எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சாராவின் ஜீபூம்பா- கதைத்திரி

Status
Not open for further replies.

NNK-10

Moderator
சாராவும் அவளது ஜீபூம்பாவும் சேர்ந்து இரு இதயங்களில் காதலை மலர வைத்து அவர்களை இணைத்து சாராவை தத்தெடுக்க வைக்கும் காதல், உறவற்ற குழந்தையின் ஏக்கம், அப்பா மகள் பாசம் என உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட கதை🥰
 

NNK-10

Moderator
ஜீபூம்பா-01😍

சீராய் 'டிக் டிக் டிக்' என்று அடிக்கும் கடிகாரச் சத்தமானது, பிறந்த குழந்தையின் அழுகை, வளர்ந்த குழந்தைகளின் சண்டை, பெரிய பிள்ளைகளின் பள்ளிப் பரபரப்பு என்று அனைத்தினாலும் உருவான சத்தத்தில் மறைந்தே போனது அந்த ஆசரமத்தில்.

"இப்ப நீ வருவியா மாட்டியா? எனக்கு லேட் ஆகுது சாரா" என்று வெளிய கத்திய சிறுமி சாய்ஷாவின் குரலில் உள்ளே சளித்துக் கொண்ட சாரா, பல்துலக்கியை வாயைவிட்டு எடுத்துக் கொண்டு, "ஒருநாள் ஸ்கூலுக்கு லேட்டா போனா ஒன்னும் குறைஞ்சுட மாட்டடா சாய்ஷு.." என்றுவிட்டு மீண்டும் பல்லை துலக்கினாள்.

"யா அல்லாஹ்" என்று கீழே அமர்ந்த அந்தச் சிறுமி காத்திருக்க, தோழியை மேலும் வருத்தாமல் குளித்து முடித்து தனது பள்ளி சீருடையில் வந்த அந்த ஏழு வயது சுட்டி வாண்டு "சாய்ஷு நான் எப்படி இருக்கேன்" என்று வினவ, "அழகா இருக்க. நான் குளிச்சுட்டு வரேன்" என்றபடி சென்றாள்.

சரியென்ற தலையாட்டலுடன் கீழே சென்ற சாரா "சுபி அக்கா.. குடுமி போட்டுவிடுங்க" என்று அங்குள்ள பதினைந்து வயது பெண்ணொருத்தியிடம் கேட்க, "ஏ குட்டி வாண்டு.. என்ன இவ்ளோ லேட்டு" என்றபடி அவளது குட்டி முடியை இரண்டாக பிரித்து குடுமி போட்டுவிட்டாள்.

அதை கண்ணாடி முன்பு நின்று ஆட்டிப் பார்த்துக் கொண்ட சாரா, "அழகா இருக்கு க்கா" என்று அவளுக்கு முத்தமிட்டுவிட்டு வேகமாக உணவு உட்கொள்ளச் சென்றாள். அவள் உண்டுக் கொண்டிருக்கும்போதே அந்த பிரத்யேக வண்டியன் சத்தம் கேட்டுவிட, "அச்சோ… போச்சு போச்சு" என்றபடி உணவை அள்ளி வாயில் திணித்தாள்.

அந்த ஆசரமத்தினை நடத்தும் பிரபாதேவி, "ஏ குட்டி வாண்டு.. அடைச்சுக்காத.‌ அவன் வெளிய பேசிட்டு தான் இருக்கான்" என்று கூற, "அச்சோ மம்மி.. லேட் லேட்" என்றபடி உண்டு முடித்து தனது பொதிகளைத் தூக்கிக் கொண்டு "டாட்டா பிரபா மம்மி" என்றுவிட்டு ஓடினாள்.

அங்குள்ள சிறுமி ஒருத்தியுடன் நெடுநெடுவென்று வளர்ந்து அசரடிக்கும் அழகுடனும் அசாத்திய ஆளுமையுடனும் தோற்றமளிக்கும் வாலிபன் பேசிக் கொண்டிருக்க, "லக்கீ.." என்றபடி ஓடி வந்தாள்.

தன் அருகே வந்துவிட்டவளைக் கண்டு முகமெல்லாம் பூரித்து புன்னகைத்தவன், மண்டியிட்டு அமர்ந்து அவளைக் கட்டிக் கொள்ள, "அய்யோ லக்கீ.. காக்கி கரையாகிடும்" என்று அவன் அணிந்திருக்கும் காவலர்கள் சீருடையைக் குறிப்பிட்டுக் கூறினாள், சாரா.

சிரித்தபடி அவள் மூக்கைப் பிடித்து ஆட்டிவிட்டு அவளைத் தூக்கிக் கொண்டவன், "சாரா பேபி சாப்டாச்சா?" என்று வினவ, "பேபி சாப்டாச்சு. லக்கீ சப்டாச்சா?" என்று கேட்டாள். அந்த சிறுமியிடம் பொய் கூறி அவனுக்குத்தான் பழகக்மே இல்லையே! இதழ் பிதுக்கி இல்லை என்று தலையசைத்தவன், "பேபிடால ஸ்கூல்ல விட்டுட்டு கண்டிப்பா சாப்பிட்டுட்டு தான் ஸ்டேஷன் போவேன்" என்று கூற, "ஓகே டன் போலாமா?" என்றாள்.

அவளை தனது வண்டியில் முன்னே அமர்த்திக் கொண்டவன், வண்டியைக் கிளப்பிக் கொண்டு புறப்பட, காலையிலிருந்து தான் எழுந்து, குளித்து, வாயடித்து, உண்ட கதைகளைக் கூறிக் கொண்டே வந்தாள். சாராவின் பள்ளி வந்ததும், அவளைக் கீழே இறக்கி விட்டு சீருடையை சரி செய்தவன், "டாட்டா பேபிடால்" என்க "மிஸ்டர் இலக்கியன்" என்று அருகே ஓர் குரல் கேட்டது.

அதற்கு அந்த வாலிபக் காவலனும் சாராவும் திரும்ப, "அய்யயோ போச்சு" என்று சாரா வாயிற்குள் முனுமுனுத்துக் கொண்டாள். "சொல்லுங்க மேம்" என்று அந்த வாலிபக் காவலன் இலக்கியன் வினவ, சாராவைப் பார்த்து ஒரு முறை முறைத்தவர், "சாரா சேட்டை வரவர அதிகமாகிட்டே வருது. நான் கிளாஸ்ல பாடம் எடுத்துகிட்டு இருக்கேன் பின்னாடி உக்காந்து நோட்ல வரைஞ்சுட்டு இருக்கா. இதுல பேச்சும் சிரிப்பும் வேற" என்று கூற, சாராவை ஒரு கண்டனப் பார்வை பார்த்தவன், "சாரி மேம். நான் சொல்லி வைக்குறேன்" என்றான்.

அவரும் மேலும் இரண்டு அறிவுரைகளைக் கூறிவிட்டுச் செல்ல, சாராவை நன்கு முறைத்தவன், "ஏ வாண்டு.. என்னதிது?" என்றான். "அச்சோ லக்கீ.. மேக்ஸ் ரொம்ப போர். நான் தூங்கினாலும் திட்டுவாங்க. அதான் டிராயிங் வரஞ்சேன். சிரிச்சதும் நான் இல்ல.. எ.. என் பக்கத்துல தான்" என்றவள், 'ஜுபூம்பா' என்று மனதோடு பல்லைக் கடித்துக் கொண்டாள்.

அவளை முறைப்பது அவனுக்கு கடினமான செயல் என்று தெரிந்தும் அந்த ‘டாஸ்கை’ அவனுக்குக் கொடுப்பதையே இந்த வாண்டு வாடிக்கையாக வைத்திருந்தது.

"கிளாஸ்ல சேட்டை பண்ணாம இரு சாரா பேபி. இனிமே மேம் இப்படி வந்து சொல்லுறபோல வச்சுக்கக் கூடாது" என்று கூறியவனைப் பார்த்து முகத்தை பாவம் போல வைத்துக் கொண்டவள், "சாரீ லக்கீ" என்று கூற, அதற்குமேல் அவனால் கோபம் கொள்ள முடியுமா?

சின்ன சிரிப்புடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், "உடனே முகத்தை இப்படி வச்சுக்காத" என்று கூற, "லக்கீ குத்துது" என்று கன்னத்தை தேய்த்துக் கொண்டவள், "டாட்டா" என்க, அவள் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு தானும் கையசைத்தான்.

களுக்கிச் சிரித்துவிட்டு சுட்டிக் குழந்தைகளின் கூட்டத்திற்குள் தனது பொதிகளோடு ஓடியவள் மீண்டும் அவனைத் திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டு ஓடினாள்.

அவள் தன் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றவனுக்கு அன்றைய தினம் மனதில் வந்துபோனது.

எட்டு வருடங்களுக்கு முன்பு…

அந்த அழகிய ஆசரமத்திற்குள் எங்கும் குழந்தைகளின் சத்தமே கேட்டுக் கொண்டிருந்தது. எப்போதும் போல் தனது பத்தொன்பதாம் வயது பிறந்தநாளைக் ஆசரமத்துப் பிள்ளைகளுக்கு உணவிட்டுக் கொண்டாடவேண்டி வந்தான் இலக்கியன்.

அவன் தோளில் பதிந்த ஒரு வலியக்கரம் தட்டிக் கொடுக்க, அந்த கரத்திற்கான சொந்தக்காரரை அதன் அழுத்தம் மற்றும் ஆளுமையிலேயே புரிந்துக் கொண்டவன், புன்னகையுடன் திரும்பினான்.

"ஹேப்பி பர்த்டே மை பாய்" என்று தனது கணீர் குரலில் கூறிய சக்கரவர்த்தியிடம் தனது ‘டிரேட்மார்க்’ புன்னகையைக் கொடுத்தவன், "தேங்ஸ் மாமா" என்க, "நீ இங்கதான் வந்திருப்பனு தெரியும். அதான் வந்தேன். வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வாடா. உன் அத்தை உனக்காக நிறையா செய்துவைத்திருக்கா" என்றார்.

"வரேன் மாமா. இங்க எல்லாரையும் பார்த்துட்டு வரேன்" என்று இலக்கியன் கூற, அந்த இடத்தினை வருத்தம் கலந்த பார்வையுடன் பார்த்தவர், "உங்க அப்பாக்கும் ரொம்ப பிடிச்ச இடம்" என்று தன்போக்கில் கூறிவிட்டுப் பின் "ஸ்..சாரி இலக்கியா" என்று நாக்கை கடித்துக் கொண்டார்.

"நோ ப்ராப்ளம் மாமா. அவருக்கு பிடித்த இடம் என்பதால் தான் என்னை இங்க விட்டிருந்திருக்காங்க. விதியின் வசம் அத்தைக்காக நான் இங்கிருந்து வரும்படி ஆயிடுச்சு" என்று அலட்டிக் கொள்ளாமல் கூறியவன் முகத்தில் அதே புன்னகை படர்ந்திருக்க, "சரி இலக்கியா.. முடிச்சிட்டுவா" என்றுவிட்டுச் சென்றார்.

சென்று தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து அதை உயிர்ப்பித்தவருக்கு அழையா விருந்தாளியாய் சில நினைவுகள். கண்கள் லேசாய் பனிய, வண்டியை நிறுத்தி வான் நோக்கி பார்த்தவர், "நான் இருக்கேன்டா.. உன் பிள்ளைய நல்லபடியா ஒரு நிலையில நிறுத்துறதுக்கு முன்ன உன்கிட்ட வரமாட்டேன்" என்று தன் நண்பனிடம் மானசீகமாக பேசிக் கொண்டார்.

மனதில் மெல்லிய கணம் கொண்ட அந்த பெரிய மனிதருக்கு தன் முன் சிரித்தபடி நின்ற இலக்கியன் முகம் நினைக்க நினைக்க வலித்தது அவருக்கு. ‘அன்று தான் இல்லாது போனால்!’ என்று நினைக்கையிலேயே அவருக்கு உள்ளம் பதறியது. தன் நண்பன் அருவமாய் வந்து காட்டிக் கொடுத்ததாகத் தான் இன்றும் அவருக்கு நினைவு.

அங்கு ஆசரமத்தின் தலைமையாளர் பிரபாவின் அறையில் அமர்ந்திருந்தவன், அவர் காட்டிய இடங்களில் கையெழுத்திட்டுவிட்டு தன்னிடமிருந்த காசோலையை நீட்டினான்.

அவனையும் அதையும் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தவர், "மேல் படிப்புக்கு பார்ட்டைம் ஜாப் அப்படி இப்படினு கஷ்டம் படுற. அதான் இவ்வளவு சொத்து இருக்கே இதிலிருந்து எடுத்தா என்னப்பா உனக்கு?" என்று வினவ,

"இந்த பணம் எனக்கு வேண்டாம் மேடம். இந்த பணம் எனக்கு பிடித்தவர்களை இழக்க வைத்த பணம். என்னுடைய முன்னேற்றம் இதிலிருந்து வேண்டாம். அதுக்குனு இவ்வளவு சொத்தை என்ன செய்யனு யோசிக்கும்போது நான் வந்த இடம் எனக்கு உரைத்தது. எனக்கு இந்த பணம் வேண்டாம்னு நான் துணிந்து வேற வழி பார்த்து போறேன்னா எனக்கு என் மாமாவோட சப்போர்ட் இருக்கு. ஆனா யாருமே இல்லாம இருப்பவர்களுக்கு? அதான் அவங்களுக்கு நான் துணையா இருக்கேன்" என்று நீளமாகப் பேசி முடித்தான்.

அதில் மீண்டும் புன்னகைத்துக் கொண்டவர் அவன் தலைகோதி, "நன்றிப்பா" என்க, தானும் புன்னகைத்தவன், "குட்டீஸ் பார்த்துட்டு வரேன்" என்றுவிட்டுச் சென்றான்.

கீழே பூங்காவை சுற்றியுள்ள குழந்தைகளைப் பார்த்து இதழ் விரிந்த புன்னகையோடே உள்ளே சென்று அப்படியே முதல் மாடி ஏறியவன், அங்கிருந்த அமைதியில் குழந்தைகள் யாவரும் கீழே இருப்பதாய் புரிந்துக் கொண்டு கீழே செல்லவிருக்க, ஓர் குழந்தையின் அழுகுரல் அவனை நிறுத்தியது.

அந்த குரலில் ஏனோ அவன் உள்ளம் பதறும் ஓர் உணர்வு எழ, விறுவிறுவென அக்குரல் வந்த திசை நோக்கி தன் கால்களை எட்டி வைத்தான். அவ்வறையை நெருங்கிய நேரம் தன்னைப்போல் அந்த பீரிட்டு அழும் கதறலில் தன் நெஞ்சை நீவிக் கொண்டவன் அடுத்த அடி வைக்க, அழுகுரல் நின்றது.

அதில் தானும் அசையாது நின்றவன் வியர்த்திருந்த முகத்தைப் புறங்கையால் துடைத்துக் கொள்ள, அக்குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பு தற்போது அவன் காதை எட்டியது.

அதில் ஒரு ஆசுவாசப் பெருமூச்சுடன் நுழைந்தவன் கண்ணில் அங்கு தொட்டிலில் கைகளால்களை ஆட்டி சிரித்துக் கொண்டிருந்த குழந்தை பட, மெல்லிய புன்னகையுடன் அக்குழந்தையை நெருங்கினான்.

அவனைக் கண்டதும் தன் சிரிப்பை நிறுத்தியக் குழந்தை அவனைப் பார்க்க, தானும் அக்குழந்தையையே பார்த்தான். அவனையே பார்த்திருந்த குழந்தை மீண்டும் கைகால்களை ஆட்டி சிரிக்க, உற்சாகம் கொண்டு தானும் சிரித்தவன் பாந்தமாக அக்குழந்தையைத் தன் கைகளில் ஏந்தினான்.

அவன் அரவணைப்பில் அக்குழத்தை தாய்வாசம் உணர்ந்ததுப் போலும். அவனது சட்டையை இறுக பற்றிக் கொண்டு அவன் மார்பில் தன் கால்களை உதைத்து சிரிக்க, "பேபிடால்.." என்றபடி குழந்தைக்கு விளையாட்டு காட்டினான்.

அப்போது குழந்தைக்கான பால் புட்டியுடன் உள்ளே வந்த பெண்மணி ஒருவர், "அட தம்பி எப்ப வந்தீங்க?" என்றபடி முன்னே வர, "கொஞ்ச நேரம் முன்னதான் சுமதிக்கா" என்றான்.

"ம்ம்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்பா" என்றவர், "அட.. உங்ககிட்ட சிரிச்சுகிட்டு இருக்கா. இவ்வளவு நேரம் அப்படியொரு அழுகை தம்பி. பசிக்குதோனு பால் கலக்க போனேன்" என்று கூற, "நான் கொடுக்குறேன் க்கா" என்றபடி அமர்ந்தவன் பால் புட்டியை வாங்கினான்.

தன் ஒற்றை கரத்தால் அவன் சட்டையை இறுக பற்றிய அப்பிஞ்சு மற்றைய கரத்தை காற்றில் ஆட்டியபடியே பாலைக் குடிக்க, "பாவம் தம்பி.. பிறந்து பத்து நாளாகாத பிள்ளை. ஆத்தா அப்பன் ரெண்டு பேரும் ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க. பிள்ளை அது பக்கத்து வீட்டாளுங்க கிட்ட இருக்கவும் தப்பிச்சிருக்கு. அவுக கொண்டாந்து கொடுத்துட்டு போனாங்க" என்று சுமதி கூறினார்.

"பேரு (பெயர்) வச்சாச்சா க்கா?" என்று அவன் ஆர்வமாக வினவ, "இல்ல தம்பி" என்றார். "நான் சொல்ற பெயர் வைக்குறீங்களா க்கா" என்று அவன் ஆசையும் ஆர்வமுமாக கேட்க, மறுக்காமல் ஒப்புக் கொண்டார்.

குழத்தை பால் குடித்து முக்கவும் லேசாய் தண்ணீர் தொட்டு வாயை துடைத்து அந்த ஈரத்தை தன் சட்டையில் துடைத்தவன், தனது தந்தை சரண் மற்றும் தாய் ராதிகாவின் பெயரின் முதல் எழுத்துக்களை வைத்து "சாரா" என்று பெயரிட்டான்.

"நல்லாயிருக்குத் தம்பி" என்று சுமதி கூற, "சாரா பேபி" என்று அவன் கூறவும் குழந்தை சிரித்தது. அதில் மேலும் மகிழந்தவனுக்கு சக்கிரவர்த்தியிடமிருந்து அழைப்பு வர, குழந்தையைக் கொடுத்துவிட்டு புறப்பட்டான்.

குழந்தைக்கு தட்டிக்கொடுத்து விட்டு தொட்டிலில் இட்ட சுமதி அவ்வறையிலேயோ துணிகளை அடுக்கிவைக்க, "பூஊ..ஈஈ..சிரி பாப்போம்.. சிரி" என்று குழந்தைக்கு சிரிப்புக் காட்டிக் கொண்டிருந்தது, சாராவின் கண்களுக்கு மட்டுமே தெரியும் அவளது ஜீபூம்பா!

அப்றம் நம்ம சாரா அன்ட் ஜீபூம்பா அட்ராசிடீஸ் எப்படினு சொல்லிபுட்டு போங்க செல்லகுட்டிகளா😍

 

NNK-10

Moderator
ஜீபூம்பா-02

பள்ளியில் நுழைந்த சாராவின் தோளில் கரம் போட்ட ஜீபூம்பா, "என்ன சாரா.. காலைலயே பெரிய சம்பவம் போல?" என்க, அதை திரும்பிப் பார்த்து முறைத்தவள் தன் சுற்றம் உணர்ந்து மீண்டும் முகத்தை இயல்பாய் வைத்துக் கொண்டாள்.

அதில் ஜீபூம்பா வாய்விட்டு சிரிக்க, "ஸ்கூலுக்கு வராதனு சொல்லிருக்கேன்ல?" என்று மனதோடு கேட்டுக் கொண்டாள். "உன்னைவிட்டா எனக்கு யாரு சாரா? அதான் உன்கூடயே வரேன்" என்று ஜீபூம்பா கூற, "நல்லா வந்த. உன்னால அந்த மேக்ஸ் மிஸ் காலைலயே லக்கி கிட்ட என்னை போட்டு கொடுத்துடுச்சு" என்று முனங்கினாள்.

"சரிசரி விடு.. இந்த வருஷம் ஆரம்பிச்சு ஒருவாரம் ஆகியும் நீ யாருகிட்டயும் வாங்கிகட்டிக்கலைனு பார்த்தேன். என் ரூபத்துல தான் வாங்கனும்னு இருந்திருக்கு" என்று ஜீபூம்பா கூற, 'ம்க்கும்' என்று நொடித்துக் கொண்டாள்.

சென்று அனைவரும் வகுப்பறையில் பைகளை வைத்துவிட்டு மைதானத்திற்கு வர, இறை வணக்கம் நடந்து முடிந்தது. மீண்டும் சென்று அனைவரும் அவரவர் இடத்தில் அமர, முதல் வகுப்பும் துவங்கியது.

வகுப்பு துவங்கிய சில நிமிடங்களில் "எக்ஸ்கியூஸ்மி மேம்" என்று ஒரு ஆசிரியர் அழைக்க, வகுப்பிலிருந்த ஆசிரியர் தொடக்கம் மாணவர்கள் வரை யாவரும் திரும்பிப் பார்த்தனர்.

"எஸ் மேம்" என்று வகுப்பாசிரியர் கூற, அப்பள்ளி சீருடையணிந்த மாணவி ஒருத்தியோடு உள்ளே வந்த ஆசிரியர், "லேட் அட்மிஷன் மேம்" என்றார். "ஓ.. ஓகே மேம்" என்று அந்த ஆசிரியரை அனுப்பியவர், "உன் பெயர் என்னடா?" என்று வினவ, "மதியழகி" என்று அக்குழந்தை கூறியது.

"நைஸ் நேம்" என்ற ஆசிரியர், "ஸ்டூடென்ட்ஸ் இவங்க நேம் மதியழகி. நம்ம கிளாஸோட புது ஸ்டூடென்ட்" என்று அறிமுகம் செய்து வைக்க, அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

சிரித்தமுகமாக நன்றி கூறிய மதியை சாராவின் அருகே உள்ள இடத்தைக் காட்டி ஆசிரியர் அமரச் சொல்ல, சரியென்று தலையாட்டிய மதி சென்று சாராவுடன் அமர்ந்துக் கொண்டாள்.

வகுப்பு நேரம் பேசி மேலும் அந்த ஆசிரியரிடம் கொட்டு வாங்க வேண்டாம் என சாரா ஒரு சிரிப்புடன் அமைதியாகி விட, அவளை இரண்டு முறை கலாய்த்த ஜீபூம்பாவும், "சரி நீ உனக்கு ரொம்ப பிடிச்ச மேக்ஸ் கிளாஸ ஒழுங்கா கவனி. நான் பிரேக்ல வரேன்" என்றுவிட்டுச் சென்றது.

'ஹப்பா.. போய்ட்டான்டா. இவன் பண்ற காமெடிக்கு சிரிக்காம இருக்கவே எனக்கு ஆஸ்கர் தரளாம்" என்று சாரா எண்ணிக் கொள்ள, நேரத்தின் ஓட்டத்தோடு அந்த வகுப்பு முடிந்தது.

ஆசிரியர் வெளியே சென்றதும் ஒரு பெருமூச்சுவிட்ட சாரா, மதியின் புறம் திரும்பி கை நீட்டி, "நான் சாரா" என்க, சிரித்தபடி அவள் கைபற்றி குலுக்கியவள், "மதியழகி" என்றாள். "நைஸ் நேம்" என்று சாரா கூற, "என் சித்தி வச்ச நேம்" என்று கூறி சிரித்தாள்.

"சித்தியா?" என்று சாரா வினவ, "ஆமா.. எனக்கு என் சித்தினா ரொம்ப பிடிக்கும். எனக்கு மட்டுமில்ல எங்க அம்மா அப்பா அம்மம்மா அப்பத்தா எல்லாருக்கும் சித்தினா ரொம்ப பிடிக்கும்" என்று கூறினாள்.

"ஓ.. அவ்ளோ பேர் இருக்காங்களா உங்க வீட்ல" என்ற சாரா, "ஏன் ஒரு வாரம் வரலை?" என்று வினவ, "எங்க அப்பாக்கு கடைசி நேரம் டிரான்ஸ்பர் வந்துடுச்சு. இதுதான் அப்பா அம்மாக்கு சொந்த ஊர். இங்கதான் சித்தி, அம்மம்மா, அப்பத்தாலாம் இருக்காங்க. இந்த ஊருக்கு டிரான்ஸ்பர் வரவும் நாங்களாம் ரொம்ப ஹேப்பி ஆனோம். எல்லாம் முடிஞ்சு இங்க வர லேட் ஆயிடுச்சு. சித்தி தான் அட்மிஷன் வாங்கி எனக்கு யுனிபார்ம்லாம் முதல்லயே தச்சு வச்சுருந்தாங்க" என்று விளக்கம் கொடுத்தாள்.

"ஓ.. சூப்பர். டாடி என்ன பண்றாங்க?" என்று சாரா வினவ, "டாடி பேங்க்ல வர்க் பண்றாங்க. மம்மி ஐடில (IT) வேலை பார்க்குறாங்க. இப்ப இங்க வந்ததால இங்க உள்ள பிரான்சுல வேலை கேட்டு வாங்கிட்டாங்க" என்று விவரமாய் பதில் கூறினாள்.

"ம்ம்.." என்று சாரா புன்னகைக்க, "உங்க டாடி என்ன பண்றாங்க?" என்று மதி வினவினாள். அப்போது அங்கு வந்த மற்ற குழந்தைகள் தங்களை அவளிடம் அறிமுகம் செய்ய, சாரா மதி கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாது தடுமாறிய தன்னை மீட்டிருந்தாள்.

அங்கு வந்த ஜீபூம்பா, "என்ன சாரா புது பிரண்ட் நல்லா பேசுறாளா?" என்க, 'ம்ம்.. சூப்பரா பேசுறா' என்று மனதோடு நினைத்துக் கொண்டாள். பதில் கூற முடியாத தருணங்களில் அவள் மனதில் கூறிக்கொள்ளும் பதிலை ஜீபூம்பாவால் கேட்க இயலுமே! அவள் நினைத்துக்கொண்ட பதிலில் புன்னகைத்த ஜீபூம்பா, "சூப்பர். உங்க இங்கிலிஷ் மிஸ் வந்துட்டாங்க. டாட்டா" என்றுவிட்டு சென்றது.

அன்றைய நாள் புது தோழியுடனான கலகலப்போடே முடிவடைய, பள்ளிநேரம் முடிந்து வெளியே வந்த மாணவிகளில் சாரா, வெளியே எப்போதும் போல் தனது வண்டி மீது காக்கி உடையில் தோரணையாக அமர்ந்தபடி அலைப்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த இலக்கியனைக் கண்டாள்.

"அதோ.. லக்கி.. என்னை கூட்டிட்டு போக லக்கி வந்தாச்சு" என்று சாரா கைகாட்டவும், "ஏ உங்கப்பா போலீஸா?" என்று மதி வினவ, "இல்ல.." என்று கூறவந்தாள். அதற்குள் "என் சித்தி வந்துட்டாங்க பை" என்று அவள் ஓடிவிட, அவளையே பார்த்தவள் தன் பார்வையை அவன்புறம் திருப்பினாள்.

மெல்ல அடிவைத்த சாரா இலக்கியன் முன் வந்து நிற்க, கண்களை சுருக்கி ஒருநிமிடம் என்பதுபோல் சைகை செய்தவன், பேசி முடித்து அழைப்பை வைத்தான்.

தன்னையே பார்த்திருக்கும் குட்டிப்பெண்ணைப் பார்த்து சிரித்தவன் அவள் மூக்கை பிடித்து ஆட்டி, "போலாமா?" என்க, "ம்ம்.." என்றாள். அவளைத் தூக்கி வண்டியில் அமர்த்தியவன், அதை உதைத்துக் கிளப்ப, குழந்தையிடம் அசாத்திய அமைதி.

"என்ன சாரா அமைதியாவே இருக்க?" என்று ஜீபூம்பா கேட்க, 'ஒன்னுமில்ல' என்று மனதோடு பதில் கூறினாள். "இல்லயே நீ சரியில்லையே" என்று ஜீபூம்பா கூறுகையில், "என்ன குட்டி இன்னைக்கு பயங்கர சைலென்ட்? இன்னைக்கும் மேக்ஸ் மேம் கிட்ட திட்டு வாங்கனியா?" என்று இலக்கியன் கேட்டான்.

"இல்ல லக்கி.. நான் இவள திட்டு வாங்க வைக்கவே இல்ல. ஏ சொல்லு சாரா" என்று சாராவுக்கு மட்டுமே தான் பேசுவது கேட்கும் என தெரிந்தும் ஜீபூம்பா பேச, "இல்ல லக்கி" என்றாள்.

மீண்டும் அமைதியோடு பயணம் முடிய ஆசரமத்தில் அவளை இறக்கி விட்டவன், "என்னாச்சு பேபிடால்?" என்றான். அவனையே ஒரு நிமிடம் பார்த்தவள், "நீ எனக்கு யாரு லக்கி?" என்று வினவ, ஆடவன் அக்கேள்வியில் ஸ்தம்பித்து தான் போனான்.

"எ..என்னாச்சாடா? யாரும் பாப்பாவ எதும் கேட்டாங்களா?" என்று இலக்கியன் வினவ, "புதுசா ஒரு பொண்ணு இன்னிக்கு வந்தா. அவளுக்கு அம்மா அப்பா சித்தி அம்மம்மா அப்பத்தா எல்லாரும் இருக்காங்களாம். என் அப்பா என்ன பண்றாங்க கேட்டா. எனக்கு தான் அப்பாவே கிடையாதே லக்கி. என்னை யாரு கூட்டிட்டு போவாங்கனு கேட்டா. நீதான்னு சொன்னேன் உங்கப்பா போலீஸானு கேட்டுட்டு அவங்க சித்தி வந்துட்டாங்கனு போய்ட்டா" என்று சாரா கூறி முடித்தாள். அவள் குரலில் ஏக்கம் அத்தனை வழிந்தது.. அவளையும் அறியாமல்..

இலக்கியனுக்கு கண்கள் சிவந்தே விட இறங்கி சாராவின் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தவன், அவளை அணைத்துக் கொண்டு, "யார் கேட்டாலும் உன் லக்கி தான் உனக்கு எல்லாமேனு சொல்லனும். லக்கி தான் உனக்கு அப்பா.. அம்மா.. எல்லாம்.." என்றான்.

"அப்ப எனக்கு தனிதனியா யாரும் கிடையாதா?" என்று அவள் வினவ, "ஏன் இல்ல? உனக்கு சக்கரவர்த்தி தாத்தாவும் ராதா பாட்டியும் இருக்காங்க. இங்க பிரபா அம்மா இருக்காங்க நிறையா அக்கா பிரண்ட்ஸ்லாம் இருக்காங்க. எல்லாருக்கும் மேல உன் லக்கி.. உனக்கே உனக்கு எல்லாமுமா இருக்கேன்" என்று கூறினான்.

அதில் முகம் மலர அவன் கன்னத்தில் முத்தமிட்டவள், "லவ் யூ லக்கி" என்க, தானும் குழந்தைக்கு முத்தமிட்டவன், "லவ் யூடா பேபிடால்" என்றான்.

"இதுக்குதான் இம்புட்டு நேரம் மூஞ்சிய உம்முனு வச்சுட்டு வந்தியா? இதை நீ என்கிட்டயே கேட்டிருக்கலாம்" என்று ஜீபூம்பா கூற, "சரிடா பேபிடால்.. லக்கிக்கு வர்க் இருக்கு. போயிட்டு வரேன்" என்று கூறிய இலக்கியன் அவளை முத்தமிட்டுவிட்டு சென்றான்.

"உன்கிட்டயே கேட்டிருந்தா பதில் சொல்லிருப்பியா?" என்று சாரா வினவ, "ஆமா.. இந்த ஜீபூம்பாவை கடவுள் உனக்கு அனுப்பி வச்சதோட நோக்கமே உன் கேள்வில தான் இருக்கு" என்று ஜீபூம்பா கூறியது.

அதேநேரம் அங்கு வீட்டிற்கு வந்த மதியை தூக்கிக் கொண்டு, "தங்கபட்டு.. இன்னிக்கு ஸ்கூல் எப்படி போச்சு?" என்று அவளது அம்மம்மா சுந்தரி வினவ, "சூப்பரா போச்சு அம்மம்மா" என்று கூறினாள். அவளிடம் வந்த அவளது அப்பத்தா லட்சுமி, "எங்கடி உன் சித்திகாரி" என்க, "வண்டி நிறுத்திட்டு வருவாங்க அப்பத்தா" என்றாள்.

பேத்தியின் முகம் கண்டு புன்னகை பூத்த வயோதிகள் அவளை உடை மாற்ற அனுப்பிவிட்டு உணவு பண்டங்களை எடுத்து வைக்க, உள்ளே நுழைந்தாள், ஆரண்ய நிலா.

"மதிகுட்டி குளிக்க போயாச்சா?" என்றுபடி வந்தவள் தனது ஸ்டெதஸ்கோப் மற்றும் வெள்ளை அங்கியை மேஜையில் வைக்க, "ஆமா நிலா" என்று லட்சுமி கூறினார்.

"நிலா கண்ணு.. இதெல்லாம் ரூமுக்குள்ள வச்சுக்க. பாப்பா வந்தா எடுத்து விளையாடுவா" என்று சுந்தரி கூற, "சரிமா" என்றபடி அதை எடுத்துக் கொண்டு தன்னறைக்குச் சென்றாள்.

லட்சுமி மற்றும் ஈஸ்வரன் தம்பதியரின் ஒரே மகனே கார்த்திகேயன். பெண் கொடுத்து பெண் எடுக்கும் முறையில், ஈஸ்வரனின் தங்கை சுந்தரியும் லட்சுமியின் அண்ணன் மதிவேலனும் திருமணம் செய்துகொண்டு இல்வாழ்க்கையின் பரிசாக பெற்ற தேவதைகளே, ஆதிசந்திரா மற்றும் ஆரண்ய நிலா.

இரு குடும்பமும் அருகருகே வீடு கொண்டு அத்தனை அன்போடு வாழ்ந்து வந்த குடும்பம். கார்திகேயனுக்கு தன் அத்தை மகள் ஆதிசந்திரா மீது அழகாய் காதல் பூ பூக்க, பெற்றோரும் விரும்பியே அவர்களுக்கு மணம் முடித்து வைத்தனர். முதல் மகளை கரைசேர்த்த கையோடு மதிவேலன் இறைவனடி சேர்ந்திருக்க, அடுத்த சில வருடங்களிலேயே ஈஸ்வரும் ஒரு விபத்தால் இறையடி சேர்ந்திருந்தார்.

ஆதிக்கு அடுத்த ஐந்து வருடம் கழித்து பிறந்த நிலா அந்த மொத்த குடும்பத்திற்குமே செல்லம் தான். கார்த்திக்கும் நிலாவும் ஒருவர் மீது ஒருவர் அத்தனை அத்தனை பாசம் கொண்டவர்கள்.

"சந்திராவை எவ்வளவு காதலிச்சேனோ அதைவிட அதிக அளவு நிலா மேல தான் எனக்கு பாசம். அவ எனக்கு குழந்தை மாதிரி" என்று கணவன் அடிக்கடிக் கூறும் வார்த்தைகளில் ஆதி இன்னுமின்னும் அவன் மீது காதல்வயப் பட்டு சாய்வதெல்லாம் வேறு கதை..

நிலாமீதான பாசத்தில் தங்களுக்கே தங்களுக்கென்று உதித்த குழந்தைக்கு கூட அவளைத்தான் பெயரிடச் சொல்லி கேட்டனர். அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள் இருக்கலாம் என்று நிலா மறுத்தபோதும், ‘எங்களுக்கு எந்த பெயரும் எண்ணத்தில் இல்லை’ என்று கூறி அவளையே வைக்கச் சொல்லினர்.

நாலைந்து பெயர்கள் தேர்வு செய்து அதில் ஒன்றை பெற்றோராக அவர்களை முடிவெடுக்க வைத்தே மதியழகி என்ற பெயரை சூட்டியிருந்தனர், அந்த வாண்டுக்கு. வேலையாக வேறு ஊரில் இருந்த இருவரும் தற்போது சொந்த ஊருக்கே மாற்றலாகி வந்திருக்க, நிலாவுக்குத்தான் அதில் அத்தனை சந்தோஷம்.

ஆரண்ய நிலா, மருத்துவத்தில் இளநிலை முடித்து குழந்தைகள் நல மருத்துவருக்கான பட்டப்படிப்பில் தனது கடைசி வருடத்தை துவங்கி இருக்கின்றாள்.

மருத்துவம் படித்து முடித்தவுடன் திருமணம் செய்ய வரன் பார்க்க துவங்கிய தாயை தனது மேல் படிப்பைக் காட்டி அடக்கி இருந்தாள். மேல் படிப்பு முடிந்து நிலையாக வேலையில் அமர்ந்த பிறகு தாராளமாக திருமணம் செய்து கொள்வதாகவும் திருமணம் என்று ஒன்று செய்தால், இதே ஊரில் தான் என்றும் கூறியிருந்தது, அந்த இருபத்தி ஐந்து வயது வளர்ந்த குழந்தை.


அப்றம் நம்ம சாரா அன்ட் ஜீபூம்பா அட்ராசிடீஸ் எப்படினு சொல்லிபுட்டு போங்க செல்லகுட்டிகளா😍

Let's spell
Jee boom ba..🥳🪄

 

NNK-10

Moderator
ஜீபூம்பா-03

மறுநாள் காலை எப்போதும் போல் பள்ளியை அடைந்த சாரா தன் அருகே வந்து அமர்ந்த மதியைப் பார்த்து புன்னகைக்க, "நேத்து உன்னை பத்தி வீட்டில் நிறையா பேசினேன் சாரா. சித்தி உன்னை இன்டர்டியூஸ் பண்ணவே இல்லைனு கேட்டாங்க. நேத்து சித்தி வரவும் உங்க டாடிய கூட பார்க்காம போயிட்டேன்‌. உங்க டாடி நேம் என்ன?" என்று நீளமாக பேசினாள்.

"ஏ சாரா.. இந்த பொண்ணு உன்னைவிட வாயாடியா இருப்பா போலயே" என்று ஜீபூம்பா அவளது மேஜையில் அமரந்து காலாட்டியபடி கூற, 'ஜீபூம்பாஆஆஆ' என்று பல்லைக் கடித்துக் கொண்டவள், இவளுக்கு சின்ன சிரிப்பை வழங்கியபடி, "அது லக்கி" என்றாள்.

"அதுவா?" என்று மதி முகம் சுருக்கி வினவ, அதில் சிரித்துக் கொண்டவள், "என்னை கூப்பிட வந்தது லக்கி. எனக்கு எல்லாமே லக்கி தான். அப்படிதான் லக்கி எல்லார் கிட்டயும் சொல்ல சொல்லிருக்காங்க" என்று சாரா கூறினாள்.

அவளை புரியாத பார்வை பார்த்தவள், "உங்க மம்மி?" என்று கேட்க, "பிரபா அம்மா.. எனக்கு பிரபா ம்மா, சக்கரவர்த்தி தாத்தா, ராதா பாட்டி, நிறையா அக்கா தங்கச்சி அப்றம் லக்கினு நிறையா பேர் இருக்காங்க" என்றாள்.

குழந்தைகளுக்கே உள்ள இயல்பு… தன்னிடம் ஏதுமே இல்லையோ என்று எண்ணும் நேரம் உன்னிடம் இத்தனை நிறைய உள்ளது என்று யாரும் காட்டிக் கொடுத்தால் அதை யாரிடமேனும் கூறி பெருமை கொள்ள வேண்டும் என்ற அவா எழும். அதற்கு நம் சாராவும் விதிவிலக்கு அல்லவே?!

"அம்மாடி.. உங்க வீட்ல இத்தனை பேர் இருக்காங்களா?" என்று மதி வினவ, "லக்கி, தாத்தா, பாட்டி வேற வீட்ல இருக்காங்க. நான் அக்காங்க தங்கச்சீங்க அப்றம் அம்மா தான் எங்க வீட்ல இருக்கோம்" என்று கூறினாள்.

அவள் கூறியது புரியாத மொழி படம் போல தோன்றவே வேறு ஏதும் கேட்டு மேலும் குழம்ப விரும்பாது மதி சின்ன சிரிப்போடு தலையசைத்துக் கொண்டாள். அதில் மேஜையில் உருண்டு உருண்டு சிரித்த ஜீபூம்பா "சரியான லூசு சாரா நீ" என்று கூற, சாரா அவனிடம் கோபம் கொள்ளும் முன் ஆசிரியர் உள்ளே வந்த சாக்கைக் கொண்டு ஜீபூம்பா பறந்திருந்தது.

அங்கு தனது கல்லூரியில் தோழி ராகவியுடன் அமர்ந்து படிப்பு சம்மந்தமாக பேசிக் கொண்டிருந்த ஆரண்ய நிலாவின் முகத்தில் அத்தனை அத்தனை ஆர்வம்.

நிலாவுக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். மருத்துவம் பயில அவள் ஆசைபட்டபோதே குழந்தைகள் நல மருத்துவராகத் தான் ஆக வேண்டும் என்ற முடிவோடு படிக்க வந்தாள்.

எடுத்துக்கொண்ட படிப்பைப் போல் அவளும் குழந்தை மனம் கொண்டவள் தான். யார் உதவி என்று கேட்டாலும் தன்னால் முடிந்த மட்டில் செய்து கொடுத்திடுவாள். வெகுளியும் பகுத்தறிவும் கலந்த பெண்தான். சுட்டித்தனமாகவும் பேசுவாள், தேவையான நேரங்களில் கடுமையாகவும் பேசுவாள்.

அங்குள்ள அத்தனை பேருக்கும் ஆரண்ய நிலாவைப் பிடிக்கும் என்றாலும் ராகவி தான் நிலாவுக்கு மிகவும் நெருக்கமானவள்.

ஏனெனில் ராகவி பள்ளிகாலம் தொட்டு அவளுடன் பயிலும் தோழி. தோழி என்பதையெல்லாம் தாண்டி அவள் வீட்டில் ராகவியும் ஒரு அங்கமாகவே மாறிவிட்டாள் என்று கூட கூறலாம்.

"ஏ ஃபாரெஸ்ட் மூன் (forest moon) போதும் போதும் உன் சொற்பொழிவ நிறுத்து. உன்கிட்ட சொல்ல வந்த நல்ல செய்தியவே மறந்துட்டேன்" என்று ராகி கூற, "என்னடா?" என்றாள்.

"அது.." என்று இரண்டு கரங்களையும் முட்டி நெகத்தை பிய்த்துக்கொண்டே, "எனக்கு பொண்ணு பாக்குறாங்க.." என்றுவிட்டு தலையில் அடித்தபடி, "ச்சீ.. மாப்பிள்ள பார்த்துருக்காங்க" என்றாள். அவள் கூறியதில் முதலில் முட்டிக் கொண்டு வந்த சிரிப்பை மொத்தமும் கொட்டி காலி செய்துவிட்டு, "வெக்கம்லாம் படாத தாயே.. என்னால சிரிப்ப தாங்க முடியலை" என்றாள்.

"ஏ மூனு (moon)… ரொம்ப பேசாத. உன்னால முடிஞ்சா கல்யாணத்துக்கு சரி சொல்லி இப்படி வெக்கபட்டு காட்டு பார்க்கலாம்" என்று ராகி கூற, "என்னடா.. எங்க அம்மா எதுவும் உனக்கு கொம்பு சீவி விட்டாங்களா?" என்று கேட்டாள்.

"ம்க்கும்.. உங்கம்மா சீவி விட்டாலும் உங்க அத்தை அப்படிலாம் ஒன்னும் நீ கேட்காத, அவ படிச்சு முடிக்கட்டும், உன் ஆசை தோசை தான் முக்கியம்னு ஆரம்பிப்பாங்க. அப்றம் உன் ஆசை மாமா எனக்கு ஃபோன் அடிச்சு பாப்பாட்ட ஒன்னும் கேட்காதடா வருத்தப்பட போறானு பத்தி பத்தியா பாச பாயசத்தை கொட்டுவாரு. தேவையா எனக்கு?" என்று கேட்டாள்.

அவள் கூற்றில் தன் குடும்பத்தார் தன்மீது கொண்டுள்ள பாசத்தை எண்ணி புன்னகைத்தவள், "அப்ப உண்மைலயே மாப்பிள்ளை பார்த்துட்டாங்களா?" என்று கேட்க, "அதைதான சொல்றேன் என் ஃபாரஸ்டு" என்றாள்.

"பாரேன்.. சூப்பர் ராகி. மாப்பிள்ளை யாரு?" என்று நிலா வினவ, "அதெல்லாம் இன்னும் கேட்கலைடா. என் ஒசரத்துக்கு ஆறடிக்கும் மேல உள்ள ஹைட்ல மாப்ள பாருங்க, ஐடி வேலை பாக்குறவன் வேணாம்னு மட்டும் தான் கேட்டிருந்தேன். ஐடினா லீவே தரமாட்டானுங்க. லீவு நாள்லயும் வர்க் ப்ரம் ஹோம் கொடுத்துடுவானுங்க. நமக்கு அப்படி வேலை பாக்குறவன் செட் ஆக மாட்டான். அதனால என் டிமான்ட் இது ரெண்டு தான். பார்த்துருக்குற மாப்பிள்ளை ஆறரையடில நல்லா அர்நால்டு மாதிரி தான் இருக்காரு. காலேஜ் ப்ரொபசர்னு மட்டும் சொன்னாங்க காலைல.‌ நான் வேற காலைல நல்லா தூங்கி லேட்டா எழுந்துட்டேனா அதனால வேற விவரம் ஏதும் கேட்கலை" என்றாள்.

"செம்ம ராகி.. அப்றம் என்ன? இனிமே ஸ்வீட் நத்திங்ஸ் தான்" என்று நிலா கூற, "அடபோடி. எப்படினாலும் கல்யாணம் இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும்னு தான்னு எங்க நைனா ஸ்டிரிக்டா சொல்லிட்டாரு. இப்போதிருந்தே எல்லாம் பேசி முடிச்சா தான் நான் படிச்சு முடிச்சதும் அலேக்கா அங்க அனுப்பி வைக்கலாமாம். இந்த பாடத்தோட குதிரை ஓட்டிகிட்டு நான் சாப்பிட்டு தூங்கவே போராட்டமா இருக்கு. இதுல ஸ்வீட் நத்திங்ஸு பிட்டர் திங்ஸுக்குலாம் எங்க போக" என்று பெருமூச்சு விட்டாள்.

"ரொம்ப வருத்தம் தான்" என்று நிலா சிரிக்க, "உனக்கு மாப்பிள்ளை பார்க்க போறதுனா என்ன டிமேன்ட் வைப்ப? டிமேன்ட்லாம் எதுவும் இல்லைனு படம் ஓட்டிடாத" என்று ராகி கூறினாள்.

"டிமேன்ட் எதுவும் கிடையாதுனுலாம் சொல்ல மாட்டேன். இருபத்தி அஞ்சு இருபத்தி ஆறு வருஷம் வாழ்ந்த வாழ்க்கைல இருந்து நிறையா விஷயத்தை இழந்தும் மாத்திகிட்டும் தான் ஒரு கல்யாண பந்தத்துக்குள்ள போறோம். ஆண் பெண் ரெண்டு பேருமே திருமணத்துக்கு பிறகு ரெஸ்பான்ஸ்பிலிடீஸ்ல முன்ன இருந்த வாழ்வில் எதையோ இழக்கதான் செய்றாங்கனாலும் பெண்கள் நம்ம மொத்தமா வாழந்த ஒரு சூழலையே விட்டுட்டு புதுசா ஒருத்தன நம்பி போறோம். உயிரும் உயிருக்கும் மேலான கற்பும் உனக்கே உனக்குனு சொல்லும் ஒருத்தனை தேர்ந்தெடுக்கும்போது அதுக்கு தகுந்த ஒரு ஆளை எடுக்கனும் இல்லையா? அதனால கண்டிப்பா டிமேன்ட் வைப்பேன்" என்று நிலா கூற, "சரி டிமேன்ட சொல்லு" என்று ராகி கேட்டாள்.

"ம்ம்.. வெளித்தோற்றம்னு பார்த்தா என்னைவிட கொஞ்சம் உயரமா மீசைலாம் வச்சுட்டு மாநிறமா இருந்தா ஓகே. அதுக்குனு இப்படி தான் வேணும்னு கேட்கலை. இப்படி இருந்தா நல்லாருக்கும்னு ஒரு எண்ணம். முக்கியமா என்னோட குடும்பத்தை தன்னோடு குடும்பமா நினைக்கும் ஒருத்தனா இருக்கனும். நான் எப்படி அவருக்கு மனைவியா மட்டுமில்லாம அவர் குடும்பத்துக்கு ஒரு அங்கமா போறேனோ அதேபோல எனக்கு கணவனா மட்டுமில்லாம என் குடும்பத்துல ஒரு அங்கமா உரிமையோட அவரும் இருக்கனும்" என்று நிலா தனது ஆசைகளைக் கண்கள் பளபளக்க கூறினாள்.

கடிகாரத்தில் பெரிய முள்ளை துறத்தி துறத்தி மணிக்கு ஒருமுறை சந்தித்து நிமிடமேனும் உறவாடி நகரும் சிறிய முள்ளின் ஓட்டத்தில் நேரமும் கடந்திட்டது.

பள்ளி முடிந்து வீடு வந்த மதி, "ஏம்மா சித்தி கூப்பிட வரலை?" என்று வினவ, "சித்தி காலேஜ்ல இருக்கா பட்டுமா" என்று ஆதி கூறினாள். பேத்திக்கு பண்டங்களுடன் வந்த பாட்டிகள் இருவரும், "இன்னிக்கு உன் பிரண்டு என்ன சொன்னா?" என்று வினவ, "நிறையா சொன்னா பாட்டி. எனக்கு தான் புரியலை" என்றாள்.

அதில் சிரித்த ஆதி, "அப்படி என்ன பட்டு அவ சென்னா?" என்று வினவ, "அவளோட டாடி பேரு லக்கியாம். லக்கி தான் அவளுக்கு எல்லாமேவாம். மம்மி பிரபா அப்றம் நிறையா அக்கா தங்கச்சி இருக்காங்களாம். அவ டாடி, தாத்தா, பாட்டி வேற வீட்ல இருப்பாங்களாம் மம்மி அக்கா தங்கச்சி இவ வேற வீட்ல இருப்பாங்களாம்" என்று கூறினாள்.

கேட்டவர்கள் மூவரின் முகமும் நொடிபொழுது வருத்தத்தில் சுருங்கி மீண்டது. மதி கூறியதை வைத்து அந்த மூன்று பெண்மணிகளும் புரிந்துக் கொண்டது, 'சாராவின் தாயும் தந்தையும் விவாகரத்து செய்து கொண்டனர் போலும்' என்பது தான்.

"சரி சரி நீ போய் டிரஸ் மாத்திட்டுவா. அப்பத்தாவும் அம்மம்மாவும் உனக்கு ஸ்னாக்ஸ் எடுத்து வச்சுருக்காங்கள்ல?" என்று ஆதி கூற, "சரிம்மா" என்று உள்ளே ஓடினாள்.

"பாவம் அந்த பொண்ணு" என்று லட்சுமி கூற, "அப்பா அம்மா பிரிஞ்சிருக்காங்கனே தெரியாம இருக்கா போல" என்று வருத்தத்தோடு சுந்தரி கூறினார்.

அங்கு வண்டியில் அமர்ந்துக் கொண்டு "லக்கி இன்னிக்கு மதி அவங்க சித்திய இன்டர்டியூஸ் பண்றதா சொன்னா. ஆனா அவங்க சித்தி வரலை. அம்மா தான் வந்தாங்க. அவங்க கியூட்டா பேசினாங்க" என்று கூற, சிரித்தபடி அவள் பேச்சிற்கு 'உம்' கொட்டிக் கேட்டான்.

"லக்கி.. நான் இன்னிக்கு நீ சொன்னதை சொன்னேன் அவகிட்ட. எனக்கு அம்மா அக்காங்க தங்கச்சீங்க பிரண்ட்ஸ் தாத்தா பாட்டி லக்கினு இவ்ளோ பேர் இருக்காங்கனு சொன்னேன்" என்று அவள் கூற, "சூப்பர் பேபிடால். எப்பவும் நம்மகிட்ட எதுவும் இல்லை அடுத்தவங்க கிட்ட இருக்குனு நினைக்கவே கூடாது. நம்மகிட்ட இருக்குறதுதான் நமக்கு பெருசுனு நினைக்கனும்" என்று லக்கி கூறினான்.

"ஓகே லக்கி" என்றவளை ஆசிரமத்தில் இறக்கி விட்டவன், "பைடா குட்டிமா" என்க அங்கு பிரபா வந்தார். அவர்மீது அதிகம் மரியாதை கொண்டவன் வண்டியை விட்டு இறங்கி, "மேம்" என்க, "எப்படி இருக்கப்பா?" என்று வினவினார்.

"எனக்கென்ன மேம்? நல்லா இருக்கேன்" என்று அவன் கூற, அவனுடன் நிற்கும் சாராவைப் பார்த்து புன்னகைத்த பிரபா, "உள்ள போய் ரெபரெஷ் ஆகுங்கடா" என்றார். "ஓகே ம்மா" என்றவள் உள்ளே ஓட, அதில் புன்னகைத்துக் கொண்டவர் அவனிடம் பேசினார்.

சாதாரண நலவிசாரிப்பு பேச்சுக்களின் போது தோட்டத்தில் தோழிகளுடன் சேர்ந்து பாடும் சாராவின் சத்தம் இருவரையும் எட்டியது. திருத்தமாய் ஒலிக்கும் அவளது மழலைக் குரலில் மேலும் புன்னகைத்தவர், "உன் பேபிடால் சூப்பரா பாட்டு பாடுறாப்பா. என்ன குரல்" என்க "நானே முதல் முறை கேட்குறேன் மேம். பாட்டெல்லாம் பாடுவாளா?" என்று வினவினான்.

"அட நல்லா பாடுவாப்பா. ஸ்கூல்ல வாரம் ஒருநாள் சொல்லி தருவாங்க போல. கத்துக்கிட்டா இன்னும் நல்லா பாடுவா" என்று பேச்சோடு கூற, 'கத்துகிட்டா' என்ற வார்த்தை அவன் மனதில் ஆழப் பதிந்தது.

"வேற பிள்ளைகள் யாருக்கும் பாட்டு இல்ல வேற எதும் கத்துக்க விருப்பம் இருக்கானு கேளுங்க மேம். நம்ம ஆசிரமத்துக்கே வந்து சொல்லி கொடுக்க யாரும் இருக்காங்களானு கேட்டு பார்க்குறேன்" என்று உடனே அவன் கூறிவிட, மென்மையாய் ஒரு நன்றி புன்னகையுடன் தலையசைத்தார்.


அப்றம் நம்ம சாரா அன்ட் ஜீபூம்பா அட்ராசிடீஸ் எப்படினு சொல்லிபுட்டு போங்க செல்லகுட்டிகளா😍

 

NNK-10

Moderator
ஜீபூம்பா-4

அன்று ஆர்வத்துடன் தன்னிடம் உள்ள அழகிய பாவாடை சட்டையை அணிந்துக் கொண்டு வெளியே காத்திருந்த லக்கியிடம் ஓடி வந்தாள், சாரா.

"ஏ பேபிடால்" என்று அவளைத் தூக்கிக் கொண்டு முத்தமிட்டவன், "தாத்தா பாட்டிய பார்க்க குட்டிக்கு எவ்வளவு ஆர்வம்?" என்க, "ஆமா லக்கி. பாட்டி எனக்காக சூப்பரா பாதாம் போட்டு பாயாசம் தருவாங்க. தாத்தா டென் கிஸ் குடுப்பாங்க. என் கூட ஓடிபிடிச்சு விளையாடுவாங்க. ஜாலியா இருக்கும்" என்று கூறினாள்.

"ஆஹாங்.. நாங்க டெய்லி கிஸ் தரோம். வாரம் ஒருமுறை உங்க தாத்தா கொடுக்கும் கிஸ் உனக்கு பெருசா இருக்கா?" என்று அவன் வினவ, குழந்தைக்கு பதில் சொல்ல தெரியவில்லை பாவம்.

அதில் புன்னகைத்துக் கொண்டவன், "பிரபாம்மா கிட்ட சொல்லியாச்சா?" என்று வினவ, "சொல்லிட்டேன் லக்கி" என்றாள். "ம்ம்.. இன்னிக்கு தாத்தா பாட்டிய பார்க்க போகும் முன்ன உனக்கு ஒரு குட்டி சர்ப்பிரைஸ் இருக்கு" என்று அவன் கூற, "சர்ப்பிரைஸா? என்னது லக்கி?" என்றாள்.

"அங்க போய் நீயே தெரிஞ்சுக்கோ" என்றவன் அவளைக் கூட்டிக் கொண்டு ஒரு வீட்டை அடைந்தான். அந்த வீட்டை புரியாது பார்த்த சாராவின் அருகே நின்ற ஜீபூம்பா, "என்ன சாரா இடம் புதுசா இருக்கு?" என்று வினவ, 'எனக்கும் தெர்ல ஜீபூம்பா' என்று மனதோடு பதில் கூறினாள்.

அவளிடம் குனிந்து அமர்ந்தவன், "இது தான் உன் சர்ப்பிரைஸ். இது ஒரு பாட்டு கிளாஸ்" என்க அவள் விழிகள் வட்டமாய் விரிந்தது. "லக்கி.. நிஜமாவா?" என்று அவள் வினவ, "ம்ம்.. பேபிடால் தான் சூப்பரா பாடுறீங்களே. மித்த பசங்க யாரும் கத்துக்க விருப்பம் படுறாங்களா கேட்டேன். கொஞ்சம் பசங்க விருப்பம் பட்டாங்க. அடுத்த வாரம் இருந்து கிளாஸ். அதுக்கு முன்ன உன்னை கூட்டிட்டு வந்து இன்டர்டியூஸ் பண்ணி வைக்கலாம்னு வந்தேன்" என்றான்.

"நிஜமாவா லக்கி.. சூப்பர்.. ஜாலி ஜாலி" என்று அவள் குதிக்க, ஜீபூம்பாவும் அவர்களைப் புன்னகையாகப் பார்த்தது. அவளைக் கூட்டிக் கொண்டு உள்ளே சென்றவன் பாட்டு சொல்லிக் கொடுக்கும் பெண்ணிடம் அவளை அறிமுகம் செய்து வைத்து பேச, அவரும் தான் சொல்லிக் கொடுப்பதாக நம்பிக்கை வார்த்தைகள் பேசினார்.

அப்போது அங்கு வந்த மதி, "ஏ சாரா" என்க மதியைத் திரும்பிப் பார்த்தவள், "மதி" என்று குதூகலத்தோடு அழைத்தாள். "லக்கி.. இவ தான் நான் சொன்னேன்ல என் பிரண்ட் மதி" என்கையிலேயே அங்கு ஆதி வந்திருந்தாள்.

"லக்கி இவங்க மதி அம்மா" என்றவள், "ஹாய் ம்மா" என்க, "ஹாய்டா குட்டி. பாட்டு கிளாஸ் சேர வந்தீங்களா?" என்று கேட்டாள். "ஆமா ம்மா. லக்கி என்னை சர்பிரைஸ் பண்ண கூட்டி வந்திருக்காங்க" என்று சாரா கூற, இலக்கியனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனது தோற்றம் வைத்தே அவனது வயது எப்படியும் இருபத்தி ஐந்திலிருந்து முப்பதுக்குள் இருக்கும் என்பது புரிய, இவனுக்கு ஏழெட்டு வயதில் குழந்தையா? என்று ஆச்சரியம் தான் முதலில் எழுந்தது. சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்குமளவு அது கிராம புறமும் கிடையாதே! ஆதலால் அவ்வாறு ஒருநொடி எழுந்த எண்ணத்தை உடனே புறக்கணித்தவள், "வணக்கங்க" என்க, தானும் பதில் வணக்கம் கூறினான்.

"மதி நான் எங்க தாத்தா பாட்டி பார்க்க போறேன்" என்று சாரா கூற, "சூப்பர் சாரா" என்றாள். பெரியோர் இருவரும் சிறு தலையசைப்புடன் பிள்ளைகளைக் கூட்டிச் சென்றிட, "என்ன சாரா பேபி.. உன் பிரண்டு பாட்டு கிளாஸ்கும் உன் கூட வருவாபோல" என்று ஜீபூம்பா கேட்டது. 'ஆமா ஜீபூ.. ஜாலில' என்று அவள் உள்ளத்தால் குதூகலிக்க, சக்கரவர்த்தியின் இல்லத்தை அடைந்தனர்.

உள்ளே வேகமாக ஓடிய சாரா, "தாத்தா" என்று சக்கரவர்த்தியை அணைத்துக் கொள்ள, "அடடே குட்டிமா.. வாங்க வாங்க" என்று அவளைத் தூக்கிக் கொண்டார். "தங்கபட்டு வந்தாச்சா" என்று சமையலறையிலிருந்து ராதா வர, "ஆமா பாட்டி" என்று பாட்டியிடம் தாவினாள்.

இவர்கள் மூவரையும் புன்னகையுடன் பார்த்த இலக்கியன், "பேத்தி வந்துட்டா போதுமே ரெண்டு பேருக்கும்" என்க, அதில் பெரியோர் இருவரும் சிரித்துக் கொண்டனர். ராதா அவனுக்கு தேநீர் எடுத்து வந்து தர, அதை குடித்து முடித்து வேலைக்குப் புறப்பட்டுச் சென்றான்.

வண்டியில் பயணித்துக் கொண்டருந்தவனது பாதி எண்ணம் தன் வழக்குகள் சார்ந்ததாக இருக்க, கவனம் சாலையில் இருந்தது. அவன் எதிரே அதி வேகத்தில் ஒரு இருசக்கர வாகனம் சீறிக் கொண்டு வருவதைக் கண்டவன் கண்கள் இடுங்க, பின்னே காவலர்களின் வண்டியும் வருவதைக் கண்டான்.

வருபவன் ஏதோ ஒரு குற்றவாளி என்பது அவனுக்கு சடுதியில் புரிந்திட, தன் வண்டியை வலைத்து, வந்துகொண்டிருந்தவன் மீது மோதும்படி கொண்டு சென்று அவனை நிறுத்த முயற்சித்தான்.

இலக்கியனின் செயலில் தடுமாறிப்போன அந்த குற்றவாளி, தப்பிக்கும் முனைப்பில் சட்டென தனது வண்டியை ஒடித்துத் திருப்பிட, அவன் திருப்பிய திசையில் வந்து கொண்டிருந்த ஸ்கூட்டியின் மீது இடித்து நிலைதடுமாறி கீழே விழுந்தான். அவன் இடித்த ஸ்கூட்டியும் தரையோடு சரிந்துகொண்டே சாலையின் ஓரம் வரை சென்றிட, ஒருநொடியில் அந்த இடமே களேபரம் ஆனது.

சட்டென தன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிய இலக்கியனிடம் வந்த காவலர் ஒருவர் "சார்…நீங்க?" என்க, அவருடன் வந்த மற்ற காவலர்கள் அந்த குற்றவாளியைப் படித்து அவன் கையில் விலங்கிட்டனர்.

தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு வெறும் தலையசைப்பை பதிலாகக் கொடுத்தவன், சரிந்து விழுந்த ஸ்கூட்டரை நோக்கி ஓட, அதிலிருந்த கடினப்பட்டு எழுந்த பெண்ணொருத்தி பின்னே அமர்ந்து வந்த தன் தோழியை தூக்க முயல, தான் முன் வந்து அவர்கள் வண்டியை தூக்கி நிறுத்திவிட்டு ஒற்றைக் காலை குற்றி அமர்ந்து அப்பெண்ணை தூக்கினான்.

இரு பெண்களும் தலைகவசம் அணிந்திருந்த காரணத்தால் பெரிய அடிகள் இல்லாது தப்பினர் என்றாலும் பின்னே அமர்ந்திருந்த பெண்ணின் முழுக்கை சுடிதாரின் வலது கைப்பகுதி மற்றும் கால்சாராயின் வலது கால் பகுதி கிழிந்து கைகால் சிராய்த்து ரத்தம் வடிந்தது. சட்டென நேர்ந்த விபத்தின் அதிர்ச்சியில் அப்பெண் மூர்ச்சை அடைந்திருக்க, அவளது தலைகவசத்தைக் கலட்டினான்.

கண்ணீரோடு தோழியை உலுக்கிய ராகவி, "ஏ நிலா.." என்க, அப்பெண்ணை திமிர்ந்து பார்த்தவன் அவளிடம் சின்ன சின்ன காயங்கள் மட்டும் உள்ளதை உறுதி செய்துக் கொண்டு, நிலாவைத் தன் கையில் ஏந்தினான். அந்த பகுதியின் கடைகளின் வாயிலில் நின்றிருந்த ஆட்டோக்களில் ஒன்று அவன் அருகே வந்து நிற்க, நிலாவோடு உள்ளே அமர்த்தவன் தன்னிடம் கேள்வி எழுப்பிய காவலரிடம் திரும்பி, "என்னோட பைக்கை எடுத்துட்டு உங்க ஸ்டேஷன் போயிடுங்க. பப்ளிக் பிளேஸ்ல பிரச்சினையாயிருக்கு, இவங்க மெடிகல் எக்ஸ்பென்ஸ் ஸ்டேஷன் பொறுப்பு" என்றுவிட்டு ராகவியிடம் திரும்பி, "வண்டிய ஓரமா நிறுத்திட்டு வாங்கம்மா" என்றான்.

அவளும் அவனுடன் வர, சடுதியில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அப்போதே நிலாவின் முகம் பார்த்தவன், அவள் கன்னம் தட்டி மயக்கத்திலிருந்து எழுப்ப முயன்றான்.

மருத்துவமனையை அடைந்ததும் அவளைத் தூக்கிக் கொண்டு வந்தவன் மருத்துவரிடம் அவளை ஒப்படைத்து, விபரங்களைக் கூறிவிட்டு வர, ராகவி கலக்கத்தோடு நின்றிருந்தாள். அவளைக் கண்டு தன் ஆள் காட்டி விரல் மற்றும் நடுவிரலால் தன் புருவத்தைத் தேய்த்துக் கொண்டவன், "சாரிமா. எதிர்பாராம நடந்த விபத்து. அவங்களுக்கு ஒன்னுமில்லை. அதிர்ச்சில மயங்கிட்டாங்க. கைகால்ல சிராய்ப்பு ஏற்பட்டிருக்கு. நடந்த விபத்துக்கு காவல்துறை சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்" என்று கூற, அதே கலக்கத்தோடு தலையசைத்தாள்.

அங்குவந்த செவிலி இலக்கியனிடம் பெண்ணவளின் விபரம் கேட்க, அவன் ராகவியைப் பார்த்தான். "அ..ஆரண்ய நிலா. இருபத்தி ஐந்து வயது" என்று அவளது விபரங்களைக் கூறினாள். செவிலி சென்றவுடன் ராகவியைப் பார்த்தவன் சென்று அவளது காயங்களுக்கு மருந்திட செவிலியை அழைத்தான்.

வந்தவர் ராகவியை அழைத்துச் சென்று அவள் காயங்களைத் துடைத்து மருந்திட்டு வேறு ஏதும் வலிகள் உள்ளனவா என்று கேட்டுத் தெரிந்துக் கொண்டு அழைத்துவர, அதற்குள் இருவருக்குமான மருத்துவச் செலவுகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டவன் தானே அத்தொகையை கட்டிவிட்டு வந்தான்.

ராகவியிடம் வந்தவன், "அவங்க பேரென்ட்ஸ்?" என்று வினவ, "அவ மாமாக்கு சொல்லிருக்கேன் சார். வந்துடுவாங்க" என்கயிலேயே பதறி‌யடித்துக் கொண்டு அங்கு வந்தான் கார்த்திக்.

ராகவியை கண்டுகொண்டு அங்கு வந்தவன் கண்கள் சிவந்து அப்படியொரு பதட்டத்தில் துடிக்க, அவனை கண்ட ராகவி "மா..மாமா" என்றாள். "ராகிமா.. பாப்பா எங்க?" என்று அவன் வினவ, அவள் இலக்கியனைப் பார்த்தாள்.

கார்த்திக்கிடம் வந்தவன், "சார் நான் எஸ்.ஐ.இலக்கியன். குற்றவாளி ஒருவன் தப்பிச்சுப் போகும்போது அவனை பிடிக்கும் முயற்சில சின்ன விபத்து நடந்துடுச்சு" என்று நடந்தவற்றைக் கூறி, "நடந்த விபத்தின் அதிர்ச்சியில் மயங்கிட்டாங்க. கைகாலில் சிராய்ப்பு ஏற்பட்டிருக்கு. பிரச்சினை ஏதுமில்லை. ஆஸ்பிடல் எக்ஸ்பென்ஸ் எங்க பொறுப்பு அன்ட் நடந்த விபத்துக்கு காவல்துறை சார்பா நாங்க மன்னிப்பு கேட்டுக்குறோம்" என்று பணிவாக பேசினான்.

நிலாவுக்கு ஒன்றென்றால் அந்த வீட்டில் ஒவ்வொருவரின் ஆர்ப்பாட்டமும் விண்னை முட்டி இடிக்கும். அப்படியிருக்க சண்டையிட வேண்டும் என்றே வந்த கார்த்திக் இலக்கியனின் பணிவான விளக்கம் மற்றும் மன்னிப்பில் சற்றே அமைதியாகி விட, உள்ளிருந்து வந்த மருத்துவரும் இலக்கியன் கூறியதையே கூறி அவளுக்கு ஒன்றுமில்லை என்றும் இன்னும் சில நிமிடங்களில் கண் முழித்த பின் வீட்டிற்கே அழைத்துச் செல்லலாம் என்றும் கூறியிருந்தார்.

ஒரு பெருமூச்சுடன் இருக்கையில் அமர்ந்து தன் முகத்தை மூடிக் கொண்ட கார்த்திக் தன்னை சமநிலை படுத்த, இலக்கியன் அமைதியாக நின்றான். தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு எழுந்தவன், கைநீட்டி, "ஓகே சார். ரெண்டுபேரையும் மருத்துவமனை கூட்டி வந்ததுக்கு ரொம்ப நன்றி" என்க, சன்னமான புன்னகையுடன், "இட்ஸ் மை டியூட்டி" என்றுவிட்டு, "டேக் கேர் சார்" என்று புறப்பட்டான்.

அப்றம் நம்ம சாரா அன்ட் ஜீபூம்பா அட்ராசிடீஸ் எப்படினு சொல்லிபுட்டு போங்க செல்லகுட்டிகளா😍

 

NNK-10

Moderator
ஜீபூம்பா-05

வீட்டில் தன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த ஆரண்ய நிலாவைச் சுற்றிதான் அவள் வீட்டார் யாவரும் இருந்தனர். சோர்வாய் அவர்களைப் பார்த்தவள், "எனக்கு ஒன்னுமில்லை. ஒருவாரம் போனா இந்த காயமெல்லாம் ஆரிப்போயிடும்" என்க, அவளின் அன்னை கண்கள் கலங்க அவளைப் பார்த்தார்.

"ம்மா.." என்று அவள் சத்தம் போட, "சித்தி கத்தகூடாது வலிக்கும்" என்று மதி கூறினாள். "குட்டிமா நீயாவது இந்த பாட்டிக்கு சொல்லுடா பட்டு. சித்திக்கு ஒன்னுமில்லை" என்று அவள் கூற, "கையெல்லாம் புண்ணு சித்தி" என்றாள்.

அவள் கார்த்திக்கைப் பார்த்து முறைக்க, அதில் லேசாய் சிரித்தவன், "அவளுக்கு ஒன்னுமில்லை எல்லாரும் சும்மா சுத்தி சுத்தி நின்னு அவளை நோயாளியா ஃபீல் பண்ண வைக்காதீங்க" என்று கூறினான்.

சரியென அனைவரும் வெளியேற அவர்கள் வெளியேறியதை உறுதி செய்தவன் அவள் அருகே அமர்ந்து "பாப்பா ரியலி ஒன்னுமில்லை தானே? வலிக்குதுனா மாமாட்ட சொல்லனும்டா" என்க "மாமா.. எனக்கு மதியவிட குட்டிபிள்ளை போல ஃபீல் ஆகுது" என்றாள். அதில் அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன், "நீ தான் என் முதல் பேபிடா" என்க, "எல்லாரையும் வெளிய அனுப்பிட்டு நீங்க மட்டும் இங்க என்ன பண்றீங்களாம்" என்று தலையை மட்டும் உள்ளே நீட்டி ஆதி அவனை வம்பிழுத்தாள்.

அதில் அசடு வழிந்தவன் "உன்ன.." என்று எழுந்து வர, "எஸ்கேப்" என ஓடியிருந்தாள்.

மறுநாள் காலை பள்ளிக்கு வந்ததும் மதி சாராவிடம் தன் சித்திக்கு நடந்தவற்றை ஒப்பிக்க, "அச்சுச்சோ.. இப்ப எப்படி இருக்காங்க உங்க சித்தி" என்று சாரா வினவினாள்.

"நல்லாயிருக்காங்க. ஆனா கை காலெல்லாம் காயமா இருக்கு" என்று மதி சோகமாக கூற, "நான் உங்க சித்திய பார்க்க வரட்டுமா?" என்று சாரா கேட்டாள். அதில் ஆச்சரியமான புன்னகையுடன் நிமிர்ந்த மதி, "நிஜமாவா? நீ வரியா?" என்று வினவ, "லக்கி கிட்ட கேட்டுட்டு சொல்றேன்" என்றாள்.

"கேட்டுட்டு சொல்லு எங்க அம்மாவே உன்னையும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவாங்க. நம்ம வண்டில ஒன்னா போலாம்" என்று மதி மொத்தமும் கற்பனை செய்து கூற, சாராவுக்கும் அதில் ஆசை பிறப்பெடுத்தது.

"சாரா.. லக்கி விடுவாங்களா? புது பிரண்ட் வேற. இதுவரை நீ எந்த பிரண்ட் வீட்டுக்கும் போனதே இல்லையே" என்று ஜீபூம்பா வினவ, 'விடுவாங்க நினைக்குறேன். ஜீபூம்பா நீயும் எனக்கு எதாச்சும் ஹெல்ப் பண்ணு லக்கிய ஓகே சொல்ல வைக்க' என்று மனதோடு அவனுக்கு கோரிக்கை விடுத்தாள்.

அதேபோல் பள்ளி முடிந்து கிளம்புகையில் இலக்கியனைப் பார்த்ததும் சாரா, "பை மதி" என்க, "சாரா கேட்டுட்டு வந்துடு. மறந்துடாத. நானும் எங்க வீட்ல எல்லார் கிட்டயும் சொல்லிடுறேன்" என்றுவிட்டா ஓடினாள்.

இலக்கியனிடம் வந்தவள் 'ஜீபூம்பா..' என்க, "நீ முதல்ல பேசு சாரா. பார்ப்போம்" என்று ஜீபு கூறியது. "ஏ பேபிடால் வாங்க" என்று அவளைத் தூக்கி அவன் வண்டியில் அமர்த்திக் கொள்ள, அமைதியாய் அமர்ந்துக் கொண்டாள்.

வண்டியை அவன் உயிர்ப்பித்ததும், "லக்கி மதி இருக்காள்ல.. அவளோட சித்திக்கு அடிபட்டுடுச்சாம்" என்று பாவம் போல் சாரா கூற, "அச்சுச்சோ.." என்றவனுக்கு அழையா விருந்தாளியாய் நிலாவின் முகம் மனதில் வந்து போனது.

'கியூராயிருக்குமா? ம்ஹும்.. வாய்ப்பில்லை. இன்னும் டைம் எடுக்கும்' என்று அவன் நினைத்துக் கொள்ள மூன்றாவது முறையாக, "லக்கீ.." என குழந்தை கத்தியிருந்தாள்.

"ஆங் சொல்லுடா குட்டி" என்று அவன் கூற, "நான் மதி வீட்டிக்கு இந்த வீக் போயிட்டு வரட்டா? பாவமில்ல அவங்க சித்தி" என்று கேட்டாள். "அதுக்கு எதுக்கு நீ போகனும்?" என்று அவன் கேட்க, "நான் போய் பார்த்துட்டு வருவேன்" என்று மழலை மாறாத குரலில் பெரிய மனுஷி போல் கூறினாள்.

"வேணாம் குட்டிமா.. நான் இந்த வீக் பக்கத்து ஊர் வரை போறேன். உன்னை கூட்டிட்டு போக வர ஆள் கிடையாது" என்று அவன் கூற, "அவங்க மம்மியே என்னையும் கூட்டிட்டு போவாங்க லக்கி" என்றாள்.

அப்படியெல்லாம் அவளை தெரியாது ஒருவருடன் அனுப்ப அவனுக்கு மனம் வருமா? "வேணாம் பாப்பா. லக்கி சொன்னா கேட்கனும். நான் ஊர்லருந்து வந்த பிறகு வேணும்னா போலாம்" என்று அவன் கூற, "அதுக்குள்ள அவங்களுக்கு கியூரே ஆயிடும்" என்றாள்.

"அப்ப போகவே வேணாம்" என்று அவன் கூற, "லக்கி ப்ளீஸ்.. நான் மதிகிட்ட வரேன்னு சொல்லிட்டேன்" என்றாள். "உன்ன யாரு என்னை கேட்காம அப்படிலாம் சொல்ல சொன்னது? என்னதிது புது பழக்கம்?" என்று அவன் அதட்ட, "லக்கி ப்ளீஸ்" என்றாள்.

“நோ மீன்ஸ் நோ. அடம்பிடிக்காத பாப்பா. அப்றம் லக்கிக்கு கோவம் வந்துடும்" என்று அவன் கூற, "லக்கி ப்ளீஸ் லக்கி. சீக்கிரம் போயிட்டு வந்துடலாம்" என்றாள். "அதான் சொல்றேனே சாரா நான் ஊருக்கு போறேன்னு. என்னதிது இப்படி அடம் பண்றது. பேட் ஹேபிட். சாரா எப்போ பேட் கேர்ளானா?" என்று அவன் கேட்க, கோபத்தோடு "சாரா ஒன்னும் பேட் கேர்ள் இல்லை" என்று செப்பினாள்.

"அப்ப அடம் பண்ண கூடாது" என்று அவன் கூற, "ப்ளீஸ் லக்கி. ஒரே ஒரு முறை போயிட்டு வந்துடலாம்" என்று அப்போதும் விடாது கேட்டாள். ஆசிரமும் வரவும் அவளை இறக்கி விட்டவன், "நான் சொல்லிட்டேன் பாப்பா. அடம் பண்ணாத. நோ மீன்ஸ் நோ தான். போக வேண்டாம். இதென்ன உனக்கு புது பழக்கம்? வெரி பேட்" என்று சற்று காட்டமாக அவன் கூற குழந்தைக்கு கண்கள் கலங்கி விட்டது.

எப்போதும் கொடுக்கும் முத்தத்தை கொடுக்காமல் அவனை கண்ணீரோடு பார்த்தவள், "போ போ உன்பேச்சு க்கா" என்றுவிட்டு விறுவிறுவென உள்ளே செல்ல, இவனுக்கு என்னவோ போலானது.

'சின்ன பிள்ளை உடனே ஏற்றுக்கொள்ள மாட்டாள். சிறிது நேரம் போனால் சரியாகிவிடுவாள்' என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு அவன் செல்ல, "போ ஜீபூம்பா. நீ ஏன் எந்த மேஜிக்கும் பண்ணலை" என கண்ணீரோடு அதனிடம் சண்டையிட்டாள்.

"தேவையில்லாம சும்மா சும்மாலாம் என் மேஜிக்க யூஸ் பண்ண முடியாது சாரா" என்று அது கூற, "போ நீயும் எனக்காக எதும் செய்ய மாட்ற. உன் பேச்சும் க்கா" என்றுவிட்டு அவள் செல்ல, ஜீபூம்பா அவள் கோபத்தில் சோகமாய் நின்றது.

ஒரு பெருமூச்சு விட்ட ஜீபூம்பா சிலமணி நேரம் யோசித்து இலக்கியனிடம் சென்றது. வேலை முடித்து வந்தவன் குளித்து முடித்து உணவருந்தி மாடியில் உள்ள தன்னறைக்குள் நுழைய, "இப்ப என்ன பண்ணி இவர சம்மதிக்க வைக்க?" என்று ஜீபூம்பா யோசித்தது.

ஆடவன் தனது அலைப்பேசியை எடுத்து நோண்ட, தனது கரங்களை நீட்டி, "ஜீ…பூம்…பா.." என்று மந்திரம் போட்டது. அவன் அலைப்பேசி தன்னிலை இழந்து அவன் பார்த்துக்கொண்டிருந்த செயிலிருந்து வெளிவந்து புகைப்படங்கள் உள்ள செயலிக்குள் சென்று, சிறுவயதில் கீழே விழுந்து அழும் சாராவை தானும் பதைபதைப்போடு தூக்கி தட்டிக் கொடுத்து சமாதானம் செய்த காணொலி ஓடியது.

அதை பார்த்ததும் அவனுக்கு சாராவின் அழுத முகம் நினைவிலாட, உடனே பிரபாவுக்கு அழைத்தான். அழைப்பை ஏற்ற பிரபா, "சொல்லுபா" என்க, "மேம் பிஸியா? டிஸ்டர்ப் பண்ணிடேனா?" என்றான்.

"அப்படிலாம் இல்லைபா. சொல்லு" என்று அவர் கூற, "சாரா என்ன பண்றா? சாப்டாளா?" என்று கேட்டான்‌. "அட ஆமா உனக்கும் உன் பேபிடாலுக்கும் என்ன சண்டை? எனக்கு அதிசயமா போச்சு. சாப்பிடவே மாட்டேன்னு அழுதுட்டே சொன்னா. ரெண்டு அதட்டலைப் போட்டு உருட்டி மிரட்டி ஊட்டிவிட்டு படுக்க வச்சேன்" என்றார்.

'அச்சோ.. என்ன இவ்வளவு ஆர்ப்பாட்டம்? எப்படியோ சாப்பிட்டுட்டா' என்று எண்ணியவன் "சாரி மேம். சின்ன சண்டை. நாளைக்கு நான் பேசிக்குறேன்" என்று அவன் கூற சிரித்தபடி "ஓகேபா" என்றார்.

மறுநாள் காலை எப்போதும் போல் தயாராகி வெளியே வந்த சாராவைப் பின்னிலிருந்தே தூக்கிக் கொண்ட இலக்கியன், அவளது கொழுகொழு கன்னத்தில் முத்தமிட, அவள் கோபத்துடன் முகம் திருப்பிக் கொண்டாள்.

"சாரா பேபி" என்று அவன் அழுத்தமாய் அழைக்க, பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். இப்பவோ அப்பவோ என கண்கள் கலங்க தயாராக இருந்தது.

அவளை வண்டியில் அமர்த்தியவன், "ஏன் பாப்பா இவ்வளவு அடம்?" என்க, "நான் எப்போவாச்சும் உன்கிட்ட அடம் பண்ணிருக்கேனா லக்கி? இப்ப தானே முதல் முறை கேக்குறேன். நீ என்னை திட்டுற. போ, பேசமாட்டேன்" என்று தன் கண்ணீரைத் துடைத்தாள்.

அவள் அழுகை அந்த ஆறடி ஆண்மகனை என்னவோ செய்தது. இருவரின் பின்னே அமர்ந்திருந்த ஜீபூம்பா சன்னமான சிரிப்போடு, "ஜீ..பூம்..பா" என்க, அவன் அலைப்பேசி ஒலித்தது.

வண்டியை ஓரம் கட்டியவன், காவல் நிலையத்திலிருந்து வந்த அழைப்பு என்பதனால் இறங்கி சென்று பேசிவிட்டு வைக்க, மீண்டும் அலைப்பேசி தடுமாறி அந்த காணொளி இயக்கப்பட்டது. கண்களில் பதைபதைப்போடு அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு அவன் சமாதானம் செய்யும் காட்சி.

அதை அணைத்துவிட்டு அவன் சாராவைப் பார்க்க, அழுது முடித்தபின்பும் விசும்பிக் கொண்டே இருந்தாள். பேசியைப் சட்டைபையில் போட்டவன் அவளிடம் வந்து "பாப்பா.." என்க, அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "சாரி லக்கி. இனிமே அடம்பிடிக்க மாட்டேன். நான் எங்கயும் போகலை" என்று அழுதுகொண்டே அவனை கட்டியணைக்க, அவன் தான் அதிர்ந்து போனான். குழந்தைகள் மனதில் தான் எத்தனை மாற்றங்கள்?

அந்த சுட்டிவாண்டின் கண்ணீர் அந்த காவலனின் சட்டையைத் தாண்டி மனதை நனைக்க, "பாப்பா அழாதடா" என்றான். "சாரி லக்கி" என்று அவள் கூற, "ஓகே லக்கியும் சாரி. இனி லக்கி பாப்பா கிட்ட கோவம்பட மாட்டேன்" என்றான்.

விசும்பிக் கொண்டிருந்தவளின் முகம் நிமிர்த்தி கண்களை துடைத்தவன், "ச்சூ.. காலைல ஸ்கூலுக்கு அழகா கிளம்பி போகனும். இப்படியா அழத முகமா போறது?" என்று கூற, விசும்பியபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் தண்ணீர் புட்டியை எடுத்துக் கொடுத்தவன் அவள் முக்ததை நன்கு துடைத்துவிட்டு, "ஓகே பாப்பா போயிட்டு வாங்க. தாத்தாவை கூட்டிட்டு போக சொல்றேன்" என்க, அவனை விழிகள் விரிய பார்த்தவள் "நிஜமாவா லக்கி?" என்றாள்.

அதில் சிரித்துக் கொண்டவன், "நிஜமா தான். இப்ப ஹேப்பியா?" என்று வினவ, "ஐ.. சோ ஹேப்பி.. லவ் யூ லக்கி" என்று அவனுக்கு முத்தமிட்டாள். இருவரையும் புன்னகையுடன் பார்த்த ஜீபூம்பா தனது மாயத்தை துவங்கிவிட்ட துள்ளலில் கண்ணடித்துக் கொண்டது.

அப்றம் நம்ம சாரா அன்ட் ஜீபூம்பா அட்ராசிடீஸ் எப்படினு சொல்லிபுட்டு போங்க செல்லகுட்டிகளா😍

 

NNK-10

Moderator
ஜீபூம்பா-06

IMG_20231229_191618.jpg

அந்த ஞாயிற்றுக்கிழமை எப்போதும் போல் அழகுபட பாவாடை சட்டை உடுத்தி வந்தவளை அழைத்துச் செல்ல சக்கரவர்த்தி வந்திருந்தார். "தாத்தா" என்று அவள் அவரிடம் ஓடிவர, "தங்கபட்டு" என்று அவளைத் தூக்கிக் கொண்டார்.

மற்ற பிள்ளைகளும் சக்கரவர்த்தியிடம் வர, அனைவரையும் முகம் மலர கண்டு நலம் விசாரித்து பேசினார்.

"தௌசன்ட் வாட்ஸ் பல்ப் மாதிரி ஏன் இப்படி ஈஈஈனு முகத்தை வச்சிருக்க?" என்று ஜீபூம்பா வினவ, "ஆமா பாட்டு கிளாஸ் போயிட்டு அப்படியே மதி வீட்டுக்குப் போகப் போறேன்ல" என்று கிசுகிசுத்தாள்.

அனைவரிடமும் விடைபெற்ற சக்கரவர்த்தி, குழந்தையைத் தூக்கிக் கொண்டு வண்டியில் புறப்பட்டார். பாட்டு வகுப்பில் அவளை இறக்கிவிட்டு முத்தமிட்டவர், "ஒருமணி நேரம் தானேடா" என்க, "அப்பா.." என்ற குரல் கேட்டது.

அவர் திரும்பிப் பார்க்க தனது குழந்தை மதியுடன் ஆதி நின்றிருந்தாள். அவர் அவர்களை யாரென்று அறியாத போதும் புன்னகையுடன் பார்க்க, "தாத்தா.. இவதான் மதி. இவங்க மதி அம்மா" என்று சாரா அறிமுகம் செய்தாள்.

"வணக்கம் ம்மா" என்று அவர் கூற, "வணக்கம் ப்பா. பாட்டு கிளாஸ் முடிஞ்சதும் நானே பாப்பாவை கூட்டிட்டு போறேன் ப்பா. திரும்ப வேணும்னா நீங்க கூப்பிட வாங்களேன்" என்று ஆதி கேட்டாள்.

அவள் அப்படி கேட்க மறுக்க முடியாத போதும் இலக்கியன் கண்டிப்பாக தானே கூட்டிச் சென்று விட்டுவரும்படி தான் கூறியிருந்ததால், "இருக்கட்டும் ம்மா. நீங்க முன்னாடி வண்டில போங்க நான் பின்னாடியே பாப்பாவ கூட்டிட்டு வரேன். திரும்ப கூப்பிட வர வழி தெரியனுமே" என்றார்.

"சரிங்க ப்பா" என்று ஆதியும் அவரை மேலும் கேட்டு சங்கடப்படுத்தாது ஒப்புக்கொள்ள, இரு பிள்ளைகளும் பேசியபடி உள்ளே சென்றனர். பாட்டு வகுப்பு முடிந்தவுடன் பெரியவர் கூறியபடி சாராவைக் கூட்டிக் கொண்டு அவள் வீட்டில் விட்டவர் ஒருமணி நேரம் கழித்து வந்து கூட்டிச் செல்வேன் என்றும் கூறிவிட்டுச் சென்றார்.

உள்ளே நுழைந்த சாராவின் கரங்களை பிடித்துக் கொண்ட மதி, "அப்பா.. அப்பத்தா சாரா வந்துட்டா" என்று கத்த, சமையலறையிலிருந்து அவளது அப்பத்தாவும் அறையிலிருந்து அவளது அப்பாவும் வந்தனர்.

புது நபர்கள் புதுவிடம் கொடுத்த மிரட்சியுடன் அவள் விழிக்க, அதில் புன்னகைத்த லட்சுமி, சாராவின் கொழுகொழு கன்னம் வருடி, "பாப்பா பேரென்ன?" என்றார். அவர் ஸ்பரிசத்தில் இருந்த அன்பும் கனிவும் அவளுக்கு ஒருவித சிலிர்ப்பை கொடுக்க, அதையெல்லாம் புரிந்துக்கொள்ளும் பக்குவமும் வயதும் தான் அவளுக்கில்லாம் போனது.

"ஏ சாரா.. வாய திறந்து பேசு" என்ற ஜீபூம்பாவின் குரல் கேட்டவுடன் தான் அவளுக்கு தன்னுடன் ஜீபூம்பா துணைக்கு உள்ளது என்ற ஆசுவாசம் எழுந்தது. "சாரா, பாட்டி" என்று அவள் கூற, "நல்ல பெயர்" என்றார்.

"என் லக்கி வச்ச பேரு" என்று அவள் கூடுதல் தகவல் கொடுக்க, "யாரு உங்க லக்கி?" என்று கார்த்தி வினவியபடி அவளருகே வந்து அமர்ந்தான். சாரா மதியைத் திரும்பிப் பார்க்க, "எங்க டாடி" என்று கார்த்தியை கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.

அதில் புன்னகையாய் தன் மகள் தலைகோதிய கார்த்தி சாராவை நோக்க, "லக்கி ஊர்ல இல்லை. அதான் தாத்தா கூட்டிட்டு வந்து விட்டாங்க" என்று கார்த்தி கேட்ட கேள்வியை விடுத்து அவளாக ஒரு தகவலைக் கொடுத்தாள்.

அதில் புன்னகைத்த கார்த்தி மதியை நோக்க, "சித்திய பார்க்க போவோமா?" என்று கேட்டாள். "உங்க சித்தி இங்க இல்லையா?" என்று சாரா வினவ, ஒரே காம்பௌண்டிற்குள் இருக்கும் இன்னொரு வீட்டை குறிப்பிட்டு கூறியவள், "சித்தியும் அம்மம்மாவும் அங்க இருக்காஙக்" என்று கூறினாள்.

அனைவரும் ஆரண்ய நிலாவைக் காண அங்கு வர, தன் அம்மம்மாவிடம் ஓடிய மதி, "அம்மம்மா.. இவ தான் சாரா" என்று அறிமுகம் செய்தாள். "அட நீங்க தான் அந்த சாரா குட்டியா. வாங்க தங்கம்" என்று சுந்தரி சின்னவளை வரவேற்க, 'என்ன ஜீபூம்பா இங்க எல்லாமே வித்தியாசமா இருக்கு' என்று மனதோடு கூறிக் கொண்டாள்.

'என்ன வித்தியாசம்?' என்று ஜீபூம்பா கேட்க, சிறியவளுக்கு அதை சொல்லத் தெரியவில்லை. ஆசிரமத்தில் எல்லோரம் ஓரே வீட்டில் இருப்பது, அதிக குளியலறை வசதிகள் இருந்தாலும் அங்குள்ள பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு காலை வேகமே எழுந்தால் தான் குளியலறை பிடிக்க வசதிபடும் என்று சண்டையிடுவது, சில பெரிய பெண்களுக்குள் எழும் மனஸ்தாபம், பிறந்தது முதல் அங்கேயே இருந்தாலும் அந்த இடம் அவர்களுக்கான நிரந்தர இடம் இல்லை என்ற உணர்வு என அனைத்தையும் பார்த்து வளர்ந்தவளுக்கு நிலையான வீடு, சொந்தம் என்று இருப்பவர்களைப் பார்க்க வித்தியாசமாகவே இருந்தது.

சாராவின் அமைதியை கண்ட பெரியவர்கள் மதியைப் பார்த்து, "சித்தி ரூம்ல தான் இருக்கா. கூட்டிட்டு போ. நான் உங்களுக்கு சாப்பிட எதும் கொண்டு வரேன்" என்று கூற "ஓகே அம்மம்மா" என்றவள் சாராவை இழுத்துக் கொண்டு "சித்தி.." எனக் கதவை தட்டினாள்.

"வாங்க குட்டிமா" என்று ஆரண்யாவின் குரல் கேட்க, சாராவிற்கு அந்த குரல் மீண்டும் ஒரு சிலிர்ப்பை கொடுத்த நொடி "ஜீ..பூம்..பா.." என்று ஜீபூம்பா மந்திரமிட்டது.

மூவரும் உள்ளே செல்ல, ஸ்லீவ் டீ ஷர்ட் மற்றும் காட்டன் பாவாடை அணிந்து கட்டிலில் சாய்ந்தமர்ந்து கையில் புத்தகத்துடன் புன்னகையாய் அவர்களை நோக்கினாள் ஆரண்ய நிலா.

சாராவைக் கண்டு மேலும் புன்னகைத்த நிலா, "ஏ தங்கபட்டு.. இவங்க தான் உன் பிரண்டா" என்று வினவ, "ஆமா சித்தி. இவ தான் சாரா. நான் சொன்னேன்ல உங்கள பார்க்க வருவானு" என்று கூறினாள். இருவரும் அவளருகே அமர, "ஹாய் சாரா" என்று நிலாவே பேச்சைக் கொடுக்க, "ஹாய்.." என்ற சாரா "உங்க பேர் என்ன?" என்று வினவினாள்.

"என் பெயர் ஆரண்ய நிலா" என்று அவள் புன்னகையுடன் கூற, "சூப்பரா இருக்கு. நான் உங்கள எப்படி கூப்பிட?" என்று கேட்டாள். அத்தனை நேரம் அனைவரிடமும் பேசாமல் திருதிருத்த தோழி தன் சித்தியிடம் மட்டும் சிரித்து பேசுவதில், "சித்தி இவ்வளவு நேரம் சாரா பேசவே இல்லை. நீங்க ஏதோ மேஜிக் பண்ணிடீங்கனு நினைக்குறேன். உங்ககிட்ட சூப்பரா பேசுறா" என்று கூற, ஜீபூம்பா சிரித்துக் கொண்டது.

தானும் சிரித்துக் கொண்ட நிலா, "உனக்கு எப்படி கூப்பிட தோனுது?" என்று வினவ, தன் நாடியில் விரல் தட்டி யோசித்தவள், "ஆரூனு கூப்பிடவா?" என்றாள். தாராளமாய் புன்னகைத்த நிலா, "அடடே.. இதுவர யாருமே என்னை இப்படி கூப்பிட்டதே இல்லை. நீ என்னை ஆருனே கூப்பிடு" என்று கூறி தன் கரம் நீட்டி, "பிரெண்ட்ஸ்" என்க தன் கரம் நீட்டிய சாரா அவள் கரத்தில் உள்ள காயங்களைப் பார்த்து, "அச்சோ ஆரு கையெல்லாம் காயம்" என்றாள்.

அதில் லேசான புன்னகையுடன் "ஆமாடா" என்று அவள் கூற, "சித்தி சோ ஸ்டிராங்" என்று மதி கூறினாள். அப்போது அங்கு உள்ளே வந்த சுந்தரி மற்றும் லட்சு அவர்களுக்கு திண்பண்டங்களைக் கொடுக்க அதையே பார்த்துக் கொண்டிருந்தால் சாரா.

"என்னடா பாக்குற? உனக்கு சிப்ஸ் பிடிக்காதா?" என்று சுந்தரி கேட்க, "பிடிக்கும் பாட்டி. ஆனா சாப்பிட்டதில்ல" என்று சாரா கூறினாள். "ஏன்? ஒத்துக்காதா?" என்று நிலா கேட்க, "இல்ல இதெல்லாம் ஹோம்ல வாங்கி வைக்க மாட்டாங்க. எல்லாருக்கும் கொடுக்க முடியாதுல" என்று கூறினாள்.

அப்போதே ஆதியும் கார்த்திக்கும் உள்ளே வர, "ஹோமா?" என்று லட்சு கேட்டார். "ஆமா" என்று சாரா கூற, "அப்ப லக்கி யாரு?" என்று கார்திக் கேட்டான். "லக்கி தான் எனக்கு எல்லாமே" என்று அவள் அவன் சொல்லிக் கொடுத்ததையே கூற, அனைவரும் அவளை குழப்பமாய் பார்த்தனர்.

"உனக்கு மம்மி டாடி கிடையாதா?" என்று மதி வினவ, "மதி என்னதிது? இப்படிலாம் கேட்க கூடாது" என்று நிலா கடிந்தாள். அனைவரும் சாராவைப் பார்க்க, "நீ எந்த ஹோம்ல இருக்கடா?" என்று சுந்தரி பரிவாய் கேட்டார். "இங்க பக்கத்துல ஸ்வீட் ப்ரின்ஸஸ் ஹோம் இருக்குல்ல? அங்க தான் இருக்கேன். லக்கி எங்க ஹோம்கு நிறையா ஹெல்ப் பண்ணுவாங்க. என்னை லக்கிக்கு ரொம்ப பிடிக்கும். லக்கி தான் எனக்கு நேம் கூட வச்சாங்க" என்று சாரா கூற, "அப்ப பிரபா ம்மா?" என்று மதி கேட்டாள்.

"எங்க ஹோம் பிரபா அம்மாவோடது தான்" என்று சாரா கூற "அப்ப தாத்தா பாட்டி?" என்று அடுத்த கேள்வியை மதி கேட்டாள். "அச்சோ.. பிரபா ம்மா ஹோம் வச்சிருக்குறவங்க. அக்கா தங்கச்சிலாம் ஹோம்ல கூட இருக்குறவங்க. லக்கியோட மாமா அத்தை தான் என் தாத்தா பாட்டி. லக்கி தான் எனக்கு எல்லாமே" என்று சாரா கூற, பின்பே அவளுக்கு யாருமில்லை அவள் ஆசிரமத்தில் வளரும் பெண் என்றும் அவளது லக்கி அந்த ஆசரமத்திற்கு உதவுபவன் என்றும் புரிந்தது.

ஒரு கணமான அமைதி. அந்த அமைதியான நிலையில் அனைவரையும் பார்த்த ஜீபூம்பா களுக்கிச் சிரித்துக் கொள்ள, ஜீபூம்பாவை பார்த்த சாரா 'எதுக்கு லூசு மாதிரி சிரிக்குற?' என்று கேட்டாள். 'ஒன்னுமில்ல' என்று அது கூற, மற்றவர்களைத் திரும்பிப் பார்த்தாள்.

அனைவரும் தங்களை சமன் செய்துக் கொண்டு, "சாப்பிடுடா" என்க, அவளும் புன்னகைத்துக் கொண்டு "ஆரூக்கு?" என்று நிலாவைக் காட்டி கேட்டாள். அதில் சிரித்த நிலா, "நான் அப்பறம் சாப்பிட்டுக்குறேன்டா. நீ சாப்பிடு" என்று கூற, சிரித்தபடி தலையாட்டினாள்.

சில நிமிடங்களில் சக்கரவர்த்தி வந்திட அவரையும் உள்ளே அழைத்து பேசிவிட்டு சாராவை அனுப்பி வைத்தனர். தங்கள் வீட்டுக்கு கூட்டி வந்த சக்கரவர்த்தி மனைவி சாராவுடன் சிரித்து பேசி விளையாடுவதை புன்னகையுடன் பார்க்க இரவு இலக்கியன் வந்து சேர்ந்தான்.

விளையாடி முடித்து உண்ட களைப்பில் சாரா தூங்கியிருக்க, பிரபாவிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அழைப்பை ஏற்றவன், "மேம் சாரி. நான் இப்பதான் வந்தேன்" என்க, "இருக்கட்டும் ப்பா. சாரா இன்னும் வரலையேனு ஃபோன் பண்ணேன்" என்று கூறினார்.

"மேம்.." என்று தயங்கியபடி ராதாவின் மடியில் உறங்கும் மழலையைப் பார்த்தவன், "அவ தூங்கிட்டா. நாளைக்கு காலைல கூட்டிட்டு வந்திடவா?" என்று கேட்க, சன்னமான சிரிப்போடு "சரிப்பா கண்ணா. பார்த்துக்கோ" என்றார்.

சரியென அழைப்பை வைத்தவனுக்கு சக்கரவர்த்தி உணவிட, உண்டு முடித்தவன் வந்து சாராவை தூக்கிக் கொண்டான். "எங்கப்பா கொண்டு போற?" என்று ராதா வினவ, "என் ரூமுக்கு அத்தை" என்றான்.

"நாங்களே படுக்க வச்சுக்குறோமேபா" என்று சக்கரவர்த்தி கூற, "ம்ஹும்.. காலைல இருந்து பாப்பா கூட இல்லவே இல்லை. நான் தான் வச்சுப்பேன்" என்றான். 'லக்கி தான் எனக்கு எல்லாமே' என தூக்கத்தில் பிதற்றியபடி சாரா அவன் கழுத்தில் முகம் புதைக்கவும் சிலிர்த்துப் போனவன் முகத்தில் கர்வமாய் ஒரு புன்னகை.

தந்தைகளுக்கேயான கர்வம் அதில் தென்பட்டது… "பார்த்தீங்களா என் பேபிடால?" எனப் பெருமையாக கூறிக் கொண்டு அவன் செல்ல, புன்னகையுடன் அவனைப் பார்த்த ராதா, "கண்டிப்பா அந்த குழந்தைய அவன் தத்தெடுத்துடுவான்" என்று கூறியதும், "ம்ஹீம்.. அவ தான் அவனை தத்தெடுத்துட்டா" என்றார்.


அப்றம் நம்ம சாரா அன்ட் ஜீபூம்பா அட்ராசிடீஸ் எப்படினு சொல்லிபுட்டு போங்க செல்லகுட்டிகளா😍

 

NNK-10

Moderator
ஜீபூம்பா-7

லக்கியை கட்டிக் கொண்டு குழந்தையவள் நன்கு தூங்கிக் கொண்டிருக்க, முழிப்பு வந்த பிறகும் குழந்தையவள் தன்னைக் கட்டிக் கொண்டு வாயிலிருந்து எச்சில் வடிய தூங்கும் அழகை புன்னகையுடன் பார்த்தான்.

நேரம் ஆவதை உணர்ந்த இலக்கியன், "பாப்பா.." என்று அவளை எழுப்ப முயல, அவனை இன்னும் கட்டிக் கொண்டு வாகாய் தூங்கினாள். அதில் மீண்டும் புன்னகையுடன் அவளை ரசித்தவன், "பாப்பா.. ஸ்கூல் போகனும்ல. எழுந்திரிடா" என்று எழுப்ப, பிரண்டு பிரண்டு படுத்தவள் அவனது தொடர் அழைப்பில், "அச்சோ சாரி சுபிக்கா" என்று பதறி எழுந்தாள்.

அதில் சிரித்தபடி எழுந்தவன், "பாப்பா" என்க, கண்களை கசக்கிக் கொண்டு, "லக்கி" என்றாள். "பேபிடால் நீ லக்கி கூட இருக்க. ஹோம்ல இல்லை" என்று கூறியபடி தனது சட்டியில் அவள் வாய் துடைக்க, அவனை கட்டிக் கொண்டு, "தூக்கம் வருது லக்கி" என்றாள்.

"ஸ்கூல் போகனும் பேபிடால்" என்று அவளைக் கொஞ்சி கெஞ்சி அழைத்து குளிப்பாட்டி தன்னிடம் உள்ள அவளது உடை ஒன்றை அணிவித்து, "ஹோம் போய் யுனிபார்ம் மாத்திக்கலாம்டா" என்றான்.

வேகமாய் தலையாட்டியவளை கீழே அனுப்பி வைத்தவன் தானும் தயாராகி வர, கீழே ராதா அவளுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தார். காவல் நிலையத்திலிருந்து இலக்கியனுக்கு அழைப்பு வர, அழைப்பை ஏற்றவன், "சொல்லுங்க செந்தில்" என்றான்.

"சார்.. இ..இங்க ஒரு கொலை கேஸ் சார்" என்று அவன் கூற, "வாட்? யாரு?" என்றான். "பெரிய இடம் போல சார்" என்று அவன் கூற, "ஓகே நான் வரேன்" என்றவன், "அத்தை மாமா எங்க?" என்றான். "வாகிங் போயிருக்காரு கண்ணா" என்று அவர் கூற, "பாப்பாவ ஹோம் கூட்டிட்டு போய் யுனிபார்ம் மாத்தினதும் ஸ்கூல்ல விட சொல்லிடுங்க. ஒரு வேலை.. நான் உடனே கிளம்பனும்" என்றான்.

"சரிப்பா" என்று அவர் கூற, குழந்தையைத் தூக்கி அவள் முக்குடன் தன் மூக்குரசியவன், "டாட்டா பேபிடால்" என்க, "லக்கி சாப்பிடலை?" என்றாள். "ஒரு வேலைடா பாப்பா. லக்கி சீக்கிரம் சாப்பிட ட்ரை பண்றேன். பாய்" என்று முத்தமிட்டுச் சென்றான்.

விரைந்து தனது இரும்புக் குதிரையை கிளப்பிக் கொண்டு வந்தவனை செந்தில் தான் வரவேற்றான். விறுவிறுவென உள்ளே நுழைந்தவன், "ஸ்பாட் எங்க? ஆள் போயாச்சா? ஃபாரன்ஸிக் ஆட்கள் ஸ்பாடுக்கு போயாச்சா? இறந்தது யாரு?" என்று கேள்விகளை அடுக்க, "சார்.. எ..ஏழு வயசு குழந்தை சார்" என செந்தில் கூறினார்.
"வாட்?" என இலக்கியன் அதிர்ந்து திரும்ப, "ஆமா சார்" என்று கூறினான்.

உடனே செந்திலைக் கூட்டிக்கொண்டு ஜீப்பில் கொலை நடந்த இடத்திற்கு அவன் பறந்து வர, அங்கு சுற்றி தடுப்பு கயிறு போடப்பட்டு உடற்கூர் ஆய்வர்கள் தங்கள் பணியை செய்துக் கொண்டிருந்தனர். அப்பகுதியின் அரசியல் தலைகட்டைச் சேர்ந்தவர் வீட்டுப் பிள்ளையது. அக்குழந்தையின் தாயர் அழுது மயங்கியதால் அவருக்கு ஒருபுறம் சிகிச்சை நடக்க சிலவினாடிகளிலேயே அவற்றை நோட்டம் விட்டவன் சடலத்திடம் வந்தான்.

ஆடைகளற்று உடலெங்கும் கீறலுடன் நெற்றியில் அடிபட்டு மண்டை ஓடே வெளியே தெரியும் படி இறந்துகிடந்த குழந்தையைப் பார்த்த நொடி அந்த காவலனே அதிர்ந்து தான் போனான். அடிவயிற்றை பிரட்டிக் கொண்டு வருவதைப் போல் உணர்ந்தவன் செந்திலின் தோளை அழுந்தப் பற்ற, "சார்" என்றபடி செந்தில் அவனை நோக்கினான்.

சற்றே ஓரம் ஒதுங்கியவனுக்கு செந்தில் வண்டியிலிருந்து நீர் எடுத்துக் கொண்டு வந்து தர, அதைப் பருகி தன்னை நிலைப்படுத்தியவன் சுற்றியுள்ள கூட்டத்தைப் பார்த்து அவ்விடம் விரைந்து அங்குள்ள உடற்கூறு ஆய்வாலரான தினேஷிடம் சென்றான்.

"தினேஷ்.. முதல்ல குழந்தைய கவர்பண்ணி ஆஸ்பிடல் அனுப்புங்க. மீடியாலாம் வந்துடுச்சு" என்றவன் குரலில் அத்தனை கோபம் இருக்க, "சாரிடா" என்ற தினேஷ் உடனே அதற்கான வேலையில் ஈடுபட்டான்.

இடத்தில் ஆய்வுகள் முடியவும், "எனி எவிடென்ஸ்?" என்று இலக்கியன் வினவ, "சுத்தியுள்ள பிலட் சாம்பிள்ஸ் அன்ட் பிங்கர் பிரிண்ட்ஸ் எடுத்திருக்கோம். டெஸ்ட் பண்ணா தான் தெரியும் இலக்கியா" என்று கூறினான்.

"ம்ம்.." என்றவன் தயங்கியபடி, "செ..செக்ஷுவல் அடேக்கா இருக்குமா?" என்று வினவ, "பார்த்தா அப்படிதான் தெரியுது மச்சி" என்று தினேஷ் கூறினான். "எப்பிட்றா இவ்வளவு சின்ன குழந்தை?" என்று வினவ, "நீயே இப்படி கேட்குறியேடா. அஞ்சு வயசு குழந்தைல இருந்து அம்பது வயது முதியவங்க வரை நடக்குது" என்றவன் ஒரு பெருமூச்சுடன், "டெஸ்ட் பார்த்துட்டு ரிபோர்ட்ஸ் தரேன்" என்றுவிட்டுச் சென்றான்‌.

"செந்தில் பாப்.. பாடிய யாரு முதல்ல பார்த்தது?" என்று இலக்கியன் வினவ, "சார் காலைல தண்ணி பாய்ச்ச நிலத்தோட சொந்தகாரர் வந்திருக்காரு. அவரு ரோட்டோரமா ஏதோ தெரியுதேனு வந்து பாத்து பயந்துபோயிட்டாரு. ஆள் பெருசா நடமாடாத ரோடுனு இங்க போட்டிருப்பாங்க போல சார். அவர் இன்பார்ம் பண்ண உடனே சுரேஷ் சாரோட ரெண்டு கான்ஸ்டபுள அனுப்பிட்டு உங்களுக்கு கால் பண்ணேன். அப்படியே பாரன்சிக்கும் சொன்னேன். நீங்க வர்ற கொஞ்சம் நேரம் முன்ன அவங்க வந்துட்டாங்க சார்" என்று செந்தில் அத்தனை தகவல்களையும் கூறினான்.

சாலைக்கு இருபுறமும் இருந்த விவசாய நிலத்தினைக் கண்டவன், அதை நோக்கி செல்ல, நிலத்தில் நின்று கொண்டிருந்த சிலர் அவனையே குறுகுறுவெனப் பார்த்தனர். ஆடவன் வரப்பில் காலெடுத்து வைக்க வந்து பின் அங்குள்ளோரைப் பார்த்தான்.

என்ன நினைத்தானோ தனது பூட்ஸை கலைந்து வெறும்காலில் அவன் உள்ளிறங்க, அவர்கள் முகத்தில் ஒரு ஆசுவாசம். நிலத்தை நோட்டம் விட்டபடி வந்தவன் காலில் ஏதோ சுருக்கென்று குத்த "ஸ்ஸ்.." எனக் கீழே குனிந்துப் பார்த்தான்.

ஒற்றைக் காலை மடக்கி அமர்ந்தவன் அதெனன்வென்று நோக்க, கழுகு முகம் கொண்ட பிரேஸ்லெட் இருந்தது. சுற்றி முற்றி பார்த்தவன், தனது கைகுட்டையை எடுத்துக் கொண்டு அதனை கைரேகை படாதபடி எடுத்து தன் பாக்கெட்டிற்குள் வைத்துக்கொள்ள, அங்கு அருகே இருந்த வயலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் யாரோ அவசரமாக ஓடிச் சென்றிருக்கும் அடயாலமாய் பயிர்கள் சேதமடைந்திருந்தது.

அதையும் தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டவன் மேலும் சிலதூரம் சோதனை செய்துவிட்டு வர, செந்தில் அவனிடம் வந்தான். தனது காலுறையை அணிந்தபடி, "இந்த நிலத்தோட சொந்தகாரரைக் கூப்பிடுங்க" என்று இலக்கியன் கூற, "இதோ சார்" என சென்று அவரைக் கையோடு கூட்டி வந்தான்.

அந்த பெரியவர் பயந்து அதிர்ந்த தோரனையிலேயே வர, நடந்த சம்பவத்திலிருந்து அவரின்னும் வெளி வராததை இலக்கியனால் புரிந்துகொள்ள முடிந்தது. இருந்தும் தனது கடமையைக் கருத்தில் கொண்டு, "எப்ப பார்த்தீங்க?" என்று அவன் வினவ, "காலைல ஒரு அஞ்சு நாப்பதுக்கே நிலத்து பக்கம் வந்தேன் தம்(பி).. சார். அப்போ லேசா இருட்டா தான் இருந்தது. எனக்கு அதனால எதும் தெரியலை. திரும்ப ஏழு மணி மேல வந்தப்போ தான் என்னவோ கடக்குதேனு வந்தேன். இது பெரிய ரோட்டோட இணைக்குற குறுக்கு வழிப்பாதை. அதனால எட்டு மணி மேல பள்ளிகூடம் போகுற பிள்ளைங்க தான் இந்த பக்கம் வருவாங்க. அதனால யாரா இருக்குமோ பிள்ளைக எதும் விழுந்து கிடக்குதானு பாக்க வந்தேன் சார். பார்த்தா அ..அந்த பிள்ள. என் ஈரகொலையே நடுங்கிபோச்சு சார். பயந்து போய் அப்படியே உக்காந்துட்டேன். மூச்செல்லாம் முட்டுறபோல ஆகவும் தான் போலீசுக்கு சொல்லனும்னு அழைச்சேன்" என்று கூறினார்.

அனைத்தையும் கேட்டவன், "இந்த நிலம் எல்லாம் உங்களோடதா?" என்று வினவ, "ஆமா சார். எங்க அப்பாரு காலத்துலருந்து நாங்க தான் வெள்ளாம பண்றோம்" என்று எதிலிருந்து எதுவரை தன் நிலம் என்பதையும் கூறினார். "நைட்டு வேற யாரும் புது ஆளுங்க வந்து போனதா பார்த்தீங்களா?" என்று அவன் வினவ, "இல்ல சார். அப்படி யாரையும் பாக்கலைங்க. நேத்து நைட்டு கூட வந்து மழபெய்யுற போல இருக்கேனு வரப்பு வெட்டிவிட்டு போவோம்னு வந்துட்டு போனேங்க சார். ஒன்பது மணி போல இருக்கும்" என்று தடுமாற்றமாய் கூறினார்.

"ம்ம்.. நீங்க போகலாம். எதும் விசாரணைனா கூட ஒத்துழைங்க" என்று அவன் கூற, "சரிங்க சார்" என்றுவிட்டுச் சென்றார். "குழந்தையோட பேரென்ட்ஸ்?" என்று அவன் வினவ, "ஆஸ்பிடல் போயிருக்காங்க சார்" என்று செந்தில் கூறினான்.

செந்திலைக் கூட்டிக் கொண்டு மருத்துவமனை வந்தவன் அக்குழந்தையின் குடும்பத்தாரிடம் சென்றான். அப்பகுதியின் முன்னால் அமைச்சராக இருந்தவர் ராமலிங்கம். அவரது மனைவி யசோதா மற்றும் அவர்களது ஒரே மகன் சித்தார்த் மருமகள் சித்ரா அங்கு சோகமே உருவாக இருந்தனர்.

சித்தார்த் மற்றும் சித்ராவின் ஏழு வயதான மூத்த பெண் குழந்தை மதுமிதா தான் தற்போது இறந்தவள். அனைத்தையும் வண்டியில் வரும்போதே கேட்டு தெரிந்துக் கொண்டிருந்தான்.

அவர்களிடம் வந்த இலக்கியன் அழுது கரைந்து கொண்டிருக்கும் சித்ராவைப் பார்த்துவிட்டு ராமலிங்கத்திடம், "நான் எஸ்.ஐ.இலக்கியன் சார். மதுமிதா கேஸ் நான் தான் நடத்த போறேன். உங்ககிட்ட சில விஷயம் கேட்டு தெரிஞ்சுக்கனும்" என்று தன் கைகடிகாரத்தைப் பார்த்துக் கொண்டவன், "பாடியை கொடுக்க இன்னும் நேரம் இருக்கு. இப்பவே வந்து விசாரணை செய்றதுக்கு மன்னிக்கனும். ஆனா நீங்க சொல்றதை வச்சுதான் என்னால ஒரு அனுமானத்திற்கு வரமுடியும்" என்றான்.

சித்ரா பெருங்குரலெடுத்து அழுதபடி தன் மாமியாரை அணைத்துக் கொள்ள, ராமலிங்கம் வருத்தத்துடன் "என்ன சார் கேட்கனும்?" என்றார். அவர் தனக்கு ஒத்துழைப்பதில் நிம்மதி கொண்டவன், "நன்றி சார். பாப்பா காணமா போனாங்களா?" என்று வினவ, "இல்லை சார்" என்றார்.

"அப்பறம் எப்படி?" என்றவன் சித்தார்த்தை நோக்க, "தெரியலை சார். நைட்டு எங்ககூட தான் இருந்தா. ராத்திரி ஒரு ஃபோன் கால் வந்தது. பன்னிரெண்டு மணி போல இருக்கும். அப்ப எழுந்து பேசும்போது கூட எங்க பக்கத்துல தான் இருந்தா. காலைல எழுந்து பார்த்தா காணும். கீழ அவ தாத்தா ரூமுக்கு எப்பவும் காலைல எழுந்ததும் போயிடுவா. அப்படி போயிருப்பானு நினைச்சு விட்டோம். நாங்க ரெடியாகி கீழ வந்து அம்மாகிட்ட கேட்டா அவ வரலையேனு சொல்றாங்க. அதுக்குள்ள உங்க கான்ஸ்டபுள் ஃபோன் பண்ணி கூப்பிட்டாரு. வந்து பார்த்தா" என்றவர் அதற்குமேல் கூற முடியாமல் கேவி அழுதான்.

"அய்யோ.. என் பொண்ணுக்கு என்ன சார் ஆச்சு? அ..அவள என்ன பண்ணாங்களோ தெரியலையே" என்று சித்ரா அழ, "சார்.. என் பேத்திய இந்த நிலைமைக்கு ஆளாக்கினவன சும்மா விடாதீங்க சார்" என்று அந்த பெரியவரும் அவன் கைபிடித்து கெஞ்சினார்.


அப்றம் நம்ம சாரா அன்ட் ஜீபூம்பா அட்ராசிடீஸ் எப்படினு சொல்லிபுட்டு போங்க செல்லகுட்டிகளா😍

 

NNK-10

Moderator
ஜீபூம்பா-8

"என்னடா சொல்ற?" என்று இலக்கியன் அதிர, "ஆமா மச்சி. குழந்தைக்கு எந்த செக்ஷுவல் அஃபென்சும் நடக்கலை" என்று தினேஷ் கூறினான். "அப்றம் அந்த காயம்?" என்று இலக்கியன் வினவ, "கத்தியால கீறின காயங்கள்டா. குழந்தையோட குரல் நாலங்கள் ரொம்ப கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. இட் மீன்ஸ் குழந்தை ரொம்ப நேரம் கத்தி அழுதிருக்கா. அப்றம் கனமான இரும்பு பொருள் வைத்து குழந்தையோட தலையில் அடிக்கப்பட்டிருக்கு. தோல் பகுதியெல்லாம் கிழிச்சு ஸ்கலை கிராக் பண்ணிருக்கு. அப்றம் உடம்புல எந்த கைரேகையும் இல்லை" என்று தினேஷ் கூறினான்.

"இட் சீம்ஸ்..?" என்று இலக்கியன் நிறுத்த, "சைக்கோ கில்லிங்கா கூட இருக்கலாம்" என்று தினேஷ் பதிலளித்தான். சரியென அழைப்பைத் துண்டித்தவன் அப்படியே நிற்க, சாரா ஹாரனை அலறவிட்டு "லக்கீ.." என்று கத்தினாள்.

அதில் திடுக்கிட்டுத் திரும்பியவன், "பாப்பா.." என்க, "எவ்வளவு நேரமா கூப்பிடுறேன் லக்கி" என்றாள். சாராவைப் பார்த்ததும் அந்த குழந்தையின் முகம் அவன் நினைவடுக்கில் வந்துபோக ஒரு நொடி பதறித்தான் போனான்.

"என்ன பாப்பா" என்று அவன் வினவ, "லேட்டாச்சு லக்கி. எவ்வளவு நேரம் ஃபோன்?" என்று புருவம் உயர்த்தி மிரட்டும் தோரணையில் அவள் கேட்டாள். அதில் மெல்ல புன்னகைத்தவன் வண்டியில் அமர்ந்து அதை உயிர்ப்பிக்க, "ஜீ..பூம்..பா" என்று ஜீபூம்பா தனது மந்திரத்தைப் போட்டது.

"லக்கி.. மதியோட சித்தி சோ ஸ்வீட். அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்காம். அவங்கள நான் ஆரு தான் சொல்லுவேன். நீ கண்டிப்பா ஒருநாள் அவங்கள மீட் பண்ணனும் லக்கி" என்று சாரா கூற, தன் எண்ணதினோடு அவன் "ம்ம்" மட்டும் கொட்டினான்.

'அடடே.. இந்த போலீஸ் ரொம்ப தீவிரமா இருக்கானே.. நம்ம ஜீபூம்பா வேலை செய்ய மாட்டேங்குது.. ஹ்ம்.. சரி முதல்ல இந்த வாண்டு கிட்ட நம்ம‌ வேலைய முடிப்போம்' என்று ஜீபூம்பா நினைத்துக் கொள்ள சாராவை ஹோமில் விட்டுவிட்டு இலா புறப்பட்டான்.

எப்போதும் போல் சென்று உடைமாற்றி வந்த சாரா மாடிக்குச் சென்று தன் புத்தகத்துடன் அமர, "ஏ சாரா" என்று ஜீபூம்பா அழைத்தது. "என்ன ஜீபூ" என்று சாரா வினவ, "உனக்கு இலக்கியனை பிடிக்கும் தானே?" என்று கேட்டது.

"இதென்ன கேள்வி ஜீபூ?" என்று சாரா வினவ, "உன் லக்கியே உன்னை தத்தெடுத்துகிட்டா உனக்கு ஹேப்பியா?" என்று ஜீபூம்பா வினவியதும் அவள் விழிகள் அகல விரிய அதைப் பார்த்தாள்.

தத்தெடுப்பதென்றால் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வு ஆசரமத்தில் வளர்ந்தவளுக்குச் சொல்லியா தரவேண்டும்? ஆனால் இதுனால் வரை சாரா அப்படியெல்லாம் யோசித்ததே இல்லை.

லக்கி தான் தனக்கு எல்லாம் என்பது வரை மட்டுமே இருந்த சாரா லக்கி தன்னை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் யோசித்ததே இல்லை. ஆனால் தத்தெடுத்தால் வேண்டாம் என்றா கூறிடுவாள்?

ஒருவித அதிர்வோடு ஜீபூம்பாவைப் பார்த்தவள், "என்ன சொல்ற ஜீபூ?" என்று வினவ, "ம்ம்.‌.. இப்ப சொல்றேன்.. நான் இங்க வந்த நோக்கம் உனக்கு அம்மா அப்பானு ஒரு குடும்பத்தை அமைச்சு கொடுக்கத்தான். உன்னுடைய அப்பா உன் லக்கி தான். அப்ப உனக்கு அம்மாவா யாரை எடுத்துப்ப?" என்று கேட்டது.

"என்ன உலறுற நீ?" என்று அவள் புரியாது வினவ, வாய்விட்டு சிரித்த ஜீபூம்பா, "எப்பவும் ஒரு அம்மா அப்பா தான் குழந்தைய அமைச்சுப்பாங்க. ஆனா உன் விஷயம் ரொம்ப ஸ்பெஷல். நீ தான் உனக்கான அம்மா அப்பாவை தேடிக்கப் போற" என்று கூறியது.

சாரா அதனை விழிவிரிய பார்க்க, அவள் மன அடுக்கில் ஆரண்யாவின் முகம் மின்னி மறைந்தது. "உனக்கு ஆருவ பிடிக்கும்ல?" என்று ஜீபூம்பா வினவ, மனதில் தோன்றிய ஆரண்யாவின் சிரித்த வதனத்தை நேரில் காண்பதைப் போன்ற பிரம்மையோடு ஆமென தலையசைத்தாள்.

"சோ நம்ம பிளான் ஆரண்யாவையும் உன் லக்கியையும் கல்யாணம் செய்துக்க வைக்கனும்" என்று ஜீபூம்பா கூறியது. "என்னது?" என்று அவள் வினவ, "ஆமா.. உன்னோட மம்மியவும் டாடியவும் ஒன்னு சேர்க்க போற கியூபின்ஸ் நம்ம தான்" என்று ஜீபூ கூறியது. யோசனையோடு இருந்த சாரா, குழந்தை தனமான துள்ளலோடு, "அப்ப கடவுள் எனக்கு மம்மி டாடிய நானே செலெக்ட் பண்ணிக்க சாய்ஸ் கொடுத்துட்டாரா ஜீபூம்பா?" என்று கேட்க, "ஆமா சாரா" என்று ஜீபூ கூறியது.

துள்ளலோடு எழுந்தவள், "சூப்பர் ஜீபூ. அப்ப எப்படி லக்கிக்கு கல்யாணம் பண்ணி வைக்க?" என்று சாரா வினவ, "அதுக்கு தான் லக்கி கிட்ட நீ ஆரு பத்தி பேசனும்" என்று ஜீபூ யோசனை கொடுத்ததும், "அவ்ளோதானா? இனிமே பாரு.. ஆரு புராணம் தான் பேசப்போறேன்" என்று கூறினாள்.

அடுத்த நாளே பாட்டு வகுப்பு செல்ல தயாராகியவளை சக்கரவர்த்தி வந்து வகுப்பில் விட்டுச் செல்ல, 'ம்ஹீம்.. இப்படியே போனா சரிவராது. இதுங்கள மீட் பண்ணிக்க வைச்சா தான் சரிவரும்' என்று எண்ணிய ஜீபூம்பா, "ஜீ…பூம்ம்..பா.." என தனது மந்திரத்தைப் போட்டது.

கமிஷ்னரை சந்திக்க வேண்டி சென்றுகொண்டிருந்த இலக்கியன், அலைப்பேசி ஒலிக்கவும் வண்டியை ஓரம் கட்டி அழைப்பை எடுத்துப் பேசினான். "ம்ம் மிஸ்டர் இலக்கியன். ஒரு வர்க்கா நான் மினிஸ்டர பார்க்க போறேன். நான் திரும்ப கூப்பிடும்போது நீங்க வாங்க" என்று கமிஷ்னர் கூற, "ஓகே சார்" என்று வைத்திருந்தான். அலைபேசியையே அவன் பார்த்திருக்க அவன் அலைப்பேசி மீண்டும் தன்னிலை இழந்த புகைப்படம் அடங்கிய செயலி திறந்துக் கொண்டது.

அதில் அவனும் சாராவும் மூக்கும் மூக்கும் உரசியபடி சிரிக்கும் புகைப்படம் ஒளிர, லேசாய் சிரித்துக் கொண்டவன், 'வரவர ஃபோன் ரொம்ப ஹேங்க் ஆகுது' என்று நினைத்துக் கொண்டு வண்டியை அவளது பாட்டு வகுப்பை நோக்கி செலுத்தினான்.

அங்கு ராகவியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலாவின் அலைப்பேசி ஒலிக்க, அதை எடுத்தவளுக்கு ‘அவசரமாக சொந்தம் ஒருவரின் வீட்டிற்கு செல்வதாக' ராகவி தகவல் கூறினாள். சரியென்று வைத்தவள் அலைப்பேசியிலேயும் அதே மாயம் நிகழ, அவளும் மதியும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒளிரவும் அவள் வண்டி பாட்டு வகுப்பை நோக்கி சென்றது.

வகுப்பு முடியும் முன்பே வந்திருத்த இலக்கியன் அந்த கட்டிடத்தை சுற்றியுள்ள பூந்தோட்டத்தில் காலார நடக்கலானான். தனது வண்டியில் உள்ளே நுழைந்த நிலா, தனது வண்டியை வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டுத் திரும்ப, காக்கி உடையில் சுற்றியிருக்கும் மலர்களின் அழகை ரசித்தபடி ஈரமான புல் தரையில் கால்கள் பதிய நடக்கும் இலக்கியனின் முதுகுபுறம் தென்பட்டது.

"ம்ம்.. மேஜிக் வேலை செஞ்சுடுச்சு.. இனி தானா நடப்பதை வேடிக்கைப் பார்ப்போம்" என்று ஜீபூம்பா சிரித்துக் கொள்ள, அவள் கால்கள் தன்னிச்சையாய் இலக்கியனை நோக்கிச் சென்றது. அவன் யார் என்னவென்று ஏதும் தெரியாத போதும் ஏனோ அவள் கால்கள் அவனை நோக்கிச் சென்றது.

தன்னை நோக்கி ஏதோ காலடி சத்தம் கேட்டபதில் நடையை நிறுத்திய இலக்கியன் அதனைக் கூர்ந்து கேட்க, அவன் நாசியை பெண்ணவளின் பிரத்யேக வாசத்தோடு, அப்போதே குளித்துவிட்டு கிளம்பியதால் அவள் உடலில் எழுந்த வளவைக்கட்டியின் வாசமும் சேர்ந்து அவன் நாசியை சீண்டியது.

அதில் சட்டென அவன் திரும்பிட, அவன் அருகே இருந்தவளோ அவன் திரும்பிய வேகத்தில் பின்னே எட்டு வைக்க முயற்சித்து அவளது நீண்ட மீடி (பாவாடை) தட்டி கீழே விழப்பார்த்தாள். அவள் விழவுள்ளதை கண்டவன் தனது பரந்த கரங்களை அவள் இடையில் கொடுத்து தன்னை நோக்கி இழுத்துப் பிடித்துக் கொள்ள, விழிகள் அலக விரிய, அவன் மார்போடு வந்து மோதியவள் அவனது சட்டை காலரை இறுக பற்றிக் கொண்டாள். இயல்பாகவே சிகப்பு நிறம் கொண்ட அவளது காதுமடல் மேலும் சில்லிட்டு சிவந்தன.

உலகமே உரைந்துவிட்ட உணர்வில் அவள் கண்கள் மேலும் விரிந்துக் கொள்ள, அவளுள் ஒரு மெல்லிய நடுக்கம் உருவானது. இலக்கியனும் தன்னை மறந்த நிலையில் அவளைத் தன்னோடு சேர்த்து அழுந்த பிடித்துக் கொண்டு நிற்க, அவனுக்கு மூச்சே அடைத்துப் போன உணர்வு.

சட்டென கிரீச்சிட்டு பறந்த பறவைகளின் ஒலியில் இருவரும் தன்னிலை அடைய, அப்போதே அவளைத் தன் கரத்தால் சிறைபிடித்திருப்பதை உணர்ந்து அவளுக்கு விடுதலைக் கொடுத்தான்.

பட்டென அவனிடமிருந்து நகர்ந்தவள் தனது சிகையை சரிசெய்வதைப் போன்ற பாவனையில் இமைகள் படபடக்க, சிரம் தாழ்த்தி, "சா..சாரி சார். சாரி" என்றாள்.

அவளை கூர்ந்து பார்த்து, "யூ..? ஆரண்யா?" என்றவன் ஸ்லீவ் டாப் அணிந்திருந்தவள் கரத்தை ஆராய, காயம் ஆறிய தடங்கள் அதில் இருந்தது. அவன் பார்வை செல்லும் தனது காயத்தடங்கள் இருந்த கரத்தைப் பார்த்தவள், "சார் நீங்க?" என்க, "ஐம் இலக்கியன். காயம் ஆறிடுச்சு போல?" என்றான்.

"ஓ சார்.. மாமா சொன்னாங்க. நீங்கதானா? தேங்க்யூ சோ மச் சார்" என்று அவள் கூற சன்னமான புன்னகையுடன் தலையசைத்தான். அடுத்து என்ன பேசவென்று தெரியாமல் அவள் விழிக்க,

"சித்தி.."

"லக்கீ.."

என்ற குழந்தைகள் இருவரின் குரலும் கேட்டு இவர்கள் இருவரும் திரும்பினர்.

குழந்தைகள் ஓடிவந்து அவரவர் அழைப்பிற்கு உரியவரை அணைத்துக் கொள்ள, "லக்கி உனக்கு ஆருவ தெரியுமா?" என்று சாரா வினவினாள்.

அதில் இலக்கியன் நிலாவை நோக்க, "சித்தி இவங்க தான் சாராவோட லக்கி. உங்களுக்கு முன்னயே தெரியுமா?" என்று மதி கூறினாள்.

அதில் இலக்கியனைப் பார்த்தவள், விரிந்த புன்னகையுடன் "ஓ.. சார் நீங்க தான் லக்கி..ச..சாரி அவங்களா? சாரா சொல்லிட்டே இருப்பா" என்று கூற, தானும் புன்னகைத்தவன், "ம்ம்.. வண்டில பேபிடாலோட பேச்செல்லாம் உங்கள பத்திதான்" என்று கூறினான்.

சாரா மதியின் பின்னே நிற்கும் ஜீபூம்பாவைக் கண்டு 'ஏ உன் வேலையா?' என்க, தன் கரங்களை ஆட்டி 'ஜீ..பூம்..பா' என்று கூறி கண்ணடித்தது‌.

"ஓகே சார். நைஸ் டூ மீட் யூ" என்று அவள் கரம் நீட்ட, தானும் அவளது மெல்லிய கரத்தை அழுந்த பிடித்து குலுக்கியவன், "பை" என்றுவிட்டு சாராவைப் பார்த்து, "போலாமா பேபிடால்" என்றான்.

"போலாம் லக்கி" என்று அவள் கூற, அவளைத் தூக்கிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டவன், அவளைக் கொஞ்சி பேசிக் கொண்டே செல்ல, அவனையே இமைக்காது, புன்னகையுடன் பார்த்தாள் ஆரண்ய நிலா.

அப்றம் நம்ம சாரா அன்ட் ஜீபூம்பா அட்ராசிடீஸ் எப்படினு சொல்லிபுட்டு போங்க செல்லகுட்டிகளா😍

 

NNK-10

Moderator
ஜீபூம்பா-09

தனது அலைப்பேசியில் உள்ள கழுகு தலைப் பொருந்திய பிரேஸ்லெடின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்த இலக்கியனுக்கு அதை எங்கோ பார்த்த நினைவு. ஆனால் அது யாரென்று நினைவில்லாது தவித்தான்.

அவனிடம் ஓடி வந்த அவனது செல்ல வாண்டு, "என்ன பண்ற லக்கி?" என்க, தன் அலைபேசியை வைத்துவிட்டு சாராவைப் பார்த்தவன், "ஒன்னுமில்ல பேபிடால். பாப்பா சாப்டாச்சா? ஹோமுக்கு கிளம்பலாமா?" என்று கேட்டான்.

சட்டென சாராவின் முகம் சுருங்கிவிட, அவனையே பார்த்தாளே தவிர ஒருவார்த்தை பேசவில்லை. "என்ன பேபிடால்?" என்று அவள் முகம் மாறியதில் புரியாது புன்னகைத்தவன் வினவ, "லக்கி போன வாரம் மாதிரி இன்னிக்கும் உன்கூட படுத்துக்கவா?" என்று குழந்தை வினவினாள்.

அவள் குரலில் ஏகத்துக்கும் கொட்டிக் கிடந்த ஏக்கத்தில் அவன் தான் நிலைகுழைந்து போனான். அதிர்ச்சியும் கலக்கமுமாய் அவன் அவளை ஏறிட, அவன் அமைதியில் மேலும் முகம் வாடியவள், வரும்போது தான் கொண்டு வந்த தனது பையை மாட்டிக் கொண்டு, "போலாம் லக்கி" என்றாள்.

சட்டென குழந்தையவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் கண்களிலிருந்து கண்ணீர் சொறிய, "வெ..வேணாம் பேபிடால். நீ லக்கி கூடவே தூங்கு. லக்கிக்கு ஹேப்பி தான்" என்று கூற, அவனிலிருந்து பிரித்தவள், "நிஜமாவா லக்கி?" என்று கேட்டாள்.

கலங்கிய விழிகளுடன் புன்னகைத்தவன் ஆம் என்பது போல் தலையசைக்க, "ஏன் லக்கி அழற?" என்று அவன் கன்னத்தில் உருண்டு ஓடும் கண்ணீர் துளிகள் கண்டு பதைத்த குட்டி அம்மையவள் அதை தன் பிஞ்சு விரல்களால் துடைத்து விட்டாள்.

அதில் மேலும் ஒரு சென்டிமீட்டர் இதழ் விரித்து அவன் புன்னகைக்க, அவனை மீண்டும் கட்டிக் கொண்டவள், "எனக்கு உன்கூட தூங்க பிடிச்சிருக்கு லக்கி" என்றாள். அவன் உடலெல்லாம் சிலிர்த்து மேலும் கண்களில் கண்ணீர் மழை பொழிய, அவள் உச்சியில் அழுந்த முத்தமிட்டவன், "பாப்பா.." என்று கரகரத்த குரலில் இயம்பினான்.

என்ன மாதிரியான உணர்வென்று அவனால் அதை வார்த்தைகளில் வடித்திட முடியவில்லை. ஆனால் உள்ளமெல்லாம் வலியும் இன்பமும் சேர்ந்து ஊசியாய் தாக்கியது. குழந்தையின் பாசம் இன்பமாய் தாக்க, அவளது ஏக்கம் அவனை வலியோடு தாக்கியது.

'இத்தனை வருடங்களில் ஞாயிறு தோறும் மட்டுமாவது அவளைத் தன்னுடன் படுக்க வைத்துக் கொள்ள தனக்கு ஏன் தோன்றவில்லை? தானே தன் பேபிடாலுக்கு..‌‌ தன் ஏஞ்சலுக்கு.. தன் இளவரசிக்கு இந்த ஏக்கத்தை கொடுத்துவிட்டோமே' என்று உள்ளம் மருகி அவளை அணைத்திருந்தவனுக்கு மேலும் கண்ணீர் வழிந்தது.

அவனை உணவுண்ண அழைக்க வந்த சக்கரவர்த்தி கதவை தட்டிவிட்டு திறக்க, இவன் கண்ணீரோடு தன் இளவரசியை அணைத்திருந்தான். சரியாக அவன் அலைப்பேசியும் ஒலிக்க, கண் திறந்தவன் கண்டது நெக்குருகி நிற்கும் சக்கரவர்த்தியை தான்.

காரணம் தெரியாத போதும் அவர் அந்த காட்சியை ஒருவித ஆனந்தக் கண்ணீரோடு பார்க்க, குழந்தையை விட்டுவிட்டு தன் கண்ணீரை துடைத்தவன், "கீழ பாட்டிகூட இருடா பேபிடால். லக்கி சாப்பிட்டதும் தூங்கலாம்" என்க, "ஓகே லக்கி" என்று குதூகலாமாய் கூறியவள், "தாத்தா.. நான் இங்க தான் தூங்க போறேன் லக்கி கூட" என்று கூறிவிட்டு கீழே ஓடினாள்.

சக்கரவர்த்தி இலக்கியனை நோக்க, அவன் மீண்டும் சிகப்பேறிய விழிகளைப் புறங்கையில் துடைத்தான். அவனருகே வந்து அமர்ந்தவர், "என்னபா?" என்க, "அ..அவளுக்கு என்கூட தூங்கனுமாம் மாமா. போ..போன வாரம் மாதிரி இன்னிக்கும் உன்கூட தூங்கவா? உன்கூட தூங்க பிடிச்சிருக்கு லக்கினு சொல்றா" என்று உணர்வுபூர்வமாய் கூறினான்.

அதில் லேசாய் புன்னகைத்தவர், "அதுக்கேன்டா அழற?" என்க, இடவலமாய் தலையாட்டி, "அதுல ஏகத்துக்கும் ஏக்கம் இருந்தது மாமா. என் ஏஞ்சலுக்கு.. என் இளவரசிக்கு நானே அந்த ஏக்கத்தை கொடுத்திருக்கேனே மாமா. இத்தனை வருஷம் எனக்கு இது தோனவே இல்லையே" என்று அவர் மடியில் முகம் புதைத்துப் படுத்தான்.

அவன் முதுகை வருடியவர், "இலக்கியா.." என்க, "செத்துட்டேன் மாமா.." என்றான். வேலையில் விரைப்பாய் சுற்றுபவனை பார்த்து பழகியவர்கள் இந்த இலக்கியனைப் பார்த்தால் நிச்சயம் இது இலக்கியனே இல்லை என்றுதான் கூறுவர். அப்படியான தோற்றத்தில் தான் இருந்தான்..

அழுது களைத்த முகம், சிகப்பேறிய கண்கள் என குழந்தையாய் அவர் மடியில் கரைந்தவனை தட்டிக் கொடுத்தவருக்கு அவனது தந்தை சரணின் நினைவு தான் அழையாமல் வந்து போனது.

"இலக்கியா.. என்னப்பா இது? கண்ணை துடை" என்று அவர் கூற, எழுந்து அமர்ந்து மீண்டும் புறங்கையால் கண்ணீர் துடைத்தவன், சுவற்றில் மாட்டியிருந்த அவனும் சாராவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையெல்லாம் தன் கண்ணில் நிறப்பிக் கொண்டு "அவ என் இளவரசி மாமா" என்றான்.

கீழே வந்து உணவுண்டவன் பிரபாவுக்கும் அழைத்து விடயத்தை கூறிவிட, அவரும் மறுக்காது சம்மதம் கூறினார். உண்டு முடித்து அவளோடு மேலே வந்தவன் அவளைத் தன் மார்பில் இட்டுக் கொள்ள, அவனை அணைத்துக் கொண்டு, "லவ் யூ லக்கி" என்றாள்.

அவள் தலைகோதியபடி புன்னகைத்தவன், "லவ் யூ டூ பேபிடால்" என்க, அவனுடன் வழவழவென்று கதைப்பேசிக் கொண்டே மெல்ல மெல்ல உறக்கம் கொண்டாள். உறங்கும் குழந்தையின் முகத்தை இமைக்காது ரசித்தவன், இனி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு உறக்கம் அவளுடன் தான் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

மறுநாள் காலை மிகவும் உற்சாகமாக பள்ளிக்குள் நுழைந்தவள் அருகே "என்ன சாரா பேபி.. தௌ.." என ஜீபூம்பா முடிக்கும் முன், "ஆமா.. தௌசன்ட் வாட்ஸ் பல்ப் தான். நேத்து என் லக்கி கூட தூங்கினேன்ல" என்று எதையோ சாதனை செய்து பதக்கம் வென்ற தோரணையில் கூறினாள்.

"ம்ம்.. அது இருக்கட்டும். டாடியையும் மம்மியையும் நீ இம்பிரெஸ் பண்ணிட்ட. டாடியும் மம்மியும் ஒருத்தர ஒருத்தர் இம்பிரெஸ் ஆக வேண்டாமா?" என்று ஜீபூம்பா வினவ, "அதான் நீ இருக்கியே ஜீபூம்பா. நீ எதாச்சும் மேஜிக் பண்ணிட மாட்ட?" என்றாள். "சரியா போச்சு.. குழந்தை பிள்ளைல? இப்படி தான் யோசிப்ப. உனக்கு புரியாது சாரா பேபி. இதுலாம் நடத்தும் வாய்ப்பை தான் நம்ம கொடுக்க முடியும். உணர்வுகள் அதுவா வரனும்" என்று ஜீபூம்பா கூறியது.

அது கூறியது போலவே ஒன்றும் புரியாமல் தலையை சொறிந்தவளிடம் ஓடிவந்த மதி, "ஏ சாரா.." என்று கை கோர்த்துக் கொண்டாள்.

'ஏ சாரா இந்த பொண்ணை யாரு கூட்டிட்டு வந்தது?" என்று ஜீபூம்பா கேட்க, அதையே சாராவும் மதியிடும் கேட்டாள். "சித்தி கூடதான் சாரா" என்றதும் ஜீபூம்பா மறைந்துவிட, சாராவுக்கு புரிந்து போனது.

அங்கு பள்ளியின் வாசலில், "ஜீ..பூம்..பா" என்று ஜீபூம்பா மந்திரமிட, தனது வண்டியில் சாவியை பொறுத்திய ஆரண்யா தனக்கு பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தாள். தனது காக்கி உடையில் ஒரு கையை கால்சாராயின் பையில் நுழைத்து, தோள்பட்டையை தூக்கி அலைபேசியை காதோடு அழுத்திப் பிடித்தவன், தனது வெள்ளை முழுக்கை சட்டையை மடித்துவிட்டுக் கொண்டிருந்தான்.

அதில் அவளையும் அறியாமல் ரசனையாய் பார்த்தவள், சட்டென தன்னை சுதாரித்துக் கொண்டு தலையில் இருவிரல் கொண்டு தட்டி சிரித்துக் கொள்ள, ஆடவனும் தற்செய்லாய்‌ அவளைத் திரும்பிப் பார்த்தான்.

கையில்லாத அடர் நீலநிற பருத்தி சுடிதாரும், வெள்ளைநிற பட்டியாலா பேண்டும், அதே வெள்ளை நிறத்தில் துப்பட்டாவும் அணிந்திருந்தவள் கண்களில் அடர்த்தியாய் அஞ்சனம் தீட்டி, கோபுர பொட்டுக்கு மேல் மின்னல் கீற்றாய் சந்தனம் பூசி, அவளது சிகப்பு நிறக் காதில் சிரிய வெள்ளை நிற ஜிமிக்கியும் கழுத்தில் மெல்லிய வெள்ளிச் சங்கிலியும் அணிந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வளையலற்ற அவளது வலது கையை மட்டும் கருப்பு நிற கைகடிகாரம் அலங்கரித்திருக்க, அதில் நேரத்தைப் பார்த்துக் கொண்டவள் இறங்கி அவனிடம் வந்தாள். அவள் வருவதைக் கண்டு அலைபேசியில் பிறகு அழைப்பதாய் கூறியவன் அழைப்பை துண்டிக்க, "டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போலயே" என்றாள்.

லேசாய் சிரித்து "அப்படிலாம் இல்லைமா" என்க, "ம்ம்.. சாராவை விட வந்தீங்களா?" என்று தெரிந்துகொண்டே கேட்டாள். "ம்ம்.. ஆமா" என்று அவன் கூற, "அவளை பாக்கவே இல்லை. காலைல பார்த்துடலாம்னு நான் மதிய சீக்கிரம் கிளப்பி கூட்டிட்டு வந்தா போலீஸ் என்னைவிட சீக்கிரம் அவளை கிளப்பிட்டு வந்துட்டீங்க போலயே" என்று உண்மையான வருத்தத்துடன் கூறினாள்.

"அச்சோ இப்பதான் நானும் கூட்டிட்டு வந்தேன்" என்று அவன் கூற, "இட்ஸ் ஓகே சார். ஈவ்னிங் பார்த்துக்குறேன்" என்றாள். அவள் முகத்தை கூர்ந்து கவனித்து சிரித்தவன், "என் பேபிடால் உங்களையும் ரொம்ப சீக்கிரம் கவிழ்த்துட்டா போலயே" என்க, "நிஜம்தான். எனக்கு பொதுவாவே குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும். என் பல வருட கனவு குழந்தைகள் நல மருத்துவர் ஆகனும்னு தான். இதோ வெற்றிகரமா படிச்சுட்டும் இருக்கேன். ஆனா சாரா அளவு என்கூட யாரும் இவ்வளவு அட்ராக்ஷனா இருந்தது இல்லை. மதி என் அக்கா பொண்ணு. எனக்குமே பொண்ணு மாதிரி தான். ஆனா சாரா.. புதுசா பார்த்து பேசின முதல் நாளே ரொம்ப க்ளோஸ் ஃபீல்" என்று உணர்ந்து கூறினாள்.

"ஓ பீடியாட்ரீஷனா?" என்று அவளைப் பற்றி கேட்டவன், "என் பேபிடால் எல்லார் கூடவும் ரொம்ப ஈசியா ஒட்டிடுவா" என்று தான் பெற்று வளர்த்த பிள்ளையின் பெருமை பேசும் தந்தையாக கர்வத்தோடு கூற, அதை ரசித்துப் பார்த்தவள், "சீரியஸ்லி நீங்க சாராவோட கார்டியன்னு நம்பவே முடியலை. உங்க பாண்டிங் அவ்ளோ டீப்பா இருக்கு" என்றாள்.

அவள் கூறியதென்னவோ பாராட்டு தான். ஆனால் 'கார்டியன்' என்ற வார்த்தையில் அவன்தான் மனம் நோக தேங்கி நின்றான். 'என் பேபிடாலுக்கு நான் கார்டியனா?' என்று அவன் மனம் கேட்க, மூளையோ, 'ஆமா அப்படிதானே ஸ்கூல்ல சைன் போடுற?' என்று கூறியது.

பொதுவாக ஆசிரமத்திற்கென்று அவன் பணம் கொடுத்தாலும் ஏனோ சாராவின் படிப்பு செலவையும் தன் கையிலேயே எடுத்திருந்தான். 'முழுசா நான் ஒரு பிள்ளைய படிக்க வச்சதா இருக்கட்டும்' என்று தான் கூறினான். ஆனால் சாரா மீது கொண்ட அதீத அன்பின் வெளிப்பாடு அது என்று பிரபாவுக்குப் புரிந்தது.

அமைதியாய் நிற்பவன் முன் தன் கையை அசைத்தவள், "சார்..?" என்க, சட்டென நினைவு மீண்டவன், "சாரி.. என்ன?" என்றான். "சாராவுக்கு நீங்க கார்டியன் போலவே இல்லைனு சொன்னேன்" என மீண்டும் அவள் சிரிப்போடு கூற, "ஆரண்யா ப்ளீஸ் டோன்ட் சே கார்டியன் (கார்டியன்னு சொல்லாத)" என தன் அடர்த்தியான குரலில் கூறினான்.

அவனை புரியாது பார்த்தவள் திருதிருவென விழிக்க, "சாரி.. என்னால கார்டியன்னு ஏத்துக்க முடியலை. ம்ம்.. அப்படி தான் அவளுக்கு ஸ்கூல்ல சைன் பண்றேன். ஆனா.. ப்ச்.. எனக்கு சொல்ல தெரியலை. நான் சாராக்கு வெறும் கார்டியன் இல்லை" என்றான்.

அப்பேற்பட்ட காவலன் அந்த சுட்டிக் குழந்தையின் விடயத்தில் மட்டும் குழந்தையாகவே மாறி விடுகின்றான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. "ஓ சாரி சார். நிஜமா உங்க பாண்டிங் ரொம்ப அழகா இருக்குனு தான் சொல்ல வந்தேன்" என்று அவள் கூற, "புரியுதுமா. சாரிலாம் வேண்டாம்" என்றான்.

சில நிமிடங்களில் ராகவியிடமிருந்து அழைப்பு வரவே அவனிடம் அனுமதி கோரிவிட்டு அழைப்பெடுத்து பேசியவள், "ஓகே சார். பிரண்ட் வெயிட் பண்றா. நான் வரேன்" என்க, "ஓகேமா பாய்" என்றான். இருவரும் அவரவர் வண்டியில் ஏறி அமர, என்ன உணர்ந்தனரோ ஒரே நேரம் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.

அதில் சினேகமாய் புன்னகைத்து அவர்கள் தலையசைத்துக் கொள்ள, "ம்ம்.. வர்க்கவுட் ஆவுது" என்று கூறி சிரித்துக் கொண்டது, நம் ஜீபூம்பா.


அப்றம் நம்ம சாரா அன்ட் ஜீபூம்பா அட்ராசிடீஸ் எப்படினு சொல்லிபுட்டு போங்க செல்லகுட்டிகளா😍

 

NNK-10

Moderator
ஜீபூம்பா-10

"இப்பெல்லாம் சண்டே சண்டே நான் லக்கிகூட தான் தூங்குறேன் தெரியுமா? லக்கி பிரபா மம்மிட பேசி சண்டே சண்டே என்னை கூட்டி வந்து வச்சுப்பாங்க. மறுநாள் லக்கியே என்னை ரெடி பண்ணி ஸ்கூலுக்கு கூட்டிட்டு வந்துடுவாங்க" என்று ஆரண்யாவிடம் சாரா வம்பளந்துக் கொண்டிருக்க, "இதோட பத்து தடவை இதயே சொல்லிட்டா சித்தி" என்று மதி கூறினாள்.


அதில் நிலா பக்கென சிரிக்க, "உன்கிட்ட மட்டுமா சொன்னேன். நான் வேற வேற ஆள்கிட்ட சொல்லும்போதுலாம் நீயும் கூட இருக்க. அதனால அத்தனை முறை கேட்டுட்ட. நீ சொல்லு ஆரு உன்கிட்ட இப்பதானே சொல்றேன்?" என்று சாரா கேட்டாள்.


அவள் குண்டு கன்னங்களைப் பிடித்து கிள்ளிய நிலா, "ஆமாடி பட்டு" என்க, "ம்ம்.. பாரு" என்று சாரா கூறினாள். அவர்களது சரிப்பொலியே அங்கு நிலவியிருக்க, சாராவைக் கூட்டிக் கொண்டு போக, இலக்கியன் வந்திருந்தான். அவனைக் கண்டதும் சாலையினை கவணியாது சாரா "லக்கி.." என்று ஓட, வேகமாக வந்த மகிழுந்தைக் கண்டு அங்கு அனைவருமே பதறி போயினர்.


கொக்குக்கு ஒன்றே மதி என்பதாய் லக்கியை மட்டுமே பார்த்துக் கொண்டு ஓடிய சாரா, "பேபி நோ.." என்று அவன் கத்தும் வேளை திரும்பி பக்கவாட்டில் பார்க்க, வேகமெடுத்து வந்த மகிழுந்து பச்சைப் பிள்ளை அவளை மிரட்சிக்கு உள்ளாக்கியது.


"பாப்பா.." என்று அவன் வருவதற்குள், "பட்டூ.." என்று கத்திக் கொண்டு வந்த ஆரண்ய நிலா அவளை இழுத்திட, தனது ஜீ.பூம்.பா திருவிளையாடல் சரிவர வேளை செய்ததில் ஜீபூம்பா மந்தகாசப் புன்னகை சிந்தியது.


உடல் நடுநடுங்க பனியில் நனைந்த கோழிக்குஞ்சைப் போல் சாரா நடுங்க, கண்களில் கண்ணீர் துளிர்த்திட, "ஒ..ஒன்னுமில்ல பேபி.. ஒன்றுமேயில்லை.. ஆ..ஆரு..ஆருகிட்ட தான் இருக்க. உன் ஆருகிட்ட தான் இருக்க. காம் டௌன்" என்று அவள் முதுகை வருடிக் கொடுக்கையில் பதைபதைப்பாய் இலக்கியன் வந்தான்.


பயத்தில் சாரா அழத்துவங்கிட அவளை மேலும் அணைத்துக் கொண்ட ஆரண்யாவின் கண்களிலும் கண்ணீர் வழிந்து விட்டது. "அம்முபட்டு.. ஒன்னுமில்லடா. இங்க பாரு.. ஆரு பாரு.. ஒன்னுமில்லடா" என்று அவள் முகம் நிமிர்த்தி கண்ணீரை துடைக்க, "ஆ..அம்மா.." என்று அழுதபடி சாரா அவள் கழுத்தில் முகம் புதைத்தாள்.


அதில் சிலிர்த்துப்போன நிலாவின் மயிற்சிகைகள் குத்திட்டு நின்றிட, அவள் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் கூட கன்னத்தில் உரைந்து நின்றது. "சாரா அழாத சாரா.." என்ற மதியின் குரலில் நிலைக்கு வந்தவள் மண்டியிட்டபடியே நிமிர்ந்து இலக்கியனைப் பார்த்து, "பயந்துட்டா" என்க, அவளை தன் கைகளில் வாங்கியவன் கண்டிப்பான குரலில், "பேபி லக்கிய பாரு" என்றான்.


அழுதபடியே தன் கண்துடைத்தவள் அவன் சொல்லிட்ட மந்திரம் போல் நிமிர்ந்து பார்க்க, "ரோட்ல இப்படி ஓடிவரக் கூடாதுனு எத்தனை முறை சொல்லிருக்கேன்? வண்டி வர்ற ரோடு. இப்படியா லெப்ட் ரைட் பார்க்காம வருவ?" என்றான்.


"சாரீ லக்கீ.." என்றவள் அழுதபடி அவனை கழுத்தோடு கட்டிக் கொள்ள, அவள் முதுகில் தட்டிவிட்டவன் கண்களை அழுந்த மூடி எச்சிலை கூட்டி விழுங்கிவிட்டு, "ஓ..ஓகேடா பாப்பா. ஒன்னுமில்லை" என்றான்.


"லக்கீ.." என்று அழுதபடி அவள் மேலும் அவனை இறுக்கிக் கொள்ள, கண் திறந்து பார்த்தவன் தனக்கு எதிரில் நாசி விடைத்து கண்கள் மற்றும் இளஞ்சிவப்புக் காதுகள் சிவந்து கண்ணீரோடு நிற்கும் ஆரண்ய நிலாவைப் பார்த்தான். சாராவுக்காக அவன் பதறித் துடிக்கும் அதே படபடப்பு அவள் கண்களில் தென்படவே, அவன் உடலில் மின்சாரம் பாய்ந்த சிலிர்ப்பு எழத்தொடங்கியது.


அவள் அருகே அவளது கரத்தை இறுக பற்றிக் கொண்டு பயந்து கலங்கிய முகத்துடன் மதி நிற்க, ஒற்றைக் காலை குற்றி அமர்ந்தவன், "ஒன்னுமில்லடா. உன் பிரண்டு பயந்துபோய் அழறா" என்றான்.


"பாவம் பயந்துட்டா" என்று மதி பாவம் போல் கூற, லேசாய் இதழ் பிரித்தவன், கண்களை உயர்த்தி ஆரண்யாவைப் பார்த்துக் கொண்டு, "உன் சித்தியும் ரொம்ப பயந்துட்டாங்க போல பாரு" என்க, தன் சித்தியை நிமிர்ந்து பார்த்தவள், "ம்ம்.. சித்தியும் அழறாங்க" என்றாள்.


அதில் சிரித்துக் கொண்டு அவள் கன்னம் தட்டிவிட்டு எழுந்தவன், ஆரண்யாவைப் பார்த்து "ஒன்னுமில்லமா" என்க "ப..பயந்துட்டேன்" என்றாள்.


இன்னும் அழுகை நில்லாது விசும்பிய குழந்தைக்கு தட்டிக் கொடுத்தவன், "பேபிடால்.. போதும்டா. பாரு உன் ஆருவும் பயந்துட்டாங்க" என்க, "ம்ம்.." என்ற சிணுங்கிளோடு அவனை இறுக்கிக் கொண்டாள்.


ஆரண்யாவைப் பார்த்து இதழ் பிதுக்கி, "ம்ஹீம்.. இப்போதிக்கு ஓகேயாக மாட்டா. நான் பார்த்துக்குறேன்" என்று திரும்பியவன் சட்டென மீண்டும் திரும்பி அவள் கண்ணோடு தன் கண் கோர்த்து, "நீ காப்பாத்தினது என்னோட உயிரை. தேங்ஸ் ம்மா" என்க, கண்ணீரைத் துடைத்தவள் குழந்தை முதுகில் தட்டிக் கொடுத்து, "எனக்கும் உயிர் தான்.. பார்த்துக்கோங்க" என்றுவிட்டு திரும்பினாள்.


மதியையும் கூட்டிக் கொண்டு அவள் செல்ல, சென்றவளையே பார்த்து நின்றவன் குழந்தையின் சீரான மூச்சுக் காற்றில் அவள் தூங்கியதை உணர்ந்து குனிந்து பார்த்தான். அவளைத் தட்டிக் கொடுத்தபடியே வண்டியில் அமர்த்தி சாய்த்து படுக்க வைத்து மெல்ல இயக்கிவிட்டு மீண்டும் நிலா சென்ற திசையைப் பார்த்தவனுக்கு மூளையில் ஒரு எண்ணம் பளிச்சிட்டது.


அது காதல் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை… அவன் கண்டெடுத்த கழுகு பிரேஸ்லெட்டினை எங்கு கண்டோம் என்ற நினைவு பெற்றவனுக்கு அன்று ஆரண்யாவை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு கார்த்திக்கிடம் கைகுலுக்கிய காட்சி கண்முன் வந்தது. கண்களை அழுந்த மூடி அக்காட்சியை மனதில் நிறுத்தியவனுக்கு கார்த்திக்கின் கரத்தில் அந்த பிரேஸ்லெட் இருப்பது நினைவு வந்தது.


"ஓ காட்.." என்று முனுமுனுத்தவன் வண்டியை கிளப்பிக் கொண்டு பாதுகாப்பாய் தன் வீட்டை அடைந்தான். சாராவைத் தூக்கிக் கொண்டு வந்த மருமகனைக் கண்ட ராதா, "கண்ணா என்னப்பா பாப்பாவை இங்க தூக்கிட்டு வந்திருக்க? ஹோம் போலயா?" என்று வினவ, அப்போதே நேரே தன்வீடு வந்தது அவனுக்குப் புரிந்தது.


"அத்தை பிரபா மேம்கிட்ட பேசிடுறீங்களா?" என்று அவன் வினவ, குழந்தையை வாங்கியவர், "என்னப்பா பாப்பா அழுத மாதிரி இருக்கு? நீ எதும் அதட்டிட்டியா?" என்று கேட்டார். "இல்லை அத்தை. என்னை பார்த்துட்டு வேகமா ரோட்ட கடந்து வர பார்த்துட்டா. வண்டி வேற குறுக்க வந்துடுச்சு" என்று அவன் கூற, "அச்சுச்சோ.." என்று பதறியபடி அவளுக்கு அடியேதும் உள்ளதா என்று ஆராய்ந்தார்.


"இல்லை (அ)த்தை. ஆரண்யா புடிச்சு இழுத்துட்டாங்க" என்று அவன் கூற, "அதுயாரு?" என்றார். ஒரு பெருமூச்சுடன் நடந்ததைக் கூறி முடித்தவன், "எனக்கு ஒரு முக்கியமான வேலை. நீங்க பிரபா மேம்கிட்ட சொல்லிடுங்க" என்றவன் விறுவிறுவென வெளியேறிட, குழந்தையின் கன்னம் வருடிவிட்டு உள்ளே படுக்க வைத்தார்.


அங்கிருந்து புறப்பட்டவன் நேரே சென்றது தினேஷின் ஆய்வகத்திற்குத் தான். வெளியே அனுமதி கோரிவிட்டு காத்திருந்தவனை அவர்கள் உள்ளே அனுமதிக்க, தினேஷின் அறைக்குள் நுழைந்தான்.


"டேய் என்னடா பர்மீஷன்லாம் கேட்டுட்டு இருக்க? நேரா உள்ள வரவேண்டியது தானே?" என்று தினேஷ் வினவ, "இது உன் வேலையிடம்டா. இதுக்கான மரியாதையை நான் கட்டாயம் தரனும்" என்றான்.


"எப்பா டேய்.." என்று சிரித்தவன் நண்பனின் முகம் வைத்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்து "என்னாச்சுடா?" என்று விஷயத்திற்கு வந்தான். "அந்த குழந்தை கேஸ்.." என்று இலக்கியன் துவங்க, "அதை தான் மிஸ்டர் ராஜ் ஹேண்டில் பண்றாரே" என்று தினேஷ் வினவினான். ஆம்.. அந்த வழக்கை இலக்கியன் கையகலிருந்து ராஜ் என்னும் காவலருக்கு மாற்றப்பட்டு இவன் கையில் வேறு வழக்கு ஒப்படைக்கப் பட்டது.


"ப்ச்.. இருந்துட்டு போகட்டும்டா. லீட் கிடைச்சா ஷேர் செய்துக்க கூடாதா?" என்று பல்லைக் கடித்த இலக்கியன், "உன்கிட்ட ஒரு பிரேஸ்லெட் தந்தேன்ல?" என்று வினவ, "ம்ம்.. அதான் அதுல உள்ள டி.என்.ஏ வச்சே சொன்னேனே. முப்பதுக்கு நாலு ஐந்து வயது கூடவோ குறையவோ உள்ள ஒரு ஆணுடையது தான் அது" என்று தினேஷ் கூறினான்.


"ம்ம்.. அது நான் ஒருத்தர் மேல சந்தேகம் படுறேன்" என்ற இலக்கியன், அன்று ஆரண்ய நிலாவின் விபத்தும், மருத்துவமனையில் சேர்த்தது, கார்த்திக் வந்தது, எனக் கூறி முடித்தான்.


"ம்ம்.. உன் சந்தேகம் நியாயமானது தான். ஆனா அதேபோல ப்ரேஸ்லெட் நிறையா இருக்கே. அவரோட டி.என்.ஏ குடுத்தீனா மேட்ச் பண்ணி பார்த்துடுவேன்" என்று தினேஷ் கூற, "லீகலா போக முடியாது. இந்த கேஸ்லயே நான் இல்லை. இல்லீகலா தான் எடுக்கனும்" என்று இலக்கியன் கூறினான்.


"ம்ம்.. எச்சில்,‌ வேர்க்கால்கள் கொண்ட தலைமுடி, இரத்தம் இப்படி எதாவது கொண்டு வந்து தந்தா கண்டுபிடிச்சுடுவேன்" என்று தினேஷ் கூற, "ம்ம்.. சரிடா. முடிஞ்சளவு சீக்கிரம் கொண்டு வரேன். உடனே மேட்ச் ஆகுதானு பாரு" என்று கூறிவிட்டு எழுந்தான்.


அவன் ஆய்வகம் விட்டு வெளியே வந்தவன் மனதில் தான் அத்தனை அத்தனை குழப்பம். அது அவனுடையதாகவே இருந்தாலும் அதை வைத்து மட்டுமே அவனைக் குற்றவாளி என்று கூறிவிட இயலாதே? அது இருந்ததோ விவசாய நிலத்தில். கொலையாளி தப்பி ஓடும்போது தவற விட்டதாக கூறினாலும் முறையான சான்றென ஏதும் இல்லையே என்று யோசித்தான்.


சற்றே யோசித்து, 'ஃபோன் நம்பர் இருந்தா எதும் ட்ரேஸ் பண்ணலாம். ஆனா எப்படி எடுக்க?’ என்று யோசித்தவன் மனதில் ஆரண்ய நிலாவின் முகம் வந்து மின்னி மறைந்தது.

அப்றம் நம்ம சாரா அன்ட் ஜீபூம்பா அட்ராசிடீஸ் எப்படினு சொல்லிபுட்டு போங்க செல்லகுட்டிகளா😍

 

NNK-10

Moderator
ஜீபூம்பா-11

ஒருவாரம் மெல்ல மெல்ல ஊர்ந்து கடந்திருந்த நிலையில் இலக்கியன் தனது வேலையில் வெகுவாக சுற்றிக் கொண்டிருந்தான். இந்த ஒருவாரம் அவனால் சாராவைக்கூட பள்ளிக்கு அழைத்துச் செல்லவோ கூட்டிவரவோ இயலாது போயிருக்க, ஞாயிற்றுக்கிழமை எப்பாடு பட்டாவது விடுப்பு எடுத்தேனும் சாராவுடன் தன் நேரத்தினை செலவளித்திட வேண்டும் என்று நினைத்தான்.

அதற்கு சாரா மட்டுமே காரணம் என்று சொல்லிவிட இயலாது. ஆரண்யாவை சந்திக்க ஏதும் வாய்ப்பு கிடைத்தால், கார்த்திக்கின் எண்ணை பெற்றிடவும் வசதியாக இருக்குமென நினைத்தான்.

அவனது எண்ணத்தின் படியே அன்றைய ஞாயிறு விடுப்பு எடுத்துக் கொண்டவன், காலை விரைவே எழுந்து குளித்து இல்லத்திற்கு சென்றிருந்தான்.

இலக்கியன் வந்ததைக் கேட்டதும் உண்டு கொண்டிருந்த சாரா எழுந்து தடதடவென ஓடிவர, ஒருவாரம் அவனைக் காணாத ஏக்கம் அவள் கண்களில் பொங்கி வழிந்தது.

“லக்கீ..” என்று கத்தியபடி வந்த சாராவைக் கண்டு சிரித்தபடி அவளைத் தூக்கிக் கொண்டவன் கன்னத்தில் முத்தமிட்டு “பேபிடால்” என்க, “ஏன் லக்கி வன் வீக் என்னை பார்க்கவே வரலை நீ?” என்று அதிகாரமும் ஏக்கமும் கலந்த தோரணையில் கேட்டாள்.

தன் காதைப் பிடித்துக் கொண்டு கண்களைச் சுருக்கி, “சாரி பேபிடால். லக்கிக்கு நிறைய வர்க் வந்துடுச்சு. அதான் வரவே முடியலை. இன்னிக்கு ஃபுல் உன்கூடதான்” என்று கூற, “ஏ ஜாலி ஜாலி” என்றாள்.

“போதும் போதும். உன் லக்கிய பார்த்ததும் ஆடி புடிச்சுகிட்டு வந்தாச்சு. சாப்பிட்டுட்டு போ” என்று பிரபா கூற, அதில் சிரித்தபடி அவளை இறக்கி விட்டவன், “சாப்பிட்டுட்டு வா பேபிடால்” என்றான்.

சரியென தலையாட்டிச் சென்றவளும் சில நிமிடங்களிலேயே வந்துவிட, அவளைத் தூக்கி தன் வண்டியில் அமர்த்திக் கொண்டவன், “நாளைக்கு ஈவ்னிங் கொண்டு விடுறேன் மேம்” என்று பிரபாவிடம் கூறிச் சென்றான்.

வண்டி ஓட்டியபடி தன் கைகடிகாரத்தில் மணி பார்த்தவன், “பாட்டு கிளாஸுக்கு இன்னும் டைம் இருக்கே பேபிடால். எங்கேயும் போகலாமா?” என்று வினவ, குழந்தையிடம் சிறு திடுக்கிடல்.

காவலனவன் கண்ணில் அது தவறுமா? புருவம் சுருங்க, “என்னாச்சு பாப்பா?” என்று இலக்கியன் கேட்க, “எனக்கு பாட்டு வேணாம் லக்கி” என்று சுரத்தையே இன்றி கூறினாள்.

அதில் அதிர்ந்து வண்டியை ஓரம் கட்டியவன் அவளைத் தன்னை நோக்கி திருப்பி, “ஏன்டா?” என்று வினவ, குழந்தை மலங்க மலங்க விழித்தது. அவளது கருவிழிகள் இங்கும் அங்குமாய் சுழல, எதையோ கண்டு பிடித்தார் போல் அவளது புருவங்கள் மேலேறி நின்றன.

அவனை நேருக்கு நேராய் பார்த்தவள், “அங்க கார்டன் பாத்துக்க ஒரு அங்கிள் இருப்பாருல?” என்று வினவ, “ஆமா. அந்த அங்கிளுக்கு என்ன?” என்று கேட்டான்.

“அ..அந்த அங்கிள் பேட் டச் பண்றாங்க லக்கி. எ..எனக்கு ஸ்கூல்ல சொல்லி குடுத்துருக்காங்க. செஸ்ட், பேக் அன்ட் பிட்வீன் தி லெக்ஸ்ல டச் பண்ணா அது பேட் டச்னு சொல்லி தந்திருக்காங்க. அந்த அங்கிள்..” என்றவள் அவனையே பார்த்தபடி, “எனக்கு பாட்டு கிளாஸ் வேணாம் லக்கி” என்றாள்.

ஆடவன் கண்கள் கோபத்தில் சிவப்பேறி துடிக்க, கை முஷ்டியை இறுக மூடிக் கொண்டு தன்னை நிலைப்படுத்த முயற்சித்தான். ஒன்றும் அறியாத போதும் பள்ளியில் கற்பித்ததை வைத்து அது தவறு என்று புரிந்து கொண்ட சாராவின் கண்களில் இருந்த பயம் அவனை நோகடிக்க, அந்த பயத்திற்கு காரணமானவனை அடித்து மிதிக்கும் ஆத்திரம் எழுந்தது.

வண்டியில் பின்னே இலக்கியன் முதுகில் சாய்ந்து கால் மேல் காலிட்டு அமர்ந்தபடி விசிலடித்துக் கொண்டிருந்த ஜீபூம்பா லேசாய் சாராவைத் திரும்பிப் பார்த்துக் கொண்டு “ஆண்டவன் படைச்சான்.. என்கிட்ட கொடுத்தான்.. அனுபவி ராஜானு அனுப்பி வைச்சான். என்னை அனுபவி ராஜானு அனுப்பி வைச்சான்” என்று பாட்டு பாடியது.

அந்த தோட்டக்காரர் சாராவை தொடுகையில் ஜீபூம்பாவே எதேனும் செய்திருக்க முடியும். அவரது தொடுகையின் தவறே புரியாத இருந்த சாராவிடம் வந்த ஜீபூ, “ஏ சாரா. அந்த அங்கிள தள்ளிவிட்டுடு வா” என்று கத்த, “ஏன் ஜீபு?” என்று மனதோடு கேட்டாள்.

“உனக்கு ஸ்கூல்ல குட் டச் பேட் டச் சொல்லி தந்தாங்கள்ல? இவங்க பேட் டச் பண்றாங்க. இது ரொம்ப தப்பு. நீ அவங்க கிட்ட இருக்க கூடாது” என்று ஜீபூ கூற, சாரா அதன் சொற்களில் பயந்து பதறி அந்த மனிதரிடமிருந்து விலகினாள்.

“ஜுபு. அது பெரிய தப்பு தானே? நீ அவரை பனிஷ் பண்ணு” என்று சாரா மனதோடு கூற, “நீ லக்கி கிட்ட தான் இதை சொல்லனும் சாரா. இப்பவே லக்கி கூப்பிட வந்ததும் சொல்லிடு” என்று ஜீபூம்பா கூறியது.

அதன் கணக்கெல்லாம் ஆரண்யாவும் மதியை அழைக்க வரும் நேரம் இலக்கியனை ஹீரோ போல் காட்சி படுத்துவது தான். ஆனால் அன்றிலிருந்து இதோ ஒருவாரமாக அவன் வேலையில் சுற்றுகிறான்.

எப்படியோ அவனுக்கு கிடைக்காமல் போகவிருந்த விடுப்பையும் தனது மாயாஜாலம் மூலம் சரி செய்த ஜீபூ, அவனை பாட்டு வகுப்பு பற்றி பேச வைத்திட இதோ சாரா அனைத்தையும் கூறி முடித்தாள்.

“லக்கி நான் குட் கேர்ள். நான் பிரமிஸா எதுவும் தப்பு பண்ணலை” என்று எங்கே தவறான ஒரு செயலுக்கு தன்னை திட்டுவானோ என்ற பயத்தில் குழந்தை கூற, அதில் திடுக்கிட்டுப் போனவன், “ஹே பேபிடால்” என்றான்.

இமை சிமிட்டி சாரா அவனை நோக்க, மெல்ல சிரிப்பை வரவழைத்து அவளை பனிக்கூல் கடைக்கு கூட்டிச் சென்று ஒரு பனிகூல் வாங்கிக் கொடுத்து பாட்டு வகுப்பு கூட்டி வந்திருந்தான்.

அவன் வந்து வண்டியை நிறுத்திய நேரம் ஆரண்ய நிலாவும் வந்துவிட, ‘’லெட்ஸ் ஸ்டார் தி மியூஸிக்” என்றபடி குத்தாட்டம் போட்டது ஜீபூம்பா. நிலா சாராவைப் பார்த்து புன்னகைக்க, சாராவின் முகத்தில் அதே கலவரம் குடியிருந்தது.

அதை புருவம் சுருங்க பார்த்த நிலா அருகே வர, “பேபிடால். ரெண்டு கார்டனர் இருக்காங்களே. அதுல யாரு?” என்று இலக்கியன் கேட்டான். மதியும் ஒன்றும் புரியாமல் தன் சித்தியின் கரத்தைப் பற்றிக் கொண்டு நிற்க, அந்த இருவரில் ஒருவரை கைகாட்டிய சாரா, “அந்த அங்கிள் லக்கி” என்றாள்.

உடல் விறைப்புற்று, கண்கள் சிவக்க, அவரிடம் சென்றவன் விட்ட அறையில், இங்கு ஆரண்ய நிலா தன் கன்னத்தில் கைவைத்து விழிகள் விரிய நின்றாள்.

“லக்கி..” என்று குழந்தை அவனைக் கட்டிக் கொள்ள, “நோ பேபி நோ” என்றவன், “குழந்தைங்க கிட்ட தப்பாவா நடந்துக்குற?” என்று அவன் கையை பிடித்து முறுக்க, வகுப்பு நடத்தும் பெண்மணியும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.

நிலாவும் கலவரமான முகத்துடன் மதியைத் தூக்கிக் கொண்டு அருகே செல்ல, சாராவை ஒரு கையில் தூக்கி பிடித்தபடியே மற்றைய கரத்தால் அந்த தோட்டக்காரனின் கையை முறுக்கிக் கொண்டிருந்தவன், “உன் பொண்ணா இருந்தா தொடுவியாடா?” என்று கர்ஜித்தான்.

“லக்கி வேணாம் லக்கி. பயமா இருக்கு” என்று சாரா கலங்க, “பேபிடால். லக்கி சொல்றேன் கேட்டுக்கோ. யாருக்கும் பயப்பட கூடாது. கேர்ள் பேபீஸ் ஆர் சோ ஸ்டிராங். யார் பேட் டச் பண்ணாலும் நீங்க பேட் டச் பண்றீங்கனு சத்தமா சொல்லனும். எதிர்த்து கேட்கனும். முக்கியமா லக்கி கிட்ட வந்து சொல்லனும்” என்று தன் கணீர் குரலில் இயம்பினான்.

லக்கியைப் பார்த்து பயத்தோடு சரியென்பதாய் சாரா தலையசைக்க, மீண்டும் அந்த தோட்டக்காரரை மிதித்து கீழே விழச் செய்தான். பாட்டு வகுப்பு எடுக்கும் பெண்மணியிடம் வந்தவன், “மேம் உங்களை நம்பி தானே பிள்ளைங்கள அனுப்புறோம். கண்ட கண்ட நாயெல்லாம் எதுக்கு வேலைக்கு விடுறீங்க? சின்ன பசங்ககிட்ட போய்.. ச்ச” என்று பொரிந்தான்.

படபடப்போடு, “சாரி சார். இப்படியான ஆட்கள்னு தெரிந்தா வேலைக்கு சேர்ப்போமா? வேலையே இல்லைனு ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேட்டாங்களேனு சேர்த்தேன். உடனே எடுத்துடுறேன். சாரி சார்” என்று அவர் மன்னிப்பு வேண்ட, சுற்றி ஒரு பார்வையைப் பார்த்தவன் அவர் இறைஞ்சுவதை அசௌகரியமாய் உணர்ந்து, “ஓகே மேடம். இனியாவது பார்த்து வேலைக்கு எடுங்க” என்றான்.

சரியென்றவர் தன் உதவியாளருடன் அந்த தோட்டகாரரை வேலை நிறுத்தம் செய்ய செல்ல, ஆரண்ய நிலா ஆச்சரியமான புன்னகையுடன் அவனைப் பார்த்தாள். சாரவை இறக்கிவிட்டு தானும் ஒற்றைக் காலை மடக்கி அமர்ந்தவன், “லக்கியோட பேபி என்னிக்குமே பயப்படவே கூடாது. பேபி போல்டா இருக்கனும். சரியா” என்று அவள் தலைகோதி கேட்க, “ஓகே லக்கி” என்றபடி அவனைக் கட்டிக் கொண்டாள்.

அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், “சூப்பர்டா பேபி. உள்ள போ. கிளாஸ் முடியவும் லக்கி வந்து கூட்டிட்டு போறேன்” என்றான். சரியென தலையாட்டியவள் நிலாவைக் கட்டிக் கொண்டு “ஆரூ பாய்” என்க, அவள் தலைகோதி நெற்றி முட்டியவள் “பாய்டா” என்றாள்.

மதியின் கரம் பற்றி உள்ளே ஓடியவளைக் கண்டு இருவரும் சிரித்துக் கொள்ள, இவர்களைக் கண்ட ஜீபூம்பாவும் சிரித்தது.

ஆரண்யாவைத் திரும்பிப் பார்த்தவன் ஒரு நொடி உள்ளுக்குள் ஒரு மென்சாரலை உணர்ந்தானோ?! தானும் அவனைத் திரும்பிப் பார்த்து, மென்மையாய் சிரித்தவள் “தேங்ஸ்” என்றாள்.

ஒற்றை புருவம் உயர்த்தி அவன் புரியாமல் பார்க்க, “அந்தாளை அடிச்சதுக்கு” என்றாள். “ராஸ்கல் அவனையெல்லாம் மிதிச்சே கொன்றுக்கனும். குழந்தைங்க கிட்ட போய்.. என்னத்தான் மனுஷங்களோ” என்று அவன் கூற, “ம்ம்.. குழந்தைங்களுக்கு கூட பாதுகாப்பில்லாம தான் இருக்கு. நம்ம தான் அவங்களுக்கு பாதுகாப்பா இருக்க கத்துதரனும். நீங்க இப்ப சொல்லிகொடுத்த மாதிரி” என்று நிலா கூறினாள்.

அதில் லேசாய் சிரித்தவன், “இக்கட்டான சூழல் வரும்வரை நம்ம பலம் நமக்கே தெரியாது. நமக்குள்ள ஒரு பலம் இருக்குனு சொல்லி கொடுத்தா போதும். அவங்களே புரிஞ்சு தைரியமா இருப்பாங்க” என்று கூற, அவள் மனம் ‘இம்ப்ரஸிவ்’ என்று எண்ணியது.

அழகான அந்த தருணத்தை குழைக்கவென்றே நிலாவின் அலைப்பேசி ஒலிக்க, அதை எடுத்தவள் “மாமா” என்றாள்.

அதில் விறைப்புற்ற இலக்கியனின் மனம் படபடவென அலைபாய்ந்தது. 'கார்த்திக்.. இவர் நம்பர வாங்க இருத்தோமே? இதுதான் நேரம். எதாவது சாக்கு சொல்லி வாங்கனும்' என்று அவன் மனம் எண்ண, சிரித்தபடி அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பவளைப் பார்த்தான்.

எப்போதும் போல் அவளது ஸ்லீவ்லெஸ் தொடை வரை நீளம் கொண்ட குர்த்தியும் நீண்ட பாவாடையும் ஒரு துப்பட்டாவும் அணிந்து கொண்டு இளஞ்சிவப்பு காதுகளில் அவளது கிங்கினி நாதமான சிரிப்புக்கு நடனமாடும் ஜிமிக்கியும் என அவன் கண்களுக்கு அழகியாய் தெரிந்தாள். அதுவும் அந்த காதுகள் தான் அவனின் பார்வையில் சற்று கூடுதல் ரசனையை மூட்டியதென்று கூறவேண்டும்…

அவளைப் பார்க்கும் தன் பார்வையில் திடுக்கிட்டவன் திரும்பி நின்று தன் தலைகோத, ‘டேய் இலக்கியா..’ என்று அவன் மனம் இயம்பியது.

அவள் பேசி முடித்துவிட்டு திரும்ப, அவளது சத்தம் அடங்கியதில் தானும் திரும்பியவன், “அன்னிக்கு ஹாஸ்பிடல்ல உன்னை கூப்பிட வந்தாங்களே மிஸ்டர். கார்த்திக்?” என்று வினவினான்.

“ஆமா.. என் மாமா தான்” என்று புன்னகையாய் அவள் கூற, “அவங்க பேங்க்ல தானே வர்க் பண்றாங்க?” என சாரா கூறியதை வைத்து கேட்டான்.

“ம்ம் ஆமா சார்” என்று அவள் கூற, “அவங்க நம்பர் கிடைக்குமா? லோன் விஷயமா கொஞ்சம் பேசணும்” என்று வாய்க்கு வந்த பொய்யை அள்ளி விட்டான்.

ஏனோ அவனிடம் ஆராய்ந்து கேட்கவெல்லாம் அவளுக்கும் தோன்றவே இல்லை. ஒரு நம்பிக்கையான புன்னகையுடன் “கண்டிப்பா சார். நோட் பண்ணிக்கோங்க” என்று அவள் கூற, அவளது நம்பிக்கை அவனை சுள்ளென்று வலியை உணர வைத்தது.

காவலனாக வழக்குகளை விசாரிக்க பொய்களைக் கையாலாதவன் இல்லை அவன். ஆனால் இவளிடம் பொய்யுரைத்து நம்பிக்கை பெற அவனுக்கு வலித்தது. அதை அப்படியே புறம் தள்ளியவன், அவள் கொடுத்த இலக்கங்களை வாங்கிக் கொண்டான்.

'ஆஹா.. வர்க்கவுட் ஆகுது போலயே. இப்ப நம்ம எதாவது வேலையை காட்டனுமே' என்று எண்ணிய ஜீபூம்பா, தன் கைகளை நீட்டி “ஜீ…பூம்..பா” என்று உச்சரித்தது.

மழை மேகம் போல் திரண்டு, காற்று வேகமெடுத்து வீச, அவளது துப்பட்டா வேகமாய் அவளிடமிருந்து பறக்க துடித்தது. அவள் கண்களில் வந்து விழுந்த மணல் துகள்களில் கண்களை மூடிக் கொண்டவள் முகம் சுருங்க கண்ணை கசக்க, துப்பட்டா காற்றில் ஆடி அவன் முகம் வந்து மோதியது.

பெண்ணவளின் பிரத்யேக வாசத்துடன் அவன் முகத்தில் வந்து மோதி முத்தமிட்ட துப்பட்டாவின் ஸ்பரிசம் அந்த ஆறடி ஆண்மகனை அசைத்துத் தான் பார்த்தது.

கண்களை மூடி அந்த வாசத்தை ஸ்வாசித்தவன் இதழில் மெல்லிய புன்னகை எழ, மூளை அவன் செயலை படீரென எடுத்துரைத்தது. அதில் திடுக்கிட்டுத் நகரந்தவன் அவளைப் பார்க்க, இன்னும் துப்பட்டாவை ஒரு கையில் பிடிக்க முயன்றபடி கண்களை கசக்கிக் கொண்டிருந்தாள்.

பெருமூச்சில் தன் வெப்பக் காற்றை வெளியேற்றியவன் ஒருஅடி பின்னே நகர்ந்து, “ஆர் யூ ஓகே?” என்றபடி அவனது கைக்குட்டையை கொடுக்க, ஒற்றைக் கண் திறந்து பார்த்தவளும் அதை வாங்கி தன் கண்ணில் உறுத்தல் குறைக்க துடைத்துக் கொண்டாள்.

விளைவாய் அவளது கருமையான அஞ்சனம் அவனது வெண்மையான கைக்குட்டையில் ஒட்டிக் கொண்டது.

கண்கள் உறுத்தலில் லேசாய் கலங்கி பளபளத்து நிற்க, விழியை நன்கு திறந்தவள், “மழை பெய்யும் போலயே. காத்து பயங்கரமா இருக்கு” என்றுவிட்டு “ஓகே சார். பார்ப்போம்” என்றாள்.

“ஓகேமா” என்று அவன் கூற, அவன் கைக்குட்டையைப் பார்த்தவள் விழிகள் மேலும் அகல விரிய, “அய்யயோ.. ச..சாரி சார்” என்றாள்.

அப்போதே தானும் அதை கவனித்தவனுக்கு அதை கண்டு மெல்லிய புன்னகை அரும்பியது. அதில் லேசாய் சத்தம் வர சிரித்தவன், “பேபிடாலுக்கு கண்ணை துடைச்சா இப்படி தான் ஆகும். இட்ஸ் ஓகே. நோ ப்ராப்ளம்” என்றபடி அதை வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

அப்றம் நம்ம சாரா அன்ட் ஜீபூம்பா அட்ராசிடீஸ் எப்படினு சொல்லிபுட்டு போங்க செல்லகுட்டிகளா😍

 

NNK-10

Moderator
ஜீபூம்பா-12

தனதறை மேஜையில் அமர்ந்திருந்தவனுக்கு தன் கையில் இருக்கும் கைகுட்டையில் தான் கவனம் பதிந்திருந்தது. அதையே பார்த்தபடி அவன் புன்னகையாய் அமர்ந்திருக்க, அவனது கரங்கள் தனிச்சையாய் அதிலிருக்கும் மை கரையை வருடியது.

கண்களை மூடி அவளது வாசத்தை அவன் உணர நினைத்த நொடி அலைப்பேசியின் ஒலி அவன் சிந்தையைக் கலைத்தது.

அலைப்பேசியை எடுத்துப் பார்த்தவன் முகம் மீண்டும் தீவிரமாகிவிட, “சொல்லு சுதிர். எடுத்தாச்சா?” என்று வினவினான். “எல்லாமே உனக்கு அனுப்பிட்டேன் இலக்கியா” என்று அவனால் சுதிரென அழைக்கப்பட்ட சைபர் கிரைம் பிரிவிலிருக்கும் அவனது தோழன் கூற, “தேங்ஸ்டா” என்றான்.

“டேய்.. என்னடா புதுசா நன்றியெல்லாம்? போய் வேலையைப் பாருடா” என்று கூறியபடி சுதிர் அழைப்பைத் துண்டிக்க இலக்கியனின் முகத்தில் அழகாய் ஒரு புன்னகை. தாய் தந்தையை தான் அவன் இழந்தான். ஆனால் தனது நல்ல குணத்தாலும் நேர்மையான பண்பாலும் பல நல்லுள்ளங்களின் நட்பை சம்பாதித்திருந்தான்.

அனைத்து பிரிவுகளிலும் அவனைத் தெரிந்த தோழரென்று யாரேனும் ஒருவராவது இருந்துவிடுவர் என்னும் அளவில் அவனது நட்பு வட்டம் இருந்தது. ஒட்டி உறவாடி உடனேயே திரியும் நண்பர்கள் இல்லைதான் என்றாலும் அவன்மீது மரியாதையோடு நடந்துகொள்ளும் நண்பர்கள் இருந்தனர். அதற்காக அவனைப் பிடிக்காதவர்களே இல்லையென்றும் கூறிவிட இயலாது.

தனது எண்ணத்திலிருந்து விடுபட்டவன் சுதிர் அனுப்பியதைத் திறந்து பார்த்தான். கார்த்திக்கின் அலைப்பேசி எண்ணை சுதிரிடம் கொடுத்தவன் அந்த குழந்தை காணாமல் போன இரவு கார்த்திக்கின் அலைப்பேசி இருந்த இடத்தினை ட்ரேஸ் செய்துதரும்படி கேட்டிருந்தான்.

சுதிர் அனுப்பிய விபரங்களைக் கண்டவன் கண்களிலில் ஆச்சரியமான முகபாவம் எழ, அன்று இரவு பண்ணிரெண்டு மணியிலிருந்து ஒன்று வரை அவனது அலைப்பேசி அந்த விவசாய நிலமிருந்த பகுதியைச் சுற்றி இருந்தது தெரிய வந்தது.

'அவரா? அவரைப் பார்த்தா அப்படி தெரியலையே?’ என்று அவனது ஒரு மனம் கூற, ‘பச்சைப்பிள்ளைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு படுகொலை செய்யும் எத்தனையோ ஆட்கள் இருக்காங்க. அதில் இவரும் அடக்கமா இருக்கலாம். யாரையும் சந்தேக லிஸ்ட்ல வைத்திருக்கும் வரை தான் நமக்கு நல்லது’ என்று நினைத்தான்.

'இதுபத்தி யாருகிட்ட பேசுறது? இப்ப இந்த கேஸை நடத்தும் ராஜுக்கும் நமக்கும் ஆகாது. நான் போய் நின்றால் இது என்னோட கேஸ்னு குதிப்பார்’ என்று அவன் எண்ண, ‘நாமலே அவரை க்ளோஸா வாட்ச் பண்ணி தான் தெரிஞ்சுக்கனும் போல’ என்று தீர்மானித்துக் கொண்டான்.

அங்கு தனது தோழி ராகவியைக் கூட்டிக் கொண்டு நிலா தனது வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்க, பின்னே அமர்ந்திருந்த ராகவி, “எங்கதான் மூனு (நிலா) போறோம்?” என்று கேட்டாள்.

இத்தோடு பத்தாவது முறை அவள் கேட்கவும் சற்றே கடுப்பான நிலா, “ப்ச்.. மகிந்தன் அண்ணாவ பார்க்க போறோம்” என்க, “ஏதே..” என்று கத்தினாள்.

அவள் தந்த சத்தத்தில் திடுக்கிட்டு சடன் பிரேக் அடித்து நின்றவள், “எதுக்கு பைத்தியமே இப்படி கத்துற” என்க, “அ..அவர எதுக்கு பார்க்க போகனும்?” என்றாள்.

அவளது தடுமாற்றத்தில் லேசாய் சிரித்தவள், “ஒரு வேலை விஷயமா?” என்று கூற, “தன்னார்வலர் தொண்டு எதுவும் பண்ண போறியா என்ன?” என்று கேட்டாள். “உனக்கு கற்பூர புத்திடா ராகி. ஆனா ஒரு சின்ன திருத்தம். பண்ண போறேனில்லை, பண்ண போறோம்” என்று கூறியவள் மீண்டும் வண்டியை இயக்கி சிரித்துக் கொண்டாள்.

“போறோமா? நானுமா? அவர் கூடயா?” என்று ராகவி கேள்விகளை அடுக்க, “ஹப்பா.. எவ்வளவு கேள்வி ராகி?” என்றாள். “நீ முதல்ல வண்டிய நிறுத்து. நான் இப்படியே ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போயிடுறேன்” என்று ராகவி கூற, “லொட லொட வாயாடியா இருந்த ராகியா இது?” என்று கூறி நிலா வாய்விட்டு சிரித்தாள்.

மகிந்தன்.. ராகவியின் தூரத்து சொந்தம், மாமன் முறை. தன்னார்வளர் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தி வருபவன். ராகவியை சிறுவயது முதல் ஒருதலையாய் காதலித்து வருபவன். அவளது தந்தை பெண் பார்க்க துவங்கியதால் தனது காதலை நேரே சென்று அவரிடம் கூறியவன் ‘’என்னை நம்பி உங்க பொண்ணை கொடுங்க மாமா. நல்லா பார்த்துப்பேன்' என்று வசனமெல்லாம் பேசி மாமனாரை கரெக்ட் செய்திருந்தான்.

அதன் பிறகே ராகவிக்கு இந்த விடயம் தெரியவர, அவனைப் பார்த்து சிரிப்பதோடு கடந்திருந்தவளுக்கு அதன் பிறகான சந்திப்பு ‘பே பே பெப்பெப்பே’ என்றாகியிருந்தது. அவனைப் பிடித்திருக்கிறதா? கல்யாணத்திற்கு சம்மதமா? என்று அவன் சார்ந்த கேள்வி அனைத்திற்குமே அவளிடம் உள்ள பதில் என்னவோ ‘தெரியாது’ என்பது தான். ஆனால் அவள் தந்தையை மீறி வேறு திருமணம் என்று யோசிக்கும் பெண்ணும் இல்லை என்பதால் உறவுகளுக்குள் திருமணம் வாய் வார்த்தையாய் பேசி முடிவானது.

'அவ படிச்சு முடிச்ச பிறகு வேலை பார்க்கனும்னு நினைக்கும்வரை நான் காத்திருக்கேன் மாமா. அவளை யாரும் வற்புறுத்த வேண்டாம்’ என்று மகி கூறியிருக்க அதனால் யாரும் அவளிடம் வந்து திருமணம் குறித்து ஏதும் பேசிக்கொள்ள வில்லை.

அனைத்தையும் மனதில் அசைபோட்டு எச்சில் கூட்டி விழுங்கியவள், அவனது தொண்டு நிறுவனம் வந்தவுடன் சற்றே வெடவெடத்து தான் பார்த்தாள். ஏனோ அவனிடம் பேச அவளுக்கு அப்படியொரு தடுமாற்றம். முன்பு கூட ஒருமுறை எம்.பி.பி.எஸ் முடித்த சமயம் அவனது நிறுவனத்தோடு சேர்ந்து ஒரு முகாமில் தோழிகள் இருவருமாய் மருத்துவம் பார்த்தது உண்டு.

பெரிதாக பேசிக்கொள்ளவில்லை என்றாலும் மரியாதை நிமித்தமாய் நான்கு வார்த்தை மற்றும் புன்னகையுடன் இயல்பாய் அவள் பழகியதுண்டு. இப்போது எங்கே சென்றது அந்த இயல்பு என்று தவித்தாள்.

தனது அறையுள் டக்கின் செய்த இள நீலத்தில் கருப்பில் கோடு போட்ட சட்டையும், கருப்பு நிற பேண்டும் என ஃபார்மல் உடையில் அமர்ந்திருந்த மகி கதவு தட்டும் சத்தத்தில் நிமிர்ந்து பாராமல் “எஸ்” என்றான்.

பெண்கள் இருவரும் அவனது பி.ஏ.சர்வேஷுடன் உள்ளே வர, தனது பார்வையை உயர்த்தி பார்த்தவன், “ஹே டாக்டர்ஸ். வாங்க வாங்க” என்று இயல்பாய் இருவரையும் வரவேற்றான்.

இருவரும் அவன் முன் வந்து அமர, சர்வேஷைப் பார்த்து “முக்கியமான விஷயமா சர்வேஷ்?” என்று வினவினான். “போன முறை போன முதியோர் இல்லத்து கேம்போட ரெகார்ட்ஸ் தான் சார் எடுத்து வந்தேன்” என்று அதைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.

அதை வாங்கி வைத்துவிட்டு, சர்வேஷ் சென்றதும் “சொல்லுங்க நான் என்ன உதவி செய்யனும்?” என்று மகி வினவ, “ஒரு ஆசிரமத்திற்கு ஒருநாள் கேம்ப் போகனும் சார்” என்றாள், நிலா.

“இன்டிரஸ்டிங். எந்த ஆசிரமம் டாக்டர்?” என்று மகி வினவ, “ஸ்வீட் பிரின்ஸஸ் ஹோம் சார். பெண் குழந்தைகள் உள்ள ஹோம். ஒரு நார்மல் மெடிகல் செக்கப், அன்ட் வன் டே ஃபூட் அப்றம் பாதுகாப்பு கலைகள் பற்றி ஒரு செஷன் கிளாஸ் எடுக்கலாம்னு யோசிச்சேன். அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம்னு வந்தேன்” என்று கூறினாள்.

“தாராளமா செய்யலாம் டாக்டர். நல்ல யோசனை தான். நான் என் ஷெடியூல்ஸ் பார்த்துட்டு டேட் பிக்ஸ் பண்ணி சொல்றேன்” என்று மகி கூற, “தேங்கியூ அண்ணா..” என்று உற்சாகமாய் கூறிவிட்டு “உப்ஸ்.. தேங்கியூ சார்” என்றாள்.

அதில் சத்தமாய் சிரித்தவன், “நம்ம மட்டும் இருக்கும் நேரத்தில் அண்ணானு கூப்பிடலாமேடா. நோ ப்ராப்ளம்” என்க, தானும் சிரித்தவள், “எப்படி இருக்கீங்க அண்ணா?” என்றாள்.

“நல்லா இருக்கேன்டா” என்றவன், “ஹாய் கவி. எப்படி இருக்க? அத்தை மாமா எப்படி இருக்காங்க?” என்று வினவ, அவனது இயல்பான பேச்சில் ஒன்ற முடியாது படபடப்போடு பார்த்தவள், “நல்லா இருக்காங்க” என்றாள்.

“ம்ம். ஸ்டடீஸ் எப்படி போகுதுமா?” என்று மீண்டும் அவன் வினவ, “நல்லா போகுது” என்று அவனைப் பார்த்து அதே தடுமாற்றத்தோடு கூறினாள். அதில் நகைத்துக் கொண்டவன் நிலாவைப் பார்க்க, “சரிண்ணா. நாங்க கிளம்புறோம். நீங்க டேட் பார்த்துட்டு சொல்லுங்க” என்றபடி எழுந்தாள்.

தானும் எழுந்தவன், “ஓகே மா. நான் சொல்றேன்” என்க, இருவரும் அவனிடம் விடைபெற்றுச் சென்றனர். கதவு வரை சென்ற ராகவி அவனை லேசாய் திரும்பிப் பார்க்க, கண் சிமிட்டி குறும்பாய் சிரித்தவன் கையசைத்து வழியனுப்பியதில் திடுக்கிட்டு ஓடியே விட்டாள்.

வெளியே விரைந்து வந்தவள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மூச்சு வாங்க நிற்க, கலகலவென சிரித்த நிலா, “ஏ ராகி.. எதுக்குடா இவ்வளவு பயம்? அண்ணா என்ன உன்னை கடிச்சா திங்கப் போறாரு?” என்று தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி குறும்பாய் வினவினாள்.

அவளைப் பார்த்து வேகமாக மூச்சை இழுத்து விட்டவள், “உனக்கு என்னோட உணர்வுகளை சொன்னா புரியாது நிலா. இ..இது.. அம்மாடீ, என்னமோ அப்படி படபடனு வருது. ஆடானமி கிளாஸ்ல கூட எனக்கு இப்படி இருந்தது இல்லை. இ..இவரை பார்க்க என்னமோ பண்ணுது. இது சொல்லி உனக்கு புரியவைக்க முடியாது. நீயும் யாருகிட்டயாவது மாட்டுவள்ல? அப்போ தான் புரியும் உனக்கு” என்று கூற, நிலா அவளது கடைசி வரியில் ஒருநொடி சிலிர்த்துப் போனாள்.

அவள் மனதில் இலக்கியனின் சாயல் வந்து போக, அதில் அதிர்வெல்லாம் அடையாமல் “அட இதை எப்படி மறந்தேன். இலக்கியன் சார்கிட்ட பேசனுமே” என்று தான் மறந்த ஒன்றை மனம் நினைவு கூர்ந்ததாய் அதை நினைத்துக் கொண்டாள்.

“யாரு அந்த குட்டிபாப்பாவோட கார்டியன் சார் தானே?” என்று ராகி வினவ, “ஏ ராகி. கார்டியன்னு சொல்லாதடா. நான் ஒருமுறை அப்படி சொன்னது அவருக்கு ஹர்டிங்கா ஃபீல் ஆயிருக்கு. உண்மையான அப்பாவா தான் அவர் சாராக்கு இருக்கார். அந்த கார்டியன் என்ற வார்த்தை அவர் உறவை விலக்கி நிறுத்துறதா உணருறார்” என்றாள்.

“நிஜமா சர்ப்பிரைஸிங்கா இருக்கு மூனு. யாருமில்லாத ஒரு குழந்தை மேல இப்படி எந்த சம்பந்தமும் இல்லாத ஒருத்தராள பாசம் காட்ட முடியுமா? ஹ்ம்.. இன்னும் நம்ம மண்ணுல ஈரம் இருக்குனு காட்ட மக்கள் இருக்கத்தான் செய்யுறாங்க” என்று ராகி கூற, தாராளமாய் புன்னகைத்த நிலா ஆமென்று தலையசைத்தாள்.


அப்றம் நம்ம சாரா அன்ட் ஜீபூம்பா அட்ராசிடீஸ் எப்படினு சொல்லிபுட்டு போங்க செல்லகுட்டிகளா😍

 

NNK-10

Moderator
ஜீபூம்பா-13

இருவருமாய் அந்த காஃபி ஷாப்பில் அமர்ந்து, தத்தமது பாணத்தை குடித்துக் கொண்டிருந்தனர். தனது குவளையிலிருந்து ஒரு மிடறு அருந்தியவன் கண்களை மட்டும் உயர்த்தி எதிரிலிருப்பவளை நோக்க, தான் வாங்கிய சாக்லேட் மில்க்ஷேக்கை ரசித்துப் பருகிக் கொண்டிருந்தாள் அவள்.

எப்போதும் போல் இப்போதும் அவனது பார்வை அவளது அந்த இளஞ்சிவப்புக் காதுகளைத் தொட்டுச் சென்றது. பாதி குடித்துவிட்டு கோப்பையை மேஜையில் வைத்து அவள் நிமிர்ந்ததிலேயே அவள் பேசப்போவது உணர்ந்தவன் தானும் கோப்பையை வைத்துவிட்டு அவளை நோக்கினான்.

மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தவள் “ஹாப்பினெஸ் என்ற தண்ணார்வளர் தொண்டு நிறுவனம் பற்றி கேள்விபட்டிருக்கீங்களா சார்?” என்று வினவ, “ம்ம்.. அப்படி ஒரு நிறுவனம் இருக்குனு தெரியும். நியூஸ்லலாம் பார்த்திருக்கேன்” என்றான்.

“ம்ம்.. என்கூட வந்தாளே என் ஃபிரண்ட் ராகவி, அவளோட அத்தை மகன் தான் அந்த நிறுவனத்தை நடத்துறது. அன்னிக்கு பாட்டு கிளாஸ்ல நடந்த பிரச்சினையைப் பற்றி நாம பேசிக்கிட்டபோது எனக்கு ஒரு யோசனை வந்தது. நம்ம பேபி இருக்கும் ஸ்வீட் பிரின்ஸஸ் ஹோமுக்கு ஒரு வன்டே கேம்ப் போடலாம்னு யோசிச்சேன். மெடிகல் செக்கப், பெண்கள் பாதுகாப்புக்கான செஷன், அன்னிக்கான உணவு, அப்றம் சுகாதார வகுப்புகள் போல ஏற்பாடு செய்யலாம்னு தோனுச்சு. உடனே மகி அண்ணா, அந்த நிறுவனம் நடத்தும் மகிந்தன் சார்கிட்ட போய் பேசினேன். அவரும் முழு மனதா ஒத்துகிட்டார். அவரோட ஷெடியூல்ஸ் பார்த்துட்டு நாள் சொல்றதா சொன்னாங்க. நீங்களும் வந்தா ரொம்ப ஹெல்ஃபுல்லா இருக்கும் சார். உங்கிட்ட சொல்லிட்டு கேட்க போகலாம்னு தான் நினைச்சேன். ஆனா நேத்து ஃப்ரீயா இருந்ததால போய் பேசிட்டு வந்துட்டேன்” என்று தனது நீண்ட உரையை முடித்தாள்.

அவளுக்கு தாராளமான ஒரு புன்னகையைக் கொடுத்தவன், “இதில் என்கிட்ட கேட்க என்ன இருக்கு? ரொம்ப நல்ல விஷயம் மா. ஒரு சின்ன கான்வர்சேஷனிலிருந்து ஒரு நல்ல விஷயத்தை எடுத்து செய்ய இருக்க. என்னோட முழு ஒத்துழைப்பு இதுல உண்டு. டேட் பிக்ஸ் பண்ணிட்டு சொல்லுங்க நான் பிரபா மேடம் கிட்டயும் பேசிடுறேன்” என்று கூற, “ரொம்ப நன்றி சார்” என்றாள்.

மாலை பள்ளியிலிருந்து குழந்தைகளை கூட்டிச் செல்ல வந்தபோதே இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போதே பேச வேண்டும் என அவள் முன்வந்த நேரம் அவனுக்கு வேறு வேலை ஒன்று வந்துவிட்டதால் ‘அடுத்தநாள் காலை பேசிக்கொள்ளலாமா?’ என்று கேட்டிருந்தான்.

சரியென ஏற்றுக்கொண்டவள் வந்தது என்னவோ ராகவியுடன் தான். 'இவளுக்கு வேற வேலைவெட்டி இல்லை. சும்மா இந்தபுள்ளய கூடயே இழுத்துகிட்டு வந்திடுவா. இந்த பாரு ராகி. இவகூட சுத்துனா உன்னையும் லவ் பண்ண விட மாட்டா அவளும் லவ் பண்ண மாட்டா' என்று புலம்பிய ஜீபூம்பா தனது மாயாஜாலி வித்தையை இறக்கியது.

உடனடியாக அவள் தாய் அஞ்சலியிடமிருந்து அழைப்பு வரப்பெற்ற ராகவி, “சாரி சார் சாரி மூன். அம்மா உடனே வரசொல்றாங்க. என்னனு சரியா தெரியலை. நீங்க பேசுங்க” என்று கூறி அவர்கள் அனுமதியோடு புறப்பட, ‘ஹப்பா.. நீங்க தனியா பேசிக்க ஏற்பாடு செய்ய நான் எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கு' என்று இல்லாத வியர்வையை துடைத்துக் கொண்டது ஜீபூம்பா.

ஜீபூம்பா உழைப்பின் உபயமாய் இருவரும் தனித்து பேசிக் கொள்கின்றனர். 'ஆமா அப்படியே காதல் வார்த்தைல தேன் சொட்ட சொட்ட பேசிட்டானுங்க ரெண்டு பேரும்' என்று நீங்கள் கேட்பது ஜீபூம்பா காதுகளில் நன்றாகத்தான் விழும். ஆனால் இவர்களை இந்தளவு நெருங்க வைத்ததே பெரியது.

பேசிச்சென்ற அன்றே மகியிடமிருந்து தகவல் பெற்ற நிலா அவனிடம் பெற்றிருந்த அலைப்பேசி எண்ணுக்கு அழைத்து வரும் ஞாயிறு வருவதாகக் கூறினாள். அவனும் சரியென்று பிரபாவிடம் அதை தெரிவித்து அனுமதி வாங்கியிருந்தான்‌.

பரபரப்போடே அந்த ஞாயிறும் வந்திட, அனைவரும் ஸ்வீட் பிரின்ஸஸ் இல்லத்தில் கூடியிருந்தனர். மகிந்தன், அவனது பி.ஏ சர்வேஷ் மற்றும் குழுவினருடன் அங்கு வந்து சேர, ஆரண்ய நிலா மற்றும் ராகவியும் வந்தனர்.

அவர்களுக்கெல்லாம் முன்பே அங்கு வந்திருந்த இலக்கியன் முறையாக பிரபாவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க, நிலாவும் மகிந்தனையும் அவனது பி.ஏ சர்வேஷையும் அறிமுகம் செய்தாள்.

“ஆரூ..” என்று கூச்சலிட்டபடி அங்கு ஓடி வந்த சாரா, நிலாவைக் கட்டிக் கொள்ள, அவளை அப்படியே தூக்கிக் கொண்டு முத்தமிட்ட நிலா, “அம்முபட்டு” என்று கொஞ்சினாள்.

“ஆரூ நீ வருவனு சொல்லவே இல்லை” என்று சாரா வினவ, “ஆரூ உனக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கலாம்னு வந்தேன்டா தங்கம்” என்றாள். “ஐ.. சூப்பர் ஆரூ” என்ற சாரா அவளுக்கு முத்தங்களை வழங்க, புன்னகையாய் பதில் முத்தமிட்டாள்.

இருவரையும் புன்னகையுடன் பார்த்த இலக்கியனின் விழிகள் எப்போதும் போல் அவளது அந்த இளஞ்சிவப்புக் காதுகளை ரசித்துவிட்டு பின் சாராவிடம் சென்றது.

“உன் ஆரூகூட தான் பேசுவியா? என்கூடயும் பிரண்ட்ஷிப் வச்சுக்கோயேன்” என்று ராகவி வினவ, சாரா லக்கியைப் பார்த்தாள். அவன் மலர்ந்த சிரிப்புடன் தலையசைக்க, “ஓகே.. உங்க பெயர் என்ன?” என்று கேட்டாள்.

“என் பெயர் ராகவி. ஏன் இலக்கியன் சார் பர்மிஷன் கொடுத்தா தான் பேசுவியா?” என்று ராகவி வினவ, “ஆமா. என்னோட லக்கி சொன்னா தான் செய்வேன்” என்று குழந்தைக் கூறினாள். அதில் இலக்கியன் முகத்தில் கர்வமாய் ஒரு புன்னகை குடிகொள்ள, தனிச்சையாய் பார்வையை உயர்த்தி அவனது கர்வத்தைக் கண்டு நிலா மகிழ்ச்சி அடைந்தாள்.

“ஓ.. சரி சரி. சார் சொல்லிட்டாங்கள்ல? என்கூட பிரண்டா இருப்ப தானே?” என்று ராகவி வினவ, “இருப்பேன். உங்கள நான் எப்படி கூப்பிட?” என்று கேட்டாள்.

“உனக்கு எப்படி கூப்பிட தோனுதோ அப்படி கூப்பிடு” என்று ராகவி கூற, “ராகினு கூப்பிடு” என்று நிலா கிசுகிசுத்தாள். “ஆங்.. நானும் ராகினு கூப்பிடவா?” என்று சாரா வினவ, “பேபிடால்..” என்று இலக்கியன் சற்றே கண்டிப்பாக அழைத்தான்.

'என்னை தவிர யாரையும் பெயர் சொல்லியெல்லாம் கூப்பிடக்கூடாது. பெரியவர்களுக்கு மரியாதை தரனும்' என்று அவன் கூறியது நினைவு பெற்ற சாரா, “அச்சுச்சோ சாரி. நான் அக்கானு சொல்லுறேன்” என்றாள்.

அதில் கலகலவென சிரித்த ராகவி, “நீயும் என்னை ராகினே கூப்பிடுடா. உன் ஆரூவ மட்டும் பெயர் சொல்லி கூப்பிடுறல? நானும் அவளும் பிரண்ட்ஸ் தான்” என்று கூற, ‘அட இவளையும் பேபி பெயர் சொல்லி தானே கூப்பிடுவா? நான் இதை எப்படி கவனிக்காம விட்டேன்?’ என்று அவன் நினைத்துக் கொண்டான்.

அவனது யோசனையான முகத்தையே சாரா பார்த்துக் கொண்டிருக்க, “சார் நீங்க பர்மிட் பண்ணா தான் இந்த பேபிடால் என்னை பெயர் சொல்லி கூப்பிடுவா. சொல்லுங்க சார்” என்று ராகவி கூறினாள்.

தன் நினைவிலிருந்து மீண்டவன் சாராவைப் பார்த்து லேசான சிரிப்போடு தலையசைக்க, முகமெல்லாம் புன்னகையுடன் “ஓகே ராகி” என்றாள். சிரிப்பொலி எங்கும் பரவ பெண்கள் இருவரும் சிரிக்க, இலக்கியனும் மகிந்தனும் அதை புன்னகையுடன் பார்த்தனர்.

மகிந்தனிடம் வந்து கைகுலுக்கிய இலக்கியன், “ஐம் எஸ்.ஐ. இலக்கியன்” என்று அறிமுகமாக, “ஐம் மகிந்தன். ஹாப்பினெஸ் என்ற தண்ணார்வள தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர். நிலா சொல்லி தான் இங்க வந்தோம். இடம் ரொம்ப பீஸ் ஃபுல்லா இருக்கு. எங்கும் குழந்தைகளோட இந்த சிரிப்பு சத்தம்.. நீங்க தான் இந்த ஹோமுக்கு ஒரு நல்ல சப்போட்டர்னு கேள்விப்பட்டோம்” என்று மகிந்தன் கூறினான்.

தனது டிரேட் மார்க் புன்னகையுடன், “நீங்க இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி சார். உங்களுக்கு வேண்டிய சப்போர்ட் நாங்க தரோம்” என்று இலக்கியன் கூற, “ஓகே சார்” என்றவனும் தனது குழுவுடன் பணியைத் துவங்கினான்.

நிலாவும் ராகவியும் குழந்தைகளின் மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதாரம் சார்ந்த வேலைகளைச் செய்ய, மகியின் பி.ஏ சர்வேஷ் அங்கு தற்காப்பு கலைகள் சிலவற்றை அறிவுருத்தினார். மிகிந்தன் மற்றும் அவனது குழு பாலியல் சார்ந்த அறிவுறைகளை அந்ததந்த வயது குழந்தைக்கு ஏற்ப கற்பித்தும், அங்கு தேவையான மற்ற உதவிகளை செய்து கொண்டும் இருந்தனர்.

இலக்கியனும் அவர்களுடன் சேர்ந்து தன்னாலான உதவிகளைச் செய்ய, அன்றைய பொழுது மிகவும் அழகாய் ஓடியது. காலை மதியம் மற்றும் இரவு உணவுகளும் இவர்கள் குழுவினரே ஏற்பாடு செய்திருக்க, அன்று குழந்தைகளுக்கு ஏதோ விஷேச நாள் போன்று இருந்தது.

அங்குள்ள குழந்தைகளின் அளவுகளைக் கேட்டுக் கொண்டு அனைவருக்கும் புத்தாடைகளும் தருவித்திருந்தனர். அன்று நாள் முழுதும் சாரா ‘’ஆரூ இதான் எங்க ரூம்' ‘’ஆரூ இவ தான் சாய்ஷு. என் பிரண்டு' ‘’ஆரூ இங்க பாத்தியா இதெல்லாம் என் டிரஸஸ்’’ என்று தனது சின்ன சின்ன சந்தோஷங்களையும் அவளிடம் கூப்பிட்டு கூப்பிட்டு சொல்லிக் கொண்டிருந்தாள்.

அன்று மூன்று வேளை உணவும் அவளுக்கு அவளின் ஆரூ கையில் தான் ஊட்டப்பட்டது. அனைத்தையும் மனதில் இனம் புரியா இதத்துடன் பார்த்துக் கொண்டிருந்த இலக்கியன், சாரா ஆரண்ய நிலாவுடன் ஒன்றி பழகுவதை வெகுவாக ரசித்தான்.

இரவு நேரம் வந்திடவே ஆரூ கிளம்புவதாகக் கூறியதும் “ஆரூ அப்ப நீ எங்க கூட இருக்க மாட்டியா?” என்று சாரா கேட்க, நிலாவுக்கு அதில் இலையோடிய ஏக்கம் மனதை தைத்தது.

“ஆரூ அடிக்கடி உன்னை பார்க்க வருவேண்டா குட்டிமா” என்று அவள் கன்னம் கிள்ளி நிலா கூற, “நீ லக்கி வீட்டுக்கு வரியா? நான் இன்னிக்கு அங்க தான் போவேன். நீயும் வரியா?” என்று கேட்டாள் குழந்தை.

அவள் அருகே நின்றிருந்த இலக்கியன் மற்றும் நிலா இருவரின் விழிகளும் அதிர்வாய் விரிந்துக் கொள்ள, இருவருக்கும் அந்த தருணம் என்ன பதில் சொல்வதென்று தெரியாத சங்கடத்தைக் கொடுத்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் தயக்கத்தோடு ஏறிட்டுக் கொள்ள, அவர்களைப் பார்த்த சாரா, ‘ஏ ஜீபூம்பா.. நீ கேட்க சொன்னனு நம்பி கேட்டேன். எதுக்கு இவங்க இப்படி முழிக்குறாங்க?’ என்று மனதோடுக் கேட்க, ஜீபூம்பா உருண்டு உருண்டு சிரித்ததே ஒழிய ஒன்றும் பேசவில்லை.

மீண்டும் அவர்களைப் பார்த்த சாரா, “வரமாட்டியா ஆரூ?” என்று வினவ, சங்கடமாய் புன்னகைத்த நிலா, “வரேன் வரேன்டா தங்கபட்டு. நீங்க போய் சமத்தா தூங்குங்க” என்று சமாளிப்பாய் கூறினாள்.

சரியென்று தலையசைத்த சாரா ராகவியிடம் ஓட, இதழ் குவித்து பெரும் மூச்சை இழுத்துவிட்ட இலக்கியன், “சா..சாரி ஆரண்யா” என்றான். லேசான புன்னகையோடு “இருக்கட்டும் சார்‌. குழந்தை தானே” என்று அவள் கூற, தானும் தலையசைத்துக் கொண்டு சாராவைப் பார்த்தான்.

அவன் முகம் மீண்டும் மலர்ந்திட, “என் பேபிடால் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தா” என்று கூறியபடி நிலாவை நோக்கி, “அவமட்டுமில்லை. எல்லா குழந்தைகளும் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. ரொம்ப நன்றி ஆரண்யா” என்று கூற, தானும் மலர்ந்து சிரித்தவள் மறுப்பின்றி அவன் நன்றியை ஏற்கும் விதமாய் தலையசைத்தாள்.

பிரபா நெகிழ்ச்சியோடு தனது நன்றியைக் கூறி, “இந்த ஆசிரமம் என்னோட பெயரில் இருந்தாலும் இதுக்கு முழு பாதுகாப்பும் உதவியும் செய்யுறது இலக்கியன் தம்பிதான். உங்க எல்லாருக்கும் மனசார நன்றி சொல்லிக்குறேன்” என்று கூற, அனைவரும் புன்னகைத்தனர்.

அங்கு மகிந்தன் குழுவிடம் சென்றவன் மகிந்தனுடன் கைகுலுக்கி தன் நன்றியைத் தெரிவிக்க, அவன் விழிகளில் மெல்லி நீர்ப்படலம் உருவானது. “இந்த இல்லம் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானது. இங்க உள்ள ஒவ்வொரு குழந்தையோட சந்தோஷத்துலயும் என்னோட வாழ்வை நான் பார்க்குறேன். இன்னிக்கு ஏதோ திருவிழா போல அவங்க எல்லாரும் ரொம்ப நல்லா என்ஜாய் பண்ணாங்க. தேங்ஸ் மிஸ்டர். மகிந்தன். உங்க சேவை மேலும் பல இடங்களில் தொடரனும். என்னாலான உதவிகளையும் நான் உங்களுக்கு செய்வேன்” என்று இலக்கியன் கூற, “ரொம்ப நன்றி சார். எங்களுக்கும் ரொம்ப மன நிறைவா இருந்தது” என்று மகி கூறினான்.

அனைத்து நன்றியுரையும் முடிந்து யாவரும் புறப்பட இருக்க, ‘ம்ம்.. இன்றைய நாளோட கடைசி டச் நம்ம கொடுக்கனுமே?’ என்ற ஜீபூம்பா “என்ன சாரா உன் ஆரூ அன்ட் லக்கியோட வண்டில டிராவல் பண்றியா?” என்று கேட்டது.

சாரா ‘ஏ ஜீபூம்பா.. என்ன பண்ண போற?’ என்று மனதோடு வினவ, “வெயிட் அன்ட் வாட்ச்” என்ற ஜீபூ, “ஜீ…பூம்…பா” என்று மந்திரமிட்டது.

அப்றம் நம்ம சாரா அன்ட் ஜீபூம்பா அட்ராசிடீஸ் எப்படினு சொல்லிபுட்டு போங்க செல்லகுட்டிகளா😍

 

NNK-10

Moderator
ஜீபூம்பா-14

தனது குழுவினரை அனுப்பிய மகிந்தன் ராகவி, நிலா, இலக்கியன் மற்றும் சாராவிடம் வந்தான். என்ன நினைத்தானோ ராகவியைப் பார்த்தவன், “கவி” என மென்மையாக அழைக்க, இலக்கியனுடன் பேசிக் கொண்டிருந்தவளோ திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

அத்தனை நேரம் இருந்த கலகலப்பு மொத்தமும் சடுதியில் மறைந்து படபடப்பாக காணப்பட்டவளை இலக்கியன் ஆச்சரியமாக நோக்க, நிலா இதழ் மடித்து சிரிப்பை அடக்கியபடி பார்த்தாள்.

ஏதோ விடலைப் பருவத்திலுள்ள இளைஞனைப் போல் தயங்கித் தயங்கி, “நான் உன்னை வீட்டுல விடவா?” என்று அவன் வினவ, இவளுக்கு மூச்சே நின்றுவிட்டது.

“கவி..” என மீண்டும் மென்மையாக அவன் அழைக்க, “ஆங்..” என்று தூக்கத்திலிருந்து விழித்ததுப் போல் கேட்டாள். “மாமாவ பார்க்கனும். வீட்டுக்கு தான் வருவேன். நானே கூட்டிட்டு போகவா?” என்று சற்றே திடமாய் அவன் வினவ, “இ..இல்ல இருக்கட்டும். நான் நிலாகூட போயிக்குறேன்” என்று கூறினாள்.

சற்றே ஏமாற்றமாய் உணர்ந்தபோதும் விருப்பமே இன்றி அவள் வெறும் பேச்சுக்குக் கூறியது அவனுக்கு நன்கு புரிந்தது. 'சரி ஓகே' எனக் கூறவந்தவன் இன்னும் ஒருமுறை கேட்டுப் பார்ப்போமே என்ற உந்துதலில், “அல்ரெடி ரொம்ப லேட்டாச்சுடா. அவ உன்னையும் விட்டுட்டு போக ரொம்ப லேட் ஆயிடும். நான் அங்க தானே போறேன்?” என்று வினவ, அவள் இமைகள் யோசனையாய் படபடத்தது.

ராகவி நிலாவை நோக்க, “நீ அண்ணாகூட போ ராகி” என்று நிலா கூறினாள். மகிந்தனைப் பார்த்து அவள் மெல்ல தலையசைக்க, அவனிடம் உலகையே வென்ற சாதனைப் புன்னகை. அவளைக் கூட்டிக் கொண்டு தனது வண்டியை கிளப்பியவன் இலக்கியனுக்கு தலையசைத்து நிலாவைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் செல்ல, அத்தனை நேரம் கடினப்பட்ட அடக்கிய சிரிப்பை வெளியேற்றினாள்.

அவளது கிங்கினி நாதமான சிரிப்பை அவன் ரசித்து நோக்க, “எதுக்கு ஆரூ சிரிக்குற?” என்று சாரா கேட்டாள். அதில் முடிந்தமட்டும் தன் சிரிப்பை அடக்கியவள், “ஒன்னுமில்லைடா பட்டு” என்றுவிட்டு இலக்கியனைப் பார்த்து, “ராகி மாமாவோட பையன் அவங்க” என்று கூற அவனுக்கு விடயம் புரிந்து போனது. சிரித்தபடி அவனும் தலையசைக்க, “ஓகே சார். நான் வரேன்” என்றவள் சாராவைத் தூக்கி முத்தமிட்டு பதில் முத்தம் பெற்று தன் வண்டியிடம் சென்றாள்.

அத்தோ பரிதாபம் அந்த வண்டிதான் தற்போது ஜீபூம்பாவின் கட்டுப்பாட்டில் உள்ளதே! அவள் கிட்டதட்ட பத்து நிமிடங்களாக தனது வண்டியை இயக்க போராடிக் கொண்டிருக்க, உள்ளே பிரபாவிடம் கூறிக் கொண்டு சாராவின் உடைமைகளுடன் வந்த இலக்கியன், “ஏ நீ இன்னும் கிளம்பலையா?” என்றான்.

சட்டென கேட்டவன் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள் அவனைக் கண்டு ஒரு ஆசுவாச மூச்சை இழுத்துவிட்டு, “வண்டி ஸ்டார்ட் ஆகமாட்டேங்குது சார்” என்று கலவரமான முகத்துடன் கூறினாள்.

“அச்சுச்சோ.. என்னாச்சு ஆரூ?” என்று சாரா வினவ, தன் இதழ் பிதுக்கி, ‘தெரியவில்லை’ என்பது போல் சைகை செய்தவள் இலக்கியனைப் பார்த்தாள். “இப்படி வாமா” என்றவன் சாராவை இறக்கிவிட்டு வண்டியை உயிர்ப்பிக்க முயற்சிக்க, ‘ நீ என்ன மிதிச்சாலும் தேராது லக்கி. ஒழுங்க உன் பைக்ல கூட்டிட்டு போ' என்று ஜீபூம்பா கூறி சிரித்தது.

சிறிது நேரம் முயற்சித்துவிட்டு “என்ன பிரச்சினைனு தெரியலைமா. நாளைக்கு மெக்கானிக் வரசொல்லி பார்த்து அனுப்புறேன்” என்று அவன் கூற, “ஓகே சார்” என்றாள். “இப்ப எப்படி போவ ஆரூ?” என்று சாரா வினவ, “ஆட்டோல போயிக்குறேன்டா பட்டு” என்றாள்.

“இந்த டைம் ஆட்டோ கிடைக்குமா?” என்று அவன் வினவ, அதே கேள்வி தான் அவள் மனதிலும் ஓடியது. “பார்த்துக்குறேன் சார்” என்று அவள் கூற, “ஆரூ நீ வா நம்ம வண்டில போலாம்” என்று சாரா கூற, இலக்கியன் நிலாவையேப் பார்த்தான்.

“இ..இல்லைடா இருக்கட்டும்” என்று அவள் கூற, “இந்த நேரம் ஆட்டோ கிடைக்காதுமா. அதுவும் தனியா வேற போகனும். வா நானே கூட்டிட்டு போறேன்” என்று கூறினான்.

“எதுக்கு சார் உங்களுக்கு சிரமம்?” என்று அவள் தயங்க, “ஆரூ வா ஆரூ.. நம்ம வண்டில போகலாம்” என்று சாரா அழைத்தாள். அதற்குமேல் அவனிடம் எப்படி மறுப்பதெனப் புரியாது அவள் விழிக்க, சாரா தான் மீண்டும் அழைத்ததால், சரியென அவள் ஒப்புக் கொண்டாள்.

“ஏ.. வா போலாம்” என்று சாரா குதூகலிக்க, இலக்கியனோ எப்போதும் தனக்கு முன்னே அமர்த்திக் கொள்ளும் சாராவை தனக்கும் நிலாவுக்கும் இடையில் அமர்த்திக் கொண்டு நிலாவுக்கு சங்கடத்தைக் குறைத்தான்.

அவளது விலாசம் கேட்டுக் கொண்டவன் வண்டியை இயக்க, அந்த தருணம் கவிதையாய் அவர்கள் மனப்பெட்டகத்தில் அனுமதியின்றி பதிந்தது. சாராவுடன் நிலா பேசியபடியே வர, ‘’உங்களுக்குலாம் சீரியல் எபெக்ட்டு தான்டா ஒத்துவரும்’’ என்று ஜீபூம்பா மந்திரம் போட்டது.

அடுத்து வந்த ஸ்பீட் பிரேக்கரில் வண்டி ஏறி இறங்க, பிடிமானத்திற்கு அவள் கரங்கள் அவன் தோளை இறுகப் பற்றிக் கொண்டது. அதில் இருவருக்குள்ளும் மின்சாரம் பாய்ந்த உணர்வு. 'அய்யோ.. இதேதடா கொடுமை’ என்ற எண்ணத்தோடு அவள் சங்கடமாய் கரம் எடுக்க ‘போடுடா அடுத்த ஸ்பீட் பிரேக்கர' என்று ஜீபூ கூறியதைத் தொடர்ந்து அடுத்த வேகத்தடையில் வண்டி ஏறி இறங்கியது.

மீண்டும் அவன் தோள் பற்றியவளுக்கு வியர்த்து விறுவிறுத்துப் போக, அவளது கைகளின் ஈரம் அவன் சட்டையைத் தாண்டி தோள்வரை ஊடுருவியது. அதில் அவனுக்கே உடலெல்லாம் சில்லிட்டு சிலிர்க்க, மீண்டும் கரத்தினை எடுக்க அவள் பிரயத்தனப் படும்படியாக இல்லாது சாலை சதி செய்தது.

அவனும் பள்ளம் இல்லாத பகுதியாகப் பார்த்து வண்டியை செலுத்த, ஒரு வழியாக அவள் வீடு உள்ள தெரு வந்தது. அவள் வீட்டைக் கேட்டு அறிந்து கொண்டவன் அங்கு வண்டியை நிறுத்த, பதட்டமாக தனது வண்டி சாவியை எடுத்துக் கொண்டு கார்த்திக் வெளியே வந்திருந்தான்.

இலக்கியனுக்கு நன்றி சொல்ல எத்தனித்தவள் தன் மாமனைக் கண்டு “மாமா” என்க, “பாப்பா..” என்றபடி விரைந்தவன், “ஏன்டா ஃபோனே எடுக்கலை” என்றான்.

அவன் கண்களெல்லாம் சிவந்து பதட்டத்தில் துடித்துக் கொண்டிருக்க, அதை சற்றே அதிசயித்து தான் பார்த்தான் இலக்கியன். தனது தோளில் தூங்கிய சாராவை வைத்தபடி தன் மாமனைப் பார்த்து திரும்பியவள் “என்ன மாமா?” என்று சத்தமாக கேட்டதில் சாரா “ம்ம்..” என்று அசைய, “அச்சோ.. ச்சோ..ச்சோ” என்று தட்டிக் கொடுத்து, “என்ன மாமா? ஏன் பதட்டமா இருக்கீங்க?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.

அதில் தானும் குரல் தழைத்து, “ஏன்டா பாப்பா ஃபோன் எடுக்கலை. எத்தனை முறை போட்டேன் தெரியுமா? பயந்தே போயிட்டேன். லேட்டாச்சுனா எப்பவும் சொல்லுவியே. இன்னிக்கு ஏதும் சொல்லவும் இல்லை. நான் கால் பண்ணியும் எடுக்கலை” என்று அவன் கேட்க, “அச்சோ மறந்தே போயிட்டேன் மாமா. ஃபோன்ல சார்ஜே இல்லை. சைலெண்ட்ல வேற போட்டு வச்சுட்டேன்” என்றாள்.

“பயந்துட்டேன் நிலா” என்று அவன் பெருமூச்சுவிட, அங்கு மதியைத் தோளில் போட்டபடி வெளியே வந்த ஆதி, “அம்மாடி.. வந்துட்டியாமா? உன் மாமா எங்க நிலாவக் காணும் நிலாவக் காணும்னு படுத்தி எடுத்துட்டாங்க. வானத்துல இருக்கும் தேடிபாருயானு சொல்லிட்டு போனா வண்டி சாவியை எடுத்துட்டு விறுவிறுனு போறாரு. நான் கூட வண்டில விட்டத்த பார்த்துட்டே போகப்போறாரோனு பதறிட்டேன்” என்று கூறி கேலி செய்தாள்.

அதில் சிரித்துக் கொண்டவள், “சரி போங்க வரேன்” என்க, அவர்கள் இருவரும் உள்ளே சென்றனர். இலக்கியனிடம் திரும்பி, “தேங்கியூ சார்” என்று அவள் கூற, “எல்லாருக்கும் ரொம்ப செல்லம் போலயே” என்று கேட்டான்.

அதே புன்னகையுடன் “ஆமா சார். அம்மா அத்தைய விட அக்கா மாமாக்கு தான் நான் செல்லம். அதுவும் மாமா” என்று சிரிக்க, தானும் புன்னகைத்தவன், “ம்ம் தெரியுது. டேக் கேர்மா. வண்டிய நாளைக்கு சர்விஸ் பார்க்க சொல்றேன்” என்றான்.

“ஓகே சார். தேங்கியூ” என்று அவள் திரும்ப, “ஆரா..” என்றான். என்ன என்பது போல் அவள் திரும்ப, சிரித்தபடி, “என் பேபிடால்” என்று கை நீட்டினான். அப்போதே சாராவை வைத்திருப்பது உணர்ந்தவள், “அச்சோ..” என்றபடி வர, அவளிடமிருந்து சாராவை வாங்க முற்பட்டான்.

நிலாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு “ம்மா..” என்று குழந்தை தூக்கத்தில் பிதற்ற, நிலாவின் உடல் சிலிர்த்து போனது. குழந்தையை சட்டென தன்னோடு அணைத்துப் பிடித்தவள் அவளைப் பார்க்க, அவள் பால் முகம் துயிலில் இருந்தது. 'பாப்பா' என்று மனதோடு அழைத்துக் கொண்டு மெல்லிய புன்னகையுடன் முத்தமிட்டவள் குனிந்து அவனிடம் குழந்தையைக் கொடுக்க, குழந்தையை வாங்கி முன்னே போட்டுக் கொண்டான்.

“பார்த்து போங்க சார். தூங்கிட்டா வேற” என்று அவள் கூற, “ஓகேமா” என்று புறப்பட்டான். தெரு முனையில் அவர்கள் திரும்பும் வரை நிலா அவர்களையே பார்த்தபடி நிற்க, அவள் பார்ப்பதை தானும் கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டான்.

வீடு வந்து சேர்ந்தவன் சாராவை படுக்கையில் கிடத்திவிட்டு கலைப்பு தீர குளித்து வந்து படுத்தான். அவன் வந்தவுடன் அவனைக் கட்டிக் கொண்ட சாரா, “ம்மா..” என்று முனக, அவனுள் ஒரு இன்பப் படபடப்பு.

சற்றுமுன் சாராவின் அம்மாவென்ற அழைப்பில் நிலாவின் வதனம் காட்டிய மாற்றங்களை நினைத்துப் பார்த்தவனுக்கு அவளது உணர்வுகள் நன்கு புரிந்தது. சாரா தன் வீட்டிற்கு அவளை அழைத்ததும் செங்காந்தளாய் சிவந்த அவளது முகமும், அடர் சிகப்பேறிய அவளது இளஞ்சிவப்பு காதுகளும் அவன் கண்முன் வந்துபோக, அவன் இதழில் அழகாய் ஒரு புன்னகை குடிகொண்டது.

'அந்த சிகப்பின் காரணம் என்ன? வெட்கமா?’ என்று கேட்ட அவனது மனசாட்சியின் குரலில் திடுக்கிட்டவன் தனது எண்ணம் போகும் போக்கில் அதிர்ந்து தான் போனான். 'என்னடா இது? இலக்கியா? ஆரா மேல லவ்வா?’ என்று அவனது மனசாட்சி கேலி செய்ய, ‘ஏன் இருக்க கூடாதா?’ என்று தான் அவனுக்குக் கேட்கத் தோன்றியது.

அவனது எண்ணங்களின் பயணத்தை தடை செய்யும் விதமாய் அவனது அலைப்பேசி அலற, “ம்ம்..” என்று சாரா சிணுங்கினாள். “ஓகே ஓகேடா பேபி..” என்றபடி அலைப்பேசியை எடுத்தவன் சைலெண்ட் செய்து எழ முற்பட, அவன் பேபிடால் அதற்கு விடுவதாக இல்லை.

அந்த கோழிக்குஞ்சை நன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், அழைப்பை ஏற்று, “ஹலோ..” என்று மென்மையாய் அழைக்க, அந்த குரலின் மென்மையில் பேசுவது வேறு யாரோவென்று எண்ணியவர், “ஹலோ இலக்கியன் சார் இருக்காங்களா?” என்றார்.

'அட கொடுமையே’ என்றெண்ணியவன், “மிஸ்டர் ராம். நான் இலக்கியன் தான் பேசுறேன்” என்று அதே மென்மையான குரலில் கூற, “ஓ..ஓகே சார். குரல் வேற மாதிரி இருந்தது” என்று அவர் கூற, தன் நெஞ்சோடு ஒன்றியவளைப் பார்த்து பாசமாய் புன்னகை செய்தவன், “சொல்லுங்க ராம்” என்றான்.

“சார்.. நீங்க இன்னிக்கு ஒருத்தர ஃபாலோ பண்ண சொன்னீங்கள்ல? அவர் இன்னிக்கு காலைல பூரம் வீட்ல தான் இருந்தார். சாயிந்தரம் அவரோட வேலை செய்யும் தோழர சந்திச்சுட்டு *** பகுதில உள்ள வயலுக்கு போயிட்டு வீட்டுக்கு திரும்பிட்டார்” என்று ராம் கூற “எ..எந்த வயல் சொன்னீங்க ராம்?” என்று மீண்டும் கேட்டான். அவர் அந்த பகுதியை கூற, “ஓகே ராம். ரொம்ப நன்றி” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அவனது ஆழ்மனம் படபடவென துடித்தது. அந்த இறந்துகிடந்த குழந்தையின் முகமும், பதைபதைப்போடு ஆரண்யாவிடம் பேசிய கார்த்திக்கின் முகமும் மாறி மாறி அவன் மனதில் வந்து போக, தலை வின்னென்று தெரித்தது.

அங்கு தனது அறை பால்கனியில் வானைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தவன், “போன தடவை போல எந்த தப்பும் நடந்திடவே கூடாது. நல்லவேளை நம்ம பக்கமிருந்து எந்த ஆதாரங்களும் இல்லாததால தப்பிச்சுட்டோம். ஜாக்கிரதை” என்றுவிட்டு திரும்பி படுக்கையில் படுத்திருக்கும் தனது மனைவி மற்றும் மகளைப் பார்த்துக் கொண்டே பெருமூச்சு விட்டான்.

அப்றம் நம்ம சாரா அன்ட் ஜீபூம்பா அட்ராசிடீஸ் எப்படினு சொல்லிபுட்டு போங்க செல்லகுட்டிகளா😍

 
Status
Not open for further replies.
Top