எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீ தூரத்தில் நாணல் - கதை திரி

Status
Not open for further replies.

nilakalam36

Moderator
வணக்கம் .
நான் உங்கள் நிலா கால போட்டியாளர் NNK 36
இது என்னுடைய புதிய முயற்சி
ஏதாவது பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் நண்பர்களே. ஜனவரி 1 முதல் அத்தியாயத்துடன் வருகிறேன்.

உங்கள் ஆதரவை எதிர்ப்பார்க்கும்
உங்கள் NNK 36
 

nilakalam36

Moderator

அத்தியாயம் - 01​

காலங்கள் ஓடியும் – மறையவில்லை​

கண்களின் ஓரம் நீர்த்துளிகள்​

விலக நினைக்கிறேன் உன்னை விட்டு​

விரட்டும் உன் நினைவுகள் நெஞ்சோரம்​

எங்கும் பனி மழை பொழிந்து பூமகள் குளிர்ந்து காணப்பட்டாள். பதியபல கிராமத்தில் மக்கள் சுறுசுறுப்புடன் எழுந்து உற்சாகத்துடன் தமது அன்றாட வேலைகளை கவனிக்க தொடங்கினார்கள்.பதியபல கிராமம் இலங்கைத்தீவின் நுவரெலியா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம்.இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் சிங்கள இன மக்கள் ஆவார். அங்கே ஒரு வீட்டில் கார்களில் அசைந்தாட யன்னல் வழியே விடியலை வெறித்த வண்ணம் இருந்தாள் ஒரு மாது.தேகம் மெலிந்து கன்ன எலும்புகள் துருத்தி உயிரப்பற்ற கண்களுடன் காணப்பட்டாள். அவள் கவிலயா, இருபத்தாறு வயது நிரம்பிய மங்கை.​

திடீரென்று வலிய கரம் இரண்டு இடையோடு வளைத்து அவள் மேடிட்ட வயிற்றை தடவியது. மலர்ந்து விசிகசித்த வதனத்துடன் திரும்பியவளின் எதிரே அடக்கப்பட்ட கோபத்துடனும், வன்மை புன்னகையுடனும் நின்றான். சரீரத்தில் நீர் வற்றி போக பயத்தில் திகைத்த வண்ணம் நின்றாள். எதிர்பாராத விதமாக அவளைப பிடித்து தள்ளினான் . “ஐமாய்”என சத்தமிட்டபடி விழுந்தாள். கைகள் தானாக வயிற்றை அணைத்து கொண்டது.கைகள்​

ஏதோ பிசுபிசுப்பாக தோன்ற கண்திறந்து பார்த்தவள் திகைத்தாள். அனைத்தும் கனவு . பயத்தில் கைகள் வேர்வை யில் கசிந்தன. மேசை மேல் இருந்த தண்ணீரை அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவள் நேரத்தை பார்க்க மணி 6.30 . தன்னை சுத்தபடுத்தி கொண்டு சமையலறை சென்று காலை உணவாக ஊற வைத்த கொண்டை கடலையை அவித்து தாளித்தாள். மதிய உணவு சோறும் பீட்ரூட் வறையும் போஞ்சி குழம்பும் செய்தாள். இதெல்லாம் வயிற்றில் இருக்கும் ஜீவனுக்கு மாத்திரமே. இல்லை என்றால் என்றோ காற்றில் கரைந்து காணாமல் போயிருப்பாள்.அவள் கடந்து வந்த பாதை எங்கும் முட்கள். அப்படியும் ஒரேயடியாக சொல்ல முடியாது. சாளரம் வீச அவளது ஜமாய் இருந்தான் . ஆனால்… அதற்கு மேல் சிந்திக்க முடியாமல் வேலைக்கு கிளம்ப தயாரானாள்.​

அவள் அங்கு மேல் மாடியில் வாடகைக்கு குடியிருக்க வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன.கீழ் வீட்டில் குமாரி இரத்தினக்கல் இருக்கிறார். ஐம்பது வயதை நெருங்கிய சிங்கள பெண்மணி.கணவன் தமிழர், அந்த காலத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். ஆதலால் அவருக்கும் அவரது மறுக்கும் தமிழ் சிங்களம் இரண்டு மொழியும் அத்துப்படி.சிறிது ஆண்டுகளுக்கு முன்னர் அவரது கணவர் இயற்கை எய்தினார்.ஒரே மகனும் குடும்பத்துடன் கொழும்பில் வேலை காரணமாக வசிக்கின்றனர். கணவர் வாழ்ந்த இடத்தில் தனது வாழ்க்கையை கழிக்க எண்ணி மகனுடன் செல்லவில்லை. தனிமையில் இருக்கும் குமாரிக்கு கவிலயா தனிமை போக்க வந்தவள். சற்று மேடிட்ட வயிற்றுடனும், ஏழ்மை தோற்றத்துடனும் ஊருக்குள் வந்தவளை யாரும் தூற்றவில்லை எனினும் யாருக்கும் அவள்மீது நல் அபிப்பிராயம் இல்லாது அவள் ஒரு சரியில்லாத பெண்ணாகவே நினைத்து கொண்டனர். ஆனால் குமாரி அவள் நிலை கண்டாலும் அவளை பிழைகளுடன் பார்க்க முடியவில்லை. எல்லோரும் எச்சரித்தும் கூட தன் வீட்டு மாடியில் அவளை தங்க வைத்து அன்பாக இன்றுவரை நடந்து வருகிறார்.அதற்கு காரணம் கவியின் பொறுமையும் அலட்டல் இல்லாத அமைதி பாங்கும் ஒரு காரணம்.கவி இங்கு குடி வந்து இரு வாரங்கள் கடந்து விஜய சிங்க (குமாரியின் ஒரே மகன்) குடும்பம் பதியபல வந்திருந்தனர். அக்கம் பக்கத்து வீட்டனரின் பேச்சை கேட்டும் தன்னிடம் கூட எல்லை வைத்து பழகும் குமாரி கவியிடம் காட்டும் அன்பு கண்டு விஜய சிங்க வின் மனைவி மாலினிக்கு கவி மேல் வெறுப்பு தோன்றிவிட்டது. அதன் காரணமாக கவியை புண்படுத்த கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்தாள். இத்தகைய தாக்குதலை எதிர்பார்க்காத கவி நெஞ்சம் பிளப்பது போல் வலித்தாலும் அமைதியாக கடந்து விடுவாள். காரணம் குமாரி.ஓரிரு தினங்கள் தங்கி விட்டு செல்பவர்களுக்காக தான் வெளியேறினால் , குமாரி வருத்தப்படுவார் அன்றி அவளுக்கும் வேறு போக்கிடம் ஏது, சந்தோஷம் இல்லை என்றாலும் அமைதியும் பாதுகாப்பும் இங்கு தாரளாமாக உள்ளது. வயிற்றில் உள்ள சிசு இல்லை என்றால் அவள் முடிவு எப்போதோ முடிவடைந்திருக்கும்.​

கீழே வந்தவள் குமாரியின் சொல்லி கொண்டு வேலைக்கு சென்று விட்டாள்.போகும் அவளையே பாரர்த்தவருக்கு "என்ர வயித்துல இருக்கிற பிள்ளை தப்பான பிள்ளை இல்லையம்மா. ஆனால் நான் அவர் விட்டுட்டு விலகிட்டன்.நானா தேடின வாழ்க்கை.நானே முடிச்சுப்போட்டன். இனி என் பிள்ளைக்காகதான் என்ர வாழ்க்கை.உங்களுக்கு என்னை பிடிக்காட்டி நான் போறன்" என்று இங்கு வந்த இரண்டாம் நாள் வந்து நின்றவள் கண்முன் தோன்றினாள்.அவள் முகத்தில் இருந்த வேதனை அவள் கடந்த காலத்தை பற்றி கேட்க முடியவில்லை. அன்று தன் மகளை போன்று என்று கூறி அவளை அங்கேயே தங்க வைத்தார். அவளுக்கு ஒரு விடிகாலம் பிறக்க கடவுளிடம் கோரிக்கையும் வைத்தார் .​

 
Last edited:

nilakalam36

Moderator

அத்தியாயம் - 02​

அன்று வழமை போல மாலை வேலை முடித்து வந்தவள் வாசலில் நின்ற குமாரியை பார்த்து புன்னகை புரிந்தாள்."என்ன பிள்ளை வேலை முடிஞ்சிட்டோ, தேத்தண்ணி குடியன் , உனக்கும் சேத்துதான் போட்டனான்" என்க,​

"ஏனம்மா நான் போட்டு குடிப்பன்தானே, உங்களுக்கு ஏன் கரைச்சல் (சிரமம்)"என்றாள்.​

" இதில என்ன கரைச்சல், போய் முகம் கழுவிட்டு வந்து குடி ஆறப்போது" என்று சொல்லவும் வாசலில் காணப்பட்ட நீர்க்குழாயில் முகம்​

கழுவி தேநீரை அருந்தினாள்.அந்த ஊரின் சீதளத்திற்கு மிகவும் அருமையாக இருந்தது ஒவ்வொரு தேநீர் சொட்டும்.​

"என்னம்மா என்ன சொல்லோணும் என்னட்ட, சொல்ல வந்திட்டு சொல்லாமல் அந்தரபடுறீங்கள்(தயக்கம்),சொல்லுங்கோ என்னண்டாலும்" அவர் ஏதோ கூற வந்து தயக்கத்தில் அமைதியாக இருப்பதை பார்த்து கேட்டாள். " இல்ல பிள்ளை நாளைக் விஜயனும் மாலினியும் வருகினம், கூட விஜயன்ர யாலுவும் (நண்பர்) வாறார். அதான் இப்ப கிட்டடிக்க (அண்மையில்) தொடங்கின கம்பனியோட பார்ட்னர், ஏதோ வேலை விசயமா இங்க வாறார் , ரெண்டு நாள் தான் இருப்பினம், மாலினி ஏதாவது மனசு நோக கதைச்சாலும் எனக்காக கொஞ்சம் பொறுத்து போ " என கண்கலங்கினார்.​

அவளுக்கு புரிந்து விட்டது. மாலினியின் சுடு சொற்களால் காயப்பட்டு விடுவாள் என கவலை கொள்ளும் தாயுள்ளத்தை இருக்காக எதையும் பொறுத்து கொள்ளலாம் தான்.ஆனால் வயிற்றில் உள்ள சிசுவை பழிக்கும் போது அவள் ஒவ்வொரு நொடியையும் நொருங்கி போவாள். சாய தோள் ஏங்கி தவித்து போவாள் . இந்த ஏக்கம் சிறு வயதில் இருந்தே இருக்கிறது. இன்னும் தீர்ந்தபாடில்லை. தனக்கு தான் கிடைக்கவில்லை.தன் உதிரத்துக்கும் கிடைக்காமல் அவளே தடையாக உள்ளாள்."முடிந்த அளவு நான் உன் பக்கத்தில் இருப்பேன், யோசிக்காதேயம்மா" என்ற குமாரியின் குரலில் தன் நினைப்பில் இருந்து வந்தாள். அவரை கவலை பட வேண்டாம் தான் சமாளிப்பதாக சொல்லி விட்டு மேலே வந்து விட்டாள் ஒழிய மனதில் ஏதோ பதற்றம். 'ஜமாய் நம் குழந்தை அப்பா வாசம் இல்லாமல் தவிக்கப்போகுதோ, எனக்கும் உங்கள் கைகளில் அடங்கோணும் போல இருக்கு, ஆனால் உங்களுக்கு எங்களை பிடிக்காது தானே, எங்கள் நினைவு கூட உங்களுக்கு இருக்காது' கண்ணிகள் குளமாகின.அவள் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி கடினமாக உள்ளது என் கழிவிரக்கம் கொண்டாள்.​

இதே மனநிலையுடனே குழந்தைக்காக சாப்பிட்டு வந்து படுத்தாள்.ஆனால் தூக்கம் வரவில்லை.முற்றிலும் அவள் ஜமாயின் நினைவுகள். விடியல் என்ன வைத்துள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

காலையில் பத்து மணியளவில் கீழ் வீட்டு கிச்சன் அமளிதுமளி ஆனது. வரும் வெளிநாட்டு விருந்தாளிக்கு சமையல் தட புடல் ஏற்பாடு. " நீ இரு கொஞ்சத்துக்கு நான் பாக்கிறன் , இண்டைக்கு நிறைய வேலை"

"அதொண்டுமில்ல பெரிசா பொறுக்கிற வேலை இல்லை. வச்சு இறக்கினது மட்டும் தான் நான்"

ஒருவாறு சமையல் முடிஞ்சதும் குளிச்சிட்டு வருவதாக மேலே சென்றாள். கீழே வரும்போது விஜய கார் நின்றது. மாலினியின் சொல் அம்பிற்கு தன்னை தயார்படுத்தி உள்நுழைந்தாள்.
"அண்ணா அக்கா சுகமா இருக்கியளோ? பிள்ளைகள் வரேல்லையோ"
" நல்ல சுகம், அவே அம்மம்மா வீட்ட போட்டினம்,மாலினியும் நாளைக்கு மோர்னிங் அங்க வெளிக்கிடுறா"
சிறு புன்னகையுடன் ஏறிட மாலினி முறைத்து பார்த்தாள். திடீரென ஏதோ தோன்ற இடது பக்கம் பார்த்தவள் அதிர்ந்தாள். இமைக்க மறந்தாள். ஆறடி உயரத்தில் சிவந்த நிறத்தில் கண்கள் கூர்மையுடன் இவள் வயிற்றில் பதிய இவளை நோக்கி வந்தான்.
" Mr. அஹ்மத், இது கவிலயா, என் உடன் பிறவா சகோதரி" என்றான் விஜய சிங்க ஆங்கிலத்தில்.தொடர்ந்து,
"இவர் அஹ்மத்,என்னொட புது பார்ட்னர் பங்களாதேஷில் இருந்து வாறார்"
அவளுக்கு செயலற்ற நிலை. அவனுக்கு அப்படி இல்லை போலும் இயல்பா கை குலுக்கி ஹலோ சொன்னான் . அதில் நிதானத்துக்கு வந்தவள் ஹலோ என பதிலுக்கு முணுமுணுப்போடு. பேயை கண்டவள் போல் அவ்விடத்தை விட்டு வேகமாக நகர்ந்தாள்.
சமையலறைக்குள் நுழைந்தவள், குமாரியிடன் தான் வாழை இலை வெட்டி வருவதாக சமையலறை கதவூடாக பின்புறம் சென்றாள். இனி எங்கு போவது என்ன செய்வது இதே எண்ணம் தான்.அவனை பற்றி நினைக்க பதற்றம் கூடியது.
"சோ"
அந்த குரலில் தூக்கி வாரிப்போட திரும்பினாள்.
அஹ்மத் நின்று கொண்டிருந்தான்.
ஓட்டம் இன்னும் முடிக்கவில்லை போல மிஸஸ் அ..." என்று இழுக்க அவள் முகம் வெளிறி உடல் வேர்வை யில் நனைந்தது. ஏதோ நினைவுகள் சிக்கி கொண்டு தவித்தது பெண்ணுள்ளம்.

உடனே அவ்விடத்தை விட்டு போக சொல்லி மனம் உந்த கால்கள் அதை செயலாற்ற மறந்தது போல வேரோடி நின்றன.

* என்ன மகளே வாழை இலை வெட்டேலையோ, நான்தான் சொன்னனே நான் வெட்டுவன் எண்டு...* என்று சொல்லிய வண்ணம் வந்த குமாரி அவளின் பதற்ற நிலை பார்த்து ஆதரவாக அணைத்து, 'என்னாயிற்று மகள் என்ன செய்யுது * என்று,அவள் முகம் வருட சுய நினைவுக்கு வந்தவள் நாக்கு வறண்டது.

அவள் தேவை அறிந்து அவள் முன்னே நீண்ட வலிமயான கரங்கள் தண்ணீர் கிளாசை நீட்டின.குமாரி நீரை வாங்கி புகட்டினார். ஒருவாறு சமாளித்து எழுந்து நின்றாள்."ஒன்றும் இல்லையம்மா தலை கொஞ்சம் சுத்துற மாதிரி இருந்திச்சு, இப்ப ஓகே தான்"
" சரி நீ உள்ள போ நான் வெட்டி கொண்டு வாறன்.பின்னேரம் சுது வீட்ட போய் பிறசர் பாத்திட்டு வருவம்."
*எனக்கொண்டும் இல்லை நாளண்டைக்கு கிளினிக் அங்க பாப்பினம்" அவரை சமாதானப்படுத்தி விட்டு திரும்பினவள் திகைத்தாள். முகம் சிவந்து இறுகி இவளையே பார்த்து கொண்டிருந்தான் அஹ்மத். 

nilakalam36

Moderator

அத்தியாயம் 03​

வீட்டிற்குள் வந்தவள் மேலே போக நினைத்த நேரம் மாலினி அவளை அழைத்து உணவு பரிமாறுமாறு கூறினார். அவளுக்கு தான் அந்த வீட்டின் எஜமானி என கவிக்கு காட்டும் எண்ணம். அவளின் பேச்சை தட்ட முடியாது கவி பரிமாற துவங்கினாள். என்னதான் இயல்பாக இருப்பதாக காட்டினாலும் அவளின் உடலில் மெல்லிய நடுக்கம் காணப்பட்டது. மேடிட்ட வயிற்றுடன் பரிமாறியவளின் தோற்றம் கண்டு அஹமத் முகம் கற்பாறை என இறுகியது. அவனது முகம் பாராமலே அவனது கோபம் அறிந்தவள் மேலும் அச்சம் உற்றாள். " அம்மா கேசரி இண்டைக்கு (இன்று) நல்லா இருக்கு " என விஜயன் பாராட்ட, அதில் மகிழ்ந்த குமாரி" அப்பு அத செஞ்சது கவிதான். இது அவளோட ஜமாய்க்கு பிடிச்ச இனிப்பாம்" இயல்பாய் சொல்லிவிட அஹமத் முகம் மேலும் இறுக, கவி தடுமாறினாள்." என்ன மாமி, இப்படி வான் எல்லாருக்கும் குணங்களை ஆராயாமல் வீடும் குடுத்து பாராட்டியும் வச்சால் பிறகு இது வேற மாதிரி வீடா தான் போகும். குணம் கெட்ட பிள்ளைகள் பிறக்கப் போற சத்திரம் தான்" என புது நபர் வந்திருக்கும் என்ற எண்ணம் இல்லாமல் வழமை போல் கவியை காயப்படுத்தினாள்.​

குமாரி கண்டிப்பான பார்வை ஒன்றை மாலினியிடம் செலுத்தி விட்டு இறைஞ்சுதலுடன் கவியை பார்த்து விட்டு "பிள்ளை இன்னும் கொஞ்சம் கேசரி அவருக்கு போடு" என இயல்பாக்க முயன்றார். அவனும் இவள் வைக்க முயல தடுத்து விட்டு " என் மனைவி செய்யும் ஸ்வீட்டே எனக்கு பிடிக்கும்" பொதுவாக கூறிவிட்டு எழுந்து விட்டான். அவளுக்கு ஏனோ அவளது கணவனின் நினைவு. குமாரிக்காக சிறிது சாப்பாட்டை கொறித்து விட்டு மேலே சென்று விட்டாள். அவனை இங்கு பார்த்ததும் அவளின் கடந்த காலம் அவளை துன்புறுத்தியது.​

மாலை எழுந்தவள் கீழே போக விரும்பாமல் மேலே இருந்தாள். ஆனால் மாலினி கீழிருந்து அழைக்கவும் தயங்கிய வண்ணம் சென்றாள். அவள் சென்ற நேரம் மாடி படியின் இறுதியில் அகமத் நின்று பங்களாதேஷில் ஏதோ போனில் பேசிக் கொண்டிருந்தான். என்ன தோன்றியதோ திரும்பிப் பார்த்தவன், " call you back Juhi" போனை வைத்துவிட்டு அவளை பார்த்து ஏளன சிரிப்பு ஒன்றை உதிர்த்தான். அவளோ யூஹி என்ற பெயரில் என்ன அலைகள் மோத தொலைத்து நின்றாள்.அதன் பலனாக கவனம் இன்றி படியில் கால் வைத்தவள் கீழே சரிந்தாள். நொடியில் சமாளிக்க முடியாது கண்களை இறுக மூடி தடுமாறிய வேளை அவன் அவளை அனணத்திருந்தாள். அவளால் சிறிது நேரத்துக்கு அதிலிருந்து மீள முடியவில்லை. அவனை இறுக அணைத்து அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தாள்."என்ன கண்றாவியோ, ஊருல இருக்குற ஒரு ஆம்பளையும் விட மாட்ட போல" மாலினியின் குரலில் தீச்சுட்டா போல் விலகி நின்றாள். அவனும் இறுகிப்போனான். இன்னொருத்தி கணவனுடன் தான் ஒன்றியதை நினைத்து அருவருத்துப் போனாள். கண்ணீர் நிற்காமல் வழிந்தது. மாலினி ஒரு அவளை மிகவும் மோசமாக சாடிய வண்ணம் இருந்தாள். மேலும் குழந்தை பெற்று இழிவாகப் பேசவும் அஹமத் அங்கிருந்த ஜாடி ஒன்றை போட்டு உடைத்து தனது கோபத்தை காண்பித்தான். அந்தச் சத்தத்தில் குமாரி விஜயன் எல்லோரும் அவ்விடத்திற்கு வந்தனர். அவளால் அவளின் குழந்தையைச் சாடும் மாலின் கடும் சொற்கள் தாங்காது கண்ணீர் மட்டுமே வடிக்க முடிந்தது. குமாரிக்கு ஏதோ மாலினி எக்கு தப்பாக பேசி விட்டாள் என புரிந்தது. கவிக்கு ஆதரவாக அணைத்து கொள்ள போகும் நேரம் தனது மொத்த ஆத்திரத்தையும் கவியின் கன்னத்திலே காட்டி இருந்தான் அஹமத்.​

 
Last edited:
Status
Not open for further replies.
Top