எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் காற்றாய் உனை ஏற்றேன்! - டீஸர் திரி

Status
Not open for further replies.

NNK-29

Moderator

உயிர் காற்றாய் உனை ஏற்றேன்! கதைக்கான டீஸர்கள் இங்கே பதிவிடப்படும்🥰🥰🥰

NNK-29

Moderator

டீஸர் - 1

“மணி ரெண்டாகிடுச்சி ம்மா. இந்நேரம் வீடியோ அப்லோட் ஆகிருக்கும். நம்ம சேனல் வைங்க” என கத்தினாள் சாரு.

“வைக்கிறேன் டி. அதுக்கு எதுக்கு இப்படி கத்துற?” என பதிலுக்கு தானும் கத்திய ஜெயந்தி அவர்களின் யூடியூப் சேனலை டிவியில் வைத்து தற்போது பதிவேற்றப்பட்ட காணொளியை ஓடவிட்டார்.

“ஹலோ ஃப்ரெண்ட்ஸ்!

நீங்க பார்த்துக்கிட்டு இருக்குறது ‘ஃபிட் வித் சாரு!’

நம்ம சேனலை பார்க்கிற எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய்!

இன்னைக்கு நம்ம வீடியோல என்ன பார்க்க போறோம்னா....?

ஈஸியா.. ஃபலோ பண்ண கூடிய சிம்பிளானா டயட் தான்!

வாங்க நாம வீடியோக்குள்ள போகலாம்” என தொடங்கிய ஏழு நிமிட வீடியோ முடியும் பொழுது,

இந்த வீடியோ உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நினைச்சிங்கனா? லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க.

அண்ட் இதுவரைக்கும் நம்ம சேனலை யாராவது சப்ஸ்க்ரைப் பண்ணாம இருந்திங்கன்னா? மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணிட்டு பெல் பட்டனையும் கிளிக் பண்ணுங்க. அப்பதான் அடுத்து நான் போடுற வீடியோவோட நொடிஃபிகேஷன் உங்களுக்கு வரும்.

இதேபோல் மற்றொரு வீடியோவில் உங்களை சந்திக்கிறேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது,

சாரு!” என அந்த காணொளி முடிந்தது.

யூடியூப் என்னும் பரந்து விரிந்த வானில் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் யூடியூபர் என்ற நட்சத்திரங்களுள் ஒருத்தி தான் சாரு என்கிற சாருமதி! நம் கதையின் நாயகி!

ஆனால் அந்த வீடியோவில் அவள் குறிப்பிட்ட விஷயங்களுக்கு முற்றிலும் மாறுபட்டு வீட்டின் கூடத்தில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து தட்டு நிறைய பிரியாணியும், எண்ணையில் பொறித்த சிக்கன், மீன் மற்றும் முட்டைகள் என கணக்கில்லாமல் உண்டுக் கொண்டிருந்தாள், இவ்வளவு நேரம் அந்த காணொளியில் காட்சியளித்து டயட் ப்ளானை விவரித்த சாருமதி.

“பாட்டி! வடைக்கு ஊற வெச்சிட்டிங்க தான? அப்ப தான் ஈவ்னிங் வடை சுடுறப்ப சரியா இருக்கும். வடைக்கு தொட்டுக்க சட்னி போதும்” என தன் பாட்டியை கேட்டுக்கொண்டே உணவினை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தாள்.

அவளின் செயல்களை பார்த்த அவளின் தந்தை கடுப்புடன், “கல்யாணத்தை பற்றி என்ன முடிவெடுத்திருக்க சாரு? ரெண்டு நாள்ல சொல்லுறேன்னு சொன்ன? இப்ப ஒருவாரமாக போகுது” என கேட்டுக்கொண்டிருந்தார்.

அதற்கும் எந்த பதிலும் சொல்லாமல் உண்பதையே தீவிரமாக செய்துக்கொண்டிருந்த தன் பேத்தியை பார்த்த பாட்டி அவள் ஒரு முடிவெடுத்துவிட்டாள் என்று உணர்ந்துக்கொண்டார்.

NNK-29

Moderator

டீஸர் - 2:​

ஒரு ஒரு ஸ்பூனாக சூப்பை அள்ளி பருகியவளையே தேவா பார்த்துக்கொண்டிருந்தான். முழுவதும் குடித்துவிட்டு தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள் சாருமதி.​

“உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னா..? எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு!” என அவளின் கண்களை பார்த்துக்கொண்டே கூறினான் தேவேந்திரன்.​

அவனது பார்வையில் சிறிது தடுமாறினாலும், “என்னது?” என குரலுடன் சேர்த்து புருவத்தையும் உயர்த்தி கேட்டாள்.​

“எனக்கு ப்ரைவசி ரொம்ப முக்கியம். சோ, கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட வீட்டுக்காரர் கல்யாண நாளுக்கு இதை வாங்கி கொடுத்தாரு! பர்த்டேக்கு அதை வாங்கி கொடுத்தாரு! இது வாங்கினோம்! அது வாங்கினோம்! அதுவும் இந்த கடைல தான் வாங்கினோம்ன்னு நம்ம தனிப்பட்ட விஷயங்களை யூடியூப்ல போடக்கூடாது! நமக்குள்ள.. நம்ம வாழ்க்கைல நடக்கிறது எல்லாம் நம்முடைய தனிப்பட்ட நிகழ்வுகள். நமக்கான நிகழ்வுகள்! அதை ஊர் முழுக்க கடைபரப்புறதை நான் விரும்பமாட்டேன்!” என்று அழுத்தத்துடன் கூறினான்.​

அவன் சொல்ல சொல்ல இங்கு உலை போல் கொதிநிலையை அடைந்த சாருமதி, “நீங்க என்னோட சேனலை பார்த்திருக்கீங்களா?” என அடக்கப்பட்ட கோபத்துடன் ஒற்றை கேள்வி மட்டும் கேட்டாள்.​

‘சாருமதி யூடியூபில் சேனல் வைத்திருக்கிறாள்!’ என்ற தகவல் மட்டுமே அவனிடம் பகிரப்பட்டது. எந்த மாதிரி சேனல் என்று அவர்களும் கூறவில்லை. இவனும் கேட்டுக்கொள்ளவில்லை.​

ஆனால் இவளிடம் அவனுக்கான நிபந்தனைகளை மட்டும் தங்குதடையின்றி தெரிவித்தான்.​

அவளின் கேள்விக்கு, தேவா ‘இல்லை!’ என தலையை அசைத்தான்.​

“என்னோட சேனல் நேம் கூட தெரியாம கண்டிஷன் போடுறீங்களா?” என குரலை உயர்த்தாமல் நக்கலுடன் கேட்டவள், “அதை முதல்ல பார்த்துட்டு வந்து பேசுங்க..” என எரிச்சலுடன் கூறிவிட்டு எழுந்தாள்.​

பின் அவளின் பையை தோளில் மாட்டிக்கொண்டு “சூப்க்கான பில்லை நீங்களே கொடுத்திடுங்க” என கோபமாக உரைத்துவிட்டு சென்றாள்.​

செல்லும் அவளையும் அவளின் கோபத்தையும் ரசித்தபடியே அமர்ந்திருந்தான் தேவேந்திரன்.​

NNK-16

உங்க ஹீரோயின் எங்க இனமா இருப்பா போல ரைட்டரே வாழ்த்துக்கள்
 
NNK-29

Moderator

டீஸர் - 3:​

அன்று முழுக்க ஊர் சுற்றியவர்கள் இரவில் ஒரு உணவகத்தில் எதிரெதிரே அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தனர்.​

அந்நேரம் சாருமதியை நோக்கி ஒரு இளவயது யுவதி வேகமாக வந்தாள்.​

“நீங்க சாரு தான? ‘ஃபிட் வித் சாரு!’ சேனல் உங்களுடையது தான?” என அச்சரியங்கள் சுமந்த விழிகளுடன் கேட்டாள்.​

“ஆமா..” என்றவள் அந்த யுவதியை பேசி அனுப்பிவிட்டு, தயக்கத்துடன் தேவேந்திரனின் முகத்தை பார்த்தாள். அவனோ எதையும் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டு கொண்டிருந்தான். அவன் முகத்தைவைத்து சாருமதியால் ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை.​

‘ஐயோ இந்த தேவோட கோபத்தை கூட தாங்கிடலாம் போல.. இப்படி அமைதியா இருக்காரே?’ என முழித்தவள் சாப்பிட தொடங்கினாள்.​

பின் வீட்டிற்கு செல்லும் வழியில், “இன்னைக்கு முழுக்க உங்கக்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுறேன். நமக்கு நடுல எதுவும்.. யாரும்.. வரமாட்டாங்கன்னு சொன்ன?” என கோபத்துடன் கேட்டான்.​

“வெளிய வந்தா.. நாலு பேர் வந்து பேச தான் செய்வாங்க. அதுக்கு என்ன பண்ணுறது?” என கைகளைவிரித்து சாருவும் கணவனிடம் வெடுக்கென கேட்டாள்.​

“ஹ்ம்ம் என்ன பண்ணுறது..? செலபிரிட்டி கூட வந்தா அப்படி தான் போல!” என அவன் நக்கலுடன் சலித்துக் கொண்டான்.​

‘இந்த யூடியூபினால் இன்னும் எங்களுக்குள் எவ்வளவு சண்டைகள் வருமோ?’ என்ற பெருமூச்சுடன், “அடுத்த ஞாயிறு முழுக்க எந்த வேலையும் செய்யாம உங்க கூடவே இருக்கேன். ஆனா வெளிய எங்கேயும் போக வேண்டாம் வீட்லயே இருக்கலாம். ஏன்? நம்ம பெட்ரூம்லயே கூட இருக்கலாம்” என சொல்லிட்டு முகத்தை திரும்பிக் கொண்டாள்.​

‘ஒரு நாள் முழுக்க பெட்ரூம்லயே வா?’ என ஏடாகூடமாக யோசித்தவன் பொங்கிய சிரிப்பை உதட்டில் மறைத்துக் கொண்டு மனைவியை முறைக்கவே செய்தான்.​

NNK-29

Moderator

Happy valentines day dears❤️❤️❤️

💖உயிர் காற்றாய் உனை ஏற்றேன்!💖

18+ பதிவு🙈

அவ்வளவு நேரம் சாருமதியின் தாக்குதலை தாங்கிய தேவா ஒரே இழுவையில் அவளை கீழே தள்ளி அவளின் மேல் படர்ந்தான்.​

இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று கொய்திருக்க மெல்ல அவர்களின் இதழ்களும் இணைந்தன.​

நேரம் செல்ல செல்ல முத்தத்தின் வேகமும் தீவிரமும் கூடியது. இருவருமே மூச்சு காற்றுக்கு தவிக்க, ஒருவரின் மூச்சு காற்றான உயிர்காற்றை மற்றவர் ஏற்றுக் கொண்டு முத்தத்தை மட்டுமில்லாமல் மொத்தத்தையும் கொள்ளைக்கொண்டனர்.​

Last edited:
Status
Not open for further replies.
Top