எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

டீசர் பிறை தேடும் அழகே

NNK37

Moderator
பிறை தேடும் அழகே....


நாயகன் அர்ஜுன்
நாயகி ப்ரித்விகா


IMG-20231217-WA0021.jpg
டீசர்


"அர்ஜுன் என்ன காரியம் பண்ணி வச்சுருக்க...ச்சே மனுசனா நீ, உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?நாளைக்கு உனக்கு கல்யாணம் டா, இப்போ இந்த பொண்ணுக்கு என்ன பதில் சொல்றது?"கார்த்திகேயன் நிலைக்கொள்ள முடியாத கோவத்தில் சத்தம் போட, அவனோ பொறுமையாய் தன் கைவளைவில் படுத்திருந்தவளை மெத்தையில் படுக்க வைத்து விட்டு, எழுந்து தன் சட்டையை மாட்டியவன்,"சோ வாட்? அதுக்கு நான் என்ன பண்ணனும்?"என்று சற்று அழுத்தமாகவே கேட்டான்.


அவனின் விட்டேத்தியான பதிலில் நாளை அவனுடன் திருமணம் நடக்க இருந்த மணமகள் கீர்த்தி சத்தம் போட்டு அழ, அவளிடம் வேகமாய் திரும்பியவன் வாயில் கைவைத்து "ஸ்ஸ் சத்தம், மூச் சத்தம் வரக்கூடாது"என்று அதட்டியவனை அனைவரும் திகைத்து போய் பார்க்க,அவள் விழித்து விட்டாளோ என்று அவளின் புறம் திரும்பி பார்த்தவன் , ஒரே நொடி தான் அழுதபடி நின்று இருந்த கீர்த்தி உறங்கிகொண்டிருந்தவளின் முடியை பற்றி இழுத்து அவளின் கன்னங்களில் பளார் பளார் என அறைந்திருந்தாள் அவளின் திடிர் ஆவேசத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை.


அதேவேகத்தில் அவளின் கரம் பற்றி இழுத்தவன் கீர்த்தியின் கன்னத்தில் தன் கரங்களை இறக்கியிருந்தான். அவன் விட்ட அறையில் மயங்கியே இருந்தாள் அவள்.


அடிவாங்கிய பெண்ணவளோ மழலையாய் போல் உதட்டை பிதுக்கிக்கொண்டு என்ன காரணத்துக்காக அடிவாங்கினோம் என்றே தெரியாமல் விக்கி விக்கி அழ, அர்ஜுன் அவளை அருகே சென்றதும் "அச்சுனு அக்கா அடிச்சுட்டா வலிக்குது" என்று தேம்பிக்கொண்டே அவனை அணைத்துக்கொள்ள, அங்கிருந்த அனைவரும் முகம் சுளித்து திரும்பிகொண்டனர்.

.................................................அனைவரின் வெறுப்பிலும் சிலரின் வயித்தெரிச்சலிலும் ஒரு சில நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதத்துடனும் அர்ஜுன் மனமெங்கும் வியாபித்த மகிழ்வுடன் முகம் முழுக்க பூரிப்புடன் தன்னவளின் கழுத்தில் தாலி கட்டியிருந்தான்.


கார்த்திகேயன் வெறுப்புடன் மகனை பார்த்துக்கொண்டு நிற்க,அவர் அருகில் வந்த அவரின் தொழில்முறை நண்பர் "என்ன மிஸ்டர் கார்த்திகேயன் நான் என் பொண்ணுக்கு உங்க பையனை கேட்டபோது, அவனுக்கு அப்டி பொண்ணு பார்ப்பேன் அது இதுனு கதை விட்டீங்க, இப்போ ஒரு பைத்தியத்தை போய் கட்டி வச்சிருக்கீங்களே? ஒரு வேளை உங்க பையனுக்கு ஏதாச்சும் குறை இருக்கா அதை மறைக்கறதுக்காக இப்படி ஒரு கல்யாணமா? நல்லவேளை என் பொண்ணு தப்பிட்டா"என்றவர் ஏளனமாய் சிரித்தவாறே அங்கிருந்து சென்று விட, மண்டபத்தில் உள்ள சொந்தங்கள், நண்பர்கள் அனைவரும் இதைத்தான் பேசிகொண்டிருக்க, அவருக்கு அவமானமாய் இருந்தது.


அவர் பற்களை கடித்து கொண்டு மகனை பார்க்க, அவனோ "என்னவோ நடக்கட்டும், நான் சந்தோசமா இருப்பேன் "என்று , மனைவியின் கைகளை இறுக பற்றியபடி தன் நண்பர்களுடனும் அண்ணன்களுடனும் பேசிக்கொண்டிருந்தான்..
 
Top