எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை - முன்னோட்டம்

Status
Not open for further replies.
வந்துட்டேன்... வணக்கம் மக்களே...

நான் NNK_56...

#வானம்_இடிந்து_வீழ்வதில்லை

ஹீரோ அறிமுகத்துக்காக வந்திருக்கேன்...

வாங்க இன்ட்ரோ கொடுக்குறேன்...

Screenshot_20231228_232034_Instagram.jpg


பெயர்: ஆதிஷ் என்கின்ற ஆதிசேஷன்

தொழில் : ஃபுல் டைம் ரவுடி (இல்லிகல் வேலையும் உண்டு)

பொழுதுபோக்கு:

*கையில் கிடைப்பவனை அடித்தல்

* ஜீப்பில் ஊர் சுற்றுதல்

*ரோட்டில் போகுற பெண்களை சைட் அடித்தல்

கேரக்டர்:
*ஸ்டைலிஷ் பட் கோவக்காரன்

*அவன் கிட்ட சிக்குனா சிக்கன் மாட்டுனா மட்டன்

*யாரு என்ன எல்லாம் பார்க்கவே மாட்டான் கையில கிடைச்சா செவுல்லயே சாத்துவான்

*ஈவு இரக்கம் எல்லாம் அவன் கிட்ட எதிர்பார்க்கவே முடியாது

* ஊருல சார் பெத்த ரவுடி. அதுனாலே அவர் மேல எல்லாருக்கும் பயம் (இளம் பெண்கள் உற்பட... because ரோட்டுல போற ஒரு பொண்ணை விடறதில்லை... ஐயோ தப்பா நினைச்சுடாதீங்க ...எல்லாரையும் கலாட்டா பண்ணுவான்னு சொல்ல வந்தேன்)

*சாருக்கு காதல் கல்யாணம் கண்ணராவில எல்லாம் விருப்பம் கிடையாது...ஒன்லி சைட் மட்டும் தான்

*ஆனால் சார் anti ஹீரோ இல்லைங்க...

இப்போதைக்கு இவ்வளோ தான்... அடுத்த போஸ்ட்ல ஹீரோயின் அறிமுகம்... ஓகேயா😉

#NNK_56
#நிலாகாலம்02

 
Last edited:
வணக்கம் மக்களே,

#வானம்_இடிந்து_வீழ்வதில்லை

இப்போ ஹீரோயின் இன்ட்ரோ ....

Screenshot_20231228_232606_Instagram.jpg

பெயர்: அதீஷா

தொழில் : டாக்டர் (படிப்பு முடிச்சு இப்போ தான் trainee டாக்டர் ஆஹ் இருகாங்க)

பொழுதுபோக்கு :
*புக்ஸ் படித்தல்

குணாதிசயங்கள்:

*மேடம் அமைதி அதே சமயம் அழுத்தமான பொண்ணு.

*மேடம் தேவைக்கு அதிகமா பேசமாட்டாங்க.

*விட்டுக்கொடுக்குற குணம் ஜாஸ்தி

*அப்பா அம்மா மீறி எதுவும் பண்ணதில்லை.

*டாக்டர் படிப்பு கூட அவங்க சொல்லி படிச்சது தான்.

*ஒரே தம்பி... அவன் மேல ரொம்ப பாசம்.

*ஓரளவு வசதியான குடும்பத்துல பிறந்த பொண்ணு.

*சராசரி சமுதாயத்தின் பார்வைக்கு முன்னால் ஒரு perfect ஆன வாழ்க்கை வாழுற பொண்ணு.

ஏற்கனவே சொன்னது போல இவங்க ரெண்டு பேருக்கும் பெயருல மட்டும் தான் ஒற்றுமை இருக்கும் மத்தபடி ஒன்னும் கிடையாது...

அவரு தனி காட்டு ராஜான்னா இவங்க வீட்டு புறா.

அப்புறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்... மேடத்துக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்கு. மாப்பிளை ஹார்ட் சர்ஜன்... சொந்தமா ஹாஸ்பிடல் அண்ட் பார்மசி எல்லாம் வச்சிருக்குற பெத்த ஆள்...

மறக்காமல் கல்யாணத்துக்கு வந்துருங்க...

இவ்வளவு தாங்க நம்ம கதை... இன்ட்ரோ எல்லாம் முடிஞ்சுது இனி நியூ இயர்ல கதையோட சந்திப்போம்... முடிந்தால் அதற்கு முன்ன ஒரு டீஸர் ஓட வரேன்...

நன்றி நமக்கம்....

#NNK_56
#நிலாகாலம்02

 
Last edited:

டீஸர் 1

"ஏய் நர்சம்மா... ஏன் எங்களுக்கெல்லாம் உங்க டாக்டர்ஸ் டிரீட்மெண்ட் பார்க்க மாட்டாங்களா...நானும் அப்போத்திலிருந்தே டாக்டர கூப்பிட சொல்லிட்டிருக்கேன். ஆனால், நீயே எல்லாம் பண்ணிட்டிருக்க... உன்னை…" என்றபடி அருகே அவனுக்கு கட்டு போடுவதற்காக தயார் நிலையில் வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்தவன் அதை ரேணுகாவை நோக்கி ஓங்கியிருக்க ஓங்கிய அவன் கையை சட்டென்று எட்டி பிடித்திருந்தாள் அதீஷா.​

அவன் கையை யாரோ தடுத்து பிடித்திருப்பதை உணர்ந்தவன் சட்டென்று அவளை திரும்பி பார்த்தான்.​

அனல் தெறித்த அவனது பார்வையை தாங்கி நின்ற அணங்கவள் "கத்தரிக்கோலை கொடுங்க சார்" என்று சொல்லியபடி ஓங்கியிருந்த அவன் கையை கீழே இறக்கியிருந்தாள்.​

அவன் விரல்கள் இன்னமும் அதிகமாக கத்தரிக்கோலை இறுக்கி பிடிக்க "கொடுங்க சார்" என்று சொல்லிக்கொண்டே இறுகியிருந்த அவனது விரல்கள் ஒவ்வொன்றாக பிரித்து எடுத்து கத்தரிக்கோலை அவனிடமிருந்து பறித்திருந்தாள் அதீஷா.​

"இப்போ சொல்லுங்க சார்… என்னாச்சு" கேட்டாள் அவள்.​

"நீ யாரு? " என்ற கேள்வி அவனிடம். விழிகள் இடுங்க அவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே கேட்டான்.​

"டாக்டர்" ஒற்றை சொல் பதிலாக வந்து விழுந்தது அவளது வார்த்தை.​

சட்டென்று போட்டிருந்த ஷர்ட்டை விலக்கியவன் இடது பக்க மார்பு பகுதியை கண்களால் சுட்டி காட்டினான்.​

அங்கே லேசான வெட்டு காயத்தில் ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது.​

காயத்தின் அளவை பரிசோதிக்க அதீஷா கையை அவன் மார்பில் வைக்க சென்ற நேரம் "வெயிட்" என்று சொல்லி கொண்டே எட்டி அவளுக்கு பின்னால் நின்றிருந்த அஷ்வினியை பார்த்தவன் "அந்த பாப்பாவும் டாக்டர் தானே" என்று கேட்டான் ஆதீஷ்.​

"ம்ம்ம்" என்றாள் அதீஷா அவளுக்கு பின்னால் நின்ற அஷ்வினியை திரும்பி பார்த்துக்கொண்டே.​

"அப்போ நீ வேணாம்... அவளை பார்க்க சொல்லு" என்றான்.​

அவனை புருவம் சுருக்கி பார்த்த அதீஷா "ஏன்" என்று கேட்க​

"ம்ம்...உன்னை விட அவள் நல்லா இருக்கா அதான்" என்றான் அவன் நக்கலாக.​

அவன் சொன்னதை கேட்டு விழிகள் வெளியில் வந்து விழும் அளவுக்கு அவனை பார்த்த அஷ்வினி "சிஸ்டர் என்னை பிடிச்சிக்கோங்க. மயக்கம் போட்டு விழ போறேன்" என்று பக்கத்தில் நின்றிருந்த ரேணுகாவிடம் கிசுகிசுத்துக்கொண்டே அவள் மீதே மயங்கி சரிந்தாள்.​

"என்னடா மயங்கிட்டா" என்று சற்றே பின்புறமாக சாய்ந்து தன்னுடன் வந்திருந்த அவனது அல்லக்கை ஒருவனிடம் கேட்டான் ஆதீஷ்.​

"அந்த பொண்ணை விட இந்தக்கா பெட்டர் ஆஹ் இருக்குண்ணே ... இவங்களையே பார்க்க சொல்லுங்க" என்றான் அவன்.​

"அப்படியா சொல்லுற" என்று கேட்டுக்கொண்டே அதீஷாவை மேலிருந்து கீழே பார்த்தவன் "இம்ம்... நல்லாத்தான் இருக்கா... சரி உன் நல்ல நேரம்... நீயே பாரு" என்றான் சலிப்பாக.​

'அப்பாடா தப்பிச்சேன்' என்று ஒற்றை விழி மட்டும் திறந்து அவர்களை பார்த்த அஷ்வினி அப்படியே மெல்ல நகர்ந்து ஒரு ஓரமாக சென்று நின்று கொண்டாள்.​

ஒரு பெருமூச்சுடன் தலையை இருபக்கமும் ஆட்டிக்கொண்ட அதீஷா அவனது காயத்தை பரிசோதித்து விட்டு " சின்ன காயம் தான் மிஸ்டர்..." என்று அவள் இழுக்க "ஆதிஷ்" என்று முடித்திருந்தான் அவன்.​

" ஆதீஷ்... சின்ன காயம்... தையல் போடுற அளவுக்கெல்லாம் ஒன்னும் இல்லை. கிளீன் பண்ணி மருந்து போட்டு இன்பெக்ஷ்ன் ஆகாம இருக்க ஒரு இன்ஜெக்ஷன் போட்டா போதும். " என்று அவனிடம் சொன்னவள்​

ரேணுகாவிடம் "சிஸ்டர் நீங்களே பண்ணிடுங்க" என்று சொல்லி விட்டு திரும்பி நடக்க சட்டென்று அவள் கையை எட்டி பிடித்தவன் "இந்த ரேணு ஆண்ட்டி கட்டு போடவா நெஞ்சில வெட்டு காயம் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கோம். நீயே போட்டு விடு" என்றான்.​

"நானும் அதை தான் டாக்டர் சொல்லிட்டிருந்தேன். ஆனால் இவர் தான் டாக்டர் தான் வந்து பார்க்கணும்னு வம்பு பண்ணிட்டிருந்தாரு" என்று ரேணுகா சற்று முன் நிகழ்ந்த கலவரத்திற்கு விளக்கம் சொல்ல "ஏய் ஆண்ட்டி" என்று ஆதீஷ் அவளை முறைத்து பார்த்ததுதான் தாமதம் ரேணுகாவின் வாய் கப்பென்று மூடிக்கொண்டது.​

"சரி நீங்க போங்க சிஸ்டர் நான் பார்த்துக்குறேன். அப்படியே வெளியே நிக்குற கூட்டத்தையும் கலைஞ்சு போக சொல்லுங்க" என்றவளின் கரம் அவனது காயத்தை சுத்தப்படுத்தி மருந்திடும் வேலையில் இறங்கியிருந்தது.​

அவளது பார்வை அவன் விழிகளிலேயே நிலைத்திருந்தது.​

அவனை பார்த்தாலே பயந்து ஒதுங்கும் பெண்களுக்கு நடுவில் அவனை விழிகளுக்குள் பார்க்கும் ஒரு பெண். புதிதாக இருந்தது. ஆளை விழுங்கும் பார்வை தான். அதை மறுக்க முடியாது. ஆனால் அவ்வளவு எளிதில் அவனை விழுங்கி விட முடியுமா விடாக்கண்டன் ஆயிற்றே.​

அவனுக்கான சிகிச்சை அனைத்தையும் முடித்து அவள் நிமிர்ந்த சமயம் அவள் கரத்தை பிடித்து "எவ்வளோ சாஃப்ட் ஆஹ் இருக்கு உன் கை... மருந்து போடும் போது வலியே தெரியல. சமைச்சு போட்ட கைக்கு மட்டும் இல்லை கட்டு போட்ட கைக்கு கூட முத்தம் கொடுக்கலாம்" என்று சொன்னவன் அவளே எதிர்பாராத வண்ணம் குனிந்து அவள் புறங்கையில் இதழ் பதிக்க அதிர்ந்த பெண்ணவள் சட்டென்று அவனிடமிருந்து தனது கரத்தை உருவிக்கொண்டாள்.​

அந்த காட்சியை பார்த்திருந்த அஷ்வினி தான் "என்ன ரவுடி சார் இப்படி பண்ணிட்டீங்க? கல்யாணம் ஆக போற பொண்ணு சார் அவ" என்றாள் அதிர்ச்சியாக.​

"ச்சே இதை முதல்லயே சொல்லியிருக்க கூடாதா?" என்று வருத்தம் போல சொன்னவனிடம் "சொல்லியிருந்தா கிஸ் பண்ணிருக்க மாட்டிங்களா?"என்று அஷ்வினி கேட்க "ச்சே ச்சே...கைக்கு பதில் இங்கே கொடுத்திருப்பேன்" என்றவன் அதீஷாவின் கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்துவிட்டு விசிலடித்தபடி வெளியேறியிருந்தான்.​

செல்லும் அவன் முதுகையே அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்த அதீஷாவின் பக்கத்தில் வந்த அஷ்வினி "என்னடி இப்படி ஆச்சு?" என்று அவள் தோளில் கையை வைக்க அவன் எச்சில் செய்துவிட்டு போன அவள் கன்னத்தை புறங்கையால் அழுந்த துடைத்துக்கொண்டே அஷ்வினியை முறைத்தவள் "எல்லாம் உன்னால தான்" என்று திட்டி விட்டு சென்றிருந்தாள் அதீஷா.​

 
Last edited:

டீஸர் 2


கசங்கிய புடவையும் கண்ணில் மரண பயத்துடனும் மூச்சிரைக்க அந்த வீட்டை விட்டு வீதிக்கு ஓடி வந்தவளுக்கு கண்ணில் புலப்பட்டது எல்லாம் காரிருளில் வெறிச்சோடி இருந்த சாலை மட்டுமே.​

தப்பித்து சென்றுவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தில் ஓட்டமெடுத்தவள் ஒரு கட்டத்தில் முச்சந்தியில் வந்து நின்றாள்.​

அவசரமாக இடமும் வலமுமாக தலையை திருப்பி பார்வையை சுழலவிட்டாள்.​

எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்று நொடியில் முடிவு செய்தாக வேண்டிய நிலை. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் மரணம் நெருங்கி கொண்டிருந்தது.​

இடது புறம் திரும்பினால் காவல் நிலையம் சென்றுவிடலாம்.​

அவளுக்கு தெரியும். அவள் நன்கு அறிந்த இடம் தான் அது. காவல் நிலையம் சென்றால் தப்பித்துவிட வாய்ப்புகள் இருக்கின்றன.​

சட்டென முடிவு செய்தவள் இடப்புறமாக திரும்பி இரண்டு எட்டுக்கள் வைத்திருப்பாள். அவளது மூளையில் பதிந்த காட்சிகள் வலது புறத்தில் நின்றிருந்த ஜீப்பும் அதன் பின் புற பகுதியில் ஒட்டியிருந்த " Keep Calm… The sky is not falling" (அமைதிகொள் மனமே! வானம் இடிந்து வீழ்வதில்லை) என்ற வாசகமும் கண்ணில் பட்டதாக நினைவூட்ட சட்டென்று திரும்பி பார்த்தாள்.​

ஆம் அதே வாசகம் தான்.​

அவளுக்கு பரிட்சயமான வாசகம்.​

அவளுக்கு தேவையான வாசகமும் கூட.​

வாசகம் மட்டும் அல்ல வண்டிக்காரனும் கூட பரிச்சயமானவன் தான்.​

இடது புற சாலையை தேர்ந்தெடுத்த அவளது பாதங்கள் அடுத்த நொடி திசை திரும்பியிருந்தது.​

காவல் நிலையம் சென்றால் தப்பிக்க வாய்ப்பு இருக்கலாம். ஆனால், அதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை. அவனிடம் சென்றால் நிச்சயம் தப்பித்துவிடுவாள்.​

அவளுக்கு காவலனாக நிச்சயம் அவன் இருப்பான்.​

அந்த ஜீப்பை நோக்கி அடி எடுத்து வைத்த அவள் கால்கள் இரண்டும் மெல்ல வேகத்தை கூட்ட ஓடி சென்று அந்த ஜீப்பின் பின் புறத்தில் இருக்கரங்களையும் அடித்து ஊன்றினாள் அதீஷா.​

வண்டியை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு அதன் பானெட்டின் மீது ஏறி சாய்ந்து அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஒரு கரத்தை தலைக்கு கொடுத்து மறு கரத்தில் பீர் பாட்டிலை வைத்து குடித்துக்கொண்டிருந்தான் அவன்.​

ஜீப்பினுள்ளிருக்கும் வானொலியில் மெல்லிய பாடல் கசிந்துகொண்டிருந்தது.​

அவள் ஓடி வந்து மோதி நின்றதில் வண்டியில் ஏற்பட்ட அதிர்வில் பாடலில் இலயித்திருந்தவனின் ரசனை களைய கடுப்பானவன் "அடிங், எவன்டா அது என் வண்டிமேல வந்து மோதுறது" என்று கேட்டுக்கொண்டே பானெட்டின் மீதிருந்து பாய்ந்திறங்கினான் ஆதீஷ்.​

வேகமாக அவளை நோக்கி வந்தவனுக்கு களைப்பின் மிகுதியில் வண்டியின் மீது சாய்ந்து நின்றிருந்த பெண்ணின் முதுகுப்பகுதியே தெரிந்தது.​

பெண் என்றதும் அவளை பார்த்து ராகம் போல விசிலடித்தவன் "ஹேய் பாப்பா... என்ன நீயும் சரக்கடிச்சிருக்கியா... நடந்து வரும் போதே வண்டி மேல வந்து மோதுற" என்றான்.​

அவன் குரல் செவிகளில் விழுந்ததும் சட்டென்று திரும்பி பார்த்தாள் அதீஷா.​

"ஹேய்...டாக்டர் பேபி தானே நீ?" என்று கேட்டவனின் விழிகள் அவளை ஆராய்ச்சியாக பார்த்தது.​

முகமெல்லாம் வியர்த்து வடிய கலைந்த கூந்தலும், கசங்கிய புடவையும் கழுத்தில் தொங்கிய புது தாலியும் கை, முகம், கழுத்து என்று தாலியிலும் தெறித்திருந்த இரத்தக் கறையுமாக நின்றிருந்தாள் பெண்ணவள்.​

அவனை பார்த்ததும் மனதிற்குள் ஒருவகை நிம்மதி பரவியதை உணர்ந்தவளுக்கு ஒற்றை கண்ணில் தேக்கி வைத்திருந்த விழிநீர் உருண்டோட "ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்" என்று நலிந்த குரலில் சொல்லிக்கொண்டே அவனை தாவி அணைத்துக்கொண்டாள் பெண்ணவள்.​

அவளது அணைப்பில் இருந்த இறுக்கமே அவளுக்கு இப்பொழுது ஆதரவும் அரவணைப்பும் தேவை என்று அவனுக்கு எடுத்து கூறினாலும் அதெல்லாம் அவனை அசைத்து பார்க்க முடியுமா என்ன.​

"ஏய் ஏய் ஏய் ....தள்ளு…தள்ளு" என்று சொல்லிக்கொண்டே அவளை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தியவன் "உனக்கெதுக்கு நான் ஹெல்ப் பண்ணனும்... நீ என்ன என் பொண்டாட்டியா…அதெல்லாம் முடியாது...கிளம்பு" என்று அதட்டி விட்டு திரும்பி நடக்க ஆயுத்தமானவனின் கரத்தை பிடித்து நிறுத்தியிருந்தாள் பேதையவள்.​

இப்பொழுது அவன் மட்டுமே அவளுக்கு அடைக்கலமளிக்க முடியும்.​

"எனக்கு சம்மதம்" என்றாள்.​

அவன் கையை பற்றியிருந்த அவள் கரத்தை திரும்பி பார்த்தவன் "கையை எடு... என்ன சம்மதம்...உளறாம கிளம்பு" என்று சொல்லிவிட்டு ஜீப்பின் ஓட்டுநர் பகுதியின் கதவை திறந்து கொண்டு உள்ளே ஏற சென்ற சமயம் "உங்க கூட ஒரு நைட் இருக்க சம்மதம்..." என்றாள் வேகமாக.​

அவள் சொல்லில் அதிர்ந்தவன் அவளை திரும்பி பார்க்க "அன்னிக்கு கேட்டிங்களே ஒரு நைட்டுக்கு வரியான்னு... வரேன் கூட்டிட்டு போங்க" என்றாள்.​

 
Status
Not open for further replies.
Top