எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் பார்வை என் காந்தம் - கதை திரி

அனைவருக்கும் வணக்கம் இது எனது இரண்டாவது கதை நண்பர்களே இந்த கதைக்கும் உங்கள் ஆதரவுகளை தர வேண்டிக்கொள்கிறேன்....
 
உன் பார்வை என் காந்தம்அத்தியாயம் 1“ஆண்டிபட்டி கிராமத்தின் ஊர் தலைவருக்கான தேர்தல் முடிவு

இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும் பொதுமக்கள் அனைவரும் பொருமையாக காத்திருக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்” என ஒலிபெருக்கியில் அறிவிப்பு வந்து கொண்டிருந்தது.


அந்த வாக்குசாவடியின் வெளியே அனைவரும் பரபரப்பாக நின்று கொண்டிருந்தனர்.


“நீ வேணும்னா பாரு இந்த தடவை புகழ் தம்பி தான் ஜெயிக்கும்” என்றான் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன்

“சொல்லிட்டாரு பா கலெக்ட்டரு இங்க நிக்கிறவைங்க எல்லாம் பார்த்தா உனக்கு லூசு மாறி தெரியுதா சங்கர் தான் ஜெயிப்பான்” என்றான் இன்னொருவன்.


அவன் கூறியதை கேட்டு அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் கோபத்தில் அவனை கல் எடுத்து அடிக்க, அவன் அருகில் இருந்தவன் கல் எறிந்தவனை அடிக்க என அந்த இடமே கலவர பூமியாக மாறியது.


“காத்தாடி சின்னம் புகழேந்தி 598 பேனா சின்னம் சங்கர் 596 புகழேந்தி இரண்டு வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஆண்டிபட்டியின் ஊர் தலைவராக அறிவிக்கப்படுகிறார்” என ஒலிபெருக்கியில் அறிவிப்பு வர.


இங்கே புகழேந்தியின் ஆதரவாளர்கள் கரகோஷமிட்டனர் “போடுங்க டா வெடிய” எனக் கூட்டத்தில் இருந்த நெடியவன் ஒருவன் கூற அங்கே வெடி சத்தம் காதை கிழிக்க ஆரம்பித்தது மேள தாளங்கள் வெடியின் புகை மூட்டத்திற்க்கு நடுவே வந்து சேர்ந்தான்

புகழேந்தி.


வயது 29 வெள்ளை வேஷ்டி சட்டையில் கம்பிரமான தோற்றத்துடன் ஆறடியில் முறுக்கு மீசையுடன், பாதி மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை, கழுத்தில் தங்க மீன் உடன் கூடிய செயின், வலது கையில் தங்க காப்புடன் கட்டுக்கடங்காத காளையை போல வந்து நின்றான்.


முன்னாள் தலைவர் சின்னசாமியின் ஒரே தவப்புதல்வன் இவன் நல்லவனா கெட்டவனா என அவனை சுற்றி இருப்பவர்களையே நினைக்க வைப்பவன் சற்றே திமிர் பிடித்தவனும் கூட

சண்டை என்றாள் முதல் ஆளாக வந்து நிற்பவன்,
வந்த சண்டையை விடாமல் வைத்து செய்து தான் அனுப்புவான்.புகழேந்தியை பார்த்த எதிர்கட்சி தலைவன் சங்கர் முறைத்துக் கொண்டே நின்றிருந்தான்.


அதை எதையும் கண்டு கொள்ளாமல் சங்கரை ஒரு ஏளனப் பார்வை பார்த்துக் கொண்டே திமிருடன் நடந்து வந்தான்.


அவனை பார்த்த ஊர் மக்கள் புகழேந்தியை தூக்கி கொண்டாட ஆரம்பித்தனர்.


ஊர் மக்கள் அவனை கொண்டாடுவதை பார்த்த சங்கர் முறைத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டான்.


“போதும் இறக்கி விடுங்கடா” என புகழேந்தி கூறியவுடன் அவனை கீழே இறக்கி விட்டான் அவன் நண்பன் குவாட்டர் குமார்.


“மச்சான் புகழ் நேரா போய் ஊர் முழுக்க ஒரு ரவுண்ட்ஸ் போய் மாஸ் காட்டிட்டு” அப்புறமா உங்க வீட்டுக்கு போறோம் என்றான் குமார்.


“சரி டா போலாம்” என்றான் புகழேந்தி அவன் காரில் நின்று அனைவருக்கும் கும்பிட்டு கை காட்டி கொண்டே ஊரை சுற்றி வருவதை பார்த்த சங்கர் ‘உனக்கு ஒரு நாள் இருக்கு டா' என மனதில் நினைத்துக் கொண்டான்

வரும் வழியில் அங்கே இருந்த இளம் சிட்டுக்கள் அனைவரும் புகழை தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.


“மச்சி எல்லா பொண்ணுங்களும் உன்னை தான் பார்க்குது” என்றான் குவாட்டர் குமார்.


“தெரியுது நீ முடு”‌ என்றவன்

மைக்கை எடுத்து “ஆண்டிபட்டியில் இருக்கும் தாய்மார்களே தந்தைமார்களே என்னை வாழ வைக்கும் என் சகோதர சகோதரிகளே என்னை கண்ணிமைக்காமல் பார்க்கும் இளம் பெண்களே என்னை கடுப்புடன் பார்க்கும் எதிர்கட்சி தலைவரே மேலும் நண்பர்களுக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றான்.


ஊர் முழுக்க சுற்றிவிட்டு கார் நேராக வீட்டிற்க்கு சென்றது புகழேந்தியின் வீட்டில் அவன் தாய் காமாட்சி வாசலில் ஆலம் கரைத்து தட்டுடன் நின்று கொண்டு இருந்தார்.


அவன் வாசலில் வந்து நின்றவுடன் அவனுக்கு ஆலம் சுற்றிய காமாட்சி “உள்ளே போய்யா புகழு அம்மா வரேன்” என தட்டுடன் வெளியே சென்றார்.


ஆலத்தை வெளியே ஊற்றி விட்டு உள்ளே வந்து சேர்ந்தார்

காமாட்சி அவர் கணவர் சின்னசாமியும் அப்போது வந்தார்

மகன் வெற்றி பெற்றதில் அவருக்கு அப்படி ஒரு ஆனந்தம்.


சின்னசாமி-காமட்சி தம்பதிக்கு திருமணம் ஆகி 15 வருடம் கழித்து பிறந்த மகன் தான் புகழேந்தி, ஆண்டிபட்டியின் முன்னாள் ஊர் தலைவர் சின்னசாமி தான் அந்த ஊரின் செல்வந்தர்களில் ஒருவர்

வயல்,தென்னந்தோப்பு,

ரைஸ்மில் என நிறைய தன் மகனுக்காக சேர்த்து வைத்துள்ளார் இவை அனைத்திற்க்கும் ஒரே வாரிசு புகழேந்தி தான்.


இந்த வருடம் புகழேந்தி முதல் முறையாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளான்.


உள்ளே வந்த சின்னசாமி தன் மகனை பார்த்த சந்தோஷத்தில் அப்படியே நின்றிருந்தார் அவன் யாருடனோ அலைபேசியில் உரையாடி கொண்டு இருந்தான்

அவரின் அருகில் நின்றிருந்த சின்னசாமியின் நண்பர் பாலகிருஷ்ணன் “எப்படியோ புகழ் ஜெயிச்சிட்டான்

இருந்தாலும் நீ அவனை படிக்க வைச்சிருக்கனும் சின்னசாமி” என்றார்.


“எதுக்கு என் பையனை வாத்தியார் அடிக்கவா அவன் பத்தாவது படிக்கும் போது வாத்தியார் அடிச்சான்னு தான் நான் அவனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவேயில்லை அவன் படிச்சி என்ன பண்ண போறான் எனக்கு இருக்க சொத்தே இன்னும் இரண்டு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்” என்றார்.


“சரி விடு உன் கிட்ட பேச முடியுமா

புகழுக்கு எப்போ கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்க?” என்றார்‌.


“என்ன டா என் பையனுக்கு அவ்வளோ வயசா ஆகிருச்சி அவன் சின்ன குழந்தை டா” என்றார்.


அதை கேட்ட பாலகிருஷ்ணன் என்ன என்பது போல பார்த்து வைத்தார்.


அங்கே வந்த காமாட்சி “அவரு கிடக்குறாரு அண்ணா புகழுக்கு எதாச்சும் நல்ல வரன் இருந்தா சொல்லுங்க முடிச்சிட்டுவோம்” என்றார்.


“சரிம்மா இருந்தா சொல்றேன் நான் கிளம்பிறேன்”


“என்ன அண்ணா அதுக்குள்ள போறிங்க சாப்பிட்டு போங்க” என்றார் காமாட்சி.


“அதெல்லாம் வேண்டாம் மா என் பொண்டாட்டி திட்டுவா” என கிளம்பிவிட்டார்.


“என்னங்க நம்ம ஜோசியரை வர சொல்லிருக்கேன் வெளியே எங்கேயும் போகாதிங்க” என்றார் காமாட்சி.


“ஏன் காமாட்சி?”


“புகழுக்கு பொண்ணு எதுவும் கூடி வர மாட்டாங்குது அதான் அவன் ஜதாகத்தை பார்க்க வர சொல்லிருக்கேன்”


“சரி” என்றார் சின்னசாமி.


“அம்மா நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்” என கிளம்பினான் புகழேந்தி.


“ஜோசியர் வரேன்னு சொல்லிருக்காரு புகழு”


“அவரு வருவதற்குள்ள வந்துடுவேன் மா ஒரு முக்கியமான வேலை” என கிளம்பிவிட்டான்.


சிறிது நேரம் கழித்து ஜோசியரும் வந்து சேர்ந்தார்.


வாசலில் அவரை அழைத்து கொண்டு உள்ளே வந்தார் சின்னசாமி “வாங்க புகழு

இப்போ தான் வெளியே போனான்”
என்றார்.

“இருக்கட்டும் வாங்க ஜாதகத்தை பார்ப்போம்” என்றார்.

அங்கே கையில் காபியுடன் வந்த காமாட்சி ஜோசியரிடம் கொடுத்தார் அதை அருகில் வைத்தவர் புகழின் ஜாதகத்தை நோட்டை எடுத்து பார்க்க ஆரம்பித்தார்.


குறிப்பு எடுத்து கொண்டு சிறிது நேரம் கழித்து பேச ஆரம்பித்தார் “அம்மா உங்க பையனுக்கு இப்போ வசந்த காலம் நேரம் அமோகமாக இருக்கு தொட்டது எல்லாம் பொன் ஆகும் காலம்” என்றார்.


“ஜோசியரே என்ன பொன்னாகி என்ன பண்ண இந்த வீட்டுக்கு விளக்கேத்த ஒரு மகாலட்சுமி இல்லையே கல்யாணம் தான் தட்டி போகுதே” என்றார் காமாட்சி.


“உங்க பையனுக்கு திருமண யோகம் வந்திருக்கு மா நீங்க கவலையே படாதிங்க இன்னும் ஒரே மாசத்துல உங்க பையனுக்கு கல்யாணம் ஆகிடும்”


“என்ன சொல்றிங்க ஜோசியரே”


“ஆமா மா ஒரே மாசத்துல உங்க பையனுக்கு கல்யாணம் நடக்க போகுது நீங்க குறிச்சி வைச்சிக்கங்க” என்றார்.


“நடந்தா நல்லது தான் ஜோசியரே” என்றார் சின்னசாமி.


“பொண்ணு எந்த மாறின்னு சொல்லவே இல்லையே ஜோசியரே” என்றார் காமாட்சி.


“உங்க பையனுக்கு பொண்ணு அதுவா தேடி வரும் நீங்க பொண்ணே பார்க்க தேவையில்லை உங்க பையனே கூட்டிட்டு வருவான்” என்றார்.


அதை கேட்ட சின்னசாமி ‘சரி தான்' என மனதில் நினைத்துக் கொண்டார்.


“என்னவோ ஜோசியரே நான் என்ன கேட்க போறேன் பொண்ணு அடக்கமா வீட்டோட என் பையன பார்த்துக்கிட்டு இருந்தா போதும்” என்றார் காமாட்சி.


அதேநேரம் வெளியே சென்ற புகழேந்தி அலைபேசியை எடுத்து காதில் வைத்தவன் “டேய் குமாரு பசங்க எல்லாம் வந்துட்டாங்களா?” என்றான்.


அவன் என்ன கூறினானோ “அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன் இதோ வரேன்” என்று தனது ராயல் என்ஃபில்டில் கிளம்பினான்.


சின்னசாமியின் தென்னந்தோப்பில் அவன் நண்பன் குவாட்டர் குமார் மற்றும் இன்னும் மூன்று நண்பர்கள் அவனுக்காக காத்திருந்தனர்.


பைக்கில் இருந்து இறங்கிய புகழேந்தி “என்ன டா யாரையும் காணும் எதுவும் ரெடி பண்ணலையா” என்றான்.


இதோ என சரக்குடன் அங்கே வந்து சேர்ந்தான் அவனுடைய இன்னொரு நண்பன் கார்த்தி

கரகாட்டகாரர்கள் ஒரு இரண்டு பேர் வந்திருந்தனர் இரண்டு மேள தாளங்களுடன் நண்பர்கள் அனைவரும் நன்றாக குடித்துவிட்டு ஆட ஆரம்பித்தனர்.


இது தான் புகழேந்தி நண்பர்களுடன் நன்றாக ஊர் சுற்றி குடித்து கொண்டு,

இருக்கும் சொத்துகளை கவனித்து கொண்டு அன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டு இருக்கிறான்.


தொடரும்…..
 
Last edited:
அத்தியாயம் 2


நன்றாக குடித்து ஆடி கலைத்து முடித்து வீடு வந்து சேர்ந்தான்
புகழேந்தி.


அவன் வீட்டின் உள்ளே நுழையும் போதே அவனுக்காக வாசலில் காத்திருந்தார் காமாட்சி “புகழு வாய்யா சாப்பிடலாம்” என்றார்.


“வேண்டாம் மா நான் வெளியவே சாப்பிட்டேன் நீ படு” என்றவன் உள்ளே சென்று தன் அறையின் மெத்தையில் விழுந்தவன் அப்படியே உறங்கி போனான்.


அவனை பார்த்து கொண்டே நின்ற காமாட்சி ‘இந்த பையன் என்னைக்கு தான் உருப்படுவானோ’ என மனதில் நினைத்துக் கொண்டார்.


மறுநாள் காலை மார்கழி மாத குளிரில் எழுந்து காமாட்சி குளித்து முடித்து வாசலில் கோலம் போட்டவர் உள்ளே நுழையும் போது “டேய் மூக்கா தோட்டத்தில் லெட்சுமி கத்துறா பாரு போய் தண்ணீ வைய்யி” என குரல் கொடுத்தார்.


அவர் கூறியதை கேட்ட வீட்டின் வேலைக்காரன் மூக்கன் “இதோ போறேன் மா” என்று பின்பக்கம் சென்றான்.


அப்போது அங்கே நன்றாக தூங்கி எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டே வெளியே வந்த சின்னசாமியை பார்த்தவர் “என்னங்க வெந்நீ தண்ணி பின்கட்டுல வச்சிருக்கேன் வெரசா குளிச்சிட்டு வாங்க நான் போய் தம்பிய எழுப்புறேன்” என்று கூறிய காமாட்சி புகழின் அறைக்கு சென்றார்.


அங்கே நன்றாக உறங்கி கொண்டு இருந்த புகழை எழுப்பியவர் “ராசா எழுந்திரி” என்றார்.


புகழேந்தி எதையும் கண்டுகொள்ளாமல் மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டான்

“ராசா எழுந்திரிய்யா இன்னைக்கு உனக்கு பொண்ணு பார்க்க போறோம்” என்றார்.


“எப்பவும் நடக்குறது தான நீயும் அப்பாவும் போங்க என்னை ஆள விடுங்க” என்றவன் மீண்டும் படுத்து உறங்க ஆரம்பித்தான்

இந்த பெண் பார்க்கும் படலம் அவனுக்கு 27 வயது ஆனதில் இருந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.


இந்த இரண்டு வருடமாக எங்கு தேடியும் அவனுக்கு எந்த வரனும் அவனுக்கு சரியாக அமையவில்லை அதனால் தான் புகழேந்தி எதையும் கண்டுகொள்ளாமல் உறங்கி கொண்டிருந்தான்.


அவனை எழுப்பி ஒரு வழியாக சமதானப்படுத்தி கிளம்ப வைத்தவர் புகழேந்தியை கூட்டிக் கொண்டு கிளம்பினார்.


பக்கத்து ஊரான பாப்பம்பட்டிக்கு பெண் பார்க்க மூவரும் சென்று கொண்டிருந்தனர்.


பாப்பம்பட்டியில் குணசேகரன்-லட்சுமி தம்பதியின் வீட்டில் அனைவரும் பரபரப்பாக கிளம்பி கொண்டு இருந்தனர்.


அங்கே வந்திருந்த உறவினர்கள் “மாப்பிள்ளை ஊர் தலைவராமே

வீட்டுக்கு ஒரே பையன் வேற இந்த மாறி சம்மந்தம் கிடைக்க நம்ம நந்தினி கொடுத்து வைச்சிருக்கனும்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர்.


உள்ளே அறையில் இருந்த நந்தினியோ தன் தாய் லட்சுமியிடம் கதறிக் கொண்டு இருந்தாள் “இதுக்கு தான் என்னை பாட்டி வீட்டில் இருந்து வர சொன்னியா மா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் நான் மேல படிக்கனும் அப்பா கிட்ட சொல்லு மா” என்றாள் கெஞ்சும் தோணியில்.


“எனக்கு என்ன டி தெரியும் உங்க அப்பன் தான் திடீர்ன்னு வந்து சொல்றாரு அந்த மாப்பிள்ளை பையன் பெரிய இடம் டி ஊர் தலைவராம் , அவர் படிக்கல நீ மேல படிச்சின்னா அவங்களுக்கு கௌரவமா இருக்காது ஒழுங்கா புடவையை கட்டு” என்று அவளிடம் பேச்சு கொடுத்து கொண்டே புடவையை கட்டிக்கொண்டு இருந்தார்.


இதையெல்லாம் கேட்ட நந்தினிக்கு கண்கள் இரண்டும் கலங்கி குளம் கட்டி நின்றது.


நந்தினி வயது 19 குணசேகரன், லட்சுமி தம்பதியின் ஒரே மகள்

இவளுக்கு அண்ணன் இருக்கிறான் சரவணன் அந்த ஊரில் ஒரு டிபார்ட்மெண்ட்ல் ஸ்டோர் வைத்திருக்கிறான்

புகழேந்தி அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு வசதியானவர்கள் தான்

நந்தினி நன்றாக படிக்க கூடியவள் அந்த வீட்டிலேயே முதல் முறையாக கல்லூரி செல்ல ஆசைப்பட்டவளும் இவளே பிரபல பொறியியல் கல்லூரியில் விண்ணப்பித்து இருக்கிறாள் இந்த சமயம் பார்த்து புகழேந்தியின் வீட்டில் பெண் பார்க்க வர அவள் படிப்பே கேள்விக்குறியானது.


“மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட்டாங்க” என யாரோ குரல் கொடுக்க அப்போது தான் சுய நினைவிற்கு வந்தாள்.

லட்சுமி அவள் தலையில் பூவை வைத்துக்கொண்டு “அம்மா சொன்னது எல்லாம் கேட்டுச்சுல்ல சிரிச்ச முகத்தோட வந்து நில்லு” என்றவர் வெளியே சென்றுவிட்டார்.

'கடவுளே இந்த கல்யாணத்தை எப்படியாச்சும் நிறுத்திடு’ என மனதில் வேண்டிக் கொண்டாள் நந்தினி.

வெளியே வந்த லட்சுமி குணசேகரன் தம்பதி வாங்க என வரவேற்று மூவரையும் உள்ளே அழைத்து வந்தனர் பட்டு ஜமுக்காளம் விரிக்கப்பட்டு இருக்க அதில் வந்து அமர்ந்தனர்.

சுற்றி நின்ற உறவினர்களுக்குள் சிறு சலசலப்பு ஏற்பட்டது அனைவரும் புகழேந்தியை பற்றி தான் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர்.குணசேகரன் “பொண்ணை அழைச்சிட்டு வா” எனக் குரல் கொடுக்க உள்ளே சென்று நந்தினியை அழைத்து வந்தார் லட்சுமி.


கத்தரி பூ நிறத்தில் பட்டு புடவை ஒன்றை அணிந்து இருந்தாள்

தலை நிறைய மல்லிப்பூ சூடி நீண்ட கூந்தலை பின்னி இருந்தார் லட்சுமி மாநிறத்தில் வட்ட முகத்துடன்,வலது புற இதழ்க்கு கீழே சிறிய மச்சம் வில் போன்ற அழகான புருவத்துடன் தலையை குனிந்து கொண்டே வெளியே காபி தட்டுடன் வந்தாள் நந்தினி.


அவளை பார்க்காமல் தலையை குனிந்து அமர்ந்திருந்தான் புகழ்
'எப்போதும் நடப்பது தானே' என மனதில் நினைத்துக் கொண்டே காபியை எடுத்து கொண்டவன் அவளை பார்க்கலாம் என நிமிரும் போது அவள் உள்ளே சென்றுவிட்டாள்.

“பொண்ணு மகாலட்சுமி மாறி இருக்கா” என்றார் காமாட்சி.

“எங்களுக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கு தம்பிக்கு பிடிச்சிருந்தா நிச்சயத்தை பற்றி பேசலாம்” என்றார் குணசேகரன்.“எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்குங்க” என்றார் சின்னசாமி.


“மாப்பிள்ளை கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கங்க” என்றான் நந்தினியின் அண்ணன் சரவணன்.


“தம்பி உனக்கு பொண்ணு பிடிச்சிருக்கு தான” என்றார் காமாட்சி.


'நான் எங்க டா பொண்ண பார்த்தேன்' என மனதில் நினைத்தவன்.


எதோ ஒன்னு “ம்ம்” என தலையாட்டி வைத்தான்.


பின் இருவீட்டாரும் கலந்து பேசி வரும் வெள்ளி கிழமை நிச்சயத்தை வைத்து கொள்ளலாம் என பேசிக் கொண்டனர்.


பெண் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும் சமயம் புகழேந்தி உள்ளே எட்டி பார்த்துக் கொண்டே வந்தான் இப்போதாவது நந்தினியை பார்க்கலாம் என்று ஆனால் அவளோ வெளியே வரவேயில்லை.


வீட்டிற்க்கு வந்த புகழேந்திக்காகவே காத்திருந்தான் அவன் நண்பன் குமார் “என்ன டா பொண்ணு எப்படி இருந்துச்சு?” என வினவினான்.


“எனக்கு எப்படி டா தெரியும் நான் தான் பொண்ண பார்க்கவேயில்லையே” என்றான் புகழேந்தி.


“அடப்பாவி உங்க அம்மா நிச்சயத்துக்கே நாள் குறிச்சிட்டு வந்துட்டாங்க”


“நிச்சயதார்த்தம் அன்னைக்கு பார்த்துக்கலாம் விடு” என்றான்.


“என்னவோ டா எப்படியோ நிச்சயம் வரைக்கும் வந்துட்ட இந்த வரனும் தள்ளி போய்டுமோன்னு பயந்துட்டு இருந்தேன்” என்றான் குமார்.


இங்கே நந்தினியோ நிச்சயத்தை எப்படி நிறுத்தலாம் என யோசித்து கொண்டு இருந்தாள்.


தொடரும்……
 
Last edited:
அத்தியாயம் 3


“எனக்கு இப்போ கல்யாணம் ‌வேண்டாம் மா” என்று தன் தாயிடம் கெஞ்சி கொண்டிருந்தாள் நந்தினி.


“நான் முன்ன சொன்னது தான் டி இப்பவும் சொல்றேன் உங்க அப்பன மீறி என்னால எதுவும் பண்ண முடியாது” என்றார் லட்சுமி.


அவர் கூறியதை கேட்ட நந்தினி தன் தாயை முறைத்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.


‘முருகா இந்த கல்யாணத்தை மட்டும் எப்படியாவது நிறுத்துடு’ என மனதில் வேண்டிக் கொண்டே இருந்தாள்.


இங்கே குமார் “என்ன மாப்ள பொண்ண பார்க்கலன்னு சொல்ற பேசாம பாப்பம்பட்டி போய் பார்த்துட்டு வந்துடலாமா” என்றான்.


“நானே ஊர் தலைவர் ஒரு பொண்ணை போய் பார்க்க நின்னா அசிங்கம் இல்லையா டா”


“நீ கட்டிக்க போற பொண்ண பார்க்க என்ன அசிங்கம் வேண்டிக் கிடக்கு நாளைக்கு போறோம்” என்றான்.


புகழேந்தி யோசித்துக் கொண்டே “சரி போலாம்” என்றான்.


மறுநாள் காலை பாப்பம்பட்டி நந்தினி வீட்டின் தெருமுனையில் உள்ள சந்தில் நின்று கொண்டு இருந்தனர் புகழேந்தியும் குமாரும்.


“டேய் இங்கே ஏன் டா நின்னுட்டு இருக்கோம்?” என்றான் புகழேந்தி முகத்தை சுளித்துக் கொண்டு.


“டேய் அந்த பொண்ணு இந்த பக்கம் இருக்க முருகன் கோவிலுக்கு தான் டெய்லி வரும்மா” என்றான் குமார்.


“உனக்கு எப்படி தெரியும்?”


“அந்த டீ கடைக்காரன் தான் சொன்னான்” என்றான்

“என்னவோ சொல்ற பார்ப்போம்” என்றான் புகழேந்தி.


இருவரும் அங்கேயே நந்தினிக்காக காத்திருந்தனர்

இவர்களின் காத்திருப்பை பொய்யாக்காமல் ஒரு அரை மணி நேரம் கழித்து அங்கே வந்தாள் நந்தினி.


டீக்கடைக்காரன் “தம்பி” எனக் கூப்பிட்டு கை காட்ட அங்கே திரும்பினர் இருவரும்.


அங்கே நடந்து வந்து கொண்டிருந்த நந்தினியை கண்ணிமைக்க கூட தோன்றாமல் பார்த்துக் கொண்டே நின்றான் புகழேந்தி.


சிவப்பு நிற பட்டு தாவணியில் பச்சை நிற கரையிட்ட பாவடை அணிந்து நீண்ட கூந்தலை தளர பிண்ணி மல்லிகை சரத்தை சூடி எந்த வித ஒப்பனையும் இன்று அழகு தேவைதையென வருபவளை பார்த்தவன் அவள் கோவிலுக்கு செல்லும் வரை பார்த்து கொண்டே நின்றிருந்தான்.


புகழேந்தியின் தோளில் தட்டி “மாப்ள” என்றான் குமார்.


“வா கோவிலுக்கு போவோம்” என நந்தினியின் பின்னால் அழைத்து சென்றான்.


இருவரும் கோவிலில் தூரத்தில் இருந்து நந்தினியை பார்த்துக் கொண்டே நின்றனர்

“மாப்ள பொண்ணு சூப்பரா இருக்கு நீ தான் அந்த பொண்ணு பக்கத்துல சுமாரா இருப்ப போல” என்றான் குமார்.


அதை கேட்ட புகழேந்தி அவனை முறைப்பதை போல பார்த்தான்

“உண்மைய தான டா சொன்னேன் எதுக்கு இப்படி பார்க்குற.”


“எனக்கு தெரியும் நீ மூடு” என்றான்.


பின் இருவரும் நந்தினி இருக்கும் வரை அவளுக்கு பின்னே கோவிலில் சுற்றிவிட்டு கிளம்பினர்.


கோவிலில் இருந்து நந்தினி வீட்டிற்க்கு நுழையும் போது வீட்டில் அவள் தாயும் தந்தையும் சண்டையிட்டு கத்திக் கொண்டு இருந்தனர்.


உள்ளே வந்த நந்தினி தன் தாயிடம் சென்று “என்னாச்சி மா?” என்றாள்.


“உன்னை வந்து பொண்ணு பார்த்துட்டு போனானே ஒரு பையன் அவன் சரியான குடிகாரனா பொம்பள பொறுக்கியாம்”


“உனக்கு யாரு சொன்னா மா?” என்றாள்.


“அந்த ஊர்ல உங்க அப்பா விசாரிக்க போய்ருக்காரு அங்க நம்ம பங்காளி முறையில சங்கர் இருக்கானே அவன் தான் சொல்லிருக்கான் இப்போ தான் தெரியுது என் பொண்ணு அப்போவே சொன்ன இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு கேட்டிங்களா ஒழுங்கா இந்த சம்மந்தம் வேண்டாம்ன்னு போன் பண்ணி சொல்லுங்க” என்றார்

லட்சுமி.


நந்தினியின் தந்தை விசாரிக்க வரும் போது சங்கர் தான் ஒன்றுக்கு இரண்டாக சொல்லி அனுப்பியிருந்தான்.


அதை கேட்ட நந்தினி மனதில் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டிருந்தாள்

'முருகா காப்பத்திட்ட’ என மனதில் நினைத்துக் கொண்டாள்.


“என்னங்க இப்போ நீங்க சொல்றிங்களா இல்லை நான் சொல்லட்டுமா” என்றார் நந்தினியின் தாய்.


“பெரிய இடம் டி அதான் பார்க்குறேன்” என்றார் குணசேகரன்.


“அதுக்காக என் பொண்ணை குடிகாரனுக்கு கட்டி வைப்பிங்களா”


“சரி இரு சொல்லிட்டு வரேன்” என்று அலைபேசியை எடுத்து கொண்டு வெளியே சென்றார்

குணசேகரன்.


போன் அடித்தவுடன் முதலில் சின்னசாமி தான் எடுத்தார் “ஹலோ சொல்லுங்க சம்மந்தி” என்றார்.


“எப்படி சொல்றதுன்னு தெரியல இந்த நிச்சயத்தை நிறுத்திடலாம்” என்றார் குணசேகரன்.


அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சின்னசாமி “என்னங்க சொல்றிங்க நேத்து தான நாள் குறிச்சிட்டு வந்தோம்”


“ஊர்ல உங்க பையன பத்தி என்ன என்னவோ சொல்றாங்க குடிகாரன் பொண்ணுங்க விஷயத்துல அப்படி இப்புடின்னே” என்றார் தயங்கி கொண்டே.


“ஊர் ஆயிரம் சொல்லும் யா அதுக்காக என் பையன பத்தி தப்பா சொல்லுவியா பெரிய ஊர்ல இல்லாத பொண்ண பெத்து வச்சிருக்கான் நீ என்னையா நிச்சயத்தை நிறுத்துறது நான் நிறுத்துறன்ய்யா” என போனை வைத்துவிட்டார்.


உள்ளே வந்த குணசேகரன் “லட்சுமி சொல்லிட்டேன்” என்றார்.


“என்ன சொன்னாங்க” என்றார் லட்சுமி.

“அந்த ஆளு கத்திட்டு போனை வைச்சிட்டான் அவன் கத்துறதை எல்லாம் பார்த்தா உண்மைன்னு தான் நினைக்கிறேன் என்னவோ நம்ம பொண்ணு தப்பிச்சிட்டா” என்றார்.


நந்தினிக்கு மனதில் ‘அப்பாடா’ என்று இருந்தது.


புகழேந்தியும் குமாரும் நந்தினியை பார்த்து விட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.


புகழேந்தி தன் கற்பனையிலேயே நந்தினியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தான்

“சும்மா சொல்ல கூடாது மாப்ள பொண்ணு அம்சமா இருக்கு

உனக்கு இவ்வளவு நாள் கல்யாணம் தள்ளி போனது கூட நல்லது தான்” என்று பேசிக்கொண்டு இருந்தான் குமார்.


அதை எதையும் கண்டுகொள்ளாமல் புகழேந்தி கற்பனையிலேயே வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான்.


வீட்டிற்க்கு வந்த புகழ் விசிலடித்து கொண்டே சந்தோஷத்துடன் தன் அறைக்கு சென்று தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு இருந்தான்.


“புகழு” என கத்திக் கொண்டே உள்ளே வந்தார் சின்னசாமி.


“ம்ச்ச்ப் என்னப்பா” என்று சலித்துக் கொண்டே வெளியே வந்தான் புகழேந்தி.


“நிச்சயத்தை நிறுத்திடலாம் நமக்கு அந்த பொண்ணு வேண்டாம் தம்பி” என்றார்.


அதை கேட்ட புகழேந்தி அதிர்ச்சியில் “ஏன் பா என்னாச்சி” என்றான்.


“அவங்க உன்னை பத்தி தப்பு தப்பா சொல்றாங்க டா இந்த கல்யாணம் வேண்டாம்”


“ஏங்க இரண்டு வருஷம் கழிச்சி இப்போ தான் ஒரு சம்மந்தம் கை கூடி‌ வந்துருக்கு அதை போய் நிறுத்துறிங்க”


“அந்த ஆளு போன் பண்ணி என் பையன பத்தி தப்பு தப்பா சொல்லுவான் கேட்டுட்டு சும்மா இருக்க சொல்றியா” என்றார்.


“நான் சொல்றது சரி தான டா தம்பி” என்றார் புகழேந்தியை பார்த்து “சரி தான் பா” என்றான் அவனும் பதிலுக்கு.


“ஆத்தா மகமாயி உனக்கு கண்ணே இல்லையா என் புள்ளை வாழ்க்கை மட்டும் ஏன் தான் இப்படி இருக்கோ” என்றார் காமாட்சி.


இதை எதையும் காதில் வாங்காமல் வெளியே சென்றான் புகழேந்தி.


எப்போதும் போல் தென்னந்தோப்பில் தனியாக சென்று அமர்ந்து கொண்டான்

இரவாகியும் வீட்டிற்க்கு செல்லாமல் அங்கேயே இருந்தான்.


இரவு அவனை தேடிக் கொண்டு அங்கே வந்தனர் குமார் மற்றும் அவன் நண்பன் கார்த்தியும்.


“இங்க என்ன பண்ற மாப்ள” என்றான் குமார்.


“மாப்ள” என அவனை கட்டிக்கொண்டவன் “நான் யாருக்கு என்ன டா பாவம் பண்ணினேன் ஒரே ஒரு தடவை எனக்கு கல்யாணம் நடக்கனும்னு நினைச்சது தப்பா டா எனக்கு என்ன டா குறைச்சல் நீயே சொல்லு” என்று புகழேந்தி நன்றாக குடித்துவிட்டு போதையில் உலறினான்.


“விடு டா மாப்ள எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சிக்கோ” என்றான் குமார்.


“ம*** எதாச்சும் சொல்லிட போறேன் பேசாம போய்டு” என்றான் புகழ் கோபத்தில்.


“உங்க அம்மா தேடிட்டு இருக்காங்க வாடா மாப்ள வீட்டுக்கு போலாம்” என்றான் குமார்.


“நான் வரல நீ போ” என்றவன் அவன் நண்பன் கார்த்தியை பார்த்து “நீ ஏன் டா சோகமா இருக்க?” என்றான்.


“அது ஒன்னும் இல்லை அவன் லவ் பண்ண பொண்ணுக்கு நாளைக்கு கல்யாணம்” என்றான் குமார்.


“என்ன டா சொல்ற நீயெல்லாம் லவ் பண்ணியா உனக்கு எல்லாம் ஒரு பொண்ணு கிடைச்சிருக்கு என் வாழ்க்கைய பாரு காதலும் இல்லை கல்யாணமும் இல்லை” என்றான் புகழேந்தி.


“சும்மா இரு டா நீ வேற இரண்டு வருச காதல் டா இன்னைக்கு நல்லா படிச்ச வாத்தியார் மாப்பிள்ளை கிடைச்ச உடனே என்னை விட்டுட்டு போய்டா” என்றான் கார்த்தி கண்கள் கலங்க.


“நீ எதுக்கு மச்சான் அழுவுற நான் உன்னை அந்த பொண்ணு கூட சேர்த்து வைக்கிறேன் இப்போவே அந்த பொண்ணு வீட்டுக்கு போறோம் அந்த பொண்ண தூக்குறோம் என்ன சொல்ற” என்றான் புகழ்.


“மச்சான் கார்த்தி அவன் பேச்சை கேட்காத அவன் போதையை போட்டுட்டு பேசிட்டு இருக்கான்” என்றான் குமார்.


“அவன் சொல்றதுல என்ன டா தப்பு இருக்கு என் கனகா கூட என்னை எப்படியாவது சேர்த்து வைங்கடா” என்றான் கார்த்தி.


“நான் ஆட்டத்துக்கு வரல நீங்க என்னவோ பண்ணுங்க” என்றான் குமார்.


“நீ வாடா கார்த்தி உனக்கு நான் இருக்கேன்” என்றான் புகழ்.


“அந்த வீட்டில் எல்லோருக்கும் என்னை தெரியும் டா புகழு நீயும் குமாரும் போங்க” என்றான் கார்த்தி.


“நான் பொண்ணு தூக்குற விஷயத்துக்குல்லாம் வர மாட்டேன் பிரச்சனை எதாச்சும் வந்தா நான் என்ன பண்றது” என்றான் குமார்.


“நான் இருக்கேன் நீ தைரியமா வாடா” என்றான் புகழ்.


“நீ இருக்குறத நினைச்சா தான் டா பயமா இருக்கு”


“மாப்ள எனக்காக பண்ணு டா என் வாழ்க்கை பிரச்சனை டா” என்றான் கார்த்தி.


“சரி வரேன்” என்றான் குமார் ஒரு மனதாக.தொடரும்….
 
அத்தியாயம் 4


“சரி கிளம்பலாமா மாப்ள” என்றான் புகழேந்தி.


“டேய் ஒரு ஊர் தலைவர் பண்ற வேலையா டா இது” என்றான் குமார் புகழை பார்த்து “நண்பனுக்காக இது கூட பண்ணலன்னா எப்படி டா சரி வா கிளம்புவோம் பொண்ணு எந்த ஊரு டா கார்த்தி?” என்றான் புகழ்.


“பாப்பம்பட்டி டா”


ஊரின் பெயரை கேட்டு ஒரு கணம் யோசித்த புகழேந்தி பின் தன் நண்பர்களுடன் கிளம்பினான்.


புகழின் வீட்டில் அவனுக்காக வாசலில் காத்திருந்தார் காமாட்சி “என்னங்க புகழு இன்னும் வீட்டுக்கு வரல ஒரு எட்டு போய் பார்த்துட்டு வாங்க” என்றார் சின்னசாமியிடம்.


“வந்துருவான் நீ உள்ள வா” என்றார் சின்னசாமி.


அதே நேரம் புகழின் வீட்டின் உள்ளே நுழைந்தாள் புகழின் சித்தப்பா மகள்

வெண்ணிலா.


அவளை பார்த்து “வாடி என் சின்ன சிறுக்கி இதான் வர நேரமா” என்றார் காமாட்சி.


“சின்னாத்தா நான் என்ன பண்ண எங்க அம்மாவுக்கு தெரியாம வரனும்மில்ல அண்ணன் எங்கே” என்றாள்.


சின்னசாமியின் உடன் பிறந்த தம்பி வேல்முருகன்-ஈஸ்வரி தம்பதியின் ஒரே ‌மகள் தான் இந்த வெண்ணிலா,

சில வருடங்களுக்கு முன்பு நடந்த சொத்து பிரச்சனை காரணமாக இருவீட்டாரும் பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர் என்ன தான் பெரியவர்கள் பேசி கொள்ளாமல் இருந்தாலும் சிறியவர்கள் பிணைப்புடன் தான் இருந்தனர் புகழுக்கு தங்கை என்றால் உயிர்.


புகழின் வீட்டில் பெண்பிள்ளை இல்லாத குறையை தீர்த்து வைத்து கொண்டிருக்கிறாள் வெண்ணிலா.


“உன் அண்ணன் இன்னும் வீட்டுக்கு வரல டி” என்றார் காமாட்சி.


“சரி அப்போ நான் காலையில் வாரேன் ஆத்தா எங்க அம்மா தேடும்” என்றாள்

“சாப்பிட்டு போ டி” என்றார் காமாட்சி.


“வேண்டாம் ஆத்தா” என ஓடிவிட்டாள்.


பாப்பம்பட்டியில் கனகா வீட்டின் தெருமுனையில் நின்று கொண்டு இருந்தனர் மூவரும்

“மாப்ள எனக்கு என்னவோ இதேல்லாம் சரியா படல வா இப்படியே ஓடிடலாம்” என்றான் குமார் புகழிடம்.


“என்ன டா” என்றான் கார்த்தி.

“என்ன நோன்ன டா பரதேசி எல்லாம் உன்னால கனகா இல்லைன்னா செத்துடுவியா நீ

மாப்ள இவன் பேச்சை எல்லாம் கேட்காத மாட்டுனோம்னா தோல உருச்சிருவானுங்க பார்த்துக்க” என்றான் குமார்.


“கொஞ்சம் நேரம் சும்மா இரு டா” என்றான் புகழ்.


கல்யாண வீட்டில் மைக் செட்டில் பாட்டு ஓடிக் கொண்டு இருக்க ஆட்கள் நடமாட்டம் நன்றாகவே இருந்தது சீரியில் செட்டுகள் வேறு தெரு முனை வரை எரிந்து கொண்டு இருந்தது.


இதையெல்லாம் பார்த்த புகழ் “கார்த்தி நீ போஸ்ட் கம்பத்துக்கிட்ட போய் நில்லு,

குமாரு நீ ஊர் எல்லையில் போய் நில்லு இப்போ மணி 12 ஒரு 2 மணிக்கு கரெக்ட்டா,

கார்த்தி நான் உன் போனுக்கு மிஸ் கால் கொடுக்கும் போது மெயின் சுவட்ச்ச ஆஃப் பண்ணி ஆன் பண்ணு நான் பொண்ணை தூக்கிட்டு வந்துட்றேன் நீ நேரா நம்ம ஊருக்கு போய் அம்மன் கோயில்ல கல்யாண ஏற்பாட பண்ணு நானும் குமாரும் வந்துட்றோம் அந்த சாக்கு பைய எடு என வண்டியில் இருந்து எடுத்தான்”


“உனக்கு எப்படி டா கனகாவை தெரியும்” என்றான் குமார்

“பத்தாம் வகுப்புல நம்ம பக்கத்து கிளாஸ் தான எனக்கு தெரியாதா டா” என்றான் புகழேந்தி.


பின் மூவரும் தனித்தனியாக பிரிந்து சென்றனர்.


சரியாக இரண்டு மணிக்கு கார்த்தி மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்ய கல்யாண வீட்டில் நுழைந்தவன் கர்ச்சிப்பில் மயக்க மருந்தை தெளித்து வைத்து இருந்தான் கனகாவின் மூக்கில் வைத்து அழுத்தி மயங்க வைத்தவன் சாக்கில் போட்டு தூக்கி கொண்டு ஓடி வந்தான் புகழேந்தி

அவனுக்காக ஊர் எல்லையில் பைக்குடன் காத்திருந்த குமார் அவன் வந்தவுடன் வண்டியை ஸ்டார்ட் செய்து நேராக ஆண்டிபட்டியில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றான்.


கோவில் பூட்டி இருக்க “இப்போ என்ன டா பண்றது” என்றான் குமார்.
“தென்னந்தோப்புக்கு போய்டுவோம்” என்றான் புகழேந்தி பின் இருவரும் கிளம்பி அங்கே சென்றனர்.


இவர்கள் இங்கும் அங்கும் பைக்கில் செல்வதை பார்த்த சங்கர் ‘என்னவோ சரியில்லையே' என நினைத்தவன் இன்னொரு பைக்கில் இவர்களை பின் தொடர்ந்தான்.


தென்னந்தோப்பில் உள்ள சிறிய கூடாரத்தில் சென்று லைட்டை போட்ட புகழேந்தி “மூட்டையை பிரிக்கலாமா?” என்றான்.


“வேண்டாம் டா யாருச்சும் வந்தா பிரச்சனையாகிடும்” என்ற குமார் நான் போய் கார்த்தியை குப்பிட்டு வரேன் என்று கிளம்பினான்.


‘என்ன இருக்கு அந்த மூட்டையில்' என யோசித்துக் கொண்டே நின்றிருந்தான் சங்கர்.


சிறிது நேரம் கழித்து அங்கே வந்த குமார் “அவன காணும் டா போன் வேற ஸ்விட்ச் ஆஃப்ல் இருக்கு” என்றான்.


“சரி டா மூட்டைய திற மூச்சு முட்டிட போகுது அந்த பொண்ணுக்கு” என்றான் புகழேந்தி.


குமார் சென்று மூட்டையை திறந்தான்‌ அங்கே மயங்கி கிடந்த பெண்ணை பார்த்து அவனுக்கு தலையே சுற்றியது

அதே அதிர்ச்சியுடன் “டேய் இது உனக்கு பார்த்த பொண்ணு நந்தினி தான அடப்பாவி மாத்தி தூக்கிட்டு வந்துட்டியா” என்றான்.


“தெரிஞ்சி தான் தூக்கிட்டு வந்தேன்” என்றான் திமிராக புகழேந்தி.


“என்ன டா சொல்ற”

“கனகாவ தூக்க தான் போன அங்க இவளை பார்த்த உடனே

ஏன் இவளை தூக்க கூடாதுன்னு தோனிச்சு அதான்” என்றான் அவனை பார்த்து கண்ணடித்து.


‘அடப்பாவிங்களா உங்களுக்கு இருக்குடா’ என நினைத்த சங்கர் ஊருக்குள் சென்று அனைவரையும் கூட்டி வர சென்றான்.


“அப்போ கனகா?”

“கார்த்தி கூட போய்டா சென்னைக்கு,

இந்த நேரத்துக்கு பஸ்ல போய்ட்டு இருப்பாங்க” என்றான் புகழேந்தி.


“அடப்பாவி அப்போ நான் தான் ஜோக்கரா இப்போ இந்த பொண்ணு என்ன பண்ண போற?”


“கல்யாணம் பண்ண போறேன்” என்ற புகழேந்தி ஏற்கனவே தன் பாக்கெட்டில் வைத்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்து அவள் கழுத்தில் கட்டி முடித்தான்.


சங்கர் ஊர் மக்கள் அனைவரையும் கூட்டி வந்து கொண்டு இருந்தான் நந்தினி வீட்டிற்க்கும் போன் செய்து வர சொல்லி இருந்தான்.


நந்தினியின் வீட்டில் “பாவி மக கல்யாணத்துக்கு போறேன்னு போனாளே அவளுக்கா இப்படி ஒரு நிலமை வரனும் அவன் நல்லா இருப்பானா” என்று அழுது கதறிக் கொண்டு இருந்தார் லட்சுமி.


“சரவணா சிக்கிரம் வண்டியை எடு” என்றார் குணசேகரன் மூவரும் கிளம்பி காரில்

தென்னந்தோப்பிற்க்கு வந்து சேர்ந்தனர்.


காரை நிறுத்திவிட்டு கூடாரத்தின் உள்ளே வந்த சரவணன் தன் தங்கை மயங்கி கீழே விழுந்து கிடப்பதை பார்த்தவன் “என் தங்கச்சியை என்ன டா பண்ண” என புகழேந்தியின் கன்னத்தில் அறைந்தான்.


அவன் அறைந்த கோபத்தில் புகழேந்தி சரவணன் நெஞ்சில் தன் காலால் மிதிக்க அவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான் பின் இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.


அங்கே வந்த ஊர் மக்கள் இவர்கள் இருவரையும் தடுத்து பஞ்சாயத்திற்க்கு அம்மன் கோவில் மரத்தடிக்கு அழைத்து வந்தனர்.


நந்தினியை தண்ணீர் தெளித்து எழுப்பினார் லட்சுமி தான் எங்கு இருக்கிறோம் என சுற்றி முற்றி பார்த்தாள் அப்போது தான் கவனித்தாள் தன் கழுத்தில் தாலி இருப்பதை எவ்வளவு யோசித்தும் அவளுக்கு எதுவும் நினைவு வரவில்லை தான் கனாகவை பார்க்க சென்றது மட்டுமே நினைவுக்கு வந்தது.


பெரியவர்கள் அனைவரும் கூடி இருக்க இரு குடும்பத்தினரும் எதிரே எதிரே நின்று கொண்டு இருந்தனர்.


அப்போது அங்கே வந்த வெண்ணிலா புகழிடம் சென்று “சூப்பர் அண்ணா கல்யாணமே பண்ணிட்டியா எங்கே அண்ணி” என்றவள் எதிரில் இருந்த நந்தினியை பார்த்தவள் அவள் அருகில் இருந்த சரவணன் அவளை முறைத்து கொண்டே நின்றிருந்தான் “வாய மூடு டி” என்று காமாட்சி அவளை தன் பக்கம் இழுத்து கொண்டார்.


அங்கே இருந்த பெரியவர்கள் பேச ஆரம்பித்தனர் “எம்பா புகழு ஊர் தலைவர் நீயே இப்படி ஒரு காரியத்தை பண்ணலாமா சொல்லு” என்றார்.


“எனக்கு அந்த பொண்ணை பொண்ணு பார்க்க போன அப்போவே பிடிச்சருந்துச்சு தாலி கட்டி கூட்டிட்டு வந்துட்டேன் என்ன இருந்தாலும் அவள் இனி என் பொண்டாட்டி என் கூட சேர்த்து வைங்க” என்றான் புகழேந்தி.


அதை கேட்ட சரவணன் அவனை அடிக்க போக லட்சுமி அவனை பிடித்துக் கொண்டார்.


“அது எப்படிங்க தாலி கட்டிட்டா பொண்டாட்டி ஆகிடுவாளா


என் தங்கச்சி சின்ன பிள்ளைங்க நாங்க தான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிட்டோம்ல்ல என் தங்கச்சிய எங்க கூட அனுப்பி வைங்க” என்றான்.


“தாலி கட்டிட்ட அப்புறம் ஒரு பொண்ண கூட்டிட்டு போறது முறையாகுமா அந்த பொண்ணு எங்க வீட்டு மருமகள்” என்றார் காமாட்சி.


“முடிவா என்ன தாங்க சொல்றிங்க” என்றான் சரவணன்.


சபையில் அமர்நது இருந்த ஊர் பெரியவர் ஒருவர் “அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிருச்சி அது இங்க இருக்குறது தான் முறை நீ என்னம்மா சொல்ற?” என கேட்க அவள் எதுவும் கூறாமல் தலை குனிந்து அழுது கொண்டே நின்றிருந்தாள்.


அவர்கள் பேச இவர்கள் பேச என வாக்குவாதம் பெரிதாக இறுதியாக “என் பொண்டாட்டி என் கூட தான் இருந்தாகனும்” என்றான் புகழேந்தி.


“ஒஹோ அப்படியா” என்ற சரவணன் அங்கே அம்மன் சூலத்தில் இருந்த திருமாங்கல்யத்தை எடுத்தவன் வெண்ணிலாவின் கழுத்தில் கட்டினான் அவனை தடுக்க வந்தவர்களை பிடித்து தள்ளியவன் “நானும் உன் தங்கச்சி கழுத்துல தாலி கட்டிட்டேன் அவள் என் பொண்டாட்டி அவள என் கூட கூட்டிட்டு போறேன் என் தங்கச்சியை என்னைக்கு அனுப்புறியோ அன்னைக்கு உன் தங்கச்சிய வந்து கூட்டிட்டு போ” என்றவன் வெண்ணிலாவை தரதரவென இழுத்து சென்றான்.


இதை பார்த்த ஊர் மக்கள் அனைவரும் வாயடைத்து போய் நின்று இருந்தனர்.தொடரும்…..
 
Last edited:

அத்தியாயம் 5


வெண்ணிலா அவன் கையை தட்டி விட எவ்வளவு முயற்சி செய்தும் அவன் இரும்பு கரங்களில் இருந்து விடுபட முடியவில்லை “அண்ணா அண்ணா” என கத்திக்கொண்டே சென்றாள்.


அவளை பார்த்த புகழேந்தி மனம் பொறுக்காமல் அவனிடம் சென்றவன் சரவணனின் சட்டையை பிடித்தான் “என் தங்கச்சியை விடு இல்லை உன்னை என்ன பண்ணுவன்னே தெரியாது டா” என்றான் கோபத்தில்.


“நான் தாலி கட்டிட்டேன் அவள் என் பொண்டாட்டி என் கூட தான் இருக்கனும்” என்றான் சரவணன் அவன் கையை தட்டிவிட்டு.


அவன் பேசியதை கேட்ட புகழேந்தி கோபத்தில் சரவணனை அறைந்தான்

பதிலுக்கு சரவணன் அவன் கையை வளைக்க என இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.


ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அவர்களை தடுத்து பஞ்சாயத்திற்க்கு கூட்டி வந்தனர்.


அங்கே இருந்த ஊர் பெரியவர்களில் ஒருவர் “நீங்க ரெண்டு பேரும் இப்படி அடிச்சிக்கிட்டா அப்புறம் எங்களுக்கு என்ன மரியாதை” என்றார்.


உடனே புகழேந்தி “நான் பண்ணினது தப்பு தான் ஒத்துக்கிறேன் ஐயா ஆனா எனக்கு அந்த பிள்ளைய பிடிச்சிருக்கு தாலியும் கட்டிட்டேன் நல்லா பார்த்துப்பேன் என்னை நம்பி அனுப்பி வைக்க சொல்லுங்க

என் தங்கச்சி அறியாத பிள்ளை அவளை விட சொல்லுங்க” என்றான்.


“என்ன சொல்ற பா தம்பி,

புகழேந்தி நல்ல பையன் நல்லா பார்த்துப்பான்” என்றார் அந்த ஊர் பெரியவர்.


சரவணன் எதுவும் பேசாமல் இருக்க அவன் தந்தை குணசேகரன் தான் “சரிங்க ஐயா எங்க பொண்ணை கொடுக்க சம்மதிக்கிறோம் ஆனா அந்த பொண்ணையும் எங்க வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைக்க சொல்லுங்க என்ன இருந்தாலும் என் பையன் தாலி கட்டிட்டான்” என்றார்.


அவர்‌ கூறியவுடன் ஒரு கணம் அதிர்ச்சியுடன் அவரை திரும்பி பார்த்தான் சரவணன்.


“என் புள்ளைக்கு பரிசம் போட நீங்க எல்லாம் யாரு டா” என்ற குரல் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தனர்.


குரல் வந்த திசையை பார்த்தவர்கள் அங்கே வெண்ணிலாவின் தாய் தந்தை ஈஸ்வரி,வேல்முருகன் நின்றிருந்தனர்.


நேரே வெண்ணிலாவிடம் சென்ற ஈஸ்வரி “அவங்க வீட்டுக்கு போகாத வீட்டோட இருன்னு சொன்னா கேக்குறியா இப்போ பாரு” என்று அவளை அடிக்க ஆரம்பித்தார்.


“சித்தி” என்ற புகழேந்தியை பார்த்து “நீ வாயை மூடு எல்லாம் உன்னால” என்றார் ஈஸ்வரி.


“வயசு பிள்ளைய கை நீட்டி அடிக்காத” என்றார்‌ சின்னசாமி

அவர் கூறியவுடன் தான் வெண்ணிலாவை அடிப்பதை நிறுத்தினார் ஈஸ்வரி.


நேரே வேல்முருகனிடம் சென்றவர் “டேய் தம்பி அந்த பையன் சரவணன் நல்ல பையன் தான் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் வச்சிருக்கு வீட்டுக்கும் ஒரே பையன் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறது நல்ல விஷயம் தான் என்ன சொல்ற” என்றார்.


அவர் கூறியதை கேட்டு ஒரு கணம் யோசனையுடன் அமைதியாக இருந்த வேல்முருகனை பார்த்த குணசேகரன் “நீங்க என்னை நம்பி பொண்ணு கொடுங்க என் பையன் உங்க பொண்ண நல்லா பார்த்துப்பான்” என்றார்.


பின் அனைவரும் பேசி சம்மதிக்க வைத்தனர் ஒரு மனதாக வேல்முருகனும் சம்மதம் தெரிவிக்க “அப்புறம் என்னப்பா ரெண்டு குடும்பமும் சமாதானம் ஆகிட்டாங்க பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறது நல்ல விஷயம் தான பா” என்றார் ஊர் பெரியவர்.


“சரிப்பா எல்லாரும் கிளம்புங்க பஞ்சாயத்து முடிஞ்சுது” என அனைவரையும் அனுப்பி வைக்க இரு குடும்பங்கள் மட்டுமே நின்றிருந்தனர்.


காமாட்சி தான் “வா மா மருமகளே நம்ம வீட்டுக்கு போலாம்” என அழைத்தார்.


சின்னசாமி “எல்லோரும் வாங்க நம்ம வீட்டுக்கு போலாம்” என அழைக்க அனைவரும் கிளம்பி புகழேந்தி வீட்டிற்க்கு சென்றனர்.


இரு ஜோடிகளையும் ஒன்றாக நிற்க வைத்து காமாட்சி தான் ஆலம் சுற்றினார்.


அனைவரும் வந்து எதுவும் பேசாமல் அமர்ந்துருக்க வேல்முருகன் தான் பேச ஆரம்பித்தார் “என் பொண்ணுக்கு என்ன செய்யனுமோ அதை எல்லாம் நாங்க செஞ்சிட்றோம் நாங்க வச்சிருக்குறது ஒரே பொண்ணு உங்களுக்கு என்ன வேணுமோ அதை கேளுங்க என் பொண்ண கண்கலங்காம வைச்சி பார்த்துக்கிட்டா போதும்”


“என்னங்க இப்படி சொல்றிங்க நாங்க எதையும் எதிர் பார்க்கல சம்மந்தி என் பையன் ரொம்ப நல்லவன் அவன் உங்க பொண்ண கண் கலங்காம பார்த்துப்பான்” என்றார் குணசேகரன்.


அதுவரை தலை குனிந்து அமர்ந்து இருந்த வெண்ணிலா அப்போது தான் சரவணனை பார்த்தாள் கீழ் இருந்து மேல் வரை அவனை பார்த்தவள் அவன் மீசையை பார்த்து பயந்து கீழே குனிந்து கொண்டாள்‌.


நந்தினியோ எதுவும் பேசாமல் பேய் அறைந்ததை போல அமர்ந்து இருந்தாள்.


பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நல்ல நாளில் வரவேற்பு வைக்கலாம் என முடிவு செய்தனர்.


பெரியவர்கள் அனைவரும் நன்றாக பேசி கொண்டு இருக்க

இரு ஜோடிகளும் அமைதியாக இருந்தனர் புகழேந்தி நந்தினியையே பார்த்துக் கொண்டிருக்க சரவணன் மருந்துக்கு கூட வெண்ணிலா புறம் திரும்பாமல் அமர்ந்து இருந்தான்.


“சரிங்க நாங்க எங்க மருமகள எங்க கூடவே அழைச்சிட்டு போறோம்” என்றார் குணசேகரன்.


அவர் கூறியவுடன் வெண்ணிலா அழுக ஆரம்பித்தாள் “அம்மா நான் போக மாட்டேன்” என ஈஸ்வரியை கட்டிக் கொண்டு அழுதாள்.


“போய்ட்டு வா கண்ணு அம்மா நாளைக்கு வாரேன்” என்றார் ஈஸ்வரி அழுது கொண்டே

அதை பார்த்த சரவணன் ‘முடியல டா சாமி' என மனதில் நினைத்தான்.


நந்தினியோ எதுவும் கூறாமல் அப்படியே அமைதியாக நின்றிருந்தாள் அவள் அருகில் லட்சுமி தான் அழுது கொண்டே நின்றிருந்தார்.


பின் சரவணன் குடும்பத்தினர் கிளம்பியவுடன் வேல்முருகனும்-ஈஸ்வரியும் விடை பெற்றனர்.


நந்தினியை புகழேந்தியின் அறைக்கு கூட்டி சென்ற காமாட்சி “இது தான் உன் புருஷன் ரூமு முந்தா நாள் தான் ஜோசியக்காரன் சொன்னா உன் வீட்டுக்கு மருமக வர போறான்னு அவன் வாய் முகூர்த்தம் பலிச்சிருச்சு மகாலட்சுமி மாறி இருக்க” என்றவர் அவள் கன்னத்தை தொட்டு நெட்டி முறித்தார்.


அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க “என் கண்ணு நீ எதுவும் பேசவே மாட்டியா” என்றார்.


“எனக்கு டயர்டா இருக்கு படுத்துக்கவா” என்றாள்.


“சரி கண்ணு நீ படு” என்றவர் வெளியே வந்து புகழேந்தியிடம் “புகழு கடைக்கு போய் உன் பொண்டாட்டிக்கு மாத்து துணி வாங்கிட்டு வா பா” என்றார்.


“எனக்கு அளவு தெரியாதே” “அவங்க அம்மா கிட்ட போன போட்டு கேட்டுக்க” என அவனை அனுப்பி வைத்தவர்.


தனது பட்டன் போனில் இருந்து ஜோசியருக்கு அழைத்து விஷயத்தை கூறியவர் சாந்தி மூகூர்த்தத்துக்கு நல்ல நேரம் குறித்து கொண்டார்.


இரவாகியும் நந்தினி வெளியே வரவேயில்லை கதவை தட்டி அவளை அழைத்த காமாட்சி “கண்ணு சாப்பிட வா” என்றார்.


அவள் தயங்கி கொண்டே வெளியே வந்தாள் “கண்ணு போய் குளிச்சிட்டு வாரியா” என்றார்.


“எனக்கு மாத்திக்க துணி இல்லையே” என்றாள்

“உன் புருஷன் வாங்கிட்டு வந்துருக்கான் இந்தா இதை போட்டுக்க” என்றார்.


புகழின் வீட்டின் வெளியே குளியலறை இருப்பதால் அங்கேயே குளித்து முடித்து உடை மாற்றி வெளியே வந்தாள் நந்தினி.


அவள் வந்தவுடன் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர் தன் எதிரே அமர்ந்து இருந்த புகழை நிமிர்ந்து கூட பார்க்காமல் அப்படியே சாப்பிட்டு கொண்டிருந்தாள்.


சாப்பிட்டு முடித்து எங்கே செல்வது என நந்தினி யோசித்து கொண்டே நிற்க அவள் அருகில் வந்த காமாட்சி அவளை தன் அறைக்கு அழைத்து சென்றவர் பீரோவில் இருந்த நகைகளை எடுத்து போட்டு விட்டார் நந்தினி எதுக்கு இதெல்லாம் என்பதை போல அவரை பார்க்க “எனக்கு இருக்குறது ஒரே பையன் கண்ணு எங்களுக்கு பதினைஞ்சு வருஷம் கழிச்சி பொறந்தவன் திடீர்ன்னு விருப்பம் இல்லாம உன் கழுத்துல தாலி கட்டிட்டான்னு அவன தப்பா நினைச்சிக்காத” என்றார்.


அவள் அதற்க்கும் பதில் கூறாமல் இருக்க மீண்டும் அவரே பேச்சு கொடுக்க ஆரம்பிக்க “ஜோசியர் இன்னைக்கு நாள் நல்லா இருக்குன்னு சொல்லிருக்காரு என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்” என்றவர் அவள் கையில் பால் டம்ளரை கொடுத்தவர் “சீக்கிரமே எனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பெத்து கொடு கண்ணு” என்று அறையின் உள்ளே அனுப்பி வைத்தார்.


பதட்டத்துடன் உள்ளே வந்த நந்தனி புகழேந்தியை தேட அவன் அசதியில் நன்றாக படுத்து உறங்கி கொண்டு இருந்தான் அவனை பார்க்க பார்க்க அவளுக்கு கோவம் அதிகரித்தது புகழோ இழுத்து போர்வையை போர்த்தி கொண்டு நன்றாக உறங்கி கொண்டு இருந்தான்.


அவன் அருகில் சென்றவள் அங்கிருந்த தலையணையை எடுத்து அவன் முகத்தில் வைத்து அழுத்தினாள்.


தொடரும்…..
 
அத்தியாயம் 6


அவள் தலையணையை வைத்து அழுத்தியதும் புகழ் அலறி அடித்து கொண்டு எழுந்தான்.


நந்தினி தலை என நினைத்து கால் பக்கம் தலையணையை வைத்து அழுத்தி கொண்டு இருந்தாள் திடீரென அவன் எழுந்திடுவான் என அறியாதவள் பயத்தில் நிலை தடுமாறி அவன் மேலேயே விழுந்துவிட்டாள்.


ஒரு கணம் புரியாமல் என்ன என்பதை போல அவளை பார்த்த புகழேந்தி நந்தினியின் கையில் தலையணை இருப்பதை அப்போது தான் கவனித்தான்.


'என்னையே கொல்ல பார்த்துருக்கா’ என்று கோபம் கொண்டவன் எழுந்து கொள்ள முயற்சி செய்தான் அப்போது தான் கவனித்தான் அவள் தன் மேல் விழுந்து கிடப்பதை.


அவள் மையிட்ட விழிகளை பார்த்தவன் அதில் என்ன தெரிந்ததோ தன்னை அறியாமல் கிரங்கி போனான் எல்லோரையும் கண் பார்த்து பேசுபவன் அவள் கண்களை பார்க்க முடியாமல் தவித்தான் தன்னுடைய ஆசை மனைவி தன் மேல் இருக்க அவள் பொக்கிஷங்கள் அனைத்தும் தன் உடலில் பதிந்து இருக்க அவன் உடலின் உஷ்ணம் அதிகரித்தது அந்த கிரக்கத்திலேயே அவள் இதழை பார்த்தான் அதன் மென்மை தன்மையை பரிசோதிக்க எண்ணி இதழை பார்த்துக்கொண்டே அவளிடம் நெருங்கினான் அவன் எண்ணம் அறிந்த நந்தினி அவனை பிடித்து தள்ளிவிட்டு துள்ளி எழுந்தாள்.


“எவ்வளோ தைரியம் இருந்தா என் கிட்ட வருவ டா” என்றவள் அந்த தலையணையால் அவனை அடிக்க ஆரம்பித்தாள்

“ஏய் என்ன டி பண்ற” என்ற புகழேந்தி கோபத்தில் அவள் கழுத்தை பிடித்து சுவற்றில் சாய்த்தான் அவளை தன் உயரத்துக்கு தூக்கியவன் “மேல கைய வைக்கிற வேலை எல்லாம் வச்சிக்கிட்ட தொலைச்சிருவன் ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசு உங்க ஆத்தா வீட்டில் புருஷன் கிட்ட எப்படி நடந்துக்கனும்னு சொல்லி தரலையா” என்றவன் அவள் மூச்சுக்கு தவிப்பதை பார்த்து கழுத்தில் இருந்து தன் கையை எடுத்தான் அவள் பொத்தென கீழே விழுந்தாள்.


புகழேந்தி எப்போதும் இப்படிதான் அவனுக்கு தான் ஆண் மகன் என்ற அகம்பாவம் எப்போதுமே உண்டு அதனால் தான் நந்தினி அவனை அடித்தவுடன் கோபம் கொண்டு அவள் கழுத்தை நெறித்துவிட்டான்.


தன்னை சுதாரித்து எழுந்து நின்றவள் “என்னை கொன்னுடு டா பாவி கல்யாணம் நின்னு போச்சின்னு எவ்வளோ சந்தோஷமா இருந்தேன் என் வாழ்க்கையே போச்சு” என்றாள் அழுது கொண்டே.


“அடியேய் நான் உனக்கு தாலி கட்டிடே‌ன் டி உனக்கு பிடிச்சிருக்கோ இல்லையோ இனி நீ என் கூட வாழ்ந்து தான் ஆகனும் உனக்கு வேற வழியே இல்லை” என்றான்.


“எனக்கு 19 வயசு ஆகிருச்சி நான் ஒன்னும் உன்னை மாறி உங்க ஊரில் இருக்கவங்க மாறி படிக்காத தற்குறி இல்லை எனக்கு தெரியும் உன்னை என்ன பண்ணனும்னு” என்றாள்.


“என்ன டி பண்ணுவ உன்னால என்ன பண்ண முடியும்” என்றான் அவள் கன்னத்தை பிடித்து

“நாளைக்கு காலையில் உன் மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கல நான் குணசேகரனுக்கு பொறக்கல டா நாயே” என்றாள்.


அவள் அவ்வாறு கூறியவுடன் புகழேந்திக்கு தலைக்கு மேல் கோபம் ஏறியது பளார் என அவள் கன்னத்தில் அறைந்தான்.


“அதுக்கு முதல்ல உன்னை விட்டா தான டி நாளைக்கு காலையில் நீ முழுசா இந்த புகழேந்தி பொஞ்சாதியா மாறி இருப்ப” என்றவன் அவள் அருகில் நெருங்கினான் அவன் பார்வை செல்லும் இடத்தை கீழே குனிந்து பார்த்த நந்தினி பயந்து கொண்டே பின்னே சென்றாள் “நான் தெரியாம சொல்லிட்டேன் பிளீஸ் என்னை எதுவும் பண்ணிடாத” என்றாள்.


அவள் பின்னே சென்று கொண்டே கதவில் மோதி நின்றுவிட்டாள் உடனே கதவை திறந்து வெளியே சென்று விடலாம் என நினைத்தவளின் கையை பிடித்து தடுத்தவன் அவள் கையை தன் கையால் மேலே உயர்த்தி பிடித்துக் கொண்டு மறு கையால் கதவை தாழிட்டான்.


அவன் கையில் இருந்து தன் கையை எடுக்க பார்த்தவளை கதவில் சாய்த்தவன் அவள் இருகைகளையும் மேலே தூக்கி தன் உடலின் மொத்த பாரத்தையும் அவள் மேல் நெருக்கியவன் அவளை அசைய விடாமல் செய்தான்.


நந்தினியோ பயத்தில் வியர்வை விறுவிறுக்க நின்றிருந்தாள் அவள் கழுத்து வளைவில் முத்து முத்தாக இருந்த வியர்வையை பார்த்தவன் அதில் மீசை முடியை உரசி முத்தமிட்டான் அவளோ கூச்சத்தில் நெளிய அவளை அசையவிடாமல் இன்னும் நெருங்கியவன் அவள் கண்களை கிரக்கத்துடன் பார்த்துக் கொண்டே கீழ் உதட்டை‌ கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்

அவனை விலக்க பார்த்து முடியாமல் ஒரு கட்டத்துக்கு மேல் சோர்ந்து போனாள் அவள் கணவனோ இதழிலேயே மொத்த யுத்தத்தையும் முடிக்க முயன்று இதழ் தேன் மொத்ததையும் உறிஞ்சி எடுத்து கொண்டு இருந்தான்.


அவள் மூச்சுக்கு திணறும் போது அவளை விட்டவன் தன் ஆடைகளை கலைந்தான் அவளை தன் தோலில் தூக்கியவன் எறிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து விட்டு பஞ்சு மெத்தையின் மேல் அவளை பொத்தென போட்டு அவள் மேல் படர ஆரம்பித்தான் அவள் விலக பார்க்க விடாமல் அவளை தன் கை கொண்டு அடக்கியவன் அவள் காது மடல்களை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான் அவள் சுதாரிக்கும் முன்னே அவள் ஆடைகளை முற்றிலும் கலைந்து பிறந்த குழந்தையாகவே மாற்றி இருந்தான் தன் வால் கொண்டு மனையாளுடன் கட்டில் யுத்தம் புரிய ஆரம்பித்தான் “விடுடா” என்று அவள் கூறும் போது இன்னும் வேண்டும் என அவன் காதில் விழுந்ததோ என்னவோ காம தேவன் அவனை ஆட்டி வைக்க அவள் இடையை இறுக்கி இன்னும் நெருங்கி அவளை தன் வசப்படுத்தி இருந்தான்.


அன்பும் அறநெறியும்தான், இல்வாழ்க்கையை பண்புடையதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகிறது என்கிறார் வள்ளுவர் இங்கே அன்பே இல்லாமல் இல்வாழ்க்கையை தொடங்கி இருக்கிறாள் நந்தினி அன்பு காட்ட வேண்டிய தலைவனோ தன் கோபத்தையும் பிடிவாதத்தையும் மட்டுமே காட்டி காமத்தினால் தன் மனைவியை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என நினைக்கிறான்.


இங்கே ஒரு ஜோடி இப்படி இருக்க அங்கே வெண்ணிலா பயத்துடனே காரில் இருந்து சரவணன் வீட்டு வாசலில் இறங்கினால் சுற்றி முற்றி வீட்டை பார்த்துக் கொண்டே நடந்து வந்தாள் வீட்டிற்க்கு வெளியே தென்னை மரங்களும் பூச்செடிகளும் நட்டு வைத்திருந்தனர் தென்னை மரத்தில் இருந்து சில்லென்ற காற்று வந்து அவள் மேல் மோதி கொண்டு இருந்தது.


இவள் நடந்து வருவதற்க்குள் சரவணன் விறுவிறுவென வீட்டின்னுள்ளே சென்றுவிட்டான் பின்னே வந்த வெண்ணிலா வீட்டின் உள்ளே நுழையும் சமயம் அவளை தடுத்த குணசேகரன் “இரும்மா ஆலம் சுத்த சொல்றேன்” என்றார்

“லட்சுமி போய் ஆலம் கரைச்சி எடுத்துட்டு வா” என்றார்.


“இப்போ அது ஒன்னு தான் கேடு” என்ற லட்சுமி முகத்தை திருப்பி கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.


“அவள் அப்படித்தான் நீ கண்டுக்காத உள்ள வா மா”

என்று வெண்ணிலாவை அழைத்து சென்றார்.


வெண்ணிலா உள்ளே வந்த உடன் வீட்டை சுற்றி பார்த்தாள் ஹால் மூன்று பெட்ரூம் ஒரு சமயலறையுடன் கூடிய பெரிய வீடு பின் கட்டில் கிணறு ஒன்று இருந்தது சுற்றிலும் தென்னை மரங்களும் பூச்செடிகளுடன் கூடிய அழகான தோப்பு வீடு வீட்டின் மேலே மல்லி செடி கொடியாக படர்ந்து இருந்தது அதன் மணம் உள்ளே வரை வீசிக் கொண்டிருந்தது

ஆங்காங்கே சுவற்றில் சரவணன் மற்றும் நந்தினியின் சிறு வயது புகைப்படங்கள் மாட்டி இருந்தனர்.


அதை பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள் வெண்ணிலா “ஏய் இதுவரைக்கும் யார் வீட்டுக்கும் போனதே இல்லையா நீ என்ன இப்படி பார்க்குற” என்றார் லட்சுமி.


அவள் என்ன கூறுவது என தெரியாமல் நிற்க

“வா இங்கே” என்றார் வெண்ணிலா பயந்து கொண்டே அவர் அருகில் சென்றாள் விட்டால் அழுது விடுவேன் என்பதை போல நின்று இருந்தாள்.


“போய் பின் கட்டுல பாத்திரம் இருக்கு கிணத்துல தண்ணீ இரைச்சி கழுவு” என்றார்.


அவள் எதுவும் கூறாமல் அமைதியாக பின்கட்டுக்கு சென்றாள் அவளை பாவமாக பார்ததார் குணசேகரன் “ஏன் டி அந்த புள்ள பாவம் இல்லையா?” என்றார்.


“என் பொண்ணும் தான் பாவம் அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா அவன் தாலி கட்டிட்டான்னு இவரு பொண்ண கொடுத்துட்டு வந்துட்டாரு என் பொண்ணு பையன் ரெண்டு பேர் வாழ்க்கையும் சீரழிஞ்சி போச்சி” என்று அழுது கொண்டே முந்தானையில் மூக்கை சிந்தினார்.


“தாலி கட்டியாச்சு இனி என்னை என்ன பண்ண சொல்ற, கல்யாணம் ஆகிட்டா அதெல்லாம் பசங்க திருந்திடுவாங்க” என்றார்.


“ஆமா அவனை சரி பண்ண தான் என் பொண்ண கட்டிக் கொடுத்தேன் பாரு” என்றார் லட்சுமி.


தன் அறைக்கு சென்று உடை மாற்றி விட்டு வந்த சரவணன்

“அம்மா நான் வெளியே போய்ட்டு வரேன்” என்றான்.


“எங்க டா போற” என்றார் லட்சுமி.


“எங்கையோ போறேன்” என்றவன் தனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.


சரவணன் சென்ற பிறகு வீட்டில் இருந்த அனைத்து வேலைகளையும் வெண்ணிலா தலையில் கட்டியிருந்தார் லட்சுமி.


அதை செய் இதை செய் என்று வேலை வாங்கி கொண்டே இருக்க குணசேகரன் “சாப்பிட வாம்மா” என அழைத்தார்.


அவள் சாப்பிட அமர்ந்ததும் “ஏய்” என லட்சுமி அழைத்தார் உடனே பதறி அடித்து கொண்டு பாதி சாப்பாட்டில் எழுந்து ஓடினாள் வெண்ணிலா.


இரவு 10 மணி அளவில் லட்சுமி உறங்க செல்லும் போது வெண்ணிலா எங்கே செல்வது என தவித்துக் கொண்டிருந்தாள்

“ஏய் என் பையன் வருவான் அவனுக்கு சாப்பாடு கொடுத்துட்டு போய் படு” என்று கூறிவிட்டு சென்றார்.


ஹாலில் அமர்ந்து அவனுக்காக காத்திருந்தாள் வெண்ணிலா எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாளோ தூங்கி வழிந்து கொண்டே இருந்தாள்.


நடுஇரவில் வீட்டின் உள்ளே நுழைந்த சரவணன் வெண்ணிலா அமர்ந்து கொண்டே உறங்கி இருப்பதை பார்த்தான் அவளை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றான்.


அவன் வந்த அரவம் கேட்டு எழுந்த வெண்ணிலா அவனை எப்படி கூப்பிட என்று தெரியாமல் தவித்தவள் “என்னங்க” என்று தட்டு தடுமாறி அழைத்து விட்டாள்.


சரவணன் நின்று என்ன என்பதை போல பார்த்தான் “சாப்பிட வாங்க” என்றாள்.


“எனக்கு வேண்டாம் நான் வெளியேவே சாப்பிட்டேன்” என்றவன் தன் அறைக்கு சென்று விட்டான்.


வெண்ணிலாவோ எங்கே செல்வது என தெரியாமல் அங்கேயே நின்றிருந்தாள்.தொடரும்…..
 
அத்தியாயம் 7


வெண்ணிலா எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தாளோ நேரம் ஆக ஆக அவளுக்கு கண்ணீரே வந்துவிட்டது.


வெண்ணிலா வீட்டிற்க்கு ஒரே பெண் பிள்ளை என்பதால் பொத்தி பொத்தி வளர்த்திருந்தனர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பூப்பெய்தி விட்டதால் அவள் தாய் ஈஸ்வரி அவளை பள்ளிக்கூடத்துக்கு கூட அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைத்துவிட்டார் அவளுக்கு தெரிந்தது எல்லாம் தாய் வீடு தன் பெரியப்பா வீடு அவ்வளவே தனியாக வெளியே சென்று கூட பழகியிராதவள் இன்று வாழ்க்கையில் தன்னந்தனியாக நிற்க தடுமாறி கொண்டு இருந்தாள்.


அழுது கொண்டே நின்றிருந்தவளை அங்கே தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்த சரவணன் அவளை பார்த்தும் கண்டுகொள்ளாமல் தண்ணீரை பருகியவன் தன் அறைக்கு செல்ல எத்தனித்தான் பின் என்ன நினைத்தானோ அவள் அருகில் சென்றவன்

கலைந்த கேசத்துடன் அழுது அழுது மூக்கின் நுனி சிவந்து காலை அணிந்திருந்த அதே தாவணி பாவடையில் தான் அணிவித்த மஞ்சள் கயிற்றுடன் தலை குனிந்து சோர்ந்து போய் நின்றிருந்தவளை பார்த்தவன் “எதுக்கு அழற?” என்றான்.


அதற்கு அவள் எதுவும் பதில் கூறாமல் அழுது கொண்டே நின்றிருப்பதை பார்த்து எரிச்சலடைந்தவன் “ஏய் இப்போ எதுக்கு அழறன்னு சொல்ல போறியா இல்லையா” என்றான் கோபத்துடன்,

சரவணன் சரியான முன் கோபக்காரன் எப்போதும் முதலில் அவன் வாய் பேசும் முன் அவன் கை தான் பேசும் பொருமை என்பது எள் அளவும் அவனுக்கு கிடையாது தன் பொருமையை இழுத்து பிடித்து அவளிடம் பேசிக் கொண்டு இருந்தான்

அவன் குரல் உயர்த்தி பேசியவுடன் தூக்கி வாரி போட்டது வெண்ணிலாவிற்க்கு உடல் உதற ஆரம்பித்தது பயத்துடனே அவனை நிமிர்ந்து பார்க்காமல் “தூக்கம் வருதுங்க எங்கே படுக்கனும்ன்னு தெரியலங்க” என்றாள் மூக்கை உறிஞ்சி கொண்டே

அவளை பார்த்த சரவணன் “சரி வா வந்து என்னோட அறையில் படுத்துக்கோ” என்றான்.


அவன் உடனே அப்படி கூறியவுடன் அவன் அறைக்கு செல்லலாமா வேண்டாமா என தயங்கி கொண்டே நின்றிருந்தாள்

வெண்ணிலா,

அவள் எதுவும் பேசாமல் நின்றிருப்பதை பார்த்தவன் ‘இவளுக்கு எவ்வளோ திமிரு நானே வந்து பேசறேன் பதில் பேசாம நிக்குறா பாரு' என்று நினைத்தவன் “வரலன்னா இங்கேயே படுத்துக்கோ” என்று கூறியவன் தன் அறைக்கு சென்றுவிட்டான்.


சரவணன் செல்வதை பார்த்தவள் அவன் பின்னே ஓடி அறையின் வாசலில் தயங்கி கொண்டே நின்றிருந்தாள் குளிப்பதற்காக துண்டை எடுத்தவன் வெண்ணிலா வெளியே நிற்பதை பார்த்து “உள்ளே வா” என்றான்.


அறையின் உள்ளே நுழைந்தவள் சுற்றி முற்றி பார்த்தாள் துணிகள் மடித்து வைக்கப்பட்ட ஒரு அலமாரி சிறிய கட்டில் உடன் கூடிய சிறிய அறை

அவன் குளிக்க வெளியே செல்ல எத்தனிக்க “என்னங்க எங்கே படுக்கனும்ங்க?” என்றாள் தயக்கத்துடன்

“கொஞ்சம் நேரம் இரு பட்டு ஜமுக்காளம் விரிக்க சொல்றேன் படுத்துக்கோ” என்றான் கிண்டலாக

அவளோ முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு “சரிங்க” என்றாள்.


“லூசா டி நீ கட்டிலில் போய் படு” என்றான் கோபத்துடன்,

வெண்ணிலா வெளியில் பிறருடன் பழகியது இல்லை பள்ளி படிப்போடு முடிந்துவிட்டது அவள் நட்பு வட்டம் அதனால் தான் என்னவோ இந்த பேச்சு எதுவும் விளங்காமல் அதே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் மனநிலையில் குமரி குழந்தையாகவே இருக்கிறாள்

அவன் பேசியதை கேட்டு

'நான் இப்போ என்ன கேட்டேன்னு என்னை இப்படி திட்டுறாரு நாளைக்கு முதல் வேலையா அம்மா கூட நம்ம ஊருக்கு போயே ஆகனும்' என்று மனதில் நினைத்தவள் தேம்பி கொண்டே வந்து கட்டிலின் மறுமுனையில் படுத்து கொண்டாள்.


திருமணம் ஆன பின் மனைவி கணவன் வீட்டில் இருப்பது தான் தனக்கு மதிப்பும் மரியாதையும் என்பது பாவம் அவளுக்கு தெரியவில்லை.


நேற்று வரை தாய் தந்தையின்

அரவணைப்பில் இளவரசியாக இருந்தவள் இன்று கூண்டில் அடைத்த கிளியாக மாட்டி கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறாள்.


'கடவுளே இந்த மாறி ஒரு வாழை மட்டையா எனக்கு பொண்டாட்டியா வரனும்' என்று முனுமுனுத்துக் கொண்டே அந்த அறையின் விளக்கை அணைத்து விடிவிளக்கை மட்டும் போட்டு வீட்டின் பின் கட்டிற்க்கு குளிக்க சென்றான் சரவணன்.


குளித்து முடித்து வந்த சரவணன் உடை மாற்றி எப்போதும் அணியும் பனியன் மற்றும் வேஷ்டி அணிந்து வந்து கட்டிலின் மறுமுனையில் படுத்து கொண்டான் வெண்ணிலா நன்கு உறங்கி கொண்டு இருந்தாள்.


அந்த சிறிய கட்டிலில் இருவர் படுக்க இடம் இல்லாமல் சரவணன் உறக்கம் வராமல் திரும்பி திரும்பி படுத்துக் கொண்டு இருந்தான்

அந்த கட்டில் ஒருவர் மட்டுமே படுக்க கூடிய அந்த காலத்தில் செய்த சிறிய மர கட்டில் என்பதால் அவனால் படுக்க முடியவில்லை அவன் திரும்பி திரும்பி படுக்க கட்டிலில் இருந்து சத்தம் வர ஆரம்பித்தது அந்த சத்தத்தை கேட்டு மெல்ல கண் விழித்தாள் வெண்ணிலா.


தன் அருகில் பெரிய மீசையுடன் வாட்ட சாட்டமாக ஒருவன் படுத்திருப்பதை பார்த்தவள்,

தூக்கத்தில் இருந்து விழித்தாள் அது தன் கணவன் என்று கூட அறியாமல் தன் வீட்டில் தான் இருக்கிறோம் என்ற நினைவில் அவனை பார்த்து அலற ஆரம்பித்தாள் “அம்மா திருடன் வா மா எங்கே இருக்க” என்று கத்தி கொண்டே வெளியே ஓட பார்த்தாள்

இவள் போடும் சத்தித்ததில் எங்கே தன் தாய் தந்தை எழுந்து விடுவார்களோ என்று நினைத்தவன்.


வெண்ணிலாவின் கையை பிடிக்க அவள் பின்னே சென்றவன் தவறுதலாக அவள் தாவணியை பிடித்து இழுத்துவிட்டான் அவன் இழுத்த வேகத்துக்கு அந்த தாவணியின் ஊக்கு அவள் தோள் வளைவில் குத்தி அவன் கையொடு வந்துவிட்டது

வலியில் “ஆஆஆ” என்று அலறியவள் கதவை திறக்க முயற்சிக்கும் போது அவள் வெற்று இடையில் தன் வலிய கரம் கொண்டு பின் மேனியுடன் இறுக்கி அவளை தூக்கி கொண்டான் சரவணன்,

வெண்ணிலா தன் கை கொண்டு “என்ன விடுடா” என்று வேகமாக அவனை அடிக்க ஆரம்பித்தாள்.


“வாயை மூடு டி” என்றவன் மறுகையால் விளக்கை ஒளிர்வித்தான் வெளிச்சம் வந்தவுடன் அவனிடமிருந்து திமிரி இறங்கியவள் சரவணனை பார்த்தாள் அப்போது தான் சுய நினைவே வந்ததது அவளுக்கு

அவனை பார்த்தவள் கையில் தன் தாவணி இருப்பதையும் கவனித்தாள்.


“கூறு கெட்டவளே அறிவு இருக்கா டி உனக்கு” என்று திட்டிக் கொண்டே அவளை நெருங்கியவன் தலையில் கொட்ட ஆரம்பித்தான் “ஆஆ வலிக்குது விடுங்க நான் நான் எங்க வீட்டில் இருக்கேன்னு நினைச்சிட்டங்க” என்றவள் தடுமாறி கொண்டே அவன் மேல் மோதி நின்றாள் மோதியதில் அவள் முன் மேனி மொத்தமும் அவன் மீது பதிந்தது அந்த இரு உடலின் பிணைவில் இரு கல்லை உரசினால் நெருப்பு வருவதை போல இரு உடல்களின் உரசலில் அவனுக்குள் தன்னை அறியாமல் ஏதோ ஒரு உணர்வு வந்தது,

அவனும் ஆண் மகன் தானே

அவளோ “அடிக்காதிங்க வலிக்குது” என்று தலையில் கை வைத்து கொண்டே கூறி கொண்டு இருந்தாள் அவள் முகத்தை பார்த்தவன் தங்கத் தோடு அணிந்த அவள் காது மடல்கள் அவளோடு சேர்ந்து நடனமாடி கொண்டு இருந்தது, வில் போன்ற வளைந்த புருவங்களை பார்த்தவனின் கண்கள் இறுதியாக அவள் நடுங்கும் இதழில் வந்து நின்றது அதில் மயங்கியவன்.


தன்னை அறியாமல் அவள் உடலில் தன் பார்வையை அலை பாய விட்டான் வள்ளுவர் கூறுவதை போல் மத யானையின் இரு தந்தங்களை போன்ற கொங்கைகள் தன் மேனியில் உரசி கொண்டு இருப்பதை பார்த்தவனுக்கு தன்னை அறியாமல் உடலில் உஷ்ணம் அதிகரிக்க ஆரம்பித்தது

மேலும் அவளை நெருங்க ஆரம்பித்தான் தன் உடலோடு சேர்த்து அவளை சுவற்றில் இன்னும் நெருக்கியவனை பார்த்தவள் “என்ன பண்ணுறிங்க என்னால மூச்சு விட முடியல” என்றாள் அவன் பாரம் தாங்காமல் தடுமாறி கொண்டே

அப்போது தான் மேனியில் இருந்த அவன் பார்வை அவள் முகத்திற்க்கு வந்தது அவள் சிரமப்படுவதை பார்த்தவன் தன் கனவில் இருந்து மீண்டு அவளிடம் இருந்து விலகினான் அவள் கையில் தாவணியை கொடுத்து “கட்டிட்டு போய் படு கண்டதை காட்டி மயக்க பார்க்குறியா இதெல்லாம் என் கிட்ட நடக்காது பொம்பள புள்ளையா அடக்கமா இருக்க பாரு”


தாவணியை கையில் வாங்கியவளுக்கு அவன் எதை பற்றி கூறுகிறான் என்று எதுவும் விளங்கவில்லை ‘இதை எப்படி கட்ட' என்று மட்டுமே மனதில் யோசித்து கொண்டு இருந்தாள்

வெண்ணிலாவிற்க்கு தாவணியே கட்ட தெரியாது பாவடை சட்டை மட்டுமே போட்டு பழகி இருந்தவள்

இன்று தன் தாய் காலையில் கோவிலுக்கு செல்ல தாவணி கட்டிவிட்டது நினைவுக்கு வந்தது அதை தனக்கு தெரிந்த படி சுற்றிக் கொண்டு வந்து படுத்தாள்.


கட்டிலில் இருந்து தலையணை மற்றும் போர்வையை எடுத்த சரவணன் “நான் கீழே படுத்துக்கிறேன் நீ மேல படு” என்றவன் போர்வையை விரித்து கீழே படுத்து கொண்டான்.


கீழே படுத்த சரவணன் ‘இவள் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கனும்’ என்று மனதில் நினைத்தவன் உறங்க ஆரம்பித்தான் கட்டிலின் மேலே படுத்த வெண்ணிலா சரவணன் உறக்கி விட்டானா என்று மெல்ல ஓரக் கண்ணால் பார்த்தவள் வேலை செய்த அசதியில் அப்படியே அவளும் உறங்கிவிட்டாள்.


மறுநாள் காலை லட்சுமி சரவணனின் அறை வாசலில் குட்டி போட்ட பூனையாக இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார்

“இன்னும் வெளிய வரலையே” என்று திட்டிக் கொண்டே இருந்தவரை பார்த்த குணசேகரன் காபி குடித்து கொண்டே ஹாலில் அமர்ந்து இருந்தார் “லட்சுமி லட்சுமி” என்று அவர் அழைக்க

அங்கே சென்ற லட்சுமி எரிச்சல் பட்டு கொண்டே “என்னங்க” என்றார்.


“காபியில் சர்க்கரை பத்தல டி”

“அது இப்போ ரொம்ப முக்கியம் கொஞ்சம் நேரம் சும்மா இருங்க” என்றவர் சரவணன் அறை கதவையே பார்த்து கொண்டு இருந்தார்.


அவரின் காத்திருப்பை பொய்யாக்காமல் வெண்ணிலா கொட்டாவி விட்டுக் கொண்டே கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் சோம்பல் முறிக்க கையை தூக்கியவள் லட்சுமியை பார்த்து கையை கீழே விட சுற்றி வைத்திருந்த தாவணி நழுவியது அதை சரி செய்து கொண்டு நின்றிருந்தவளை பார்த்தவர் “ஏய் உனக்கு தாவணியை கூட ஒழுங்கா கட்ட தெரியாதா” என்றார் அவளை முறைத்து கொண்டே

“அவரு தான் அத்தை நேத்து பிடிச்சி இழுத்துட்டாரு பாருங்க பிளவுஸ் கூட கிழிச்சிட்டாரு” என்றவளை பார்த்து முகத்தை சுளித்த லட்சுமி “சீச்சீ வாயை மூடு என்ன பேச்சு இது போய் முதல்ல குளிச்சிட்டு வா” என்று அவளை அனுப்பி வைத்தவர் கோபத்துடன் வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டார்.


“ஏன் டி எதை எதை கேட்கனும்ன்னு ஒரு நாகரிகம் வேண்டாம்” என்றார் குணசேகரன் “எல்லாம் எனக்கு தெரியும் நீங்க சும்மா இருங்க”

என்று கூறியவர்

‘என் பொண்ணு அங்கே என்ன எல்லாம் கஷ்ட்டப்படுறாளோ’ என்று நினைத்தவர் முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்துவிட்டார்.


புகழேந்தியின் இல்லம்

சேவல் கூவும் சத்தம் கேட்டு மெல்ல கண் விழித்தாள் நந்தினி.


தொடரும்….
 
Last edited:
அத்தியாயம் 8


மார்கழி மாத குளிர் காலை வேளை கதிரவன் தூக்கத்திலியே தன் ஒளிக்கற்றைகளை வானத்தில் நிரப்பி கொண்டிருந்தான் பறவைகள் தங்கள் கூடுகளில் இருந்து ஒலி எழுப்பி பறக்க ஆரம்பித்தன

சேவல் கூவும் சத்தம் கேட்டு மெல்ல தன் கண்களை திறக்க முடியாமல் திறந்தாள் நந்தினி இரவு தூங்காததால் கண்கள் எரிய ஆரம்பித்தது உடல் எல்லாம் அடித்து போட்டார் போன்று அப்படி‌ ஒரு அசதி அவளுக்கு போர்வையை விலக்கியவள் தான் வெற்றுடம்பில் இருக்க மேலும் குளிர ஆரம்பித்தது தன் மேல் பாரத்தை உணர்ந்தவள் போர்வையை இன்னும் விளக்கி பார்த்தவள் அதிர்நதுவிட்டாள் தன் இடையையே தலையணை ஆக்கி அதில் சொகுசாக உறங்கி கொண்டிருந்த புகழேந்தியை பார்த்தவளுக்கு கண்கள் இரண்டும் கோபத்தில் கொப்பளிக்க ஆரம்பித்து கோபம் கொண்டு அவனை தன்னிடமிருந்து பிரித்து தள்ளியவள் தன் பாவடையை எடுத்து தன் மானம் மறைக்க மார்ப்பு வரை ஏற்றிக் கட்டி முடிச்சிட்டவள் பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்து தன் கணவனை கோபம் தீரும் வரை வேகமாக வேகமாக அடிக்க ஆரம்பித்தாள்.


வலி தாங்க முடியாமல் தூக்கத்தில் இருந்து கண் விழித்த புகழோ தன் மனைவி கையில் தலையணையுடன் தன்னை அடித்துக் கொண்டு இருப்பதை பார்த்தவன் அவள் கையில் இருந்த தலையணையை பிடுங்கி தூக்கி எறிந்தவன் அவளை அப்படியே சுவற்றில் சாய்த்து தன் உடலோடு அவள் உடலை நெருக்கி “மேல கையை வைக்கிற வேலையெல்லாம் வச்சிக்கிட்ட” என்றான் கோபத்துடன் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு “என்ன டா பண்ணுவ” என்றாள் நந்தினி சீறும் பாம்பாக அவளை பார்த்து குறும்பாக சிரித்தவன் அவளின் இரு கைகளை தன் கை கொண்டு சிறை செய்து அவள் இதழை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான் சிறிது நேரம் கழித்து அவள் இதழில் இருந்து விலகியவன்

“ஒன்னும் பண்ண மாட்டேன் எத்தனை வாட்டி என்னை நீ அடிக்கிறியோ அத்தனை தடவை மாமா உனக்கு முத்தா கொடுப்பேன்” என்று தன் சிங்க பல் தெரிய சிரித்தவனை பார்த்து

கோபமடைந்தவள் அவனை முறைக்க ஆரம்பித்தாள்.


“அய்யோ லட்டு நீ என்னை இப்படி பார்த்தாளே மாமாவுக்கு மூட் ஏறிடுது டி நாலாவது ரவுன்ட் போலாமா” என்று அவளை பார்த்து கண்ணடித்தான்.


மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்

என்று வள்ளுவரின் வரிகளை கலைஞர் உணர்த்துவது சரிதான் போல.


அவன் அவளை பார்த்து கொண்டே இலகுவாகும் சமயம் அவனை பிடித்து பெட்டில் தள்ளியவள்

விறுவிறுவென கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல போக

ஓடி வந்து அவளை தடுத்து நிறுத்தியவன் “இப்படியேவா வெளியே போக போற” என்றான் அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்து கொண்டே அப்போது தான் இருக்கும் நிலையை பார்த்தவளுக்கு அழுகை தான் வந்தது இவ்வளவு நேரம் தைரியமாக இருந்தவள் இவ்வளவு நாள் தான் காத்து வந்த தன் கற்பு தன்னிடம் இல்லை என்றவுடன் வெடித்து அப்படியே அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.


அவள் அழுவதை பார்த்து “என்ன புள்ள என்னாச்சு ஏன் அழற” என்றான் அவள் அருகில் அமர்ந்து புகழேந்தி

அவன் பேசியவுடன் கோபம் இன்னும் அதிகமாக தன் கை கொண்டு அவனை அடித்தவள் “நான் எவ்வளவு கனவோடு இருந்தேன்னு தெரியுமா டா பாவி படிக்கனும் வேலைக்கு போகனும்

என் வாழ்க்கையே போச்சு” என்று கூறி கொண்டே அழுபவளை பார்த்தவன்.


“இந்தா புள்ள படிச்சி என்ன டி பண்ண போற நான் எல்லாம் என்ன படிச்சா இருக்கேன் ஊர் பிரசிடன்ட்டா இல்லை நீ வீட்லயே இருந்து எங்க அம்மா கூட வீட்டு வேலையை மட்டும் பாரு அது போதும்” என்று


அவன் கூறிக் கொண்டே இருக்கும் போதே புகழேந்தியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் நந்தினி

அவள் அறைந்தவுடன் அவனுக்கு சுள்ளென்று கோபம் வர அவள் கையை பிடித்து வளைத்தவன் “எவ்வளோ தைரியம் என்னையே அடிக்குற ஒழுங்கா வீட்ல இருந்து எங்க அம்மா கூட வீட்டு வேலையை பார்த்துக்கிட்டு எனக்கு புள்ளைய பெத்து கொடுக்குற வழிய பாரு

நான் படிக்க தான் போவன்னு சொல்லிட்டு இருந்த தொலைச்சிருவன்” என்று விரல் நீட்டி எச்சரித்தவன் எழுந்து உடை மாற்றிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.


புகழேந்தியை பொருத்த வரையில் பெண்கள் என்றால் வீட்டு வேலை செய்வதற்க்கும ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பதற்க்கு மட்டுமே என்று எண்ணி கொண்டிருந்தான்.


அங்கேயே அமர்ந்து அழுது கொண்டு இருந்தாள் நந்தினி அவன் கையை வளைத்ததில் அந்த வலி ஒரு புறம் மனவலி ஒரு புறம் தேம்பி தேம்பி அழுது சோர்ந்தவள் ‘எனக்கு எதுக்கு இந்த வாழ்க்கை’ என்று விரக்தியுடன் நினைத்தவள் ஒரு முடிவுடன் எழுந்து தலை முடியை எடுத்து கொண்டையிட்டாள் புடவையை கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.


வெளியே இவள் வரவிற்க்காகவே காத்திருந்த காமாட்சி அவளை தலை முதல் கால் வரை ஆராய்ச்சி செய்தார்

கலைந்த தலைமுடி பின் குத்தாமல் கலைந்து கசங்கி இருந்த முந்தானை நெற்றியில் இருந்த குங்குமம் கலந்திருக்க ‘அப்பாடா’ என்று மனதில் திருப்தி பட்டுக் கொண்டவர்.


“வா கண்ணு” என்று வாஞ்சையுடன் நந்தினியின் அருகில் சென்று நின்று கொண்டு அவள் கையை பிடித்தவர் “அசதியா இருக்கா பின்வாசலில் வெந்நீர் கலந்து வச்சுருக்கேன் போய் குளி

தம்பி தோட்டத்துக்கு போய்ருக்கான் இப்போ வந்துருவான்” என்றவர் அவளுக்கு தன் கையாலேயே திருஷ்டி கழித்து நெட்டி முறித்தார் “போ கண்ணு” என்று அனுப்பி வைத்து சமயலறைக்கு சென்றார்.


அவர் பேசிய எதுவும் நந்தினியின் காதில் விழவில்லை யோசனையுடன் பின்வாசலில் இருக்கும் குளியலறைக்கு சென்று கதவை சாற்றி கொண்டாள்.


அந்த சமயம் “ஏய் வீட்ல யாரு” என்று கத்திக் கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தார் சின்னசாமியின் தம்பி வேலாயுதம் அவரின் பின்னே அவர் மனைவி ஈஸ்வரியும் வந்தார்.


அவர் குரல் கேட்டு வெளியே வந்தனர் சின்னசாமியும் காமாட்சியும் “வா டா தம்பி” என்று அவரை சின்னசாமி வரவேற்க

“நான் ஒன்னும் உன் வீட்ல தலை வாழை இலை போட்டு விருந்து சாப்பிட வரல உன்னை அண்ணன்னு நம்புன பாவத்துக்கு என்னை நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டல்ல பாவி நீயெல்லாம் நல்லா இருப்பியா” என்றார் ஆதங்கத்துடன்.


வேலாயுதம் என்ன சொல்ல வருகிறார் என்பது எதுவும் புரியாமல் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்க “என்னாச்சு டா தம்பி” என்றார் சின்னசாமி.


அதே நேரம் தோட்டத்திற்க்கு சென்று வந்த புகழேந்தியும் உள்ளே நுழைய “என்னாச்சி சித்தப்பா ஏன் கத்திக்கிட்டு இருக்க?” என்றான் கேள்வியுடன்.


“வா பா ஊர் தலைவரு நீயே ஒரு நியாயத்தை சொல்லு என் புள்ளைக்கு ஒரு மாப்பிள்ளைய பார்த்து கட்டி அனுப்பி வச்சிங்களே அப்பனும் மகனுமா சேர்ந்து அவன் ஆம்பளையே இல்லையாம் அவனுக்கு புள்ளையே பொறுக்காதாம்

இது எல்லாமே தெரிஞ்சும் இந்தா நிக்குறாரே பெரிய மனுஷன் என் பொண்ணு வாழ்க்கைய கெடுத்துருக்காரு உங்க வீட்ல ஒரு பொண்ணு இருந்திருந்தா இப்படி ஒருத்தனுக்கு கட்டி கொடுப்பிங்களா” என்றார் கோவத்துடன்

அவர் கூறியதை கேட்ட காமாட்சி அவரை அதிர்ச்சியுடன் பார்க்க


“தம்பி எதுவா இருந்தாலும் உட்கார்ந்து பேசிக்கலாம் வா” என்றார் சின்னசாமி

“யோவ் என்ன உட்கார்ந்து பேசுனும் எல்லாம் தெரிஞ்சும் என் பொண்ணு வாழ்க்கைய சீரழிச்சிட்ட பாவி‌” என்றார் ஆதங்கத்துடன் வேலாயுதம்.


“என்னப்பா இதெல்லாம் உண்மையா உங்களுக்கு முன்னாடியே தெரியுமா இந்த விஷயம் எல்லாம்?” என்று வினவினான் புகழேந்தி.


“அந்த பையன் சரவணனுக்கு ஒரு ரெண்டு வருஷம் முன்னே ஒரு லாரி மோதி விபத்து நடந்தது உண்மை தான் ஆனா இவங்க சொல்ற மாறி எதுவும் இல்லை டா தம்பி” என்றார் சின்னசாமி.


“யோவ் நீ என்ன பெரிய டாக்டரா

ஊரே சொல்லுது அவனை பத்தி போதும் என் பொண்ண எங்க கூட அனுப்பி வைக்க சொல்லு” என்றார் ஆதங்கத்துடன்.


சரவணனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் விபத்து நடந்தது என்னவோ உண்மை தான் ஊரில் நாலு பேர் நாலு விதமாக பேசி இப்படி புரளியை கிளப்பி விட்டிருந்தனர் அதையெல்லாம் நம்பி கொண்டு வேலாயுதம் இங்கே வந்து கத்தி கொண்டு இருந்தார்.


நேரம் ஆக ஆக இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றி வேலாயுதம் சின்னசாமியை அடிக்க கை ஓங்கி கொண்டு வர புகழேந்தி அவரை பிடித்து தடுத்து கொண்டு இருந்தான்.


அந்த நேரம் பார்த்து குளித்துவிட்டு வெளியே நடந்து வந்த நந்தினி வாசல் படியிலேயே மயங்கி சரிந்து விழுந்தாள் அவளை பார்த்த காமாட்சி பதறி அடித்து கொண்டு ஓட அனைவரின் பார்வையும் அவளின் புறம் திரும்பியது.


ஓடி சென்று அவளை கையில் தாங்கிய காமாட்சி “அம்மாடி நந்தினி” என்று கன்னத்தில் தட்டி எழுப்ப அப்போதும் அவள் எழுந்து கொள்ளவில்லை வாயில் இருந்து நுரை தள்ள ஆரம்பித்தது

அதை பார்த்த காமாட்சி “ஐயா புகழு” என்று கதற அவனும் அப்போது தான் பார்த்தான் அவள் வாயில் இருந்து நுரை தள்ளியதை.


உடனே நந்தினியை தன் கையில் தூக்கியவன் வெளியே நின்ற தனது காரின் பின் சீட்டில் படுக்க வைக்க காமாட்சி, சின்னசாமியும் அவன் பின்னே ஓடி வந்து ஏறிக் கொள்ள காரை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.


அவன் பின்னே வேலாயுதமும் அவர் மனைவி ஈஸ்வரியும் தங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு விரைந்தனர்.


மருத்துவமனைக்கு செல்லும் வழியெல்லாம் அழுது கொண்டே காமாட்சி வர சின்னசாமி ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டு இருந்தார்.


புகழேந்தியோ நந்தினியை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே ஒரு வித நடுக்கத்துடனே வண்டியை செலுத்திக் கொண்டு இருந்தான்.


மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்தியவன் அவளை தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினான்.


மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவிற்க்கு அவளை அழைத்து செல்ல நடுக்கத்துடனே வெளியே அமர்ந்து இருந்தான் புகழேந்தி.


சின்னசாமி-காமாட்சி ஏதோ அவனிடம் பேசிக் கொண்டு இருக்க அவன் காதில் எதுவும் விழவில்லை ஏதோ ஊமை படம் ஓடிக் கொண்டு இருப்பதை போல அதிர்ச்சியில் அவன் காதுகள் இரண்டும் அடைத்து போய் அமர்ந்து இருந்தான்.


புகழேந்தியின் மனதில் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பது மட்டுமே அவன் மூளையில் ஓடிக் கொண்டு இருந்தது.


வேலாயுதம்-ஈஸ்வரியும் அவர்கள் பின்னே வந்திருந்தனர்

அவர்களும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தனர்.


பாப்பம்பட்டியில் இருந்து நந்தினியின் உறவுக்கார பெண்மணி ஒருவர் மருத்துமனைக்கு வந்திருக்க

அவர் புகழேந்தி நந்தினியை தூக்கி செல்வதை பார்த்தவர் அங்கே இருந்த செவிலியரிடம் என்னவென்று விசாரிக்க அவர் விஷயத்தை கூற நந்தினியின் வீட்டிற்க்கு அலைபேசியில் அழைத்து விஷயத்தை கூறியிருந்தார்.தொடரும்….
 

அத்தியாயம் 9


நந்தினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டு அவளின் பெற்றோர் அலறி அடித்து கொண்டு ஓடி வர அவர்களுடன் சரவணன் மற்றும் வெண்ணிலாவும் வந்து சேர்ந்தனர்.


கோவத்துடன் வந்த சரவணன் புகழேந்தியின் சட்டையை பிடித்து அவன் கன்னத்தில் அறைந்தவன் “என்ன டா பண்ண என் தங்கச்சிய அப்போவே சொன்னனே அவள விட்டுருன்னு கேட்டியா டா” என்று மேலும் அவனை அடிக்க ஆரம்பிக்க அவனை தடுக்கும் மனநிலையில் கூட புகழேந்தி இல்லை ஓடி வந்து அவனை தடுத்த சின்னசாமி “போதும் பா என் புள்ளைய விட்ரு” என்று அழுது கொண்டே அவனை தடுக்க அவன் சற்று அமைதியானான்.


சரவணனுக்கு சின்னசாமியை பார்க்கவும் பாவமாக தான் இருந்தது அதனால் தான் சட்டையில் இருந்து கையை எடுத்துவிட்டு அமைதியாக நின்று கொண்டான்.


லட்சுமியோ தரையில் அமர்ந்து கதறி கொண்டு இருக்க குணசேகரனுக்கு எப்படி சமாதானம் செய்வது என்று கூட தெரியாமல் நின்று இருந்தார்.


வெண்ணிலா அங்கு நடப்பவை எதுவும் புரியாமல் அமைதியாக பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.


ஒரு அரை மணி நேரம் கழித்து அறையில் இருந்து மருத்துவர் வெளியே வர

அவர் அருகில் ஓடிய சின்னசாமி “என் மருமகள் இப்போ எப்படி இருக்கா மேடம்”

என்றார் பதட்டத்துடன்

“அந்த பொண்ணு பூச்சிமருந்து குடிச்சிருக்கா சார் சீக்கிரமா கொண்டு வந்ததால காப்பத்தியாச்சு ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும் பிறகு போய் பாருங்க” என்று‌ கூறிவிட்டு சென்றார்.


“பாவி பாவி அப்போவே சொன்னனே கேட்டியா என் பொண்ணு இன்னைக்கு சாகுற அளவுக்கு போய்ருக்கா

அவள் நம்ம வீட்லயே இருந்திருந்தா கூட நல்லா இருந்திருப்பா” என்று கதறி கொண்டே லட்சுமி குணசேகரனிடம் கூற அவர் எதுவும் கூறாமல் அமைதியாக நின்றிருந்தார்.


அடுத்த ஒரு மணி நேரத்திற்க்கு பிறகு நந்தினி கண்விழிக்க நந்தினியின் பெற்றோர் முதலில் அவளை பார்க்க உள்ளே சென்றனர்.


புகழேந்திக்கோ அவளை எப்போது பார்ப்போம் என்று வாசலிலேயே நின்று கொண்டு இருந்தான்.


லட்சுமி-குணசேகரன் உள்ளே சென்று நந்தினியை பார்க்க அவள் அரை உயிருடன் கிடைப்பதை பார்த்த குணசேகரன் கதறிவிட்டார் அவள் கையை பிடித்து கொண்டு “அம்மாடி என்னை மன்னிச்சிடு மா” என்று அழ அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள்

லட்சுமி அவள் நெற்றியை நீவி விட்டவர் “நீ கடைசி வரை எங்க கூடவே இரு யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை” என்றார்.


அந்த அறையின் உள்ளே வந்த செவிலி பெண் “பேஷன்ட்ட தொந்தரவு பண்ணாதிங்க கொஞ்சம் வெளியே போங்க இந்தாங்க பேஷன்ட்டோட நகை” என்று அவர்களிடம் கொடுத்து அனுப்பி விட

நந்தினியை பார்த்துக் கொண்டே இருவரும் வெளியே வந்தனர்.


‘கேட்கலாமா வேண்டாமா’ என்று யோசித்துக் கொண்டே வாசலில் நின்றிருந்த புகழேந்தி “அத்தை நந்தினி எப்படி இருக்கா?” என்று கேட்டது தான் தாமதம் லட்சுமி பத்ரகாளியாகவே மாறிவிட்டார்

“ஏன் என் பொண்ணு செத்துட்டாலா உயிரோட இருக்காளான்னு பார்க்கனுமா போதும் உன்னால நாங்க பட்ட வரைக்கும் போதும் என் பொண்ண நிம்மதியா வாழ விடு

அதோ அந்தா நிக்குதே மூதேவி என்று வெண்ணிலாவை காட்டியவர் அதையும் கூட்டிக்கிட்டு தயவு செஞ்சு இந்த இடத்தை விட்டு போங்க நல்லா இருப்பிங்க” என்று கை எடுத்து கும்பிட.


அதை பார்த்து கோபமடைந்து ஈஸ்வரி “இந்தா மா யார பார்த்து மூதேவிங்கிற அவ்வளோ தான் உனக்கு மரியாதை பார்த்துக்க பெருசா நல்ல புள்ளைங்கள பெத்து வச்சிருக்க மாறி பேசுற உன் பையன் ஆம்பளயே இல்லை அவனுக்கு புள்ள பெத்துக்குற தகுதியே இல்லை நீயெல்லாம் என் பொண்ண பத்தி பேசுற” என்றார் ஏளனமாக.


அவர் பேசியதை கேட்டு கோபமடைந்த சரவணன் கை முஷ்டியை மடக்கி கொண்டு நிற்க அவனை தன் கை பிடித்து தடுத்தார் குணசேகரன்.


“எவ்வளோ தைரியம் என் பையன ஆம்பள இல்லைன்னு சொல்லுவ” என்று கூறி கொண்டே லட்சுமி அவரை நெருங்க

“உண்மைய சொன்னா கோபம் வர தான் செய்யும் நீ என்ன என் பொண்ண போக சொல்றது என் பொண்ணுக்கு நல்ல இடமா பார்த்து நான் ஜாம் ஜாம்ன்னு கல்யாணம் பண்ணி வைப்பேன்”

என்று கூறிய ஈஸ்வரி தன் மகளின் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றார் அவரை பார்த்து கொண்டே நின்றிருந்த வேலாயுதத்தை பார்த்தவர் “யோவ் வா வீட்டுக்கு போலாம்” என்று அவரையும் அழைத்து கொண்டு சென்றார்.


வெண்ணிலாவிற்க்கு ஒரே ஆனந்தம் தான் தனது தாய் வீட்டிற்க்கே செல்கிறோம் என்ற சந்தோஷத்தில் கிளம்பி சென்றாள்.


வெண்ணிலா செல்வதையே பார்த்து கொண்டு நின்றிருந்தான் சரவணன்.


‘சனியன் ஒழிஞ்சுது’ என்று மனதில் சந்தோஷப்பட்டு கொண்டார் லட்சுமி “ஏன் பா உனக்கு வேற தனியா சொல்லனும்மா இந்தா நீ கட்டுன தாலி என்று புகழேந்தியின் கையில் தாலியை கொடுத்தவர் தயவு செஞ்சி இனி என் பொண்ணு வாழ்க்கையில் வராத” என்று கை எடுத்து கும்பிட்டார்.


அவரை பார்த்த புகழேந்தி “அத்தை ஒரே ஒரு தடவை நந்தினியை பார்த்துட்டு போய்டுறேன்” என்க

“என் பொண்ணு உயிரோட இருக்குறது உனக்கு பொறுக்கலையா

என்றவர் புகழேந்தியின் பெற்றோரின் புறம் திரும்பி “உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து இந்த மாறி ஆனா நீங்க சும்மா இருப்பிங்களா தயவு செஞ்சு உங்க புள்ளைய கூட்டிட்டு போங்க என் பொண்ணு உயிரோட இருக்கனும்” என்று கதற.


சின்னசாமி “தம்பி வா வீட்டுக்கு போலாம்” என்று கூப்பிட “அப்பா ஒரே ஒரு தடவை பார்த்துட்டு வந்துட்றேன்” என்க

“வான்னு சொல்றேன்ல்ல வா” என்று புகழேந்தியையும் தன் மனைவியையும் அழைத்து கொண்டு அந்த இடத்தை விட்டு சென்றார்.


இவ்வளவு நேரம் தான் உணராத காதலையும் நேசத்தையும் தன்னவளை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தான் உணர ஆரம்பித்தான் புகழேந்தி.


நந்தினியின் இந்த நிலைக்கு தான் தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவனை வாள் கொண்டு அறுக்க ஆரம்பித்தது மனம் நிறைய வலியுடன் அந்த இடத்தை விட்டு சென்றான் புகழேந்தி.


சரவணனோ ‘என்ன குடும்பம் இதெல்லாம்’ என்று மனதில் நினைத்து கொண்டிருந்தான்.


எது எப்படியோ தன் பிள்ளைகள் வாழ்வு இனி நல்லபடியாக இருக்கும் என்று மனதில் சந்தோஷப்பட்டு கொண்டார் லட்சுமி இந்த சந்தோஷம் வெகு நாட்களுக்கு நீடிக்க போவதில்லை என்பதை பாவம் அவர் அறியவில்லை.
தொடரும்…
 
அத்தியாயம் 10

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த புகழேந்தி
தன் கையில் இருந்த தாலியை பார்த்தவனுக்கு மனதில் சொல்ல முடியாத அப்படி ஒரு வலி
தலை குனிந்து நின்றிருந்தவனை பார்த்த சின்னசாமி “தம்பி வாய்யா போலாம்” என்று தோலோடு அணைத்து கூட்டி சென்றார்.

காமாட்சியோ மனம் தங்காமல் கண்ணீர் வடித்து கொண்டு இருந்தார்.

காரில் ஏறிய புகழேந்தி வண்டியை செலுத்தியவன் மனம் முழுவதும் தன்னவளின் நினைவிலேயே தத்தளித்து கொண்டிருந்தது,
தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று மனதிலேயே வருத்தப்பட்டு கொண்டு இருந்தான்.

புகழேந்தி தன் வாழ்வில் யாருக்காகவும் எதற்காகவும் தலைகுனிந்தது கிடையாது இன்று ஒருவன் தன் சட்டையை பிடித்து அடித்தும் எந்த வித எதிர்வினையும் இல்லாமல் அமைதியாக இருக்கிறான்.

பின் சீட்டில் அமர்ந்து இருந்த காமாட்சி “அம்மா தாயே அங்காளம்மா நான் உனக்கு என்ன குறை வச்சேன் என் புள்ள வாழ்க்கை இப்படி பாதியிலேயே வா முடியனும்” என்று கதறி அழுது கொண்டிருக்க சின்னசாமி தான் அவரை சமாதானப்படுத்தி கொண்டிருந்தார்.

வீட்டிற்க்கு வந்து சேர்ந்தவுடன் புகழேந்தி தன் தாய் தந்தையிடம் எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டான்.

அவனை பார்த்து கொண்டே வெளியே நின்ற சின்னசாமி-காமாட்சியும் அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று கூட தெரியாமல் முழி பிதுங்கி நின்றிருந்தனர்.

தன் அறையின் உள்ளே வந்தவன் நேற்று தாங்கள் இருவரும் கூடி கலித்த அதே மெத்தையில் சென்று படுத்து கொண்டான்
அவள் சூடியிருந்த மல்லிப்பூ அந்த மெத்தையில் ஆங்காங்கே உதிர்ந்து கிடைக்க அதன் வாசனை கூட நீங்காமல் இன்னும் மணம் வீசி கொண்டிருந்தது.

தன் மனைவியுடன் உயிரோடு உடலாக கலந்திருந்த நிமிடங்களை எண்ணி மனம் வருந்தி கொண்டிருந்தான்
நேற்று தன்னவளோடு இருந்த நேரம் குறுகிய காலமாகவும், இப்போது தான் இங்கு இருக்கும் நிமிடங்கள் யுகமாகவும் அவனுக்கு தோன்றியது.

இந்நேரம் என்னை பற்றி நினைப்பாளா என்ன செய்து கொண்டு இருப்பாள் என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.

அதேநேரம் மருத்துவமனையில் இருந்த நந்தினியும் இவனை பற்றி தான் நினைத்துக் கொண்டு இருந்தாள்
ஆனால் வேறு விதமாக ‘எப்படியோ இவனிடம் இருந்து தப்பித்து விட்டோம்’ என்று,
நந்தினியை பொருத்த வரையில் புகழேந்தியை பிடிக்குமா பிடிக்காதா என்று கேட்டாள் அதற்க்கு அவளுக்கு விடை தெரியாது இப்போதைக்கு தான் படிக்க வேண்டும் தன் குறிக்கோள் தான் முக்கியம் என்பதில் ‌தெளிவாக இருந்தாள்.

இப்படியே அன்றைய பொழுது கழிய மறுநாள் காலை அவளை டிஸ்சார்ஜ் செய்து தங்கள் வீட்டிற்க்கு அழைத்து சென்றனர்
குணசேகரனும் லட்சுமியும்.

அன்று இரவு முழுவதும் உறங்காமல் விழித்து கிடந்த புகழேந்தி மறுநாள் மருத்துவமனைக்கு சென்று தன்னவளை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நின்றிருந்தான் ஆனால் அவன் வருவதற்க்குள் அவளை டிஸ்சார்ஜ் செய்து கூட்டிச் சென்றிருந்தனர்.

விரக்தியுடன் வீடு வந்து சேர்ந்தவனை பார்த்து காமாட்சி தான் கண்ணீர் வடித்து கொண்டு இருந்தார்.

நாட்கள் அதன் போக்கில் நகர ஆரம்பித்தது புகழேந்தி எவ்வளவு முயற்சி செய்தும் நந்தினியை பார்க்க சரவணன் அனுமதிக்கவே இல்லை.

நந்தினி ஓரளவுக்கு நன்றாக உடல் தேறியவுடன் அவளை பிரபல பொறியியல் கல்லூரியில் படிப்பதற்காக சென்னை அனுப்பி வைத்தனர் அவள் பெற்றோர்
எவ்வளவு விசாரித்தும் புகழேந்திக்கு அவள் எந்த கல்லூரியில் சேர்ந்தாள் என்று எந்த விபரமும் யாரும் கூறவில்லை.

பகலில் வேலை நண்பர்கள் என்று பொழுதை கழிப்பவனுக்கு இரவானால் தன் மனைவியின் நினைவு வந்து வாட்டும் காமமா அல்லது காதலா என்று அவனாலேயே புரிந்து கொள்ள முடியாமல் தவித்தான் அவளை மறக்க எண்ணி தினமும் இரவு வீட்டிற்க்கு குடித்துவிட்டு வர ஆரம்பித்திருந்தான்.

அன்றும் அப்படி தான் நன்றாக குடித்துவிட்டு வந்து அவன் வீட்டு வாசலிலேயே போதையில் விழுந்து விட்டான் சின்னசாமி தான் ஓடி வந்து அவனை கூட்டிச் சென்று அவன் அறையில் படுக்க வைத்தார் ஊரில் மைனர் போன்று சுற்றி வந்தவன் இன்று உடல் மெலிந்து சோர்ந்து கிடைப்பதை பார்த்தவருக்கு கண்ணீர் தான் வந்தது தவமிருந்து பெற்ற பிள்ளை இப்படி ஆகிவிட்டானே என்று.

புகழேந்தியின் வாழ்க்கை சக்கரம் இப்படி நகர
சரவணன் இங்கே வேறு விதத்தில் துன்பத்தை அனுபவித்து கொண்டு இருந்தான்.

பாப்பம்பட்டி முழுவதும் சரவணனை பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தனர்
முன்பே அவனை ஆண்மை இல்லாதவன் என்று கூறிய ஊர் மக்கள் இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் இவன் ஆண்மை இல்லாதவன் என்று தெரிந்து தான் வெண்ணிலா அவனை விட்டு சென்றதாக பேசிக் கொண்டு இருந்தனர்.

நந்தினியை நல்லபடியாக கல்லூரியில் சேர்த்து விட்டு ஊருக்கு வந்தவன் தன் கடையில்
அமர்ந்திருக்க அவனை யாரோ பார்ப்பதை போன்ற உணர்வு தோன்ற திரும்பி பார்க்க அங்கே வந்த வாடிக்கையாளர் இருவர் இவனை பார்த்து பேசிக் கொண்டு இருக்க ‘என்ன பேசிக்கிறாங்க’ என்று மனதில் நினைத்தவன் ஏதோ பொருளை சரி பார்ப்பதை போன்று அங்கே சென்றவனை பார்த்து எதுவும் பேசாமல் இருவரும் வெளியே கிளம்பிவிட்டனர்.

அவர்கள் இருவரில் ஒருவரின் பர்ஸ் கீழே விழுந்து கிடக்க அதை கொடுக்கலாம் என்று வெளியே சென்றவனின் காதுகளில் அவர்கள் இருவரும் பேசுவதும் இப்போது தெளிவாக கேட்டது
அதில் ஒருவன் “இந்த ஆளு பொண்டாட்டி தான விட்டுட்டு போய்டுச்சு” என்க
இன்னொருவன் “அட ஆமா அண்ணன் இவருக்கு புள்ள பொறக்காதுங்குற விஷயம் தெரிஞ்சி விட்டுட்டு போய்ட்டாங்க
இவன் தங்கச்சி கூட அவள் புருஷன் கிட்ட இருந்து பிரிஞ்சி அம்மா வீட்டோட வந்துட்டா” என்று பேசிக்கொண்டு இருக்க அதை கேட்டவனுக்கு கோபம் அதிகரிக்க.

விறுவிறுவென அவ்விருவரின் அருகில் சென்று அந்த பர்ஸை தூக்கி அவர்கள் முன் போட்டவன்
அந்த இருவரில் ஒருவன் மூக்கில் கையை மடக்கி குத்திவிட்டான் அவன் மூக்கில் இருந்து ரத்தம் வடிய நின்றிருக்க மற்றொருவன் அவனை அடிக்க கையை ஓங்கி கொண்டு வர அவன் கையை பிடித்து வளைத்தவன் “என்னை பத்தியோ இல்லை என் தங்கச்சிய பத்தியோ எதாச்சும் இனி ஒரு வார்த்தை பேசுனிங்க தோலை உரிச்சிருவேன் ராஸ்கல்ஸ்” என்று விரல் நீட்டி எச்சரித்து அவர்களை விரட்டி அடித்தான்.

சரவணன் கோபத்துடன் நின்று இருக்க சாலையில் வெண்ணிலா பைக்கில் அவள் தந்தையுடன் ஏதோ சிரித்து பேசிக் கொண்டே சென்று கொண்டிருந்தாள் அதை பார்த்தவனுக்கு இன்னும் கோபம் கூட ஆரம்பித்தது ‘எல்லாதுக்கும் காரணம் இவள் தான்
இவளை எதாச்சும் பண்ணியே ஆகனும் இங்க நான் மட்டும் கஷ்டப்படனும் அவள் மட்டும் நிம்மதியா இருப்பாளா
நல்லா சிரிச்சிக்கோ இது தான் உன் கடைசி சிரிப்பு’ என்று மனதில் நினைத்து கொண்டான்
.

சரவணன் வெண்ணிலாவை என்ன செய்ய காத்திருக்கிறானோ?

தொடரும்…
 
Last edited:
அத்தியாயம் 11


வெண்ணிலாவின் வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருந்தனர்

இது எதை பற்றியும் வெண்ணிலாவிற்க்கு கவலையேயில்லை தான் தன் வீட்டிற்க்கு வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் சுதந்திர பறவையாக சுற்றி திரிந்து கொண்டிருந்தாள்.


சரவணன் பற்றிய நினைவே துளி கூட இல்லாமல் மகிழ்ச்சியாக நாட்களை கழித்து கொண்டு இருந்தாள்.


ஊரில் தன்னை பற்றியும் தன் தங்கையை பற்றியும் பேசுவதை கேட்டு கேட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தான் சரவணன்.


தன்னால் இனி முடியாது என்று நினைத்தவன் குடித்தால் தான் தன் மனது சமநிலையை அடையும் என்று நினைத்தவன் ஒயின் ஷாப் ஒன்றிற்க்கு சென்றான்

சரவணனுக்கு பெரிதாக நட்பு வட்டம் எதுவும் இல்லை என்பதால்

தனியாக தான் வந்திருந்தான்.


தனியாக அமர்ந்து குடிக்க ஆரம்பித்தவன் தன் மூச்சு முட்டும் அளவுக்கு குடித்து கொண்டிருந்தான் கண்கள் இரண்டும் சிவந்து வியர்வை வடிய அமர்ந்து இருந்தான்.


அப்போது அவன் எதிரே சென்று கொண்டிருந்த இருவர் அவன் இருக்கும் திசையை கை காட்டி ஏதோ பேசிக் கொண்டு போக அவர்கள் தன்னை பற்றி தான் பேசிக் கொண்டு செல்கிறார்கள் என்று தவறாக நினைத்தவனுக்கு கோபம் அதிகரித்தது போதையிலேயே அவர்கள் அருகில் சென்றவன் அதில் ஒருவன் தோளில் கை வைக்க அவன் திரும்பி “என்ன” என்றான் திமிராக.


“என்னை பார்த்தா பொ** மாறி தெரியுதா டா பரதேசி நாயே” என்றான் சரவணன் புருவத்தை உயர்த்தி

அதில் ஒருவன் “யாரு டா நீ” என்று சரவணனை பார்த்து கையை ஓங்கி கொண்டு வர

தன் மேசையில் இருந்த பாட்டிலை எடுத்து அவன் தலையில் போட்டுடைத்தான் அவன் தலையில் இருந்து குபீர் என ரத்தம் வடிய ஆரம்பிக்க தன் தலையில் கை வைத்து கொண்டு அப்படியே கீழே அமர்ந்து கொண்டான்

மற்றொருவன் அவனை பார்த்து பயந்து பின் வாங்கி கொண்டான்

இந்த கலவரத்தில் பரபரப்பாக இருந்த அந்த ஒயின் ஷாப்

நிசப்த அமைதியாக மாறி இருந்தது.


“என்னை பத்தி பேசுற வேலை வச்சிக்கிட்டிங்க தொலைச்சிருவன்” என்றவன் அவனிடமிருந்து திரும்ப

சுற்றி தன்னை நின்று வேடிக்கை பார்த்தவர்களை பார்த்து “என்னடா வேணும் உங்களுக்கு எல்லாம் இங்க என்ன டான்ஸ்ஸா ஆடுறாங்க வேலைய பாருங்க டா” என்றவன் தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வெளியே வந்தான்.


வெளியே வந்தவனுக்கு தன் மொத்த கோவமும் வெண்ணிலாவின் புறம் தான் திரும்பியது ‘இந்தா வரேன் டி உனக்கு இருக்கு இன்னைக்கு’ என்று மனதில் நினைத்தவன் தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஆண்டிப்பட்டிக்கு கிளம்பினான்

‘இன்னைக்கு அவள் மூஞ்ச பேத்துடனும்டா சரவணா’ என்று மனதில் நினைத்து கொண்டே சென்றான்.


ஆண்டிப்பட்டியில் வெண்ணிலாவின் வீட்டை விசாரித்து சென்றான் சரியாக இவன் செல்லும் சமயம் வேலாயுதமும்-ஈஸ்வரியும் கிளம்பி வெளியே வந்தனர்

அவர்களை பார்த்தவுடன் தன் வண்டியை ஓரம் கட்டி ஒளிந்து நின்று கொண்டான்.


அவர்கள் அந்த தெருவை தாண்டும் வரை காத்திருந்தவன்

தெருவை தாண்டியவுடன் வீட்டின் உள்ளே நுழைந்து கதவை தாழிட்டவன் வீட்டை சுற்றி முற்றி பார்த்தான் நவீன முறையில் கட்டப்பட்ட இரண்டு மாடி வீடு அது டிவி,பிரிட்ஜ், ஏசி என அனைத்தும் அந்த வீட்டில் இருந்தது

வேல்முருகன் தன் அண்ணன் சின்னசாமியை விட அதிகமாக தன் மகளுக்காக சொத்து சேர்த்து வைத்திருந்தார்.


அங்கே ஓரு மூலையில் இருந்த கட்டையை கையில் எடுத்தவன் ‘அவளை இன்னைக்கே பொலாக்காம விட கூடாது’ என்று நினைத்து கொண்டே வீட்டின் ஒவ்வொரு அறையாக தேட ஆரம்பித்தான் அவள் எங்கேயும் இல்லை என்றவுடன் மேலே தான் இருக்க கூடும் என்று யூகித்தவன் படிக்கட்டின் வழியே மேலே சென்றான்.


மேலே ஒரே ஒரு படுக்கை அறை மட்டுமே இருந்தது அதுவே மிக பெரியதாகவும் நவீன வசதிகளுடன் இருந்தது சுற்றி முற்றி பார்த்தவன் அங்கே சுவற்றில் இருந்த வெண்ணிலாவின் புகைப்படத்தை பார்த்து இது அவள் அறை தான் என்று யூகித்தான்.


அவள் எங்கே என்று தேடிக் கொண்டிருக்கும் போதே குளியலறையில் குளிக்கும் சத்தம் கேட்க ‘அவளாக தான் இருக்கும் வெளியே வரட்டும்’ என்று கதவின் பின்னே ஒளிந்து காத்திருந்தான்.


அவன் நினைப்பை பொய்யாக்காமல் குளியலறையில் இருந்து குளித்து முடித்து தண்ணீர் வடிய பூந்துவாலையை மட்டும் கட்டிக் கொண்டு வெளியே வந்தாள் வெண்ணிலா.


வெந்நிற மேனி உடையாள் தன் முன்னே இந்த கோலத்தில் வர அவளை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் அப்படியே நின்றிருந்தான் சரவணன்

சரியாக அந்த நேரம் பார்த்து மின்சாரம் நின்றிருந்தது.


“என்ன இது” என்று வெளிப்படையாக புலம்பிக் கொண்டே வெண்ணிலா அங்கிருந்த மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தாள்.


மாலை நேரம் என்பதால் அந்த அறையே இருள் சூழ்ந்து அந்த மெழுகின் வெளிச்சம் மட்டுமே ஒளிர்ந்து கொண்டு இருந்தது.


மெழுகின் வெளிச்சத்தில் கண்ணாடியின் முன்னே நின்று உடை மாற்ற தயாரானாள் வெண்ணிலா,

அவளையே பார்த்து கொண்டு இருந்த சரவணனின் நிலையோ பரிதாபமாக மாறியது

மீன் தொட்டியில் ஓடும் இரு மீன்களை போல இங்கும் அங்கும் ஓடிக் கொண்டு இருந்த அவள் கண்களை பார்த்தவன் கிரங்கி போய் அவள் இதழை பார்த்தான்

இயற்கையாகவே சிவந்து இருந்த அவள் இதழின் மீது ஆங்காங்கே நீர் துளிகள் அவள் குளித்துவிட்டு வந்ததில் அவளை முத்தமிட்டு கொண்டிருந்தன

அந்த நீர் துளிகளை போல தான் அவள் இதழில் ஒட்டி கொள்ள மாட்டோமா என்று நினைத்தவன் தான் அங்கே எதற்காக வந்தோம் என்பதையே மறந்து தன் மனையாளின் மேனி அழகில் கிரங்கி போய் நின்றிருந்தான்.


அவளோ இவன் அவஸ்தை புரியாமல் தான் அணிந்திருந்த ஒரே ஒரு பூந்துவாயையும் துறந்து பிறந்த குழந்தையாக மாறி உடை மாற்ற ஆரம்பித்தாள்

அதை பார்த்த சரவணின் உடலில் உஷ்ணம் அதிகரிக்க மானை வேட்டையாடும் புலியை போல தாபத்துடன் பார்த்து கொண்டு இருந்தான் மது போதை முடிந்து இந்த மங்கையின் போதை ஏறியது தலைவன் உடலில்.


வெண்ணிலா உடை மாற்றி முடிக்கவும் தடைப்பட்ட மின்சாரம் வந்திருந்தது மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு திரும்பியவள் சரவணனை பார்த்து அதிர்ந்துவிட்டாள்.


“நீங்க எப்படி இங்க” என்று அவள் இழுக்க தன் கையில் இருந்த கட்டையை கீழே போட்டுவிட்டு அவளை நெருங்கினான்

அவன் நெருங்க நெருங்க இவள் பின்னே செல்ல இறுதியில் சுவற்றில் மோதி அதற்கு மேல் செல்ல முடியாமல் நின்றுவிட்டாள்.


அவள் கண்களையே பார்த்து கொண்டே நின்றான் சரவணன்,

“என்னங்க” என்று அவள் கூறி முடிக்கும் முன் அவளின் இதழ்களை கவ்வி அந்த சிவந்த உதட்டில் இன்னும் சிவப்பேற்ற தன் இதழ் கொண்டு வர்ணம் தீட்ட ஆரம்பித்தான் எவ்வளவு நேர்ம நீடித்ததோ அந்த முத்த யுத்தம்

அவள் மூச்சுக்கு திணறும் போது அவளிடமிருந்து விலகியவனை பார்த்து “எதுக்கு ஏன் உதட்டை கடிச்சி வச்சிங்க” என்றாள் அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி கொண்டே

“அதுவா உன் மேல ஆசை, எனக்கு குழந்தை வேணும் வெண்ணிலா பெத்துக்கலாமா” என்றான் சரவணன்.


அவள் திருதிருவென முழித்து கொண்டே “குழந்தையா” என்றாள் ஆச்சரியத்துடன்

அவன் “ஆமா நாம குழந்தை பெத்துக்கலாம்” என்க

அவள் “அப்போ லைட்டை அணைக்கவா” என்க

“ஏன் உனக்கு வெளிச்சமா இருந்தா பிடிக்காதா” என்று குறும்புடன் சரவணன் கேட்க

“நேத்து ஒரு படம் பார்த்தேன் அதுல ஒரு பையனும் பொண்ணும் ஒரு அறைக்குள்ளே போய் லைட்டை நிறுத்துவாங்க வெளியே வரும் போது பாப்பாவோட வருவாங்க நாமலும் லைட்டை நிறுத்துனா தான பாப்பா வரும்” என்றாள் அவள் மிகவும் தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு.


அவளை பார்த்து சிரித்த சரவணன் “மக்கு உனக்கு ஒன்னுமே தெரியாதா டி” என்று அவள் தலையில் கொட்டியவன்

“உனக்கு நானே சொல்லி தரேன் அதுக்கு அப்பா அம்மா விளையாட்டு விளையாடனும் விளையாடலாமா” என்றான் அவளை பார்த்து கொண்டே மோகத்துடன்

அவள் சரி என்பதை போல் தலையை ஆட்ட வெண்ணிலாவை தன் இரு கைகளில் தூக்கி கொண்டு படுக்கைக்கு சென்றான்.


பந்தலை சுற்றிய கொடியாக அவள் மேல் படர ஆரம்பித்தான்

அடங்கா யானைமேல் கல்பதங்கம் நிற்காததைப் போல் அவள் மார்பை மறைக்கும் துணி தடுமாறுகிறது

என்று வள்ளுவர் கூறுவதை போல

அவள் மேலாடை தடுமாற

அதை முற்றிலுமாக அவன் கலைய செல்லும் சமயம் அவள் தடுக்க “பாப்பா வேணும் டி பிளீஸ்” என்று அவளை முத்தமிட்டு கொஞ்சி கெஞ்சி என அவளை ஆள ஆரம்பித்தான்.


செம்மண் நிலத்தில் பெய்த மழை நீரானது அம்மண்ணுடன் கலந்து அதன் நிறத்தை ஏற்றுக்கொண்டது

என்ற குறுந்தொகை வரிகளை போல இருவரும் ஒருவரில் ஒருவர் கலக்க ஆரம்பித்தனர்.


அவள் வலியில் முனகும் போதெல்லாம் முத்தமிட்டு முத்தமிட்டே சரி செய்தவன்

அவளை வேட்டையாடி முடித்திருந்தான் உச்சம் தொடும் போது அவள் “மாமா” என்று முனங்க சரவணனோ பரவச நிலையையே அடைந்துவிட்டான்.


தன் வேலை முடிந்து அவளிடமிருந்து விலகி படுத்தவன் மனசாட்சி ‘எதுக்காக வந்த இப்போ என்ன பண்ணிட்டு இருக்க டா’ என்க அவன் அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.


வெண்ணிலாவோ

தனக்கு இவையெல்லாம் புதிது என்பதால் கோழி குஞ்சாக சோர்ந்து சுருண்டு படுத்திருக்க,

கூடலின் விளைவாக அவள் முகம் இயற்கையாகவே சிவந்து இருக்க அதை பார்க்க பார்க்க அவனுக்கு மோகம் அதிகரிக்க

தன்னவளை தூக்கிக்கொண்டு குளியலறைக்கு சென்றான் இருவரும் ஒன்றாக கூடி நீராடி முடித்து வெளியே வர இரவாகி இருந்தது.


வெண்ணிலாவின் முகத்தில் இருந்த குழந்தை தனம் இல்லாமல் சற்று தெளிவாக காணப்பாட்டாள்.


அந்த நேரம் பார்த்து கீழே கதவு தட்டும் சத்தம் கேட்டது பால்கனி வழியாக எட்டி பார்க்க வெளியே சென்ற தாயும் தந்தையும் வந்திருந்தனர்.


ஈஸ்வரி கதவை தட்டி கொண்டே இருக்க என்ன செய்வது என தெரியாமல் பயந்தவள் “மாமா இந்த வழியா கீழே போங்க” என்று பால்கனியை காட்ட

சரவணன் அங்கிருந்து இறங்கி கீழே சென்று விட

வெண்ணிலா அலறி அடித்து கொண்டு கீழே சென்று கதவை திறந்தாள் “கதவை திறக்க எவ்வளவு நேரம்” என்றார் ஈஸ்வரி

“அது மா குளிச்சிட்டு இருந்தேன்” என்றவள் மேலே செல்ல போக அவள் கையை பிடித்து இழுத்த ஈஸ்வரி “என்ன இது கன்னத்துல காயம்?” என்று வினவினார்.


“அது அது என்று இழுத்தவள் சுவற்றில் இடிச்சிக்கிட்டேன் மா” என்க “பார்த்து வர கூடாதா சரி போ” என்றவரிடம் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று மேலே ஓடினாள் வெண்ணிலா.


இன்று ஒருநாள் தப்பிக்க முடியும்

மறுநாள் என்ன செய்ய போகிறாளோ வெண்ணிலா.தொடரும்….
 
அத்தியாயம் 12

தடதடக்கும் இதயத்துடன் மேலே தன் அறைக்கு ஓடி வந்தவள் பால்கனியின் பக்கம் ஓடி தன்னவன் இருக்கிறானா என்று எட்டி பார்த்தாள் அவனோ தன்னவளுக்காக பைக்கில் அமர்ந்து காத்திருக்க
அவளை பார்த்தவுடன் பறக்கும் முத்தம் ஒன்றை பரிசாக கொடுக்க அதை பார்த்தவளுக்கு கன்னங்கள் இரண்டும் வெட்கத்தில் சிவக்க ஆரம்பித்தது தலை குனிந்து நின்றிருந்தவளை பார்த்து சிரித்துக் கொண்டே கிளம்பினான்.

அவன் செல்லும் வரை பார்த்து கொண்டே நின்றிருந்தவள்
உள்ளே வந்து படுத்து தன்னவனை பற்றி தான் நினைத்து கொண்டு இருந்தாள்
நடந்தவை அனைத்தும் அவளுக்கு ஒரு கனவு போன்று இருந்தது ‘எப்படி அவருடன் இருந்தோம் ஆனாலும் உனக்கு தைரியம் தான் டி’ என்று மனதில் நினைத்தவள் தன் தலையில் அடித்து கொண்டாள் பின் தலையணையை கட்டி அணைத்து கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

பாப்பம்பட்டிக்கு வந்து சேர்ந்த சரவணன் வெண்ணிலாவை பற்றியே நினைத்துக் கொண்டு கதவை திறந்து உள்ளே வர அவனுக்காக காத்திருந்த லட்சுமி “சரவணா வா சாப்பிடலாம்” என்க அவர் கூறிய எதுவும் அவன் காதில் எட்டவில்லை “சரவணா” என்று மீண்டும் கத்தி அழைக்க “ஏன் மா கத்துர” என்க

“சாப்பிட வா”
“எனக்கு வேண்டாம்” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.

அவனை பார்த்து கொண்டே நின்றிருந்த லட்சுமி ‘என்ன இவன் எப்பவும் போல இல்லாம வித்தியாசமா இருக்கான் முகம் கொடுத்து கூட பேசல’ என்று நினைத்து கொண்டே அந்த இடத்தை விட்டு சென்றார்.

தன் படுக்கையில் சென்று படுத்தவன் தன்னவளின் நினைவிலேயே உழண்டு கொண்டிருந்தான் ‘எதுக்காக அங்கே போனோம் அவள் கிட்ட இப்படி நடந்துருக்க கூடாதோ என்று நினைத்தவன் பின் என் மனைவி தான என்ன தப்பு இருக்கு என்று நினைத்தவன் அவளுக்கு போன் பண்ணலாமா
அவள்கிட்ட போன் இருக்கான்னு தெரியலையே நாளைக்கு போய் முதல் வேலையா அவளுக்கு ஒரு போன் வாங்கனும்’ என்று நினைத்து கொண்டே படுத்து உறங்கினான்.

இருவரும் இது காதலா காமமா என்று புரியாத உணர்வில் தத்தளித்து கொண்டிருந்தனர்
சங்க இலக்கியங்களில் கூறுவதை போல காதலின் தொடக்கமே காமம் தானே காத்திருப்போம் காதலகுமா என்று.

மறுநாள் காலை எழுந்து கடைக்கு சென்ற சரவணன் வெண்ணிலாவை பற்றியே நினைத்து கொண்டு இருந்தான் அந்த சில மணி நேர பிரிவை கூட தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் ‘ஆண்டிபட்டி செல்லலாமா வேண்டாமா’ என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.

அந்த நேரம் பார்த்து அவன் அலைபேசி ஒலிக்க திரையில் பார்க்க லட்சுமி தான் அழைத்திருந்தார் அதை எடுத்து காதில் வைத்தவன் “என்னம்மா” என்க
“தம்பி அந்தியூர்ல நம்ப சின்ன தாத்தா இருக்காருல்ல அவரு இறந்துட்டாராம் கடையை மூடிட்டு வா டா போய் பார்த்துட்டு வரலாம்” என்றார்
“நானா நான் வரல நீங்க போய்ட்டு வாங்க” என்று இவன் மறுக்க

“நீ வரலன்னா நம்ம சொந்தக்காரங்க எல்லாம் தப்பா பேசுவாங்க வா ராசா” என்க
சிறிது நேரம் யோசித்தவன்
“சரி வரேன்” என்று எரிச்சலுடன் அலைபேசியை வைத்து விட்டு கிளம்பினான்.

வெண்ணிலாவின் இல்லம்
அவள் வளையல் கலகலக்கிறது
அவள் கொலுசு கிளிங்கிடுகிறது
அவன் வருவதற்க்கு
ஆயதமாகிறாள்
என்ற நா.முத்துகுமாரின் வரிகளை போன்று
தன் வீட்டில் இருந்த வெண்ணிலாவோ தன்னவன் வருவான் என்று பார்த்து பார்த்து கிளம்பி காத்துக் கொண்டு இருந்தாள்
ஒவ்வொரு முறையும் தெருவில் பைக்கின் ஹாரன் ஒலிக்கும் சத்தம் கேட்கும் போதெல்லாம் தன்னவன் தானா என்று எட்டி எட்டி பார்த்து ஏமார்ந்து சோர்ந்து போய் படுத்திருந்தாள்.

நேரம் செல்ல செல்ல அழுகையாக வந்தது ‘என்னோட நியாபகமே இல்லையா அவருக்கு’ என்று நினைத்து கொண்டே அப்படியே உறங்கிவிட்டாள்.

இரவு ஈஸ்வரி வந்து அவளை எழுப்பி சாப்பிட அழைக்க “வேண்டாம்” என்று கூறி மீண்டும் படுத்துக் கொண்டாள்
“ஏன் டி சோர்வா தெரியுற உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று நெற்றியில் தொட்டு பார்க்க உடல் நன்றாக தான் இருந்தது
அவளோ தலைவனை பார்க்க முடியாமல் பசலை நோய் கொண்டு படுத்திருந்தாள்.

“உடம்புக்கு எதுவும் முடியலையா டி” என்க
“எதுவும் இல்லை மா தூக்கம் வருது” என்றவள் மீண்டும் படுத்து கொண்டாள்
யோசனையுடன் அவளை பார்த்தவர் “சரி தூங்கு” என்றவர் அவளை பார்த்து கொண்டே கீழே சென்றார்.

நள்ளிரவு அந்தியூரிலிருந்து வீட்டுக்கு வந்த சரவணன் குளித்து விட்டு வெளியே கிளம்பி “அம்மா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு காலையில தான் வருவேன்” என்று கூறிவிட்டு
அவர் பதில் கூறும் முன் கிளம்பினான்.

நடுயிரவில் ஆண்டிப்பட்டிக்கு வந்தவன் வெண்ணிலாவின் வீட்டிற்க்கு பக்கத்தில் இருந்த மரத்தில் ஏறி பால்கனியில் குதித்தவன் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்
வெண்ணிலா அவன் வருவான் என காத்திருந்து காத்திருந்து சோர்வாகி உறங்கி இருந்தாள்.

நேரே அவள் அருகில் சென்று படுத்தவன் அவள் போர்த்தியிருந்த போர்வையை எடுத்து தனக்கும் போர்த்தி அதன் உள்ளே சென்று தனது சில்மிஷங்களை செய்ய மெல்ல கண் விழித்தவள் தன்னவனை பார்த்தவுடன் ஆனந்த கண்ணீருடன் அவன் முகத்தில் கண் கன்னம் என எல்லா இடங்களிலும் தன் வெட்கத்தை விட்டு முத்தமிட ஆரம்பித்தாள்
தன் எச்சில் முத்தத்தை பதித்துவிட்டு “ஏன் மாமா என்னை பார்க்க வரல” என்றாள் கோபத்துடன்.

“ஒரு முக்கியமான வேலை வந்துருச்சு டி என்றவன் தன் இரு கைகளையும் காதில் வைத்து கொண்டு மன்னிப்பு கேட்டவன் தன் முதுகில் இருந்து மொபைல் பாக்ஸ் ஒன்றை எடுத்தான் அதை அவள் கையில் கொடுத்தவன் இதுல என்னோட நம்பர் இருக்கு பேசனும்னு தோனும் போது பேசு” என்றவனை பார்த்தவள் அவனுக்கு மீண்டும் முத்த மழை பொழிய ஆரம்பிக்க அன்றைய இரவும் அவர்களுக்கு தூங்கா இரவானது.

காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு மெல்ல கண் விழித்தாள் வெண்ணிலா அவள் மார்பில் தலை வைத்து நன்றாக படுத்து உறங்கி கொண்டிருந்தான் சரவணன்
“வெண்ணிலா கதவை திற” என்று வெளியே ஈஸ்வரி கத்தி கொண்டு இருக்க அலறி அடித்து கொண்டு அவனை எழுப்பியவள்
“மாமா” என்றவளை பார்த்து கண்விழித்தவன் மீண்டும் அவளை அணைத்து கொண்டு படுக்க போக “எழுந்திருங்க” என்று அவனை எழுப்பி குளியலறையில் விட்டவள் வெளியே வந்து தன் உடையை சரி செய்து கொண்டு கதவை திறந்தாள் “என்ன மா” என்றாள் பயந்து கொண்டே “இன்னும் குளிக்கலையா நீ குளிச்சிட்டு சாப்பிட வா” என்க
“சரி” என்றவளை பார்த்தவர் அவள் கழுத்தில் சிவந்த காயம் ஒன்று இருக்க சந்தேகமாக பார்த்தவர் “என்ன இது” என கை காட்டி கேட்க
அவள் எப்படி கூறுவாள் தன்னவன் கொடுத்த காதல் தடம் என்று திணறி கொண்டே என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தவள் “தெரியலையே மா புது சோப் வாங்குன அது ஒத்துக்கல போல அதான் அலர்ஜி ஆகிருச்சு” என்க
“சரி” என்றவர் அவளை வித்தியாசமாக பார்த்து கொண்டே கீழே சென்றார்.

கீழே வந்தவர் ‘ஏதோ சரியில்லை’ என்று நினைத்தவர்
தன் கணவனிடம் சென்று “மாப்பிள்ளை பார்க்குற விஷயம் என்னாச்சிங்க” என்க
“இப்போ அதுக்கு என்ன அவசரம் ஈஸ்வரி” என்றார் வேலாயுதம்.

“சீக்கிரமா மாப்பிள்ளை பார்க்குற வேலைய பாருங்க அடுத்த மாசமே கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்க
“சரி ஈஸ்வரி பார்க்குறேன் பாப்பா எங்கே” என்றார்
“குளிச்சிட்டு வருவா இருங்க” என்ற ஈஸ்வரி ஏதோ சரியில்லை யோசித்து கொண்டே அமர்ந்து இருந்தார்.

மேலே குளியலறையில் இருந்து வெளியே வந்த சரவணன் அவள் இடையில் கை கொடுத்து அணைத்தவன் “ஏன் உன் அம்மா என்னை பார்த்தா என்ன நான் உன் புருஷன் தான டி” என்க
“எங்க அம்மா உங்க மேல கோவமா இருக்காங்க கொஞ்ச நாள் போகட்டும் நானே சொல்லுவேன்” என்றாள் குழந்தையாக முகத்தை வைத்து கொண்டு
“உங்க அம்மா என்னை பத்தி சொன்னது எல்லாம் உண்மைன்னு நினைக்குறியா?”
என்க அவள் இல்லை என்பது போல் தலையை ஆட்டினாள்
“ஏன் மாமா பர்மான்ஸ் பார்த்து மயங்கிட்டியா” என்றான் குறும்பாக அவளை பார்த்து கொண்டே
அவன் பேசியதை கேட்டு வெட்கத்தில் அவள் கன்னங்கள் இரண்டும் சிவப்பேற அதை பார்த்தவன் அவளை மேலும் நெருங்க அவனை பிடித்து தள்ளியவள் “நான் குளிச்சிட்டு கீழே போகனும் நீங்க கிளம்புங்க” என்றாள்
“நான் எப்போ டி தனியா குளிச்சிருக்கேன் வா சேர்ந்தே குளிப்போம்” என்றவன் ஒன்றாக நீராடி முடித்து வழக்கம் போல் பால்கனி வழியாக கீழே இறங்கி தன் வீட்டிற்க்கு சென்றான்.

பகலில் இருவரும் அலைபேசியில் காதல் மொழி பேசுவதும் இரவில் கூடி கலிப்பதுமாக நாட்கள் மகிழ்ச்சியாக நகர்ந்தன.

புகழேந்தி இல்லம்
சின்னசாமி-காமாட்சியும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர் “நம்ம பையன் இப்படியே இருந்தா சரியா வராதுங்க வேற கல்யாணம் பண்ணி வச்சா என்ன” என்றார் காமாட்சி சின்னசாமியிடம்
“எல்லாம் தெரிஞ்சி அவனுக்கு யாரு டி பொண்ணு கொடுப்பா” என்க
“உங்க தங்கச்சி பொண்ணு ஒன்னு மெட்ராஸ்ல படிக்குறாளே அவளை பொண்ணு கேட்போம்”
“அவங்க கிட்ட எல்லாம் பேசியே ரொம்ப நாள் ஆகுதே டி”
“நான் பேசிட்டு தாங்க இருக்கேன்”
“எல்லாம் சரி இவன் அதுக்கு ஒத்துக்கனுமே”
“முதல்ல பேசுவோம் அதுக்கு பிறகு என்ன பண்ணலாம்ன்னு பார்ப்போம்” என்க
“அதுவும் சரி தான் நாளைக்கு பேசி பார்ப்போம்” என்றார் சின்னசாமி.

சின்னசாமியின் சித்தப்பா மகள் தான் சாந்தி அவர் சத்தியமூர்த்தி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு சென்னையிலேயே செட்டில் ஆகி இருந்தார்.

அவர்களின் மகளான அக்ஷயாவை தான் பெண் கேட்கலாம் என்று காமாட்சி கேட்டு கொ
ண்டு இருந்தார்.

யாருக்கு யார் என்பதை கடவுள் மட்டுமே அறிவார்.

தொடரும்….
 
Last edited:
அத்தியாயம் 13

மறுநாள் காலை சாந்தியிடம் அலைபேசியில் அழைத்து காமாட்சியும் சின்னசாமியும்
பேசி பெண் கேட்க
சாந்திக்கு ஒரே மகிழ்ச்சி
தான் காதல் திருமணம் செய்ததால் குடும்பத்தில் இருந்து விலகி இருக்கிறோம் என்று வருத்தப்பட்டு கொண்டு இருந்தார்.

இப்போது தன் குடும்பத்துடன் சேர நல்ல வாய்ப்பு என்று நினைத்தவர் உடனே சரி என்றார்
நடந்தவை அனைத்தையும் கூறி
தாங்கள் புகழேந்திக்கு தெரியாமல் தான் பேசுகிறோம் என்பதை கூறினார் சின்னசாமி.

“அண்ணா இதை என் புருஷன் கிட்டையும் பொண்ணு கிட்டையும் சொல்ல வேண்டாம் நீங்க பொண்ணு கேட்டு நான் சரின்னு சொன்னதா மட்டும் இருக்கட்டும்” என்றார் சாந்தி.

“சரிம்மா நான் மாப்பிள்ளை கிட்ட சொல்லல உன் பொண்ணு கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோ” என்றார் சின்னசாமி.

“அவள் நான் சொன்னா மறுத்து பேசவே மாட்டா நீங்க கவலையே படாதிங்க
புகழை சென்னைக்கு அனுப்பி வைங்க அவனை சம்மதிக்க வைக்கிறது என்னோட பொறுப்பு” என்றார் சாந்தி.

“ஒரு இரண்டு நாள்ல நாங்களே அனுப்பி வைக்கிறோம்” என்க
பின் பேசிவிட்டு மகிழ்ச்சியுடன்
போனை வைத்தார் சின்னசாமி.

எப்படியோ தன் மகன் நன்றாக இருந்தாள் போதும் என்று நினைத்து கொண்டனர்‌ இருவரும்.

“ஏன் டி அந்த பையன் படிக்கல எப்படி என் பொண்ணை போய் அவனுக்கு கொடுப்பேன்” என்றார் சத்தியமூர்த்தி ஆதங்கத்துடன் தன் மனைவியிடம்
“என் அண்ணன் பையனை சும்மான்னு நினைச்சிங்களா ஊர் தலைவர் அதுவும் இல்லாம ஒரே பையன் எல்லா சொத்தும் அவனுக்கு தான் நம்ம பொண்ண கட்டி கொடுத்தா ராணி மாறி இருப்பா” என்று பேசி ஒரு வழியாக சத்தியமூர்த்தியை சம்மதிக்க வைத்தார் சாந்தி.

அன்றும் இரவும் குடித்துவிட்டு வந்த புகழேந்தியிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் திணறி கொண்டு இருந்தனர்
அவனுடைய பெற்றோர்.

வீட்டின் உள்ளே வந்தவன் தன் அறைக்கு செல்ல போக “தம்பி புகழு” என்றழைத்தார் காமாட்சி
“என்னம்மா” என்றான் புகழேந்தி
“சாப்பிட வாய்யா” என்க
“பசிக்கல” என்று கூறி உள்ளே செல்ல பார்க்க
“உன் கிட்ட கொஞ்சம் பேசனும் தம்பி நில்லு” என்றார் சின்னசாமி
“என்னப்பா”
“எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போற உனக்கும் கொஞ்ச மாறுதல் வேணும்
மெட்ராஸ்ல் உங்க மாமா சத்தியமூர்த்தி இருக்காரே அவரோட இரும்பு கம்பெனிக்கு ஆள் வேணுமா நீ கொஞ்ச நாள் அவங்க வீட்டில் இருந்து அவருக்கு ஒத்தாசையா இருந்துட்டு வா” என்றார் சின்னசாமி.

“என்னால அங்க எல்லாம் போக முடியாது பா”
“ஒஹோ சரி இங்க இப்படியே நீ குடிச்சிட்டு கஷ்டப்படுறத பார்த்து நாங்க ரெண்டு பேரும் சாகனும் அதான உன் எண்ணம்” என்றார் கோவத்துடன்
“அப்படிலாம் இல்லை” என்றான் அவன் உம்மென்று முகத்தை வைத்து கொண்டு
“அய்யா ராசா கொஞ்ச நாள் போய் இருந்துட்டு வாய்யா அம்மாவுக்காக இந்த குடி பழக்கம் எல்லாம் வேண்டாம் எனக்குன்னு இருக்குறது நீ ஒருத்தன் தான்யா” என்றார் அழுது கொண்டே காமாட்சி.

அவர் அழுவதை பார்த்தவன் ‘என்னால ஏன் இவங்க ரெண்டு பேரும் கஷ்டப்படனும்’ என்று மனதில் நினைத்தவன் “சரி மா நான் போறேன்” என்றான்.

அப்பாடா என்று இருந்தது இருவருக்கும் மறுநாள் காலை முதல் பஸ்க்கே அவனை எழுப்பி கிளம்ப வைத்து அனுப்பி வைத்தனர் அவன் பெற்றோர்.

சென்னை மாநகரம் பேருந்து நிலையத்திற்க்கு வந்து சேர்ந்தான் புகழேந்தி அவன் வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்க
அவன் இறங்கியவுடன் அவனுக்காக காத்திருந்தார் சத்தியமூர்த்தி “வா மாப்பிள்ளை எப்படி இருக்க” என்று சிரித்த முகத்துடன் அவனை வரவேற்க்க
அவனும் பதிலுக்கு மெலிதாக புன்னகைத்து கொண்டு “நல்லாருக்கேன் மாமா” என்றான்.

இருவரும் காரில் ஏறி சத்தியமூர்த்தியின் இல்லத்திற்க்கு பயணம் செய்தனர்.

சத்தியமூர்த்தி சிறியதாக ஸ்டீல் கம்பெனி ஒன்றை நடத்தி வருகின்றார் சாந்தி இல்லத்தரசி மகள் அக்ஷயா முதலாம் ஆண்டு பொறியியல் படித்து கொண்டு இருக்கிறாள் புகழேந்தி அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு வசதியானவர்கள் தான்.

சத்தியமூர்த்தி இல்லத்திற்க்கு வந்த இருவரும் காரில் இருந்து இறங்கி வந்தனர் மூன்று படுக்கை அறைகள் உடைய பெரிய இரண்டு மாடி வீடு
புகழேந்தி உள்ளே நுழைய “புகழு எப்படி இருக்க சின்ன வயசுல பார்த்தது எவ்வளவு நாள் ஆச்சு உன்னை பார்த்து” என்றார் சாந்தி சிரித்த முகத்துடன்
“நல்லாருக்கேன் அத்தை” என்று உள்ளே நுழைய அக்ஷயா கிளாசில் தண்ணீர் எடுத்து கொண்டு வர அதை வாங்கி பருகினான் “இவள் தான் என் ஒரே பொண்ணு அக்ஷயா நீ சின்ன வயசுல பார்த்துருப்ப” என்றார் சாந்தி.

“தெரியும் அத்தை நியாபகம் இருக்கு” என்று கூறி அவளை பார்த்து புன்னகைத்தான்
அக்ஷயா நல்ல நிறம் குள்ளமாக அளவான உடல்வாகுடன் தன் கழுத்து கீழ் வரை இருந்த கூந்தலை விரித்து விட்டு காட்டன் சுடிதார் ஒன்றில் நின்றிருந்தாள்.

அவனை பார்த்தவனுக்கு தான் சிறு வயதில் பார்த்த அதே குட்டி பெண் அக்ஷயாவாக தான் தோன்றியது.

அக்ஷயாவுக்கோ பாடி பில்டர் போன்று வாட்ட சாட்டமாக நல்ல உயரத்தில் நம் தமிழ்நாட்டு நிறத்தில் முறுக்கு மீசையுடன் வேஷ்டி சட்டையில் இருந்த தன் மாமானை பார்த்த உடனே பிடித்துவிட்டது
திருமணம் பேசிய விஷயத்தை முந்தைய நாள் இரவே அவளிடம் கூறி இருந்தார் சாந்தி.

மகளின் முகபாவனையை வைத்தே அவளுக்கு புகழேந்தியை பிடித்துவிட்டது என்பதை அறிந்து கொண்டார் சாந்தி‌.

“புகழு நீ போய் ரெஸ்ட் எடு அக்ஷயா மாமாவ கூட்டிட்டு ரூம காட்டு” என்க “வாங்க மாமா” என்று அக்ஷயா அவனை அறைக்கு கூட்டி சென்றாள்
“இது தான் உங்க ரூம் திங்ஸ் எல்லாம் அங்க வச்சிக்கோங்க” என்றவள் அங்கிருந்து கிளம்பும் போது “மாமா நீங்க ரொம்ப ஸ்மார்ட் ஆகிட்டிங்க” என்று கூறிவிட்டு சிரித்து கொண்டே சென்றாள்.

அவள் கூறியதை கேட்டவன் அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க நான்கு நாள் சவரம் செய்யப்படாத தாடியுடன் முகமெல்லாம் கலையிழந்து இருந்தவனை பார்க்க அவனுக்கே பிடிக்கவில்லை
‘என்னை போய் நல்லாருக்கேன்னு சொல்லிட்டு போறா பைத்தியக்காரி’ என்று நினைத்தான்.

ஒருவேளை காதலுக்கு கண் இல்லை போல.

வெளியே சாந்தி “என்னங்க உங்க பொண்ணுக்கு என் அண்ணன் பையன பிடிச்சிருக்கு” என்றார் முகமெல்லாம் பல்லாக
“உனக்கு எப்படி தெரியும்” என்க
“நான் அவள் அம்மா அவள் என்ன நினைக்குறான்னு முகத்தை வச்சே சொல்லிடுவேன்” என்றார்
“அவளுக்கு பிடிச்சா சரிதான்” என்றார் சத்தியமூர்த்தி.

அன்றைய பொழுது அப்படியே கழிய மறுநாள் காலை கல்லூரிக்கு பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தாள் அக்ஷயா “மா என் ஐடி கார்ட் எங்கே இன்னைக்கும் பஸ் மிஸ் ஆகிடும் போல அப்பாவ வந்து காலேஜ்ல் விட சொல்லு” என்று கூறி கொண்டே கிளம்பி கொண்டு இருந்தாள்.

சாந்தி நேரே புகழேந்தியின் அறைக்கு சென்றவர் “புகழு மாமா அவசரமா வெளியே கிளம்பனும்மா அக்ஷயாவ காலேஜ்ல கொஞ்சம் விடுறியா இங்க இருந்து பக்கம் தான்” என்றார்
“சரி அத்தை” என்றான்
“அக்ஷயாவ வர சொல்றேன்” என்று கூறிவிட்டு சென்றார்.

சாந்தி வேண்டும் என்றே தான் ஐடி கார்டை ஒளிய வைத்து நேரத்தை ஓட்டி இருந்தார் அது புகழுக்கு தெரியாது.

வெள்ளை நிற ஷர்ட் நீல நிற ஜீன்ஸ் அணிந்து வெளியே வந்தவனை பார்த்தவள் “மாமா நீங்க எந்த டிரஸ் போட்டாலும் ஸ்மார்ட்டா இருக்கிங்க” என்க
“சரி சரி வா கிளம்பலாம்” என்றவன் காரில் சென்று அமர இருவரும் கல்லூரிக்கு கிளம்பினர்.

வரும் வழியெல்லாம் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்து கொண்டு வந்தாள் அக்ஷயா
புகழோ அவளை திரும்பி கூட பார்க்காமல் வண்டியை செலுத்தி கொண்டிருந்தான்.

கல்லூரி வாசலில் அக்ஷயா இறங்கியுவுடன் அவன் செல்ல பார்க்கும் முன்
“மாமா ஒரு நிமிஷம் என் ஃபிரண்ட் கிட்ட உங்கள இன்ட்ரோ கொடுக்கனும் ஒரு நிமிஷம்” என்றவள் ஓடி சென்று அவள் நண்பியை அழைத்து வந்தாள்.

“நந்தினி இவர் தான் என் மாமா புகழேந்தி நான் சொன்னனே” என்றாள் சிறிதாக வெட்கப்பட்டுக் கொண்டு
“மாமா இது என்னோட பெஸ்ட் ஃபிரண்ட் நந்தினி” என்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தனர்.

“மாமா ஒரு ஹாய் சொல்லுங்க” என்றாள் அக்ஷயா அவன் தோளில் தொட்டு புகழோ பேச கூட முடியாமல் திணறியவன் “எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்” என்று எதுவும் பேசாமல் காரை எடுத்து கொண்டு கிளம்பினான்.

“என் மாமா கொஞ்சம் கூச்சப்படுவாங்க நீ ஒன்னும் தப்பா நினைச்சிக்காத
நேத்து உன் கிட்ட சொன்னனே நான் அவர தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்” என்றாள் முகம் நிறைய புன்னகையுடன் சிறியதாக வெட்கப்பட்டு கொண்டே அக்ஷயா.
தொடரும்…..
 
அத்தியாயம் 14

அக்ஷயா கூறியதை கேட்ட நந்தினிக்கு தன்னையறியாமல்
புகழேந்தி மேல் கோபம் வந்தது அதை எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் “வாழ்த்துகள் அக்ஷயா உங்க மாமாவுக்கு இதில் சம்மதம் தானா?” என்றாள்
அவளை பார்த்து சந்தேகத்துடன்.

அவள் அப்படி கேட்ட உடன் அக்ஷயா முகம் சோர்ந்து விட்டது “ஏன் அப்படி கேட்க்குற நந்தினி அவங்க தான் என்னை பிடிச்சு போய் முதல்ல பொண்ணு கேட்டாங்க” என்றாள்
“அய்யோ நான் ஒன்னும் தப்பா கேட்கல எதுவுமே பேசாம போறாங்களே அதனால் தான் கேட்டேன்” என்றாள் நந்தினி.

“நான் தான் சொன்னனே அவரு ரொம்ப கூச்சப்படுவாரு பாவம் பொண்ணுங்க கிட்டையே பேசுனது இல்லை போல
என் கிட்டையே இன்னும் சரியா பேச ஆரம்பிக்கல” என்றாள் சோகமாக.

‘அடிப்பாவி அவனுக்கா பொண்ணுங்க கிட்ட பேச வராது
இவன் அக்ஷயா கிட்ட என்னை பத்தி சொல்லவே இல்லை போல’
என்று நினைத்தவள் “சரி அக்ஷயா” என்க
அந்த நேரம் பார்த்து கல்லூரி மணி ஒலிக்கும் சத்தம் கேட்க
“நந்தினி கிளாஸ்க்கு டைம் ஆச்சு வா” என்று அவளை இழுத்து கொண்டு சென்றாள்.

வகுப்பறைக்கு சென்ற இருவரும் பாடத்தை கவனித்து கொண்டிருக்க நந்தினியின் மனது திடீரென புகழேந்தியை பற்றி நினைக்க ஆரம்பித்தது
‘நான் அவனை விட்டு வந்து ரெண்டு மாசம் தான் ஆகுது அதுக்குள்ள இன்னொரு கல்யாணம்’ என்று நினைத்தவள்
திரும்பி அக்ஷயாவை பார்த்தவளுக்கு ஏனோ கோபம் கூட வந்தது அது எதனால் என்று அவளுக்கே தெரியவில்லை கையில் நோட்டுடன் குறிப்பு கூட எடுக்காமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்.

நந்தினி ஒரு நாளும் இப்படி இருந்ததே இல்லை இந்த கல்லூரிக்கு வந்து சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது துளி கூட கவனம் சிதறாமல்
தன் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி கொண்டிருந்தவளுக்கு திடிரென ஒரு தடுமாற்றம்
இது எதனால் என்று அவளுக்கே தெரியவில்லை இது மஞ்சள் கயிற்றின் மாயாஜாலமோ என்றாலும்
அவன் கட்டிய மஞ்சள் கயிறு கூட அவள் கழுத்தில் இல்லையே பின் என்னவாக இருக்க கூடும்
ஏதோ ஒரு பந்தம் இவர்கள் இருவரையும் பிரிய விடாமல்
அவளை நினைக்க செய்து கொண்டிருந்தது
என்னவாகா இருக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

காரை ஓட்டி கொண்டு வந்த புகழேந்தியின் கண்கள் சாலையில் இருந்தாலும் மனம் என்னவோ தாயின் பின்னே ஓடும் குழந்தையை போல தன்னவளின் நினைவில் தான் ஓடிக் கொண்டிருந்தது.

‘அவள் என்னை பார்த்தவுடன் என்ன நினைச்சு இருப்பா
என் நியாபகம் எல்லாம் அவளுக்கு இருக்குமா என்று நினைத்தவன்
அவளுக்கு தான் என்னை பிடிக்காதே பிடிக்காமல் தானே சாக போனா என்ன இருந்தாலும் நான் செஞ்சது தப்பு
அவள் கிட்ட மன்னிப்பு கேட்கனும் இனி அவள் வாழ்க்கையில் நான் எப்பவும் வரவே மாட்டேன்’ என்று
நினைத்து கொண்டே காரை செலுத்தி கொண்டிருந்தான்.

புகழேந்தி ஒன்றை மறந்துவிட்டான் அவளிடமிருந்து விலக முடியாத ஒன்றை தான் விதைத்து வந்திருக்கிறோம் என்பதை வினை விதைத்தவன் வினை அறுத்து தானே ஆக வேண்டும்.

கல்லூரியில் வகுப்பு முடித்து மதிய இடைவேளையின் போது சாப்பிட கேன்டீன் வந்திருந்தனர் அக்ஷயாவும் நந்தினியும்.

சாப்பாடு ஆர்டர் செய்து விட்டு அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க ஆர்டரும் வந்து சேர்ந்தது
இருவரும் சாம்பார் சாதம் ஆர்டர் செய்திருக்க சாப்பிட ஆரம்பித்தனர்.

இரண்டு வாய் சாப்பிட்ட நந்தினி
மூன்றாவது வாய் சாப்பிடும் போது அந்த நெய்யின் மணம்
அவளுக்கு உமட்டிக் கொண்டு வர வாந்தியை அடக்க முடியாமல் கழிவறையை நோக்கி ஓடினாள் அக்ஷயாவும் சாப்பாட்டை வைத்துவிட்டு அவள் பின்னே ஓடி வந்தவள் அவள் வாந்தி எடுத்து முடிக்கும் வரை தலையை பிடித்து கொண்டாள் நந்தினியோ தன் வயிற்றில் இருக்கும் அனைத்தையும் வாந்தி எடுத்திருந்தாள்.

வாந்தி நின்றதும் நிமிர்ந்தவளின் முகம் முழுவதும் வியர்வை வடிந்து கொண்டிருந்தது “என்னாச்சி நந்தினி?” என்க
“தெரியல கேன்டீன் சாப்பாடு ஒத்துக்கல போல” என்றவள்
முகத்தை கழுவி முடித்து வெளியே வந்தாள்.

அதன் பிறகு வகுப்பறையிலும் நந்தினி சோர்வாக தான் அமர்ந்து இருந்தாள்.

மாலை இருவரும் கல்லூரி முடித்து வெளியே வர அக்ஷயாவுக்காக கல்லூரி வாயிலில் காத்திருந்தான் புகழேந்தி
சாந்தி தான் அவனை மீண்டும் அனுப்பி வைத்திருந்தார்.

அவனை பார்த்த அக்ஷயாவோ முகம் முழுவதும் புன்னகையுடன் அவனருகே செல்ல
நந்தினி அவனை பார்த்து கொண்டே நின்றிருந்தாள்
‘ஊர்ல எல்லாம் வேஷ்டி சட்டை போட்டுட்டு சண்டியர் மாறி சுத்திட்டு இருப்பான்
இங்க பேன்ட் ஷர்ட் எல்லாம் போட்டுட்டு ஏதோ லவ்வர் பாய் மாறி வந்திருக்கான் பாரு பட்டிக்காட்டான்’ என்று மனதில் அவனை திட்டிக் கொண்டு இருந்தாள்.

“நந்தினி இங்கே வா” என்று அக்ஷயா அவளை அழைக்க அவர்களை நோக்கி நடந்து சென்றவள்
அக்ஷயா புகழேந்தியின் கை வளைவில் கை நுழைத்து இருக்க அதை பார்த்து முறைத்து கொண்டே வந்தாள்
“மாமா காலையில் நந்தினி கிட்ட நீங்க பேசவே இல்லை இப்போ பேசுங்க” என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே யாரோ அவளை அழைக்க திரும்பி பார்த்தவள் “அய்யோ நந்தினி மறந்தே போய்ட்டேன் சுமதியோட நோட்டை கொடுத்துட்டு வரேன் நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க” என்று கூறிவிட்டு அவள் பதில் கூறும் முன் ஓடியிருந்தாள்.

இது தான் சமயம் என்று நினைத்த புகழேந்தி தைரியத்தை வரவழைத்து கொண்டு “நந்தினி என்னை மன்னிச்சிடு” என்க
அவனை முறைப்பது போல பார்த்தவள் “நீங்க யாருன்னே எனக்கு தெரியாது என்கிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்க்குறிங்க” என்று பதில் கூற அவள் பேசியதை கேட்ட புகழேந்திக்கு கோபம் வர “நான் ஒன்னும் உங்க கூட குடும்பம் நடத்த வரல மேடம் நான் பண்ணின தப்புக்கு மன்னிப்பு கேட்க தான் வந்தேன்” என்று அவன் கூறி முடிக்கும் முன் அக்ஷயா வந்து சேர்ந்தாள்.

அவள் வந்தவுடன் முகத்தை மாற்றியவன் “கிளம்பலாமா டா” என்றவன் அவளை அழைத்து கொண்டு சென்றான் “பாய் நந்தினி” என்று அவள் அவன் கையை பிடித்து கொண்டு செல்ல அவர்களை பார்த்து கொண்டே நின்றிருந்தவள்.

‘எவ்வளோ திமிரு என் கிட்டையே கோவமா பேசிட்டு போறான் நியாயமா கோவப்பட வேண்டியது நான்’ என்று மனதில் அவனை திட்டி கொண்டே கல்லூரி விடுதிக்கு நடந்து சென்றாள்.

அக்ஷயா உடன் சென்று கொண்டு இருந்த புகழேந்தியும் அதையே தான் நினைத்து கொண்டு இருந்தான் ‘நான் என்ன மன்னிப்பு கேட்க தான போன யாருன்னே தெரியாதுன்னு சொல்றா இனி இவளை என் வாழ்க்கையில் பார்க்கவே கூடாது கடவுளே’ என்று நினைத்து கொண்டான்.

கடவுள் இவன் வேண்டுதலை நிறைவேற்றுவாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆண்டிப்பட்டி வெண்ணிலாவின் இல்லம்.

வெண்ணிலா காதல் பித்தில் முழுதாக பித்தாகவே மாறி சுற்றி கொண்டு இருந்தாள் பகலில் அலைபேசியில் காதல் மொழி பேசி இரவில் தன் கணவனுடன் கூடி கலைத்து இவ்வறாக நாட்களை கழித்து கொண்டிருந்தாள்.

ஈஸ்வரியும் தன் மகளின் நடவடிக்கையை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்
முன்பு இருந்த குழந்தை தனம் முற்றிலும் அற்று இருப்பவளை,
இரவெல்லாம் தூங்காமல் இருப்பதால் பகலில் சோர்ந்து படுத்து உறங்கி கொண்டே இருக்கும் மகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்.

அன்று காலை உறங்கி கொண்டிருந்த மகளை எழுப்பினார் ஈஸ்வரி “வெண்ணிலா எழுந்திரு குளிச்சிட்டு வந்து இந்த புடவையை கட்டு” என்க
“மா எனக்கு தூக்கம் வருது”
“எழுந்திரு டி மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துருவாங்க குளிச்சி கிளம்பு” என்க
உறங்கி கொண்டு இருந்தவள் அடித்து பிடித்து எழுந்து “யாரு வராங்க?” என்றாள் அதிர்ச்சியில்
“உன்னை பொண்ணு பார்க்க பக்கத்து ஊரில் இருந்து வராங்க
எழுந்து கிளம்பு” என்று அவளை விரட்ட தன் தாயிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டே இருந்தவளை பார்த்து “எழுந்திரு டி” என்று அதட்ட அவளும் பயந்து கொண்டே கிளம்ப ஆரம்பித்தாள்.

சரவணனிடம் கூறலாம் என்று நினைத்தாள் கூட அவள் தாய் ஒரு கணம் கூட அவளை விட்டு விலகாமல் அவளுடனையே இருந்தார்.

என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டு இருக்க வேலாயுதம் “மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட்டாங்க ஈஸ்வரி” என்று குரல் கொடுக்க இவளை அழைத்து கொண்டு கீழே சென்றார்.

மாப்பிள்ளை வீட்டில் மணமகன் மற்றும் அவனது பெற்றோர்கள் வந்திருந்தனர்.

வெண்ணிலாவின் கையில் காபியை கொடுத்த ஈஸ்வரி அனைவருக்கும் கொடுக்க சொல்ல தன் நடுங்கும் கைகளில் கொடுத்தவளுக்கு அழுகையாக வந்தது யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் காபியை கொடுத்து விட்டு வந்து நின்றாள்.

மாப்பிள்ளையின் தாய் தான் முதலில் பேச ஆரம்பித்தார் “பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா ஊர்ல அரசல் புரசலா சில விஷயம் எல்லாம் பேசிக்குறாங்களே” என்று இழுக்க.

“அட அந்த பையன் ஆம்பளையே இல்லங்க தாலி கட்டுன முதல் நாளே தெரிஞ்சி எங்க பொண்ணை கூட்டிட்டு வந்துட்டோம் அதுவும் இல்லாம அது ஓரு கலாட்டா கல்யாணம்
சட்டப்படி எந்த ரசிதும் அந்த கல்யாணதுக்கு இல்லை என் பொண்ணுக்கு இது தான் முதல் கல்யாணமே எங்களுக்கு இருக்க எல்லா சொத்தும் எங்க பொண்ணுக்கு தான் உங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்” என்று சிரித்து கொண்டே ஈஸ்வரி கூற.

“எங்களுக்கு சம்மதம் தானுங்க ஒரு வார்த்தைக்கு கேட்கனும்ன்னு தான் கேட்டோம் தப்பா நினைச்சிக்காதிங்க” என்றார் அந்த மணமகனின் தாய்.

“சரிங்க அப்போ கல்யாணத்தை எப்போ வச்சிக்கலாம்?” என்று மணமகனின் தந்தை கேட்க.

“உங்களுக்கு சரின்னா வர முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்றார் வேலாயுதம்.

தலைகுனிந்து நின்றிருந்த வெண்ணிலா தன் தந்தை கூறியதை கேட்டு அதிர்ச்சியுடன் நிமிர்ந்தவள் கண்கள் கலங்க முகம் முழுவதும் வேர்த்து வடிய நின்றிருந்தவளுக்கு கண்கள் இரண்டும் இருட்ட ஆரம்பித்தது.

“சரிங்க அப்போ வர முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்று மணமகனின் தந்தை கூ
றியவுடன் நிற்க முடியாமல் நின்றிருந்த வெண்ணிலா அப்படியே மயங்கி சரிந்தாள்.


தொடரும்…
 
அத்தியாயம் 15

வெண்ணிலா மயங்கி விழுந்ததை முதலில் பார்த்தவர் வேலாயுதம் தான் உடனே அவள் அருகில் ஓட
ஈஸ்வரி அப்போது தான் திரும்பி வெண்ணிலா மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்தார்
வேலாயுதம் தன் மகளை மடியில் வைத்து கொண்டு கன்னத்தில் தட்டி “பாப்பா எழுந்துரு டா” என்று எழுப்ப அவள் பேச்சு மூச்சில்லாமல் கிடக்க “ஈஸ்வரி போய் தண்ணீ கொண்டு வா” என்க உள்ளே ஓடி தண்ணீர் சொம்புடன் வந்தார் ஈஸ்வரி
தண்ணீர் தெளித்தும் வெண்ணிலா அசைவில்லாமல் கிடக்க அவளை தூக்கி கொண்டு காரில் ஏற்றியவர்கள் மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கே அவசர சிகிச்சை பிரிவில் வெண்ணிலா அனுமதிக்கப்பட்டால்.

ஒரு அரை மணி நேரம் சிகிச்சைக்கு பின் மருத்துவர் வெளியே வர அவர் அருகில் ஓடிய வேலாயுதம் “டாக்டர் அம்மா என் பொண்ணு எப்படி இருக்கா அவளுக்கு ஒன்னும் இல்லையே” என்றார் படபடக்கும் இதயத்துடன்.

“ஒன்னுமில்லை சார் உங்க பொண்ணு நல்லா இருக்கா
சாதாரண மயக்கம் தான் இந்த மாறி நேரத்தில் இப்படி மயக்கம் வருவது சாதாரண விஷயம் தான்” என்க

“எந்த மாறி நேரத்தில் டாக்டர் எனக்கு புரியலையே” என்ற வேலாயுதத்தை பார்த்தவர்
“அவங்க கன்சீவ்வா இருக்காங்க சார் உங்களுக்கு தெரியாதா”
என்க வாயடைத்து போய் நின்றுவிட்டார் வேலாயுதம்.

அதை கேட்ட ஈஸ்வரி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தார் தான் சந்தேகப்பட்டது சரி தான் என்று நினைத்து கொண்டார்.

“இந்த மாறி நேரத்தில் மயக்கம் வருவது நார்மல் தான் சார் அவங்க கொஞ்சம் வீக்கா இருக்காங்க இந்த மாத்திரை எல்லாம் வாங்கிக்கோங்க” என்று ரசீதை அவர் கையில் கொடுத்துவிட்டு செல்ல என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தனர் இருவரும்.

ஈஸ்வரி-வேலாயுதமும் தன் மகளை உள்ளே சென்று பார்க்க அவள் தலை குனிந்து அமர்ந்து இருந்தாள்.

அவள் அருகில் சென்ற ஈஸ்வரி தன் கையால் அவள் முதுகில் அடிக்க ஆரம்பித்தார் “யாருடி இந்த புள்ளைக்கு அப்பா சொல்லு டி நடத்தை கெட்டவளே” என்று கூறி கொண்டே அவளை அடித்துக் கொண்டு இருந்தார்.

அழுது கொண்டே அமர்ந்து இருந்தவள் “அம்மா நான் நடத்தை கெட்டவ இல்லை மா இது என் புருஷனோட புள்ளை மா நான் யார் கூடவும் தப்பா இருக்கல மா” என்றாள் கதறி கொண்டே
அவள் கூறியதை கேட்டவர் “யாரு யாருக்கு டி அம்மா நடத்த கெட்டவளே நீ எனக்கு பொண்ணே இல்லை நான் உனக்கு அம்மாவும் இல்லை
புருஷனோட புள்ளையாமே என்னங்க வாங்க வீட்டுக்கு போலாம்” என்று வேலாயுதத்தின் கையை பிடிக்க “நம்ம பொண்ணு பாவும் டி வாயும் வயிறுமா வேற இருக்கா” என்றார் அவர் மனம் கலங்க
“நீங்க அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் நீங்க இப்போ வர்றீங்களா இல்லையா” என்க
அழுது கொண்டே தன் மகளை திரும்பி பார்த்து கொண்டே சென்றார்.

அழுது கொண்டே அமர்ந்து இருந்த வெண்ணிலா என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருக்க கதவை தட்டி செவிலி பெண் உள்ளே வந்து
“இந்தாங்க ஹாஸ்பிடல் பில் கட்டிடுங்க” என்று ரசீது ஒன்றை நீட்ட அதை கையில் வாங்கியவள் என்ன செய்வது என்று கூட தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள்.

அந்த செவிலி பெண் வெளியே செல்ல போகும் போது “அக்கா உங்க போன் கொடுக்குறிங்களா என் வீட்டுக்காரரு கிட்ட பேசனும்” என்றாள் கெஞ்சுவது போல
அவளை பார்க்க பாவமாக இருக்கவே தனது அலைபேசியை எடுத்து கொடுக்க அதில் சரவணன் எண்ணை அழுத்தியவள் ரீங் போனவுடன் அவன் எடுக்க “என்னங்க நான் வெண்ணிலா பேசுறேன் ***ஹாஸ்பிடல்ல இருக்கேன் கொஞ்சம் வரீங்களா” என்க
“ஏன் என்னாச்சி பாப்பா” என்றான் அதிர்ச்சியுடனே
“நான் நான் என்று தயங்கி கொண்டே மாசமா இருக்கேன்” என்றாள் திக்கி திணறி
அதை கேட்டவனுக்கோ இருப்பு கொள்ளவில்லை “இன்னும் பத்து நிமிஷத்துல அங்கே இருப்பேன்” என்றவன்.

தனது பைக்கில் பத்து நிமிடத்திற்க்கு குறைவான நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தவன் வெண்ணிலா இருக்கும் அறையை கேட்டு கொண்டு அங்கே வந்து நின்றான்.

அறையின் உள்ளே நுழைந்தவன் அங்கே அழுது கொண்டு கலை இழந்து இருந்த வெண்ணிலாவை பார்த்தவன் என்னாச்சி என்று அவள் தோளை தொட்டு கேட்க அவனை கட்டி கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் வெண்ணிலா.

“என்னாச்சு டி” என்று தன்னிடமிருந்து அவளை பிரித்து கேட்க “இப்போ சொல்ல போறியா இல்லையா” என்று கேட்க அழுது கொண்டே நடந்தவை அனைத்தையும் கூறியவளின் கண்ணீரை துடைத்து ஆறுதல் படுத்தியவன்.

மருத்துவமனை பில்லை கட்டி முடித்து நேராக தன் வீட்டிற்க்கு செல்லாமல் வெண்ணிலாவின் வீட்டிற்க்கு சென்றவன் அவளை இறங்க சொல்ல அவள் மாட்டேன் என்று பயத்தில் அவன் தோளை பிடித்து கொண்டே அமர்ந்து இருக்க “இறங்க போறியா இல்லையா டி” என்று கத்த அவள் இறங்கினாள்
அவள் கையை பிடித்து கொண்டு உள்ளே இழுத்து சென்றான் அவள் கணவன்.

அங்கே ஹாலில் அமர்ந்து இருந்த ஈஸ்வரி சரவணனை பார்க்க இன்னும் கோபம் அதிகரித்தது அவன் பின்னே வந்த வெண்ணிலாவையும் பார்த்தவர் “அடியேய் நடத்தை கெட்டவளே எதுக்கு டி இங்கே வந்த” என்க
“மாமியாரே மரியாதை கொடுத்து பேசுங்க அவள் என் பொண்டாட்டி என்றவன் என்னவோ சொன்னிங்க நான் ஆம்பளையே இல்லைன்னு இப்போ உங்க பொண்ணு அதாவது என் பொண்டாட்டி வயித்துல என் புள்ளை” என்றான் ஒரு வெற்றி சிரிப்பு சிரித்து கொண்டே
அவர் எதுவும் பேசாமல் அமர்ந்து இருக்க
“நீங்க இப்படி கூனி குறுகி இருக்க தான் நான் ஆசைப்பட்டேன் அது நடந்திருச்சு”
என்றான் திமிராக.

“அப்போ வேணும்னே தான் இதெல்லாம் பண்ணுன” என்றார் ஈஸ்வரி ஆதங்கத்துடன்
“ஆமாம் அதுக்கு என்ன இப்போ”
என்றான் அதே திமிருடன்
“கேட்டுக்க டி இப்படி ஒருத்தன் தான் நீ வேணும்னு வந்து நிக்குற
இன்னைக்கு வீம்புக்காக உன் கூட படுத்தவன் நாளைக்கு உன் கிட்ட சண்டை போட்டுட்டு வேற ஒருத்தி கூட இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்” என்றார் கோபத்துடன்‌ ஈஸ்வரி.

அதை கேட்டவள் சரவணனை விரக்தியுடன் ஒரு பார்வை பார்த்தவள் “அப்போ என் அம்மா உன்னை ஆம்பள இல்லைன்னு சொன்னதுக்காக தான் என் கூட இருந்தியா” என்றாள் அவன் சட்டையை பிடித்து உலுக்கி.

“ஆமா ஆனா அதுக்கு அப்புறம் நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன் டி என்னையே அறியாம” என்றான்.

சரவணன் முதல் முறையாக அவளை தொட்டது அவள் அன்னையை பழிவாங்க எண்ணி தான் முதல் முறையாக அவளுடன் தாபத்துடன் இணைந்தவன் நாளடைவில் அது காதலாக மாறியது.

“போதும் நீ எதுவும் சொல்ல வேண்டாம் என் அம்மா அப்பாவ விட உன்னை அதிகமா நம்புனல்ல எனக்கு இது தேவை தான்” என்றவள் அவன் ஏதோ கூற வர இடைவெட்டி “நீங்க யாரும் எனக்கு வேண்டாம் என் புள்ளை மட்டும் போதும்” என்றவள் அழுது கொண்டே வெளியே செல்ல போக அவள் கையை பிடித்து “எங்கே போற என்னையும் உன் கூடயே கூட்டிட்டு போ?” என்றான்.

“கையை விடு நீ என் கூட வந்தின்னா நான் இந்த வீட்டை விட்டு பிணமா தான் வெளியே போவேன்” என்றவளின் கையை தீ சுட்டார் போன்று விட்டான் சரவணன்.

“பரவாயில்லை செத்தா ரெண்டு பேரும் சேர்ந்தே சாவோ
ம்” என்றவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் வெண்ணிலா.


தொடரும்….
 
அத்தியாயம் 16


வெண்ணிலா தன்னை அறைந்ததில் அவளை பார்த்து கொண்டே அதிர்ச்சியுடன் நின்றிருந்தான் சரவணன்.


“போதும் இனி என் வாழ்க்கையில நீ வராத,

உன்னால நான் நடத்த கெட்டவன்னு பேரு வாங்குன வரைக்கும் போதும் தயவு செஞ்சு என்ன நிம்மதியா இருக்க விடு” என்று அவள் கை எடுத்து கும்பிட.


“என்ன டி ரொம்ப ஓவரா பேசுற நான் என்ன உன்னை கட்டிப் போட்டு கற்பழிக்கவா செஞ்சேன்

உனக்கும் பிடிச்சு எனக்கும் பிடிச்சு தான் ஒன்னா இருந்தோம் அதுவும் இல்லாம நீ என் பொண்டாட்டி உன்கிட்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு நீ என் கூட தான் இருக்கனும் இருந்தாகனும் அது உனக்கு மட்டும் புள்ளை இல்லை எனக்கும் தான்” என்றான் கோவத்துடன்.


“என்னால உங்க கூட வர முடியாது இது உங்க புள்ளை தான்குறதுக்கு என்ன ஆதாரம் இருக்கு வேற யாரோட குழந்தையா வேணா இருக்கலாம் இல்லை” என்று அவள் கூறி முடிக்கும் முன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் சரவணன் அவன் அறைந்ததில் அவள் சுருண்டு கீழே விழ

ஓடி வந்து அவளை பிடித்து கொண்டார் வேலாயுதம்.


ஆஜானுபாகுவான தோற்றத்துடன் கூடிய இந்த

திடகாத்திரமான ஆண்மகனின் வலிமையை அந்த சிறு பெண் எப்படி தாங்குவாள் பாவம் சுருண்டு விழுந்துவிட்டாள்.


“சீ உன்னை நீயே அசிங்கப்படுத்திக்காத

இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன பல்லை தட்டி கையில கொடுத்துடுவன் இந்த இரண்டு மாசம் நாம ஒன்னா இருக்கும் போது ஒரு தடவை கூடவா டி நீ என் காதல உணரல” என்றவனை பார்த்த

வேலாயுதம் “போதும் பா நீ என் பொண்ண காதலிச்ச வரைக்கும் போதும்

வாயும் வயிறுமா இருக்க புள்ளைய போய் கை நீட்டி அடிக்கிற என் பொண்ண நானே பார்த்துக்குறேன்” என்றார் கண்கள் கலங்க

பெற்ற தகப்பனாயிற்றே தன் மகளை தன் கண் முன்னே ஒருவன் அடிப்பதை எவ்வாறு தாங்குவார் அது அவள் கணவனாக இருந்தாலும்.


சரவணன் அவள் அருகில் செல்ல போக வேலாயுதம் “வேண்டாம் வராத பா உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன் அவள் என் கூடயே இருந்துட்டு போகட்டும்” என்க.


“யோவ் அவள் எங்கையோ போகட்டும் உனக்கு என்ன வந்துச்சு” என்றார் ஈஸ்வரி அவர் அருகில் வந்து

“எனக்கு என் பொண்ணு தான் முக்கியம் உனக்கு விருப்பம் இல்லைன்னா நீ இந்த வீட்டை விட்டு வெளியே போ” என்றவரை பார்த்து முறைத்து கொண்டே நின்றிருந்தார் ஈஸ்வரி.


“நீ வா பாப்பா உள்ளே போலாம்” என்று வெண்ணிலாவை அணைவாக கூட்டிக் கொண்டு அங்கிருந்த அறையின் உள்ளே சென்றார் வேலாயுதம்.


அவளை அறையில் விட்டு வெளியே வந்த வேலாயுதம் “தம்பி அவள் இங்கேயே இருக்கட்டும் அவளுக்கு என்னைக்கு உங்க கூட வாழனும்ன்னு தோனுதோ அப்போ வரட்டும்” என்றார்

அவர் கூறியதை கேட்டு எதுவும் பேசாமல் வெளியே வந்தான்

சரவணன்.


‘இங்கே வரும் போது எவ்வளவு மகிழ்ச்சியான மனநிலையில் வந்தோம்’ என்று நினைத்து கொண்டே வந்தவன் இப்போது தன் மனைவியை விட்டு பிரிகிறோம் என்ற கவலையில் அந்த வீட்டை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்றான்.


உலகத்தில் உள்ள சித்ரவதைக்கெல்லாம் செல்ல பெயர் வைத்தால் காதல் தானே..

என்ற நா.முத்துகுமாரின் வரிகள் உண்மை தான் போல

இங்கே நம் நாயகனும் நாயகியும் அதே சித்ரவதையை தான் அனுபவித்து கொண்டு இருந்தனர்.


சென்னை மாநகரம்.


புகழேந்தி இங்கே வந்து ஒரு வாரம் ஓடிவிட்டது அக்ஷயா அவனிடம் எவ்வளோ பேச முயற்சித்தும் அவன் முகம் கொடுத்து ஐந்து நிமிடத்திற்க்கு மேல் அவளிடம் இதுவரை பேசியது இல்லை.


அக்ஷயாவை இங்கு வந்த முதல் நாள் கல்லூரிக்கு கொண்டு விட்டதோடு சரி மறுநாளில் இருந்து எதாவது ஒரு காரணம் சொல்லி கல்லூரி பக்கமே செல்லாமல் நந்தினியை சந்திப்பதை தவிர்த்துக் கொண்டிருந்தான் புகழேந்தி.


அன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வந்த அக்ஷயாவை சாந்தி திட்டிக் கொண்டு இருந்தார் “இந்த மாறி பொண்ணுங்க கூடலாம் உனக்கு என்ன ஃபிரண்ட்ஷிப் வேண்டி கிடக்கு ஒழுங்கா காலேஜ் போனோமா வந்தோமான்னு இருக்க வழிய பாரு”

அவர் திட்டும் சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்த புகழேந்தி “என்னாச்சி அத்தை ஏன் அக்ஷயாவை திட்டுறிங்க?” என்க.


“இவள் ஃபிரண்ட் ஒருத்தி கல்யாணமே பண்ணாம மாசமா இருக்காலாம் அது காலேஜ் முழுக்க தெரிஞ்சி இப்போ அவளுக்கு டிசி கொடுக்க போறாங்களாம்

அவங்க மேம் கூப்பிட்டு என்ன திட்டுறாங்க

அந்த பொண்ணு கூட உங்க பொண்ண ஏன் சேர விடுறிங்கன்னு”

என்று கோவத்துடன் பேசிக் கொண்டு இருக்க.


‘இவ்வளவு தானா ஒருவேளை’என்று நினைத்தவன்

“அந்த பொண்ணு பேரு என்ன?” என்றான்.


“மாமா கேட்க்குறான்ல்ல பதில் சொல்லு டி” என்று சாந்தி அவளை அதட்ட.


“நந்தினி தான் மாமா” என்று அழுது கொண்டே கூற “என்ன சொல்ற அக்ஷயா இது உண்மையா?” என்றான் அதிர்ச்சியுடன்.


“ஆமா மாமா அவள் இன்னைக்கு காலேஜ் கேம்பஸ்ஸில் மயங்கி விழுந்துட்டா ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போன அப்போ தான் எல்லோருக்கும் உண்மை தெரிஞ்சுது” என்றாள் அழுது கொண்டே.


அவள் கூறியதை கேட்டு ஒரு கணம் யோசித்தவன் “அவள் இப்போ எங்க இருப்பா அவளை போய் பார்க்கலாமா வா” என்றவனை “அவளை போய் எதுக்கு பார்க்கனும்?” என்றார் சாந்தி.


“நான் வந்து சொல்றேன் அத்தை” என்றவன் அக்ஷயாவை அழைத்துக் கொண்டு காரில் விரைவாக கல்லூரி விடுதிக்கு சென்றான்.


அங்கே விடுதி காப்பாளர் அறையில் இருந்த பெண்மணி “கல்யாணமே பண்ணாம எப்படி இப்படி பிள்ளையோட வந்து நிக்குற உன்னை பார்த்து இன்னும் நாலு பேரு கெட்டு போவாங்க என்ன பொண்ணு நீயெல்லாம் முதல்ல ஹாஸ்ட்டலை விட்டு வெளியே போ” என்று திட்டிக் கொண்டு இருக்க

அந்த அறையின் உள்ளே நுழைந்தான் புகழேந்தி

“ஹலோ மிஸ்டர் நீங்க யாரு” என்று அந்த பெண்மணி கேட்க

நந்தினி அழுது கொண்டே திரும்பியவள் அங்கே நின்றிருந்த புகழேந்தியை பார்த்தவள் கண்ணீருடன் ஓடிச் சென்று அவனை கட்டி அணைத்து அழுக ஆரம்பித்திருந்தாள்.


தனக்காக பேச யாரும் இல்லை என்று நினைத்து கொண்டு இருந்தவளுக்கு இப்போது தன் கணவன் வந்துவிட்டான் என்றவுடன் தன்னையே அறியாமல் அவனை அணைத்து கொண்டு அழுக ஆரம்பித்திருந்தாள்

அழுது அழுது சோர்ந்த முகத்துடன் அவன் தோளில் சாய்ந்து கண்ணீர் வடித்து கொண்டு இருந்தாள்.


புகழேந்தியும் அவளுக்கு ஆதரவாக அவளை அணைத்துக் கொண்டான்.


இவர்கள் இருவரையும் பார்த்து அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள் அக்ஷயா.தன் தோளில் இருந்த நந்தினியின் முகத்தை நிமிர்த்தி அவள் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்தான் புகழேந்தி.


அதில் சுயநினைவு வந்து அவனிடமிருந்து விலகினாள் நந்தினி “எல்லாம் உன்னால தான் டா என் வாழ்க்கையே போச்சு” என்று அழுது கொண்டே தன் கை கொண்டு அவன் தோளில் அடிக்க

“ஒரு நிமிஷம் அமைதியா இரு டி” என்றவன்

விடுதி காப்பாளர் பெண்மணியிடம் சென்றவன்

“மேடம் அவளுக்கு கல்யாணம் ஆகி மூன்று மாதங்கள் ஆகுது அவன் என் பொண்டாட்டி தான் அவளை ஹாஸ்ட்டலில் இருந்து வெளியே அனுப்பாதிங்க” என்றான் கெஞ்சும் தோனியில்.


அவன் கூறியதை கேட்ட அக்ஷயா நந்தினியை பார்க்க‌ அவளோ தலை குனிந்து நின்றிருந்தாள்.


“இல்லை சார் பிரக்னன்ட்டா இருக்க பொண்ண ஹாஸ்ட்டல்ல அலோ பண்ண முடியாது” என்க

புகழேந்தி எவ்வளவு பேசியும் அவளை இந்த விடுதியில் இருக்க வைக்க முடியாது என்று கூறிவிட்டார் அந்த பெண்மணி.


நந்தினியை பார்த்தவன் “நீ என் கூட வா” என்று அவள் கையை பிடிக்க போக அவன் கையை தட்டிவிட்டவள் தனது பையை எடுத்து கொண்டு வெளியே கோவத்துடன் வெளியே சென்றாள்.


அவள் பின்னே சென்றவன் “ஏய் நில்லு டி ஒழுங்கா என் கூட வா” என்க

“என்னால உன் கூட வர முடியாது போ டா” என்றவளை அவள் பையுடன் சேர்த்து அவளையும் சோள தட்டையை தூக்குவதை போன்று அலேக்காக தூக்கி கொண்டு வந்து அவள் துள்ள துள்ள காரில் போட்டவன்.


“அக்ஷயா வா வீட்டுக்கு போலாம்” என்க இவர்கள் இருவரையும் முறைத்து கொண்டே சென்று காரில் ஏறினாள் அவள்.


காரில் நந்தினியும் அக்ஷயாவும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை

அக்ஷயாவின் முகம் சோர்ந்து இருப்பதை பார்த்த நந்தினிக்கு ஏனோ சந்தோஷமாக தான் இருந்தது.


நேராக சாந்தியின் வீட்டிற்க்கு சென்றவன் வாசலில் காரை நிறுத்திவிட்டு இறங்க அவன் பின்னே நந்தினியும் இறங்கினாள்.


ஹாலில் அமர்ந்து இருந்த சத்தியமூர்த்தியும் சாந்தியும் யார் இந்த பெண் என்பதை போல பார்க்க.


அக்ஷயா ஓடி தன் அன்னையை கட்டி கொண்டு அழுக ஆரம்பித்திருந்தாள்

“என்னாச்சி அக்ஷி மா ஏன் அழற?” என்றார் சத்தியமூர்த்தி.


“இந்த பொண்ணு யாரு?” என்று நந்தினியை பார்த்துக் கொண்டே சந்தேகமாக கேட்டார் சாந்தி.


“அத்தை இது என் பொண்டாட்டி எங்களுக்கு முன்னையே கல்யாணம் ஆகிருச்சி அவள் இப்போ மாசமா இருக்கா” என்க

சாந்திக்கு தலையே சுற்றியது.


“என்ன சாந்தி இதெல்லாம்” என்றார் சத்தியமூர்த்தி அதிர்ச்சியுடன்.


சாந்தி தன் கணவருக்கு பயந்து கொண்டே மெல்ல “எனக்கு இது முன்னாடியே தெரியும்ங்க அண்ணி தான் இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்காங்கன்னு சொன்னாங்க” என்று கூறி கொண்டே இருக்கும் போதே அவர் கன்னத்தில் பளார் என்று அறைந்தார் சத்தியமூர்த்தி

“என் பொண்ணை ரெண்டாம் தாராம கட்டிக் கொடுக்க பார்க்குறியா தொலைச்சிருவன்” என்றவர்.


“புகழ் நீயும் சேர்ந்து தான் இதையெல்லாம் என்கிட்ட இருந்து மறைச்சுருக்க” என்று கூறி கொண்டே அவனை கோவமாக பார்க்க

“மாமா நீங்க என்ன சொல்றீங்க”

என்றான் புகழேந்தி எதுவும் புரியாமல்.


“அவனுக்கு நாங்க கல்யாணம் பேசுனதே தெரியாதுங்க என்னை மன்னிச்சிடுங்க நம்ம பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனுமேன்னு நினைச்சி தான் இந்த மாறி பண்ணிட்டங்க” என்றார் அழுது கொண்டே சாந்தி.


“அத்தை என்ன சொல்றாங்க மாமா?” என்றான் புகழேந்தி

நடந்தவை அனைத்தையும் சத்தியமூர்த்தி கூற

“என்ன மாமா சொல்றிங்க எனக்கு அக்ஷயா தங்கச்சி மாறி

எனக்கு எப்பவும் என் நந்தினி மட்டும் தான் பொண்டாட்டி

என் மனதில் அவளை தவிர யாரும் இல்லை” என்க

அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் நந்தினி.


“எதுக்கு டா அவளை இங்கே என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்த” என்று சாந்தி கத்த

“நான் ஒன்னும் இங்கே குடும்பம் நடத்த வரல என்னோட ட்ரெஸ் எல்லாம் எடுத்துட்டு என் பொண்டாட்டிய என் கூட கூட்டிட்டு போக தான் வந்தேன்” என்றவன் உள்ளே தன் அறைக்கு சென்று தன் உடைமைகளை எடுத்து வந்தான்.


அக்ஷயாவிடம் “என்னை மன்னிச்சிடு டா நான் உன்னை அந்த மாதிரி எண்ணத்தில் பார்க்கல” என்றவன் தன் மனைவியின் கை பிடித்து அழைத்து கொண்டு வெளியே சென்றான்.


வெளியே வரும் போது கூட நந்தினி அவனையே தான் பார்த்துக் கொண்டே வந்தாள்.


“சரி வா ஊருக்கு கிளம்பலாம்” என்று புகழேந்தி கூற நந்தினி

அவனை முறைத்து கொண்டே நின்றிருந்தாள்.தொடரும்….
 
Last edited:
அத்தியாயம் 17

தன்னை முறைத்துக் கொண்டே நின்றிருந்த நந்தினியை பார்த்தவன் “என்ன டி முறைக்கிற வா வர பஸ்ல ஊருக்கு போலாம்” என்க தன் தோளில் இருந்த ஹேன்ட் பேக்கை கழட்டியவள் அவனை வேக வேகமாக அடிக்க ஆரம்பித்தாள் “அய்யோ வலிக்குது விடு டி” என்று அவள் கையை பிடித்து தடுத்தான் புகழேந்தி.

“டேய் நான் உன்னை வர சொன்னனா பெரிய ஹீரோ இவரு நீயா வந்த இப்போ ஊருக்கு போலாம்ன்னு கேட்க்குற
நான் இங்கே படிக்க தான் வந்தேன் பாதியிலயே ஊருக்கு ஓட வரல புரிஞ்சுதா” என்றாள் அவனை முறைத்து கொண்டே.

“அதான் உன்னை ஹாஸ்ட்டலில்
சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களே” என்றான் அவன் சீரியஸாக முகத்தை வைத்து கொண்டே
“ஹாஸ்ட்டல்ல தான் சேர்த்துக்க மாட்டேன்னு சொன்னாங்க காலேஜ் போலாம் என் ஃபிரண்ட் ஒருத்தி ரூம் இருக்கு அங்க தங்கிப்பேன் நீ ஊருக்கு கிளம்பு” என்றவள் தனது பையை எடுத்து கொண்டு நடக்க ஆரம்பிக்க
அவள் பின்னே சென்று அவள் கையை பிடித்தவன் “சரி வா நானும் உன் கூட வரேன்” என்க
“நீ எதுக்கு என் கூட வர?” என்றாள் அவள் அவனை முறைத்துக் கொண்டே
“நீ தங்க போற இடம் என் குழந்தைக்கு பாதுகாப்பா இருக்கான்னு பார்க்க வேண்டாமா” என்க
அந்த நேரம் பார்த்து அவள் கையில் இருந்த போன் ஒலிக்க
திரையில் பார்த்தாள் அவள் நண்பி தான் அழைத்து இருந்தாள் அதை எடுத்து காதில் வைத்தவள் “அங்க தான் டி வந்துட்டு இருக்கேன்” என்க அந்த பக்கம் இருந்து என்ன பதில் வந்ததோ சோர்ந்த முகத்துடன் போனை வைக்க.

“என்னாச்சு” என்றான் புகழேந்தி
“அவங்க ரூம்லயும் பிரக்னன்ட்டா இருந்தா அலோ பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்க” என்றாள் சோகத்துடன்
“சரி விடு நான் தான் இருக்கேன்ல்ல டி” என்க அதை கேட்டவள்
அவன் முதுகில் மீண்டும் அடிக்க ஆரம்பித்தாள் “நீ இருக்குறதால தான் டா பிரச்சனையே” என்று கூறி கொண்டே அவனை அடிக்க அவள் கையை பிடித்து தடுத்தவன்
“இங்கே எங்க வீடு ஒன்னு இருக்கு அங்க போலாமா”
என்க “நான் வர மாட்டேன் உன் கூடலாம்” என்றாள் அவள் அவனை முறைத்து கொண்டே “சரி நான் ஊருக்கு கிளம்புறேன்” என்று கிளம்ப போக ‘இவனையும் விட்டுட்டா நான் எங்கே போறது’ என்று நினைத்தவள்
“ஏய் நில்லு அங்கேயே போலாம்” என்றவளை பார்த்து சிரித்துக் கொண்டே அவள் அருகில் வந்தவன் “வா போலாம்” என்றான் “நான் உன் கூட வரேன் பட் சில கண்டிஷன்ஸ் இருக்கு” என்றாள் நந்தினி.

“என்ன கண்டிஷன்” என்றான் புகழேந்தி புருவத்தை உயர்த்தி
“அது நீ என்கிட்ட பொண்டாட்டின்னு எந்த உரிமையும் எடுத்துக்க கூடாது நாம ரெண்டு பேரும் ஒரு ரூம் மெட்ஸ் மாறி தான் இருக்கனும்” என்றாள் தயங்கி கொண்டே
“இவ்வளோ தானா நீ என் முன்னாடி கவர்ச்சி கன்னி மாறி துணி போட்டு வந்து நின்னா கூட நான் உன்னை தொட மாட்டேன் ஆனால் நீயா வந்து என்னை தொட்ட நான் சும்மா இருக்க மாட்டேன்” என்றான் அவன் குறும்புடன்.

‘நான் ஏன் இவன் கிட்ட போக போறேன்’ என்று நினைத்தவள்
“எனக்கு ஓகே” என்றவளை பார்த்து “நல்லா யோசிச்சுக்கோ நீயா வந்து என்னை தொட்ட நான் சும்மா இருக்க மாட்டேன்” என்க
“நான் வந்து உன்னை தொட்டா தான டா பார்த்துக்கலாம் போடா” என்றாள் நந்தினி,
அவனை முறைத்துக் கொண்டே அவள் கண்களை பார்த்தவன் ‘அய்யோ என்ன பார்வை டா இது சாமி, என்று நினைத்தவன்
வசமா சிக்கிட்ட வாடி’ என்று நினைத்து கொண்டே அவளை அழைத்து சென்றான்.

பொறுத்திருந்து பார்ப்போம் யார் வெல்வார்கள் என்று.

*********************

காதலர்களின் பிரிவில் அவர்களைப் பெரிதும் துன்புறுத்துவது
மாலைப்பொழுதும், இரவு நேரங்களும் தான்(வள்ளுவரின் வரிகள்) அத்தகைய கொடிய இரவு பொழுதில் தன்னவளை நினைத்து வருந்தி கொண்டிருந்தான் சரவணன்‌.

நேற்று இந்த நேரம் தன்னவளுடன் கூடி இருந்ததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருந்தான்.

‘அவளை பார்க்க போலாமா வேண்டாமா’ என்று மனதில் நினைத்து தவித்துக் கொண்டிருந்தான்.

அதே நேரம் அவளும் அறையில் படுத்து கொண்டு அவனையே தான் நினைத்து கொண்டு இருந்தாள் வெண்ணிலா ‘என் மேல அன்பே இல்லையா அவருக்கு’ என்று நினைத்து கொண்டு இருந்தவள் பால்கனி கதவை திறந்து வைத்துக் கொண்டு வருவானா மாட்டானா என்று அவனுக்காக காத்திருந்தாள்.

இரவு முழுவதும் தூங்காமல் அவனுக்காக காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனாள் வெண்ணிலா.

சரவணன் அவளை காண வரவேயில்லை
‘அவளுக்கே அவ்வளோ இருக்கும் போது எனக்கு இருக்காதா நான் ஏன் அவளை பார்க்க போகனும்’ என்று மனதில் நினைத்தவன்
அங்கேயே இருந்துவிட்டான்.

சரவணன், வெண்ணிலாவும் தங்கள் பிடிவாதத்தை இழுத்து பிடித்து வைத்து கொண்டு இருந்தனர்.

தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

காலை விடிந்து எழுந்து தன் அறையில் இருந்து வெளியே வந்த சரவணனுக்காக காத்திருந்தார் லட்சுமி.

“சரவணா நில்லு உன் கிட்ட கொஞ்சம் பேசனும்” என்க
சலித்துக் கொண்டே திரும்பிய சரவணன் “என்னம்மா” என்றான்.

“டேய் நீ கட்டிட்டு வந்தியே ஒரு மூதேவி அவள் மாசமா இருக்கலாமே அதுக்கு காரணம் நீதான்னு ஊரே பேசிக்குது அது எப்படி டா இரண்டு மாசமா நீ அவள் கூடயே இல்லை யாரோட புள்ளைக்கோ உன்னை அப்பாவாக்க போறாளுக பார்த்துக்க” என்றார் அவர்.

“அம்மா அவள் என் பொண்டாட்டி அவள் வயித்துல புள்ளைன்னு ஒன்னு இருந்தா அது என்னோடது மட்டும் தான் அது என் புள்ளை அவ்வளோ தான் சொல்ல முடியும் உனக்கு புளி போட்டு எல்லாம் விளக்கிட்டு இருக்க முடியாது
இன்னொரு தடவை அவளை பத்தி தப்பா பேசாத” என்று கூறியவன் அவர் பதில் கூறும் முன் குளிக்க சென்றான்.

லட்சுமியோ சரவணன் பேசிவிட்டு சென்றதையே ஆவென பார்த்துக் கொண்டே நின்றிருந்தார்
‘இவன் எப்படியோ போனா போகட்டும் என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருந்தா போதும்’ என்று நினைத்து கொண்டார்.

இதற்கே இவ்வளவு சலித்துக் கொள்ளும் லட்சுமி இன்னும் தன் மகள் கர்ப்பமாக இருக்க விஷயம் தெரிந்தாள் என்ன செய்வாரோ.தொடரும்….
 
அத்தியாயம் 18

புகழேந்தி நந்தினியை ஒரு மேல் நடுத்தர வர்க்க மக்கள் வசிக்க கூடிய ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு ‌அழைத்து வந்திருந்தான் அந்த பகுதியின் மூன்றாவது தளத்திற்க்கு மின்தூக்கியின் மூலம் அவளை அழைத்து சென்றவன்.

அங்கிருந்த வீட்டில் தன்னிடம் இருந்த சாவியை வைத்து திறந்தவன் “வலது கால் எடுத்து வச்சு உள்ளே வா” என்று அவன் கூற அவள் வேண்டுமென்றே இடது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்.

‘இதுக்கு பேசாம வாய மூடிட்டே இருந்துருக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்றான்.

நந்தினி சுற்றி முற்றி பார்த்து கொண்டே வந்தாள் ஒரு ஹால் படுக்கையறையுடன் குளியலறையும் இருந்தது சிறிய சமையலறை
இருவர் வசிக்க போதுமான வீடு‌.

பால்கனியின் கதவை புகழேந்தி திறந்து வைக்க வெளி காற்று நன்றாகவே உள்ளே வந்தது வீடு ஒரளவிற்க்கு சுத்தமாக தான் இருந்தது.

“இது உண்மையாவே உன் வீடு தானா” என்றாள் நந்தினி கேள்வியுடன் அவனை பார்த்து கொண்டே “ஆமா எங்க அப்பாவும் அம்மாவும் இங்க இருக்க சொந்தக்காரங்க விசேஷம்ன்னு இங்கே வந்தா தங்குவதற்க்காக வாங்குன வீடு” என்றான்.

பின் இருவருமாக சேர்ந்து வீட்டை சுத்தம் செய்ய நந்தினிக்கு குமட்டிக் கொண்டு வர புகழேந்தி அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தான்.

ஊரில் மைனர் போன்று ஊர் சுற்றி கொண்டிருப்பவன் இங்கே வீட்டை பெருக்கி சுத்தம் செய்து
பாத்திரம் கழுவி வைத்துக் கொண்டு இருந்தான்
சுத்தம் செய்து முடித்து உடை மாற்றியவன் “நான் கீழ போய் சாப்பிட எதாச்சும் வாங்கிட்டு வரேன்” என்று கூறிவிட்டு கீழே கிளம்பினான்.

அவன் வாங்கி வருவதற்க்குள் நந்தினி சென்று குளித்து முடித்து மெலிதான ஷிபான் புடவை ஒன்றை கட்டி கொண்டு வெளியே வந்தாள்.

அவள் கையில் பால் பாக்கெட்டை கொடுத்தவன் “பால் பிரட் மட்டும் தான் கீழே இருந்துச்சு நைட் எதாச்சும் வாங்கிக்கலாம்” என்றவன் தான் அணிந்திருந்த டீ ஷர்ட்டை கழட்டிவிட்டு கையில்லா பனியன் மற்றும் வேஷ்டியுடன் சென்று சோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தான்.

நந்தினி சமயலறையில் பாலை காய வைத்து கொண்டு இருக்கும் போது தண்ணீர் குடிப்பதற்க்காக உள்ளே வந்தான் புகழேந்தி.

அவனை பார்த்தவள் பனியன் வேஷ்டி மட்டும் அணிந்து இருக்க
அவனை பார்க்க கூச்சப்பட்டு கொண்டு தலைகுனிந்து நின்றவள் அவன் பார்க்கிறானா என பார்க்க அவன் தண்ணீரை பருகி கொண்டு இருக்க அவனுக்கு தெரியாமல் அவனை பார்க்க ஆரம்பித்தாள் இன்று தான் நன்றாக கவனித்து பார்க்கிறாள் தன் கணவனை
கார்குழல் கண்ணனின் நிறம் அவன், வில் போன்ற வளைந்த புருவங்கள், விசாலமான நெற்றி
அகன்ற மார்பு, நித்தம் தேக பயிற்சி செய்வான் போல கட்டுமஸ்தான உடல்,கன்னக்குழி, தோதான உயரம், அடர்ந்த மீசை என அவன் அழகை பருகி கொண்டே நின்றிருக்க திடீரென திரும்பிய புகழேந்தி ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி “என்ன” என்க அவள் எதுவும் கூறாமல் தலை குனிந்து கொண்டாள்.

அவளை பார்த்துக் கொண்டே அவள் அருகில் வந்தான் புகழேந்தி அவள் பின்னே வந்து நின்று அவள் வெற்று இடையின் இடைவேளையில் கை நுழைத்தான்
தன் இடையுடன் சேர்த்து அவள் இடையை இறுக்கி பின்னோடு அணைத்தவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து எச்சில் முத்தங்களை கொடுத்து கொண்டே அவளை தன் புறம் மெல்ல திருப்பினான் அவள் இதழை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான் நந்தினி அந்த முத்தத்தில் லயித்து இருக்க.

“ஏய் பால் பொங்குது பாரு டி” என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க புகழேந்தி தண்ணீர் சொம்புடன் நின்றிருந்தான் அடுப்பில் இருந்த பால் மொத்தமும் பொங்கி வழிந்து கீழே ஊற்றி கொண்டு இருந்தது.

அவள் அருகில் வந்தவன் அடுப்பை அணைத்துவிட்டு அவள் தலையில் கொட்டியவன் “கனா காணாமல் அடுப்பை பாரு” என்றவன் சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.

‘கனவா’ என்று மனதில் நினைத்தவள் ‘அவன பார்த்ததை கண்டு பிடிச்சிருப்பானோ
நல்லா செக்ஸி லேடி மாறி முன்னாடி வந்து நின்னா பார்க்க தான் செய்வாங்க’ என்று நினைத்து கொண்டே வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

நந்தினி தன்னையே அறியாமல் தன் கணவன் மேல் காதல் வயப்பட்டிருந்தாள் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தான் அவள் இல்லை‌.

***************

வெண்ணிலா தன் தலைவனை பிரிந்து பசலை நோயில் வாட ஆரம்பித்திருந்தாள் சரியாக உண்ணாமல் தூங்காமல் ஒரு நாளில் 24 மணி நேரமும் தன்னவனை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தாள்.

அன்றும் அப்படித்தான் மேலே தன் அறையில் இருந்து வெளியே வந்தவள் தன்னவனை நினைத்து கொண்டே படிகட்டில் நடந்து வந்து கொண்டிருந்தாள்
சரவணன் நினைவில் நடந்து வந்தவள் அடுத்த படிகட்டில் அடி வைக்கும் முன் இரண்டு படிக்கட்டுகளை தாண்டி கால் வைத்துவிட்டாள்.

அவள் கால் வைத்தவுடன் நிலை தடுமாறி கீழே விழுந்திருந்தாள் சமாளித்து எழுந்துவிடலாம் என்று அவள் நினைக்கும் போதே உருண்டு கடைசி படிகட்டில் விழுந்தவள் தலையில் அடிப்பட்டு அப்படியே மயங்கி இருந்தாள்
ஈஸ்வரி-வேலாயுதமும் வெளியே சென்றிருந்தனர் அதனால் வெண்ணிலா கீழே விழுந்து கிடப்பது யாருக்கும் தெரியவில்லை.

கடையில் அமர்ந்து இருந்த சரவணனுக்கு தன் மனைவியை பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்றி கொண்டே இருக்க ‘போலாமா வேண்டாமா’ என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான்.

ஒருவழியாக என்ன நடந்தாலும் பரவாயில்லை போலாம் என்று முடிவு செய்தவன் ஆன்டிப்பட்டிக்கு தனது பைக்கை எடுத்துக் கொண்டு சென்றான்.

சரியாக பதினைந்து நிமிடத்தில் அங்கே போய் சேர்ந்தவன்
வெண்ணிலாவின் வீட்டு வாசலில் தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்தான்.

பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு உள்ளே சென்றவன்
‘யாரையும் காணும்’ என்று தேடிக் கொண்டே உள்ளே வந்தவன்
அங்கே படிகட்டில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த வெண்ணிலாவை பார்த்தவனுக்கு ஒரு கணம் இதய துடிப்பே நின்றுவிட்டது.

கண்கள் கலங்க அவள் அருகில் ஓடியவன் அவளை தூக்கி தன் மடியில் வைத்து கன்னத்தில் தட்டி எழுப்ப முயற்சி செய்ய அவள் எழுந்து கொள்ளவில்லை என்றவுடன் வெண்ணிலாவை தூக்கி கொண்டு வெளியே ஓடியவன் அங்கே நின்றிருந்த காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

வெண்ணிலா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வெளியே பதட்டத்துடன் நின்றிருந்தான் சரவணன்.

தன் வாழ்க்கையில் எதற்க்கும் கலங்காதவனின் கண்களில் இருந்து கண்ணீர் கரை புரண்டு ஓடி கொண்டு இருந்தது.

சிறிது நேரம் கழித்து வெண்ணிலாவின் பெற்றோர் வீட்டிற்க்கு வர அக்கம் பக்கத்தினர் விஷயத்தை கூற அடித்து பிடித்து கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

சரவணன் அருகில் சென்ற வேலாயுதம் “மாப்ள என் பொண்ணு எப்படி இருக்கா” என்று கண்கள் கலங்க கேட்க
அவரை எரிப்பது போல பார்த்துவிட்டு திரும்பி கொண்டான் அவன்.

மருத்துவர் வெளியே வர அவர் அருகில் சென்ற சரவணன் “என் மனைவி எப்படி இருக்கா டாக்டர் அவள் கர்ப்பமா வேற இருக்கா” என்றான் குரல் நடுங்க
“சாரி சார் அவங்களுக்கு மிஸ்கரேஜ் ஆகிருச்சி பேபிய எங்களால காப்பத்த முடியல அவங்க இப்போ மயக்கத்தில் இருக்காங்க ஒரு மணி நேரத்துக்கு பிறகு போய் பாருங்க” என்று கூறிவிட்டு செல்ல சரவணன் இடிந்து போய் அப்படியே நாற்காலியில் அமர்ந்தான்.

தொடரும்….
 
அத்தியாயம் 19

“அப்போவே சொன்னனே கேட்டியா டி புள்ளத்தாச்சி பிள்ளைய தனியா விட்டுட்டு போக வேண்டாம்ன்னு பாவி பாவி” என்று கூறிக் கொண்டே வேலாயுதம் ஈஸ்வரியை அடிக்க “அய்யோ தெரியாம பண்ணிட்டேங்க
இப்படி ஆகும்ன்னு எனக்கு எப்படிங்க தெரியும் ” என்று அவர் அழுது கொண்டே கூற இவர்கள் இருவரும் கதறுவதை பார்த்த சரவணனுக்கு கோபம் அதிகரித்தது
“இரண்டு பேரும் கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இருக்கிங்களா” என்று சரவணன் அந்த இடமே அதிரும் படி கத்தினான் அதில் இருவரும் அரண்டு போய் அமைதியாக நின்று கொண்டனர்.

சரவணனுக்கு வெண்ணிலாவின் பெற்றோரை பார்க்க பார்க்க கோபம் அதிகரித்தது அவர்களை கொன்றுவிடும் அளவுக்கு ஆத்திரம் வந்தாலும் அதை அடக்கி கொண்டு அமைதியாக நின்றிருந்தான்
வெண்ணிலாவை பற்றி நினைத்தவனுக்கு இன்னும் கோபம் அதிகரிக்க ஆரம்பித்தது.

‘அப்போவே என் கூட வர சொன்னனே கேட்டாளா’ என்று மனதில் அவளை திட்டி கொண்டு இருந்தான் தன் குழந்தையை பற்றி என்ன என்னவோ கனவு கண்டிருந்தான் அவையெல்லாம் இன்று சுக்கு நூறாகி இருந்தது.

கண்கள் கலங்க நின்றிருந்தான் குழந்தையை பற்றி நினைத்து வருந்தியவன் ஏனோ தன் மனைவியை பற்றி நினைக்க மறந்திருந்தான்.

ஒரு மணி நேரம் கழித்து வெண்ணிலா கண்விழிக்க அனைவரும் அவளை பார்க்க உள்ளே சென்றனர் அங்கே வெண்ணிலா
வாடிய மலராக உடல் மெலிவுற்று
சோர்ந்த முகத்துடன் படுத்திருந்தாள்
அவளின் பெற்றோர் அழுது கொண்டே உள்ளே வர அவளின் கண்கள் என்னவோ தன்னவனை தான் தேடியது.

அவளின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அவர்கள் பின்னே உள்ளே நுழைந்தான் அவள் கணவன்
வெண்ணிலாவின் அருகில் ஓடிய
ஈஸ்வரி “என்னை மன்னிச்சிடு பாப்பா எனக்கு இப்படி ஆகும்ன்னு தெரியாது” என்று அவள் கையை பிடித்து கதற
வேலாயுதமும் அவர் அருகில் கண்கள் கலங்க நின்றிருந்தார்.

தன் கணவன் எதுவும் பேச மாட்டானா என்று நினைத்தவள் அவனையே ஏக்கத்தோடு பார்க்க
அவள் அருகில் கோபத்துடன் சென்ற சரவணன் “ஏன் டி பைத்தியக்காரி அப்போவே சொன்னனே என் கூட வான்னு கேட்டியா இன்னைக்கு உங்களால என் புள்ளைய பறிகொடுத்துட்டு வந்து நிக்குறேன்
இப்போ நீயும் உன் குடும்பமும் நிம்மதியா இருப்பிங்க தான எனக்கு வர கோவத்துக்கு உங்க எல்லாரையும் வெட்டி வீசிட்டு போய்டனும்னு தோனுது ஹாஸ்பிட்டல் ஆச்சேன்னு பார்க்குறேன் இல்ல உன்னை என்ன பண்ணிருப்பன்னே தெரியாது” என்க படுத்திருந்தவள் அவனை பார்த்து கண்கள் கலங்க.

“ஹலோ சார் பெஷன்ட் கிட்ட ஏன் இப்படி கத்துறிங்க முதல்ல எல்லாரும் வெளிய போங்க” என்று செவிலி பெண் திட்டி இவர்களை வெளியே அனுப்பி விட சரவணன் அவளை முறைத்து கொண்டே வெளியே சென்றான் அங்கே படுத்திருந்த வெண்ணிலாவுக்கோ அழுகையாக வந்தது தன் கணவன் தன்னை பற்றி எதுவும் கேட்கவில்லையே ஆறுதலாக ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்று தன்னை திட்டிவிட்டு சென்றவனின் அன்புக்காக ஏங்கி கொண்டு இருந்தாள்.

ஒரு காதல் என்ன செய்யும் தன் கணவன் தன்னை அடித்து திட்டி துன்புறுத்தினாலும் கூட “என் புருஷன் என்னை அடிப்பான் உங்களுக்கு என்ன” என்று தன்னை வளர்த்த பெற்றோரையே எதிர்த்து பேச வைக்கும்
இதுவெல்லாம் எம்மாத்திரம் தன் கணவன் மீதான காதல் பித்தில் அவன் அன்பிற்க்கு ஏங்கி கொண்டிருந்தாள் வெண்ணிலா.

வெளியே வந்தவுடன் “மாப்பிள்ளை” என தயங்கி கொண்டே வேலாயுதம் ஏதோ பேச வர அவரை திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தான் அதில் பயந்து அமைதியாக நின்று கொண்டார்.

அன்று மாலையே வெண்ணிலாவை டிஸ்சார்ஜ் செய்ய அவளை கை பிடித்து அழைத்து கொண்டு வெளியே வந்தார் ஈஸ்வரி
“என் பொண்டாட்டிய என் கூட அனுப்பி வைங்க” என்று அவரிடம் சரவணன் கூற “மாப்பிள்ளை அவளுக்கு இன்னும் உடம்பு சரி ஆகல அவள் கொஞ்ச நாள் எங்க கூடவே இருக்கட்டுமே” என்றார் லட்சுமி பாவமாக முகத்தை வைத்து கொண்டு.

“போதும் உங்களால நான் பட்ட வரைக்கும் போதும்
நீ என் கூட வருவியா மாட்டியா டி
இல்லை உங்க அம்மா வீட்டுலயே இருந்துக்கோ நான் கிளம்புறேன்” என்றான் அவன் அவளை பார்த்து கொண்டே
“அம்மா நான் அவர் கூடயே போறேன்” வெண்ணிலா தயங்கி கொண்டே கூற அவளை பாவமாக பார்த்தார்
ஈஸ்வரி‌.

“பாப்பா கொஞ்ச நாள் நம்ம வீட்டில் இருந்துட்டு போ டா” என்றார் வேலாயுதம்
“இல்லை பா நான் கிளம்புறேன்”
என்றாள் அவள் கண்கள் கலங்க
“மாப்பிள்ளை வெண்ணிலா துணிமணி எல்லாம் வீட்ல இருக்கு” என்று தயங்கி கொண்டே அவள் தாய் கூற
“என் பொண்டாட்டிக்கு துணி வாங்கி கொடுக்க கூட முடியாம தான் நான் இருக்கனா” என்று அவரை முறைத்து கொண்டே கூறியவன் வெண்ணிலாவை அழைத்து கொண்டு காரில் தன் வீட்டிற்க்கு செல்ல அவளையே பார்த்துக் கொண்டே நின்றிருந்தனர் அவள் பெற்றோர்.

தன் வீட்டு வாசலில் ஏதோ வேலை
செய்து கொண்டு இருந்த லட்சுமி வாசலில் கார் வந்து நிற்க யாரு என்று பார்த்து கொண்டே நின்றார் காரிலிருந்து சரவணன் இறங்க அவன் கையை பிடித்து கொண்டு வெண்ணிலாவும் இறங்க
அதை பார்த்தவர் தலையில் இடியே விழுந்ததை போல முகத்தை வைத்து கொண்டார்.

வெண்ணிலாவின் கையை பிடித்து அழைத்து கொண்டு அவன் உள்ளே வர “நில்லுங்க யார கேட்டு அவள இங்க கூட்டிட்டு வந்த” என்றார் லட்சுமி.

“யார கேட்கனும் இது என் வீடு” என்றான் சரவணன்
“ஒஹோ இது என் புருஷன் கட்டுன வீடு பா கண்ட கண்டது எல்லாம் தங்கிட்டு போக இது ஒன்னும் சத்திரம் இல்லை”
“வார்த்தைய பார்த்து பேசுங்க அவள் என் பொண்டாட்டி” என்றான் அவன் கோவத்துடன்
சத்தம் கேட்டு குணசேகரன் வெளியே வர “என்னங்க பார்த்திங்களா எப்படி பேசுறான்னு என்னத்த போட்டு மயக்குனாளோ” என்று கத்தி கதற
“லட்சுமி சும்மா இரு நீ உள்ளே வா மா” என்று அவர் அழைக்க
அவளை அணைவாக பிடித்து அழைத்து கொண்டு உள்ளே வந்தான் சரவணன்.

அவளை தன் அறைக்கு அழைத்து செல்ல அவர்களையே பார்த்து கொண்டு நின்றிருந்தார் லட்சுமி
‘எவ்வளவு தைரியம் நீ எப்படி இந்த வீட்டில் வாழறன்னு பாக்குறேன் டி’ என்று மனதில் நினைத்து கொண்டார்.

லட்சுமி ஒன்றை மறந்துவிட்டார் தனக்கும் ஒரு மகள்
இருக்கிறாள் என்பதை.

தொடரும்…
 
Last edited:
அத்தியாயம் 20

புகழேந்தி நந்தினியுடன் ஒரு தனி குடும்பமே நடத்திக் கொண்டிருந்தான் தினமும் காலையில் அவளை கல்லூரிக்கு சென்று விடுவது அவளை அழைத்து வருவது அவளுக்கு மூன்று வேளைக்கும் சமைத்து தருவது என முழு பொண்டாட்டி தாசனாகவே மாறியிருந்தான்.

அவளை கல்லூரியில் சென்று விடுவதற்காகவே கார் ஒன்றை வாங்கி இருந்தான்
தன் மனைவியை கல்லூரியில் விட்டு வீட்டிற்க்கு வந்தவுடன் பக்கத்து வீட்டு ஆண்டிகளுடன் கடலை போடுவது என நிம்மதியாக வாழ்க்கையை கழித்துக் கொண்டு இருந்தான்
தன் வீட்டில் இருந்து யாராவது அலைபேசியில் அழைத்தால் அதை கூட எடுக்காமல் தனி உலகில் வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஊரில் மைனர் போன்று திமிராக யாருக்கும் அடங்காமல் ஆணவத்துடன் சுற்றி கொண்டிருந்த புகழேந்தி தான் இது என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் அவனுள் அப்படி ஒரு மாற்றம்.

புகழேந்தியுடன் வந்த மறுநாள் காலை கல்லூரிக்கு செல்லும் போது நந்தினியை மாணவ மாணவியர்களும் பேராசிரியர்களும் அவளை ஏளன பார்வையோடு பார்க்க அதை எதையும் அவள் கண்டு கொள்ளவே இல்லை.

தன்னுடன் எப்போதும் அமரும் அக்ஷயா தன்னை விட்டு வேறு ஒரு மாணவியுடன் அமரும் போது தான் அவளுக்கு மனது வலிக்க செய்தது அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன் படிப்பில் கவனம் செலுத்தினாள்.

இந்த இடைப்பட்ட நாளில் நந்தினியும் புகழேந்தியும் மனதளவில் நெருங்கி இருந்தனர்.

அன்றும் அப்படித்தான் காலை நந்தினி கல்லூரிக்கு கிளம்பி கொண்டு இருக்க “இந்த ஒரு வாய் மட்டும் வாங்கிக்கோ டி” என்று அவள் பின்னே சுற்றி அவளுக்கு காலை உணவை கெஞ்சி கொஞ்சி ஊட்டி கொண்டிருந்தான் அவள் கணவன் ஒரு வழியாக அவளுக்கு சாப்பாட்டை ஊட்டி முடித்து கல்லூரியில் விட்டவன்
வீட்டிற்க்கு வந்து சேர்ந்தான்.

நந்தினிக்கு அன்று அரைநாள் மட்டுமே வகுப்பு இருந்ததாள் தானே ஆட்டோ பிடித்து வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள்.

அவள் வீட்டின் வாசலில் காலணிகளை கழட்டும் போது உள்ளே ஒரே சிரிப்பு சத்தம் கேட்க கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் அங்கே புகழேந்தி சீட்டு கட்டுடன் அமர்ந்து இருக்க அவனை சுற்றி பக்கத்து வீட்டு பெண்கள் கூட்டம்
ஏதோ பேசி சிரித்து கொண்டு இருந்தனர் அதை பார்த்தவளுக்கு கோபம் தலைக்கேறியது பார்த்து கொண்டே உள்ளே வந்தவள் தனது பேக்கை தொப்பென்று கீழே போட அவள் வந்ததை பார்த்து அனைவரும் வெளியே சென்றனர்.

அவர்கள் சென்றவுடன் கதவை அடைத்து தாழிட்டவள் அவன் முன்னே கையை கட்டிக் கொண்டு முறைத்துக் கொண்டே நின்றிருந்தாள் “என்ன இவ்வளோ சீக்கிரமா காலேஜ்ல இருந்து வந்துட்ட சொல்லவே இல்லை” என்று அவன் சிரித்து கொண்டே சமாளிக்க
“சீக்கிரமா வந்தா தான நீ என்ன எல்லாம் பண்றன்னு தெரியுது” என்று அவனை பார்த்து முறைத்து கொண்டே கூற.

“ஏதோ டென்ஷனா இருக்க போல இரு காபி போட்டு எடுத்து வரேன்” என்று அவன் உள்ளே செல்ல அவன் கையை பிடித்து தடுத்தவள் “பதில் சொல்லிட்டு போ டா” என்க “என்ன சொல்லனும்?”
“எதுக்காக இந்த ஆண்டிஸ் எல்லாரையும் கூட்டி வச்சு கூத்தடிச்சிட்டு இருக்க” என்றாள் மிரட்டலாக
“ஏய் அவங்க எல்லாம் எனக்கு அக்கா மாறி டி” என்றான் தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு அவன்
“அக்காவா யாரா வேணும்னாலும் இருக்கட்டும் வீட்டுக்குள்ள வந்தாங்க நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் பார்த்துக்கோ” என்று கூறிவிட்டு படுக்கை அறையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

ஏனோ அவன் மற்ற பெண்களிடம் பேசினால் இவளுக்கு இங்கே எரிய ஆரம்பித்தது
பொறாமை பட ஆரம்பித்து இருந்தாள் தன்னவன் தனக்கு தான் என்று உரிமை கொண்டாட ஆரம்பித்திருந்தாள்.

உடை மாற்றி விட்டு வந்தவள் அதே கோபத்துடன்
டீ போட பாலை எடுத்து அடுப்பில் வைத்தாள் பால் கொதித்தவுடன் வடிகட்ட அடுப்பில் இருந்து இறக்கும் போது ‘அவன் யார் கூட பேசுனா எனக்கு என்ன’ என்று மனதில் நினைத்து கொண்டே ஊற்றியவள் கவனம் பாலில் இல்லாமல் சூடான பாலை தன் கையில் முழுதாக ஊற்றி இருந்தாள் அதில் அவள் அலறி துடித்து கத்த ஆரம்பித்தாள்
அவள் அழு குரல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஹாலில் இருந்து ஓடி வந்த புகழேந்தி அவள் கையை பார்க்க வலது கையின் மேல் இருந்த சதை பகுதி தோல் உறிந்து வெந்து இருந்தது பால் கீழே கொட்டி கிடந்தது.

அதை பார்த்தவன் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்றவன் காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் வரும் வழியெல்லாம் அவள் வலியில் துடிக்க “உன்னை எவன் டி பால் வைக்க சொன்னான்” என்று கோவத்தில் அவளை திட்டிக் கொண்டே காரை செலுத்தினான்.

மருத்துவமனைக்கு அழைத்து சென்று காயத்தை காட்ட மருத்துவர் அவளை பரிசோதித்து விட்டு “என் சார் பிரக்னன்ட்டா வேற இருக்காங்க ஒழுங்கா பார்த்துக்க கூட மாட்டிங்களா
காயம் குணமாக ஒரு மாசம் ஆகும் அதுவரை அவங்கள கவனமா பார்த்துக்கோங்க” என்று புகழேந்தியை திட்டி அனுப்பி வைத்தார்.

வீட்டிற்க்கு அழைத்து வந்தவன்
அவளை அமர வைத்துவிட்டு சமைக்க சென்றான் சமைத்து எடுத்து வந்து
சாப்பாட்டை ஊட்டி விட அவள் அழுது கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள் “என்னாச்சி ஏன் அழற டி வலிக்குதா?”
“என்னால தான நீ திட்டு வாங்குன சாரி டா” என்க
“அதெல்லாம் ஒன்னும் இல்லை சாப்பிடு” என்று அவளுக்கு உணவை ஊட்டி விட்டான்.

மறுநாள் காலை கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு வீட்டில் இருந்தாள் நந்தினி அவளால் எந்த வேலையும் செய்ய முடியாமல் கஷ்டப்பட பல் துளக்க சாப்பிட அனைத்திற்க்கும் அவள் கணவனே உதவி செய்ய
கை வலி வேறு அவளை பாடாய் படுத்தி எடுத்தது
கஷ்டப்பட்டு அவள் குளிக்க செல்லும் போது அவளுடன் புகழேந்தியும் உள்ளே நுழைந்தான் “ஏய் நீ எதுக்கு இப்போ என் கூட வர?” என்று நந்தினி பயந்து கத்த
புகழேந்தியின் முகம் சோர்ந்து விட்டது.

“நான் ஒன்னும் உன் கூட கட்டி பிடிச்சு கபடி ஆட வரல நீ குளிக்க உதவி பண்ண தான் வந்தேன்”
என்க
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ போ” என்று அவள் கூச்சபட அதை எதையும் காதில் வாங்காமல் அவள் உடையை கலைந்தவன் அவளை குளிக்க வைத்தான் அவனோ கடமையே கண்ணாக வேலை செய்ய இவள் தான் வெட்கப்பட்டு முகம் சிவக்க நின்றிருந்தாள்‌
குளித்து முடித்து உடை மாற்றும் சமயம் தனது டி ஷர்ட் ஒன்றை போட்டுவிட்டவன் “இது தான் கழட்டி மாட்ட ஈசியா இருக்கும் இதையே போட்டுக்கோ” என்றவன் வெளியே சென்றுவிட்டான்.

அவளோ அவன் முகம் பார்க்க கூட தயங்கி கொண்டு ஏதோ புதிதாக திருமணம் ஆன பெண்ணை போல வெட்கப்பட்டு கொண்டு நின்றிருந்தாள் முதல் முறையாக அவனின் தொடுதல் அவளுக்கு வெட்கத்தை வரவழைத்தது.

இதுவரை அவனிடம் தோன்றாத உணர்வுகள் எல்லாம் தோன்ற ஆரம்பித்தது அவனை கட்டி அணைத்து முத்தமிட தோன்றியது.

காதல் அழகானது ஆச்சரியப்பட
வைப்பது காதலுக்கு இவன் அழகானவன் அகோரமானவன் என்று பார்க்க தெரியாது இருவரையும் ஒரு சேர காதலிக்க வைப்பது
காதல் வெறும் அன்பை மட்டுமே சார்
ந்தது அல்ல காமத்தின் தொடக்கமே காதல் தானே.

தொடரும்….
 
அத்தியாயம் 21

சரவணன் இல்லம்.

வெண்ணிலா இங்கே வந்த நாளில் இருந்து அவளுக்கு சாப்பாடு,மாத்திரை மருந்துகள் கொடுப்பது என அனைத்தையும் சரவணனே கவனித்துக் கொண்டான் ஆனால் அவளிடம் மருந்துக்கு கூட ஒரு வார்த்தை பேசவில்லை.

அவனுக்கு வெண்ணிலாவின் மீது கோபம் மட்டுமே நிலைத்து இருந்தது தான் சொல்லியும் கேட்காமல் அவள் தாய் வீட்டில் இருந்ததாள் தான்
தன் குழந்தைக்கு இப்படி ஆனது என்று நினைத்துக் கொண்டு இருந்தான்,
அவளும் அந்த குழந்தைக்கு தாய் தானே
இவனுக்கு இருக்கும் அத்தனை வலியும் அவளுக்கும் இருக்கும் என்பதை ஏனோ மறந்து போனான்.

காலையில் அவளுக்கு உணவு மாத்திரைகளை கொடுத்துவிட்டு கடைக்கு கிளம்பி விடுவான் மீண்டும் இரவு தான் வீட்டிற்க்கு வந்து சேர்வான் இந்த இடைப்பட்ட
நேரத்தில் வெண்ணிலாவை வார்த்தையால் நோகடிப்பதையே வழக்கமாக வைத்திருந்தார் லட்சுமி.

அன்றும் அப்படித்தான் பக்கத்து விட்டு பெண்மணி ஒருவர் ஏதோ பொருள் வாங்க சரவணன் வீட்டிற்க்கு வந்திருக்க இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர் அந்த நேரம் பார்த்து சமயலறைக்கு வெண்ணிலா ஏதோ எடுக்க வர அவளை பார்த்த அந்த பெண்மணி “ஆமா லட்சுமி உன் மருமகள் மாசமா இருக்கான்னு கேள்விப்பட்டேன்” என்க
“ம்க்கும் உனக்கு விஷயமே தெரியாதா அந்த புள்ளை கலைஞ்சிருச்சு” என்றார் லட்சுமி வெண்ணிலாவை ஏளனமாக பார்த்து கொண்டே
“அட பாவமே” என்று உச்சி கொட்டினார் அந்த பெண்மணி
“நீ எதுக்கு பாவம் பார்க்குற அது எவனோட புள்ளையோ என் பிள்ளை மேல பழிய போட்டுட்டா இந்த சண்டாளி அதான் கடவுளா பார்த்து அழிச்சிட்டாரு” என்றார் முகத்தை திருப்பி கொண்டு
“என்ன சொல்ற லட்சுமி”
“பின்ன என் மகன் ஒரு நாள் கூட இவள் கூட உருப்படியா குடும்பம் நடத்தல இரண்டு மாசம் கழிச்சி வருவாளாம் மாசமா இருக்கேன்னு அதுக்கு அப்பான்னு என் பையன காட்டுவாளாம் இது எந்த ஊரு நியாயம் அதான் கடவுளா பார்த்து கூலி கொடுத்துட்டாரு”
என்க “அப்படியா சேதி
நான் வாரேன் லட்சுமி வீட்ல சோளி கிடக்கு” என்று கூறி அந்த பெண்மணி கிளம்பி விட
இவர்கள் இருவரும் பேசியதை கேட்ட வெண்ணிலா கண்கள் கலங்க நின்றிருந்தாள்.

அவளை பார்த்து முகத்தை திருப்பி கொண்டு உள்ளே சென்ற லட்சுமியை பார்த்தவள் “அத்தை ஒரு நிமிஷம்” என்றாள்
“என்ன” என்றார் அவர் உர் என்று முகத்தை வைத்து கொண்டு
“நான் ஒன்னும் நடத்தை கெட்டவ கிடையாது என் வயித்துல இருந்தது அவரோட புள்ளை தான்
நீங்க என்ன வேணும்னாலும் பேசுவிங்க நான் அதை கேட்டுட்டு சும்மா இருக்கனுமா வார்த்தைய அளந்து பேசுங்க” என்றாள் கோவத்துடன்.

தன்னை ஒழுக்கமற்றவள் என்று ஒருவர் தன் கண் முன்னே சொல்வதை எந்த பெண்ணால் தான் பொருத்து கொள்ள முடியும்.

“என்ன டி பண்ணுவ உன்னால என்ன பண்ண முடியும்” என்று அவர் கையை ஓங்கி கொண்டு வர
அவரின் கையை பிடித்து தடுத்தாள் வெண்ணிலா
“என் கையையே பிடிக்கிறியா” என்றவர் கோவத்துடன் அவளை பிடித்து சுவற்றில் வேகமாக தள்ளி விட்டார்.

அதில் வெண்ணிலாவின் தலை சுவற்றில் மோதி ரத்தம் வர ஆரம்பித்தது அவள் என்னவென்று உணரும் முன்னே அவள் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்து சென்று வாசலில் தள்ளினார் லட்சுமி.

சத்தம் கேட்டு வெளியே வந்த குணசேகரன் “ஏய் என்ன டி பண்ணிட்டு இருக்க பாவம் டி அந்த பொண்ணு” என்க
“யாரு இவளா பாவம் என்னையே அடிக்க வரா தெரியுமாங்க” என்றார்
“மாமா நான் எதுவும் பண்ணல இவங்க தான் என்னை அடிச்சாங்க” என்று அழுது கொண்டே கூறினாள்
“இப்போ உன்னை அடிச்சதுக்கு என்ன பண்ணனும் அப்படியே எவன் கூடயாவது ஓடி போய்டு வீட்டுக்குள்ள வந்த கால ஒடச்சிருவேன்” என்று கூறி குணசேகரனையும் உள்ளே தன்னுடன் அழைத்து சென்று கதவடைத்தார்.

கதவை உள் பக்கமாக பூட்டி சாவியை எடுத்து கொண்டார் லட்சுமி “என்ன டி பண்ற அந்த பொண்ணு பாவம் டி” என்று அவரிடம் இருந்து சாவியை வாங்க பார்க்க
“என்னங்க நீங்க இதுல தலையிடாதிங்க என் புள்ள வாழ்க்கை நல்லா இருக்கனும்னு தான் நான் இதை பண்றேன்” என்று பேசிக் கொண்டு இருக்க சாவியை அவரிடம் இருந்து வேகமாக பிடுங்கினார் குணசேகரன் கதவை திறந்து கொண்டு வெளியே வர வெண்ணிலா அந்த இடத்தில் இல்லை.

வெளியே வந்த லட்சுமி ‘அப்பாடா ஒழிஞ்சா’ என்று மனதில் நினைத்து கொண்டார்
“லட்சுமி வெண்ணிலாவை காணும் டி” என்றார் குணசேகரன் பதறி கொண்டே அவர் கூறியதை எதையும் காதில் வாங்காமல் உள்ளே சென்றார் லட்சுமி.

‘அய்யோ இப்போ என்ன பண்றது’ என்று மனதில் நினைத்தவர் சரவணனை அலைபேசியில் அழைத்து நடந்தவை அனைத்தையும் கூறினார்.

அடுத்த பத்தாவது நிமிடம் சரவணன் அங்கே வந்து நின்றான் “அம்மா அம்மா” என்று கத்திக் கொண்டே உள்ளே வந்தவன் “வெண்ணிலா எங்கே அவளை என்ன பண்ணுன” என்றான் கோபத்துடன்‌.

“நான் ஒன்னுமே செய்யல டா உன் வயித்துல இருந்த குழந்தை யரோடதுன்னு கேட்டேன் அதுக்கு கோவப்பட்டு வீட்டை விட்டு போய்டா” என்றார் லட்சுமி.

“நீயெல்லாம் ஒரு தாயா அது என் புள்ளை தான் எப்படின்னு தான கேட்க்குற இந்த இரண்டு மாசமா ஒவ்வொரு நாள் ராத்திரியும் இங்கே வராம அவள் கூட தான் குடும்பம் நடத்திட்டு இருந்தேன் போதுமா விளங்குச்சா எனக்கு வர கோவத்துக்கு உன்னை அப்படியே” என்று லட்சுமியின் கழுத்தை நெறிப்பதை போல சென்றவன்
“வந்து உன்னை கவனிச்சிக்கிறேன்” என்று கூறிவிட்டு தன் மனைவியை தேடிச் சென்றான்.

‘என்ன இவன் இப்படி பேசிட்டு போறான் போய்ட்டு வந்து அடிச்சிருவானோ’ என்று மனதில் நினைத்துக் கொண்டே நின்றிருந்தார் லட்சுமி.

தனது பைக்கை எடுத்தவன் அசுர வேகத்தில் ஆண்டிப்பட்டிக்கு சென்றான் வெண்ணிலா வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே ஓடியவன் ஒவ்வொரு அறையாக “வெண்ணிலா வெண்ணிலா” என்று கத்திக் கொண்டே தேட
அவள் எங்கேயும் இல்லை
சத்தம் கேட்டு வெளியே வந்த ஈஸ்வரி “என் பொண்ணு எங்கே அவள என்ன பண்ணுன” என்று அவன் பின்னே கத்தி கொண்டே ஈஸ்வரி வர அவருக்கு பதில் கூறாமல் ‘இங்கேயும் இல்லை எங்கே போய்ருப்பா’ என்று மனதில் நினைத்து கொண்டே வெளியே வந்து தனது பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றான்.

தேடி தேடி கலைத்தவன் இரவாகி விட ஒரு இடத்தில் சோர்ந்து போய் ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தான்
அப்போது அவனை தாண்டி சென்ற இரு வாலிபர்கள் “மச்சி அங்க செம்ம ஃபிகர் ஒன்னு நிக்குது டா நீ நவீனுக்கு போன் பண்ணி வர சொல்லு” என்று பேசிக் கொண்டே செல்ல ஒரு வேளை அது வெண்ணிலாவா இருக்குமா என்று நினைத்தவன் தன் பைக்கை எடுத்து கொண்டு முன்னே சென்று பார்க்க அங்கே சுற்றிலும் வயல்வெளி இருக்க தூரத்தில் அந்த பெண் நடந்து சென்று கொண்டிருந்தாள் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஓடியவன் அருகில் சென்றவுடன் தான் அது வெண்ணிலா என்று தெரிந்தது.

“வெண்ணிலா வெண்ணிலா” என்று கத்திக் கொண்டே அவள் பின்னே ஓடினான் அவன் அருகில் வருவதற்க்குள் அங்கே கிணறு ஒன்று இருக்க அந்த கிணற்றில் குதித்துவிட்டாள் அவள்.

அவள் பின்னே ஓடி வந்த சரவணன் எதையும் யோசிக்காமல் அவனும் கிணற்றில் குதித்தான்
நீச்சல் அடித்து கொண்டு உள்ளே சென்று பார்த்தவன் வெண்ணிலாவை தூக்கி கொண்டு கரைக்கு ஏறி வந்து சேர்ந்தான்.

வெண்ணிலா மயங்கி கிடக்க அவள் வயிற்றில் அழுத்தி அவளுக்கு முதலுதவி செய்து தண்ணீரை வெளியே எடுத்தவன்
பதறி கொண்டே அவள் கை கால் எல்லாம் பரபரவென தேய்த்து விட்டான்.

சிறிது நேரம் கழித்து இருமி கொண்டே வெண்ணிலா மெல்ல கண்விழித்தாள் சரவணனை பார்த்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க சரவணன் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தான் “பைத்தியக்காரியா டி நீ கொஞ்ச நேரத்துல என் உயிரே போய்டுச்சி” என்றான்.

அவளோ அழுது கொண்டே
எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அவளை பார்த்தவன் “என்ன டி இது நெற்றியில காயம்” என்று தொட அவள் வலியில் “ஆஆ” என்று அவன் கையை தட்டி விட்டாள்.

“சரி வா ஒன்னுமில்லை வீட்டுக்கு போலாம் குளிர் அதிகமா இருக்கு” என்றவன் அவளை தன்னுடன் அழைத்து கொண்டு சென்றான்.

‘திரும்பவும் அதே வீட்டுக்கா’ என்று மனதில் நினைத்தவள்

எதுவும் பேசாமல் அவனுடன் சென்றாள்.


தொடரும்…
 
அத்தியாயம் 22


வண்டியில் ஏறியவுடன் வெண்ணிலாவின் கண்கள் கலங்கியது ‘நிம்மதியா வாழவும் விட மாட்டாங்க சாகவும் விட மாட்டாங்க’ என்று மனதில் நினைத்து அழுது கொண்டே வர

நேரே தன் வீட்டிற்க்கு வெண்ணிலாவை அழைத்து சென்றான் சரவணன்.


உள்ளே நுழையும் போது குணசேகரனும்-லட்சுமியும் அமர்ந்து இருக்க அவர்களின் முன்னே சென்றவன் “ என்னால இனி இந்த வீட்டில் இருக்க முடியாது நான் தோப்பு வீட்டுக்கு போறேன்” என்க


“என்ன டா சொல்ற அம்மா நீ இல்லாம எப்படி இருப்பேன்” என்றார் லட்சுமி கதறி கொண்டே.


“என் உயிரே என் பொண்டாட்டி தான் அவள் கஷ்டப்படுற இந்த வீட்டில் என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது இனி இந்த வீட்டுக்கு எப்பவும் வர மாட்டேன் நான் கிளம்புறேன்” என்று கூறியவனை பார்த்த வெண்ணிலாவின் கண்கள் கலங்கியது.


“அய்யோ அய்யோ ஊமைச்சி மாறி இருந்துட்டு என் புள்ளைய என் கிட்ட இருந்தே பிரிக்க பார்க்குறியா டி பாவி” என்று லட்சுமி கையை ஓங்கி கொண்டு

வெண்ணிலாவின் அருகில் வர அவரின் குறுக்கே வந்து கையை பிடித்து தடுத்தான் சரவணன் “என் பொண்டாட்டி மேல கையை வைக்கிற வேலையெல்லாம் வேண்டாம்” என்றவன் உள்ளே தன் அறைக்கு சென்றான் இருவருக்கும் தேவையான உடமைகளை எடுத்து வெளியே வந்தவன்

தன் மனைவியின் கையை பிடித்து வெளியே அழைத்து செல்லும் சமயம்


“நில்லு சரவணா எதுவா இருந்தாலும் பேசி சரி பண்ணிக்கலாம்” என்றார் குணசேகரன்

“அப்பா நீ வேணும்ன்னா உன் பொண்டாட்டிக்கு அடங்கி இரு என்னால இருக்க முடியாது நான் வரேன்” என்றவன் கிளம்பிவிட்டான்.


அவர்களையே பார்த்து கொண்டு நின்றிருந்த லட்சுமி “எப்படி என் புள்ளையை மயக்கி கூட்டிட்டு போறா பாருங்க” என்று அழுது கொண்டே கூற

“நீ பண்ணுனது தப்பு லட்சுமி எப்போ தான் நீயெல்லாம் திருந்த போறியோ” என்று கூற

“என் பிள்ளைங்க நல்லா இருக்கனும்ன்னு நினைச்சது தப்பா இனி எனக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான்

என் மகள் நந்தினி மட்டும் தான் ரோசக்காரி என் பேச்சை கேட்டு அவள் வாழ்க்கையையே தூக்கி போட்டுட்டு வந்தா எனக்கு அவள் ஒருத்தி போதும்” என்றார்.


லட்சுமி தன் மகளுக்காக இங்கே வீரவசனம் பேசிக் கொண்டு இருக்க அவளோ மேடிட்ட வயிற்றுடன் தன் கணவனுடன் பீச்சில் தண்ணீரில் ஆட்டம் போட்டு கொண்டிருந்தாள்.


கை காயம் சரி ஆகியதும் எங்கேயாவது வெளியே செல்லலாம் என்று கேட்டவுடன் புகழேந்தி நந்தினியை பீச்சுக்கு அழைத்து வந்திருந்தான்.


தண்ணீரில் விளையாடி முடித்து ஈர உடையுடன் தலை முடியெல்லாம் கலைந்து லேசாக மேடிட்ட வயிற்றுடன் தாய்மையின் பூரிப்பில் மூச்சு வாங்க அமர்ந்து இருந்தவளின் முகத்தை பார்த்தவனுக்கு காதலும் மோகமும் ஒரு சேர பொங்கியது

அதை எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் அவள் அருகில் அமர்ந்து இருந்தான் அவள் கணவன்.


தண்ணீரில் ஆடி கலைத்து அமர்ந்து இருந்தவள் “வீட்டுக்கு போலாமா” என்க அவனும் சரி என மந்திரித்து விட்ட கோழியை போல தலையை ஆட்டினான்.


நேரே காரில் சென்று அமர்ந்த உடன் சிட் பெல்ட்டை போட்டு விட அவள் அருகில் சென்றவன் ஒட்டி உரசி போட்டுவிட்டான் கைகள் அவள் வெற்று இடையில் பட திடீரென மின்னல் அடிக்க வெடுக்கென தன் கையை எடுத்து கொண்டான்.


நந்தினி அவன் மெல்லிய உரசலில் மயங்கி அப்படியே அமர்ந்து இருந்தாள்

வரும் வழியெல்லாம் தன் கணவன் தன்னை பார்க்காத போது பார்ப்பதும் அவன் திரும்பும் போது அவனை பார்க்காமல் வெளியே பார்த்து கொண்டும் கள்ளத்தனமாக தன் கணவனை ரசித்து கொண்டு வந்தாள்.


நேரே தங்கள் குடியிருப்புக்கு வர

மின்தூக்கியின் அருகில் சென்றவர்கள் பொத்தானை அழுத்த அது வேலை செய்யவில்லை வானம் இருட்டி வெளியில் ஏற்கனவே மழை பெய்து கொண்டிருக்க செக்யூரிட்டியை தேட அவரும் இல்லை என்றவுடன் இருவரும் படிக்கட்டின் வழியாக நடக்க ஆரம்பித்தனர்.


பாதி தூரம் சென்றிருப்பாள் நந்தினியால் நடக்க முடியாமல் தவித்து மூச்சிறைக்க நின்றிருந்தாள்.


நந்தினியை பார்த்த புகழேந்தி

அவளை அலேக்காக கையில் தூக்கி கொண்டு படிகட்டில் நடக்க ஆரம்பித்தான் அவன் இரும்பினை ஒத்த கரங்கள் அவளை தூக்கி கொண்டு நடக்க அவனுடைய திரண்ட புஜங்களை பார்த்து கொண்டே வந்தாள்

அவன் வெற்று மார்பு அதில் இருந்த தங்கச்சங்கிலியை பார்த்து கொண்டே வந்தவளுக்கு பழைய நினைவுகள் வர வெட்கத்தில் தலையை குனிந்து

கொண்டாள்.


அதற்க்குள் வீடு வந்து சேர தன்னிடமிருந்த சாவியை வைத்து திறந்து அவளை உள்ளே தூக்கி கொண்டே வந்தவன்

அவளை அப்படியே மடியில் வைத்து கொண்டு சோஃபாவில் அமர இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே நிலை குத்தி நின்றது.


அவள் கண்கள் அவனை வா என அழைப்பது போல் தோன்ற அவளின் சிவந்த இதழை பார்த்து கொண்டே அவளிடம் நெருங்கியவன் அவள் இதழில் தன் இதழை பதித்தான்.


அவன் கைகள் ஆங்காங்கே இடம் மாற அதில் தன்னை தொலைத்து கொண்டு இருந்தவள் முகத்தை பார்க்க அது கோவைப் பழம் போல சிவந்து இருக்க “ஏய் புள்ள உனக்கு சம்மதம் தானே” என்று அவள் காது மடல்களில் தன் இதழை உரசி கொண்டே கேட்க மோகத்தில் ஒலித்த அவன் குரலை கேட்டு இன்னும் கிரங்கி போனாள்.


அதை பார்த்தவனின் முகத்தில் இதழோரம் ஒர் வெற்றி புன்னகை

உடனே அவளை தன் கைகளில் அள்ளி கொண்டவன் பஞ்சு மெத்தையில் தன் ஆசையையும் மோகத்தையும் தன்னவளிடம் காட்டி கலைத்து போனான் இம்மி கூட அவளை விட்டு விலகாத உறவாடி கலைத்து தான் அவளிடமிருந்து விலகினான்.


இருவரும் அப்படியே உறங்கி விட காலை நந்தினியின் அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்க அதை எடுத்து காதில் வைத்தவள் மறுபுறம் என்ன கூறினார்களோ அதை கேட்டவளின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.


நன்றாக உறங்கி கொண்டு இருந்த புகழேந்தியை அடித்து எழுப்ப மெல்ல கண்விழித்தவன்

நந்தினி முகமெல்லாம் வேர்த்து விறுவிறுக்க அழுது கொண்டு இருப்பதை பார்த்தவன் “என்னாச்சி டி” என்க

“அம்மாவுக்கு” என்று தடுமாற

“என்னாச்சி டி” என்று அவளை உலுக்கி சுயநினைவுக்கு கொண்டு வர

“அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் டா” என்று திக்கி திணறி கூறி முடித்தாள்.


தொடரும்….

 
Top