப்ளோரா அடாமினா" என்றாள். "நைஸ் அன்ட் டிபரென்ட் நேம்" என்று அவன் கூற, மெல்லிய முருவலை பரிசாகத் தந்தாள். "தினமும் லைப்ரேரி வருவியே, புக்ஸ் படிக்க அவ்வளவு பிடிக்குமா?" என்று அவன் வினவ, உள்ளுக்குள் திடுக்கிட்டவள், தன் தொண்டையை செருமிக் கொண்டு "அ..ஆமா. உங்களுக்கும் பிடிக்குமா?" என்று வினவினாள்.

"ரொம்ப பிடிக்கும். அதுவும் ஃபேன்டஸி கதைகள் தான் ரொம்ப பிடிக்கும்" என்று அவன் கூற, அவளுள் மெல்லிய நடுக்கம் பிறந்தது. "ரொம்ப கிரியேடிவா யோசிச்சிருப்பாங்க. ரியல் லைஃப்ல மனுஷன் கற்பனை பண்ணுறதவிட எக்ஸைடடா யோசிச்சு எழுதியிருப்பாங்க" என்று அவன் கூற, 'உங்கள போல மனிதர்கள் கற்பனைக்கு வேணும்னா அது கற்பனையா இருக்கலாம். எங்க உலகத்துல அது நிஜம்' என்று நினைத்துக் கொண்டாள்.

அவளது அமைதியை கலைக்க வேண்டி, "உனக்கு எந்த மாதிரி கதைகள் பிடிக்கும்?" என்று அவன் வினவ "எ..எ..எனக்கு லவ்..லவ் ஸ்டோரீஸ் பிடிக்கும்" என்றாள்.

நாளை அவனை சைட்டடிக்கப் போகும் தருணத்தில், அவள் தன் முன் விரித்து வைத்துக் கொள்ளப் போகும் என்சைக்லோபீடியா அவளை பார்த்து பல்லிலிக்க போவது உறுதி என்ற எண்ணத்தில் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள், அவனை பார்க்க, "லவ்? இன்டிரெஸ்டிங்" என்றான்.

அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாதவள், "எ.. எனக்கு ஒரு வர்க் இருக்கு. நான் கிளம்பட்டுமா?" என்று வினவ, "ஷ்யோர்! இன்னொரு நாள் மீட் பண்ணலாம்" என்றான். 'இன்னொரு நாளா?' என உள்ளுக்குள் திடுக்கிட்டவள், "ம்..ம்ம்" என்றுவிட்டு சென்றிட, செல்லுமவளை இதழில் வசீகரப் புன்னகையுடன் பார்த்தவன், 'பாருடி பாருடி.. ஒரே ஒரு தடவை பார்த்துட்டு போ' என்று உள்ளுக்குள் முனகினான்.

பூங்காவை விட்டு அவள் வெளியேறியதும் சிறு ஏமாற்றத்துடன் அவன் முகம் சுருங்க, மெல்ல தலைநீட்டி எட்டிப் பார்த்தவள் அவன் அவளைப் பார்த்து உற்சாகமான முகபாவனைக்கு மாறியதும் விழிகள் விரித்து அவ்விடம் விட்டு விரைந்தாள்.

கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓட, அதை புறங்கையில் துடைத்துக் கொண்டவள், தனக்குள்ளேயே பேசிக் கொண்டாள். 'ஃப்ளோரா.. நீ செய்யுறது திரோகம்னு உனக்கு புரியலையா? ஏன்டி திரும்பி எட்டிப்‌ பார்த்த? இப்ப நீ அவரை விரும்புறனு நினைச்சுட்டு மனசுல ஆசைய வளர்த்துக்க மாட்டாரா? உன்னால எப்படி ஒரு மனிதனை அடைய முடியும்? இவ்வளவு தெரிஞ்சும் ஒருத்தரோட மனசுல ஆசைய வளர்த்துவிட்டுட்டு ஏமாத்துறது திரோகமில்லையா?' என்று மனதோடு கரைந்தவள் தன் வீட்டை அடைய, அடக்கமாட்டாது கண்ணீர் வந்தது.

கதவுகளை பூட்டிக்கொண்டு அப்படியே அதில் சாய்ந்தவள் கண்ணீர் சிந்த, எங்கிருந்தோ பறந்து வந்து ஜன்னலின் வழி புகுந்துக் கொண்டது ஆர்காடியா. முட்டுகளைக் கட்டிக்கொண்டு அதில் தன் முகத்தை புதைத்த வண்ணம் அமர்ந்தபடி அழுது கரைந்தவள் அருகே வந்த ஆர்காட் அவள் கைகளில் உரச, மெல்லவே நிமிர்ந்து பார்த்தாள்.

அதிலிருந்து பச்சை நிறத்திலிருந்து மந்திரப்பொடிகள் பரவ, கண்களை கூசும்படியான பச்சை ஒளி வீடெங்கும் பரவியது. அதில் துளியும் கண்கள் கூசப்பெறாது பார்த்தவள், அப்படியே அமர்ந்திருக்க, தனது ரேகல் டிராகன் வடிவம் பெற்றது ஆர்காடியா.

"எதுக்கு அடாமினா இந்த அழுகை?" என்று தனது பாஷையில் ஆர்காட் வினவ, அதன் கழுத்தை கட்டிக் கொண்டு "நா..நான் தப்பு பண்ணிட்டேன் ஆர்காட். என்னால ஒருத்தரோட மனசு ரொம்ப கொடூரமா பாதிக்கப்பட போகுது" என்றவள் தான், உண்மையில் மனமுடைந்து இருந்தாள்.

9d37a4c0a0b8b428dc61683326d7d777.jpg

அதிகபடியான சோகத்தில் தனது உடல், தேவதையின் உருவம் பெற்று இரக்கைகள் முளைப்பதைக் கூட உணராது உருமாறியவள், "அடாமினா.. உன்னோட உணர்வுகளை கட்டுப்படுத்து" என்று ஆர்காடியா மென்மையாகக் கூறவே தான் உருமாறியதை கண்டாள். கண்களை மூடி தன்னை ஒருநிலைப்படுத்தி மாற முயற்சித்தவள் கண்முன் ஃபேர்லேவின் முகமே வந்து மறைந்தது.

3c483d91c2ea4c6c0b98ebfbf6d37264.jpg

"ச்ச" என்று விழி திறந்தவள், "முடியலை ஆர்காட்" என்று பாவமாகக் கூறினாள். "மனதை லார்ட் ஜோயலிடம் ஒப்படை அடாமி.. உன்னால முடியும்" என்று ஆர்காட் கூற, கண்களை மூடி 'லார்ட் ஜோயல். ப்ளீஸ் ஹெல்ப் மீ' என்று இரைஞ்சினாள். அது பயனளித்த வண்ணமாய் அவள் உருமாறிவிட, ஆர்காடியாவும் பறவையாக மாறியது.

ஆர்காட்டை வருடிக் கொடுத்து, "பயமா இருக்கு ஆர்காட். நான் செஞ்ச தப்பை தவிர்க்க முடியாம மேலும் மேலும் அந்த தப்பையே செய்யுறேன். எப்படா படிச்சு முடிச்சு பாராடைஸ் போகப்போறோமோனு இருக்கு" என்று கூறிய அடாமினா, அங்கு சென்ற பின் அவனை இழந்து தவிக்கப்போகும் தவிப்பை அறிந்திருந்தால், இப்படி கூறியிருக்க மாட்டாள் போலும்.

ஆர்காட் தன் முகத்தை அவள் முகத்தோடு இழைத்து உரச, பெருமூச்சுக்களை இழுத்து விட்டவள், தன்னை சமன் செய்து கொண்டு அடுத்த வேலையை பார்க்கச் செல்ல, அங்கு தன்னவளுக்கு தன்மீது காதல் நிச்சயம் உள்ளது என்பதை உறுதிசெய்து கொண்ட சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருந்தான், ஃபேர்லே.

அவள் தன்னை தினந்தோறும் நூலகத்தில் வைத்த கண் எடுக்காமல் பார்பதை உணரத் துவங்கியிருந்தவன், முதலில் அதை சாதாரணமாகத்தான் கடந்து வந்தான். ஒரு நாள் கேன்டீனில் நண்பர்களுடன் உணவு உண்டுக்கொண்டிருந்தவன் பின்னே, 'ஏ.. காதல் ஒரு வித்தியாசமான உணர்வுடி. அது பார்த்ததும் வராது. ஆனா பார்க்க பார்க்க தோன்றும். அது ஒரு போதை போல. போதையோட தாக்கம் அது கிடைக்காத போது தான் நம்மை பைத்தியமாக்கும். அதேபோல விரும்பியவரோட ஒரு ஓரவிழிப் பார்வை ஒருநாள் கிடைக்காம போனாலும் அந்த நாளே அத்தனை பிடித்தமின்மையா மாறிடும். அது ஒரு உணர்வு பூர்வமான விஷயம்.. சொல்லில் விளக்கம் தேட முடியாத ஆயிரம் கோடி மதிப்புற்ற கேள்வி' என்று அழகாய் ஏதோ ஓர் பெண் காதலுக்கு விளக்கம் கொடுப்பது கேட்டு பூரித்துப் போனான்.

அவள் யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் திரும்பியவன், அடாமினாவைக் கண்டு அதிர்ந்து போனான். 'ஏ.. சைட்டிங் கேர்ள். உனக்குள்ள இப்படியொரு ஆழமான கருத்துக்களா' என்று வியந்தவனுக்கு அன்றிலிருந்து அவள் வித்தியாசமாகத் தோன்றினாள் என்பதில் அதிசயமில்லையே!

மெல்ல மெல்ல ஒருவர் அறியாது மற்றொருவர் மனதில் காதலை அடைந்த இருவரில், இன்று அவள் மனம் அறிந்திடும் நோக்கத்துடன், நூலகம் விட்டு வெளியே வருகையில் அவள் மீது தற்செயலாக மோதுவது போல் மோதிக் கொண்டான்.

அவள் கையிலிருந்த புத்தகங்கள் கீழே விழுந்திட, “சாரி” என்றபடி அவளுக்கு உதவி செய்தவன், "ஏ யூ.. நீ தானே போன முறை காலேஜ்ல நடந்த ஆன் தி ஸ்பாட் ஸ்பீச்ல 'கிரியேடிவிடி' பத்தி பேசினது?" என்று புதிதாக தெரியாதவளிடம் கேட்பது போலேயே கேட்டான்.

அவன் கண்களில் மின்னிய ஆர்வமும் கோடி சூரியனின் பளபளப்பும் அவளுக்குள் ஒரு பயப்புகையை வீசியெறிய, "அ..ஆமா" என்றாள்.

"நைஸ் டு மீட் யூ. உன்னோட ஸ்பீச் ரொம்ப பிடிச்சிருந்தது. உன் ஃபேன் ஆகிட்டேன்" என்று பேச்சை வளர்த்தவன், "ஈவினிங் பக்கத்துல உள்ள பார்க்ல மீட் பண்ணுவோம்" என்க, திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

"ஏன் ஷாக்? எதும் வர்க் இருக்கா?" என்று அவன் வினவ, 'ஆம்' என்று கூற கட்டளையிட்ட புத்தியை மீறி மனதின் தூண்டலோடு சம்மதித்தாள்.

அவளது சம்மதம் தந்த உவகையோடு கை குலுக்கிவிட்டு விடைபெற்றவன், பூங்கா சந்திப்பில் அவள் மனதையும் தெளிவுற அறிந்துவிட்டான். அது தந்த அளப்பரியா ஆனந்தத்தில் துள்ளிக் கொண்டிருந்தவன், விதி தங்கள் காதல் வாழ்வில் வைத்திருக்கும் சோதனைகளை அறிந்திருக்கவில்லை.


கொஞ்சம் சின்ன அத்தியாயம் தான் தோழர்களே. அடுத்த அத்தியாயத்தில் ஈடு செய்திடுவேன்🤩
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩

 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-04

காலை நேரமதில், சைராவின் வீட்டில் யாவரும் கூடியிருந்தனர். ஐலா, ஆலிஸ், அடாமினா, சைரா மற்றும் அலாஸ்கா ஆகிய யாவரும் அமர்ந்து கலகலத்துக் கொண்டிருக்க, அலாஸ்கா "ஏ அடாமி.. நீ இல்லாம நல்லாவே இல்லை தெரியுமா?" என்று கூறினாள்.

அலாஸ்கா, சைரா மற்றும் அடாமினா தான் மிகவும் நெருக்கமானவர்கள். அதிலும் அலாஸ்காவுக்கு அடாமினா மீது ஒரு தனி பிரியம். அது பாகுபாடாக வெளிப்பட்டதில்லை என்றபோதும், அனைவருக்கும் அவளுக்கு அடாமினா மீது இருக்கும் அந்த பாசம் தெரிந்தே இருந்தது.

15abf059b2af618296cfb16446c3d836.jpg

எப்போதும் பதிலுக்கு பதில் வாயளக்கும் அடாமினா தற்போது புன்னகையோடு நிறுத்திக் கொள்ள, அலாஸ்காவுக்கு அவளது அமைதியான அந்த பரிணாமம் மெல்ல மெல்ல உரைத்தது.

அனைவரது பேச்சு வார்த்தையும் முடிவு பெறவே, "ம்ம்.. என்ன ஐலா? ரொம்ப சந்தோஷமா கிளம்பிட்ட போல?" என்று அலாஸ்கா வினவ, "இருக்காதா பின்ன? ஆலிஸ்கூட ரொமான்ஸ் பண்ண வேண்டியவள, இப்படி படிக்கனு லார்ட் ஜோயல் பூமிக்கு அனுப்பி வைச்சுட்டார். பாவம் அங்க ஆலிஸும் தவியா தவிச்சுட்டார், இங்க ஐலாவும் தவியா தவிச்சுட்டா" என்று சைரா கூறினாள்.

பாரடைஸ் வாசிகள் பூமிக்கு சென்று சக மனிதரைப் போல் வாழ்ந்து அங்குள்ள அறிவியல் பற்றி தெரிந்து கொண்டு வரவேண்டும் என்பது பாரடைஸின் நியதி.

லார்டாக இருப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் அமைத்து மனிதர்கள் வாழும் பகுதிக்கு அனுப்பி வைப்பார். அதன்படியே இவர்கள் இங்கு வந்திருந்தனர்.

தற்போது ஐலாவின் மனித வாழ்வு முடிவு பெறவே அவளை அழைத்துச் செல்ல ஆலிஸ் மற்றும் அலாஸ்கா வந்துள்ளனர்.

சைரா கூறியதில் சிறு வெட்கம் பெற்று சிரித்த ஐலா, ஆலிஸை பார்க்க அவனும் காதலாக அவளை பார்த்து புன்னகைத்து வைத்தான். கூடியிருந்த கூட்டம் இவர்கள் காதல் சம்பாஷனைகள் கண்டு "ஓஹோ" என்று கத்த, மீண்டும் கலகலப்பு குடிபுகுந்தது. ஐலா, ஆலிஸ் மற்றும் அலாஸ்கா புறப்பட ஆயத்தமாக, அடாமியை மட்டும் இழுத்துக்கொண்டு அலாஸ்கா தனியே சென்றாள்.

அதில் யாவரும் புன்னகைத்துக் கொள்ள, "ஏ அடாமி.. என்னாச்சு உனக்கு? ஏன் ஒருமாதிரி இருக்க?" என்று அலாஸ்கா வினவினாள். அவளிடம் மறைக்கவும் மனமில்லை, தற்போது கூறவும் மனமில்லை அடாமினாவுக்கு.

"இல்லைனு பொய் சொல்ல மாட்டேன் அலாஸ். நான் இக்கட்டான ஒரு மனசங்கடத்தை இழுத்து விட்டுகிட்டு தவிக்குறேன். ஆனா இப்ப அதை உன்கிட்ட பகிர எனக்கு மனமே இல்லை. நான் பாரடைஸ் வந்த பிறகு கண்டிப்பா உன்கிட்ட பகிர்ந்துக்குறேன்" என்று அடாமி கூற, அவளை அணைத்துக் கொண்ட அலாஸ்கா "ஒன்னுமில்லை அடாமி. நானிருக்கேன். உன் மனசை கஷ்டபடுத்தும்படி எதுவும் நடக்காது" என்று ஆறுதல் கூறினாள்.

அவர்கள் பேச்சு அத்தோடு முடிந்துக் கொள்ள, மூவரும் புறப்பட்டு பாரடைஸ் சென்றனர். இங்கு அடாமி மற்றும் சைரா இருக்க, "என்னாச்சு அடாமி? எல்லார் ஞாபகமும் வந்துடுச்சா?" என்று கேட்டது தான் தாமதம், அவளை அணைத்துக் கொண்டு அழுதுவிட்டாள்.

அனைவரையும் விட்டு பிரிந்திருந்த வலியும் இருந்தது தான். ஏற்கனவே இருக்கும் உறுத்தலோடு அதுவும் சேர்ந்து மனதை தைத்ததில் கலங்கி விட்டவள், தோழியிடம் சரணடைந்தாள்.

அவள் தலையை பரிவாய் வருடிய சைரா, "நான் தான் இருக்கேன்ல அடாமி. கவலையே படாத. நம்ம ரெண்டு பேரும் ஒன்னா தான் இங்கிருந்து கிளம்புவோம்" என்று கூற "ம்ம்" என்று தலையசைத்தாள்.

அன்றைய நாள் அமைதியோடு கடந்திட, அடுத்த நாள் பல அதிரடிகளை அவளுக்காக வைத்துக் கொண்டு காத்திருந்தது. எப்போதும் அவனை பார்க்கும் ஆர்வத்துடன் கிளம்பி செல்பவளுக்கு அவன் தன்னுடன் ஆர்வமாக பேச ஆரம்பித்ததும், பயம் தொற்றிக் கொண்டிட்டது.

பதட்டத்துடன் மிதிவண்டியில் அமர்ந்தவள் தோளில் ஆர்காடியா வந்து அமர, "ஆர்காட்.. ஐம் ஸ்கேர்ட் ஆஃப் ஹிம் (அவனால் எனக்கு பயமாக உள்ளது)" என்று கூறினாள். அவள் முகத்தோடு தன் முகத்தை இழைத்த பறவை அவளுக்கு ஆறுதல் கூற, ஒரு பெருமூச்சுடன் மிதிவண்டியை மிதித்து இயக்கிச் சென்றாள்.

எப்போதும் போல நூலகம் செல்லத் துடித்தவளது கால்களை கடினப்பட்டு திருப்பியவள், வகுப்பறை நோக்கி செல்ல, வேகமாக பறந்து வந்த காலிடா அவள் முன் நின்றது. அதைக் கண்டு திரும்பிப் பார்த்தவள், அவளை நோக்கி சைரா வருவதைக் கண்டு, "என்ன சைரா?" என்று வினவ, "என்ன வழக்கமா லைப்ரேரி பக்கம் வீசும் காத்து இன்னிக்கு கிளாஸ் பக்கம் போகுது?" என்று சைரா வினவினாள்.

"அடியே.. அங்க போனாலும் திட்டுற போகலைனாலும் திட்டுற. நான் இப்ப என்ன தான் பண்ணனும்?" என்று அடாமி கேட்க, "சரி சரி காண்டாகாம வா" என்றாள். வகுப்பறை நோக்கி நடந்து கொண்டிருக்கையில், "ஐலா கிட்ட இருந்து ஓட் (தூது) வந்தது அடாமி" என்று சைரா கூற, "ஓடா? நேத்து தானே கிளம்பினா? அதுக்குள்ள மிஸ் பண்றாளா என்ன?" என்று கேலியாக சிரித்தபடி அடாமி கேட்டாள்.

"இல்ல அடாமினா.. இது சீரியஸான விஷயம். அங்க லார்ட் ஜோயலுக்கும் லார்ட் காஸ்மோவுக்கும் இப்பலாம் அடிக்கடி முட்டிக்குதாம். நம்ம ஃபேரீஸ்கும் அவங்க ஃபேரீஸுக்கும் கைகலப்பு அதிகமாகிட்டே வருதாம். சீக்கிரமே போர் மூண்டுடுமோனு பயமா இருக்குனு சொல்றா" என்று சைரா கூற, "என்ன சொல்ற சைரா? வாரா(war)? இத்தனை வருஷம் இல்லாம இப்பதான் வருதாக்கும்?" என்று அடாமினா கேட்டாள்.

"நானும் இதே தான் நினைச்சேன். ஆனா அடுத்தே அவளோட ஓட்ல, இத்தனை வருஷம் இல்லாம இப்ப என்ன போர்னு தானே தோன்றுது? ஆனா இங்க உள்ள நிலவரத்தை பார்த்தா அப்படி தான் தெரியுதுனு சொல்றா. எனக்கு பயமா இருக்கு. நம்ம பாரடைஸோட அமைதி குழையாம இருக்கத்தான் லார்ட் ஜோயல் அவ்வளவு பிரயத்தனம் செய்றார். ஆனா.. அவரையும் மீறி நடக்கும் செயலுக்கு என்ன செய்ய முடியும் சொல்லு?" என்று சைரா கூற, "ஏ என்ன சைரா இது? இதையெல்லாம் கேட்கும்போது நம்ம பாரடைஸுக்கு ரொம்ப அந்நியமா‌ மாறின போல இருக்கு. போர்.. நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு" என்றவள் எண்ணப்போக்கோடு சென்று பொத்தென ஒருவன் மீது மோதிக் கொண்டாள்.

அந்த ஒருவன் ஃபேர்லேவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? அவனது ஸ்பரிசத்தினை உணர்ந்ததே இல்லாதவள் தான் அடாமினா. ஆனாலும் இடித்த வினாடியே அது ஃபேர்லேவாகத்தான் இருக்கும் என்று அவள் மனம் கூறிய கூற்றை உண்மையாக்கும் விதம் அவள் முன்னே நின்றவன், "ஏ ஃப்ளோரா.. சாரி" என்றான்.‌

அவன் தன்னை உரிமையாக அழைப்பதில் பதறிப்போனவள் சைராவைப் பார்க்க, சைரா இருவரையும் குழப்பமாக பார்த்தாள்.

சைராவை பார்த்தவன், "உன் பிரண்ட் தானே?" என்று வினவ, "ம்..ம்ம்.. சைரா. சைரா இவர் ஃபேர்லே" என்று பெயருக்கு பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தாள். 'அவளே விலகி வந்தும் ஏன் இவரை அவ முன்ன இந்த விதி அனுப்பி வைக்குதோ' என்று மனதோடு புலம்பிய சைரா, "ஹாய் ஃபேர்லே" என்க, "ஹாய் சைரா" என்றான்.

'அய்யோ இந்த ஹேன்சம் வேற இவ முன்ன வந்து கூப்பிட்டுட்டான். இப்ப வீட்டுக்கு போய் இவ பத்தி பத்தியா பேசியே என் பவர ஓச்சுடுவா. ஏற்கனவே பாரடைஸ் நிலைமைல பதறி இருக்கா. இப்ப பார்த்து வந்து என்னை கோர்த்து விடுறான்' என்று அடாமி நினைக்கையிலேயே அசராமல் அடுத்த குண்டை வீசினான்.

"ஃப்ளோரா.. நாளைக்கு வேற ஒரு காலேஜ்ல ஸ்பீச் காம்படீஷன் ஒன்னு இருக்கு. அதுல உன்னோட பெயரையும் என்னோட பெயரையும் கொடுத்து பதிவு பண்ணிட்டேன். நம்ம போகலாம். இதை சொல்ல தான் உன்னை தேடி வந்தேன்" என்று ஃபேர்லே கூற, "ஏது? எ..எதுக்கு என்னோட நேம கொடுத்தீங்க? நா.. நான் எங்கேயும் வர விருப்பம் படலை" என்று படபடத்தாள்.

"ஏன்? நீ தான் நல்லா பேசுறியே. நீ வர்ற, நம்ம போறோம்" என்றவன் சென்றிட, இங்க அவளை முறைத்த சைரா, "எப்போயிருந்து இவ்வளவு கிளோஸானீங்க?" என்று வினவினாள்.

"ஏ சைரா.. நீ நினைக்குற போலலாம் இல்லை. எதேர்ச்சியா லைப்ரேரில இருந்து வரும் போது என்னைப் பார்த்தார். நான் அந்த ஆன் தி ஸ்பாட் ஸ்பீச்ல பேசினேன்ல? அதுல என் பேச்சு நல்லா இருந்துச்சு சொன்னாங்க. வேற எதுவும் இல்லை. இப்ப கூட அது வச்சு தான் பெயர் கொடுத்திருக்கார். கவலைபடாத நான் வரலைனு சொல்லிடுவேன்" என்று அடாமினா கூற, சற்றே யோசித்த சைரா, "இல்லை அடாமினா. நீ போயிட்டுவா. உனக்கு அந்த டேலன்ட் இருக்கு. அதனால தான் பெயரும் கொடுத்திருக்காங்க. இதுக்காக உன்னோட டேலன்டை மறைக்க வேண்டாம். ஆனா பார்த்து. உனக்கு நான் விளக்கம் கொடுக்கனும்னு அவசியம் இல்லை" என்றுவிட்டு சைரா சென்றாள்.

சென்றவளைக் கண்டு ஒரு பெருமூச்சு விட்டவள், 'லார்ட்.. எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனையா கொடுக்குறீங்க? அவர் கூட நாளைக்கு நாள் முழுக்க எப்படி ஸ்பென்ட் பண்ண?' என்று புலம்பிக் கொண்டு நகர்ந்தாள்.

அவளது புலம்பல் அவளைத் தவிர யாரையும் பாதிக்காத வண்ணம் அவளையே சுற்றி மிதக்க, அடுத்த நாள் அந்த உயர் ரக வண்டியில் கேசம் அலைபாய பறந்து கொண்டிருந்தாள், அவனுடன்.


aabcc4fd9290d1f1814fccc26f2ecc71.jpg

உள்ளுக்குள் படபடப்பாகவும், மனதில் புதைந்த காதல் கொடுத்த குளுகுளுப்பும் கலந்து கொடுத்த உணர்வை உணர இயலாத தவிப்புடன் அவன் பின்னே அவள் அமர்ந்திருக்க, முன்னே வண்டியை இயக்கிக் கொண்டிருந்தவனுக்கு அத்தனை ஆனந்தமாக இருந்தது.

அவளுடனான இந்த முதல் பயணம், அதுவும் இருசக்கர வாகனப் பயணம் அவனுள் பல வண்ணங்களை அள்ளி வீச, அவள் தான் தனது செயலை எண்ணி மறுகிய வண்ணம் இருந்தாள்.

தூரத்தே அவர்கள் பின்னே ஆர்காடியா பறந்து வந்துகொண்டிருக்க, அதை கண்ணாடியில் கண்டவன், "உன் பெட் உன்னை கொஞ்ச நேரம் கூட பிரியாது போலயே" என்று வினவி அவளை நிலைக்கு கொண்டு வந்திருந்தான்.

"அ..ஆமா. ஆர்காட் என்னை விட்டு இருக்காது" என்று அவள் கூற "நானும் ஒரு பெட் வளர்க்குறேன். சேம் நீ வச்சுருக்குற இனப் பறவை தான்" என்று அவன் கூறினான்.

"ம்ம்.. நான் இருக்குற தெருவிலும் ஒருத்தர் ஆர்காட் போலவே ஒரு பறவை வச்சிருக்கார்" என்று கூறியவள், "உங்க பறவை பெயர் என்ன?" என்று வினவ, "ஆடம் (Adam). என்னோட பிரண்டு வீட்ல இருக்கு" என்று கூறினான்.

"ஓ.." என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டவளை கண்ணாடி வழியே பார்த்தவன், "நெர்வஸா இருக்கியா?" என்று வினவ, "இ.. இல்லையே" என்றாள். "உன் பேச்சுலயே தடுமாற்றம் இருக்கு. என்னாச்சு ஃப்ளோரா? போட்டிய நினைச்சு பதட்டமா?" என்று அவனே அவள் சமாளிப்பதற்கு வழிவகை செய்ய, "ஆமா" என்றாள்.

அந்த கல்லூரியை அடைந்தவன் வண்டியை நிறுத்த, வேகமாக கீழே இறங்கியவள், ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டாள். "ஜஸ்ட் சில் ஃப்ளோரா" என்று அவன் கூற, "ம்ம்.." என்ற தலையசைப்போடு சென்றாள்.

போட்டி துவங்கி நல்லபடியே நடந்தது. தங்களது பங்களிப்பை கொடுத்த இருவருக்கும் அதுவே திருப்தியை தந்திருக்க, வெற்றி பெறாத செய்தி இருவரையும் பெரிதாக பாதிக்கவில்லை.

அந்த நாள் முழுதும் அவளுடன் இருந்ததே அவனுக்கு அத்தனை சந்தோஷத்தை கொடுத்திருக்க, 'இதைவிட வேறென்ன வேண்டும்' என்ற உவகையோடு வீடு திரும்பினான். அவளை அவள் வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தியவன், "எப்பவும்போல உன் பேச்சுல கவுந்துட்டேன்" என்று கூற, தயக்கத்துடன் அவனை ஏறிட்டு, "தேங்ஸ்" என்றவள், "நீங்களும் நல்லா பேசினீங்க" என்றாள்.

சன்னமான சிரிப்புடன் அவன் தலையசைக்க, விடைபெற்று திரும்பியவளது துப்பட்டாவை பிடித்து இழுப்பதை போன்ற உணர்வில் திடுக்கிட்டு திரும்பினாள். அது அவன் வண்டியில் மாட்டியிருக்கவும், ஒரு பெருமூச்சுடன் அவள் அதை எடுத்துவிட குனிய, அதே நேரம் தானும் குனிந்தவன் அவளோடு முட்டிக் கொண்டான்.

"உப்ஸ்.. சாரி" என்று சிரித்தபடி கூறியவன் அதை எடுத்துவிட்டு, "பாய் (bye) ஹாவ் அ ப்ளஸன்ட் ஸ்லீப்" என்க, "குட் நைட்" என்றுவிட்டு உள்ளே சென்றாள்.

cd9c5de44421b6c3a058e6d3aba7aedf.jpg

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩


 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-05


"ஹெல்லோ சார்.. உங்க ஆடமை வந்து வாங்கிட்டு போகமாட்டீங்களா? நீங்க இல்லாம என்னை படுத்தி எடுத்துடுச்சு" என்று டைஸா கூற, "ஏ.. சாரி. மறந்துட்டேன்" என்று ஃபேர்லே கூறினான்.


"அதானே.. பார்த்தியா ஆடம்.. உன்னையே மறக்குமளவு பய லவ்ல விழுந்துட்டான் போல" என்று அவனது தோழி டைஸா கூற, சிறு வெட்கத்துடன் தன் கைநீட்டி பறவையை அழைத்து தலைகோதியவன், "ஷி இஸ் மை ஏஞ்சல்" என்றான்.


"ம்ம்.. அதான் உன் முகமே சொல்லுதே.. இந்த பிரண்ட மறந்துடாதடா. நீங்க ஹேப்பியா இருக்கனும்னு ஃபர்ஸ்ட் விஷ் நான் தான்" என்று கூறிய டைஸா அறியவில்லை நடக்கவிருப்பதை!


அங்கு கட்டிலில் விழுந்த அடாமினா அவனுடனான தருணங்களை மனதோடு அசைபோட்டபடியே உறங்கிப்போக, மறுநாள் காலை வெகு தாமதமாகவே எழுந்தாள்.


"என்ன மேடம் இப்பதான் தூக்கம் கலையுதோ?" என்று கேட்ட சைராவைப் பார்த்து அடித்து பிடித்து எழுந்தவள் மணியைப் பார்க்க அது காலை எட்டு என்று காட்டியது.


"ஏ எட்டா?" என்று பதறியவள் பரபரப்புடன் கிளம்பி தயாராகி வர, "நேத்து காம்ப் என்ன அச்சு அடாமி" என்று சைரா வினவினாள். தனது மிதிவண்டியை எடுத்து ஏறி அமர்ந்த அடாமி, "ஜெயிக்கலை சைரா.. ஆனா போட்டி நல்லா இருந்தது" என்று கூற, "ம்ம்.. அவங்க?" என்று சைரா வினவினாள்.


'ஃபேர்லேவைப் பற்றிய பேச்சு வந்தாலே என்னிடம் தடுமாற்றம் தான்' என்று தன்னைத் தானே மனதோடு திட்டிக் கொண்டவள், "அ..அவங்களும் ஜெயிக்கலை சைரா. ஆனா நல்லா பேசினாங்க" என்று கூடுதல் தகவலோடு கூற, "ஓகேடா" என்று பேச்சை முடித்துக் கொண்டாள்.


இருவருமாக அந்த பல்கலைக்கழகத்தினை அடைய, "ஓகே சைரா.. ஈவ்னிங் பார்ப்போம்" என்றவள் தன் தோளில் இருக்கும் ஆர்காட்டை தடவிக் கொடுத்தபடி தனது வகுப்பறை நோக்கிச் சென்றாள்.


என்றும் போல் இன்றும் மனதோடு அவனை காணவே கூடாது என்ற வேண்டுதலோடு தான் வந்தாள். ஆனால் என்றும்போல் இன்றும் அவள் வேண்டுதல் தண்ணீர்க் கோலமாய் மறைந்து போனது..


அவள் முன் அட்டகாசமான புன்னகையுடன் அவன் வந்து நிற்க, இடித்திடும் படி சென்று அவனை உள்ளூரு உணர்ந்தவளாக நின்று கொண்டாள். மெல்ல தலைநிமிர்த்தி, தன் கண்களோடு கண்கள் கலக்க துடித்திடும் அவன் விழிகளைப் பார்த்ததும் சுற்றத்தை மறக்கடிக்கும் ஓர் சலனம் அவளுள்!


அதிலிருந்து அவளை மீட்ட பெருமையை ஏற்றுக்கொண்ட ஆர்காட், தன் அலகால் அவள் தலையில் கொட்டிட, ஆர்காட்டை திரும்பிப் பார்த்து செயற்கை புன்னகை ஒன்றை கொடுத்தவள், "ஹ..ஹாய் ஃபேர்லே" என்றாள். "ஹாய் ஃப்ளோரா. நேத்து நம்ம பேசினோமே என்னோட பெட் ஆடம். உன்கிட்ட காட்ட கூட்டிட்டு வந்தேன்" என்று கூறிய ஃபேர்லே தன் கையை தூக்கி சைகை செய்ய, வேகமாக பறந்து வந்த பறவை அவன் கை மீது அமர்ந்து கொண்டது.


அதில் லேசான புனன்கை உதிர்த்தவள் வகுப்பு நேரம் வந்ததாக அடித்த மணியொலியில் "ஒ..ஓகே ஃபேர்லே கிளாஸ் போகனும்" என்றபடி வேகமாக சென்றாள். செல்லுபவளையே புன்னகையாகப் பார்த்தவன், "ஏ ஆடம்.. ஐம் இன் லவ் வித் ஹர் (நான் அவள் மீது காதல் வயப்பட்டுவிட்டேன்)" என்று கூற, அவன் தலைமேல அமர்ந்திருந்த விதியானது அவளது பின்புலனும் அவனது பின்புலனும் எண்ணி கோரமாக சிரித்துவிட்டுச் சென்றது.


அங்கு பாரடைஸில் போருக்கான அடித்தளம் வெகுவாக வலுத்துக் கொண்டிருந்தது. காஸ்மோவை நேரடியாக சந்திந்துப் பேச லார்ட் ஜோயல் முடிவாகி இருக்க, தன் தம்பிக்கு தன் மந்திரசக்தி மூலமாக தூது அனுப்பிவிட்டுக் காத்திருந்தார்.


அவரது சந்திப்பை தான் ஒப்புக் கொண்டதாகவும், உரைந்திருக்கும் ஓர் நீர்வீழ்ச்சிக்கு வரும்படியும் காஸ்மோ பதில் தூது அனுப்பியிருக்க, உடனடியே ஜோயல் புறப்பட்டிருந்தார்.


அண்ணனைக் கண்டதும் மரியாதை செழுத்தும் நிமித்தம் தலை வணங்கிய காஸ்மோ, "கூப்பிட காரணம்?" என்று நேரடியாக விடயத்திற்கு வர, "என் மீது மரியாதை வைத்து தலைவணங்கும் நீ என்கூட போர் போட மட்டும் எப்படி முடிவா இருக்க?" என்ற கேள்வியால் திணறடித்தார் ஜோயல்.


"போர் செய்ய நான் ஒன்னும் முடிவு பண்ணலை.. என்னை அந்த முடிவுக்கு நீங்க தான் கட்டாயப்படுத்துறீங்க" என்று காஸ்மோ, ஜோயல் முகம் நோக்காது கூற, "நானா?" என்று ஜோயல் குழம்பினார்.


"பாரடைஸ் கிரிஸ்டோ இருக்குமிடத்தையும் அதன் பொருப்பையும் என்கிட்ட கொடுத்துட்டா நான் ஏன் போர் பண்ண போறேன்?" என்று எங்கோ பார்த்த வண்ணம் காஸ்மோ பேச, "அதை பார்த்துக்கும் பொருப்பு உன்கிட்ட இல்லை காஸ்மோ" என்று ஜோயல் பொறுமையாகக் கூறினார்.


அதில் வெகுண்டெழுந்த காஸ்மோ, "அதை நீங்க எப்படி சொல்றீங்க? உங்களுக்கு மட்டும் ரொம்ப பொறுப்பிருக்கோ?" என்று வினவ, "நிச்சயம் உனக்கில்லை. நீ சின்ன வயதுலயே தீய மந்திர சக்திகள கத்துக்க காட்டிய ஆர்வமே அதை சொல்லும்" என்று ஜோயல் கூறினார்.


"ஆனா அது தவறுனு தெரிந்ததும் நான் கைவிட்டுட்டேன்" என்று காஸ்மோ கூற, "பாரடைஸ் வேணும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே தான் உன் ஆர்வத்தை அடக்கிட்டு இருக்கனு எனக்கு தெரியும். மேலும் பாரடைஸ ஆளுபவனுக்கு பொறுமை ரொம்ப அவசியம். உன்கிட்ட அது இல்லை. அதுவும் பாரடைஸ் நம்ம சொர்க்கம். அதுல போரை ஏற்படுத்த நீ முயற்சிப்பது பெரும் தவறு. நம்ம விக்டோரியா வம்சத்தையே நீ அவமதிக்குற. உன்னை நம்பி உன் பின்னாடி இருக்கும் மக்களுக்காகவாவது யோசி காஸ்மோ. இப்பவே பாதி பாரடைஸ நீ பிரிச்சு வச்சு ஆண்டுகிட்டு இருக்கும் பாவத்தை சுமக்குற. மேலும் உன்னை நம்பி இருப்பவர்களுக்கு துரோகம் செய்யும்படி போரை துவங்காத" என்று ஜோயல் கூறிவிட்டுச் சென்றார்.


"நீங்க எவ்வளவு பேசினாலும் என் முடிவில் மாற்றம் வராது. இந்த பாரடைஸ் எனக்குத்தான் சொந்தம். இதை யாருக்காகவும் நான் விட்டுக்கொடுக்கவே மாட்டேன். பாரடைஸ் கிரிஸ்டோ என் கைக்கு வந்தா நான் மிக சக்தி வாய்ந்த ஃபேரியா மாறிடுவேன். அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். என் மக்களை எப்படி பார்த்துக்கனும்னு எனக்கு தெரியும். இதுவரை அவர்களுக்கு ஒரு நல்ல தலைவனா தான் நான் இருந்தேன்.. இருக்கேன்.." என்று காஸ்மோ கத்த, அவரை அமைதியாகத் திரும்பிப் பார்த்த ஜோயல், "ஒத்துக்குறேன்.. உன் கீழ உள்ளவங்களுக்கு நல்ல தலைவனா இருந்த, இருக்க.. ஆனா உன்னை ஆட்டிப்படைக்கும் சுயநலம் காரணமா கிரிஸ்டோ கிடைத்தா நீ ஒரு நல்ல தலைவனா இருக்க மாட்ட. நான் சொல்வதைக் கேளு. இந்த ஆசையை விட்டுடு. நீ உன் சுயநலத்தை விட்டு விக்டோரிய வம்சத்து ஃபேரியா உன் திறமையை வளர்த்துக்கும் வழிய பாரு.. உனக்கு சேர வேண்டியது உன்னைத் தேடி அதுவா தான் வரனும். நீயா போகக் கூடாது" என்றார்.


அவர் எத்தனை பொறுமையாக எடுத்துக் கூறியும், காஸ்மோ தான் புரிந்துகொள்வதாக இல்லை. ஜோயலுக்குத் தெரியும் தனது தம்பி தீயவன் இல்லை‌ தான்.. ஆனால் அவனது பேராசைக்குணம் அவனை தீய பாதையில் இழுத்துச் சென்றிடும் என்று. அதனால் தான் பாரடைஸை அவனிடம் ஒப்படைக்கும் எண்ணம் துளியும் இல்லை.


"நான் கண்டிப்பா போர் தொடுப்பேன்" என்று காஸ்மோ கர்ஜனையாக கத்த, "இது நல்லதுக்கில்லை காஸ்மோ. பாரடைஸ் அழிவை சந்திச்சிடும்" என்று ஜோயல் கூறினார்.


"அப்ப பாரடைஸ் கிரிஸ்டோ இருக்குமிடத்த சொல்லுங்க. அதையும் பாரடைஸயும் என் தலைமையில் ஒப்படைங்க" என்று காஸ்மோ இகழ்ச்சி புன்னகையுடன் கூற, அவனையே அமைதியாகப் பார்த்திருந்தார்.


சிலநிமிட மௌனம் காஸ்மோவின் கண்களில் பளபளப்பைக் கூட்டியது. அவனை நேருக்கு நேர் பார்த்த ஜோயல், "அது முடியாது காஸ்மோ. விக்டோரிய வம்சத்துல இறந்து போகும் தலைவர் யார் கையில் பொறுப்பை ஒப்படைக்குறாரோ அவருக்குத்தான் சாகும் வரை பொறுப்பு. என்னை சாகடிச்சுட்டு பொறுப்பை கையில் எடுக்க நீ நினைத்தாலும் நடக்காது. எனக்கடுத்த பொறுப்பை என் மகனுக்கு தான் நான் கொடுப்பேன்" என்று கூற, காஸ்மோவின் பொறுமை மேலும் சோதனைக்குள்ளானது.


"உங்க மேல பெரிய மதிப்பு வைத்திருந்தேன். அதை நீங்களே அழிச்சுக்குறீங்க.. பாரடைஸில் போர் மூண்டே ஆகனும் என்பது தான் உங்க எண்ணமா இருந்தா அதை எப்படி மாற்றுறது? கண்டிப்பா போர் நடக்கும்.. தயாரா இருந்துக்கோங்க" என்று காஸ்மோ கூற, "நிச்சயம் உன் கையில் பாரடைஸ கொடுத்து மெத்தமா வீழ்ச்சிக்கு வழிவகை செய்வதற்கு போர் செய்து சின்ன சேதங்களோட காப்பாற்றுவது எவ்வளவோ மேல்" என்றுவிட்டுச் சென்றார்.


சென்றவரை கோபம் கொப்பளிக்க பார்த்த காஸ்மோ "ஆ.." என்று கத்தி, தன் சக்தி கொண்டு அருகில் இருந்த பனியில் உறைந்த நீர்வீழ்ச்சியை உடைத்துவிட்டுச் சென்றார்.


அங்கு தன் இடம் திரும்பிய ஜோயல் யோசனையோடு நடந்துகொண்டுவர, "லார்ட் ஜோயல்" என்று ஃபோர்ட் தலைவணங்கினான். சிறு தலையசைப்போடு "பயிற்சி முடிஞ்சதா ஃபோர்ட்?" என்று ஜோயல் வினவ, "முடிஞ்சது லார்ட்" என்றான்.


"ஹ்ம்.. கார்டிலியா எங்க?" என்று அவர் வினவ, சிறு வெட்கப் புன்னகையுடன் "வாங்க லார்ட்" என்றபடி அவரை அழைத்துச் சென்றான்.


"பேபி ஃபேர்ரி எப்ப வெளிய வருவீங்க? நீங்க எந்த ஃபேரியா இருப்பீங்க? பாய் ஆர் கேர்ள் (ஆணா பெண்ணா?)" என்றபடி அந்த மாயாஜாலத்தினால் மிதந்துக் கொண்டிருந்த கண்ணாடி போன்ற பையிற்குள் மிதக்கும் குட்டி தேவதையைப் பார்த்து கார்டிலியா பேசிக் கொண்டிருக்க, "அடடே! ஃபேரி பேக் (fairy bag)" என்று ஜோயல் பூரிப்போடு கூறினார்.

96b6880ef6226352e54bcd205ff9910a.jpg


ஃபேரி பேக் என்பது இரண்டு மனம் ஒத்து இணைந்த தேவதைகள் தங்கள் காதலால் உருவாக்கும் ஒன்று. காதல் புரிந்து இணையும் இரு தேவதைகளும் வலிகளைத் தாங்கி தங்கள் சக்தியைக் கொடுத்து காதலால் உருவாக்கும் இந்த ஃபேரி பேக் தான் அவர்களது வாரிசினை உருவாக்கிக் கொடுக்கும். முற்றும் முழுதும் அவர்கள் காதலின் சாட்சியாய்!


அதில் சிறு வெட்கச்சிரிப்பைக் கொடுத்த கார்டிலியா, "ஆமா லார்ட்.. நாங்களே சொல்ல தான் காலைல வந்தோம். நீங்க வெளிய போயிருக்குறதா சொன்னாங்க" என்று கூற, சன்னமான புன்னகையுடன் அந்த ஃபேரி பேக்கை வருடினார்.


உயிர் ஜனிக்க இருக்கும் பொழுதில் அழிவின் ஆக்கம் துவங்க உள்ளதே என்ற வேதனை அவர் மனதை வண்டாய் குடைய, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர், "நல்லதாகவே நடக்கட்டும்" என்றார்.

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩

 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-06

அந்தி மாலை வேளை… சோகமே உருவாக அந்த பூங்காவில் அமர்ந்திருந்த அடாமினா, ஃபேர்லேவின் வரவிற்காகக் காத்திருந்தாள்.

'இவ்வளவு சடுதியில் எப்படி இந்த பூமியால் சுற்ற முடிந்தது? என் சக்தியைக் கொண்டு இதன் இயக்கத்தினை நிறுத்திவிட்டால் தான் என்ன?' என்று எண்ணியபடியே அமர்ந்திருந்தாள்.

கையில் பூங்கொத்துடன் வந்த ஃபேர்லேவைக் கண்டவள் விழிகள் விரிய எழுந்து நிற்க, புன்னகையுடன் கண் சிமிட்டி அவளருகே வந்தான்.

27e86211445706e25f82bd9053c7bb03.jpg

"ஃபே..ஃபேர்லே" என்று அவள் தடுமாற, "ஃப்ளோரா" என்றபடி அவளிடம் அந்த பூங்கொத்தினைக் கொடுத்தான்.

அதையும் அவனையும் மாற்றி மாற்றி பார்த்தவள், "எ..என்னது ஃபேர்லே" என்று வினவ, "படிச்சு முடிச்சாச்சுல? வாழ்த்துக்கள்" என்றபடி அதை நீட்டினான்.

அவளையும் அறியாமல் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டபடி அவள் அதை வாங்க, ஒரு குறும்பு சிரிப்போடு அதைப் பார்த்தான்.

அவள் முகத்தில் மீண்டும் ஒரு சோகம்.. அதே நேரம் அவன் காதலைக் கூறிடுவானோ என்ற பதட்டம் அவளுக்கு! "அப்றம் ப்ளோரா.. நெக்ஸ்ட் பிளான் என்ன?" என்று அவன் வினவ, "எ.. என் சொந்த ஊருக்கு போறேன்" என்றாள்.

"ஓ.." என்றவன் "எங்க?" என்று வினவ, லேசான தடுமாற்றத்திற்கு பின், "கெனடா" என்றாள். "ஓ" என்று அகல விரிந்த விழிகளோட, "அப்றம் எப்ப மீட் பண்ணமுடியும் நம்ம?" என்றவன் கேள்வியில் மனதால் உடைந்து போனவள், "பண்ண முடியும்னு தோனலை ஃபேர்லே" என்றாள்.

"கேனடால எங்கன்னு சொல்லு. நான் வருவேன்" என்றவன் கூற்றில் அவள் இதழ்கள் இகழ்ச்சியாய் நெழிய, "இல்ல ஃபேர்லே. அது வேணாம்" என்றாள்.

"ஏன்?" என்ற ஒரே வார்த்தையில் ஃபேர்லே அவளை பரிதவிக்கச் செய்ய, அழுதிவிடும் போல் அவளுக்கு படபடப்பாக இருந்தது.

"நீ எங்க போனாலும் நான் வருவேன் ஃப்ளோரா" என்று ஆழ்ந்த குரலில் அவன் கூற, விழுக்கென‌ அவனை நிமிர்ந்து பார்த்தாள். "நான்.." என கூற வந்தவன் வாயை தன் கை கொண்டு மூடியவள், 'உன் காதலை காது குளிர கேட்டுட்டு அதை மறுக்கும் பாவத்தை எனக்கு கொடுத்துடாத ஃபேர்லே' என்று மனதோடு கூறிக் கொண்டாள்‌.

அவளது கலங்கிய விழிகளைப் பார்த்த ஃபேர்லே, அவள் கை விலக்கி "ஃப்ளோரா" என்று அவள் முகம் தாங்க, "ஸ்.. சாரி அன்ட் தேங்ஸ்" என்றவள் விறுவிறுவென நகர்ந்து ஓடாத குறையாக அங்கிருந்து வந்தாள்.

தன் வீட்டை அடைந்தவுடன் தாங்க இயலாத வேதனையோடு அவள் கதறி அழ, அவளது மாய சக்தி பச்சை நிற கங்குகளாய் வெளி சிதறியது!

மெல்ல மனித உருவிலிருந்து தன் தேவதை உருவிற்க மாறியவள், "அடாமினா" என்ற ஆர்காட்டின் குரல் கேட்டு நிமிர்ந்தாள். அதுவும் ரேகல் டிராகன் உருவத்திற்கு மாறியிருக்க, "அ..ஆர்காட்" என்றபடி அதை அணைத்துக் கொண்டாள்.

"நம்ம பாரடைஸுக்கு புறப்பட வேண்டிய நேரம் வந்துடுச்சு அடாமினா" என்று ஆர்காட் கூற, "த.. தெரியும்" என்றவள், "என்னால ஃபேர்லேவ மறக்கவே முடியாதா ஆர்கார்? ப..பயமா இருக்கு. அவரை விட்டு போறத நினைச்சாலே மனசெல்லாம் வலிக்குது" என்று கண்ணீரோடு கரைத்தாள்.

ஆர்காட் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க, "பயமா இருக்கு ஆர்காட்" என்று கேவினாள். தன் வாலால் அவளை வருடிய ஆர்காட், "அடாமினா. நீ ரொம்ப யோசிக்காத. லார்ட் ஜோயல் எல்லாத்தையும் பார்த்துப்பாரு. நம்ம கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு. சைரா வந்துடுவா" என்று ஆர்காடியா கூறவே, தன் கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டாள்.

"நீ கவலைபடாத அடாமி. எல்லாம் ஒரு காரணமா தான் நடக்கும். லார்ட் ஜோயல நம்பு" என்று ஆர்காட் கூற, அதை அணைத்து அதன் முகத்தோடு தன் முகம் இழைத்து நின்றாள். மெல்ல மெல்ல அவள் மனம் சமன்பட, சைராவும் காலிடாவும் அவ்விடம் வந்து சேர்ந்தனர்.

9d37a4c0a0b8b428dc61683326d7d777.jpg


15fc5c4786beb188bc91728856ba03a6.jpg


"அட ரெண்டு பேரும் உருமாறிட்டீங்களா?" என்ற சைராவும் தன் உருவத்திற்கு மாறிட, காலிடாவைப் பார்த்த அடாமி, "காலிடா.. நீயும் டிராகனா மாறிட்டா இந்த வீடு தாங்காது. பாரடைஸ் போன பிறகு நீங்க ரெண்டு பேரும் உருமாருங்க. ஆர்கார் பறவையா மாறு" என்று அடாமி கூறியதும் ஆர்காட் மீண்டும் பறவையாக மாறியது.

ஒருவரை ஒருவர் பார்த்த சைரா மற்றும் அடாமி சிறு தலையசைப்போடு வலது கையினை நீட்ட, பறவைகள் இரண்டும் கைமேல் வந்து அமர்ந்தனர், "மூவ் டூ பாரடைஸ்" என்று இருவரும் சத்தமிட்டு கூற, அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியின் டாலர் பிரகாசமாக மினுமினுத்தது.

அதன் ஒளி நால்வரையும் விழுங்கிக் கொள்ள, நொடி பொழுதில் இருவரும் பாரடைஸை அடைந்தனர்.

இருவரும் லார்ட் ஜோயல் முன் வந்து நிற்க, ஒளி மங்கி விழி மலர்ந்து பார்த்தனர். லார்ட் ஜோயல் இருவரையும் கண்கள் மலர ஏறிட, இருவரும் மண்டியிட்டு வலது கையினை இடது மார்பில் குத்தி தங்கள் வணக்கத்தினை தெரிவித்தனர்.

"வெல்கம் பாரடைஸ்" என்று அவர் கூற, எழுந்து நின்ற இருவரும் ஓடி சென்று அவர் முன் நின்றனர். இருவரின் தலைகோதியவர், "உங்களை அனுப்பிட்டு நான் தான் ரொம்ப வருந்தினேன். உங்க வருகைக்கு தான் இங்க நிறையபேர் காத்திருந்தாங்க" என்றவர் முகம் லேசாக வாடிப்போனது.

"என்னாச்சு லார்ட்?" என்று இருவரும் அவர் முகம் மாற்றம் கண்டு வினவ, "ஆனா இந்த மாதிரி நேரம் நீங்க வரும்படி ஆயிடுச்சு" என்றார்.

சைராவும் அடாமியும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொள்ள, "காஸ்மோ போருக்கு தயாரா இருக்கும்படி தூது அனுப்பிருக்கான். போர் எப்போனு கூடிய விரைவில் தூது அனுப்புறதா சொல்லிருக்கான்" என்று வருத்தத்தோடு கூறினார்.

அவர்களுக்கு அச்செய்தி ஆச்சரியமாக இருக்க, "லார்ட்.. நீங்க போய் பேசி பார்க்கலையா?" என்று சைரா வினவியதும், "பேசிப்பார்க்காம இருப்பேனா சைரா?" என்றார்.

"போர் தான் மூண்டாகனும்னு இருந்தா நம்மால அதை மாத்த முடியாது லார்ட். அவர் கைக்கு பாரடைஸ் போயி மொத்தமா அழிவதற்கு போரே மேல்" என்று கூறிய அடாமினா தானே இந்த போரை நிறுத்த கோரி வேண்டப்போவதை அப்போது அறிந்திருக்கவில்லை!

அவள் தலையை பரிவோடு கோதியவர் "சரி போங்க.. உங்களுக்காக அங்க நிறையா பேர் காத்திருக்காங்க" என்று கூற, புன்னகையுடன் இருவரும் திரும்பினர்.

சட்டென ஏதோ நினைவு வந்தவராக, "அடாமினா" என்று ஜோயல் அழைத்திட, இருவரும் திரும்பி அவரை நோக்கினர்.

அடாமியை மட்டும் வரும்படி சைகை செய்தவர், சைரா சென்றதும், "என்கிட்ட எதுவும் சொல்லனுமா?" என்று வினவ, அவள் கண்கள் குளம் கட்டியது. "நா.. நான் சொல்ல என்ன இருக்கு லார்ட்? அதான் உங்களுக்கே தெரியுமே" என்று அடாமி கூற, அவள் தலைகோதியவர், "இது பெரிய பிரலயத்திற்கு வழிவகை செய்யும்" என்றார்.

"தெரியும்.. ஆனா மனசு வலிக்குது லார்ட்" என்று அவள் கூற, "ஆனா நீ நினைக்கும்படியான பிரலயம் இல்லை" என்றார். "இல்ல லார்ட்.. என்னால உங்களுக்கு எந்த அவப்பெயரும் வரவேண்டாம். இதை இதோட விடுவோம். நடக்குறது நடக்கட்டும்" என்று கூறியவள் தன் கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டு புன்னகைக்க, அவள் தலைகோதி அனுப்பி வைத்தார்.

அவரது அருகே வந்த வெள்ளை மற்றும் பழுப்பு நிற க்ரிஃபின் பறவை (கழுகு முகமும் சிங்கத்தின் உடலும் கொண்ட உயிரினம்) "லார்ட்.. ஏன் நீங்க ஏதும் சொல்லலை?" என்று வினவ, அதன் தலையைக் கோதிய ஜோயல், "அவளுக்கு பொய்யான நம்பிக்கையை கொடுக்க நான் விரும்பலை ஸ்மித்" என்றார்.

78366cd1edc3776951fc91696c8e9824.jpg

அங்கு வெளிய வந்தவளை வேகமாக ஓடி வந்த அலாஸ்கா அணைத்துக் கொள்ள, சற்றே தடுமாறியவள் சிரிப்போடு, "ஹே அலாஸ்" என்றாள்.
"உன்ன ரொம்ம்ப மிஸ் பண்ணேன்" என்று அலாஸ்கா கூற, "ஆஹா.. நானும் தான்" என்றாள்.

யாவரும் அவர்களைப் புன்னகையோடுப் பார்க்க, கார்டிலியாவையும் ஃபோர்டையும் புன்னகையுடன் பார்த்த அடாமி, "பேபி ஃபேரி வந்துட்டதா கேள்விப்பட்டேன்?" என்று புன்னகையுடன் வினவ, சிறு வெட்கப் புன்னகையுடன் இருவரும் ‘ஆம்’ என்று தலையசைத்தனர்.

வேகமாக தனது சிறகை அடித்து படபடத்த அலாஸ், "அய்யோ அடாமி, சைரா. உங்க கிட்ட சொல்ல நிறையா இருக்கு. ஃபேபி பேக் தான் நம்ம கார்டிலியா ஃபோர்ட் கிட்ட இருக்கு. ஆனா நம்ம தோரா ரெய்டனுக்கு பேபி ஃபேரியே வந்தாச்சு. கியூட் லிட்டில் பாய் ஃபேரி" என்று உற்சாகமாக கூற, "ஏ.. சூப்பர்" என்று அடாமி மற்றும் சைரா குதூகலித்தனர்.

நேரே சென்று தோரா மற்றும் ரெய்டனின் வாரிசான தண்டர் என்ற குழந்தை தேவதையைக் கண்டனர். அந்த பிஞ்சு தேவதையின் மெல்லிய விரல்களும் சிறகுகளும் தொட்டு ஸ்பரிசித்த தோழிகளில், "அவ்.. ரொம்ப கியூட்.. இப்படியொரு அழகுக்காகவே சீக்கிரம் ஒரு இளிச்சவாயன பிடிக்கனும்" என்று சைரா கூறினாள்.

அதில் யாவரும் சிரிக்க, அடாமியின் மனப்பெட்டகத்தில் ஃபேர்லேவின் முகம் வந்து போனது. சிலநொடிகளிலேயே தன்னை சமன் செய்தவள், பேபி ஃபேரியினை வாங்கி வைத்துக் கொண்டு புன்னகைத்தாள்.

அங்கு தனது அறையில் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்த ஃபேர்லேவிடம் வந்து அமர்ந்த அவனது தோழி டைஸா "என்ன மேன்.. ரொம்ப அமைதியா இருக்க? உன் லவ்வர் ஞாபகம் போல?" என்று வினவினாள். "அவள நான் எங்க மறந்தேன் நினைவு படுத்தி பார்க்க?" என்று அவன் கூற, சிரித்துக் கொண்டவள், "அவகிட்ட உன் லவ்வ கூட சொல்லாமவாடா வந்த?" என்று கேட்டாள்.

"ஹ்ம்.. சொல்லனும்னு தான் போனேன்.. ஆனா அவ அதை கேட்கும் மனநிலையில் இல்லாதபோல இருந்தா. நாளைக்கு மீட் பண்ணனும்னு இருக்கேன்" என்று அவள் அவனை விட்டுச் சென்றதே அறியாது அவன் கூற, "ரொம்ப லேட் பண்ணாத மேன்.." என்று டைஸா கூறினாள்.

அதில் சிரித்துக் கொண்டவன், "ஷி இஸ் மை ஏஞ்சல்.. அவ என்னைவிட்டு எங்கேயும் போக மாட்டா" என்று அதீத நம்பிக்கையோடு கூறிக் கொண்டான்.

அங்கு கார்டிலியா மற்றும் ஃபோர்டின் ஃபேரி பேக்கினை கண்டு வந்தவர்கள் தங்களது வலமையான பயிற்சி செய்யும் பூங்காவில் கூடினர்.
பேச்சு கலகலப்போடு துவங்கி அமைதியில் நிலைபெற, "அப்போ கண்டிப்பா போர் இருக்கா?" என்று சைரா வினவினாள். மற்றவர்களிடம் ஓர் ஆழ்ந்த பெருமூச்சு உருவாக, "இந்த போர் ஏதோ என் மனசுக்கு பெரிய பயத்தைக் கொடுக்குது" என்று ஐலா கூறினாள்.

"போர்னாலே அமைதிய குழைப்பது தானே ஐலா. கண்டிப்பு இது ஒரு பெரும் அழிவை சந்திக்கும்" என்று ரெய்டன் கூற, "சரியா சொன்ன ரெய்டன். நிச்சயம் இது பெரும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். ஆனா காஸ்மோ தலைமை ஏற்றபின்பு உருவாகும் வீழ்ச்சியோடு யோசித்தால் குறைவு தான்" என்று ஆலிஸ் கூறினான்.

"எல்லாம் சரிதான்.. அ..ஆனா ஏதோ" என்று நெஞ்சில் அடைத்த உணர்வை நீவிவிட்டுக் கொண்டவள், "எனக்கு சொல்லத் தெரியலை" என்க, அவள் தோளில் கைபோட்ட தோரா, "எதுவும் யோசிக்காத ஐலா. நம்ம லார்ட் என்ன சொல்றாரோ அதுபடி செய்வது தான் நம்ம கடமை" என்றாள். எல்லாம் உணர்ந்தும் ஐலாவின் மனதில் ஏதோ அபாய ஓசையே எதிரொலிக்க, அங்கு திடுமென ஓடி வந்தது ஓர் வெள்ளை சிங்கம்.

"எய்ரா!" என்று அலாஸ்கா தனது பிராணியைப் பார்த்து எழ, "காஸ்மோ போர் தேதி அறிவிச்சட்டார். உடனடியா எல்லாரையும் வரும்படி லார்ட் அழைக்குறாரு" என்று கூறியது.

ada8f0bd504f2e6ebd58bbabf6bf6fb5.jpg

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩

 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-7

பாரடைஸ் வாசிகளில் ஜோயலின் குழுவை சேர்ந்த அனைவரும் ஜோயலது மாளிகையில் கூடியிருந்தனர். அனைவரது முகத்திலும் சோகத்தின் சாயல் நிரம்பி வழிய, கண்களை மூடியபடி தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தார் ஜோயல்.


க்ரிஃபின் அவர் அருகே வந்து ஜோயல் முகத்தோடு தன் முகத்தை இழைத்து நிகழ்வுக்குக் கொண்டுவர, கண்களை மெல்ல திறந்து அனைவரையும் ஏறிட்டார்.


தன் தொண்டையைச் செருமிக் கொண்டவர், "இன்னும் ஈரைந்து நாட்கள் கழிச்சு போர் துவங்குது. போருக்கான ஆயுத்தங்கள துவங்குங்க. எல்லாரும் ஜேஸ்புரட்க்கு புறப்பட்டு உங்க உங்க ஆயுதங்கள எடுத்துட்டு வாங்க" என்று கூற யாவரும் வலது கையினை இடது மார்பில் குற்றி மண்டியிட்டு வணங்கினர்.


அனைவரையும் புறப்படும்படி அவர் சைகை செய்ய, சோகமே உருவாக அங்கிருந்து புறப்பட்டனர்.

மீண்டும் அவர்களது பயிற்சி பூங்காவை அடைந்தோர் முகத்தில் இன்னமும் சோகத்தின் சாயல்…


'பாரடைஸ்' என்று பெயரிலேயே சொர்க்கத்தினை வைத்துக் கொண்ட அந்த இடம் இன்னும் சில தினங்களில் நரகமாக மாறப்போகும் அவலத்தினை எண்ணி அவர்கள் முகம் வெம்பி வெதும்பியது.


'வீல்' என்று காற்றை கிழிக்கும் ஓசையோடு அதிவேகமாக பறந்து வந்தது ஓர் யூனிகார்ன் (பறக்கும் குதிரை). "ப்ரிஸா.." என்று ஐலா இதழசைக்க, அவளருகே வந்து தரையிறங்கிய ப்ரிஸா என்ற பறக்கும் குதிரை, "ஏ ஐலா.. எல்லாரும் என்னென்னமோ சொல்றாங்க.. நம்ம ஜேஸ்புரட் போகப் போறோமா?" என்று படபடத்தது. அதனுடனே ஆலிஸின் யூனிகார்னும் வந்திட, தடதடவென்ற சத்தத்தோடு இரண்டு ஓநாய்கள் அங்கு வந்தன.


"ல்க்ஸ்.." என்று தோரா இதழசைக்க, அவளிடம் வந்த லக்ஸ் என்ற பெயர்கொண்ட ஓனாய் "ஊ..ஊ.." என்று ஊளைவிட்டது. ரெய்டனின் ஓநாயும் சேர்ந்து ஊளையிட, எய்றா (அலாஸ்காவின் வெள்ளை சிங்கம்) தனது கர்ஜனையில் இருவரையும் அமைதி படுத்தியது.


"ல்க்ஸ்.."


"எய்றா!"


"ப்ரிஸா.."


என்று ஒரே நேரத்தில் தோரா, அலாஸ்கா மற்றும் ஐலா கத்தி தங்கள் பிராணிகளை அமைதிப்படுத்த, காற்றில் மிதக்கும் நீர்திவளை பறந்து வந்தது. யாவரின் கவனமும் அங்கு திரும்ப, அவர்களை நெருங்கியதும் அந்த நீர்த்திவளைக்குள்ளிருந்து இரண்டு டால்பின்கள் எழுந்தன.


"மரினா.." என்று கார்டிலியாவும் "ஆக்வா" என்று ஃபோர்டும் கூற அவர்களது பிராணிகள் அவர்களிடம் சென்று அடைக்கலம் புகுந்தன.


சைராவும் அடாமினாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சுற்றி முற்றி தங்கள் பிராணியைத் தேட, வானில் இரண்டு டிராகன்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நெருப்புக் கங்குகளைக் கக்கி ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்ட வண்ணம் வந்து தரையிறங்கின.


ஆம் அவற்றில் ஒன்று சைராவின் காலிடா மற்றும் அடாமினாவின் ஆர்காடியாவே. அனைவரும் அவரவர் பிராணிகள் மீது ஏறி அமர, தீவிரமான முகத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

InShot_20230910_123250384.jpg

"செயின்ட் ஜேஸ்புரட்" என்று யாவரும் ஒன்று போல அவ்விடத்தின் பெயரைக் கூற, அனைவரது பிராணிகளும் சத்தமெலுப்பின. பேரொளி ஒன்று அவர்கள் அனைவரையும் சூழ்ந்துக்கொள்ள, கண்ணிமைக்கும் நேரத்தில் யாவரும் ஜேஸ்புரட்டை அடைந்தனர்.

83262ae2eba1a1ac6299d23a316c88aa.jpg


முற்றும் முழுதும் பனியாள் சூழப்பட்டு கிட்டத்தட்ட உறைநிலையில் இருக்குமிடமது!


அலாஸ்காவுக்குத்தான் அந்த இடம் குதூகலிப்பாக இருந்ததே தவிர மற்ற யாவருக்கும் அது ஒவ்வவில்லை.


அதிலும் கார்டிலியாவும் ஃபோர்டும், "இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா நாங்க அவ்ளோதான்" என்று கூற சைரா "ப்ளேஸ் (blaze)" என்றபடி தன் கையசைத்து மந்திரமிட்டாள்.


கார்டிலியா மற்றும் ஃபோர்டை சுற்றி ஓர் நெருப்புத் திரை சூழ்ந்துக் கொள்ள, "இது கொஞ்ச நேரம் தான் தாக்குப்பிடிக்கும். அதுக்குள்ள நம்ம ஜெம் ஸ்டோன் இருக்குமிடத்தை அடையனும். சீக்கிரம் வாங்க" என்று சைரா கூறினாள்.


"நல்லா பார்த்திருக்காங்கப்பா இடம்" என்று ஐலா புலம்ப, "நல்லா தானே இருக்கு" என்று கூறி அனைவரின் முறைப்பையும் சம்பாதித்துக் கொண்டாள் அலாஸ்கா.


சிறிது நேர பயணத்தில் தூரத்தில் ஆறு வர்ண ஒளிகள் ஆகாயத்தை நோக்கி தங்கள் ஒளியைப் பரப்பியிருந்தது தெரிந்தது.


a2c9cbb1f6eb0c3b2e90dcb0f55f5164.jpg

அந்த இடத்தை நெருங்க நெருங்க, ஆறு இணத்தைச் சேர்ந்த தேவதைகளுக்கும் ஏற்றார் போல அவரவர்களைச் சுற்றிய வெப்பநிலை உருவானது. எல்லோரும் அந்த ஆறு ஒளியினை நெருங்க, ஆறு வகையான ரத்தினங்கள் ஜொலித்தன.


நீலம், வெள்ளை, இளநீலம், சிகப்பு, பச்சை, மற்றும் ஊதா என வரிசையாக வானவில்லைப் போல் வண்ணங்கள் மின்ன யாவரும் கண்கள் மின்ன அதைக் கண்டனர்.


"அலக்ஸான்டிரைட் (alaxandrite).. காயங்களை குணப்படுத்தவும், சூழலுக்கு ஏற்றமாதிரி எங்களை மாற்றிக் கொள்ளவும் உதவும். நீரின் சக்திகளைத் தனக்குள்ள கொண்ட இந்த மந்திரக்கல் தான் நீர் தேவதைகளின் 'பவர் ஸ்டோன்' அப்படினு சொல்லப்படுது" என்று ஃபோர்ட் கூற, "இதை பார்க்க நான் வருவேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை ஃபோர்ட். போர் நடந்தா மட்டுமே தான் இங்க வந்து ஆயுதத்தை எடுத்துப்போம். இப்படி போரிடும் அவசியம் வரும்னு நான் கனவிலும் நினைச்சுப் பார்க்கலை" என்று கார்டிலியா கூறினாள்.


வெள்ளை வெளேர் என்று ஒளியை வீசும் கல்லினை வெறித்த அலாஸ்கா, "க்ரிஸ்டல் டைமென்ட் (வைரம்).. பனியின் மொத்த சக்தியையும் கொண்ட வைரம்" என்று பெருமூச்சுவிட, இளநீல ஒளியை வீசும் ஏஞ்சலைட் (angelite) என்ற கல்லினைப் பார்த்தபடி, "ஏஞ்சலைட்.. காற்றின் சக்தியைக் கொண்டது. அமைதியை நிலைநாட்டும் கல்" என்று ஆலிஸ் மற்றும் ஐலா கூறினர்.


கொஞ்ச நேரம் உத்துப் பார்த்தாள் பார்வையையே பிடுங்கிக் கொள்ளும்படியான பளீர் சிகப்பு நிற கதிர்களை, தனது சிகப்பு விழி பிரகாசிக்கப் பார்த்த சைரா, "ரூபி கல். நெருப்பைக் குறிக்கும் கல். ஆற்றல் மற்றும் காதலை குறிப்பா கொண்ட கல்" என்று கூற, அதேபோல் பார்போறின் கண்ணை பிடுங்கி எறியும் உணர்வை கொடுக்கும் பச்சை நிற மரகதக் கல்லினை கண்கள் மின்ன பார்த்த அடாமினா, "எமர்லான்ட்.. வளர்ச்சி, ஊக்கம் மற்றும் காதலை உணர்த்தும் கல். செடிகொடிகள் மற்றும் பூமியோட சக்தியை கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்ட மரகதக்கல்" என்று கூறினாள்.


இறுதியாக ஊதா நிற ஒளியை வெளியிடும் பளிங்கு கல்லினைப் பார்த்த தோரா மற்றும் ரெய்டன், "ஏமிதெஸ்ட் (Amethyst).. எதிர்மறை ஆற்றலை அழிக்கவும், மனதை தெளிவுபடுத்தும் ஆற்றலும் கொண்ட இந்த கல் இடி மற்றும் மின்னலின் சக்தியை கொண்டது" என்றனர்.

InShot_20240112_231147021.jpg

கார்டிலியா மற்றும் போர்ட் அந்த கல்லின் அருகே செல்ல நீல நிற வில்கள் கல்லின் கீழே இருந்தன. ஆளுக்கொரு வில்லை எடுத்துக் கொண்ட இருவரும் அலாக்ஸான்டிரைட் கல்லில் தங்கள் கரம் வைத்து "பாராடைஸ் வார்.. லார்ட் ஜோயலுக்காகத்தான் எங்க அற்பனிப்பு அத்தனையும்" என்றனர்.


அதேபோல் க்ரிஸ்டலில் கரம் வைத்து கூறிய அலாஸ்கா, பனிகட்டியால் உருவாகிய கூர்மையான பிளேடுகளை எடுத்துக் கொண்டாள்.


அங்கு ஏஞ்சலைட் கல்லின் மேல் தன் கரம் வைத்த ஐலா மற்றும் ஆலிஸ் மற்ற கரத்தினை கோர்த்துக் கொண்டு, "எங்கள் உயிர் லார்ட் ஜோயலுக்காகவே.. பாரடைஸ் வார்" என்றுவிட்டு வெளீர் நிற கண்ணாடிப் போன்ற கோடாரியை எடுத்துக் கொண்டனர்.


ரூபி கல்லில் கைவைத்த சைரா "நான் முற்றும் முழுதும் லார்ட் ஜோயலுக்கு என்னோட உயிர அர்ப்பனிக்கிறேன். பாரடைஸ் வார்" என்று கூறி சிகப்பு நிறத்தில் கோபம் கொப்பளிக்கும் விழிகளைக் கொண்ட டிராகன் சுற்றப்பட்ட கூர் வாளினை எடுத்துக் கொண்டாள்.


மரகத கல்லின் மேல் கைவைத்த அடாமினாவின் மனதில் இனம் புரியாத சலனம் ஏற்பட்டது. "என் உயிரை பாரடைஸுக்காக அர்ப்பனிக்க நான் தயார். பாரடைஸ் வார்" என்றபடி பச்சை நிற விழிகளைக் கொண்ட டிராகன் சுற்றப்பட்ட கூர் வாளினை எடுத்துக் கொண்டாள்.


அதேபோல் ஏமிதெஸ்ட் கல்லில் கரம் வைத்த தோரா மற்றும் ரெய்டன் தங்கள் சபதத்தினை எடுத்துக் கொண்டு ஊதா நிற ஈட்டியினை எடுத்துக் கொண்டனர்.


InShot_20240112_231514907.jpg

அவரவர் பிராணிகளும் தங்களது கவசங்களை சென்று அணிந்து வர, வந்தது போலவே மீண்டும் பாரடைஸ் திரும்பினர். ஆயுதங்களுடனான பயிற்சி துவங்கிட, மனமே இல்லாதபோதும் யாவரும் தங்களைப் போருக்காக தயார் செய்தனர்.


நாட்கள் சடுதியில் ஓடி, போருக்கு முந்தைய நாளும் வந்தது. தனது கம்பீர குரலை கனைத்துக்கொண்ட லார்ட் ஜோயல், "போரின் விதிமுறைகள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இருந்தாலும் போர் துவங்கும் முன்ன சொல்வது என் கடமை. போர் சரியா காலை ஒன்பது மணிக்கு நம்ம பகுதி எல்லையில் இருக்கும் போர்க்களத்தில் தான் துவங்கும். மாலை ஆறுமணி வரைதான் போர். போர்களத்தில் ஆறுமணிக்கு மேல் உபயோகிக்கப்படும் எந்த மந்திரத்திற்கும் சக்தி கிடையாது. ஒரு ஆற்றலை சார்ந்த தேவதை அதே ஆற்றலைச் சேர்ந்த தேவதைகூட தான் போர் புரியனும்னு எந்த சட்டமும் கிடையாது" என்று கூறியவர் தன் தொண்டையை சரிசெய்துகொண்ட, "பாரடைஸ் நிம்மதி கெடுவதில் எனக்கு உடன்பாடே இல்லைனாலும் இந்த போர் அவசியம். நிச்சயம் இதில் நம்ம வெற்றி பெறனும். அதுவும் நியாயமான வெற்றியா இருக்கனும்" என்றார்.


யாவரும் மண்டியிட்டு ஜோயலுக்கு தங்கள் மரியாதையை செலுத்த, மறுநாள் காலை எல்லோரும் போர்க்களத்தில் கூடி இருந்தனர். எதிர்புரத்தில் இருப்போருக்கு காஸ்மோ தான் தலைவன் என்றாலும் அவர்களுக்குமே போரில் பெரிதாக உடன்பாடில்லை.


போரினால் பாரடைஸின் நிம்மதி கெட்டுவிடும் என்ற எண்ணம் இருந்தபோதும், அவர்களது லார்ட் காஸ்மோவிற்கான அங்கீகாரம் வேண்டும் என்பதில் திடமாக இருந்தனர்.


காஸ்மோ மற்றும் ஜோயல் போர்களத்தின் மையப்பகுதியில் தத்தமது க்ரிபின் மேல் அமர்ந்த வண்ணம் ஒருவரை ஒருவர் எதிர்நோக்கினர். "அவசியம் போர் வேணுமா?" என்று ஜோயல் வினவ, "க்ரிஸ்டோ எங்கனு சொல்லிட்டா விட்டுடலாம்" என்று காஸ்மோ கூறினார்.


"முடியாது" என்று ஜோயல் கூற, "அப்போ போரைத் துவங்களாம்" என்று கூறிய காஸ்மோ தனது கிரிபினைத் தட்டி "ஜோஸ்" என்றார். லார்ட் தனது கிரிபினைத் தட்டி "ஸ்மித்" என்க இரண்டும் பெரும் கர்ஜனையோடு முட்டிக் கொண்டன. போரின் துவக்கத்தினை அது எடுத்துக் காட்ட, இரண்டு பிரிவினரும் பெரும் கூவலோடு மோதிக்கொள்ளத் துவங்கினர்.


d02f076c5610a61cb50b9cdf341b4aa3.jpg

கார்டிலியா "ஆக்வா.." என்றபடி தன் வில்லிலிருந்து அம்பை எய்ய, அது நீர்திவளைகளாய் மாறி எதிராலியின் மேனியில் சுளீரென விழுந்து பதறச் செய்தது.


அங்கு "ப்ரீஸ்" என்றபடி தன் பனி கத்திகளை தூக்கி எறிந்த அலாஸ்கா மந்திர வார்த்தைகள் மூலம் சிலரை பனியில் உரையவைத்துக் கொண்டே முன்னேற, இடி தேவதைகள் ஒருவர் இடி கொண்டு மற்றவர் இடியை சமாளித்துக் கொண்டிருந்தனர்.


அங்கு "இக்னியஸ்" என்றபடி தீ ஜ்வாளைகளை எதிராளியின் மீது சைரா எறிந்து கொண்டிருக்க, "ஸ்டார்ம்" என்றபடி பெருங்காற்றால் எதிராளிகளை பறக்க வைத்தாள் ஐலா.


தனது கூர் வாளை பூமியில் தட்டி அதிரச் செய்த அடாமினா, மந்திர சொற்களால் எதிராளியின் கரங்களை செடி கொடிகள் கொண்டு கட்டிப்போட, இரண்டு பிரிவும் ஒருவருக்கு மற்றவர் சளைக்காது போர் புரிந்தனர்.


"ஸ்மாஷ் (smash)" என்றபடி பாறைகளை துகள்களாக உடைத்து எதிராளி மீது எறிந்த அடாமினாவை பின்னிருந்து யாரோ தாக்கிட, முதுகில் வந்து உடைந்த பாறைகள் அவளுடலில் ரணங்களை ஏற்படுத்தியது.அதில் கோபக் கனல் கொப்பளிக்க திரும்பியப் பெண் உறைந்து நின்றட, அவளைக் கண்டு தானும் அதிர்ந்து நின்றான், ஜான் ஃபேர்லே!

b94812135d5000e73c9650899b42b355.jpg

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩

 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-08

தான் காண்பது கனவா இல்லை நினைவா என்று பரிதவித்த நிலையில் அடாமினா தன் முன் நிற்பவனை வெறித்து நிற்க, அவளை நம்பமுடியாதப் பார்வை பார்த்து நின்றான் ஜான் ஃபேர்லே. அவன் நினைத்தது ஒன்றாக இருக்க நடந்தது வேறாகிப்போனதே!

இருவரும் தங்கள் சுற்றம் மறந்த நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, அடாமினாவின் மீது நெருப்புப் பந்து ஒன்று வீசப்பட்டது.

அதில் பொத்தென அவள் கீழே விழவும் சுயம் பெற்றவன் தனக்கு பக்கவாட்டி திருப்பிப் பார்க்க, அடுத்த பந்தை வீச தன் கைகளை உயர்த்தினாள் டைஸா.

"நோ டைஸா.." என்று அவளை தடுத்து நிறுத்தி பரிதவிப்போடு பார்த்தவன், "எ.. என் ஏஞ்சல்" என்று கண்கள் பனிந்து குரல் கரகரக்கக் கூறினான். அதில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற டைஸா, "அ..அடாமினா?" என்று வினவ, ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தான்.

இங்கு கீழே விழுந்த அடாமியைக் கண்டு பதைபதைத்து வந்த அலாஸ்கா, "அடாமி.." என்க, சோர்ந்த விழிகளோடு அவளை ஏறிட்டாள். அப்போது அவர்களை நோக்கி வந்த பனிக்கத்தியை தன் நெருப்பால் உருக்கிவிட்டு திரும்பிப் பார்த்த சைரா, "என்ன பண்றீங்க? அடாமி என்ன ஆச்சு?" என்றாள்.

பேசும்போது தன் கரத்தைக் கிழித்துச் சென்ற பனிக்கத்தியைக் கண்டு எரிச்சலுற்ற சைரா திரும்பி நெருப்பை வீச, ஆத்திரத்தில் தப்பிய குறி டைஸா மற்றும் ஃபேர்லேவிடம் சென்று தாக்கியது. அதில் பதறி எழுந்து அடாமி "சைரா நோ" என்க, அப்போதே ஃபேர்லேவைக் கண்ட சைரா, "ஓ லார்ட்.." என்றபடி தன் தலையில் கைவைத்துக் கொண்டாள்.

ஒன்றும் புரியாத நிலையில் அடாமி, சைரா மற்றும் ஃபேர்லேவை மாற்றி மாற்றி பார்த்த அலாஸ்கா, "அடாமி… சைரா.. போர் முடிய இன்னும் ஒருமணி நேரம் இருக்கு. மாயக்கல் மேல சத்தியம் பண்ணது நினைவு இல்லையா? மத்த சிந்தனையை விட்டுட்டு போரை கவனியுங்க" என்று கத்தினாள்.

அலாஸ்காவை அடாமி கலக்கமாக ஏறிட, அதில் மனதால் ரணம் உணர்ந்த போதும் போர்க்களத்தில் அவையாவையும் புறம் தள்ள வேண்டி அலாஸ்கா தன் கண்களை மூடித் திறந்தாள்.

அதை கண்டு தானும் தன்னை நிலைப்படுத்திய அடாமினா வேங்கையென எழுந்து தன் மனதின் மொத்த கோபத்திற்கும் சேர்த்து தனது கூர் வாள் கொண்டு பூமியில் தட்டினாள். அதில் அவளைச் சுற்றி இருந்த சில அடிகள் பூமி அதிர்ந்து அங்கே நின்றிருந்த தேவதைகள் கீழே விழுந்தனர்.

ஃபேர்லேவின் புறம் தன் பார்வையை செழுத்தாது எதிர் திசை நோக்கி விர்ரென்று பறந்தவள், "ஆர்காட்" என்று கத்த, அவளிடம் பறந்து வந்தது அவளது டிராகன். அதில் ஏறி அமர்ந்து வேறு புறம் சென்று அடாமி தன் போரைத் துவங்க, டைஸா ஃபேர்லேவை அவனது நிலையிலிருந்து மீட்டுச் சென்றாள்.

ஒருவரை ஒருவர் சளைக்காத இரு அணியும் மாறி மாறி போரிட, ஆகாயத்தில் காஸ்மோவிற்கும் ஜோயலுக்கும் பெரும் போர் நடந்துகொண்டிருந்தது. தன் ஈட்டி கொண்டு தோரா இடியை உருவாக்கி எதிராளி மீது ஏறிய, பதிலாய் வந்த சுழல் காற்றில் சிக்கி தரையில் பிரட்டி எறியப்பட்டாள்.

தன்னவள் படும் துன்பத்தைக் கண்டு பதைபதைத்து ஓடி வந்த ரெய்டன், அந்த காற்று தேவதையை தன் மின்னல் தாக்குதலால் தூர வீசிவிட்டு அவளை தூக்கிவிட, வலியோடு ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு எழுந்து மீண்டும் போரிட்டாள்.

அங்கு ஆலிஸின் மீது பெரிய கல் ஒன்று வந்து விழுக, கீழே விழுந்தவன் அந்த கல்லை சிரமப்பட்டு தன்மீதிருந்து நகர்த்திவிட்டு எழுந்தான். அடுத்து அவன்மீது பனிக்கத்திகள் வீசப்பட வேகமாக அவன் முன் வந்த அவற்றை தான் வாங்கிக் கொண்ட ஐலா, காற்றால் அவர்களை பிரட்டி வீசி எறிந்தாள்.

"ஐலா.." என்றபடி தன்னவளைத் தாங்கியவன் அந்த பனிக்கத்திகளைப் பிடுங்கி எறிய, "ஜாக்கிரதை ஆலிஸ்" என்றுவிட்டு விருட்டென பறந்து சென்று சண்டையைத் தொடர்ந்தாள். இங்கு கார்டிலியாவும் ஃபோர்டும் சேர்ந்து போரிட்டு அடிகள் பல வாங்கிக் கொள்ள, உச்சபட்ச கோபத்தின் வெளிப்பாட்டில் வெறி பிடித்தவள் போல சுற்றினாள் அடாமினா.

தன்னை தாக்க வந்தவர்கள் கைகளை முற்செடிகளால் கட்டிப்போட்டவள் முன் மீண்டும் ஃபேர்லே! தங்கள் இணத்தை சேர்ந்த யாரோ அவன் மீது பனி கத்திகளை வீசிக் கொண்டிருப்பதையும் அதில் பல கீறல்கள் பெற்று சளைக்காமல் அவன் பதிலடி கொடுப்பதையும் வேதனையோடு பார்த்தாள்.

அப்போதே அவளை நோக்கி வேகமாக ஒரு கூர்மையான பாறை பறந்து வர, அதைக் கண்டவன் "ஃப்ளோரா" என்று கத்திய நொடி அந்த பாறை கரைந்து மறைந்து போனது. அதுமட்டுமல்ல அங்கு மந்திரத்திற்கு கட்டுபட்ட அணைத்தும் அதன் இயக்கத்தை நிறுத்தியது! ஆம்.. மணி மாலை ஆறாகிவிட்டதால் அந்த இடம் மந்திரசக்திக்கு ஏற்புடையதாக இயங்கவில்லை!

முதல் நாள் யுத்தம் முடிவடைந்தது! ஃபேர்லேவை வைத்த கண் எடுக்காமல் பார்த்தவள் தோய்ந்து அப்படியே மடங்கி அமர, சைரா தான் அவளைத் தேடிக் கொண்டு பறந்தோடி வந்தாள். அடாமினா மற்றும் ஃபேர்லேவின் விழிகள் ஒன்றை ஒன்று கண்ணீரோடு தழுவி நிற்க, "மு..முன்னயே தெரியுமா?" என்று வேதனையோடு கரகரத்த குரலில் வினவினாள்.

அதில் அவளை நெருங்கி வந்து தானும் மண்டியிட்டவன், "சத்தியமா நீயும் ஃபேரி தான் என்பதைத் தவிர எதுவுமே தெரியாது ஃப்ளோரா" என்றான். கண்களை அழுந்த மூடியவள் விழியிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, அடாமியின் தோழர்கள் மற்றும் ஃபேர்லேவின் தோழர்களான டைஸா, லூமி மற்றும் ஈடன் வந்து நின்றனர்.

சைரா, அடாமி, ஃபேர்லே மற்றும் டைஸாவைத் தவிர யாருக்கும் ஏதும் புரியவில்லை! கண்ணீரோடு தன் கரத்தினை மெல்ல நிமிர்த்தி அவன் முகத்தினைத் தொட்டுப் பார்த்தவள் ஒரு விரக்தியான சிரிப்போடு, "இதுக்கு நான் நினைச்ச போல நீங்க மனிதராவே இருந்திருக்கலாம்" என்க, அவள் கரம் பற்றி அதில் முகம் புதைத்து அழுதான்.

2bb41826049e9e6f29a2ebc603c9ec7a.jpg

"அடாமி.. என்ன நடக்குது?" என்று அலாஸ்கா வினவ, ஃபேர்லேவிடமிருந்து தன் கரத்தினை உருவிக் கொண்டவள், "ஆர்காட்.." என்று கத்தினாள். அவள் கூப்பிட்ட குரலுக்கு ஆர்காட் வந்து நிற்க, விருட்டென்று அதன் மேல் ஏறி அமர்ந்தவள் பறந்திருந்தாள்.

சென்றவளை வேதனையோடு பார்த்த சைரா, "நி..நீங்க எப்டி?" என்க, "ஜா.. ஜான் ஃபேர்லே. லார்ட் காஸ்மோ பிரிவைச் சேர்ந்த லேன்ட் ஃபேர்ரி" என்றான். அவளுக்கு ஆச்சரியம் தாளவில்லை!

c06420400ab134e31c6ea284b6a2ca8d.jpg

ஜான் ஃபேர்லேவும் பாரடைஸைச் சேர்ந்த தேவதையே! ஆரம்பத்திலேயே அடாமினாவை தேவதை என்று ஜான் கண்டுகொண்டான். ஆனால் அப்போதும் அவள் ஜோயலின் பிரிவைச் சேர்த்தவளாக இருக்கக்கூடும் என்று அவன் சற்றும் யோசிக்கவில்லை!

அவள் தன்மீது காட்டும் ஆர்வத்தில் தன்னை கண்டுகொண்டாள் என்று எண்ணியவன் சைரா அடாமியைக் கடிந்து கொள்வதைக் கேட்டு அவர்கள் தன்னை மனிதனாக எண்ணுவதைப் புரிந்து கொண்டான்.

காதல் பயிர் வளர்த்துவிட்டு பாரடைஸில் வைத்து இன்ப அதிர்ச்சி கொடுப்பதாக நினைத்து கனா கண்டிருந்தவனுக்கு வாழ்விலேயே மறக்க முடியாதபடி அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது அந்த விதி!

சில நிமிடங்களில் அடாமியின் நட்பு வட்டம் பயிற்சி பூங்காவில் கூடியிருக்க, அவரவர் கழுத்தில் அணிந்திருக்கும் மாயக்கல்லின் சிறு பகுதியை டாலராகக் கொண்ட சங்கிலியை தங்கள் உள்ளங்கையில் அழுந்த பிடித்து கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தனர்.

அனைத்து மாயக்கல்லுக்கும் காயங்களை ஆற்றும் சக்தி உள்ளதால் போர் முடிந்தவுடன் தங்கள் காயங்களுக்கு மருந்திடவே அவ்வாறு அமர்ந்திருந்தனர். சில நிமிடங்களில் அனைவரும் கண் திறக்க சுற்றி முற்றி பார்த்த அலாஸ்கா, "அடாமி எங்க?" என்றாள்.

"தெரியலை" என சைரா பெருமூச்சு விட, "யாரு சைரா அது? காஸ்மோ பிரிவை சேர்ந்த ஃபேரி கூட உங்களுக்கு எப்படி தொடர்பு?" என்று தோரா வினவினாள்.

"அவர் பேரு ஃபேர்லே. லார்ட் ஜோயல் படிக்க அனுப்பிருந்தப்போ நான் அடாமி அன்ட் ஐலா படிச்ச இடத்துல தான் அவரும் படிச்சார். அடாமி.. அடாமினா தினம் லைப்ரேரிக்கு இவர பாக்குறதுக்குனே‌ போவா. நாங்க அவர ஒரு மனிதராக தான் நினைச்சோம். ஒரு கட்டம் மேல அவளோட ஆர்வமான பார்வை புரிஞ்சு நான் கண்டிச்சேன். வெறும் சைட்டிங் தான்னு சமாளிச்சா. ஆனா அவ அவர காதலிக்குறாளோனு எனக்கு தோன்றிச்சு. எதுவானாலும் இனி அவளா சொல்லட்டும்னு விட்டுட்டேன். ஆனா அவரும் ஃபேரியா அதுவும் காஸ்மோ பக்கம்.. நினைச்சும் பார்க்கலை" என கூறிய சைரா பெருமூச்சு விட்டாள்.

ஐலாவைக் கூட்டிச் செல்ல வந்தபோது அடாமி அழுததும், 'உன்கிட்ட பாரடைஸ் வந்ததும் சொல்றேன்' என்று கூறியதும் அலாஸ்காவுக்கு நினைவு வர, எழுந்து நின்று "எய்றா" என்று கத்தினாள். வேகமாக ஓடிவந்த வெள்ளை சிங்கம் கர்ஜித்தபடி வந்து நிற்க, அதன் மேல் ஏறி அமர்ந்து அதை கிளப்பினாள்.

ஏதோ ஓர் மலைமுகட்டில் இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்த அடாமினா பின்னே கேட்ட எய்றாவின் கர்ஜனையில் திரும்ப, பறந்து வந்து அவளை அணைத்துக் கொண்டாள் அலாஸ்கா.

தோழியின் அரவணைப்பில் முற்றும் முழுதும் உடைந்து போனவள், "இ.. இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை அலாஸ்கா.. மனசே நொருங்கி போன மாதிரி இருக்கு" என்று கதற, அவள் முதுகை வருடிக் கொடுத்தவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

அங்கு கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த ஜானின் தோள் மீது கரம் வைத்த பனி தேவதையான ஈடன், "ஜான்.." என்க, "நான் இத கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவே இல்ல ஈடன்.. மனசே நொருங்கி போன மாதிரி இருக்கு" என்று அங்கு அவனவள் கூறிய வார்த்தைகளையே தானும் மொழிந்தான்.

ஜான் தோளில் அழுந்த கை வைத்த காற்று தேவதையான லூமிக்குமே என்ன கூறி அவனை சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.

இங்கே அலாஸ்காவைக் கட்டிக் கொண்டு கதறி அழுத அடாமினா, "இ..இதை.. இதுக்கு அவர் மனிதராவே இருந்திருக்கலாம் அலாஸ்கா. கிடைக்கவே கிடைக்காது என்ற தூரத்திலாவது வைத்திருப்பேன். இப்ப கைக்கெட்டும் தூரத்திலும் தொடமுடியாத நிலை. கொல்லுது அலாஸ்" என்று கூற, அவள் முதுகை வருடிக் கொடுத்தவள், "எனக்கு உன் நிலைமை புரியிது அடாமி. ஆனால் இதில் நம்ம செய்ய ஒன்னும் இல்லை. உனக்கு கவலை தீரும்வரை கதறி அழுதுடு.. இதைத்தவிர உனக்கு சொல்ல என்கிட்ட எதுவும் இல்லை" என்றாள்.

அதில் தோழியை மேலும் இறுக அணைத்துக் கொண்டவள் அழுது கரைய, “கீச்” என்று கழுகின் சத்தம் கேட்டது. இருவரும் தங்கள் அணைப்பிலிருத்து விலக, ஜோயல் தனது க்ரிஃபின் மீதிருந்து இறங்கி வந்தார்.

வந்தவர் அலாஸ்காவை ஓர் அர்த்தமுள்ள பார்வை பார்க்க, கண்களை அழுந்த மூடித் திறந்தவள், எய்றாவின் மீது ஏறி அமர்ந்துகொண்டு புறப்பட்டாள். அவள் சென்றதும் அடாமினா புறம் திரும்பியவர், தனது கரகரத்த குரலில் "அடாமி" என்க, கண்களை அழுந்த மூடித் திறந்தாள்.

"எனக்கு முன்னமே.." என்று அவர் முடிப்பதற்குள் "தெரியும்" என்றாள். ஜோயலை நேரேக்கு நேர் நோக்கியவள், "அவர் காஸ்மோ பிரிவை சேர்ந்த தேவதைனு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு எனக்கு தெரியும். அதேபோல பொய்யான ஒரு நம்பிக்கையை எனக்கு கொடுக்க வேண்டாம்னு தான் நீங்க அதை சொல்லலைனும் எனக்கு தெரியும் லார்ட். எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் இல்லை" என்றாள்.

"தெரியும்.." என்றவர் அவளருகே அப்படியே அமர, நா(க்கு) தழுதழுக்க "அவசியம் போர் வேணுமா லார்ட்" என்று கேட்டுவிட்டு சட்டென தன் வாயை மூடிக்கொண்டாள். அவள் நிலை கண்டு பரிதவித்துப் போனவர், "நீ பயப்பட வேண்டாம் அடாமினா.. நான் இப்ப லார்ட் ஜோயலா வரலை. உன்னோட வெல்விஷரா, கார்டியனா வந்திருக்கேன்" என்க, அவர் தோள் சாய்ந்து அழுதவள் சில நிமிடங்களில் எழுந்து நின்றாள்.

தன் கண்ணீரை அழுந்த துடைத்தவள் தனது சங்கிலியின் டாலரை பிடித்துக் கொண்டு தனது காயங்களை அப்போதே ஆற்றினாள். "நான் மாயக்கல் மேல சத்தியம் பண்ணிருக்கேன் லார்ட். அவரும் பண்ணிருப்பார்.. எங்க த..தனிப்பட்ட விடயத்தை போருக்குள்ள கொண்டுவர மாட்டோம்" என்றுவிட்டு அங்கிருந்து பறந்தாள்…

f65a73e0d28b53742eefb98f91180448.jpgஉங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩

 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-09

d27cca9e669f8eba0df48d91873c4802.jpg


இரண்டாம் நாள்:-


போர்க்களம் முழுதும் பூமி பிளந்து கிடந்தது. சில உயிர்ச்சேதமும் துவங்கியிருந்தது. எதிராளியின் உயிரைப் பறிக்கும் எண்ணம் இரு அணிக்கும் இல்லாது இருந்தபோதும் போர்க்களம் புகுந்துவிட்டால் அது நடக்குமா?


இருபுறமும் உயிர் சேதம் சரிவகித்து நடந்துகொண்டிருக்க, யாவரும் ஆக்ரோஷமாக போரிட்டுக் கொண்டிருந்தனர். காற்றின் சக்தியைக் கொண்டு எதிராளியைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த ஐலாவின் கரத்தில் முற்செடிகள் கொண்டு எதிராளி ஒருவன் கட்டிப்போட, தன் கரம் அசைத்து மந்திரம் கூற முடியாது தவித்தாள்.


மேலும் கைகளை அசைக்க அசைக்க அவை குத்தி ரத்தம் வரச்செய்ய, "ஆ.." என்று சிறு கேவலோடு "ப்ரிஸாஆ" என்று கத்தினாள். அவளது யுனிகார்ன் பறந்து வரவே, அதில் ஏறி அமர்ந்தவள் "அடாமிகிட்ட போ" என்றாள்.


அந்த எதிராளியும் அவளைத் தொடர்ந்து தனது மந்திரம் மூலம் பாறைகளைத் தூக்கி எறிய, சற்றே எரிச்சலுற்றவள் வலித்தாலும் சரியென்று இரு கையையும் ஒன்று சேர்த்தபடி தனது கோடாரியை அவன் மேல் தூக்கி வீசினாள்.


சரியாக அது அவன் நெஞ்சில் குத்திவிட்டு எம்பி மீண்டும் இவளிடமே பறந்து வர, "ஆ.. இதை எடுக்க முடியலை.. இன்னொரு லேன்ட் ஃபேரியால தான் எடுக்க முடியும் போல ப்ரிஸா. சீக்கிரம் போ.." என்று ஐலா கிட்டத்தட்ட அழுதுவிடுவதைப் போல் கூறினாள்.


சிலமணிநேரம் வானில் பறந்தபடி தேடிய ப்ரிஸா, அடாமினாவை கண்டுகொண்டு அவளிடம் வர, சரியாக தரையிறங்கும் நேரம் அதன்மேல் நெருப்பு பந்து ஒன்று வந்து வீழ்ந்தது. அதில் ப்ரிஸா துள்ளிக் குதிக்க, பிடிமானமின்றி ஐலா கீழே விழுந்தாள்.


மேலும் அவளை நோக்கி எதிராளி நெருப்பு பந்துகளை வீச, தான் முன்னே வந்த அவற்றை தன் கரங்களில் வாங்கிய அடாமினா ஐலாவைக் கண்டவுடன் அவள் பேசும் முன்பே அவள் நிலையைப் புரிந்துகொண்டு கைகளில் கட்டியிருந்த முற்செடி அவிழ மந்திரம் போட்டாள்.


அவளது கரத்திலிருந்து பீய்த்துக் கொண்டு வந்த முற்செடி கொடுத்த வலியில், "ஆ…" என்று அலறியவள் தனது கோடாரியை எடுத்துக் கொண்டு ப்ரிஸா மீது ஏறி அமர, பறக்கவிருந்த ப்ரிஸாவின் முன் வந்த அடாமி, "ஐலா.." என்றபடி அவள் கரத்தில் மந்திரம் போட்டாள். ஏதோ ஓர் பச்சிலை அவளது காயங்களில் வந்து ஒட்டிக் கொள்ள, "இது காயத்தை ஆற்றாது.. ஆனா வலியைப் பெரிது பண்ணாம இருக்கும்" என்றுவிட்டுப் அடாமி பறந்தாள்.


அங்கே ரெய்டன் முன்னே பல பனி தேவதைகள் இருக்க, சுற்றி சுற்றி பல பனிக்கத்திகள் எறியப்பட்டது. தனது ஈட்டியை சுற்றி அவற்றை தன்மீது படாதபடி அவன் தற்காத்துக்கொள்ள, ஒரு தண்ணீர் தேவதை அவன் மீது சுரீரென நீர்ப் பந்தை எறிந்தாள்.


அதில் நிலை தடுமாறியவன் மீது பனிக்கத்திகள் வந்து குத்திவிட, மீண்டும் எழமுடியாது அடிவாங்கி நின்றான். அவனை சுற்றி உள்ள எதிராளிகள் யாவரும் திடீரென வெள்ளத்தில் அடித்துச் சென்றதுபோல் நீரில் அடித்துத் தள்ளப்பட, ரெய்டன் அப்படியே மடங்கி அமர்ந்தான்.


அவனிடம் விரைந்து வந்த ஃபோர்ட் அந்த கத்திகளை பிடுங்கி எறிந்து அவன் முகத்தில் நீரை தெளித்து நிமிர்த்த, இருவருமாக காற்றில் தூக்கி எறியப்பட்டு மீண்டும் எழுந்து தடுமாற்றத்தோடு போரைத் தொடர்ந்தனர்.அங்கு ஈடனும் அலாஸ்காவும் நேருக்கு நேர் நின்று தங்கள் பனிக்கத்திகளை மாறி மாறி வீசி சண்டையிட, ஈடன் பக்கம் சற்றே வலு பெற்றது.


அதில் தடுமாறியவள் விழிகளில் நிமிட நேரம் கலவரம் வந்து போக, பெரிய பனிப்பந்தை அவள் மேல வீசி சாய்த்தான். அதிலிருந்து எழமுடியாது மூச்சுத் திணறிய அலாஸ்கா தத்தளிக்க, என்ன நினைத்தானோ மீண்டும் தானே அந்த பனியை விலக்கினான்.


அதில் தவித்து தத்தளித்து எழுந்தவள் மூச்சு வாங்க அவனைப் புரியாமல் பார்க்க, "அவ்ளோ சீக்கிரம் உன்னை சாக விட்டுட மாட்டேன்" என்றுவிட்டு பனி கத்திகளை எறிந்தான். கண்களில் ரௌத்திரம் கொப்பளிக்க அவனைப் பார்த்தவள் தானும் அவனுக்கு சளைக்காமல் போரிட்டாள்.


அங்கு அடாமினாவுக்கும் இரு எதிராளிக்கும் பலத்த சண்டை நடந்துகொண்டிருந்தது. பனிக்கத்தியை வீசும் பனிதேவதையும் காற்று தேவதையும் சேர்ந்து அவள் ஒருத்தியை எதிர்த்து நிற்க, தன்னால் முடிந்தமட்டும் சமாளித்துக் கொண்டிருந்தாள்.


அவளைப் பரிதவிப்போடு பார்த்த ஃபேர்லேவின் கால்கள் தங்கள் ஆட்களிடம் சென்று சொல்லி அவளைக் காப்போமா என தவித்தது. அதில் நிலையற்று இருந்தவனை ஜோயலின் பிரிவினர் தாக்கிடவே, அவன் நெற்றியிலிருந்து வடிந்த குறுதியைக் கண்டு பதைபதைத்து ஓடினாள்.


ஆனால் அவனை நெருங்கும் முன்பே அவளது உள்ளுணர்வு அவளைத் தட்டியெழுப்ப, ஆணி அடித்தார் போல் நின்றவளைப் பின்னிருந்த தாக்கிய காற்று தேவதை பிரட்டி எறிந்திருந்தான்.


தன் கண்முன் நடந்த காட்சியில் உடைந்துபோன ஃபேர்லே ஆத்திரம் பெற்று தன் ஆத்திரத்தை போரில் காட்டி, எதிராளியைத் தாக்க, அவனை வலிநிறைந்த புன்னகையுடன் பார்த்தவளும் எழுந்து மீண்டும் போரிட்டாள்.


இங்கே தண்ணீரை இறைத்து எதிராளியை மூச்சுத்திணற வைத்துக் கொண்டிருந்த கார்டிலியா, தன்னால் முடிந்தவரை போராடிக் கொண்டிருந்தாள். திடீரென அவள் மீது வந்து வீழ்ந்த நெருப்புப் பந்தில் தடுமாறி கீழே விழுந்தவளைத் தீ சூழ்ந்துக் கொண்டது.


அதை தன் நீர் கொண்டு சட்டென அணைத்தவள் இதழில் ஒரு கர்வப் புன்னகை வந்துபோக அதில் எரிச்சலுற்ற எதிராளி தனது இடி தேவதைத் தோழனை அழைத்து வர, இடி தேவதையவன் கார்டிலியா மீது மின்னல் கீற்றுகளை பாய்ச்சினான். அது அவளை சென்று அடைந்து அதன் ஆதிக்கத்தை செலுத்த துவங்கிய நொடி மணி ஆறைத் தொட்டிட மந்திரங்கள் யாவும் நிறுத்தப்பட்டது!


மின்னல் கீற்று பட்ட அதிர்வில் கார்டிலியா மயங்கி விழுந்திட, "கார்டி.." என்றபடி ஃபோர்ட் ஓடி வந்தான். அவன் கண்கள் கண்ணீரில் பொங்கி வழிய தோழர்கள் யாவரும் பதைபதைப்போடு வந்தனர்.


தோரா வந்து அவள் கன்னம் தட்டி எழுப்ப முயற்சிக்க அவளிடம் அசைவு இல்லை. அவளை இறுக அணைத்துக் கொண்ட ஃபோர்ட் கண்ணீர் சிந்தத் துவங்கிட, தோழர்களின் கண்களும் கலங்கிப் போனது. "ஃபோர்ட்.. மாயக்கல் டாலரை அவள் கையில் வைத்து மூடு" என்று ரெய்டன் கூறவும், அவளது கழுத்திலிருந்த சங்கிலியின் டாலரை அவள் உள்ளங்கையில் வைத்து அழுந்த மூடிப் பிடித்தான்.


அதிலிருந்து பிரகாசமான ஒளி உருவாகி மறைய, மெல்ல கார்டிலியா கண் விழித்தாள். அப்போதே அனைவருக்கும் மூச்சு வந்த உணர்வு!


(அனைவரது கழுத்துச் சங்கிலியிலும் மாயக்கல்லால் ஆன சிறிய டாலர் பொருத்தப்பட்டிருக்கும். தினமும் போர்க்களம் விட்டு வந்ததும் அதன் சக்தி மூலம் தங்கள் காயங்களை ஆற்றிக் கொள்வர். ஆனால் அதனாலும்‌ ஒரு குறிப்பிட்ட அளவு காயங்களை மட்டுமே ஆற்ற முடியும்.)


கார்டிலியாவைக் கட்டியணைத்த ஃபோர்ட், "உயிரே போயிடுச்சுடி" என்று கூற, "அவ்ளோ சீக்கிரம் போக விட்டுடுவேனா" என்றாள்.


c6f41f54cb225e414e0597993cd9b587.jpg

ஆசுவாசம் அடைந்த அனைவரும் எழுந்து புறப்பட, தோழர்களுடன் செல்லவிருந்த அடாமினா பின்னே திரும்பிப் பார்த்தாள். ஈடன், லூமி, டைஸா மற்றும் ஃபேர்லே அங்கு நின்றிருக்க, என்ன நினைத்தாளோ அவனை நோக்கி வந்தாள்.


தன் கரம் விட்டு மீண்டும் போர்க்களம் செல்லும் தோழியின் செயலில், "அடாமி" என்றபடி அலாஸ்கா திரும்பவும் யாவரும் திரும்பிட, நடந்துகொண்டிருந்தவள் நடை தளர்ந்தது. தன் கண்களை அழுந்த மூடித் திறந்த அடாமி, ஃபேர்லேவை நோக்கி பறந்துவர, அவள் தன்னிடம் பேச விழைகிறாள் என்பது புரிந்தவனும் அவளை நோக்கி வந்தான்.


இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்க, "டோர் மலையில் உங்களுக்காக காத்திருப்பேன்" என்றுவிட்டு மீண்டும் தோழர்களை நோக்கி விரைந்திருந்தாள். அவள் கண்கள் அடர் பச்சை நிறத்தில் இருண்டிருந்தது. ஆனால் ஒருதுளி நீர் கூட கசிய மறத்து நின்றது.


தங்கள் இணைக்கு ஒரு அடிபட்டாலே தங்கள் மனம் இத்தனை தூரம் பதைத்து துடிக்கின்றது. இதில் உயிரானவனுக்கு எதிராக போரிடுவது அவள் மனதை எத்தனை தூரம் ரணப்படுத்தும் என்பது புரிந்த ஜோடிகள் அனைவருக்கும் அவளைக் காணவே வேதனையாக இருந்தது.


"ஆர்காட்" என்று கத்தியவள் டிரேகன் வந்ததும், "நான் டோர் மலைக்கு போயிட்டு வரேன்" என்று பொதுவாகக் கூறிவிட்டு திரும்பிப் பார்க்க, அங்கு "ஆடம்.." என்று கத்திய ஃபேர்லே தனது டிராகன் மீது ஏறி அமர்ந்தான்.


இரண்டு டிரேகனும் வெவ்வேறு திசையில் பயணித்தபோதும் அவை சேரப்போவது ஒரே இடத்தைத்தான் என்பது அங்குள்ள யாவருக்கும் தெரிந்தது. முதலில் அம்மலையை அடைந்த அடாமினா அவனுக்காகக் காத்திருக்க, தானும் அவ்விடம் வந்து சேர்ந்தான்.


அவனைக் கண்டவுடன் அவள் கண்களில் நீர் நிறைந்துக் கொள்ள, கண்களை இறுக மூடிக் கொண்டு நின்றாள். அவள் முன் வந்து நின்றவன், அவளது ஈரக் கன்னங்களைத் துடைக்க, கேவல் ஒலியோடு அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

4d5956650604e7684cef9d5c6174b968.jpg


கட்டுப்படுத்த முடியாத வேதனையில் கண்கள் கலங்கிய ஜானும் அவளை இறுக அணைத்துக் கொள்ள, சில நிமிடங்கள் இருவரின் கண்ணீர் துளிகள் மட்டுமே அங்கு சூழ்ந்தது.


அவனை நிமிர்ந்து பார்த்தவள், "இதை நான் எதிர்ப்பார்க்கலை" என்று கூற, "நானும்" என்றான். "இதுக்கு நீங்க மனிதராவே இருந்திருக்கலாம்னு தோனுச்சு" என்று அவள் கூற, "எனக்கும்" என்றான்.


"ஏன் இப்டி கொல்லுறீங்க?" என்று கலங்கியபடி தன் அணைப்பை அவள் இறுக்க, "தெரியலையே" என்று கண்ணீரோடு குழைந்தது அவன் குரல். "இந்த போர் எனக்கு பிடிக்கவே இல்லை" என்று அவள் கூற, அவன் சத்தமாகவே அழுது விட்டான்.


"உங்கள யாரும் தாக்கும்போது.." என்று அவள் திணற, "உயிரே போற போல இருக்கு" என்று அவள் வாக்கியத்தை முடித்தான். மீண்டும் சில நிமிடங்கள் மௌனமாக நகர, அவனை விட்டுப் பிரிந்தவள், தன் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.


"இது பாரடைஸ் வார்.. பல வருடங்களுக்கு முன்பு தீயசக்திக்கும் விக்டோரியா செபாஸ்டீனுக்கும் நடந்தது. இன்னிக்கு விக்டோரியா வம்சத்துக்குள்ளயே நடக்குது. தெரிந்தோ தெரியாமலோ நம்ம எதிர் எதிர் பிரிவினர்களை ஆதரிக்குறோம். மா..மாயக்கல் மேல சத்தியமும் பண்ணிட்டோம்.." என்று பேசியவள் குரல் உடைந்துத் தடுமாற, "மாயக்கல் சத்தியத்தை மீற முடியாது. போர்களத்தைப் பொருத்தவரை ந..நம்ம எதிராளிகள். அதனால போரில் ஒருவரை மற்றொருவர் தாக்கும் நிலை வந்தாகூட‌ கா..காதலை ஒ..ஒதுக்கி வச்சுட்டு கடமைய பார்க்கனும். மற்றவருக்கு ஏற்படும் காயங்களைப் பார்த்து போர்க்களத்தில் தன்னிலை இழக்கக் கூடாது" என்று அவள் கூற வந்த வாக்கியத்தை வார்த்தை மாறாது தானே கூறி முடித்தான்.


'அவனுக்கும் தனக்குமான புரிதலில் மகிழ்வதா? அவன் கூறிய வார்த்தைகளின் வீரியத்தில் மடிவதா?' என்று எண்ணியவள் மடிந்தமர்ந்து அழ, தானும் அவளை நெருங்கி அமர்ந்து அணைத்துக் கொண்டான். "நமக்கு ஏன் இப்படி?" என்று அடாமி வினவ, பதிலேதும் கூற முடியவில்லை அவனால்.

daf9b56935ce5aa855cfea5acba440c5.jpg


அவளை விடுவித்து எழுந்தவன், "போலாம் ஃப்ளோரா.. போர்க்களத்தில் சந்திப்போம்.. எதிரிகளாக" என்று கூற, தானும் எழுந்து நின்று ஒரு கோணல் புன்னகையுடன், "சந்திக்கலாம்.." என்றாள்.


தன் ஆர்காட்டின் அருகே சென்றவள் என்ன நினைத்தாளோ, "ஃபேர்லே.." என்றபடி திரும்ப, அவனும் திரும்பிப் பார்த்ததும் "ந..நம்ம காதல்.. நம்ம இல்லாமல் போனாலும் இந்த காதல் சாகாதுல" என்று வினவினாள். சட்டென மந்திரம் போட்டு அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன் அவள் அதரங்களை சிறை செய்துக் கொள்ள, கண்களில் கண்ணீரோடு தன் அதரங்களை அவனுக்கு ஒப்படைத்து நின்றாள்…


தன் இதழ் சிறையிலிருந்து அவளுக்கு விடுதலைக் கொடுத்தவன், "என் கொடூரங்களை தாங்கிக்கொள்ள பழகிக்கோ" என்று அவள் இதழை வருடிவிட்டுச் செல்ல, அவன் வருடிச் சென்ற இதழைத் தானும் வருடிக் கொண்டவள் கண்ணீரோடு ஒரு புன்னகையை உதிர்த்தாள்.

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩

 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-10

மூன்றாம் நாள்…

01c52a2915e8156d7eac4aa325ae3cc2.jpg

வானில் இடிகள் மோதி டமார் டமார் என்ற ஒளியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.. "காஸ்மோ.. இந்த போரை முடித்துக்கொள்ள உனக்கு தோனவே இல்லையா?" என்று ஜோயல் வினவ, "நிச்சயம் தோனும்.. கிரிஸ்டோ என் கைக்கு வந்தா.." என்று காஸ்மோ அதையே கூறினான்.


"நடக்காது என்று தெரிந்தும் அதை நீ ஏன் கேட்குற?" என்று ஜோயல் வினவ, "விரும்பிய பதில் கிடைக்காது என்று தெரிந்தும் நீங்க அதே கேள்வியை கேட்கலையா?" என்று பதில் கேள்வி கேட்டான்.


கீழே கேட்கும் பேரிரைச்சலில் தன் காதுகள் அதன் இயக்கத்தை நிறுத்திவிடக்கூடாதா என்ற எண்ணம் தான் ஜோயலுக்கு.. இன்னும் சொல்லப்போனால் காஸ்மோவிற்கே அந்த இரைச்சலின் ஒலியில் மனம் ஆட்டம் கண்டதே உண்மை!


இங்கே ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் நின்றுகொண்டிருந்த அடாமினா மற்றும் ஃபேர்லேவின் கண்கள் அடர் பச்சையாய் மினுமினுத்தது. கோபம்… கோபத்தின் ஜ்வாளை தான் அவை.. தங்களை எதிரெதிரே போரிட வைத்திட்ட விதியின் மீதான கோபத்தைத் தங்கள் மீதே காட்டிக் கொண்டிருந்தனர்.


6a229f70cde7905a74b66b905d53d041.jpg

அவன் வீசி எறிந்த பாறை அவள் மீது பட்டுச் சிதற, அதில் கீழே விழுந்தவள் நொடி தாமதிக்காது மீண்டும் எழுந்து அவன் மீது முற்செடிகளை வீசி இருந்தாள். அவன் முகம் கை காலென குத்தி கீறிய முள்ளை ஒருவித கோணல் புன்னகையுடன் பிடுங்கி எறிந்தவன், கூர்மையான கற்களை அவள் மீது வீச, அதிலிருந்து லாவகமாக தப்பியபோதும் ஒன்று அவள் கரத்தைக் கிழித்துக் கொண்டு சென்றது.


அதில் "ஆ.." என்று சிறு கதறலுடன் அவள் கீழே விழ, ஃபேர்லேவின் சிகப்புநிற கண்களில் நீர் சுரந்தது. கண்களை இறுக மூடியவன், "நான் தான் சொன்னேனே ஃப்ளோரா.. என்னுடைய கொடூரங்களை தாங்கிக்க தயாரா வானு" என்று கூற, வலியில் கலங்கிய விழிகளுடன் அவனைப் பார்த்தவள், "உங்களுடைய பச்சை நிற விழிகள் சிவந்து போயிருக்கே? வலிக்குதோ? வர்ணம் மாறியதை உணராத வலியா? விழிநீர் வழிவதற்குள் துடைச்சிடுங்க. என்னால் நீங்க சந்திக்கவேண்டிய வலிகள் இன்னும் ஏராளம் இருக்கு" என்றபடி தனக்கு அவன் கொடுத்ததையே திருப்பிக் கொடுத்திருந்தாள்.


ஒவ்வொரு விடியலிலும் அஸ்தமனத்தை நோக்கிய பயணமாகவே அவற்களது நாட்கள் சென்றது.. இதோ.. எட்டாவது நாளை கடந்திருந்தனர்.


அந்தி மாலை நேரமதில் கார்டிலியாவின் கதறல் ஒலி தான் அந்த இடம் முழுதும் நிறைத்திருந்தது. தன்னவளுக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் தானும் இல்லாத நிலையை வெறுத்தவனாக அமர்ந்திருந்தான் ஃபோர்ட்‌.


அங்கிருந்த யாவரது கண்களிலும் அதிர்ச்சி தான்… உடைந்து சிதறி கிடந்த கண்ணாடி போன்ற பையின் கிழிசல்கள் மற்றும் நீல நிற திரவத்திற்கு நடுவே இறந்த உடலாக ஒரு உயிர்.. ஆம் கார்டிலியா மற்றும் ஃபோர்டின் இன்னும் பாரடைஸில் கால் பதியாத பிஞ்சே அது!


6d791012a8f20f222d90716835561261.jpg

தினம் ஃபேரிகள் இருவரும் சேர்ந்து பேபி பேக்கில் இருக்கும் பேபி ஃபேரிக்கு தங்களிடமிருந்து ஆற்றலை ஊட்ட வேண்டும். போரின் காரணமாக அவர்களால் சரிவர தங்களிடமிருந்து குழந்தைக்கு ஆற்றலை கொடுக்க முடியாது தவித்தனர்! போர் முடித்து வருபவர்களிடமே வலு இல்லாது போக எங்கனம் அவர்கள் குழந்தைக்கு ஊட்ட இயலும்?


அதன் விளைவாக பேபி பேக் உடைந்து ஃபேரியும் இறந்துவிட்டிருந்தது! வீடு வந்து சேர்ந்த யாவரும் அதை அதிர்ந்து போய் பார்த்திருக்க, உயிரை எதிர்நோக்கி இருந்த இருவரும் முற்றுமாக உடைந்து போயிருந்தனர்.


ஆறுதல் சொல்லி தேற்ற முடியும் இழப்பா அது? ஆதலால் எவரும் வாய் திறக்காது பேசாமடைந்தையாய் இருந்தனர். தனது கணத்த கால்களையும் நகர்த்தி அழுத்தமான அடிகளை வைத்து உள்ளே வந்த ஜோயல், மடிந்தமர்ந்து கதறிக் கொண்டிருந்த கார்டிலியாவிடம் வந்து நின்றார்.


அவரை நிமிர்ந்து பார்த்த கார்டி, "லார்ட்.. பே..பேபி ஃபேரி" என்று கதற, துக்கத்தில் அடைத்த தொண்டையை விழுங்கிக் கொண்டு "எழுந்திரி கார்டிலியா" என்றார். அவரது கூற்றுக்கு செவிசாய்காது அவள் அழுதுகொண்டே இருக்க ஃபோர்டை திரும்பிப் பார்த்தார்.


கண்களை அழுந்த மூடித் திறந்தவன் தன்னவளிடம் வந்து அவளைத் தாங்கியபடி எழுந்து நிற்கச் செய்தான். "இன்னும் எத்தனை நேரம் அழப்போற கார்டிலியா?" என்று ஜோயல் வினவ, ஆத்திரம் பெற்றவள் போல் "போனது என்னோட உயிரு லார்ட்.. இ..இந்த போர் தான்.. இந்த போரால தான் என் உயிர் இப்ப இல்லாம போச்சு. எங்களால அவனுக்கு எங்க ஆற்றல கொடுக்க முடியாம போயிடுச்சு. இ..இப்போ இல்லாமலே போயிட்டான்" என்று கத்தினாள்.


அவளை தோளோடு அணைத்துப் பிடித்திருந்த ஃபோர்ட் மேலும் அழுந்த பற்றியபடி, "கார்டிலியா.." என்று கத்த, அவனை அதிர்ந்து நோக்கியவள் விழியோடு தனது கெஞ்சும் விழிகளை உறவாட விட்டான்.


அதில் மீண்டும் உடைந்து போனவள், "சா.. சாரி லார்ட்" என்று கூற, அவள் தலையில் கரம் வைத்த ஜோயல், "ஆத்திரத்துல விட்ட வார்த்தையாக இருந்தாலும் நீ சொன்ன வார்த்தைகள் உண்மையானது கார்டிலியா. இந்த இழப்பை ஈடு செய்ய என்னாலேயும் முடியாதே. ஆனா எவ்வளவு நேரம் இந்த உயிர் இப்படியே இருக்கும்? நீங்க சேர்ந்து இன்டர்மென்ட் செய்து தான் ஆகனும்" என்றார்.


இருவரும் கண்ணீரோடு தலையசைக்க, "செய்யுங்க" என்று அவர் கூற இருவரும் இறந்துகிடந்த உயிரின் அருகே சென்றனர்.


இன்னும் சில நாட்களில் உயிரோடு தங்களிடம் தவழ இருந்த உயிருக்கு தாங்கள் இறுதி சடங்குகள் செய்யும் நிலையானதே என்று மருகிய கார்டி, ஃபோர்டை கட்டிக் கொண்டு, "என்னால முடியாது ஃபோர்ட்.. என்னால.. முடியாது" என்றாள்.


அதில் அவளை அணைத்தபடியே தானும் அழுதவன், "வீ நீட் டு டூ திஸ் (நாம் இதை செய்ய வேண்டும்)" என்றான். சில நிமிடங்களில் தன்னை தேற்றிக் கொண்டவள், கரம் நீட்ட தானும் கரம் நீட்டினான்.


இருவர் உள்ளங்கையும் ஒன்றை ஒன்று சந்திக்கும் வண்ணம் கரம் நீட்டிய இருவரும் மந்திர வார்த்தைகளைக் கூற, இருவரது உள்ளங்கையிலிருந்தும் குறுதி வந்தது.


c80c80b2feb372f8fe32be0a81ca5631.jpg


வந்த குறுதி ஒரு பந்தைப் போல் திரண்டு நிற்க, "கோ அ ஹெட் (go ahead)" என்று உடைந்த குரலில் இருவரும் கூறினார்.


பந்து போல் திரண்ட குறுதி ஒரு தேவதை போன்ற வடிவம் பெற்று அக்குழந்தையை வருடியது. அதன் வருடலில் அந்த குழந்தை தேவதை காற்றோடு காற்றாக மறைய சாம்பல் நிற மந்திரக் கங்குகள் திரண்டு எழுந்தன. யாவரும் அதை ஆர்வத்தோடு எதிர்நோக்க, அக்கங்குகள் இரண்டாக பிரிந்து, ஒரு பாகம் சரேலென பறந்து சைராவின் கரங்களுக்குள் புகுந்தன.


சைரா தன் கரத்தினை ஆச்சரியத்தோடு பார்க்க, கார்டி அழுதபடி சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.


'இன்டர்மென்ட்' என்பது இறந்துபோன தேவதைகளுக்காக அவர்களுக்கு உற்றவர்கள் செய்யும் இறுதிச்சடங்கு. ஒருவரோ இருவரோ தங்கள் குறுதியைத் திரட்டிக் கொடுத்து இறந்தவர் உயிரை இரண்டாகப் பிரித்து, அடுத்து எந்த ஜோடி மூலம் மீண்டு வர உள்ளனரோ அவர்களைச் சென்றடையச் செய்யும் சடங்கே அது!


அதன்படி தங்களது பேபி ஃபேர்ரியின் இறுதி சடங்கை கார்டிலியா மற்றும் ஃபோர்ட் செய்து முடித்திட அவ்வுயிர் சைராவிடம் சென்று சேர்ந்தது. (அதாவது அடுத்து சைராவுக்குப் பிறக்கப்போகும் உயிர் இந்த உயிரே!)


சைராவின் கண்களும் கலங்கிவிட, லார்ட் அனைவரையும் வெறுமையாக பார்த்தார். "நா.. நான் ஐலாவுக்கு தான் போவானு நினைச்சேன்" என்று கார்டி ஐலாவைப் பார்க்க, அவள் கன்னம் வருடிய ஐலா, "எனக்கு இன்னும் நேரம் இருக்கோ என்னவோடா. போரெல்லாம் முடியட்டும்.‌ அதிலிருந்து ஓருயிர் எங்களுக்கு வரட்டும். நீ எதையும் நினைக்காம போய் தூங்கு" என்று கூறினாள்.

ஐலா தான் கூறிய வார்த்தைகள் உண்மையாகும் போது சந்தோஷமான மனநிலையில் இருப்போமா என்று அறியாதுபோனாள்.


அனைவரும் மெல்ல கலைந்து போக, ஜோயலிடம் சென்ற அடாமினா "லார்ட்.." என்றாள். அவள் எதற்காக அழைத்தாளென்று புரிந்து கொண்டவர், "எனக்கு எல்லாம் தெரியும்" என்றார். "உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியும்னு சொல்ல தான் கூப்பிட்டேன்" என்று கூறியவள் முகத்தில் வெகு நாட்கள் கழித்து அவர் கண்ட புன்னகை அவருள் என்னவோ செய்தது. சுற்றி இருந்த யாவரும் இவர்கள் பேச்சின் அடியும் புரியாது, நுனியும் அறியாது விழித்தனர்.


அவள் தலையைக் கோதிய ஜோயல், "மாயக்கல்.." என்று ஏதோ கூறத் துவங்க, "மாயக்கல் மேல செய்த சத்தியம் போர்க்களத்துக்கு உள்ள வரை மட்டுமே தான். அதுவும் அந்த போர்களத்திற்கான நேரத்தில் மட்டுமே தான். அதுதானே லார்ட்" என்று அவள் கூற, 'ஆம்' என்பது போல் தலையாட்டி புன்னகைத்தவர் "போடா" என்றார்.


ஆர்காட்டை வரவழைத்துக் கொண்டு அவள் சிறு புன்னகையுடன் சென்றதை யாவரும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, "அங்க என்ன வேடிக்கை? எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்குப் போங்க" என்றுவிட்டு லார்ட் புறப்பட்டார்.


அலாஸ்கா தோளை சுரண்டிய சைரா, "அவ உன்கிட்ட எதும் சொன்னாளா?" என்று வினவ, அலாஸ்கா முகம் அதிருப்தியில் சுருங்கியது‌. அதில் சைராவிற்கு தான் கேட்ட கேள்வி அவளை காயப்படுத்தி விட்டதோ என்று பதட்டத்தைக் கொடுத்திட,

"அவ என்கிட்ட எதுவும் ஷேர் பண்ணிக்கலை சைரா. அதில் எனக்கு கொஞ்சம் அதிருப்தி தான். ஆனா இப்ப அவ முகம் பிரகாசமா இருக்குறத பார்க்க நிம்மதியா இருக்கு. எங்க போயிடப்போறா? அடுத்து அலாஸ்னு என்கிட்ட தானே வரனும். அப்ப வச்சிக்குறேன்" என்றவள் குரலில் தோழியிடமிருந்து தள்ளி இருக்கும் ஏக்கமே விரவி இருந்தது.


அவள் அடாமினாவைக் குறை கூறவில்லை தான்.. இருப்பினும் அவளிடமிருந்து தள்ளி இருப்பது மிகவும் வருத்தத்தைக் கொடுத்திருந்தது. அதை புரிந்துகொண்ட சைரா, அவள் தோளில் தட்டி, "அவ கிடக்குறா.. நீ வாடி தங்கம் நம்ம ஒன்னா தூங்குவோம்" என்று கூற, சிரித்தபடி அவளை அணைத்துக் கொண்ட அலாஸ்கா அவளுடன் சென்றாள்.

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩

 

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 11​

எப்போதும் போல் டோர் மலையை சென்று அடைந்தவள் அவளவன் இன்னும் வராததால், ஆர்காட்டின் மேல் அமர்ந்தபடி படுத்து அதனைத் தடவிக் கொடுக்க, "அடாமி.." என்று ஆர்காட் அழைத்தது. அதில் இறங்கி வந்து அதன் முன் நின்றவள்,​

"ஆமா ஆர்கார்.. நீ புரிந்துகொண்டது சரிதான்.. நான் சோகத்தையும் சந்தோஷத்தையும் சரிவகித்து சுமக்கும் மனநிலையில் இருக்கேன். இன்னிக்கு வரவேண்டாம்னு‌ தான் இருந்தேன்.. என்னால முடியலை. அவரை சந்திச்சு மனசுவிட்டு பேசி அழுதுடனும். இல்லைனா மூச்சு முட்டிடுமோனு இருக்கு"​

"நா..நான்..நானாவே இல்ல ஆர்காட். என் உணர்வுகள் என்னனு எனக்கே புரியாத நிலையில் என்னை நானே ஏமாற்றிகிட்டு இருக்கேன். அலாஸ்காவிடமிருந்து விலகி இருக்கேன். அது இங்க குத்துது" என்று தன் நெஞ்சை சுட்டிக் காட்டியவள், "அவளை நான் காயப்படுத்திடுவேனோனு பயமா இருக்கு. என் உணர்வுகளை புரிஞ்சுக்காம யாரும் எதும் பேசிடுவாங்களோனு பதட்டமா இருக்கு. அப்படி தெரியாம பேசி நான் அவங்களைக் காயப்படுத்திடுவேனோனு பயமா இருக்கு" என்று நீளமாக பேசினாள்.​

அவள் முகத்தோடு தன் முகம் முட்டிய ஆர்காட், "பதட்டம் வேணாம் அடாமி. உன் மனதை நிலைப்படுத்து. அது உனக்கு நல்ல வழிகாட்டும்" என்க, அதன் முகத்தில் தன் கரம் வைத்து வருடியவள், "அதுக்குதான் இங்க வந்தேன்" என்றாள்.​

"அப்ப எனக்கு கொடுக்க வேண்டிய இடத்தில் ஆர்காட்டை நிற்க வைத்து என்னை கடுப்பேற்றுவது நியாயமா ப்ளோரா?" என்ற ஜானின் குரல் கேட்டு திரும்பிய அடாமினா கண்களில் ஆயிரம் கோடி நட்சத்திரங்களின் பிரகாசம்.​

தன் வாலில் அடாமினாவை சுருட்டிக் கொண்ட‌ ஆர்காட், "என் அடாமி. லார்ட் ஜோயலால கூட புரிந்துக்க முடியாத இவளுடைய நுன்ணுணவர்களும் எனக்கு பிடிபடும்" என்று கர்வத்தோடு கூற, அதில் புன்னகையுடன் மீண்டும் அதன் முகம் வருடிய அடாமி, ஃபேர்லேவைப் பார்த்து கண்ணடித்தாள்.​

"சரிங்க ஆர்காட். அங்க என் ஆடம் தனியா இருக்கான். நீங்க துணைக்கு போனீங்கனா வசதியா இருக்கும்.. அவனுக்கு" என்று கூற, "வசதி யாருக்குனு எனக்கு தெரியும் ஜான். நான் கிளம்புறேன்" என்றபடி சென்றது.​

அதில் சிரித்துக் கொண்ட அடாமி, அவன் முகம் கண்டு சோர்வாய் "ஃபேர்லே.." என்க, "கேள்விபட்டேன் ஃப்ளோரா" என்று வருத்தத்தோடு கூறினான். அவனுடன் சேர்ந்து அமர்ந்தவள் அவன் தோள் சாய, "ஸ்பார்க் (உயிர்க் கங்குகள்) யாருக்கு போச்சுனு எதும் தெரியுமா ஃப்ளோரா?" என்று வினவினான்.​

"சைரா" என்று அவள் கூற, "ஓ.. நான் ஐலாவுக்கு போகும்னு நினைச்சேன்" என்றான். "நாங்க நிறையாபேர் அதான் நினைச்சோம்" என்று அவள் கூற, "ம்ம்.." என்றபடி அவள் தலைகோதியவன், "மனசு பாரமா இருக்கா?" என்று கேட்டான்.​

அவனை நிமிர்ந்து பார்த்தவள், "இப்ப இல்ல" என்று கூற, வேதனை தாங்கிய சிறு புன்னகை அவனிடம். "நீங்க என்னை சந்திக்க வர்றது உங்க லார்டுக்கு தெரியுமா?" என்றவள் 'காஸ்மோ' பெயரை தவிர்ப்பது அவனுக்குப் புரிந்தது.​

இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "இல்லடா. நீயும் லார்ட் ஜோயலும் குரு சிஷ்யர் என்பதைத் தாண்டிய நட்போடு பழகினவங்க. அதனால நீ அவர்கிட்ட எல்லாம் பகிர்ந்துகிட்ட. ஆனா எனக்கு லார்ட் காஸ்மோ மேல மரியாதையைத் தாண்டி எந்த பந்தமும் இல்லை. அவருக்காக மாயக்கல்லில் நான் செய்த சத்தியம் கூட போர்க்களத்தில் மட்டுமே என்னை கட்டிப்போடக்கூடியது" என்று கூற, "நான் ஒரு பேச்சுக்கு கேட்குறேன். தப்பா எடுத்துக்காதீங்க" என்று பீடிகைப் போட்டாள்‌.​

"புரியுது.. இப்படி இருக்க ஏன் லார்ட் காஸ்மோ பக்கம் இருக்கேன் என்பது தானே உன் கேள்வி?" என்று அவளை ஆச்சரியமடையச் செய்தவன், "நம்ம பிறப்பதற்கு முன்னிலிருந்தே லார்ட் ஜோயல், லார்ட் காஸ்மோனு இந்த பிரிவினை வந்துடுச்சு ஃப்ளோரா. நான் பிறக்கும் போது நான் லார்ட் காஸ்மோவால் ஆதரிக்கப்பட்ட இணம், நீ லார்ட் ஜோயலால் வழிநடத்தப்படும் இணம். அப்படியிருக்க நம்ம எண்ணமும் செயலும் அவங்களைச் சார்ந்து தானே இருக்கும்? லார்ட் காஸ்மோவுக்கு நாட்டை லார்ட் ஜோயல் கொடுக்காததற்கு உன்கிட்ட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.. அவரை ஆதரிக்கும் எனக்கு இவருக்கும் சம பங்கு உரிமை இருக்கேன்ற எண்ணம் தான்" என்றான்.​

"சாரி.." என்று அவள் தலைகுனிய, "உன் கேள்வியில் தப்பில்லை ஃப்ளோரா. நீ லார்ட் ஜோயல் கூட ரொம்ப ஒட்டுதலோட இருந்ததால் தான் இந்த கேள்விய கேட்ட. உன்னை போல உன் இணத்தை சேர்ந்த எல்லாருமே லார்ட் ஜோயல் கூட ஒட்டுதலோட இருக்காங்களா என்ன? என்னை போல மரியாதை மட்டுமே கொண்டு இருப்பவர்கள் இருக்காங்க தானே. அதுபோல நீயும் இருந்திருந்தா இந்த கேள்வி உனக்கு தோன்றியிருக்காது. இதில் பிழையொன்னும் இல்லை" என்றான்.​

"சரி இது வேண்டாம் ஃபேர்லே. நமக்கே நமக்கான இந்த சொற்ப நேரத்தையும் இந்த போரைப் பற்றிப் பேசி வீணடிக்க நான் விரும்பலை" என்று அவள் கூற, "அப்படியா? அப்போ என் ஃப்ளோராவுக்கு என்ன செய்யனுமாம்?" என்றபடி அவளை நோக்கி குனிந்தான்.​

அதில் சிரித்துக் கொண்டவள், அவனை இறுக அணைத்துக் கொள்ள, அவள் நெற்றியில் தன் கன்னம் பதிய தலை சாய்த்தவன், "இந்த நிமிடம் அப்படியே உரஞ்சு போயிடனும் ஃப்ளோரா" என்றதும், "அப்படி நடந்தா நம்மை விட இந்த உலகில் அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை" என்றாள்.​

சில நிமிடங்கள் அவர்களிடம் எந்த பேச்சும் இல்லை எந்த அசைவும் இல்லை. உறை நிலையை எண்ணியே‌ உறைந்து இருந்தனர் போலும். அப்படியே ஒருவர் மற்றொருவர் அருகாமையை மட்டுமே உணர்ந்த வண்ணம் அமர்ந்திருந்துவிட்டு நேரம் கடந்ததால் புறப்பட்டனர்.​

மீண்டும் புறப்பட்டு‌ வந்த அடாமி நேரே சென்றது அலாஸ்காவிடம் தான்‌. தன்னவன் அருகாமை கொடுத்த தெளிவே போதும் தோழியிடம் தன் மனதைத் திறக்க என்ற நம்பிக்கையுடன் அவள் சைரா வீட்டில் இருப்பதை அறிந்துகொண்டு வந்து சேர்ந்தாள்.​

உள்ளே நுழைந்தவள் "அலாஸ்.." என்று கிசுகிசுப்பான குரலில் லேசாக அழைத்தபடி முன்னேற பின்னிருந்து யாரோ அவளை மிதித்துக் கீழே தள்ளியிருந்தார்.​

அதில் "ஓ லார்ட்.." என்றபடி கீழே விழுந்தவள் மேல் அமர்ந்த அந்த உருவம், அவள் தலைமுடியைப் பிடித்து மண்டையை ஆட்ட, "ஆ..சாரி சாரீ.. விடுடி.. வலிக்குது" என்று கத்தினாள்.​

அவள் முன்னே வந்து நின்ற ஓர் உருவம் குத்திட்டு அமர, அந்த சிகப்பு நிற கால்களைப் பார்த்து "சைரா.. அவள தூக்கு.. மண்டைய கையோட எடுத்துடுவா போல" என்று அடாமி கதற, "ஓஃப்.. சாரி அடாமி.. அலாஸ் என் கைக்கு பிடிபடவே மாட்டேங்குறா. ஐஸ் ஜில்லுனு இருக்கா.. எங்க என் கைபட்டு உருகிடுமோனு எனக்கு பயம்ம்மா இருக்கு" என்று நக்கலாக சைரா கூறினாள்.​

"அடிப்பாவி.. ஆ.. அலாஸ்.. சாரீ.. என் ஐஸுஉ.." என்று அடாமி கதறிய பின்பே அவள்மீதிருந்து எழுந்த அலாஸ், அவள் முன் வந்து அமர, அவள் காலைப் பிடித்து இழுத்துக் கொண்டு அதில் தலை வைத்து படுத்தாள். சைராவும் வந்து அவர்களுடன் அமர, "ஆர் யூ ஓகே?" என்று அலாஸ் வினவினாள்.​

அவள் கரத்தைப் பற்றிக் கொண்ட அடாமி, "சாரி அலாஸ்" என்று கூற, "எனக்கு எந்த கஷ்டமும் இல்லை, நீ ஃபீல் பண்ணாத அப்படினுலாம் சொல்லமாட்டேன். எனக்கு ரொம்ப வலிச்சுது. இருந்தாலும் உன் மனசும் நிலையா இல்லை. அதனால உன்னை குறையும் சொல்ல மாட்டேன்" என்றாள்.​

"ஹ்ம்.. ரொம்ப பயம் அலாஸ்.. என்னுடைய மனநிலை எனக்கே பிடிபடாத நிலையில் உங்கிட்ட என்னனு சொல்ல? என்னால புரிஞ்சுக்க முடியாததை உனக்கு எப்படி கடத்த? நீ வேற புரிஞ்சு உன் வார்த்தை என்னை பதம் பார்த்து நான் உன்னை எதும் சொல்லிடுவேனோனு பயம்‌. இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு" என்று அடாமி கூற, சைரா அவள் தலையை மென்மையாகக் கோதினாள்.​

"அவர் தேவதையா இல்லாமலே இருந்திருக்கலாம். கிடைக்கவே கிடைக்காதுனு இருந்திருப்பேன். ஆனா இப்படி எதிர்பாராத இடத்தில் எதிர்ப்பாராத சூழலில் அவரைப் பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை. அங்கயே மொத்தமா உடைஞ்சு போயிட்டேன்"​

"அதைவிட போர்க்களத்தில் அவரை ந..நம்ம ஆளுங்க.. தாக்கும்போது" என்றவள் குரல் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்துவர, திரும்பிப் படுத்து அலாஸ் மடியில் தன் முகம் புதைத்தவள், "செத்துடலாம் போல இருந்தது.. என்னால தடுக்கவும் முடியாம தாங்கவும் முடியாம. அ‌..அவராலயும் என்னை அவங்க ஆட்கள் அடிப்பதை தாங்க முடியல‌. அன்னிக்கு அவர சந்தித்து பேச போனேன். போர்களத்தில் மனச கல்லாக்கிக்கோங்கனு சொல்ல போனேன்" என்றவள் துக்கத்தை மென்று விழுங்கினாள்.​

அலாஸ் அவள் முதுகை வருட, "ஆனா சொல்ல முடியலை.. நான் என்ன சொல்ல வரேன்னு அவரே புரிஞ்சுகிட்டார். நான் சொல்ல வந்தத அவரே எனக்கு சொன்னார். என்னை இவ்வளவு புரிஞ்சு வைத்திருக்காரேனு சந்தோஷப்படவா எட்டாத தூரத்தில் இருக்காரேனு வருத்தப்படவானு இருந்தது. அதன் பிறகு வந்த நாட்கள் போர்க்களத்துல எங்க வே..வேதனையே விழுங்கிட்டு தான் இருந்தோம்" என்றாள்.​

எழுந்து அமர்ந்து தோழிகள் இருவரையும் கண்கள் கலங்கப் பார்த்தவள், "போர்க்களத்துல நாங்க எங்க எங்க லார்டுக்கு நியாயம் செய்யனும் என்று தான் மாயக்கல்லில் சத்தியம் செய்தோம். அதை கடைபிடிக்கனும்னு உசுரை கழட்டி வச்சுட்டு தான் போர்களத்துக்குள்ள வந்தோம். ஆனா போர்க்களத்தை விட்டு வெளிய வந்த பிறகு இருக்கும் நேரம் எங்களுக்கானது தானே? அதை ஏன் விடனும்? அதான் போர் முடிந்ததும் டோர் மலைக்கு போயிடுறேன் அவரை சந்திக்க" என்றதும் இருவரும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.​

அவள் தனிமை விரும்பி செல்வதாகத்தான் யாவரும் நினைத்திருக்க, இவளோ தினமும் அவனைச் சந்திக்கச் செல்கிறேன் என்றதும் அதிர்ந்து போயினர். தோழிகளின் அதிர்ந்த முகம் கண்டு சிரித்தவள், "லார்டுக்கு தெரியும்" என்றதும் தான் இருவருக்கும் மாலை அவர்களது பேச்சுவார்த்தை நினைவு வந்தது.​

ஒரு ஆசுவாசப் பெருமூச்சை சைரா மற்றும் அலாஸ் வெளியிட, "சில்.. லார்டுக்கு பிடிக்காத விஷயத்தை நான் செய்ய மாட்டேன்" என்றவள், "கொஞ்சம் லேசா இருக்கு" என்றபடி சைரா மடிசாய்ந்தாள்.​

தோழிகள் ஏதும் பேசவில்லை.. அடாமியைப் பேசவைத்து அவள் மனவலியை குறைத்துக் கொண்டிருந்தனர். "போரால எங்க காதலைத் தடுக்கமுடியாதுனு நம்பிக்கை வந்துடுச்சு எனக்கு. போரின் முடிவில் நம்ம தான் வெற்றி காண போறோம் என்பது உறுதி. ஆனா வெற்றி யார் பக்கம் வந்தாலும் உடைந்த பாரடைஸ் இணைந்து தானே ஆகனும்? அப்ப நாங்க பிரியவேண்டிய அவசியம் இருக்காது தானே?" என்று ஆசையோடு கண்கள் மின்ன கூறிய தோழியைக் கட்டிக்கொண்ட இருவரில் "கண்டிப்பா அடாமி. மாயக்கல்லுக்கு நீ காக்கும் நேர்மை ஒன்றே உன்னையும் உன் காதலையும் காக்கும்" என்று‌ சைரா கூறினாள்.​

"நானும் அதை தான் நம்புறேன் சைரா. எங்க காதலுக்கு எதுவும் தடையா இருக்காது. இது அந்தமற்ற காதல்.. அழிவே கிடையாது" என்று கூறிக் கொண்டாள்.​

 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-12

'பாரடைஸ் வார்' என்பதற்கு விக்டோரிய வம்சத்தினரால் ஒரு முழு புத்தகமே எழுதப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டும், அதன் கோட்பாடுகள் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டும் வருகின்றது.eiR6AUQ86021.jpg

முன்பு நடந்த போரைப் பற்றிய வரலாறும், போர்க்களத்திற்கான சட்டங்களும் அதில் இருக்கும்.

முதன் முதலில் லார்ட் விக்டோரியா செபாஸ்டின் அவர்கள் தான் பாரடைஸென்ற உலகத்தினை உருவாக்கியவர். அவரது சீடர்கள் மற்றும் தேவதைகள் மூலம் பாரடைஸை உருவாக்கியபோது சில தீய தேவதைகள் பாரடைஸிற்காக சண்டையிட்டனர். அப்போது தான் பாரடைஸ் வார் முதன் முதலில் நடந்தது.

d3fc58371d8457fbd2c79478e6cd157e.jpg

அதன் பிறகே போருக்கென்ற சட்டங்கள் வகுக்கப்பட்டது. காலை பத்து மணிமுதல் மாலை ஆறுமணி வரைதான் போர் நடக்க வேண்டும், நடக்கும்!

அதற்கு முன்போ பின்போ நாம் நினைத்தாலும் போரிட இயலாதபடி போர்க்களத்தினை மந்திரங்களுக்குக் கட்டுப்படுத்தி வைத்தார்.

பத்து மணிக்கு முன்போ ஆறு மணிக்கு பின்போ அங்கு எந்த மாயமந்திரமும் வேலை செய்யாது.

இரண்டாவது, போர்களத்தில் உயிரை விடும் தேவதைகளுக்கு 'இம்போர்டென்ட்' எனப்படும் இறுதி காரியம் செய்து தான் ஆத்மாவைப் பிரித்து அடுத்த வாழ்விற்காக 'ஸ்பார்க்' எனப்படும் அவர்களது உயிர்த்துகள்களை அனுப்ப வேண்டும் என்று இல்லை. போர்க்களத்தில் மடியும் உயிர் தானாகவே பிரிந்து அடுத்து யார் மூலம் ஜனிக்க உள்ளதோ அவர்களிடம் சென்றடைந்திடும்.

மூன்றாவது, போர்க்களம் எத்தனை சேதம் அடைந்தாளும் அடுத்த நாள் மீண்டும் புதிய பூமியாகவே காணப்படும். ஆனால் போர் முடிந்துவிட்டால் அதை மீண்டும் போரில் தோற்றவர் தான் தன் சக்திகளைக் கொடுத்து சீர் செய்திட வேண்டும்.

நான்காவது, முதல் நாள் போருக்கு வருபவர்கள் போர் முடியும்வரை தவறாது போர் செய்திட வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அவர்கள் வராமல் இருந்துக்கொள்ளலாம். மூன்று நாட்களுக்கு மேல் வராது இருந்தால் மீண்டும் போர்க்களத்திற்குள் அவர்களால் நுழையவும் இயலாது, அவர்களது மொத்த சக்தியையும் மாயக்கல் உரிந்துவிடும்.

ஐந்தாவது.. மாயக்கல்லில் சத்தியம் செய்துவிட்டு போர்க்களத்தில் யாரை ஆதரிக்கச் செல்கின்றனரோ இறுதி வரை அவர்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும். இல்லையேல் மாயக்கல் அதற்கு தக்க தண்டனைக் கொடுத்துவிடும்!

அந்த நாலாவது சட்டத்தின் படி தன்னால் போரிடும் அளவு வலுவில்லாத காரணத்தால் இன்று ஒருநாள் போர்க்களம் வரமுடியாது என்று ஃபோர்ட் மற்றும் கார்டிலியா கூறியிருந்தனர்.

அவர்கள் போர் முடிந்தே பலவீனமாக வந்திருக்க, மேலும் இறுதி சடங்கில் சக்திகளை இழந்திருந்தனர். அவற்றை மீட்டுக்கொள்ள நேரம் வேண்டும் என்பதால் அன்று ஒரு நாள் போர்க்களம் செல்லாது இருக்க முடிவு எடுத்து லார்ட் ஜோயல் முன் வந்து நின்றனர்.

அவர்கள் இருவர் தலைமீதும் கைவைத்து தட்டிக் கொடுத்த லார்ட், "உங்களுக்கு தேவை மன ஓய்வு. அதை தாராளமா எடுத்துகிட்டு அடுத்த நாள் வாங்க" என்று கூற, மண்டியிட்டு அவரை வணங்கிவிட்டு எழுந்து சென்றனர்.

அந்த அடர்ந்த போர்க்களத்தில் இரண்டு பிரிவினரும் தயாராக இருந்தனர். பத்துமணிக்கு இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில் இரு பிரிவினரும் காத்திருக்க, அடாமினாவின் கண்கள் ஃபேர்லேவைத் தேடியது.

"தேடுறாடா" என்று டைஸா கூற, "தேடட்டும்" என்றான், ஜான். "பாவமா இருக்கு அவளைப் பார்க்க. நீ முன்னாடி வாயேன்" என்று லூமி கூற, "அவ நம்ம எதிரி இப்போ" என்றவன், 'போர்க்களம் வந்தா பாக்காத பேசாதனு சொல்றா.. இங்க வந்து என்னைத் தேடுறா. ஏன்டி என்னைக் கொல்லுற' என்று மனதோடு முனுமுனுத்துக் கொண்டான்.

"இன்னும் போர் துவங்கள ஜான்" என்று ஈடன் கூற, "போர்க்களம் வந்துட்டோம் ஈடன். கிளம்பும்போது பார்த்துக்குறேன். இல்லை போர் புரியும்போது நாங்க சந்திக்காமலா போகப்போறோம்?" என்றதும் மூவரும் அவனை வேதனையோடு பார்த்தனர்.

"உன் நிலைமைல என்னை யோசித்துக்கூட பார்க்க முடியாதுடா என்னால" என்று கூறிய ஈடன் தனது மனம் புரட்டப்போகும் புதுமைகளைப் பற்றி அப்போது அறிந்திருக்கவில்லை.

அங்கு அடாமினாவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்த அலாஸ்கா, "பின்னாடி நிற்குறாங்க போல" என்று கூற, தோழியைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்தவள், "வேணும்னே பண்றாங்க அலாஸ். ரூல்ஸ் போட்ட நானே இப்ப வந்து தேடுறேனேனு மனதோட திட்டிகிட்டு இருப்பாங்க" என்று தன்னவனை அறிந்தவளாகக் கூறினாள்.

இதோ அதோவென்று போரும் துவங்கிட, ஒரு பெருமூச்சுடன், "ஹ்ம்.. வாரியர் மோட் (போராளி முறை)" என்று கூறிக் கொண்டபடி அடாமினா பறந்தாள்.

அன்றைய போர் விரைவே முடிந்தார் போன்ற உணர்வைக் கொடுக்க, போர் முடிந்து கூட்டம் கலைந்ததும் அடாமினாவைத் தேடிய ஜானின் கண்களுக்கு அவள் அகப்படவில்லை. தான் செய்ததுபோல் திரும்பி தனக்கே செய்கின்றாளா என்று நினைத்து சிரித்துக் கொண்டவன் கிளம்பி டோர் மலையை அடைந்தான்.

b94812135d5000e73c9650899b42b355 (1).jpg

ஆடம் மீது படுத்தபடி, "ஆடம்.. அவ கூட இருக்குற தருணம் எல்லாம் அவ்வளவு சந்தோஷமா இருக்குடா. அவ எனக்கு கிடைச்சிடனும்" என்று கூற, "நல்லதே நினைப்போம் ஜான்" என்று ஆடம் கூறியது.

ஆடமை கட்டியணைத்தபடி படுத்தவன், "நம்ம வந்து ரொம்ப நேரம் ஆச்சுல ஆடம்? ஏன் இன்னும் அவ வரலை?" என்று வினவ, "தெரியலை ஜான். ஏதும் பிரச்சனையா இருக்குமா?" என்று வினவினான்.

"தெரியலையே" என்றபடி இன்னும் சில நிமிடங்கள் காத்திருந்தவன் சென்றுவிட, "ஏ என்ன ஜான் அதுக்குள்ள வந்துட்ட?" என ஈடன் கேலி செய்தான்.

"அவ வரலை ஈடன். இன்னிக்கு போர் முடிந்த பிறகும் அவளைப் பார்க்கலை. டோர் மலைக்கும் அவ வரலை. ஏதோ சரியில்லைடா. படபடப்பா இருக்கு" என்று ஜான் கூற, "ஏதும் அவசர வேலையா இருந்திருக்கலாம் ஜான்" என்று ஈடன் கூறினான்.

"அப்படினா எனக்கு ஓட் (தூது) அனுப்பிருப்பாடா. இ..இது ஏதோ சரியில்லை" என்று ஜான் தடுமாற, "ஒன்னுமில்லை ஜான். ரிலாக்ஸ் ஆகு. நாளைக்கு போர்க்களத்தில் பார்க்கலாம்" என்று ஈடன் ஒருவாரு அவனை சமாதானம் செய்தான்.

ஈடனின் சமாதானங்களை ஏற்றுக் கொண்ட போதும், ஏனோ ஃபேர்லேவின் மனதின் படபடப்பு மட்டும் அடங்கியதாகத் தெரியவில்லை. மறுநாள் காலை எப்போதும் போல் போருக்குச் சென்றவன் முன்னே வந்து நின்று கண்களால் அவளைத் தேடினான்.

ஆனால் அவள் அவன் கண்களுக்குப் புலப்படவில்லை. அருகே நின்ற ஈடனிடம், "ஈடன்.. அவ போருக்கு வரலை போல" என்க, "அவ்வளவு பெரிய கூட்டத்தில் உன் ஒரு பார்வை சுழற்சியில் அவ படுவாளா? கூட்டத்துக்கு நடுவில் எங்கேயும் நிற்பா ஜான்" என்று ஈடன் கூறினான்.

ஒரு பெருமூச்சை இழுத்துவிட்ட ஃபேர்லே போர் துவங்கியதும், தனது கடமையில் ஈடுபட, அன்றைய நேரம் ஆமையின் மேல் கடந்து செல்வதைப் போல் இருந்தது அவனுக்கு.

அங்கு தனது பனிக்கத்திகளை தூக்கி வீசி சண்டையிட்டுக் கொண்டிருந்த அலாஸ்கா, தன் முன் வந்த நின்ற ஈடனைக் கண்டு, "பார்த்து ரொம்ப நாளாச்சு" என்று ஏலனப் புன்னகையுடன் கூறினாள்.

fe941ca89eca2b2076bd6c7e27a92323.jpg


dbf8514e99518c5243e36ea91f9c4097.jpg


அதில் தானும் அதேபோல் சிரித்துக் கொண்டவன் தன் பனிக்கத்திகளை வீச, அதிலிருந்து லாவகமாக தன்னை தற்காத்துக் கொண்டவள், அவனுக்கு இணையாக சண்டையிட்டாள்.

"நீ இன்னும் வளரனும் அலாஸ்கா" என்ற ஈடன் பனிப்பொழிவை வீசி அவளை கீழே சாய்க்க, அதிலிருந்து அவள் எழும் முன்னே இரண்டு பனிக்கத்திகளால் அவள் கையை தரையோடு வைத்து சிறைபிடித்தான்.

தன் கையை உறுவிக் கொள்ள முயன்றவளுக்கு கத்தியின் கீரலில் வலி ஏற்பட, "ஆ.." எனப் பல்லைக் கடித்தவள் விரல்களை மடக்கி அதை நீக்க முயற்சித்தாள். அவள் அருகே வந்து ஒற்றைக் காலை குற்றி நின்றவன், "அடாமினா எங்க?" என்று வினவ, அத்தனை நேரம் போராடிக் கொண்டிருந்தவள், அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

"கேட்ட கேள்விக்குப் பதில்" என்றவன் கத்தியை மெல்ல அழுத்த, "ஆ.." என்று அலறியவள், "அ..அது உனக்கு எதுக்கு?" என்றாள். "பதில்.." என்றவன் மீண்டும் அதை அழுத்த, "ஆ..அவ வரலை.." என்றாள். "ஏன்?" என்று மீண்டும் ஒரே வார்த்தை தான் அவனிடம்.

"உன்கிட்ட சொல்லவேண்டிய அவசியமில்லை" என்றவள் வலித்தாலும் சரியென்று கையை வெடுக்கெனத் தூக்க, கத்தி கையோடு குத்திக்கொண்டு வந்தது. கண்களிலிருந்து பனித்துளிகள் பொழிய, கத்தியைத் தூக்கி எறிந்தவள் அவனை நோக்கி இரண்டு கத்திகளை வீச, "பதில் சொல்லு அலாஸ்கா.." என்றான்.

"என்ன சொல்லனும்? அதான் உங்க ஆட்கள் அவள படுக்க வச்சுட்டீங்களே" என்று கர்ஜித்து விட்டு, "இது போர்க்களம். நினைவுல இருக்கட்டும்" என்றுவிட்டு தனது எய்றாவை அழைத்துக் கொண்டு அதிலேறி அமர்ந்து புறப்பட்டாள்.

சண்டைகளின் ஓலத்தோடு அன்றைய போர் முடிந்திட, அலாஸ்காவை நிறுத்திய ஈடன், "அலாஸ்கா.. அடாமினாவுக்கு என்னாச்சு?" என்றான். அவனை கண்ணீரோடு பார்த்தவள், "அதை கேட்க நீங்க யாரு?" என்க, "அவன் யாரோவா இருக்கலாம். ஆனா எனக்கு உரிமை இருக்குதானே?" என்றபடி ஃபேர்லே அங்கு வந்தான்.

அவனைக் கண்டதும் கண்கள் கலங்க, "அ..அவ இன்னிக்கு போருக்கு வரலை" என்றாள். "அதான் ஏன்னு கேட்குறேன்" என்றவன், "சொல்ல கூடாதுனு சொன்னாளா?" என்க, கண்டுகொண்டானே என்ற வியப்பு இவளிடம்.

அலாஸ்காவின் கரம் பற்றி நின்ற சைரா, "நேத்து போர்ல உங்க ஆட்களில் ஒருவர் அவமேல அதிகபடியான மின்னல் கீற்றுகளைக் கொண்டு தாக்கினதுல படுகாயம் அடைஞ்சு அவ போர்க்களத்துலயே மயங்கி விழுந்துட்டா. காலைல நாங்க வரும்போது கூட அவ கண்வி‌ழிக்கலை. இப்ப போய் பார்த்தா தான் அவளோட நிலைமை எங்களுக்கே தெரியும்" என்று கூற, ஃபேர்லாவின் விழிகள் ஆச்சரியத்தில் வெகுவாக விரிந்தது.

சிலையாகி நின்றவன் மேலிருந்து பச்சை நிற கங்குகள் பறக்க, அவன் தன்னிலை இழக்கும் அளவு தடுமாறுவது அங்குள்ள யாவருக்கும் புரிந்தது. இதற்குதானே அவனிடம் கூறவேண்டாம் என்று மயங்கி சரியும் கடைசி நொடியிலும் அடாமினா கூறியிருந்தாள்!

"அ..அவ.." என்றவனுக்கு அதற்குமேல் வார்த்தையே வரவில்லை. "எப்படி இருக்கானு எங்களுக்கும் தெரியாது" என்று கண்ணீரோடு அலாஸ்கா கூற, "ஆ…" என்று மண்டியிட்டுக் கத்தினான்.

அவனது இந்த ஆக்ரோஷத்தினைக் கண்ட யாவரும் ஒரு அடி பின்னே நகர, "ஆஆடம்.." என்று கத்தியபடி எழுந்தான். எங்கிருந்தோ வீலென்ற சத்தத்துடன் வந்த அவனது டிராகன் அவனருகே நிற்க, அதில் தாவி ஏறியவன் அவள் இருப்பிடம் நோக்கி பயணமானான்.. கோபம் எத்தனை மூர்க்கமாய் ஒருவனை செயல்பட வைக்கும் என்பதை அறியாமல்…

4bc12c01bccf8fb7aaa2f683664386a7.jpg

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩

 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-13


e61639f665ee5c8ad1de42fa64bd4442.jpg
ஆடமை அதிவேகமாக செலுத்திக் கொண்டு வந்தவன், நேரே வந்தது அடாமினா குடியிருக்கும் பகுதிக்குத்தான். அங்கு வந்தவுடனேயே ஆடமிலிருந்து தாவி இறங்கியவன், "ப்ளோரா.." என்று ஆர்ப்பரிக்கும் குரலோடு வர, உள்ளே சில நிமிடங்களுக்கு முன்பே கண் திறந்திருந்தவள் சோர்வாக தனதருகே அமர்ந்திருக்கும் முதிர்ந்த ஃபேரி ஒருவர் கொடுத்த மருந்தை பருகினாள்.

ஃபேர்லேவின் குரல் கேட்டு திடுக்கிட்டவள் திரும்பிப் பார்க்க, அவளிடம் விரைந்து வந்தவன், "ப்ளோரா.." என்று அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவன் அணைப்பில் மேலும் அதிர்ந்தவள், மருந்து கொடுத்த ஃபேரியை நிமிர்ந்து பார்க்க, அவர் மெல்ல வெளியேறினார்.

"ஃபேர்லே.. உ..உங்களுக்கு யாரு சொன்னது? நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? யாராவது உங்ககிட்ட சண்டைக்கு வரப்போறாங்க. ப்ளீஸ் கிளம்புங்க" என்று நழிந்த குரலில் அவள் கூற, "உயிரே இல்ல ப்ளோரா" என்றான்.

"எனக்கு ஒன்னுமில்லை" என்று அவள் கூற, "ஒன்னுமில்லாம தான் ஒரு நாள் முழுக்க படுத்துகிடந்தியா?" என்றான். "போர்னா இதெல்லாம் இருக்கத்தானே செய்யும். நாம இதையெல்லாம் கடந்து வரனும்னு முன்னயே பேசிக்கிட்டோம் தானே?" என்று அவள் கூற, "வலிக்குது.. தாங்க முடியல ஃப்ளோரா.." என்றான்.

afc268f1739043c59e0ea0bb9fd8765b.jpg

அப்போதே அங்கு மற்ற தோழர்களும் கூடிவிட, தன் குரலை செருமிக் கொண்டு வந்தார் ஜோயல்.


327eb29051f707a6870b7d7431b8fb5c.jpg

அவர் குரல் செருமளில் யாவரும் வழிவிட்டு நிற்க, அடாமினாவும் ஃபேர்லேவிடமிருந்து பிரிந்தாள்.

அப்போது தானும் திரும்பிய ஜான் ஜோயலைப் பார்த்து ஆத்திரத்தோடு எழ, கடினப்பட்டு தானும் எழுந்த அடாமி, "ல..லார்ட்.." என்றாள்.

அவரிடம் எந்த எதிர்வினையும் இல்லை.. ஆனால் ஒரு அழுத்தமான பார்வையோடு அனைவரையும் ஏறிட்டார். "உங்களுக்கு ஏன் இவ்வளவு வீம்பு? பாரடைஸ லார்ட் காஸ்மோவோட பங்கிட என்ன கஷ்டம் உங்களுக்கு? உங்க கூடவே பிறந்த தம்பி தானே அவர்?" என்று ஜான் கத்த, "ஃபேர்லே என்ன பேச்சிது" என்று ஆடாமி அவனை தன் புறம் திருப்ப முயன்றாள்.

ஆனால் அவள் கரத்தை உதறிவிட்டவன், "உங்களால தான் என் ஃப்ளோராவுக்கு இந்த நிலைமை. இதுக்கு முழுக்க முழுக்க நீங்க தான் காரணம்" என்று பேசிக் கொண்டே போனவன் "வீட் (weed)"‌ என்று மந்திரச்சொல்லை ஜோயலை நோக்கி வீச, "நோ.." என்றபடி அடாமி இடையே வந்தாள்.


4e86591255d0ddf30153a8237ee0cf81.jpg

அனைவரும் அவன் செயலில் அதிர்ந்து அவள் செயலில் பதறிப் போக, ஜோயல் தன் சக்தியால் அவனது மாயச்சொல்லிலிருந்து வந்த விஷ முற்செடியை அடாமினாவை அடையும் முன் எரித்திருந்தார்.

அடாமினா குறுக்கே வந்ததில் தானும் பதறிப்போன ஃபேர்லே பின்பே தனது மூர்க்க செயல் உணர்ந்து விதிர்விதிர்த்து போக, அவனிடம் விரைந்து வந்து தன் மொத்த வலுவுக்கும் அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தவள், "என்ன காரியம் செய்ய துனிஞ்சுட்டீங்க? அ..அவர்..? உங்க கிட்ட இப்படியொரு செயலை எதிர்ப்பார்க்கலை. தயவசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க.. என்னை பார்க்க நீங்க வரவேணாம்" என்று அடித்தொண்டையிலிருந்து கர்ஜித்தாள்.

தான் செய்த செயலிலேயே அதிர்ந்து இருந்தவன், அவள் பொழிந்த சொற்களில் மேலும் வாடிப்போக, "ஃப்ளோரா.." என்று கண்ணீர் குரலில் கூறினான். "போங்கனு சொன்னேன்.. இங்கிருந்து போங்க" என்று கத்தியவள் முகத்தை மூடியபடி அமர்ந்து வெடித்து அழ, அவளிடம் விரைந்து வந்து அவளைத் தோளோடு அணைத்துக் கொண்ட அலாஸ்காவும் அழுதுவிட்டாள்.

அதற்குமேல் அங்கு நிற்க மனமில்லாது ஜோயலை அவன் பரிதவிப்போடு நோக்க, கண்களை இறுக மூடித் திறந்து தலையசைத்தவர், நகர்ந்து வழிவிட, விறுவிறுவென வெளியேறி இருந்தான்.

"எல்லாம் என்னால தான்.. நான் அப்போவே சைரா பேச்சை கேட்டிருக்கனும். இந்த பைத்தியக்கார காதல் என்னையும் கொள்ளுது என்னை காதலிச்ச பாவத்துக்கு அவரையும் சாகடிக்குது" என்று அடாமி கதறி அழ, அவள் முன் வந்து அவளை அணைத்துக் கொண்ட சைரா, "அடாமி ப்ளீஸ்.. அழறத நிறுத்து" என்றாள்.


77b14301c3b55861acd4df4f7027d306.jpg

"எல்லாரும் அவங்கவங்க குடிலுக்குப்போங்க" என்று ஜோயல் கூற, "லார்ட் அடாமினா.?" என்று தோரா பரிதவிப்பாய் வினவினாள். "நான் பார்த்துக்குறேன் எல்லாரும் புறப்படுங்க" என்று அவர் கூற, அதற்குமேல் நின்று அவரை அவமதிக்காது யாவரும் சென்றனர்.

முகத்தை மூடி அழுபவளை தூக்கி பச்சிலைக் கட்டிலில் அமர்த்தியவர், "அடாமினா.." என்று அழைக்க, "சாரி லார்ட்.. அ..அவர் கோபக்காரர். அ..ஆனா என்மேல உயிரையே வைச்சிருக்காரே.. அந்த கோபத்தையும் வேதனையையும் சமாளிக்க தெரியாது தடுமாறிட்டார். அவருக்காக நான் மன்னிப்பு வேண்டுறேன்" என்று அழுதாள்.

"அவனை நீ அப்படி பேசிருக்கக் கூடாது" என்று ஜோயல் கூற, "தெரியும்.. நொந்து போயிருப்பார். ஆனா அப்படி சொல்லலைனா போயிருக்க மாட்டார். நம்ம ஆட்கள் யாரும் வந்து காஸ்மோ ஆள் நுழைஞ்சு சண்டை போடுறதை பார்த்தா, அவங்களும் காஸ்மோ பகுதிக்குள்ள நுழைஞ்சு சண்டை செய்வாங்கனு தான் அனுப்பினேன்" என்றாள்.

அவள் தலையைக் கோதியவர், "அவன் கேட்பது நியாயம் தானே? அப்பறம் எதுக்கு உனக்கு கோவம்?" என்க, "எது நியாயம் லார்ட்? காஸ்மோவுக்கு நாட்டைக் கொடுப்பதா? பாரடைஸ் அழிஞ்சு போக வழிவகை செய்ததா இருக்கும்" என்று கர்ஜித்தாள்.

"என் பக்கம் இருப்பதால் உனக்கு நான் நியாயவாதி என்பதுபோல் அவன் பக்கம் இருக்கும் அவனுக்கு அவன் தானே நியாயவாதி" என்று ஜோயல் கூற, மறுபேச்சின்றி மௌனியானாள்.

அங்கு மீண்டும் தங்கள் இடம் வந்த ஃபேர்லே காஸ்மோவைத் தேடிச் செல்ல, "ஜான்.. என்ன காரியம் பண்ண போற?" என்று ஈடன் கேட்டான். அழுத்தமாய் வாய்மூடி நடப்பவனோடு ஓடிய லூமி, "வேணாம் ஜான்.. நம்ம லார்டை எதிர்த்து பேசாத. மாயக்கல் சாபத்துக்கு ஆளாகிடப்போற" என்று பதற, "ஜான்.. நீ என்ன பேசப்போற?" என்று டைஸா வினவினாள்.

யாவர் பேச்சையும் கேட்காது லார்ட் காஸ்மோவிடம் வந்தவன், மண்டியிட்டு அமர்ந்து அவரை வணங்க, "வா ஜான்." என்றார். "லார்ட்.. உங்ககிட்ட ஒரு வேண்டுகோள் கேட்டு வந்திருக்கேன்" என்று ஃபேர்லே கூற, "வேண்டுகோளா? என்னதது?" என்று வினவினார்.

அவரை வேதனையோடு நிமிர்ந்து பார்த்தவன், "இந்த போர் வேண்டாம் லார்ட்" என்று கூற, சட்டென எழுந்த காஸ்மோ, "என்ன சொன்ன?" என்று ஆத்திரமாகக் கேட்டார்.

"லார்ட்.. இந்த போர்.. பல உயிரழப்புகளை கொடுத்துடுச்சு லார்ட். இது வேண்டாம் லார்ட். நம்ம பாரடைஸோட நிம்மதியே கெட்டுடும் போல" என்று அவன் கூற, "மாயக்கல் மேல எனக்கு சாதகமா போர் செய்வதா தான் சத்தியம் பண்ணிருக்க. நினைவிருக்கா?" என்று காஸ்மோ கர்ஜனையாகக் கேட்டார்.

"ஆமா லார்ட். அதுக்கு கட்டுப்பட்டுத்தான் மனதைக் கல்லாக்கிக்கிட்டு தினமும் போர்க்களம் புகுறோம். மனசு வலிக்குது லார்ட். உயிரானவங்கள இழக்கும் வேதனை கொடியது" என்று ஃபேர்லே கரகரத்த குரலில் கூற, "உனக்கென்ன பைத்தியமா ஜான்?" என்று கத்தினான்.

"ஆமா.. பைத்தியம் தான். ஒருத்தி மேல பைத்தியமா இருந்தேன். இங்க நான் வந்த கையோட உங்ககிட்ட பேசி அவளைக் கரம்பிடிக்க இருந்தேன். ஆனா அவ என் எதிரிப்படையில இல்ல இருக்கா" என்று ஃபேர்லே கூறவும் காஸ்மோ அதிர்ந்து விழித்தார்.

"ஆனா பாருங்க லார்ட்.. எங்க காதலைவிட நாங்க மாயக்கல் மேல செய்த சத்தியத்துக்கும் உங்களுக்கு கீழ் செய்யும் போருக்கும் தான் முக்கியத்துவம் கொடுத்து விலகி இருக்கோம். இந்த போர்க்காலம் சீக்கிரம் முடிஞ்சுடாதானு தவிப்போட காத்திருக்கோம்" என்று ஃபேர்லே கூற, காஸ்மோவிடம் பதிலே இல்லை.

காஸ்மோவுக்கு அவனது தவிப்பு பார்க்க பாவமாக இருந்ததென்னவோ உண்மை தான்.. அதற்காக தன் சுயநலம் விடுத்து போரை நிறுத்துமளவு எண்ணம் இல்லை. "லார்ட்.." என்று ஜான் அழைக்க, "போய் போரை கவனி ஜான். போர் முடிஞ்சதும் நானே உங்களுக்கு திருமணம் செய்து வைப்பேன்" என்று கூறினார்.

"எங்கள்ல யாராவது இறந்து போயிட்டா?" என்று ஜான் கேட்ட கேள்வி காஸ்மோவை ஒருநொடி அசைத்தது. "போ ஜான்.. நான் சொன்னது சொன்னது தான்" என்று அழுத்தமாக காஸ்மோ கூறிட, மீண்டும் வணங்கிவிட்டு எழுந்தவன், "போரின் முடிவு ரொம்ப கோரமா இருக்கும் லார்ட். தாங்கிக்க தயாரா இருங்க" என்றுவிட்டுச் சென்றான்.

அங்கு ஓய்ந்து படுத்திருந்த அடாமினாவைச் சுற்றி சைரா, அலாஸ், ஐலா, ஆலிஸ், தோரா, ரெய்டன், ஃபோர்ட் மற்றும் கார்டிலியா இருந்தனர்.

யாரிடமும் பேச்சில்லை. அமைதியாக ஒருவர் முகம் பார்த்து ஒருவர் அமர்ந்திருக்க, எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பனிக்கத்தி அலாஸ்காவின் காலடியில் விழுந்தது. அதன் சத்தத்தில் திடுக்கிட்ட அனைவரும் அதை என்னவென்று பார்க்க, குனிந்து அதை எடுத்துப் பார்த்த அலாஸ், "ஓட் (தூது) வந்திருக்கு. எனக்கு யாரு தூது அனுப்ப போறாங்க?" என்றாள்.

குழப்பமான முகத்துடன் அவள் அதை எடுக்க, "என்னனு பாரு அலாஸ்" என்று தோரா கூறினாள். "ம்ம்.." என்று தலையசைத்தவள் அதை எடுத்து "ப்ளோ (blow)" என்க அந்த கத்தி விரிந்து பெரிய பனி தகடு போல் ஆனது.eiIJ03S64163.jpg

அதில் செதுக்கப்பட்ட எழுத்துக்களை வாசித்தவள் கண்கள் விரிந்துகொண்டே போக, "யாரு அலாஸ்?" என்று கார்டிலியா வினவினாள்.

"ஈ..ஈடன்" என்று அவள் கூற அடாமினாவின் புருவங்கள் சுருங்கியது. "யாரு ஈடன்?" என்று ஐலா வினவ, அடாமியை ஒரு பார்வை பார்த்தவள், "ஜான் தோழர்" என்க, "அவங்க எதுக்கு உனக்கு தூது அனுப்பிருக்காங்க?" என்று ஆலிஸும், "அதுல என்ன இருக்கு அலாஸ்?" என்று ரெய்டனும் வினவினர்.

அனைவரையும் பார்த்துவிட்டு அடாமியைப் பார்த்தவள், "ஜ..ஜான் அவரோட லார்ட் கிட்ட போர நிறுத்த சொல்லி பேசிருக்காராம்" என்றதும் அங்கு அனைவரும் அதிர்ந்தனர். "என்னது? காஸ்மோ கிட்டயே போய் பேசினானா?" என்று ஃபோர்ட் வினவ, 'ஆம்' என்பதுபோல் தலையாட்டியவள், "ஆனா காஸ்மோ மறுத்துட்டாராம். தன்னுடைய காதலி எதிரிப்படையில இருக்கானு அவர் அழுது கேட்டும் காஸ்மோ மறுக்க, போர் முடியும்போது ரொம்ப வேதனைப் படுவீங்கனு சொல்லிட்டு போய்ட்டாராம்" என்றாள்.

'என் தோழனை திட்டி அனுப்பினாளே உன் தோழி. அவன் செய்திருக்கும் காரியத்தைப் பார்த்தாயா?' என்பதைக் கூறத்தான் ஈடன் அலாஸ்காவுக்கு அத்தூதை அனுப்பியிருந்தான். அது அடாமினா உட்பட அனைவருக்குமே புரிந்தது.

சோர்வான ஒரு புன்னகையை சிந்திய அடாமி, "லார்ட் ஜோயல் மேல மதிப்பு மாரியாதை என்பதையெல்லாம் தாண்டி நியாயம் இருக்கு அலாஸ். அவரை போர நிறுத்த சொல்லி நான் கேட்பதும் என் சுயநலத்துக்காக மொத்த பாரடைஸயே அழிப்பதும் ஒன்னு. இதை ஃபேர்லே புரிஞ்சுப்பார். என் காதலை.. ம்ஹும்.. எங்க காதலை விமர்சிக்க வேண்டாம்னு நான் சொன்னதா அவருக்கு தூது அனுப்பிடு" என்று கூற, கண்ணீரோடு தலையசைத்த அலாஸ் அவ்வாறே அனுப்பி வைத்தாள்.

தாங்களே உணராத தங்களின் நேசத்திற்காக, அலாஸ்கா அனுப்பிய தூது கத்தியை ஈடனும் ஈடன் அனுப்பிய தூது கத்தியை அலாஸும் பத்திரமாக வைத்துக் கொண்டனர்…


6e16ba52e010b3206ddc659f4d1bf441.jpg

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩

 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-14

4f87e6afb678916ff17d4b445be25ea0.jpg


அடுத்த நாள் போர்க்களம் புகுந்த பெண்ணவளை முதல் வரிசையில் நின்று கொண்டு தன் பார்வை வட்டத்தில் அவளை சுழல வைத்தான் ஃபேர்லே. ஆனால் அவள் அவனை திரும்பியும் பார்க்கவில்லை.

'என்னை பார்க்காது நீ தடுத்திடலாம் ஃப்ளோரா. ஆனா உணராது இருக்க முடியாது' என்று ஃபேர்லே நினைத்துக் கொள்ள, அங்கு 'உன் பார்வையை மட்டுமே தான் தவிர்க்க முடியுது ஃபேர்லே. உன் உணர்வை புறக்கணிக்க முடியவே இல்ல' என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

இருவரின் இதழ்களும் இறுகபூட்டிக் கெண்டு விட்டதுதான். ஆனால் மனங்கள் இணைந்திசைக்கும் தருணங்களில் இதழ்களின் அசைவுகளுக்கு அவசியமேது என்பது இவர்களின் காதலில் உயிர்ப்பெற்று மெய்யானது!

அவனிடம் போரிட நேர்ந்தால் கூட, அவனைப் பார்க்கவே கூடாது என்று பாறைகளைத் தூக்கி அவன்மீது வீசி எறிந்துவிட்டு அவள் வேறு புறம் பறந்திட, வீசி எறிந்த பாறையைவிட அவள் பாரா முகம் கொடுத்த கணம் தான் அவனை ரணமாய் தைத்தது.

அந்த சம்பவம் நடந்து மூன்று தினங்கள் கடந்திட்ட நிலையில் இருவரும் டோர் மலையில் கூட சந்தித்துக் கொள்வதில்லை. ஆனால் தினமும் ஜான் டோர் மலைக்கு வந்திடுவான். அவளில்லாது போதும் அங்கு அவள் கடத்திவிட்டுச் சென்ற அவளது வாசத்தை சுவாசிக்கவே சென்றிடுவான்.

அவன் அங்கு வருவான் என்பது அறிந்தவளாக தினமும் காலை அழகிய பச்சைநிற சீனியா (சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த பூவினம்) மலர்களை அங்கு வைத்துவிட்டு வருவாள்.

0a3f1a098de3069bc0db833f33397c51.jpg

மாலை அந்த மலரில் அவள் வாசம் நுகர்ந்து அதை எடுத்துக் கொண்டு பச்சை நிற ரோஜாவை அங்கு வைத்துவிட்டுச் செல்வான்.

b665fea9bddf48588d47eefc4c81ec8f.jpg

இப்படியே இந்த மூன்று நாட்கள் ஓடியிருந்தது. இன்று போர் முடிந்து எப்படியாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என்று நினைத்திருந்தவன், அதன்படியே போர் முடிந்ததும் அவள் முன் வந்து நின்றான்.

எப்போதும் போல் பாராமுகம் காட்டி அவள் நகர, அவள் கரம் பற்றி "ஃப்ளோரா" என்றான். "ஃபேர்லே ப்ளீஸ் விடுங்க" என்று அவனைத் திரும்பியும் பாராமல் அவள் கூற, சுற்றி நின்ற இருவரின் தோழர்களும் அவர்களது அகம் மற்றும் புற ஆர்ப்பரிப்பை வேதனையோடு பார்த்தனர்.

"ஃப்ளோரா.. என்னை பார்க்க கூட மாட்டியா? உன்னை அந்த கோலத்தில் பார்த்த பிறகு என் உயிரே என்கிட்ட இல்ல. அந்த கோபத்தில் தான் அப்படி நடந்துகிட்டேன்" என்று கூறியவன், "இவ்வளவு விளக்கம் நான் கொடுக்கும் அவசியமே இல்லை. என் ஃப்ளோராக்கே என்னை புரியும். புரிஞ்சும் ஏன் இந்த விலகல்னு தான் எனக்கு புரியலை" என்று கூற, "ஏதோ காரணம் இருக்கும்னு விலகி இருங்களேன்" என்றாள்.

அவளது குரலில் இருந்த கரகரப்பும் காட்டமும் அவனை நிலைகுழைய வைத்தது. "போர் முடியும் வரை தானா? இல்ல ஒரேடியா விலகி இருக்கனுமா?" என்று அவன் கேட்ட நொடி திடுக்கிட்டு திரும்பியவள், "ஏன் ஃபேர்லே என்னை கொல்லுறீங்க?" என்று கத்தினாள்.

அவளைப் பார்த்து லேசாய் சிரித்தவன், "என் கொடூரங்களை தாங்க பழகிக்கோனு முதல் நாள் போரின் போதே சொன்னேனே" என்று கூற, அவனைக் கண்டு சிரிப்பதா அழுவதா என்ற நிலை அவளுக்கு.

"ஃப்ளோரா.." என்று அவன் கெஞ்சல் குரலில் அழைக்க, ஈடன் அலாஸ்காவை முறைத்தான். அவன் முறைப்பதைக் கண்ட அலாஸ் 'இவன் எதுக்கு என்னை முறைக்குறான்? நான் தான் இவனை முறைக்கனும். இவன் தோழனால தான் என் தோழி தினம் தினம் அழறா' என்று நினைத்துக் கொள்ள, அப்போதும் அவன் தோழனின் செயலுக்கு எதற்கு அவனை முறைக்க வேண்டும் என்று அவள் எண்ணவில்லை.

அனைவரும் தங்களைப் பார்ப்பது உணர்ந்து தன் கண்களை அழுந்த துடைத்த அடாமி, "ஆர்காட்.." என்று கத்த, "உன் பக்கத்துல தானே இருக்கேன்" என்றது ஆர்காட். அதை முறைத்தபடி ஃபேர்லேவிடமிருந்து தன் கரத்தை வெடுக்கென்று எடுத்துக் கொண்டவள், அதன் மீதேறி, "டோர் மலைக்கு போ" என்க, "ஆடம்.. நீயும் வந்து சேர்ந்துடு" என்று ஆர்காட் கத்தியது. அதன் தலையிலேயே தன் கத்தியை வைத்து தட்டியவள், "போ.." என்க யாவர் முகத்தில் சிறு இலகுத்தன்மை கொண்ட புன்னகை!

ஃபேர்லேவும் சின்ன சிரிப்போடு ஆடம் மீதேறி அமர, "புறப்படனுமா? எனக்கு ரொம்ப சோர்வா இருக்கே" என்று ஆடம் கேலி செய்தது. "ப்ச்.. ஆஆடம்" என்று அவன் பல்லை கடிக்க, "சரிசரி" என்ற ஆடம் வீலென்று பறந்தது.

சென்ற இருவரையும் பார்த்து நின்ற தோழர்கள் லேசான சிரிப்போடு விலக, "உன் தோழன் என் தோழியை அழவைக்க நான் தான் உன்னை முறைக்கனும் ஈடன். சும்மா இந்த முறைக்குறது தூது அனுப்புறதுலாம் வேண்டாம்" என்றாள், அலாஸ்கா.

"உனக்கு தூது அனுப்பனும் முறைக்கனும்னு எனக்கு ஆசை ஒன்னும் இல்லை. அப்றம் என்ன சொன்ன? என் தோழன் உன் தோழிய அழவைக்குறானா? அவ தான் இவன அழ வைக்குறா கெஞ்ச வைக்குறா. இப்ப கூட பார்த்த தானே?" என்று அவன் எகுற, "ஈடன்ன்.. எதுக்கு இந்த வேண்டாத சண்டை?" என்று டைஸா அவனை கடிந்தாள்.

"நிறையா பனிப்பாறைகள முழுங்கிருப்பான்.. உச்சந்தலையில் சூடு பறக்க ரெண்டு தட்டுங்க" என்று அலாஸ்கா கத்த, அவளை தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்ட சைரா "வாயமூடிட்டு வந்துதொலை" என்றாள்.

அங்கு டோர் மலையில் எதிரெதிரே நின்றிருந்த இருவர் மனதிலும் கணமான உணர்வு. "நான் ரொம்ப சோர்ந்துட்டேன் ஃபேர்லே. காதலில் இத்தனை இத்தனை வலி இருக்குமா? இனிப்பான சுகமான காதலே இல்லையா?" என்று சோர்வாய் அடாமி வினவ, ஓரடி முன் வந்து அவள் தோள் பற்றியவன், "வலியற்ற காதல் இல்ல ஃப்ளோரா" என்றான்.

அவன் கை கொடுத்த கதகதப்பில் இன்னும் சோர்ந்தவள் அவன் மார்பில் தலைசாய, அவள் தலைகோதியவன், "ஏன் ஃப்ளேரா இவ்வளவு கலக்கம்?" என்றான்.

"இப்பலாம் நீங்க மனிதராவே இருந்திருக்கலாங்குற எண்ணம் அடிக்கடி வருது ஃபேர்லே. எ.. எனக்கு.. பயமா இருக்கு. எ.. என் காதல்ல நானே நிலையா இல்லையோனு" என்றவள் அவன் கண்களைக் கண்ணீரோடு ஏறிட்டு, "உங்க காதலுக்கு என் காதல் தகுதிய இழந்திடுமோனு பயமா இருக்கு ஃபேர்லே" என்றாள்.

அவள் ஈரக் கன்னங்களைப் பற்றியவன், "காதலில் என்ன ஃப்ளோரா உன் காதல், என் காதல்? இருமனம் ஒத்து காதலிச்ச பிறகு மனமும் ஒன்னுதான் காதலும் ஒன்னுதான். நீ ஏன் தேவையில்லாம யேசிக்குற? நிலையா இல்லாம தான் இவ்வளவு நடந்தும் என் கூட இருக்கியா? லார்ட் ஜோயலை உன் கண்முன்னவே நான் எதிர்த்தப்போ கூட எங்க உன் ஆட்கள் வந்து சண்டை நடந்திடுமோனு பயந்தியே.. அது சொல்லிடும் உன் கேள்விக்கான பதில" என்று கூற அவள் விழிகளில் முத்துமுத்தாய் நீர்…

600228bb17faf6bbf85c187d7fdd7895.jpg

"இந்த போர் எப்ப முடியும்?" என்று அவள் கேட்ட கேள்வி ஏனோ இருவர் உடலையுமே நடுங்க வைத்தது. "தெரியலை ஃப்ளோரா.. நான் மாயம் கற்றவன் தான். ஆனா காலத்தை தாண்டி நடக்கும் எதுவும் எனக்கு தெரியாது. ஆனா இன்னும் ரொம்ப நாள் இது நீடிக்காதுனு என் உள்மனசு சொல்லுது" என்று அவன் கூற, ஒரு பெருமூச்சு விட்டவள் அப்படியே அமர்ந்தாள்.

அவளின் மடியில் தலைசாய்த்து படுத்த ஜான் அவள் பச்சைநிற கண்களைக் பார்த்த வண்ணம், "உனக்கு என்மேல க்ரஷ் தானே அப்போவே?" என்று வினவ அந்த காலங்களை எண்ணி சன்னமாய் ஓர் சிரிப்பு அவளிடம்.

"சொல்லு ஃப்ளோரா.." என்று அவன் ஆசையாகக் கேட்க, "ம்ம்.. பார்க்க நல்லா ஹேன்ட்சமா இருக்காரேனு சும்மா முதல் நாள் உங்கள தொடர்ந்து லைப்ரேரி வந்தேன். மனிதர்களை நான் சைட் அடித்ததில் நீங்க புதுசு இல்லை. ஆனா நான் தொடர்ந்த முதல் ஆள் நீங்க தான். உங்களைத் தொடர்த்து லைப்ரேரி வந்தப்ப ஒரு ஃபேன்டஸி கதையைப் படிச்சுகிட்டு இருந்தீங்க. அதில் உங்க முகத்தில் வந்துபோன ரசனைகள் என்னை கவர்ந்துச்சு. நானும் அந்த கதையை எடுத்து படிச்சேன். அவ்வளவு அழகான மாயமும் மையலும் கலந்த காதல் கதை. அதிலிருந்து உங்களைத் தொடருவதும் நீங்க புத்தகம் படிக்கும்போது உங்க முக உணர்வுகளைப் படிச்சு அதுல என்னை கவரும் உணர்வு தென்பட்டா அந்த கதையைப் படிப்பதையும் வாடிக்கையா வச்சிருந்தேன்"


a41b64d73062a2b4557a6920a5228bf3.jpg

"ஒரு கட்டம் மேல சைரா என்னை கண்டுபிடிச்சு திட்ட ஆரம்பிச்சுட்டா. அவள் திட்டுறானு ஒருநாள் உங்களைப் பார்க்காம இருந்தபோது தான் அந்த உணர்வுகளைப் படிக்கும் திறன் காதல் கொண்டவங்க கிட்டதான் செல்லுபடியாகும்னும் உங்கமேல எனக்கு காதல்னும் புரிந்தது. அது சுகத்தையும் வலியையும் சேர்த்தே கொடுத்து வதைச்சது. ஆனா நீங்க என்னை பற்றி எல்லாம் தெரிஞ்சும் என் காதல்ல குளிர் காய்ந்து என்கிட்ட எதையுமே சொல்லாம உண்மையான மனிதர் போல நடிச்சிருக்கீங்க" என்று நீளமாக பேசி முடித்தாள்.

அவள் கோபமாக முடித்த வரிகளில் அட்டகாசமாய் சிரித்தவன், "நிஜம் தான்.. உன்கிட்ட மனிதன் இல்லைனு சொல்ல தோனலை. அந்த சைட், அந்த தவிப்பு, அந்த ஏக்கம் எனக்கு அப்போ பிடிச்சிருந்தது. ஒருவேளை அப்போவே சொல்லியிருந்தா கூட நீ லார்ட் ஜோயல் பிரிவை சேர்ந்தவனும் நான் லார்ட் காஸ்மோ பிரிவை சேர்ந்தவன்னும் தெரிந்து நம்ம பகையாளி ஆயிருப்போம் போல" என்று கூற, மீண்டும் அவளிடம் பெருமூச்சே.

"நல்லவேளை நீங்க சொல்லலை.. இல்லைனா இந்த வலி நிறைந்த காதலை இழந்திருப்பேன்" என்று அவள் கூற, வலியுடன் கூடிய ஒரு புன்னகை அவனிடம். இருவரும் காதலும் வேதனையும் கலந்த பார்வை பரிமாற்றத்தில் லயித்திருக்க, அவர்களது காதலை சொல்லொன்னா உணர்வோடு பார்த்துக் கொண்டிருந்தது ஒரு ஜோடி விழிகள்.

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩

 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-15

காஸ்மோ… காஸ்மோவின் இரு விழிகளும் ஃபேர்லே மற்றும் ஃப்ளோராவின் காதலை சொல்லொன்னா உணர்வுகளோடு பார்த்துக் கொண்டிருந்தது.

அங்கு அடாமினாவின் பின்னந்தலையில் தன் கரம் வைத்து முன்னே இழுத்தவன், "என் ஃப்ளோரா என்னிக்கும் எனக்கு தான். நம்ம காதல் அந்தமற்றது. நீ தேவையில்லாம ஏதும் யோசித்து பயப்படாத" என்று கூற, அவன் நெற்றியில் முத்தமிட்டவள், "தெரியும்.. அவ்வளவு எளிதில் உங்கள விட்டுடுவேனா?" என்றாள்.

அழகிய புன்னகையுடன் எழுந்தவன், "நேரமாகுது ஃப்ளோரா. புறப்படலாம்" என்று கூறி விசிலடிக்க, ஆடம் மற்றும் ஆர்காட் வந்தது. ஆடம் மீதேறி அமர்ந்து ஒரு பறக்கும் முத்தத்தைக் கொடுத்துவிட்டு அவன் புறப்பட, சென்றவனையே இமைக்க மறந்த நிலையில் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அப்படியே சிலைபோல் நின்றவள் பின்னே கேட்ட குரல் செருமலில் திரும்ப, அங்கு அவள் முன் காஸ்மோ நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும் ஒருவித அதிர்ச்சியோடு அவள் ஏறிட, "உன்கிட்ட பேசனும்" என்றார்.

f080707d4f4c3551f04f542a23636fe8.jpg

"உங்ககிட்ட பேச எனக்கொன்னும் இல்லை" என்று அவள் கத்தரித்தார் போல் கூறிட, "ஆனா எனக்கிருக்கு" என்றார். அவளிடம் பதிலேதும் இல்லாது போக, அந்த மௌனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, "எனக்கு நீ ஒரு உதவி செய்தா. உன் ஃபேர்லேவை உனக்கே உனக்குனு ஒப்படைக்க நான் தயார்" என்றார்.

அடாமி அவரைப் புரியாத பார்வை பார்க்க, "எனக்கு தேவை இந்த பாரடைஸ் மற்றும் பாரடைஸ் கிரிஸ்டோ. நீ சொன்னா லார்ட் ஜோயல் போரை நிறுத்துவாரானு எனக்கு தெரியாது. ஆனா பாரடைஸ் கிரிஸ்டோ இருக்குமிடத்தை உனக்கு கண்டிப்பா சொல்லுவார். அதை கேட்டு எனக்கு சொன்னா போதும். பாரடைஸ் வாருக்கான சட்டதிட்டங்கள் உனக்கே தெரியும். மாயக்கல்லில் ஒரு பிரிவை சேர்ந்து போர் புரியும் ஒருத்தர் எதிர்ப்பிரிவை ஆதரிச்சா அழிவு நிச்சயம். ஆனா அதுவே அந்த பிரிவின் தலைமையாளனே எதிர் பிரிவுக்கு அவரை தத்துக் கொடுத்தா மாயக்கல் ஒன்னும் பண்ணாது. எனக்கு இந்த உதவிய நீ செய்தா உன் ஃபேர்லேவை உன் பிரிவுக்கே கொடுத்திடுவேன்" என்றான்.

eiR6AUQ86021.jpg

அவரின் பேச்சிற்கு அவளிடம் எந்த உணர்வுமில்லை. மிஞ்சிப் போனால் கோவம் கொண்டாவது அவள் நான்கு வார்த்தை பேசுவாள் என்று காஸ்மோ எண்ணியிருக்க, அமைதியாய் ஆர்காட் மீது ஏறி அமர்ந்தவள், "போகலாம் ஆர்காட்" என்றாள்.

f65a73e0d28b53742eefb98f91180448.jpg

காஸ்மோவை துச்சமாய் ஒரு பார்வை பார்த்த ஆர்காட் புறப்பட, அடாமி காஸ்மோவை திரும்பி ஓர் பார்வை பார்த்துக் கொண்டாள். சென்றவளை ஒருவித கோணல் புன்னகையுடன் பார்த்த காஸ்மோ தானும் புறப்பட, தான் எய்த அம்பு சரியாய் வேலை செய்துவிட்டதாய் புன்னகைத்துக் கொண்டான்.

அங்கு தன் இடம் வந்து சேர்ந்தவளை லார்ட் ஜோயலின் பார்வையே முதலில் வரவேற்றது. அவரிடம் ஓர் அழுத்தமும் ஆழமும் நிறைந்த கம்பீரமான பார்வை. அதை கண்டவுடன் அவளிடம் ஒரு படபடப்பு.. பதட்டம்..

"அடாமினா" என்றவரின் கணீர் குரலில் அவரை ஏறிட்டவள், "லார்ட்" என்க, அவளை ஆழ்ந்து பார்த்தவர், "நீ போருக்கு இரண்டு நாட்கள் வராம இருந்திருக்க இல்ல?" என்று கேட்டார். "ஆமா லார்ட். அந்த இடி தாக்குதலால இரண்டு நாட்கள் போருக்கு வரமுடியாம இருந்தேன்" என்று அவள் கூற, "ம்ம்.. இன்னும் ஒருநாள் தான் உனக்கு பாக்கி இருக்கு. பார்த்து" என்றுவிட்டுச் சென்றார்.

அவர் சென்றதும் ஒரு பெருமூச்சோடு அவள் செல்ல, சென்றவளைத் திரும்பி ஓர் பார்வை பார்த்துக் கொண்ட லார்டும் சென்றார்.

அடுத்த நாள் போர்க்களத்தில் மலர்ந்த சிரிப்புடன் போரிடும் அடாமினாவை யாவரும் வித்யாசமாய் பார்க்க, அவள் கரத்தில் முற்செடிகள் வந்து பாயவும் "ஸ்ஸ்.." என்றபடி திரும்பியவள் முகத்தில் அதே புன்னகை.

f95faf3a061d54424b08b6caecbbf9eb.jpg

விஷமமாய் சிரித்த ஃபேர்லே, "என்ன ஃபேரி.. உன் முகத்தில் புன்னகையின் அளவு அதிகமா தெரியுது" என்று கேட்க, "ஆஹா.. சிரிப்போட அளவு அதிகமா இருக்குனு தான் உங்க கொடுமைகளால் அதை குறைக்க பார்க்குறீங்களோ?" என்றாள்.

"என்ன செய்ய, சிரிக்க வைத்து அழகு பார்க்க வேண்டிய என் ஃபேரிய அழவைத்து பார்க்கும் சந்தர்ப்பம் தான் எனக்கு கிடைச்சிருக்கு" என்று அந்த சோகமான வரிகளையும் சிரிப்புடனே அவன் கூற, தானும் புன்னகைத்தவள், அவன் மீது பாறைகளை தூக்கி வீசினாள்.

அதை தாராளமாய் வாங்கிக் கொண்டு பதிலாய் கூர் கற்களை எறிந்தவன், "உன் காதல் பாரமே தாங்கிட்டேன் இந்த பாறைகள் எம்மாத்திரம்?" என்க, "நிறையா கதைகள் படிச்சு வசனம் பேச கத்துக்கிட்டீங்க ஃபேர்லே" என்றாள்.

அன்றைய போர் முடிந்து யாவரும் புறப்படவிருக்க, "காஸ்.." என அழைக்க வந்து விழுங்கிக் கொண்டவள், "ஃபேர்லே" என கத்தினாள். பேர்லேவுடன் அவனது தோழர்களும் திரும்பிப் பார்க்க, "உங்க லார்டை கூப்பிடுங்க" என்றாள்.

தனது க்ரிஃபினில் பறக்கவிருந்த காஸ்மோ அவளது குரலில் திரும்பிப் பார்க்க, ஃபேர்லேவும் அவரைப் பார்த்தான். உள்ளுக்குள் ஒருவித சந்தோஷத்தோடு அவர் வந்து நிற்க, "அடாமினா என்ன பண்ற?" என்று சைரா வினவினாள்.

"அடாமி அவரை எதுக்கு கூப்பிடுற?" என்று கார்டிலியா வினவ, "என்ன பண்ண போற அடாமி?" என்று ஐலா வினவினாள். அலாஸ்கா பயத்தோடு ஜோயலைத் திரும்பிப் பார்க்க, அவர் கூர்மையான பார்வையோடு இவர்களைப் பார்த்து நின்றார்.

காஸ்மோ அவள் முன் வந்து நிற்க, "உங்களுக்கு தேவை பாரடைஸ் க்ரிஸ்டோ தானே? அதை கொடுத்தா என் ஃபேர்லேவை என்கிட்ட கொடுத்துடுவீங்க இல்லையா?" என்று அடாமி கேட்டாள்.

அதில் ஃபேர்லே சட்டென காஸ்மோவைத் திரும்பிப் பார்க்க, அவர் 'ஆம்' என்பதுபோல் தலையசைத்தார். "ஃப்ளோரா என்னதிது?" என்று ஃபேர்லே கர்ஜிக்க, "நானில்லை ஃபேர்லே.. உங்க லார்ட் தான் உங்களை என்கிட்ட வந்து விலை பேசியது" என்றாள்.

லார்ட் ஜோயலை அவள் திரும்பிப் பார்க்க அவர் பார்வை அப்போதும் கூர்மையாக அவளை நோக்கியது. "உங்களுக்கு பதட்டமா இல்லையா லார்ட்? என்கிட்ட வந்து பாரடைஸ் கிரிஸ்டோ இருக்கும் இடத்தை கேட்குறாங்க" என்று அடாமி வினவ, அவர் முகத்தில் மெல்லிய குறுஞ்சிரிப்பு.

அதில் திருப்தியான புன்னகையுடன் திரும்பியவள், "எங்க லார்ட் கிட்ட விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏன்னா பாரடைஸ் கிரிஸ்டோ இருக்கும் இடம் எனக்கே தெரியும்" என்று அவள் கூற, அங்கு லார்ட் ஜோயலைத் தவிர அத்தனை பேர் முகத்திலும் அதிர்ச்சி.

"என் தோழிகளுக்குக் கூட இந்த விஷயம் தெரியாது. ஏன் ஃபேர்லேவுக்கும் தெரியாது. க்ரிஸ்டோ இருக்கும் இடம் எனக்கும் லார்ட் ஜோயலுக்கும் மட்டுமே தான் தெரியும். ஏன்னா நான் கிரிஸ்டோ சேவர் ஃபேரி (Cristo saver fairy -க்ரிஸ்டோவின் பாதுகாப்பு தேவதை)" என்று அவள் கூற அத்தனை பேரும் அவளை ஆச்சரியமாக பார்த்தனர்.

'க்ரிஸ்டோ சேவர் ஃபேரி என்னும் தேவதை, பிறக்கும் போதே க்ரிஸ்டோவின் அடையாளத்தோடு பிறப்பாள். அந்த அடையாளத்தினை அப்போதைய லார்டால் மட்டுமே கண்டுகொள்ள இயலும். க்ரிஸ்டோ அதன் இருப்பிடம் விட்டு ஒரு அணு அசைந்தாலும் க்ரிஸ்டோ சேவரால் அதை உணர்ந்திட இயலும். உடனடியாக அதனை காத்திட அவர் அங்கு சென்றிட இயலும்.

b079b0ede39a6fc35763386b8e6dcae1.jpg

"ஒரு க்ரிஸ்டோ சேவரான என்கிட்டயே வந்து க்ரிஸ்டோவை திருடி கொடுக்க சொல்லுறீங்க. அதுவும் என் காதலை காரணமா வைத்து. என் காதலும் க்ரிஸ்டோவும் விலை பேசுமளவு கேவலமான பொருட்கள் இல்லை. நீங்கள்லாம் லார்டாக துளியும் தகுதியே இல்லாதவர்னு உங்களுக்கு புரிய வைக்கத்தான் என்னோட அடையாளத்தை இப்ப சொன்னேன். உங்களுடைய எண்ணம் எவ்வளவு கீழ்த்தரமானதா இருக்குனு பாருங்க"

"இந்த போர்க்களம் புனிதமானது. அந்நிய சக்தியிடமிருந்து நம்ம பாரடைஸ காப்பாற்றிய இடமிது. இந்த இடத்தில் பாரடைஸ் வாசிகளே ஒருவருக்கு ஒருவர் கேவலம் பதவிக்காக அடிச்சுக்கும் போரை உருவாக்கியதே உங்களுடைய தரத்தை குறைச்சிடுச்சு. இப்போ இது இன்னும் உங்களை இழிவு படுத்திடுச்சு. இப்பவும் சொல்றேன் போரை நிறுத்திட்டு எங்க லார்டுக்கு ஒரு நல்ல சேவகனா உங்களுடைய திறனையும் மனதையும் மாயத்தையும் வளர்த்துக்கும் வழிய பாருங்க" என்று அடாமினா நீளமாக பேசி முடிக்க, "ஏ.." என காஸ்மோ கத்தினான்.

"லார்ட்.." என்று கர்ஜித்த ஃபேர்லே, "உங்களிடம், உங்களின் கீழ் வசிக்கும் ஃபேரியையே ஒரு பொருளுக்காக விலை பேசியிருக்கீங்க. உங்களை நம்பி எப்படி நாங்க உங்கள லார்டாக்க? உங்களுக்கு கீழ போரிடுவதை நினைச்சாலே அத்தனை கோவமா வருது. தயவுசெய்து இந்த போரை நிறுத்திடுங்க" என்று கத்த, "அதை சொல்ல நீ யாரு? உன் இடத்துல இருக்க கத்துக்கோ. எனக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று கத்திவிட்டு அவமானப்பட்ட ஆத்திரத்தோடு காஸ்மோ புறப்பட்டான்.

கண்களில் கோபத்துடன் சோகமும் சேர்ந்து கலந்திட, விழி நீர் பிறப்பெடுத்து நின்றது ஃபேர்லேவிற்கு. தானும் தனது காதலும் ஒருவனுக்கு விலை பொருளாக நின்றதில் கோபமும் ஆத்திரமும் வரப்பெற்று அதை அவனால் பொருக்க முடியவில்லை.

அவன் சோகத்தை கடினப் பட்டாவது விழுங்கிவிடுவான் ஆனால் கோபத்தை விழுங்குவது கடினம் என்பது முன்பே அறிந்ததாயிற்றே! மண்டியிட்டு அமர்ந்தவன், "ஆ…." என்று கத்த, அவனது உடலிலிருந்து பச்சை நிற கங்குகள் பறந்தன.

அதில் பதறியடித்து அவன் முன் வந்து மண்டியிட்ட அடாமினா அவனை இறுக அணைத்துக் கெள்ள, அவனுடைய அடங்கா உணர்வுகள் அவளுள் பாய்ந்தது. அதன் விழைவாய் அவன் மீதிருந்து வெளியேறிய கங்குகள் அடங்கி, அவள் மீதிருந்து கங்குகள் பறக்க, ஐலா "அடாமி.." என்று பதறி கத்தினாள்.

135c71a57e37a66655070bd72efb2cfb.jpg

அலாஸ் அக்காட்சியைக் காணமுடியாது தோராவின் தோளில் முகம் மூடி அழ, தோரா அவள் முதுகை கண்ணீரோடு வருடிக் கொடுத்தாள். தன் கண்ணிலிருந்து வடியும் கண்ணீரை துடைக்க மனமற்ற ஃபோர்டின் கரம் பற்றிய கார்டி, "காதல் காதலிப்பவர்களுக்கு தான் வலியைக் கொடுக்கும். இவங்க காதல் நம்ம அத்தனை பேருக்கும் அந்த வலியை உணர்த்துது ஃபோர்ட்" என்று அழுதாள்.

அங்கு தன்னவள் தன்னுணர்வுகளை வாங்கி அவதிப்படுவதை உணர்ந்தவுடன் ஃபேர்லே அவளிலிருந்து பிரிய, சோர்வாய் அவள் பொத்தென மண்ணில் வீழ்ந்தாள். அதில் பதறி மீண்டும் அவளை தன் மடிதாங்கியவன், "ஃப்ளோரா.." என்க, "உங்க காதல்..ப்ச்.. நம்ம காதல் விலைமதிப்பற்றது ஃபேர்லே. அதை ஒருத்தர் விலைபேச கொடுத்துடுவேனா நான்? ம்ஹீம்.. அது நான் செத்தாலும் நடக்காது" என்றாள்.

"ஃப்ளோரா.." என்றவன் அவளை அணைத்துக் கொண்டு, "ஏன்டி என்னை இப்படி காதலிச்சு கொடுமை படுத்துற" என்க, "ஆஹா.. கொடுமை நீங்க மட்டும் தான் பண்ணனுமா என்ன? நானும் கொடுமை படுத்தலாம்" என்று சோர்வாய் கூறினாள்.

அங்கு நின்றிருந்த அவள் தோழர்களை அவன் நிமிர்ந்து பார்த்து, "இவள கூட்டிட்டுப் போங்க" என்க, அவர்களிடம் ரெய்டன் மற்றும் ஆலிஸ் பறந்து வந்தனர்.

ரெய்டன் அவளைத் தூக்கிக் கொள்ள, ஆலிஸ் மனம் கேட்காது ஃபேர்லேவின் தோளில் ஆதரவாய் ஒரு அழுத்தம் கொடுத்துவிட்டு திரும்பினான்.

டைஸாவும் லூமியும் ஜானை கலக்கத்தோடு பார்க்க, ஈடனின் பார்வை அங்கே அழுதுகொண்டிருக்கும் அவனவளின் முகத்திலேயே நிலைகுத்தி நின்றது…

fc26e9f1040801dfe5da3b425ac2c949.jpg


உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩

 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-16

சோர்வாய் டோர் மலையில் அமர்ந்திருந்தவளை முறைத்துக் கொண்டே வந்த ஃபேர்லே, "இவ்வளவு சோர்விலும் இங்க வரனுமா?" என்று அவளருகே அமர, அவன் புஜத்தினைக் கட்டிக் கொண்டு தோளில் வாகாய் சாய்ந்தவள், "உங்களை பார்க்கனும்ல" என்றாள்.

afc268f1739043c59e0ea0bb9fd8765b.jpg

அவள் தலையை பரிவாய் கோதியவன், "மன்னிச்சுடு ஃப்ளோரா. என் உணர்வுகளில் இந்த கோபத்தை மட்டும் கட்டுப்படுத்தவே முடியலை. என் தூய்மையான காதலை ஒரு பொருளுக்கு மாற்றா விலை பேசின கோவம்.." என்று சோகமாய் கூற, "புரியுது ஃபேர்லே. நீங்க கோவப்படுவீங்கனு தெரியும். இருந்தாலும் அவருக்கு ஒரு பாடம் கற்பிக்கத்தான் அப்படி பேசினேன்" என்றாள்.

"அவருக்கு கீழ போரிடவே வெறுப்பா இருக்கு ஏஞ்சல். மாயக்கல்லில் சத்தியத்தை திரும்பப் பெறும் சாத்தியமும் இருந்திருக்கலாம். இப்படியான ஒருவர் கீழ் போர் செய்யனுமானு கோவமா வருது. இவர் ஜெயிச்சிடவே கூடாது" என்று ஜான் கூற, "கண்டிப்பா ஜெயிக்க மாட்டார்" என்று அவள் உறுதியுடன் கூறினாள்.

"சீக்கிரம் இது முடியனும்" என்று அவன் கூற, அவனை நிமிர்த்தி கண்ணோடு கண் பார்த்தவள், "பயமா இருக்கா?" என்றாள்.

அவன் கண்களில் மெலிதாய் நீர் தேங்க, தேங்கிய நீர் மணிகளையே பார்த்தாள். கண்ணீர் அவன் கண்களைவிட்டு வெளிய குதித்து அவன் கன்னம் தொட்ட நொடி தன் இதழ் கொண்டு அதனைத் துடைத்தவள், நாசி துடிக்க "எ..எனக்கும்" என்க, அவள் இதழை சிறை செய்திருந்தான்.

உயிர்வரை இனிப்பாய் இனித்த முத்தம் கொடுத்த தாக்கம் என்னவோ கண்ணீர் தான்! அதையும் சுகமாய் ஏற்றவர்கள் அணைப்பிலிருந்து விலக, "போர் முடியும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று இருவரும் ஒன்றுபோலக் கூறிக் கொண்டனர்.

அதில் லேசாய் சிரித்தவன், "ஏ.. நீ கிரிஸ்டோ சேவரா?" என்று வினவ, தானும் புன்னகைத்தவள் 'ஆம்' என்று தலையசைத்தாள். "சொல்லவே இல்லையே க்வின்" என்றவன் அவளுக்கு அடிபணிவது போல் மண்டியிட்டு அமர, கலகலவென சிரித்தவள் அவன் முட்டியில் தட்டி, "என்ன ஃபேர்லே இது. சும்மாருங்க" என்றாள்.


Screenshot_2024-01-31-06-21-59-28_7ecc343528d84aae1423bfb8eca3bd44.jpg


"உண்மை தானே? தி க்வின் ஆஃப் கிரிஸ்டோ நீங்க. உங்களுக்கான மரியாதைய கொடுக்க வேண்டாமா?" என்று அவன் கேட்க, "ஆஹா.. மரியாதை இப்படி கொடுக்கக் கூடாதே" என்றாள்.

"அப்படியா? வேற எப்படி கொடுக்கனும்" என்றவன் அவளை நெருங்கி வர, ஒற்றை விரலை அவன் மூக்கில் வைத்து அழுத்தி அவனை நகர்த்தி நிறுத்திவிட்டு சிரித்தாள்.

அவள் விரலை சுண்டி விட்டு அவளை இழுத்து தன்மீது சாய்த்துக் கொண்டவன், "சொல்லுங்க க்வின்.. எப்படி மரியாதை செலுத்தனும்? ஒருவேலை ராணி கொஞ்சம் நேரம் முன்ன உதட்டில் செலுத்தியதைப் போல மரியாதை எதிர்ப்பார்க்குறாங்களோ?" என்று வினவ, "ஃபேர்லே" என்று நாணத்தோடு அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

காதலே பொறாமைபடும் அளவு அழகாய் காதலித்த இருவருக்கும் அதை இப்படி காதல் வார்த்தைகள் பேசி வெளிப்படுத்திக்கொள்ளத் தான் வாய்ப்பற்று இருந்தது. ஏனோ இன்று இருவரும் இறுக்கம் தளர்ந்து சந்தோஷமாய் பேசி சிரிக்க தூரத்தில் இதை பார்த்துக் கொண்டிருந்த ஆர்காட் மற்றும் ஆடம் விழிகளில் ஆனந்த கண்ணீர் தேங்கியது.

5ae6e6c4ce5208c9967dae4a35d978e8.jpg

"எப்போதும் கலகலனு இருக்கும் ஜான் பல நாட்களா கலையிழந்து இருந்ததைப் பார்க்கவே அவ்வளவு வருத்தமா இருந்தது ஆர்காட்" என்று ஆடம் கூற, "ம்ம்.. இங்கேயும் அதேதான் ஆடம். சிரிப்பே உருவா இருந்த அடாமி சிரிப்பை மறந்து அழுது கரைந்த நாட்கள் தான் ஏராளம்னு ஆயிபோச்சு" என்று ஆர்காட் கூறியது.

அங்கு ஃபேர்லேவுடன் புன்னகை முகமாய் பேசிக் கொண்டிருந்தவள் முகம் சுருங்க, "ஃப்ளோரா..?" என்று ஃபேர்லே அவளை கேள்வியாய் நோக்கினான். தன் மார்பில் கரம் வைத்து அழுத்தியவள், "ஆ.." என்க, “ஹே‌ ஏஞ்சல்.. என்ன ஆச்சு?" என்று அவன் பதட்டமாய் வினவினான்.

"ஆ..ஆர்காட்.." என்று அவள் கத்த, "அடாமி" என்றபடி அவளிம் வேகமாய் வந்தது. அதனை பிடித்து மேலேறியவள், "க்..கிரிஸ்டோ.. க்ரிஸ்டோக்கு ஆபத்து. போ...." என்று கத்த, ஆர்காட் காற்றை கிழித்துக் கொண்டு வீலென்று பறந்து அப்படியே மறைந்தது.

அவள் மறைந்த இடத்திலிருந்து பலவர்ண துகள்கள் சிதற, இமைக்க மறந்த நிலையில் அதை பார்த்துக் கொண்டிருந்த ஜான், "கா..காஸ்மோ!?" என்று முனுமுனுத்து அதிர்ந்து நின்றான். இது காஸ்மோவின் வேலையோ என்றெண்ணியவன் விரைந்து புறப்பட, அங்கு பனியால் சூழந்த அந்த மலைப்பகுதி அவளை வரவேற்றது.

f74ebf3704aac4a1de04677531986239.jpg

சுற்றிலும் மின்மினிப் பூச்சிகள் அவளை சூழ்ந்து, "ஃபேர்ரீ" என்று பதட்டத்தோடு வர, மீண்டும் அவள் இதயம் வலித்தது.


InShot_20240131_063327089.jpg

அந்தப் பகுதியின் தரைமட்டம் அதிர்ந்ததில், "ஆ.. ஃபேர்ரீ.. பூமி அதிருது" என்று ஒரு மின்மினிப் பூச்சி கூற, தன் நெஞ்சை அழுத்திப் பிடித்தவள், "யாரோ கிரிஸ்டோ லேண்ட சபிக்குறாங்க. அதான் இப்படி அதிருது" என்று கூறினாள்.

நேரே பனி மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட குகைக்குள் நுழைந்தவள் அவ்விடம் கொடுத்த கதகதப்பில் இதமடைய, மீண்டும் இடம் அதிர்ந்தது. குகைக்குள் நுழைந்துவிட்டதால் அந்த அதிர்வுகள் அவளின் இதயத்தை பாதிக்காது தடுத்திட, ஒரு பெருமூச்சுடன் முன்னேறினாள்.

ஆறு பாதைகள் பிரிந்திருக்க, மேலே
'இரு மூன்று மாறுகள்
இருளில்லா மாறெதுவோ?
அவ்வழியால் ஈரேழு அடி வைக்க,
சூல் கொண்ட சூடு பெறும்' என்று எழுதியிருந்தது.

அதன் பொருள் ஆறு பாதைகள் உள்ளன, அதில் இருளில்லா பாதையை கண்டறிந்து செல்லவே, பதினேழு அடிக்குப் பின் கருவறை சூட்டை உணர்வாய் என்பதே.

ஆனால் ஆறு வழிகளுமே பிரகாசமாய் தான் இருக்கும்‌. அதில் இருளில்லா பாதையை கண்டறிய சாதாரணமாக வருபவர்களால் இயலாது.

"பாரடைஸ் க்ரிஸ்டோ.." என்று கூறி அடாமி மூன்று முறை கைதட்ட, அவளின் பிரத்யேக கைதட்டும் ஓசையில் ஐந்து பாதைகளில் ஒவ்வொரு நிற ஒளியாக வீசவே, ஆறாவது பாதையில் மட்டும் வானவில்லைப் போல் அனைத்து நிற ஒளிகளும் வீசியது.

6c56c1ae2cd555077def1eb79e252145.jpg

அதனுள் சென்றவளுக்கு பதினேழாம் அடியில் அந்த கதகதப்பை உணர முடிய, அந்த பகுதியில் நன்கு காலூன்றி நின்றவள், தனது வாலை எடுத்து அங்கே சொருகி "அன்லாட்ச் (unlatch)" என்று கத்தினாள்.‌

அவள் முன்பிருந்த மலைப்பாறை அதிர்ந்து விலகி பாதை ஒன்று உருவாக உள்ளே சென்றவள் கண்களை அந்த பாரடைஸ் கிரிஸ்டோ வரவேற்றது.

InShot_20240127_144350929.jpg

அதன் அருகே அவள் சென்ற நொடி, மீண்டும் நிலம் அதிர, "ஆ.." எனத் தடுமாறி விழுந்தாள். அவளை சுற்றி வந்த மின்மினிப் பூச்சிகள் "க்ரிஸ்டோ ஃபேர்ரீ.. திடீர்னு ஏன் இப்படி நடக்குது. கிரிஸ்டோவின் அடித்தளம் உடைஞ்சா கிரிஸ்டோவை சுற்றியுள்ள மாய திரவத்துல விழுந்து அழிஞ்சு போயிடும்" என்று பதறினர்.

கிரிஸ்டோவை சுற்றியுள்ள சாம்பல் நிற திரவத்தைப் பார்த்தவள் தன் கண்களை மூடித் திறக்க, கிரிஸ்டோவின் ஒளி அவள் விழிகளில் தெறிந்தது. "கிரிஸ்டோ சேவர் இருக்கும்போது கிரிஸ்டோவை அழிய விட்டுடுவேனா?" என்றவள் எழுந்து நிற்க, அங்கு காஸ்மோவின் அறைக்குள் அதிரடியாய் நுழைந்தான் ஜான் ஃபேர்லே.

5a7367cf514ecf5b4897bebfffe1b2aa.jpg

கண்ணாடி பந்தின் மீது கைவைத்து அவர் ஏதோ செய்வதைக் கண்டவன், "காஸ்மோ.." என்று கர்ஜிக்க, அதிர்ந்து கண்கள் திறந்தார். "நீங்க என்ன காரியம் பண்றீங்க? கிரிஸ்டோ இருக்கும் இடத்தை சபிக்கப் பார்க்குறீங்களா?" என்று ஜான் ஆத்திரத்தோடு வினவ, "ஆஹா.. உன் காதலி வலியில் துடிதுடிச்சு மறைந்ததைப் பார்த்துட்டு வர்றியோ?" என்று காஸ்மோ வினவினார்.

"இது தவறான செயல். நிலம் அதிர்ந்து கிரிஸ்டோவே உடைஞ்சுபோனா என்ன செய்வீங்க?" என்று அவன் கத்த, "அந்தளவு அதிர்வுகளை நான் உருவாக்கலை ஜான். கிரிஸ்டோ இருக்கும் இடத்தை தான் தெரிஞ்சுக்க முடியாது. ஆனா இருக்குமிடத்தை சபித்து அதிர்வை ஏற்படுத்தளாம். அப்படி ஏற்படுத்தி சேவர் அங்கு போயிட்டா, என்னுடைய அதிர்வுகள் மூலம் அங்க பாறைகளாலேயே ஃபேர்ரிய உருவாக்கி அவளுடன் சண்டையிட வைத்து கிரிஸ்டோவை எடுத்துட்டு இங்க வரவைச்சுடுவேன்" என்று கூறி சிரித்தான்.

97257c01cbbf9bdffb741920a952d173.jpg

இங்கே பாறைகளால் உருவாகிய ஃபேரிகளைப் பார்த்த அடாமினா, "ஃபைட்டர்ஸ். இது லார்ட் ஜோயலோட உடன்பிறப்பின் வேலை. கிரிஸ்டோவை திருட பார்க்குறார். அதுக்கு ஒருகாலும் நம்ம அனுமதிக்கக் கூடாது" என்று மின்மினிப் பூச்சிகளிடம் கூற, "விடமாட்டோம்" என்ற பூச்சிகள் பறந்து சென்றன.

சிரிய பூச்சிகளை அப்பாறையால் ஆன ஃபேரி தூற வீசிட பார்க்க, பாறைகளை துளைத்துக் கொண்டு சென்ற பூச்சிகள் அவற்றை உடைத்து நொறுக்கின.

தன்னுடன் சண்டைக்கு வந்த பாறையின் மேல் கூர் கற்களை வீசி எறிந்தவள் சண்டையிட, உடைய உடைய மீண்டும் அப்பாறை ஃபேரிகள் உருவம் பெற்று எழுந்தது.

போர் முடிந்தே சோர்வுற்றிருந்த அடாமி ஒட்டு மொத்த வலுவையும் திரட்டி, "க்னாக் டௌன் (knock down)" என்று கத்த, அவளிடமிருந்து பாய்ந்த பச்சை நிற கங்குகள் அந்த பாறை ஃபேரிகளை உடைத்து சில்லு சில்லாய் சிதற செய்தது.

வலிமை எல்லாம் வடிந்த நிலையில் அவள் மடங்கி அமர, மீண்டும் சிதறிய கற்கள் ஒன்று கூடின. "பேர்ரீ.." என்று மின்மினிப் பூச்சிகள் பதற, கண்ணீர் கண்களுடன் கிரிஸ்டோவைப் பார்த்தவள், "உயிருள்ளவரை காப்பேன்" என்று லார்டுக்கு சத்தியம் செய்துக் கொடுத்ததை நினைத்துக் கொண்டாள்.

கடினப்பட்டு மீண்டும் எழுந்தவள், மந்திரத்தை உச்சரிக்க முயல, "க்னாக் டௌன்.." என்று தனது கணீர் குரலில் மந்திரமிட்டபடி ஜோயல் உள்ளே நுழைந்தார். பச்சைநிற மாயக்கல்லை அடாமிக்கு தூக்கி போட்டவர், "காயங்களை ஆற்று" என்க அந்த கல்லை தன் உள்ளங்கையில் அழுந்த பிடித்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

பச்சை நிற ஒளி அவளை சூழ்ந்து விலக, மீண்டும் புதுப்பிறப்பெடுத்த உத்வேகத்தில் எழுந்தவள் தனியாளாக சண்டையிடும் ஜோயலுக்குத் துணையாக வந்து நின்றாள்.

ஜோயல் அவளைப் பார்க்க, தானும் அவரைப் பார்த்து தலையசைத்தவள் சண்டையிட, அங்கு "நீங்க பண்றது முட்டாள்தனத்தின் உச்சம்" என்று ஜான் கத்தவும், காஸ்மோ "எதையும் நீ எனக்கு சொல்லித்தரவேண்டிய அவசியம் இல்லை ஜான்" என்றார்.

அவரை ஆத்திரத்தோடு பார்த்தவன், அருகே நெருங்க, அவனை அலட்சியமாக பார்த்தவர், மீண்டும் அந்த கண்ணாடி பந்தை தடவ, விருட்டென்று அதை பிடுங்கிய ஜான், "இது இருந்தா தானே உங்களால சபிக்க முடியும்" என்றபடி காஸ்மோ 'வேண்டாம் வேண்டாம்' என கத்துவதை பொருட்படுத்தாமல் அதை தூற எறிந்து உடைத்திருந்தான்.

அங்கு போரிட்டிக் கொண்டிருந்த பாறை ஃபேரிகள் தாமாக உடைந்து சிதற, "அடாமி" என்று அவளை இழுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்ட லார்ட் அவள்மீது சிதறல்கள் படாது காக்க, 'சேவியார்' என்று அவள் மந்திரமிட்டாள். அவர்களைச் சுற்றி பச்சைநிற மாய வலையம் உருவாக, அது அவர்களை சிதறல்களிடமிருந்து பாதுகாத்தது.

அனைத்தும் இடிந்து ஓய சில நிமிடங்கள் எடுக்க, அமைதி நிலவியதும் மாய வலையிலிருந்து வெளியே வந்தனர். ஜோயல் சுற்றியுள்ளதை புரியாத பார்வை பார்க்க, கிரிஸ்டோவிடம் சென்றவள், அதன் உச்சியில் கரம் வைத்து, "க்ரிஸ்டோ சேவ்ட் (பாதுகாக்கப்பட்டது)" என்று அழுத்தம் கொடுத்தாள்.

சிதைவடைந்த இடம் மீண்டும் தாமாக சீராக, "எப்படி இது நடந்தது?" என்று லார்ட் கேள்வியை முடிப்பதற்குள் புன்னகையாய், "ஃபேர்லே.." என்றாள்.

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩

 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-17

அழகிய அந்தி சாயும் வேளை.. கார்டிலியா, போர்ட், அலாஸ்கா, அடாமினா, சைரா, ஐலா, ஆலிஸ், தோரா மற்றும் ரெய்டென் என அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

a3d4a99a42a88971051e32251639c0d4.jpg

"மம்மீ.." என்ற மழலையின் குரல் கேட்டு திரும்பிய தோரா, "தன்டர்.." என்க, பறக்க முயற்சி செய்து பொத்தென அது கீழே விழுந்து தாயைக் கண்டு இதழ் பிதுக்கியது.

7117134250d2a2a6cf43c93f4d6f2aeb.jpg

அதில் யாவரும் கலகலவென சிரிக்க, "ஏ.. என் பேபி கீழ விழுந்துட்டான் தூக்காம சிரிக்குற?" என்றபடி எழுந்த ரெய்டன் தன்டரைத் தூக்கிக் கொண்டுவர, "ம்ம்.. பிராக்டிஸ் பண்ணும்போது கீழே விழுந்து வாரினா தான் பழக முடியும்னு சொல்லும் அறிவுரையெல்லாம் எனக்குதானா? உங்க பேபிக்கு கிடையாதா?" என்றாள்.

"தன்டர்.. வாங்க" என்று கார்டிலியா கரம் நீட்ட, அவளிடம் சென்று அமர்ந்துக் கொண்டு அவள் கன்னத்தில் கைவைத்து தட்டி விளையாடியது பேபி ஃபேரி. அதில் அவள் கண்கள் மெல்ல கலங்கிவிட, அவள் கரத்தில் தன் கரம் வைத்து அழுத்தம் கொடுத்தான் ஃபோர்ட்.

ஃபோர்டை ஏறிட்டுப் பார்த்தவள் சன்னமாய் சிரித்துக் கொண்டு பேபி ஃபேரிக்கு முத்தமிட்டு அதனுடன் ஐக்கியமாக, சைரா தன் கரத்தில் அன்று கார்டியின் குழந்தையுடைய உயிர் நுழைந்த நினைவு வந்துபோனது.

"சைரா.. போர்களத்தில் புதுசா ஒரு காதல் பூ பூத்ததா கேள்விப்பட்டேன்?" என்று ஆலிஸ் வினவ, அலாஸ்கா சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

ஆலிஸைப் பார்த்து லேசாய் சிரித்த சைரா, "நானும் கேள்விப்பட்டேன்" என்று கூற, "ய..யாரு?" என்று அலாஸ் வினவினாள். அவள் முகத்தில் இருந்த படபடப்பு யார் கண்ணில் பட்டதோ இல்லையோ? அடாமினாவுக்கு தவறாமல் பட்டது.

"நீ ஏன் டென்ஷன் ஆகுற?" என்று அடாமி வினவ, "நானா? நான் எங்க டென்ஷன் ஆனேன்? யாருனு தான் கேட்டேன்" என சாதரணமாய் கூறுவது போல் கூறிவிட்டு அருகே உள்ள கார்டிலியாவின் மடியில் உள்ள குழந்தை மீது கவனம் பதித்தாள்.

"என்ன சொல்லப்போற சைரா?" என்று ரெய்டன் வினவ, "நானும் கேட்க இருந்தேன்" என ஃபோர்ட் கூறினான்.

"ஏன்பா எல்லாரும் புரியாத மொழியில் பேசுறதைப் போல பேசுறீங்க?" என்று தோராவும் ஐலாவும் வினவ, சைரா வாய்விட்டு சிரித்தாள்.

"சைராவை போர்க்களத்தில் பார்த்து விரும்பிய ஒருவர் முறையா தன் விருப்பை லார்ட் ஜோயலிடம் தெரிவிக்க, லார்ட் ஜோயல் அதை சைராகிட்ட சொன்னாரு. அதைதான் இவங்களாம் கேட்குறாங்க" என்று அடாமி கூற, "ஏ சைரா.. சூப்பர். நீ என்ன சொல்ல போற?" என்று அலாஸ் அப்போதே திருப்தி பெற்று வினவினாள்.

மீண்டும் ஒரு அழகிய புன்னகையுடன் "சரிதான் சொல்ல போறேன்" என்று அவள் கூற, "யாஹூ.." என்று யாவரும் கத்தினர். "யாஹு.." என்று தன்டரும் தன் மழலைக் குரலில் அனைவரையும் போல் கத்த, அதில் சிரித்துக் கொண்ட சைரா, "ஆனா போர் முடிந்த பிறகு சொல்வதா சொல்லிருக்கேன்" என்றாள்.

"ம்ம்.. நல்லதுடா" என்று ஃபோர்ட் கூற, "பெயர் என்ன சைரா?" என்று அலாஸ் வினவினாள். "ஃப்லேக் (flake)" என்று சைரா கூற, “சூப்பர்" என்று யாவரும் மகிழ்ந்தனர்.

aa6672bfef90c3ae50f3b3778172d49b.jpg

"வலவல வாயாடியா சுத்தம் நீ தான் இன்னும் பாக்கி. உன்கிட்ட யாரு மாட்ட போறாங்களோ?" என்று அலாஸ்காவைப் பார்த்து தோரா கூறி சிரிக்க, அனைவரும் அதில் வெடித்து சிரித்தனர். அவர்கள் சிரிப்போடு இணைய முடியாது சிரிக்க முயற்சித்து இதழ் பிரித்தவள் தன் மனதை தானே புரிந்து கொள்ளாது தவிக்கும் தவிப்பை இவர்களிடமும் சொல்ல முடியாது திணறினாள்.


04dcc8598d3d7130d5b31d5bb92b9f25.jpg

அவள் கரம் தனிச்சையாய் தன்னுடையில் உள்ள பையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் ஈடன் அனுப்பிய அந்த முதல் தூது கத்தியை வருடியது. ஏனோ அதை தூக்கி எறிய அவள் மனம் ஒவ்வாமல் இன்னமும் அதை பத்திரப்படுத்தி அல்லவா வைத்திருக்கின்றாள்.

இரவு வெகுநேரம் ஆனதால் அனைவரும் அவரவர் இருப்பிடம் செல்ல, தன்னிடம் வந்தவளை எய்றா முட்டி மோதி அணைத்துக் கொண்டது. அதன் கழுத்தில் கை கொடுத்து கட்டியணைத்தவள், "என்ன எய்றா?" என்க, "ஏன் அலாஸ் இந்த சோகம்?" என்று எய்றா கேட்டது.


e6e0cd56f21ea02d3f3ab6be689255c3.jpg

அதை கட்டிக் கொண்டே தரையில் சாய்ந்தவள், "தெரியலை எய்றா" என்க, "யாரால இந்த குழப்பம்?" என்று எய்றா மீண்டும் கேட்டது. அதனைத் திரும்பிப் கண்ணோடு கண் பார்த்தவள், "ஈடன்" என்க, "ம்ம்.. நினைச்சேன்" என்றது.

"நான்.. நான் அவரை விரும்புறேனா எய்றா? ஆனா எப்படி? அவர் நம்ம எதிரிப்படையைச் சேர்ந்தவர். அதுவும் எனக்கு அவரைப் பார்த்தாளே கோபமும் சண்டையும் தான் வரும். ஆனா ஏன் இந்த புரியாத உணர்வு?" என்று அலாஸ் வினவ, "அவர் உன் எதிரிப்படை என்ற தடையெல்லாம் மறந்து யோசி அலாஸ். உனக்கு அவரை பிடிச்சிருக்கா?" என்று எய்றா வினவியது.

சற்றே யோசித்தவள், "நிஜமா தெரியலை எய்றா. அவர் மேல எனக்கிருக்கும் உணர்வுக்கு பெயர் கொடுக்க தெரியலை. ஆனா அதுக்கு காதல்னு பெயர் கொடுக்க விரும்பலை. அடாமி படுற துன்பத்தைப் பார்த்து பார்த்து தினம் தினம் செத்துட்டு இருக்கேன். பார்ப்பதற்கே இவ்வளவு வேதனைனா அனுப்பவிக்க? என்னால முடியாது" என்று கூற லேசாய் சிரித்த எய்றா, "இந்த தெளிவு இருக்கும்போது எதுக்கு குழப்பம்? எப்போதும் போல இரு" என்று நாவால் அவள் முகம் வருடியது.

அங்கு ஈடனின் நிலையும் அதுவே… குழப்பமாய் தன் தோழர்களுடன் அமர்ந்திருந்தான். லூமிக்கு மனிதர்களுடன் தானிருந்தபோது அடாமியை காதலித்த கதையை ஃபேர்லே கூறிக் கொண்டிருக்க, இடையிடையே அவனால் தான் ஆடமை பார்த்துக் கொண்டு ஆடமிடம் கடி வாங்கிய கதைகளை டைஸாவும் கூறிக் கொண்டிருந்தாள்.

இவர்கள் மூவருடன் அமர்ந்துக் கொண்டிருந்தவன் சிந்தை என்னவோ அலாஸ்காவிடம் தான் பரிபோயிருந்தது.

மறுநாள் காலை எப்போதும் போல் அனைவரும் போருக்கு தயாராகினர். தனது வாலை கூர்தீட்டிக் கொண்டிருந்த அடாமினா தன்னை கடந்து சென்ற அலாஸ்காவை பார்த்து, "அலாஸ்" என்று நிறுத்தினாள்.

அவள் அழைப்பில் திரும்பிய அலாஸ், அடாமியிடம் வர, அவளை கூர்ந்து பார்த்தவள், "எதும் பிரச்சினையா?" என்று வினவினாள். லேசாய் சிரித்த அலாஸ்கா, "ம்ம்.. இருந்தது. ஆனா இப்ப தெளிவாகிட்டேன். போர் முடியும்போது சொல்றேன்" என்று கூற, அவள் புன்னகை தன்னிலும் ஒட்டிக் கொண்டதைப் போல் உணர்ந்தவள், "ம்ம்" என்றாள்.

"என்ன என்னை விட்டுட்டு பேச்சு ஓடுது?" என்றபடி அங்கு சைரா வர, "நமக்கு தெரியாமல் நிறையா ஓடுது. ஆனா அதை நம்ம தெரிந்துகொள்ளும் நேரம் இதுயில்லை" என்று அடாமினா கூறினாள். அவள் வார்த்தையில் இருந்த புரிதலில் மெய்சிலிர்த்த அலாஸ்கா அவளை கட்டியணைக்க, புன்னகையாய் அவள் முதுகை வருடிக் கொடுத்தாள்.

பின்னே ஏதோ முசுமுசுவென சத்தம் கேட்டு இருவரும் திரும்ப, எய்றாவும் ஆர்காட்டும் கோபமுகம் காட்டி நின்றது. அந்த பிராணிகளின் உடைமையில் சிரித்துக் கொண்ட இருவரும் அவரவர் விளங்கிடம் சென்று அதனை வருடிக் கொடுக்க, சாந்தமாய் அவர்கள் முகம் உரசின.

"ஏ அடாமி.. உன்கிட்ட கேட்க நினைச்சேன்.. நீ க்ரிஸ்டோ சேவர் தானே" என்றபடி சைரா அவளிடம் வர, "அட இதைபத்தி யாருமே பேசலையேனு பார்த்தேன்" என்று அடாமி கூறினாள். அனைவரும் அப்போது அங்கு கூடிவிட, "சில விஷயங்கள் சொல்லப்படாம இருப்பதுக்கு உரிய காரண காரியங்கள் இருக்கும்னு எங்களுக்கும் புரியும்" என்று புன்னகையுடன் ரெய்டன் கூறினான்.

அதில் அடாமினா புன்னகைக்க, சைரா அவள் கரம் பற்றி, "க்ரிஸ்டோ சேவர் ஃபேரி எத்தனை பேர் இருக்காங்க மொத்தம்?" என்று கேட்க, "ஒன்னே ஒன்னு தான் சைரா. அங்க க்ரிஸ்டோ கிட்ட மின்மினிப் பூச்சிகள் நிறையா இருக்கும். அதெல்லாம் பாதுக்காப்புக்கு இருக்கும் ஃபைட்டர்ஸ்" என்று கூறினாள்.

"ஒன்னுதானா? அப்ப உனக்கு அழிவே கிடையாது தானே?" என்று கார்டிலியா ஆர்வமாய் வினவ, "பிறப்புனு இருந்தா இறப்பு கண்டிப்பா உண்டு. ஆனானப்பட்ட லார்டுக்கே இந்த நியதி இருக்கும்போது நானெல்லாம் எம்மாத்திரம்?" என்று அடாமி கூறினாள்.

"அப்ப உனக்கு அடுத்து யாரு க்ரிஸ்டோ சேவராவாங்க?" என்று ஆலிஸ் வினவ, "யாரா வேண்டுமானாலும் இருக்கலாம். நான் இறந்த பிறகு என்னுடைய ஆன்மாவோட சேர்ந்து க்ரிஸ்டோ சேவர் தகுதியும் வேற உடலைத் தேடி புகுந்துடும். அது என் ஆன்மா போகும் அதே உடலாவும் இருக்கலாம் இல்லை வேற யாராவும் இருக்கலாம்" என்று கூறினாள்.

"ஒரு க்ரிஸ்டோ சேவரை குழந்தையா பெருவது எவ்வளவு பெரிய விஷயம்ல?" என்று ஐலா ஆர்வமாய் கூற, "என்ன பெரிய விஷயம்? அதான் என் தாய் தந்தைனு யாருமே இல்லாம போயிட்டாங்களே. பாரடைஸ் மேல அப்பா கொண்ட அதீத பாசத்தால் பாரடைஸ் ரெண்டு பட்டதுனு முடிவானதும் அதை தாங்க முடியாம இறந்துட்டார்.‌ தன் காதல் கணவனையே தொடர்ந்து எங்க அம்மாவும் போயிட்டாங்க.." என்று ஒரு பெருமூச்சு விட்டாள்.

அதில் ஒரு அசாத்திய அமைதி நிலவ, "விடுவிடு அடாமி.. அதான் எல்லாமுமா உனக்கே உனக்குனு உன் ஃபேர்லே வராறே" என்று ஃபோர்ட் உற்சாகம் படுத்த, முகம் பூரித்து புன்னகைத்தவள் "நிச்சயமான உண்மை" என தலையசைத்தாள்.

அவர்கள் அனைவரும் போர்க்களம் செல்ல, அங்கு எதிர்ப்படையினர் தயாராக இருந்தனர். எப்போதும் போல் அடாமினாவின் விழிகள் ஃபேர்லேவைத் தேடி கண்டுகொண்டு காதல் பார்வை வீச, அங்கு புன்னகையுடன் அவளைப் பார்த்த ஃபேர்லேவுக்கு உடலில் புது ரத்தம் பாய்ந்த உணர்வு.

அவன் அருகில் நின்று அவனது உணர்வுகளைக் கண்ட ஈடன் அலாஸ்காவைத் தேட, அத்தனை நேரம் அவனைக் கண்களால் பருகிக் கொண்டிருந்தவள் அவனும் தன்னை தேடத் துவங்குவதைக் கண்டதும், "எய்றா கோ பேக் (பின்னாடி போ)" என்று எய்றாவின் காதில் கிசுகிசுத்தாள்.

அவள் சொல்படி எய்றா சைராவின் காலிடா பின்னே சென்று நிற்க, ஐலாவின் ப்ரிஸா (யுனிகார்ன்) எய்றாவை கேள்வியாய் நோக்கியது. எய்றா தன் முகத்தை காலால் தேய்த்துக் கொண்டு வெறுமனே தலையசைக்க, ப்ரிஸாவுக்கு என்ன புரிந்ததோ மீண்டும் திரும்பிக் கொண்டது.

போர் நேரம் துவங்கிட, மையத்தில் நின்று கொண்டிருந்த லார்ட் ஜோயல் மற்றும் காஸ்மோ பலவர்ண கங்குகளைப் பறக்கச் செய்து வானத்தை நோக்கி வீலென்று சென்றனர்.

அத்தோடு "ஹோ.." என்ற சத்தத்துடன் இருபிரிவினரும் ஓடி வர, யுத்தம் துவங்கி வெட்டுக் குத்து அடியென ஒவ்வொருவரும் சாய்ந்துக் கொண்டிருந்தனர். எய்றாவின் மீது அதிவிரைவாய் சென்றபடியே அலாஸ் தன் பனிகத்திகளை பாய்ச்ச, எய்றாவிலிருந்து அவளைத் தடுமாறி விழ வைத்தது ஈடனின் பனி.

சிராய்த்துக் கொண்டு கீழே விழுந்து எழுந்தவள், ஈடனைப் பார்த்ததும் பரபரப்பாய் எய்றா மீது அமர்ந்து நகர முற்பட, தனது வெள்ளை சிங்கத்தின் மீது அமர்ந்தபடி அவள் முன்னே வந்தவன், "என்னைப் பார்த்து பயம் வந்துடுச்சு போல?" என்று நக்கலாய் கேட்டான்.

அதில் அவள் முகம் கன்றி சிவக்க, கோபத்துடன் அவனை ஏறிட்டவள் பனி கத்திகளை சரம் மாரியாக வீசினாள். அவற்றையெல்லாம் சுலபமாய் தடுத்தவன் பதில் தாக்குதலில் ஈடுபட, அவன் தன்னிடமிருந்து எளிதாய் தப்புவதில் மேலும் அவளுக்கு கோபமாக வந்தது.

பெரிய பனிப் பொழிவை உருவாக்கியவள் அவன் எதிர்ப்பார்க்கும் முன் அவன் மீது வீசி அவனை அதில் மூழ்கடிக்க, உண்மையில் அதிலிருந்து எழமுடியாமல் அவன் மூச்சுக்குத் தடுமாறினான்.

அவனை வீழ்த்திவிட்ட சந்தோஷத்தில் திரும்ப முற்பட்டவள், அவன் இன்னும் எழுந்த வராததைக் கண்டு லேசாய் பதட்டம் கொள்ள, அவனது சிங்கம் பனியை விலக்க முயற்சி செய்தது.

இமைகள் படபடக்க அதைக் கண்டவள் எய்றாவிலிருந்து குதித்து இறங்கி பனியின் அருகே செல்ல, சட்டென அதிலிருந்து வந்தவன் அவளைக் கழுத்தோடு இறுக்கிக் கொண்டு பனிகத்தியை அவள் கண்களுக்கு நேரே குத்துவது போல் நிறுத்தினான்‌.

ஒருநொடி மூச்சுவிட மறந்தவள் விழிகள் விரிய விறைத்து நிற்க, "என்னை உனக்கு பிடிக்கும்தானே?" என்று கேட்டு அவளை மேலும் உறையச் செய்தான். நாக்கு உறைந்து உடைந்துப் போனதைப் போல் அவள் பேச்சே மறந்து நிற்க, கண்களில் மெல்லிய பனிப் பொழிவு உருவானது.

"சொல்லு ஃபேர்ரீ.." என்று அவன் மீண்டும் வினவ, தன்னிலை மீண்டவள் அவன் கத்தியைத் தட்டிவிட்டு அவனைத் தன் கைச்சிறையில் கொண்டு தான் அவன்மீது கத்தியை வைத்தாள்.

"நீ நில்லு சொன்னா நிற்க போறேன். இந்த கைச்சிறையெல்லாம் எனக்கு வேணாம் ஃபேர்ரீ" என்று அவன் கூற, அவள் தான் அவன் பேச்சில் மேலும் மேலும் தடுமாறினாள்.

"சொல்லு ஃபேர்ரீ.. என்னை விரும்புற தானே?" என்று அவன் வினவ, "இல்லை.. நான் யாரையும் விரும்பலை. எனக்கு யாருடைய விருப்பும் தேவையில்லை" என்று கத்தினாள்.

அவளது நடுங்கிய கரத்தை மெல்ல விலக்கி, "என்னை விரும்புறேன்னு சொல்வதில் உனக்கு எதும் பிரச்சினை இருக்கா?" என்று வினவ, அவள் இமைகள் துடித்தன.

"இந்த துடிப்பு சொல்லுதே. நீயா வந்து சொல்லும் வரை நான் இனி இதை கேட்க மாட்டேன். ஆனா நான் உன்னை விரும்புறேன். ஆமா காதல் தான்.. எதிர்ப்படையைச் சேர்ந்த ஃபேர்ரீயோட. ஜானை பார்த்து 'இவனைப் போலலாம் நம்மால ஒரு நிமிஷம் இருக்க முடியாதுனு எண்ணிய தருணத்திலிருந்து அவனைப் போலதான் நானும் இருந்திருக்கேன்னு இப்ப தான் புரியுது" என்றுவிட்டு தனது சிங்கத்தின் மீது தாவி ஏறியவன் வேறு திசையில் சென்று போரிட, உரைந்தே விட்டிருந்தவள் டைஸா வீசிய நெருப்புப் பந்தில் தான் நிலைக்குத் திரும்பினாள்.

97d59c39c9fdc5870bf3a53d3f4b5991.jpg

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩

 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-18

மனதின் ஓரத்தில் முனுக்கென்று தோன்றிய வலி தற்போது உள்ளமெல்லாம் பரவிய உணர்வில் நெஞ்சை நீவியபடி அமர்ந்திருந்தார் லார்ட் ஜோயல். அவர் கையிலிருந்த புத்தகம் கொடுத்த தகவல் அவருக்கு துளியும் உவப்பானதாக இல்லையே!

eiR6AUQ86021.jpg

'இது உண்மையாக இருந்திடக் கூடாது' என்று இத்தோடு ஆயிரம் முறையாக அவர் வேண்டியிருக்க வேண்டும். 'ஏன்..ஏன் இப்படி? தான் தவறு செய்துவிட்டோமோ? போரே வேண்டாம் என்று முடிவெடுத்து பாரடைஸை காஸ்மோவிடம் ஒப்படைத்திருக்க வேண்டுமோ?' என்று அவர் எண்ணம் பயணிக்க, மறுநொடி பாரடைஸே அழிந்து போவதைப் போன்ற பிரம்மையில் அவர் உடல் சில்லிட்டது.

'இல்ல.. காஸ்மோ கைக்கு போனால் பாரடைஸ் அழிந்தே போகும்' என்று எண்ணியவருக்கு அப்போதும் தற்போது அறிந்த விடயத்தை ஏற்க முடியவில்லை. 'இதை மாற்ற எதும் வழி இருக்காதா?' என்ற எண்ணமே அவர் மனதை ஆக்கிரமித்திருந்தது.


விடிந்தும் விடியாத இருள் பூசிய வாணத்தை வெறித்துக் கொண்டிருந்தவர் கண்களில் வானில் மிளிரும் அந்த பச்சை நிற நட்சத்திரம் கலங்கச் செய்தது.

5b7fef712c3a0beee4aac70b62fab74e.jpg

அடாமினாவின் இருப்பிடத்திற்கு நேரே வானில் ஒளிர்ந்த நட்சத்திரத்தை வெறித்துக் கொண்டிருந்தவர் கண்களில் நீர் வடிந்திட, "லார்ட்” என்றது ஸ்மித் (க்ரிபின்).

4b370d01db9a29bb14c5c56dfd056b4a.jpg

ஸ்மித்தை திரும்பி ஏறிட்டவர், "வேதனையா இருக்கு ஸ்மித். நடப்பதெல்லாம் வருத்தமானதாவே இருக்கு. பாசம் வைத்த ஒரு ஃபேரீக்கும் என் கடமைக்கும் இடையில் தவிக்குறேன்" என்று கூற, "லார்ட்.. நீங்களே இப்படி கலங்கினா எப்படி?" என்று ஸ்மித் வேதனை கொண்டது.

"என்ன செய்ய ஸ்மித்? எனக்கும் மனமிருக்கே?" என்று அவர் வேதனை கெள்ள, "லார்ட்.." என்ற சத்தத்துடன் அடாமினா அங்கு வந்தாள். தனக்கு பின்னே வரும் அவளது காலடி ஒலியில் தன் கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டவர் திரும்ப, புன்னகை முகமாய் வந்து அவர் முன் நின்றாள்.

இதயத்தில் வின்னென்று தெரித்த வலியை சமன் செய்தபடி, "சொல்லு அடாமினா" என்று அவர் வினவ, "என்ன லார்ட் கேள்வியிது?" என்று அவரை சோகமாய் பார்த்தாள்.

முதலில் ஒன்றும் புரியாமல் விழித்தவருக்கு பின்பே அது நினைவு வந்தது.. அதற்காகதான் வெளியே வந்தவர் பச்சை நட்சத்திரத்தைக் கண்டு குழம்பி தனது புத்தகத்தில் அதுகுறித்து ஆராய்ந்து மனம் தளர்ந்து அமர்ந்தது.

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் அடாமி" என்று அவர் அவள் தலைகோத, புன்னகையாய் மண்டியிட்டு அமர்ந்து தன் வணக்கத்தை செலுத்தினாள். "க்ரிஸ்டோவுக்கு போயிட்டு வரேன் லார்ட். நன்றி கடன் செழுத்தனும் க்ரிஸ்டோவுக்கு" என்று அடாமி கூற, "சீக்கிரம் வந்திடு அடாமி. போ..போர் இருக்கு" என்றார்.

சரியென்று புறப்பட்டவள் க்ரிஸ்டோ உள்ள அந்த பகுதிக்கு வர, மின்மினிப் பூச்சிகள் அவளை சூழ்ந்துக் கொண்டன. மாயாஜாலத்தால் உருவாக்கிய மலர்களையும் கொடிகளையும் கொண்டு தயாரித்த கிரிடத்தை அவளுக்கு அணிவித்த மின்மினிகள் தங்கள் வாழ்த்தை கூற, "நன்றி ஃபைட்டர்ஸ்" என்றாள்.

0ae2e4885bd22236ad90f9e800f6bf19.jpg

அனைவரும் கிரிஸ்டோ முன் வந்து நிற்க, தன் மந்திரத்தால் காற்றில் பறந்தவள் கிரிஸ்டோ மீது தன் கரம் வைத்தாள். அவளுள் புது ரத்தம் பாய்வதைப் போல் ஒரு உணர்வு எழ, கண்களை மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், “என் பிறப்பின் பயன் உங்களை பாதுகாக்கத் தான். என் கடைசி மூச்சு வரை அதைநான் சரிவர செய்யனும்” என்று கூறினாள்.

அந்த க்ரிஸ்டோவிலிருந்த அனைத்து நிறங்களும் பளீச்சென்று கண்களைக் கூசும்படி மின்ன, கண் மூடாது அதைக் கண்டவள், மெல்ல மெல்ல இமை மூடி அப்படியே கைகள் விரித்து காற்றில் மிதந்தாள்.

மெல்ல அந்த ஒளி மறைய, அப்படியே தரைதளம் வந்தவள் தன் விழிகளைத் திறந்தவள், புன்னகையான முகத்துடன் திரும்பி மின்மினி களிடமிருந்து விடைபெற்று நேரே போர்க்களத்திற்கு வந்தாள்.

போர்க்களத்தில் தோன்றியவளை சுற்றி வளைத்து அவளது தோழமைகள் சந்தோஷ ஆரவாரத்தோடு, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அடாமி” என்று கூச்சலிட்டனர்.

இன்னும் போர் துவங்க நேரம் உள்ளதால் லார்ட் ஜோயலும் ஏதும் கூறாது அமைதியாக பார்த்திட, அனைவரையும் கட்டியணைத்தவள், “தேங்ஸ் எவ்ரிவன் (அனைவருக்கும் நன்றி)” எனக் கூறினாள்.

“இந்த வருடம் உனக்கு ரொம்ப இனிமையா அமையட்டும் அடாமி. உன்னோட எல்லா கஷ்டமும் தீர்ந்து ஹேப்பியா இருப்ப” என்று கூறிய அலாஸ்கா அவளை அணைத்துக் கொள்ள, தோழியை அணைத்து விடுவித்தாள்.

“பிறந்தநாளுக்கு எனக்கு என்ன தரபோற?” என்று சைரா வினவ, “நீதான எனக்கு தரனும்” என்று கூறி அடாமி சிரித்தாள்.

அவர்கள் யாவரும் சிரித்தபடி பேச, யாரும் எதிர்பாராத வகையில் அங்கே பறந்து வந்த ஃபேர்லே சட்டென அடாமியைத் திருப்பி அவளை இறுக அணைத்துக் கொண்டு அவள் நுதழில் இதழ் பதித்து, “பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஃப்ளோரா” என்று கூறினான்.

404ca276e91af473ab730be0feb4591b.jpg

அதுவரை ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்திருந்த அவர்களது காதல் இரு பிரிவினருக்கும் தெரிந்துபோக, எப்படி இந்த காதல் என உறைந்து நின்றனர்.

தேவதையவளும் அவனை ஆச்சரியமாகப் பார்த்து நிற்க, “என்கிட்ட பரிசு கேட்க மாட்டியா ஃபேர்ரீ?” என்றான். அவள் அமைதியாகவே அவனை நோக்க, “நீ கேட்கலைனாலும் தருவேன்.. ஆனா இப்ப இல்லை” என்றுவிட்டு, மீண்டும் அவளை அணைத்து விடுவித்துவிட்டு பறந்தான்.

காஸ்மோ அவனை கனல் கக்கும் பார்வை பார்க்க, அவரைப் பார்த்து ஏளனமாய் சிரித்தவன், இங்கிருந்து தனது மந்திரத்தால் இதய வடிவில் கங்குகளைப் பறக்கச் செய்தான்.

90d81ff7b3aae4f705749a3e0254e423.jpg

அடாமி மேலும் விழிகள் விரிய அதைப் பார்க்க, அவளது தோழர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டனர். புதிதாக விடயம் அறிந்தவர்கள் ஜோயலைப் பார்ப்பதும் தங்களுக்குள் பேசுவதுமாய் இருக்க, தங்கள் காதல் யாரின் பேச்சிலும் கடிபட விரும்பாது பறந்து ஒரு அடிமேலே மிதந்து நின்றபடி ஜோயலைப் பார்த்தாள்.

அவளது உணர்வுகள் புரிந்தவராய் அவர் தலையசைக்க, தானும் கண்மூடித் திறந்தவள், “யாரும் எங்க காதலை விமர்சிக்க வேண்டாம். பாரடைஸில் வெவ்வேறு பிரிவை சேர்ந்த போராளிகள் காதலிக்கக் கூடாதுனு எந்த சட்டமும் இல்லை. எங்க காதல் எங்க இருபிரிவினை சேர்ந்த தலைமையாளர்களுக்கும் தெரியும். அதற்கு அவர்களாலேயே தடைசொல்ல முடியாத பட்சத்தில் தவறான விமர்சனங்களை பேசிக்கொள்ள வேண்டாம்” என்று கராராகக் கூறிவிட்டு இறங்கினாள்.

அங்கு நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஃபேர்லேவின் முகத்தில் கர்வமாய் ஒரு புன்னகை எழ, அவனையே பார்க்கும் அனைவரையும் திரும்பிப் பார்த்தவன், “பாரடைஸ் தேவதைகளுக்கு காது தொலைவிலிருந்து பேசினாலும் கேட்கும். இங்க உள்ள எல்லோருக்கும் கேட்டிருக்கும்னு நினைக்குறேன்” என்று கூறிக் கொண்டான்.

பாரடைஸ் மக்களுக்கு காதுகளைப் போல் தூரத்திலிருப்போரின் முகத்தை தெளிவாய் காணும் கண் பார்வையும் துள்ளியமாய் இருந்திருக்கலாம்… விதி யாரை விட்டது?

போரின் நேரம் துவங்கிட, எப்போதும் போல் காஸ்மோவும் ஜோயலும் விண்ணை நோக்கி பறந்து திடும் திடும் என்ற பேரொளியோடு சண்டையிட்டனர். காஸ்மோவின் கண்களில் ஏனோ தன்னிடம் இருப்பவர்களே தன் கைமீறி செல்லும் கோபம், வெறியாய் பறவியிருக்க, ஜோயலின் விழிகளில் வலி.. வலி.. வலி மட்டுமே..

“உன்னிடம் கிரிஸ்டோவைக் கொடுக்க என்னால முடியாது காஸ்மோ. உன்னை கெஞ்சி கேட்குறேன். போரை நிறுத்திடு” என்று ஜோயல் கூற, ஒருநொடி அவரின் கெஞ்சல் மற்றும் கரகரத்த குரலில் அசைவற்று நின்ற காஸ்மோ, மீண்டும் தன்னுள் பிறப்பெடுத்த வெறியின் சாயலோடு, “முடியாது” என்றார்.

கீழே தன் பார்வையைப் பதித்த ஜோயல் விழிகளை அழுந்த மூடித் திறக்க, “பாரடைஸை என் கையில் கொடுங்க. போரை நிறுத்துறேன்” என்று காஸ்மோ கூறினார். முடியாதது எத்தனை முறை கேட்டாலும் முடியாதது தானே!

அங்கு அடாமினாவும் ஃபேர்லேவும் படு உற்சாகமாய் ஒருவரை ஒருவர் தாக்கி காயமடைந்துக் கொண்டிருந்தனர்.

“இதுதான் உங்க பரிசா ஃபேர்லே” என்று கேட்டவளது கூர் வாள் அவனது கரத்தை பதம் பார்த்திருக்க, தன் வாளிலிருந்து மந்திரத்தை பிரயோகித்தவன் அவள் மீது முற்செடிகளை வீசி காயமடைச்செய்தபடி, “ஆமாம்” என்று அட்டகாசமாய் சிரித்தான்.

“காதல் பரிசாய் நீங்க எதை கொடுத்தாலும் உங்க ஃப்ளோரா வாங்கிப்பா என்ற நம்பிக்கையோ?” என்று அவள் வினவியபடி பாறைகளை வீச, “நான் எதை கொடுத்தாலும் என் ஃப்ளோரா அதை பன்மடங்கா எனக்கு திருப்பி கொடுப்பா என்ற நம்பிக்கையால். எனக்கு என்னைவிட அதிகமா காதலைக் கொடுத்தது போல்” என்றான்.

இங்கு தனது நெருப்புப் பந்தை ஈடன் மீது வீசியபடி சைரா ஈடனுடன் போரிட, ஈடனும் அவளுக்கு சளைக்காது தனது பனிப்பந்துகளை வீசி அவள் நெருப்பை தூசு போல் ஆக்கிக் கொண்டிருந்தான்.

“என்ன சைரா.. நெருப்பு எத்தனை பெரிய அழிவை கொடுத்தாலும் பனிக்கு முன் அது தூசுனு புரியுதா?” என்று வினவ, அவன் முதுகில் பனிக்கத்திகள் வந்து குத்தின.

அது யாரென்று பார்க்கும் முன்பே அதை உணர்ந்தவனாய் அவன் இதழில் ஒரு கோணல் புன்னகை எழ, “எப்போதாவது நெருப்பை பனியால் அணைக்க முடிந்திருக்கலாம் ஈடன். ஆனா பனியும் பனியும் போரிட்டா உங்களோட பனி தோற்றுப் போகும்னு காட்டும் ஆள் இருக்காங்க” என்று அங்கிருந்து பறந்தாள்.

அதில் சிரித்தபடி திரும்பியவன் முன் அலாஸ்கா பளபளக்கும் விழிகளோடு நின்றிருந்தாள். “உன் தோழியிடமிருந்து என்னை காக்க தானே இப்படி பண்ணின?” என்று அவளை சரியாக புரிந்துக் கொண்டு ஈடன் வினவ, அதில் ஆச்சரியம் எல்லாம் அடையாது லேசாய் ஒரு விரகத்தி புன்னகையை சிந்தியவள், “அழிப்பதுக்கு கூட எனக்கு தான் உரிமை இருக்கு” என்று கூறி அவன் பதிலாற்றும் முன் அவனை பனிப்பொழிவில் மூழ்கடித்திருந்தாள்.

22c25dca96fb60d045e06beca87a8a70.jpg

அதிலிருந்து திணறித் திமிரி எழுந்தவன் அவளைப் பார்க்க பதிலேதும் கூறாது மீண்டும் அவனை சாய்த்துக் கொண்டிருந்தாள்; அவளால் இன்பமாய் அவன் சாய்ந்துக் கொண்டிருந்தான்.

6b8003b9598b13a7cbf0672de2d59641.jpg

இனிமையும் கொடுமையுமாய் அப்போர் முடிவடைய, அன்று காஸ்மோவின் பிரிவினர் அதிகமாய் சேதமடைந்திருந்தனர். அதில் ஆத்திரத்தோடு இருந்தவரை போர் முடிந்தவுடன் தன்னவளை பறந்து சென்று தூக்கிக் கொண்டு ஃபேர்லே சென்றது இன்னும் ஆத்திரமடையச் செய்தது.

இங்கு டோர் மலை வந்து சேர்ந்தவன் அவளை இறக்கிவிட்டு, “ஒரே ஒரு மணி நேரம் தான். உன்னை தோழர்களிடம் விட்டுடுறேன்.. உன் பிறந்தநாளில் அவர்களுடன் இல்லைனா வருந்துவாங்க.. ஆனா அடுத்த வருடம் உன்னவனா இருக்கும்போது அதுக்கு அவசியம் வராது” என்று கூற, அவள் மெலிதாய் சிரித்துக் கொண்டாள்.

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை ஏஞ்சல்.. மை ஃபேர்ரீ” என்று அவன் கூற, இன்பமாய் கண்கலங்கி நின்றாள். கன்னத்தோடு உரசி உறவாடிச் சென்ற அவளது விழிநீரைக் கண்டு இடவலமாய் தலையாட்டி சிரித்தவன், அதனைத் துடைத்துவிட்டு அவள் இதழோடு தன்னிதழ் பொருத்தி நின்றான்.

திராத காதல் தீர்ந்திடாத வேட்கையோடுப் போட்டியிட்டு நீண்ட அந்த முத்த யுத்தத்தினை முடித்து வைத்தவன், “என் ஃப்ளோரா.. எனக்கே எனக்குனு என்னுடையவளா நீ அங்கீகரிக்கப்படும் நாளுக்காக காத்திருக்கேன். உனக்கான பரிசுனு நான் எதுவும் கொடுக்கலை. கொடுக்கவும் போறதில்லை. நீ என்னவளா என் மனதில் குடியேறி பல தினங்கள் ஆச்சு. நம்ம பாரடைஸில் உன் கைப்பிடித்து உரிமையாய் நான் வளம் வரும் தருணம் தான் நமக்கும் நம்ம காதலுக்கும் நாமே கொடுத்துக் கொள்ளும் அழகான, ஆழமான அர்த்தமான பரிசாய் இருக்கும்” என்று கண்களில் நீரும் இழில் அவழிதல் தந்த தித்துப்புமாய் கூற, அவனை இறுக அணைத்துக் கொண்டவள், “லவ் யூ ஃபேர்லே” என்றாள்.

29f856aa8dd51c1a2543f9cc9145093b.jpg

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩

 

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-19

அவனுடனான தருணத்தை இனிக்க இனிக்க பேசி செலவு செய்தவளை அவளிடத்தில் கொண்டு வந்து விட்ட ஃபேர்லே புறப்பட, புன்னகையாய் தங்கள் பூங்காவுக்குள் நுழைந்தாள்.

“ஏ அடாமி.. வாவா” என்று கார்டிலியா உற்சாகமாய் அழைக்க, “ம்ம்.. என்னமா நல்லா என்ஜாய் பண்ணியாச்சா?” என்று சைரா அவள் தோளிடித்து குறும்போடு வினவினாள்.

அதில் அடாமி ஒரு நாணச்சிரிப்பை உதிர்க்க, அவள் முகத்தில் அத்தனை பிரகாசம். அணையப்போகும் விளக்கு பிரகாசமாய் தான் எரியும் என்பது அங்கு யாரும் அறிந்திருக்கவில்லை போலும்…

“அட அட அட.. தோரா.. அடாமினாவைப் பார்த்து நீயும் கொஞ்சம் வெட்கப்பட கத்துக்கலாம்” என்று ரெய்டன் கூற, முழங்கையால் அவன் வயிற்றில் குத்தியவள் பொய்க்கோபம் கொண்டு முறைக்கவும் அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.

“அடாமினா… பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று ஐலாவும் ஆலிஸும் அவளது கரத்தில் பச்சை நிற கற்கள் பதித்த ஆபரணத்தினை அணிவிக்க, “அழகா இருக்கு ஐலா. நன்றி ஆலிஸ்” என்று கூறினாள்.


47df302671d515288f3f3dbbcabf6c58.jpg

அடாமினாவை அணைத்துக் கொண்டு தனது வாழ்த்தை கார்டிலியா கூற, அவள் தலையைப் பரிவோடு கோதிய ஃபோர்ட் தானும் தன் வாழ்த்தைக் கூறி அவளது கத்திக்கு புது உறை ஒன்றை பரிசாகக் கொடுத்தனர்.

abe04b2fb2232c75f354c08169123c90.jpg

“இந்த உறையைக் கொடுக்க ஒரு காரணம் இருக்கு அடாமினா. இந்த உரையின் அழகு கத்தியை உரையிலிருந்து எடுக்க விடாதபடி ரசிக்க வைக்கும். கத்தியே தேவைப்படாத நிலை போர் இல்லாதபோது தான் நடக்கும். அந்த நிலை சீக்கிரம் வந்து உனக்கு விடிவுகாலம் பிறக்கத்தான் இந்த பரிசு” என்று ஃபோர்ட் கூற, கண்களில் கண்ணீர் மின்ன அவனை அணைத்துக் கொண்டு, “நன்றி ஃபோர்ட்” என்றாள்.

தோராவும் ரெய்டனும் அவளுக்கு புதுவுடை ஒன்றை பரிசளிக்க, சைரா “நானே உனக்கு பெரிய பரிசுதான். பிறகு தனியா எதுக்கு கொடுத்துகிட்டு சொல்லு” என்றாள். அதில் வாய்விட்டு சிரித்த அடாமி அவளை அணைத்துக் கொள்ள, அவள் விரலில் ஒரு மோதிரத்தை அணிவித்தாள்.


eiB8E7U83082.jpg

அந்த மோதிரத்தில் ‘ஃபேர்லே’ என்று எழுதியிருக்க, அதை ஆச்சரியமாய் பார்த்தவள் சட்டென சைராவை நிமிர்ந்து பார்த்தாள். சைரா அவளைப் பார்த்து கண்ணடிக்க, தோழியிவள் உருகியே விட்டாள்.

அனைவரும் அலாஸ்காவை ஆர்வத்தோடு பார்க்க, “என்னடா என்னையே பாக்குறீங்க அம்புட்டு பேரும்” என்றாள். “நீ என்ன கொடுக்க போற?” என்று அவர்கள் வினவ, அவள் சிறு மந்திரத்தால் மூடப்பட்ட பெட்டியை கொடுத்தாள்.

புன்னகையுடன் அதை வாங்கிய அடாமினா திறந்துவிட்டு அப்பொருளை எடுக்கவே, அனைவரும் ஆச்சரியமாகப் பார்க்க கண்களின் பனித்துளியை சுண்டி விட்டவள், “நீ லவ் பண்றனுலாம் உன்னை விட்டுக் கொடுக்க முடியாது. என் பரிசு எப்பவும் உன்னையும் என்னையும் சார்ந்ததா தான் இருக்கும்.. இருக்கனும்..” என்றாள்.

InShot_20240206_071353551.jpg

இதய வடிவில் தகடு போலான கண்ணாடியில் இருவரின் உருவத்தையும் தானே செதுக்கி கீழே ‘அடாமினா♡அலாஸ்கா’ என்று எழுதியிருந்தாள்.

கண்ணீரோடு அலாஸ்காவைக் கட்டியணைத்த அடாமினா அழுதுவிட, அங்கு அனைவரும் அதை நெழிச்சியோடு பார்த்தனர். “என்னிக்குமே உன் அடாமினா தான் அலாஸ்.. காதலுக்காக நட்பு மாறிடுமா என்ன?” என்று அடாமினா கூற, “நிச்சயமா மாறாது. நீ மாறவும் மாட்ட அடாமி” என்று பெருமையோடு கூறினாள்.

அங்கு ஃபேர்லேவைச் சுற்றி அவனது தோழர்கள் அமர்ந்திருந்தனர். “இந்த நாளை என் வாழ்க்கைல மறக்கவே மாட்டேன்டா” என்று லூமி கூற, “ஆமா.. காஸ்மோ முகத்தைப் பார்த்தியா? இடிஞ்சு விழுந்த கட்டிடம்போல ஆயிடுச்சு” என்று கூறி டைஸா சிரித்தாள்.

“ஆனாலும் உனக்கு குறும்பு ஜாஸ்தி தான்டா” என்று ஈடன் கூற, “அவருக்கு இது தேவை தான்டா. நாம புரிந்து கொண்டதை மித்தவங்க புரிந்து கொள்ளும்போது எவ்வளவு வேதனை படுவாங்க” என்று ஜான் கூறினான். “பாரடைஸ் வாசிகள் நம்ம அறியாமையால தவறான ஒருவரை ஆதிரிச்சுட்டோம்” என்று ஈடன் கூற, “ம்ஹும் ம்ஹும்” என்று லூமி குரலை செறுமினாள்.

அதில் ஃபேர்லே சிரித்துக் கொள்ள, “என்னங்கடா உங்க மாடுலேஷனே மாறுது” என்று டைஸா கேட்டாள். “காதல் வந்தா பிரிவினை எல்லாம் காற்றா பறந்துடுமாம் டைஸ்” என்று லூமி கூற, “ம்ம்.. ஜான் விடயத்துல அதை கண்கூடா பார்த்துட்டேன்” என்று டைஸா கூறினாள்.

“அவன் விஷயத்துல மட்டுமா பார்த்த? போ டைஸ். நீ லேட் பிக்கப்” என்று லூமி கூற, ஜான் அடக்கமாட்டாது வாய்விட்டு சிரித்தான். தோழர்கள் தன்னை கண்டுகொண்டதில் ஈடன் முகத்தை திருப்பி தலையை அழுந்த கோதி புன்னகைக்க, பாவம் டைஸா தான் ஒன்றும் புரியாது விழித்தாள்.

“காதல் டைஸ் காதல்.. என்ன காதல்னு நினைச்ச? இவனோடது பூமியவே உடைக்கும்னா இந்த காதல் பனியா உருகும்” என்று லூமி கூற, “ஏ லூமி.. இதுக்கு மேல சிரிக்க முடியாது.. ப்ளீஸ் விட்ரு. அவள பாரு புரியாம எப்படி விழிக்குறானு” என்று ஜான் கூறினான்.

ஈடனும் அதில் சிரித்துக் கொள்ள, “ஏ.. ஈடன் காதலிக்குறானா?” என ஆச்சரியமாய் கேட்டாள். “நான் சொல்லலை.. இவ லேட் பிக்கப்னு” என்று கூறி லூமி சிரிக்க, “யாரடா?” என்றாள். “அலாஸ்” என்று ஜான் கூற, ஈடன் முகம் மேலும் பொழிவு பெற்றது.

“அடப்பாவி.. சொல்லவே இல்லை” என்று டைஸ் வினவ, “இன்னும் அவளே என்கிட்ட சொல்லலை” என்றான். “ஆமா ஆமா.. ஆனா அவங்க ஆட்கள் கிட்ட இருந்தே அவன காப்பாத்த மட்டும் செய்வாங்க” என்று லூமி கேலி செய்தாள்.

“ஏ போதும் போதும் நிறுத்து.. பாவம் அவன்” என்று தன் உயிர்ப்பை தொலைத்து சிரிப்பை மறக்கப் போவது அறியாது சந்தோஷமாய் சிரித்தான்.. ஜான் ஃபேர்லே.

பதினாறாம் நாள்…

போரின் இறுதி நாள் இதுவாக இருக்கப்போவதை அறியாமலே அனைவரும் போர் முடிந்திட வேண்டும் என்ற வேண்டுதலுடன் அங்கிருந்தனர்.

போர்க்களத்தின் மையத்தில் இருந்த ஜோயல் தற்செயலாய் வானை நிமிர்ந்து பார்க்க, அந்த பச்சை நிற நச்சத்திரம் அதிக பிரகாசத்தோடு அருகில் தெரிந்தது. அதில் திடுக்கிட்டுப் போனவர் அதற்கு நேராக கீழே பார்க்க, புன்னகை முகத்தோடு அடாமினா நின்றுகொண்டிருந்தாள்.

5b7fef712c3a0beee4aac70b62fab74e.jpg

அவள் இருப்பிடத்திற்கு நேராக இருந்த நட்சத்திரம் தற்போது அவளுக்கு நேரே மின்னுவதைப் பார்த்தவர் கண்கள் கலங்கிவிட, தன்னை யாரோ நோக்குவதை உணர்ந்து சுற்றிமுற்றி பார்த்த அடாமினா ஜோயலைப் பார்த்தாள்.

அவர் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவரது கலங்கிய முகம் தெரியாதபோதும் அவர் தன்னை நோக்குவது புரிந்து மேலும் புன்னகைத்தாள். அதில் கண்களை அழுந்தமூடித் திறந்தவர் திரும்பிக் கொள்ள, தொண்டையில் துக்க பந்து வந்து அடைத்துக் கொண்டது.

நேரம் வந்திடவே போரும் துவங்கியது. கண்களில் கண்ணீரோடு காஸ்மோவைப் பார்த்த ஜோயல், “இந்த நாள் உனக்கு நன்மையோடு முடியாது காஸ்மோ. நீ ஒரு பெரும் பழிக்கு ஆளாகப் போற. அதுக்கு தயாரா இருந்துக்கோ” என்று கூற, காஸ்மோ ஒரு ஏளனப் புன்னகையுடன் சண்டையிட்டார்.

எப்போதும் போல் தான் காரசாரமாய் போர் நடந்துக் கொண்டிருந்தது. அந்த தருணம் வரை…

அடாமினா தனது கூர் வாள் கொண்டு தன்னை எதிர்ப்போர் அனைவரையும் வீழ்த்திக் கொண்டிருக்க, அவளை சுற்றி ஒரு இடி தேவதை, நெருப்பு தேவதை மற்றும் பூமி தேவதை வந்து நின்றனர்.

'இதெல்லாம் எனக்கு சாதாரணம்' என்ற புன்னகையோடு அவள் போரிட, அவளது நேரமோ என்னவோ அன்று ஆர்காட்டின் துணை கூட அவளுக்கு இல்லை. முந்தைய நாள் ஏற்பட்ட காயத்தால் ஆர்காட் சோர்வுற்றுப் போக, அடாமி அதை அன்று போரிட வேண்டாம் என விட்டு வந்திருந்தாள்.

நேரம் செல்ல செல்ல சற்றே சிரமமாக இருந்தாலும் அவள் முயன்று போரிட, எங்கிருந்தோ வந்த பனிக்கத்தி அவள் கத்தியில் முட்டி அதைக் கீழே தள்ளியது.

தூர விழுந்த கத்தியை திடுக்கிட்டுப் பார்த்தவள், தனது மந்திர சொற்கள் கொண்டு போரிட ஆயத்தமாகி திரும்ப, அவளது வாயை பச்சைக் கொடி ஒன்று வந்து சுற்றிக் கொண்டது. சுற்றி நிற்பவர்களின் பார்வை அவளில் கொடூரமாய் விழ, தான் தப்பிக்க அவள் எடுத்த முயற்சி ஒவ்வொன்றும் தவிடுபொடியாகிக் கொண்டிருந்தது.

அத்தனை நேரம் இல்லாத ஒன்று அப்போது அவள் கண்களில் வந்தது.. பயம்!

“இவள் தான் நேத்து நம்ம படையில் நிறையா பேரை அழிச்சது. இவளை அழிக்கலைனா நாம கண்டிப்பா போரில் தோற்றுப்போவோம்” என்று எதிரிகளில் ஒருவன் கூற, மற்றவர்கள் அவனை ஆமோதித்தனர்.

சிறகடித்து அவள் அங்கிருந்து பறக்க முயல, அதற்கும் நெருப்பு வைத்து அவளை கீழே சாய்த்தனர். கண்களில் கண்ணீர் வந்திடவே, ‘இல்ல.. கூடாது. நான் சாகக் கூடாது. ஃபேர்..ஃபேர்லே..’ என்று அவள் மனதோடு பரிதவிக்க, அங்கு போர்க்களத்தின் மற்றொரு மூலையில் போரிட்டுக் கொண்டிருந்தவனின் நெஞ்சுப்பகுதி பளிச்சென்று பச்சை நிறத்தில் மின்னி மின்னி மறைந்தது.

அடாமினா துடிதுடித்தபடி எழுந்து அவர்களைக் காண, இடி தேவதையும் நெருப்பு தேவதையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தலையசைத்தனர்.

அங்கிருந்து ஓடிவிட வேண்டி, அவள் முயற்சிக்க, கால்களிலும் கொடி ஒன்று சுற்றிக் கொள்ள பொத்தென கீழே விழுந்தாள். “ம்ம்..” என்ற ஒலி அவளிடம் உருவாக, இடி தேவதையின் இடியும் நெருப்பு தேவதையின் நெருப்பும் ஒன்று சேர்ந்து அவள் மீது பாய்ந்தது.


2558


“ம்ம்..” என்ற ஒலியோடு அவள் துடிதுடிக்க, அங்கு “ஃப்ளோரா..” என்ற முனுமுனுப்போடு ஜான் அவளைத் தேடினான்.

சுற்றி முற்றி தேடியவன், “ஆடம்.. அவளுக்கு ஏதோ பிரச்சினை. அவ எங்கனு பாரு” என்று கூற, ஜானை ஏற்றிக் கொண்டு அது பறந்தபடி அவளைத் தேடியது

“ம்ம்..ம்ம்..ம்ம்” என்று அவள் வலியில் துடிதுடிக்க, மற்ற மூவரும் அதை அவர்களது வெற்றியின் சாயலாகப் பார்த்தனர். மேலே பறந்துக் கொண்டிருந்த ஆடம் அதைக் கண்டுவிட்டு, “ஜான் அங்கப்பாரு” என்று பதைபதைப்போடு கூற அது குறிப்பிட்ட இடத்தை நோக்கியவன், “ஃப்ளோரா..” என்று கத்தினான்.

ஆடம் வீலென்று பறந்துக் கொண்டு அவிடத்தை அடைய, அவள்மீது தங்கள் சக்தியை செழுத்திக் கொண்டிருந்த இருவரும் ஆடமின் அதிர்வில் விலகி விழுந்தனர். ஆடம் மீதிருந்து குதித்து இறங்கிய ஃபேர்லே “ஃப்ளோரா..” என்றபடி அவளிடம் வர, அவள் உடல் சாம்பல் நிறத்திற்கு மாறியிருந்தது.


InShot_20240206_072555690.jpg

கண்களில் பெருகும் ஜீவ ஊற்றோடு அவளைத் தன் மடியில் கிடத்தியவன், “ப்ளோராஆ” என்று கதற, கண்களைத் திறக்க முடியாதபோதும் அவள் இதலில் ஒரு வலி நிறைந்த புன்னகை உருவானது. “ஃபேர்ரீ.. என்னை பார்.‌. உனக்கு எதுவும் ஆக நான் விடமாட்டேன்” என்று ஜான் கூற மூடியிருந்த அவளது விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து கோடாய் வழிந்தது.

துடிதுடிக்கும் இதழோடு, “ஃபே..ஃபேர்லே” என்று காற்றாகிப் போன குரலில் அவள் கூற, “ஆ…” என்று அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டு கதறினான்.


c6f41f54cb225e414e0597993cd9b587.jpg

சுற்றி நின்ற அவன் பக்க ஆட்கள் அதிர்ந்து விழிக்க, அப்போதே புரிந்தது ஜான் விரும்பியப் பெண் இவளென்று.

“ஃப்ளோரா.. என்னை பாருடா. என்னைவிட்டுப் போயிடாதமா. நீ இல்லாம நான்..” என்று அவன் கதறித் துடிக்க, அவள் விழிகளில் மேலும் கண்ணீர் வழிந்தது. “எ.. என் நேரம் முடியப்போகுது ஃபேர்லே. உ..உங்களோட வாழ முடியாதா? ந..நம்ம காதல் சாகப்போகுதா?” என்று கடினப்பட்டுப் பேசியவள் வலி பொருக்காது வாய்விட்டு கத்தினாள்.

“ஆ.. ஃபேர்ரீ.. இல்லை. நம்ம..நம்ம காதல் சாகாது. உனக்கு ஒன்னும் ஆகாது” என்று அவன் அழுது கரைய, “முடியாதே ஃபேர்லே.. வாழனுமே? என்னால உங்..உங்களோட வாழ முடியாதா? அய்யோ.. நம்ம ஏன் பார்த்தோம்? நாம ஏன் சந்தித்தோம்? நாம ஏன் காதலித்தோம்?” என்று கத்தினாள்.

அவர்களைச் சுற்றி ஸ்தம்பித்து நின்ற ஆட்களைத் தொடர்ந்து வந்த அனைவரும் அவர்களைக் கண்டு அதிர்ந்து நிற்க, அடாமினா மற்றும் ஃபேர்லேவின் தோழர்களும் அவ்விடம் வந்தனர்.

“ஆ.. வேணாம் ஃப்ளோரா. நீ பேசாத. நம்ம மாயக்கல் வைத்து உன்னை சரி செய்திடலாம்” என்று ஜான் திக்கலோடு கூற, விரக்தியான புன்னகையோடு கரமுயர்த்தி அவன் முகம் தொட்டவள், “லவ் யூ ஃபேர்லே” என்று கூற, அவளது கரம் பொத்தென கீழே விழுந்தது…
அவள் இன்னுயிரின் மூச்சும் அடங்கியது.

24ded6e0b9bdabd81b07e50df598694b.jpg

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩


 

Attachments

 • c535aa43f89f2a8b17fab76d69a44858.jpg
  c535aa43f89f2a8b17fab76d69a44858.jpg
  58.9 KB · Views: 23

NNK-04

Moderator
அந்தமற்ற ஆதரமே-20

InShot_20240207_185623286.jpg

தன் மடியில் உயிரற்று கிடப்பவளை வெறித்த விழிகளோடு பார்த்தவன், மெல்ல “ஃப்ளோரா” என்க, அவளிடம் அசைவில்லை.

“அடாமீ..” என்று சைரா கதறித் துடிக்க, தோரா மடிந்தமர்ந்து “அடாமினா” என்று கதறினாள்.


61b2fb2128c367b11310de3bb12171f0.jpg

கண்களில் கண்ணீரோடு ரெய்டன் தோராவைத் தன் மார்பில் கிடத்திக் கொள்ள, அவன் மார்பில் கரம் மூடி குத்தியவள், “ரெய்டன்.. அவ” என்று வெடித்தழுதாள்.

e328143f520aa5aad6441aefbf2d4d20.jpg

ஐலா தன் தோழி இல்லாமல் போனதை நம்ப முடியாது விழிக்க, ஆலிஸ் முகத்தை மூடிக் கொண்டு கதறினான். ஃபோர்டும் கார்டிலியாவும் வெம்பி வெதும்பி நிற்க, பிரம்மை பிடித்த நிலையில் அலாஸ்கா சிலை போல நின்றாள்.

அடாமியை இறுக அணைத்துக் கொண்ட ஜான் “ஆ…” என்று கத்த, சுற்றிநின்ற அவர்களது தோழர்கள் வெடித்து அழுதனர்.


InShot_20240207_190205537.jpg

அவனது கதறல் ஒளியில் போர்க்களம் அதிர, போரிட்டுக் கொண்டிருந்த அனைவரும் அதிர்ந்து சண்டையை நிறுத்தினர். ஃபேர்லேவின் சத்தத்தில் காஸ்மோ கீழே திடுக்கிட்டு நோக்க, ஜோயல் தன் கண்களை அழுந்த மூடி மேலே பார்த்தார். நட்சத்திரம் மெல்ல மறைந்திட அவரது விழிகளில் நீர் நிரம்பியது.

கிரிஸ்டோ சேவராக இருக்கும் ஃபேரிகள் இறக்கப்போகும் முன்பு அவர்களது இருப்பிடத்தின் மேல் அவர்களது மாயக்கல்லின் நிறத்தில் நட்சத்திரம் தோன்றிவிடும். அவர்கள் இறக்கும் அன்று அந்த நட்சத்திரம் அவர்களுக்கு நேரேயே வானத்தில் தோன்றும். அவர்கள் உயிர் முடிந்தவுடன் அந்த நட்சத்திரமும் மறைந்துவிடும். அதைக் கண்டு தான் அன்று அடாமினா பிறந்தநாளன்று ஜோயல் உடைந்து போனது!


கண்களை அழுந்த மூடித் திறந்து, “கீழ போலாம் காஸ்மோ” என்றுவிட்டு ஜோயல் கீழே சென்றார். காஸ்மோ கீழே வந்து நிற்க, அவரது அரவத்தில் திரும்பிய ஜான் ஃபேர்லேவின் கண்களில் அப்படியொரு ரௌத்திரம்.

சட்டென எழுந்தவன் காஸ்மோவின் ஆடையை கொத்தாகப் பற்ற, “ஜான்” என்று அவர் அதிர்ந்து கோபத்துடன் விழித்தார். “வாய மூடுடா” என்று கத்தியவன், “லார்டாகும் தகுதியே இல்லாத உனக்கு கிரிஸ்டோ கேட்குதா? நீ இந்த பாரடைஸில் வாழவே தகுதியில்லாதவன்” என்று கர்ஜிக்க காஸ்மோவிற்கு அவமானத்தில் கோபம் வரப்பெற்றது.

“ஜான்..” என்று மீண்டும் அவர் கத்த, “செத்துட்டா..” என்று அவரைவிட சத்தமாக கத்தியவன் தோய்ந்து சென்று அவளருகே மண்டியிட்டு, “செத்துட்டா.. மொத்தமா என்னையும் எங்க காதலையும் வாங்கிகிட்டு போயிட்டா. இப்ப உனக்கு சந்தோஷமா?” என்று கத்தினான்.

இறந்துகிடக்கும் அடாமினாவின் சடலத்தை காஸ்மோ அதிர்ச்சியோடு பார்க்க, “இதுக்கு தானே அன்னிக்கே கேட்டேன். உன் ஒருத்தன் சுயநலத்தால இப்படி பண்ணிட்டியே? எத்தனை எத்தனை உயிர் போச்சு. எத்தனை முறை வந்து கெஞ்சினேன்? யோசிச்சியா? யாருமே இல்லாம எல்லாரும் செத்தபிறகு அவங்க பிணத்தை வைத்தா ஆளப்போற?” என்று கடைசி வரியை மட்டும் சத்தமிட்டுக் கேட்டான்.

காஸ்மோவுக்கு அவனது கேள்வி முகத்தில் அறைந்த உணர்வை கொடுக்க, தற்போது அவனது பிரிவினரே அவனை துச்சமாய் பார்ப்பதைப் போன்ற உணர்வு எழுந்தது.

“மொத்தமா போயிட்டா.. எ.. என் ஏஞ்சல்.. என் ஃபேர்ரீ” என்று கலங்கியவன் “ஆ…” என்று கத்தியபடி பூமியில் தட்ட அவனது பலத்திற்கு பூமி அதிர்ந்து போர்க்களமே பிளவு பட்டது.

“ஜான்..” என்று அவன் தோழர்கள் யாவரும் கதற, அடாமினாவின் தோழர்கள் அவளின் இறப்பை ஏற்க முடியாது கதறித் துடித்தனர். அலாஸ்கா அசைவுகள் அற்று விக்கித்து நிற்க, சைரா அவளை அணைத்துக் கொண்டு வெம்பி வெதும்பினாள்.

அடாமினாவின் உடலை தன் கரத்தில் ஏந்திய ஃபேர்லே அவள் தலைகோதி, “இல்லை ஃபேர்ரீ.. மை ஃப்ளோரா.. நம்ம காதல் சாகாது. இது வாழ்வாங்கு வாழும் காதல். நம்ம உயிர் போன பிறகும் இந்த காதல் மறையாது. இது முடிவில்லாத காதல்.. இது அந்தமற்ற ஆதரம்டா” என்று அவளை இறுக அணைத்துக் கொண்டு தன் பலம் மொத்தம் கொண்டு கத்திக் கதற, போர்க்களம் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டது.

ஃபேர்லேவின் மீதிருந்து அவனது உயிர் கங்குகள் பிரிந்து வர, “ஜான்..” என அவனை நோக்கி அடிவைத்த லூமியின் கரம் பற்றிய ஈடன், “வேணாம் லூமி. ஹீ இஸ் நோ மோர் வித் ஹர் (அவளில்லாமல் அவனில்லல)” என்றான்.

கதறலுடன் லூமி அவனை அணைத்துக் கொள்ள, அவள் தலைகோதியவன் கண்களில் கசந்த நீரோட அவனைப் பார்த்தான்.


கண்ணீரோடு அவளை அணைத்துக் கொண்ட ஃபேர்லேவின் கதறல் ஒலியில் பூமி உடைந்து பிளக்க, அவனது மனமும் சேர்ந்து வெடித்தது.

834791d8af2b0ca8967dd2680b233f1a.jpg

மெல்ல அவனின் ஒலி குறைய, அவனுடலிலிருத்து கங்குகளின் எண்ணிக்கையும் குறைந்தது.

ஃபேர்லேவின் உடல் சாம்பல் நிறத்தில் மாற, அப்படியே அடாமினா மீது தோய்ந்து விழுந்தவன் தனது இன்னுயிரையும் விட்டிருந்தான்.

5748b534fca9c9652f437762ca6dd1bd.jpg

தடைகள் பல தடுத்தும் காதலித்து ஜீவித்த உயிர்கள் இரண்டும் உடல்விட்டு தங்கள் இன்னுயிர் இழந்து காற்றாய் கலந்தனர்.. காதலுக்கு உடலெதற்கு? எங்கள் உயிர் போதும் என்று உணர்த்தவே உயிரோடு உயிராய் கலந்திட்டனர்...

7ef175522270eb19412a5fca3f5b1ee8.jpg

போர்க்களம் மொத்தமும் வெடித்து பிளந்துவிட, போரின் நேரமும் முடிந்தது. எப்போதும் போர் நேரம் முடிந்ததும் சீராகும் நிலம் தற்போது சீராகாது இருப்பதே போர் முடிந்துவிட்டதை அங்குள்ள அணைவருக்கும் அடையாளப்படுத்தியது…

சுற்றிலும் யுத்தம் நடந்ததர்கான அடையாளமாய், குறுதிகறை படிந்து, ஆங்காங்கே பூமி பிளந்து, மழை பொழிய மனமற்றபோதும் வானம் கருத்து காட்சியளித்தது. எங்கும் சோக ஓலங்களின் ஒலிகள் மட்டுமே பிரதிபலிக்க, அனைத்தையும் கண்களில் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் காஸ்மோவும் ஜோயலும்.

வழிமாறி போன தன் செயலில் இப்பேற்பட்ட பலி நடந்துவிட்டதை சற்றும் ஜீரணிக்க இயலவில்லை காஸ்மோவால். தான் இத்தனை பெரிய பேரழிவுக்கு காரணியாகுமளவு பேராசையால் வசியப்படுத்தப்பட்டதை சற்றும் ஏற்க மனமின்றி கண்களில் முடியாத கண்ணீரோடு நின்றிருந்தான் காஸ்மோ.

அவர் தோளில் கைபோட்ட ஜோயல், "நீ அழறது ஒரு அண்ணனா பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தாலும் உனக்கு ஆறுதல் சொல்ல துளியும் எனக்கு மனசில்லை. சொல்ல வருத்தமா இருந்தாலும் இந்த பேரழிவுக்கு நீ ஒருத்தன் தான் காரணம்" என்று கூற, கண்ணீரோட மண்டியிட்டு அமர்ந்து அவர் கால்களை பற்றிக்கொண்டு கதறினார் காஸ்மோ.

அந்த மொத்த கூட்டமும் கதறியழும் காஸ்மோவை கண்களின் கணல் வெறியோட பார்க்க, அவரால் மன்னிப்பை கூட கேட்க இயலவில்லை. தன்னால் நடந்த இழப்பினை மன்னிப்பால் ஈடுகட்ட இயலாது என்று தெரிந்தும் அதை கேட்க இயலுமா என்ன?

சுற்றி சிதைந்து கிடந்த பூமியையும் சிதைவுகளோடு சிதைவுகளாக கிடந்த உடல்களையும் கண்டவருக்கு, தத்தமது இணையை, உயிரை பறிகொடுத்து கதறித் துடிக்கும் உயிர்களுக்கு ஆறுதல் கூட கூற இயலவில்லை.

"இ..இதுக்கு நீங்க எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்குறேன்" என்று காஸ்மோ கூற, "தண்டனையா? என்ன தண்டனை கொடுத்து என்ன செய்ய முடியும்? போன உயிரை உங்களால மீட்டு கொடுக்க முடியுமா?" என்று கர்ஜித்தாள், சைரா.

அவளை வேதனையோடு பார்த்த காஸ்மோ, "என்னால எதையும் செய்ய முடியாது சைரா. நான் செஞ்சது தப்பு தான். அதை மாற்றியமைக்க கூட முடியாத நிலையில இருக்கேன்" என்று கூறி தலைகுனிய, "அவ்வளவு கெஞ்சினானே அவன்.. ஒரு வார்த்தை எங்க பேச்சை நீங்க கேட்டிருந்தா இப்படியொரு பேரழிவு நிகழ்ந்திருக்குமா? இத்தனை மாவீரர்களையும், வீராங்கனைகளையும், அப்பாவி ஜீவன்களையும் இழந்திருப்போமா? சொல்புத்தியும் இல்லாம சுயபுத்தியும் இல்லாம நீங்க செஞ்ச ஒரு செயல், இன்னிக்கு எப்படியொரு சர்வநாசத்தை ஏற்படுத்திருக்கு பாருங்க" என்று கர்ஜித்தாள், லூமி.

அவள் வார்த்தைகளின் தீ அவரை சுட்டதில் துடிதுடித்து போனவர், "ஜோயல்.. என்னை கொன்னுடுங்க. இந்த வேதனையை என்னால தாங்க முடியலை. நா.. நான் இப்பேர்பட்ட பேரழிவுக்கு காரணமானவனா? இதை பார்க்க பார்க்க என் உடல் எரியுது" என்று கதறினார்.

"அவ்வளவு சீக்கிரம் உங்களை சாகவிட முடியாது. இத்தனை உயிர்களை துடிக்கவிட்ட நீங்க எப்படி அவ்வளவு சீக்கிரம் இறந்து போகலாம்?" என்று ஈடன் கர்ஜீக்க, தன் காதுகளை பொத்திக் கொண்டு காஸ்மோ மேலும் கதறி அழுதார். தனது பேராசை நடத்திய போராட்டத்தின் பேரழிவு அவர் கண்முன் வந்து காட்சியாக, அங்கு சிதைந்திருந்த உயிர்களிலிருந்து, சாம்பல் நிற கங்குகள் எழுந்தன.

யாவரும் அந்த சத்தத்தில் திரும்பிப் பார்க்க, அந்த கங்குகள் ஒன்று சேர்ந்து இறந்து போனவர்களின் ஆன்மாவாக மாற, அந்த ஆன்மாக்களின் முகங்களில் அத்தனை சோகம் தான்டவமாடியது. அத்தனை ஆன்மாக்களும் காஸ்மோவை பார்க்க, அதில் மனதால் மறித்துப் போனவர், "ஆ…" என்று கத்தினார்.

அதிகப்படியான வலியால் அவரது சக்திகள் வடிந்து போக, அதில் மேலும் வலியெடுத்து முற்றிலும் சோர்ந்து மயங்கினார். அனைவரும் சுற்றி இருந்த ஆன்மாக்களை நோக்கினர்.

ஃப்ளோரா அடாமினாவும், ஜான் ஃபேர்லேவும் வேதனை பொங்கும் கண்களோடு ஆன்மாவான ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். “காதல்..” என்று அடாமினா கூற, “சாகா வரம் பெற்றது” என்று ஜான் கூறினான்.

d6263b3d10246996d1b309605464279d.jpg

அங்குள்ளவர்களின் உயிர் கங்குகள் பிரிந்து ஒவ்வொருவர் மீதும் நுழைய, ஃப்ளோராவின் உயிர்க்கங்கும் ஜானின் உயிர் கங்கும் இரண்டாய் பிரிந்தது. ஜான் ஃபேர்லேவின் இரண்டாய் பிரிந்த உயிர் கங்குகளில் ஒரு பிரிவு ஐலாவிற்குள்ளும் மற்றொன்று ஆலிஸுக்குள்ளும் போக, இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அனைவரும் ஃப்ளோராவின் உயிர்க்கங்குகளைப் பார்க்க, ஒன்று அலாஸ்காவினுள்ளும் மற்றொன்று ஈடனின் உள்ளும் சென்றது. அத்தனை நேரம் சிலையாய் இருந்த அலாஸ்கா ஈடனை அதிர்வோடு திரும்பிப் பார்க்க, அவனும் அவளை அவ்வாறே பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்ணீரோடு ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டவள், “அடாமீ…” என்று கதற, உடல் குலுங்க அழுதபடி அவளை அணைத்துக் கொண்ட ஈடன் அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.


f3f1aea862849c1b01bb275b9dd7e338.jpg

“எ.. என் அடாமி.. எனக்கே..” என்றவளுக்கு வார்த்தைகளே வரவில்லை. அழுது கரைந்தவளைப் பார்த்து அனைவரும் கதற, காஸ்மோ அதிகப்படியான வலியோடு கதறி எழுந்தார். ஆயிரம் ஊசிகள் உடலெங்கும் துவைக்கும் தாங்கமுடியாத வலியில் கத்தியவர் உடலிலிருந்து கங்குகள் பிரிய, அந்த கங்குகள் போர்க்களத்திற்குள் சென்று புதைந்தது.. பூமி மீண்டும் சிராய் மாறியது…

ஆறு வருடங்களுக்குப் பின்பு…

பூத்துக் குலுங்கும் மலர்களைக் கொண்ட தோட்டமதில் மழலை பிஞ்சுகளின் சத்தமே ஒலித்தது. “பேபி ஃபேரீஸ்” என்று அதட்டலாய் கோரசாக சத்தம் கேட்க அங்கிருந்து மூன்று பேபி ஃபேரீஸும் திரும்பினர்.

“உங்களை லார்ட் ஜோயல் பயிற்சிக்கு அழைச்சா நீங்க எல்லாரும் இங்க விளையாடிகிட்டு இருக்கீங்க” என்று தோரா அதட்டலாய் வினவ, “நல்லா கேளுங்க அம்மா. இவங்களை மேய்க்க லார்ட் என்னை அமைத்திருக்கார். என்னடா இவங்களை காணவே இல்லையேனு பார்த்தா எல்லாம் இங்க இருக்காங்க” என்று தண்டர் கூறினான்.

அதில் ரெய்டன் வாய்விட்டு சிரிக்க, “உங்களுக்கு சிரிப்பா தான் இருக்கும் அப்பா. என் நிலமை அப்படி” என்று தண்டர் கூற, கார்டிலியாவும், ஃபோர்டும் வந்தனர். “ஸ்பிரிங்கில்” என்று ஃபோர்ட் செல்லமாய் அழைக்க, “அப்பா..” என்று ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்ட அவர்கள் மகள், தாயைப் பார்த்து நாவை துருத்தி அழகு காட்டினாள்.

அதில் முகவாயை தோளில் இடித்த கார்டி, “மகளைக் கொஞ்சியது போதும். லார்ட் கிட்ட விடனும்” என்று கூற, மற்ற குழந்தைகளின் பெற்றோரும் வந்து சேர்ந்தனர்.

அதில் சிரித்தபடி மகள் தலை கோதிய ஃபோர்ட், “போலாமா பேபி” என்க “போலாம் ப்பா” என்றவள் திரும்பி தன் தோழர்களிடம் “ரெண்டு பேரும் வந்துடுங்க” என்றாள்.

“ப்ளேஸ் (blaze)” என்று சைரா அழைக்க அவளிடம் ஓடிவந்த அவர்கள் மகன் “அப்பாவெங்க ம்மா?” என்க, “வந்துட்டேன்டா” என்றபடி ஃப்ளேக் மகனின் முன் மண்டியிட்டு அமர்ந்தான். தந்தையை கட்டியணைத்த ப்ளேஸ் “அப்பா போகலாம்” என்று கூற, மகனை அணைத்தபடி தூக்கிய ஃப்ளேக் சைராவைப் பார்த்து கண்சிமிட்ட, “ம்ம்.. போதும் போதும் அப்பா மகன் பாசம். போகலாம்” என்றாள்.

சிரித்தபடி அங்கு வந்த ஐலா “அடாமினா” என்க, வெளியே செல்லவிருந்த அனைவரும் அந்த பெயரில் உடலினுள் மின்சாரம் பாய்ந்ததைப் போல் திரும்பினர். பூக்களிற்கு நடுவே மறைந்திருந்த அந்த குட்டி தேவதை கைகளைப் பின்னே கட்டியபடி ஓடிவர, ஆலிஸ் மகளை தூக்கிக் கொண்டு முத்தமிட்டான்.

“அடாமினா போலாமா?” என்று ஐலா வினவ, “ம்ஹீம்..” என மறுப்பாக தலையசைத்தவள் சுற்றி முற்றி பார்க்க, அங்கு அலாஸ்காவும் ஈடனும் வந்தனர். முகம் கொள்ளா புன்னகையுடன் அலாஸ்காவிடம் ஓடியவள், “அலாஸ்” என்று அணைத்துக் கொள்ள, அலாஸ்காவின் கண்கள் கலங்கிவிட்டது.

“அடாமி..” என்றபடி அலாஸ் அவளுக்கு முத்தமிட, ஈடனைப் பார்த்தவள், “ஃபேர்லே?” என்க, அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்ட சுட்டிப்பையன், “இங்க இருக்கேன்” என்றான்.

அதில் சந்தோஷமாய் திரும்பிய அடாமினா, “ஃபேர்லே.. உனக்காக தான் இதைக் கொண்டு வந்தேன்” என பச்சை நிற ரோசாப்பூவைக் கொடுக்க, “நானும் உனக்காக கொண்டு வந்தேன் ஃப்ளோரா” என்றவன் பச்சைநிற சீனியா மலர்களைக் கொடுத்தான்.

அனைவரும் நெகிழ்வாய் அதை நோக்க, கைகள் கோர்த்துக் கொண்ட இருவரும் “போகலாம்” என்றனர்.

அடாமினாவின் உயிர் கங்கு பெற்ற அலாஸ்கா மற்றும் ஈடனுக்கு ஆண் பேபி ஃபேரியும், ஜானின் உயிர் கங்கு பெற்ற ஐலா மற்றும் ஆலிஸுக்கு பெண் பேபி ஃபேரியும் பிறந்தது. அனைவரும் அதில் ஆச்சரியமடைய, ‘என்னில் அவளும் அவளில் நானும் காதலால் கலந்துவிட்டோம்' என்று ஜான் என்றோ கூறிய வார்த்தைகள் ஈடனுக்கு நினைவு வந்தது.

குழந்தைகள் இருவரும் முன்னே செல்ல, பின்னிருந்து அவர்களைப் பார்தத்வர்களுக்கு குழந்தைகள் பெரியவர்களாய் மாறி ஒருவரை மற்றொருவர் அணைத்து கண்களில் அதே காதலுடன் நோக்கும் காட்சி பிரம்மையாய் தோன்றியது.

அனைவர் இதழிலும் ஒரு நிறைவான புன்னகை தோன்ற, “அந்தமற்ற ஆதரம்” என்று அலாஸ்காவும், ‘“சொன்னதை சாதிச்சுட்டான். முடிவே இல்லாத காதலை அடுத்த பிறவியில் வந்து தொடர்ந்துட்டான்” என்று ஈடனும் கூறிக் கொண்டனர்…

அழியா ஆதரம் நீ(வா)ழும்…

5595bfb56bd4b574dbe2870b9079395a.jpgஉங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் என்னோடு பகிர்ந்துகொள்ளவும் 🤩


 
Status
Not open for further replies.
Top