எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாச நிலா - கதை திரி

Status
Not open for further replies.

paasa nila

Moderator
வணக்கம் நட்புகளே..
#nnk-69
"பாசப்பிடி பிழையாகுமோ"?
கதையின் எழுத்தாளர் நான்.. இந்த தளத்திற்கு நான் புதியவள் அல்ல.. ஆனால் எழுத்துலகத்திற்கு நான் புதுமுகம் 🥰 எழுதுவதில் எனக்கு முன் அனுபவம் இல்லை.. சில கதைகளைப் படித்து அதற்கு பின்னுட்டம் எழுத வேண்டும் என நினைத்தாலும் அதற்கான துணிவு வந்ததில்லை எனக்கு.. அப்படிப்பட்ட நான் துணிவோடு ஒரு கதையை எழுத வந்து விட்டேன்...நீங்கள் இருக்கும் தைரியத்தில் 🥰 என் கதையோடு நான் பயணிக்கிறேன் என்னோடு நீங்கள் பயணியுங்கள்..
முதல் அடி எடுத்து வைத்திருக்கும் எனக்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருப்பீர்கள் என நம்பி முதல் அடி எடுத்து வைக்கிறேன்.. நம்பலாமா 😔😔
நம்புவோம் அதானே எல்லாம் 😀🥰
 

paasa nila

Moderator
வணக்கம் நண்பர்களே...
முதன்முதலாக கவிதை என்று நம்பி.. நான் ஒன்றை எழுதி இருக்கிறேன் எப்படி இருக்கு என்பதை குணமா சொல்லிட்டு போங்க...


உன் பெயரில் விழி இருப்பதினாலேயே...
விழியோடு ,விழி கலந்து தான்
நீ என்னை பார்க்க வேண்டும் என்பதில்லை..
நான் இருக்கும் திசையையாவது நிமிர்ந்து பாரடி, பெண்ணே!...
உன் பாராமுகம் கொள்ளுதடி என்னை!..
இன்னும் வருடங்கள் பல காத்திருக்க வேண்டுமோ?
உன் விழி என் புறம் திரும்புவதற்கு!..
 

paasa nila

Moderator
Hi மக்களே.. நான்தான் அப்பாவி
பாச நிலா
#nnk69
#பாசப்படிபிழையாகுமோ?
டீயோ காபியோ எதையோ ஒன்ன ஆத்தி இருக்கேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க😍

"ஹாய் யோன் கொத் மம்மி.. என்ன செய்றீங்க"..
என்றாள் அவரை பின் இருந்து அணைத்தபடி..
"என்னது கொத்தா? யாரை கொத்தணும்"..
என்றார் அதிர்வோடு..
"ம்மா யாரையும் கொத்த வேணாம்" "கொரியன் ல தாமரைக்கு யோன் கொத் என்று அர்த்தம்"..
என்றாள் சிரித்துக் கொண்டே..
 

paasa nila

Moderator
அனைவருக்கும் வணக்கம்... நான் உங்கள் பாச நிலா.. nnk-69
முதல் முயற்சியாக புத்தாண்டின் முதல் நாளில் துவங்கி இருக்கிறேன்..
எழுத்து எனக்கு புதிது..

ஏதேனும் குற்றம் குறை இருந்தால் பாசமாக சொல்லவும் திருத்திக் கொள்வேன்...
மலர் விழி உங்களை மகிழ வைப்பாள் என நம்புகிறேன்.. திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளில் யூ டி வரும்..

பாசப்பிடி பிழையாகுமோ


அத்தியாயம் - 01சென்னை வெயில்! ஜனசந்தடி! எங்கு போனாலும் நெருக்கடி! எங்கேயாவது சீக்கிரம் போய் சீக்கிரம் வர முடியாதா? டிராபிக் ஜாம்! கொஞ்சமா மழை பெய்தாலும் முழங்கால் மூழ்கிற அளவுக்கு தண்ணி.. இப்படியெல்லாம் சென்னையை பற்றி நான் சொல்லுவேன்னு தானே நீங்க நினைச்சீங்க அதான் தப்பு..


வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.. அதில் முக்கிய இடம் வகிப்பது எங்க சென்னைதான். எந்த வேலையும் இல்லை அப்படீன்னு யோசிக்கறவங்க சென்னைக்கு வந்தால் ஏதோ ஒரு வேலை செஞ்சு உங்களால் சம்பாதிக்க முடியும். ட்ராபிக் ஜாம் அதிகம், அப்ப ஜன நெருக்கடி இருக்க தானே செய்யும். ஏதோ ஒன்றுக்காக எல்லோரும் சென்னையை நோக்கி பயணப்பட்டா நாங்களும் என்னதான் செய்றது. சரி சென்னைக்கு ரொம்ப குடை பிடித்து விட்டேன் இப்படி சென்னையை விரும்பும் சென்னைக்கு சப்போர்ட் பண்ணும் சென்னைக்கு ஒரு பெரிய விசில் போடு அப்படின்னு குதிக்கும் ஒரு சென்னை பெண்தான் நான்.


நான் மலர்விழி இளவேந்தன்!

இளவேந்தன் யார் சொல்லுங்க என்னுடைய செல்ல அப்பா. அவர் பெயரில் இருக்கும் வேந்தன் போல அரசன் தான் அவரும். கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்...
இல்ல இல்ல ரொம்பவே ஸ்ட்ரிக்ட். எல்லாமே சரியா இருக்கணும் அவருக்கு. இவரிடம் பெரும்பாலும் மாட்டிக் கொள்வது என் அண்ணன் இன்பா, அக்கா இசையரசியும் தான். ஆனால் நான் மட்டும் அப்பப்ப டிமிக்கி கொடுத்துடுவேன். அவரும் என்னை கண்டும் காணாமல் விட்டுவிடுவார்.


அப்பா இளவேந்தன். சென்னை

டி நகரில் ஒரு பாத்திர கடை வைத்திருக்கிறார். அம்மா தாமரை இல்லத்தரசி. அண்ணன் இன்பா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அப்பாவுடன் பாத்திரக் கடையை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அக்கா இசையரசி, இசையரசி என்பதால் இசைக்கும் இவளுக்கும் சம்பந்தம் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் பெரும் தவறு.

சுட்டு போட்டாலும் இவளுக்கு பாட வராது. ஆனா எனக்கு…. அது நல்லாவே வரும், எங்கேயும் போய் கத்துக்கல, எல்லாமே கேள்வி ஞானம் தான்!..
தந்தையிடம் அதிக செல்லம் எனக்கு இருந்தாலும் அவருக்கு பிடிக்காதத செய்யும் துணிவு மட்டும் இல்லை என்னிடம். இப்போது மட்டுமல்ல எப்போதுமே..


இருங்க... இருங்க..

ஆஹா! செம வாசனை வருதே. வாங்க! வாங்க! எங்க அம்மா தான் எதையோ கிளறி கிட்டு இருக்காங்க போய் பார்க்கலாம்.


"ஹாய் யோன் கொத் மம்மி! என்ன செய்றீங்க?”

என்றாள், அவரை பின் இருந்து அணைத்தபடி.


"என்னது கொத்தா? யாரை கொத்தணும்"


என்றார் அதிர்வோடு..


"ம்மா! யாரையும் கொத்த வேணாம் கொரியன்ல தாமரைக்கு யோன் கொத்னு அர்த்தம்"


என்றாள் சிரித்துக் கொண்டே..


"அடிங்க.. சும்மா அம்மான்னு சொன்னா போதாதோ பெயர் சொல்லி தான் அம்மானு சொல்லுவீங்களோ? அதுவும் கொரியன்ல்ல.."


என்றார் பொய்யான அதட்டலுடன் வாய்க்குள் சிரிப்பை மறைத்து..


"கொரியன் எல்லாம் எனக்கு வேண்டாம்டி தமிழிலேயே எங்க அப்பா, அம்மா அழகா எனக்கு தாமரைன்னு பேரு வச்சிருக்காங்க அப்படியே இருக்கட்டும். சரி அதெல்லாம் இருக்கட்டும் அவங்க எல்லாம் பையனா பொண்ணான்னு முதல்ல சொல்லு எனக்கு.."


அவ்வளவு நேரம் வழக்காடி கொண்டிருந்தவள் இந்த ஒரு வார்த்தையில் முகம் சுருங்கி உட்கார்ந்திருந்த திண்டில் இருந்து குதித்து இறங்கி தன் அறைக்குச் செல்ல முயன்றாள்..


"ஏய்! கோச்சிக்கிட்டியா? சரி, சரி தெரியலன்னு தானே கேட்டேன் இனிமே கேட்க மாட்டேன்"


என்றார் சமாதானமாக..


"ஆமா எதுக்கு கிச்சன் உள்ள வந்த ? அத முதல்ல சொல்லு"


"போங்க மறந்து போச்சு சொல்ல மாட்டேன்"


என்றாள் முகத்தை சுருக்கிக்கொண்டு.


"அதான் தெரியாமன்னு சொல்லிட்டேனேடி அப்புறம் என்ன"


தாமரை இடுப்பில் கை வைத்துக் கொண்டே கேட்க அதில் சமாதானமானவள்..


"செம்மையா வாசம் வந்துச்சுன்னு வந்தேன். என்ன செய்றீங்க? தேங்காய் பால் சாதம் மட்டன் உருளைக்கிழங்கு போட்ட குழம்பா"


என்று சப்பு கொட்டிக்கொண்டே கேட்க,

அதற்கு தாமரையும்


"தேங்காய் பால் சாதம் மட்டன் குழம்பு தான் ஆனால் உருளைக்கிழங்கு இல்லை சேனைக்கிழங்கு"


"ஐய்ய.‌"


என்றாள் முகத்தை அஷ்ட கோணலாக்கி.


"ஏன்மா உருளைக்கிழங்கு போடல"


என்றாள் கோபத்துடன்.


"உருளைக்கிழங்கு வாய்வு டீ. இந்த கிழங்கும் நல்லா தான் இருக்கும்,சாப்பிட்டு பார்"


என்றார் குக்கரில் இருந்த குழம்பை கிளறிக்கொண்டே. முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சென்ற மகளை திரும்பிப் பார்த்த தாமரை, கூடையில் இருந்த மூன்று உருளைக்கிழங்குகளை எடுத்து வெட்ட ஆரம்பித்தார் மனம் தாளாமல்.
மட்டன் குழம்பு விரும்பி சாப்பிடுவாள் தான் ஆனால் அதில் இருக்கும் மட்டனை எடுக்க மாட்டாள்.. பீஸ் சாப்பிடாமல் குழம்பை மட்டும் எடுத்துக் கொள்ளும் ஒரு வெஜிடேரியன் இவள்.

அறைக்குள் சென்ற மலர் டேபிளில் பரத்தி இருந்த புத்தகங்களை எடுத்து அடுக்க ஆரம்பிக்கும் போது.


"மலரு!"


என்ற குரலில்.. குதுகுலமும் மகிழ்ச்சியோடும் வாசலை திரும்பி பார்த்தாள்..

குதித்த படி வந்து கொண்டிருந்தாள் கௌதமி மலரின் உயிர் தோழி.

மலர், கௌதமி இருவரும் பள்ளி இறுதி வகுப்பில் இருக்கிறார்கள். அறிவியல் பாடப்பிரிவை எடுத்து படிக்கிறார்கள் இருவரும். வீடும் அருகருகே இருவருக்கும்.


மலருக்கு அவ்வளவாக வீட்டை விட்டு செல்ல அனுமதி இல்லை ஆனால் கௌதமி அப்படி அல்ல பள்ளி விட்டு வீடு வந்தால் அவள் அதிக நேரம் செலவு செய்வது மலர் வீட்டில் தான் இன்னும் தெருவில் இருக்கும் வீடுகள் அனைத்திலும் அவளுக்கு பழக்கம் உண்டு தயக்கமே இல்லாமல் அனைத்து வீடுகளின் உள்ளும் சென்று வருவாள்..


அவளுக்கு தாய் இல்லை இவளின் இரண்டாவது வயதில் இறந்துவிட்டார் நோயின் காரணமாக இவளோடு பிறந்தவர்கள் இரண்டு மூத்த சகோதரிகள் தாய் இல்லாமல் பிள்ளைகளை வளர்க்க முடியாது என இவர்களின் தந்தை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
சித்தி கொடுமை என்பது இல்லை ஆனாலும் அவர் பெற்ற மகனுக்கு முன்னுரிமை கொடுப்பார். கொடுமை என்பது கொடுமையாக இருக்காது ஆனாலும் அவரின் சில செயல்கள் அப்படியாகத்தான் இருக்கும். ஆதலால் அவளின் பெரும்பாலான நேரங்கள் மலருடன் தான்..


கௌதமி மதுரை பக்கத்தில் உள்ள மாபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவள். ஊரோடு அதிக தொடர்பு உள்ளவர்கள், விடுமுறை கிடைத்தால் ஊரை பார்க்க சென்று விடுவார்கள் அதனால் ஊரின் வட்டார வழக்கு இவளிடம் அதிகம் தென்படும்.

வேகமாக வந்தவள் தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் மலரிடம்..


"அடியா! மலரூ என்ன புள்ள பண்ற?”


என்று ஹை டெசிபலில் கத்தி கொண்டே வந்தாள். அவளின் சத்தத்தில் சுதாரித்த மலர்


"கத்தாம வாடி கௌவ்வு"


என்றாள் காதை விரலால் குடைந்து கொண்டே.


"சீ எருமை! கௌன்னு கூப்பிடாத‌"


என்றாள் கௌதமி


"அடியே பாரு நீயே உங்க குடும்பத்தில் உள்ள ஒருத்தரை வச்சு தான் என்னை கூப்பிடுற."


“ஐயோ! ஐயோ!”


என்றாள் சிரிப்போடு மலர்..


"நாமெல்லாம் ஒரே இனம்டி"


என அணைத்து கொண்டனர் இருவரும்..


"தாமரை"


என அழைத்துக் கொண்டே வந்த தந்தையின் குரல் கேட்டு


"ஹை அப்பா வந்தாச்சு"

என கத்திக்கொண்டே வந்த மலர் அவர் கையில் தனக்காக வாங்கி வந்த முறுக்கு சீடை என நிறைந்திருந்த பையை வாங்கிக் கொண்டாள். மகளோடு வந்த கௌதமியை கண்ட இளவேந்தன்.


"வா மா கௌதமி"


என்றார் அன்போடு.


"வரேன் பா"


என்ற படியே வந்து நின்றாள் அவளும்..

அவள் தினந்தோறும் வீட்டுக்கு வந்தாலும் இவரின் வளமை இது.

கணவர் குரல் கேட்டு வெளியில் வந்த தாமரை மகள் கையில் இருந்த தின்பண்டங்களை பார்த்து அவள் அதை எடுத்து சாப்பிடுவதற்கு முன்பே.


"ஓய்! ஓடு டேபிள்ல தட்டு தண்ணி எல்லாம் எடுத்து வை. அப்பா சாப்பிட வருவாங்க இப்ப நீயும் சாப்பிட உட்கார் கௌதமி நீயும் வாம்மா. சாப்பிட்டு போய் படிங்க ரெண்டு பேரும்"


என கூறிக்கொண்டு கணவருக்கு கொண்டு வந்த தண்ணீரை கொடுத்தார்... தண்ணீரை அறிந்திய படியே சாப்பிட அமர்ந்த வேந்தன் தன் பக்கம் இருந்த தட்டை எடுத்து அருகில் அமர்ந்திருந்த கௌதமிக்கு வைத்தார்.
எப்பொழுதும் இது வழக்கம் தான் என்றாலும் சட்டென்று கண்ணில் நிறைந்து விட்ட கண்ணீரை மறைத்துக் கொண்டு புன்னகைத்தாள் கௌதமி. தன் வீட்டில் கூட தனக்கு கிடைக்காத முன்னுரிமை தன் உயிர் தோழியின் வீட்டில் கிடைப்பதை எண்ணி

தோழிகள் இருவரும் தந்தையோடு வளவளத்துக் கொண்டு உணவை முடித்து எழுந்து சென்றார்கள்.

வாழ்வு என்ன வைத்திருக்கிறது இவர்களுக்கு என்பதை அறியாமல்.


பிடி இருகும்...
 
Last edited:

paasa nila

Moderator
அத்தியாயம் - 2


காலை நேர பரபரப்பிற்கு கொஞ்சமும் குறையாமல் இருந்தது அந்த வீடு...
ரேணுகா.. சமையலறையில் மும்முறமாக சட்னிக்கு தாளித்து கொட்ட சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொண்டிருந்தார்... அவ்வப்போது தனக்கு இடப்புறம் இருந்த அறையையும் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டார்..
புயல் வருகிறதா என்று ஆராய்ச்சியுடன்..

“ம்மா.. டிபன் ரெடியா?.."

எனக் கேட்டுக் கொண்டே வந்தான்..
அவன் தமிழ் மாறன்..

ஒரு பிரைவேட் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிகிறான்..
சிறந்த நிறம் மீசையில்லா முகம் தீட்சண்யமான கண்கள் அலை அலையென இருக்கும் முடியை ஏனோ போலீஸ் கட் அடித்துக் கொண்டான் எப்போதும் இதுதான் விருப்பம் இவனுக்கு...

“ம்மா”
என மீண்டும் அவன் அலற..
புயல் வந்து விட்ட பதட்டத்தில் ரேணுகாவும்.. அவசரமாக

“இதோ, இதோ முடிஞ்சிடுச்சு பா ஒரு ரெண்டு நிமிஷம்”

என்ற அன்னையைப் பார்த்துவிட்டு தன் கை கடிகாரத்தை பார்க்க

எதற்கோ நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து வேகமாக வாசலுக்கு விரைந்தான்.. தன் நீண்ட தெருவை ஆராயும் பார்வை பார்த்தவனின் விழிகளை ஏமாற்றாமல் வந்து கொண்டிருந்தாள் அவள்..

மலர்விழி.. பெயரிலேயே விழிகளை கொண்டவளுக்கு...

மீன் போன்ற கண்கள் ..

என மனதிற்குள் நினைத்துக் கொண்டே, இமைக்காமல் அவளை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனைத் தாண்டி. சென்றாள் பெண் அவள்..


நேரம் ஆகிவிட்ட அவசரத்தில் வேக, வேகமாக... தனக்காக தெருமுனையில் காத்துக் கொண்டிருக்கும், தன் தோழி கௌதமி உடன் இணைந்து பள்ளி பேருந்தை பிடிக்க விரைவாக நடந்து சென்றாள்..

'கொஞ்சமாவது நிமிர்ந்து பார்த்தாளா பத்தியா'

'க்கும்.. நிமிர்ந்து பார்த்துட்டா தான் அதிசயமாச்சே!.."

மனதிற்குள்ளாகவே
சலித்துக் கொண்டு அவள் போவதை பார்த்து விட்டு, மறுபடியும் தன் அன்னையை விரட்ட உள்ளுக்குள் வந்தான்..

இவனையே குறுகுறு என பார்த்துக் கொண்டு நின்ற தாயிடம்..

“என்ன?.."

என்றான் புருவத்தை உயர்த்தி..

“இல்ல லேட் ஆகுது சொன்ன இப்ப போய் வாசல்ல நின்னுட்டு வர”
என்று கேள்வி எழுப்பினார் ரேணுகா அப்பாவியாக..

“ஹும்ம்.. வேண்டுதல்"

என்ற படியே அன்னை தட்டில் வைத்திருந்த மூன்று இட்லிகளை சட்னியுடன் வேக வேகமாக உண்டு விட்டு, வேறு எதுவும் தன்னை கேட்பதற்கு முன்பாகவே,
தாயின் கையில் இருந்த லஞ்ச் பேக்கை வாங்கிக்கொண்டு தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வேகமாக கிளம்பி விட்டான் தன் அலுவலகத்தை நோக்கி...
இதழ்களில் உறைந்து விட்ட புன்னகையோடு..

' கொழுப்ப பாத்தியா இவனுக்கு.. வேண்டுதலாமே'

என
தனக்குள்ளே புலம்பி கொண்டிருந்த ரேணுகாவை பார்த்து அருகில் வந்தார் ரேணுகாவின் கணவரும் தமிழ் மாறனின் தந்தையுமான ரகுவரன்..

“என்னம்மா? தமிழ் போய் ரொம்ப நேரம் ஆகுது, நீ இன்னும் இங்கேயே நின்னுகிட்டு இருக்க, என்ன ஆச்சு?..”

“அதில்லங்க...இந்த பையன் லேட் ஆச்சுன்னு கத்தினான்!..”

“ஆனா வாசலில் போய் அஞ்சு நிமிஷம் நின்னுட்டு வரான்.. இது அடிக்கடி நடக்குது... என்னமோ பண்றான் இந்த பையன்... கண்டுபிடிக்கிறேன்”

என்றார் கை இரண்டையும் ஒன்றாக பிசைந்து கொண்டு அக்மார்க் வில்லி போல..

“ஏய்...எதையாவது செஞ்சு அவன்கிட்ட வாங்கி கட்டிக்காத.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்... அப்புறம் வந்து என்கிட்ட புலம்பக் கூடாது..”

என்றார் ரகு.

“ம்ம்ம்... ஏதோ பார்க்க உங்க அப்பா, அதாவது என்னுடைய பாசக்கார மாமனார் மாதிரியே இருக்கான்னு பார்த்தா, ரொம்பத்தான் மிரட்டுறான் என்னை... இருக்கட்டும் ஒரு நாள் எங்கிட்ட மாட்டிப்பான், அப்ப இருக்கு அவனுக்கு!..."

என கூறிக்கொண்டு அவருக்கும் தனக்குமான உணவை எடுத்து வைக்க சென்றார் சமையலறை நோக்கி..

“நீ சொன்னா கேக்க மாட்ட.. அப்புறம் என்கிட்ட வந்து புகார் அளிக்க கூடாது சொல்லிட்டேன்”

எனக்கூறிக் கொண்டே அவரும் உணவு அருந்த அமர்ந்தவாரே

" எங்க சின்னவனை காணம்"?

"அவன் நைட் எல்லாம் படிச்சிட்டு லேட்டா தான் தூங்கினான்"

என்றார் கணவரின் கேள்விக்கு பதிலாக..
தன் சின்ன மகன் மதியழகனை பற்றி..
அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஆண் அவனுக்கோ பெண் அவளின் நினைவு தான்..
முயன்ற அதிலிருந்து வெளிவந்து தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்... தனக்கான நாட்கள் இன்னும் இருக்கிறது என்று நினைவோடு..
பள்ளியில் தன் கடைசி பரிட்ச்சையை எழுதிக் கொண்டிருந்தாள் மலர்விழி..
இன்றோடு பள்ளி காலங்களுக்கு மூடு விழா இரண்டு மாத விடுமுறைக்கு பின்பு புதிதாக சேர இருக்கும் கல்லூரி காலங்களை நினைத்து இப்போதே கனவு அவளுக்கு...
நன்றாகவே பரீட்சை எழுதி விட்டு வெளியில் வந்த மலரை பிடித்துக் கொண்டாள் கௌதமி..

“மலரே எப்படி புள்ள எழுதின?..'

“அந்த டூ மார்க்ஸ் கொஞ்சம் கஷ்டம் தான் இல்ல?..."
எனக் கேட்டுக் கொண்டே அவளுடன் பள்ளியில் இருக்கும் அந்த பெரிய ஆலமரத்தின் அடியில் வந்து அமர்ந்தார்கள் இருவரும்..

அவ்வளவுதான் இத்துடன் இந்த பள்ளி காலை நினைவுகள் முடிவடைகிறது... நண்பர்களுடனான சின்ன சின்ன சண்டைகளும், அதற்குப் பின்னான சமாதானங்களும், கண்ணீரும், எதற்கு என்றே தெரியாமல் கெக்க பிக்கெ வென சத்தமான சிரிப்புகளும், நகைச்சுவையே இல்லாத நகைச்சுவைக்கு விழுந்து விழுந்து ஒருவரை ஒருவர் அடித்துப் பிடித்து சிரிப்பதும்.. கிளாஸ் பீரியடுகளை கட்டடித்து ஸ்போர்ட்ஸ் டே ப்ராக்டிஸ், ஆனுவல் டே ப்ராக்டீஸ் என சுற்றியதும்...

எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தாலும் டீச்சரிடம் பொய் சொல்லிவிட்டு கிரவுண்டில் அடித்த கொட்டங்களும்..
பாத்ரூம் போக வேண்டும் என்ற தேவை இல்லாமலேயே,

"மிஸ், பாத்ரூம்!.."

என கேட்டுக்கொண்டு சிறிது நேரம் வெளியில் இருக்கும் காரிடாரில் சுற்றி விட்டு வருவதும்..

பரீட்சை நேரங்களில் மட்டும் ஒரு சிலருக்கு வரும் காய்ச்சலும்.. எவ்வளவு நன்றாக படித்து இருந்தாலும் கேள்வித்தாளை பார்த்தவுடன் அனைத்து பதில்களும் மறந்து விட்ட நிலையும்...

திருத்தப்பட்ட பதில் தாள்களை நண்பர்கள் உடன் ஒப்பிட்டு பார்ப்பதும், தனக்கு மட்டும் குறைவான மதிப்பெண் கொடுத்திருந்தால் அதற்காக ஆசிரியரிடம் சென்று வாதிடுவதும்...

பள்ளி நேரத்தில் உடம்பு சரியில்லாமல் போனால். டீச்சரின் அனுமதி உடன் கடைசி பென்சில் சென்று படுத்துக் கொள்வதும்..

பிறந்தநாள் கொண்டாட்டங்களும் புதிய உடையுடன் அனைத்து ஆசிரியர்களுக்கும் சென்று சாக்லேட் கொடுப்பதும் அதற்கு ஒரு தோழியை உடன் அழைத்துச் செல்வதும்... நண்பர்கள் அனைவரும் பாடும் பிறந்தநாள் பாடலும்...

பள்ளியில் கூட்டிச் சென்ற சுற்றுலாக்களும்.. பேருந்தை அதிர வைத்த பாட்டு சத்தமும், நடனமும்.. தனக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் எடுத்துச் சென்ற தின்பண்டங்களும்..

பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு வரும்போது காலை அசெம்பிளியில் நம் பெயரைச் சொல்லி, பள்ளி முதல்வர் அந்த பரிசை தரும் போது வரும் ஆனந்தமும், பெருமையும்...

முக்கியமான நாட்களில் வாசிக்கப்படும் பான்டுகளுக்கும், பள்ளிக்கு என பிரத்தியேகமாக இருக்கும், பாடல் ஒலிக்கும் போது... மயிர் கூச்செறிய நெகிழ்வாக நின்ற தருணங்களும், பேரண்ட் டீச்சர்ஸ் மீட்டிங்களுக்கு தந்தை வராமல், தாய் வந்தால்...

' ஐயையோ இந்த மிஸ் என்ன, என்ன சொல்லி மாட்டிக் கொடுப்பாங்களோ!..'
என அஞ்சிக்கொண்டே வந்த நாட்களும்,

நமக்கு பிடித்த ஆசிரியர்களுடன் பிரியமாக இருப்பதும், அவர்களும் நம் மீது தனிப்பட்ட பிரியத்தை காட்டும் போது வரும் பெருமையும் மற்ற மாணவிகளிடம் கெத்தாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அந்த இன்பமும், இனி எப்போதும் நினைவடுக்குகளில் மட்டுமே...
என்ற உண்மை உள்ளத்தில் அறைய... நெஞ்சை அழுத்தியது சொல்ல முடியா பாரம்...

அமைதியாக ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு பள்ளி வளாகத்தையும் கிரவுண்டையும் சுற்றி பார்த்துக் கொண்டே இருந்தார்கள் கண்ணில் நிறைந்து விட்ட நீரோடு...

இந்தப் பள்ளியோடு அவர்களுக்கு இருக்கும் தொடர்பு ஒன்றாம் வகுப்பில் இருந்து ஆரம்பம் ஆகிறது... ஒன்றும் தெரியாமல், தாய் தந்தையரின் கைகளுக்குள் வளர்ந்த அவர்களுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்த வளாகம் அது...

இனி, இந்தப் பள்ளிக்கு வந்தால் முன்னாள் மாணவியர்களாக தானே இருப்போம்..... 12 வருடங்கள் தங்கள் வாழ்வில் ஒன்றிவிட்ட அந்த இடத்தை விட்டுச் செல்வது அவ்வளவு சுலபமாக இல்லை இருவருக்கும்...

நேரம் ஆவதை உணர்ந்து, பாரமாகிவிட்ட மனதோடு கால்களை நகர்த்தி இல்லம் நோக்கி சென்றார்கள்... மலர்விழியும், கௌதமியும் கனத்த மவுனத்தை அணிந்து கொண்டு....

ஒரு கூட்டில் இருந்து மற்றொரு கூட்டிற்கு போகும் இவர்களின் வாழ்வோடு நாமும் பயணிப்போம்...


பிடி இருகும்....
 

admin

Administrator
Staff member

Episode 3​

ஞாயிறு காலை… பலருக்கு சோம்பலாக விடியும் அன்றைய தினம், மலர் விழியின் வீடு மட்டும் சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தது.​

அதற்குக் காரணம் இளவேந்தனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.​

இளவேந்தன். திருநெல்வேலியில் இருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தந்தை, தாய், தம்பியென இருந்தவரின் வாழ்வில், பொருளாதாரத்திற்காக நாடு கடந்து சென்ற தந்தையின் வரவுமின்றி வருமானமுமின்றி தவித்த குடும்பத்தை.​

பிள்ளைகளின் வயிற்று பசியை போக்க.அவர்களின் அன்றாட தேவையான உணவிற்கு அக்கம் பக்கம் இருக்கும் வீடுகளுக்குச் சென்று மாவு அரைத்துக் கொடுப்பதும், மாவு வறுத்துக் கொடுப்பதும் என வேலைகளைச் செய்து கொடுத்து,​

அதில் வரும் வருமானத்தைத் தங்கள் மூவரின் வயிற்றுப்பாட்டை கவனித்துக் கொண்டார்… கோமதி அம்மா.​

மாவு வறுத்துக் கொடுப்பது என்பது லேசான காரியம் இல்லை கைகள் இரண்டும் விட்டுப் போய்விடும் வலியில்.​

தாயின் மீது மிகுந்த பாசம் கொண்ட இளவேந்தன். தாய் படும் சிரமங்களைக் கண்டு தனது பன்னிரெண்டாவது வயதிலேயே இந்தியாவின் தலைநகரை நோக்கிச் சென்றார்.உறவினர் ஒருவரின் துணையோடு, ஏதாவது ஒரு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு.​

அங்கு வேலைக்கு வந்திருக்கும் நம்மவர்கள் உணவுக்காகச் சிரமப்படுவதை தெரிந்துகொண்டு அந்த உணவையே தொழிலாக எடுத்துக் கொண்டார்…​

இட்லி, சட்னி, சாம்பார் இதை மட்டுமே பிரதானமாக எடுத்துக் கொண்டு, இட்லிகளை ஒரு கூடையில் வைத்துத் தலையில் சுமந்து நம்மவர்களுக்கும், டெல்லியை சேர்ந்த ஹிந்தி வாலாக்களுக்கும் விற்று அதில் வரும் வருமானத்தைச் சிக்கனம் பிடித்து, இரண்டு வேளை உணவாக இட்லிகளையே இவரும் உண்டு, ஒரு வேலை உணவாகச் சாயாவை குடித்தும், சேர்த்து வைக்கும் பணத்தை தாய்க்கு அனுப்பி வைத்துக்கொண்டிருந்தார்.​

காலத்தின் வேக ஓட்டத்தில் ஐந்து வருடங்கள் முடிந்திருந்தது.இன்னும் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது. பெரும் இடைஞ்சல் ஏற்படுகிறது இவருக்கு, அங்கு இருக்கும் ஒரு தாதாவினால்…​

டெல்லியின் ஒதுக்குப்புறமான வீதியில் அமைந்திருந்தது அந்த மூன்று மாடி கட்டிடம், வெளி தோற்றத்திற்கு பழைய வீடு போலிருந்தாலும் உள்ளே அனைத்து வகை நவநாகரிகங்களுடன் மிளிர்ந்தது அந்த வீடு.​

வீடு என்பதை விட அரண்மனையெனச் சொன்னால் சரியாக இருக்கும், அதன் உள்தோற்றத்தினால்.​

டைனிங் டேபிளில் சாப்பிட வந்து அமர்ந்தான். ஹித்தேஷ். அரசியல்வாதிகளுக்கும், பெரும் பணம் படைத்தவர்களுக்கும் அவர்கள் கூறும் வேலைகளைச் செவ்வன செய்து கொடுத்து அதற்கான கூலியை பெற்றுக் கொள்வான்.​

தயவு தாட்சண்யம் என்பது இவனின் அகராதியிலேயே கிடையாது. தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே அன்பானவன் இவன்...​

சாப்பிட அமர்ந்தவனின் தட்டில் வட்ட வட்டமான இட்லிகளை பார்த்து​

"ஏ கியா ஹே" என்றான்.(என்னது இது)​

"யே.இட்லி பையா, சவுத் இந்தியன் கானா" (இது இட்லி சவுத் இந்தியன் உணவு) என்றான் பரிமாறிக் கொண்டே. இவனின் வலது கையாக இருக்கும் மதன்.​

இவன் ஒரு முறை பசியோடு வீதிகளில் உலா வந்து கொண்டிருக்கும்போது இரவு நேரத்தில் வேந்தனின் இட்லிகளை சாப்பிட்டு விட்டு, அதன் சுவை பிடித்துப் போய் வளமையாக அவரிடம் சாப்பிடுபவன்.​

இன்று அந்த ருசியை தன் தலைவனும் தெரிந்து கொள்வதற்காக வாங்கி வந்து அவருக்குப் பரிமாறினான்...​

முதலில் ஒரு இட்லியை அப்படியே எடுத்துச் சட்னியில் முக்கி வாயில் அடக்கிக் கொண்டவன், அதன் ருசியில் கண்களை மூடிக் கொண்டான். பின்பு மற்றொரு இட்லியை எடுத்துச் சாம்பாரில் முக்கி அதையும் ரசித்து உண்டான். மற்றொரு இட்லியை எடுத்துச் சட்னி சாம்பாரென இரண்டோடு கலந்து அதையும் உள்ளே தள்ளிக் கண் மூடி ரசித்தபடியே பல இட்லிகளை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தான்.​

"பகுத் ஸ்வாதிஸ்ட் ஹே யார்"​

என்றான்(மிகவும் ருசியாக இருக்கிறது)​

யார் எவர் என மதனிடம் கேட்டுக் கொண்டு.​

"உஸே யேஹான் லாவோ.உஸே ஹர் தின் மேரேலி கானா பனானா தோ"​

என்றான்.(அவனை இங்கு அழைத்து வா எனக்கு அவன் எப்போதும் சமைத்து தரட்டும்)​

"டி க்கே ஸாப்" (சரிங்க ஐயா)​

என்றான் மதனும் தலைவனின் கட்டளையை நிறைவேற்றும் விதமாக.​

அன்றே ஆரம்பித்தது இளவேந்தனுக்கு தொல்லையும் மனத்துயரும்.​

தாய் தம்பியை ஊரில் விட்டுவிட்டு உயர்வு ஒன்றே குறிக்கோளாக வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு இடையில் வந்த இந்தச் சிக்கல் பெரும் மனவேதனையை கொடுத்தது.​

இனி இங்கு இருப்பது சரி வராது என உணர்ந்தவர். இரவோடு இரவாகச் சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார் அங்கு இருக்கும் தங்கள் தூரத்து உறவினரான அண்ணன் உதவி செய்வாரென நம்பிக் கொண்டு.​

வந்தாரை வாழவைக்கும் சென்னை இவரையும் இரண்டு கைகளை விரித்து வரவேற்றது.​

தூரத்து அண்ணனிடம் சென்று உதவி கேட்க அவரும் சென்னையின் பிரபலமான புஹாரி உணவு கூடத்தில் வேலையில் இருந்தவர் இவரையும் அங்கு வேலையில் சேர்த்து விட்டார்.​

புகாரி சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவுக் கூடம். அந்தக் காலத்திலிருந்து இப்போது வரை இவர்களின் பன் பட்டர் ஜாமுக்கும், மட்டன் சமோசாவிற்கும், இஞ்சி ஏலக்காய் டீக்கும் அடிமையாகாதவர்கள் சொற்பமானவர்களே.​

இப்போது வரை தங்களுக்கு என்று ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்டு அதில் நிரந்தரமாகத் தங்கி விட்டார்கள்.​

சிக்கன் 65, என்ற உணவை முதல் முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவர்களையே சேரும்...​

வேந்தன்...அங்கு வேலையிலிருந்து கொண்டே, புதிதாகக் கிடைத்த சில நண்பர்கள்மூலம் வீடுகளுக்குப் பாத்திரங்களை நேராகக் கொண்டு சென்று விற்கும் முறையைத் தெரிந்து கொண்டார்.​

வாழ்வில் முன்னேற இப்படி தொழிலைக் கையில் எடுத்தால் மட்டுமே முடியும் என்ற நிதர்சனத்தை உணர்ந்து கொண்டு, தன் தாயிடமும் தான் சென்னை வந்த விபரத்தைக் கூறி, சிறிது சிறிதாகப் பணத்தை சேர்த்து தனக்கென ஒரு மிதிவண்டியையும் நண்பரின் உதவியோடு சில பாத்திரங்களையும் வாங்கி, தெருத்தெருவாக வீடுகளுக்குச் சென்று விற்க ஆரம்பித்தார்.​

இவரின் நேர்த்தியும், பேச்சு திறனும் வியாபாரத்தில் நேர்மையும், இவருக்கு நற்பெயர் ஈட்டி கொடுத்தது…​

சிறுக சிறுக முன்னேற ஆரம்பித்தவர்... வியாபாரத்தின் நெளிவு சுலிவுகளை விரைவில் படித்துக் கொண்டு, கொஞ்ச காலம் டில்லியில் வாழ்ந்த அனுபவத்தையும் சேர்த்துக் கொண்டு, மக்களின் நாடி பிடித்து, டி. நகரின் பிரதான சாலையில் தனக்கென ஒரு கடையையும் வாடகைக்குப் பிடித்துப் பாத்திரக்கடை முதலாளியாக அமர்ந்தார் கர்வத்துடனேயே. உழைப்புக்கு கொஞ்சமும் அஞ்சாதவர்.​

வாழ்வின் துயர் உணர்ந்தவர், பசியையும் உணர்ந்தவர், அன்பானவர், தன்னவர்கள் மீது அதிகமான பாசமும் காட்டுபவர்.​

அதே நேரம் கண்டிப்பு மிக்கவர், சில ஒழுக்கங்களை பேணிக்காக்க, இவரும் முயல்வதோடு மட்டுமல்லாமல், தன் பிள்ளைகளையும் அதை நோக்கியே நகர்த்திச் செல்வார்...​

சில கட்டுப்பாடுகளும் ஒழுக்கங்களும் வாழ்வுக்கு மிகவும் தேவையானது என்பதில் உறுதி கொண்டவர் இவர்.​

ஆனால் இவரின் கட்டுப்பாடுகளும் தளர்ந்து போகும் ஒரே இடம் இவரின் மகள், மலர் விழியிடம் மட்டுமே.​

அவள் தன் அன்னையின் சாயலை ஒத்திருந்ததாலா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.​

தன் 23 வது வயதில் தாயின் கட்டளைக்கு ஏற்பத் தங்களின் சொந்த ஊரில் தாய் தனக்காகப் பார்த்த பெண் தாமரையை மணமுடித்துக் கொண்டார். கட்டுப்பாடுகள் கொண்டவராக இருந்தாலும் மனைவிக்கான மரியாதையையும் அன்பையும் கொடுக்கத் தெரிந்தவர் இவர்.​

தன்மானம் அதிகம் கொண்டுள்ளவர் இவர் என்பதற்கான சான்று…​

திருமணமான புதிதில் மனைவியின் வீட்டிற்கு மறு வீடு சென்று இருந்தபோது. இவருக்குப் பால் பாயாசத்தை கொண்டு வந்து கொடுத்து.​

"குடிச்சு பாருங்க ரொம்ப நல்லா இருக்கும், இதெல்லாம் நீங்க எப்ப குடிச்சு இருப்பீங்க!..”​

என விளையாட்டாக மனைவி சொன்ன அந்த ஒரு வாக்கியத்தில் பால் பாயாசத்தை இப்போது வரை அவர் குடிப்பதில்லை.​

தெரியாமல் செய்துவிட்ட பிழைக்காக இப்போது வரை மனம் வருந்துகிறார் தாமரை.​

ஒரே ஊரைச் சேர்ந்த இவர்களில் அவர் சிறிது வசதி வாய்ப்போடு தாய் தந்தையோடு வாழ்ந்த பெண்,​

மாடு ஆடு கோழியென வீட்டிலேயே பண்ணையம் பார்ப்பவர்கள் அவர்கள். இளவேந்தனின் குணநலனில் பெரிதும் கவரப்பட்ட தாமரையின் தந்தை, வசதி இல்லாமல் இருந்தாலும் அவரின் குணத்திற்காக மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.​

மகள் கணவன் பிள்ளைகள் எனச் சென்னையில் வாழ்வது பெரும் மகிழ்வு இவருக்கு...​

வாழ்வில் தனக்கு சிறிது முன்னேற்றம் ஏற்பட்ட பின்பு ஊரிலிருந்து தாயையும் தம்பியையும் தன்னுடனே அழைத்துக் கொண்டார் வேந்தன்.​

தம்பி பாரிவேந்தனுக்கும், சுஜாதா என்ற குணவதியை மனமுடித்து வைத்து அருகிலேயே குடி வைத்துக் கொண்டார்.​

தாய் தங்கள் இரு வீட்டிற்கும் சென்று வர வசதியாக…​

இளவேந்தன் தாமரை இவர்களுக்கு மூன்று செல்வங்கள்.​

இன்பன் படிப்பை முடித்துவிட்டு தந்தையோடு தொழிலில் அவருக்கு உதவியாக இருப்பவன்.​

அடுத்து இசை அரசி. சென்ற வருடம் திருமணம் முடித்துச் சேலத்தில் கணவனோடு வாழ்ந்து வாழ்கிறாள்... இவளின் கணவன் பாண்டியன், தென்னை மற்றும் மாமர தோப்புக்கள் வைத்திருக்கிறான்.​

உழைப்பாளி, வருமானமும் நல்ல வளமாகவே வருகிறது. தாய் தந்தையருக்கு ஒரே மகன் பிக்கல் பிடுங்கள் இல்லாமல் மகிழ்வாகவே நகர்கிறது வாழ்க்கை இவர்களுக்கு. இரண்டு வருடங்கள் கழித்த பிறகே குழந்தையெனத் திட்டமிட்டு இருக்கிறார்கள் இவர்கள்.​

அடுத்த கடைக்குட்டி நம் நாயகி மலர்விழி கல்லூரியில் முதலாம் வருடம் சேர்வதற்கு காத்திருக்கிறாள்.​

மகள்மீது அதிக பாசம் கொண்டு அவரின் கண்டிப்பையும் சில நேரம் மகளுக்காகத் தளர்த்தி கொள்பவரை, மனதுயருக்கு ஆழ்த்தி கண்ணீர் சிந்த வைப்பாள் தங்கள் செல்ல மகள் மலர்விழி, என்பதை யார் இவரிடம் சொல்வது.​

பிடி இருகும்…​

 

paasa nila

Moderator

Episode 4

ஞாயிறுக்கான அத்தனை அம்சங்களுடன் காட்சியளித்தது தமிழ் மாறனின் வீடு.

மணி காலை எட்டு, ஆனால் வீட்டிற்குள் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை, அவ்வளவு நிசப்தமாக இருந்தது.

அப்போதுதான் எழுந்து வந்தார், ரேணுகா...வாயில் கொட்டாவியை அடக்கிக் கொண்டே.

மகன்களின் அறை இன்னும் திறக்கப்படாமல் இருப்பதை பார்த்துவிட்டுத் தனக்கும் தன் கணவனுக்குமான காப்பியை தயாரிக்க சென்றார்,

காபியோடு வெளிவருவதற்கும் வாக்கிங் சென்ற கணவர் திரும்புவதற்கும் சரியாக இருந்தது.

"என்னம்மா, பசங்க இன்னும் எந்திரிக்கலையா"

என்று கேட்டார் காலிலிருந்த ஷூவைக் கழட்டிக்கொண்டே,

சோபாவில் தனக்கு எதிராக வந்து அமர்ந்த கணவரிடம், நக்கலாக.

"இல்லங்க"

"உங்கள மாதிரியே எல்லாரும் இருப்பாங்களா, உங்களுக்குத் தான் ஞாயிற்றுக்கிழமைக்கு மற்ற நாட்களுக்கும் வித்தியாசமே கிடையாது, எங்களுக்கும் அப்படியா! மெதுவா எந்திரிச்சு வரட்டும்!.."

என்றவர் காப்பியை குடிக்க ஆரம்பித்தார்.

"சரி, சொல்லுங்க டிபன் என்ன செய்யட்டும்?

" கிச்சடி ஓகேவா"

என்று கேட்டபடி, அதற்கான பதிலையும் எதிர்பார்க்காமல், இரண்டு பேரின் டம்ளர்களையும் வாங்கிக் கொண்டு சென்றார் சமையலறை நோக்கி.

தன்னிடம் கேள்வியும். கேட்டுவிட்டு அதற்கான பதிலையும் அவரே சொல்லிவிட்டு செல்லும் மனைவியை

"ஙே"என்று பார்த்தவர், மனைவியின் குறும்புத்தனத்தை பற்றித் தெரிந்தவராக அமைதியாக எழுந்து சென்றார் தன் அறையை நோக்கி.

தன் அறையிலிருந்து வெளிவந்த தமிழ்.

கிச்சனில் சத்தம் வருவதை கேட்டு அங்குச் சென்றான்.

தாய் கத்தியோடும் கேரட்டோடும் நடத்தும் பேச்சு வார்த்தையைக் கையைக் கட்டி, சுவரில் சாய்ந்தபடி. இதழ்களில் நெளியும் புன்னகையை அடக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தான்.

கையில் இருக்கும் கத்தியைப் பார்த்துக்கொண்டு.

"ஹேய். ஒழுங்கா வெட்ட மாட்ட, போன வாரம் தானே உன்னைச் சாண புடிச்சேன், அதுக்குள்ள, என்ன உனக்கு. ஒழுங்கா இந்தக் கேரட்டை வெட்டு.என் கையில் மட்டும் எவ்வளவு கோடு போட்டு இருக்கே"

என்றபடி திண்டின் மேல் அந்தக் கத்தியை ஒரு தட்டு தட்டிவிட்டு,

கேரட்டை தன் முகத்திற்கு நேராகத் தூக்கி பிடித்து,

"உனக்கு என்ன? ஏன்? நகர்ந்து, நகர்ந்து போற"

"ஒரு இடத்தில அமைதியா இருக்க மாட்டியா"

எனக் கேட்டுக் கொண்டே திரும்ப, அங்குத் தன் மகனைப் பார்த்து, ஜெர்க்காக்கிவிட்டார்...

"அய்யய்யோ, இவன் எப்ப வந்தான்னு தெரியலையே"

என்றார் சத்தமாக. மைண்ட் வாய்ஸில் பேசுவதாக நினைத்துக்கொண்டு.

"என்னப்பா"

"என்ன வேணும்"?

"காபி"

"இதோ"

என்றபடி அவசரமாகக் காப்பி கலக்க ஆரம்பித்தார்.

அப்படியே ஓரக்கண்ணில் மகனைப் பார்த்து.

"தம்பி, இன்னைக்கு வாசலுக்குப் போகல"?

என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்ட அன்னையைப் பார்த்து,

"ஹும்ம். இன்னைக்கு சண்டே ஹாலிடே"

என்றான் நக்கலாக,

"ஹான்.ஆஹான். சரிதான்.

என ராகம் இழுக்கும் அம்மாவைப் பார்த்து முறைத்துக் கொண்டே,

"எதையோ கண்டுபிடிச்சிடுச்சு போல இந்தக் கேடி அம்மா"

என வாய்க்குள் முனங்கிக் கொண்டே

'கொஞ்ச நாளைக்கு ஜாக்கிரதையா இருக்கணும் இவங்க கிட்ட' என மனதில் அசை போட்டுக் கொண்டே.…காபி டம்ளருடன் சோபாவில் சென்று அமரப் போனவன்.

"அது, சரி மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு இப்ப என்னமோ சொன்னீங்களே என்னது அது "

"அய்யய்யோ, அது என்னதுனா, ஹான். மறந்து போச்சு"

என்றவர்,

"என்னங்க கூப்பிட்டீங்களா ?

எனக் கேட்டபடி நழுவிச் சென்றார்.

நைசாக நழுவிச் செல்லும் அன்னையைப் பார்த்துக் கொண்டே. மிடறுமிடராகக் காபியை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தான்.

மனதில் தன்னவளின் நினைவோடு.

கனவுலகில் மிதந்து கொண்டிருந்தவனை தரை இறக்கவே வேகமாக அவனை இடித்துக் கொண்டு வந்து அமர்ந்தான் இவனின் தம்பி மதியழகன்.

முதுநிலை இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறான்.

பாசக்காரன். கொஞ்சம் குறும்புத்தனமும் சேர்ந்து அனைத்து வகை சேட்டைகள் செய்வதில் முதன்மையானவன்.

இவனின் க்ரைம்களில் கூட்டு சேர்வது இவர்களின் அம்மா ரேணுகாவே தான்.

"என்னடா, என்ன பிளான் இன்னைக்கு"

என்றான் மாறன்.

"பெருசா ஒன்னும் இல்லன்னா, ஒரு அசைன்மென்ட் பண்ணனும்" "மத்தபடி ஃபுல் ரெஸ்ட் தான் இன்னைக்கு"

"ஹும், அப்பச் சரி, மதியானம் சாப்பிட வெளியில போலாம், அம்மாகிட்ட எதுவும் சமைக்க வேண்டாம்னு போய்ச் சொல்லு, போ"

"ஹே! சூப்பர், அம்மா...இன்னைக்கு பிரியாணி"

என, சிறுவனைப் போல் கத்திக் கொண்டு ஓடும் தம்பியையே புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தான் மாறன்.

தமிழ் மாறனின் தந்தை ரகுவரன், ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

அமைதியும், நேர்மையும் இவரின் பிரதான குணம். ஆசிரியர் என்பவர் கண்டிப்பாகத் தான் இருக்க வேண்டும் என்ற கொள்கைக்கு எதிரானவர் முகத்தில் புன்னகையை தேக்கி கனிவுடன் கூறும் எந்த ஒரு செய்தியையும் மாணவர்கள் அசட்டை செய்வதில்லை என்பது இவரின் நிலைப்பாடு,

அதில் இவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதற்கான பிரதி பலனையும் மற்றவர்களை உணர வைத்திருக்கிறார். இவரின் வார்த்தைகளில் மென்மைத்தன்மை இருந்தாலும், கேட்பவர்களுக்கு அதில் ஒரு அழுத்தம் இருப்பதை உணர முடியும். அதனாலேயே இவரை மீறி நடக்கும் துணிவு மாணவர்களுக்கு இருந்ததே இல்லை. நன்றாகப் படிக்கும் மாணவனை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பது ஒரு ஆசிரியரின் திறமை அல்ல, சுமாராகப் படிக்கும் மாணவனை நன்றாகப் படிக்கக்கூடிய மாணவனாக மாற்றுவதே ஒரு ஆசிரியரின் திறமை என்பது இவரின் கோட்பாடு.

பெற்ற பிள்ளைகளிடமும் இவரின் தன்மை மாறியதில்லை அதே கனிவும் சிறிது அழுத்தமும் மட்டுமே. ஆனால் இவரின் அழுத்தம் செல்லுபடியாகத ஒரே இடம் இவரின் மனைவி ரேணுகாவிடம் தான்.

என்ன சொன்னாலும் தலையாட்டிக் கேட்டுக் கொள்பவர் அதற்கு எதிராகத்தான் செயல்படுவார். மனைவிமீது கொண்ட காதலால் இவரும் அதைப் பெரிதாக எடுக்காமல் பிள்ளைகளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வார்.

புரிதலான, அழகான அன்யோன்யம் இருவருக்கும்.

தாய் தந்தை இல்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்த ரேணுகாவை, ஆசிரமத்திற்கு நன்கொடை கொடுக்கச் செல்லும்போது, இவரின் துருதுறுப்பு பிடித்துப் போய் ஆசிரம நிறுவனரிடம் அனுமதி பெற்று அவர்கள் முன்னிலையில் திருமணம் முடித்துத் தன் சரிபாதியாக ஆக்கிக் கொண்டார் ரகுவரன். தந்தையின் அனுமதியுடன்.

ரேணுகா. வளர்ந்த பிள்ளைகள் இருவர் இருந்தாலும் மனதால் சிறு குழந்தை தான் இவர்.

குழந்தை பருவத்தில் கிட்ட வேண்டிய எந்தச் சந்தோஷமும் கிட்டவில்லை இவருக்கு.

படிப்பு அதோடு அங்குக் கொடுக்கும் சிறு சிறு வேலைகள்

எனத் தன் குறும்புத்தனத்தையும் விளையாட்டுத்தனத்தையும் வெளிப்படுத்த முடியாமல் அவை அனைத்தும் திருமணம் முடிந்த பிறகே இவருக்கு வசமானது.

அதற்கு இவரின் கணவர் மட்டும் காரணமல்ல கணவரின் தந்தை சேதுபதி ஐயாவும் தான் காரணம்.

பிரசவத்தில் இறந்த மனைவியின் நினைவுகளோடு ஒற்றை மகனை வளர்த்தெடுத்தவருக்கு தனிமையின் துயர் நன்றாகவே புரியும்.

யாரும் மற்ற பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லாமல் முழு மனதோடு மருமகளாக அல்லாமல் தன் மகளாகவே அரவணைத்துக் கொண்டார்.

அழுத்தி அழுத்தி வைக்கும் ஆசைகளும் ஏக்கங்களும் எப்படி, ஒரு நாள் வெடித்து வெளிவருமோ அப்படித்தான் இவருக்கும்.

பெரிய மகனின் மீது அதிக பாசம் அதே நேரம் கொஞ்சம் பயமும். கணவருக்குக் கூடப் பயப்படாதவர், பெரிய மகனைக் கண்டால் பம்மி விடுவார். இவரின் அனைத்து வகை கிரைம்களுக்கும் பார்ட்னராக இருப்பது இவரின் இளைய மகன் மதியழகன் தான்.

" அழகு பையா"

என்ற இவரின் அழைப்பில் சொக்கி விடுவான் மகனும்.

நடு ஜாமத்தில் கணவனுக்கும் பெரிய மகனுக்கும் தெரியாமல், ஊர் சுற்றி விட்டு வருவதாகட்டும், கொட்டும் மழையில் மகனை இழுத்துக் கொண்டு நனைவதாகட்டும், உடம்புக்கு ஒவ்வாத உணவுகளை மகனோடு கூட்டு சேர்ந்து உண்டுவிட்டு மறுநாள் மகனிடமும் கணவரிடமும் மாட்டிக் கொண்டு முழிப்பதாகட்டும், மனதால் சிறுபிள்ளைதான் இவர்.

மாமனார் இருந்த வரைக்கும் எதற்கும் தடை இல்லை

இவருக்கு

ஒற்றை மகனை வளர்த்து ஆளாக்கியவர் மூப்பின் காரணமாக ஒரு வருடத்திற்கு முன்பு காலமாகிவிட்டார்.

தந்தையைப் போல் பாசம் காட்டிய மாமனாரின் மறைவு பெரிதாகப் பாதித்துவிட்டது ரேணுகாவின் உடல் நிலையை.

அதற்குப் பின்பே, கணவன் மற்றும் மகனின் கட்டுப்பாடுகள் அதிகமாகின.

மனைவி முகம் சுருக்கினால் தாங்கிக் கொள்ள முடியாமல் சலுகைகள் கொடுத்து விடும் தந்தையை நம்பாமல், தானே ஒவ்வொன்றையும் கவனிக்க ஆரம்பித்தான் மாறன்.

அம்மா மற்றும் தம்பியின் திருட்டுத்தனம் தெரிந்து வாசல் கேட்டைப் பூட்டி வைத்தாலும் சுவர் ஏறிக் குதித்து சென்ற நாட்களும் உண்டு.

வீட்டைச் சுற்றி அழகான சிறு தோட்டம் உள்ளது இவர்களுக்கு. அதைப் பராமரிப்பது ரேணுகா தான், கணவர் மற்றும் பிள்ளைகளின் துணையோடு.

பூக்களோடும், காய்கனிகளோடும் பேச்சுவார்த்தை நடத்துவதில் அலாதி பிரியம் இவருக்கு.(அதைப் பற்றிப் பின் ஒரு நாள் பார்ப்போம்)

இவரைக் கண்காணிப்பதே தமிழ் மாறனின் முக்கியமான வேலையாக இருக்கும் பல நேரங்களில்.

அதுவும் தாத்தா இறந்த பிறகு தான், இவரின் சேட்டைகளும் அதிகமாகிவிட்டன.

.மாறனுக்கும் மதியழகனுக்கும் நான்கு வயது வித்தியாசம்.

தம்பியின் மீதும் தாயின் மீதும் அதிகமான பாசம் மாறனுக்கு.

சிறு வயதில் யாரும் இல்லாமல் தாய் வளர்ந்த விதத்தையும், ஆசிரமத்தின் கட்டுப்பாடுகளும், சட்டதிட்டங்களும், பகிர்ந்து அளிக்கப்படும் உணவுகளும், நண்பர்கள் எனப் பெரிதாக யாரும் இல்லாத தனிமையும், என அனைத்தையும் மகனோடு பகிர்ந்து கொள்வார்.

கணவரிடம் தன் மனத் துயரங்களைக் கூறும்போது அதைக் கேட்டு அவரும் துயரப்படுவதை விரும்பாமல், சிறு பிள்ளை தானே, என்ன தெரியும்! என நினைத்து இவர் மகனிடம் சொன்னது அனைத்தும் பசுமரத்து ஆணிபோலப் பதிந்து விட்டது அவனுக்கு மனதில்.

இதனாலேயே தாயின் மீது அதிக அன்பும் அக்கறையும் இவனுக்குத்

தாய் இழந்த அனைத்தையும் அவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதே இவனின் ஆசை.

ஆனாலும் சிறுபிள்ளைத்தனமாக அவர் இழுத்துக் கொள்ளும் உடல் உபாதைகளுக்குப் பயந்து அவரிடம் கண்டிப்பாக நடந்து கொள்வான் இவன்.

‌‍"ஹே"

என்று தாயும் தம்பியும் போட்ட கூச்சலில் சுற்றம் உணர்ந்து, சிரிப்புடன் இரு பக்கமும் தலையாட்டிக் கொண்டே தன் அறையை நோக்கிச் சென்றான் தமிழ் மாறன்.

பிடி இருகும்....

 
Last edited:

paasa nila

Moderator

Episode 5​

அன்றைய காலை, மிகவும் குதூகலமாகவே விடிந்தது மலர்விழிக்கு.​

முதல் நாள், கல்லூரிக்குச் செல்லும் பரபரப்பும், மகிழ்வும் அவளுக்கு.​

கண்கள் முழுதும் கனவுகளுடன், புதிதாகச் சந்திக்கவிருக்கும் நண்பர்களையும், கல்லூரி காலம், என்றாலே கொண்டாட்டம் தான். என்ற மனநிலையும்! புதிதான பாடங்களும், ஆசிரியர்களும் எப்படி எல்லாம் அவர்களின் கண்டிப்பு இருக்குமோ என்ற பயமும். அனைத்தும் கலந்த கலவையாகத் தயாரானாள் மலர்விழி...​

கல்லூரி காலங்கள் தனக்கு என்ன வைத்திருக்கிறது என்பதை அறியாமலேயே.​

தன்போல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாலும் கைகள் கல்லூரிக்குத் தேவையான பொருட்களைத் தந்தையோடு நேற்று சென்று வாங்கிய புது பேக்கில் வைத்து அடுக்கிக்கொண்டிருந்தாள்.​

பள்ளிக்குச் செல்லும் போதும் இப்படித்தான். அனைத்து வருடங்களிளேயுமே புது பேக், புது பவுச், புது பெண், பென்சில், ரப்பர், ஸ்கேல், ஜாமென்ட்ரி பாக்ஸ் என அனைத்தையும் அடுக்கி வைத்து விடுவாள் ஒன்றுக்கு இரண்டு, இரண்டாக.​

பெண் பென்சில் இல்லை என்று நண்பர்கள் யாரேனும் கேட்டால் எடுத்துக் கொடுப்பதில் மிகுந்த மகிழ்வும் பெருமையும் அவளுக்கு. சென்ற வருடம் யூஸ் பண்ணது இந்த வருடம் எடுத்துச் செல்லமாட்டாள் அவை அனைத்தும் நல்ல நிலையில் இருந்தாலும் வேண்டியவர்களுக்கோ அல்லது வீட்டில் வேலை செய்யும் அக்காவின் மகளுக்கோ மகனுக்கோ கொடுத்து விடுவாள்.​

அவர்களும் மகிழ்வுடனயே அதை வாங்கி செல்வார்கள். அவைகளை ஒரு வருடத்திற்கு மிக நன்றாகவே பராமரிப்பாள்.​

அனைத்தையும் எடுத்துக்கொண்டு அறையின் வாசலுக்கு வருவதற்கும் தந்தையின் குரல் கேட்பதற்கும் சரியாக இருந்தது.​

"குட்டி"​

"ப்பா"​

"என்னமா கிளம்பியாச்சா?.."​

"தோ! ப்பா!.. கிளம்பிட்டேன்".​

"எல்லாம் எடுத்து வச்சுட்டியம்மா?".​

"ஆமாப்பா".​

"சாப்டியா?"​

"அப்பவே சாப்பிட்டுட்டேனே!"​

"சரி.நான் போய்க் கார் எடுக்கிறேன்,​

நீ அம்மா கிட்ட சொல்லிட்டு வா."​

"நீங்கச் சாப்டீங்களா ப்பா?"​

"ஆச்சு மா."​

"சரிப்பா, ப்பா.​

கௌதமியையும் கூப்பிடனும்."​

"சரி மாக்கூப்பிட்டுகலாம்..."​

காரை எடுப்பதற்கு வெளி வாசலுக்குச் சென்றார் வேந்தன்.​

"அம்மா."​

எனக் கத்திக் கொண்டே சென்றவள் கைகளில் ஸ்நாக்ஸ் மற்றும் தண்ணீர் அடங்கிய பையைக் கொடுத்தார் தாமரை​

அதைக் கண்டு முகத்தைச் சுருக்கியவள்.​

"என்ன ம்மா இது?.."​

"ஸ்னாக்ஸ் டி! தண்ணி பாட்டிலும் சேர்த்து வச்சிருக்கேன்."​

"நான் என்ன ஸ்கூல் பேபியா?.."​

"எனக்கு எப்பவும் பேபி தாண்டி நீ".​

எனக் கொஞ்சிய அன்னையை பார்த்து…​

"ம்மா. இதெல்லாம் கொண்டு போனா, என்னைக் கிண்டல் பண்ணுவாங்க!.."​

"யார் கிண்டல் பண்ணுவா?.."​

"காலேஜ்ல இருக்கிறவங்க தான்."​

"ஏண்டி! காலேஜ் போய்ட்டீங்கன்னா உங்களுக்கெல்லாம் பசிக்காதா?.."​

என்றார் அங்களாய்ப்பாக.​

"பசிக்கும்! அதுக்கு தான் கேண்டின் இருக்கே அங்க."​

என்றாள் சிரிப்புடன்.​

"கேண்டின்ல எல்லாம் எதுவும் வாங்க வேண்டாம், எதையாவது சாப்பிட்டு, அப்புறம் அம்மா, வயிறு வலிக்குதுன்னு வந்து நிக்காதே."​

"அங்க எல்லாம் என்ன எண்ணெய் யூஸ் பண்ணுவாங்களோ! சுகாதாரமாக இருக்குமோ என்னவோ?.."​

"அம்மா இதெல்லாம் ரொம்ப ஓவர்மா!.." எனப் பின்னால் இருந்து சத்தம் கேட்க,​

அம்மா, மகள் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அங்குக் கடைக்குக் கிளம்பிய படி வந்துகொண்டிருந்தான் இன்பன் தாய் மற்றும் சகோதரியை நோக்கி.​

"என்னடா ரொம்ப ஓவரு?.."​

"அவ்ளோ பெரிய காலேஜ்ல டெண்டர் எடுத்துக் கேன்டீன் நடத்துறவங்க காதுல விழுந்துச்சு, அவ்வளவுதான். உங்க மேல கேஸ் போட்டுருவாங்க"​

என்றான் சிரித்துக் கொண்டே…​

"ஏன் கேஸ் போடுவாங்க?.."​

"காலேஜ் வரப் பசங்கள நம்பி தானே, அவங்களும் கேன்டீன் நடத்துறாங்க!..​

அதெல்லாம் சுத்தமா' சுகாதாரமா தான் இருக்கும்."​

"அப்படி சொல்லு ண்ணா!.."​

என்றபடியே அண்ணனின் அருகில் சென்று நின்று கொண்டாள்.​

"அதுக்காக, எப்பவும் கேன்டீன் ஃபுட் சரியா இருக்குமாடா?.."​

என்றார் கவலையாக.​

"ம்மா எப்பவும் இல்ல, என்னைக்காவது தான். என்ன மலர்?.."​

எனத் தங்கையையும் கேள்வி கேட்டுத் தன்னோடு இணைத்துக் கொண்டான்.​

"சரிடி. இன்னைக்கு முதல் நாள், கேண்டீன் எங்க போய்த் தேடுவ இன்னைக்கு கொண்டு போ!.."​

எனக் கூறும் அன்னையை மறுக்க முடியாமல் வாங்கிக் கொண்டாள் பையை.​

இதற்கிடையில் தந்தையின் கார் ஹாரன் சத்தம் கேட்க,​

"வந்துட்டேன் பா"​

என்றபடி​

"பாய் மா, பாய் ண்ணா"​

என ஓட இருந்தவளை​

" பாட்டி கிட்ட சொல்லிட்டியாடி?.."​

எனக் கேட்ட அன்னையிடம்.​

"ஐயையோ இல்ல."​

எனக் கூறியபடி. பாட்டியின் அறையை நோக்கி விரைந்து சென்று,​

"பாட்டி காலேஜ் போயிட்டு வரேன், பாய் பாய்"​

என்று அறையின் வாசலில் நின்று கத்தி விட்டு ஒரே ஓட்டமாக ஓடித் தந்தையின் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.​

அவளின் ஓட்டத்தைக் கண்டு சிரித்த மகனிடம்,​

"எப்படித்தான் மூன்று வருஷம் படிச்சு முடிக்கப் போறாளோ தெரியல?.."​

எனப் புலம்பியபடியே அவனுக்கு டிபன் எடுத்து வைக்கச் சென்றார் தாமரை.​

காரின் முன்னிருக்கையில் வந்து அமர்ந்த மகளைப் பார்த்த வேந்தன்.​

"என்னமா எல்லார்கிட்டயும் சொல்லிட்டியா?.."​

" சொல்லிட்டேன் பா."​

"சரி, கிளம்பலாமா?…"​

" கிளம்பலாம் ரை, ரைட்."​

என்றாள் மகிழ்வோடு.​

தங்களின் நீண்ட தெருவைத் தாண்டிப் பிரதான சாலையை இவர்கள் நெருங்குவதற்கும் சாலை ஓரத்தில் கௌதமி வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது...​

"கௌவ்வு, வா வா."​

என்றாள் ஆரவாரமாக.​

"கௌவ்வ மட்டும் விடாதடி."​

எனச் சலித்தப்படியே பின் இருக்கையின் கதவைத் திறந்து அமர்ந்து கொண்டாள்.​

"போலாமா, மா."​

எனக் கேட்ட வேந்தனிடம். இவளும்​

"போலாம் ப்பா."​

என்றாள் மகிழ்வுடனயே,​

கணவனும் மகளும் கிளம்பிய பிறகு இளைய மகனுக்கும், மாமியாருக்கும் காலை உணவைப் பரிமாறத் தொடங்கினார் தாமரை.​

"என்னமா, காலேஜ் முதல் நாள் அதுவுமா பொங்கல் போட்டுட்டீங்க !அவ போய்த் தூங்கி வழிய போறா காலேஜ்ல."​

என்றான் சிரிப்புடன்.​

"முதல் நாள் காலேஜ், அவளுக்குப் பிடிச்சது சாப்பிடட்டும்னு செஞ்சேன். சும்மா ஏதாவது கிண்டல் பண்ணிட்டே இருக்காம, சாப்பிட்டு கிளம்புடா கடைக்கு."​

"பாட்டிக்கும் பொங்கலா?.."​

என்றான் அவரின் தட்டைப் பார்த்துக் கொண்டே.​

"இல்லடா அவங்களுக்கு இட்லி"​

என்றபடி அவருக்கான இரண்டு இட்லியை தட்டில் வைத்துக் கொடுத்தார்.​

இட்லியை சாப்பிட்டு கொண்டே.​

"கொஞ்ச நேரம் கழித்து​

எனக்குக் கொஞ்சம் கடுங்காப்பி குடு மா"​

என்றபடி கையைக் கழுவி. சோபாவின் அருகே காலை நீட்டித் தரையில் அமர்ந்து கொண்டார்.​

"பாட்டி உங்களைக் கீழே உட்காராதீங்கன்னு சொல்றேன் இல்ல?.."​

"கால் நீட்டி, கீழே உட்கார்ந்தா தான் கண்ணு கொஞ்சம் நல்லா இருக்கு."​

என்றபடி சோபாவில் முதுகை சாய்த்து கொண்டவர்.​

"நைட் சீக்கிரம் வந்து, காலுக்குத் தைலம் தேய்க்க மாட்டியா என்ன."​

என்றார் பேரனிடம் அதிகாரமாகவே.​

"ஹ்ம்ம் நான் தேய்க்காம, வேற யார் தேய்பா. எனக் கூறிய படி தன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு​

"வரேன்."என்ற படியே கிளம்பினான்.​

பிடி இறுகும்…​


அத்தியாயம் 6​

குட்டி போட்ட பூனையாக வாசலுக்கும் வீட்டிற்கும் நடை பயின்று கொண்டிருக்கும் மகனை ஆராய்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தார் ரேணுகா.​

தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அன்னையைப் பார்த்துச் சுதாரித்த மாறன் வேகமாகத் தன் அறையை நோக்கிச் சென்றான்.​

மெத்தையில் சிந்தனையோடு அமர்ந்திருந்தவன்​

'கிளம்பிட்டாளா?..'​

'இன்னைக்கு தானே அவளுக்கு, காலேஜ் பர்ஸ்ட் டே?..'​

'மிஸ் "பண்ணிட்டேனா?..'​

'வரதுக்குள்ள போய்ட்டா.அப்படி என்னடி அவசரம் உனக்கு?..'​

தன்னையே நொந்தபடி இரு கைகள் கொண்டு தலையைக் கோதி நடந்து கொண்டிருந்தவன் அரை வாசலில் அம்மாவைப் பார்த்து​

"என்ன மா?.."​

என்றான் சலிப்பாக.​

'இவங்கள வேற இப்ப சமாளிக்கணும் ...'​

என மனதிற்குள்.​

"ஒன்னும் இல்லப்பா, ஆஃபீஸ் கிளம்பலையா"​

என்றார் கவலையாக. ஏனோ மகன் சஞ்சலத்தோடு இருப்பதை காண சகிக்கவில்லை அந்தப் பாசக்கார தாய்க்கு.​

அன்னையின் குரல் பேதத்தை உணர்ந்த மாறன் வேகமாக அவரிடம் வந்து லேசாக அவரை அணைத்தபடி.​

"ஒன்னும் இல்லம்மா!.."​

"போய்ச் சாப்பாடு எடுத்து வைங்க! இப்ப வரேன்."​

"ஹும்ம்"​

என்ற தலையாட்டலுடன்​

அமைதியாகச் சென்ற தாயைப் பார்த்தவன் தானும் அவர் பின்னேயே சென்றான் உணவு அருந்துவதற்கு.​

மீண்டும் அவரைச் சஞ்சல படுத்த விரும்பாமல்.​

அமைதியாகச் சாப்பிடும் மகனைப் பார்த்து.​

"ஒன்னும் பிரச்சனை இல்லையே"​

திடீரெனக் கேட்ட தாயின் குரலில் நிமிர்ந்து பார்த்தவன்.​

" ஒன்னும் இல்லம்மா!.."​

என்றபடி தன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தான்.​

வேகமாகச் செல்லும் மகனைப் பார்த்துக் கொண்டு டைனிங் டேபிளின் சேரில் அமர்ந்தார் ஆழ்ந்த சிந்தனையோடு...​

பைக்கில் அலுவலகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ் மாறனுக்கும் இதே சிந்தனை தான்.​

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தவைகளை நினைக்க ஆரம்பித்தான் அவனும்.​

சோம்பலாக விடிந்த ஒரு ஞாயிறு காலை அது.​

டைனிங் டேபிள் சாரி சேரில் ரேணுகா சிறு கீரையை ஆய்ந்து கொண்டிருக்க. அவரின் அருகே வந்து அமர்ந்த ரகுவரன் தானும் கீரைகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.​

நடுநடுவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் மனைவிக்குச் சிறு சிறு உதவி செய்வதில் அலாதி பிரியம் அவருக்கு. ரேணுகாவிற்கும் ‌ அலாதியான பெருமை இதில்.​

ஏதோ பேசிச் சிரித்துக்கொண்டிருந்த பெற்றோர்களைப் பார்த்த படியே ஃப்ரிட்ஜிலிருந்து நீரை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் செல்லவிருந்த மாறனின் செவிகளில் அவனின் பெயர் பெற்றோர்களின் பேச்சில் அடிபடுவதை கேட்டு என்னவாக இருக்கும் என நினைத்துச் சற்று தேங்கி நின்றான்.​

அப்போதுதான் ரகுவரனின் ஒன்றுவிட்ட சகோதரன் மகனின் திருமணம் முடிந்திருந்தது.​

"அப்பாடா ஒரு வழியா, கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது இல்லங்க"​

"ஆமாமா, பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்து கொடுத்து அவர்கள் சந்தோஷமாக இருப்பதை கேட்டா தான் முழு சந்தோஷம் நமக்கு"​

"ஆமா, ஆமா"​

என ஆமோதித்தவர்.​

"எங்க, நம்ம மாறனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சிடலாமா?.."​

எனக் கேட்ட மனைவியைக் கேள்வியாகப் பார்த்தார் ரகுவரன்.​

"அவனுக்கும் 25 வயசு ஆகுது இல்ல? இப்போ பார்க் ஆரம்பிச்சா தான். பொண்ணு பார்த்து முடிக்கக் கரெக்டா இருக்கும்."​

"ஏன்மா? இப்பதான் ஒரு கல்யாணம் செய்து முடித்து அப்பாடான்னு உட்கார்ந்து இருக்கோம்‌. .​

இப்பவே அடுத்ததா!.."​

"கொஞ்சம் கேப் விடுமா.பாடி தாங்காது!.."​

என்ற கணவரைப் பார்த்த முறைத்துக் கொண்டே.​

"உங்க அண்ணன் வீட்டு கல்யாணத்துல, நாம என்ன ஓடியாடியா வேலை செஞ்சோம்?.."​

"அதெல்லாம் இல்ல, நான் எனக்குத் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வைக்கத் தான் போறேன்."​

என்றபடியே கீரைகளை எடுத்துக்கொண்டு சமையலறையை நோக்கிச் சென்றார்.​

தன் அறையை நோக்கிச் சென்ற மாறனுக்கும் அதே சிந்தனை தான் இத்தோடு நிறுத்துபவர் அல்ல தன் தாய் என்பதை அறிந்தவன் அவருக்கு முன்னே தனக்கு வேண்டியதை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுடனும் தம்பியிடம் சிலவற்றை பேச வேண்டும் என்ற நினைவுடனும் அன்றைய காலையை துவங்கினான்.​

மதியழகன் மற்றும் மலர் விழியின் அண்ணன் இன்பாவும் சிறு வயது முதலே நண்பர்கள் பள்ளி மற்றும் கல்லூரியிலும் இருவரும் ஒன்றாகவே பயணித்தவர்கள் இருவருக்கும் இடையே ஒரு ஆழ்ந்த நட்பு இருந்தது.​

இளநிலை படிப்பை முடித்துவிட்டு இன்பா தன் தந்தையோடு பாத்திரக்கடையின் பொறுப்பை எடுத்து அவருடன் வியாபாரத்தில் உடன் இருக்க மதியழகனோ முதுநிலை படிப்பைத் தொடர சென்று விட்டான்.​

நண்பர்கள் இருவரும் பெரும்பாலும் இரவில் தான் சந்தித்துக் கொள்வர். தினமும் என்று இல்லாமல் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம்.​

தங்கள் எதிர்கால கனவு பற்றியும் இருவரில் எவரேனும் தங்களின் பள்ளி அல்லது கல்லூரி கால நண்பர்களைச் சந்தித்தால், அவர்களைப் பற்றிய பகிர்வும். ஐபிஎல் கிரிக்கெட், ஃபுட் பால் மேட்ச். அனைத்தும் கலந்த பேச்சாக இருக்கும், இருவருக்கும் இடையே.​

மறுமுறை சந்திக்க, அவர்களுக்கு இரு நாட்களும் ஆகலாம் ஒரு வாரமும் ஆகலாம் அல்லது ஒரு மாதமும் ஆகலாம். இருவருக்குமான புரிந்துணர்வு நெருக்கமாக இருந்தது. அவரவர் வேலை காரணமாக அடிக்கடி சந்திக்க முடியாமல் இருந்தாலும் மனதால் நெருங்கியே இருந்தனர் இருவரும்.​

தம்பியைச் சந்தித்து பேசுவதற்காகவே அன்று விரைவாக வீட்டுக்கு வந்திருந்தான் தமிழ் மாறன். அன்னைக்கு சந்தேகம் வந்து விடக் கூடாது என்பதற்காகவே அனைவரும் சாப்பிட்ட பின் அவரவர் அறைகளுக்குச் சென்ற பின்னரே தம்பியைத் தேடி அவனின் அறைக்குச் சென்றான் மாறன்.​

படிக்கும் மேஜையில் உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தவன் ஆள் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவன் அண்ணனைத் தன் அறையில் கண்டவன், சிந்தனையோடு​

"என்னன்னா.?"​

என்றான்.​

"ஒன்னும் இல்லடா, சும்மாதான்.!"​

"எழுதிட்டு இருந்தியா?"முடிஞ்சுதா.?"​

"ஆமாண்ணா, அவ்வளவு தான் எடுத்து வைக்கப் போறேன்..."​

"ஹ்ம்ம், அப்புறம், இன்பாவெல்லாம் மீட் பண்றியா இல்லையா.?"​

"ஹான், மீட் பண்றோமே, முன்ன மாதிரி அடிக்கடி இல்ல. எப்பவாவது.!" "ஏன் என்ன ஆச்சு.?​

"ஒன்னும் இல்லடா, சும்மாதான்.​

அவன் தங்கச்சி இருக்குமே, ஒரு சில்வண்டு ...இப்போ என்ன பண்ணுது அது.?"​

என்றான் தெரியாது போலவே.​

"அவளா, பிளஸ் டூப்படிக்கிறா.ஏன்.?​

என்றான் சந்தேகமாக, மனதிற்குள்.​

'அப்படியெல்லாம் யாரையும் விசாரிக்கமாட்டாரே இவரு, என்ன ஆச்சு.!'​

என்று​

"இல்ல.அவங்க பாட்டி பொம்பள புள்ளைங்கள எல்லாம் ரொம்ப படிக்க வைக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்களே. அவங்க அக்காக்கு கூடச் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டாங்க தானே.?"​

"அப்படியெல்லாம் இல்லை இல்லையே.! டிகிரி படிச்சிருக்காங்களே அவங்க அக்கா, அப்புறம் தானே கல்யாணம் பண்ணாங்க, அதில் எல்லாம் அவங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்."​

"ஓஹோ…! இவளுக்கு எப்படி.?"​

"எப்படின்னா.?"​

"இவளுக்கும் அப்படித்தான்.!"​

"இவளையும் தான் படிக்க வைப்பாங்க."​

என்றான் அண்ணன் என்ன சொல்ல வருகிறான் என்று ஒன்றும் புரியாமல்.​

"இல்லடா"​

என்றவன்.பெரும் மூச்சாக​

எடுத்துக்கொண்டு.​

"எங்க அண்ணனுக்கு, உன் தங்கச்சியை தரீங்களான்னு? உன் பிரண்டு கிட்ட கேட்டுப் பாரேன்."​

என்றான் அவசரமாகத் தன் மனதில் உள்ளதை சொல்லிவிடும் நோக்கோடு.​

அதிர்ச்சியாக அண்ணனைப் பார்த்தவன் ஒன்றும் கூறாமல் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.​

அதிர்வோடு அமர்ந்திருந்த தம்பியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே.​

"மதி, டேய், என்ன?.."​

"என்னண்ணா. என்னன்னு அசால்டா கேக்குற.?"​

"அப்போ எப்படி கேட்கணும்.?"​

"உனக்கு விளையாட்டா இருக்கா.?"​

"டேய், விளையாட்டு எல்லாம் இல்லை.? ரொம்ப சீரியஸ்."​

என்றான் முகத்தில் சிரிப்பு இல்லாமல்.​

"என்ன திடீர்னு.?"​

"திடீர்னு எல்லாம் இல்ல. ரொம்ப நாளாவே.!"​

"ஓ.!"​

என்றவன் அமைதி ஆகிவிட.​

"ஏண்டா, உனக்குப் பிடிக்கலையா.?" என்றான் கவலையுடன்.​

"எனக்கு ஏன் ண்ணா பிடிக்காமல் போகுது.!​

" உனக்குப் பிடிச்சிருக்கிறத நெனச்சி தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு.!​

என்றான் மகிழ்வுடனயே.​

"அண்ணா, நெஜமா தான் சொல்றியா.?​

என்றான் முகத்தைச் சீரியஸ் ஆக வைத்துக்கொண்டு.​

"ஆமாடா, போய்க் கேட்டுப் பாத்துட்டு வந்து என்கிட்ட என்னன்னு சொல்லு.!"​

"இதில் எல்லாம் நான் விளையாடமாட்டேன், உனக்கு அது தெரியும்."​

"ஆமாண்ணா, ஆமாண்ணா.!"​

என்றவன் திடீரெனச் சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தான்.​

"டேய், டேய். மெதுவா, அம்மா வந்துட போறாங்க சத்தம் கேட்டு, என்ன அப்படியொரு சிரிப்பு உனக்கு.?"​

என்றான் லேசான புன்னகையுடன்.​

"பாரேன், அந்தச் சில்வண்டுக்கு இருக்கிற திறமைய.! உன்னையும் சிக்க வச்சிருக்கு "​

என்றான் சிரிப்பை அடக்கியபடி.​

"டேய், சில்வண்டு, எனக்கு மட்டும்தான் உனக்கு அண்ணி ஞாபகம் வச்சுக்கோ.!"​

என்றான் முறைத்தவாறே.​

"ஓஹோ! சரிதான்."புள்ள பூச்சி எல்லாம் எனக்கு அண்ணி! ஏன்ணா, அந்தப் பெட்ரோ மாக்ஸ் லைட்டே தான் உனக்கு வேணுமா?.."​

என்றான் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு.​

"ஆமா, ஆமா கண்டிப்பா.!"​

என்றான் இவனும்.​

"ம்ம் சரி, பேசிட்டு சொல்றேன்.!"​

என்று சிரித்தவாறு கூறியவன்...,​

சட்டென்று அமைதியாகிவிட.​

தம்பியின் அமைதியில் இவன்​

"என்னாச்சுடா.?"​

என்ற கேள்வி எழுப்ப.​

" இல்லண்ணா, அவ ரொம்ப சின்னப் பொண்ணு.! அதான்."​

"அப்ப, நான் மட்டும் என்ன கிழவனா.?"​

என்றான். சிறிது கோபத்தோடு.​

"சே, சே அப்படி இல்ல.? வயசு வித்தியாசம் இருக்குல்ல. அதான்.!"​

என்றான் பாவமாக.​

" என்ன? பெரிய வித்தியாசம்.! ஏழு வயதெல்லாம் அப்படி ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.! நான் சொன்னத மட்டும் நீ செய்..."​

என்றான் வேகமாக.​

அமைதியாகிவிட்ட தம்பியைக் கண்டு இவனும் மனதிற்குள்ளாகவே​

'கேட்டுட்டு வந்து சொல்லுடான்னா. இப்பதான் வயசு வித்தியாசம் அது இதுன்னு பேசிகிட்டு இருக்கான். நானே அதை நினைச்சு பயந்துட்டு இருக்கேன். இவன் வேற நிலைமை புரியாம.'​

என்றான் மனதிற்குள் நொந்தபடி.​

நாற்காலியிலிருந்து மதி எழுந்து கொள்ள. இவனும் நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து தன் அறையை நோக்கிச் செல்ல அடி எடுத்து வைத்தவன் சற்றென்று அவசரமாக​

" மதி, அம்மா, அப்பாக்கு தெரிய வேண்டாம் இப்போதைக்கு"​

என்றான்.​

" ஏன்ணா.?"​

"காரணமா தான்டா, அப்புறமா சொல்லிக்கலாம்.!"​

என்றவனிடம் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தவனிடம், மீண்டும் வற்புறுத்திப் பெற்றோர்களுக்குத் தெரியக் கூடாது என அழுத்திக் கூறிவிட்டே... தன் அறையை நோக்கிச் சென்றான்.​

தம்பியிடம் தன் மனதில் உள்ளவற்றை சொல்லிவிட்ட திருப்தியோடு. தன் அறைக்கு வந்தவன். அமைதியாக மெத்தையில் அமர்ந்து விட்டான்.​

மனதில் உள்ளவற்றை தம்பியிடம் கூறி விட்டாலும். ஏனோ மனம் சஞ்சலமாகவே இருந்தது. இது சரி வருமா? என்ற கேள்வியும் சரி வந்தே ஆக வேண்டும்! என்ற பதிலும். இரு வேறு மனநிலையில் இருந்தாலும். முதல் முதலில் தன்னவளை பார்த்த நிகழ்வை நினைவு கூர்ந்தவனின் இதழ்களில் விரிந்து விட்ட சிரிப்பு. இதழ்களுடன் சேர்ந்து அவனின் கண்களும் சிரிப்பது அவனுக்குத் தனி அழகு தான்.!​

பிடி இருகும்...​

 
Last edited:

paasa nila

Moderator

அத்தியாயம் 7​


கல்லூரி வாசலில் காரை நிறுத்திய வேந்தன். இறங்க முற்பட்ட மகளையும் அவள் தோழியையும் பார்த்து​

"பார்த்துப் பத்திர மா இருங்கம்மா...!"​

"திரும்ப, கூப்பிட நான் வரவா?.."​

"வேண்டாம் பா, ரெண்டு மணி நேரத்துல முடிஞ்சிடும், இன்னைக்கு காலேஜ். நாங்களே வந்துக்றோம்.!"​

"சரிமா, பாத்து பத்திரமா வாங்க."​

என்றபடி விடை பெற்றார் வேந்தன்.​

ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு மகிழ்வுடன் கல்லூரிக்குள் கால் எடுத்து வைத்தார்கள்​

மலரும் கௌதமியும்.​

சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான கல்லூரிகளில் ஒன்று அது. சென்னையின் பிரதான இடத்தில் அமைந்துள்ள பெண்கள் கல்லூரி. தங்களைச் சுற்றி நடமாடும் தங்கள் சக வயதுடைய பெண்களையும் ஓரிரு வருடங்கள் அதிகம் உள்ள சீனியர் அக்காக்களையும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை இருவருக்கும்.​

"ஹேய் காலேஜுக்கு வந்துட்டோம் டி!.."​

"இனிமே, யாரும் நம்மள குட்டி பாப்பா என்று சொல்ல முடியாது! நாமளும் இன்றிலிருந்து பெரிய பிள்ளைகள் ஆயிட்டோம்?.."​

"செம ஜாலியா இருக்கு எனக்கு! வா, வா, நம்ம டிபார்ட்மெண்ட் எதுன்னு போய்த் தேடிப் பார்க்கலாம்?.."​

என்று குதித்தபடியே நடக்க ஆரம்பித்தாள் மலர்விழி.​

"மெதுவா போலான்டி! ஏன் ஓடுற?.."​

"அப்புறம், நாம ஒன்னும் அவ்வளவு பெரிய புள்ளைங்க எல்லாம் ஆகிடல? சரியா!.."​

"சரி டி, சரிடி வா, வா."​

என்றபடி​

தன் முன் சென்ற ஒரு பெண்ணிடம்.​

"ஹாய், இங்க சைக்காலஜி டிபார்ட்மென்ட் எங்க இருக்கு?.."​

"ஃபர்ஸ்ட் இயரா?.."​

"ஆமா!.."​

ஃபர்ஸ்ட் இயர் எல்லோரும் கான்பரன்ஸ் ஹால்'போகணும். வாங்க.நான் கூட்டிட்டு போறேன்."​

"ஓ, தேங்க்யூ!நீங்க எந்த இயர்? நான் பைனல் இயர். காமர்ஸ் டிபார்ட்மெண்ட்!.."​

என்றபடி அவர்களை அழைத்துச் சென்று, வேறொரு பெண்ணிடம் சென்று.​

"ஹேமா, இவங்க ஃபர்ஸ்ட் இயர். உன்னோட டிபார்ட்மென்ட்! டேக் கேர்."​

என்று கூறிவிட்டு.​

" பாய் கேர்ள்ஸ், குட் லக்!.."​

என்றபடி வேறொரு அறையை நோக்கிச் சென்றாள் அந்தப் பெண்.​

"ஹாய், வெல்கம் டு அவர் காலேஜ்!"​

என்று கூறிய ஹேமா. அவர்கள் இருவரையும் அந்தப் பெரிய கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு அழைத்துச் சென்றாள்.​

"இங்கே உட்காருங்க, பிரின்சி மேம், ஹச் ஓ டி மேம், எல்லாரும் அட்ரஸ் பண்ண பிறகு என்ன செய்யணும்னு சொல்லுவாங்க, அது படி கேட்டுக்கோங்க, ஓகே!"​

என்றபடி அவர்கள் இருவரையும் அமர வைத்து விட்டுச் சென்றாள் ஹேமா.​

அருகருகே அமர்ந்து கொண்டு மற்ற மாணவிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர் இருவரும்.​

சற்று நேரத்தில் கல்லூரியின் முதல்வர் வந்து அனைவரையும் வரவேற்று, கல்லூரியின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசியபின்,​

அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும், நட்போடு அனைவரோடும் பழக வேண்டும் என்ற அறிவுரையோடு, படிப்போடு சேர்ந்து மற்ற துறைகளிலும் கலந்து கொண்டு கல்லூரிக்குப் பெருமை சேர்த்து தர வேண்டும். என்றும் மூன்று வருடத்திற்கான வாழ்த்தையும், அவர்களுக்குத் தெரிவித்து விட்டு அவர்கள் டிபார்ட்மெண்டின்மாணவர் தலைவர் அவரவர்களை வழி நடத்துவார் என்று கூறிவிட்டு பெரும் கரகோஷத்துடன் விடை பெற்று சென்றார்.​

இவர்கள் முன்பு வந்து நின்ற மாணவர் தலைவி.​

(ஆங்கிலத்தில் பேசிய உரை உங்களுக்குத் தமிழில்)​

"ஹாய் பிரண்ட்ஸ்.எல்லாரும் எப்படி இருக்கீங்க?.."​

என்ற கேள்விக்கு ஓரிருவர் தவிர மற்ற அனைவரும் அமைதியாக இருப்பதை பார்த்து.​

"சத்தம் பத்தல?.."​

எனக் கூறிய பின்,​

"ஃபைன்"​

என்று அனைவரும் கோரசாகச் சத்தம் எழுப்ப, அந்த ஆடிட்டோரியமே மாணவிகளின் சத்தத்தால் அதிர்ந்தது.​

"கல்லூரியின் மாணவி தலைவராக உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!.. உங்கள் அனைவருக்கும் எந்த நேரத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் நீங்கள் எங்களை வந்து அணுகலாம்.​

உங்களுக்கு உதவி செய்வதற்கு, நாங்கள் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறோம்!.."​

"இப்பொழுது, உங்கள் அனைவரையும் காலேஜ் டூர் அழைத்துச் செல்வார் உங்களின் டிபார்ட்மென்ட் தலைவி."​

எனக் கூறிய பின் அனைவரும் அவரவர்களின் டிபார்ட்மெண்ட் தலைவியுடன் காலேஜ் டூர் என்று அவர்களின் வகுப்புகளையும் சோதனை கூடங்களையும் கேண்டினையும் சென்று பார்த்து அனைத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டார்கள் ஒவ்வொருவருடன் சலசலத்துக் கொண்டே.​

அனைத்து அனைத்தும் முடிந்தபின் அவரவர்கள்​

வகுப்பறையில் சென்று அமர்ந்து கொண்டனர். மலர் விழியும் கௌதமியும் நான்கு பேர் அமரக்கூடிய வகையில் அமைந்திருந்த இரண்டாம் ரோவின் நடுவில் சென்று அமர்ந்து கொண்டனர்.​

மலர்விழியின் இடது பக்கம் ஒரு பெண்ணும் கௌதமியின் வலது பக்கம் ஒரு பெண்ணும் வந்து அமர்ந்தார்கள். மலர்விழி தன் பக்கத்தில் வந்த அமர்ந்த பெண்ணுடனும் கௌதமி தன் பக்கத்தில் வந்த அமர்ந்த பெண்ணுடனும் பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே.​

"ஹேய், கௌவ். இங்க பாரேன்"​

என்று ஆரவாரமாக அழைத்தாள் மலர்,​

நிதானமாக, அவளைத் திரும்பிப் பார்த்தவளின் பார்வையில் அனல். அவள் பார்வையிலேயே தன் தவறை உணர்ந்த மலர்.விழிகளைச் சுருக்கி​

"சாரி "​

எனச் சத்தம் வராமல் வாயை அசைத்து அவள் கைகளைத் தடவி விட்டாள் கண்களைச் சுருக்கி.​

"என்ன சொல்லு"​

என்றாள்...​

"அது இவளுக்கும், பொம்மைனா பயமாண்டி. ஆனா எனக்கு டெடி பேர் பிடிக்கும் இல்ல. இவளுக்கு அது பார்த்தா கூடப் பயமா"​

என்றாள் தன்னைப் போல் ஒருவளை கண்டுவிட்ட மகிழ்வோடு...​

"ஓஹோ. பயந்தாங்கோலியும் பயந்தாங்கோலியும் ஃபிரண்ட் ஆயிட்டீங்க சரிதான்!...""​

என்றாள் ஒருவித நக்கலோடு.​

"கிண்டல் பண்றியா"​

"இல்லையே"​

"சரி, சரி. மீட் மை நியூ ஃபிரண்ட் திவ்யா"​

திவ்யா மீட் மை ஒன் அண்ட் ஒன்லி பெஸ்ட் பிரண்ட் கௌதமி"​

என்று, முறையே இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.​

"ஹாய் திவ்யா!.."​

"நீங்க எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?.."​

என்று கேட்டு, அவளின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது. அவள் பக்கம் இருந்த ஒரு குரல்…​

"மே ஐ கம் இன்"​

என்ற சத்தம் கேட்டு மூன்று பேரும்​

"யாரது"​

என்றனர், கோரசாக.​

கௌதமியின் பக்கத்திலிருந்து.​

"நான்தான், அகல்யா.நானும் உங்களுடைய ஜோதியில் சேர்ந்து கொள்ளலாமா".​

"ஓ, தாராளமா."​

என்றபடி நால்வரும் கட்டியணைத்துக் கொண்டார்கள், ஒருவரை ஒருவர். மகிழ்வோடு.​

பின்பு ஒருவரைப் பற்றி ஒருவரும் அவர்கள் படித்த பள்ளிகளைப் பற்றியும், அவர்களின் நண்பர்களைப் பற்றியும், அவர்களின் வீட்டைப் பற்றியும் அவர்கள் குடும்பத்தில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என அனைத்தைப் பற்றியும் பேசி முடித்திருந்தார்கள். அந்த அரை மணி நேரத்தில்.​

அகல்யா வீட்டிற்கு ஒரே பெண்.​

தாய் தந்தை இருவரும் அரசு வேலையில் இருக்கிறார்கள் நல்ல வருமானம் நல்ல வசதி.​

திவ்யா, இவளுக்குப் பள்ளி செல்லும் ஒரு தங்கை இருக்கிறாள். தந்தை ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். நடுத்தர வசதிகள் கொண்டவர்கள்.​

நல்ல நட்பு கிடைத்த மகிழ்வோடு மலரும் கௌதமியும் இருவரிடமும் விடை பெற்று வீடு செல்வதற்கு ஆட்டோ பிடிக்கச் சென்றனர்.​

"கௌவ்வு."​

"என்னடி, ?..."​

"கௌவ்வு!.."​

என்று ராகம் இழுத்தவளிடம்,​

"அடியே, ராகம் இலுக்காம என்னன்னு சொல்லு!.."​

" இல்ல, இன்னைக்கு நம்மளோட காலேஜ் ஃபர்ஸ்ட் டே ! அதனால அகல்யா கூடவும் திவ்யா கூடவும் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டு அப்புறமா வீட்டுக்குப் போலாமா.?"​

"மலரு, அப்பாக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவாங்க. ஒழுங்கா வீட்டுக்குக் கிளம்பலாம். பர்மிஷன் வாங்கிட்டு, அதுக்கு அப்புறம் வந்து ஐஸ்கிரீம் சாப்பிடலாம்.ஒரு நாள். சரியா!.."​

என்றபடி அவளின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி, பொறுப்பாக.​

ஊர்ரென்று வந்த நண்பியை பக்கவாட்டாக அனைத்துக் கொண்டு​

"மலரு குட்டி கோச்சிக்கிட்டியா?.."​

என்றாள் செல்லம் கொஞ்சியபடி."​

"போ"​

என்று கூறியபடி முகம் திரும்பியவளின் நாடியை பிடித்து, தன்னை நோக்கி இழுத்து,​

" நாளைக்கு கண்டிப்பா போலாம், சரியா!.."​

என்றளிடம் இவளும் சம்மதமாகத் தலையசைக்க தங்களின் தெருவின் தொடக்கத்தில் இறங்கி இருவரும் தங்களின் இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் சிரிப்புடன்.​

"ம்மா.!"​

என்று கத்தியபடி​

குதுகலத்துடன் வீட்டிற்கு வந்தவளுக்கு அவ்வளவு கதை இருந்தது அம்மாவிடம் சொல்வதற்கு.​

"என்னடி, எப்படி இருந்தது ஃபர்ஸ்ட் டேக்காலேஜ்?.."​

"செம்ம மா, ரொம்ப சூப்பரா இருந்தது!.."​

"ரெண்டு பிரெண்ட்ஸ் கிடைச்சாங்க புதுசா. அகல்யா, திவ்யா."​

"ரெண்டே ரெண்டு, பேர் தானா கிடைச்சாங்க, அதிசயமா இருக்கு?.."​

"ஆமா, இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே ல! அதனால, ரெண்டு பேரோட தான் பேச முடிஞ்சது. நாளைக்கு தான் நிறைய பேரை ஃப்ரெண்ட் பிடிக்கணும்."​

என்ற படியே தன் அறையை நோக்கிச் சென்றவளை பார்த்து​

" ஸ்னாக்ஸ் சாப்டியாடி?.."​

" சாப்பிட்டேன் மா."​

"சரி, டப்பாவை கழுவ போடு, ரூமுக்கு போய்த் தூங்கிடாத?முகம், கை, கால் கழுவிட்டு.சாப்பிட வா!.."​

என்ற அம்மாவின் நினைப்பை பொய்யாக்காமல் தன்னரைக்கு சென்று ஏசியை ஆன் செய்தவள் முகம்வரை போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள் கல்லூரி கனவுகளுடன்...​

பிடி இருகும்...​

 

paasa nila

Moderator

அத்தியாயம் 8​

தன் போல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை​

"பாம்"​

என்ற பேருந்தின் சத்தம் நிகழ் உலகிற்கு அழைத்து வந்தது.​

அலுவலகத்திற்கு அருகில் வந்து விட்டதை உணர்ந்த மாறன். தன் சிந்தனைகளை ஒத்தி வைத்துவிட்டு, அன்றாட வேலைகளைக் கவனிக்க சுறுசுறுப்பாகவே சென்றான் அலுவலகத்திற்குள்...​

வேலையில் ஆழ்ந்திருந்தாலும் அவ்வப்போது அன்றைய நிகழ்வுகள் மனதிற்குள் வந்தபடியே இருந்தன.​

மதியம் வரை எப்படியோ தன் வேலைகளைச் சமாளித்தவன், அதற்கு மேல் முடியாமல்.உணவு இடைவேளையில் மறுபடியும் நினைவு கூற ஆரம்பித்தான்.​

தம்பியோடு தனக்கு நடந்த உரையாடல்களையும், அன்று நடந்த நிகழ்வுகளையும்...​

தம்பியிடம்​

'கேட்டுப் பாரு?.. '​

எனத் தைரியமாகக் கூறிவிட்டாலும், என்ன நடக்குமோ, என்ன சொல்வார்களோ, என்ற அச்சம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது மாறனுக்கு.​

அன்று விரைவாக வீடு வந்தவன். வேகமாகத் தன் அறைக்குச் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு விரைவாகவே வந்தான், டைனிங் டேபிளுக்கு. தம்பி வந்து இருப்பானோ என்ற நோக்கத்துடன்!..​

சமையலறையில் ஏதோ உருட்டிக் கொண்டிருந்த அம்மாவிடம்.​

"அம்மா."​

என்ற இவனின் குரலைக் கேட்டு.​

"ஹான் மாறா, வந்துட்டியா!.. வா, வா, உனக்காகத் தான் கல்ல அடுப்பில் வைத்துவிட்டு, வெயிட் பண்ணிட்டு இருக்கேன்! நீ, வந்தவுடனே சுட, சுட தோசை வார்த்து கொடுப்பதற்காக!.."​

என்று கூறியபடியே தோசையை ஊற்ற ஆரம்பித்தார்.​

"ஹும்ம்!.."அப்பா எங்க?.. சாப்பிட்டாரா?.."​

"வெளியில தோட்டத்தில் தான் உட்கார்ந்து இருந்தாரு!.. நீ பாக்கலையா?.."​

என்றார் மகனை ஆராய்ச்சியாக.​

"இல்ல, கவனிக்கல!.. ஏதோ யோசனைல்ல வந்துட்டேன்!.."​

என்றான் சமாளிப்பாக.​

இதற்குமேல் அம்மாவிடம் பேச்சு கொடுத்தால், அவரைச் சமாளிப்பது கஷ்டம்.என்பதை அறிந்தவனாக, அமைதியாகவே அவர்​

வார்த்து கொடுத்த தோசைகளை உண்ண ஆரம்பித்தான் தேங்காய் சட்னியுடன்.​

"முட்டை தோசை ஒன்னு போடவா?.."​

வேண்டாம் என்று தலையாட்டியவனிடம் பெரும் சிந்தனை.​

'தம்பி வந்து விட்டானா !இல்லையா?..'​

என்று அம்மாவிடம் எப்படி கேட்பது!.​

என்று...அமைதியாக உணவருந்திக் கொண்டிருந்தவன்.​

தம்பியின் அறையை எட்டிப் பார்த்தான், அது இருளாக இருப்பதைக் கண்டு அவன் இன்னும் வரவில்லை என்பதை அறிந்து கொண்டு உண்பதை தொடர்ந்து கொண்டிருக்கும்போது.​

"அம்மா நான் வந்துட்டேன்!.."​

என்ற ஆரவாரத்துடன் தம்பியின் குரல் கேட்டு. அவ்வளவு மகிழ்ந்தான் மாறன், எப்பொழுதும் தம்பியின் வருகையை எண்ணி இவ்வளவு மகிழ்ந்ததில்லை அவன்.​

"அழகு பையா, வந்துட்டியா! வா, வா, நீயும் வந்து சூடா சாப்பிடு!.."​

என மகனிடம் கொஞ்சிக் கொண்டிருந்தவரைப் பார்த்து இதழ்கள் விரியத் தொடங்கியது மாறனுக்கு...​

தம்பிக்கும் அம்மாவிற்கும் இருந்த பிணைப்பைப் பார்த்துச் சிறிதே சிறிது பொறாமை இருந்தாலும் மகிழ்வே அதிகமாக இருந்தது அதில்...​

நாற்காலியில் அமரப் போனவனை பார்த்து,​

" டேய்! போய்க் கைக்கால் கழுவிட்டு வா, வந்து சாப்பிடு!.."​

என்ற அண்ணனின் கூற்றைத் தலையசைத்து கேட்டு​

"இதோ அண்ணா! 2 மினிட்ஸ்."​

என்ற படியே தன் அறையை நோக்கி ஓடிச் சென்றான் மதியழகன்.​

தம்பி வருவதற்குள்ளாகக் கைகளைக் கழுவி தன் அறை நோக்கிச் சென்றவனைப் பார்த்த ரேணுகா.​

" என்னப்பா அதுக்குள்ள எழுந்திட்ட! உனக்குத் தான் பொடி தோசை வார்த்தேன், சாப்பிட்டு இருக்கலாமே!.."​

என்றவரிடம்​

"இல்லம்மா! போதும்!.."​

என்ற படியே தம்பியின் அறையின் அருகே காத்திருந்தான் அவனின் வருகைக்காக.​

தன் வருகைக்காகக் காத்திருக்கும் அண்ணனிடம்​

"என்னண்ணா?.."​

என்றபடி வந்தான்.​

" சாப்பிட்டு. மொட்டை மாடிக்கு வா. அம்மாக்கு தெரியாம வாடா!.."​

"சரிண்ணா, சரிண்ணா!.. "என்ற படியே​

"அம்மா, எனக்கு ஒரு முட்டை தோசை, ஒரு பொடி தோசை, ஒரு நெய் தோசை"​

என அடுக்கிக் கொண்டே உணவு அருந்தச் சென்றான் மதியழகன்.​

"அழகு பையா, ஹோட்டல் மாதிரி ஆர்டர் பண்ணாம இருந்தா. நானே உனக்கு எல்லாம் செஞ்சு தருவேன். சரியா!.."​

என்றபடி தோசை கரண்டியுடன் வந்த அன்னையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே​

" சரி"​

என்று தலையாட்டினான் நல்ல பிள்ளையாக. அவனின் நாடி பிடித்து, செல்லம் கொஞ்சி விட்டு. குதித்த படியே சென்றார் அவன் கேட்டபடி தோசைகளை கொண்டு வருவதற்கு.​

மொட்டை மாடியில் தனக்காகக் காத்திருந்த அண்ணனை வெகுவாகக் காத்திருக்க வைக்காமல் விரைவாகவே உணவருந்தி வந்தான் மதி.​

" என்னண்ணா?.. சொல்லு!.."​

" நீ தான்டா சொல்லணும், பேசுனியா, இல்லையா? இன்பாகிட்ட!.."​

என்று கேட்க, தான் கேட்ட கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்த தம்பியைப் பார்த்தவன்.​

"எதுவாக இருந்தாலும் சொல்லுடா, பரவால்ல"​

என்றான் மெதுவாக.​

அண்ணனின் குறைந்துவிட்ட குரலில்​

"நீ ரொம்ப யோசிக்காத ண்ணா!.."​

பெருசா ஒன்னும் ஆகல!.."​

"எங்க அண்ணனுக்கு' உன்னுடைய தங்கச்சியை கட்டிக் கொடுக்குறீங்களாடான்னு?.." கேட்டேன்?.."​

"என்ன திடீர்னு இப்படி கேட்கிறேன்னு கேட்டான்?.."​

"நான் சும்மாதான் சொல்லுடான்னு… சொன்னேன்."​

அதற்கு அவன்,​

"கண்டிப்பா டிகிரி முடிச்சிட்ட பிறகுதான் அவளுடைய கல்யாணத்தைப் பற்றி அப்பா யோசிப்பார் !..​

அப்படின்னு சொல்லிட்டான்".​

என்றவனிடம்.​

"ஓஹோ!.."​

என்ற படியே சிந்தனையில் ஆழ​

"அவன் இன்னொன்னும் சொன்னான்!.." .​

"என்ன சொன்னான்?.."​

"உங்க அண்ணன்னா எனக்கு டபுள் ஓகே டான்னு சொன்னான்!.."​

என்றான் சிரித்தபடியே. தம்பியின் சிரிப்பு இவனுக்கும் ஒட்டிக்கொள்ள அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம்.​

"ஒன்னும் பிரச்சனை இல்லண்ணா, நீ வெயிட் பண்ணு! ஒரு மூணு வருஷம் தானே!.."​

" நான் வெயிட் பண்ணுவேன் டா, அம்மா வெயிட் பண்ணனுமே!.."​

என்றான் ஆதங்கத்துடன். அம்மாவின் திட்டமறிந்து.​

" அதெல்லாம் பாத்துக்கலாம்! நீ சில் ப்ரோ!.."​

என்றபடி கீழே இறங்கி சென்றான்.​

தம்பியின் பதிலில். லேசான மனதுடன், நிலவும், நட்சத்திரங்களும் இல்லாமல் வெறுமையாக இருந்த வானை அண்ணாந்து பார்த்தபடி.​

"கொஞ்சம் சீக்கிரமா பிறந்து தொலைத்து இருக்கக் கூடாதாடி நீ!.."​

"இல்ல! நான் கொஞ்சம் லேட்டா பிறந்து இருக்க கூடாதா?.."​

என்று மனதோடு நொந்தபடி அமைதியாகக் கைகளைக் கட்டிக்கொண்டு, வானில் நிலவைத் தேட ஆரம்பித்தான். அமாவாசை இரவன்று என்பதை தெரியாமலேயே.​

அன்றைய நிகழ்விலிருந்து வெளிவந்தவன்!​

தன் வேலைகளை முடித்து வீட்டிற்கு சென்று, எப்பொழுதும் போல் உணவருந்தி தன் அறைக்குச் சென்றான்.​

ஏதேதோ சிந்தனைகளுடனும் குழப்பத்துடனும் நேரம் கழித்து தூங்கியதால், விரைவாக எழுந்திருக்க முடியவில்லை மாறனுக்கு.​

தன் சீனியருக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாக, மெயில் அனுப்பிவிட்டு. மணியைப் பார்க்க, தன்னவள் வருவதற்கு இன்னும் பத்து நிமிடங்களே இருப்பதை அறிந்து கொண்டு… வேகமாக முகத்தை அலம்பி விட்டு, வாசலை நோக்கி விரைந்து சென்றான் இன்றாவது தன்னவளை பார்த்து விட வேண்டும் என்ற துடிப்புடன்.​

அறையின் அருகே தனக்காகக் காத்திருந்த அன்னையை கேள்வியுடன் பார்த்தபடி அவரைக் கடந்து செல்ல முற்படுகையில்.​

"தம்பி, என்ன இன்னைக்கு ஆபீஸ் போகலையா?.."​

என்று கவலையாகக் கேட்கும் அன்னையை தாண்டிச் செல்ல முடியாமல்...​

" இல்லம்மா! லேசா தலைவலி! அதான்."​

"ஓஹோ, அப்ப ஆபீஸ் போகலையா இன்னைக்கு. லீவா?.."​

"இல்ல, இல்ல, கொஞ்சம் லேட்டா போறேன்! ."​

"சரிப்பா, நான் போய் உனக்குச் சூடா காபி கொண்டு வரேன்!.."​

என்ற படி கிச்சனை நோக்கி விரைந்து செல்லும் தாயையே பரிவுடன் பார்த்தபடி நின்றவன். பெருமூச்செறிந்தபடி வாசலை நோக்கிச் சென்றான்.​

இவன் சென்ற வாசலில் நிற்பதற்கும் 10 அடி தூரத்தில் அவள் வருவதற்கும் சரியாக இருந்தது.​

அவளைப் பார்த்தவனின் கண்களில் மின்னல். அப்படி ஒன்றும் பேரழகி கிடையாது அவள்.​

அடர்ந்த கருமையான இடையிலிருந்து சற்றே மேல் வரை இருக்கும் தலைமுடி, எப்பொழுதும் இரு ஜடைகள் போட்டு அவைகளை முன் பக்கம் போட்டுக் கொள்வாள்.மாநிறம், மீன் போன்ற அழகிய கண்கள், அவனை வெகுவாகக் கவர்ந்து இழுக்கும் சப்பையான குட்டி மூக்கு, சரியான அளவில் இருக்கும் சற்றே சிவந்த இதழ்கள், குட்டி காது, அதில் எப்போதும் இருக்கும் குட்டி ஜிமிக்கி. காது மடலில் இருக்கும் குட்டி மரு. என, எதுவும் அவன் கண்களை விட்டு மறைந்ததில்லை. அவளையே கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன்.​

'விழி!​

ஒரு முறையாவது​

விழி நிமிர்த்தி​

என்னைப் பாருடி!..'​

என்றான் மனதிற்குள் ஏக்கமாக.​

எங்கே... இவனின் ஏக்கங்கள் அவள் காதில் சென்று விழுந்தால் தானே...​

இப்பொழுதும் அதே இரட்டை ஜடை முன் பக்க கூந்தல் தான். பள்ளி சீருடைக்கு பதிலாக ஆகாய வண்ண சுடிதாரில் தேவதையாக மிளிர்ந்தவளிடமிருந்து கண்களை அகற்ற முடியவில்லை அவனுக்கு.​

எப்பொழுதும் போல ஏதோ ஒரு சிந்தனையில் தன்னை கடந்து சென்றவளை பார்த்துப் பெருமூச்சுடன் உள்நோக்கிச் சென்றவனிடம் சூடான காபியை கொடுத்துவிட்டு அமைதியாகச் சென்றார் ரேணுகா.​

தான் வெளியிலிருந்து வருவதை பார்த்து விட்டு எதுவும் கேட்காமல் செல்லும் அன்னையை சிந்தனையோடு பார்த்தவன்...​

அதற்கு மேல் நில்லாமல் அலுவலகத்திற்கு நேரமாவதை உணர்ந்து தன் அறையை நோக்கிச் சென்றான் கிளம்புவதற்கு... பின் சற்றே நீதானித்து,​

"அம்மா, உடம்புக்கு ஒன்னும் இல்லையே! நல்லா தானே இருக்கீங்க!.."​

என்றான் சந்தேகத்துடன்.​

"ஒன்னும் இல்லையே!.. நல்லா தான் இருக்கேன்!.. ஏம்பா?.."​

என்றார் விஷயம் அறிந்து கொள்ளும் நோக்குடன்.​

இதற்கு மேல் அம்மாவிடம் வாயாடாமல் விரைவாகக் கிளம்பி விட்டவனின் நினைவு முழுவதும் தன் தாயிடமே தான். தன்னிடம் எதுவும் கேட்காமல் இருப்பவர் அல்லவே அவர் என்ற பெரும் குழப்பத்துடன் சென்றவனை பற்றிய சிந்தனை தான் அவனின் தாய்க்கும்.​

தன் மகன் மலர்விழியை ஏக்கமாகப் பார்ப்பதை பார்த்து விட்ட ரேணுகா விற்கும், தன் மகனின் மனதில் அவள் இருப்பாளோ!​

என்ற சந்தேகமே.​

தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளக்கூடிய ஒரே நபர் தன் இளைய மகன் என்பதை அறிந்து, அவன் வருகைக்காக. காத்திருக்க ஆரம்பித்தார்.​

மகனின் மனதில் ஒருத்தி இருப்பதில் மகிழ்வு தான் அவருக்கு. ஒரு மாதம் முன்பு நடந்த நிகழ்வுக்கும் காரணம் இதுவாகத்தான் இருக்குமோ என்ற சிந்தனையுடன் அன்று நடந்த நிகழ்வுகளை அசைபோட ஆரம்பித்தார் ரேணுகா கைகளில் வருத்த வேர்க்கடலைகளுடன்...​

பிடி இறுகும்...​

 
Last edited:

paasa nila

Moderator

அத்தியாயம் 9​தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தவரின் சிந்தனை திடீரெனத் தடைப்பட்டதில் குனிந்து தன் மடியில் இருந்த கிண்ணத்தை பார்த்தார்.​

அனைத்து வருத்தக் கடலைகளும் காலியாகி இருந்தது.​

'என்ன?அதுக்குள்ள காலி ஆயிடுச்சு!.. அவ்வளவு அதிகமாவா யோசிச்சு இருக்கோம் நம்ம!..'​

என்று தன்னையே சிலாகித்தவாறு காலியான கிண்ணத்தை கழுவி வைக்க எழுந்து சென்றார்.​

கிண்ணத்தை கழுவிய படியே​

'சிந்திச்சு, சிந்திச்சு டயர்ட் ஆகிவிட்டேன்.​

அழகு பையா வந்தபிறகு, அவன் கிட்ட கதையைக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்!...' என்று தனக்குள்ளாகவே பேசியபடி தோட்டத்தை நோக்கிச் சென்றார்.​

எப்போதும் தன்னை மயக்கும் மலர்களை நோக்கி.​

"பூவ பூவ பூவ பூவ பூவே பூவே"​

என்று சத்தமாகப் பாடியபடி.​

'உங்களுக்கெல்லாம் போட்டியா மலர் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒருத்தி வரப் போறான்னு நினைக்கிறேன்!..'​

'எதுக்கும் நீங்க எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க சரியா!..'​

என்றார் அழகான இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த ரோஜாவிடம்.​

இவருக்கு எப்போதுமே ஒரு பழக்கம் ரோஜாவைப் பறிப்பது இவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. இலையோடும், முள்ளோடும், ரோஜாவைப் பார்ப்பதில் தான் இவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி...​

பூக்களைத் தொட்டு தடவி அதன் மென்மையை ரசித்து அதன் வாசனையை முகர்ந்து, எனத் தன் தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். மகிழ்வுடன்.​

சத்தம் இல்லாமல் தாயின் பின்னே வந்து நின்ற மதியழகன்,​

"அம்மா!.."​

என்றான் சத்தமாக. அதில் அதிர்ந்து திரும்பியவர்,​

" என்னடா?.. இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட! நான் இன்னும் எதுவும் சமைக்கலையே!.."​

"பரவால்லம்மா! மெதுவாவே செய்யுங்க!.."​

"எனக்கு நிறைய படிக்க இருக்கு, அதுதான் காலேஜ் லைப்ரரியிலிருந்து புக் மட்டும் எடுத்துட்டு வந்துட்டேன், நீங்கப் பொறுமையாவே சமைங்க ஓகேவா!.."​

"சரி, சொல்லு!.. என்ன சமைக்கட்டும்?.."​

"என்ன, ரேணு பேபி?.."​

எனக்குப் பிடிச்சது சமைக்க போறீங்களா? எப்பவும் உங்க பெரிய பையனுக்குப் பிடிச்சது தான சமைப்பீங்க!..இப்ப என்ன புதுசா!.."​

என்றான் அன்னையிடம் வம்பு வளர்க்கும் நோக்கோடு.​

"ஏன்டா? உனக்குப் பிடிச்சத நான் சமைச்சதே இல்லையா?.."​

என்றார் கோபமாக.​

"சும்மா மா, சும்மா மா, கோச்சிக்கிட்டியா!.."​

என்றான் அவரைக் கொஞ்சியபடி.​

"ஒன்னும் வேணாம் போ!.."​

என்றபடி அவனைத் தள்ளிவிட்டு முன் நடந்து சென்றவரைப் பின் இருந்து அனைத்து படியே. அவருடன் கிச்சனுக்குள் சென்றவன்.​

"என்ன செய்யப் போறீங்க?.."​

அமைதியாக இருந்த தாயிடம்.​

"எனக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்கே தெரியும்!..அப்புறம் ஏன் கேக்குறீங்க?..."உங்களுக்குப் பிடிச்சது எனக்கும் பிடிக்கும்!.."​

என்றபடி அன்னையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு தன் அறையை நோக்கிச் சென்றான். செல்லும் மகனையே சிரிப்புடன் பார்த்தவர் பூண்டை எடுத்து உரிக்க ஆரம்பித்தார்.​

' நல்ல காரமா நிறைய சின்ன வெங்காயம் போட்டு நிறைய பூண்டு குட்டி குட்டியா வெட்டிப் போட்டு நல்லெண்ணெய் ஊத்தி பூண்டு குழம்பு வச்சு, முட்டை ஆம்லெட், அவ்வளவுதான் இன்றைய சமையல்'​

என்று தனக்குள்ளாகவே பேசியபடி சமைக்க ஆரம்பித்தார்.​

மனதிற்குள் சின்னவனிடம் பெரியவனை பற்றி எப்படி கேட்க வேண்டும் என்ற சிந்தனை ஓடிக் கொண்டே இருந்தது.​

"அழகு பையா, சாப்பிட வா!.."​

என்று இவர் அழைப்பதற்கும் அவன் வருவதற்கும் சரியாக இருந்தது.​

"பூண்டு குழம்பா ? சூப்பர்மா, சூப்பர்மா!.."​

என்ற சப்பு கொட்டியபடி உணவை ஒரு பிடி பிடித்தான்.​

அவன் உண்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவர் எங்கு எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.​

அம்மாவின் தீவிர யோசனையைப் பார்த்த மதி​

, "என்னம்மா? ரொம்ப பெரிய யோசனைபோல!.."​

என்றான்.​

அதற்காகவே காத்திருந்தவர் போல​

"ஆமா, மாறன் யாரையாவது லவ் பண்றானா?.."​

"என்னம்மா திடீர்னு கேக்குறீங்க?.."​

என்றான் சந்தேகமாக​

"கேட்டதுக்கு பதில் சொல்லுடா!.."​

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே மா?.."​

" ஒன்னும் இல்ல? இத நான் நம்பனும்!.."​

" என்ன தெரியணும் உங்களுக்கு! நேரா கேளுங்க?.."​

"நான் பாத்துட்டேன்!.."​

" என்ன பார்த்தீங்க?.."​

என்றான் குழப்பமாக.​

"இந்த மாறன் பையன், காலைல காலைல வாசலுக்குப் போறானே, அது ஏன்னு? இன்னைக்கு கண்டுபிடிச்சிட்டேன் நான்!.."​

"ஓஹோ! சரி!.."​

நடிக்காத டா!உனக்குத் தெரியும்னு எனக்கும் தெரியும், அது எனக்குத் தெரியும்னும் உனக்குத் தெரியும்."​

என்றார் சிரிப்போடு.​

"அந்தப் பொண்ணு, உன் பிரண்டு இன்பாவுடைய தங்கச்சி தானே! இந்தத் தெருவோட கடைசி வீட்ல இருக்காங்களே! ரொம்ப பேசினது இல்ல அவங்களோட? ஆனா பாத்திருக்கேன் அவங்கள!.."​

என்றபடியே சிறிது யோசித்தவர்,​

"அப்பா கிட்ட சொல்லி, நான் போய் அவங்க வீட்ல பேசலாம்னு இருக்கேன்!..."​

"அம்மா, அம்மா! சும்மா இரும்மா, நீயா எதையாவது கிளப்பி விடாத?..​

அண்ணனுக்குத் தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவான்! அவனே உன்கிட்ட சொல்லுவான், அதுவரைக்கும் காத்திரு!.."​

"ஏன்டா கோபப்படுவான்?..."​

"அவனுக்கு நல்லது தானே நான் செய்றேன்!..​

"நீ ஒரு நல்லதும் செய்ய வேண்டாம்! இப்போதைக்கு சும்மா இரு, அவனே நேரம் பார்த்து உன்கிட்டயும், அப்பாகிட்டயும் சொல்லுவான் சரியா?."​

இளைய மகன் சொல்வதில் ஏதேனும் காரணம் இருக்கும் என்பதை உணர்ந்த ரேணுகா.​

சரி என்பது போல் வேகமாகத் தலையாட்டிக்கொண்டார்.​

ஒரு வழியாக அம்மாவைச் சமாளித்து விட்டதை எண்ணி திருப்திப்பட்டுக் கொண்டவன்.அண்ணன் வந்ததும், இதை அவனின் காதில் ஓதி விட வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டு, தன் அறையை நோக்கிச் சென்றான் பாதியில் விட்டு வந்த படிப்பைத் தொடர்வதற்கு...​

எப்பொழுதும் வீட்டுக்குள் நுழையும்போது,​

"ம்மா"​

என்று ஆரவாரமாகக் கத்திக் கொண்டே நுழையும் மகள் இன்று அமைதியாக வருவதை கண்டு யோசனையான தாமரை.​

"என்னடி ஆச்சு? அமைதியா இருக்க என்றார்!.."​

" ப்ச்சு, ஒன்னும் இல்லம்மா!.."​

என்றால் சலிப்பாக.​

"என்னடி, ரொம்ப தான் சலிச்சிக்கிற கேட்டா?.."​

"ஒன்னும் இல்லமா!.."​

என்றபடி வயிற்றில் இரு கைகளையும் கட்டிய படி முன்பக்கமாக முட்டியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டாள் சோர்வாக.​

அவளின் சோர்வை கண்டவராக.​

"சரி! போ, போய்க் குளிச்சிட்டு வா, வந்து சாப்பிடு. சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு!.."​

"ஹும்ம்!.."​

என்று முனங்கியபடியே தன் அறையை நோக்கிச் சென்றாள்.​

மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த வேந்தன். கையில் ஒரு பெரிய பையுடன் உள் நுழைந்தார்...​

"குட்டி வந்தாச்சா?.."​

என்ற கேள்வியுடன்.​

"இப்பதான் வந்தா! ரூம்ல இருக்கா!.."​

என்று மனைவியின் கூற்றைக் கேட்டபடியே. மகளின் அறைக்குள் நுழைந்தார் வேந்தன்.​

வயிற்றில் இரு கைகளில் கட்டியபடி சுருண்டு படுத்திருந்த மகளைப் பார்த்தவர், அவளின் அருகில் அமர்ந்து, தலையை வருடியபடி.​

"என்னம்மா வயிறு ரொம்ப வலிக்குதா?.."​

என்றார்.​

"ஆமப்பா!.."​

என்றபடி தலகாணியிலிருந்து தலையை நகர்த்தி தந்தையின் மடிக்கு மாற்றிக் கொண்டவள்.​

இன்னும் தன்னை சுருக்கிக் கொண்டாள்.தந்தையின் மடிச்சூடு தந்த சுகத்தில். மகளுக்கு வாகாக நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டவர் அவள் முகத்தில் படர்ந்து இருந்த முடிகளை மென்மையாக விலக்கி நெற்றியையும் வருடிக் கண்களையும் லேசாக நீவி விட்டார்.​

அந்த வருடல் தந்த சுகத்தில் கண்களையும் இறுக்கமாக மூடித் தூங்க முற்பட்டாள்.​

தூங்க முற்படும் மகளைப் பார்த்து.​

"தூங்காத மா! சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு தூங்கு!.."​

என்றார்.​

"ஏன் பா மாத்திரை?.."​

"வயிறு வலிக்குதுன்னு, சொன்னியே!. அதுக்கு தான்"​

"ஹும்ம்!..​

"என்று சொன்னபடி இன்னும் சுருண்ட மகளைக் கண்டு அவள் கால்களை மெதுவாகப் பிடித்து விட ஆரம்பித்தார்.​

இந்த இதம் தந்த சுகத்தில் கண்மூடி இருந்தவளிடம்.​

'எழுந்து செல்'​

என்று கூற முடியாமல், அமைதியாக அவள் கால்களைப் பிடித்தபடியே அமர்ந்திருந்தார்.​

டைனிங் டேபிளில் மகனின் வரவிற்காகக் காத்திருந்த மாமியாரை,​

"அவங்க வரும்போது வரட்டும், நீங்க முதல்ல சாப்பிடுங்க!.."​

என்று, சற்று அதட்டி விட்டு அவருக்கு​

சாப்பாடு வைத்துக் கொடுத்தவர்.​

மகளும் வராமல், அவளை அழைக்கச் சென்ற கணவரும் வராமல் இருப்பதை பார்த்து, மகள் அறைக்குள் வந்து எட்டிப் பார்த்தார் தாமரை...​

தந்தை மகளின் பாசப்பினப்பை சிறிது நேரம் அமைதியாக நின்று பார்த்தவர்.​

"என்ன ஆச்சு?.."​

என்றார் கணவரிடம் செய்கையில்.​

"வயிறு வலி!.."​

என்றார்.அவரும் வாயை அசைந்து.​

சிறிது நேரம் மகளையே பார்த்து நின்றவர்...​

"மலர், சாப்பிட்டு வந்து படு!.."​

என்றார்.​

என்ன சொன்னால் எழுந்து செல்வாளோ அதைச் சொல்ல ஆரம்பித்தார்...​

"அப்பாவும் சாப்பிடாமல் இருக்கிறாங்க பாரு!.."​

அவரின் எண்ணத்தைப் பொய்யாக்காமல் எழுந்த மகளைப் பார்த்தபடியே வெளியேறினார் தாமரை...​

அமைதியாகக் கழிவறையை நோக்கிச் சென்ற மகளைப் பார்த்து.​

"கவர், பெட் மேல வச்சிருக்கேன் பாரு மா!.."​

என்றபடி வெளியேறிய தந்தையை பார்த்து.​

'என்ன கவரு?'.​

என்று சிந்தித்த படியே கவரை திறந்து பார்த்தவளுக்கு தன் மாதவிடாய் உபயோகத்திற்கு தேவையான பொருட்கள் இருப்பதை பார்த்து.​

'அதற்குள்ள நாளாயிடுச்சா?..'​

என்று யோசித்தபடி நின்று இருந்தாள் சிறிது நேரம்.​

கழிவறைக்கு சென்றவள் தந்தை வாங்கி வந்த பொருட்களுக்கான தேவை வந்துவிட்டதை உணர்ந்து அவைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் சென்றாள் கழிவறைக்குள்.​

தன்னை பற்றித் தன்னைவிட தன் தந்தைக்கு அதிகம் தெரிந்திருப்பதை நினைத்தபடியே.​

சோர்வாக வந்த மகளைப் பார்த்தவர்.​

தட்டில் சோற்றை போட்டுக் குழம்பும் அதிகமான காய் பொரியல் வைத்து நன்றாகப் பிசைந்து அவள் வந்து அருகில் அமர்ந்தவுடன் ஊட்ட ஆரம்பித்தார் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து.​

உண்டு முடித்துத் தாய் கொடுத்த மாத்திரை போட்டுத் தன் அறைக்குச் சென்றவளை சிறிது நேரத்தில்.​

"மலரு"​

என்று கதறி அழுதபடியே வந்து இறுக அணைத்துக் கொண்டாள் கௌதமி.​

பிடி இருகும்...​

 

admin

Administrator
Staff member

அத்தியாயம் 10​

"மலரு"​

என்ற கதறலுடன் தன்னை தாவி வந்து அனைத்த கௌதமியை, ஒன்றும் புரியாத நிலையில் உடல் உபாதையும் சேர்ந்த சோர்வையும் மீறி இறுக அணைத்துக் கொண்டாள் மலர்..​

அவளின் முதுகை வருடி கொடுத்து, என்ன ஏது என்று எதுவும் கேட்காமல் சிறிது நேரம் அவளை அழ விட்டவள்.. அவள் சற்று ஆசுவாசமடைந்த பின்பு குவளையில் இருந்த தண்ணீரை அவளுக்கு கொடுத்து கட்டிலில் தன் அருகில் அமர வைத்து.. அவள் முதுகை நீவி விட்டபடி அமர்ந்திருந்தாள் எதுவும் பேசாமல்...​

மன உளைச்சலில் தன்னை போல் ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்த கௌதமியும் நண்பியின் வருடலில் அமைதியாக அவள் தோல் சாய்ந்து விசும்பி கொண்டிருந்தாள்...​

அவளின் அழுகை வெகுவாக குறைந்து விட்ட பின்பு அவள் முகத்தை நிமிர்த்தி தன் சுடிதார் துப்பட்டாவால் அவளின் கண்களையும் முகத்தையும் துடைத்து விட்டவள் அவள் தலையை முடிகளை சரி செய்தபடி​

" என்ன ஆச்சு? இப்ப சொல்லு "​

என்றாள்.​

மீண்டும் குளம் போல் கண்களில் நிறைந்துவிட்ட நீரோடு..​

" எதுவுமே செய்யாம கூட குழந்தை பிறக்குமா மலரு?.."​

என அப்பாவியாக கேட்டாள் கௌதமி... நண்பி கேட்ட கேள்வியில் ஒன்றும் புரியாமல் குழப்பத்தோடு அவளை நோக்கியவள்..​

"ஹேன்,என்ன கேட்ட? திரும்ப சொல்லு!.."​

என்றாள்..​

"நாம படிச்சோமே டி! சயின்ஸ் கிளாஸ்ல,அதெல்லாம் நடக்காம கூட குழந்தை பிறக்குமா?.. "​

"என்னடி, லூசு மாதிரி கேக்குற?என்ன ஆச்சு? ஒழுங்கா சொல்லு!.."​

"உனக்கே தெரியும், எனக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ் வரும்னு!.."​

"ஆமா! அதுக்கு என்ன? இப்போ.."​

"அதுக்காக எங்க சித்தி, அப்பா கிட்ட சொல்லி என்னை இன்னைக்கு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனாங்க!.."​

"சரி!.."​

"அங்க என்னை செக் பண்ண டாக்டர், ஒரு மாதிரி நக்கலா என்னை பார்த்துக்கிட்டு கேக்குறாங்க,​

"என்னம்மா ஏதாவது அஃபர்(காதல்) இருக்கான்னு!.."​

" அய்யய்யோ.. அப்புறம்!.."​

என்றாள் மலர் அதிர்வாக...​

" முதல்ல அவங்க கேட்டது எனக்கு புரியவே இல்லை! அப்புறம் புரிஞ்ச உடனே...இல்ல, இல்ல, எனக்கு அந்த மாதிரி எதுவுமே இல்ல அப்படின்னு நான் சொன்னேன்!.."​

வேகமா..​

" எங்க சித்தியும், அப்பாவும் என்னை முறைச்சு பார்த்துக்கிட்டே இருந்தாங்க...,எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு!.."​

அதுக்கு அந்த டாக்டர் சொல்றாங்க,​

"எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு, பிளட் டெஸ்ட் கொடுத்துட்டு போங்க.. நாளைக்கு ரிசல்ட் வந்த பிறகு தெரியும் என்னன்னு?"​

"அப்படின்னு என்னை பார்த்து ஒரு மாதிரி கேவலமா பார்த்துக்கிட்டே சொல்றாங்க..! எனக்கு அப்படியே உடம்பெல்லாம் கூசி போச்சு, அங்கேயே செத்துட்டா நல்லா இருக்கும்னு தோணுச்சு!.."​

என்றபடி பெரும் கேவலுடன் மறுபடியும் மலரை இருக அனைத்து கொண்டு கதறி விட்டாள் சத்தமாக..​

"ஹேய், ஹேய், லூசு! அடி வாங்க போற நீ!.."​

"அந்த டாக்டர் தான் லூசு மாதிரி ஒளருதுன்னா நீயும் அதே மாதிரி பேசுற.. அப்படி எல்லாம் ஒண்ணுமே இருக்காது, வேற ஏதாவது ப்ராப்ளம் இருக்கும்! பிளட் டெஸ்ட் கொடுத்துட்டியா?.."​

" ஆமா,கொடுத்துட்டு தான் வந்தோம்.. நாளைக்கு வர சொல்லி இருக்காங்க.. "​

" ஆட்டோல ,திரும்ப வரும்போது எதுவுமே பேசாம சித்தியும் அப்பாவும் அமைதியா வந்தாங்க.. "​

"வீட்டுக்கு வந்ததும் சித்தி சொல்றாங்க வீட்ல எங்க தங்கி இருக்கா, இவ, காலேஜ் விட்டு வந்தா உடனே வீடு வீடா போறா என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ யாருக்கு என்ன தெரியும் அப்படின்னு அப்பா முன்னாடி சொன்னாங்க.."​

" அதுக்கு அப்பா என்ன சொன்னாரு?.."​

என்று கேட்டாள் கோபத்தை அடக்கியவளாக..​

" அப்பா எதுவுமே சொல்லல, நிமிர்ந்து என்னை ஒரு பார்வை மட்டும் பார்த்தார்.. அதுக்கு அப்புறம் ரூமுக்குள்ள போயிட்டாரு..!"​

" அக்கா மட்டும்தான் சித்தி கிட்ட சொன்னாங்க, அப்படி எல்லாம் அவ எதுவுமே செய்ய மாட்டா அந்த தைரியம் எல்லாம் இவளுக்கு கிடையாது அப்படின்னு..!"​

" அதுக்கு சித்தி ஏதோ முனங்கிகிட்டே அவங்களும் அப்பா பின்னாடி போயிட்டாங்க.. எனக்கு அதுக்கு மேல அங்க இருக்க முடியல!.."​

உன்ன பார்க்கணும் உன்கிட்ட இத பத்தி இப்பவே சொல்லணும்னு ஓடி வந்துட்டேன்!.."​

என்றபடி அவள் மடியில் படுத்து கொண்டவளின் முதுகு குலுங்கியது அதிகமான அழுகையால்...​

"சரி, நீ பயப்படாத ஒன்றும் ஆகாது! நாளைக்கு ரிசல்ட் வந்த பிறகு இருக்கு அவங்களுக்கு, நானே வந்து அந்த டாக்டர் மேல கேஸ் கொடுக்கிறேன் இரு!.."​

என்றபடி தன் கோபத்தை காட்டும் விதமாக மெத்தையின் மேல் இருந்த குட்டி பொம்மை தலகாணியை தூக்கி எரிந்தாள் ஓரமாக.. அது குதித்துச் சென்று ஓரமாக விழுந்தது..​

" சரி, இன்னைக்கு இங்கேயே தங்கிக்கிறியா? நான் அப்பாகிட்ட உங்க வீட்ல போய் சொல்ல சொல்றேன்.. "​

"அய்யய்யோ! வேணாம், வேணாம் மலரு, ஏற்கனவே சித்தி ஒரு மாதிரி பேசுறாங்க ,பாக்குறாங்க இன்னும் நான் இங்க தங்கிட்டேனா அவ்வளவுதான்! நான் வீட்டுக்கு போறேன்!.."​

என்றபடி மெதுவாக எழுந்து செல்ல முயன்றவளை பார்த்து..​

" ஓகே வாடி! பரவா இல்லையா உனக்கு!.."​

என்றாள் தோழியின் கண்ணீரை தாங்கிக் கொள்ள முடியாமல்..​

"ம்ம்ம்"​

என்றபடி மெதுவாக முனங்கியவளிடம்..​

"சாப்டியா டி? ஏதாவது!.."​

" ஆமா,அதுதான் இப்போ கேடு எனக்கு!.."​

என்று தன்னைத்தானே நொந்தபடி வெளியேறி செல்ல இருந்தவளை, இழுத்துக் கொண்டு சென்றாள் டைனிங் டேபிளுக்கு..​

இரவு உணவாக சூடாக சப்பாத்தி போட்டு கொண்டிருந்த, அன்னையைப் பார்த்த மலர்..​

" அம்மா கௌதமி வந்திருக்கா! சாப்பாடு ரெடியா!.."​

"ரெடி,ரெடி , உக்காருங்க.. ரெண்டு பேரும், சாப்பாடு கொண்டு வரேன்!.."​

என்றார் தாமரை..​

" மலர், வயிறு வலி எப்படி இருக்கு?.."​

என்று மகளிடம் கேட்டபடியே,​

சப்பாத்தி சுட்டு எடுத்துக் கொண்டிருந்தவர்..​

மகள் எதுவும் சொல்லாமல் இருக்க, அவளை திரும்பி பார்த்தார்..​

கேள்வியாக, அன்னை தன்னை கவனிப்பதை பார்த்துவிட்டு கௌதமியிடம் எதுவும் கேட்கும் முன்பாகவே..​

" பரவால்லம்மா! சரி ஆயிடுச்சு!.."​

என்றாள் வேக வேகமாக..​

"மலர் போய் பாட்டியையும் கூட்டிட்டு வா!.. சாப்பிடுவதற்கு.."​

என்ற தாயின் பேச்சுக்கேற்ப பாட்டியை அழைக்க சென்றாள்..​

சாப்பிட வந்து அமர்ந்த கோமதி அம்மா கௌதமி அமர்ந்திருப்பதை பார்த்து,​

" என்ன கௌதமி, இரவு, நேரம் சென்று, வந்திருக்க.. பொம்பள பிள்ளை இவ்வளவு நேரத்துக்கு வீட்டில இருக்க வேணாமா?.."​

என்றார் சற்றே அதட்டலாக,​

இதையே சொல்லி ஏற்கனவே சித்தியிடம் திட்டு வாங்கியதால் நின்றுவிட்ட அழுகை மறுபடியும் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டே,​

" இதோ கிளம்பிட்டேன் பாட்டி!.."​

என்றபடி எழுந்தவளை​

"சாப்பிட்டு போ!.."​

என்றார் அவளிடம் தட்டை நகர்த்திக் கொண்டே..​

இதற்கு மேல் பாட்டி எதுவும் பேசி விடுவாரோ அல்லது கேட்டுவிடுவாரோ என்று பயந்து கொண்டு, தாமரை கொண்டு வந்து வைத்த சப்பாத்திகளை வேக வேகமாக எடுத்து உண்ண ஆரம்பித்தாள் கௌதமி​

"மெதுவா சாப்பிடு, விக்கிக்க போகுது!.."​

என்று கூறியபடியே, தனக்கான சப்பாத்திகளை எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தார் பாட்டி..​

மலரின் கட்டாயத்தால் இரண்டு சப்பாத்திகளை கடினப்பட்டு எந்த சுவையும் அறியாமல் விழுங்கியவள்,​

விடை பெற்று சென்றாள் கனத்த மனதோடு..​

தன் வீட்டிற்கு செல்லும் தோழியின் கைகளை பிடித்து அழுத்தி வார்த்தைகளில் அல்லாமல் செயலில் அவளுக்கு தைரியத்தை கொடுத்து அனுப்பினாள் மலர்..​

அமைதியாக சென்று தன் அறையில் படுத்து கொண்டவள்.. நாளை விடியலுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் கனத்த மனத்தோடு...​

எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாகவே விடிந்தது அன்றைய காலை.. சனிக்கிழமை ஆனதால் அன்று கல்லூரி இல்லை அவளுக்கு... நேரம் சென்று இரவு தூங்கியதால் மதிய சாப்பாடு நேரம் நெருங்கவே வெளியில் வந்தாள் அறையை விட்டு..வயிற்று வலி குறைந்து இருந்தாலும் அதன் தாக்கம் இருக்கவே செய்தது உடலில்..​

அறையை விட்டு வெளியே வந்தவள்.. கால் நீட்டி அமர்ந்திருந்த பாட்டியின் மடியில் சென்று தலை வைத்து படுத்துக் கொண்டாள்,​

மெதுவாக பாட்டியின் கையை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டவள் கண்களை மூடி கொண்டாள்.. முடிகளுக்கு இடையே விரல் நுழைத்து பேன் எடுப்பது போல அவர் செய்வது மிகுந்த சுகத்தை கொடுக்கும் இவளுக்கு...​

இதற்காகவே அடிக்கடி பாட்டியின் மடியில் வந்து படுத்துக் கொள்வாள்.. இவளின் எண்ணம் உணர்ந்த பாட்டியும் அவளை மயங்க வைக்கும் செயலை செய்ய ஆரம்பித்தார்...​

மகளையும் மாமியாரையும் எட்டிப் பார்த்த தாமரை குவளை நிறைய வெந்தயம் போட்ட மோரைக் கொண்டு வந்து கொடுத்தார் இருவருக்கும்...​

"ஏம்மா, சாப்பாடு ரெடி ஆகலையா?.."​

என்றார் பாட்டி மோர் குவலையை வாங்கிக் கொண்டே!.."​

"இல்ல அத்தை, அரை மணி நேரம் ஆகும்! நீங்களும் வயிறு கடுக்குதுன்னு சொன்னீங்க இல்ல! அதான் கொஞ்சம் வெந்தயம் போட்டு கொண்டு வந்து இருக்கேன், குடிங்க ரெண்டு பேரும்!.."​

என்ற படியே சமையலறையை நோக்கி சென்றார்..​

மோரை குடித்து முடித்தவள் அவரின் முந்தானையில் வாயை துடைத்து விட்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள் பாட்டியின் மடியில்..​

அமைதியாக படுத்து இருந்தவள்​

"வா கௌதமி!.."​

என்ற பாட்டியின் குரலில், அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்து கொண்டாள்..​

முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் அமைதியாக வந்து நின்ற தோழியை பார்த்தவள் விரைவாக அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள் தன் அறைக்கு..​

வேகமாகச் சொல்லும் இருவரையும் பார்த்தவர்..​

" என்ன ஆச்சு இந்த பிள்ளைகளுக்கு!.."​

என்ற படியே நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டார்..​

அறைக்குள் வந்தவள்..​

" என்ன ஆச்சு டி? போனியா டாக்டர் கிட்ட!.." என்ன சொன்னாங்க?.."​

என்று கேட்டாள் வேகவேகமாக..​

அமைதியாக அவளை பார்த்தவள் மருத்துவமனையில் நடந்ததை நினைத்து பார்க்க ஆரம்பித்தாள் கௌதமி..​

மிகுந்த பயத்தோடும் படபடப்போடும் அப்பா மற்றும் சித்தியுடன் மருத்துவரின் அறைக்குள் நுழைந்தவளுக்கு காய்ச்சல் வந்து விடுமோ என்ற நிலை..​

தன்னருகே அமர்ந்தவளின் கைகளை சட்டென்று பிடித்துக் கொண்ட மருத்துவர்,​

"ரொம்ப சாரி மா, இந்த மாதிரி நான் நிறைய பேரை பார்க்கிறேன் இப்போ, அதனாலதான் யோசிக்காம உன்னை அந்த கேள்வி கேட்டுட்டேன்!.."​

"மனசுல எதுவும் வச்சிக்காத!.."​

என்றபடி அவளின் தந்தையை பார்த்து​

"உங்க வீட்ல யாராவது நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்காங்களா?.."​

என்ற கேள்வியை கேட்டார்..​

"ஆமா, என் மனைவி, இவளுடைய அம்மா அதனாலதான் இறந்தாங்க"​

என்றார் வருத்தமாக..​

"ஓஹோ, உங்க மகளும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கா!.."​

என்ற மருத்துவரை பார்த்து அதிர்ச்சியாக​

"என்ன டாக்டர் சொல்றீங்க, இந்த வயசுல சுகரா?.."​

"சுகருக்கு எந்த வயசும் கிடையாதுங்க!.."​

"வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு நோய் இருந்தா அவ எதிர்காலம் என்ன ஆகும்!.."​

என்றார் சித்தி பரிதாபமாக.. அத்துடன்,​

"வேற எதுவும் பிரச்சனை இல்லையே? நீங்க சந்தேகப்பட்ட மாதிரி எல்லாம் எதுவும் இல்லையே!.."​

என்றார் உறுதிப்படுத்திக் கொள்ளும் குரலோடு...​

"இல்ல? இல்ல? அப்படியெல்லாம் எதுவுமே இல்லை?.. நீரழிவு நோயால் சில பேருக்கு பீரியட்ஸ் வராம இருப்பது சகஜம் தான்.. ஒரு ஒருவருக்கு ஒரு ஒருவாரு அறிகுறி காட்டும்.."​

என்றவர் சற்றே கோபத்துடன்..​

"இங்க பாருங்க அம்மா இது ஒரு நோய் கிடையாது, இது ஒரு குறைபாடு.. அதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க"​

" சரியான டயட் ,மருந்து எடுத்துக் கொண்டாலே இதை கண்ட்ரோல்ல வைக்கலாம்.. அவங்களுக்கு தான் நீங்க தைரியம் சொல்லணும்.. அதை விட்டுட்டு பயம் காட்டக்கூடாது, இது ஒரு பெரிய விஷயமே இல்ல, இப்போ நிறைய பேருக்கு இப்படி ஆகுது.."​

"இதுக்கு என்ன காரணம் டாக்டர்?.."​

என்று கேட்டவரிடம்..​

"நிறைய சொல்லலாம், ஆனா இப்போதைக்கு அவங்கள பயம் காட்டாம நான் கொடுக்கிற டயட், மெடிசன் ஃபாலோ பண்ணுங்க எல்லாமே கண்ட்ரோல்ல இருக்கும்!.."​

என்றார் அரண்டு போய் இருக்கும் கௌதமியை பார்த்து ஏற்கனவே தன்னால் அவள் மன உளைச்சலுக்கு ஆளானதை நினைத்து வருந்தி மேலும் அவளை துயரப்படுத்த வேண்டாம் என்ற முடிவோடு,.​

விடைபெறும் போது​

"தைரியமாக இரு!.."​

என அவளை தட்டிக் கொடுத்து மறுபடியும் மன்னிப்பை வேண்டிய மருத்துவரிடம்..​

"ஈஸி யா, சாரி என்று ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க டாக்டர் ஒரு நைட் கடப்பதற்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும்!.."​

என்ற படியே வேகமாக வெளியேறி சென்று விட்டாள் கௌதமி...​

அவருக்கான கட்டணத்தை கொடுக்க முன்வந்தவரிடம்.​

" வேண்டாம், உங்க மகளை நல்லா பாத்துக்கோங்க!..​

என்ற படியே அமைதியாக அமர்ந்து கொண்டார் மனசாட்சி கொண்ட மருத்துவர்,..(இது நிஜமாகவே என் தோழிக்கு நடந்த விஷயம்)​

நடந்தவைகளை கேட்ட மலர்..​

"அப்பாவும் சித்தியும் என்ன சொன்னாங்க?.."​

"அப்பா எதுவுமே சொல்லல.. அமைதியா தான் வந்தாரு , சித்தி தான் ஏதாவது சாப்பிடுறியா ஏதாவது குடிக்கிறியான்னு கேட்டுக்கிட்டே வந்தாங்க.. நான் எதுவுமே சொல்லாம அமைதியா இருந்துட்டேன்"​

வீட்டுக்கு வந்த பிறகும்..​

"ஏதாவது சாப்பிடறியா, செஞ்சி தரவா?.."​

" அப்படின்னு, ரொம்ப அக்கறையா கேட்டாங்க, எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டு..நான் இங்க வந்துட்டேன்!.."​

என்றாள் தன் துயரை மறைத்தபடி..​

அமைதியாக தன் தோளில் சாய்ந்த தோழியை இறுக அணைத்துக் கொண்டாள் மலர்...​

பிடி இருகும்...​

 

paasa nila

Moderator

அத்தியாயம் 11​

அன்று தன் கடைசி பரிட்சையை முடித்துவிட்டு நண்பர்களோடு சிறிது நேரம் உரையாடி விட்டு வீட்டிற்கு வந்த மதியழகன்.​

வீட்டிற்கு முன்பக்கம் சிறிதாகத் தாய் அமைத்திருந்த தோட்டத்தில் இருந்த சிறிய இடத்தில். தாயும் தந்தையும் இரு நாற்காலிகள் போட்டு அமர்ந்திருந்ததை பார்த்தவன்.​

அவனும் ஒரு நாற்காலிகோடு வந்து அமர்ந்து கொண்டான் அன்னையின் அருகில். சிறிது சோர்வாகவும், சிறிது உற்சாகமாகவும் வந்து அமர்ந்த மகனைப் பார்த்த ரகுவரன்.​

"என்னப்பா, பரீட்சை எல்லாம் நல்லபடியா முடிச்சிட்டியா?.."​

என்று கேட்டார்.​

"ஆமாம்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது!.."​

"எல்லா பரிட்சையும் நல்லாவே எழுதி இருக்கேன், ரெண்டு கம்பெனியில செலக்ட் ஆகி இருக்கேன். எந்தக் கம்பெனின்னு முடிவு மட்டும் பண்ணனும் ?.."​

"சரிப்பா, எதுக்கும் மாறன் கிட்ட ஒரு தடவை ‌ கேட்டுக்கோ?.."​

" கண்டிப்பா பா அண்ணன் கிட்ட கேட்டுத் தான் முடிவு பண்ணுவேன்!.."​

என்றவன் அம்மா வைத்திருந்த முந்திரி பக்கோடாவை பார்த்துவிட்டு, அதை எடுத்து வாயில் போடுவதற்குள். தான் எடுத்து வாயில் போட்டுக் கொண்டார் ரேணுகா.​

"அம்மா!.. எனக்கு!.."​

என்றான் வேகமாக.​

"இருடா, போட்டுக் கொண்டு வரேன்!.." என்ற படியே எழுந்து செல்ல முயன்றார் ரேணுகா.​

"ஒன்னு வச்சிருந்தீங்க இல்ல! அது எனக்குத் தந்து இருக்கலாம்ல!..."​

என்றவனை திரும்பிப் பார்த்தவர்.​

"ஹேன்! அது என்னோடது!.. "​

என்று அழகு காட்டி சென்றவரைப் பார்த்து.​

"நீங்க எல்லாம் பெத்த தாயா?.."​

என்று கேள்வி எழுப்பியவனை பார்த்து...​

" இல்ல பெத்த பேயி!.."​

என்று நக்கல் அடித்து விட்டுச் சென்றார்.​

அம்மா மகனின் சம்பாஷனைகளை கேட்டு, உரக்கச் சிரித்த ரகுவரனை, உள்ளே செல்ல இருந்த ரேணுகா… திரும்ப வந்து, இடுப்பில் இரு கைகளைக் குற்றியபடி...​

"என்ன சிரிப்பு, இல்லை என்ன சிரிப்புங்கிறன்..."​

என்றார் முறைத்தவாறு.​

"இல்ல, இல்ல, தாய்.பேய். சொலவடை ரொம்ப நல்லா இருந்தது அதான் சிரிச்சிட்டேன். "​

இன்னும் சிரித்தவர்.​

" உன் பையன் தானே, ஒன்னு கொடுத்தா என்ன?.. "​

என்று கேட்டவரை பார்த்து.​

"அதெல்லாம் கிடையாது, தாயும் பிள்ளையும் ஒண்ணா இருந்தாலும் வாயும் வயிறும் வேற, என்று தானே சொல்லி இருக்காங்க... எனக்கு வேற வயிறு, அவனுக்கு வேற வயிறு, அதனால அவங்க அவங்க பக்கோடா அவங்களுக்கு தான். கணக்குனா கணக்கு தான்!.."​

என்ற படியே உள்ளே சென்று சூடாகப் பக்கோடாக்களை போட்டுக் கொண்டு வந்து மகனின் அருகில் வைத்து விட்டு, அதிலிருந்து ஒன்றை எடுத்து வாயில் போடப் போனவரின் கையைப் பிடித்து, தன் வாயில் அந்தப் பக்கோடாக்களை போட்டுக் கொண்டவன்.​

"அம்மா பையன் அப்படின்னாலும் வாயும் வயிறும் வேற வேற தான். கணக்குனா கணக்கு தான்..."​

என்ற படியே தனக்கான பக்கோடாவை தட்டோடு எடுத்துக்கொண்டு தன் அறையை நோக்கிச் சென்றான், பாவமாக முழித்த அன்னையையும், அடக்கிக் கொண்ட சிரிப்போடு, தன்னை பார்த்துக் கொண்டிருந்த தந்தையையும் பார்த்துக் கண்ணடித்தபடி...​

அப்பாவியாக முழித்த மனைவியைப் பார்த்து.​

"தேவையா, இது உனக்கு!..அப்பவே அவனுக்கு ஒன்னு கொடுத்திருக்கலாம் இல்ல, வீர வசனம் பேசிட்டு இப்ப எதுக்கு அவங்கிட்ட பல்பு வாங்குற!.."​

என்ற படியே தானும் உள்நோக்கி சென்றார் இதற்கு மேல் இருந்தால் மனைவி தன்னிடம் ஆடி விடுவாள் என்ற பயத்துடனும் சிரிப்புடனும்...​

இரவு உணவிற்காக வெளியே வந்த மதியழகன், அண்ணன் இன்னும் வராமல் இருப்பதை பார்த்தபடி அன்னையைத் தேடிச் சென்றான்.​

டைனிங் டேபிள் சேரில் அமர்ந்திருந்தவர். ஒரு நோட்டு புத்தகத்தில் தீவிரமாக எதையோ எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து அருகில் சென்றான்.​

இவனைப் பார்த்துவிட்டு முகத்தைக் கொனட்டி திரும்பிக் கொண்டவரைப் பார்த்து அவரின் அருகே ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அவரை ஒட்டினார் போல் அமர்ந்து கொண்டு.​

" என்னமா? கோவமா, நீங்களும் ஒன்னு கொடுக்கல, நானும் ஒன்னு கொடுக்கல. கணக்கு சரியா போச்சு, அதோட விட்டுடனும்."​

என்ற படியே அன்னையை ஐஸ் வைத்து விட்டு.​

"ஆமா, என்ன செஞ்சுட்டு இருக்கீங்க?.."​

என்றான்.​

அவனின் நியாயத்தில் சமாதானம் ஆகியவர். உற்சாகமாகவே,​

"நறுமுகைத் தளத்துல, புதுசா போட்டி கதை ஆரம்பிச்சு இருக்காங்க, 109 பேர் எழுதுறாங்க, அதான் கன்பூஷன் ஆகக் கூடாதுன்னு நோட்டு போட்டுக் கதையின் பெயர், அவங்க நம்பர், எத்தனை யூ டி போட்டு இருக்காங்க, எதெல்லாம் நான் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அப்படின்னு எழுதி வைக்கிறேன்!..."​

என்றார், சந்தோஷமாக.​

புத்தகம் படிப்பதும் பாட்டு கேட்பதும் மட்டுமே இவரின் ஒரே பொழுதுபோக்கு. டிவி பார்ப்பதோ, நாடகங்கள் பார்ப்பதோ இவருக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை…​

படமும் பெரிதாகப் பார்க்க விரும்பமாட்டார், என்றேனும் மகன் நன்றாக இருக்கும் எனக் கூறும் படங்களைச் சில நேரம் மகனோடும் கணவனோடும் அமர்ந்து பார்ப்பார்... அவ்வளவே.​

அப்படி பார்க்கும் நேரங்களிலும் சில நேரம் கணவனின் மடியிலோ அல்லது மகனின் மடியிலோ தலை சாய்த்து பார்த்துக் கொண்டிருப்பவர் அப்படியே தூங்கியும் விடுவார்...​

இவரின் சந்தோஷங்கள் அனைத்தும் படிப்பதிலும் பாட்டு கேட்பதிலும் தான்...​

"சரி, சரி உங்களை எங்கேஜ் டா வச்சுக்கோங்க, அது நல்லது தான்." என்றவன்​

ஆமா, நீங்களும் ஏன் கலந்துக்க கூடாது?.."​

மகனின் கேள்வியில் ஜெர்கானவர்,​

" நானா?.."​

என்றார் அதிர்வோடு.​

"ஆமா, நீங்கத் தான்!.."​

என்றான் அவனும்.​

"இதுவரை அப்படி யோசித்ததில்லை!.."​

" சரி, பரவால்ல. இனிமே யோசிங்க. அடுத்த முறை போட்டி ஆரம்பிக்கும்போது, நீங்களும் கலந்துகோங்க. வெற்றியோ, தோல்வியோ. எல்லாமே ஒரு அனுபவம் தானே.​

நிறைய படிக்கிறீங்க இல்ல, கண்டிப்பா உங்களால எழுத முடியும் ட்ரை பண்ணி பாருங்க!.."​

மகன் கூற்று சரியாக இருப்பதாகத் தோன்றியதில், அவரும் சம்மதமாகத் தலையசைத்தார்...​

அண்ணனுக்காகக் காத்துக் கொண்டிருந்தவன் அவனின் பைக் சத்தம் கேட்டு வாசலுக்கு மெதுவாக நகர்ந்து சென்றான்.​

தம்பியைப் பார்த்தபடியே இறங்கிய அண்ணனிடம்.​

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ணா மொட்டை மாடிக்கு வா!.."​

என்ற படியே மாடியேறி சென்றான்.​

செல்லும் தம்பியைக் கேள்வியாகப் பார்த்தவன், தன் அறைக்குச் சென்று குளித்து வந்தவன் அம்மா கொடுத்த பக்கோடாக்களையும் காபியையும் எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றான் தம்பியைத் தேடி.​

"என்னடா?.என்ன விஷயம் சொல்லு!.."​

" அம்மாவுக்கு, உங்க விஷயம் தெரிஞ்சு போச்சு ன்ணா!.."​

"என்ன? என்னோட விஷயம் தெரிஞ்சு போச்சு!.."​

"உங்க லவ்வுன்ணா, பேசாமலேயே நீங்கப் பண்ணிட்டு இருக்கீங்களே! ரொம்ப வருஷமா, ஒரு காவிய காதல் அததான்!.. அம்மா கண்டுபிடிச்சிட்டாங்க!.."​

என்றவனை சற்று அதிர்வோடு பார்த்தவன்...​

" என்னடா சொல்ற?.."​

என்றான் எடுத்த பக்கோடாவை சாப்பிடாமல்,​

" நீங்க உங்களையே மறந்து அண்ணியை பார்த்துட்டு இருக்கிறத அம்மா பார்த்துட்டாங்க!​

என்கிட்ட கேட்டாங்க, என்னால மறைக்க முடியல. நானும் உண்மையைச் சொல்லிட்டேன்... அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம்.​

உடனே அப்பா கிட்ட சொல்லிட்டு, அவங்க வீட்ல போய்ப் பேசுறேன் அப்படின்னு குதிச்சுகிட்டு கிளம்புனவங்களை. நான் தான் தடுத்து வெச்சிருக்கேன்!.."​

" அண்ணனே உங்ககிட்ட சொல்லுவான், அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க அப்படின்னு. நீங்களே ஏதாவது செய்து அண்ணன் கோபத்துக்கு ஆளாகாதிங்கன்னு சொல்லிப் பயமுறுத்தி வச்சிருக்கேன்!.."​

" நீங்களும் அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க. சரியா?.."​

என்றவனை பார்த்து​

"ஆமாடா, உங்க அம்மா அப்படியே பயந்துறவங்க தான். இதை நான் நம்பனும்!.."​

"என்னோட அம்மாவா!..அப்ப உங்களுக்கு!.."​

என்றபடி படி இறங்கி செல்லும் தம்பியைப் பார்த்தவன், தன்னைத் தானே நொந்து கொண்டான்.​

'இப்படியா ஆள் வர்றது கூடத் தெரியாம அவளைப் பார்த்துட்டு இருந்திருக்கோம்...'​

'ஹும்ம்.நாம பார்க்கிறது எல்லாருக்கும் தெரியுது, அவளுக்கு மட்டும் தெரிய மாட்டேங்குது'​

என்று நினைத்தபடியே காபியை அருந்த ஆரம்பித்தான் மெதுவாக...​

தம்பியின் கூற்றுப்படி அம்மாவிடம் சற்று இளக்கம் காட்டாமல். கோப முகம் அணிந்து கொள்ள வேண்டியதுதான்.​

முடியுமா?... முடியனும்!...வேற வழி!..​

என்று வடிவேலுவின் பாணியில் புலம்பி விட்டுக் கீழ இறங்கி சென்றான் முகத்தைச் சற்று இறுக்கமாக வைக்க முயன்ற படி.​

தாயைப் பற்றித் தெரிந்து இருந்தும் லேசாக விட்டது இவனின் தவறுதான் என்பதை புரிந்து கொள்ளும் நிலையும் வரும் விரைவில்.​

இவன் ஜித்தன் என்றால், ஜித்தனுக்கு எல்லாம் ஜித்தன் ரேணுகா. என்ன செய்யக் காத்திருக்கிறார் மகனின் காதலில் என்பதை போகப் போகத் தெரிந்து கொள்ளலாம்...​

இங்கு மலரின் வீட்டிலும். கல்லூரி விட்டு வந்த மகளைப் பார்த்த தாமரை.​

" என்னடி எக்ஸாம் முடிஞ்சிடுச்சா? நல்லா எழுதுனியா என்றார்!.."​

" எழுதினேன், எழுதினேன். நல்ல்ல்லா எழுதினேன்!.."​

என்று நல்லாவில் அழுத்தம் கொடுத்துச் சொன்னவளை சந்தேகமாகப் பார்த்தவர்.​

"சொல்றதே, சரி இல்லையே!..என்ன ஆச்சு?.."​

"எம்மா, எம்மா ஒன்னும் இல்லம்மா".​

" நானே காலேஜ் முதல் வருடம் முடிஞ்சு போச்சு ஹப்பாடான்னு நினைச்சு சந்தோஷமா இருக்கேன், இப்பதான் எக்ஸாம் எப்படி எழுதினேன்னு கேட்டுட்டு இருக்கீங்க!..."​

"இதுல கொடுமை என்ன தெரியுமா?​

காலேஜ் லைஃப் செம ஜாலியா இருக்கும், காலேஜ் போங்க நல்லா என்ஜாய் பண்ணுவீங்க அப்படின்னு சொன்னவங்க மட்டும் என் கையில கிடைச்சாங்க... அவ்வளவுதான்"​

"எவ்ளோ டெஸ்ட்டு, எவ்வளவு அசைன்மென்ட்,​

அப்பப்பப்பா வெச்சி செய்றாங்க, எவன்டா சொன்னது காலேஜ் லைப் ஜாலின்னு..."​

"என்கிட்ட வந்து கேளுங்கடா. எவ்வளவு கஷ்டம்னு நான் சொல்றேன்."​

என்றாள் அழுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு.​

"அப்பாடி!... இந்த ஒரு வருஷம் முடியறதுக்கே எவ்வளவு நாள் ஆகுது!.."​

என்று அங்கலாய்த்தவாரு அறைக்குச் சென்றவளை சிரிப்போடு பார்த்தவர்.​

"மலர், இசை. வீட்டுக்குப் போகலாமா?.."​

என்ற கேள்வி எழுப்பியவரை மகிழ்வோடு திரும்பிப் பார்த்து​

" ஐ!.. சூப்பர் மா. போலாம், போலாம்."​

"அக்காவைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு. செம ஜாலியா இருக்கும்!.."​

"அதுக்கு முன்ன, நல்ல தூங்கி எந்திரிக்கணும் !.."​

என்றபடியே தன் அறையை நோக்கிச் சென்றாள் மலர்விழி.​

பிடி இருகும்...​

 
Last edited:

paasa nila

Moderator

Episode 12​

இன்றிலிருந்து கல்லூரி விடுமுறை நாட்கள் ஆரம்பம் ஆகிறது. தமக்கையின் வீட்டிற்கு செல்லலாமென அம்மா சொன்னதின் நினைவாக விரைவாகவே எழுந்து விட்டாள் மலர்விழி.​

தன் தோழி கௌதமியும் இன்று தன்னைத் தேடி வரமாட்டாள். நேற்று இரவே அவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி விடைபெற்றுச் சென்று விட்டவளை நினைத்துக் கொண்டவள், அவளின் வாழ்வில் இந்த நீரழிவு நோயால் ஏற்பட்ட சிரமங்களையும் அதனால் அவளுக்கு ஏற்பட்ட மன துயரத்தையும். இதற்காகத் தோழி எடுத்துக் கொள்ளும் மருந்துக்களையும் நினைத்துச் சிறிது வருத்தப்பட்டவள், இது இறைவனின் சித்தம் இதில் வருந்துவதற்கு எதுவும் இல்லை... சரியான மருந்துகளைச் சரியான நேரத்தில் தோழி எடுத்துக் கொள்வதே நலம் பயக்கும். என்று நினைவோடு, தன் காலைக் கடன்களை முடிக்க எழுந்து சென்றாள்.​

"அம்மா!.."​

என்று கத்திக் கொண்டே வெளியே வந்தவள்.​

"அக்கா வீட்டுக்குப் போலாம்னு சொன்னீங்க! எப்போ போறோம்?.." என்றாள் ஆர்வமாக.​

மகளின் ஆர்வத்தை பார்த்தவர் தயங்கியவரே...​

" போகணும்!.. ஆனா பாட்டி வறாங்களான்னு தெரியல?.. அவங்கள எப்படி விட்டுட்டு போகிறது என்று யோசனையா இருக்கு! அப்பா வந்தவுடனே கேட்கலாம் என்ன சொல்றாங்கன்னு?.."​

"ஏன்?.. பாட்டி வரமாட்டாங்க. நான் போய்க் கேட்கிறேன் வராங்களான்னு!.."​

" பாட்டி."​

என்று கத்திக்கொண்டே ஓடினாள் அவரின் அறைக்கு.​

"பாட்டி! இசைய, பாக்குறதுக்கு அம்மா, நீங்க, நான் போலாமா?..."​

"நானா!.. நான் வரல மா...நீங்கப் போயிட்டு வாங்க.நான் வீட்ல இருந்துக்குறேன்"​

" ஏன் பாட்டி?.."​

" இல்லம்மா கால் ரொம்ப வலியா இருக்கு!.. அலைய முடியாது... ரயில்வே ஸ்டேஷன்லயும் நடக்கணும், ரொம்ப தூரம்!.."​

" அதெல்லாம் நடக்க தேவையில்ல, அங்க சூப்பரா ஒரு வண்டி இருக்கு, நம்ம அதுல ஏறி ஸ்வைங்ன்னு போய் இறங்கிடலாம்!.."​

"இல்லம்மா கண்ணு, நீங்கப் போயிட்டு வாங்க.நான் வரல?.."​

" போங்க பாட்டி!.. நீங்க இல்லாம அம்மாவும் வர மாட்டேன்னு சொல்லுவாங்க!.. அப்ப இந்த லீவுக்கு எங்கேயுமே நான் போகல!..போங்க..."​

என்று சோகமாகச் சொல்லியபடி வெளியேற இருந்தவளை பார்த்து.​

" சரி, சரி மூஞ்ச தூக்கி வைக்காதே. போகலாம், நானும் வரேன்னு அம்மாகிட்ட போய்ச் சொல்லு!.."​

"ஹய், பாட்டினா பாட்டி தான்... நல்ல பாட்டி!.."​

என்றபடி அவரின் கன்னத்தில் முத்தமிட்டு தன் அன்னையிடம் சொல்ல ஓடிச் சென்றாள் ஆரவாரமாக.​

"அம்மா, பாட்டி வறேன்னு சொல்லிட்டாங்களே!..."​

என்றபடி குதித்தவளை பார்த்தவர்.​

" சரி அப்பா வந்தவுடனே சொல்றேன்."​

என்றவர் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்...​

இளவேந்தன் வீட்டிற்கு வந்தவர் மனைவி மகள் மற்றும் அம்மாவுடன் இசை அரசின் வீட்டிற்கு செல்ல விரும்புவதை கேட்டவர். இரவு வீடு வந்த மகனுடன் கலந்துரையாடி விட்டுத் தானும் மகனும் மட்டும் வீட்டில் இருப்பதாக முடிவு செய்து கொண்டு மற்ற மூவருக்கும் தட்களில் மறு நாளைக்கு டிக்கெட் புக் செய்து கொடுத்தார்...​

தமக்கையின் வீடு செல்வதற்கு உற்சாகமாகவே கிளம்பினாள் மலர்விழி... அது தமக்கையின் மீது உள்ள பாசத்தால் அல்ல, அவர்கள் ஊரில் இருக்கும் அவர்களுக்குச் சொந்தமான தோட்டம் துறவுகளில் சுற்றுவதற்கும், அங்குள்ள பம்பு செட்டில் குளித்து ஆட்டம் போடுவதற்கு உண்டான ஆசையால் மட்டுமே...​

பேத்தி கூறியது போலவே... ரயில்வே ஸ்டேஷனில் அவளுடன் "ஸ்வைங்" என்று.சென்று, தங்களுக்கான கோச்சின் முன்னே இறங்கிக்கொண்டார் பாட்டி...​

தனக்கான ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டவள், வேடிக்கை பார்த்தபடி...​

டொமேட்டோ சூப், சமோசா, பிரட் ஆம்லெட் என ஒன்றையும் விடாமல் அனைத்தையும் தின்றபடியே ரசிக்க ஆரம்பித்தாள் அந்த ரயில் பயணத்தை... ஒரு புத்தகத்தையும் கையில் வைத்துக்கொண்டு.​

கதைகள் படிப்பதில் அலாதியான பிரியம் அவளுக்கு,​

ஆனால் ஏனோ தாய் அதற்கு அவ்வளவாக அனுமதி கொடுப்பதில்லை, இப்படியான பயணங்களில் தாயிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டு ஏதாவது ஒரு கதை புத்தகத்தை வாங்கி விடுவாள். தந்தையின் தயவில்.​

தங்களை அழைக்க ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்த மாப்பிள்ளையிடம் நல விசாரிப்புகள் முடிந்து, அவனோடு ரயில் நிலையத்தை விட்டு வெளியில் வந்தவர்கள், அவன் கார் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர் மூவரும்...​

காரில் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டவளிடம்.​

"அப்புறம், மலர்...காலேஜ் எல்லாம் எப்படி போகுது?..'​

"அதெல்லாம், நல்லா போகுது மாமா!.."​

"உங்களுக்குப் பிசினஸ் எல்லாம் எப்படி போகுது?..."​

" அதுவும் ரொம்ப நல்லாவே போகுது!.."​

என்றவன் சிரிப்போடு காரை நகர்த்த ஆரம்பித்தான் தன் வீடு நோக்கி...​

பாட்டி, தாய், தங்கையைப் பார்த்து அலாதியான மகிழ்வு இசையரசிக்கு.​

பெண்களுக்குப் பொதுவாகவே திருமணம் முடிந்து தாய் வீட்டிற்கு செல்லும்போது ஒரு மகிழ்வு ஏற்படுவது போலவே தாய் வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு அவர்கள் வரும்போதும் அதைவிட இரட்டிப்பான மகிழ்வு ஏற்படும்…​

அதைத்தான் உணர்ந்து வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள் இசையும்...​

"வாங்க ம்மா, வாங்க பாட்டி, வாடி மலர்."​

என்றபடி அனைவரையும் அனைத்து விடுவித்தவள்.​

"அப்பாவும், இன்பாவும் கூட வந்திருக்கலாம்!.."​

என்று அங்கலாயித்தாள்...​

"கடை இருக்கே மா, கடையை விட்டுவிட்டு வர முடியுமா?.."​

என்றார் பாட்டி சமாதானமாக...​

இவர்களின் உரையாடலைக் கேட்டப்படியே வந்தார்கள். பாண்டியனின்​

தாய் பத்மாவதியும் தந்தை குருமூர்த்தியும்.​

பத்மாவதி, பாட்டியைப் பார்த்தவுடன் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு.​

"வாங்க மா, வாங்க மதினி, நல்லா இருக்கீங்களா!.. பயணம் நல்லா சுகமா இருந்ததா. வாம்மா மலரு, நல்லா இருக்கியா?.."​

என்ற படியே பாய் விரித்து அமர்ந்து கொண்டார்கள் அனைவரும்...​

அவர்களோடு சிறிது நேரம் உரையாடியவர்கள்.​

மருமகளிடம் அவர்களுக்கு உண்பதற்கும் சிறிது ஓய்வு எடுப்பதற்கும் அறையைக் காட்டுமாறு பணித்துவிட்டு பண்ணையம் பார்க்கத் தங்கள் தோப்பை நோக்கிச் சென்றார்கள்... வேலை செய்வதற்கு ஆட்கள் இருந்தாலும் தங்கள் நிலத்தில் தாங்களே வேலை செய்தால்தான் திருப்தி இவர்களுக்கு. பண்ணை ஆட்களும் சுறுசுறுப்பாக அப்போதுதான் வேலை செய்வார்கள் என்ற சூட்சமம் தெரிந்த,​

கள்ளம் கபடம் இல்லாத நல்ல மனிதர்கள்.​

அவர்கள் தோட்டத்திற்கு செல்வதாகச் சொல்லிச் செல்வதை பார்த்த மலர்.​

" அத்த, அத்த நானும் வரவா?.." என்றாள் ஆரவாரமாக.​

"இப்போ தான வந்தீங்க குட்டி. நாளைக்கு போகலாம் சரியா!.."​

என்று கேட்டவரிடம்.​

" சரி"​

எனத் தலை அசைத்தவளுக்கு ஏனோ தன் தந்தையைப் போலத் தன்னை குட்டி, என்று அழைக்கும் அவரின் மீது அலாதியான பிரியம். அவருக்கும் துருதுருவென இருக்கும் இவளின் மீது ஒருவிதமான பாசம்...​

மறுநாள் தாய் மற்றும் பத்மாவதியுடன் தோட்டத்தைச் சுற்றி பார்க்கச் சென்றாள் மலர்விழி ஆனந்தமாக...​

கால் வலியின் காரணமாகப் பாட்டி வரவில்லை என்று கூறிவிட்டு இசையோடு வீட்டிலிருந்து கொண்டார், அவளுக்குச் சமையலில் உதவியவாறு...​

பேத்தியுடன் தனிமையில் இருந்தவர்.​

"என்னம்மா? விசேஷம் எதுவும் இல்லையா?.."​

என்றார்​

பாட்டியின் கேள்வியில் முதலில் முழித்தவள், பின்பு மெதுவாக.​

" இல்ல?.. பாட்டி ரெண்டு வருஷம் ஆகணும்னு சொல்றாங்க!.."​

என்றவளை பார்த்து​

" அது, அது காலகாலத்தில் நடக்க வேண்டாமா? ."​

எனக் கேட்டவர்.​

பின்பு இது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதை அறிந்து அமைதியாகிவிட்டார்...​

மாமரத்து தோட்டத்தில் சுற்றி வந்தவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. சீசன் இல்லாததால் அவ்வளவாகக் காய்கள் காய்க்கவில்லை எனினும் அதன் நிழலில் அமர்ந்தவாறு பத்மாவதியிடம் வளவளத்துக் கொண்டு, அவர் கொடுத்த இளநீரை அருந்திக் கொண்டும் அங்கிருந்த பம்பு செட்டில் நன்றாக ஆட்டம் போட்டுத் தன் கல்லூரி கால விடுமுறையை நன்றாகவே அனுபவித்தாள் மலர்விழி.​

விளையாட்டுபோல ஐந்து நாட்கள் முடிந்து இருந்தது அவர்கள் ஊருக்கு வந்து. நாளைக் கிளம்ப வேண்டும் என்ற நிலையில் மதிய உணவுக்குப் பிறகு சிறிது ஓய்வு எடுத்து மாலையில் பெண்கள் அனைவரும் அங்கு நடக்கும் சந்தைக்குச் சென்றார்கள்.​

மலர்விழி தனக்கும் கௌதமிக்கும் ஒரே மாதிரியாக ஆனால் வேறு வேறு நிறத்தில் நீண்ட பாவாடையும் அதற்குத் தோதான சட்டையும் எடுத்துக் கொண்டாள்.​

இவளுக்கு மாப்பச்சையிலும் அவளுக்குச் சிகப்பிலும். ஒரே மாதிரி அமைந்ததில் அவ்வளவு மகிழ்ச்சி அவளுக்கு.​

பத்மாவதி மலர்விழிக்கு மயில் வண்ணத்தில் ஒரு பட்டுப்புடவையும், இள மஞ்சளில் ஒரு சுடிதாரும் எடுத்துக் கொடுத்தார்.​

வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் நாளைக் கிளம்புவதற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தார் தாமரை.​

தங்கள் தோட்டத்தில் வளர்ந்த மாங்காய்கள் சிறிதும் தேங்காய்களை ஒரு மூட்டையாகவும் கொண்டு வந்து அத்துடன் தங்கள் வீட்டின் முன்பக்கத்தில் உள்ள காய்கறி தோட்டத்திலிருந்து கத்திரி, முருங்கை, வெண்டையெனச் சில காய்கறிகளையும் பாசத்தோடு கொடுத்தார் பத்மாவதி.​

கொண்டு வந்ததைவிட செல்லும்போது பொதிகை அதிகமானதை கண்டு சற்று பயந்த தாமரை.​

" ஐயோ மதனி, இவ்வளவு எப்படி கொண்டு போறது?.."​

என்று அலறியவரை பார்த்த பத்மாவதி.​

"அதெல்லாம் கொண்டு போகலாம், நீங்களா சுமக்க போறீங்க! ரயில் வண்டி தானே சுமக்க போகுது!.."​

என்ற படியே அனைத்தையும் பயணத்திற்கு ஏற்றவாறு கூட இருந்து அவரும் கட்டிக் கொடுத்தார்.​

தாய் தந்தையரின் வீட்டிலிருந்து எதையுமே எதிர்பார்க்காமல், தன் வீட்டிலிருந்து வந்தவர்களையும் இன்முகத்துடன் வரவேற்று, அவர்கள் செல்லும்போது அவ்வளவு பொருட்களைக் கொடுத்து விடும் தன் அத்தையை பார்த்து மனம் நெகிழ்ந்தபடி நின்றாள் இசையரசி. எப்பொழுதும் மருமகளாக இல்லாமல் மகளாக இவருக்கு இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்.​

இரவு உணவிற்கு பின்பு தாமரை, பத்மாவதி மற்றும் பாட்டி ஒன்றாக அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.​

"ஏன்? மதனி, இன்பாக்கு பொண்ணு எதுவும் பாக்குறீங்களா?.."​

"24, வயசு தானே மதனி ஆகுது, இன்னும் ஒரு வருடம் போகட்டும்னு இருக்கோம்!.." என்றார்​

"அப்படியா, எங்க சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்கு, அது தான் உங்ககிட்ட சொல்லி வைக்கலாம்னு சொன்னேன்!.."​

"நீங்கப் பார்க்க ஆரம்பிப்பதற்கு முன்னாடி நானே சொன்னேன் அப்படின்னு, எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க!.."​

" இதுல, தப்பா எடுக்க என்னம்மா இருக்கு!.."​

என்றார் பாட்டி.​

பையன், பொண்ணு இருந்தா, மாப்பிள்ளை பொண்ணு இருக்குன்னு சொல்றது வழக்கம்தானே!.."​

"வீட்டுக்குப் போயி மகன் காதுல ஒரு வார்த்தை போட்டுட்டு, இன்பா கிட்டயும் என்னன்னு கேட்கிறோம்? சரிங்களா!.."​

என்று பதில் அளித்தார் பாட்டி.​

மறுநாள் கிளம்பியவர்கள், மகளுக்குப் பிரியா விடை கொடுத்து, அவர்கள் அனைவரையும் தங்கள் வீட்டிற்கு வந்து தங்கி விட்டுச் செல்லுமாறு அவர்களுக்கான அழைப்பையும் விடுத்து கிளம்பினார்கள், வந்தது போலவே மருமகனோடு காரில்.​

இப்படியாக மற்றும் ஒரு ரயில் பயணத்தை ரசித்துக்கொண்டே தங்கள் கூடு வந்து சேர்ந்தார்கள் மூவரும்.​

இன்னும் இரண்டு நாட்களில் கல்லூரி தொடங்கி விடும், என்ற மகிழ்வு பெண்ணுக்கு.மற்றொரு புதிய வருடம், அதற்கான ஆயத்தங்களாக, புதிய பேனா, புதிய நோட்டு, புதிய பேக் என்று தனது அலப்பறைகளை ஆரம்பித்து விட்டாள் மலர் விழி.​

கல்லூரி விடுமுறையானதால் தன்னவளை பார்க்க முடியாத சோகத்தில் சுற்றிக் கொண்டிருந்தான், பார்ப்பது மட்டுமே சுகம் என வருடங்களாகக் காத்துக் கொண்டிருக்கும் தமிழ்மாறன்...​

எப்படி இணையப் போகிறார்கள் வாழ்வில் இவர்கள், என்பதை நாமும் பொறுத்திருந்து இவர்களோடு சேர்ந்து பார்ப்போம்...​

பிடி இருகும்....​

 
Last edited:

paasa nila

Moderator

அத்தியாயம் 13​

இரண்டாம் வருடத்திற்கான கல்லூரியின் முதல்​

நாள் அன்று...​

கௌதமியையும் நண்பர்களையும் சிறிய இடைவேளைக்குப் பிறகு பார்க்கப் போவதில் அலாதியான மகிழ்ச்சி பெண் அவளுக்கு.​

இவளுக்குச் சற்றே குறையாத ஆர்வத்துடனும், மகிழ்வுடனும் இவளைப் பார்க்கக் காத்துக் கொண்டிருந்தான் தமிழ் மாறன்...​

ஆனால், பாவம் அவனுக்கு, அன்று முக்கியமான மீட்டிங் இருப்பதால், அவன் சற்று முன்னதாகவே செல்ல வேண்டிய நிலை. பெண் அவளின் தரிசனம் கிட்டாமல் அலுவலகத்திற்கு கிளம்பி சென்றான் சிடுசிடுப்புடன்.​

ஓட்டமும் நடையுமாகச் சென்று கெளதமியை அனைத்து பிடித்தவள்,​

"ஹேய்! எப்படி இருக்க கௌவ்வு, நல்ல ஊரெல்லாம் சுத்திட்டு வந்தியா?.."​

"க்கும். ஊரு சுத்துறாங்க போடி, ஊருக்குப் போன கையோட வீட்டுக்குள்ள போனவ, வரும்போது தான் வெளியே வந்து இருக்கேன். பார்த்த ஊர எத்தனை தடவ பார்க்கிறது, அதுவும் வெயில் கொஞ்சமாவா காயுது?..."​

என்று சலித்தவள்,​

"நீ என்ன பண்ண சொல்லு?.."​

" நானா!.. அம்மா, பாட்டி கூட இசை, வீட்டுக்குப் போனேன், அங்க சூப்பரா என்ஜாய் பண்ணினேன், அந்த அத்தை மா, என்னை நல்ல பாத்துக்கிட்டாங்க, அவங்க தோப்புல நல்ல சுற்றினேன் செம ஜாலியா இருந்தது!.."​

" அப்புறம், அவங்க ஒன்னு சொன்னாங்க!.."​

"என்ன சொன்னாங்க?.."​

" எனக்கு மட்டும் இன்னொரு பையன் இருந்தா, உன்னையே அவனுக்குக் கல்யாணம் பண்ணி கொடுத்து, என்னோட இரண்டாவது மருமகளாக்கி, பக்கத்திலேயே வச்சுப்பேன் அப்படின்னு சொன்னாங்க!.."​

என்றாள் புருவத்தைத் தூக்கி கெத்தாக.​

"ஓஹோ சரிதான்.!"​

"அப்புறம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ்!.. சாயந்திரம் வீட்டுக்கு வரும்போது உனக்குக் காட்றேன், சரியா!.."​

"ஏய்! என்னன்னு சொல்லுடி!.."​

"இல்ல, இல்ல சாயந்திரம் வீட்டுக்கு வரும்போது தான், வா, வா, பஸ் வந்துருச்சு!.."​

என்று வழக்காடியபடி இருவரும் கல்லூரியில் சென்று இறங்கினார்கள்.​

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு நண்பர்களைச் சந்தித்து கொண்டவர்களுக்குப் பேசுவதற்கும் பகிர்வதற்கும் அவ்வளவு விஷயங்கள் இருந்தது...​

கல்லூரியின் முதல் நாள் என்பதால் அன்றைய வகுப்புகள் எதுவும் நடைபெறாமல் நண்பர்களுக்கு அரட்டை அடிப்பதிலேயே நேரம் சென்று விட்டது.​

கல்லூரி நேரம் முடிந்த பிறகு.கல்லூரியை விட்டு வெளி வந்தவர்கள் கண்டது புதிதாகத் திறந்திருந்த ஐஸ்கிரீம் கடையைத் தான்.​

கல்லூரி எதிரிலேயே ஐஸ்கிரீம் பார்லரை கண்டதும் அவ்வளவு மகிழ்வு நண்பர்கள் மூவருக்கும்.​

"வாங்கடி! புதுக்கடை, ஆபர் எல்லாம் போட்டு இருப்பாங்க, போய்ச் சாப்பிடலாம்!.."​

என அகல்யா அழைக்க...​

நித்யாவும் ஆர்வமாகவே சென்றாள். அவர்களுடனேயே செல்ல முற்பட்ட மலர், கௌதமி வராமல் இருப்பதை உணர்ந்து பாவமாக அவளைப் பார்த்தாள்.​

நண்பியின் பாவ முகத்தைக் கண்ட கௌதமி.​

"போ!."​

என்ற படி தானும் அவளுடன் நடந்தாள். மகிழ்வோடு முன் சென்றவளின் கைகளைப் பிடித்து இழுத்து.​

"இன்று ஒரு நாள் மட்டும் தான்!..​

இதையே, வளமையாக்க கூடாது?.."​

என்ற படியே உடன் நடந்தாள் அவளுடன்.​

புதிய ஐஸ்கிரீம் பார்லர், வண்ணமயமாகவும்,​

நான்கு, நான்கு நாற்காலிகள் மேஜையோடும், உயரமான தனித்தனி நாற்காலிகளோடு நீண்ட மேஜையும் என அழகாகவும் விஸ்தீரமானதாகவும் காட்சியளித்தது.​

பெண்கள் நால்வரும் தங்களுக்கான இடம் தேடிச் சென்று அமர்ந்த சிறிது நேரத்தில். உயரமாகக் கட்டுமஸ்தான் தேகத்துடனும் குறுந்தாடியோடும் வந்து நின்றான் இளைஞன் ஒருவன். கையில் மெனு கார்டை வைத்துக் கொண்டு.​

வந்தவனை இமைக்க மறந்து பார்த்திருந்தாள் நித்யா.​

"யுவர் ஆர்டர் மேம்?.."​

எனக் கேட்டவனை பார்த்த மூவரும் தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்தார்கள். நித்தியா மட்டும் எதுவும் கூறாமல் இருப்பதை பார்த்தவர்கள் அவள் கையைத் தட்டி​

"ஆர்டர் குடு!.."​

எனச் சொன்னவுடன், அவளும் தனக்கு வேண்டியதை ஆர்டர் செய்துவிட்டு, அமைதியாக அமர்ந்திருப்பதை யோசனையாகப் பார்த்து இருந்தாள் கௌதமி.​

தன் அருகில் அமர்ந்திருந்த மலரிடம் மெதுவாக நித்யா...​

"ஏய்! மலர், அவனைப் பார்த்தியா?..செம்மையா இருக்கான்லே!.."​

"ஆமாண்டி பார்த்தேன்! என்ன ஹைட்டு, சூப்பர்ல!.."​

என்ன கிசுகிசுத்தவாரே பேசிக் கொண்டிருந்த இருவரையும் கண்ட கௌதமி. அதுவரை​

அகல்யாவுடன் சுவற்றில் வரைந்திருந்த ஓவியங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவள் இவர்களிடம், சந்தேகமாக,​

"என்னடி, பேசிகிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?.."​

"ஒன்னும் இல்லையே, சும்மாதான்!.."​

என்ற மலர் நித்யாவிடம் கௌதமிக்கு தெரியாமல் கண்ணைக் காண்பித்து விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டாள்.​

தங்களுக்கான ஐஸ்கிரீம் ரெடியாகிவிட்டது இன்று கவுண்டரிலிருந்து குரல் வர, அகல்யாவுடன் அதை வாங்கி வர எழுந்து சென்ற கௌதமியை பார்த்துக் கொண்டே, மலர் வேகவேகமாக நித்தியாவிடம்.​

" ஹேய் அவகிட்ட ஒன்னு சொல்லிடாத டி அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது!.."​

என்றாள் நண்பி வருகிறாளா. என்ன ஆராய்ந்து கொண்டே.​

"தெரியும் டி, ஆனாலும் ரொம்ப தாண்டி. உன்ன அடக்காக்குற அவ!.."​

என்றாள் சிறிது பொறாமையாக.​

"ஹேய் நாங்க ரெண்டு பேரும் ஃபர்ஸ்ட் ஸ்டாண்ட்ல இருந்து பிரெண்ட்ஸ் டி!.."​

எனப் பெருமையாகக் கூறியபடி நிமிர்ந்து பார்த்தவள், கண்டது.​

பில் கவுண்டரில் நின்று கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்த நெடியவன், இவள் பார்ப்பதைக் கண்டு, மிக மெலிதான புன்னகையுடன், ஒற்றை இமை சிமிட்டி, இவள் கண்களைச் சில நொடிகள் உற்று நோக்கி விட்டுத் திரும்பிக் கொள்வதை தான்.​

அவனின் பார்வையும், செயலும் ஒருவித படபடப்பை ஏற்படுத்தியது பெண் அவளுக்கு.​

முதல் முதலில் ஆண் ஒருவன் தன்னை இப்படி உற்று நோக்குவது புதிது பெண்ணுக்கு... அது அவளுக்கு ஒரு வித பயத்தையும், ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் சேர்த்தே வழங்கியது.​

வருடங்களாக ஒருவன் இவளையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதும், இவளின் வருகைக்காகக் காத்திருப்பதும் தெரியாமல் போனது விந்தைதான்...​

இந்தப் பார்வை பரிமாற்றங்கள் அனைத்தும் கௌதமிக்கு தெரியாமல் நடந்தது தான் விதி...​

அலுவலகத்தில் நடக்கும் தொடர் மீட்டிங்கால் தினமும் அலுவலகத்திற்கு விரைவாகச் செல்ல வேண்டிய நிலை தமிழ் மாறனுக்கு.​

தினமும் நேரமாக வர வைக்கும் மீட்டிங்கையும் வெறுத்தான், அலுவலகத்தையும் வெறுத்தான், தன்னவளை பார்க்க முடியாமல் இன்னல் தரும் அனைத்தும் அவனுக்கு வெறுப்பையே தந்தது.​

கடும் கோபத்தில் இருந்தவனுக்கு அனைவரையும், அனைத்தையும் பிடுங்கி எடுக்கும் நிலைதான்.​

மகனின் நிலையைக் கண்ட ரேணுகா, ஏதாவது செய்து மகனின் மனதிற்கு மகிழ்வை ஏற்படுத்த முடியாதா? என யோசிக்க ஆரம்பித்தார்.​

இவரின் யோசனை நன்மை பயக்குமா? அல்லது மகனின் கோபத்தையும் வேதனையையும் அதிகப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.​

மறுநாள் கல்லூரிக்குக் கிளம்பும்போது ஒருவிதமான படபடப்பு அவளுக்கு.​

இந்தப் புதுவிதமான நிலை ஏன் என்று தெரியவில்லை​

இது அவளுக்குப் பிடித்தும் இருந்தது ஒரு விதமான பயமும் இருந்தது.​

கல்லூரிக்குக் கிளம்பும்போது, எதிர்பட்ட தந்தையை பார்த்து, மற்றது மறந்த நிலை தான் அவளுக்கு,​

தந்தையுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட எத்தனிக்கையில் தன் தட்டில் இருந்த பொங்கலை மகள் விரும்பியவாறு சாம்பாரில் நன்றாகக் குழைத்து ஊட்டி விட ஆரம்பித்தார், தந்தை ஊட்டுவதில் வயிறு நிரம்ப உண்டவள், தண்ணீரைக் குடித்து விட்டு எழவும் அண்ணன் இன்பா வரவும் சரியாக இருந்தது.​

"உங்க கிட்ட ஏற்கனவே சொன்னேன் தானே மா, பொங்கலை கொடுத்து அவளைக் காலேஜ்ல தூங்க வைக்காதீங்கன்னு."​

என்றான் சிரிப்போடு.​

"டேய்! காலேஜ் போற பிள்ளை கிட்ட என்ன வம்பு வளர்த்துக்கிட்டு இருக்க, காலையிலேயே!.."​

என்று தந்தை அதட்டவும், அண்ணனிடம் வக்கலம் காட்டிவிட்டு​

"பைப்பா, பை மா!.."​

என்று கத்திய படியே சென்றாள் துள்ளலுடன்.​

இப்படி தன்னை கண்ணுக்குள் வைத்திருப்பவர்களுக்கு என்ன தரக் காத்திருக்கிறாள் மலர்விழி?​

பிடி இருகும்....​

 

paasa nila

Moderator

அத்தியாயம் 14​

தந்தையின்​

பாசத்தையும் அண்ணனின் கிண்டலையும் நினைத்தபடி கௌதமியுடன் கல்லூரிக்குள் வந்தவளுக்கு மற்றது அனைத்தும் மறந்த நிலை தான்.​

கல்லூரி முடிந்து வீட்டிற்கு வரும் நேரத்தில், இன்றும் நித்யா ஐஸ்கிரீம் பார்லருக்கு செல்லலாமென அழைக்கும்போது தான் அந்த நெடியவனின் ஞாபகம் வந்தது மலருக்கு.​

தன்னை ஆர்வமாகப் பார்த்தவனைச் சென்று பார்க்க மனதில் ஆசை துளிந்தாலும், கௌதமி அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டாள்,​

என்பதை அறிந்து, வருவதற்கு தயங்கினாள் மலர்,​

ஆனால் கௌதமிக்கு அதுபோல் எந்தத் தயக்கமும் இல்லை, அதனால்,​

" இல்லடி, நாங்க வரல, நீ போயிட்டு வா!.."​

என்றபடி மலரின் கையைப் பிடித்துக் கொண்டு, வேகமாக ஆட்டோ பிடிக்கச் சென்றாள்.​

மலருக்கும் சேர்த்து இவளே முடிவு எடுப்பதை கண்டு கோபம் வந்தது நித்யாவிற்கு, ஆனால் இதற்கு மலரும் ஒன்றும் சொல்லாமல் செல்வதை கண்டு அமைதியாகவே தானும் கிளம்பினாள் வீட்டிற்கு.​

அகல்யா அன்று வராததால் இது எதுவும் தெரியவில்லை அவளுக்கு.​

கல்லூரியின் பாடத்திட்டங்கள் தொடங்கியிருந்தது.​

மலர் நித்யா உடன் அதிக நேரம் செலவழிப்பதை கண்டு முதலில் ஆராய்ச்சியாகப் பார்த்த கௌதமி பின்பு அவர்களின் நட்பு உணர்ந்து அமைதியாகிவிட்டாள். ஆனாலும் நண்பியின் மேல் எப்போதும் ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது அவளுக்கு.​

அந்த வருடத்தின் செமஸ்டர் தேர்வு ஆரம்பமாக இருந்தது அவர்களுக்கு.​

மிக நன்றாகப் படிக்கும் பெண் அல்ல மலர், ஆவரேஜ் ஸ்டுடென்ட் தான், ஃபெயில் ஆகாமல் பாஸ் ஆகிவிடுவாள், 60% மதிப்பெண்களோடு எப்போதும்.​

இரண்டு நாட்களாக மாதாந்திர பிரச்சனைகளால் பாடத்தைக் கவனம் எடுத்துப் படிக்க முடியவில்லை. கேள்வித்தாளை பார்த்ததும் ஒன்று இரண்டு கேள்விகளைத் தவிர மற்ற கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை அவளுக்கு.​

அடிஷ்னல் சீட் வாங்க எழுந்து சென்ற நித்யா திரும்பி வரும்போது சோகமாக அமர்ந்திருந்த மலரைப் பார்த்தபடியே வந்து அமர்ந்தாள், அவளுக்குப் பின்பாக,​

மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும் படி லேசாகத் தன் மேஜையை தட்டி பெண் அவளின் கவனத்தை தன் புறம் இழுத்து, இவள் எழுதி வைத்திருந்த பதில் தாள்களை யாருக்கும் தெரியாமல் அவளிடம் கொடுத்தாள், முதலில் அதிர்ந்தாலும், ஒன்றும் தெரியாமல் எதுவும் எழுதாமல் அமர்ந்திருந்த மலர்.​

டக்கென்று, அதை வாங்கி தன்னிடம் வைத்துக் கொண்டாள்,​

இவர்களுக்கு இடப்புறமாக இரண்டு இருக்கைகள் முன்னிருந்த கௌதமி எதேச்சையாகத் திரும்பும்போது இதைப் பார்க்க நேர்ந்தது, பார்த்தவள் எதுவும் கூற முடியாத நிலையில் அமைதியாகவே தன் தேர்வினை எழுத ஆரம்பித்தாள்.​

நித்யா கொடுத்த விடைத்தாள்களை பார்த்து வேக வேகமாக எழுத ஆரம்பித்தாள் மலர்,​

தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த எக்ஸாமினர், மெதுவாக எழுந்து ஒவ்வொரு வரிசையாக நடக்க ஆரம்பித்தார்.​

மலரின் அருகே வந்தவர் அவளின் கையைப் பிடிக்க, பயத்தில் ஒரு நிமிடம் நடுங்கி விட்டாள் மலர், கௌதமியும் என்ன ஆகுமோ! எனத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்க, மலரின் கையில் இருந்த பிரேஸ்லெட்டில் தொங்கிக் கொண்டிருந்த சார்ம்ஸ் என்னும் விதவிதமான குட்டி குட்டி பொம்மையும் ஸ்ட்ராபெரி பழத்தைப் போல் இருந்த தொங்கட்டான்களையும் பார்த்து, அழகாக இருப்பதாகக் கூறி சென்றவரைப் பார்த்தபின்பு தான், இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள் மலர்.​

அவர் தன்னை தாண்டிச் செல்வதை பார்த்தபடியே, தன்னிடம் இருந்த நித்யாவின் விடைத்தாள்களை வேகவைக்கமாக அவளிடம் கொடுத்துவிட்டு,​

என்ன தெரியுமோ! அதை எழுத ஆரம்பித்தாள், பயத்தில் மறந்திருந்த அனைத்தும் நினைவு வந்து விட்டது அவளுக்கு.​

வகுப்பறையில் எப்பொழுதும் கவனமாக இருந்து ஆசிரியர் சொல்வதை கேட்கும் நல்ல மாணவி தான் அவள், அதுவே இப்போது அவளுக்குக் கைக்கொடுத்தது.​

நன்றாகவே தேர்வெழுதி வெளியில் வந்த கௌதமி தான் எழுதியவைகள் அனைத்தும் சரியா எனச் சரி பார்த்துக் கொண்டிருந்தவள், தேர்வு அறையை விட்டு வெளியே வந்த மலரைப் பார்த்து,​

"என்ன? ரொம்ப தைரியம் ஆயிட்டீங்க போல, பேப்பர்லாம் மாத்துறீங்க"​

என்றாள் சிறிது கோபத்துடன்​

"இல்லடி, சரியா படிக்கல அதான், நான் கேட்கல, அவளா தான் கொடுத்தா!"​

என்றாள் மெதுவாக.​

"அவ கொடுத்தா, நீயேன் வாங்குன? மேம் வந்து உன் கைய பிடிச்ச உடனே, பயந்து போயிட்டேன் நானு, அவங்க பார்த்து இருந்தா, என்ன ஆயிருக்கும்?"​

எனக் கோபமாகக் கேட்டவளிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றவள்.​

பின்பு மெதுவாக, நான் எதுவும் எழுதல அவளைப் பார்த்து, மேம், போன உடனேயே அவ பேப்பர கொடுத்துட்டேன் அவகிட்ட!"​

என்றாள் சிறிது சமாதானமாக.​

இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தபடியே வெளியில் வந்த நித்யா,​

"என்னடி, என்ன அவகிட்ட கேட்டுக்கிட்டு இருக்க? இப்ப என்ன? காலேஜ் லைஃப்ல இதெல்லாம் சகஜம்தான், ஒரு திரில் தான், இதுக்கு போய்ப் பயப்படலாமா"​

" இன்னும் பால்வாடி பிள்ளைகளாகவே இருக்கிறீங்கடி, ரெண்டு பேரும், நீ தான் அப்படி இருக்கிறனா அவளையும் அதே மாதிரி மாத்தி வைக்கிற!"​

என்றாள் சிறிது கோபத்துடனே.​

"ஆமாடி கௌவ்வு, இதெல்லாம் ஒரு திரில் தானே!"​

என்ற தோழியைப் பார்த்தவள், வேகமா வேகமாகத் தன் புத்தக பையை எடுத்துக்கொண்டு,​

"கேன்டீன் போறேன், வரதா இருந்தா வா!"​

என்ற படியே சென்றாள்.​

அவளின் பின்னே செல்ல இருந்த மலரின் கையைப் பிடித்து நிறுத்திய நித்யா,​

" இரு டி, அவ போகட்டும், கொஞ்ச நேரம் கழிச்சு நாம போகலாம், அகல்யாவும் வந்துடட்டும்"​

என்றபடி அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள் போகாதவாறு.​

கான்டினில் சென்று அமர்ந்த கௌதமி, தன் பின்னோடு எப்போதும் வந்துவிடும் தோழி, வராமல் இருப்பதை பார்த்துப் பெருமூச்சுடன் அமைதியாக அமர்ந்திருந்தாள்.​

தோழியின் பின்னே செல்ல முடியாமல் நித்யா தன்னை பிடித்து வைத்திருப்பதை கண்டு ஒன்றும் சொல்ல முடியாத சங்கடமான நிலை மலருக்கு,​

நெளிந்து கொண்டே இருந்தவளை பார்த்தவள்,​

"ஹேய், என்ன? நானும் உனக்குப் பிரண்டு தான், என் கூட இருக்கிறது ஒன்றும் அவ்வளவு பெரிய தப்பு இல்ல! ரொம்ப தான் உன்ன கண்ட்ரோல் பண்றா அவ!"​

என்றாள் கோபத்துடன்,​

" சேச்சே அப்படியெல்லாம் இல்ல டி! "​

தோழியைப் பற்றித் தவறாகக் கூறுவதை விரும்பாமல் அமைதியாகவே நின்று கொண்டாள்.​

அகல்யா வந்ததும் வேகவேகமாகக் கேண்டினை நோக்கிச் சென்றவள், கௌதமியின் அருகில் அமர்ந்து கொண்டு,​

"அகல்யா வருவதற்காக வெயிட் பண்ணேன் டி"​

என்றாள் சமாதானமாக. அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே,​

அமைதியாக அவளை ஏறிட்டு பார்த்தவள், சரி, என்பதாகத் தலையசைத்துக் கொண்டாள் எதுவும் பேசாமல்.​

தோழியின் மௌனம் பெரிதாகப் பாதித்தது மலருக்கு, அன்று எப்படியாவது தோழியைச் சம்மதிக்க வைத்து ஐஸ்கிரீம் பார்லருக்கு செல்ல வேண்டும் என முடிவுடன் வந்தவள், அதைப் பற்றி எதுவும் கூறாமல் வீட்டிற்கு கிளம்பி விட்டாள் தோழியுடன்.​

காலேஜ் நேரம் முடிந்த பின் அவ்வப்போது அசைன்மென்ட் செய்வதற்காக, இவர்கள் காலேஜிலேயே இருந்து முடிக்கும் நேரத்திலும் லைப்ரரிக்குச் சென்று நோட்ஸ் எடுக்கும் போதும் நித்யாவுடன் பாத்ரூம் செல்வதாகக் கூறிவிட்டு, ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்று அந்த நெடியவனை பார்ப்பதும் அவன் தன்னை பார்ப்பதை தெரிந்து கொண்டும் அந்த வயசுக்கு உரிய துடுக்குத்தனத்துடனும் அவள் கூறிய திரில்லிங்கை அனுபவித்துக் கொண்டிருந்தாள் பெண்எ. ஆனால்,​

இது அனைத்தும் கௌதமிக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டும் இருந்தாள் மலர்.​

ஐஸ்க்ரீம் பார்லருக்கு வருவதாகத் தன்னிடம் சம்மதித்து இருந்த மலர், ஒன்றும் கூறாமல் செல்வதை பார்த்திருந்த நித்யாவிற்கு, அவ்வளவு கோபம் இருவர் மீதும்.​

கௌதமியின் மௌனம் பெரிதாகப் பாதித்தது மலருக்கு, தோழியை எப்படி சமாதானம் செய்வது என யோசித்துக் கொண்டிருந்தவள் திடீரென,​

"கௌவ்வு, நாளைக்கு நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி டிரஸ் போட்டுக்கலாமா? நான் இசை வீட்டுக்குப் போயிட்டு வரும்போது, வாங்கிட்டு வந்து கொடுத்தேனே, அது!"​

என்றாள், முகத்தில் ஆர்வத்தை தேக்கி, நண்பி எப்படியாவது சமாதானம் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையுடன்.​

தோழியின் செயல்கள் புரிந்து சிரிப்புடனே, சம்மதமாகத் தலையாட்டினாள் கௌதமி.​

தோழியின் சிரிப்பில் மகிழ்ந்தவள் "பைய் டி, நாளைக்கு பாக்கலாம்!"​

என்ற படி சந்தோஷமாகவே தன் வீடு நோக்கிச் சென்றாள்.​

தான் சமாதானம் ஆகிவிட்டதில் மகிழ்ந்த படி வீட்டிற்கு செல்லும் மலரைப் பெருமூச்சுடன் பார்த்தவள்,​

அவள் ஆசைப்படும் திரில்லிங்கை அனுபவித்து கொள்ளட்டும் என்ற நினைவுடன் இவளும் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.​

உயிராக இருக்கும் இவர்களுக்கிடையே விரிசல் வருமா?​

காலத்தின் கையில், பொறுத்திருந்து பார்க்கலாம்.​

பிடி இருகும்...​

 

paasa nila

Moderator

அத்தியாயம் 15​

தோழியிடம் கூறியபடி இருவருக்கும் ஒன்றாக வாங்கி வந்திருந்த ஒரே மாதிரியான உடையை எடுத்த அணிந்து கொண்டு வேகமாகப் புறப்பட்டாள் மலர்.​

எப்பொழுதும் நின்று கொண்டிருக்கும் இடத்தில் கௌதமியை காணாமல் சுற்றி முற்றி பார்த்தவள், சிறிது நேரம் காத்திருந்த பின்னும் அவள் வரும் அரவம் இல்லாமல் அவள் வீடு நோக்கிச் சென்றால் வேக வேகமாக.​

இவளைப் பார்த்த கௌதமியின் சித்தி,​

" வா ம்மா, நல்லா இருக்கியா?... அவளுக்கு உடம்பு சரியில்ல, உள்ள தான் படுத்துட்டு இருக்கா, போய்ப் பாரு, இந்த வயசிலேயே என்னதான் வியாதியோ!.."​

என்ற படியே சென்றவரை அதிர்வோடு பார்த்துச் சில கணங்கள் நின்றவள், விரைந்து சென்றாள் தோழியைப் பார்ப்பதற்கு.​

இழுத்துப் போர்த்தி படுத்திருந்தவளின் போர்வையை மெதுவாக விலக்கிப் பார்க்க,​

வலியில் சுருண்டு இருந்தவள், மெதுவாக விழி திறந்து பார்த்தாள்​

"என்னாச்சு டி?.."​

"வைரல் ஃபீவர், வேற ஒன்னும் இல்ல?.."​

"நேத்து நல்லா தானே இருந்த, டாக்டர் கிட்ட போனியா?.."​

" ஆமா, நைட்ல இருந்துதான் ஃபீவர் இருந்தது, டாக்டர் கிட்ட போயிட்டு வந்துட்டேன். "​

"சரி, சரி ரெஸ்ட் எடு, நான் உன்கூடயே இருக்கிறேன்!.."​

"என் கூட இருந்து, என்ன பண்ண போற? காலேஜ் கிளம்பு ஒழுங்கா!.."​

" இல்லடி, உன்ன கூட இருந்து பார்த்துக்கிறேன்!.."​

" பாத்துக்குற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு, மாத்திரை போட்டு இருக்கேன் தூக்கம் வருது, நல்லா தூங்க போறேன், நீ கெளம்பி போ! தேவையில்லாம அட்டெண்டன்ஸ் வேஸ்ட் பண்ணாத."​

எனக் கண்டிப்பாகக் கூறிய தோழியிடம் மறுத்து எதுவும் கூற முடியாமல் கல்லூரிக்குச் சென்றாள் விருப்பம் இல்லாமலேயே...​

தனியாக வந்த மலரைப் பார்த்த நித்யா​

"என்ன டி? நீ மட்டும் வந்திருக்க, கௌதமி எங்க?..."​

"அவளுக்கு உடம்பு சரியில்லை டி!.."​

எனச் சோகமாகக் கூறியவளை பார்த்து,​

"சரி, சரி உடம்பு என்றால் அப்படித்தான், சில நேரம் நல்லா இருக்கும், அப்புறம் நல்லா இல்லாம போகும், அப்புறம் சரியாயிடும், கவலைப்படாம இரு!.."​

"அதெல்லாம் சரி ஆகிடும் அவளுக்கு, சரி இன்னைக்கு நம்ம ஐஸ்க்ரீம் சாப்பிட போலாம்!.."​

என்றாள் கண் சிமிட்டி.​

" இல்ல டி! அப்பா வருவாரு, என்னைக் கூப்பிட "​

என்றவளை பார்த்து முறைத்து,​

பேபி மாதிரி இருக்காதுன்னு உன்ன சொன்னனா, இல்லையா?​

என்று கோபப்பட்டவளிடம்,​

"நாளைக்கு கண்டிப்பா போலாம் இன்னிக்கு ஒரு நாள் முடியாது!.."​

என்ற படியே பாடத்தைக் கவனிக்க ஆரம்பித்தாள் மலர்.​

மறுநாள் கல்லூரி முடிந்ததும் இருவரும் ஐஸ் கிரீம் பார்லரை நோக்கிச் சென்றார்கள், செல்லும் இவர்களைப் பார்த்த அகல்யா, தான் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி சென்று விட்டாள். உடம்பு சரி ஆகாததால் கௌதமி வரவில்லை கல்லூரிக்கு.​

இவர்கள் வருவதை பார்த்து இருந்த அந்த நெடியவன் இவர்கள் வந்து அமர்ந்ததும்,​

" யுவர் ஆர்டர், ப்ளீஸ் மேம்!.."​

எனக் கேட்டபடியே இவர்களின் அருகே வந்து நின்றான்.​

வந்து நின்றவனை கண்ணில் மின்னலுடன் பார்த்த இருவரையும் பார்த்து,​

"உங்க பேருக்கு ஏத்த மாதிரியே!..ஃப்ளவர் டேஸ்ட்ல ஒரு ஐஸ்கிரீம் வந்திருக்கு, டேஸ்ட் பண்ணி பாக்குறீங்களா?​

எனக் கேட்டான், புன்னகையுடன் மலரைப் பார்த்தபடி,​

இவனின் கூற்றில் அதிர்ந்தவர்கள்.​

"இவ பெயருக்கு ஏற்றப்படின்னு எப்படி சொல்றீங்க?.​

இவ பேர் தெரியுமா உங்களுக்கு?.."​

என்ற நித்யாவை பார்த்து​

" தெரியும், அப்பா பெயர் இளவேந்தன் அம்மா பெயர் தாமரை அண்ணன் பெயர் இன்பா போன வருடம் திருமணம் முடிந்த அக்கா இசையரசி ஒரு பாட்டி, இவங்க எல்லாத்துக்கும் ரொம்ப செல்லமான,​

மலர்விழி, செகண்ட் இயர் பிஎஸ்சி சைக்காலஜி."​

என்றவனை அதிர்வோடு பார்த்தவர்களின் முன் சோடக்கிட்டு நினைவுக்குக் கொண்டு வந்தவன்.​

"நான் மாதேஷ்!.."​

என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டவன்,​

இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அருகில் வந்து நின்ற மற்றொரு நெடியவனை காண்பித்து,​

"இவன் என் ஃபிரண்ட் ஷாம், இவனோடு சேர்ந்து இந்த ஐஸ்கிரீம் பார்லரை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்றவன் அவர்களுக்கான ஐஸ்கிரீமை கொண்டுவந்து கொடுத்துவிட்டு,​

" மலர்விழியின், விழிகளில் நான் விழுந்து விட்டேன்!.."​

எனக் கண் சிமிட்டி கூறியபடியே சென்றான்.​

தன்னுடன் நடந்து வரும் நண்பனைப் பார்த்த ஷியாம்,​

" என்ன டா? லவ் பன்றியா?​

இன்னும் கொஞ்ச நாள்ல ஃபாரின் போற ஐடியாவில் இருக்கிற நீ!​

எதற்கு என்னோடு சேர்ந்து இந்தக் கடையை நடத்துறதா சொன்ன.​

டேய்! எதுலையாவது மாட்டி என்னை அடி வாங்க வச்சிடாதடா, நல்லா இருப்ப!.."​

என்றான் கையெடுத்து கும்பிட்டபடி.​

சத்தமாகச் சிரித்தவன்​

"சும்மா, ஒரு இம்ப்ரஸ்காகத் தான் டா, ஒரு பில்டப்!.."​

என்றவன்​

"ஆனா, சீரியஸா எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு, பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகுதுன்னு."​

"எல்லாம், செட் ஆச்சுன்னா உண்மைய சொல்லிடுவேன்!.."​

என்றான் பெண் அவளைப் பார்த்தபடி.​

தன்னை பிடித்திருப்பதாக ஆண் ஒருவன் கூறியதில் சிறிது மகிழ்வும் நிறைய பயமுமாக வீடு வந்து சேர்ந்தாள் மலர்விழி படபடக்கும் இதயத்தோடு.​

மறுநாள் ஆர்வமாகவே கிளம்பிச் சென்றாள் கல்லூரிக்கு, கௌதமி, உடல் நிலை இன்னும் சரியாகாததால் இன்றும் வரவில்லை, அவள் இல்லாமல் சோர்வாகவே இருந்தாள் இவளும், ஆனாலும் ஏதோ ஒன்று இழுத்துச் சென்றது கல்லூரிக்கு அவளை.​

பாடத்தில் பெரிதாகக் கவனம் செலுத்த முடியவில்லை இவளுக்கு, இவளின் அருகில் அமர்ந்து இவளைப் பார்த்துக் கொண்டிருந்த நித்யா, மெதுவாக இவள் புறம் சரிந்து​

"என்ன டி? ஐஸ்கிரீம் பார்லர் கனவா?."​

"சும்மா இரு டி!.."​

" கவனம் எல்லாம் இங்க இல்ல போலயே?.."​

"ரொம்ப அறுக்குறாங்கடி, இந்த மேம், எப்போ கிளாஸ் முடியும்னு இருக்கு."​

ஒரு வழியாகக் கல்லூரி நேரம் முடிந்து இருவரும் சென்று அமர்ந்தார்கள் ஐஸ்கிரீம் பார்லரில்.​

இவர்கள் சென்ற நேரம் மாதேஷ் அங்கு இல்லாமல், இவளின் கண்கள் அலைபாய்ந்து தேடியது அவனை.​

இவர்கள் வருவதை பார்த்த மாதேஷ் கவுண்டரில் நண்பனின் பின்னே நின்று கொண்டான், இவளின் பார்வை தன்னை தேடுவதைக் கண்டு ஆனந்தத்துடன் டக்கென்று நண்பனின் பின்னிருந்து வந்து இரு புருவங்களையும் உயர்த்தி​

" என்ன?.."​

என்பது போல் கேட்டவன் மெதுவாக இவர்களின் அருகே வந்தான்.​

"அப்புறம், என்னைத் தேடுனீங்க போல?"​

என்றவனின் கேள்விக்குப் பதில் கூறாமல் குனிந்து இருந்தவளிடம்,​

உங்களைத் தான், மலர்விழி நிமிர்ந்து என்னைப் பாருங்க!.."​

மெதுவாக நிமிர்த்து பார்த்தவளிர்க்கு அவனைப் பார்க்கவும் அவனிடம் பேசவும் ஆர்வமும் பயமும் சரிசமமாகக் கலந்தே இருந்தது…​

பெண் அவளின் நிலை புரிந்தவன்​

"இங்க வச்சு பேசப் பயமா இருந்தா! வெளியில எங்கேயாவது போகலாம், சாப்பிட்டு வா"​

என்ற படியே அவளிடம் தலையசைத்து சென்றான் பில் கவுண்டருக்கு.​

அவன் சொல்லிச் சென்றதில் அதிர்ந்து அமர்ந்திருந்த மலரைக் கண்டு சிரித்த நித்யா,​

" ஏண்டி பயப்படுற, தைரியமா போ, பேர் பொருத்தம் கூடச் சரியா இருக்கு ரெண்டு பேருக்கும், நியும் எம் அவரும் எம்"​

என்றவளிடம் ஒன்றும் கூறாமல்,​

செல்லும் அவனைப் பார்த்தவளுக்கு, 'வெளியில் செல்லலாம்' என அவன் சொல்லிச் சென்றதில் பயம் பிடித்துக் கொள்ள, வேகமாக நித்யாவை இழுத்துக் கொண்டு வெளியேறினாள், ஒரே ஓட்டமாகத் தன் வீட்டை நோக்கி.​

அண்ணனிடம் ஆலோசனை பெற்று புதிய வேலையில் சென்று சேர்ந்தான் மதியழகன், புது இடமும் புது வேலையும் மகிழ்வாகவே சென்றது அவனுக்கு,​

காலை உணவிற்கு டைனிங் டேபிள் சென்று அமர்ந்தவனுக்கு சூடாக அடைகளில் வார்த்து கொடுத்துக்கொண்டிருந்தார் ரேணுகா, தேங்காய் சட்னி உடன், வேகமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் தினமும் இந்நேரத்தில் அண்ணனும் வந்து தன்னுடன் அமர்ந்து சாப்பிடுபவனை காணாமல்,​

"அண்ணன் கிளம்பியாச்சா மா?.."​

" இல்லப்பா? இன்னும் வெளியில வரல!.."​

" ஓஹோ தினமும் சீக்கிரம் கிளம்பிட்டு இருந்தாரு, இன்னைக்கு என்ன ஆச்சு?.."​

"மீட்டிங் முடிஞ்சு போச்சு!.."​

எனச் சிரிப்புடன் வந்தவனை கண்ட மதியழகன்.​

"ஓஹோ! அப்ப இனிமே ரொட்டீன் வேலை தானா!.."​

என்றான் கிண்டலாக.​

"ஆமா, ஆமா"​

என்று சின்ன மகனின் கேள்விக்குப் பதில் அளித்தவாறு, இருவருக்கும் இடையே புகுந்த அன்னையை ஒன்றாகச் சேர்ந்து இருவரும் திரும்பிப் பார்க்க வேகமாக ஓடிவிட்டார் கிச்சனுக்குள்.​

அன்னையின் செயலால் சத்தமாகச் சிரித்த இருவரையும் கோபமாகப் பார்த்தபடியே நின்றிருந்தார் இடுப்பில் இரு கைகளையும் குற்றியபடி.​

சிரித்தபடி வாசலை நோக்கி நகர்ந்தான் மாறன், தன்னவளை இன்றாவது பார்த்து விடும் வேகத்தில்.​

வருடங்களாகக் காத்திருக்கும் இவன் காதல் கைகூடுமா! காத்திருப்போம் நாமும்.​

பிடி இருகும்....​

 

paasa nila

Moderator

அத்தியாயம் 16​

ஆர்வமாகத் தன்னவளை பார்ப்பதற்காக வேக வேகமாக வெளியில் வந்த தமிழ் மாறனை, ஏமாற்றாமல் காட்சி கொடுத்தாள் அவனின் மனதிற்கினியவள்,​

மெது மெதுவாக அருகில் வந்து கொண்டிருந்தவளைப் பார்த்தவன்,​

"உன் பெயரில்​

விழி இருப்பதாலேயே,​

விழியோடு விழி​

கலந்து தான்​

என்னைப் பார்க்க வேண்டும் என்பதில்லை பெண்ணே,​

நிமிர்ந்து ஒற்றைப்​

பார்வை பாரடி,​

இன்னும் எத்தனை​

காலம் காத்திருக்க​

வேண்டும் நானும்,​

உந்தன் விழி பார்வைக்கு.​

‌​

என மனதிற்குள்ளாகவே தன் வலியை உணர்த்திட,​

இருவருக்கும் சில அடிகள் தூரம் இருக்கையில், இவனை ஏமாற்றாமல் நிமிர்ந்து பார்த்தாள் பெண் அவளும்,​

இவன் விழியோடு விழி கலந்தவளின் பார்வை, சில நொடிகள் அவனோடு தேங்கி நின்று, பின் விழி நகர்த்தியவள் அதிர்ச்சியாக இவனின் பின்பு பார்ப்பது கண்டு,​

முதலில் அவளின் பார்வையில் மகிழ்ந்தவன் பின்பு யோசனையாகத் திரும்பிப் பார்த்தான்.​

அங்குப் பைக்கில் அமர்ந்தவாறு, இவளைப் பார்த்துப் புன்னகைத்தபடியே கண்ணடித்தான் ஒரு இளைஞன், அவன் செய்கையால் சுறுசுறுவெனக் கோபம் ஏறினாலும் யோசனையாகப் பெண் அவளின் எதிர்வினையைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான் மாறன்.​

இவனைப் பார்த்தவள் வேக வேகமாகச் சென்று தனக்காகக் காத்துக் கொண்டிருந்த கௌதமியின் அருகில் சென்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள் இறுக்கமாக.​

சில நாட்களுக்குப் பிறகு, கல்லூரிக்கு வரும் தன்னை ஆவலாகப் பிடித்துக் கொண்டிருப்பதாக நினைத்த கௌதமி உணர்ந்தது, மலரின் கை நடுக்கத்தை தான்.​

அவள் நடுக்கத்தை உணர்ந்து கேள்வியாக அவளை நோக்க, அவளின் பார்வை சென்ற இடத்தை இவளும் பார்வையிட்டாள், அங்குப் பைக்கில் அமர்ந்திருந்தவனை கண்டவள் அதிர்வோடு,​

" இது, அந்த ஐஸ்கிரீம் பார்லர்ல நாம பார்த்த ஆளு தானே?"​

என்ற கேள்வியுடன் மலரை நிமிர்ந்து பார்க்க,​

" இவன் எதுக்கு இங்க வந்தான்?"​

என்று சந்தேகமாகக் கேட்கவும்,​

" இல்லைடி! எனக்கு ஒன்னும் தெரியாது, நான் வரச் சொல்லல"​

என்றாள் மறுப்பாக மலர், தோழி எங்கே தன்னை தவறாக நினைத்து விடுவாளோ என்று அஞ்சி,​

என்ன? ஏது? என்று ஒன்றும் புரியாமல், வேறு எதுவும் கேட்கத் தோன்றாமல், வந்து நின்ற பேருந்தில் தோழியை இழுத்துக் கொண்டு ஏறினாள் கல்லூரியை நோக்கி.​

ஆடவர்கள் இருவரும் பெண்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்தனர், அவர்கள் பேருந்து ஏறிச் செல்லும் வரை.​

பேருந்தின் பின்னே செல்ல முற்பட்டவனை நோக்கி விரைவாகச் சென்ற மாறன்,​

" ஹலோ! யார் நீங்க? இங்க என்ன பண்றீங்க?"​

எனக் கேட்டான் சிறிது அதட்டலாக,​

" அத, நீங்க ஏங்க கேக்குறீங்க?"​

என்றான் இவனும் திமிராகவே,​

" எங்க வீட்டு வாசல் கிட்ட தானே நீங்க நிக்கிறீங்க! அப்ப நான் கேட்கத் தானே செய்வேன்"​

என்றான் இவனும் அதே திமிரோடு,​

" ஓ! உங்க வீட்டு கிட்டயா, சரி சாரி"​

என்றபடி இவனை முறைத்தவாறு வேகமாக வண்டியை எடுத்துச் சென்று விட்டான்.​

அமைதியாகப் பேருந்தில் பயணித்தவர்கள், கல்லூரி வந்த பின்பும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, மலர் விழியும் கௌதமியும்.​

நெடுநாள் சென்று வந்த கௌதமியை பார்த்த நித்யாவும் அகல்யாயாவும்​

"என்னடி? எப்படி இருக்க? உடம்பு பரவாயில்லையா?​

" பரவாயில்லை, நல்லா இருக்கேன்!"​

என்று இருவருக்குமான பதிலைக் கூறியவள் அமைதியாக இருப்பதை பார்த்த நித்யா,​

என்னவென்று செய்கையால் மலரிடம் கேட்க, அவளோ எதுவும் கூறாமல் தலையைக் குனிந்தவாறு அமர்ந்து கொண்டாள்.​

எதுவோ, சரியில்லை என்று நினைத்தவள், அதைக் கேட்க ஆரம்பிப்பதற்கு முன்பே,​

கௌதமி, மலரின் புறமாகத் திரும்பி,​

சரி! சொல்லு, மலரு! எதுக்கு அவன் நம்ம ஏரியாவுக்கு வந்திருந்தான்?.."​

" எவண்டி?.."​

என அதிர்வாக அகல்யா கேட்க,​

" அந்த ஐஸ் கிரீம் பார்லர் வச்சிருக்கான்ல, அவன் தான்?.."​

"அவனா? உங்க வீட்டு கிட்ட அவன் ஏன் வந்தான்?.."​

என இவளும் கேட்க, ஒன்றும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் மலர்.​

அதைப் பார்த்த நித்யா​

"எதுக்குடி? அவகிட்ட கேள்வியா கேட்டுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும், அவன் இவளை விரும்புறான், அதனால அவளைத் தேடி அவங்க வீட்டு கிட்ட பார்க்கப் போய் இருக்கான், இதுல என்ன தப்பு?.."​

என்றாள்,​

இவளின் பதிலில் அதிர்ந்த இருவரும் வேகமாக மலரைத் திரும்பிப் பார்க்க, மலரோ வேகமாக,​

" நான் இல்லடி, அவன் தான் என்ன பிடிச்சிருக்குன்னு சொன்னான்!.."​

"ஓஹோ! இது எப்போ?.."​

நீ லீவுல இருந்த இல்ல அப்போதான்"​

" ஓஹோ நான் வரலைன்னா எதுவுமே என்கிட்ட சொல்ல மாட்டியா?"​

"அவ லீவுல இருந்தா சரி, நான் உங்க கூடத் தானடி இருந்தேன்"​

எனக் கேட்டாள் அகல்யா.​

"புதுசு புதுசா, நிறைய கத்துக்குறீங்க மலர்விழி"​

எனக் கோபமாகக் கூறிய கௌதமி கேண்டினை நோக்கி எழுந்து சென்றாள்.​

இவர்கள் இருவரையும் முறைத்தவாறே கௌதமியின் பின்னோடு எழுந்து சென்றாள் அகல்யாவும்.​

"என்னடி சொன்னான்?"​

என ஆரவாரமாகக் கேட்ட திவ்யாவை பார்த்த மலர்,​

" அடி போடி! நானே பயந்து போய் இருக்கேன்! எதுக்கு வந்தான்னு தெரியாம."​

"சரி வா, எதுக்கு வந்தான், என்னன்னு? கேட்கலாம்..."​

"வேண்டாம் டி! நான் வரல."​

"அவங்க ரெண்டு பேரும் வேற கோவமா போயிருக்காங்க, வா நாமளும் போவோம்."​

என வர மறுத்தவளை,​

"அடி வாடி என்னன்னு கேட்டா தானே தெரியும்?.."​

என்றபடி அவளின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் ஐஸ்கிரீம் பார்லரை நோக்கி,​

இவள் எப்போது வருவாளெனப் பார்த்துக் கொண்டிருந்த மாதேஷும், இவள் வருவதைப் பார்த்து இவள் அருகில் வேகமாக வந்தவன்,​

"உன்னைத் தேடி நான் வந்தா, நீ நிக்காம கூடப் போற!.."​

"அங்க, என்னன்னா என்னை யார்? என்னன்னு ஒருத்தன் கேள்வியா கேட்கிறான்?.. ஆமா யார் அது?.."​

என்றான் கோபமாக,​

"யாரை கேக்குறீங்க? எனக்குத் தெரியலையே!.."​

என்றாள் இவளும் குழப்பத்துடன்,​

" உங்க தெரு முனையிலேயே நின்னு உன்னையே கண் சிமிட்டாம பாத்துட்டு இருக்கான், கண்ணுல அவ்ளோ காதல தேக்கி வெச்சு, அவன தான் கேட்கிறேன்."​

என்றான் இவனும்​

" எனக்கு அப்படி யாரையும் தெரியலையே."​

என்ற படியே இவள் திரும்ப, கோபமாக இவளைப் பார்த்தபடி நின்று இருந்தாள் கௌதமி,​

மாதேஷ் செய்த ஒரே நல்ல விஷயம் காதலாக ஒருவன் இவளை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை மலருக்கு தெரியப்படுத்தியதுதான்.​

தோழியைப் பார்த்ததும் மற்றது மறந்து வேகமாக அவள் அருகில் சென்றவள் ஒன்றும் கூறாமல் கையைப் பிசைந்தவாறு நிற்க,​

நித்யாவையும் முறைத்தவள், கல்லூரியை நோக்கி விடு விடுவென்று திரும்பிச் சென்றாள் கௌதமி,​


அவள் பின்னோடு வந்த மலர்,​

"எதுக்கு வந்தான்னு? கேட்கத் தாண்டிப் போனேன்."​

"கேட்டு என்ன செய்யலாம்னு இருக்க.!"​

"நீ அவனை லவ் பண்றியா? "​

நேராகப் பார்த்துக் கேட்டவளிடம்​

"எனக்குச் சொல்லத் தெரியலடி, ஆனால் அவனைப் பிடிச்சிருக்கு."​

என்றாள் தலையைக் குனிந்தவாறு,​

" அப்பாக்கு தெரிஞ்சா, பரவாயில்லையா உனக்கு, அப்பா என்ன நினைப்பார்."​

எனக்கேட்டவளிடம் ஒன்றும் கூற முடியாமல் அமைதியாக நின்றவள்,​

"அவர் கண்டிப்பா ஒத்துக்குவாரு டி! அவருக்கு நான் தான் உயிருன்னு உனக்கே தெரியுமே..."​

" சரி, உயிராய் இருக்கிற அந்த அப்பாக்கு தான் நீ வேதனை கொடுக்கப் போறியா?.."அவங்க உன் மேல வைத்திருக்கிற நம்பிக்கைக்கு நீ தரும் பரிசு இதுதானா?"​

எனக் கேட்க எதுவும் கூற முடியாமல் அமைதியாக நின்றவளிடம்,​

"சரி, உன் வாழ்க்கை, உன் முடிவு நான் சொல்ல என்ன இருக்கு?.."​

என்றபடி வேக வேகமாகச் சென்று தன் இடத்தில் அமர்ந்து கொண்டாள்.​

"அப்படி எல்லாம் சொல்லாத கௌவ்வு கஷ்டமா இருக்கு"​

"நிஜமாவே உனக்குக் கஷ்டமா இருந்தா, என்கிட்ட மறைக்கணும்னு நினைச்சி இருக்க மாட்ட"​

கண்களில் கட்டிவிட்ட நீரோடு அமர்ந்திருந்தவளை பார்த்த நித்யா,​

" இப்போ என்னடி? எதுக்கு அவளைத் திட்டுற? லவ் பண்றது என்ன அவ்வளவு பெரிய குத்தமா?.."​

" உனக்கு அவங்க வீட்ட பத்தி ஏதாவது தெரியுமா?.."​

" நீதான்! அவளைத் தூண்டிவிட்டு இருக்கியா?​

"ஹேய்! நான் ஒண்ணுமே செய்யலையே!.."​

" அவளைப் பற்றியும் எனக்குத் தெரியும், உன்னைப் பற்றியும் எனக்குத் தெரியும்..."​

என்றபடியே மலரைப் பார்த்தவள் அமைதியாக அமர்ந்து கொண்டாள்,​

அன்றைய கல்லூரி முடிந்தும் நண்பர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலேயே விடை பெற்று சென்றார்கள் இவர்கள் இருவரும் ஒன்றாக வீடு திரும்பினாலும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியையே கடைப்பிடித்தனர் இருவரும்.​

அலுவலகத்தில் அமர்ந்திருந்த தமிழ்மாறனுக்கு காலையில் நடந்தவைகளே திரும்பத் திரும்ப மனதில் ஓடிக்கொண்டிருந்தது,​

" யார் அவன்?…"​

அவனைக் கண்டதும் முதலில் அதிர்ந்தாலும், தன்னவளின் கண்ணில் தெரிந்த மின்னலுக்கு என்ன காரணம்?​

இத்தனை நாள் தன்னை நிமிர்ந்தும் பார்க்காதவள் இன்று பார்த்தாளே என்ற மகிழ்வை முழுதாக அனுபவிக்க முடியாமல்,​

அது சில நிமிடம் கூட நிலைக்கவில்லையே என்ற வேதனையோடு அமர்ந்திருந்தவனுக்கு அவளின் மனதில் அந்தப் புதியவன் இருப்பானோ? என்ற சந்தேகமும் முள்ளாய் குத்தி வேதனையைக் கொடுத்தது.​

யோசித்து யோசித்து தலைவலி தாங்காமல் இரு கைகளால் தலையைத் தாங்கிய படி அமர்ந்தான், கண்ணீர் வரும் போல் இருக்க அதைக் கட்டுப்படுத்திய படி அமர்ந்திருந்தவன் மனதில் சொல்ல முடியாத சோகத்துடன் இந்த வரி தான்.​

'உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்​

இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?​

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ​

துன்பக் கவிதையோ கதையோ?​

இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?​

பிடி இருகும்...​

 
Last edited:

paasa nila

Moderator

அத்தியாயம் 17​

அன்றைய தினம் அமைதியாகவே கழிந்தது மலர்விழிக்கு. தான் செய்வது சரியா, தவறா என்பதே புரியாத நிலை, இன்னும் தன் மனம் புரியவில்லை அவளுக்கு, அது என்ன எதிர்பார்க்கிறது என்பதும் தெரியாமல் வேதனையில் உழன்று கொண்டிருந்தாள்.​

அவன் காதல் சொன்னது பிடித்திருந்தது, ஆனால் அதே காதல் இவளுக்கும் அவனிடம் இருக்கிறதா? என்ற கேள்விக்குப் பதில் இல்லை.​

காதல் இருக்கிறதா? இல்லையா? என்பது தெரிவதற்கு முன்பே, இவ்வளவு பிரச்சனைகளா! என யோசனையுடன் அமர்ந்திருந்தவள், சோகமாகவே கிளம்பினாள் கல்லூரிக்கு, தோழி தன்னிடம் பேசுவாளா? மாதேஷ் வேறு எதுவும் வந்து கேட்பானோ? என்ற அச்சத்துடனேயே.​

இரவு சரியாகத் தூக்கம் இல்லாமல் புரண்டு கொண்டே இருந்தவன் வெகுசீக்கிரத்திலேயே எழுந்து விட்டான், தன்னவளை பார்க்கச் செல்ல வேண்டுமா? வேண்டாமா? என இரு வேறு மன நிலை அவனுக்கு, காதல் கொண்ட மனது போகச் சொல்லக் குழப்பமான மனது வேண்டாம் என்றது.​

சோபாவில் வந்து சோர்வோடு அமர்ந்திருந்த மகனையே நோட்டமிட்டு கொண்டிருந்தார் ரேணுகா,​

'என்ன ஆச்சு? இந்தப் பையனுக்கு. ஏன் ரொம்ப சோகமா இருக்கான்?..'​

எனத் தனக்குள்ளாகவே கேள்வி கேட்டுக் கொண்டவருக்குப் பதில் தான் தெரியவில்லை.​

நேரம் ஆகிவிட்டதை உணர்ந்தும் மகன் வாசலுக்கு எழுந்து செல்லாமல் இருப்பதை பார்த்துக் கொண்டிருந்தவர், குட்டி போட்ட பூனையாக இங்கும் அங்கும் நடந்து கொண்டே இருந்தார்.​

தான் செய்வதற்கு ஏதாவது இருக்குமா எனை யோசித்தபடியே‌.​

சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவன் அதற்கு மேல் முடியாமல் எழுந்த வேகமாக வாசலுக்குச் செல்ல, அவன் பின்னே எழுந்து சென்றார் ரேணுகா.​

அவர் சென்றபோது பார்த்தது.​

வேகமாக மகனைத் தாண்டிச் செல்லும் பெண் அவளைத்தான் ஏனோ மகனின் முகம் சோகமாக இருப்பது தாங்கவில்லை அந்தத் தாய்க்கு, மனதிற்குள் முடிவு எடுத்தவராக, மகனின் அருகே வந்து நின்று,​

"இந்தா மா! பொண்ணு. பொண்ணு ஒன்ன தான், இங்க பாரு."​

என்ற அன்னையின் செயலில் அதிர்ந்த மாறன்,​

" அம்மா, என்னம்மா பண்றீங்க?.."​

என்றான் பல்லைக் கடித்த படி அவசரமாக, அதற்குள்ளாக, இவர்களை நோக்கித் திரும்பி விட்ட மலர்விழியை பார்த்து,​

" என்னம்மா காலேஜ் போறியா? நான் யாருன்னு தெரியும்ல?​

என்று கேட்டார் ரேணுகா.​

அவர் கேள்வியைக் கவனிக்காமல்​

"என்ன ஆன்ட்டி? எதுக்கு கூப்பிட்டீங்க?.."​

என்று கேட்டாள் மலர்​

" காலேஜ் போறியா?.."​

" ஆமா ஆன்ட்டி!….."​

எனப் பதிலளித்தவள், மனதிற்குள்ளாக.​

'எதுக்கு இந்த ஆன்ட்டி தேவையில்லாம என்ன பிடிச்சு வச்சிருக்காங்க?..'​

"சரி சரி இவனைத் தெரியுமா?.என் பையன் தான்."​

" ஓஹோ தெரியாது?.."​

" தெரியாதா!.சரி, இப்போ தெரிஞ்சுக்கோ, கம்பெனியில் மேனேஜரா இருக்கான்."​

"அவன் பேரு..."​

எனச் சொல்ல வந்தவர்,​

சற்றென்று மகனைத் திரும்பிப் பார்த்து​

"சொல்லுப்பா, உன்ன பத்தி நீயே சொல்லு!.."​

என்றார்‌​

அம்மாவை முறைக்க முடியாமல்,​

" ஹாய்! நான் தமிழ் மாறன், "​

என்றான் முயன்ற சிரிப்போடு.​

" ஹாய்!.."​

என்றாள் அவளும் சிறு சங்கடத்துடன்‌​

" கைக்குடுடா, கைக்கொடு என்றார் ரேணுகா.​

அம்மாவை முறைத்தபடியே​

"வணக்கம்!.."​

என்றான் இருக்கையையும் கூப்பிய படி.​

அவளும் சற்றே நிம்மதியுடன் இரு கைகளையும் கூப்பி வணக்கம் என்றபடி, அவன் கண்களை நோக்க ஏனோ அவனின் வழிகளிலிருந்து தன் விழியை அகற்ற முடியாமல் தடுமாறி விட்டாள் பெண்.​

இது என்ன உணர்வு என யோசிப்பதற்குள்ளாகவே,​

"உனக்கு என்னையாவது தெரியுமா? தெரியாதா?.."​

என்று ரேணுகா கேட்க,​

"தெரியும் ஆன்ட்டி!..இன்பா அண்ணனுடைய பிரண்டு, மதி அண்ணனின் அம்மா தானே நீங்க!.."​

" என்னது மதி அண்ணா வா."​

என்றார் அதிர்வோடு.​

அம்மாவிற்கு கொஞ்சமும் குறையாத அதிர்வோடு நின்றிருந்த மகனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே​

"என்னமா? என்னை ஆன்ட்டின்னு சொல்ற, என் பையன அண்ணனு சொல்ற, சரி இல்லையே."​

என்றார்​

ஓ! சரிங்க ம்மா டைம் ஆயிடுச்சி, அப்ப நான் வரேன்!.."​

என்றபடி கிளம்ப முயன்ற மலரைப் பார்த்து,​

" கெட்டது குடி! போ."​

என்று கூறிவிட்டு​

"நீ என்னை ஆன்ட்டினே கூப்பிடு மா. அதுதான் எல்லா வகையிலும் வசதி!.."​

என்ற படியே வீட்டிற்குள் செல்ல ஆரம்பித்தார்,​

கேள்வியாகவும் குழப்பமாகவும் போகும் அவரைப் பார்த்துவிட்டு, அத்தோடு மாறனையும் நிமிர்ந்து ஒரு முறை நன்றாகப் பார்த்துவிட்டுக் கௌதமியுடன் இணைய விரைவாகச் சென்றாள் மலர்.​

கௌதமி உடன் பேருந்தில் ஏறிக் கல்லூரி சென்று பாட அறையில் அமர்ந்த பின்பும் யோசனை தான் பெண் அவளுக்கு​

' இவரைப் பற்றிதான் மாதேஷ் அன்று சொன்னாரோ,​

கண்ணுல காதல வெச்சி பார்க்கிறதா சொன்னாரே, இவரைத் தானா?..'​

'அவர் கண்ணுல காதல் தெரிஞ்சுதா என்ன?..'​

'இதெல்லாம் எப்படி கண்டு பிடிக்கிறது!..'​

'ஆமா நான் ஏன்? அவர் கண்ணையே உத்து பார்த்தேன், என்னையும் அறியாமல்!​

என்ற பலத்த சிந்தனையுடன் அமர்ந்திருந்தவளுக்கு தன் மனம் என்ன நினைக்கிறது என்பதே புரியாத நிலை.​

வீட்டிற்குள் வந்த மாறனுக்கு தாய் செய்து வைத்த வேலையால்​

என்ன சொல்வது என்பதே தெரியாத நிலை.​

தாயை தேடியவனுக்கு அவர் கண்களில் சிக்காமல் ஒளிந்து கொண்டது கோபத்துடன் சிரிப்பை வரவழைத்தாலும் பெண் அவளின் விழிகளோடு விழிகள் கலந்த அந்தச் சில நொடிகள் அவனுக்குப் பரவசத்தையே ஏற்படுத்தியது.​

அந்தப் புதியவனால் மனதில் ஏற்பட்டிருந்த சஞ்சலமும் சிறிது குறைந்த நிலை அவனுக்கு​

அவள் மனதில் வேறொருவன் இருந்திருந்தால், தன்னை விழியோடு விழி நோக்கி அதிர்வாகச் சில நொடிகளெனும் நின்று இருப்பாளா? என்பது சந்தேகமே என்ற மகிழ்வு மனதில் இருந்தாலும் ஏனோ பாரமாகிவிட்ட உணர்வு இருந்து கொண்டே இருந்தது.​

அவன் யார்? எனத் தெரியும் வரை இந்த நிலை நீடிக்கப் போது உறுதி என்பதை மனதில் எண்ணிக் கொண்டவன்​

யார்? என்ன? என்பதை சீக்கிரத்தில் தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தபடி அமர்ந்திருந்தான்.​

மலர்விழிக்கும் இரண்டாம் வருட செமஸ்டர் தேர்வுகள் ஆரம்பமாகி இருந்தன, அதற்கு மேல் அவளால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை.​

போன செமஸ்டரில் சரியாகப் படிக்காமல் எப்படியோ பார்டரில் பாஸ் செய்து விட்டாலும்,​

திரில்லிங்கிற்காகப் பேப்பர் மாற்றிக் கள்ளத்தனம் செய்ததில் தோழியின் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டவள்,​

தற்போதும் கௌதமி தன் செயலால் கோபத்தில் இருப்பதை உணர்ந்து, இனி எப்போதும் அவளின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என எண்ணி முயன்று படிப்பில் கவனம் செலுத்தி வேறு எதுவும் மனதிலும் மூலையிலும் ஏற்றாமல் படிப்பு மற்றும் தேர்வு ஒன்றே குறிக்கோளாகச் சுற்றிக் கொண்டிருந்தாள்​

மிக நன்றாகவே தேர்வு எழுதி இருந்தவளுக்கு விடுமுறை காலம் சிறிது போராகவே சென்றது.​

இசையரசிக்கு குழந்தை நின்று, பின்பு தங்காமல் சென்றதில் அவளால் பயணம் செய்ய முடியாததால் அவளைச் சென்று பார்ப்பதற்கும் அவளுடன் சில நாட்கள் தங்கி வருவதற்காகத் தாமரை சென்றுவிட்டார் அவளின் வீட்டை நோக்கி.​

பாட்டியால் முடியாததால் அவர் வரவில்லை என்று கூறியதால் மலர்விழியும் பாட்டியுடன் துணைக்கு வீட்டிலேயே இருந்து கொண்டாள்.​

வீட்டில் இருந்ததற்கான ஒரே பலனாகப் பாட்டியிடம் கேட்டுக் கேட்டு நன்றாகவே சமையல் செய்யக் கற்றுக் கொண்டாள், பாட்டியின் கை மனம் எப்போதுமே அலாதி தான்.​

தாமரையே நிறைய நேரங்களில் பாட்டியிடம் அளவுக்குக் கேட்டுச் சமைப்பார், அதுவும் பாரம்பரியமான உணவுகளைச் சமைப்பதில் பாட்டியை மிஞ்ச ஆளில்லை.​

அவர் வைக்கும் கொள்ளு ரசமும் பிரண்டை துவையலும் மருந்து கலந்த சாதமும் கருப்பட்டி சேர்த்த இனிப்பு பண்டங்களும் திணை அரிசி மற்றும் கேழ்வரகு, சம்பா ரவையெனப் பலவற்றை கற்று தெரிந்து கொண்டாள் மலர்விழி​

பாட்டியின் கை மனம் பேத்திக்கும் இருந்தது என்பதுதான் சிறப்பு.​

இளவேந்தனுக்கு தாயின் கை மனம் மகளுக்கும் வந்ததில் அலாதியான சந்தோஷமும் பெருமையும்​

மகள் சமைத்துக் கொடுத்ததை சாப்பிட்டு பாராட்டி அதை மனைவியிடமும் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.​

பாட்டியிடமிருந்து சமையல் குறிப்பு மட்டும் கற்றுக் கொள்ளாமல் அத்துடன் உடல் வலிக்குச் சுகம் தரும் வகையில் அலுப்பு மருந்து, இஞ்சி குடிநீர், வாய்வு மற்றும் பித்த கசாயம் சுக்கு காபி போன்றவைகளையும் ஆர்வத்துடனயே கற்று தேர்ந்து கொண்டாள்.​

இவளுக்குச் சமையல் மிக நன்றாகவே வந்தது அதில் ஆர்வம் இருக்க விரைவாகவே அனைத்தையும் படித்துக் கொண்டாள். ஆரம்பத்தில் போராகச் சென்ற கல்லூரி கால விடுமுறையில் நாட்கள் பின்பு பிஸியாகவே முடிந்தது. ஊருக்குச் சென்று இருந்த தாமரையும் மகள் உடல் நிலையைத் தேற்றி விட்டுத் தன் வீட்டிற்கு திரும்பியிருந்தார்.​

இறுதி வருட கல்லூரி படிப்பும் இனிதே ஆரம்பமாகி இருந்தது மலர்விழிக்கு.​

மாதேஷின் காதலை ஏற்றுக் கொள்வோமா! வேண்டாமா? என்பதில் இன்னுமே குழப்பம் அவளுக்கு, இதில் இடை இடையே மாறனின் விழிகளும் அதில் இருந்தது என்ன ? என்ற கேள்வியும் சில நேரங்களில் பெண் அவளைத் தூங்க விடாமல் யோசிக்க வைத்திருக்கிறது.​

இறுதி வருடக் கல்லூரி காலம் அவளுக்கு என்ன வைத்திருக்கிறது என்பது போகப் போகத் தான் தெரியும்...​

பிடி இருகும்...​

 

paasa nila

Moderator

அத்தியாயம் 18​

மூன்றாம் வருட கல்லூரி துவங்கி இருந்தது, எப்பொழுதும் இருக்கும் ஆர்வமும் ஆர்ப்பாட்டமும் சற்று குறைந்து தான் இருந்தது மலர்விழிக்கு, தன் செயலால் கௌதமியுடன் ஏற்பட்டிருந்த சிறு பிணக்கும், மாதேஷ் தன்னை தேடி வீட்டின் அருகே வந்ததும் மாறனின் விழி வீச்சில் கட்டுப்பட்டு நின்ற சில வினாடிகளும் என அனைத்துமே கவலைக்கு உள்ளாக்கியது பெண் அவளை.​

எந்தச் சிக்கலும் இல்லாமல் இறுதி வருடத்தை நல்லபடியாகப் படித்து முடித்து மேல் படிப்பு செல்ல வேண்டும் என்பதை உறுதியோடு மனதில் பதித்துக் கொண்டு கல்லூரி வாழ்வை துவங்கியிருந்தாள், சிறிது மகிழ்வுடனே.​

விளையாட்டுபோலக் கல்லூரி துவங்கி ஆறு மாதங்கள் முடிந்திருந்தது. இந்த ஆறு மாதத்தில் நண்பர்களின் வற்புறுத்தலால் இரண்டு முறை ஐஸ்கிரீம் பார்வருக்கு சென்ற போதும் மாதேஷை பார்க்க முடியவில்லை இவளால், அதில் இவளுக்கு வருத்தமும் தோன்றவில்லை என்பது தான் பெரும் வியப்பு, கௌதமியுடனும் சுமூகமாகவே சென்றது நட்பு.​

அன்று கல்லூரி நேரம் முடிந்து, நண்பர்கள் அனைவரும் ஐஸ்கிரீம் பார்லர் செல்லலாமென முடிவெடுத்திருக்க கௌதமி தான் வரவில்லை என்று கூறிவிட்டு லைப்ரரியில் ரெஃபரன்ஸ் எடுப்பதற்காகச் சென்று விட்டாள் மலர்விழியை செல்லுமாறு கூறிவிட்டு,​

இவளும் தோழி அதிகமாக இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை என்பதை தெரிந்து மற்ற தோழிகளுடன் ஐஸ்கிரீம் பார்லரை நோக்கிச் சென்றாள்.​

வெகுநாட்களுக்குப் பிறகு இவளைக் கண்ட மாதேஷ் மகிழ்வோடு, இவள் வாசல் கதவைத் திறப்பதற்கு முன்பாகவே திறந்து வெளி சென்றவன் அனைவர் முன்னிலையிலும் சாலை என்பதையும் பாராமல், இவள் அருகில் வந்து, முட்டிப் போட்டு அமர்ந்து தன் கையில் இருந்த ஒற்றை ரோஜாவை அவள் புறம் நீட்டி,​

"வில் யு பீ மை லவ்!.."​

எனக் கேட்க, படத்தில் வருவதைப் போல், இருக்கும் இந்தக் காட்சியைப் பார்த்த நண்பர்கள் அனைவரும்,​

" ஓ "​

என்று சத்தமிட, சினிமாவில் கண்டதை நிஜத்தில் பார்த்ததில், அவ்வளவு குதுகலம் அவர்களுக்கு,​

பெண் அவளுக்கோ, நண்பர்கள் முன்னிலையில் ஒருவன் தன்னிடம் காதல் சொல்வதில், சற்று பெருமையும், தன் முன் முட்டியிட்டு அமர்ந்திருந்த அவனைக் கண்டு பயமும், நண்பர்கள் முன்னிலையில் சிறு வெட்கமும், மகிழ்வும் ஒன்று சேர, என்ன செய்வது என்று தெரியாமல், கண்கள் இரண்டையும் விரித்து இரு கைகளால் வாயைப் பொத்தி அதிர்வோடு அவனை நோக்கி அவள் நிமிர அதைவிட அதிகமாக அதிர்வோடு கண்கள் விரிந்து கொண்டது, தன்னை பார்த்துக் கொண்டிருந்த தந்தையைக் கண்டு.​

பயத்தால் வெளிரி சில கணங்கள் நின்றிருந்தவள். மாதேஷை, தாண்டி வேகமாகத் தந்தையின் அருகில் சென்றவள், எதுவும் கூறும் முன்பே அவள் கையைப் பிடித்தவரின் பிடி இறுகி இருந்தது, காரின் அருகே வேக வேகமாக நடந்து சென்றார் வேந்தன்.​

தந்தையின் பிடி வலியைக் கொடுத்தாலும் அமைதியாக அவரின் இலுப்புக்கு சென்றாள் மலர்விழி.​

இன்று மகள் படிக்கும் கல்லூரியின் அருகே ஒரு வேலை இருப்பதால் வந்தவர் மகளையும் தன்னோடு வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம், அவளுக்குச் சர்ப்ரைஸ் கொடுக்கலாமென வந்தவருக்குத் தான், மகள் பெரிய சர்ப்ரைஸ் ஆகக் கொடுத்து விட்டாள் என்பதை நினைக்க மனம் ஆறவில்லை அவருக்கு.​

குழந்தையெனத் தான் நினைத்திருந்தவள் செய்யும் வேலை அவரை மிகவும் அதிர்வுக்கு உள்ளாக்கியது. ஒருவன் நடு ரோட்டில் நின்று காதல் சொல்கிறான் என்றால் அவனை இவளுக்கு எப்படித் தெரியாமல் இருக்கும் என்ற சிந்தனையே ஓடிக்கொண்டிருந்தது அவருக்கு, காரை எடுத்தவர் திரும்பிப் பார்த்தது வேகமாகப் பின்னிருக்கையில் வந்து அமரும் மகளைத்தான்.​

வீட்டிற்கு வந்தவர் அடக்கப்பட்ட கோபத்துடன் வீட்டிற்குள் செல்ல,​

இந்த நேரத்தில் கணவனும் மகளும் ஒன்றாக வருவதை கண்ட தாமரை,​

" என்ன ரெண்டு பேரும் ஒண்ணா வரீங்க?.. அப்பாவும் மகளும் ரகசியமா ஊர் சுத்திட்டு வரீங்களா?.."​

என்று சிரிப்போடு தாமரைக் கேட்க, மகளின் மேல் இருந்த கோபமும், மனைவியின் கிண்டலும் சேர்ந்து அவரை அழுத்தியதில் இதுவரை செய்யாத ஒரு செயலை அவர் செய்தார்.​

சிரிப்புடன் அருகில் வந்த மனைவியை இழுத்து ஒரு அரை விட்டார், கணவன் முதல் முதலாகத் தன்னை அடித்ததில் அதிர்ந்து, சுழன்று சென்று அப்போதுதான் தன் அறையிலிருந்து வெளியில் வந்து கொண்டிருந்த மாமியாரின் மீது இடித்து நின்றார் தாமரை.​

தந்தையின் இந்த அதீத கோபத்தால் பயந்து நடுநடுங்கி நின்று கொண்டிருந்த மலர்வழிக்கு கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது, தன் பொருட்டு தாய் அடி வாங்கியதை நினைத்தும் தன் செயலைத் தந்தை தவறாகப் புரிந்து கொண்டாரோ என்ற பயமும் சேர்ந்து.​

மகனின் இந்தக் கோபத்தையும் செயலையும் கண்ட கோமதி அம்மா மருமகளை தாங்கித் தன்னோடு அனைத்து பிடித்தவர்.​

"வேந்தா, என்ன இது பழக்கம் கட்டுனவல அடிக்கிறது!..."​

என்றார் கோவத்துடன்…​

"பெத்து எடுத்தவளை அடிக்க முடியலையே ம்மா."​

என்றார் வேதனையுடன்.​

" அதுக்கு கட்டினவ கிட்ட கை ஓங்க சொல்லுதோ?.."​

என்றார் குரல் உயர்த்தி.​

"உங்க பிள்ளை கிட்ட கை ஓங்க முடியாத உங்களுக்கு வேறொருத்தர் பிள்ளை கிட்ட கை ஓங்க முடியுமோ!.."​

என்றார் இன்னும் கோபத்துடன்.​

மனைவியை மற்றொருவருடன் பங்கு போட்டுக் கொள்ள அது தந்தையே ஆனாலும் முடியாத வேந்தன்,​

"என்னுடைய சரிபாதியாக ஆக்கிக் கொண்டவளின் மீது அனைத்து உரிமையும் எனக்கு இருக்கு."​

என்றார் வேகமாகத் தாயிடம்,​

"உங்க உரிமையை இப்படித்தான் காட்டுவீங்களோ."​

என்றார் மேலும் ஆங்காரமாக.​

தன் பொருட்டு கணவனை, மாமியார் கேள்வி கேட்பதை விரும்பாத தாமரை, இதுவரை தன்னை அடிக்காத கணவர் அடித்ததற்கு ஏதோ பெரிய காரணம் இருப்பதை உணர்ந்தவர், மகளின் கண்ணீர் முகத்தையும் பார்த்து நிலைமையைச் சரி செய்ய எண்ணி,​

" விடுங்க அத்தை கோபப்படாதீங்க, அவருக்கு ஏதோ கோபம், என்கிட்ட அதைக் காமிக்கிறார், பரவாயில்லை, இதுவரைக்கும் என்னை அவர் அடிச்சதில்லை, இப்போ அந்த ஏக்கமும் எனக்குப் போயிடுச்சு"​

என்றார் அமைதியாக.​

மனைவியின் பதிலில் வேதனையுற்றவர்​

தன் தவறை உணர்ந்து, மனைவியிடம் மன்னிப்பை யாசிக்கும் ஒரு பார்வையும், மகளிடம் கோபமும், ஏமாற்றமும் ஆன ஒரு பார்வையையும் செலுத்தி விட்டு வேகமாகச் சென்றார்.​

"என்ன ஆச்சு? எதுக்கு அவனுக்கு இவ்வளவு கோவம்.? "​

என்று கேட்ட மாமியாரிடம் எந்தப் பதிலும் சொல்லாமல் கேள்வியாக அவரும் மகளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தார்,​

தாயும், பாட்டியும் தன்னை கேள்வியாகப் பார்ப்பதை கண்டவள் எதுவும் கூற முடியாமல் அதற்கான தைரியமும் இல்லாமல் வேகமாகத் தன் அறையை நோக்கிச் சென்றாள் கண்ணீரைத் துடைத்தபடி.​

ஒருவன் தன்னிடம் காதல் சொன்னதில் பெருமையும், மகிழ்வும் கொண்டவளுக்கு அதுவே இப்போது தவறாகவும் வேதனையாகவும் இருந்தது.​

தன்னைக் கேள்வியாகப் பார்க்கும் பாட்டியிடமும் தாயிடமும் என்ன சொல்வது என்ற புரியாத நிலையும் தந்தையின் கோபத்தை எப்படி சரி செய்வது என்ற வேதனையும் கொன்று தின்றது அவளை.​

இங்குக் கல்லூரியில் நண்பர்களோடு மலர் இல்லாததையும், வேகமாக இவளை நோக்கி வரும் அகல்யாவை பார்த்த கௌதமி,​

" எங்க டி மலர்?.."​

எனக் கேட்டாள் அகல்யாவிடம்,​

"அத சொல்லத் தாண்டி வேகமாக வந்தேன்,"​

"அந்த மாதேஷ் இருக்கான்ல! அவன் இன்னைக்கு மலர்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டான்"​

" என்ன டி சொல்ற?.."​

" ஆமா, அதுக்கு இவ என்ன சொன்னா?.."​

"இவ எதுவுமே சொல்லல, அதிர்ச்சியாகி அப்படியே நின்னுட்டு இருந்தா, அந்த டைம் கரெக்டா அவங்க அப்பா வந்துட்டாரு."​

"அய்யய்யோ"​

"அவர் கோபமா இவளைப் பார்க்கவும், இவ பயந்து போய் அவங்க அப்பா பின்னாடி கடகடன்னு போயிட்டா."​

" அச்சச்சோ"​

என்றபடி இரு கைகளால் தலையைத் தாங்கி அமர்ந்து விட்டாள் சிறிது நேரம் அமைதியாக. இவர்களைத் தேடி வந்த நித்யாவை பார்த்தவள்​

"பாத்தியா! நீ பண்ண வேலை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்குன்னு."​

என்ற படி எழுந்து சென்றாள் தோழியைத் தேடி, அவள் வீட்டிற்கு.​

பாவமாக நின்றிருந்த நித்யாவை பார்த்த அகல்யா,​

" சரி விடு, வாழ்க்கையில எப்பவுமே திரில்லிங் வேணும்னு நினைக்கக் கூடாது, நம்ம குடும்பம் நமக்கு ரொம்ப முக்கியம், அதுக்கு ஏத்த மாதிரி தான் நம்ம செயல்களும் இருக்கணும், இது எப்பவுமே மறக்கக் கூடாது"​

'தான் ஏற்றி விடாமல் இருந்திருந்தால், இது நடந்திருக்காதோ' என நினைத்த நித்யா,​

"எல்லாம் சரியாயிடுமாடி?."​

எனப் பாவமாகக் கேட்க, சமாதானமாகத் தோழியின் கைகளைத் தட்டிக் கொடுத்தாள் அகல்யா.​

கடைக்கு வந்தவருக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே புரியாத நிலை, தன் மகளா இப்படி?​

சிறு குழந்தையென நினைத்திருக்க, அவளின் செயல் அவருக்குப் பெரும் அதிர்வாக இருந்தது.​

நடு ரோட்டில் ஒருவன் காதல் சொல்வதும் அதற்கு மகளின் எதிர்வினையும் சரியாகப்படவில்லை.​

இதைப் பற்றி மகளிடம் விசாரித்தே ஆக வேண்டும் என்ற முடிவோடு மகனைப் பார்த்தவர்,​

அவனுக்கும் வீட்டில் நடப்பது தெரிந்திருக்க வேண்டும் என நினைத்தவராக,​

" இன்பா, கடையை மூடு பா, வீட்டுக்குக் கிளம்பலாம்!.."​

என்றார்.​

"இன்னும் நேரம் இருக்கே பா."​

என்றவனிடம்​

"போலாம் பா, வீட்ல போய்ப் பேசிக்கலாம்."​

என்ற படியே கடையை மூடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டார்,​

குழப்பமாகத் தந்தையை ஒரு நொடி பார்த்தவன், அவர் முகம் சரி இல்லாமல் இருப்பது அறிந்து கடையை மூட ஆரம்பித்தான் அவனும்.​

பிடி இருகும்...​

 
Last edited:

paasa nila

Moderator

அத்தியாயம் 19​

வீட்டிற்கு வந்த வேந்தனும், இன்பாவும் கண்டது ஊரிலிருந்து வந்திருந்த இசையரசியும் அவளின் கணவனையும் தான், அவர்களைக் கண்டு முதலில் அதிர்ந்தாலும் பின்பு ஆரவாரமாகவே வரவேற்றனர் இருவரும்,​

"வாங்க மாப்ள, வாம்மா இசை, இப்பதான் வந்தீங்களா?.."​

"ஆமாம்பா இங்க ஒரு வேலை இருக்குன்னு சொன்னாரு, அதுதான் நானும் வந்து ரொம்ப நாள் ஆகிடுச்சுன்னு, கூட வந்தேன்."​

என்றவள் ஆயாசமாக,​

"இங்கே என்னதான் பா நடக்குது?.."​

"இப்போதான் அம்மாக்கு கன்னத்துல ஒத்தடம் கொடுத்துட்டு வரேன்!.."​

என்றவளை அமைதியாகப் பார்த்தவர், எதுவும் சொல்லாமல் இருக்க,​

"மாமா என்னை வேற்றாளாக நினைக்காதீங்க!.. நானும் உங்க மகன்தான்! என்ன பிரச்சனை சொல்லுங்க."​

என்றான் பாண்டியனும்.​

கணவர் வந்தது அறிந்த தாமரை தண்ணீரோடு கணவன் அருகில் வர, அவர் கன்னங்கள் புசுபுசு என வீங்கி இருப்பதை பார்த்த வேந்தன் தண்ணீர் குவலையோடு சேர்த்து அவர் கையையும் பிடித்துத் தன் அருகில் அமர வைத்துக் கொண்டார்.​

மருமகன் முன்பு அமரச் சங்கோஜபட்ட தாமரையை பார்த்தவன்,​

" நானும் உங்க மகன்தான் அத்தை!.."​

என்று வேந்தனிடம் கூறியதையே திரும்ப கூற, அவனின் சொல்லுக்கு இணங்க அமைதியாகக் கணவனின் அருகில் அமர்ந்து கொண்டார் தாமரை.​

இவர்களின் சத்தத்தில் தன் அறையிலிருந்து பாட்டியும் வெளியில் வந்தவர், மகனின் எதிர்ப்புறம் அமர்ந்து கொண்டார், என்ன செய்தியெனத் தெரிந்து கொள்வதற்கு.​

அனைவர் முகத்தையும் பார்த்த இன்பா, ஏதோ பெரும் பிரச்சனை என்பதை மட்டும் புரிந்து கொண்டவன்,​

" ஆமா, மலர் எங்கே?​

என்றான் தங்கை இல்லாததை கண்டு, அனைவரும் அமைதி ஆகிவிட குரலைக் கனைத்துக் கொண்ட வேந்தன்,​

அன்று கல்லூரி அருகில் நடந்தவைகளை ஒன்று விடாமல் கூறினார், அனைவரிடமும் சொல்லும் போதே குரல் தழுதழுத்தது அவருக்கு, தன் மகளின் செயலைப் அனைவர் முன்பும் சொல்வது அவருக்குப் பிடிக்கவில்லை, சொல்லாமல் இருக்கவும் அவரால் முடியவில்லை.​

நிலைமையைப் புரிந்து கொண்ட இசையின் கணவன், பாண்டியன்​

"இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல மாமா! மலர் கிட்ட கேட்டீங்களா, என்னன்னு?.."​

" இல்ல நான் எதுவும் கேட்கல?.."​

" சரி யாரும் எதுவும் கேட்க வேண்டாம், நான் கேட்கிறேன் அவகிட்ட."​

என்றான், அவனோடு பாட்டியும்​

" நானும் வரேன் மாப்பிள!.."​

என்ற படியே எழுந்தார் மலரின் அறைக்குச் செல்வதற்கு,​

இன்பாவிற்கு கோபம் இருந்தாலும், தங்கையின் செயலை நினைத்து வேதனையும் அதிர்ச்சியுமாக இருந்தது அவனுக்கு.​

அதேநேரம் தங்கையின் கணவனாக இருந்தாலும் அவன் சென்று தன் தங்கையை விசாரிப்பதை விரும்பாமல், தானே சென்று கேட்பதாகக் கூறி அவர்களுக்கு முன்பே தங்கையின் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டான்.​

அறையில் கேட்ட திடீர் சத்தத்தில் பயந்து எழுந்து நின்ற மலர் அண்ணனைக் கண்டதும் வேகமாகச் சென்று அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள் பெரும் கேவலுடன்,​

" நான் ஒன்னும் தப்பு செய்யலண்ணா, நீயாவது என்னை நம்பு ப்ளீஸ்"​

என்றாள் அவனை நிமிர்ந்து பார்த்தபடி,​

"நான் மட்டும் இல்ல, எல்லாருமே உன்னை நம்புவாங்க, என்னன்னு சொல்லு"​

என்றபடி அவள் தலை முடிகளைக் கோதிவிட்டு அவள் கண்ணீரைத் துடைத்தவன், அனைத்தவாறு அவளோடு சென்று கட்டில் அமரவும், பாட்டி வந்து கதவைத் தட்டி குரல் கொடுக்கவும் சரியாக இருந்தது.​

"இவங்க வேற"​

என்றபடி தங்கையை பார்த்தவன், அவள் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருப்பதை பார்த்து எழுந்து சென்று கதவைத் திறக்கப் பாட்டியும், பாண்டியனும் அறையினுள் வந்தார்கள்.​

பாட்டி மலரின் அருகில் அமர்ந்தவாறு​

" என்னன்னு என்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்ல, குட்டி?"​

என்றார்​

அடக்க முடியாமல் மறுபடியும் கண்ணீர் வர, அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, மாதேஷை பற்றி அனைத்தையும் சொல்லத் தொடங்கியவள் அவனுக்குத் தான் எந்தப் பதிலும் கூறாததையும் , அவனின் மீது பெரிதாக இப்போதுவரை தனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லாததையும் சேர்த்தே கூறினாள்.​

"அப்போ அவன் உன்னை ஹரஸ் பண்ணினானா?"​

என்று கேட்டான் கோபத்துடன்.​

"இல்ல ன்ணா? இல்லண்ணா?​

என்று வேகமாக மறுத்தவள், அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டுத் தலையைக் குனிந்தவாறு​

"அவன் முதல் முதலில் என்னிடம் வந்து பேசியது எனக்குப் பிடித்திருந்தது!"​

என்ற தங்கையை இயலாமையுடன் பார்த்தவனிடம்,​

"ஆனா, நான் அவன்கிட்ட எந்தச் சம்மதமும் சொல்லல"​

என்றாள், தன்னை புரிய வைத்து விடும் நோக்கத்துடன்.​

இவளின் நிலை புரிந்த பாண்டியன், சூழ்நிலையைத் தன் கையில் எடுத்துக் கொண்டு,​

" சரி மா, நீ நெனச்சதும் தப்பில்ல, அவன் கேட்டதும் தப்பில்ல, இனி மாமாக்கு பிடிக்காத மாதிரி எதுவும் செய்யாதே, நான் பேசுறேன் மாமா கிட்ட, சரியா!.."​

என்றவனிடம் வேக வேகமாகத் தலையாட்டினாள்.​

அவளின் தலையைப் பிடித்து அழுத்திவிட்டு வெளியேறினான். அவனோடு சேர்ந்து இன்பாவும் பாட்டியும் வெளியேறினார்கள்.​

இள வேந்தன் தங்களின் அறையில் தாமரையின், கையைப் பிடித்துக் கொண்டு​

"ஏதோ ஒரு கோபம், ஏமாற்றம், என்னையும் அறியாமல் கையை நீட்டிட்டேன், மன்னிச்சிடுமா."​

என்றார் வேதனையாக​

இதுவரை தன்னை ஒருமுறை கூடக் கைநீட்டி அடித்திராத கணவனின் வேதனை புரிந்தவராக,​

"பரவால்ல, விடுங்க, அத்தை கிட்ட சொன்ன மாதிரி தான், நீங்க இதுவரைக்கும் என்னை அடிச்சதில்லைங்கிற ஏக்கமும் எனக்குப் போயிடுச்சு"​

என்றார் சிரிப்புடனே​

" இதெல்லாம் ஒரு ஏக்கமாடி?.."​

எனக் கோபமாகப் பார்த்தவரிடம்​

"கண்டிப்பா..."​

என்றபடி குளியலறை நோக்கிச் செல்ல, இவரும் அமைதியாக வெளியேறினார்.​

இவர்கள் உள்ளே பேசிக் கொண்டிருக்க தன் தோழியைத் தேடி பதட்டத்துடனும் பயத்துடனும் வேக வேகமாக வந்தாள் கௌதமி,​

இவளைக் கண்ட இசை,​

தன் தாய் தந்தை எங்கே என்ற திரும்பிப் பார்த்தவள், அவர்கள், அவர்களின் அறையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு,​

கௌதமியின் இரு கைகளையும் மணிக்கட்டோடு இருக்கி பிடித்துக் கொண்டு கோபத்துடன்,​

" என்னடி? பண்ணி வச்சிருக்கீங்க ரெண்டு பேரும்?"​

"யார் அவன்? எவ்வளவு நாள் பழக்கம்? உனக்கு தெரியாம இருக்காதே? நீயும் அவ கூடச் சேர்ந்து கூட்டுகள்ளியா?..."​

என்றாள் மெதுவாகச் சத்தம் அதிகம் கேட்காதபடி​

எப்பொழுதுமே இவளுக்குக் கௌதமியை அவ்வளவாகப் பிடிக்காது, தன் தங்கையிடம் அதிக பாசத்தோடும் தன் வீட்டில் அதிக உரிமையோடும் இருக்கும் இவளின் மீது சிறு பொறாமை கலந்த கோபம் அவளுக்கு, திருமணம் முடிவதற்கு முன்பு தெரியாதது திருமணத்திற்கு பின்பு, ஏதோ தான் தூரம் சென்று விட்டதாக ஒரு நினைவு இவளுக்கு.​

"அக்கா, அக்கா, அப்படி எல்லாம் எதுவுமே இல்லை அக்கா. மலரப் பத்தி உங்களுக்குத் தெரியாதா, அவளுக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது."​

என்றாள் வேகமாக, தன் தோழியைப் பற்றித் தவறாகக் கூறுவதை தாங்காமல், மலரின் தமக்கையே ஆனாலும் அவளிடம் மலரை விட்டுக் கொடுக்காமல்,தன்னையும் அவர் கூட்டு சேர்த்திருப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல். மேலும்,​

"குழந்தக்கா, இவ, வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைப்பா."அப்புறம்,​

" அவன் செஞ்சதுக்கு இவ என்ன செய்வா?..."​

என்றாள் ஆதங்கமாக,​

"சரி எதுவா இருந்தாலும் நாங்க பார்த்துக்கிறோம்..."​

என்ற படியே அவளின் இரு கைகளைப் பிடித்தபடி வாசலை நோக்கித் திருப்பி விடுவதற்கும் தந்தை அறையிலிருந்து வெளிவருவதற்கும் மலரின் அறையிலிருந்து மற்றவர்கள் வெளி வருவதற்கும் சரியாக இருந்தது.​

இவர்களைக் கண்ட வேந்தன் ஏதோ சரியில்லை என்று மகளைப் பற்றி அறிந்தவராக.​

"கௌதமி, என்னமா? வா, எப்போ வந்த? உள்ள போய் மலரப் பாரு..."​

என்றார் மகளை முறைத்துக் கொண்டு,​

டக்கென்று கௌதமியின் கைகளை விடுவித்த இசை, எதுவும் பேசாமல், கணவனின் அருகில் சென்று நின்று கொண்டாள்.​

இப்போதும் தன்னை எதுவும் கேள்வி கேட்காமல் பாசமாகப் பார்க்கும் வேந்தனை கண்ணீரோடு ஏறிட்டவள் வேகமாகச் சென்றாள் மலரின் அறைக்கு.​

மறுபடியும் ஆள் வரும் அரவம் கேட்க, நிமிர்ந்து பார்த்த மலர், கௌதமியை பார்த்ததும் ஓடி வந்து இறுக அணைத்துக் கொண்டு கதறி விட்டாள் தான் செய்த தவறு புரிந்தவளாக, தோழி தன்னை எச்சரித்தும், பெற்றோருக்கும் உடன் பிறந்தவருக்கும் தான் ஏற்படுத்திய வேதனையை எண்ணி,​

இருக கட்டிக் கொண்டவளை தானும் அனைத்து கொண்டு தோழியின் முதுகை தடவி விட்டு, அந்தச் சூழ்நிலையில் எவ்வளவு பயந்து இருப்பாள், என எண்ணி அத்தருவாயில் தானும் அவள் அருகில் இருக்க முடியாமல் போய்விட்டதை நினைத்து இவளுக்கும் கண்ணீர் வந்தது.​

ஒருவாரு தன்னை சமாளித்துக் கொண்டு​

" என்ன ஆச்சு? சொல்லு."​

என இவள் கேட்க,​

அங்கு நடந்த அனைத்தையும் பின்பு வீட்டில் நடந்தவைகள் அனைத்தையும் கூறியவள் அண்ணன் தன்னிடம் கேட்டதையும், பாட்டியும் மாமாவும் உடன் இருந்ததையும், இவள் கூறிய விளக்கத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதையும், தந்தையிடம் சென்று பேசுவதாக, மாமா கூறியதையும் சொன்னவள். அமைதியாகப் படுத்துக்கொண்டாள் தோழியின் மடியில்.​

தனக்கு ஒன்றென்றால் முதல் ஆளாக ஓடி வந்து தன் அருகில் இருக்கும் அவளின் பாசத்தை நினைத்துக் கொண்டு, அவளிடம் மறைத்த தன் முட்டாள் தனத்தை நினைத்து நொந்தபடி அவள் மடியில் முகம் புதைத்து கொண்டு அழுகையை அடக்க போராடினாள்.​

சிறிது நேரம் அமைதியாக கழிய, ஏதோ நினைத்தபடி வேகமாக எழுந்து அமர்ந்தவள்,​

" எல்லாம் சரியாகிவிடும் இல்லடி? அப்பா மறுபடியும் பழைய மாதிரி என்கிட்ட பேசுவாங்க இல்ல?.. ரொம்ப பயமா இருக்கு கௌவ்வு."​

என்றவளுக்கு நின்ற அழுகை மறுபடியும் கண்களில் குளம் கட்டியது.​

"ஷ்ஷ்! எல்லாம் சரியாகிவிடும், அமைதியாக இரு."​

என்றப்படியே அவளை மறுபடியும் மடியில் படுக்க வைத்துத் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தாள் இவளும் வேதனையுடன்.​

வெளியில் வந்த மகனும் மருமகனும் கூறிய செய்தியைக் கேட்ட வேந்தன், ஏனோ ஒழுக்கத்தை உயிராக நினைப்பவருக்கு மகளின் இந்தச் செயல் அவ்வளவு உவப்பமானதாக இல்லை.​

சிறித அமைதியாக இருந்தவர்,​

"சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து வைத்து விடலாம்…"​

என்றார்​

" அப்பா, அப்பா அவசரப்படாதீங்க, அவதான் என்ன நடந்ததுன்னு சொல்லிட்டல்ல?.."​

என்றான் இன்பா,​

"ஆமாம் மாமா, ஏன் அவசரப்படுறீங்க?.."​

என்றான் பாண்டியனும்,​

"வேறு எதுவும் விபரீதமா நடந்துடகூடாதுன்னு பார்க்கிறேன்"​

என்றவரை பார்த்த கோமதி அம்மா​

"சரிப்பா, அவ படிப்பு முடியட்டும்."​

" கண்டிப்பா படிப்பு முடிஞ்ச பிறகுதான், இன்னும் ஆறு மாசம் இருக்கு, படிப்பு முடிய, இப்ப பார்க்க ஆரம்பிச்சா சரியா இருக்கும்."​

என்றபடி அமைதியாக எழுந்து சென்றார் வேந்தன்.​

தந்தை சொல்லிச் சென்றதில் சட்டென்று தமிழ் மாறனின் நினைவு தான் இன்பாவிற்கு.​

இங்கு மாறனுக்கு, அன்னை செய்து விட்டு சென்ற செயலால், என்ன செய்வது என்றே புரியாத நிலை, இவன் கண்ணில் மாட்டாமல் சுற்றிக் கொண்டிருக்கும் அன்னையின் மேல் கோபமும், சிரிப்பும் சேர்ந்தே வந்தது.​

ஏனோ, தன்னவளை அருகில் பார்த்ததும், அவளிடம், அன்னையின் செயலால் இரு வார்த்தைகள் பேச முடிந்ததையும் நினைத்து பூரிப்பே அவனுக்கு,​

மறுநாள் எப்படி அவளைப் பார்ப்பது என்ற தயக்கமே பெரிதாக இருந்தது.​

அதனால் வாசலில் போய் நிற்காமல் மொட்டை மாடியில் சென்று தன்னவளின் வரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தான்,அவள் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை இவனுக்கு, அவர்களின் கார் தன்னை தாண்டி செல்வதையும், தன்னவள் அதில் அமர்ந்திருப்பதையும் கண்டவனுக்கு பெரும் குழப்பம்..​

எப்பொழுதாவது வேந்தன் காரில் அழைத்து சென்று விடுவதை கண்டிருந்தவனுக்கு, இன்று அவர் அழைத்து செல்வது, நேற்று அவள் தன்னோடு பேசியதாலா? அல்லது அந்த புதியவன் இவளுக்கு காத்திருப்பதை கண்டதாலா? என்ற பெருங்குழப்பம்.​

இது மற்றைய நாட்களுக்கும் தொடர்ந்ததில், இன்னுமே அவனின் குழப்பம் அதிகரித்தது..​

ஒரு வாரம் சென்ற நிலையில் அன்று அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த புதியவனும் பைக்கோடு தங்கள் வீட்டின் அருகில் நிற்பதை பார்த்தவனுக்கு கடும் கோபம் எழுந்தது.​

வேந்தன் மலர்விழியை அழைத்துச் செல்வதற்கான காரணமும் புரியத் தொடங்கியது தன்னவளின் மனதில் வேறொருவன் இருப்பதை தாங்கிக் கொள்ள இயலாதவன் வேகமாக படிகளில் இறங்கி வந்தவன் தன் அன்னையிடம் சென்று,​

செய்வதறியாமல் சிறிது நேரம் நின்றவன், பின்​

" அம்மா பொண்ணு பாக்குறேன்னு சொன்னீங்க இல்ல? பாருங்க!.."​

என்ற படியே வேகமாக தன் அறையை நோக்கி சென்றான்.​

மகன் சொல்லிவிட்டு சென்ற செய்தியில் அதிர்வோடு அவனைப் பார்த்துக் கொண்டு நின்ற ரேணுகா,​

" என்னங்க சொல்றான், இவன்?.."​

என்றபடி கணவனை கேட்டார் கேள்வியாக..​

வேகமாக சின்ன மகனை தேடிச் சென்றவர்,​

" அழகு பையா? என்ன பொண்ணு பாக்க சொல்லிட்டு போறான்? உங்க அண்ணன்.."​

என்று கேட்டவரை குழப்பமாக பார்த்தவன்,​

" தெரியலையே மா, நான் கேட்கிறேன் அண்ணன் கிட்ட.."​

என்றான், அன்னையிடம் சமாதானமாக, அண்ணனின் அறைக்குச் சென்று பார்த்தவன்,​

நெற்றியில் கை வைத்து கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தவனை தான்..​

"என்ன ண்ணா, அம்மாகிட்ட என்ன சொல்லிட்டு வந்த?.."​

என்று கேட்டவன்னிடம் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தவனை பார்த்தவன்.​

" எதுவாக இருந்தாலும் சொல்லு ண்ணா, ஏன்? இந்த திடீர் முடிவு? என்ன ஆச்சு?.."​

என்றவன், அண்ணனின் அமைதியில்,​

"கொஞ்ச நாள் வெயிட் பண்ணு, ண்ணா, என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்!.."​

" இல்லடா!.. இவ்வளவு நாள் அவளுக்காக காத்துக்கிட்டு இருக்கிற நான் அவ கண்ணுக்கே தெரியல, இதுக்கு மேல அம்மாவையும் கஷ்டப்படுத்த என்னால முடியல, என்னவோ என் தலையெழுத்து படி நடக்கட்டும்.."​

என்றபடி திரும்பி படுத்து கொண்டவனை வேதனையோடு பார்த்திருந்தவன், அன்னையிடம் சென்று,​

" சரி, அண்ணன் சொல்றபடி பொண்ணு பாருங்க"​

என்று அவனும் தனது அறைக்கு சென்று விட்டான்...​

" என்னங்க நடக்குது இங்க? என்ன பண்றாங்க பசங்க ரெண்டு பேரும்? எனக்கு ஒன்னும் புரியலையே! அந்த பொண்ணு மேல ரொம்ப ஆசை வைத்திருந்தானே! ஏன் இப்போ திடீர்னு இப்படி முடிவு எடுத்து இருக்கான்.."​

என சோகமான குரலில் கேட்ட மனைவியை பார்த்தவர்,​

" எனக்கும் எதுவும் தெரியலையே மா!.."​

அவன் சொன்ன மாதிரியே செய்வோம் என்றபடி வெளியில் சென்று விட்டார் தோட்டத்தை நோக்கி,​

செல்லும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தவர்,​

"என்ன எல்லாரும் விளையாடுறீங்களா?"​

"அவன் என்னன்னா பொண்ணு பாருங்க சொல்றான், இவன் என்னென்னா அண்ணன் சொன்ன மாதிரி செய்ங்க சொல்றான், இவர் என்னன்னா பையன் சொன்ன மாதிரி செய்யுன்னு சொல்லிட்டு போறாரு, என்ன நெனச்சிட்டு இருக்கீங்க எல்லாரும்! அப்போ என்ன பத்தி கவலை இல்லை,நானும் அந்த பொண்ண மனசுல நினைச்சுட்டேனே, என்னால எல்லாம் மாத்திக்க முடியாது! அவள மறக்கவும் முடியாது"​

என கோபமாக கூறியவர்.​

"அவ தான் இந்த வீட்டு மருமக சொல்லிட்டேன்.."​

என்று சத்தமாக பேசியபடி, தன் அறையை நோக்கி சென்றார், என்ன செய்யலாம்? என்ற யோசனையுடன்.​

அன்னையின் சத்தம் மதிக்கும் கேட்க, வெளியில் வந்தவன்,​

"ம்மோய், கொஞ்சம் நில்லு? அந்தப் பொண்ண அண்ணன் காதலிக்கிறானா? இல்ல நீ காதலிக்கிறாயா?"​

எனக் கேட்க, அறைக்குள் செல்ல முயன்றவர் திரும்பிப் பார்த்து,​

" ரெண்டு பேரும் தான்"​

என்று அசால்ட் ஆக சொல்லிச் சென்றார்.​

அன்னை கூறி சென்றது அறையில் படுத்து இருந்த மாறனுக்கும் கேட்க,​

"நானும் அவள மனசுல நினைச்சுட்டேன்"​

என தாய் கூறியதையும், தம்பியிடம் பேசியதையும் கேட்டு,​

'ஐயோ! இந்த அம்மாவோட'​

என, சிரிப்பாக வந்தது அவனின் துயரத்தையும் மீறி. ஏனோ அம்மாவின் பதில் சற்று இதமாக இருந்தது துயரம் கொண்ட மனதுக்கு.​

என்ன செய்ய காத்திருக்கிறார் ரேணுகா என்று நாமும் காத்திருப்போம்.​

பிடி இருகும்...​

 

paasa nila

Moderator

அத்தியாயம் 20​

பெண் பாருங்கள் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டாலும் அந்த நினைவு கொள்ளாமல் கொன்றது அவனுக்கு,​

பெண் அவளை மறக்க முடியுமா? என்பது இமாலய கேள்விதான் அவனுக்கு.​

மறுநாள், எப்போதும் போல் விடிந்த காலையை வெறுத்தான் ஆண் அவன், தன்னையும் அறியாமல் கண்கள் கைகடிகாரத்தில் செல்வதை தடுக்க முடியாமல், சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவன் அதற்கு மேல் அவன் கால்கள் அவன் பேச்சைக் கேட்காமல் வாசல் புறம் நகர்ந்து செல்வதை கையாலாகாமல் பார்த்து இருந்தவன்,​

இதற்கு மேல் முடியாது என விரைவாக விறுவிறு என நடந்து மொட்டை மாடிக்குச் சென்றான் அவளைப் பார்க்கக் கூடாது என மனதில் நினைத்துக் கொண்டிருந்தாலும் அதனைச் செயலாற்ற முடியவில்லை, கைப்பிடி சுவரைப் பிடித்துக் கொண்டே தன்னையும் மீறிக் கண்கள் அவள் வரும் பாதையைப் பார்க்க அவனை ஏமாற்றாமல் வந்துகொண்டிருந்தாள் அவளும், பதுமையாகத் தந்தையின் அருகே அமர்ந்தபடி.​

தந்தையின் பிடியில் அமைதியாகச் செல்லும் பெண் அவளைப் பார்த்தவனுக்கு இதயம் விண்டு விடும் அளவுக்கு வலித்தது. என்ன நடந்திருக்கும் என்று ஓரளவு யூகிக்க முடிந்த அவனால் அதைப் பற்றித் தோண்டி துருவி விசாரிக்க விரும்பவில்லை. அவளின் மீது உயிராக இவன் இருக்க தற்போது அவளின் நிலையை நினைத்து வேதனையும் கோபமும் சேர்ந்தே வந்தது.​

'என்னைப் பார்த்தால் எப்படி தெரியுது உனக்கு? உனக்காக வருஷக்கணக்கா காத்துக்கொண்டிருக்கிறேன், நான் உன் கண்ணுக்கே தெரியல, இல்ல!'​

எனத் தனக்குள்ளேயே குமுறியவன்,​

' எனக்கு வரக் கோபத்துக்கு அப்படியே போய்க் கையைப் பிடித்து இழுத்து ஒரு அறை விட்டு, என்னை எல்லாம் பார்க்க மாட்டியா? நான் எல்லாம் உன் கண்ணுக்குத் தெரிய மாட்டேனா?'​

எனக் கேட்கும் ஆத்திரம் வந்தது, அதைச் செயலாற்ற விறுவிறுவெனப் படியிலிருந்து இறங்கி வந்தவனை காபியோடு எதிர்கொண்டார் ரேணுகா, அன்னையைப் பார்த்துச் சற்று நிதானித்தவன் தான் செய்யவிருந்த செயலை நினைத்து வெட்கமுற்று,​

மனதில் தேவதையாக வரித்துக் கொண்டவளிடம் காதலை பிச்சையாகக் கேட்பதில் விருப்பம் இல்லாமல் வேகமாகத் தன் அறைக்குச் சென்று கதவை மூடிக் கொண்டான் வேதனை தாங்காமல்.​

செல்லும் மகனை பார்த்துக் கொண்டிருந்த ரேணுகா, இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என நினைத்தவராக மகன் கிளம்பி செல்வதற்கு காத்திருந்தார்.​

சிறிது நேரத்தில் கிளம்பி வந்தவன் தன் அலுவலகத்தை நோக்கிச் செல்வதை பார்த்துவிட்டு அவரும் கிளம்பி தயாரானார் மலர்விழியின் வீட்டிற்கு செல்ல, கணவனும் சின்ன மகனும் ஏற்கனவே கிளம்பி சென்று விட்டதால் வீட்டைப் பூட்டிவிட்டு நடையை கட்டினார் விழியின் இல்லத்தை நோக்கி.​

அவர்களின் வீட்டு அருகே வந்தபிறகு சிறிது தயங்கி நின்றவர் மகனின் வாழ்விற்கு முன்பு எதுவும் பெரிதல்ல என்ற முடிவோடு வேகமாகவே கேட்டைத் திறந்து உள் சென்றார்.​

இவர் சென்ற நேரம் எப்போதும் போலப் பாட்டி கால் நீட்டிச் சோபாவிற்கு முட்டுக்கொடுத்து அமர்ந்திருக்க, இவர் வெளியில் நின்றவாரே அவரைப் பார்த்து,​

"வணக்கம் மா நல்லா இருக்கீங்களா?​

திடீரெனக் குரல் கேட்டதில் யாரெனப் பார்த்த பாட்டி, அடையாளம் தெரிந்து கொண்டு,​

அடடே! ரேணுகா தானே நீனு, வாமா, வாமா உள்ளவா நல்லா இருக்கியா?​

என்றபடி வரவேற்க, ரேணுகாவும் தனக்கு கிடைத்த வரவேற்பில் மகிழ்ந்தவராகப் பாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டார்.​

"அய்யய்யோ! ஏமா கீழ உட்காருரே, மேலே சோபாவில் உட்காரு, எனக்குக் கால் வலி அதனால‌ நான் கீழே உட்கார்ந்து இருக்கேன், காலை நீட்டி உட்கார்ந்தா தான் நல்லா இருக்கு."​

என்றவரே, அவரை மேலே உட்கார வைக்க முயற்சி செய்ய,​

" இல்லம்மா இருக்கட்டும், இதுதான் எனக்கும் வசதி."​

என்ற படி அவரும் நன்றாகச் சம்மனம் இட்டு அமர்ந்து கொண்டார்.​

வெளியே கேட்கும் குரலில் தாமரையும் அறையிலிருந்து வெளிவர,​

ரேணுகாவை பார்த்துவிட்டு அவரும்,​

"வாங்க"​

என மரியாதையாக வரவேற்று,​

' இவங்க எதுக்கு வந்திருக்காங்க'​

என்ற சிந்தனையோடு அவரின் அருகில் அமர்ந்து கொண்டார், அவருக்குக் கொண்டு வந்த தண்ணீரை கொடுத்தபடி.​

பொதுவான நல்ல விசாரிப்புக்குப் பின்பு ரேணுகா வந்த முடிவைச் செயலாற்றும் முடிவுடன் நேராகவே பாட்டியையும் தாமரையும் பார்த்துப் பேச ஆரம்பித்தார்.​

"என்னமா பேத்திக்கு வரன் எதுவும் பாக்கறீங்களா?​

என ஆரம்பித்தவரை, அதிர்ச்சியாகப் பார்த்தனர் இருவரும், ஏற்கனவே வீட்டில் நடக்கும் பிரச்சனைகளும் மகனும் பேத்தியும் பேசிக்கொள்ளாமல் இருப்பதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தவருக்கு,​

'இது என்னடா புது சோதனை'​

என்று நினைவுதான்.​

தாமரையும் அதையே நினைத்தவராகக் காலையில் கிளம்பிச் சென்ற மகளையும் மருமகனையும் நினைத்துக் கொண்டார்.​

"என்னம்மா அமைதி ஆயிட்டீங்க, எதுவும் தப்பா கேட்டுட்டேனா?.."​

" தப்பா எல்லாம் எதுவும் கேட்கல மா, படிக்கிறா, இல்லையா?​

படிச்சு முடிச்ச பிறகு தான் பாக்கணும்..."​

" சரி, சரி, ஆனா இது கடைசி வருஷம் தானே! படிப்பு முடிய என்ன ஒரு நாலு மாசம் இருக்குமா? "​

"ஆமாங்க, இன்னொரு அஞ்சு மாசம் படிப்பு இருக்கு!.."​

என்றார் தாமரை இடையிட்டவராக.​

" சரி, நான் உடைச்சு நேராவே கேட்கிறேன், என் மகன் பெரியவன், தமிழ் மாறன் பற்றி உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன், சின்னப் பிள்ளையிலிருந்து நீங்கப் பார்த்து இருப்பீங்க,"​

என்றவாறு பாட்டியையும் தாமரையும் பார்த்துக் கொண்டு,​

" அவனுக்குப் பொண்ணு பாக்குறோம்! ஏனோ, உங்க பொண்ணு எங்க வீட்டுக்குச் சரியா இருப்பான்னு எனக்கும் தோணுது, என் மகனுக்கும் தோணுது."​

என்றவாறு மகனின் மனதை சற்று அழுத்திக் கூறியவர்,​

" உங்களுக்கும் விருப்பம் இருந்ததுனா என்னன்னு சொல்லுங்க? மேற்கொண்டு பேசி முடிப்போம்..."​

என்றவரை பார்த்த பாட்டி, சிறிது மகிழ்ந்தவராக​

"மாறன் தம்பியை நல்லா தெரியுமே! ரொம்ப அமைதியான பிள்ளை ஆச்சே, சின்னப் பிள்ளையிலிருந்து பார்த்துகிட்டு தான் இருக்கேன், எந்த வம்பு தும்புக்கும் போகாது தான் உண்டு தான் வேலை உண்டுன்னு இருக்குமே!..'​

" சரிமா ரொம்ப சந்தோஷம் நீங்க வந்து பேசுனதுல்ல! என் மகன் வரட்டும், பேரனும் வரட்டும், என்ன? ஏதுன்னு கலந்து பேசிட்டு சொல்றோம்."​

என்றவரிடம்​

"நல்ல முடிவா சொல்லுங்க. நான் காத்துட்டு இருப்பேன்."​

என்ற படியே ரேணுகா எழுந்து கொள்ள​

* இருமா, இருமா, நல்ல விஷயம் பேசி இருக்கோம், உடனே கிளம்ப கூடாது, தாமரை சாப்பிடுவதற்கும் குடிக்கிறதுக்கும் கொண்டு வாம்மா."​

என்றவரிடம் வேகமாகத் தலையாட்டி,​

" அதையேதான் நானும் சொல்ல இருந்தேன் அத்தை."​

என்றவாறு எழுந்து சென்றார் மனதில் மகிழ்வோடு, இந்தச் சம்பந்தம் எப்படியாவது நடந்து முடிந்து விட வேண்டும் என்ற வேண்டுதலுடன்.​

அவர்கள் கொடுத்த ஊர் லட்டையும், மிக்சரையும் சாப்பிட்டு காபியையும் அருந்திவிட்டு மகிழ்வோடு தன் வீட்டிற்கு நடந்தவருக்கு,​

உள்ளுக்குள் லேசான கலக்கமும் பயமும் இருக்கத்தான் செய்தது, மகனுக்கும் கணவனுக்கும் தெரிந்தால் என்ன சொல்வார்களோ? என்று,​

'என் புருஷன பத்தி எனக்குக் கவலை இல்லை, இந்தப் பையன் தான் ஏதாவது சொல்லுவான், என்ன பெருசா சொல்லிடுவான், பாத்துக்கலாம்'​

என்ற படியே தன் வீட்டுக்குள் சென்றார் ரேணுகா​

இங்குப் பாத்திர கடையில் அமர்ந்திருந்த இன்பாவிற்கும் இதே சிந்தனை தான், ஏதோ ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்த தந்தையை பார்த்தவன், இதுவே தந்தையிடம் பேசுவதற்கு சரியான தருணம் என நினைத்தவனாக​

"அப்பா என்ன? என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க?.."​

என்றவனை அமைதியாகப் பார்த்தவர், பெருமூச்சு எடுத்து விட்டபடியே,​

" மலரப் பத்தி தான் நினைச்சுட்டு இருக்கேன், நான் வேற என்ன யோசிக்க போறேன்? சின்னப் புள்ள விவரம் தெரியாத புள்ளைன்னு நினைச்சா, என்ன செய்து இருக்கு பாத்தியா?.."​

என்றார் ஆதங்கமாக,​

"அவ்வளவு பெரிய தப்பு ஒன்னும் இல்ல, இந்த வயசுல எல்லாருக்கும் வருவது தான்."​

என்றான் தந்தைக்கு, தங்கையைப் பற்றிப் புரிய வைத்துவிடும் நோக்கத்துடன்.​

சற்று கோபத்துடன் அவனைப் பார்த்தவர்,​

" என்ன தங்கச்சிக்கு சப்போர்ட் பண்றியா? உங்க ஜெனரேஷன்ல இதெல்லாம் சரின்னு சொல்ல வரியா?."​

என்றவரிடம்,​

" ஐயோ அப்பா, அப்படி சொல்லல, இது சகஜம்ன்னு சொல்றேன்."​

"அவ எந்தத் தப்பும் செய்யலையே, அந்தப் பையன் விரும்பி இருக்கான், அத அவகிட்ட அப்பதான் சொல்ல வந்திருக்கான், இவளுக்கும் முதல் முதல்ல ஒருத்தன் சொல்லும்போது ஒரு ஆர்வமும் ஆசையும் இருக்க தானே செய்யும், கூடப் படிக்கிற பிள்ளைங்க எல்லாம் பேசுவாங்க தானே, இவ ஒன்னும் சரின்னு சொல்லி அவன் கூடச் சுத்தலையே, நீங்க நினைச்சு கவலைப்படுகிற அளவுக்கு."​

" கொஞ்ச நாள் ஆகி இருந்தா அதுவும் நடந்து இருக்கும் தானே! "​

என்றார் அவர் இயலாமையுடன்​

"ஏன் இல்லாததை யோசிக்கிறீங்க? நடந்திருக்குமோன்னு, ஏன் பயப்படுறீங்க? அதை நினைத்து வேதனை படுறீங்க, நான் உங்களுக்குச் சொல்லணும்னு இல்ல? உங்களுக்கே உலகம் தெரியும் இதெல்லாம் அந்தந்த வயசுல நடக்கிறது தான், ஆனா நம்ம பொண்ணு அப்படி பண்ணல அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க."​

என்று தங்கைக்கு ஆதரவாகப் பேசியவனை, ஆமோதிக்காகப் பார்த்துத் தலையாட்டியவரிடம்,​

"என் பிரண்டு மதி தெரியும் இல்லையா உங்களுக்கு?​

என்றவனை யோசனையாகப் பார்த்தவர்,​

" நம்ம தெருமுனையில் இருக்கிற வீடு, அவனைத் தானே சொல்ற."​

" அவன் தான், அவங்க அண்ணன் தமிழ் மாறன் தெரியுமா?.."​

"தெரியும் பாத்திருக்கேன்."​

" அவங்க அண்ணனுக்கு மலரக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை இருக்கு போல."​

என்றவனை வியப்பாகப் பார்த்தவர்,​

" இது எப்போ?.."​

என்றார் கேள்வியாக,​

" போன வருஷம், அப்பதான் அவன் என்னைக் கேட்டான், எங்க அண்ணனுக்கு உன் தங்கச்சியை குடுக்குறியான்னு?"​

"இல்லடா? அவ படிக்கிறா, அப்படின்னு நான் சொல்லிட்டேன்."​

"அவங்கள கேட்டுப் பாக்கலாமா?​

" ஓஹோ, அப்பவே பேசி வச்சிருந்தா நல்லா இருந்திருக்குமோ! சரி, நடக்கணும்னு இருக்குறது தானே நடக்கும்."​

" இப்ப நாமளா போய்க் கேட்கிறது சரி வருமா?.."​

ஏன்? சரி வராது, நான் கேட்கிறேன், மதியிடம் முதல்ல நான் பேசுறேன், அதுக்கப்புறம் நீங்க அவங்க வீட்ல பேசுங்க"​

என்றவனை யோசனையாகப் பார்த்தவர்,​

" சரி பேசு, ஆனா என்ன நடந்ததோ அதையும் சொல்லிடு, அவங்க அண்ணன் கிட்ட இத பத்தி கண்டிப்பா பேசிட்டு அதுக்கு அப்புறமா முடிவு சொல்லச் சொல்லு."​

ஏம்பா? ஒண்ணுமே நடக்காததுக்கு, எதுக்கு நம்ம சொல்லணும்"​

" நடந்ததோ! நடக்கலையோ? இப்படியொரு விஷயம் இருந்தது இல்ல, அப்ப அத நாம்ம சொல்லிரனும், அதுதான் நம்ம பொண்ணோட வாழ்க்கைக்கு நல்லது."​

"அது நடு ரோட்டில் நடந்தது, யார் பார்த்தாங்க பாக்கலன்னு நமக்குத் தெரியாது?.."​

"அதனால கண்டிப்பா இத உன் பிரண்டு கிட்ட சொல்லிடு, அவங்க அண்ணன் கிட்ட பேசச் சொல்லு, அதுக்கப்புறம் அவங்களுக்கு சம்மதம்னா நம்ம மேற்கொண்டு பேசலாம்."​

என்ற படியே அமைதியாகிவிட்ட தந்தையிடம் இதற்கு மேல் பேச முடியாது என இவனும் யோசனையாக அமர்ந்து விட்டான் நண்பனிடம் சென்று இதைப் பற்றி எப்படி கூறுவது என்று.​

நண்பனிடம் பேச வேண்டும் என்ற முடிவுடன் அன்று விரைவாகவே கிளம்பி விட்டான் இன்பா,​

கடையில் தனியாகத் தந்தை இருந்தால் மேலும் மனதில் சஞ்சலத்தோடும் குழப்பத்தோடும் அமர்ந்திருப்பார் என்பதை அறிந்தவனாக அவரையும் கிளப்பி கூட்டி வந்து விட்டான் வீட்டிற்கு.​

வீட்டிற்குள் நுழைந்தவர்களை அமைதியான வீடே வரவேற்றது, சத்தமாகப் பாட்டு கேட்டு அவளும் கூடவே பாடி கொண்டிருப்பவள் இன்று அமைதியாக அறைக்குள் முடங்கி இருப்பதை வேதனையுடன் பார்த்தவன் எதுவும் சொல்லாமல் தன் அறையை நோக்கிச் சென்றான்.​

ஒரு குளியலை போட்டு விட்டுத் தன் அறையிலிருந்து வெளி வந்தவன், பாட்டி மட்டும் சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்து அவர் அருகில் சென்று அமர்ந்த வாரே,​

" என்ன இன்னைக்கு சோபால உக்காந்து இருக்கீங்க? அப்பா திட்டுவார்ன்னு தானே!.."​

என அவரிடம் வம்பு இழுத்தவன்.​

"மலர்"​

என்று தங்கையைச் சத்தமாக அழைக்கவும், வெளியில் வந்தவளை பார்த்து,​

" தண்ணி கொண்டு வா"​

என்றான், தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு மறுபடியும் அறைக்குள் செல்ல முயன்றவளைக் கண்டு,​

" என்ன பண்ற ரூமுக்குள்ளயே? இப்படி வந்து உட்காரு வா!.."​

என்றவனின் அருகில் ஒன்றும் கூறாமல் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.​

தன் அறையிலிருந்து வெளிவந்த வேந்தன் மகளைக் கண்டதும் இரு நொடிகள் தாமதித்து, மறுபடியும் தன் அறையை நோக்கிச் சென்று விட்டார்.​

தந்தை தன்னை கண்டு உள் செல்வதை பார்த்தவளுக்கு தாங்க முடியாத துயரம் ஏற்பட, ஒன்றும் கூறாமல் தன் அறையை நோக்கிச் செல்ல எழுந்தவளை பார்த்த இன்பா,​

" என்னாச்சுமா எங்க போற?.."​

என்றவனிடம்​

"எழுதனும் ணா! நிறைய இருக்கு"​

என்ற படியே வேகமாகச் சென்று விட்டாள்.​

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி,​

"இவன் ஏன் இப்படி பண்றானே புரியலையே?.."​

என்றார் ஆதங்கமாக​

" விடுங்க பாட்டி, அவருக்கு வேதனை தன்னோட கைக்குள்ள இருந்த மக இப்படி செஞ்சிட்டாளேன்னு, ஒழுக்கம் ரொம்ப முக்கியம்னு சொல்றவருக்கு அவரோட செல்ல மகள் இப்படி செஞ்சது வேதனை தானே, சரியா போயிடும் போகப்போக"​

என்று, பாட்டியாக இருந்தாலும் தன் தந்தையை விட்டுக் கொடுக்காமல் பேசியவன், தங்கை கொண்டு வந்து கொடுத்த தண்ணீரை குடித்துவிட்டு வெளியே செல்லக் கிளம்பியவனை தடுத்து நிறுத்திய பாட்டி,​

"எங்கப்பா போற? இப்பதானே வந்த!.."​

" கொஞ்சம் வெளியில போயிட்டு வந்துடறேன்."​

என்றவனை பார்த்து,​

" வேலை எப்பவும் இருக்கும், உட்காரு, கொஞ்சம் பேசணும்"​

என்று கூறியபடி​

" வேந்தா"​

எனக் குரல் கொடுக்க அதே நேரம் தந்தையும் வெளிவரச் சரியாக இருந்தது.​

"தாமரை, நீயும் வாமா!.."​

எனப் பாட்டி அழைக்க, தாமரையும் வந்து மகனின் அருகில் அமர்ந்து கொண்டார்.​

" என்ன ஆச்சு மா?.."​

என்ற வேந்தனின் கேள்விக்கு,​

" இன்னைக்கு இந்தத் தெரு முனையில் இருக்கிறாங்க இல்ல, ரகுவரன் அவருடைய மனைவி ரேணுகா வந்திருந்தாங்கப்பா."​

" யாரு? "​

என்றார் சந்தேகமாக​

" அதான், இவன் ஃப்ரெண்டு மதி இருக்கிறானே, அந்தப் பையனோட அம்மா!.."​

" அப்படியா! எதுக்கு வந்தாங்க?​

" சும்மா வந்தாங்களாம், அப்படியே மலர அவங்க மகனுக்குப் பொண்ணு கேட்டுட்டு போறாங்க"​

" ஓஹோ"​

என்ற தந்தையை சந்தோஷமாகத் திரும்பிப் பார்த்த இன்பா​

" என்ன சொல்றீங்க பாட்டி? என்ன சொன்னாங்க அவங்க? முதல்ல இருந்து சரியா சொல்லுங்க."​

என்றான் ஆர்வமாக,​

" ஒன்றும் இல்லப்பா? வந்திருந்தாங்க, மலர் என்ன பண்றா? படிப்பு முடிஞ்சிடுச்சான்னு? கேட்டாங்க, முடியறதுக்கு இன்னும் கொஞ்ச நாள் இருக்குனு சொன்னோம், பையன் பாக்குறீங்களா ன்னு? கேட்டாங்க படிப்பு முடிஞ்சதும் பார்க்கணும்னு சொன்னோம், அப்ப அவங்க,​

என் பையனுக்கு உங்க பொண்ண குடுங்க, என் பையனுக்கு விருப்பம் இருக்குங்கிற மாதிரி சொல்லிட்டு போறாங்க"​

" அதுதான் வேந்தா, எப்படினாலும் பையன் பாக்கணும்னு சொன்னே இல்லையா? இந்தச் சம்பந்தமே நல்ல சம்பந்தமா இருக்குது, நமக்குத் தெரிந்த பையன், வீடும் பக்கத்திலேயே இருக்கு, பெண்ணும் பக்கத்திலேயே இருப்பா!"​

"நீ என்ன சொல்ற?..."​

என்று கேள்வியாகப் பார்த்த அன்னையிடம், வேந்தன் சம்மதமாகத் தலையசைத்தபடி மகனைப் பார்க்க அவனும் சந்தோஷமாகவே தலையாட்டினான்.​

அமைதியாகச் சில நிமிடங்கள் கழிந்தன, பின்பு​

"சரி நான் வெளியில போயிட்டு வந்துடறேன் பாட்டி"​

என எழுந்த இன்பா,​

" அப்பா! ஒரு நிமிஷம் வாங்க!.."​

என்ற படியே வெளியில் சென்றான்.​

வேந்தனும் மகன் எதற்கு அழைக்கிறான் என்பதை அறிந்தவராக, அவன் பின்னே எழுந்து செல்ல,​

"அப்பா, இப்போ அவங்களே வந்து கேட்டிருக்காங்க! நாம ஏன் இதைச் சொல்லணும்? இப்படியே விட்டுரலாம், அவங்களுக்கு சம்மதம் சொல்லி இந்தக் கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிடலாம்."​

என்றான் மகிழ்வோடும், ஆரவாரமாகவும்​

இல்லை, என்பதாகத் தலையாட்டிய வேந்தன்​

"அது தப்பு, அவங்களா வந்து கேட்டாலும் என்ன நடந்தது என்று சொல்லித்தான் ஆகணும், இது நமக்கு மட்டும் நிம்மதி இல்லை, நம்ம பெண்ணுக்கு ரொம்ப பெரிய நிம்மதியா இருக்கும், அதுக்காகத் தான் சொல்றேன், புரிஞ்சுக்கோ? நீ போய் அவங்க தம்பி கிட்ட பேசு, அவங்க அம்மா வந்தத பத்தி அவனே சொன்னா, நீயும் வீட்டில் நடந்ததை சொல்லு, இல்லன்னா நீ எதுவும் சொல்லாத,​

சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் சொல்லிட்டு அவங்க அண்ணன் கிட்ட கேட்டுட்டு சொல்லச் சொல்லி, சொல்லிட்டு வந்துடு, சரியா?.."​

என்றார் மகனிடம் உறுதியாக.​

தந்தையின் சொல் இப்போது புரிந்தது அவனுக்கு​

"சரிப்பா, நீங்கச் சொல்றதும் சரிதான், மலரின் நிம்மதி நமக்கு ரொம்ப முக்கியம், நான் போய்ப் பேசிட்டு வரேன்."​

என்ற படியே வெளியேறிச் சென்றான் இன்பன், மகன் நல்ல பதிலோடு வர வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தார் வேந்தன்.​

என்னதான் மகளின் மீது வருத்தம் இருந்தாலும் அவள் வாழும் வாழ்க்கையில் எந்தச் சிக்கலும் வேதனையும் இருந்துவிடக் கூடாது என்ற உறுதியுடன்.​

இந்நேரம் நண்பன் வீட்டில் இருப்பானா? என்று தன் போல் யோசனையோடு வந்து கொண்டிருந்தவனை ஏமாற்றாமல் எங்கோ செல்வதற்காக வெளியில் வந்த மதியை பார்த்த இன்பா, வேகமாக அவன் அருகில் சென்று அவன் முதுகில் தட்ட,​

யார் என்று திரும்பிப் பார்த்தவன் ஆச்சரியமாக,​

" என்ன டா? இந்த நேரத்துல வந்திருக்க அதுக்குள்ள கடையை மூடிட்டீங்களா?"​

" ஆமாடா, உன்கிட்ட பேசணும் என்பதற்காகவே சீக்கிரமா வந்து இருக்கேன்"​

என்றவனை யோசனையாகப் பார்த்தவன்​

"என்ன பேசப் போற?​

என்றபடி அவனின் வண்டியில் அமர்ந்து கொண்டான். இவனும் அவனுடைய அருகிலேயே அமர்ந்து கொண்டு பேசத் துவங்குவதற்கும் ரேணுகா வெளியில் வருவதற்கும் சரியாக இருந்தது.​

வந்தவர் இன்பாவை பார்த்து,​

" அடடே! இன்பா வாப்பா, நல்லா இருக்கியா? ஏன் வெளியிலே நின்னுட்ட? உள்ள வா "​

" இல்லை இருக்கட்டும் ஆன்ட்டி, நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா?​

என்றபடி அவனும் அவர் அருகில் சென்று பேசினான்​

"நல்லா இருக்கேன் பா, வாங்க வாங்க உள்ள வாங்க உள்ள வந்து பேசுங்க"​

"டேய் மதி, உள்ள கூட்டிட்டு வந்து பேசு"​

என்றவாறு அவனின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்.​

பலியாடு போல ஒன்றும் செய்ய முடியாமல் இவனும் அவர் பின்னேயே சென்றான். அவர் அவர்களின் வீட்டில் வந்து பேசியதை மனதில் அசை போட்டவாறு வேறு எதுவும் கேட்பாரோ? என்ற யோசனையுடன்.​

அம்மாவைப் பற்றித் தெரிந்தவனாக மதி ரேணுகாவிடம்​

"சரிமா நாங்க மொட்டை மாடியில் போய்ப் பேசிட்டு இருக்கோம்"​

என்றபடி நண்பனைக் கையோடு இழுத்துக் கொண்டு சென்று விட்டான் மொட்டை மாடியை நோக்கி.​

சிறிது நேர அமைதிக்கு பின், சற்று தயங்கியவன், பின்பு ஒரு முடிவெடுத்தவனாக அனைத்தையும் சொல்லத் தொடங்கினான் நண்பனிடம், இதற்கிடையில் தாய் அழைத்துச் சூடான காபியுடன் முறுக்கையும் வைத்துக் கொடுக்க அதை உண்டபடியே கேட்டுக்கொண்டிருந்தான் இவனும்.​

அமைதியாகக் கேட்டவனுக்கு என்ன சொல்வதென்றே புரியாத நிலை.​

"இதுக்கு, எதுக்குடா உங்க அப்பா இப்படி பண்றாரு? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல, இதுக்காகவா படிப்பு முடித்தவுடனே கல்யாணம் பண்ணனும்னு சொல்றாரு, இன்னும் படிக்கட்டுமே, மாஸ்டர்ஸ் படிக்கட்டுமே டா, நீ சொல்ல வேண்டியது தானே!"​

என ஆதங்கமாகக் கேட்டவனிடம்​

" சொல்லிட்டேண்டா சொல்லிப் புரிய வைத்துவிட்டேன், இப்ப கொஞ்சம் அவர் புரிஞ்சுகிட்டார் ஆனாலும் கல்யாணம் பண்றதுங்கிறதுல முடிவா இருக்காரு,​

உனக்கே தெரியுமே ஒழுக்கம்தான் அவருக்கு ரொம்ப முக்கியம். இத அவர் பெரிய ஒழுக்கக்கேடா நினைக்கிறாரு.​

"ஹும்ம், பாவம் தாண்டா உன் தங்கச்சி"​

என்று பெருமூச்சு விட்டவன்.​

"இப்ப என்ன செய்யணும், சொல்லு?​

" அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு டா, மாறன் அண்ணா கிட்ட இத பத்தி சொல்லிடனும்னு"​

" ஏண்டா? இது ஒரு பெரிய விஷயமே இல்லை, இதை வேற போய் அண்ணா கிட்ட சொல்லனுமா ஏன்டா டேய்! "​

என்றபடி அடிக்க அவனைக் கையோங்கியவனை இயலாமையுடன் பார்த்தவனை பார்த்து அமைதியானவன்,​

"பேசிட்டு சொல்றேன்."​

என்றவன், தெளியாத முகத்துடன் இருந்தவனை பார்த்து,​

"டேய்! அவ்வளவு சீனெல்லாம் இல்லை, எப்போ, எப்போன்னு காத்துட்டு இருக்காரு எங்க அண்ணா, அதனால பயப்படாம போ, நல்ல செய்தியோட வரேன்."​

என்றவனை பாய்ந்து வந்து அனைத்து கொண்டவன்,​

"ரொம்ப பயந்துட்டு இருந்தேன் டா."​

"அட, சீ, எல்லாம் நல்லதாவே நடக்கும், வா."​

என்றபடி அவனோடு கீழே இறங்கி வந்தான்.​

மேலே சென்றவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஆராய்ச்சியோடு சோபாவில் அமர்ந்திருந்த ரேணுகா, இவர்கள் இறங்கி வருவதைப் பார்த்து அருகில் வந்தவர்,​

"என்ன பா? கிளம்பிட்டியா..."​

" ஆமா, ஆன்ட்டி போயிட்டு வரேன்."​

என்ற படியே வெளியேறிச் சென்றவனை,​

'நாம இவங்க வீட்டுக்குப் போனது இந்தப் பையனுக்குத் தெரியுமா? தெரியாதா? அதை இவன் மதி பையன் கிட்ட சொன்னா இல்லையான்னும் தெரியலையே? '​

என்று சிந்தனையோடு நின்றுகொண்டிருந்தார், அவன் சென்ற பாதையைப் பார்த்தபடி...​

அன்று வேலை முடிந்து தாமதமாகத்தான் வந்தான் மாறன், வீட்டிலிருந்து இறங்கி செல்லும் இன்பாவையும் அவனை வழி அனுப்புவதற்காக வாசலில் நின்று கொண்டிருந்த தம்பியையும் யோசனையாகப் பார்த்தவன்​

"என்னடா இந்த நேரத்துல?.."​

எனக் கேட்டான்​

"சும்மாதான்"​

என்றவன்​

" நீ என்ன இவ்வளவு லேட்டா வர?.."​

என்று கேட்டவனை சந்தேகமாகப் பார்த்தவாறு நின்று இருந்தவனிடம்,​

"எல்லாம் நல்ல விஷயம் தான் உள்ள வா"​

என்றான் சிரிப்போடு,​

"நல்ல விஷயமா! என்ன நல்ல விஷயம்? "​

"என்னை இத்தனை கேள்வி கேட்கிற, ஆனா நான் கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல."​

என்றவனை முறைத்து பார்த்தவன்​

"ஆபீஸ்ல மீட்டிங், ட்ரைனிங்க்கு சிங்கப்பூர் அனுப்ப போறாங்க"​

"ஹேய்! சூப்பர்! எப்போ?"​

என்றான் ஆரவாரமாக,​

" விரைவில்"​

என்ற படியே உள்ளே செல்லும் அண்ணனைத் தானும் பின் தொடர்ந்தான்.​

இவர்கள் வருவதைப் பார்த்த ரேணுகா, இருவருக்கும் டிபன் எடுத்து வைப்பதை பார்த்து மாறன்,​

" ரெண்டு நிமிஷம் மா, குளிச்சிட்டு வந்துடறேன்"​

என்ற படியே தன் அறையை நோக்கிச் சென்றான்.​

"என்னம்மா? சப்பாத்தி உருளைக்கிழங்கு மசாலாவுமா, உருளைக்கிழங்கு மசாலா அதிகமா செய்திருப்பீங்களே"​

என்றவனை பார்த்து​

" ஆமாடா எப்படி கண்டுபிடிச்ச? "​

என ஆர்வமாகக் கேட்க,​

" இதே மசாலாவை வைத்து நாளைக்கு ஸ்பெஷல் மசால் தோசைன்னு, புதுசா செய்தது போல, ஒரு சட்னி உடன் கொடுத்து, எங்களை ஏமாத்த, சரிதானே "​

என்றான் சிரிப்பை அடக்கியபடி,​

" டேய், கம்பெனி சீக்ரெட்.ட வெளியே சொல்லாத..."​

என்றார் இவரும் ரகசியமாகச் சிரிப்புடன்.​

இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் மாறனும் ரகுவரனும் வந்து விடச் சாப்பாட்டு நேரம் அமைதியாகவே கழிந்தது.​

மதியழகன் சாப்பிட்டு முடித்தவன் அன்னையோடு சேர்ந்து அனைத்தையும் எடுத்து வைத்து அவருக்கு உதவியவன், விளக்குகள் அனைத்தையும் அனைத்து விட்டு அன்னை அவர் அறைக்கு சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு மாறனின் அறைக்குள் சென்றான் மெதுவாக.​

அங்குத் தம்பிக்காகக் காத்திருந்தவன்​

" சொல்லுடா என்ன விஷயம்?"​

எனக் கேட்க,​

இன்பா வந்து கூறியது அனைத்தையும் அண்ணனிடம் எடுத்துரைத்தான்.​

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவன்,​

" உஃப்ப்ப்..."​

என்று பெருமூச்சை இழுத்து விட்டவன், இரு கைகளையும் பின்பக்கமாக ஊன்றித் தலையை அண்ணாந்து பார்த்தபடி சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தான்,​

அண்ணனின் செயல்களையே, இரு கைகளையும் கட்டியபடி சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.​

சிரித்து ஓய்ந்தவனுக்கு கண்களின் ஓரம் நீரால் நிரம்பி இருந்தது,​

" ரொம்ப பயந்துட்டு இருந்தேன் டா."​

என்றவனை வந்து அணைத்துக் கொண்டான் மதியழகன்.​

தம்பியின் அணைப்பில் அமைதியாக அமர்ந்திருந்தவன், சிறிது நேரம் கழித்து,​

"அவகிட்ட சம்மந்தமான்னு ஒரு வார்த்தை கேட்கச் சொல்லிடு."​

என்றவனிடம் ஆமோதிப்பாகத் தலையசைத்தவன்​

"அண்ணா உனக்கு ஒன்னும்? "​

என்று கேள்வியாக நிறுத்தியவனிடம்,​

"எனக்கு என்னடா? ஐ அம் வெரி ஹாப்பி. இன்பாகிட்ட சொல்லிடு எங்க அண்ணனுக்கு டபுள் ஓகேன்னு."​

என்றவன் சிரிப்போடு சந்தோஷமிகுதியால் விசில் செய்ய ஆரம்பித்தான்.​

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாட்டியே ஒரே மேடையில் ஒரே பந்தலில் இருவருமே.​

அண்ணனின் மகிழ்வில் தானும் மகிழ்ந்தவனாக, நிம்மதியுடன் தன் அறையை நோக்கிச் சென்றான் மதியழகன்.​

பிடி இருகும்...​

 

paasa nila

Moderator

அத்தியாயம் 21​

அன்றைய விடியல் மிகவும் அழகாகவே இருந்தது மாறனுக்கு,​

மனதிற்குள் இனம் புரியா சந்தோஷம், அது அவன் முகத்திலும் பிரதிபலித்தது,​

புன்னகையுடன் வெளிவந்த மகனை ஆசை தீரப் பார்த்துக்கொண்டிருந்தார் ரேணுகா, அவரின் ஸ்பெஷல் மசால் தோசையுடன்,​

இளைய மகனும் வந்துவிட முருகலாகவே தோசையை வார்த்து கொடுத்தார் மகன்கள் இருவருக்கும், அன்னையை பார்த்துக் கண்ணடித்தவாறே தோசைகளை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தான்,​

" என்னம்மா மசால் தோசையா?.."​

என்றான், அண்ணன் ஆரம்பிக்கப் போகும் செய்தியைக் கேட்கக் காத்திருந்தபடி​

தந்தை மற்றும் தாயை ஏறிட்டு பார்த்த மாறன்,​

" அப்பா மதி சொல்லுவான், என்னென்னு, அவன் கிட்ட கேட்டுக்கோங்க, இன்பா வீட்டுல போய்ப் பேசிட்டு வந்துடுங்க,​

என்ற படியே கைக்கழுவி எழ முற்பட்டவனை பார்த்த ரேணுகா,​

" நான் தான் ஏற்கனவே பேசிட்டு வந்துட்டேனே! "​

என வாயைவிட,​

" என்ன பேசினீங்க? எப்போ? யார்கிட்ட பேசினீங்க?​

என்றான் கேள்வியுடன், வெகுவாக அதிர்ந்தவனாக,​

அவன் தொடர் கேள்விகளில் அதிர்ந்து, தவறு செய்து மாட்டிக்கொண்ட குழந்தையைப் போல் முழித்துக் கொண்டிருந்த அன்னையைப் பார்த்த மதி,​

அன்னை, ஏதோ திருட்டுத்தனம் செய்திருப்பதை அறிந்து கொண்டவன் சூழ்நிலையைத் தன் கையில் எடுத்துக் கொண்டான்.​

"என்கிட்ட தான் ண்ணா பேசிட்டு இருந்தாங்க இத பத்தி, அதைத்தான் சொல்லத் தெரியாமல் சொல்லிக்கிட்டு இருக்காங்க"​

என்றவன் அம்மாவைப் பார்த்து​

"என்னம்மா? "​

எனச் சுத்தமாகக் கேட்க,​

"ஆம் "​

என்பது போல அனைத்து பக்கமும் தலையை உருட்டி நின்றிருந்தவரை சந்தேகமாகவே பார்த்துச் சென்றான் மாறன், தாயையும் தம்பியையும் நம்பாதவனாக.​

பெரிய மகனைப் போலவே, இருவரையும் நம்பாத பார்வை பார்த்துச் சென்றார் ரகுவரனும்.​

இருவரும் வீட்டை விட்டுச் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட மதியழகன்,​

அம்மாவைத் திரும்பி முறைத்து பார்க்கக் கடகடவென்று அனைத்தையும் ஒப்பித்து விட்டார் சின்ன மகனிடம்,​

"இப்படி எல்லாம் பார்க்கக் கூடாது, மதி பையா!.."​

என்ற கொஞ்சலுடன்,​

அதிர்வாக அன்னையை சில நொடிகள் பார்த்தவன்,​

" சரி விடுங்க! இதுவும் நல்லது தான்"​

" ஆனாலும் ஒரு தப்பு செஞ்சிட்டு அதை மறைக்கத் தெரியுதா! ரேணு பேபி! உனக்கு"​

(அம்மாவை கொஞ்சும் போது மட்டும் மரியாதையை பறக்க விட்டு விடுவான்)​

என்று செல்லமாக அம்மாவின் தலையைப் பிடித்து ஆட்டி விட்டு அவனும் அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்தான் நேரம் ஆனதை உணர்ந்தவனாக.​

அதன் பிறகு வேகமாகவே நடந்தது நிகழ்வுகள் அனைத்தும், அண்ணனின் சம்மதத்தை இன்பாவிடம் கூறிய மதியழகன்,​

விரைவாக பெற்றோர்களிடம், அவர்கள் வீட்டிற்கு வருவதை பற்றி விவாதித்து விட்டு, தங்களின் வருகையை பற்றிக் கூறுவதாகக் கூறி சென்றான்.​

இந்தச் செய்தி இன்பாவின் மூலம் அவர்கள் வீட்டில் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது மலரைத் தவிர,​

அன்று காலைக் கல்லூரிக்குச் செல்லும்போது, இரண்டு மணி நேரம் மட்டுமே கல்லூரி இருப்பதாலும் அதற்குப் பின்பு தேர்வுக் காலங்கள் தொடங்க இருப்பதால், கௌதமி, வேந்தனிடம் தாங்களாகவே வீட்டிற்கு வந்து விடுகிறோம் எனக் கூற,​

சிறிது யோசித்தவர் பின்பு சம்மதமாகத் தலையசைத்தவர் அவர்களைக் கல்லூரியில் விட்டு வந்தார்,​

வீட்டிற்கு வந்தவர் அனைவருடனும் மலரின் திருமணத்தைப் பற்றி மகிழ்வுடன் பேசிக் கொண்டிருக்க, இந்தச் செய்தியை மலரிடம் யார் கூறுவது என்ற விவாதத்திற்கு பாட்டி இரவு உணவுக்குப் பின் தான் கூறுவதாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.​

அங்குக் கல்லூரி வாசலில், மலரை அவளின் தந்தை விட்டுச் செல்வதை பார்த்த மாதேஷ், தன்னை சற்றும் ஏறிட்டு பார்க்காமல் செல்லும் பெண் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.​

அவன் அருகில் வந்த அவனின் நண்பன் ஷாம்,​

"என்னடா? என்ன பார்த்துட்டு இருக்க? போய்ப் பேசுறது தானே!.."​

எனக் கேட்க​

இல்லை என்பதாகத் தலையசைத்தவன்,​

" ஆரம்பிக்கும் போதே நிறைய பிரச்சனை டா, இதைத் தொடர விரும்பல, நானும் கிளம்புறேன் வெளிநாட்டு வேலை வந்துடுச்சு எனக்கு, இந்த விஷயத்திற்காகத்தான் அதைத் தள்ளிப் போட்டேன், இப்போ இந்த விஷயம் இல்லை என்றபோது வெளிநாடு என்னை அழைக்கிறது"​

என புன்னகையுடன் கூறியவன்,​

"நான் அங்க போறேன், இதைவிட சிறந்தது எனக்குக் கிடைக்கும்"​

"இப்போ என்ன? ஆரம்பிக்கும்போதே என்னுடைய காதல் தோல்வில முடிஞ்சிருச்சு, எல்லா காதலும் வெற்றி பெருதா என்ன? "​

" மே பீ ஷி இஸ் நாட் மை கப் ஆப் டீ "​

என்ற படியே கடைக்குள் சென்றான் ஏமாற்றத்தை மறைத்தபடி.​

நல்லவன்தான் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விலகிச் செல்ல முடிவெடுத்தான் அனைவரின் நன்மைக்காகவும்.​

அன்று சாப்பிட விரைவாகவே வீட்டிற்கு வந்தார் வேந்தன், மனம் மகிழ்வாக இருக்க பழக்கத் தோஷத்தில்,​

" குட்டி"​

என்று சத்தமாக அழைத்தவாரே உள் நுழைந்தார்,​

கல்லூரி பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தவளுக்கு வெகுநாட்களுக்குப் பிறகு தந்தையின் குரல் கேட்க, துள்ளிக் குதித்து ஓடி வந்தாள்,​

"அப்பா"​

என்று அழைத்துக் கொண்டே, மகள் அருகில் வந்த பிறகே தற்போதைய சூழ்நிலை ஞாபகம் வர, அமைதியாகச் சில நொடிகள் மகளை ஏறிட்டு பார்த்தவர், விருட் எனத் தன் அறையை நோக்கிச் சென்று விட்டார். சகஜமாக இருக்கத்தான் நினைக்கிறார் ஆனால் ஏனோ முடியவில்லை அவரால்,​

தந்தையின் குரல் கேட்டு ஆசையும் ஆர்வமும்மாக ஓடி வந்தவள், நிலைமை புரிந்து கண்களில் நிறைந்து விட்ட கண்ணீரோடு தன் அறையை நோக்கி ஓடிச் சென்றாள்,​

இவளைத் தேடி வந்த கௌதமி கண்டது, முட்டியில் தலை கவிழ்ந்து இரு கைகளால் கால்களை இறுக பிடித்து அழுகையில் குலுங்கி கொண்டிருந்தவளைத்தான்.​

இது இப்பொழுது அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்பதால் அமைதியாகச் சென்று அவளை அணைத்துக் கொண்டாள், அணைத்தது யார் என்பதை தெரிந்து கொண்டவள் அவளின் அமைப்பில் இருந்த படியே அனைத்தையும் கூறியவள் நிமிர்ந்து தோழியின் முகம் பார்த்து,​

" என்னை மன்னிக்கவே மாட்டாங்களா? டீ "​

எனக் கேட்டாள் பாவமாக,​

எதுவும் கூறாமல் அமைதியாகத் தோழியைக் தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தாள் கௌதமி,​

ஏதோ ஒரு நினைவில் மகளை அழைத்து விட்டு, எதுவும் கூறாமல் வந்து விட்ட தன்னையே நொந்தபடி நின்றிருந்த வேந்தன் மனம் கேளாமல் மகளின் அரை வாசலில் வந்து அனைத்தையும் கேட்டு நின்றார்.​

மகளின் அழுகை குரல் இவரை ஏதோ செய்ய,​

"குட்டி"​

என்று சற்று சத்தமாகவே அழைக்க,​

தோழியின் அனைப்பில் இருந்தவள் அடித்துப் பிடித்து ஓடி வந்தாள் வெளியில், இம்முறையேனும் தந்தை அழைத்தது உண்மைதானா? என அறிந்து கொள்ளும் வேகத்துடன்,​

இவரின் சத்தத்தில் பாட்டியும் உடம்பு சரியில்லாத தாமரையும் சேர்ந்தே வந்தார்கள் விரைவாக, தாமரைக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போகிறது, வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் மனதளவில் அவரைப் பெரிதும் பாதித்துவிட்டன, இது மற்றவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாமல் போனது தான் துயரம்.​

" இங்க வா"​

என்று மகளை அருகில் அழைத்தவர், அவளோடு வெளிவந்த கௌதமியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,​

அருகில், அமர்ந்த மலரின் கைகளைப் பிடித்துக் கொண்டு​

"மதியை, உனக்குத் தெரியும் தானே! இன்பா உடைய ஃப்ரெண்ட் "​

எனக் கேட்க,​

ஆமோதிப்பாகத் தலை அசைத்தவளிடம்,​

"அவங்க அண்ணனைத் தான் உனக்குத் திருமணம் செய்யப் பேசியிருக்கிறோம். " உனக்குச் சம்மதம் தானே!.."​

எனக் கேட்டார், அவள் கண்களை உற்று நோக்கியபடி.​

சம்மதமாகத் தலையசைத்தவளின்​

விழிகளில் நிறைந்து விட்ட நீரோடு தந்தையை பார்த்தவளின் மனதில்​

இழந்துவிட்ட நம்பிக்கையை மறுபடியும் எப்போது​

பெறுவோம் என்ற​

தவிப்பு மட்டுமே​

அவள் கைகளை ஆறுதலாகத் தட்டி விட்டுக் கௌதமியிடம் பார்த்துக்கொள் என்பதாகத் தலை அசைத்து விட்டு எழுந்து சென்றார் வேந்தன்.​

கௌதமியுடன் அறைக்குச் சென்றவளுக்கு தந்தை சொல்லிச் சென்றதே நினைவில் நின்றது​

'அன்று தன்னிடம் பேசியவனா?​

அவன் கண்களைத்தானே உற்றுப் பார்த்தபின் என்னால் விழிகளை நகற்ற முடியவில்லை'​

என்று யோசித்தவளுக்கு ஏனோ உடல் சிலிர்த்தது, அது பயத்தாலா அல்லது வேறு ஏதும் உணர்வுகளாலா என்பது அவளுக்கே விளங்கவில்லை,​

முகத்தில் பலவிதமான உணர்வுகள் வந்து போய்க் கொண்டு இருந்தன, குழப்பமும், மகிழ்வும், வெட்கமும், பயமும், தயக்கமும், சிந்தனையும் என, உணர்வுகளின் சுழற்சியால் சூழ இருந்த தோழியைப் பார்த்த கௌதமி அவளை உலுக்கி நினைவுக்குக் கொண்டு வந்தாள்.​

"என்னடி? என்ன சிந்தனை?"​

" ஒன்னும் இல்லடி! ஏனோ மனசு அமைதியாவும் இருக்கு! அதே நேரம் பயமாவும் இருக்கு! "​

"அமைதியா இருக்கு இல்ல அதை மட்டும் பிடிச்சுக்கோ, பயத்தை தூக்கிப் போடு, அப்பா, அம்மா அண்ணா பாட்டி எல்லாரும் உனக்கு நல்லது தான் செய்வாங்கன்னு, நினைக்கிறியா இல்லையா?​

" கண்டிப்பா டி "​

என வேகமாகச் சொன்னவள்,​

" ஒருத்தரை விட்டுட்டியே, உன்னையும் சேர்த்துக்கோ அதுல"​

என்றாள்.​

நெகிழ்வாக, தோழியின் கையைப் பிடித்துப் படி,​

"நான் இல்லாமையா? நானும் தான்! நானும் தான்!"​

என்றவள் சிரிப்போடு,​

"தேவையில்லாத சிந்தனை எல்லாம் தூக்கி போடு, மாறன் மாமாவ பத்தி மட்டும் நினைச்சு கனவு காணு, சரியா!"​

எனக் கிண்டலுடன் கேட்ட தோழியை​

வெளிரி போன முகத்துடன் பார்த்தவள்,​

"அவங்க கிட்ட சொல்லிடனும் டி, என்ன நடந்ததுன்னு"​

என்றாள் மெல்லிய குரலில்,​

" சொல்லலாம், சொல்லலாம் மெதுவா சொல்லலாம், இப்ப கனவு மட்டும் காணு, மாமாவை நினைச்சு."​

என்றவளை மிக மெலிதான புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்,​

தன் மகிழ்வே இவளின் மகிழ்வாக நினைக்கும் உற்ற தோல்வி கிடைத்த நிம்மதியில்.​

பிறகு வேலைகள் வேகமாகவே நடந்தன, பெண் பார்க்கும் படலம் எனப் பெரிதாக இல்லாமல் இரண்டு குடும்பங்கள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வாகவே அது நடந்தது,​

ஆனால் இதில் பெரிய ஏமாற்றம் என்னவென்றால் தமிழ்மாறன் ட்ரைனிங்காகச் சிங்கப்பூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதுவும் இரண்டு நாட்களில் கிளம்ப வேண்டும் என்ற நிலையில்.​

"என்னப்பா நீ! பெண் பார்க்கும்போது நீ இருக்க வேண்டாமா?​

என ரகுவரன் ஆதங்கமாகக் கேட்க,​

"அவன் தான் தினம் தினம் பார்த்துக்கிட்டு இருக்கானே, இப்ப பார்க்கணுமா, என்ன?."​

என இடை புகுந்தார் ரேணுகா,​

மெதுவாக மாறன் அவரை நிமிர்ந்து பார்க்க,​

'அய்யோ பார்க்கிறானே! மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிடுற டி நீ, ரேணு'​

என்று தன்னைத்தானே கலாய்த்துக்கொண்டு வேகமாகக் கணவனின் பின் சென்று மறைந்து கொண்டார்​

தாயின் செயலில் அடக்கமாட்டாமல் சத்தமாகச் சிரித்தவனை,​

மெதுவாக எட்டிப் பார்த்தார் ரேணுகா.​

' ப்பா, சிரிச்சிட்டான்'​

என்றபடி வெளியில் வந்து நின்றவர்,​

" நீ போயிட்டு எப்ப வருவ"​

எனக் கேட்டார் கவலையாக,​

"மூணு மாசம் ஆகும் "​

" மூணு மாசமா! அப்ப நிச்சயதார்த்தம், கல்யாணம் எல்லாம்"​

"நீங்கப் பேசி முடிவெடுங்க, கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்பு நான் வந்துடுவேன், வந்தபிறகு அவளைப் போய்ப் பார்க்கிறேன்"​

என்ற படியே தான் செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டான்,​

மகன் கூறுவது சரியெனப் பட ரகுவரனும் வேறு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.​

இவன் சிங்கப்பூருக்கு கிளம்பிச் சென்ற இரண்டு நாட்களில் ரகுவரனின் ஒன்றுவிட்ட அண்ணன் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள், பெண் பார்ப்பதற்கு மலர்விழியின் வீட்டிற்கு,​

அவர்கள் வீட்டிலும் இள வேந்தனின் தம்பி குடும்பமும் தம்பியின் மாமியாரும், மகள் மற்றும் மருமகனும் வந்திருந்தார்கள்.​

மாப்பிள்ளை வராதது சிறிது வருத்தமாக இருந்தது தாமரைக்கு, ஆனாலும் சூழ்நிலையில் புரிந்து கொண்டு மகளை அழகாகவே அலங்கரித்து இருந்தார். அவருக்கும் இவள் செல்ல மகள் தான் ஆனால் அதை காட்டிக் கொள்ள மாட்டார், மற்றவள் கோபித்துக் கொள்வாள் என்று​

கௌதமியும் இவள் உடன் இருக்க,​

இசையரசியின் துணையுடன் பதுமையாக வந்து அனைவருக்கும் காபி கொடுத்தவள், ஏனோ ரேணுகாவை நிமிர்ந்து பார்க்க, இவள் பார்க்க வேண்டி பார்த்துக் கொண்டிருந்தவர், இவள் பார்க்கவும், வேகமாக இரு கண்களையும் சிமிட்டி அவளைப் பார்த்து சிரிக்க,​

ஒரு நிமிடம் ஜெர்கானவள் சிரிப்போடு தலையை குனிந்து கொண்டாள்.​

உள்ளே செல்ல விளைந்தவளை கைபிடித்து இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டார் ரேணுகா.​

அவள் அருகிலேயே நின்றிருந்த இசையருசியின் மேடிட்ட வயிற்றைப் பார்த்தவர்,​

" எத்தனை மாசமா?"​

" நாலு அத்தை"​

என்றாள் அவளும் சிறு வெட்கத்துடன்.​

ஒப்புதலாக அவளிடம் தலைவசைத்தவர், அருகில் அமர்ந்திருந்த தன் மருமகளை பார்த்து,​

"எக்ஸாம் எப்போ முடியுது?​

இன்னும் ரெண்டு மாசம் இருக்கு, ஆன்ட்டி !"​

"ஆன்ட்டி இல்ல? அத்தை"​

என செல்லமாக மிரட்டிய வரை, புன்னகையுடன் பார்த்து சம்மதமாக தலையசைத்தாள் மலர்விழி.​

மாப்பிள்ளை வராததை கண்ட விஜயா பாட்டி,​

(வேந்தனின் தம்பியின் மாமியார்)​

"என்ன இது? பொண்ணு பாக்குறதுக்கு இப்படி மாப்பிள்ளை வராம இருக்கலாமா?"​

என்றார் அங்கலாய்ப்பாக,​

" என்னம்மா செய்றது, உங்க பேத்தி வர நேரம் என் மகனை சிங்கப்பூருக்கு அனுப்பி வச்சிருக்கா! அவனுக்கு பதவி உயர்வோட வெளிநாடு சுத்தி பார்க்கிற வாய்ப்பும் அமைந்திருக்கு பாருங்களேன்!.."​

என்றார் ரேணுகா நக்கலும் பெருமையும் ஆக​

இவரின் இந்த பதில் அனைவரையுமே மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, கோமதி பாட்டிக்கு சிரிப்பு தாளவில்லை, தங்கள் சொந்தத்திடமே தங்களின் பேத்தியை விட்டுக் கொடுக்காமல் பேசுவதை கண்டு....​

இதைக்கேட்ட விஜயா பாட்டிக்குமே சிரிப்பும் பெருமையும் தான்,​

" சரி தாண்டி மா! உன் மருமக வந்த நேரம் எல்லாம் சிறப்பாக நடக்குது, சந்தோஷம்தான்!.."​

என்றார் அவரும் உண்மையான மகிழ்வுடனேயே.​

இவர்களின் பேச்சில் பெண் அவளுக்கும் வெட்கமும் சந்தோஷமும் தான்..​

பரிட்சை முடிந்த அடுத்த வாரத்திலேயே திருமணத்திற்கான நாளை குறித்து விட்டு கிளம்பினார்கள் மாறன் குடும்பத்தினர்.​

அறைக்குள் வந்த மலரை பிடித்துக் கொண்டார்கள் இசையரசியும், கௌதமியும்,​

"என்னடி? உங்க மாமியார் ரொம்ப சப்போர்ட் பண்றாங்க உனக்கு"​

என்றாள் இசை,​

" ஆமா கா, நம்மளையே யாருன்னு கேப்பாங்க போலயே?"​

என்றாள் கௌதமியும் உடன் சேர்ந்து,​

"என்னமோ டி? சந்தோஷமா இரு, இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு"​

என்ற படியே வெளியேறி சென்றாள் இசையரசி.​

"ஹேய் எதுவா இருந்தாலும் எக்ஸாமுக்கு அப்புறம் தான், மாறன் மாமாவ நினைச்சு கனவு காணாம, ஒழுங்கா படிக்கிற வழிய பாரு"​

என்று இடுப்பில் கை குற்றி ஒற்றை விரலை நீட்டி எச்சரித்த கௌதமியை பார்த்தவள்​

"ஆமா கேட்கணும்னு நினைச்சேன்! அது என்ன மாறன் மாமா? "​

"ஆமா மாமா தானே"​

"ஏண்டி, ஊர்ல இருக்கிறவங்க எல்லோரையும் அண்ணா அண்ணான்னு சொல்லுவ, இவர் மட்டும் மாமா வா உனக்கு"​

"கண்டிப்பா டி, இவரும் மத்தவங்களும் ஒண்ணா? உனக்கு எப்படியோ அப்படித்தான் எனக்கும் "​

"அடச் சீ! எருமை, எருமை என்றபடி அவளை குனிய வைத்து முதுகில் அடிக்க ஆரம்பித்தாள் சத்தமாக சிரித்துக் கொண்டு, இவளும் அந்த அடிகளை வாங்கிக் கொண்டாள், அதே சத்தமான சிரிப்புடன்.​

ஒரு வேலையாக மகளின் அறையின் அருகில் வந்த வேந்தன், மகள் மற்றும் கௌதமியின் சிரிப்பு சத்தத்தை கேட்டு நகர்ந்து சென்றார் தானும் சிரித்தவாறு மனதில் நிறைந்து விட்ட மகிழ்வுடன்.​

பிடி இருகும்....​

 

paasa nila

Moderator

அத்தியாயம் 22​

காலை எழும்போதே மனதில் இந்தப் பாடல் தான் ஓடிக்கொண்டிருந்தது தமிழ்மாறனுக்கு,​

இதுதானா, இதுதானா…​

எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…​

நான்தானா நான்தானா…​

மலா் சூட்டும் மணவாளன் நான்தானா.​

புன்னகையோடு வளம் வந்தவன், அன்று விடியக் காலையில் தான் வந்திரங்கினான் சிங்கப்பூரிலிருந்து,​

கோபமாக இருந்த அன்னையை சமாதானம் செய்து அப்போதுதான் மலை இறக்கி இருந்தான்,​

பெண் அவளுக்கு வாங்கிய புடவைகளையும் நகைகளையும் பார்த்தவனுக்கு பரம திருப்தி,​

இவன் ஊரில் இல்லை என்றாலும் ரேணுகா அவ்வப்போது மலர்விழியின் வீட்டிற்கு சென்று, மருமகளுக்கு தேவையானதை அவரே பார்த்து அவளுக்குப் பிடித்திருப்பதையும் உறுதி செய்து கொண்டு வாங்கி குவித்து இருந்தார், பெண் பிள்ளை இல்லாதவருக்கு மருமகளே மகள் என்ற நினைவு எப்போதுமே.​

தந்தையின் ஒன்றுவிட்ட அண்ணன் குடும்பத்தினர் மட்டும் வீட்டில் இருந்தார்கள், மற்ற தூரத்து சொந்தங்கள் அனைத்தும் மண்டபத்திற்கு வந்து விடுவார்கள் திருமணத்திற்கு.​

அதனால் சற்று அமைதியாகவே காணப்பட்டது மாறனின் வீடு.​

இதன் எதிர்ப்பதமாக மலர்விழியின் வீடோ ஆட்களால் நிரம்பி இருந்தது. ஊரிலிருந்து நிறைய சொந்த பந்தங்கள் வந்திருந்தார்கள் திருமணத்திற்கு, இசையரசியின் மாமியார் மாமனார் அவர்களின் உடன் பிறந்தவர்கள் என வீடு கலகலத்து கொண்டிருந்தது.​

இரவு வரவேற்பிற்கு உடைகளையும் நகைகளையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார் தாமரை, ஏனோ மூச்சு முட்டுவது போல அசௌகரியமாக இருக்க, அனைத்தையும் பெட்டியில் வைத்து அடுக்கி விட்டு யாரும் அறியாமல் சமையல் அறை நோக்கிச் சென்றார்,​

அனைவரையும் நோட்டம் பார்த்துக் கொண்டிருந்த கோமதி அம்மாவின் கண்களில் இருந்து இது தப்பவில்லை, மருமகளின் பின்னோடு சென்றவர்​

"என்னாச்சுமா?​

என்றார் கவலையாக​

"மூச்சு முட்ற மாதிரி இருக்கு அத்தை!"​

" என்ன செய்யுது? போய் டாக்டரைப் பார்த்துட்டு வந்துடுறியா? வேந்தன கூப்பிடுறேன்."​

" வேணாம் அத்தை, சரி ஆயிடும்"​

"சரி, இரு, இஞ்சி சாறு போட்டுத் தரேன்"​

என்ற படியே இஞ்சி உடன் சில மூலிகைகளையும் வைத்துத் தட்டி குடிக்க கொடுத்து, அவர் சிறிது ஆசுவாசமடைந்த பின்னே அவரை அழைத்துச் சென்று அவரின் அறையில் விட்டவர்,​

" நீ இங்கேயே கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு, யாரும் கேட்டா நான் பதில் சொல்லிக்கிறேன்"​

என்றவாறு தன் அறையை மூடிவிட்டு வெளியில் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டார்.​

மாறன் வீட்டில் அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பிச் செல்ல நீல நிற சர்வானியில் இளவரசனை போல மிளிர்ந்தான் மாறன்,​

இவன் சென்று மேடையில் நிற்கவும் அதே நிற லெகங்காவில் அவளும் இவன் அருகில் வந்து நிற்கச் சரியாக இருந்தது இளவரசனுக்கு ஏற்ற இளவரசியாக மிளிர்ந்தாள் பெண் அவளும்.​

ஒரே ஒரு சந்திப்பிற்கு பின்பு மாறனை அருகில் பார்த்தவளுக்கு வெட்கமும் தயக்கமும் பயமும் சேர்ந்தே இருந்தது,​

இவனிடம் தன் மனதில் உள்ளதை சொல்ல நினைத்தவளுக்கு நேரம் தான் கூடி வரவில்லை இவனின் சிங்கப்பூர் பயணத்தால்,​

இந்தத் தருணத்தில் எப்படியாவது சொல்லிவிட நினைத்தவள் துணைக்கு தோழியைத் தேட, அவளோ முன் வரிசையில் அமர்ந்து கொண்டு தோழியையும் அவளின் சந்தோஷ தருணங்களையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.​

மாலையைச் சரி செய்வது போல அவனிடம் பேச முற்படும் போதெல்லாம் யாரேனும் மேடை ஏறி வந்து கொண்டே இருந்தார்கள்,​

பக்கத்தில் நின்றிருந்தவளின் முயற்சியையும் தவிப்பையும் பார்த்துக் கொண்டிருந்த மாறன்,​

அவளின் நெற்றிச்சுட்டியை சரி செய்வது போல அவள் புறமாகக் குனிந்தவன், மிக மெல்லிய குரலில்,​

" எதைப்பத்தியும் யோசிக்காத, இன்றைக்கு நம்முடைய நாள், அத மட்டும் மனசுல பதிச்சு, இந்தத் தருணத்தை உள்வாங்கிக்கொள் "​

என்ற படியே திரும்பி நின்றான்.​

திடீரென அவனின் அருகாமையாலும் அவன் செயலாலும் அதிர்ச்சியானவள்,​

' இப்போது என்ன நடந்தது? '​

என யோசித்துக் கொண்டே முன்பக்கம் பார்க்க, இவர்களையே வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்த கௌதமியை பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது கூடவே வெட்கமும்.​

வரவேற்பும் மறுநாள் திருமணமும் இனிதாக நடைபெற, மலர்விழி இள வேந்தனாக இருந்தவள், மலர்விழி தமிழ் மாறனாக மாறி, அவனின் வீட்டில் தன் வலது காலை எடுத்து வைத்து உள் நுழைந்தாள் அவனின் கைப்பற்றியவளாக.​

மகனோடு உள் நுழைந்த புது மருமகளை வாஞ்சையோடு பார்த்த ரேணுகா அவளுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்து, செய்ய வைத்து, பால் பழமும் கொடுத்து, அவளைச் சோபாவில் அமர வைத்தவர்,​

தங்கள் வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்பு, தந்தை தாய் பாட்டி அண்ணன் அக்கா என அனைவரையும் கட்டியணைத்து பிரிவு துயரால் கதறி அழுதவள் இன்னுமே விசும்பிக்கொண்டிருந்தாள், அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது ரேணுகாவிற்கு,​

அவருக்கு இந்த அனுபவம் எதுவும் இல்லாதிருந்தாலும் புரிந்து கொள்ள முடிந்தது அவரால்.​

மகன் தோட்டத்தில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவர்,​

" மலர் வா மா, வந்து உங்க ரூம்ல கொஞ்ச நேரம் படுத்து இரு,"​

என்ற படியே அவளை அழைத்துச் சென்று மாறனின் அறையில் விட்டு வந்தார்.​

வெளியில் இருந்தவர்களோடு பேசிவிட்டு தன் அறைக்கு வந்தவன் கண்டது பதுமையாக அமர்ந்திருந்த மனைவியைத் தான்,​

தன் அறையில் தன் மனதிற்கு இனியவள், மனம் முழுதும் மகிழ்ச்சி ஆர்ப்பரித்தது, எத்தனை வருட கனவு இது,​

மெதுவாக நடந்து வந்தவன் மனதில் இந்த வரிகள் தான்,​


மனதில் நின்ற காதலியே…​

மனைவியாக வரும்போது…​

சோகம் கூட சுகமாகும்…​

வாழ்க்கை இன்ப வரமாகும்…​

என நினைத்தபடியே முகம் கொள்ளா புன்னகையுடன், அவளின் அருகில் அமர அரவம் கேட்டு நிமிர்ந்தவள் கணவனைக் கண்டு டக்கென்று எழுந்து நின்று கொண்டாள் இவள் எழவும் அவனும் எழுந்து பெண் அவளைப் பார்க்க அதற்கு மேல் முடியாமல் அவளின் இரு கன்னங்களையும் பற்றிக் கொண்டு நெருங்கி நின்றவன்​

தன் கைகளுக்குள் நின்று கொண்டிருக்கும் பெண் அவளின்,​

நெற்றி முட்டி, நாசியோடு லேசாக உரசி, எப்பொழுதும் தன்னை கவர்ந்திழுக்கும் அந்தக் குட்டி சப்பையான நாசியின் மீது மென் முத்தம் பதித்து. அதுவும் போதாமல் தன் பற்கள் கொண்டு மென்கடி கொடுத்து, தான் செய்து கொண்டிருக்கும் செயல் புரிந்து, அதைத் தடுக்க முடியாமல் தவிப்பாகப் பெண் அவளைப் பார்க்க.​

மன்னவன் தரும் உணர்வுகளைத் தாங்க முடியாமல். அவனின் செயல்கள் தன்னிடம் கடத்தும் அதீத உணர்வுகளாலும் அதற்குச் சற்றும் குறையாத பயத்தாலும்​

கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும் என்பதையும் மறந்து.​

கண்களை அகல விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.​

பெண் அவளின் பாவனையில் சிரிப்பு வந்தது அவனுக்கு, அவளிடம் எதுவும் பேசாமல் முன்னேறிச் செல்வதற்கும் தயக்கமாக இருந்தது, அதே நேரம் அவளை விட்டு நகரவும் முடியவில்லை அவனுக்கு.​

இவனின் தவிப்பிற்கு முடிவு கட்டுவது போலவே வெளியே ஏதோ உருண்டு விழும் சத்தம் கேட்கப் பதறி விலகியவன், வேகமாகக் கதவைத் திறந்து வெளியேறுவதற்கும், அதற்காகவே காத்திருந்தது போல ரேணுகா, உள் நுழைவதற்கும் சரியாக இருந்தது,​

"என்னம்மா ?."​

என்றான் அதிர்வோடு,​

" ஒன்னும் இல்லப்பா! டம்ளர் கீழே விழுந்துடுச்சு, அவ்வளவுதான்"​

என்ற படியே உள் நுழைந்தவர்,​

"மலர், வா மா, வந்து சாப்பிடு"​

என அவளைக் கையோடு அழைத்துச் சென்றார்,​

மனைவியை அழைத்துக்கொண்டு செல்லும் தாயைப் பார்த்தவன்,​

' ஏதோ! கேடி வேலை செஞ்சிருக்காங்க, இந்த அம்மா"​

எனத் தனக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டவன்,​

'எவ்வளவு நேரம் பொத்தி வச்சிக்கிறாங்க மருமகள என்று பார்க்கிறேன் நானும்'​

என்றபடியே தன்னரை நோக்கிச் செல்ல முற்படுகையில், மலரின் பாட்டி அன்னை தந்தை அக்காள் அவள் கணவர் இன்பா மற்றும் அவர்களின் சொந்தங்கள் என ஒரு படையே உள் நுழைந்தது.​

அவ்வளவு கூட்டத்தைப் பார்த்துச் சற்று திகைத்தாலும் இன் முகத்துடனே வரைவேற்றான் அனைவரையும் மாறன்.​

தன் வீட்டாரை பார்த்ததும் அவ்வளவு மகிழ்வு மலர்விழிக்கு அனைவரையும் சென்று தாவித் தாவி அணைத்துக் கொண்டிருந்தாள், நின்ற கண்ணீர் மறுபடியும் வர ஆரம்பித்தது. அவளையே அமைதியாகப் பார்த்து இருந்தவனுக்கு இவர்கள் அனைவரையும் ஓரம் கட்டி, அவள் மனதில் நீக்கமற தான் மட்டும் இடம் பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.​

சோர்ந்திருந்த தாமரையை பார்த்த ரேணுகா,​

" என்ன அண்ணி ரொம்ப வேலையா?"​

என்றார் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு, சில மாதங்களாக வீட்டில் நடந்த தொடர் சலசலப்புகளாலும், கணவன் மற்றும் மகளால் மனதில் ஏற்பட்ட சஞ்சலங்களாலும் பின்பு மகிழ்வாளும் அலைச்சலாலும் ஏனோ அவர் உடலில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தது.​

மாசமாக இருக்கும் இசையரசின் உடல்நிலை அவளைப் படுத்த, இரு முறை சேலம் சென்று வந்தவருக்குப் பயணங்களும் ஒத்துக்கொள்ளவில்லை.​

தாமரையின் சோர்வை புரிந்து கொண்ட ரேணுகா, வீட்டில் சென்று அவர்தான் வேலை பார்க்க வேண்டும் என்பதை அறிந்தவராக, அனைவரையும் இரவு உணவு உன்ன வைத்து விட்டே அனுப்பினார், அவர்களின் வீட்டிற்கு.​

இப்படி அனைத்தையும் புரிந்து நடக்கும் ரேணுகாவின் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது பாட்டிக்கு, தன் பேத்தி நல்லோர் கைச்சேர்ந்ததை நினைத்துப் பெரிதும் இன்பம் அந்த மூதாட்டிக்கு.​

கிளம்பும்போது மலர்விழியிடம் சென்ற தாமரை,​

அவள் கைகளைப் பிடித்துக் கொள்ள,​

அன்னையை இறுக கட்டிக் கொண்டாள் மலர், எதுவும் பேசாமல் அவள் முதுகை தடவிக் கொண்டே,​

" உனக்கு நான் சொல்லணும்னு இல்ல, இசையைவிட உனக்கு முதிர்ச்சி அதிகம், அது யாருக்கு தெரியுதோ இல்லையோ எனக்கு நல்லாவே தெரியும், இருந்தாலும் சொல்றேன்,​

எல்லோரையும் புரிஞ்சி நடந்துக்கோ, அனுசரித்துப் போ, மாப்பிள சொல்றத கேட்டுக்கோ, என்னைக்கும் மாமியாரை விட்டுப் போகணும்னு நினைக்கக் கூடாது, மாமியாரிடத்தில் அம்மாவை வைத்துப் பார்த்தால் எந்தக் கஷ்டமும் வராது, இன்பாவின் மனைவி வந்து எனக்கும் அப்பாவிற்கும் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று நீ நினைக்கிறாயோ, அதை நீயும் எப்பொழுதும் உன் கணவரின் தாய் தந்தையருக்கு செய்யக் கூடாது என்பதை மனதில் பதிய வைத்துக்கொள், உன் வாழ்க்கை உன் கையில் இருக்கும்"​

என்றவர் மகளை இறுக்கமாக அனைத்து அவள் நெற்றியில் முத்தமிட,​

"கண்டிப்பா மா"​

என்றாள் அவளும் புரிதலுடன்.​

அனைவரும் விடை பெற்று செல்ல ரேணுகாவிடம் வந்த பாட்டி,​

" பார்த்துக்கோமா, சின்னப் பொண்ணு, சொன்னா புரிஞ்சுப்பா"​

என்றார் கண்ணீரை அடக்கியபடி,​

" ஐயோ அம்மா! கவலைப்படாதீங்க, பெண் பிள்ளை இல்லை எனக்கு என் மக மாதிரி பாத்துப்பேன்"​

என்றார் அவர் கைகளைப் பிடித்து உறுதியுடன்.​

அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த வேந்தன் இடம் வந்த மாறன் அவரை நேராகப் பார்த்து,​

"கண்டிப்பாக உங்கள் இடத்திலிருந்து உங்க மகள நான் பாத்துப்பேன், என் மனைவியா எப்பவும் சந்தோஷமா நிம்மதியா இருப்பா"​

என்றான்.​

நெகிழ்வோடு அவன் தோளில் தட்டி விட்டு, ஆமோதிப்பாகத் தலையசைத்தபடி வெளியேறினார் இளவேந்தன் மனதை முட்டும் மகிழ்வுடன்.​

அன்றே நல்ல நாளாக இருக்க மருமகளை தானே தயார் செய்து அனுப்பி வைத்தார்,​

தாமரை இசையரசியை அனுப்புவதாகக் கூறியும் மாசமாக இருக்கும் பெண்ணைச் சிரமப்படுத்த வேண்டாமெனத் தானே இதை அனைத்தையும் செய்வதாகக் கூறி, பார்த்துப் பார்த்து அலங்கரித்தார் மருமகளை தன் நெடுநாள் கனவு நிறைவேறி விட்ட குதூகலத்துடன்.​

அறைக்குள் வந்தவளுக்கு லேசான படபடப்பு, மாலையில் அவன் உள்ளே வந்த சிறிது நேரத்தில் நடந்து கொண்ட விதத்தை நினைத்துப் படபடபோடு பயமும் சேர்ந்து கொண்டது.​

இவள் எப்போது வருவாளெனக் காத்துக் கொண்டிருந்தவன், பெண்ணவள் நுழைந்ததும் எழுந்து அவளின் அருகில் சென்றவன்,​

"வெல்கம் மிஸ்ஸஸ் மலர்விழி தமிழ் மாறன்"​

என்றான் சிறிது குனிந்தவாறு, அவன் செயலில் சிரிப்பு வரக் குனிந்து கொண்டவளை லேசாக அனைத்து படி அழைத்துச் சென்ற அமர வைத்தான்.​

என்ன செய்யக் காத்திருக்கிறானோ, எனப் பயந்தபடி ஏறிட்டவளை பார்த்து,​

இரு உருவங்களையும் உயர்த்தி,​

" என்ன? "​

என்று கேட்க,​

" நகை எல்லாம் கழட்டி வைக்கணும்"​

என்றாள் வேகமாக,​

" கழட்டி வை"​

என்றான் அவனும்,​

அனைத்து நகைகளையும் கழட்டி வைக்க, இவன் அதற்குண்டான டப்பாக்களில் அழகாக அடுக்கி வைக்க ஆரம்பித்தான் அவள் அருகில் அமர்ந்து,​

மெட்டியை கலட்ட முற்படுகையில் வெகுசிரமமாக இருந்தது, விரலை விட்டு வராமல் அடம் பிடித்துக் கொண்டு இருந்தது,​

இவள் போராட்டத்தைப் பார்த்தவன்,​

என்னவென்று விசாரிக்க​

"ரொம்ப டைட்டா இருக்கு, வலிக்குது என்றாள் பாவமாக"​

அவள் பாதங்களை இரு கைக்கொண்டு பொத்தி பிடித்தவன்​

மெட்டியை களற்ற முற்படுகையில்​

"ஆனா அம்மா கழட்டக் கூடாது சொல்லி இருக்காங்க"​

"பரவால்ல, உனக்கு வலிக்குது இல்ல? நாளைக்கு போட்டுக்கலாம்"​

என்ற படியே அதனைக் கழற்றி தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.​

பிறகு என்ன? என்பதை போல் பார்த்தவளை, பார்த்தவன் சிரிப்போடு​

" படுத்துக்கோ"​

என்று விட்டு அனைத்து நகைகளையும் சென்று பத்திரப்படுத்தி வந்தவன், தானும் அவள் அருகில் படுத்துக்கொண்டான்.​

சில வினாடிகளில், அவள் என்ன என்று யோசிப்பதற்குள் அவளை அருகில் இழுத்து அனைத்தவனை அதிரோடு பார்த்தவளிடம்,​

"இதுக்கு மேல முடியாதுடி, ரொம்ப வருஷமா காத்துகிட்டு இருக்கேன்!"​

என்றான் தவிப்பாக,​

அவள் நெற்றியில் முத்தமிட்டு பின்பு அவனின் விருப்பமான மூக்கிற்கு இறங்கி பின் இதழ்களில் தஞ்சமடைய, அதுவரை அதிர்ச்சியில் இருந்த பெண், அவள் கணவன் மேலும் முன்னேறுவதை கண்டு பயந்தவளாக அவனைத் தடுக்க முற்பட்டாள், அவளில் மூழ்கி முன்னேறியவனுக்கு முதலில் புரியவில்லை அவள் தடுப்பது, பின்பு புரிந்தவனாக அவளை விட்டு விலகி ஏன் என்ற பார்வையோடு அவளைப் பார்க்க,​

" பயமா இருக்கு, கொஞ்ச நாளைக்கு அப்புறம்"​

என்றாள் தயக்கமாக,​

அவளின் தயக்கத்தையும் பயத்தையும் புரிந்து கொண்டவனால்,​

தன் தவிப்பை அடக்க முடியவில்லை, ஏமாற்றமாக உணர்ந்தவன்,​

" ரொம்ப வருஷமா காத்துட்டு இருக்கேன் டி! உன்ன பாக்கறது மட்டுமே சந்தோஷமாக இருந்தது எனக்கு! நீ இப்போ என் கைக்குள்ள இருக்க, அத நான் உணரனும் இது கனவில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கணும்"​

என்றான்,​

அப்பொழுதும் அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவன்,​

"நிறைய கனவோட காத்திருந்தேன், இந்த நாளுக்காக, வாழ்க்கையோட முதல் நாளே ஏமாற்றமா ஆரம்பிக்கப் போகுது"​

என்ற படியே நெற்றியில் கை வைத்துக் கொண்டவனை பார்த்தவளுக்கு, அவன் சொன்ன கடைசி வாக்கியம் மனதை உருத்தியது, மெதுவாக அவன் கையைச் சுரண்டியவள்,​

"சரி"​

என்றாள் மெதுவாக,​

"என்ன"​

என்று கேட்டவனிடம்​

"சரி சம்மதம்!"​

என்றவளை, அடுத்த வார்த்தை இல்லாமல், ஆழிப்பேரலையாகச் சுருட்டிக் கொண்டான் தன்னூள்.​

அவனின் ஆசையும் காத்திருப்பும் அழகாக நிறைவேறியது.​

பிடி இருகியது...​

 
Last edited:

paasa nila

Moderator

அத்தியாயம் 23​

விழிப்பு வந்ததும் தன் அருகில் பார்த்த தமிழ் மாறனுக்கு ஏமாற்றமாக இருந்தது,, மனைவி அருகில் இல்லாதது, வேகமாகக் குளித்து வெளிவந்தவன் தந்தை சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பதை பார்த்தபடி அவரிடம் ஒரு தலையசைப்பை கொடுத்தவரே சமையலறை உள் சென்று எட்டிப் பார்க்க,​

அங்கு இருக்கும் ஜன்னல் திண்டின் மீது எப்பொழுதும் வந்து அமரும் காகத்துடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார் ரேணுகா,​

"இங்க பாரு! இன்னைக்கு நான்வெஜ் எல்லாம் கிடையாது, இதுதான் இருக்கு, இட்லி சட்னி மட்டும்தான் சரியா! இன்னைக்கு இட்லி சாப்பிட்டுக்கோ, நாளைக்கு உனக்கு முட்டை வறுத்துத் தரேன் ஓகே"​

என்ற படியே ஒரு இட்லியை திண்டின் மீது வைக்க அவர் சொன்னது புரிந்தது போல அந்தக் காகமும் தலையாட்டிக் கேட்டுக் கொண்டு அவர் கொடுத்த இட்லியை கவ்வி சென்றது.​

இது எப்பொழுதும் நடக்கும் வழமையானது தான், வீட்டில் எதுவும் இல்லை என்றால் ஒரு முட்டையாவது வறுத்துக் கொடுத்து விடுவார் அந்தக் காகத்திற்கு, அதுவும் இவர் செய்து தரும் வரை அமைதியாக நின்று இருக்கும்.​

இவரைத் தவிர வேறு யாரும் வந்தால் உடனே பறந்து சென்று விடும் அதற்கு நன்றாகத் தெரியும் ரேணுகாவை.​

அதேபோல் பிஸ்கட் அல்லது சைவ சாப்பாடு எதுவும் வைத்தால் அவரைக் கோபமாக ஒரு லுக்கு விடும்,​

"என்ன இன்னைக்கு சைவமா?"​

என்றபடி,​

அம்மாவின் செயலைப் பார்த்தபடி மனைவியைத் தேடி வெளிவந்தவன் தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்க அங்கு வந்து எட்டிப் பார்த்தான்,​

பார்த்தவன் அதிர்ந்து நின்றான் சில நொடிகள்! மனைவி வாசலில் இருந்த ஒரு நாயுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள் அதே தாயின் தோரணையில்,​

அவளைப் பார்த்ததும் அங்கும் இங்கும் குதித்துக் கொண்டிருந்த நாயைப் பார்த்தவள், கையில் ஒரு சிறு குச்சியுடன்,​

"ஏய் பப்பி, மேல எல்லாம் தவ்வக் கூடாது சரியா! அமைதியா இருக்கணும், என்கிட்டயும் வரக் கூடாது ஓகே"​

என்ற படியே ஒரு, ஒரு பிஸ்கட்டாக அதற்குப் போட, அதுவும் வாலாட்டிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தது.​

தன் அறையிலிருந்து அப்போதுதான் வெளிவந்த மதியழகன், அண்ணன் அதிர்வுடன் நிற்பதைக் கண்டு, அவனும் அவன் பின்னே வந்து எட்டிப் பார்க்க, அண்ணி நாயுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதை பார்த்தவன்,​

"என்ன ன்ணா, ஒளிமயமான எதிர்காலம் உன் உள்ளத்தில் தெரிகிறது போல"​

என்றான் சிரிப்பை அடக்கியபடி,​

"ஆமாடா "​

என அதிர்வாகப் பதிலளித்தவனை பார்த்தவனுக்கு அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியாமல்,​

"எனக்கும் அம்மாவுக்கும் ஒரு பார்ட்னர் கிடைச்சுட்டாங்க"​

என்ற படியே சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தான்.​

திடீர் சிரிப்பு சத்தத்தில் திரும்பிப் பார்த்தவள், கணவனும் அவனின் தம்பியும் தன்னையே பார்த்து இருப்பதை பார்த்தவள் விரைவாக ஓடிச் சென்றாள், தங்களின் அறைக்கு.​

அவளின் பின்னே அறைக்குள் நுழைந்தவன், தன்னவளை இழுத்து கை வளைவில் வைத்துக்கொண்டு,​

"என்னடி நாய் கிட்ட எல்லாம் பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்க?"​

" சும்மா தான்"​

"என்ன சும்மா? உன்னை நான் தேடுவேன்னு தெரியாதா?"​

என்ற படியே இறுக்கி அணைத்துக் கொண்டு அவள் காது மடலில் இருந்த மருவிற்கு முத்தமிட, கணவனின் இறுகிய பிடி வேறு கதை சொல்ல, பெண் அவளும் மயங்கி நின்றாள் கணவனின் பிடியில்.​

அவன் பிடியில் நின்றவாரே,​

" உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்!"​

என்றாள் தயங்கியபடி​

"என்ன சொல்லணும்?"​

என கேள்வியாக கேட்டவன், அவளின் தயக்கத்தை பார்த்து, அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை புரிந்தவனாக,​

" நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்! நம்ம வாழ்க்கை இன்றைக்கு தான் தொடங்கி இருக்கு, அது நல்லபடி போகட்டும், பழசு எதுவும் சொல்லவும் வேண்டாம், நினைக்கவும் வேண்டாம், சரியா!.. இனி நாம ஒன்றாக சேர்ந்து வாழப் போற வாழ்க்கையை மட்டும் நினைச்சா போதும்"​

என்ற படியே தன் வேலையில் கவனமாக, அவளும், அவனின் கூற்றுக்கு இணங்கி அவன் அழைத்துச் செல்லும் வழி நடந்தாள், இன்பமாகவும், பெரும் நிம்மதியாகவும்.​

மறு வீட்டு விருந்து, சொந்தங்கள் வீட்டு விருந்து எனப் பத்து நாட்கள் வேகமாகப் பறந்து சென்றது. இந்தப் பத்து நாட்களில் மலர்விழி தெரிந்து கொண்டது கணவன் தன் மீது வைத்திருக்கும் அளப்பரிய முடியாத காதலை தான். அவளும் சுகமாகத் தன் கணவனின் காதலில் மூழ்கி எழுந்தாள்.​

எங்காவது ஹனிமூன் செல்லுங்கள் என ரேணுகாவின் வார்த்தைக்கு, தற்போது தான் சிங்கப்பூரில் இருந்து வந்ததால், விடுமுறை எடுக்க முடியாது எனக் கூறி, விரைவாக அழைத்துச் செல்வதாக வாக்கு கொடுத்தான் மனைவிக்கு.​

மேலும் 10 நாட்கள் கடந்து இருக்க, தாமரை பெரிய மகளைப் பார்ப்பதற்காகச் சேலம் சென்று நான்கு நாட்கள் ஆகி இருந்தது,​

இசையரசிக்கு இப்போது எட்டு மாதம், ஏழு மாதத்தில் வளைகாப்பு செய்யலாமென இவர்கள் சொல்லி இருக்க, இசையின் மாமியார் வீட்டு வழக்கத்தில் ஒன்பதாவது மாதத்தில் தான் சீமந்தம் என்று முடிவாகி இருந்தது, இவர்களும் சின்ன மகளின் திருமணத்தால் அதற்கு ஒத்துக் கொண்டார்கள்.​

இந்நிலையில் இசையின் மாமியார் வயல் வெளியில் நடந்து செல்லும்போது வழுக்கி விழுந்ததில் லேசாகக் கால் பிசகி நடக்க முடியாமல் கட்டுப்போட்டு இருக்க, பிரசவத்தின் இறுதியில் இருக்கும் மகளையும் அவளால் தனியாக மாமியாரை கவனித்துக் கொள்ள முடியாத நிலையும் சேர்ந்திருப்பதால் தாமரைச் சென்றார் சேலத்தை நோக்கி மகளைக் கவனித்துக் கொள்ள, தன்னை கவனித்துக் கொள்ள தான் மறந்து விட்டார் இவர்.​

திருமணத்திற்கு வந்திருந்த தூரத்து சொந்தத்தில் உள்ள நடுத்தர வயதுப் பெண் ஒருவர் உடன் இருக்க பாட்டி, மகனையும் பேரணையும் பார்த்துக் கொண்டார்.​

நள்ளிரவில் மனைவியின் அருகாமைக்கு தேடி கைநீட்டிய மாறனுக்கு மனைவி சிக்காமல் முழித்துப் பார்த்தவன், அருகில் மனைவி இல்லாததை புரிந்து பாத்ரூமை எட்டிப் பார்க்க, அங்கு ஆள் இருக்கும் அரவம் இல்லாமல் எழுந்து வெளிவந்தவன், வெளி வாசலில் சத்தம் கேட்க அங்குச் சென்று பார்த்தான்.​

தம்பியும், தாயும் கூடவே மனைவியும் இருப்பதை பார்த்தவன் இரு கைகளையும் கட்டிக் கொண்டு வாசல் நிலையில் சாய்ந்த படி அவர்கள் செய்யும் திருட்டுத்தனத்தை கண்டு கொண்டிருந்தான்,​

"அத்தை நாலு நாளைக்கு முன்னாடி தான போனோம், திரும்பவும் போகனு மா? அவர் முழிச்சுக்க போறாரு, பயமா இருக்கு"​

என்றவளை பார்த்த ரேணுகா,​

"அன்னைக்கு அம்மா ஊருக்குப் போய்ட்டாங்கன்னு நீ எவ்வளவு அழுத, உன்ன சமாதானப்படுத்த தானே வெளியில போனோம், நீயும் சமாதானமாகி நல்ல சந்தோஷமா தானே வந்தே"​

"முந்தா நாளும் போகலாம்னு பிளான் போட்டோம், ஆனா எனக்குக் கால் வலி அதனால போக முடியல, மதி கூடப் போனு சொன்னா நான் இல்லாம போக மாட்டேன்னு சொல்லிட்ட, அதான் இன்னைக்கு போயிட்டு வரலாம்னு பார்த்தா உன் புருஷன், கேட்டை பூட்டி சாவி எடுத்துட்டு போயிட்டானே!"​

"ஏன் டா திறந்தியா? இல்லையா?"​

"இருங்கம்மா ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்"​

"அன்னைக்கு மட்டும் எப்படி டா சாவி இருந்தது?"​

"ஹும்ம், உங்க பையன் கல்யாண பிஸியில மறந்துட்டாரு"​

என்றபடியே ஒவ்வொரு சாவியாகப் போட்டுத் திறக்க முயற்சி செய்துகொண்டிருந்தான் மதியழகன்.​

"ஏன் மா மலர்? உனக்குச் சுவர் ஏறிக் குதிக்க தெரியுமா?"​

என்றபடியே திரும்பியவர் அங்கு மகனைப் பார்த்து,​

ஐயோ! நான் இல்ல?​

என்றார் அதிர்வாக.​

"என்ன நீங்க இல்ல?"​

என்ற படியே இருவரும் திரும்ப, அங்கு மாறனை கண்டவர்களும் அதிர்ந்து நின்றார்கள்.​

"ஹும்ம், சொன்னபடியே கூட்டு சேர்ந்துட்டீங்க?"​

"ரொம்ப நாளா நடக்குது போல இந்தத் திருட்டுத்தனம்? "​

என்றான் மூவரையும் பார்த்து.​

"ரொம்ப நாள் எல்லாம் இல்ல, ஒரே ஒரு தடவைதான் போயிருக்கோம் "​

என்றாள் வேகமாக மலர், கணவன் எங்கே கோபித்துக் கொள்வானோ என்று பயந்தபடி.​

"ஆமாங்க மகர்... ஒரே ஒரு முறை தான் போயிருக்கோம்"​

"அம்மா அது என்ன மகர்"​

என அம்மாவின் காதில் மெதுவே கேட்ட மதியை திரும்பிப் பார்த்தவர்,​

"மகன் சொன்ன மரியாதையா இருக்காது இல்ல, அதான் மகர்ர்ர்"​

என்று அழுத்திக் கூறிய அம்மாவைப் பார்த்தவன்,​

"ஆனாலும் ரொம்ப நக்கல் மா உனக்கு, எல்லாரும் சேர்ந்து வாங்கி கட்ட போறோம் அண்ணன் கிட்ட"​

எனக் கூறிய மகனைப் பார்த்தவர், பெரிய மகன் தங்களையே முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்து,​

"அய்யய்யோ பாக்குறானே!"​

என்றபடி சின்னவனின் பின் சென்று மறைய,​

" ஆமா! ஆமா! ரொம்ப பயந்தவங்க தான் நீங்க எனக்கு"​

என்ற மாறன் நக்கலில்.​

"இல்ல, மருமக ரொம்ப அழுதாங்க அதான்"​

என இழுத்தவரை,​

"கால் வலி வச்சுக்கிட்டு, உங்களுக்குச் சுவர் ஏறிக் குதிக்கணும், ஹும்ம் "​

எனக் கோபமாக கேட்டவனிடம், ஒன்றும் கூறாமல் இருப்பவர்களைப் பார்த்தவன்,​

"அவங்களை இல்லை முதல்ல உன்னைக் கொல்லனும்"​

என்றான் தம்பியை முறைத்து.​

இது இப்போதைக்கு முடியாது என உணர்ந்தவராக மகனைப் பார்க்க,​

அவன் அமைதியாக மூவரையும் பார்ப்பதை கண்ட ரேணுகா,​

" சரி வாங்க போய்த் தூங்குவோம்! எனக்குத் தூக்கம் வருது!"​

என்ற படியே இருவரையும் அழைத்துக் கொண்டு முன் செல்ல, சோகமாகச் செல்லும் மனைவியின் முகத்தைப் பார்த்தவனுக்கு தாள முடியவில்லை,​

"அதான் போகக் கிளம்பிட்டீங்க இல்ல? போங்க"​

என்ற மாறனின் கூற்றுக்கு, அனைவரும் ஆனந்தமாகத் திரும்ப,​

கேட் சாவியும், கார் சாவியும் எடுத்துட்டு வரேன்! போய்க் கேட்டுகிட்ட நில்லுங்க"​

எனக் கூறி செல்பவனை பார்த்த மதி,​

என்ன ண்ணா ? நீயும் வரியா!"​

என்றான் ஆச்சரியமாக,​

" பின்ன, சிக்கிக்கிட்டேன் அனுபவிக்கிறேன்"​

என்றவனிடம்,​

" அப்படி ஒன்னும் கஷ்டப்பட்டு நீங்க எங்களைக் கூட்டிட்டு போக வேண்டாம், மகர்?"​

என முறுக்கிக் கொண்ட அன்னையை முறைத்தபடி,​

கார் சாவியை எடுத்து வரச் சென்றவனைப் பார்த்து,​


மதி வேகமாக அன்னையிடம்

"யம்மா, மலை இறங்கினவர திரும்ப ஏற்றி விட்றாதம்மா"​

என்றபடி,​

"ஆனாலும், பாத்தியா மா! எல்லாம் வரவங்க வந்தா தான், இந்த அதிசயம் எல்லாம் நடக்கணும்னு இருக்கு"​

என அண்ணனைக் கிண்டல் அடித்தபடி, குதூகலமாகவே கிளம்பினார்கள் மூவரும்.​

இப்படி இரவில் மனைவியோடும் தாய், தம்பியோடும் சுற்றியதில் மகிழ்வாகவே உணர்ந்தான் மாறன்.​

அன்று கௌதமி வந்திருந்தாள் மலரைப் பார்ப்பதற்கு,​

"கௌவ்வு!வாடி, வாடி, நல்லா இருக்கியா?"​

'இப்பவும் கௌவ்வ விட மாட்டியா டி நீ"​

என்ற படியே வந்தவளுக்கு அவ்வளவு மகிழ்வு, தோழி கணவன் வீட்டில் பொருந்தி கொண்டதை பார்த்து,​

" அத்த இவ என் பெஸ்ட் பிரண்ட் கௌதமி"​

"தெரியுமே! நான் தான் கல்யாணத்தில் பார்த்தேனே, வா மா கௌதமி, நல்லா இருக்கியா?​

என்ற படி மூன்று பேரும் அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள்,​

"என்னடி மாஸ்டர்ஸ் சேர்ந்துட்டியா?"​

" ஆமாடி நானும் அகல்யாவும் சேர்ந்துட்டோம்."​

" அப்படியா! நித்யா அவ என்ன செய்றா?​

"அவளும் சேர்ந்து இருக்கா, ஆனா வேற காலேஜ்"​

அனைத்தையும் கேட்டுக் கொண்டவள், அத்தை கொண்டு வந்து கொடுத்த காபியை கௌதமிக்கு கொடுக்க, இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அன்று மாறன் விரைவாக வீட்டிற்கு வந்தான்.​

கௌதமியை கண்டு,​

" வாங்க நல்லா இருக்கீங்களா?"​

என அவனும் வரவேற்க,​

" நல்லா இருக்கேன் அண்ணா, நீங்க எப்படி இருக்கீங்க?​

என்று அவளும் விசாரித்துக் கொண்டாள். மலர் கணவனின் லஞ்ச் பாக்ஸை கிச்சனில் வைப்பதற்காகச் சென்று இருக்க, அவள் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு அண்ணன் என்ற அழைப்புடன்.​

கணவனைக் கவனிப்பதற்கு எழுந்து சென்று விட்டாள் மலர்விழி.​

தன் பின்னோடு வந்த மனைவியை இறுக அணைத்துக் கொண்டு அவள் காது மடலின் மருவில் முத்தமிட, சிலிர்த்தவள், தானும் இறுக்கி அணைத்துக் கொண்டாள், இருவருக்குமே மற்றவரின் வாசம் தேவைப்பட்டது.​

கௌதமி, ரேணுகா உடன் அரட்டையில் ஈடுபட்டிருக்க, மிகவும் பிடித்து போனது இருவருக்கும் ஒருவரை ஒருவர், பின் இவர்களோடு சேர்ந்து கொண்டாள் மலரும்,​

கௌதமி விடைபெற்றுச் சென்றபின்,​

"ஏன் மலரு? பேசாம நம்ம மதி பையன் கூட இவளைக் கோர்த்து விட்டுடலாமா?​

எனக் கேட்டார் ரேணுகா, அவர் கேட்ட விதத்தில் அதிர்ந்து பார்த்த மலர்,​

என்ன அத்தை சொல்றீங்க?​

எனக் கேட்டாள் சந்தோஷத்துடன்.​

"நெஜமா தான்"​

என்றவரிடம்​

"அவகிட்ட முதல்ல கேட்டுகிறேன் அத்தை, அப்புறம் என்னன்னு நம்ம முடிவு செய்யலாம்"​

என்றபடி கணவனைக் காண சென்றாள்.​

இரண்டு நாளில் தோழியைத் தேடி வந்த கௌதமியிடம், தன் அத்தையின் விருப்பத்தைக் கூறிய மலரைப் பார்த்தவள் சிரிப்புடன்,​

"அதெல்லாம் வேண்டாண்டி."​

என்றாள்.​

"ஏன் அப்படி சொல்ற, நாம ஒரே வீட்ல இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்."​

எனப் பாவமாகக் கேட்ட மலரைப் பார்த்தவள்,​

"நீ ஒருத்தி போதும் இந்த வீட்டுக்கு, மாறன் மாமாவுடைய தம்பியை நான் கல்யாணம் பண்ணா, என்னால மாறன் மாமாவ சைட் அடிக்க முடியாது, அதனால நான் வேற வீட்டுக்குப் போறேன், அதுதான் சரியா இருக்கும்"​

என்றவளை,​

"எருமை, எருமை"​

யென மொத்த ஆரம்பித்தாள் மலர் சிரிப்புடன், மனதில் தோழிக்கு இதில் விருப்பமில்லை என்பதை தெரிந்துக் கொண்டு.​

திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்கள் நிறைந்திருந்தது, இசை அரசிக்கும் எப்போது வேண்டுமானாலும் பிரசவமாகலாம் என்ற நிலை,​

அன்று காலை கணவனின் இறுகிய பிடியில் விழித்தவளுக்கு குமட்டிக் கொண்டு வருவது போல் ஒரு நிலை, ஏன் என்று தெரியாமல் கணவனை விட்டு விலகிச் சென்றவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியேறி சென்றாள் அத்தையை தேடி,​

சோர்ந்த முகத்துடன் வந்தவளை பார்த்த ரேணுகா,​

என்னம்மா? காபி குடிக்கிறியா?​

என்றார்,​

" வேணா அத்தை, ஒரு மாதிரி இருக்கு.."​

என்ற படியே தலையில் கை வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தவளை யோசனையாக பார்த்த ரேணுகா,​

" தூரம் ஆயிட்டியா?.."​

எனக் கேட்டார்,​

தனது தேதிகளை தந்தையே கவனத்தில் வைத்திருப்பது ஞாபகம் வர, ஏனோ அழுகை வரும் போல் இருந்தது. மாதவிடாய் தேதிகள் எப்பொழுது என மறந்து விட்டிருந்தது,​

"சரி, நீ கொஞ்ச நேரம் படுத்துக்கோ"​

என்ற படியே உள்நோக்கிச் சென்றார்.​

"விழி!"​

என்ற கணவனின் அழைப்புக்கு உள் எழுந்து சென்றவளை பார்த்தவன்,​

"என்னடி? டல்லா இருக்க, உடம்பு சரி இல்லையா? "​

என்றபடியே அவள் அருகில் வந்து அவள் நெற்றியை தொட்டு பார்க்க, கணவனின் அருகாமை மீண்டும் குமட்டலை ஏற்படுத்தியது அவளுக்கு,​

"ம்ஹும்ம்"​

என்றபடி கணவனின் அருகாமையை விட்டு கழிவறைக்கு விரைந்து சென்றவளை யோசனையுடன் பார்த்தவன், அலுவலகத்திற்கு நேரமாவதை உணர்ந்து வேகமாக கிளம்பியவன், சோர்வாக வெளியில் வந்தவளை பார்த்தவன் கவலையாக,​

" முடியலையா, டாக்டர் கிட்ட போலாமா?​

என்று கேட்டபடியே அவளை லேசாக அனைத்து கொள்ள, மீண்டும் கணவனின் அருகாமையில் குமட்டுவது போல் இருக்க, இது என்ன? என்பது புரியாமல், அழுகை வரும் போல் இருந்தது, வேண்டாம் என தலையசைத்தவளை பார்த்தவன்,​

" சரி, படுத்துக்கோ, கொஞ்ச நேரம் தூங்கு, நான் ஈவினிங் சீக்கிரம் வரேன், டாக்டர் கிட்ட போலாம் சரியா!"​

என்ற படியே அவளின் நெற்றியில் முத்தமிட்டு, போர்வையை போர்த்தி விட்டு சென்றான் மனம் இல்லாமல், தாயிடம் வந்தவன் கோபமாக​

"மா நைட் எங்கேயாவது போனீங்களா எனக்கு தெரியாம?."​

"இல்லப்பா, எங்கேயும் போகலையே"​

என்றார் வேகமாக,​

தாயை நம்பாது பார்த்தவன்,மனைவியை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றான் அலுவலகத்திற்கு.​

மகன் சென்றதும், அவனின் அறையில் சென்று பார்த்தவர், நன்றாக எழுந்து அமர்ந்திருக்கும் மலரைத்தான்,​

யோசனையுடன் அவளின் அருகில் வந்தவர் கண்ணீர் முட்ட அமர்ந்திருப்பவளை கண்டு பதறிவிட்டார்,​

"என்னாச்சு மா?"​

" தெரியல அத்த, அவர் கிட்ட வந்தாலே கொமட்டுற மாதிரி இருக்கு எனக்கு"​

என அழுகையுடன் கூறியவளிடம் திரும்பவும் அதையே கேட்டார் ரேணுகா,​

"தூரம் ஆயிட்டியா ?"​

"இல்ல"​

" எப்போ டேட் உனக்கு?"​

"தெரியல அப்பாக்கு தான் தெரியும்"​

என்றவளை வியப்பாக பார்த்தவர்,​

" சரி, வா கொஞ்சம் சாப்பிடு, நான் கடைக்கு போயிட்டு வந்துடறேன்"​

என்ற படியே அவளுக்கு சாப்பிட கொடுத்தவர், சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேகமாக கிளம்பி சென்றார் மெடிக்கல் ஷாப்பை நோக்கி,​

கர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனத்தை வாங்கி வந்தவர், சோகமாக சோபாவில் அமர்ந்திருந்த மருமகளை பார்த்து, அதை எப்படி கையாள வேண்டும் என சொல்லிக் கொடுத்த படி அவளை கழிவறைக்கு அனுப்பி விட்டு படபடப்பாக நின்றிருந்தார் வெளியில்,​

அப்படி இருக்குமோ? என சந்தேகத்துடன் சென்றவளுக்கு, வெளியில் வரும்போது பயமும் மகிழ்வும் சேர்ந்தே இருந்தது,​

"என்ன ஆச்சு?"​

என கேட்டவரிடம்​

இரட்டைக் கோடுகள் உடன் கூடிய கருவியை கொடுத்தவளுக்கு கண்ணீரும் சிரிப்பும், பார்த்தவருக்கும் கண்ணீரும், சிரிப்பும்.​

இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அமைதியாக இருக்க, மெதுவாக ரேணுகாவின் கையை சுரண்டிய மலர்,​

"ஆனா அத்த, இத மொத மொதல்ல புருஷன் கிட்ட தானே சொல்லணும்"​

என்றாள் அப்பாவியாக,​

"ஆமா, ஆனா நீ சொல்லலையே, நான் தானே கண்டுபிடிச்சேன்"​

"அதனால சாயந்திரம் அவன் வந்ததும், நீயே அவன் கிட்ட சொல்லு, சரியா!"​

என்றவரிடம், சரி என்பதாக தலையாட்டியவளுக்கு சிரிப்பு வந்தது.​

"நான் போய் பாதாம் அல்வா செய்றேன், ஸ்வீட் சாப்பிட்டு நம்ம புது வரவ கொண்டாடுவோம்"​

"ஆமா! உனக்கு பாதாம் அல்வா பிடிக்குமா?"​

என கேட்டவரிடம்,​

பிடிக்கும் என்பதாக தலையாட்ட,​

அப்ப சரி, எனக்கு அதுதான் ரொம்ப பிடிக்கும்"​

என கண்ணடித்து வெளியேறிய மாமியாரை மகிழ்வோடு பார்த்திருந்தாள் மலர். தன் வாழ்வு சிறந்தவர்களிடம் வந்து சேர்ந்திருப்பதை நினைத்து.​

கணவனின் வருகைக்காகக் காத்திருந்தவளுக்கு பெரும் சிந்தனை,​

அத்தை வந்து கட்டிப்பிடிச்சாங்க அப்பவும் ஒன்னும் ஆகல, மதி அண்ணாவும்,​

('அய்யய்யோ அண்ணா சொன்னா அத்தை திட்டுவாங்க வேற எப்படி சொல்றது சரி அத அப்புறம் பார்ப்போம்' என நினைத்துக் கொண்டு,)​

கைக்கொடுத்து வாழ்த்துக்கள் சொன்னாங்க அப்பவும் ஒன்னும் ஆகல, மாமாவும் தலைய கோதி வாழ்த்துக்கள் சொன்னாங்க அப்பவும் ஒன்னும் ஆகல, ஆனா இவங்க பக்கத்துல நிற்கும் போதும் அவங்க அனைப்பில் இருக்கும்போதும் மட்டும் ஏன் அவ்வளவு தடவை கொமட்டுச்சு எனக்கு,​

என நினைத்துக் கொண்டிருந்தவளின் சிந்தனை தடைப்பட்டது வெளியில் கணவன் வந்த அரவம் கேட்டு, அமைதியாகப் படுத்துக்கொண்டாள் பயத்தோடு கண்களை இருக மூடிக்கொண்டு.​

வீட்டின் உள் நுழைந்தவனின் கண்கள் மனைவியைத் தான் தேடியது,​

அவன் கண்களைச் சுழற்றிக் கொண்டிருக்கும் போதே, வேகமாக அண்ணனின் அருகே வந்த மதியழகன்,​

"வாழ்த்துக்கள் அண்ணா!"​

என்ற படியே அனைத்துக் கொண்டான்.​

"எதுக்குடா வாழ்த்துக்கள்?"​

எனக் கேள்வியாகக் கேட்டவனிடம் ரேணுகா, பாதாம் அல்வாவுடன் கர்ப்பத்தை உறுதி செய்த சாதனத்தையும் கையில் கொடுக்க, அதை வாங்கி பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை,​

பின்பே மூளையில் பல்பெரிய வேகமாக நிமிர்ந்தவனுக்கு தாங்க முடியாத சந்தோஷம், தாயையும் தம்பியையும் ஒரு சேர அனைத்து கொண்டவன், முகத்தில் வெட்க சிரிப்போடு மனைவியைப் பார்க்க ஓடினான் தன்னரைக்கு.​

"விழி"​

என்று அழைத்தபடியே வந்த கணவனைக் கண்டவளுக்கு மகிழ்வும் பயமும் ஒரு சேர எழுந்தது,​

வேகமாக வந்தவன், அவளை இழுத்து, இறுக்கி அணைத்து கழுத்தில் வாசம் பிடிக்க, இரண்டு நொடிகள் கணவனின் கைச்சிறையில் சுகமாக உணர்ந்தவள், அடுத்த நொடியே ஓங்கரித்த உணர்வைத் தடுக்க முடியாமல் பயத்தோடு நின்று இருந்தாள், அவள் இரு கன்னங்களையும் பற்றியவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு,​

"ரொம்ப சந்தோஷமா இருக்கு டி! இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவே இல்லை? கொஞ்சம் பயமாகவும் இருக்கு ஆனா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!.."​

என்றபடியே அவள் முகம் பார்த்தவனுக்கு,​

அவளின் சங்கடமான நிலை உணர்ந்து,​

" என்னமா?.."​

எனக் கேட்க, அதற்கு மேல் முடியாமல் ஓங்கரித்து அவன் மேலே வாந்தி எடுத்தவள் அதிர்ந்து நிற்க, கண் மூடி, இரு கைகளையும் தூக்கி அசையாமல் இரு வினாடிகள் நின்றவன், பின்பு அதிர்வாக நின்றவளைக் கண்டு,​

"ஒண்ணும் இல்லை, இன்னும் வாந்தி வருதா?.."​

என அக்கறையாகக் கேட்க,​

இல்லையெனக் கண்ணீரோடு பதில் அளித்தவளை பார்த்தவன்,​

"ஹேய், இதுக்கு எதுக்கு அழற? போ, கிளீன் பண்ணிக்கோ, அதுக்கப்புறம் நான் கிளீன் பண்ணிக்கிறேன்"​

என்றான் தன்மையாக​

மெதுவாக நகர்ந்தவளிடம்,​

"உதவி பண்ண நானும் வரவா?"​

எனக் கேட்க,​

வேண்டாமென வேகமாகத் தலையசைத்தபடி சென்று கதவை அடைத்துக் கொண்டவளுக்கு தாங்க முடியாத கண்ணீர், கணவன் தன் அருகில் வருவது பிடிக்கவில்லை, அவனின் வாசம் தனக்கு குமட்டலையும் வாந்தியையும் ஏற்படுத்துகிறது என்று எண்ணி கண்ணீர் விட்டவள் வேகமாக வெளியேறிச் சென்றாள் தன் அத்தையைத் தேடி.​

வெளியேறிச் செல்லும் மனைவியைப் பார்த்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வர, ரேணுகாவை அனைத்து இருந்தவள் இவனைப் பார்த்து வேகமாக அவரின் பின்னே சென்று மறைந்து கொண்டாள், இவளின் செயலை விசித்திரமாகப் பார்த்தவனுக்கு அன்னையின் அதிர்ந்த பார்வை குழப்பத்தையே ஏற்படுத்தியது,​

"ஐயையோ என்னம்மா சொல்ற?"​

" ஆமா அத்தை, அவர் பக்கத்துல வந்தாலே எனக்குப் புடிக்கல, வாந்தி வாந்தியா, குமட்டிக்கிட்டு வருது."​

எனப் பாவமாகச் சொன்ன மருமகளை அவர் மட்டும் அல்லாமல், அவளின் கணவனும் அதிர்ந்து பார்த்திருந்தான், அவளின் பதிலால்.​

"ஐயையோ"​

என்று மதியின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்க, இவர்களைப் போலவே அவனோடு ரகுவரனும் அதிர்ந்து நின்றிருந்தார்கள்.​

"ஏய், என்னடி? ஏன் நான் உன்கிட்ட வந்தா உனக்குக் குமட்டுது?​

என அதிர்வாகக் கேட்டபடி அவளின் அருகே செல்ல,​

" அதானே அது எப்படி குமட்டும்"​

என மதியும் கூற​

அவள் அருகில் சென்று, அவன் கைப்பிடியில் மனைவியை வைக்க, அவன் வாடையில் மறுபடியும் ஓங்கரித்துக் கொண்டு வந்த மருமகளை கண்ட ரேணுகா வேகமாக அவளைத் தன் அருகில் இழுத்துக் கொண்டார்,​

அத்தையை அணைத்து சத்தமாகக் கண்ணீர் விட்டு அழுதவளை எப்படி சமாதானம் செய்வது என்பதே புரியவில்லை யாருக்கும்.​

அவளின் அழுகை தாங்காமல்,​

"என்னம்மா இது?"​

என பாவமாகக் கேட்ட அண்ணனைப் பார்த்த மதி, இதுக்கு ஒரே தீர்வுப் பாட்டி கிட்ட தான் இருக்கு, நான் போய் அவங்கள கூட்டிட்டு வரேன் எனக் கிளம்பினான்.​

"டேய், டேய், இந்த நேரத்துல போவது நல்லாவா இருக்கும் வயசானவங்க வேற"​

"அம்மா அதெல்லாம் நான் பாத்துக்கிறேன், அவங்களுக்கும் இந்த நல்ல விஷயத்தைச் சொல்லத் தானே செய்யணும். அதோட அங்க பாருங்க அண்ணனையும் அண்ணியையும் பார்க்கவே பாவமா இருக்கு"​

என்றபடி சென்றவனை பார்த்து, அவன் சொல்வதும் சரிதானென நினைத்த ரேணுகா, திரும்பி மாறனை பார்க்க, பாவமாகப் பார்த்து நின்றிருந்தான் தன் மனைவியை, அதே நிலை தான் பெண் அவளுக்கும்.​

சிறிது நிமிடத்தில் வந்த பாட்டியையும், தந்தையையும், அண்ணனையும் பார்த்தவளுக்கு அப்படியொரு அழுகை, அது அவர்களைப் பார்த்த ஆனந்தத்திலா? அல்லது தன்னுள் ஒரு புதிய உயிர் பூத்திருப்பதை நினைத்துப் பூரிப்பிலா? அல்லது கணவனின் அருகில் நெருங்க முடியாத துயரத்திலா? என்பது அவள் மட்டுமே அறிந்தது.​

பாட்டியைத் தாவி வந்த அனைத்து அழுதவளை முத்தமிட்டு சமாதானம் கூறி, வாழ்த்து சொல்லியவர், என்னவென்று விசாரிப்பதற்குள் அண்ணனையும் தந்தையையும் சென்று அணைத்துக் கொண்டு நின்று கொண்டாள்.​

சிரிப்போடு பார்த்திருந்தவரை வரவேற்ற ரேணுகா நிலைமையைச் சொல்ல,​

செவியேற்றவர்,​

"ஐயோ! இது மா பெரட்டு ஆச்சே!.."​

என்றார்,​

"அப்படின்னா?"​

என்ற வேகமான மாறனின் கேள்விக்கு, சிரிப்புடன்,​

"கர்ப்பம் ஆகுற பெண்கள் சிலருக்கு, கணவனின் வாடை பிடிக்கிறதில்லை, இது ஒரு வகையான மசக்கை, அந்த நேரத்தில் அவர்களுக்குக் கணவனின் அருகாமையும் பிடிக்காது வாசமும் பிடிக்காது"​

"ஐயையோ இது எப்ப சரியாகும்?"​

என்ற மதியின் கேள்விக்கு,​

"சிலருக்கு மூன்று, நான்கு மாதங்கள்வரை இருக்கும், சிலருக்கு குழந்தை பிறக்கும் வரை இருக்கும் இந்த நிலை, அதுபோல வாந்தியும் குழந்தை பிறக்கும் வரை இருக்கும், வலி வர, வர வாந்தியும் வந்து கொண்டே இருக்கும்"​

எனப் பெரிய குண்டாகத் தூக்கி போட்டார் மாறனின் தலையில்.​

அதிர்வாகப் பார்த்து நின்றவனின் மனதில்,​

'மசக்கைக்கு காரணமான நானே அவ பக்கத்துல போகக் கூடாதா? என்ன டா அநியாயம் இது! இவளுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் வருது'​

எனப் புலம்பியவனின் புலம்பல் தான் யார் காதிலும் விழவில்லை.​

"சரிமா, நாங்க கிளம்புறோம், எங்க வீட்டுக்கு வேணா கூட்டிட்டு போகட்டுமா?"​

என்று பாட்டி ரேணுகாவை கேட்க,​

வேணாம், வேணாம், இங்கேயே இருக்கட்டும், பார்த்துகிட்டாவது இருக்கேனே!"​

என்றான் அழுது விடும் தோரணையில் மாறன்.​

கணவனை விட்டுத் தன்னாலும் செல்ல முடியாது என்பதை உணர்ந்த மலர்,​

" வேணாம் பாட்டி, நீங்களும் தனியா இருக்கீங்க, நான் இங்கேயே இருக்கேன், அத்தை கூட இருக்கேன்" என்று விட்டாள்​

அவர்களும் விடை பெற்று சென்றுவிட,​

தன்னையே ஒட்டிக்கொண்டு நின்றிருந்த மருமகளை பார்த்த ரேணுகா,​

"மாறா நீ அப்பா கூடப் படுத்துக்கோ! இல்லன்னா மதி கூட அவன் ரூம்ல படுத்துக்கோ! நான் மலர் கூட உன் ரூம்ல படுத்துகிறேன்"​

என்ற படியே மருமகளை இழுத்துக் கொண்டு அவர்களின் அறை நோக்கிச் சென்ற தாயையும் மனைவியையும் பாவமாகப் பார்த்து நின்றான் மாறன்.​

"வா, ண்ணா வா, ண்ணா என் ரூம்ல நிறைய இடம் இருக்கு வா"​

என்ற படியே அண்ணனை அழைத்து சென்றான் மதி.​

வேந்தன் மகள் தாய்மை அடைந்திருப்பதை மனைவிக்குத் தெரியப்படுத்த, அவர்களோ இசையைப் பிரசவத்திற்கு அனுமதித்திருப்பதாகத் தகவல் அளித்தார்கள்.​

இசையின் மாமியார் தற்போது தான் குணம் அடைந்து லேசாக நடக்க ஆரம்பித்திருந்தார், அதனால் தாமரை, பாண்டியன் மட்டுமே மருத்துவமனையில் இருந்தார்கள்.​

இளைய மகள் தாய்மை அடைந்ததில் பெருமகிழ்ச்சி தாமரைக்கு, பெரிய மகள் பிரசவத்திற்கு உள்ளிருக்க அவளின் கதறல் வெளியில் இவருக்குப் பயத்தையும், படபடப்பையும் அதே நேரம் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது,​

இப்படி உணர்வுகள் மாறி, மாறி இருந்தது தான் இவர் உடல் நிலையைப் பாதித்ததோ!​

பிடி இருகும்....​

 
Last edited:

paasa nila

Moderator

அத்தியாயம் 24​

இசையரசிக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது, மலர்விழிக்கும் கர்ப்பம் தரித்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது.​

இன்னும் கணவனின் வாடை ஆகவில்லை பெண்ணுக்கு, அதில் கணவனுக்கு எவ்வளவு வருத்தமோ அதைவிட 100 மடங்கு வருத்தம் பெண் அவளுக்கும் இருந்தது, வெகுவாகக் கணவனின் அனை்ப்பிற்கு ஏங்கினாள் அவள்,​

ஆசையாக மனைவியை நெருங்க நினைப்பவனுக்கு பெரும் முட்டுக்கட்டையாகத் தம்பி வந்து நடுவில் நின்றான்,​

" அண்ணா, அண்ணி கிட்ட போகக் கூடாது! டேக் டைவர்ஷன்"​

என அவனைத் திருப்பி விடுவான் பெரும் சிரிப்புடன், கொலை வெறியுடன் முறைத்துக் கொண்டே இவனும் வேறு வழி இல்லாமல் ஏக்கமாக மனைவியைப் பார்த்தபடியே தம்பியின் அறையில் சென்று முடங்கி விடுவான் வெளிவராமல்.​

இதைக் கண்டு சில நேரம் அழும் பெண்ணவளை சமாதானப்படுத்தவே சரியாக இருக்கும் ரேணுகாவிற்கு,​

"எனக்கு மட்டும் ஏன் அத்தை இப்படி?"​

எனப் பாவமாகக் கேட்பவளுக்கு என்ன பதில் அளிப்பது எனப் புரியாமல்,​

"இயற்கையின் விதிமா, அது தான் சதி செய்யுது"​

என அவளைச் சமாதானம் செய்து கேலியாக ஏதாவது பேசி உண்ண, குடிக்க கொடுத்து,​

"கௌவுதமி வந்தபிறகு இன்னைக்கு நம்ம மூணு பேரும் எங்கேயாவது வெளியில் போகலாம்"​

எனச் சொல்லி, அவள் மூடை மாற்றி விடுவார் ரேணுகா.​

அவ்வப்போது, அறையில் மனைவி தனியாக இருப்பதை பார்க்கும் மாறன்,​

யாரும் அறியாமல், உள் சென்று,​

" கொஞ்ச நேரம் மூச்ச அடக்கிகோ டி! ப்ளீஸ்"​

என்றபடி அவளை வேகமாக அனைத்து, அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, அவள் குமட்ட ஆரம்பிக்கும்போது, வெளியே ஓடி வந்து விடுவான். இது, அவளுக்கும் தேவையாகவே இருந்தது.​

சில நேரங்களில் உடை மாற்ற அவர்களின் அறைக்குச் சென்று இருக்கும்போது, அவள் வரும் நேரம், அவளைப் பின் இருந்தவாறு அனைத்து அவள் கழுத்தில் வாசம் பிடித்து,​

" உனக்குத் தான் என் வாசம் பிடிக்கல? எனக்கு உன் வாசம் மட்டும் தான் பிடிச்சிருக்கு!"​

என்ற படியே அவளின் வாசத்தை நன்றாக உள் இழுத்து, அவள் அசவுகரியமாக உணரும் நேரம் எட்டி சென்று நின்று விடுவான்.​

"ஆனா இதெல்லாம் ரொம்ப அநியாயம் டி! சொந்த பொண்டாட்டிய, சொந்த ரூம்ல திருடன் மாதிரி வந்து கட்டிப் பிடிச்சுட்டு போறேன், என் நிலைமை எதிரிக்குக் கூட வரக் கூடாது"​

எனப் பாவமாகச் சொல்லிச் செல்லும் கணவனைக் கண்டு இவளுக்கும் பாவமாக இருக்கும்.​

இசையின் குழந்தையைப் பாட்டி, வேந்தன் மற்றும் இன்பா சென்று பார்த்து வந்தார்கள்.​

இசைக்குச் சுகப்பிரசவம் அல்லாமல் ஆபரேஷன் செய்திருந்ததால் அவளால் பயணம் செய்ய முடியாது என்ற மருத்துவர் களின் அறிவுரையால், இன்னும் மூன்று மாதங்கள் கழித்து தான் அவள் தாய் வீடு வர முடியும் என்ற நிலை, அவளோடு தாமரையும் இருக்க வேண்டிய சூழ்நிலை​

இசையின் மாமியாருக்கும் உடல் நிலை சரியாகாததால் அவர்களுக்கும் சங்கடமான நிலையே. அங்குத் தங்கி இருந்த இரண்டு நாட்களும் மருமகளை கவனித்திருந்த பாட்டிக்குத் தான் ஏதோ சந்தேகம், தாமரையின் உடல்நிலை சரியில்லையோ என்று மருமகளை கூப்பிட்டு விசாரித்ததில் தனக்கு ஒன்றும் இல்லை என்று சமாளித்து விட்டார் தாமரை. ஆனால் அவ்வப்போது அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டே இருந்தது அது யாரின் கண்ணுக்கும் மாட்டாமல் போனதுதான் சோகம்.​

வேந்தனுக்கும் மனைவியோடு அதிக நேரம் தனிமையில் பேசிக்கொள்ள முடியவில்லை பேசியிருந்தால் கண்டுபிடித்து இருப்பாரோ?​

சின்ன மகளைப் பற்றி மாமியாரிடமும் கணவனிடமும் விசாரித்துக் கொண்ட தாமரைக்கு தான் அவளுடன் இருக்க முடியவில்லை என்பதும் அவளைப் பார்க்க முடியவில்லை என்பதுமே பெரும் மன துயராக இருந்தது. மலருக்கும் அதே நிலைதான், பயணம் மேற்கொள்ளக் கூடாது என்ற மருத்துவரின் அறிவுரையால் அவளாலும் அன்னையையும் அக்காவையும் அவள் பெற்றெடுத்த மகளையும் பார்க்க போக முடியவில்லை.​

மேலும் இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது, கணவன் அருகாமை இல்லாமல் இருப்பது பெரும் சிரமமாக இருந்தது பெண் அவளுக்கு,​

ரேணுகா, உடன் இருந்து கவனித்துக் கொண்டார் பெற்ற தாயைப் போல, மகள் இல்லாத பெரும் குறை தீர்ந்தது அவருக்கு மருமகளின் மூலம்.​

ரகுவரனும் அவ்வப்போது இவர்களோடு சேர்ந்து கொள்வார் இவர்களின் அரட்டைக் கச்சேரியில், கௌதமியும் தோழியின் மசக்கை அறிந்து வந்து பார்த்துச் செல்பவள் பாலமாக இரு வீட்டுக்கும் இடையில் இருந்தால், பாட்டி ஏதாவது சமைத்துக் கொடுத்தால் அதைக் கொண்டு வந்து இவளிடம் கொடுத்துச் செல்பவள்,​

அவ்வப்போது மலர் இல்லாமல் இருந்தாலும் அவள் வீட்டிற்கு சென்று அங்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் செய்து கொடுத்துக்கொண்டிருந்தாள், அவர்கள் இவளை மகள்போல் பார்த்ததை மறவாமல்.​

இசையின் மாமியாருக்கு இப்பொழுது நன்றாகவே நடக்க முடிந்தது, யார் துணையுமின்றி தன் வேலைகளைச் செய்து கொள்ளவும் ஆரம்பித்து இருந்தார்,​

குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா நடத்தி பின் இசையைத் தாமரை யுடன் அவர்கள் வீட்டிற்கு அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டது.​

அதற்கான ஆயத்தங்கள் ஆரம்பிக்க, மறுபடியும் பரபரப்பாகச் சென்றது நாட்கள், தாமரைக்கு இளைய மகளைச் சென்று பார்க்கப் போகும் சந்தோஷமும், பெரிய மகளைக் குழந்தையுடன் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப் போகும் பரபரப்பும் இணைந்து கொள்ள, கிட்டத்தட்ட சில மாதங்களுக்குப் பின்பு தன் கூடு செல்லப் போகும் ஆனந்தமும் சேர்ந்து கொள்ள, அன்று குழந்தையைக் குளிப்பாட்டி கொண்டு வந்து மகளிடம் கொடுத்தவர் மயங்கிச் சரிந்தார்.​

குழந்தைக்கு ஆடை மாற்றிக் கொண்டிருந்தவள், அமர்ந்திருந்த தாய் மயங்கிச் சரிவதைக் கண்ட இசை அதிர்வோடும், பயத்தோடும்,​

" அம்மா, அம்மா என்னாச்சு மா? அத்தை இங்க வாங்க, சீக்கிரம் யாராவது வாங்க!"​

எனக் குழந்தையை ஒரு கையில் வைத்துக் கொண்டு தாயை பிடித்தவாறு உலுக்கி கொண்டிருந்தாள்.​

மருமகளின் சத்தம் கேட்டு ஓடி வந்த பத்மாவதி,​

"அய்யய்யோ! என்ன ஆச்சு மதினி? மதினி என்ன ஆச்சு?"​

என்றபடி அவருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து பார்க்க, எந்த அசைவும் இல்லாமல் இருந்த தாமரையை கண்டு பயம் பிடித்துக் கொண்டது அவருக்கும்,​

விடாமல் அழும் மருமகளையும் அவள் கையில் இருக்கும் குழந்தையும் பார்த்தவர் யாரை சமாதானம் செய்வது என்பது தெரியாமல் அதிர்ந்து நிற்க, அப்போதுதான் வயல்வெளியிலிருந்து வீட்டிற்கு வந்த பாண்டியன் நடக்கும் கலவரங்களில் ஒன்றும் புரியாமல் முழித்தவன், பின்பு நிலைமையின் விபரீதம் புரிந்து வேகமாகத் தாமரையை மருத்துவமனையில் அனுமதித்தான்.​

மருமகளை குழந்தையோடு வீட்டில் விட்டு இவனோடு வந்த பத்மாவதி,​

"ஐயோ! என் வீட்டு பேத்தியையும் மருமகளையும் பார்த்துக்க வந்தவங்க, இப்படி மயங்கிக் கெடக்குறாங்களே! யாருக்கு என்ன பதில் சொல்ல முடியும் நாம"​

என்ன புலம்பியபடியே இருந்தார் மருத்துவமனையில்.​

இவரின் புலம்பலைக் கேட்ட பாண்டியனுக்கும் குற்ற உணர்வாக இருந்தது, தன் தாயையும், மனைவியையும், மகளையும் பார்த்துக் கொள்ள வந்த மாமியாரை தான் சரியாகக் கவனிக்கவில்லையோ என,​

தாமரையை பரிசோதித்து, வெளிவந்த மருத்துவரை வேகமாக அணுகிய பாண்டியன்,​

" எப்படி இருக்காங்க டாக்டர்?​

எனக் கேட்க​

"அவங்களுக்கு நுரையீரலில் நிறைய சளி கட்டி இருக்கு, நோய் தொற்றும் ஆகி இருக்கு, மூச்சு விடச் சிரமப்படுறாங்க, ஆக்சிஜன் லெவல் கம்மியானதால தான் மயக்கம் போட்டு விழுந்து இருக்காங்க,​

கொஞ்ச நாளாகவே இருக்கு போல, சரியான டிரீட்மென்ட் எடுக்கல, இப்போ ஒன்னும் சொல்ல முடியாது, மேற்கொண்டு தொற்று ஆகாமல் இருக்க வேண்டும், அது குறைந்தால் தான் எதுவும் சொல்ல முடியும்"​

என்ற படியே அவரை ஐசியூ வில் அனுமதித்திருப்பதாகக் கூறிவிட்டு சென்றார்.​

என்ன செய்வது எனத் தெரியாமல் இடிந்து அமர்ந்திருந்தவன், பார்த்தது வேகமாகத் தந்தையோடு வரும் மனைவியைத் தான்.​

வேகமாகச் சென்று அவள் கையில் இருக்கும் குழந்தையை வாங்கிக் கொண்டவன் அனைவாக அவளை அனைத்த படி, அன்னையின் அருகே வர​

"என்ன ஆச்சு ங்க? அம்மா எப்படி இருக்காங்க? "​

என அழுதபடியே கேட்டவளிடம், என்ன சொல்வது எனத் தெரியாமல் தயங்கி நின்றவன், தந்தையும் அவனைக் கேள்வியாகப் பார்ப்பதை கண்டு, மருத்துவர் சொல்லிச் சென்ற அனைத்தையும் கூற,​

" ஓ "​

எனப் பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தாள் இசையரசி.​

அடுத்து என்ன செய்வது என்பதே புரியாத நிலை அவனுக்கு,​

"அவங்க வீட்டுக்குத் தகவல் சொல்ல வேண்டுமே பா"​

எனக் கூறிய தந்தையை ஏறிட்டுப் பார்த்தவன், ஆமோதிப்பாகத் தலை அசைத்து விட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சென்றான்.​

முதலில் யாரிடம் கூறுவது என்பது புரியாமல் இன்பாவிற்கு அழைக்க,​

விஷயத்தைக் கூறியதும், ஆண் என்றும் பாராமல் சத்தமாக அழ ஆரம்பித்தவனை என்ன சொல்லிச் சமாதானம் செய்வது என்பது புரியாமல் துண்டித்து விட்டான் அழைப்பை.​

ஏற்கனவே அம்மா இல்லாமல் வெறுமையாக உணர்ந்திருந்தான் இன்பா, அவரை வெகுவாகத் தேடவும் ஆரம்பித்து இருந்தான், ஒற்றை மகனாக இவன்மீது அதிக பாசம் தாமரைக்கு, இவனுக்கும் அதே அளவு தாயின் மீது பாசம் இருந்தாலும் அதை அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான், பாட்டி மற்றும் தாயிடம் ஒரே அளவு அன்பை கொண்டிருந்தான்.​

காலை எழுந்ததிலிருந்து ஏனோ மனமும் உடலும் சரியில்லை மலர்விழிக்கு,​

குமட்டல் வந்தாலும் பரவாயில்லையெனக் கணவனை அணைத்துக்கொள்ள வெகுவாகத் தேடியது மனது, ஏதோ நடக்க இருப்பதாக உள் மனது கூறிக் கொண்டே இருக்க, அது பெரும் பயத்தை ஏற்படுத்தியது பெண்ணவளுக்கு,​

இப்படி மனம் பயப்படும் போதெல்லாம் விரும்பத் தகாத ஏதேனும் விஷயம் நடந்திருக்கு அவளுக்கு,​

இதற்கு மேல் தாளாமல் கணவனைத் தேடி மதியின் அறைக்குச் சென்றவள், அவன் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருப்பதை கண்டு அவன் அருகில் சென்றாள் மெதுவாக,​

அரவம் கேட்டுத் திரும்பிப் பார்க்க, முகத்தில் தன் தாவணியை மாஸ்காகக் கட்டி இருந்த பெண்ணைப் பார்த்தவனுக்கு சிரிப்பாக வந்தது.​

"என்னடி இது?"​

என அவன் சிரித்துக் கொண்டே கேட்க, வேகமாக வந்து அவனை இறுக்கி அணைத்துக் கொண்டவளுக்கு பெரும் கேவல், மனைவியின் திடீர் அனைப்பையும், அழுகையையும் கண்டவனுக்கு பெரிதாகப் பயம் பிடித்துக் கொள்ள, அவனும் இறுக்கி அணைத்துக் கொண்டே​

"என்னடி ஆச்சு? எதுக்கு அழுகிற? உடம்பு சரியில்லையா? எங்கேயாவது வலிக்குதா? "​

எனப் பரபரப்பாகக் கேட்டான், ஒன்றும் சொல்லாமல் அமைதியாகத் தலையாட்டி விட்டு அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள்,​

"ரொம்ப பயமா இருக்கு!"​

என்றளிடம்,​

"ஏன்"​

எனப் புரியாமல் கேட்டவன், ஆதுரமாக அவள் தலையை தடவிக் கொண்டிருக்க,​

எதுவும் கூறாமல் மேலும் அவனை இருக்கி கட்டிக் கொண்டு சிறிது நேரம் நின்றவள், அதற்கு மேல் முடியாமல் வேகமாக அவனை விட்டு வெளியேறிச் சென்றாள.​

தலையும் புரியாமல் வாழும் புரியாமல் பார்த்தவனை கலைத்தது பாண்டியனிடமிருந்து வந்து அழைப்பு.​

கேட்ட செய்தியில் திக்பிறமை பிடித்து நின்று விட்டான் சிறிது நேரம், ஒன்றும் தெரியாமலேயே இப்படி அழுது விட்டுச் செல்லும் மனைவியைப் பார்த்தவனுக்கு, இந்த விஷயம் தெரிந்தால் அவள் என்ன ஆவாளோ! என்ற பயம் பிடித்துக் கொள்ள, அவள் வயிற்றில் இருக்கும் தன் குழந்தைக்கும் அவளுக்கும் எதுவும் நேர்ந்து விடக் கூடாது என்பதே பிரதானமாக இருந்தது.​

மெதுவாக வெளியில் வந்தவன் மனைவியைத் தேட அவள் தோட்டத்தில் நின்று கொண்டிருப்பதை பார்த்தவன் தாயிடமும் பள்ளிக்குக் கிளம்பி கொண்டிருந்த தந்தையிடமும் மதியிடமும் வேகமாக விஷயத்தைச் சொல்ல, அவர்களுக்கும் பெரும் அதிர்வு, விஷயத்தைக் கேட்ட மதி​

" நான் போய் இன்பாவ பார்க்கிறேன்!"​

என்ற படியே வேகமாக வெளியேறிச் சென்றான். நண்பனின் கவலை அவனுக்கு.​

ரகுவரனும் பள்ளிக்கு விடுமுறை கூறப்போவதாகச் சொல்லிவிட்டு,​

"மலர் கிட்ட இப்ப எதுவும் சொல்ல வேண்டாம், நீ போய் என்னன்னு பாரு மாறா? நானும் உன் கூட வரேன்"​

என்ற படியே அவரும் வெளியேறிச் சென்றார் மாறனுடன் மலர்விழியின் வீட்டிற்கு.​

இவர்கள் இருவரும் சென்ற நேரம் வீடே அமைதியாக இருக்க, இன்பாவின் அழுகை சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது, மதி அவனை அனைவாகப் பிடித்திருக்க,​

கண்களில் நிறைந்து விட்ட கண்ணீரோடு இடிந்து போய் அமர்ந்திருந்த இள வேந்தனையும் பேரணையும் சமாதானம் செய்துகொண்டிருந்தார் பாட்டி, அவர் சற்று தைரியமாகவே இருந்தார்,​

"ஒன்னும் ஆகாது தாமரைக்கு, அவ நல்லபடியா குணமாகி வருவா, தைரியமா இருங்க ரெண்டு பேரும்"​

என்ற படியே அதட்டிக் கொண்டிருந்தார் இருவரையும்.​

பாட்டியின் தைரியத்தில் இவர்களும் சற்று பலம் பெற்றவர்களாக உள்ளே சென்றார்கள் மாறனும் ரகுவரனும்.​

மருமகனைப் பார்த்தவர் வேகமாக எழுந்து மகள் வருகிறாளா? எனப் பார்த்தபடியே,​

" மலர் எங்கே?"​

எனக் கேட்க,​

" அவ கிட்ட சொல்லல மாமா"​

என்ற படியே வந்து அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான் மாறன்,​

" நல்லது தான், இப்ப எதுவும் சொல்ல வேண்டாம்?"​

என்றவர்,​

" இன்பா! நீ பாட்டிய கூட்டிகிட்டு ஊருக்குப் போ! நான் நாளைக்கு வரேன்"​

என்றார்.​

" ஏம்பா தனியா இருந்து என்ன செய்யப் போற? நீயும் வா எங்களோட" என்றார் பாட்டி,​

" இல்லம்மா, இங்க கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன், ஒரு கல்யாண வீட்டுக்காரங்க பாத்திரம் எடுக்க நாளைக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க நானும் இல்லாம இன்பாவும் இல்லாம அவங்களுக்கு பாத்திரங்களைக் கொடுக்க முடியாமல் போய்விடும், அதனால நீங்க இன்னைக்கு கிளம்புங்க நான் நாளைக்கு வரேன்"​

என்றவரைப் பார்த்தவர்,​

" சரி"​

என்றார் சம்மதமாக.​

ஏதேனும் ஏற்பாடு செய்துவிட்டு அவரும் செல்லலாம். ஆனால், ஏனோ மனைவியைச் சென்று அப்படி காண தைரியம் வரவில்லை அவருக்கு.​

"அண்ணா, நானும் இவங்களோட போறேன்"​

என்றான் மதி.​

சரி என்ற மாறன் அவர்கள் கிளம்புவதற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தான், ஊரிலிருந்து பாட்டியின் துணைக்காக வந்திருந்த பெண்மணி வீட்டிலிருந்து வேந்தனை பார்த்துக் கொள்வதாக உறுதி கூற, சிறு நிம்மதியோடு கிளம்பினார் பாட்டி.​

ஏனோ மலரிடம் சொல்லாமல் செல்ல மனம் வரவில்லை பாட்டிக்கு, பக்குவமாகத் தானே அவளிடம் சொல்வதாகக் கூறியவர், கிளம்பி சென்றார்கள் அனைவரும், அங்கிருந்தே ரயில் நிலையத்திற்கு செல்வதாக முடிவு செய்து,​

பாட்டியைப் பார்த்தவள் வேகமாக வந்து அவரை அணைத்துக் கொண்டு,​

"வாங்க பாட்டி"​

என்று வரவேற்று அழைத்துச் சென்றவள், தந்தையும், அண்ணனும் கூடவே மாறனும், மதியும், ரகுவரனும் வருவதை கண்டவளுக்கு, ஏனோ சுருக்கென்று நெஞ்சில் பயம் ஏற்பட்டது,​

அலுவலகம் செல்லாமல் கணவனும் இவர்களோடு இருப்பதை கேள்வியாக நோக்கி, அண்ணனின் கைகளில் பயணப் பொதிகளையும் கண்டவள்,​

"என்ன ஆச்சு?"​

என்றாள் பயத்துடன்,​

"ஒன்னும் இல்லம்மா? ஒன்னும் இல்ல? பதறாதே, உட்காரு"​

என்றபடி அவளை அருகே அமர வைத்த பாட்டி, ரேணுகாவையும் தன் அருகில் இருத்திக் கொண்டார்,​

"பயப்படக் கூடாது சரியா! அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லையாம்"​

என்றதும்,​

" ஐயையோ! என்னாச்சு அம்மாக்கு? எப்படி இருக்காங்க? நீங்க எல்லாம் அங்க தான் போறீங்களா? நானும் வரேன்"​

என்றபடி வேகமாக ஏழ முற்பட்டவளை, அமர வைத்தவர்,​

" இங்க பார், நானும் இன்ப அண்ணனும் போறோம் எங்க கூட மதி தம்பியும் வராங்க, நாங்க போய்ப் பாத்துட்டு தகவல் சொல்றோம், அம்மாக்கு ஒன்னும் ஆகாது, சரியா! நீ தைரியமாக இருக்கணும், குழந்தை இருக்கு வயித்துல, ஞாபகம் இருக்கு இல்ல"​

என்றார் சற்று அதட்டலாக, அது சிறிது வேலை செய்தது மலருக்கு,​

"அம்மாவுக்கு ஒன்னும் இல்லல்ல?"​

என்ற படியே பாவமாகத் தந்தையை பார்த்தவள், கை நீட்ட வேகமாக வந்து மகளை அணைத்துக் கொண்டார், இளவேந்தன்,​

வெகுநாட்களுக்குப் பிறகு மகளை அனைத்து இருப்பது அவருக்கும் மகளுக்கும் சேர்த்தே கண்ணீரை வரவழைத்தது.​

அவள் உச்சந்தலையில் அழுத்தமாக முத்தமிட்டவர்.​

"ஒன்னும் ஆகாதுடா குட்டி! நான் இங்கதான் இருக்கேன், பாட்டி தான் போறாங்க, சரியா!"​

என்ற படியே மகளைச் சமாதானம் படுத்த, வண்டி கூப்பிட சென்ற மதியும் வண்டியுடன் வர, நேரம் ஆகிவிட்டதை உணர்ந்தவர்கள் விடை பெற்று சென்றார்கள்.​

தோட்டத்தைத் தாண்டிச் சென்ற பாட்டி, பேத்தியின் கலங்கிய முகம் கண்டவர், என்ன நினைத்தாரோ! மீண்டும் அவளிடம் வந்து, அவளைக் கட்டிப்பிடித்து அவள் நெற்றியில் முத்தமிட்டு தலையில் கை வைத்து,​

"நல்லா இருப்ப, உன் மனசுக்கு நல்ல இடத்துல வாக்கப்பட்டு இருக்க! உனக்கு எந்தக் குறையும் வராது, நீண்ட வருடங்களுக்குச் செல்வமா, ஆரோக்கியத்தோட நீயும் உன்னோட கணவனும், வாரிசுகளும், உன்னோட குடும்பமும் நலமா இருப்பீங்க!"​

என்ற படியே அவளை ஆசீர்வதித்து விட்டு, ரேணுகாவின் அருகில் வந்தவர்,​

"சின்ன பொண்ணு பாத்துக்கோங்க"​

என்ற படியே மாறனை திரும்பி பார்த்தவர்,​

அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு,​

" உங்களை எல்லாம் நம்பித்தான் என் பேத்தியை விட்டுட்டு போறேன், நீங்க நல்லா பாத்துப்பீங்க என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு, மனசு ரொம்ப நிறைவா இருக்கு, நல்லா இருங்க"​

என்றபடி அவன் தலையிலும் பேத்தியின் தலையிலும் ஒன்றாக கை வைத்து சொன்னவர், கண்ணீரை சிமிட்டிய படியே வேகமாக நகர்ந்து சென்றார்.​

ரேணுகாவுக்கும், மலருக்கும் மாறனுக்குமே கண்ணில் நீர் துளிர்விட்டது.​

அவர்களை வழி அனுப்ப மாறனும் ரகுவரனும், வேந்தன் உடன் சென்றார்கள் ரயில் நிலையத்திற்கு.​

அன்னையைச் சென்று பார்க்கும் வரை மனம் நிலை இல்லாமல் தவித்தது இன்பாவிற்கு,​

பார்த்தவனுக்கு பெரும் அதிர்வு, முகத்தில் சுவாசத்திற்காகக் குழாய் அணிவித்து கைகளில் நரம்பு கிடைக்காமல், கால் நரம்பில் ஊசி ஏற்றி அதன் வழி குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது.​

இவர்கள் சென்ற நேரம் இரவாக இருந்தாலும், அன்னையை உடனே சென்று பார்க்க வேண்டும் என்ற துடிப்பில் மருத்துவமனைக்கு சென்றவர்களுக்கு, உடனே சென்று தாமரையை பார்க்க முடியவில்லை,​

அங்கு விபத்தினால் ஒருவரை அப்போதுதான் அனுமதித்து இருக்க, கூட்டத்தைக் கடந்து செவிலியர்கள் இவனையும், பாட்டியையும் தாமரையை பார்க்க அனுமதி தர மறுத்துவிட்டார்கள்.​

திறந்திருந்த கதவின் வழியாக, தன் அன்னை எதிர் படுக்கையிலேயே படுத்திருக்க, பார்த்தவனுக்கு தாள முடியவில்லை.​

விபத்தில் காயமுற்றவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அது பலன் அளிக்காமல் அவர் இறக்க, கூட்டத்தையும் அழுகையும் சமாளிக்க முடியாமல் மருத்துவமனையில் உள்ளவர்கள் அனைவரையுமே வெளியேற்ற, இவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்.​

மறுநாளே இன்பாவும், பாட்டியும் தாமரையை சென்று பார்க்க முடிந்தது, தன் வீட்டார்களைப் பார்த்ததும் அப்படியொரு மகிழ்ச்சி அவருக்கு,​

"அப்பா வரலையா? நல்லா இருக்காங்களா?​

மலர் நல்லா இருக்காளா? அவள விட்டுட்டு வந்துட்டீங்களா?"​

என்ற தொடர் கேள்விக்குப் பின் பாட்டியைப் பார்த்தவர்,​

"நீங்க ஏன் வந்தீங்க?"​

என்று மாமியாரைப் பார்த்து கேட்டவர்,​

நீ எப்படி இருக்க?"​

என்ற படி மகன் மற்றும் பாட்டியின் கைகளை அழுந்தப் பிடித்துக் கொண்டவருக்குக் கண்ணீர். தன் உறவுகளை பார்த்து விட்ட மகிழ்வில்.​

"நாங்க எல்லாம் நல்லா இருக்கோம்! நீங்க எப்படிம்மா இருக்கீங்க? ஏன் இப்படி?என்ன ஆச்சு? முடியலன்னு சொல்லி இருக்கலாம்ல்ல.​

எனக் கண்ணீரோடு கேட்க,​

அதைப் பார்த்தவர்,​

"எனக்கு ஒன்னும் இல்ல, நல்லா இருக்கேன்!"​

என்றார், அவன் கன்னத்தை தடவியவாறு​

"நரம்பு தான் கிடைக்கலை, எல்லா இடத்திலும் குத்தி, குத்தி, குத்தி அதுதான் ரொம்ப வலிக்குது"​

என்றவரை பார்த்தவனுக்கு கண்ணீர் வழிந்தது, கோபமாகச் செவிலியரிடம் திரும்பியவன்,​

" எதுக்கு கால்ல குத்தி இருக்கீங்க?"​

எனக் கேட்க​

"நரம்பு கிடைக்கல? அதான்"​

என்றார் மெதுவான குரலில்.​

" அதுக்கு கால்ல குத்துவிங்களா? பர்மிஷன் கேட்டீங்களா அதுக்கு?​

என கோபப்பட,​

"நரம்பு கிடைக்கலன்னா, நான் என்ன சார் செய்றது"​

என்ற படியே நழுவி சென்று விட்டார் மெதுவாக.​

மறுநாள் சற்று தேறியவரை, ஐ சி யு விலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற, அதுவே பெரும் நிம்மதியாக இருந்தது அனைவருக்கும்.​

இவரின் சுக செய்தியை மலருக்கும் வேந்தனுக்கும் தெரியப்படுத்திக் கொண்டே இருந்தான் மதியழகன்.​

மதியம் இவருக்காக பாட்டி, தன் கையால் சமைத்து, ரசம் சாதமும், தொவையலும் கொண்டு வர, இன்பா, ஊட்டி விட்டான் தாய்க்கு,​

"அப்பா! இப்பதான் நல்லா இருக்கு! வாய்க்கு இதமா, நாக்குக்கு ருசியா இருக்கு!"​

எனக் கூறிக்கொண்டு ரசித்து உண்டவர்.​

மருந்துகளை உட்கொண்டு கண்ணயர்ந்தார்.​

தாமரையின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் வருவதை கண்ட பாட்டி, நிம்மதியுடன் மதியோடு, இசையின் வீட்டை நோக்கிச் செல்ல, இன்பா தாயுடன் தங்கி கொண்டான்.​

சற்று நிம்மதியுடன் தாயைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, நிம்மதி பெருமூச்சு. அவனும் சற்று தளர்வாக சாய்ந்து அமர, சிறிது நேரத்தில், அவர் தூக்கத்தில் சத்தமாகப் பேசுவதை கண்டவன், யோசனையுடன் அவர் அருகில் விரைந்து சென்று,​

"அம்மா, அம்மா"​

என்று அவரை மெதுவாக உலுக்கியபடி,​

"என்ன கனவு கண்டீங்களா?"​

என்று பயத்துடன் கேட்க​

" அப்படித்தான் போல!"​

என்ற படியே மறுபடியும் உறக்கத்திற்கு சென்றவர், திரும்பவும் சத்தமாகப் பேச ஆரம்பித்தார், அவர் பேச்சுக்கள் முழுவதும்,​

இசையின் குழந்தையுடன் அவர் இருந்ததையும், மலரைச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையையும், மலர் தாய்மையுற்று இருப்பதை நினைத்து மகிழ்ந்தவாரே அவளுக்கு பிடித்ததை சமைத்து தர வேண்டும் என்றும், இன்பாவிற்கு அடுத்து பொண்ணு பார்க்கணும், என்ற அவரின் பேச்சுக்கள் பயத்தை கொடுத்தது இன்பாவிற்கு.​

விரைவாக மருத்துவரைச் சென்று அழைத்து வந்தவனிடம்,​

"குணமாகி வரும் நேரத்தில் இப்படி உளறுவது சரியல்ல"​

என இடியை தலையில் இறக்கிய மருத்துவர்,​

மறுபடியும் அவரை ஐசியூவில் சேர்ப்பதாகக் கூறிச் சென்றார்.​

அதன் பிறகு தாமரையின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லவே இல்லை,​

மூச்சுத் திணறல் அவருக்கு ஏற்பட வென்டிலேட்டர் என்ற சாதனம் பொருத்தப்பட்டது அவருக்கு.​

சிறிது நேரம் கழித்து வெளிவந்த மருத்துவர், மூளையின் செயல் திறன் குறைந்து வருவதாகவும், வெண்டிலேட்டரின் உதவியுடன் தான் அவரின் உயிர் ஓடுகிறது என்பதைக் கூறிவிட்டு,​

" எதுவும் சொல்வதற்கு இல்லை, யாரிடமும் சொல்ல வேண்டும் என்றால் சொல்லி விடுங்கள்"​

எனக் கூறிச் செல்ல, அப்போதுதான் தாயைப் பார்க்கப் பாட்டியுடன் வந்து இசை மயங்கிச் சரிந்தாள் கணவனின் மீதே.​

மதியம் தன் கையால் சமைத்த உணவை உண்டு, வாய்க்கு ருசியாக, நன்றாக இருப்பதாகக் கூறிய மருமகள் இப்படி உபகரணங்களோடும், இருந்தும், இல்லாமல் மூச்சுக்கு சிரமப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்த பாட்டிக்கு நெஞ்சு விண்டு விடும் போல் வலித்தது.​

இன்பாவின் கதறலை கட்டுப்படுத்த முடியவில்லை மதியால், வேகமாக அண்ணனுக்கு அழைத்தவன் அனைத்தையும் கூறி வேந்தன் இடமும் சொல்லிவிட்டு, அனைவரையும் அழைத்துக் கொண்டு வருமாறு கூறிய தம்பியின் செய்தியை அதிர்வோடு கேட்டவனுக்கு என்ன செய்வது என்பதே புரியாத நிலை.​

பெரும் துயரத்துடன் வீட்டிற்கு வந்தவன், தாய் தந்தையிடம் சொல்லிவிட்டு மனைவியிடம் பக்குவமாகக் கூறுமாறு அன்னையை ஏவியவன். மாமனாரை பார்க்கச் சென்றான், அவரிடமும் பக்குவமாக விஷயத்தைக் கூறியவன் அனைவரும் ஒன்றாக அவனின் காரில் கிளம்பலாமெனக் கூற, கர்ப்பஸ்திரியை அழைத்துக்கொண்டு இரவில் பயணிக்க வேண்டாமெனக் கூறிய வேந்தன் தான் மட்டும் முன்னதாகப் பஸ்ஸில் செல்வதாகக் கூறி அவனுடனே சென்று ஏறிக்கொண்டார் பேருந்தில்,​

மாமனாரை பேருந்தில் ஏற்றிவிட்டு வந்தவனுக்கு மனைவியின் கதறலே காதில் விழுந்தது, அவனின் பக்கத்தில் வராமல் பாவமாக அவனைப் பார்த்துக் கதறியவளிடம், துயரமான பார்வையுடன், லேசான தலையசைப்பை கொடுத்து,​

காலையில் நேரமாகக் கிளம்புவோம் என்ற படியே வேகமாகத் தம்பியின் அறைக்குள் சென்றுவிட்டான், மனைவி அழுவதை காண முடியாமல்.​

பின்னிரவு ஊர் வந்து சேர்ந்த வேந்தனை, பாண்டியனும் அவன் தந்தையும் பஸ் ஸ்டாப் சென்று அழைத்து வந்தார்கள். மருத்துவமனையில் வேந்தன் கண்டது கடைசி நிமிடங்களில் இருந்த மனைவியைத் தான், அவரை அனைத்து நின்றிருந்த மகனிடம் திரும்பியவர்,​

"இப்படி இருப்பான்னு! நான் நினைக்கலையே! குணமாகி வந்துடுவான்னு தானே நினைத்தேன்"​

என்றவர் கண்ணீர் குரலில்,​

"குணமாகி வருவாளா? இல்ல பெரும் பயணம் புறப்பட்டுடுவாளா?"​

என குமுறி அழுக,​

சிங்கமாக நின்ற தந்தையின் அழுகையை தாங்க முடியாமல் கதறி அழுதான் இன்பா.​

"வென்டிலேட்டர் எடுத்துவிட்டால் முடிந்துவிடும்"​

எனக் கூறிய மருத்துவர்களிடம், ஆவணச் செய்யும்படி கூறிவிட்டு தளர்வாக அமர்ந்த வேந்தனுக்கு,​

விடியலில், இடியாக வந்து சேர்ந்தது பாட்டியின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்து விட்டது என்ற செய்தி.​

அதீதமான மன உளைச்சலும், மருமகளின் நிலையும், மகனை நினைத்து வருத்தமும் அவரை மீள முடியா தூக்கத்திற்கு இட்டுச் சென்றது.​

இன்பாவை, அனைத்தையும் முடித்து, தாமரையின் உடலை வாங்கி வரச் சொல்லிவிட்டு,​

வேந்தனை , இசையின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற மதியால் வீட்டில் கேட்ட ஒப்பாரி சத்தம் தாள முடியவில்லை. பாட்டியின் மீது விழுந்து புரண்டு அழுது கொண்டிருந்த இசைக்குத் தாயும் சற்று நேரத்தில் உயிரற்று வரப்போவதை தாங்க முடியவில்லை,​

வேந்தனைக் கண்ட இசையின் மாமியார்,​

"மன்னிச்சிடுங்க ஐயா! உங்களுடைய ரெண்டு உயிரும் எங்க வீட்ல வந்து பிரியணுமா?"​

என அவர் கைப்பிடித்து அழ,​

இது இறைவனின் சித்தம், யார் மீது குற்றம் சொல்ல, என்றார் அவரும் கண்ணீரை அடக்கியபடி,​

தந்தையை கண்ட இசை ஓடிச் சென்று அவரை அணைத்துக் கதற, மகளை அனைத்து பிடித்தவாறு,உயிரற்ற தன் தாயின் அருகே சென்றவருக்கு பீறிட்டு கிளம்பியது கண்ணீர்.​

ஊரை நெருங்கும் வேலையில் தான் இப்படி இரண்டு உயிர் பிரிந்ததை பற்றிய தகவலை அண்ணனுக்குக் தெரியப்படுத்தினான் மதி,​

அதிர்ச்சியில் காரை நிறுத்தியவன், வேகமாக மனைவியைத் திரும்பிப் பார்க்க, அழுது அழுது ரேணுகாவின் மடியில் தூங்கி இருந்தாள் அவள்.​

என்ன? என்று அதிர்வாகக் கேட்ட தாய், தந்தையிடம் மெதுவாக விஷயத்தைக் கூற அவர்களுக்கும் சொல்ல முடியாத துயரம்.​

வீட்டின் அருகே நெருங்கி விட்டவர்களுக்கு, மலரை நினைத்தே பெரும் கவலை.​

பந்தலும், சத்தமும் வேறு கதை சொல்ல அதிர்ந்து பார்த்த மலருக்குக் காரை விட்டு இறங்கவே முடியவில்லை.​

அதிர்ந்து நின்று இருந்த மனைவியைக் கைப்பிடியில் அழைத்துச் சென்ற மாறனின் மணம், பயத்திலும் அதிர்விலும் இருந்த பெண்ணுக்கு எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை. உள் சென்று தாயையும் பாட்டியையும் பார்த்துப் பெருங்குரல் எடுத்து அழுதவள்,​

"இதுக்கு தான் என்னை விட்டுட்டு வந்தீங்களா ரெண்டு பேரும்? இதுக்கு தான் என்னை ஆசீர்வதிச்சீங்களா பாட்டி? என் குழந்தையை யார் பார்த்துப்பா? என்னை யார் பார்த்துப்பா? அப்பாவை யாரு பார்த்துப்பா?​

"அதெல்லாம் முடியாது! நீங்க வாங்க அம்மா, பாட்டி நீங்களும் வாங்க, நம்ம வீட்டுக்குப் போயிடலாம், வந்துடுங்க ம்மா, வந்துடுங்க பாட்டி"​

என கதறியவள் அம்மாவின் அருகில் சென்று அவர் கன்னத்தில் கை வைத்து,​

அம்மா! என் வயித்துல பாப்பா இருக்கு உங்களுக்கு தெரியும் தானே, இப்படி நீங்க செய்யலாமா? என்கிட்ட எதுவுமே சொல்லலையே நீங்க! நீங்க இல்லாம நாங்க எப்படி இருப்போம், அப்பா எப்படி இருப்பாங்க உங்கள விட்டுட்டு? ஏன்மா?"​

என்றபடியே அருகில் அழுது கொண்டிருந்த அண்ணனை பார்த்து,​

"பாவம் அண்ணா! நீங்க ரெண்டு பேரும் இல்லாம அவன் என்ன செய்வான்"​

எனக் கதறியவளை தடுக்கத்தான் யாருக்கும் முடியவில்லை,​

"அப்பா"​

எனத் தந்தையை ஓடிச் சென்று அணைத்தவளுக்கு பெரும் கேவல், பேச முடியாமல் திணறியவளை, அவர் சமாதானம் செய்ய வேண்டிய நிலை, கர்ப்ப நிலையும், மன உளைச்சலும், பயண அலைச்சலும் சேர,​

அதீத அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்தாள் கணவனின் மீது.​

அதன் பிறகு வேகமாக அனைத்தும் நடந்தேறியது.​

அனைத்தும் முடிந்து இன்றோடு இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. பெரும் துக்கத்தில் அழுது, அழுது துவண்டு இருந்த மனைவியை அனைத்து கைவளைவில் வைத்துக் கொள்ள முடியாத தன் நிலையைப் பெரிதும் வெறுத்தான் மாறன்.​

பிடி இருகும்....​

 

paasa nila

Moderator

அத்தியாயம் 25​

கடையில் அமர்ந்தபடி போக வர இருக்கும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டிருந்த இளவேந்தனுக்கு கவனம் இங்கு இல்லை, தாயாரும் மனைவியும் இறந்து மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது, மிக வேகமாகவே ஓடுகிறது காலம்.​

அவரைப் போலவே அருகில் அமர்ந்திருந்த இன்பாவுக்கும் கவனம் இங்கு இல்லை, காலமாகிவிட்ட தாயையும், பாட்டியையும் நினைக்காத நேரமில்லை, நினைக்க நினைக்கக் கண்ணீர் கொட்டியது அவனுக்கு. அவர்களின் இடத்தை யாரைக் கொண்டு நிரப்புவது என்பதே பெரும் ஏக்கமாக இருந்தது.​

தாய் மற்றும் மனைவியின் சாங்கியங்கள் முடிந்த பின் ஊர் வந்த இவர்களோடு இசையரசியும் வந்துவிட்டாள் மகளைத் தூக்கிக் கொண்டு, அவள் குழந்தையின் முகம் பார்த்தே, இவர்களும் தங்கள் துக்கத்தை சற்று குறைக்க முயன்றார்கள்.​

முயலத்தான் செய்தார்கள் ஆனால் முடியவில்லை அது,​

மூன்று மாதங்கள் உடனிருந்து இசையும் இன்று காலைத் தான் அவள் கணவன், வீட்டுக்குச் சென்றாள். அவளும் எத்தனை நாள் தான் கணவனை விட்டு வந்து இருக்க முடியும், மருமகன் வந்து அழைத்துச் செல்வதாகக் கூற இவருக்கும் எதுவும் சொல்ல முடியவில்லை. அதுவும் அல்லாமல் பிள்ளை பெற்றவளையும் சிறு குழந்தையும் பார்த்துக் கொள்வதும் லேசான காரியம் இல்லையே.​

வீட்டில் இருந்த சொந்தக்கார பெண்ணிற்கு இதைப் பற்றி அவ்வளவு தெரிந்திருக்கவில்லை, அங்கே இசையின் மாமியார் அனைத்தையும் பார்த்துக் கொள்வார். எனவே தன் துயரங்களை மறைத்துக் கொண்டு, சீர்வரிசைகளுடன் மகளையும் பேத்தியையும் அனுப்பி வைத்தார் அவர்கள் வீட்டிற்கு.​

சீர்வரிசைகளை மறுத்த மருமகனிடம் இதுவே தனக்கு சந்தோஷம், எனக் கூற, அவரின் வார்த்தையை மறுக்க முடியவில்லை அந்த மருமகனால்.​

இசை இருந்த வரைக்கும் மலரும் அவ்வப்போது வந்து சென்றுகொண்டிருந்தாள், ஆனால் அவளை இங்கே தங்க விடுவதில்லை அவளின் மாமியார், தாயைப் போலத் தாங்கிக் கொண்டார் மருமகளை,​

அந்த வகையில் இளவேந்தனுக்கு மகிழ்வு தான் மகள்களின் புகுந்த வீடு அவர்களைத் தாங்கிக் கொள்வதில், மகள்களின் மீது இருந்த இவரின் பிடி நல்லோர் கைச்சேர்ந்ததில் இவருக்கு மிகுந்த திருப்தி.​

மலருக்கும் விரைவில் 9 மாதங்கள் வரப்போகிறது. அவளுக்கும் பூ முடிப்பு செய்ய வேண்டும் என்ற நினைவு மனதில் ஓடிக்கொண்டே இருந்தது, மனைவி இருந்திருந்தால் இந்நேரத்திற்கு அதற்கான ஆயத்தங்களை செய்திருப்பார் என்ற பெரும் மூச்சு தான் அவரிடம், தாயும் மனைவியும் இல்லாமல் போனாலும் அவர்களிடத்திலிருந்து சிறப்பாகவே இந்த வைபவத்தை செய்ய நினைத்திருந்தார்.​

ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவரை​

"அப்பா"​

என்ற குரல் கலைத்தது‌.​

பெரிய டிபன் கேரியருடன் வந்து நின்றாள் கௌதமி,​

"இங்க என்னமா பண்ற?"​

"மணி என்னன்னு பாத்தீங்களா? மூணு மணி ஆகப்போகுது"​

"உங்கள பாக்குறதுக்கு வீட்டுக்குப் போனா, நீங்கச் சாப்பிட வரவே இல்லன்னு வீட்ல இருக்குற ஆன்ட்டி சொன்னாங்க, அதுதான் குடுங்கன்னு, நான் உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு கொண்டு வந்தேன்"​

என்ற படியே கொண்டு வந்துவைகளை அங்கிருந்த டேபிளில் அடுக்க ஆரம்பிக்க,​

" நீ ஏம்மா இதெல்லாம் செய்ற? படிக்கிற புள்ளை எதுக்கு அலைஞ்சிகிட்டு இருக்க?"​

" அப்பச் சரியான நேரத்துக்கு நீங்க வீட்டுக்கு வந்து இருக்கணும் சாப்பிட! நான் இப்படி சாப்பாட தூக்கிட்டு வரக்கூடாதுன்னா, நீங்களும் சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க"​

என்ற படியே, இன்பாவை பார்த்தவள்,​

"அப்பா வயசானவங்க, சரியான நேரத்துக்குச் சாப்பிடணும்னு உங்களுக்கும் தெரியாதா? நீங்களும் அவங்க கூடச் சேர்ந்து இப்படி உட்கார்ந்து இருந்தா எல்லாம் சரி ஆயிடுமா? "​

எனக் கடிந்து கொண்டே, கொண்டுவந்தவைகளை பரிமாற,​

அவள் கூற்றில் இருந்த உண்மை மனதில் அறைய, அமைதியாகவே சாப்பிட அமர்ந்தான் இன்பா,​

"சரிமா இனி சரியான நேரத்துக்கு வீட்டுக்கே வந்து சாப்பிடுறோம்! நீ இப்படி அலையாத"​

என்ற படியே உன்ன ஆரம்பித்தவர்களை பரிவாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.​

தன்னை மகளாகப் பாவித்த அந்தக் குடும்பத்திற்கு, தான் செய்யும் சிறிய நன்றி கடனாகவே நினைத்தாள் கௌதமி.​

தன் வீட்டில் சோபாவில் படுத்துக் கொண்டிருந்த மலருக்கு, தமக்கை அவள் புகுந்த வீடு சென்றதில் மகிழ்வும் சிறு வருத்தமும்.​

தந்தையும் தமயனும் தனியாக இருப்பார்களே என்ற கவலை, தாயும் பாட்டியும் இல்லாத வீட்டுக்குத் தன்னால் செல்ல முடியாத மனநிலை.​

தமக்கை இருந்தபோது நடந்தவைகளை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்,​

மாறன் வேலை விஷயமாக இரண்டு நாள் பயணமாக வெளியூர் சென்றிருக்க, இசையும் இன்பாவும் மிகுந்த ஆசையாகக் கேட்க மலரும் தங்குவதற்கு சம்மதித்தாள்,​

தன் கணவனிடமும், மாமியாரிடம் அனுமதி கேட்டுக்கொண்டு, தன் அறையில் தனியே படுக்க முடியாமல் வேந்தனுடன் அவர்களின் அறையில் படுத்துக்கொண்ட பெண் அவளுக்குத் தாயின் நினைவு அதிகமாக இருந்தது,​

மகள் தன் அருகில் படுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார் வேந்தன்,​

ஏற்கனவே பஞ்சு மெத்தையாக இருந்த மெத்தையின் மேல் மீண்டும் ஒரு புசுபுசுவென இருக்கும் போர்வையை விரித்து அனைவாகத் தலையணையை வைத்துச் சிறு குழந்தைகளைப் படுக்க வைப்பது போல் ஏற்பாடு செய்திருந்தார் வளர்ந்து விட்ட தன் மகளுக்கு.​

அப்பாவின் ஏற்பாடுகளைக் கண்டு மகிழ்ச்சியும், பெருமிதமும் ஆக அவரின் அருகில் படுத்துக்கொண்ட மலர், தூக்கத்திலேயே பதறிப் பதறி இரண்டு மூன்று முறை விழிக்க மிகவும் பயந்து விட்டார் வேந்தன், தாயின் நினைவில் அவருக்கான தேடலில் தூக்கம் இல்லாமல் பயந்து பதறியவளை தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்துக்கொண்டிருந்தார் வேந்தன், தான் தூங்காமல்.​

அதன் பிறகு அவளை, அவர் அங்குத் தங்க வைக்க அனுமதிக்கவில்லை. மற்ற பிள்ளைகள் ஆசைப்பட்டாலும் காலை வந்து இரவு சென்று விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார், கர்ப்பமாக இருக்கும் பெண் அவளுக்கு இவ்வளவு பதட்டமும் பயமும் கூடாது என்று நினைத்தவராக.​

தாயின் வீட்டிற்கு முதலில் வரப் பயப்பட்ட மலர், பின் அண்ணனும் அக்காவும் வருந்தி அழைத்தபின் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வந்து சென்றாள் கணவனுடன்.​

முதலில் சற்று தயங்கினாலும், தந்தை இருப்பதினால் அவர்களின் அறைக்கு இயல்பாகவே வர முடிந்தவளால் பாட்டியின் அறைக்குள் செல்ல முடியவில்லை.​

அவர் அரைவாசல் வரை செல்பவள் அதற்கு மேல் கால் வைக்க முடியாமல் அழுதபடியே திரும்பி விடுவாள், அவரின் மடிக்கும் தலைக்கோதலுக்கும் ஏங்கியது பெண் மனது.​

கோமதி பாட்டி மற்றும் தாமரையின் நகைகளை மூன்று பிள்ளைகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டார் வேந்தன், பாட்டியின் புடவைகளில் ஆளுக்கு ஒரு புடவையாக எடுத்துக் கொண்டு மற்றவைகளை இல்லாதவர்களுக்குக் கொடுத்தவர்கள், தாயின் புடவையைத் தங்களுக்கு சமமாகப் பிரித்து எடுத்துக் கொண்டார்கள், இன்பா, தனக்கு வரவிருக்கும் மனைவிக்காக அம்மாவின் பட்டுப் புடவைகளில் மூன்றை எடுத்துக் கொள்ள, நிறைவுடனே கொடுத்தார்கள் பெண் பிள்ளைகளும்.​

வேந்தன் அம்மா மற்றும் மனைவியின் புடவைகளில் ஒன்றை தனக்கென எடுத்துக் கொண்டு செல்வதை கண்ணீருடன் பார்த்து நின்றார்கள் பிள்ளைகள் மூவரும்.​

தன் சிந்தனையில் உழன்றவள் அப்படியே உறங்க, அப்போதுதான் வேலையிலிருந்து வந்த மாறன் அனாதரவாக உறங்கும் மனைவியை கண்டு மனம் பரிதவித்தான்.​

இன்னும் கணவனின் மனம் ஒவ்வாமை கொடுத்துக் கொண்டுதான் இருந்தது அவளுக்கு, இவனும் அவ்வப்போது அவளை அனைத்து முத்தமிட்டு வேகமாக நகர்ந்து விடுவான். அப்படியான ஒரு நாளில், அவளை அனைத்து முத்தமிட்டு நகர்ந்தவன்,​

"எல்லோருக்கும் குழந்தை பிறந்த பிறகுதான் அம்மா கிட்ட இருந்து அப்பாவைப் பிரிக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன், ஆனால் என் புள்ள உருவான உடனேயே என்னை உங்கிட்ட இருந்து பிரிக்குது டி, அனேகமாக இது பையனா தான் இருக்கும்னு நினைக்கிறேன்"​

"வெளியில் வரட்டும் முதல் வேலையா, எங்க அம்மாகிட்ட தூக்கிட்டு போய்க் கொடுத்துட்டு உன்ன கடத்திட்டு போறது தான் என் வேலை"​

"ஹேய் ஜூனியர் வெயிட் அண்ட் வாட்ச்"​

என அவனின் வயிற்றின் அருகே வந்து குனிந்து கூறிவிட்டு அழுத்தமாகத் தன்னவளுக்கும் தன் ஜூனியருக்கும் சேர்த்தே முத்தமிட்டு நகர்ந்தான்.​

அவன் சொல்லிச் சென்றதை பாவமாகக் கேட்டு நிற்கும் பெண் அவளுக்குத்தான், என்ன செய்வது என்பதே புரியாத நிலை.​

அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, மகளின் சீமந்தம் பற்றிப் பேசி முடிவெடுக்க இன்பாவுடன் வீட்டில் இருக்கும் உறவுக்கார பெண்ணையும் அழைத்துக் கொண்டு மலர் விழியின் வீட்டை நோக்கிச் சென்றார் இளவேந்தன்.​

சென்றவர்களுக்கு ஆரவாரமான வரவேற்பு தான் அனைவரிடமிருந்தும்,​

இன்பாவை கண்ட மதி வேகமாக வந்து அவனை அனைத்து பிடித்தவாறு,​

"என்னடா? எப்படி இருக்க? ஆளையே பார்க்க முடியல?"​

எனக் கேட்க,​

"என்னைப் பார்க்க முடியல? உன்ன தாண்டாப் பிடிக்க முடியல?​

உன்னைத் தேடி ரெண்டு தடவை வந்தேன், உன் பைக் வெளியில இல்லைன்னு திரும்பப் போயிட்டேன்"​

எனக் கூறும் நண்பனைச் சங்கடமாகப் பார்த்தவன்,​

" இல்லடா, ரொம்ப வேலை அதான் சாரி"​

என​

"டேய் இதுக்கு எதுக்கு சாரி, பரவால்ல விடு"​

எனபடியே அமர்ந்தான் சோபாவில்.​

தந்தையின் அருகில் அமர்ந்து அவர் கைகளைப் பிடித்துக் கொண்ட மலருக்குத் தாயும் பாட்டியும் இல்லாத வெறுமை மனதில் அறைந்தது.​

அவளையே பார்த்துக் கொண்டிருந்த மாறனுக்கும் அவளின் வேதனை புரிய, நிலைமையைச் சரியாக்க​

"அப்புறம் மாமா, பிசினஸ் எல்லாம் எப்படி போகுது?​

எனப் பேச்சை வளர்க்க,​

" எல்லாம் நல்ல போகுது மாப்பிள்ளை!"​

என்ற படியே ரேணுகா கொண்டு வந்து கொடுத்த தேநீரை அருந்த ஆரம்பித்தார்.​

ரேணுகாவையும் ரகுவரனையும் பார்த்தபடி,​

"மலருக்குச் சீமந்தம் பண்ணனும், அதைப் பத்தி பேசலாம்னு வந்தேன்"​

"அதுக்கு என்ன அண்ணா, சிறப்பா செஞ்சிடலாம்"​

"இன்னும் ரெண்டு நாள்ல ஒன்பது மாசம் தொடங்கிடும் இல்லையா?"​

இப்போதும் மகளின் அனைத்து கணக்குகளும் அவரின் கைவிரலில் தான்.​

"அதுதான் நாள் குறிக்கலாம்னு வந்தோம்"​

எனக்குக் கூறியவரிடம்,​

"அண்ணா சொல்றேன்னு தவறா நினைச்சுக்க வேண்டாம், சீமந்தம் செய்து சாங்கியத்துக்கு ஒரு நாள் மலர் அங்கு இருக்கட்டும், மற்றபடி பிரசவம் வரைக்கும் அதற்குப் பின்பும் கூட இங்கேயே இருக்கட்டும்"​

எனத் தயங்கியபடியே கூறிய ரேணுகாவை பார்த்தவர்,​

"எனக்குப் புரியுதுமா அங்கேயும் பார்த்துக்க பெருசா யாரும் இல்ல, இவங்களுக்கும் பக்குவம் நிறைய தெரியாது, நீங்கத் தான் மகளைப் போலப் பார்த்துக் கொள்கிறீர்களே, எனக்கு வேற என்ன கவலை"​

என்றார் சிரிப்புடன்.​

ஆனால் அந்தச் சிரிப்பில் உயிர்ப்பு தான் இல்லை,​

பக்குவம் கேட்டு உறவினர்கள் தன் வீட்டுக்கு வந்த நிலை போக, இன்று தன் பிள்ளைக்கு பக்குவம் பார்க்கவே ஆளில்லை என்ற நிலை, அவரை வருத்தியது. அன்னையும் மனைவியும் இருந்தால் இது எவ்வளவு பெரிய விசேஷமாக நடக்கும் என்ற கவலை தான் அவருக்கு, ஆனாலும் அவர்கள் இடத்திலிருந்து மிகச் சிறப்பாகவே செய்ய நினைத்திருந்தார் இளவேந்தன்.​

எங்கு வைப்பது? என்று வைப்பது? யார் யாரை அழைப்பது? என அனைத்தையும் பேசி முடித்து அவர்களுக்கு இரவு உணவையும் கொடுத்தே வழி அனுப்பினார் ரேணுகா.​

திட்டமிட்டபடி அடுத்த பத்து நாட்களில் மலர்விழியின் சீமந்தம் இனிதே நடைபெற்றது, தாயும் மனைவியும் இல்லாத குறை மகளுக்குத் தெரியாத வகையில் அனைத்தையும் சிறப்பாகவே செய்திருந்தார் வேந்தன்,​

மகளின் கைகளில் நான்கு மரகத வளையல்களோடும் இடம் அடைத்த சீர்களோடும்,​

இவருக்குப் போட்டியாக மாறனும் இரு தங்க வளையல்கள் உடன் மனைவியை அவளின் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.​

செல்லும் முன் கணவனிடம் தனிமையில் போய் வருவதாகக் கூறி வருமாறு உறவுக்கார பெண்கள் கூறி சிரிக்க,​

அங்கு இருந்த அறைக்குப் போக முற்பட்ட மாறனின் குறுக்கே வந்த மதி,​

"கிட்ட போகக் கூடாது, டிஸ்டன்ஸ் மெயின்டேன் பண்ணனும்"​

எனச் சிரிப்புடன் கூறிய தம்பியை, முறைத்தபடியே மனைவி இருந்த அறைக்குள் சென்றான் மாறன்.​

அறையினுள் நுழைந்து கதவை அடைத்தவன் கண்டது,​

கண்ணாடியின் முன் நின்று பிள்ளை கொண்ட வயிற்றை தடவியபடியே இருந்தவளைத்தான்.​

தன்னைதானே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கணவனின் வாசம் வேண்டும் போல் இருந்தது.​

ஏக்கத்தோடு கண்ணாடியை நிமிர்ந்து பார்த்தவளின் பார்வையில் விழுந்தது, இரு கைகளையும் கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்த படி தன்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த கணவனை தான்.​

கண்ணாடியூடு அவனைப் பார்த்துக் கொண்டே, அவனுக்குக் கேட்கும் வகையில், மெதுவாக​

"ஒன் முதுக தொலைச்சு வெளியேற, என்ன கொஞ்சம் இருக்கு என்னவனே..."​

"ம்ம்ம்... அதுக்கு, நீ முதல்ல என்னெ உன் பக்கத்துல விடனும்."​

என்றான் நக்கலாக.​

"வாயி மேல வாய வெச்சு."​

"ம்ம்ஹூம்"​

"வார்த்தைகளை உறிஞ்சி புட்ட."​

"ஆஹான்"​

"வெரல வெச்சு, அழுத்தின கழுத்துல​

கொழுத்தின வெப்பம் இன்னும் போகல."​

"இதெல்லாம் எப்ப நடந்ததுன்னு மறந்து போச்சு டீ எனக்கு. எப்பவோ கனவுல நடந்த மாதிரி இருக்கு"​

என்றான் ஏக்கத்தோடு.​

"உசுர் ஒன்னோட இருக்கையில."​

"ஹும்ம். அப்புறம்"​

என்றான் சிறிது வெட்கத்துடன்​

"நான் மண்ணோடு போவதேங்கே!"​

"ஏய்.."​

என்று கோபமாகச் சப்தமிட்டபடி நெருங்கினான் ஒரே எட்டில் அவளை​

"என் சீவனே நீ இல்லையா.."​

என்றவளின் குரல் தேவுங்க,​

மாற்றிப் பாடியவளை பார்த்தபடி நின்றிருந்தான்... அவளின் சூழ் கொண்ட வயிறு இடிக்க, மிக அருகில்​

"கொல்ல வந்த..."​

என்று அவள் துவங்கியதை இவன் முழுங்கியிருந்தான்​

அவள் பின்னங்களுத்தை பிடித்துத் தன் புறமாக இழுத்து அவள் கூறியது போல அவளின் வார்த்தைகளை உறிஞ்ச ஆரம்பித்தான்​

அழுத்தமாகவும், வேகமாகவும்..​

பெண் அவளுக்கு வேண்டிய கணவனின் வாசத்தை நன்றாக உள் இழுத்துக் கொண்டாள்..​

இப்பொழுது அவளுக்கு எந்த ஓங்கரிப்பும் இல்லை.​

கணவனின் வாசமும் உயிர் மூச்சும் இன்னும் இன்னும் வேண்டும் போல் இருந்தது​

தன் இரு கைகளையும் அவன் முதுகில் படர விட்டு இவள் ஆசைப்பட்டது போல அவன் முதுகில் துளையிட்டு செல்வதைப் போல இருக்கி அனைத்திருந்தாள் தன்னவனை.​

வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த தன்னவளின் ஸ்பரிசத்தில் மூழ்கி இருந்தவன், கதவு தட்டும் ஓசை கேட்டே விலகினான் வெட்கத்துடன்,​

தன் வாசம் மனைவிக்கு எந்த அசவுகரியத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை தெரிந்து கொண்டு சந்தோஷத்துடன் அவளை வழி அனுப்பி வைத்தான் அவளின் தந்தை தமக்கை மற்றும் அண்ணனுடன்.​

செல்லும் மனைவியை பார்த்தவனுக்கு நேற்று நடந்தவைகள் தான் நினைவில்,​

நாளை சீமந்தம் என்ற நிலையில் மனதில் அதற்கு உண்டான மகிழ்வு இல்லாமல் ஏனோ வெறுமையாக அறையில் தனியே அமர்ந்திருந்தவளை சென்று பார்த்தவன்,அவளின் அருகே செல்லாமல் ஒரு நாற்காலியை போட்டு உட்கார்ந்து கொண்டான்.​

"என்ன ஆச்சு? ஏன் டல்லா உட்கார்ந்து இருக்கே?​

என கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள்,​

" அம்மாவையும் பாட்டியையும் ரொம்ப தேடுது"​

என்றாள் விசும்பிக் கொண்டே, அவளின் மனத் துயரங்கள் வெளிவரட்டும் என அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்தவள்,​

"அக்காக்கு மட்டும் பாட்டியும், அம்மாவும் கூடவே இருந்தாங்க, எனக்கு யாருமே இல்ல?"​

என்றவள் வேகமாக,​

" அத்தை என்னை நல்லதான் பார்த்துக்கிறாங்க, இருந்தாலும்"​

என்றாள், தயக்கமாக எங்கே கணவன் தன்னை கோபித்துக் கொள்வானோ, அவனின் தாய் மகளைப் போல அவளை பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில்,​

அவள் தயக்கம் உணர்ந்து கண்மூடி மேலும் பேசுமாறு தலையசைத்து ஊக்குவிக்க,​

"அம்மா எனக்கு எல்லாம் சமைச்சு கொடுத்திருப்பாங்க,அம்மா செய்ற உருளைக்கிழங்கு பொரியல் சாப்பிடணும் போல இருக்கு, பாட்டியோட மடில படுத்துக்கணும், அவங்க தலையை தடவுறது சுகமா இருக்கும்,அப்படியே தூங்கணும், பாட்டி செய்து தர கருப்பட்டி தேங்காய் பால் பாயசம் குடிக்கணும்"​

"அப்பா தான் எனக்கு ரொம்ப உயிருன்னு நெனச்சிட்டு இருந்தேன், ஆனா அம்மாவும் ரொம்ப ரொம்ப உயிருன்னு இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன்‌."​

"என் குழந்தையை அவங்க பாக்காமலே போய்ட்டாங்க இல்ல,​

வயிறு ரொம்ப அரிக்குது, ஏன் இப்படி ஆகுதுன்னு? அம்மாகிட்ட கேட்கணும்,​

அவங்க கர்ப்ப காலம் எப்படி இருந்ததுன்னு தெரிஞ்சுக்கணும்? இன்னும் கொஞ்சம் சமையல் கத்துக்கணும் பாட்டி கிட்ட, இப்படி திடீர்னு ரெண்டு பேரும் ஒண்ணா போவாங்கன்னு தெரிஞ்சிருந்தா அவங்க ரெண்டு பேருக்கும் தெரிந்ததை எல்லாம் எழுதி வச்சிருந்திருப்பேனே"​

என்றபடி முகத்தை மூடி பெருங்குரல் எடுத்து அழுதவளை என்ன செய்வது என தெரியாமல் பார்த்து இருக்க,இவளின் குரலில் வேகமாக உள்ளே நுழைந்த ரேணுகா தாவி அனைத்து கொண்டார் மருமகளை நெஞ்சோடு. அவரும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார் மருமகளின் ஏக்கத்தை கண்ணீரோடு.​

"அத்தை! அத்தை! நீங்க என்ன நல்லா பாத்துக்குறிங்க! என்னை தப்பா எடுக்காதீங்க!"​

என கேவலோடு சொன்னவளை புரிந்து கொண்டதாக அவளை இருக அனைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டவர்,​

"அம்மா இடத்துக்கு என்னால வர முடியாது, அம்மா பாசம் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது, நான் அதை அனுபவிச்சதில்ல"​

"ஆனால் முயற்சி பண்ணுவேன், என்னால உன்னை எவ்வளவு பாத்துக்க முடியுமோ அவ்வளவு பார்த்துப்பேன், உனக்கு என்ன வேணுமோ எங்கிட்ட கேளு"​

என்ற படியே அவளை மேலும் தன்னோடு இறுக்கிக் கொண்டார் ரேணுகா.​

எப்படியோ மனைவியின் மனதில் இருந்த துயரங்களை அவளை பேச வைத்து வெளிக்கொண்டு வந்ததில் சிறிது ஆசுவாசமாகவே உணர்ந்தான் மாறன்.​

கணவனின் மணம் ஆகாமல் இருந்தவளுக்கு அதற்குப் பின் அவனின் மணம் மட்டுமே வேண்டும் என இருந்தது, அதிர்ச்சியாகப் பார்த்த மதியழகனை வம்பிழுப்பது இப்போது மாறனின் முறையாக இருந்தது.​

ஒரு விடியலில் லேசாக வலி வந்த உடனேயே மருத்துவமனையில் சேர்ப்பிக்க,தாய்க்கு மிகவும் சிரமம் கொடுக்காமல், சேர்த்த சில நிமிடங்களிலேயே வீறிட்டு அழுது கொண்டே வந்து பிறந்தான் மாறன் மற்றும் மலர்விழியின் மகன்.​

மனைவியின் ஜாடையில் பிறந்த பேரனைப் பார்த்து அலாதி இன்பம் வேந்தனுக்கு, தன் தாயின் ஜாடையில் மகன் இருப்பதில் மிகுந்த மகிழ்வு மாறனுக்கு, தன் மகனை உரித்து வைத்த ஜாடையில் பிறந்த பேரனைக் கண்டு பேரானந்தம் ரேணுகாவிற்கு, தன் தந்தையின் ஜாடையில் குழந்தை இருப்பதில் அளவு கடந்த சந்தோஷம் ரகுவரனுக்கு, தன் நண்பன் இன்பாவின் ஜாடையில் குழந்தை இருப்பதாக மதியும், மதியின் ஜாடையில் குழந்தை இருப்பதாக இன்பாவும் என ஆளாளுக்கு கூறிக்கொண்டு மகிழ்வில் திளைத்தார்கள்.​

இரு குடும்பத்திற்குமே குழந்தையின் வரவு பெரும் வரமாக இருந்தது, அதிரன் எனக் குழந்தைக்குப் பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.​

வேகமான இரு வருடங்களும் முடிந்திருந்தது,​

குழந்தை பிறந்து இரு மாதத்தில்,​

மலரையும் குழந்தையையும் பார்க்க வந்திருந்த கௌதமியிடம்,​

"கௌவ்வு, இன்பா அண்ணன கல்யாணம் கட்டிக்கிறியா டி ?"​

எனக் கேட்க,​

"ஹேய், லூசு உளறாமல் இரு"​

என்றவளிடம்,​

"நெஜமா தாண்டி கேட்கிறேன், மதி அண்ணனையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்ட, இன்ப அண்ணணையாவது கல்யாணம் பண்ணிக்கோ டி "​

"மதி அண்ணாக்கு சொன்ன அதே காரணம் தான், இன்பா அண்ணன நான் கல்யாணம் பண்ணா, மாறன் மாமா எனக்கு அண்ணன் ஆயிடுவாரு, அய்யய்யோ என்னால் அதை தாங்க முடியாதுப்பா"​

என்றவளை,​

"எருமை! எருமை! "​

என முதுகில் மொத்தியவளிடம் இன்பாவை அண்ணனாக பார்ப்பதாக கூறி,​

"ஏன் கல்யாணம் ஆனாதான், அப்பாவையும், அண்ணாவையும் நான் பார்த்துக்க முடியுமா? கல்யாணம் ஆகலனா கூட மகளா எனக்கு இந்த வீட்ல உரிமை இருக்கு நான் பாத்துப்பேன் நீ கவலைப்படாம இரு"​

எனக்கூறி சென்று விட்டாள் கௌதமி.​

அதன் பின், இசையரசியின் மாமியாரின் தூரத்து உறவினர் பெண்ணை இன்பாவிற்கு மணமுடித்து, அவனும் மகிழ்வோடு ஒரு வயது பெண் குழந்தையோடு வாழ்கிறான், மாமனாரையும் கணவனையும் நன்றாக கவனித்துக் கொண்டு, அவ்வப்போது வீட்டிற்கு வரும் நாத்தனார்களையும் இன்முகத்துடனே வரவேற்று அவர்களோடு நல் உறவை ஏற்படுத்திக் கொண்டாள் இன்பாவின் மனைவி கவிதா.​

தாய் மற்றும் மனைவியின் மறைவுக்குப் பிறகு மிகவும் ஓய்ந்திருந்த வேந்தன், அவ்வப்போது தான் கடைக்கு செல்கிறார்.​

அன்று காலை உணவை முடித்து கடைக்குக் கிளம்ப எழுந்த வேந்தன் மயங்கிக் கீழே விழ அவசரமாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறி அதிர்ச்சி அளித்தனர் மருத்துவர்கள்,​

அவருக்குச் சுகர், பிபி என்ற எந்த நோயும் இல்லையேயெனப் பரிதவித்த பிள்ளைகளிடம், வயதின் காரணமாக இப்படி வரலாமெனக் கூறிச் சென்ற மருத்துவர்கள், அவருக்கான மருத்துவம் பார்க்க ஓரளவு தேறி குணமாகி வீடு வந்தார் வேந்தன்,​

தந்தைக்கு உடல் நலம் இல்லாமல் இருப்பதை அறிந்து இசையருசியும் இவர்களோடு வந்து தங்கி இருக்க, மலர்விழியும் கணவனோடும் குழந்தையோடும் தினமும் வந்து பார்த்துச் சென்றாள் தந்தையை.​

இவரைப் பார்க்க வரும் மலரின் கைகளை இறுக பிடிக்கும் தந்தைக்கு, அவ்வளவு மகிழ்வு மகள்கள் மற்றும் மகனின் வாழ்வு சிறந்திருப்பதில்.​

மருத்துவமனையிலிருந்து வந்து ஒரு மாதம் கடந்திருக்க, அதன் பின்னான ஒரு நாளில் அதிக காய்ச்சலில் உடல் நலம் குன்றி மூன்று நாட்களில் நினைவு இல்லாமல் உயிர் துறந்தார் இள வேந்தன்.​

அவர் இறக்கும் தருவாயில் பிள்ளைகள் மூவரும் உடன் இருக்க அப்போதும் மலரின் கையை இறுக பிடித்திருந்தார் வேந்தன்.​

தந்தையின் காரியங்கள் அனைத்தும் முடிந்து அழுது அழுது ஓய்ந்திருந்த மனைவியிடம் வந்த மாறனுக்கு மனம் தாளவில்லை, அவளை அனைத்து பிடித்தவன்,​

"இங்க பாரு, இப்படி அழுதுகிட்டே இருந்தா போனவங்க திரும்ப வந்துடுவாங்களா? போனவங்களை நினைச்சு உடம்பு கெடுத்துக்காத"​

என்றவனிடம்,​

"எனக்கு யாருமே இல்ல? எல்லாருமே போயிட்டாங்க"​

என்றவளிடம் வேகமாக,​

நான் இருக்கேனே டி! உன்னையே நினைச்சுகிட்டு உனக்காகவே இருக்கேனே! அதிரன் இருக்கானே! மறந்துட்டியா?"​

"உன்ன மகளாகப் பாத்துக்குற எங்க அம்மா இருக்காங்க, அப்பா இருக்காங்க."​

"அழுதா? போனவங்க திரும்ப வந்துடுவாங்கன்னா சொல்லு, நானும் உன் கூடச் சேர்ந்து அழுகிறேன்"​

உங்க அம்மா இல்லாம உங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார், இப்ப துயரம் இல்லாம அவரும் போயிட்டாருன்னு சந்தோஷப்பட்டுக் கோ.. எல்லோரும் ஒருநாள் போக தான் போறோம், அதை நினைச்சு மனச தேத்திக்கோ..​

என்று கூறியவன், ஆதங்கத்துடன் அணைத்துக் கொள்ள.​

அவன் கூற்றில் இருந்த உண்மை புரிய மனதை தேற்றிக்கொண்டு,​

அவன் மார்பில் புதைந்து இருக்கி கொண்டவள்​

நிமிர்ந்து, கண்களில் கண்ணீரோடும் குறையாத காதலோடும் கணவனைப் பார்த்தவள் எம்பி அவன் நெற்றியில் முத்தமிட்டு சிரிக்க,​

"இப்படி எல்லாம் எனக்கு வேணாம்"​

எனக் கூறியவன், அவள் இதழ் நோக்கிக் குனிய,​

வெட்கத்தோடு கண்களை மூடியவள் உணர்ந்தது கணவனின் இறுகிய பிடியையே,​

நெகிழ்வோடு அவனின் பிடியில் விரும்பியே நின்றவள் மனதில், தன் தந்தையின் பாசப்பிடி பிழையாகவில்லை! என்ற மகிழ்வே நிறைந்திருந்தது.​

பிடி கைச்சேர்ந்தது.​

 

NNK-15

Moderator
வாவ்..கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.வாழ்ல்லேக்கள்ரைட்டரே..பாச பிடி எப்பவுமே பிழை ஆகாது.. வாழ்த்துக்கள்.
 

paasa nila

Moderator
வாவ்..கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.வாழ்ல்லேக்கள்ரைட்டரே..பாச பிடி எப்பவுமே பிழை ஆகாது.. வாழ்த்துக்கள்.
உங்களின் அழகான விமர்சனத்திற்கு மிக்க நன்றி கதையின் தலைப்பை அழகாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்
 
Status
Not open for further replies.
Top