எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மை நேசத்தில் பெய்யும் வான்வளம்! - கதை திரி

Status
Not open for further replies.

NNK - 05

Moderator

நறுமுகை நிலாகாலம் 02 போட்டிக்கான கதை "வான்மை நேசத்தில் பெய்யும் வான்வளம்!" கதைக்கான அத்தியாயங்கள் இங்கு பதிவிட படும்.

NNK - 05

Moderator
வணக்கம் தோழமைகளே,

நான் உங்கள் நறுமுகை நிலா ஐந்து.
நறுமுகை நிலாகாலம் 02 போட்டியில் கலந்து கொள்ள போகும் ஒரு குட்டி பங்களிப்பாளர்.

இன்று முன்னோட்டங்கள் பதியும் நாள் என போட்டி விதிமுறைபடி நானும் என் கதை முன்னோட்டத்துடன் வந்திருக்கிறேன்.

கதை தலைப்பு: வான்மை நேசத்தில் பெய்யும் வான்வளம்!

முன்னோட்டம்:01

“ஆஆ.. என்ன விட்டுரு நான் தெரியாம பண்ணிட்டேன். இனி இந்த பக்கம் வர மாட்டேன். என்னை மன்னிச்சிடு..” என ஒருவள் கதற,

“அன்னைக்கும் இதே மாதிரி தானே பண்ண.. அப்போ யாரும் என் அருகனை நம்பாம அவனை தான் குற்றம் சொன்னாங்க.. ஆனா இப்போ அப்படி கிடையாது..”

“ஏன்னா அவனை யார் நம்பலன்னாலும் நான் நம்புறேன். என் அன்பன் என்னைக்கும் தவறு செய்ய மாட்டான்.” என கூறி கொண்டே அவள் அவளை ஓங்கி மிதித்தாள் வயிற்றில்.

அவள் மிதியில் வலியில் துடித்தவளோ, “நீயும் ஒரு பொண்ணு தானே..” என முனங்கிட,

“ஆஹான்.. நான் பொண்ணு தான் ஆனா என் அன்பன் விஷயத்தில் நான் இராக்கதி..” என்று கர்வமாய் கூறியவள் மீண்டும் ஒன்று உதைக்க,

அவளின் கர்வத்திலும் உதையிலும் கீழே இருந்தவள் நிலையோ ரணத்தின் உச்சம்.

“இனி நீ திரும்ப வந்தீன்னா என்ன வரதை பத்தி யோசிச்சா கூட நான் உன்னை வதம் செய்துடுவேன்.” என அவள் சினங்கொண்ட கேசரியாய் கர்ஜிக்க,

அவளின் கர்ஜனையில் அந்த பளிங்கு கட்டிடமே ஒரு நிமிடம் ஆட்டங் கொண்டது என்றால் மிகையில்லை.

அது அங்கு கூடியிருக்கும் அனைவரின் உள்ளத்திலும் ஒரு வித திகிலை பரவ செய்தது ஒருத்தனை தவீர,

அந்த ஒருவன் ஆசிகத்திலோ தன் ஆருயிர் இகுளை என செருக்கு வந்து அமர்ந்தது.

அவளை உதைத்து அடித்து முடித்தவள், “குமரா” என உரக்க அழைக்க,

அங்கேயே நின்றிந்தவன் அவள் அழைப்பில் ஓடி வந்து அவளை காண, தன் கண்பார்வையை கீழே பதிக்க அதை புரிந்தவன் இரத்ததில் குளித்திருப்பவளை அகற்றும் பணியில் இறங்கினான்.

ஒரு நிமிடம் தன் விழிகளை முடி திறந்து நிதானம் வந்தவள் அவனை பார்க்க,

தன் வேகநடையில் வந்து அவளை மனநிம்மதியோடு தன்னுள் இறுக்கி கொண்டான்.

அவன் அணைப்பில் அவள் ஆசுவாசம் ஆனாளோ இல்லையோ ஆனால் அவன் ஆனான்.

“ரொம்ப..ரொம்ப லவ் இனி” என அவள் நுதலில் இதழ் பதிக்க,

அதில் சிலிர்த்தவள், “மீ டூ..” என்றாள்.

******

“ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சொன்னீங்க அம்மணி?”

“உங்களை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லை அதனால சொன்னேன்.” என்றாள் எங்கோ பார்த்து கொண்டு,

“அப்போ என்னை பிடிச்சிருக்கு..” என கேட்க,

“உங்களை இப்பவும் எனக்கு பிடிக்கும் பாசமுள்ளவரா ஆனா கணவனா இல்ல..”

“ஓஓ.. ஏன் அப்படி?”

“தெரில..”

“ஓஓ.. அப்போ என்னை கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை..”

“ஆமா..அதையே எத்தனை தடவை தான் சொல்றது.”

“என் தெளிவுக்காக நான் கேட்குறேன். நீங்க சொல்லி தான் ஆகனும்.”

“ஓஓ..”

“சரிங்க.. ஆனா நான் உங்களை கல்யாணம் பண்ண ஆசைப்படுறேன்.”

“நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படலை..”

“நான் தூக்கிட்டு போய் கல்யாணம் கட்டின்னா..” என கொக்கி போட்டு நிறுத்த,

“அப்போ, நான் என் மனசு முக்கியம் இல்லை.. நான் என் உடம்பு தான் முக்கியம் அப்படி தானே..” என இப்போது அவனை நேருக்கு நேர் பார்த்து கேட்க,

“ஏய்!” என சத்தமிட்டான் அவன்,

அந்த சத்தத்திற்கு எல்லாம் அஞ்சாதவள் போல்,

“என்ன ‘ஏய்’ன்னு உண்மைய தானே சொல்றேன். திருமணம் இரு மனம் சார்ந்தது. இதுல என் மனமே இல்லன்னு போது அப்போ காலகாலமா நடக்குற திருமணத்தோட அடுத்த கட்டமான உரிமையான உடல் இணைவுகள் மூலம் என்னை அடைய நினைக்க பாக்குறீங்க அப்படி தானே..”

“அப்படி செஞ்சிட்டா இனி இவளால எங்கேயும் போக முடியாது. விருப்பம் இல்லாம கல்யாணம் முடிஞ்சு மற்ற தேவைகளும் முடிந்த பிறகு இனி இவ ஏத்துக்கிட்டா என்ன ஏத்துக்கிடலைன்னா என்ன பழகிப்பா நமக்கு வேண்டியது தான் கிடைச்சாச்சேன்னு நீங்க இருந்துருவீங்க..”

“அப்புறம் பெண்ணா பிறந்ததாலோ என்னவோ நாங்க ஆசை பட்டோ படாமையோ ஏதோ குருட்டாம் போக்குல வாழ்க்கை போகும்.. அதானே பல இடங்களில் நடைமுறை வாழ்க்கையில் ஓடுது.. சில இடங்களில் தான் விதி விலக்கு மாதிரி அங்கேயும் இங்கேயும் தப்பி தவறி அவ மனதுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழ்வா..” என அவள் கூற,

அவள் கூற்றில் உரைந்து நின்றவன் காதல் மனம் அடிப்பட்டு போக, “இனி இதற்கு மேல் இவளிடம் பேசி பயணில்லை” என நினைத்தவன்,

“நீங்க ஆசை பட்ட மாதிரி நான் உங்க வாழ்க்கைக்குள்ள வர மாட்டேன். இனி நான் இந்த கல்யாணத்துக்காக என்ன செஞ்சாலும் அது என் காதலை கொச்சப்படுத்துவதற்கு சமம்.”

“அதனால குட் பை.” என்று விட்டு அவன் திரும்பி பார்க்காமல் வேகமாய் சென்று விட,

“என் வாழ்க்கை இப்படி தானோ..” என அவள் நினைத்து கொண்டே போகும் அவனையே தன் நீர் நிரம்பிய விழிகளால் நிரப்பி கொண்டிருந்தாள் தெரிவையவள்.

இரு நேச நெஞ்சங்களுக்கும் முதன்மையானவள் வாழ்வில் ஊறுகள் மட்டும் தானா என நினைக்கையில் அது உண்மை கலந்த பொய் என ஊனமிலி ஊமையாய் புன்னகைத்ததை பாவையவள் அறியாது கண்ணீர் வடிக்க,

புனிதமான மகாவிலயத்தில் இதம் பூக்க செய்ய எந்தையவன் விளையாட வருவான் வரம் தருவான் என அறியாது இவர்கள்.

ஆனால் அவனின் வரங்களை பெற எத்தனை எத்தனை ஊறுகளை இவர்களில் பலர் பெற இருக்கின்றனர் என்பதை கதையில் காண்போம்.

வான்வளம் நேசமாகும்.

கதையின் முன்னோட்டத்தை வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை கருத்து திரியில் பகிரவும்.

உங்கள் கருத்துக்களை காண ஆர்வமாய் நான்.

கருத்து திரி:

இப்படிக்கு,
அன்புடன்

நிலா ஐந்து.
 
admin

Administrator
Staff member

அருமையா இருக்கு
 
Status
Not open for further replies.
Top