எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீ தூரத்தில் நாணல் - டீசர்

nilakalam36

Moderator

டீசர்​

"ஓட்டம் இன்னும் முடிக்கவில்லை போல மிஸஸ் அ....." என்று இழுக்க​

அவள் முகம் வெளிறி உடல் வேர்வை யில் நனைந்தது. ஏதோ நினைவுகள் சிக்கி கொண்டு தவித்தது பெண்ணுள்ளம்.​

உடனே அவ்விடத்தை விட்டு போக சொல்லி மனம் உந்த கால்கள் அதை செயலாற்ற மறந்தது போல வேரோடி நின்றன.​

" என்ன மகளே வாழை இலை வெட்டேலையோ, நான்தான் சொன்னனே நான் வெட்டுவன் எண்டு........ " என்று சொல்லிய வண்ணம் வந்த குமாரி அவளின் பதற்ற நிலை பார்த்து ஆதரவாக அணைத்து, "என்னாயிற்று மகள் , என்ன செய்யுது " என்று அவள் முகம் வருட சுய நினைவுக்கு வந்தவள் நாக்கு வறண்டது.​

அவள் தேவை அறிந்து அவள் முன்னே நீண்ட வலிமயான கரங்கள் தண்ணீர் கிளாசை நீட்டின.​

***************************************​

"சோ"?​

" நா....ன் .. வர..... வில்லை...... உங்கள் வீட்டுக்கு " என்று வாய் தந்தியடிக்க அவன் முகம் பார்க்காமல் சொல்ல​

"ஓகே. அப்போ என் குழந்தை... "என அவள் ஏழு மாத வயிற்றில் பார்வை பதித்தான் அழுத்தத்துடன்.அவன் அழுத்தமான குரலில் அடக்கப்பட்ட சினம் அவளுக்கு புரிந்தது.வயிற்றை நடுங்கும் கரங்கள் பற்றியவாறு"இது ஒன்றும் உங்கள் குழந்தை இ....."​

அதற்கு மேல் பேச முடியாது மயக்கம் ஆட்கொண்டது அவளை இரத்தத்தின் பாய்ச்சலில்.​

 
Last edited:
Top