எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கதைத் திரி

Status
Not open for further replies.

NNK-72

Moderator
வணக்கம் நண்பர்களே....
உங்க எல்லாருக்கும் ஏற்கனவே தெரிஞ்சி இருக்கும்...நான் தான் உங்கள் NNK 72 உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் ரைட்டர் ...உங்க எல்லாருடைய ஆதரவும் எனக்கு கிடைக்கும்ன்ற நம்பிக்கையில இந்த முயற்சியில் இறங்கி இருக்கேன்....கூடிய சீக்கிரமே டீஸரோட வரேன்....
 

NNK-72

Moderator
களிப்பு ♥️ 1


"வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்

சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது

மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்

செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்”


வெங்கடேச சுப்ரபாத பாடலை தமிழில் எம் எஸ் சுப்புலட்சுமி தன் தேன்மதுரக் குரலால் பாடி அந்த வீட்டையே தன் இசையால் நிறைத்திருந்தார்.


ஊசியாய் குத்தும் பனியையும் பொருட்படுத்தாமல், அதிகாலை வேளையில் குளித்து முடித்து சுத்தபத்தமாய் வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த பிரபாவதியின் குரலும், அந்த தேன்மதுரக் குரலோடு சேர்ந்து சுப்ரபாதத்தை பாடிக் கொண்டிருந்தது.


கோலமிட்டவர் வர்ண பொடிகளை தூவ ஆரம்பித்திருந்தார்.

அவர் வர்ணங்களை தீட்டி முடிப்பதற்குள் வாங்க வீட்டை ஒரு முறை சுற்றி வந்து விடுவோம்…..


இரண்டடுக்கு மாடி வீடு, பழைய காலத்து வீடு தான்…பிள்ளைகள் தலை எடுக்கவும் மறு சீரமைத்து புதுப்பித்து இருந்தனர். கீழே மூன்று படுக்கை அறைகள், அதே போலவே மாடியிலும் இருக்க, நடுவில் கூடம், பூஜை அறை, சமையலறை, சாப்பிடும் அறை என சற்று பெரியதாக தான் இருந்தது.


பரந்த நெற்றியில் திருநாமும், தோள்பட்டையில் பூணூல், காதில் கடுக்கன், வெள்ளை வேட்டி, மேல் துண்டு, சகிதம் விஷ்ணு சகஸ்ரநாமத்தை உச்சரித்தவாறு தன் கனத்த சரிரத்துடன் பூஜை அறைக்குள் நுழைந்தார் திருவரங்கநாதன்..

வயது 50 தாண்டி சில வருடங்கள் ஆகியிருந்தது என்பது அவரது தோற்றத்திலேயே தெரிந்திருந்தது.


ஸ்பீக்கரில் ஒலித்த பாட்டு சத்தம் படுக்கை அறை வரை கேட்க,


“பச் … என்ன சத்தம் இது… நடுராத்திரியில் தூங்க கூட விடாம…”


சலித்துக்கொண்டே தூக்கத்தில் புலம்பியவாறே எழுந்தவன் செல்லை பார்க்க, அது அதிகாலை ஐந்தை காட்டியது.


“என்னது மணி ஐஞ்சு தான் ஆகுதா…! ஒரு மணிக்கு தானே டா… தூங்கினேன்.. அதுக்குள்ள எதுக்கு டா இப்படி அலாரத்தை ஆன் பண்ணி வைச்சி இருக்கிங்க…?” என அலுத்தவன் சுப்பரபாதபாடல் தெளிவாக கேட்கவும்,


“ அந்த மனுசனே பாவம்… நடு ராத்திரி சேவைன்னு லேட்டா தான் தூங்கி இருப்பாரு, உடனே மார்னிங் ஷிப்டுக்கு எழுப்பி விடுறிங்களே கொஞ்ச நேரம் தூங்க விடுறிங்களா… என கிண்டலாக கூறிட, யாரும் அதை அணைப்பது போல தெரியாததால்,


“யம்மா அந்த ஸ்பீக்கரை ஆப் பண்ணி தொலையேம்மா…அன்னையிடம் கத்தியவன்,


“நம்ம காதை செவிடாக்காம ஓயமாட்டங்க போல இருக்கே வெங்கி…!” அந்த பெருமாளிடம் சத்தமாக புலம்பியடியே தலையணையை எடுத்து காதின் மேல் புறம் அழுத்தி வைத்து தூங்க முற்பட்டான் வீட்டின் கடைக்குட்டி வெங்கடேஷ் ….


கோலமிட்டு உள்ளே வந்த பிரபாவதிக்கு மகனின் சத்தம் காதில் விழ அவசரமாக மகனின் அறைக்குள் நுழைத்தவர்,


“என்ன பேச்சுடா பேசுற.. அய்யோ… பெருமாளே மன்னிச்சிடுப்பா…” கன்னத்தில் போட்டுக் கொண்டவர், “உங்க அப்பா பூஜையில இருக்காருடா கத்தி கித்தி தொலையாதே… சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு வா… இன்னைக்கு மார்கழி ஒன்னு வந்து பெருமாளை கும்பிடு அப்படியாவது நல்ல புத்திய கொடுக்குறாரான்னு பாக்கலாம்… இருபத்து ஐஞ்சு வயசு ஆகுது… ஒரு வேலைக்கு உருப்படி இல்லை”


திட்ட திட்ட எழுந்து கொள்ளாமல் படுத்திருக்கும் சிறிய மகனை‌ காலில் ஒரு தட்டு தட்டி விட்டு சென்றார் பிரபாவதி.


“ஏம்மா ஏன் இப்படி புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து அலும்பல் பண்றிங்க… என்னால எல்லாம் இப்போ எழுந்துக்க முடியாது… ஒரு பத்து மணிக்கு எழுந்து வந்து நானே பெருமாளை மீட் பண்ணிக்கிறேன்…” தாயின் காதுகளில் விழ வேண்டும் என சத்தமாக சொல்லியவன்,


“இன்னைக்கு மார்கழி ஒன்னுன்னு தெரிஞ்சி இருந்தா இந்த ஸ்பீக்கர் ஒயரை புடுங்கி போட்டு இருப்பேனே…”


தனக்குள் முனுமுனுத்தபடி அந்த குளிருக்கு இதமாக கால் முதல் தலை வரை பெட்ஷீட்டை இழுத்து போர்த்தி தூங்க ஆரம்பித்தான் அவன்.


திருவரங்கநாதன் பிரபாவதிக்கு இரு பிள்ளைகள் பெரியவன் ஹரிஹரன்சுதன், மெட்ரஸ் ஐஐடியில் படித்து முடித்து ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறான். இரண்டாமவன் பிரணவ் வெங்கடேஷ் அதுதான் பிரபாவதியே சொல்லிட்டாங்களே வேலைக்கு உருப்படி இல்லன்னு… அவன் பாக்குற வேலை வீட்டுல இருக்கவங்களுக்கு பிடிக்கல திட்டு வாங்கிட்டு இருக்கான் …


திருவரங்கநாதனிற்கு பெருமாள் மேல அவ்வளவு இஷ்டம் வருஷத்துல இரண்டு மூனு முறை திருப்பதி சென்று வருபவர்… சொந்தமாக பாத்திரக்கடையை வைத்திருக்க, அது ஒரளவு சொல்லிக் கொள்ளும் படி சென்றுக் கொண்டு இருக்கிறது.


பெரிய மகன் தன் வியாபாரத்திற்கு உறுதுணையாய் இருப்பான் என பார்க்க, அவனோ பேசி பேசி அவரை கரைத்து உயர் பதவியில் அமர்ந்து விட, அவரது குறி மொத்தமும் இப்போது இளைய மகனின் மீது திரும்பி இருக்கிறது…


பிரபாவதி அடுக்களையில் பாத்திரத்தை உருட்டிக் கொண்டு சமையலில் மும்மரமாக இருக்க, ஸ்டவ்வில் ஏறியிருந்த குக்கரின் விசில் சத்தம் கூடம் வரை கேட்டது.


உருக்கிய பசு நெய்யில் செய்த வெண்பொங்கலின் வாசம் நாசியை, தீண்டி பசியை தூண்டிவிட, பாசிபருப்பு சாம்பாரின் வாசம் நாக்கின் சுவை அரும்புகளை மெல்ல தட்டி எழுப்பியது.


காலைவேளை மிகுந்த பரபரப்புடன் இருந்தாலும், பூஜை முடித்து வெளியே வந்த கணவருக்கு காபியும் கையுமாக பிரசன்னமானார் பிரபாவதி.


இந்தாங்க காபி கணவரின் முன் காபியை வைத்தவர் மீண்டும் அடுக்கலைக்குள் திரும்பினார்.,


காபியை எடுத்துக் கொண்டு, அன்றைய செய்தி தாளில் கண்களை பதித்தவாறே,


“ என்ன உன் சீமந்த புத்திரனுக்கு இன்னும் விடியலையா…” என்றார் எள்ளலாக,


‘காலையிலயேவா…’ என அலுத்துக் கொண்ட பிரபாவதி,


“நான் எழுப்பிட்டேன் இந்நேரம் குளிக்க போய் இருப்பான்…” என்றவர்,


“கடவுளே அவரு கடைக்கு போகிற வரைக்கும் இந்த பையன் வெளியே வரக்கூடாது”


ஒரு அவசர மனுவையும் கடவுளுக்கு அனுப்பினார் .


எதிர்த்து பேசாமலயே தன் செய்கைகளின் மூலம் அவரின் பீபியை ஏற்றும் ஒரு நபர் வெங்கி தானே… பிள்ளையிடமிருந்து கணவரை காப்பற்றியவர் வேலையை தொடர்ந்தார்.


அவரது போறாத நேரமோ என்னமோ நண்பனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் பாதி கண்களை திறந்தும் திறவாமலும், அவனிடம் சகட்டுமேனிக்கு கத்திக் கொண்டே ஹாலில் பேப்பரை படித்துக்கொண்டிருந்த திருவரங்கநாதனையும், கடந்து சமயலறைக்குள் வந்தவன், கொட்டாவி விட்டபடியே


“அம்மா சூடா ஒரு காஃபி”


என சோம்பலை முறித்தான்.

பின்புறம் கேட்ட‌ மகனது கொட்டாவி சத்தத்தில் கையில் இருந்த பாத்திரத்தை கீழே போட்டவர், கலைந்த தலையும் நலுங்கிய உடையுமாக நின்றிருந்தவன், கோலத்தையும் கண்டு பீதியாக,


“என்னடா இப்படியே சமையலறைக்குள்ள வந்துட்ட…? வெளியே உங்க அப்பா இருக்காருடா”


என்றார் பரபரப்புடன்,..


கண்ணை கசக்கியபடியே

“என்னது அப்பா இருந்தாரா…!” இழுவையாக கேட்டவன்,


“நான் பாக்கலையே மா…”


இருந்த கொஞ்ச நஞ்ச தூக்கமும் பறிபோய் விட பின்புறம் சாய்ந்து நல்ல பாம்பை போல தலையை வெளியே நீட்டி, எட்டி பார்க்க, அரங்கநாதன் கோபத்துடன் பல்லை கடிப்பது தெரிந்தது.


சட்டென ஆமை, ஓட்டுக்குள் தலையை இழுத்து கொள்வது போல, தலையை உள்ளே இழுத்துக் கொண்டவன்,“அவரு இன்னும் கடைக்கு போகலையாமா…?”


என்றான். அவர்‌ ஏன் இன்னும் இங்கே இருக்கிறார் என்ற அர்த்தத்தில்,..


“டேய் நேரத்தை பாத்தியா…. நீ பண்றதுக்கு எல்லாம் நான் வாங்கி கட்டிக்கனும் ல… இந்த அழகுல அவரை கிராஸ் பண்ணி தான் வந்துருக்க….


ம்….. கண்ணை திறந்து வந்தா தெரியும் தூக்கத்திலேயே நடந்து வந்தா முன்னாடி இருக்கறது செக்குன்னு தெரியுமா..? சிவலிங்கம்னு தெரியுமா…? கடவுளே அந்த மனுஷன் என்ன கத்து கத்த போறாரோன்னு தெரியலையே…”


கவலையுடன், வெளியே எட்டி பார்த்த பிரபாவதி மகனை காய்ந்தார்.


அவர் பழமொழி சொல்லவும்,


“எக்ஸ்கீயூஸ் மீ மம்மி, நீங்க பழமொழியை தப்பா சொல்றிங்கன்னு நினைக்கிறேன்… அப்பாவுக்கு பழமொழியை சொல்றதா இருந்தா, பேனு பெருமாள்னு தானே சொல்லனும்…

நீங்க என்ன செக்கு சிவலிங்கம்னு சொல்றிங்க… ப்ளீஸ், சேஞ்ச் யுவர் வேர்ட்ஸ்… பைதபை இதுல அப்பா செக்கா…? சிவலிங்கமா…?” அவன் அறுபெரும் கேள்வியை கேட்க, அதில் கடுப்பானவர்,.


“தொடப்பகட்டை… கொஞ்சமாச்சும் சுத்தபத்தம் இருக்கா…? இப்படியே உள்ள வர்ற… பல்லாவது தேய்ச்சியா… இல்லையா…? போடா… போய் முதல்ல பல்லை தேச்சி குளி…”மகனை திட்டியபடியே அவனை சமயலறைக்குள்ளிருந்து வெளியே தள்ள முயன்றார் பிரபாவதி.


அவர் கூறிய அனைத்தையும் காற்றில் விட்டு


“அம்மா… நீங்க அப்பாவையா தொடைப்பகட்டைன்னு சொன்னீங்க…”


வேண்டுமென்றே தந்தையின் செவிகளில் விழவேண்டும் என சத்தத்தை கூட்டியதும்,


அவனை பதற்றத்துடன் பார்த்தவர் “அடேய், அடேய்… நான் எப்போடா அப்படி சொன்னேன் உன்னைதானே சொன்னேன் முதல்ல வெளியே போடா…” கண்ணில் பட்ட கரண்டியை கையில் எடுத்தார்.


“நோ… நோ.. வைலன்ஸ் மம்மி காபியை கொடுத்தா நான் பாட்டுக்கு போயிட்டு இருக்க போறேன்…”


கையை விரித்து பாவனையாக கூறியவன், அங்கிருந்த பாத்திரத்தை பார்த்து,


“இது என்ன பொங்கலா…? ஏன்மா பொங்கல் எல்லாம் செய்றிங்க…? மருந்தே இல்லாம மயக்கம் வர்றதுக்கா…!! இந்த பூரி உத்தப்பம் நெய் ரோஸ்ட்.. பர்கர் சேன்விஜ் பிட்சா இப்படி எதுவும் இல்லையா…? தொட்டுக்க என்ன சாம்பாரா…? காரசாரமா சட்னி அரைக்கலையா…?”


வெளியே செல்லாமல் இருக்க, ஒவ்வொரு பாத்திரத்தையும் பேசிக் கொண்டே திறந்து பார்த்தான் வெங்கடேஷ்…


“இப்படி பேசுற உன் வாயிக்கு பட்டினி தான் போடனும்…”


நொடித்தபடி, அவனை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியே தள்ளி விட்டார் பிரபாவதி….


அவர் தள்ளி விட்டதும், வெளியே வந்து தள்ளாடியவன் சுவற்றை பிடித்து நிற்க,


அவனுக்காகவே காத்திருந்த திருவரங்கநாதன்,


“ வாங்க சார் வாங்க… சாருக்கு இன்னும் விடியலையோ… கிண்டலாக பார்த்தவர்,


“மாதங்களில் நான் மார்கழின்னு சொன்ன அந்த மாதவனோட பெயரை‌ உனக்கு வைச்சேன்… அந்த ஒரு காரணத்துக்காவாது என்னைக்காவது ஒரு நாள் பூஜையில உட்காந்து இருக்கியாடா…

அப்பான்னு ஒருத்தன் உட்காந்து இருக்கறதை கூட கவனிக்காம நீ பாட்டுக்கு தெனாவட்டா போற… என்னதான் நினைச்சிட்டு இருக்க‌ உன் மனசுல…?”


“எப்போ பாரு போனும் கையுமா திரிய வேண்டியது… வந்து கடையை பாக்க சொன்னா… வெட்டி விரப்பா பேச வேண்டியது… இல்லை நாலு தடி பசங்களோட சேர்ந்து டீயை ஆத்த வேண்டியது… பெரியவனை பாத்தாவது திருந்தனும்… அதுவும் இல்லை… நான் செய்த பாவம் எல்லாம் புள்ள ரூபத்துல வந்து நிக்குது…. என்ன செய்து இதை தொலைக்கிறதோ… “


மகன்‌ மீது இருந்த அதிருப்தியையெல்லாம் கடுப்பாக கொட்டினார் திருவரங்கநாதன்.
தலையை குனிந்தபடியே “என்னமோ இந்த பேரை வைச்சாதான் ஆச்சின்னு நான் ஒத்த கால்ல நின்னா மாதிரி பேசுறாரே வெங்கி…” வாயை கோணி அவன் தனக்குள் முனுமுனுக்க


கணவர் பேசவும் வெளியே வந்த பிரபாவதி,


“என்னங்க அங்க பண்ண அர்ச்சனை பத்தாதுன்னு இங்கேயும் பண்றிங்களா…? ஒரு நாளைக்கு ஒன்னு போதும்… நீங்க பேசி பேசி உங்க பிபியை ஏத்திக்காதிங்க… பிரஷரு மாத்திரை வேற போடல இந்தாங்க”


கணவரின் அர்ச்சனயை நிப்பாட்டியவர், கையில் மாத்திரையை கொடுத்து விட்டு,“இன்னும் என்னடா நின்னுக்கிட்டே இருக்க… போயி இருக்க வேலையை பாரு போடா…” அவனை அனுப்பி வைக்க முயல,


“ஆமாடி என்னை அடங்கிட்டு…. அவனை அனுப்பி வைச்சிடு… ஒரு சொல் சொல்லிட கூடாது… ஆமா உள்ள என்னமோ துடைப்ப கட்டைன்னு காதுல விழுந்தது என்ன விஷயம்…” மனைவியை இடுங்கும் பார்வை பார்க்க…


“அது… வந்து அது ஒன்னும் இல்ல இதோ இவனை இவனை தான் திட்டிக்கிட்டு இருந்தேன்… ஒரு பேச்சை கேக்குறானா பாருங்க எப்படி நிக்குறான்… நமக்கும் வயசு ஆகுது இல்லையா கால காலத்துல ஒரு நல்ல வேலைல உட்காந்தா தானே…!”மகனை காப்பாற்ற வந்தவர், கணவரின் ஒரு கேள்விக்கு அப்படியே மாறிவிட்டார்.


“மம்மி…. யூ டூ ப்ரூட்டல் …” ஆற்றாமையுடன் நெஞ்சை குத்திக் கொண்டவன் அன்னையின் பக்கம் சாய்ந்தவாறு சத்தமில்லாமல் கூறிட,.


அவனையே பார்த்திருந்த அரங்கநாதன் “மனசுல பெரிய நடிகர் திலகம் சிவாஜின்னு நினைப்பு … அப்படியே நடிப்பை கொட்டுறதை பாரு…” அவர் பாட்டுக்கு அடுக்கிக் கொண்டே போக, ஏதோ காதில் மெல்லிசை கானம் கேட்டது போல எல்லாவற்றிற்கும் குனிந்த தலையை ஆட்டியபடியே நின்ற மகனை பார்க்க பார்க்க அவருக்கு பிபி‌ எகிறியது….


அதே நேரம் வெளியே காலிங் பெல் சத்தம் கேட்கவும்,


‘இப்போ யாரு வந்து இருப்பா…? இவ்வளவு காலையில…. ? ம்… ? ஒரு வேலை போன் பண்ணவன் நேர்லயே வந்துட்டானோ…. இவர் வேற நல்ல மூடில் இருக்காறே’ யோசித்துக் கொண்டே நின்றிருந்தவன்,


“அ.. அப்பா… திட்டிக்கிட்டே இருங்க இதோ, இப்போ வந்துட்றேன்…”


என வாசல் பக்கம் சென்று பார்த்தவன்,


“அடடே… வா… வா.. செம..”


சிரித்தபடியே பெற்றவர்கள் முன்னால் வந்து நின்றான்.


“எதுக்குடா இப்படி பல்ல காட்டிக்கிட்டே வர்ற…?”இதுக்கும் அவர் திட்ட ஆரம்பிக்க,


“வெய்ட்… வெய்ட்… இப்போ ஒரு பீஸ் அதுக்கு தான் வந்து இருக்கு வெங்கின்னு பேரு வைச்ச எனக்கே இப்படின்னா அந்த கிருஷ்ணன் பேரை வைச்சதுக்கு ஏத்தா மாதிரி ஒரு வேலையை பண்ணிட்டு வந்து இருக்கானே உங்க தங்கமான பெரிய புள்ளை, போய் அவரை பார்த்துட்டு பொறுமையா வந்து என்னை திட்டுங்க…. போங்க போங்க…. நான் எங்கேயும் போயிட மாட்டேன் .. அயம் ஆல்வேஸ் யுவர் ப்ராப்பர்ட்டி பிரபா…”


நக்கலும் நைய்யாடியுமாக தந்தைக்கு பதிலை சொல்லியவன், அன்னையின் கன்னத்தை பிடித்து கிள்ளி வாசலை கை காமித்திட, திருவரங்கநாதனும் பிரபாவதியும், அங்கு வாசலில் நின்றிருந்தவர்களை பார்த்த அதிர்வில் வாய் அடைத்து போயினார்.


“என்ன காரியத்தை டா பாண்ணி வைச்சி இருக்க…? என் தலையில நெருப்பை அள்ளி கொட்டிட்டியே படுபாவி …” பிராபவதி வாசலிலேயே அழுது கரைய,


“என்னடா இது கோலம்… என்ன வேலை பண்ணிட்டு வந்து நிக்குற… உன்னை பெத்தவங்க உயிரோட தானேடா இருக்கோம்…” திருவரங்கநாதன் ஆற்றாமையுடன் கேட்டதும்,


பட்டு வெட்டி சட்டையில் அருகில் ஒரு பெண்ணுடன் மாலையும் கழுத்துமாய் ஜோடியாக வந்த ஹரியை பார்த்து வில்ல சிரிப்பு சிரித்த வெங்கி,


“என்ன பண்ணிட்டு வந்து நிக்குறான்னு‌ கேக்குறிங்க…? பாத்தா தெரியல கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குறான் பா… கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குறான்…”


“யப்பா தாங்கமான புள்ளன்னு பெயர் எடுத்தவனே, பச் இவ்வளவு பேசுற எனக்கு எல்லாம் இந்த தைரியம் இல்ல… நீயெல்லாம் வேற லெவல்”


தகப்பனுக்கும் தாயிற்கும் மேலும் மேலும் கோபத்தை தூண்டுவது போல வெங்கி பேசிட,.


‘அடேய் நல்லவனே…. அவங்களே பேசினா கூட ஏதோ ஒரு இரண்டு திட்டுல முடியும்னு பார்த்தா… நிரந்தரமா பிரிச்சி வைக்க பிளான் பண்றானே’ பெரியவன் ஹரிஹரன் மனதிற்குள் தம்பியை வறுக்க வெளியே‌ அவனிடம் கண்களால் கெஞ்சிக் கொண்டு இருந்தான்.


‘வாங்குடா… முட்டை கண்ணா நல்லா வாங்கு… நல்லவன் வேஷமா போடுற… அப்பாடா இப்போ தான் நிம்மதியா இருக்கு… நம்ம எதிரில இன்னொருத்தரை திட்டுறது எவ்வளவு ஆனந்தமா இருக்கு…’ மைண்டு வாய்ஸ் மனதிற்குள் ஓட வெளியே பாவப்பட்ட முகத்துடன் நின்றிருந்தான் வெங்கி,


“அவனை அப்படியே வெளியே போக சொல்லுடி எனக்கு பொறந்துல ஒன்னு இல்லன்னு தலை முழுகிடுறேன்… என் மானம் போச்சி மரியாதை போச்சி வாங்கி வைச்ச நல்ல பேரு எல்லாம் போச்சி…” அவர் கோபத்துடன் உரைக்க,


‘அது என்ன தோல்ல கிடக்கற தூண்டா…? காத்தடிச்சதும் பறந்து போக…” உள்ளுக்குள் அவருக்கு கவுன்டர் கொடுத்தாலும், அப்பா பக்கெட்டுல தண்ணி எடுத்துட்டு வந்து தரட்டுமா வெங்கி சைடு கேப்பில் கப்பலை ஓட்டினான்,


“டேய் கொஞ்சம் நீ சும்மா இருடா” தம்பியை அடக்கி தள்ளி விட்டவன் “அப்பா… ப்ளீஸ் பா அப்படி எல்லாம் பண்ணிடாதிங்கப்பா நிலைமை கைய மீறி போயிடுச்சிப்பா அதான் பா இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டியதா போயிடுச்சி”ஹரி அவருக்கு புரிய வைக்க முயல.….


“மூத்த புள்ளைன்னு அருமை பெருமையா வளர்த்தேனே இப்படி சொல்லாம கொள்ளாம மார்கழி மாசம் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்குறியே…” பிரபாவதி தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.,


“அப்போ தை மாசம் கல்யாணம் பண்ணிட்டு வந்தா சரின்னு சொல்லி இருப்பியாம்மா…?” வெங்கியின் நக்கலில், திருவரங்கநாதன் அவனை கனலுடன் பார்க்க,


“ஓகே.. ஓகே…” என அடங்கியவனுக்கு, வயிற்றை கலக்க,,


“எக்ஸ்க்யூஸ் மீ, சாரி ஃபார் த டிஸ்டபென்ஸ் நேச்சர் காலிங். ஐ அம் கோயிங் ஆஃப்டர் கம்மிங்… அதுவரைக்கும் யூ கண்டினியூ”


என முடிந்தவரை பெரியவனை வைத்து செய்தவன், அங்கிருந்து கழன்று அறைக்கு சென்றான்,


வெங்கியின் செய்கையில் பல்லை கடித்த ஹரி தாய் தந்தையிடம் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தான்.


மெலிதாக விசில் அடித்தபடியே குளியலறை சென்றவன், ஆற அமர அவன் வேலைகளை எல்லாம் முடித்து குளித்து வெளியே வர முக்கால்மணி நேரம் ஆகியிருந்தது. ஈரதலையை துவட்டியபடியே தன் அறையிலிருந்து வெளியே வர, இன்னும் அந்த காதல் ஜோடி வெளியேதான் நின்று கொண்டிருந்தது.


திருவரங்கநாதன் ஒரு பக்கம் திட்டிக்கொண்டு இருக்க, பிரபா ஒரு பக்கம் அழுதிட, ஹரி தன் பக்க தரப்பை கூற முயற்சி செய்து கொண்டிருந்தான்.


நன்றாக விடிந்து விட போவோர் வருவர் எல்லாம் அவர்களை பார்த்துக் கொண்டு சென்றனர். ஒருசிலர் வாசலில் எட்டி எட்டி பார்த்தனர். ஒரு சிலர் கம்பவுண்டு வாசலில் நின்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.


இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே, அவர்கள் அருகே வந்தவன்


“இன்னுமா முடியல உங்க பஞ்சாயத்து…!”


அதிர்வு விலகா பாவனையில் கேட்டதும்,


அவனை திருவரங்கநாதன் தீயாய் முறைக்க… ஹரி, ‘இப்போவாவது காப்பாத்தேன்டா’ என்பதே போல தம்பியை பார்த்தான்.


நாக்கை வாயிற்குள் சுழற்றி ஏதேதோ செய்து அவனை வெறுப்பேற்றியவன், ஹரியின் தவிப்பை பார்த்து மனமிறங்கி,


“இப்படியே வெளியே நிக்கவைச்சி இருக்கும் கொஞ்ச நஞ்சம் மானத்தை நீங்களும், வாங்க போறிங்களாப்பா…?”


“அங்க பாருங்க வெளியே கூட்டத்தை செலவே இல்லாம ஏதோ டைம் பாஸ்க்கு படம் பார்த்துட்டு போறா மாதிரி போறாங்க…”


“ உள்ள கூப்பிடுங்க இல்ல வெளியே அனுப்பி விடுங்க… நீங்களும் அவங்களுக்கு சரிசமமா பண்ணாதிங்க...” என்றான் திருவரங்கநாதனிடம் , எங்கே அடித்தால் எங்கே விழுவார் என தெரிந்து பேசினான் சிறியவன்.


வெளியே கண்களை திருப்பியவருக்கு போவோர் வருவோர் அவர்களையே பார்ப்பது போல இருக்க, வேண்டா வெறுப்பாக மனைவியை பார்த்தார்.


அவருக்கும் அவமானமாக இருக்க மூக்கை உறிந்து தலையில் அடித்துக்கொண்டு மகனை பார்த்தார் பிரபாவதி.


இவர்கள் யாரும் உள்ளே கூப்பிடுவது போல தெரியாததால் வெளியே அவர்களிடம் சென்றவன்…


“ஹாய் அண்ணி… நான் உங்க ஹஸ்பன்டோட பிரதர் பிரணவ் வெங்கடேஷ்… உங்க பெயர் என்ன தெரிஞ்சிக்கலாமா…?”


அவளிடம் மெல்ல பேச்சி கொடுத்தான்.


கடந்த ஒருமணி நேரமாக வாயை பசை போட்டது போல ஒட்டிக்கொண்டு இருந்தவளுக்கு, வெங்கியின் பேச்சு சற்று நிம்மதியை தர கணவன் “தென்றல்” என்று முடிப்பதற்குள் மனைவி “தென்றல் ஏஞ்சலின்” என முழு பெயரை கூறினாள்.,


மருமகளின் பெயரை கேட்கவும், “என்னது ஏஞ்சலினா…?” அதிர்ந்த பிரபாவதி மயங்கி சரிந்தார்.
 
Last edited:

NNK-72

Moderator
களிப்பு♥️2

உன் விழிகளில்

விழுந்து நான் எழுகிறேன்

எழுந்தும் ஏன் மறுபடி

விழுகிறேன்…, உன் பாா்வையில்

தோன்றிட அலைகிறேன் அலைந்தும்

ஏன் மறுபடி தொலைகிறேன்…

ஓா் நொடியும் உன்னை நான் பிாிந்தால்

போா்களத்தை உணா்வேன்

உயிாில்

என் ஆசை எல்லாம் சோ்த்து ஓா்

கடிதம் வரைகிறேன் அன்பேஅலைபேசியில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, தூக்கத்தில் இருந்தவள், அருகில் இருந்த பேசியை துழவி‌ எடுத்து காதில் பொருத்தி ஹலோ என்றாள்.“ஹேப்பி பர்த்டே குட்டிமா…” உற்சாத்துடன் வந்த தந்தையின் குரலில் கண்களை விழித்தவள் “தேங்கியூ பா” என்றாள் மகிழ்ச்சியுடன்.“என்னடா குட்டிமா‌ இன்னும் எழுந்துக்கல போல…” மகளின் பேச்சினை வைத்து வாஞ்சையுடன் கேட்டார் அன்புசெல்வம்.“இன்னும் நீங்க போன் பண்ணலையே பா… உங்க விஷ் கேட்காம அந்த நாளே விடிஞ்சது இல்லையே அதான் எழுந்துக்கல….” செல்லம் கொஞ்சும் மகளின் பேச்சில் புன்னகைத்தவர்,“சாரிடா குட்டி… நீ தூங்குவன்னு தான்‌ அப்பா எழுப்பல… சரி சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வாங்க… குட்டிக்கு இன்னைக்கு புல்லா என்ஜாய்மென்ட் தான்” என்றதும்,உற்சாகத்துடன், “லவ்யூ சோ மச் பா… போயிட்டு வந்து உங்களுக்கு கால் பண்றேன்… “ என அலைபேசியை அணைத்தவள். போனில் தெரிந்த தன்னவனின் புகைப்படத்திற்கு ஆசையுடன் முத்தமிட்டு,“இன்னைக்கு உங்களை மீட் பண்ண வரேன் டார்லி… உங்க கிட்ட எப்படியும் இன்னைக்கு விஷ் வாங்கியே தீருவேன்…” மனதில் நினைத்து அவன் உருவத்தை ஆசையாக வருடியவள் சிரித்தபடியே குளியலறைக்குள் நுழைந்தாள்.அவள் உபய்… பெயரில் மட்டும் வித்தியாசம் இல்லை ஆளே சற்று வித்தியாசமாகத் தான் இருப்பாள். இருபத்தி இரண்டு வயது இளம் தாரகை… அந்த வயதிற்கே உரிய அழகும், துறுதுறுப்பும், அவள் கண்களில் சற்று அளவுக்கு அதிகமாகவே இருந்தது.“உபய்.. உபய்… சீக்கிரம் வாடி” குளியலறையில் இருந்தவளை அழைத்துக் கொண்டிருந்தாள் அவளது தோழி நந்தினி.“ஒன்லி பைவ் மினிட்ஸ்… நந்து…” இப்போ வந்துடுறேன் என்றவள், இருபது நிமிடங்கள் கழித்து தான் வெளியே வந்தாள்.தன் வெந்நிற தேகத்திற்கு இளம் பன்னீர் ரோஜா வண்ணத்தில் உடையணிந்து பதுமையாக வந்தவளை இறுக அணைத்து “ஹேப்பி பர்த்டே டியர்” என வாழ்த்திய நந்தினி“இந்த டிரஸ் உனக்கு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு குட்டிமா” என்றாள் பாராட்டாக.“தேங்க்யூ டார்லு… என்ன இன்னைக்கு காம்ப்ளிமென்ட்ஸ் எல்லாம் தூள் பறக்குது…” உபயின் கேள்விக்கு,“அது அப்படித்தான்… சரி நீ கண்ணை மூடு…” என்றாள் நந்தினி“எதுக்கு அதான் நீ விஷ் பண்ணிட்டியே… வா கோவிலுக்கு போகலாம் நந்து… போயிட்டு வந்து கால் பண்றேன்னு அப்பாகிட்ட சொல்லி இருக்கேன்” உபய் கூறுகையில் அவளை இடைநிறுத்திய நந்தினி,“ஹலோ பர்த்டே பேபி… கண்ணை மூடுன்னு சொன்னா மூடனும் இப்படி கேள்வி மேல கேள்வி எல்லாம் கேட்க கூடாது…” உபயை மிரட்டி கண்களை பொத்தி கூடத்திற்கு அழைத்து வந்தவள், “சர்பிரைஸ்…” எனக் கூவியபடி அவள் கண்களை திறந்து விட்டாள்.கண்களை திறந்தவளுக்கு, இன்ப அதிர்ச்சியாக அவள் முன்னே கேக் மற்றும் அழகிய மலர்கொத்துடன்,“என் குட்டிமாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டா செல்லம்” என்ற வாசகம் தாங்கிய பரிசு பெட்டகம் இருந்தது.அதை பார்த்தவளுக்கு இதழோர புன்னகையுடன், அஞ்சனம் எழுதிய நயணங்கள் நீரில் மிளிர்ந்திட,“தேங்க்யூ… தேங்க்யூ சோ மச் பா…” உணர்ச்சி வசப்பட்டவளை கைபிடித்து அழுத்திய நந்தினி,“போதும் டி பீல் பண்ணது… பர்த்டே பேபி இன்னைக்கு கண் கலங்கலாமா… வா வந்து கேக் கட் பண்ணு.. கோவிலுக்கு போயிட்டு வரலாம்..” அவளை சமாதானம் செய்தாள்.ம் என்ற தலையாட்டலுடன் கண்களை துடைத்தவள், கேக்கை வெட்டி தோழிக்கு ஊட்டியதும், சிறு துண்டை எடுத்து உபய்க்கு ஊட்டிய நந்தினி மீண்டும் ஒரு வாழ்த்தை கூறி, பரிசு பெட்டியிலிருந்த மோதிரத்தை அவள் விரல்களில் அணிவித்தாள்..“ஹேய் நந்து என்ன இது…?” விழிகளை அகலமாய் விரித்து, தோழியை பார்த்தாள் உபய்.“அது அங்கிள் கொடுத்த கிப்ட்.. இது உனக்காக நான் கொடுக்குற கிப்ட்… எப்படி இருக்கு பேபி…” கண்ணடித்தாள் நந்தினி.“உன்னை போலவே செம கீயூட் நந்து..” நெகிழ்வுடன் தோழியை அணைத்த உபய் நந்தினியுடன் கோவிலுக்கு சென்றாள்.

அறையில் நிலவிய நிசப்தத்தை கிழித்துக்கொண்டு , சுற்றியது அந்த காற்றாடி….வாசலில் மயங்கிய பிரபாவை அறைக்குள் படுக்க வைத்திருந்தான் வெங்கி.கலவரம் படிந்த முகமும், அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியுடனும், நகத்தினை முழுவதும் காலி செய்து விடும் நோக்கில் அறை கதவின் மேல் சாய்ந்து நின்றிருந்தாள் தென்றல் ஏஞ்சலின்.புடவை கட்டி வேறு பழக்கம் இல்லாததால் அந்த கவலையும் சேர்ந்துக் கொண்டதில், மனமும் உடலும் சோர்ந்து போய் நின்றிருந்தவளுக்கு, கண்கள் இங்கும், அங்கும் நில்லாமல் சுழன்றது.அவளுக்கு சற்று தொலைவில்

கட்டிலில் படுத்திருந்த, பிரபாவதியின் இருபுறமும் ஆளுக்கு ஒரு பக்கமாக ஹரியும், வெங்கியும் அமர்ந்திருக்க, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்கு கோபத்துடன், மகனை முறைத்துக் கொண்டு திருவரங்கநாதன் கட்டிலின் பக்கவாட்டில் நின்றிருந்தார்.,முகத்தில் தெளித்த குளிர்ந்த நீரின் தயவில் மெல்ல கண்களை திறந்த பிரபாவதி, எதிரே நின்றிருந்த மருமகளை‌ பார்த்து, மீண்டும் ஒரு முறை மயக்க நிலைக்கு செல்ல, அவரைத் தண்ணீர் தெளித்து எழுப்பி அமரவைத்த வெங்கி,“என்னம்மா இதுதான் அழகுல மயங்கி விழறதா…? அண்ணியை பாத்து பாத்து மயங்கி விழுற…? என்றான் சிரியாமல்,


அவன் கரங்களில் பட்டென தட்டிய பிரபா “வாய முடு வெங்கட்… நிலமை புரியாம பேசாத…” என்றார் தழுதழுப்புடன்,“டேய் சும்மா இருடா…” தம்பியை அடக்கிய ஹரி, அன்னையின் கையை பற்ற வர, அவனிடமிருந்து கையை விலக்கிக் கொண்டவர்,


“ஏன்டா‌… ஏன்டா இப்படி பண்ண…? இது உனக்கே நல்லா இருக்கா…? இந்த வீட்டுக்கு இது அடுக்குமா?.?” கண்களில் நீர் திரள மகனை ஏறிட்டார் பிரபா…“நாம தேவை இல்லைன்னு நெனச்சதுனால தானே பிரபா இப்படி‌ பண்ணி இருக்கான் … ஒரு நிமிஷம் ஓரே நிமிஷம் நம்மல நினைச்சி பார்த்திருந்தா இப்படிப்பட்ட காரியத்தை பண்ண மனசு வந்திருக்குமா…?”“அதுவும் வேற மதத்து பொண்ணை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வர்ற அளவுக்கு நாம அவசியம் இல்லாதவங்களா போயிட்டோம்… நாம எல்லாம் செத்துட்டோம்னு நினச்சுட்டான்டி உன் புள்ள” என்றார் அரங்கநாதன் கட்டுக்கடங்காத கோபத்துடன்… இத்தனை கலவரத்திலும் ஒரு ஓரமாய் நின்றிருந்தாள் தென்றல்.


“நான் பண்ணது தப்பு தான்ப்பா… பெரிய தப்பு தான்… இல்லன்னு சொல்லல… சாரி பா… சாரி மா… என்னை மன்னிச்சிடுங்க இதை விட்டா அவ உயிரை காப்பாத்த வேற வழி எனக்கு தெரியல ப்பா…

அஞ்சி வருஷ லவ் பா காலேஜ்ல எனக்கு ஜுனியர் தான் தென்றல்…” என்றதும்,‘அடப்பாவி என்னம்மா கேடி வேலை பாத்து இருக்க… ஆனா இந்த உலகம் என்னைல கெட்டவன்னு சொல்லிட்டு இருக்கு…’ வாயில் கை வைத்து அதிர்ந்து பார்த்தான் வெங்கி.“எப்படியும் உங்கள கன்வின்ஸ் பண்ண முடியும்னு நினைச்சேன் பா..”
‘ராங் டிசிஷன் மை லார்ட்’ அந்நேரம் மேலே தொங்கிய பெருமாள் படத்தை பார்த்த வெங்கியின் மனதில் மைன்ட் வாய்ஸ் ஓடியது.“ஆனா அதுக்குள்ள அவங்க வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சி… அவளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு பண்ணிட்டாங்க… அவளை போகவிடாம தடுக்க எனக்கு வேற வழி தெரியலப்பா..”விழிகள் நீரில் பளபளக்க, உணர்ச்சிவசப்பட்டு பேசிய ஹரியின் முதுகினை தட்டி ஆஸ்வாசப்படுத்திய வெங்கி, கலங்கிய தந்தையின் தோற்றத்தைச் சுட்டிக் காட்டினான்.திருமணம் ஆகி மூன்று வருடம் பிள்ளை இல்லாமல் பெருமாளிடம் வேண்டிக் கொண்டு பிறந்தவன் ஹரி. மார்மீதும் தோள் மீதும் போட்டு அருமை பெருமையாய் வளர்த்த பிள்ளை… இப்போது தன் வாழ்க்கைக்காக கண்கலங்கி நிற்கும் காட்சியைக் காணவும் முடியாமல், அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், தளர்ந்து விட்டார் மனிதர்.குலம், கோத்திரம், மானம், கௌரவம், மரியாதை அத்தனையும் அவரது மண்டைக்குள் அணிவகுத்து நின்றுக் கொண்டிருக்க, மகன் எங்கோ கடைக்கோடியில் நின்றிருந்தான்.


ஹரி “அப்பா…” என அருகில் செல்ல, “வெளியே போ” என, சொல்ல முடியாமல் அந்த இடத்தை விட்டு சட்டென்று எழுந்து சென்று விட்டார் அரங்கநாதன்.


அவரால் இப்போது கூட அவன் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை…


“விட்றா கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்… போக போக செட்டாகிடும்…” சத்தமில்லாது ஹரியிடம் கூறியவன்,


“அங்க பாரு” சோகமே உருவாய் அமர்ந்திருந்த பிரபாவை காட்டினான் வெங்கி.


“எப்புடிடா இவங்கள கன்வின்ஸ் பண்ண போறேன்…. முடியலடா…” பெருமூச்சு ஒன்று எழ ஓய்ந்து விட்டான் ஹரி.


“ஓ… சாருக்கு உடனே ஒத்துக்குவாங்கன்னு கூட நெனப்பு இருக்கா…?” என்றதும், தம்பியை பாவமாக பார்த்தான் அவன்.


“போதும் டா நல்லவனே… உன் மூஞ்சியை இப்படி பாவமா வைச்சிக்காத, பாக்கவே சகிக்கல… கண்டாறாவியா இருக்க…” வெங்கியின் நக்கலில்,


“இது இப்போ ரொம்ப முக்கியம்… டேய்… விளையாடாம ஒரு வழிய சொல்லுடா… பாவம் டா அவ…” ஹரி வெங்கியை ஆபத்பாந்தவனாக பார்த்தான்.


“கொஞ்சம் ஹெவி டாஸ்க் டா நேரம் எடுக்கும்… சட்டுன்னு பண்ண சொன்னா ஹஃவ்..?”


காலரை தூக்கி விட்டு பந்தா காட்டி” ஃபாலோ மீ…” என்றவன்,

“இப்போ சொல்லும்மா உன் பிரச்சனை என்ன…? தீத்துடுவோம்”

தாயின் அருகில் பந்தாவாக அமர்ந்தவன், பெரிய மனிதனின் தோரணையுடன் கேட்டான்,


அவனை வெட்டும் பார்வை பார்த்த பிரபா முகத்தை திரும்பிக்கொள்ள,


“டேய் நீ வேண்டாமா … வீட்டை விட்டு கிளம்பு டா அய்யோக்கிய ராஸ்கல் … அப்பாடா இனி எல்லா சொத்தும் எனக்கு தான்…” அண்ணனிடம் கண்ணடித்து விட்டு அவனது செய்லதிறனை (perfomance) காட்டிக் கொண்டிருந்தான் வெங்கி


“நான் எப்போ டா அவனை வேண்டாம்னு சொன்னேன்…” சட்டென்று எதுவும் யோசிக்காமல் பிரபா சண்டைக்கு வர,


“அப்போ அவனை இருக்க செல்லுறியா மா…. உன் மானம் போச்சே… மரியாதை பேச்சேன்னு… எல்லாம் உனக்கு கவலையா இல்லையா…” சரியாக பிரபாவிடம் போட்டு வாங்கினான் வெங்கி.


“அவனை பாவமாக பார்த்தவர், அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் டா அவ அவ நான்வெஜ் சாப்பிடுவா ல…” என்றார், அழது விடுபவர் போல, அவருக்கு அவர் கவலை.


“ஐஞ்சு வருசமா லவ் பண்ணி இருக்காரு உன் பீத்த புள்ள இந்நேரம் சாரு ஒரு பீஸ் கூட சாப்பிடாமையா இருந்து இருப்பாரு சந்தேகமா இருக்கே….?!?!” வேண்டுமென்றே ஹரியை அன்னையிடம் போட்டு கொடுக்கும் வேலை பார்த்தான் வெங்கி.,


“டேய்…” என பிரபா அலறும் முன் “அய்யோ இல்ல… மா..


நா… நான் இதுவரையும் நான்வெஜ் சாப்பிட்டது இல்லமா இவன் பொய் சொல்றான் மா…” சத்தியம் செய்யாத குறையாக, ஹரி பதறினான்.


ஹரியின் பதட்டத்தில் சிரிப்பு வந்தாலும், கதவின் புறம் நின்றிருந்த தென்றலை “வாங்க அண்ணி, நீங்களும் எங்க ஜோதியில ஐக்கியம் ஆகிடுங்க… எப்பவும் இப்படிதான் வீடு சும்மா கலகலன்னு இருக்கும்” தென்றலை தங்கள் அருகில் அழைத்தான் வெங்கடேஷ்.


தயங்கி தயங்கி நின்றவளை “அட வாங்கன்னா… அவள் கையை பிடித்து அன்னையிடம் அழைத்த வந்தவன், என்னம்மா மூத்த மருமக வந்தாச்சி… ம் மாமியார் போஸ்ட் எல்லாம் எடுத்துட்ட கங்கராட்ஸ்…. டிரீட் எப்போ..” அவர் கரங்களை பற்றி குலுக்க, கையை உதறியவர்,


“என்னடா என்னை மாட்டி விடுற நான் எப்போ சென்னேன் என் மருமகன்னு உங்க அப்பா சொல்லனும்” அவர் தவிப்புடன் மகனைப் பார்த்தார்.


“அவர் தான்‌ ஒத்துக்கிட்டாரே…” என்றார் சட்டென


“எப்போ…” அதிர்ந்த மூவரும்‌ ஒரே நேரத்தில் கேட்க,


தன்னை சுற்றியிருந்த மூவரையும் ஒரு மாதிரியாக பார்த்தவன்,


“அதான் சைலண்டா எழுந்து போயிட்டாரே… அதுலயே தெரியலயா..? அவர் ஒத்துக்கலன்னா இந்நேரம் உன் பெட்டி படுக்கை எல்லாம் ரோட்டுல இருந்து இருக்கும் ராசா… சென்டிமென்டா பேசி ஒரு மலையையே சாய்சிட்டியேடா கைப்புள்ள… அதுக்கெல்லாம் தான் இப்படி பாவமான முகரகட்டை வேணும் சொல்றது” அண்ணனை ஏகத்துக்கும் வாரியவன்,


சிறு இடைவெளி விட்டு “அம்மா எனக்கு ஒரு டவுட்டு இப்போ அண்ணி குத்து விளக்கு ஏத்துவாங்களா…? இல்ல மெழுகுவத்தி ஏத்துவாங்களா…?” தன் பெரும் சந்தேகத்தை எழுப்பிட,


“டேய்…. அந்த தொடப்ப கட்டையை‌ எடுடா… இவனை வைச்சிக்கிட்டு முடியல…” பிரபாவதி ஆத்திரத்துடன் மெத்தையிலிருந்து எழுந்தார்.


அவரிடமிருந்து தப்பித்து கட்டிலின் மறுபுறம் ஓடியவன் “கூல் கூல் தாயே உனக்கும் வேண்டாம் அண்ணிக்கும் வேண்டாம்…. மெழுகுவத்தியை வைச்சி விளக்கை ஏத்திடுங்க… மாரியம்மா போட்டோவோட‌ இனி மேரிமாத போட்டோவும் வைச்சிடலாம்… என்ன அண்ணி உங்களுக்கு டீல் ஓகே தானே…” என்றதும்,


வீட்டிற்குள் அவன் அடிக்கும் லூட்டியில் என்ன நடக்குமோ என்ற பயத்துடன் இருந்த தென்றல் கூட வாய்விட்டு சிரித்து விட்டாள். மனைவி சிரிப்பதை காதலுடன் பார்த்திருந்த ஹரியின் தோளில் கையிட்டு தனியே அழைத்து வந்த வெங்கி,


“போதும் டா… பார்த்து ஜொல்லு விட்டது… நீ விடுற ஜொல்லுல கப்பலே மூழ்கிடும் போ” என்றதும் ஹரி முறைத்துக் கொண்டு தள்ளி செல்ல,


“சரி சரி வா…. ரொம்ப பண்ணாத அண்ணி நடக்கறதை பார்த்து பயந்து இருப்பாங்க ரூமுக்கு கூட்டிட்டு போ அம்மாவை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வரேன்”. என்றான்.


வெங்கியின் வார்த்தைகள் ஹரிக்கு நம்பிக்கை தர, தேங்க்ஸ் என்றான் கட்டிபிடித்து,


“சீ… சீ… என்னடா கண்றாவி இது… கட்டியெல்லாம் பிடிக்கிற கல்யாணம் ஆனதும் கெட்டு போயிட்ட மேன் நீ…”

வெங்கி ஹரியை தள்ளி விட்டான்.


“கட்டி பிடிக்கிறது மட்டும் இல்லடா இதோ முத்தம் கூட கொடுக்குறேன்…” அவனை வெறுப்பேற்றுவதற்காகவே வெங்கியின் கன்னத்தில் முத்தமிட்டு விலகியவன், அவன் சுதாரிப்பதற்குள் மனைவியை அழைத்துக் கொண்டு சட்டென்று அறையிலிருந்து வெளியே சென்றிருந்தான்,.


“எருமை மாடு அண்ணிக்கிட்ட செய்ய வேண்டியது எல்லாம் என்கிட்ட பண்றான் பன்னி பெல்லோ…”


கடுப்பில் அண்ணனை திட்டியபடி கன்னத்தை துடைக்கொண்டு பிரபாவின் பக்கத்தில் சென்று அமர்ந்தான் வெங்கி.


அவன் செய்வதை எல்லாம் ஓரக்கண்ணால் பார்த்த பிரபா முகத்தை தூக்கி வைத்திருந்தார்.


“ம்மா….”


…..


“ம்மா…” வெங்கி அழைக்க அழைக்க, பிரபா குரலே கொடுக்காமல் வேறுபக்கம் திரும்பி அமைதியாக இருப்பதை பார்த்ததும், “கோவமா இருக்கியாமா…?” அவர் முகம் திருப்பி, தன்னை பார்க்க வைத்தான்.


“இல்ல ரொம்ப சந்தோஷமா இருக்கேன் எழுந்து போடா…” என்றார் கடுப்பாக,


“ம்மா என்ன டக்குன்னு போடான்னு சொல்லிட்ட எவ்வளவு பெரிய பிரச்சனைய பக்குவமா பேசி முடிச்சிருக்கேன்… போடான்னு இன்சல்ட் பண்ற நீ…?” வெங்கியின் அலட்டலில் பிரபா அவனை கடுப்புடன் பார்த்தார்.


“அவன் பண்ணதுக்கு எல்லாம் நீயும் தாளம் போடுற ல… அப்புறம் நாங்க எதுக்கு இங்க தண்டமா இடத்தை அடைச்சிக்கிட்டு…” ஆதங்கத்துடன் மகனை முறைத்தார் பிரபா.,


“பிரபா… கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தது அவன்… நீ என்னை வறுக்குற… சரி அதை விடு… இந்த காதலுக்கு மரியாதை…. அலைபாயுதே… இந்த மாதிரி லவ் சினிமா எல்லாம் நீ பார்த்தது இல்ல…? லவ்வுன்னா எவ்வளவு எமோஷன் தெரியுமா பிரபா…? ஃபீல்… பியார்… அதுக்கு நாம மரியாதை கொடுக்கனும் ல…!!” அவன் காதலை பற்றி சிலாகித்து பேசிக் கொண்டே போக,


“ஹேய்…. ஹேய்… கொஞ்சம் நிறுத்து… நீ என்ன அவன் காதலுக்காக இவ்வளவு பேசுற…?” சந்தேகமாக அவனை பார்த்தார் பிரபா.


“நீ‌ என்ன ம்மா என்னை சந்தேகமா பாக்குற…” சட்டென அவன் உடல் மொழியில் வேறு மாற்றம் வர அவன் சட்டை காலரை இழுத்து, பக்கத்தில் இருத்தியவர்,


“உன் முகரைய பாத்தாலே எனக்கு சந்தேகமா இருக்கு… முதல்ல நீ என் கையில அடிச்சி சத்தியம் பண்ணு…” என்றார் பிரபா அழுத்தமாக,


“என்னன்னு…?” அவன் இழுக்க
“நானும் உங்க அப்பாவும் சொல்ற பொண்ணை தான் நீ கட்டிக்குவேன்னு… காதல் கத்திரிக்கான்னு சுத்த மாட்டேன்னு சத்தியம் பண்ணு”


“ம்மா… இதெல்லாம் ஒரு சத்தியம்னு கேட்டுக்கிட்டு நான்லாம்‌ அப்படி இருப்பேனா…?” அன்னையிடமே கேள்வியை முன் வைக்க


“உன் அண்ணன் கூட இப்படி தான்டா எங்களுக்கு அடங்குறவன்னு சொல்லி சொல்லியே மண்ணை அள்ளி வைச்சிட்டான்… உன்னை எல்லாம் நம்புறா மாதிரியே இல்லை முதல்ல என் கையில அடிச்சி சத்தியம் பண்ணு…” அவர் விடாப்பிடியாக அதிலேயே நின்றார்…


சங்கடமாக இளித்து வைத்தவன் “சத்தியம் பண்ணியே ஆகனுமா…?” என்றான் உடலை வளைத்து கோணியபடியே


“பண்ணுடா….” அவர் மிரட்டல் விட,


இதற்கு மேல அவனாலும் போராட முடியாது என அறிந்தவன், அவர் கரங்களில் ஐந்து விரல்ஙளையும் குத்தி சட்டென எடுத்து விட்டான்.


“என்னடா இது..?”


“இல்லம்மா ஒரு வேளை லவ் வந்துட்டா….?”


“தொடப்பகட்டை பிஞ்சிடும்….”


“ம்மா… எத்தனை முறைதான் தொடப்பக்கட்டையை பிச்சி வைப்ப இந்த வீட்டுக்கு தொடப்பம் வாங்கி கொடுத்தே எங்க அப்பா சொத்தை அழிக்குற நீ” வெங்கியின் குசும்பு பேச்சில் பிரபா அவனை அடிக்க எழுந்திட,


“சரி டார்லிங்… சரி … கோச்சிக்காத நீ சொல்ற பொண்ணை தானே நான் கல்யாணம் பண்ணனும் ம்.”. என தொண்டையை செறுமி கனைத்து, கழுத்தை நீவி, அப்படி இப்படி என நடந்து, இல்லாத அலப்பரைகளை எல்லாம் செய்து திருட்டு முழி முழித்துக் கொண்டு சத்தியம் செய்ய கை வைத்து சட்டென எடுத்து விட்டான்.


அவன் அட்டகாசங்களை எல்லாம்

பார்த்த பிரபா… “நீ செய்றதை பார்த்தா உன்னை நம்ப முடியலையே டா” அவர் சந்தேகமாக பார்க்க…


“அதான்… அதான்… இந்த சத்தியமே பண்றது இல்ல..

இந்த மாதிரி சந்தேகப்பட்டா நான் சத்தியத்தை வாபஸ் வாங்கிட்டு சக்கரை பொங்கலும் சாப்பிடாம போயிடுவேன்…” அவன் அடித்த லூட்டியில் சத்தியத்தை மறந்து சக்கரை பொங்கல் நினைவுக்கு வர,“நான் எப்போட சக்கரை பொங்கல் செய்தேன்….” என்றார் பிரபா திகைத்தவராக,


“வீட்டுல ஒரு நல்லது நடந்து இருக்கு சக்கரை பொங்கல் கூட செய்து போட மாட்டியாமா….?” அவன் உரிமை குரல் எழுப்ப


“டேய் வயித்து எரிச்சலை கொட்டாதே இங்கிருந்து போடா….” அவனை விரட்டி விட்டார் பிரபா


“போறேன் போறேன்… நீ போய் அவங்கள கவனி தாயே” அவர் கன்னங்களை கிள்ளி முத்தமிட்டவன் “மீ கோயிங் நைட் கம்மிங் பை”என அவன் வெளியே சென்று விட போகும் அவனையே இவனை நம்பலாமா வேண்டாமா என்கிற ரீதியில் பரிதாபமாக பார்த்தார் பிரபா…..


Thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10672/
 
Last edited:

NNK-72

Moderator
களிப்பு ❤️ 3

பொன்னை‌ உருக்கி வார்த்தது போல தங்க நிறத்தில் ஜொலித்த ஆதவனின் வெம்மையில், தகித்திருந்த உபயும் நந்துவும் திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலில் சாமி தரிசனம் முடித்து, பேசிக்கொண்டே கீழே இறங்கி வந்தனர்.


“திருச்சியில இன்னைக்கு தான் ஏதோ வெயில் கம்மியா இருக்கா மாதிரி இருக்கு…”உபயிடம் சொல்லிக்கொண்டே வண்டியில் ஏறி அமர்ந்தாள் நந்தினி.


“அப்போ வாயேன் நந்து ஒரு காபி குடிச்சிட்டு போகலாம்…”உபயின் அழைப்பில், சற்று தலையை உயர்த்தி வானத்தை பார்த்தவள்,


“ ஏய் ஒரு பேச்சிக்கு வெயில் பரவாயில்லைன்னு சொன்னா உடனே காபி குடிக்க கூப்பிடுற… பத்துமணிடி, வெயில் மண்டையை பொளக்குது உபய்”, அயர்ச்சியுடன் முகத்தை சுருக்கினாள் நந்தினி.


“மூஞ்சியை சுருக்காதே ஒரு காபிக்கு ஒன்னும் தீஞ்சி போயிட மாட்ட வாடி…”அவளை இழுக்காத குறையாக வண்டியின் பின்னால் அமரவைத்தவள், தலையில் ஹெல்மெட்டை மாட்டி ஸ்கூட்டியை உயிர்ப்பித்திருந்தாள்.


“சரி, அப்போ அங்க ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கு அங்க போகலாம்.”எதிரில் இருந்த ரெஸ்டாரன்டை கைகாட்டி பேசிய, நந்துவின் பேச்சுக்கள் யாவும் விழலுக்கு இறைத்த நீரைப்போல உபயோகமற்று போனது உபயின் அடுத்த கட்ட நடவடிக்கையில்,


“இங்க வேணா நந்து அங்க ஒரு கஃபே இருக்கு சூப்பரா இருக்கும் அங்க போகலாம்…” என ஒன்றரை மணி நேர பிரயாணத்திற்கு பிறகு வரும் ஒரு கஃபேவிற்கு அழைத்து சென்றாள் உபய்.


“ஏய் உன் லொல்லுக்கு அளவே இல்லையாடி…?”நந்து சலித்துக்கொண்டு எரிச்சலுற்றது எல்லாம் அவுட் ஆஃப் போகஸில் சென்று விட, காரியத்திலேயே கண்ணாக இருந்தவள், உச்சி வெயிலில்

த கஃபி கிளப் (the coffee club) முன்பாக வண்டியை நிறுத்தினாள்.உற்சாகத்துடன் ஸ்கூட்டியிலிருந்து இறங்கிய உபய், துப்பட்டாவை தலைக்கு சுற்றி மூக்கையும் மூடிக்கொண்டு கருப்பு நிற கூலீங் கிளாசையும் அணிந்து, “போகலாமா..” என்றாள் நந்துவிடம்,


கண்ணை கட்டி காட்டில் விட்டது போல, இறங்கியதிலிருந்து நாலாபக்கமும் சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நந்தினி,

தோழியின் குரலில் திரும்பி பார்த்ததில், ஜர்க்காகி நின்றவள்,


“என்னடி இது கொள்ளை கூட்டத்து தலைவி மாதிரி மொத்த மூஞ்சியை மூடிக்கிட்டு நிக்குற..?” கிட்டதட்ட அலறியே விட்டாள் நந்து.


தோழியின் அலறலில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் தங்களை வேடிக்கை பார்ப்பதை கண்டு “ஏய் நந்து ஏன் இப்படி கத்துற” உபய் தோழியின் வாயை அடைக்கப் பார்த்தாள்,


“ஏய்‌ என்னடி இது கோலம்… ?” அவளிருந்த கோலத்தை சுட்டி காட்டி கேட்டதில், சற்றே கடுப்பான உபய்


“ ம் வேண்டுதல் வாடின்னா …” உபய் அவளை இழுக்காத குறையாக உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள்.


“மனசாட்சியே இல்லையாடி உனக்கு உச்சி வெயில்ல காஃபி குடிக்க கூட்டிட்டு வந்து இருக்க”, நந்து அழும் நிலைக்கு செல்ல,


“கோல்ட் காஃபி வாங்கி தரேன் … பேசியே சாகடிக்காத நந்து… இன்னைக்கு என் பர்த் டே நான் சொல்றதை தான் கேக்கனும்” சிறுகுழந்தையின் சாயலில் அடம்பிடித்து நிற்கவும்,


சலித்துக்கொண்டே உபயின் பின்னால் சென்றவள், நீ பண்றது எல்லாம் பார்த்தா… உபயின் நடை நின்றதில் சொல்லிக் கொண்டிருந்ததை நந்து பாதியில் நிறுத்தினாள்,


“பார்த்தா என்ன…?”


“இல்ல…”


“என்ன இல்ல…?”


“ஒன்றுமேயில்லை…” என்றவளுக்கு உபயின் நடவடிக்கைகள் சிலநாட்களாகவே வித்தியாசமாகப்பட்டது.


‘இந்த பால்கோவா எதுக்கு இப்படி பம்முறான்னு தெரியலையே..?’ என கஃபேயின் உள் அமைப்பை சுற்றி பார்வையே சுழலவிட்டவளுக்கு, என்ன முயன்றும் மூளைக்கு ஒன்றும் புலப்படவில்லை….


அங்கு கவுன்டரில் இருக்கும் நபரை பார்த்துக் கொண்டே அவன் முகம் தன் முன்னால் உள்ள கண்ணாடியின் ஊடாக தெரிவது போல அமர்ந்துக் கொண்டாள் உபய்…


உபயின் போஃக்கஸ் முழுவதும் கவுன்டரில் பில் போட்டுக்கொண்டிருந்த வெங்கியின் மீது மட்டுமே இருந்தது. கூலிங் கிளாஸ் போட்டது வேறு அவளுக்கு வசதியாக போய்விட, உபய் அவனை பார்ப்பது நந்துவின் ஆராயும் பார்வைக்கு புலப்படவில்லை… கவுன்டரில் நின்றிருந்தவன் நண்பனிடம்‌ ஏதோ பேசிக்கொண்டே பில் போட அவனை ரசனையுடன் பருகியது அவளது, மை விழிகள்.


“உபய்… ஏய் உபய்…” தூக்கத்திலிருந்து விழிப்பது போல இரண்டு முன்று அழைப்புக்களுக்கு பிறகு “ஹான்,” என தன்னிலை மீண்டு “சொல்லு நந்து” என்றிட


“உனக்கு என்னடி ஆச்சி இன்னைக்கு உன் பார்வை பேச்சு நடவடிக்கை ஒன்னும் சரியில்லை… சரி சொல்லு என்ன வேணும் உனக்கு…”என்றாள் நந்தினி அவளை‌ ஏற‌ இறங்க பார்த்து.


“எனக்கு ஒரு கோல்ட் காஃபி உனக்கு‌ என்ன வேணுமோ வாங்கிக்கோ” என்றவள் விடாமல் அவனை சைட் அடிக்கும் பணியினை தொடர்ந்தாள்.


“கண்டுபிடிக்கிறேன் டி கண்டு பிடிக்கிறேன்… இந்த பால்கோவா ஏன் இந்த காஃபேக்கு வரனும்னு அடம்பிடிச்சுதுன்னு கண்டுபிடிக்கிறேன்…” நந்து மனதில் சூலுறைத்துக் கொண்டு சென்றாள்.


மேற்கத்திய மெல்லிய இசை அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திட பன்னீர் ரோஜா நிறத்தில் அவள் உடைக்கு பொருத்தமாக பெங்களூர் ரோஜாக்கள் அங்கிருந்த டேபிள்களின் மேலிருந்த பிளவர்வாஸ்களில் இடம் பெயர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது.…


காற்றில் கமழ்ந்த காபிக்கொட்டையின் நறுமணம் காஃபி பிரியர்களுக்கு தனி புத்துணர்வை கொடுத்திருக்கும்…

ஆனா உபய் தான் அவ ஆளை சைட் அடிக்க வந்து இருக்காளே அவளுக்கு இதெல்லாம் பெரியதாக தெரியவில்லை லாங் டிஸ்டன்ஸிலும் ஷாட் டிஸ்டன்ஸிலும் அவன் மட்டுமே தெரிந்தான்.


“உபய் எடுத்துக்க” அவளிடம் ஒன்று கொடுத்தவிட்டு தனக்கும் ஒன்றை எடுத்துக்கொண்ட நந்து முக்கிய அழைப்பு வரவும் அவளிடம் சொல்லி விட்டு தொலைபேசியுடன் சற்று தூரம் நகர்ந்து சென்றாள்…


எப்படி அவன் கிட்ட பேசுறது என்ற யோசனையின் பிடியில் இருந்தவளுக்கு பக்கத்தில் இரு குழந்தைகளுடன் தம்பதியர் அமர்ந்திருக்க ஐடியா என எழுந்தவள் அந்த குழந்தையை கொஞ்சி விட்டு கவுன்டரை நோக்கி சென்றாள்.


“மச்சி இரண்டு கேப்பசீனோ ஒன் அமெரிக்கனோ” ஆர்டரை கூறியவன் ரெடியானதும் கூப்பிடுறேன் சார் என்ற வெங்கி அடுத்தவரை கவனித்துக் கொண்டு இருந்தான்.


“ஹாய்…” எதிரே கேட்ட பெண்ணின் குரலில் “எஸ்… யுவர் ஆர்டர் மேம்…” எல்லோரிடமும் கேட்பது போல அணுகியவன் அவள் ஏதும் சொல்லாமல் இருக்க தலையை உயர்த்தி அவளை பார்த்தான்.


படங்களில் வரும் ஹன்சிகாவை போல முகம் முழுவதும் துப்பட்டாவால் மூடியிருக்க,... வெங்கியின் வழக்கமான குறும்பு தலை தூக்கியதில், “யார்ரா இவ சம்பல் காட்டு கொள்ளைக்காரி மாதிரி மூஞ்சை மூடிக்கிட்டு வர்றா…” நேரம் காலம் தெரியாமல் மண்டைக்குள் மைன்ட் வாய்ஸ் வந்து போக, அவள் நிற்பதை கண்டு சட்டென சுதாரித்தவன் சொல்லுங்க மேம் என்றான் சாதரணமாக,


அவளை பற்றி வெங்கி நினைத்தது தெரியாமல் “ஐய் ஐய் பேசிட்டானே… பேசிட்டானே” உள்ளுக்குள் குதுகலமாக “டுவன்டி ஃபை டெய்ரி மில்க் சாக்லேட் கொடுங்க…” என்றாள் தன் ஆர்பரிப்பை அடக்கியவளாக,


“யா…. இந்தங்க மேம்” புன்னகை முகமாக அவளிடம் நீட்டினான் வெங்கி.


அதை வாங்கிக் கொண்டவளது பளிங்கு கரங்கள் வெளியே தெரிய “ஒருவேளை தே….னடையா… இருக்குமோ…” வெங்கி தன் மனதில் நினைக்க, தொடப்பக்கட்டை பிஞ்சுடும் பிரபாவின் குரல் எதிரொலியாக கேட்டதில் சட்டென அந்த எண்ணத்தை கைவிட்டு அவளை பார்த்தான்.


அவனிடமிருந்து வாங்கிக்கொண்டவள் “ஹாய் அயம்‌ உபய் இன்னைக்கு என் பார்த் டே…. இந்தாங்க சாக்லேட்” . மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒன்றை அவனிடம் நீட்டியவள் அவன் உதிர்க்கும் சொற்களுக்காக ஆவலுடன் காத்திருந்தாள்.


“ஓ… இந்த கொள்ளைக்காரிக்கு பேரு உபயா… பேரு வித்தியாசமா இருக்கே…” மனதில் நினைத்தபடியே “ஹேப்பி‌ பர்த் டே உபய்” சாக்லேட்டை வாங்கிக் கொண்டவன், “ஒரு நிமிஷம்….” என அவளை நிற்க வைத்தான். அவள் என்ன என்பதை போல வெங்கியை பார்த்திட,


“பார்த் டேன்னு சொல்றிங்க எப்படி வெறும் கையோட விஷ் பண்றது பர்த் டே பேபி ஏமாந்து போயிடாது” பேசிக்கொண்டே பக்கத்தில் இருந்த சாக்லேட் பெட்டியிலிருந்து சாக்லேட்டையும் மேஜையின் மேல் குடுவையிலிருந்த ஒற்றை ரோஜாவையும் எடுத்து அவளிடம் நீட்டியவன் “ஹேப்பி பர்டே உபய் இந்த பர்த் டே ல நீங்க நினைச்சது எல்லாமே நடக்கும்…” என்றான் அழகாக புன்னகைத்து…


அவன் புன்னகையில் லயித்து தன்னை மறந்து நின்றிட,( என்ன இந்த பொண்ணு ஏதோ சிலை மாதிரி நிக்குது… ) ஹலோ..

‌யம்மா… இந்தம்மா… எச்சூயூஸ் மீ மேடம்… அவன் விதவிதமாக அழைக்கவும் தன்னிலை உணர்ந்தவள் தயக்கமாக சிரித்துக்கொண்டே,


“ அது… அது… ஏதோ யோசனையில நின்னுட்டேன்…” என்றபடி அந்த சக்லேட்டின் மேல் உறையை பார்த்தவளுக்கு இறகில்லாமல் வானத்தில் பறப்பது போல உணர்வு தோன்றியது.


“லவ் ட் ….லவ் ட்…” சாக்லேட்டில் மேல் உறையில் இருக்கும் பெயரை வாய் விட்டு இரண்டு முறை கூறி பார்த்தாள். கூடவே ரோஜா மலர்… இரண்டையும் பார்த்து கண்கள் மின்னியது.


‘நா.. நா…‌ஒரு விஷ் தான் கேட்டேன் ஆனா நீ… நீ எனக்கு எது தேவையோ அது கொடுத்து டா ஐ லவ் யூ டா…. ஐ லவ் யூ சோ மச் டா…’ மனதிற்குள் சொல்லிக்கொண்டவள்,


மிகுந்த உற்சாகத்துடன் ரொம்ப “ரொம்ப தேங்கஸ்ங்க…” சந்தோஷத்தில் வெங்கியின் கரங்களை குலுக்கி நன்றி தெரிவிக்க ஏற்கனவே உள்ளுக்குள் மானவாரியாக கவுன்டர்களை அள்ளி தெளித்துக் கொண்டிருந்தவன், தற்போதைய அவள் நடவடிக்கையில்


‘இவ என்ன லூசா… அதுசரி இப்போ எல்லாமே இப்படித் தானே திரியுதுங்க… ‘ என்னும் விதத்தில் நினைத்தவன், இதுவரையிலும் தன் கையை விடாததில் அவளையும் தன் கையையும் வித்தியாசமாக பார்த்தான்…


அவன் பார்வையை உணர்ந்து வெங்கியின் கரங்களை சட்டென விட்டவள்,


“இல்ல முதல் விஷ் நல்ல வார்த்தை சொன்னதுக்காக சாரி” என சிரித்து வைக்கவும, அதுசரி என்பது போல பார்த்து விட்டு அவன் வேலையை தொடர்ந்திட, உபய் அங்கிருந்த எல்லோருக்கும் சாக்லேட்டை வழங்கினாள்.


இந்த வாய்ப்பு தனக்கு கிட்டுவதறக்கு காரணமாக இருந்த குழந்தையை தூக்கி கொஞ்சி கன்னத்தில் முத்தமிட்டு ஒன்றிற்கு இரண்டாக இனிப்பை வழங்கிவிட்டு மீண்டும் தன் இடத்திற்கு வந்து அமர்ந்தாள் கொண்டாள் உபய்.


“டேய் யாருடா அந்த பாக்தாத் பேரழகி கையெல்லாம் குலுக்கிட்டு இருந்த..?” அடுத்த ஆர்டரை வாங்கிக்கொண்டே வெங்கியை பார்த்தான் அருண்.


“ அழகியா…. அது‌ யாருடா …‌எனக்கு தெரியாம!!” அருணை கேட்டுக் கொண்டே சுற்றும்‌ முற்றும் திரும்பி பார்த்தான் வெங்கி


“அதோ… இவ்வளவு நேரம் உன்கிட்ட பேசிட்டு போகுதே அந்த புள்ளைய தான்டா சொன்னேன் ” உபய் இருந்த இடத்தை சுட்டி காட்டி அருண் கேட்கவும்…


“அவளா…!! அவளப் பார்த்தா உனக்கு அப்படியா தெரியுது…!! கொள்ளைக்காரி மாதிரி மொத்தமா மூடிக்கிட்டு இருக்கா நீ பேரழகிங்கற…” ஒரு மார்கமாக அருணை ஏற இறங்க பார்த்தான் வெங்கி….


“இப்போ அதுதான் மச்சி பேஷன் ஆமா என்ன விஷயம்… ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்தா மாதிரி இருந்துச்சி….” வெங்கியின் தோளில் கையிட்டு ரகசியமாக கேட்க…


உன் மூஞ்சி…. அவளுக்கு என்னமோ பர்த் டே வாம் சாக்லேட் கொடுத்தா… ஆனா கொஞ்சம் லூசு போல டா அடிக்கடி அப்படியே நின்னுக்குது டா… என்னன்னு தெரியல… ஒரு வேளை மரகழண்டுருக்குமோ“ ஏற்ற இறக்கமாக‌ நண்பனிடம் கூறினான் வெங்கி.


பொண்ணுங்க லூசா இருந்தாலும் அழகு தான்டா… என்ற அருணின் கண்டுபிடிப்பில்


“ஏதே… உனக்கு அழகு தெரியதா… எனக்கு ஒரு மண்ணும் தெரியலையே டா…. கழுத கால்ல கூட ஷூவை போட்டு மறச்சி வைச்சிருக்கா டா முட்டாப்பையலே இந்த அழகுல இவருக்கு அந்த பொண்ணோட அழகு தெரியுதாம்மா உன் ரசனையில தீயை வைக்க…” வெங்கி அருணை கலாய்த்து தள்ள,.


“ஆமா… இவரு ரொம்ப ரசனைய கண்டுட்டாரு உலக அழகியே வந்தாலும் அதுல ஆயிரத்தெட்டு குறைய கண்டுபுடிச்சி சொல்லுவ உனக்கு எல்லாம் பாவம் பாத்து எவளாவது ஒருத்தி வாழ்க்கை கொடுத்தாதான் உண்டு…”


மாற்றி மாற்றி நக்கலடித்து கொண்ட, இருவரும் தங்களை யாரோ முறைப்பது போல தோன்ற தலையை திருப்பி பார்த்தனர். அங்கே இடுப்பில் கையை வைத்து இருவரையும் முறைத்துக்கொண்டு நின்றிருந்தான் விவேக்.


“அய்யோ…” இருவரும் ஒரே நேரத்தில் திரும்ப,


“ அங்க உள்ள ஒருத்தன் வெந்து நொந்துட்டு வர்றேன் இங்க என்னடான்னா சின்னப் புள்ளதனமா விளையாடிக்கிட்டு இருக்கிங்க..?” விவேக் கொதித்து நிற்க,


ஆராயும் பார்வையுடன் அவனை சுற்றி சுற்றி வந்தான் அருண்.


“அடச்சி நில்லு உலகத்தை சுத்தி வர்றா மாதிரி என்னை சுத்தி வர்ற” விவேக் அருணை பிடித்து நிற்க வைத்தான்.


“இல்ல வெந்துங்கிட்டு இருந்தேன்னு சொன்னியே அதான் எங்க வெந்து இருக்குன்னு பாக்குறேன்…” கூறிக்கொண்டே அவனை அப்படியும் இப்படியுமாக பார்த்தவன் “எங்கடா வேகவே இல்ல சட்டைய கழட்டு பாக்கலாம்…” என்றதும் வெங்கியும் விவேக்கும் அருணை அடிக்க கையை ஓங்கிட,


இவ்வளவு ரணகளத்திலும் வெங்கியின் கையிலிருந்த சாக்லேட்டை பார்த்தும் அருண் அதை பறிக்க முயல “மவனே சாக்லேட்டுல கையை வைச்ச முதல் டெட்பாடி நீதான் டா…” அருணை மிரட்டி உருட்டி அதை வாயில் போட்டு கொண்ட வெங்கி சிறுபிள்ளை போல அவனுக்கு பழுப்பு காட்டினான்.


“கிரேட்‌ இன்சல்ட்” அருண் தன் நெற்றியில் குத்திக்கொள்ள “அட எருமைங்களா ஒரு சாக்குலேட்டுக்கு என்ன பர்பாமன்ஸ் டா பண்ணுறானுங்க சீக் தூரப்போங்க…” விவேக் இருவரையும் காரித்துப்பாதக் குறையாக திட்டி விட்டான்.


“எங்களை சொல்றியே குரங்கே… தினமும் ரெண்டு சாக்குலேட்டை ஆட்டைய போட்டு திங்குறவனே நீதானேடா…” அருண் விவேக்கை வெங்கியிடம் கோர்த்து விட ஒருவரை ஒருவர் வாரியபடி மூவருக்குள்ளும் அந்த நிமிடங்கள் ரகளையாக சென்றது.


வெங்கடேஷ், அருண், விவேக் மூவரும் பள்ளியில் இருந்து கல்லுரி காலம் வரை ஒன்றாய் படித்தவர்கள் சிறுவயது முதலே நண்பர்கள்… கலகலப்பிற்கும் கலாட்டா விற்கும் பெயர் போனவர்கள் படித்து முடித்ததும் மூவரும் ஒன்றாக சேர்ந்து இந்த காபேஃவை நடத்தி வருகின்றனர். இதிலிருந்து எப்படியாவது மகனை வெளியே இழுத்து தங்கள் கடைக்கு வரவைக்க முயன்று கொண்டிருக்கிறார் திருவரங்கநாதன்.


“டீ கடையில நின்னு டீ ஆத்தினாலும் ஆத்துவேன தவிர அந்த பாத்திரக் கடையில ஈயஞ்சட்டிய விக்க மாட்டேன்” என கழுவுற மீனில் நவழுவுற மீனாக இருந்தான் நம்ம வெங்கி… (அய்யோ பெருமாளே ராங் சிங்கில் போகுதே… ம்) தகப்பனாருக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறான் வெங்கி.


அந்த சாக்லேட் பிரச்சனை இன்னும் முடியாமல் போக, “மச்சி இத்தனை பேர் இருக்கோம் எங்களையெல்லாம் விட்டுட்டு உன்னை மட்டும் தேடி வந்து சாக்லேட் கொடுத்துட்டு போனா அது இருக்குன்னு தானே அர்த்தம்” அருண் வெட்கப்பட்டுக் கொண்டே வெங்கியிடம் நூல் விட்டு பார்க்க,


“அடேய் போதும் டா ஒருத்தன் இன்னைக்கு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து படாதபடுபடுறான் அதுக்குள்ள இன்னொன்னா அந்த பொண்ணை பார்த்தது கூட இல்லையேடா…” வெங்கி தன் வீட்டின் நிலையை வைல்ட் எஃப்கட்டுடன் , காலையில் நடந்ததையும் அவன் சத்தியத்தையும் கூறி முடிக்க,


“சத்தியமெல்லாமா பண்ண…?” விவேக் ஆச்சர்யமாக கேட்டதும்,


“பண்ணிட்டேனே…” பெருமூஞ்சு விட்டான் வெங்கி.


“மச்சா சத்தியத்தை காப்பத்துவ” அருணின் கல்மிஷ கேள்விக்கு


“அது கஷ்டம் மச்சி” வெங்கியின் பதிலில் வில்ல சிரிப்பு சிரித்தனர் இருவரும்.


அவர்களின் ரகளையை ரசித்துக் கொண்டே காபி குடித்துக் கொண்டிருந்த உபயிடம், “ டார்லு அர்ஜன்ட் டி தங்கம் கிளம்பலாமா… அந்த மேனேஜர் பக்கி ரெண்டு வாட்டி கால் பண்ணிட்டான் லீவுன்னு சொன்னா கூட விட மாட்டுறான்டா” நந்து உபயிடம் கொஞ்சலும் கொஞ்சலுமாய் கூறிட,


“ஓகே… ஓகே.. கிளம்பலாம்…” பெரிய மனது செய்து கிளம்ப ஒத்துக்கொண்டவள், அவள் அழகனை கண்களால் நிரப்பிக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.


பேசிக்கொண்டிருந்த மூவரில் அவள் செல்வதை பார்த்த அருண்.


“டேய் போறா… போறா டா அந்த பொண்ணு போறாடா” பரப்பரப்புடன் வெங்கியை தட்டியவன் உபய் செல்வதை காண்பிக்க,


டேய் என்னமோ நான் லவ் பண்ண பொண்ணை எவனோ ஒருத்தன் தள்ளிக்கிட்டு போறா மாதிரி ஏன்டா பதறடிக்குற போனா போகட்டும் விடேன்டா” அருணிடம் கடுப்பாகினான் வெங்கி,


நண்பர்களின்‌ முகரையை வைத்தே அவர்களின் சேட்டைகளை புரிந்துக் கொண்டவன்,


“டேய் யப்பா சாமிகளா ஏதாவது கிளப்பி விட்டு வீட்டுல தீபாவளியை வர வைச்சிடாதிங்கடா தாங்காது என்‌ உடம்பு… அப்புறம் எங்க அப்பா நவீன துர்வாசரை மலை இறக்கறது ரொம்ப கஷ்டம்… பிரபா கிட்ட இருந்து ப்ரும் ஸ்டிக் பறக்கும்”

பீதியுடன் கூறிய, வெங்கி அவர்களை துரத்தி விட்டாலும்,


மனதிற்குள் அந்த பளிங்கு கரங்கள் தெரிய அடுத்த நொடி “தொடப்பக்கட்ட‌ பிஞ்சிடும்” என்னும் தாயின் குரலோடு சேர்ந்து துடைப்பம் பறந்து வருவது போல மனத்திரையில் கண்டவன் மம்மி என திடுக்கிட்டுதான் போனான்.

Thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10672/
 

NNK-72

Moderator
களிப்பு ❤️ 4

திருச்சியில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது

அமுதம் இன்ஸ்டியூஷன் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்.


திறமைமிக்க பல பேராசியர்களையும் பல்லாயிரக் கணக்கான மாணவ மாணவியர்களையும் தன்னகத்தே கொண்டு கம்பீரமாக உயர்ந்து நின்றிருந்தது அந்த அடுக்கு மாடி கட்டிடமும் பரந்து விரிந்த கல்வி வளாகமும்,


“ஹேய் … ஶ்ரீ… கொஞ்சம்… கொஞ்சம் நில்லு ஶ்ரீ..”. தன்பின்னே கேட்ட ஆணின் குரலில் கோபத்துடன் திரும்பியவள், “இப்போ என்ன வேணும் பிரஜன்.?” என்றாள் ஶ்ரீ, கோபத்தை அடக்கியவளாக


“பெருசா என்ன கேட்டிட போறேன், எப்பவும் கேக்குறதுதான்…” தலையை கோதிக்கொண்டே பேசினான் பிரஜன்.


“உனக்கு பல முறை என் பதிலை சொல்லிட்டேன் பிரஜன்… ஆனா, நீ மறுபடியும் மறுபடியும் இப்படி பண்றது கொஞ்சம் கூட சரியில்ல… உன் லவ்வுக்கு நீதான் பொறுப்பு…” கோபத்தை கூட அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தினாள் ஶ்ரீ.


“புரிஞ்சிக்கிறவ கிட்ட போய் பேசலாம் ஶ்ரீ எனக்கு புரியாது… நீ சொன்னாலும் நின்னு கூட கேட்க மாட்டேன்னு சொல்றவங்க கிட்ட போய் என்ன சொல்றது… நீ தான் கொஞ்சம் எனக்காக அவ கிட்ட பேசனும்”பிரஜன் வேண்டுகோளாக அவளை பார்த்தான்.


அவன் கெஞ்சலில் சில நிமிடங்கள் யோசித்தவள், “இந்த ஒரு முறை பேசுறேன் பிரஜன் அவ மாட்டேன்னு சொல்லிட்டா, என்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது…” தீர்க்கமாக உரைத்தவள் கல்லூரி வளாகத்தின் உள்ளே நுழைந்து விட்டாள்.


அந்த கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மண்ட் கோர்ஸின்

கடைசி வருட மாணவி தான் ஶ்ரீ… காண்போரை வசிகரிக்க கூடிய பேரழகி… வகுப்பில் அனைவரிடமும் அன்பாகவும் சரிசமமாகவும் பழக்கூடியவள் என்பதால் தான் இவ்வளவு பிரச்சனை… தன் உடன் பயிலும் ஸ்வேதாவை பிரஜன் விரும்ப அவர்களுக்காக தூது புறா வேலையை செய்ய சொல்லி பிரஜன் கெஞ்சிக் கொண்டிருக்க அதை தான் சரி என்று கூறிச் சென்றாள்.


“ஸ்வே…”


“சொல்லு ஶ்ரீ மா…”


“அது… பிரஜன் உன்கிட்ட …” அவள் தொடங்கும் முன்னரே,


“என்ன, இன்னைக்கு உன்னை தூது அனுப்பி இருக்கானா…?” வகுப்பிற்கு செல்ல தயாராகிக் கொண்டே கிண்டலடித்தாள் ஸ்வேதா….


“ஸ்வே…” ஶ்ரீ அவளை கண்டனமாக பார்த்தவள் ,“நீ சரின்னு சொல்றதும் இல்லன்னு சொல்றதும் உன் இஷ்டம் ஸ்வே… அதுல நான் இன்டர்ஃபியர் ஆக மாட்டேன்… பட் அவன் சொல்றதை காதுக்கொடுத்து கேட்கலாமே…”


“எனக்கு எதுவுமே தெரிய வேணாம் ஶ்ரீ” காதை பொத்தி கொண்ட ஸ்வேதாவின் செய்கையில் அவளது கையை விலக்கி விட்டவள்,


“சின்ன குழந்தை மாதிரி ரியாக்ட் பண்ணாத ஸ்வே… நாம் எல்லாம் வளர்ந்துட்டோம்… அவனை போய் நீ லவ் பண்ணுன்னு உன்னை கம்பல் பண்ண வரலை… முதல்ல அதை புரிஞ்சிக்க…”


“உனக்கு அவனை பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் பட் ஏதோ ஒன்னு உன்னை தடுக்குது அது என்னன்னு உன் சைடும் அவன்கிட்ட சொல்லி புரிய வைச்சிடு அது போதும்… “


ஶ்ரீ சொல்லி முடிக்கவும், அவளை வியப்புடன் நோக்கியது ஸ்வேதாவின் விழிகள்


“என்ன பாக்குற‌ உன் மனசுல இருக்கறதை சொல்லிட்டேன்னு ஷாக்கா இருக்கா…?”மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தாள் ஶ்ரீ.“எப்படி ஶ்ரீ … யாருக்கும் தெரியாம என் மனசுல அடி ஆழத்துல புதைச்ச விஷயம் உனக்கு எப்படி தெரிஞ்சுது..?” திகைப்பு மாறாது கேட்டு வைத்தாள் ஸ்வேதா.


“அப்போ மேடமுக்கு பிரஜன் மேல ஒரு இது இருக்கு…” இடுப்பில் கை வைத்து ஶ்ரீ தோரணையாக கேட்க,


“இருக்கு தான்… ஆனா‌…” தயக்கத்துடன் இழுத்து நிறுத்தினாள் அவள்,


“என்ன ஆனா…” ஶ்ரீ புருவம் உயர்த்திட,


“அவன் ஒரு பைக் ரேஸ் பைத்தியம் ஶ்ரீ… அவனுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு தான் எனக்கு பயமா இருக்கு… அது மட்டும் விட்டுட்டான்னா அவனுக்கு ஓகே சொல்றதுல எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல …” அவள் மனதை அறிக்கும் விஷயத்தை ஶ்ரீயிடம் கூறினாள் ஸ்வேதா.


“அவனோட இயல்பை தொலைச்சிட்டு வரசொல்ற ஸ்வே… லவ்வுல விட்டுக் கொடுத்து போகலாம்… ஆனா இயல்பை தொலைச்சிட்டு போக கூடாது… தம்மு, தண்ணி இதெல்லாம் தப்பு இந்த கெட்ட பழக்கத்தை எல்லாம் விட்டுட்டு வரசொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கு… ஆனா ரேஸ்…. அப்படி இல்லையே… இந்த விளையாட்டு எல்லாம் கொஞ்ச நாள் தான்…”


“காலேஜ் முடிஞ்சி வேலை குடும்பம் குழந்தை குட்டின்னு அவங்க வாழ்க்கைக்கான ரேஸ்ல ஓட ஆரம்பிச்சிடுவாங்க அதுவரை அவனுக்கு பிடிச்சதை செய்யட்டுமே

உனக்கு எப்படி சிங்கிங்ல இன்டிரஸ்ட் இருக்கோ அது மாதிரி அவனுக்கு ரேஸ் மேல இன்டிஸ்ட் இருக்கு… அவ்வளவு தான்…”


“உன்னோட மனசுல இருக்க பயத்தை சொல்லு அதுக்கான பாதுகாப்பை எடுக்க சொல்லு ஒருத்தரோட நிறை குறைய ஏத்துக்குட்டு அவங்க இயல்பை தொலைக்காம வாழ்றதுதான் ஸ்வே வாழ்க்கை…”


“அவன் லைப்பை திரும்பி பார்க்கும் போது நீங்க ரெண்டு பேருமா வாழ்ந்த அந்த அழகான வாழ்க்கை தான் தெரியனும்… இப்படி நீயே அவன் வாழ்வை லீட் பண்ணா நீ மட்டுமே இருப்ப அவன் காணாம போய் இருப்பான் காதல் என்கிறது இருவர் இணைஞ்சு இருக்கனும் ஒருவரே இருந்துட கூடாது…”


ஶ்ரீயின் வார்த்தைகள் ஸ்வேதாவை சற்று அசைத்துத்தான் பார்த்தது… இருந்தும், சட்டென இறங்கி வர முடியாமல் அவள் விழிக்க,


“ஹேய் ஸ்வே… சில் சில்… ரொம்ப யோசிக்காத… என் மைன்ட் ல லவ்னா இது தான் ஸ்வே…. பிடிச்சி இருந்தா எடுத்துக்க இல்லன்னா விட்று…” சிரித்தபடியே அவளை பார்த்த ஶ்ரீ,


“நாம வாழுற வாழ்க்கையில

நிறைய பேரை கடத்து போறோம் ஸ்வே… ஆனா ஒருத்தரை பார்க்கும் போது மட்டும் தான் இவங்க நம்மோட நம்ம லைப் முழுசும் வரமாட்டாங்களான்னு மனசு ஏங்கும்… அப்படித்தான் பிரஜனும் உன்னை பாக்குறான்…”


“அவனை அக்சப்ட் பண்றதும் ரிஜக்ட் பண்றதும்‌ உன் இஷ்டம்… சாய்ஸ் இஸ் யுவர்ஸ்… அவனுக்கு பேச ஒரு வாய்ப்பை கொடுன்னு மட்டும் தான் சொல்றேன்…”புன்னகைத்தபடியே ஸ்வேதாவின் முதுகில் தட்டி கொடுத்து விட்டு வகுப்பை நோக்கி சென்று விட்டாள் ஶ்ரீ..


தன்னை கடந்து போகும் ஶ்ரீ யின் சொற்கள் காதில் எதிரொலிக்க ஒரு முறை அவனிடம் பேசி தான் பார்ப்போம் என பிரஜனை நோக்கி சென்றாள் ஸ்வேதா.


சிறிது தூரம் சென்று ஶ்ரீ திரும்பி பார்த்ததில், , பிரஜன் இருக்கும் இடத்தை தேடி சென்ற ஸ்வேதா தெரிய புன்னகை முகத்துடன் வகுப்பிற்கு சென்றாள் ஶ்ரீ..


….


“ஹே ரகிட ரகிட ரகிடஊ

ரகிட ரகிட ரகிடஊ

ரகிட ரகிட ரகிடஊ

ரகிட ரகிட ரகிட


ஹே என்ன வேணா நடக்கட்டும்

நான் சந்தோசமா இருப்பேன்

உசுரு இருக்கு வேறென்ன வேணும்

உல்லாசமா இருப்பேன்போடு ரகிட ரகிட ரகிட ஊ….”


அலப்பறையாக பாடிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்த வெங்கி, ஆளுக்கு ஒரு மூளையில் முகத்தை தூக்கி வைத்து உட்கார்ந்திருக்கும் வீட்டினரைத் தான் பார்த்தான்… பிரபா உர்ரென்னு இருக்க, ஹரியும் தென்றலும் செய்வது அறியாது பாவமாக அமர்ந்திருந்தனர்.


‘ம்கூம்… இவங்களையெல்லாம் வைச்சிக்கிட்டு என்னத்தடா சந்தோஷமா இருக்கறது…’ மனதில் நொடித்துக் கொண்டவன்.


‘இப்போ இங்க என்ன அலப்பறயை கூட்டி வைச்சிருக்காங்கன்னு தெரியலையே… இவன் பண்ண வேலைக்கு டெய்லி ஒரு பஞ்சாயத்தா இருக்கும் போல… என்னமோ போடா வெங்கி, நீ இல்லனா இந்த வீட்டுல ஒன்னும் சரியா இருக்கறது இல்ல…’தனக்கு தானே பெருமைப்பட்டு கொண்டவன், ‘சரி ஒரு தீர்ப்பை சொல்லி பைசல் பண்ணி விட்டு வருவோம்…’


பெரிய மனிதன் தோரணையுடன் அவர்களை நோக்கி முன்னேறியவனை ஏதேச்சையாக பார்த்தாள் ஏஞ்சல்.


“ஹாய் அண்ணி” சத்தமில்லாது ஏஞ்சலுக்கு கையை அசைக்க , அவனுக்கு சிரித்தபடி கை அசைத்தவள் மாமியார் அவளை கவனிக்கவும் சட்டென தலையை குனிந்துக் கொண்டாள்..


அதை பார்த்தும் ‘ம்… பர்ஃபார்மன்ஸ் ஓகே.. ஓகே…’ மனதில் எண்ணியபடியே அருகில் சென்றவன்,


“என்னம்மா… ஆளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து இருக்கிங்க…? ஒரு கை வேற குறையுது….” தோரணையாக கேட்டு சுற்றி முற்றி வெங்கி தேடவும் அவன் கிண்டலை புரிந்தக் கொண்ட பிரபா,


“அப்பான்னு துளி மரியாதையாவது இருக்காடா உனக்கு… எப்போ பார்த்தாலும் அவரை கிண்டல் பண்ணிக்கிட்டு போடா அங்குட்டு…” கணவருக்கு பரிந்து கொண்டு மகனை முறைத்தார் பிரபா.


தாயின் முறைப்பில் சட்டென சுதாரித்து “ஹீ… ஹீ… “சிரித்து மழுப்பியவன் “நீ எல்லாத்துக்கும் முறைச்சிக்கிட்டே இருக்க பிரபா நம்ம அப்பா தானே நான் சொல்லாம யார் சொல்லுவா…?” குசிக்குபிசிக் என அவர் கன்னம் கிள்ளி விளையாட


“ சீ கையை எடு எருமை மாடே

வெளியே போயிட்டு வந்தியே கை காலை அலம்பினியா…? பிரபா கடிந்துக் கொள்ள.


“மக்கூம் எப்போ பாரு கையை கழுவுனியா..? காலை கழுவுனியா…? பல்லை தேய்ச்சியான்னு…? எருமைமாடு எப்போமா பல்லை தேய்ச்சி குளிச்சி இருக்கு… ஹாவ்..?” அவன் சிரிக்காமல் வடிவேலுவின் பாணியில் கூறிட,


அம்மா மகன் சம்பாஷணைகளை கேட்டுக்கொண்டிருந்த தென்றலின் முகம் புன்னகையில் மலர்ந்து விட, ஹரியின் முகமோ ‘இன்னைக்குள்ள முடிச்சிடுவானா…?’ என்று பார்த்தது.


வெங்கியின் பேச்சினில் பிரபா பல்லை கடிப்பது தெரிந்ததும் நக்கலை அடக்கிக் கொண்டவன், ‘இனி பேசினா சாப்பாட்டுல கையை வைச்சிடுவாங்கடா வெங்கி அலர்ட்டாகிடு…’ மூளைக்குள் மின்னல் வேகத்தில் மணியடித்ததும்,


“ம்மா போதும்மா… என்னை பாசமா பார்த்தது… பசிக்குது…சாப்பட்டை போடு…” உணவு மேசையின் முன் அமர்ந்தவன் “என்ன அங்கயே இருக்கிங்க…? நீங்களும் வாங்க சாப்பிடலாம்…” என ஹரியையும் ஏஞ்சலையும் அழைத்தான்.


அவன் சாப்பிட அழைக்கவும் தாயின் முகம் போன போக்கை பார்த்து ஹரி ஏன்டா என்பதை போல பார்க்க ஏஞ்சலோ ‘மதியம் சாப்பிட்டது லைட்டா பசிக்க வேற செய்தே’ என சாப்பாட்டை ஏக்கமாக பார்த்தாள்.


யாரும் இருக்கும் இடத்தை விட்டு எழாமல் இருக்கவும் மற்றவர்களின் முகத்தை பார்க்க ஆளுக்கு ஒரு உணர்வை பிரதிபலித்து… ‘என்னடா நான்சிங்குல போகுது வெங்கி…

சாப்பிட கூப்பிட்டா ஏன் எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க…? அதுசரி நம்ம தாய்குலம் ஏன் இப்படி முறைச்சிக்கிட்டே இருக்கு…!’ வெங்கி பீதியுடன் பிரபாவை பார்த்தான்.


“வீடு இருக்க இருப்புக்கு இப்போ சோறு ஒன்னு தான் கேடு…” அவர் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள,


“அடடே பிரபா நீ கூட டைமிங் ல ரைமிங்கா பேச கத்துக்கிட்டயே…!” அன்னையின் கன்னத்தில் இரண்டு குத்து குத்தினான்.


“அடி துடப்பக்கட்டை இரண்டு வைச்சேன்னா நானே

காலையில போன மனுஷன் இன்னும் வீடு வந்து சேரலையேன்னு தவிச்சி கிடேக்கேன்… நேரம் காலம் புரியாம நீ காமெடி பண்ணிக்கிட்டு இருக்க இங்க என்ன காமெடி ஷோ வா நடக்குது…?” அவனை இரண்டு பிடி பிடிக்கவும் அதில் ஜர்க் ஆகி நின்றவன், ஹரியை பார்த்தான்.


ஹரியோ ‘நேரம் காலம் தெரியாம மாட்டிக்கிட்டயே பங்கு’ என்பது போல அவனை பார்க்க,


வெங்கியோ ‘அடப்பாவி ஒரு ஹின்ட் கொடுத்தியாடா கடங்காரா’ என அவனை முறைத்து வைத்தவன்,


நொடியில் நிலமையை கையிலேடுத்து “உனக்கு என்னம்மா இப்போ அப்பா வரனும் அவ்வளவு தானே… அதுக்கு எதுக்கு இந்த ப்ரூம் ஸ்டிக்கெல்லாம் கையில எடுக்குற இதோ இப்போ போய் கையோட கூட்டிட்டு வரேன்” என அவர் கையிலிருந்த துடப்பத்தை வாங்கி தூரப்போட்டவன்…,


“எப்படி வந்து சிக்கி இருக்கேன்.… நிம்மதியா சாப்பிடக் கூட முடியலயேடா வெங்கி…” முனங்கியபடியே சற்று தூரம் போனவன்,


“அம்மா நீ எலக்ஷன்ல ஏதாவது நிக்க வாய்ப்பிருக்காம்மா…?” என்றான் பிரபாவிடம்,


ஏன்டா…?


“இல்ல தேர்தல்ல துடைப்பத்தை சின்னமா வாங்கிக்கலாம்னு தான்…” என்றதும்,


அவர் பார்வை உக்கிரமாக மாறிட, “மீ எஸ்கேப்” என்றபடி அங்கிருந்து ஓடிவிட்டான் வெங்கி…


ஹரியும் ஏஞ்சலினும் இருந்த அதே இடத்தில் அமர அவர்களை ஒரு பார்வை பார்த்த பிரபா அடுக்கலைக்குள் புகுந்து விட்டார்.


….


“தீவானா தீவானா

நெற்றி நனைத்தவன் நீதானா

தீவானா தீவானா

நெஞ்சை பிழிந்தவன் நீதானா

என் வீடுக் கோலத்தின் புள்ளிக்குள்

ஒளிந்து உன் காதல் சொல்லும்

மாய கண்ணனா?

தீவானா…. தீவானா நெற்றி நினைத்தவன் நீதானா ????

உன்கிட்ட வந்து விஷ்ஷூம் வாங்கி

வந்துட்டேனே… தீவானா… தீவானா….”


பாட்டோடு சேர்த்து இன்று நடந்ததையும் பாடிக்கொண்டே

அவன் கொடுத்த சாக்லேட் தாளை கையில் பிடித்து இப்படியும் அப்படியுமாய் ஆடிக் கொண்டிருந்தாள் உபய்…


உபயின் அறையில் சத்தம் கேட்கவும் கதவை திறந்த நந்தினிக்கு ‘என்னடா இவ இப்படி வித்தியாசமா நடந்துக்குறாளே’ என்று தான் இருந்தது.


“ஹேய்… உபய்… என்னடி தலையில ஏதாவது அடி கிடி பட்டுடுச்சா..?” அவளை பிடித்து நிறுத்தி நந்து தலையில் ஆராய…


“நந்து… ஹேய்… என்ன நந்து பண்ற…?” தன்னை நந்தினியிடமிருந்து பிரித்த உபய் “என் தலையில எல்லாம் அடி படல சும்மா பாட்டு நல்லா இருந்தது அதான், படிக்கிட்டு இருந்தேன்…”


“எனக்கு என்னமோ உன் மேல டவுட்டா தான் இருக்கு.. கொஞ்ச நாளா ஆளே நீ சரியில்லை… காலையில என்னடான்னா அவ்வளவு தூரம் இருக்க கஃபேக்கு கூட்டிட்டு போற…! திடீர் திடீர்னு காணம போற…! இவினிங் வீட்டுக்கு வர்றதுக்கு லேட்டாகுது…! இப்போ என்னடான்னா இந்த சாக்லேட் பேப்பரை வைச்சிக்கிட்டு டேன்ஸ் ஆடுற…! நீ ஒரு மார்கமாதான்டி சுத்துற… எனக்கு தெரியாம லவ்வுல கிவ்வுல விழுந்துட்டியா??? என்றதும் விரிந்த தன் விழிகளை இயல்பாக்கிக் கொண்ட உபய்,


“நான் லூசு இல்ல நந்து… நீதான் லூசு போல யோசிச்சி… என்னென்னமோ உளர்றிக்கிட்டு இருக்க… என்னை நோட் பண்றதை விட்டுட்டு, போயி இருக்க வேலையை பாரு…‌அப்பவாவது உனக்கு ப்ரோமோஷன் கிடைக்குதான்னு பாக்கலாம்…” என ப்ளேட்டையே திருப்பி போட்டவள், நான் அப்பாக்கூட பேசிட்டு வரேன்…” வலுக்கட்டாயமாக உபய் அவளை வெளியே அனுப்பிட,


“நான் உளர்றேன்னா…? கண்டு பிடிக்கிறேன்டி பால்கோவா… அன்னைக்கு இருக்குடி உனக்கு கச்சேரி…” வெளிப்படையாகவே, உபயை எச்சரிக்கை விடுத்தவள் வெளியே சென்று விட,


அப்பா…! இவளை சமாளிச்சி அனுப்பறதுக்குள்ள என் ஆவியே போயிடுச்சே …” என்றபடி கடிகாரத்தை பார்க்க, “அச்சோ அப்பா வெய்ட் பண்ணிட்டு இருப்பாரே…” என பரப்பரப்பானவள் அலைபேசியை எடுத்து வீடியோ காலில் அவரை தொடர்பு கொண்டாள்.


“ஹலோ குட்டி மா இன்னைக்கு நாள் எப்படி போச்சி…?” அவர் உற்சாகத்துடன் வினவவும்,


தாயையும் தந்தையையும் ஒரே இடத்தில் கண்டவள் முகம் பூவாய் மலர்ந்தி,


“ நல்லா போச்சிப்பா… ஆனா ஏதோ ஒன்னு குறையுறா மாதிரி இருந்தது. இப்போ உங்களையும் அம்மாவையும் சேர்த்து பார்த்ததும் அதுவும் போயே போச்சி…”


தந்தையின் பின் புறச்சுவற்றில் மாட்டியிருந்த தாயின் புகைப்படத்தில் கண்களை தவழவிட்டாவறே மகள் சொல்லவும் கண்களின் ஓரம் ஈரம் துளிர்க்க‌ அதை மகள் அறியாது மறைத்துக் கொண்டவர்,


திருப்பி புகைப்படத்தை பார்த்து “பார்த்தியா நித்தி, இந்த பொண்ணை… என்னதான் நான் பாசமா பார்த்தாலும் உன்னை பார்த்ததும் என்னை விட்டு உன்கிட்ட தான் தவுறா…” மனைவியிடம் மகளைப் பற்றி புகாரை வாசித்தார்…


“அச்சோ அப்பா… நான் அப்படி சொல்லல… எனக்கு நீங்க ரெண்டு பேருமே ஒன்னு தான்… மார்னிங் நீங்க தனியா என்கிட்ட பேசுனிங்க… அம்மாவை தனியா பார்த்தேன்… இப்போ ரெண்டு பேரையும் ஒன்னா ஒரே இடத்துல பார்த்துட்டேன்ற ஹேப்பில பேசிட்டேன்… அதுக்கு போய்… இப்படி சொல்லிட்டிங்களே” என தந்தையிடம் பேசியபடியே


“பாருங்க ம்மா அப்பாவை…” தாயிடம் போட்டுக் கொடுத்தவள் “போங்க நான் கோவமா போறேன்…” என தந்தையிடம் பொய் கோபம் கொண்டாள்,


உபய் தன் சிறு வயதிலேயே தாயை இழந்துவிட கண்ணும் கருத்துமாய் வளர்த்தார் அன்புச்செல்வம்… மகளின் ஒவ்வொரு நிலையிலும், தான் மட்டுமே இல்லாது மனைவியையும் சேர்த்துக்கொண்டு கொண்டாடி மகிழ்வார் அன்பு…


மனைவி இப்பூவுலகில் இல்லையென்றாலும் மனதால் உபயுடனும் அன்புசெழியனுடன் நித்தியா வாழ்ந்துக்கொண்டு இருப்பதாக இருவருமே எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.


இன்று உபயின் பிறந்த நாளுக்கும் இருவரும் சேர்ந்து காணொலியில் தெரிய நித்தியாவையும் தங்களுடன் இணைத்து அன்பும் உபயும் பேசிக்கொண்டிருந்தனர் .


“அடடே என் குட்டிக்கு கோபத்தை பாரு பர்த்டே அதுவும் அப்பா மேல கோபப்படலாமா என் தங்கப் பொண்ணு… சும்மா டா அப்பா உன்னை விளையாட்டுக்கு சொன்னேன்… இன்னைக்கு நீ எதிர்ப்பார்ப்பன்னு தெரிஞ்சி தான் நானும் அம்மாவும் வெய்ட் பண்ணிட்டு இருந்தோம்…” அவர் கனிந்த குரலில் கூறவும்,


சட்டென கோபத்தை கைவிட்டவள், “என் ஸ்வீட் அப்பா என் ஸ்வீட் அம்மா…” வீடியோ காலில் தெரிந்த தந்தைக்கும் தாயின் புகைப்படத்திற்கும் கன்னத்தை கிள்ளி முத்தம் வைப்பது போல செய்தவள், சிறிது நேரம் தந்தையுடன் பேசிவிட்டு அவள் காதல் நாயகனுடன் கனவுலகில் சஞ்சரிக்க சென்று விட்டாள்...

Thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10672/
 
Last edited:

NNK-72

Moderator
களிப்பு ♥️ 5

கண்களை மூடி நடந்ததை யோசித்துக் கொண்டிருந்தான் ஹரி. அவன் கரங்களை ஏதோ சுரண்டுவது போன்றிருக்க, அந்த உணர்வில் நிமிர்ந்தவனின் பார்வைக்கு, தன்னையே பாவமாக பார்த்துக் கொண்டிருக்கும் ஏஞ்சல் தென்பட்டாள்.

அவள் பார்வை மனதை இளக வைத்தாலும், அதை முகத்தில் காட்டாமல் அமர்ந்திருந்தவன், என்ன என்பது போல் புருவம் உயர்த்தினான்.

கண்களை சுருக்கி சத்தம் வராமல் இதழ்களை மட்டும் அசைத்து “சாரி…” என்றாள்.

மனம் சோர்ந்து விட்டது. எவ்வளவு துரு துருப்பான பெண். இன்று ஒரே நாளில் அத்தனையும் மறந்தது போல அல்லவா அமர்ந்திருக்கிறாள்.

இவனே எதிர்ப் பார்க்காமல் தானே அத்தனையும் நடந்து விட்டது… அவளையும் குறை சொல்ல முடியவில்லை… அதற்கென்று இயல்பாக சிரித்து பேசவும் முடியவில்லை…

அவளின் முக வாட்டம், இவன் மனதையும் வாட்டியதில், அவள் கரங்களை தன் கரங்களுக்குள் பொதிந்துக் கொண்டவன், கண்களால் “பாத்துக்கலாம்…” என்றான் பெருமூச்சொன்றை வெளியிட்டு…

இதுவரை தம்பியின் சேட்டைகளில் மனம் லேசாகி இருந்தது, ஆனால் இப்போதோ பிரச்சனையின் வீரியம் அவனை நிலைக்குலைய வைத்திட,
தாய் தந்தையரின் கோபத்தை மலை இறக்கும் வழி அறியாமல் மண்டை காய்ந்தது…

அன்னையாவது புரிந்துக்கொள்வார் என பார்த்தான். பிரபாவதியோ முகம் கூட திருப்பாமல் இருந்ததில், தம்பியை தான் மலையை போல நம்பி இருந்தான்.

ம்கூம்ம்… தொண்டை செறுமும் சத்தத்தில் தன் சிந்தனை வலை அறுந்து நிகழ்விற்கு வர சட்டென ஏஞ்சலின் கரங்களை விட்டு எழுந்து நின்றான் ஹரி.

ஏஞ்சலும் அவன் பின்னோடு எழுந்து நின்றிட, கடுகடு முகத்துடன் திருவரங்கநாதன் முன்னே வர, அவர் பின்னே மிக பவ்யமாக வந்தான் வெங்கி.

‘நல்லவேளை அப்பாவை கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டான்…’ ஹரியின் மனது தம்பியை நினைத்து சற்றே ஆஸ்வாசம் கொண்டது.

எங்கே தந்தை தன் மேல் உள்ள கோவத்தில் வீட்டுற்கு வராமல் போய்விடுவாரோ என்று பயந்துக் கொண்டல்லவா அமர்ந்திருந்தான். அவரைக் காணவும் மனம் நிம்மதியானது…

தந்தையின் ஒரு சொல்லிற்கு அத்தனை மதிப்புண்டு ஹரியிடம், வேலை விஷயத்தில் கூட சற்று அழுத்தமாக கூறியிருந்தால், பாத்திரக் கடையில் அமர்ந்திருப்பான். இருந்தும் மகனின் மனதை புரிந்துக் கெண்டவரால், அவ்வாறு இறுக்கிப் பிடிக்க முடியவில்லை… ஆனால் இது அது போல் அல்லவே, நம்பவைத்து கழுத்து அறுத்தது போல் அல்லவா காதல், கல்யாணம் என்று வந்து நிற்கிறான். நினைக்க நினைக்க அவருக்கு கோபம் மட்டுப்பட மறுத்தது.

வந்தவர் அவர்கள் இருவரையும் திரும்பிக்கூட பார்க்காமல் அறைக்குள் செல்ல முயல, “எங்கங்க போனிங்க… காலையில இருந்து எத்தனை முறை போனை போடுறேன் ஒரு முறையாவது எடுக்கக் கூடாதா… சாப்பாட்டுக்கும் வீட்டுக்கு வரலை உடம்புக்கு என்னத்துக்கு ஆகும்… மாத்திரை போடுற மனுஷன் இப்படியா நடந்துக்குறது…?” அக்கறையாக கணவரை கடிந்துக் கொண்டார் பிரபாவதி,

மனைவியின் அழைப்பில் திருவரங்கநாதன் நின்றாலும், முகத்தில் இருந்த கடுகடுப்பு சற்றும் இளக்கம் கொள்ளவில்லை…

“மனசு முழுக்க நிறைஞ்சி போயிருக்கு சாப்பாடு ஒன்னு தான்டி குறை... கொண்டு வந்து என் தலையிலையே கொட்டு… ” என்றபடி உள்ளே சென்று விட்டார்.

கணவரின் கோபத்தில் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்ட, பிரபாவதி சின்ன மகனைப் பார்த்தார்.,

“இப்போ என்னம்மா…? நான் போய் அவருக்கு ஊட்டனுமா‌…?” என்றான் சிங்கத்தின் வாயிற்குள் கையை வைக்கும் பீதியுடன்.

“டேய்…” பிரபாவதி அவனை அதட்ட வாய் எடுக்கவும்,

கையெடுத்து கும்பிட்டவன் “போதும் தாய்க்குலமே மறுபடியும் ஆரம்பிச்சிடாத … அவரை மலையிறக்கி கூட்டிட்டு வர்றதுக்குள்ள பாதி உசுரு போயிடுச்சி… மீதிய நீ பேசியே போக வைச்சிடாத ” என்றான் பாவமாக.

“நீங்க யாரும் எதுவும் பண்ணத் தேவையில்லை…. என் புருஷனை பாத்துக்க எனக்கு தெரியும்… என்ன தான் தாயும் மகனும் ஒன்னுனாலும் வாயும் வயிறும் வேற வேறதான்னு காமிச்சிடுதுங்க…. அவர் சத்தமாக முனங்கியபடியே ஒரு தட்டில் சாதத்தை போட்டு வீராப்புடன் அரங்கநாதனுக்கு எடுத்துச் செல்ல,

அவர் முனுமுனுப்பதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவன் “அம்மா பிள்ளையா இருந்தாலும், வாயும் வயிறும் வேற வேறையா தானேடா இருக்கும் ஹரி… இந்த பிரபா புரியாம பேசுது” அண்ணனின் காதில் தன் சந்தேகத்தை கேட்க,

“டேய் அவங்க ஏதோ கோபத்துல திட்டுறாங்க விடேன்டா…” என்றான் ஹரி தளர்வாக

“அது ஏதோ கோவம் இல்லை பிரதர். நீ பண்ண வேலையால வந்த கோவம். ஒத்த மேரேஜ் டோட்டல் குடும்பமும் டேமேஜ்… என்னை மட்டும் ஸ்பெசலா வைச்சி செய்யுது பிரபா…” அண்ணனை நக்கலாக வாரியவன் பிரபாவதி செல்வதை பார்த்ததும்,

“அப்படியே உனக்கும் ஒரு தட்டுல சாப்பாடு எடுத்துக்கிட்டு போயிடு பிராபா…” என்றான் சத்தமாக

திரும்பி அவனை ஒரு முறை முறைத்தவர் அறைக்குள் சென்று மறைய உடனே பின்னோடு சென்ற வெங்கி அறையை எட்டி பார்த்தான்.

பிரபா கணவரை சமாதானம் செய்வது தெரிந்தது. வீம்புக்கென்று முறுக்கிக் கொண்டிருந்தவரை பேசி சரிக் கட்டுவதைப் பார்த்து விட்டு திரும்பியவன்,

“வாங்க வாங்க சாப்பிடலாம் எனக்கு பசிக்குது” இருவரையும் சாப்பிட அழைத்தான் வெங்கி.

நாற்காலி நுணியினை கீறியபடியே “பச் எனக்கு வேண்டாம் டா… எங்களால தான் அவரு சாப்பிடாம இருக்காரு… மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றான் ஹரி வருத்தமாக,


அவனையும் நாற்காலியையும் மாறி மாறி பார்த்தவன் “அதுக்கு நீ ஏண்டா ச்சேரை சுரண்டுறா…?? அதெல்லாம் பிரபா அவரை அதட்டி மிரட்டி திங்க வைச்சிடும்… சாப்புடுற நேரத்துல நீயும் கொலையா கொள்ளாத வாடா பசிக்குது…” என்றான் வெங்கி அழுது விடும் பாவனையில்.

ஹரி இன்னும் இடத்தை விட்டு நகராமல் இருக்க சாப்பாட்டு மேசையை ஏக்கத்துடன் பார்த்திருந்த ஏஞ்சலின் புறம் பார்வையை திருப்பியவன் “அண்ணி உங்களுக்கு பசிக்குதா இல்லையா…?” என்றான் சட்டமாக.

சாப்பாட்டுக்கு ஏங்கிக் கொண்டிருந்தவளோ, பூனை குட்டிப் போல தலையை மேலும் கீழும் வேகமாக ஆட்டிட,


“அந்த தடிமாடு எக்கேடோ கெட்டு போறான்… நீங்க வாங்க அண்ணி நாம சாப்பிடலாம்” என‌ இருவருக்கும் சாதத்தை பறிமாறினான்.

சாப்பாட்டை பார்த்ததும் ஏஞ்சலின் முகம் பளிச்சென மாறிவிட, மேசைக்கு பக்கத்தில் வேகமாக வந்தவள் கணவனையும் கையோடு இழுத்து வந்து அமர வைத்ததில், வேறு வழியின்றி ஹரியும் சாப்பிட ஆரம்பித்தான்.இரவு பூச்சிகளின் சத்தம், ரீங்காரமாய் காதை நிறைத்திருந்தது.… உடல் அசதியிலும், காலையில் இருந்து காபி ஷாப்பிலும், வீட்டிலும் மல்லுக்கட்டியதில் வெங்கியின் கண்கள் சற்றே தூக்கத்திற்கு கெஞ்சியது..,

உடலை குறுக்கி சோம்பல் முறித்து, “குட் நைட் அண்ணி… குட் நைட்‌ அண்ணா…” இருவருக்கும் இரவு வணக்கத்தை வைத்தவன், அறைக்கு செல்ல மாடிப்படிகளில் கால் வைத்த நேரம்,

“ பெரியவனை உன் கூட கூட்டிட்டு போ வெங்கட்…” என்றார் பிரபா எங்கோ பார்த்து…

“வாட்….??!” அதிர்ந்து திரும்பி பார்த்தது வேறு யாரும் அல்ல சாட்சாத் வெங்கியேதான்…

“என்னடா இப்போ எதுக்கு அதிர்ச்சியா வாத்து கோழின்னு உளறிக்கிட்டு இருக்க…?” பிரபா அவனை என்னமோ ஏதோ என பார்க்க,

“அது வந்து… அது… அது இல்லமா…” அண்ணனுக்கும் அண்ணிக்கும் கேட்கா வண்ணம் பிரபாவின் புறம் குனிந்து சிறு குரலில் கேட்டான் வெங்கி.

“எதுடா எங்கேயாவது புரியுறா மாதிரி பேசுறியா…?” அவன் கேட்பது புரியாமல் எரிச்சலானர் பிரபா,

“என்ன பிரபா நீ… ஒன்னுமே தெரியாம இருக்க… அவர் குமட்டில் இரண்டு குத்து குத்தியவன்…? “சின்ன புள்ள… பச்சப்புள்ள… நான் என்ன சொல்லுவேன்… அதான் அது…”

அவன் நாணி கோணி சட்டை காலரை வாயில் வைத்து கடித்து வெட்கப்பட்டுக் கொண்டே சொல்லவும், அதில் ஓரளவுக்கு விஷயம் புரிபட, கடுப்பானவர், “எடு அந்த தொடப்பக்கட்டைய, வயசுக்கு தகுந்தா மாதிரியா பேசுற…?” பிரபா உஷ்ணமாகிட விட,

“அட, இருமா… இரு..‌. எதுக்கு இப்போ அந்த தொடப்பக்கட்டை எடுக்குற காலையில இருந்து ஶ்ரீ ராம ஜெயம் சொல்றா மாதிரி மூச்சிக்கு முன்னூறு முறை தொடப்பக்கட்டையை எடுக்க சொல்லிட்டு இருக்க… இதுக்கு அந்த பெருமாள் பெயரை சொன்னாலாவது புண்ணியம் கிடைக்கும்…” என்றான் ஆதங்கத்துடன்,

“ம்கூம் அப்படிச் சொல்லிக் கூட உன் வாய் அடங்குதா பாரு…” அவனை நொடித்துக் கொண்டவர், “கால்யாணம் தான் நாள் கிழமை பாக்காம பண்ணிக்கிட்டு வந்தாச்சி மத்ததாவது சரியா நடக்கட்டும் இன்னும் ஒரு‌ மாசத்துக்கு அவன் அங்க தான் படுக்கனும்” என்றார் திட்டவட்டமாக,

“ஏதே… கல்யாணம் பண்ணவன் கூட நான் படுக்கனுமா…! புலம்பியே சாகடிப்பானுங்களே… என் படுக்கை இன்னைக்கு வாட்டர் டேங்கு மேல தானா…?” வெங்கியின் மனதிற்குள் ஒரு குரல் புலிம்பிக் கொண்டிருந்தது.

“என்னடா…சொல்ல சொல்ல மரம் மாதிரி நிக்குற…?” பிரபா சத்தமிட்டதில் யோசனை கலைந்தவன்,

“ஒன்னுமில்ல தெய்வமே… என் நிலைமையை நினைச்சி பாத்தேன்…” சோகமே உருவாக வெங்கி தன் அறைக்கு செல்ல அன்னை பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஹரி மனைவியிடம் கண்களால் விடைபெற்று தம்பியின் பின்னால் சென்றான்.

தன்னை தனியாக விட்டு செல்லும் கணவனையே விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்த ஏஞ்சலினை ம்கூம்… என தொண்டையை கனைத்து தன்னை திரும்பி பார்க்க வைத்த பிரபா, ‌‌

“இது அவன் ரூம் தான்… கதவை உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டு படுத்துக்க… சொன்னது புரியுதுல்ல..?” என்றவருக்கு ஆம் என்பது போல மருண்ட விழிகளுடன் தலையை மேலும் கீழுமாக ஆட்டியவளின் பாவனையை பார்க்க பாவமாக தான் இருந்தது…

இருந்தும் வீம்பு குறையாமல் “சரி நீ உள்ள போ…” முகம் கொடுக்காமல் கடுகடுவென பேசியவர் தங்களது அறைக்கு சென்று விட்டார்.

வழக்கம் போல காலையில் கேட்ட பாட்டு சத்தத்தில் புலம்பியவாறே கண் விழித்த வெங்கி அருகில் அண்ணன்‌ இல்லாததை கண்டு நாலா புறமும் கண்களை சுழற்றி தேடியவன் பால்கனியின் புறம் எட்டி பார்க்க, அங்கே நின்றிருந்தான் தமையன்.

“என்னடா அண்ணா இங்க நிக்குற வேலைக்கு கிளம்பல…?” என்றபடி அவன் அருகில் வந்தான் வெங்கி.

“இல்லடா ஒரு வாரம் லீவ் அப்ளை பண்ணி இருக்கேன்”.

“ஆமா வீட்டுல இருந்து நீ என்னடா பண்ணப்போற… அதான் ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாங்களே…” அவன் நக்கலாக கேட்கவும்,

“பச் வெங்கி கொஞ்சம் சீரியஸா பேசுடா…”

“பண்றது எல்லாம் சிறப்பா பண்ணிட்ட… இதுல நான் சீரியஸா வேற பேசனுமா…” அவன் சடைத்துக் கொள்ள

“டேய் கொஞ்சம் புரிஞ்சிக்கோயேன் டா…” ஹரி கெஞ்சவும்,

“சரி சரி சொல்லு மேன்…” வெங்கி பெரிய மனது பண்ணி விட்டு கொடுக்க

“அவளை தனியா விட்டு எப்படிடா கிளம்பறது… அப்பாவை விடுடா… அம்மாவாவது என்னை புரிஞ்சிப்பாங்கன்னு பாத்தேன் அவங்களும் அவகிட்ட முகம் கொடுத்து கூட, பேச மாட்டுறாங்க…” சோகமே உருவாக சொல்லும் அண்ணனின் பேச்சில் சீரியஸ் மோடுக்கு மாறியவன்,.

“நீ பக்கத்துலேயே கோழி மாதிரி அடை காத்துக்கிட்டு இருந்தா எப்புடி டா பேசுவாங்க… அண்ணியை விட்டு கொஞ்சம் விலகி இரு பிரபாவே தானா பேசும்…” என்றான் தாய் மீது இருந்த நய்பிக்கையில்.

“ரொம்ப கஷ்டப்பட்டுடாடா இனியாவது சந்தோஷமா இருப்பான்னு நினைச்சி தான் இங்க கூட்டிட்டு வந்தேன்…” என்றான் ஹரி கவலையானக் குரலில்

“ஏன்‌ அண்ணிக்கு ஏதாவது பிரச்சனையா?…”

ம்…. பெருமூச்சொன்றை வெளியேற்றியவன் “அவ வீடே பிரச்சனை தாண்டா… காசு பணம் இல்லன்னாலும் மனசுக்கு புடிச்சது செய்து சந்தோஷமா வாழுறவங்க மத்தியில, பணத்தாசையும் பேராசையும் புடிச்ச அம்மாவுக்கு பொண்ணா பிறந்த ஏஞ்சல் எப்படி டா சந்தோஷமா இருப்பா… எங்க காதல் தெரிஞ்சதுல இருந்து தினம் தினம் நரகம் தான்… அம்மான்னு ஒருத்தர் இருந்தும் இல்லாததது போல தான்டா” என்றான் வாட்டமாக

“அப்போ ரோஜாக் கூட்டம் படத்துல வர்ற ரேகா மாதிரின்னு சொல்லு…”


“அதை விட மோசமா இருப்பாங்கடா,” என்றதும்,

“அப்போ டெரர் பீஸ்ஸு… ஆமா அண்ணிய கூட்டிட்டு வந்துட்டியே அந்த டெரர் பீஸு சும்மாவா இருந்திருக்கும்…” வெங்கி சந்தேகம் கேட்க,

“நீ இருக்கற தைரியத்துல தான்டா கூட்டிட்டு வந்துட்டேன்…” என்றான் தம்பியை ஓரக்கண்ணால் பார்த்து

“என்னடா வெல்லம் திங்குறவன் ஒருத்தன்… விரல் சூப்புறது ஒருத்தங்குறா மாதிரி சொல்ற… நீ தானேடா கல்யாணம் பண்ண என்னை அடிவாங்க விட்றுவ போல இருக்கே…இந்த டாடா சுமோல எல்லாம் அடியாளுங்கள போட்டு வருவாங்களே அப்படி வந்துடுவாங்களோ…!?” வெங்கி புலம்பிய புலம்பலில் ஹரிக்கு சிரிப்பு குமிழிட அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்து விட்டான்.

“இங்க நான் புலம்புறேன் நீ சிரிக்கிற.?” வெங்கி புருவம் சுருக்கிட,

“பயப்படாதடா…” சித்துக்கொண்டே கூறிய ஹரி, “அதெல்லாம் போலீஸ் ஸ்டேஷன்ல வைச்சி பேசி முடிச்சாச்சி… இனி அவங்களால நமக்கு எந்த பிரச்சனையும் வராது…” என்றதும் தான் வெங்கிக்கு மூச்சே வந்தது.

‘சே… நான் கூட இந்த ரைட்டருக்கு புத்தி வந்து நம்மல கூட டெரர் ஹீரோவா நினைச்சி நாலு பைட் சீனு வைச்சிட்டாங்களோன்னு தப்பா நினைச்சி சந்தோஷப்பட்டுட்டேன்…’ அவன் மனதிற்குள் என்னை கிண்டலடித்து கழுவி ஊற்றியது எல்லாம் ஹரிக்கு எங்கே தெரிய போகிறது… உடனே மனைவியை நினைத்து சீரியஸ் மோடிற்கு மாறியவன்

“தப்பு பண்ணிட்டேனோன்னு தோனுது வெங்கி…” வருத்தமாக ஒலித்தது ஹரியின் குரல்..

“எது அண்ணியை லவ் பண்ணதா…”

டேய் என பல்லை கடித்து வெங்கியின் முதுகில் ஹரி ஒரு அடியை வைத்திட, முதுகை தேய்த்து விட்டுக்கொண்டே “வொய் மேன் வொய்…” அண்ணனை பாவமாக பார்த்தான் வெங்கி,

“அப்படி சொன்னா என் லவ்வுக்கு என்னடா மரியாதை இருக்கு… கல்யாணத்துக்கு கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம்னு தோணுச்சி ஆனா வேற வழி இல்லாம தான் இந்த முடிவுக்கு வந்தேன்… இதை எப்படி அம்மா அப்பாவுக்கு புரிய வைக்குறதுன்னு தான் தெரியலன்னு சொன்னா என் லவ்வை தப்பா சொல்ற…” தவிப்புடன் சொல்லும் அண்ணனின் தோளில் கையிட்டு கொண்டவன்,

“சாரி பா….” வடிவேலுவின் பாணியில் மன்னிப்பை வேண்டியவன் “நம்ம அம்மாவை பத்தி உனக்கு தெரியாதா… இப்போ நீ சொல்லாம கொல்லாம இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கியேன்னு தான் தான் கோவம்… பிரபா மனசு தங்கம்… சீக்கிரமே அண்ணியை அவங்க ஜோதில ஐக்கியமாக்கிகுவாங்க… நீ ப்ரியா இரு… ஆபீஸ் எல்லாம் லீவு போடாத அண்ணியை பிரபாக்கிட்ட விட்டுட்டு போ… என்ன நடக்குதுன்னு பாத்துடலாம்…” அண்ணனை தேற்றி அலுவலகம் கிளம்ப சொல்லியவன் தானும் காபி ஷாப்பிற்கு செல்ல ஆயத்தமாகினான்.

வெங்கியின் அறைக்குள் அழுக்கு உடைகளை எடுக்க வந்த பிரபா பிள்ளைகளின் பேச்சில் அப்படியே நின்று விட்டார். ஆரம்பத்தில் சற்றே கோவம் வந்தாலும், அடுத்தடுத்த பேச்சுகளில் நிதானித்தவர், கடைசி வார்த்தைகளில் இளகியே விட்டார். பிள்ளைகள் தன் மேல் வைத்திருக்கும், நம்பிக்கையில் நெகிழ்ந்தவருக்கு, கண்கள் கலங்கி விட, அவர்கள் அறியும் முன்னரே அங்கிருந்து சென்று விட்டார்.


தி காபி கிளப் கஃபே… காலை எட்டு மணிக்கே பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

“டோக்கன் நம்பர் டுவெண்டி” தானியங்கியில் பதிவு செய்யப்பட்டிருந்த பெண்ணின் குரல் ஒலிக்க காபி ஆடர்களை விநியோகித்து கொண்டிருந்தான் அருண்… விவேக் உள்ளே சிற்றுண்டிகளை தயாரிக்கும் வேலையில் இருக்க, வெங்கி பில்லிங் கவுண்டரில் பக்கத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தான்.

அண்ணா சாரை பாக்கனும் பெண்ணின் குரல் கேட்க ஆர்டர்களை விநியோகித்து கொண்டிருந்த அருண் நிமிர்ந்து பார்த்தான். அங்கு ‌‌வெள்ளை நிற காட்டன் சுடிதாரில் அவள் உடையை விட வெளுப்பாக ஒரு பெண் நின்றிருந்தாள்.

“நீங்க….?”

“என் பெயர் ஶ்ரீ அண்ணா… இங்க வேலை இருக்குன்னு சொல்லி இருந்தாங்க… நான் அமுதம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ல பைனல் இயர் ஸ்டூடன்ட் இங்க பார்ட் டைம் ஜாப் இருக்குன்னு கேள்விப்பட்டு வந்தேன்… என்று அவள் தகவல்களை முழுவதும் கூறியதும்,

அவளை யோசனையாக பார்த்த அருண், “ஒரு நிமிஷம்மா…” வெங்கியின் அருகில் சென்று நிலவரத்தை கூறினான்.

“என்னது பொண்ணா… அதெல்லாம் வேண்டாம்டா…இங்க செட்டாகாது போக சொல்லு…” வெங்கி உடனடியாக மறுப்பை தெரிவித்திட,

“டேய் நம்ம காபி ஷாப்புக்கு ஒரு பொண்ணு இருந்தா நல்லா இருக்கும் டா… இந்த பையலுங்க முகத்தை பாத்து பாத்தே சலிச்சிப் போச்சி… பாரு அந்த பொண்ணு வந்தவுடனே கடை எவ்வளவு ப்ளசண்டா தெரியுது மகாலட்சுமி மாதிரி இருக்கா டா…”

அருண் பேசிக் கொண்டேயிருக்க, நக்கலாக பார்த்தவன் “எனக்கு அப்படி ஒன்னும் தெரியலையே… எப்பவும் போலத்தான் இருக்கு… ஆமா நீ ஏன் இவ்வளவு ரெக்கமண்டேசன் பண்ற…” வெங்கி ஒரு மார்கமாக அருணை பாரத்தான்.

“ம்கூம் அது ஒன்னு தான் மச்சா குறை… அந்த புள்ள என் கிட்ட பேசின முதல் வார்த்தையே அண்ணான்னு தான்… இந்த அழகுல அந்த பொண்ணை நான் பார்த்துட்டாலும் விளங்கிடும்”
அவன்‌ அலுத்துக்க கொள்ள

“அதெல்லாம் சரி வராது மச்சி..

நம்ம எல்லாம் ஆம்பள பசங்கடா, ஒரு பொண்ணு எப்புடி இங்க செட் ஆகும்… ரிஸ்க் மச்சி நீ ஏதாவது சொல்லி அனுப்பு இரண்டு நாள் பாக்கலாம் வேற யாராவது வருவாங்க” என்றவன், அடுத்த ஆர்டர் போடும் பணியில் இறங்கி விட்டான்.

ஶ்ரீயிடம் வந்த அருண் “சாரிமா அவன் வேண்டாங்குறான்… நீங்க வேற இடத்துல டிரை பண்ணுங்க” அவன் கூறி அனுப்ப பார்த்தான்.

“அண்ணா நம்பிக்கையா வந்துட்டேன்… ஒரு ஆறுமாசம் தான் அதுக்கு அப்புறம் நான் சொந்த ஊருக்கே போயிடுவேன்… எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க வேணும்னா நானே வந்து அவர் கிட்ட பேசவா…. “ என்றாள் ஶ்ரீ.

சிறிது யோசித்தவன் சரி வா நீயே பேசு… என்றவன், முதலில் விவேக்கிற்கு போன் செய்து விஷயத்தை கூறி பில்லிங் இடத்திற்கு வரச் சொல்லி போனை வைத்தவன், ஶ்ரீயை அழைத்துக் கொண்டு வெங்கியிடம் சென்றான்.

“சார்…”

எஸ் என நிமிர்ந்து பார்த்தவனின் கண்கள் ஒரு நொடி விரிந்து, பின் இயல்பு நிலைக்கு வந்து, அவளையே அளவெடுக்க,

அருகில் நின்றிருந்த அருணை பார்த்து புருவம் உயர்த்தினான் வெங்கி…

“நான் எவ்வளவோ சொல்லிட்டேன்டா மாப்ள, உன்னை பாத்து பேசுறேன்னு சொன்னாங்க… காசா பணமா பேசத் தானே கேட்டாங்க அதான் கூட்டிட்டு வந்தேன்… வெங்கியிடம் கூறியவன்,

“நீ என்னமோ சொல்லனும்னு சொன்னியே சொல்லுமா… ஶ்ரீயிடம் கூறிய அருண், ஒன்றும் தெரியாதவன் போல ஒதுங்கி நின்றான்.

“சார் ஒரு ஆறு மாசம் தான் சார்… பார்ட் டைம் வேலை பாத்து நானே எனக்கான செலவை பாத்துக்கனும்னு ஒரு சுச்சிவேஷன்… இவினிங் டைம்னா கூட ஓகே தான்… ஆறு மாசம் தான் சார் அப்புறம் நான் சொந்த ஊருக்கே போயிடுவேன்… நான் எல்லா டிஷ்ஷஸும் நல்லா பண்ணுவேன் சார் வேணுமானா சமோசா பஜ்ஜி எல்லாம் போட்டு வரட்டுமா…” அவள் உற்சாகத்துடன் பேசிட,

“எல்லாம் உன் வேலை தானே என வெங்கி அருணை முறைக்க, விவேக்கும் அருணுடன் நின்றுக் கொண்டு அனைத்தையும் கேட்டான்… அந்த பெண்ணின் நடவடிக்கையும் திருப்தியாக இருக்க,
அப்புறம்‌ என்ன மச்சான்‌ நல்ல பொண்ணா இருக்கு நமக்கும் உதவியா இருக்கும்… விவேக்கும் வெங்கியிடம் சிபாரிசு செய்ய,

ஶ்ரீயிடம் எதுவும் பேசாமல் “ என்னடா விளையாடுறிங்களா கல்யாணத்துக்கு பொண்ணை தேடுறா மாதிரி, இவன் நல்ல பொண்ணுன்னு சர்டிபிகேட் கொடுக்குறான், நீ என்னமோ மகாலட்சுமி மாதிரி இருக்குன்னு சொல்ற என்னடா என்னடா நடக்குது இங்க… “ இருவரையும் தனியே தள்ளிக்கொண்டு வந்த வெங்கி அவர்களிடம் கடுப்படித்தான்.,

“மச்சி டேய்… ஏண்டா இப்படி மனசாட்சியே இல்லாத மாதிரி பேசுற…? அந்த பொண்ணை பாத்தா உனக்கு பாவமா இல்ல…. ஏதோ வேலைன்னு கேக்குது நம்மால முடிஞ்ச ஹெல்ப் பண்ண போறோம் அவ்வளவு தானே…” பெரிய மலையை புரட்டி அந்த பக்கம் போட்டது போல கையை தட்டி பாவனையாக சொன்னவனின் பேச்சில் கோபம் வர,

“டேய் கொலை காண்டு ஆகுது… ரொம்ப ஓவரா போற மகனே… அவ யாருன்னே தெரியல ரொம்ப பாசம் பொங்குது” வெங்கி அருணின் மீது பாய்ந்தான்.

“என்னடா என்ன… இன்னையிலிருந்து அந்த பொண்ணை நான் தங்கச்சியா தத்தெடுத்துக்கிட்டேன்டா அதான் இந்த பாசம்…சரி சரி வா என் தங்கச்சி ரொம்ப நேரமா வெளியே நிக்குறது, எனக்கு கால் வலிக்குது நாம போவோம்…” அருண் கிளம்ப, விவேக்கும் அவனுடன் கிளம்பினான்.

“அவன் தான் லூசு மாதிரி பண்றான்னா நீயுமாடா…?” விவேக்கை பார்த்து வெங்கி தலையில் அடித்துக்கொள்ள, “எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டிங்க என்னமோ பண்ணி தொலைங்க” என வெங்கி, அவர்களுடனே வந்து நின்றான்.

“நாளையில இருந்து வேலைக்கு வந்துடும்மா காலையில 8 to 10 சாயந்தரம் உனக்கு காலேஜ் எப்படின்னு பாத்துட்டு வா என்றான் அருண்…” பாசம் பொங்க…

‘இவன் ஏன் இப்படி பொங்கு பொங்குன்னு பொங்குறான்’ வெங்கி அவர்களையே பாத்தான்.

ஶ்ரீயின் முகம் சந்தோஷத்தில் விகசிக்க ரொம்ப தேங்கஸ்ணா தேங்கஸ் சார்… தேங்க்ஸ் விவேக் சார் … மூவரையும் பார்த்து நன்றிக் கூறியவள், நாளை வேலைக்கு வருவதாக கூறிச் சென்றாள்.

நண்பர்கள் இருவரையும் பார்த்தவன் “ஒரு முடிவோட தான்டா இருக்கிங்க… ஆளு யாரு என்ன ஏதுன்னு தெரியாம வேலைக்கா சேக்குறிங்க ரெண்டு பேரும்… இருடி எதுலயாவது சிக்குவிங்க அப்ப இருக்கு உங்களுக்கு” வெளிப்படையாக அவர்களை வறுத்தவன், பில்லிங் இடத்திற்கு சென்று விட்டான்.

நமுட்டு சிரிப்புடன் வெங்கியை பார்த்த அருணும், விவேக்கும் “உன்னை கடந்து தான் மச்சி எங்களை டச் பண்ணவே முடி
யும்…” காலரை தூக்கி விட்டுக்கொண்ட இருவரும் அவர்கள் வேலையை பார்க்க சென்றனர்.

Thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10672/
 
Last edited:

NNK-72

Moderator
களிப்பு ❤️ 6

“டேய் குட்டிமா, அதோ அங்க ரெட் டீ ஷர்ட் போட்ட அங்கிள் இருக்காரே அவர்கிட்ட இந்த ரெட் ரோசையும் லெட்டரையும் கொடுக்குறியா…?”

பாதி முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொண்டிருந்த உபய், சிறிது தூரத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த வெங்கியினை தன்னுடன் அமரந்திருந்த சிறுவனிடம் காட்டினாள்.

ஐஸ்கிரீமை சுவைத்து கொண்டிருந்த அச்சிறுவன் “நோ நான் போக மாட்டேன்” என , தலையை இடவலமாக ஆட்டிட,…

“டேய் டேய் குட்டி… ப்ளீஸ் டா இனி அக்கா உன்னை டெய்லி இங்க கூட்டிட்டு வர்றேன்… இதோ இந்தா இந்த சாக்லேட் கூட வைச்சிக்கோ…” அவள் பேக்கெட்டுக்குள்ளிருந்து டைரி மில்க் சாக்லேட்டை எடுத்து காட்டி கொண்டே கேட்க,

“இப்போது ஓகே…” என அவளிடமிருந்து சாக்லேட்டை வாங்கிக்கொண்டு, “இந்த ஒரு வாட்டி தான் போவேன் அப்புறம் தொல்லை பண்ணக் கூடாது” என சட்டம் பேசியது அந்த ஐந்து வயது வாண்டு.

“ஓகே… என் செல்லகுட்டி….” அவனுடைய இரு கன்னங்களிலும் முத்தம் வைத்தவள்… “யார் கொடுத்தான்னு கேட்டா தெரியாதுன்னு சொல்லிடு… அக்காவை மட்டும் காட்டி கெடுத்துடாதடா பட்டுக் குட்டி…” என அவனுக்கு சொல்லிக் கொடுத்து வெங்கியிடம் அனுப்பினாள்.

“டேய் மாப்ள, இங்க பாரேன் இவங்கிட்ட டீரீட்டு கேட்டு இங்க கூட்டிட்டு வந்தா, அழுத முஞ்சியா உட்காந்து இருக்கான், காயப்பட்ட மனசை ஐஸ் கிரீம் கொடுத்து ஆத்தலாம்னு பாத்தா ஏண்டா இப்படி அழுகுறான்…” விவேக், அருணை கலாட்டா செய்ய

“ஏன்டா ஏண்டா…. இப்படி பண்றிங்க… இன்னைக்கு என் லவ் பிரேக்கப் ஆகி இருக்கு…. என்னை பீல் பண்ண விடுங்க டா…” இருவரையும் தள்ளி விட்டு அருண் சோக கீதம் வாசித்தான்…

“டேய், அந்த வயலினை கொஞ்சம் மூடுடா…… காது வலிக்குது…” சுண்டு விரலை காதில் விட்டு குடைந்துக் கொண்டே வெங்கி அருணை நக்கலடிக்க,

“நான், லவ் ஃபெயலியர்ல இருக்கேன் டா… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இப்படி நக்கலடிச்சிகிட்டு, டீரீட்டு கேட்டு உட்காந்து இருக்கிங்க…. உங்களுக்கெல்லாம் ஒரு லவ்வு கூட செட் ஆகாதுடா…” அருண் இரண்டு பேரையும் சத்தமிட்டு சாபம் விட,

“அட கிரகம் புடிச்சவனே… வாயை பினாயிலை ஊத்தி கழுவுடா, இன்னும் ஒன்னு கூட செட்டாகலையேன்னு இருந்தா சாபமா விடுற…?” விவேக் அருண் மேல் தண்ணீரை ஊற்ற, அருண் விவேக் மேல் தண்ணீரை ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தனர்.

“அடச்சீ நிறுத்துங்க‌… லவ் ஃபெயிலியருன்னு சொல்லிட்டு இங்க விளையாடிட்டு இருக்க…! எல்லாரும் உங்களை தான் பாக்குறாங்க…” அடித்துக் கொண்டிருந்த இருவரையும் வெங்கி தடுத்து நிறுத்தியதும் அருணுக்கு அவன் காதலியின் ஞாபகம் வந்துவிட,

“அவ என்னை வேண்டா சொல்லுவான்னு நான் நினைச்சி கூட பாக்கலலயே டா…” அருண் மீண்டும் அவன் புலம்பலை தொடங்கினான்

அவன் புலம்பலில் தலையில் அடித்து கொண்ட வெங்கி,

“மச்சி, இது உனக்கு செட்டாகாதுன்னு அப்பவே எங்களுக்கு தெரியும்… கழுத எது சொன்னா கேக்குது… அதான் அனுபவின்னு விட்டுட்டோம்… இப்போ பாரு நீ சோகமா உட்காந்து இருக்க… ஆத்துல ஆயிரம் மீன் இருந்தாலும் சோத்துல இருக்கறது தான் நமக்கு சொந்தமுன்னு போயிட்டே இருக்கனும் மாப்ள…” அவன் எதுகை மோனையில் சொல்லவும்,

அவனை வியப்பாய் பார்த்த இருவரில் அருண் தன் நிலையை மறந்து …

“ மாப்ள, என்னடா மீனு கருவாடுன்னுல்லாம் பேசுற…? அண்ண, கிறிஸ்டின் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு நீ பாய் பொண்ணை ஊஷார் பண்ண நினைச்சிட்டியா…? கல்யாணம் சொல்லி பண்றியோ இல்ல சொல்லாம பண்றியோ…! பிரியாணி மஸ்ட் மச்சி…” அருண் சொல்லியதில் அவனை கொலைவெறியுடன் முறைத்த வெங்கி,

“நாயே, நீ லவ் பெயிலியர்… அதை மறந்துட்டு இல்லாத ஒன்னை இருக்குறதா ஊரை கூட்டிடாத… பிரபா துடப்பக்கட்டையோட என்னை தேடிக்கிட்டு வந்துடும்…” மூடிக்கிட்டு பீல் பண்ணி தொலை…” வெங்கி அவனை எச்சரிக்கை விடுத்தான்.,

வெங்கியை ஏற‌ இறங்க பார்த்த அருணுக்கு மறுபடியும் காதலித்த பெண் ஞாபகம் வரவும் “அவ என்னை வேண்டான்னு சொல்லிட்டா மச்சா…” என வராத கண்ணீரை துடைத்தான்.

“இந்த ஆத்து ஆத்துறானே பங்கு இவன் ஆள் பெயர் என்ன…?” வெங்கி விவேக்கிடம் கேட்க

“காயத்திரி மச்சா இவருக்கு மட்டும் காயூ…” விவேக் உதட்டை குவித்து முத்தமிடுவது போல வளைத்து அந்த பெயரை சொல்லவும்,

“என்னடா பேரு இது…? காயத்திரி காயாத திரியுன்னு…!!” வெங்கியின் நக்கலில் அவனை கடுப்போடு பார்த்தான் அருண்.

இவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் கலாய்த்து பேசிக்கொண்டிருக்க அவர்களின் அருகே வந்து நின்ற குட்டி வாண்டு
அங்கிள் இந்தாங்க என தன்னிடமிருந்த லெட்டரையும் ரோசையும் நீட்டினான்.

அவனையும் பூவையும் மாறி மாறி பார்த்தவன்,

“டேய் யார்ரா நீயீ…… ஆள் தெரியாம மாத்தி கொடுத்துட்டு போயிடாத டா இந்த மாமாவுக்கு கொடுக்க சொன்னாங்களா…? இல்ல, அந்த மாமாவுக்கு கொடுக்க சொன்னாங்களா…?” என்றான் வெங்கி மற்ற இருவர்களையும் கோர்த்து விடும் நோக்கில்,

“நீங்க தானே ரெட் டீ ஷர்ட் போட்டு இருக்கிங்க உங்களுக்கு தான் கொடுக்க சொன்னாங்க… இந்தாங்க பிடிங்க…” தெளிவாக கூறிய வாண்டு, அவன் கரங்களில் அந்த கடிதத்தையும் பூவையும் கொடுத்தான்….

யார் என தெரியாமல் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்து குழம்பிய வெங்கி, கீழே பார்க்க அந்த வாண்டையும் காணாது திருதிருத்து நின்றவன்,

“குட்டி சத்தான் தப்பிச்சிடுச்சி…” வெங்கி என முனுமுனுத்துக் கொண்டே மற்ற இருவரையும் பார்க்க அவர்கள் ஆர்வமாக அவன் கையில் இருப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“டேய் எருமைங்களா…. நான் தான் அதிர்ச்சியில் சிலை மாதிரி நின்னுட்டேன் உங்களுக்கு என்னடா கேடு வந்தது… அந்த பையனை புடிச்சி இருந்தா இந்த நேரத்துக்கு இந்த லெட்டரை யாரு குடுத்ததுன்னு தெரிஞ்சி இருக்கும்ல” இருவரையும் பார்த்து கடுப்பாகிட,

அவன் திட்டுவதை கூட பெருட்படுத்தாமல் அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டவர்கள், “முதல்ல பிரி மாப்ள உள்ள என்ன இருக்குன்னு பாக்கலாம்…” விவேக் வேகமாக அவன் அருகில் வந்து நிற்க, அருண் இன்னொரு பக்கம் வந்து நின்றான்.

“உங்க ஆர்வத்துல தீயை வைக்க…. இருங்க பிரிக்கிறேன்…” இருவரையும் முறைத்துக்கொண்டே கடிதத்தை பிரித்தான் வெங்கி.

“தொலைவேன் என்று தெரியும் ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று நினைக்கவில்லை என்னை விழவைத்த உன் பேச்சும் பார்வையும் எப்போதும் எனக்கே சொந்தம் கொள்ள ஆசை கொள்கிறேன்…”

இப்படிக்கு
உன்னுள் தொலைந்தவள்,
I love you,
You love’s me…

அவள் உருகி உருகி எழுதி இருப்பதை பார்த்தவன்,

“என்னடா இது லவ் லெட்டரு…?” அதிர்ந்த வெங்கி. அவள் பெயர் எங்காவது எழுதப்பட்டு இருக்கிறதா என்று முன்னும் பின்னும் திருப்பி பார்த்தான்.

‘சாரி நோ சான்ஸ்’ என்பது போல வெள்ளை காகிதம் ஈ என்று அவனை பார்த்து இளிக்க, நண்பர்கள் இருவரையும் யோசனையாக பார்த்தவன்,

“டேய் உண்மைய சொல்லுங்கடா நீங்க தானே இப்படி பண்றிங்க..? அவர்கள் இருவரின் மீதும் சந்தேகம் கொண்டு கேட்டான்.

“உனக்கு நான்‌ ஏண்டா லவ் லெட்டர் எழுதனும்…?” விவேக் வாந்தி எடுப்பது போல பாவனை செய்ய,

“மச்சா நானே இப்போ லவ் ஃபெயிலியர்ல இருக்கேன்… அதுக்குள்ள இன்னொன்னா…?” அருண் வேகமாக மறுக்க,

“சீ அவனா நீயி…” விவேக் அருணை சீண்ட முவரும் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு இருப்பதை பார்த்த உபய்

தலையில் அடித்துக் கொண்டு “லெட்டரை குடுத்தது நானு, அவனுங்களுக்குள்ளயே அடிச்சிக்குறானுங்களே இவனுக்கு எப்போ லவ்வு வந்து நான் எப்போ ப்ரப்போஸ் பண்றது…. வேற ஏதாவது தான் ஐடியா பண்ணனும்” கடுப்பாகி அங்கிருந்து சென்று விட்டாள்.

…..

“என்னதான் கோவம் இருந்தாலும், மூனு நாளா இப்படித்தான் நேரங்கழிச்சி வீட்டுக்கு வருவீங்களா… அவங்க பண்ணது தப்புதான் அதுக்கு வீட்டுக்கு வராம இருந்தா எல்லாம் சரியா போயிடுமா? ம் சொல்லுங்க…‌? சரியாப் போயிடுமா…?”

“ஒழுங்கா சாப்பிடுறது இல்ல.. மத்திரை போடுற மனுஷன் உடம்பை கவனிச்சிக்கிறது இல்ல… ம் வாயை திறங்க…” என கையிலிருந்த மாத்திரை வாயில் போட்டு விட்டு, நீரை குடிக்க கொடுத்து வாயை துடைத்து விட்டார்,

“நாலு பேரு முன்னாடி தலை குனியுறா மாதிரி வேலை பண்ணி வைச்சிட்டு வந்து இருக்கான்…? வெளியே தெருவுல போக முடியுதா…? பாக்குறவன் எல்லாம் துக்கம் விசாரிக்குறா மாதிரி விசாரிக்குறானுங்க…. சொந்தக்காரன் முன்னால எப்படி தலை நிமிந்து நடப்பேன்… நாளைக்கு எவன் வந்து நம்ம வீட்டுல சம்மந்தம் பேசுவான்” அவர் கோபத்துடன் மொழிய,

“சரி விடுங்க… நடந்தது நடந்துப் போச்சி இனி அது பத்தி பேசி பயன் இல்ல… இனி நடக்க வேண்டியதை பாக்குறதை விட்டு இதையே பேசிட்டு இருந்தா எப்படி… எனக்கும் கோவம் தான், என்ன பண்றது நமக்கும் அவங்கள விட்டா யாரும் இல்லை அவங்களுக்கும் நம்மை விட்டா யாரும் இல்லை…” அவர் பேசிக்கொண்டே செல்ல,

சட்டென மனைவியை முறைத்தவர் “என்னடி அவனுக்கு சப்போர்ட் பண்றியா…? உனக்கு அறிவு கெட்டு போச்சா…? நீ ஏத்துக்கலாம்டி என்னால அவன் பண்ணதை ஏத்துக்க முடியாது…” வீராப்போடும் விரைப்போடும் கூறியவர் மெத்தையில் சரிந்து கண்களை மூடிக்கொள்ள…

“பூனை கண்ணை மூடிக்கிட்டா பூலோகமே இருண்டு போயிடுச்சின்னு நினைக்குமா அந்த மாதிரி இருக்கு…!!!”

“என்கிட்ட சண்டைப் போட்டுக்கிட்டு கண்ணை மூடி படுத்துட்டா…? எல்லாம் சரியாகிடுச்சா…?” கணவருக்கு கேட்க வேண்டுமென சத்தமாக பேசிக்கொண்டிருந்த பிரபா ‘சரி நடக்கறது நடக்கட்டும்’ என கடவுளை மனதார பிரத்தித்துக் கொண்டு மெத்தையில் சரிந்து கண்கள் மூடி உறக்கத்தை தழுவினார்.

….

தூக்கம் வராமல் நடந்ததையே நினைத்துக் கொண்டு அறையில் குறுக்கும் நெடுக்குமாக‌ நடந்துக் கொண்டிருந்தாள் ஏஞ்சல், கதவை யாரோ தட்டுவது போன்ற சத்தத்தில் தன்னிலை மீண்டவள், கதவைத் திறந்து பார்க்க அங்கே ஹரி நின்றிருந்தான்.

ஏஞ்சல் சுதாரிப்பதற்குள் அவளை தள்ளிக்கெண்டு சட்டென அறைக்குள் புகுந்த ஹரி கதவை சாற்றி தாழ்ப்பால் போட்டு மனைவியின் புறம் திரும்பிட,

அதிர்வில் விரிந்த கண்களோடு கணவனை பார்த்தவள் “என்னங்க இந்த சமயத்துல இங்க வந்து இருக்கீங்க ஆன்ட்டி பாத்தா திட்ட போறாங்க… சீக்கிரம் இங்கிருந்து போங்க…” என்றாள் பயத்துடன்.

“பொண்டாட்டிய ஆசையா பார்க்க வந்தா இப்படித்தான் விரட்டுவியா? அவன் முறுக்கிக் கொள்வது போல் பேசிட,

“என்னங்க… என்னென்னமோ பேசுறீங்க உங்கள உங்க தம்பி கூட தானே படுக்க சொன்னாங்க… ஆனா நீங்க இங்க இருக்கிங்க யாராவது பார்த்தா தப்பா நினைக்க போறாங்க போங்க….” அவள் தயக்கத்துடன் கூறிட,

கட்டின பொண்டாட்டிய தனியா விட்டுட்டு எவனாவது தம்பி கூட போய் படுப்பானா…?” அவன் கிறக்கமான பார்வையுடன் மனைவியின் அருகில் செல்ல,

ஒவ்வொரு அடியாக வைத்து பின்னாடியே சென்றவள், “என்னங்க ரூட்டெல்லாம் மாறுது தப்பு தப்பா பேசுறீங்க…” அவள் சுடிதார் தலைப்பினை முறுக்கி கொண்டே தலையை உயர்த்தி பார்த்தாள்.

“இப்படி ஒரு அழகான பொண்டாட்டிய பக்கத்தில் வைச்சிக்கிட்டு எப்படி சும்மா இருக்க சொல்ற …” அவன் பேசிக்கொண்டே அவளை‌ சட்டென இழுத்துக் கொண்டு கட்டில் மீது அமர, இவளுக்குத்தான் நெஞ்சில் நீர் வற்றிய உணர்வு.

இதயம் படப்படக்க விழிகள் இரண்டும் தெரித்து விடுவது போல அவனை பார்த்தவளுக்கு, கை கால் எல்லாம் ஆட்டம் கண்டது.

மனைவியின் பாவனைகளை ரசித்துக் கொண்டே இருந்தவன் சட்டென சிரித்து விட்டான்,

"ஏன் இப்படி சிரிக்கிறிங்க...?" பாவமான குரலில் அவள் வினவ,

"சிரிக்கமா... இப்படி அப்பிராணியா இருக்கயேடி... மேலும் சிரித்தவன், அவள் வெளிறிய முகத்தை நிமிர்த்தி,

அடியே பொண்டாட்டி உன்னை ஒன்னும் பண்ணல சும்மா தான் வந்தேன்… ரெண்டு நாளா உன்கிட்ட எதுவும் பேச முடியல அதான் பாத்துட்டு போலாம்னு வந்தா நீ என்னமோ என்னை திருட்டு பைய ரேஞ்சுக்கு லுக்கு விடுற”

அவன் வார்த்தைகளில் ஆஸ்வாசம் ஆனவள், “பச் ஹரி ஏன் இப்படி பேசுறிங்க… ஏற்கனவே என்னால தான் இங்க பிரச்சனை இப்பவும் … ஏதாவதுன்னா அதான் சொன்னேன் எனக்கு மட்டும் ஆசையா உங்களை விரட்டி விட …” அவன் சட்டை பட்டனை திருகிக் கொண்டே சொல்ல,

“போதும் டி… அதை திருகி கையோட எடுத்து கொடுத்துடாத” அவன் கிண்டலில் களுக்கென சிரித்தாள் ஏஞ்சல்.

அவள் முகவாயை நிமிர்த்தியவன் “நீ ஓகே வா தானே இருக்க….? உனக்கு இங்க கம்பஃர்டபலா இருக்கா…?” என்றான் அக்கறையாக அவள் கண்ணோடு கண் நோக்கி,

அவன் அக்கறையும் அன்பும் அவளுக்கு திகட்டாத தித்திப்பை கொடுக்க, சட்டென அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டவள், “நான் இங்க சந்தோஷமா இருக்கேன் ஹரி… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்…” என்றாள் உள்ளார்ந்து.

“ஏய்… மக்கு பொண்டாட்டி” அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன் “ரொம்ப யோசிச்சி, இருக்கும் மூளையும் கரைச்சி வைச்சிடாத என்ன புரியுதா… இன்னும் கொஞ்ச நாள் தான் எல்லாம் சரியாகிடும்… அப்புறம் நாம சந்தோஷமா இருக்கலாம்…” அவளை தன் நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தம் வைத்தான்…

அதில் முகம் மலர்ந்தவள், அவன் முகத்தை ஏக்கமாக பார்த்தாள் “என்னடி?” என்றான் அவள் நாடி பிடித்து

“சாரி …”

“எதுக்கு… “

“என்னால தானே, நீங்க திட்டு வாங்குறிங்க… நான் மட்டும் அந்த நிலைமையில இல்லாம இருந்து இருந்தா இந்நேரம் நீங்க சந்தோஷமா இங்க இருந்து இருப்பிங்கல…” என்றாள் கண்களில் துளிர்த்த நீரோடு,

“நம்ம கல்யாணம் எப்போ நடந்தாலும் இப்ப நடக்கறது தான் நடந்து இருக்கும்… என்ன இப்போ சீக்கிரமா நடந்துடுச்சி அவ்வளவு தான் … நீ எதை பத்தியும் நினைக்காத நிம்மதியா தூங்கு…” அவள் தலையை வருடிவிட்டு தன்னோடு இறுக்கி அணைத்துக்கொள்ள

ம்… அவளும் அவன் மார்பில் சாய்ந்தவாரே பதிலை கொடுக்க சன்னமாக சிரித்துக் கொண்டவன்,
அவளுக்கு தைரியம் கூறி, அறையிலிருந்து வெளியேறினான்.


……

அறையை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்த ஹரியை ஒரு மார்கமாக ஏற இறங்க பார்த்த வெங்கி,

“டேய் அண்ணா… எங்கடா போயிட்டு வர்ற…?” என்றான்‌ விசாரணையாக.

“ஏஞ்சலை பாத்துட்டு வர்றேன்…” ஹரியின் பதிலில் மெத்தையில் இருந்து சட்டென எழுந்தவன் “என்னது அண்ணி ரூமுக்கா…?” என்றான் வெங்கி அதிர்வாக,

“என்னடா ஷாக் அடிச்சா மாதிரி தூள்ளி குதிச்சி எந்திரிக்கிற…?
ஹரியின் கேள்விக்கு,

“ நீ, சொன்ன விஷயம் அப்படி ராசா…. நீ மட்டும் அண்ணி ரூம் போனது பிரபாவுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியுமா…?”

“சொன்னாதானே…. நீதான் சொல்ல மாட்டியே… என் தங்க கம்பில‌…” ஒரு கூடை ஐசை தம்பியின் தலையில் கொட்டி‌, அவன் தாடையை பிடித்து ஹரி ஆட்ட,

அவன் கையை தட்டி விட்டவன், “ஐஸ் வைச்சது போதும்… நேத்துல இருந்து, ஒரே குளிர் ஜொரமா இருக்கு… எதுக்கும் நீ கொஞ்சம் தள்ளியே நில்லு…” என அண்ணனை தள்ளி நிறுத்தியவன்

“நான் சொல்ல மாட்டேன்ற மிதப்புல தானே இருக்க… என்னமோ முதல் நாளு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு… எல்லாம் பேசின இன்னைக்கு எங்க போச்சி அதெல்லாம்…” வெங்கி, கேள்வி மேல் கேள்வி கேட்க,

“அதெல்லாம் எங்கேயும் போகல அவ கொஞ்சம் நர்வசா இருந்தா அதான் போய் பேசிட்டு வந்தேன்…" என்ற ஹரியின் உதடுகள் ஏஞ்சலை நினைத்து ரகசிய புன்னகையில் நெளிய,,

இவன் ஏன் இப்படி சிரிச்சி வைக்கிறான்… சிரிப்பே ஒரு‌ மார்கமா இருக்கு…. உள்ளுக்குள் அண்ணனை சந்தேகமாக பார்த்தவன் “பேசிட்டு தானே வந்த… அப்படியே படுத்து தூங்கிடு…. இந்த கல்யாணம் ஆனவனுங்க கூட படுக்க கூடாதுன்னு சொல்றது சரியா தான் இருக்கு… இவனுங்க எப்போ எதை பண்ணுவானுங்கன்னே தெரியல… நாளையிலிருந்து இவன் கூட படுக்க கூடாது… இவன் பண்றதை

பிரபா பார்த்தா அதுக்கும்‌ என்னை தான் வைச்சு செய்யும் ” புலம்பியபடியே, வெங்கி தூங்க முயன்றான்..

……


Thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10672/
 
Last edited:

NNK-72

Moderator
களிப்பு ❤️ 7

தி காஃபி கிளப்


இள மஞ்சள் நிற விளக்கு ஒளி எங்கும் வியாபித்திருக்க, மெல்லிய வயலின் இசை அந்த இடம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. இன்று மஞ்சள் நிற தீம் போல மஞ்சள் ரோஜாக்கள் மேஜையில் மேலிருந்த குடுவையில் அழகாக வீற்றிருந்தது


அந்திச்சாயும் மாலை நேரம், வறுத்த காபி கொட்டையின் நறுமணம் வேறு வேலை செய்த அலுப்புடன் வரும் நபர்களுக்கு சொர்க்க வாசலை திறந்து வைத்தது போன்ற உணர்வை கொடுக்க, ச்சாட் மசாலா உணவு வகைகளை தயார் செய்துக் கொண்டிருந்தான் விவேக்..


அவனுடன் பேசிக்கொண்டே தலையில் தொப்பியும் கழுத்தில் மாட்டிய ஏப்பிரனுடன். கட்லட் செய்ய மாவை பிசைந்து வைத்திருந்த ஶ்ரீ, பஜ்ஜிற்கு மாவை கரைத்துக் கொண்டிருந்தாள்.


வெங்கி, அப்போது தான் காஃபி ஷாப்பிற்குள் நுழைந்தான். கடுகடு முகத்துடன் பில்லிங்கில் இருந்த அருணை பார்த்தவன்,


“என்ன மச்சி ரொம்ப சந்தோஷமா இருக்கா மாதிரி இருக்கு….” அருணை மேலும் கடுப்பேற்றியவன், அங்கிருந்த ஆர்டர்களை‌ ஆற அமர பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.


அவனை கடுப்புடன் பார்த்தவன், “நான் சந்தோஷமா இருக்கேன் அதை நீ பார்த்தா…!! ஏன்டா ஏன் வயித்தெரிச்சலை கிளப்புற… பார்றா அங்க…” வாடிக்கையாளர்கள் அமர்ந்திருந்த டேபிளை கண்களால் சுட்டிக் காட்டினான் அருண்.


கல்லூரி மாணவர்கள் தங்கள் பெண் தோழிகளுடன் வீட்டிற்கு தெரியாமல் கடலை வறுப்பதையும், வேலை செய்யும் இளைஞர்கள் தங்கள் காதலியுடன் நேரம் போவதே தெரியாமல் கண்களால் காதல் மொழி பேசுவதையும் கண்டவனுக்கு அதெல்லாம் கருத்தில் பதியாமல், “சூப்பர் டா… இன்னைக்கு ஷாப்ல கஸ்டமர்ஸ் அதிகம் தான் ல” என்றான் தொழிலை நினைத்து,


“நாசமா போச்சி… அவனவன் வந்து அரைமணி நேரமாச்சி மாப்ள… ஒருத்தனும் இடத்தை விட்டு எழுந்துக்கல, அதுலையும் அந்த முக்குல பாரு… ஒரு மணி நேரமா அந்த காஃபியை உத்து உத்து பாத்துக்கிட்டு என் வயித்து எரிச்சலை கொட்டுறானுங்க டா…” அருண் தன் ஆற்றாமையை வெங்கியிடம் கொட்ட,


“அதுக்கு ஏண்டா இப்படி வயிறு எரியுற… வேணும்னா எவன்கிட்டயாவது அவன் லவ்வரை ஒரு அரைமணி நேரம் கடனா கேட்டு பேசிட்டு அப்படியே காபி குடிச்சிட்டு வாயேன்…” வெங்கியின் நக்கலில்,


சிலிர்த்து எழுந்தவன், “எதுக்கு என்னை அவ சங்குலையே மிதிக்கவா…. போற உயிரு இப்படியே போகட்டும்… ஆனா‌ ஒன்னு என்னை வெறுப்பேத்துற‌ எவனுக்கும் இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகாதுடா…” அருணின் சாபத்திற்கு


“என்னமோ முதல் லவ்வு பிரேக்கப் ஆனா மாதிரி ஓவரா பீல் பண்ற, இதுவே எத்தனாவதுன்னு நோட்ல எழுதி வச்சி இருக்கியா எரும…” வெங்கி கலாய்த்ததில் அருண் அவனை முறைக்க,


“சரி சரி விடு… கோச்சிக்காத” நண்பனின் தோளில் கையிட்டு அவனை சமாதனப் படுத்தியவன், “அப்புறம் எங்க மச்சா உன் பாசமலர் ஆள காணும்” என ஶ்ரீ‌யை பற்றி விசாரித்தான் வெங்கி.


“எல்லா உள்ளத்தான் இருக்கு… என்னத்தையோ கிண்டு கிண்டுண்ணு கிண்டிட்டு இருந்தது, இப்போ முடிஞ்சி இருக்கும்… போய் பாரு பின்னாடியே வரேன்” என்றவன் அடுத்த ஆள் வரவும் பில் போட, வெங்கி சமையல் செய்யும் இடத்தை நோக்கி நடந்தான்.


வழியில் தெரிந்த நபர்களிடமெல்லாம் பேசியபடியும் சிரித்தபடியும் வரும் வெங்கி ஶ்ரீயின் கண்களில் பட மிகுந்த கவனத்தோடு தன் வேலைகளை பார்க்கலானாள்.


“என்ன மச்சா… எல்லாம் ரெடியா…?” விவேக்கின் அருகில் நின்றுக் கொண்ட வெங்கி அவன் செய்து வைத்திருந்ததில் சிறிது எடுத்து வாயில் போட்டான்.


“அதெல்லாம் ரெடியாதான் இருக்கு… ஆமா சார் எந்த கலெக்டர் ஆஃபீஸ் ல போய் கையெழுத்து போட்டுட்டு இவ்வளவு லேட்டா வர்றிங்க…?” என்றான் விவேக் சற்றே நக்கலாக


“ஏன் சொன்னா கூட வரப்போறியா… இதுக்கு ஸ்ட்ரெயிட்டா எங்க போயிட்டு வர்ற நாயேன்னு கேட்டு இருக்கலாம்…” வெங்கி கூறவும்,


உடனே விவேக் “உன் ஆசையை‌ ஏன் கெடுப்பானே சரி, எங்க போயிட்டு வர்ற நாயே” என்றான் சிரியாது,


அவனுடன் நின்றிருந்த ஶ்ரீ, விவேக், வினவியதில் சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்து விட, அதில் புருவம் உயர்த்தி கைகளை கட்டி அவளையே பார்த்தான் வெங்கி.


அவன் பார்வை தன்‌மேலயே நிலைக்கவும் தடுமாறி சிரிப்பை நிறுத்தியவள் “சா… சாரி” என்றாள் சன்னக் குரலில்.


அக்செப்டட் என அவள் உதிர்த்த வார்த்தைகளை கைகளில் ஏந்தி தலைக்கு மேல் தூக்கி எறிந்தது போல பாவனை செய்தவன், மேடம் இன்னைக்கு என்ன செய்யப் போறிங்க என்றான் அதே தோரணையுடன்,


“அது நிறைய இருக்கு சார்… ஆனா, இன்னைக்கு ஆப்பிள் பஜ்ஜி சக்கரைவள்ளி கிழங்கு கட்லெட்” என்றாள் கண்களில் மகிழ்ச்சி பொங்க,


“என்னம்மா ஏதேதோ சொல்ற சைன்ஸ் லேபுக்குள்ள எக்ஸ்பிரிமெண்ட் பண்ற மாதிரி இருக்கு… நீ முதல்ல சமைப்பியா..?” என்றான் சற்றே கிலி பிடித்த குரலில்,


“சார் நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஸ்டூடன்ட் சார் என்றாள் பெருமை பொங்க இவர்களின் சம்பாஷணைகளை வேடிக்கையாக பார்த்துக் கெண்டிருந்தான் விவேக்.


“அதுக்கு தான் கேக்குறேன் மா…நீ பாட்டுக்கு ஏதாவது செய்யுறேன்னு போயி… இருக்க நாலு கஸ்டமரையும் விரட்டி விட்டுடாத, அப்புறம் எங்க அப்பா அவர் கடையில ஈயம் பித்தளை பாத்திரத்தை விக்க வைச்சிடுவாறு” என்றான் பீதியான குரலில்,


“அப்படியெல்லாம் நடக்காது சார்… அதுக்கு நான் கேரண்டி வேணும்னா ஒன்னு டேஸ்ட் பண்ணி பாருங்க அப்புறம் சொல்லுங்க” அவள் மிகுந்த நம்பிக்கையுடன் கூறவும்,


அதை மறுக்க முடியாமல் சரி என்று அரை மனதாகவே தலையாட்டியவன் அவள் என்னென்ன செய்கிறாள் என விவேக்குடன் பேசிக்கொண்டே நோட்டம் விட்டான்.


அழகாக இதய வடிவில் இருந்த ஆப்பிள் ஸிலைஸ்களை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் பொறித்தவள், கட்லட் மாவை பேனில் வைத்து நேர்த்தியாக ஷேலோ பிரை செய்து, அவனிடம் இரண்டையும் நீட்டி “சார் டேஸ்ட் பண்ணுங்க” என்றாள் ஆர்வத்துடன்.


“நம்பி சாப்பிடலாமா…? இந்த எக்ஸ்பீரிமெண்டுல சோதனை எலி நாங்க தானாம்மா…?” என்றான் வெங்கி கிண்டலாக,


“சார்…” என்றாள் சற்றே உரிமையாக


“சரி சரி…” என்றவாறே அவன் வாயில் வைக்க ‘டேஸ்ட் நல்லா தான் இருக்கு’ அடிமனம் ஒத்துக் கொண்டாலும்,


“ஏதோ ஒன்னு குறையுறா மாதிரி இல்ல…”, குறையாக கூறி அவளிடம் அதே கெத்தை மெய்டெய்ன் பண்ணிக் கொண்டிருந்தான் வெங்கி.


“அவனுக்கு நாக்கு செத்து போச்சி போல, நீ இன்னும் ரெண்டை வெய் மா” என்றவாறு விவேக் தட்டை நீட்ட,


“நல்லா இருக்கா விவேக் சார்…” அவள் உற்சாத்துடன் இன்னும் இரண்டு எடுத்து விவேக்கின் தட்டில் வைக்க சத்தமில்லாது தனது தட்டை நீட்டினான் வெங்கி,


அவன் தட்டை நீட்டவும் என்னவென பார்க்க “என்ன லுக்கு வைய்யும்மா‌… என்னமோ உன் தாத்தா வீட்டு சொத்தை கேட்டா மாதிரி, இந்த பார்வை பாக்குற…” கெத்து குறையாது கேட்டதில் இதழ்கள் சிரிப்பை உதிர்க்க நினைத்தாலும் அவன் பார்வையை எண்ணி அதை தன் இதழுக்குள் புதைத்துக் கொண்டு அவனுக்கும் வைத்தாள்.


“சாப்பிட்டுக்கிட்டே இருங்க, அண்ணாக்கு கொடுத்துட்டு வரேன்” என்றவள் வேகமாக ஒரு பிளேட்டில் செய்ததை நிறைத்துக் கொண்டு அருணிடம் விரைந்தாள்.


“அவனுக்கு தானே போ போ…” நடக்க போவதை முன் கூட்டியே அறிந்தவன் போல ஒரு வித சுவாரஸ்யமான தோணியில் உரைத்தான் வெங்கி.


“அண்ணா இந்தாங்கண்ணா” அவன் முன் நீட்டியதை பார்த்ததும் அருணுக்கு முகம் அஷ்ட கோணலாகிட, ஏற்கனவே கடுகடுப்புடன் இருந்தவன் “என்னது இது” என்றான் சலிப்புடன்.


“அப்பிள் பஜ்ஜி, சக்கரைவள்ளி கிழுங்கு கட்லெட்… நல்லா இருக்கும் டிரை பண்ணி பாருங்கண்ணா” என்றாள் ஆர்வத்துடன்,


“ஏம்மா தங்கச்சி ஆப்பிளை தான் ஹார்டின் ஷேப்ல கட்டி பண்ணி வைச்சி இருக்க, போன போகுது விடு…. இந்த கட்லட்டாவது வட்டமா சதுரமா போட கூடாதாம்மா” என்றான் ஆற்றாமையுடன்…


“அண்ணா இது காஃபி ஷாப் இங்க லவ்வர்ஸ்” என்று அவள் ஆரம்பிக்கவும்,


“போதும் மா போதும் சாப்புட்டுக்குறேன் நீ போ” அவளை உள்ளே அனுப்பியவன் அதை வேக வேகமாக குத்தி குதறி வேக வேகமாக சாப்பிட தொடங்கினான்.


ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்த வெங்கியும் விவேக்கும் சிரித்துக் கொண்டிருக்க, அவர்களை நோக்கி வந்தவள், “அண்ணா ஏன் ரொம்ப விரக்தியா பேசுறாரு” என்றாள் சோகமாக,


“அவன் அப்படித்தான், போக போக செட் ஆகிடுவ” என ஶ்ரீயிடம் கூறியவன்,


“இதை எப்படி மாப்ள ப்ரோமோட் பண்றது…” என்றான் விவேக்கிடம்


“அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு சார்… டெய்லி ஸ்பெஷலை டிஸ்பிளேல வைச்சிடுங்க நேம் நீயூவா இருக்கறதுனால கண்டிப்பா வாங்குவாங்க…” என்றாள் ஶ்ரீ


“இது வொர்க் அவுட் ஆகுமா..?” வெங்கி சந்தேகமாக கேட்க,


“இப்போ பாருங்க” என்றவள் அவள் கூறியது போலவே டிஸ்பிளேயில் அன்றைய ஸ்பெஷலை எழுதி வைத்தவள், பில்லிங் இடத்தில் வருபவர்களிடம் இன்றைய மெனுவை விளக்கி டேஸ் செய்து பார்க்க கூறினாள்.


இரண்டு பேர் அதை வாங்கவும் செய்ய சுவையை பற்றி அவர்களிடமே கேட்டாள்.


“அட்டகாசமா இருக்கு சிஸ்டர் ரெண்டு பிளேட் கட்லட் பார்சல் ஒரு செட் பஜ்ஜி பார்சல்” என்றதும் அவளுக்கு துள்ளி குதிக்காத குறைதான்,


“ஓகே சார்… தேங்க் யூ” அவர்களிடம் தன் நன்றியை உரைத்தவள், வெங்கியிடம்,


“சார் இப்போ இதெல்லாம் தான் டிரெண்டே… இதே போல இன்னும் நிறையா இருக்கு ஆந்திரா ஸ்பெஷல், கேரளா ஸ்பெஷல், கர்நாடக ஸ்பெஷல் டீ டைம் ஸ்நாக்ஸ் போட்டு பாருங்க சும்மா அள்ளும்…


அப்புறம் கவுண்டர்ல 90s கிட்ஸோட ஸ்பெஷல் ஐட்டம்ஸ் இந்த தேன் மிட்டாய், புளிப்பு மிட்டாய், கம்மரகட், எள் உருண்டை, பப்பரமிட்டாய், எலந்தபழம் வடை இதெல்லாம் வைச்சி பாருங்க நல்லா போகும் சார் காஃபி ஷாப்புல காஃபி மட்டும் தான் விக்கனும்னு இல்ல இதுவும் விக்கலாம் சார்” என்றாள் ஶ்ரீ படபடவென,


“ஶ்ரீ சொல்றதும் நல்ல ஐடியாவா நான் இருக்கு நாம இதை டிரை பண்ணலாமேடா” விவேக் யோசனையாக அருணை பார்க்க,


“பண்ணலாங்குற…?” அவன் வெங்கியை பார்த்தான்.


“பண்ணுங்க அண்ணா கண்டிப்பா சக்ஸஸ் ஆகும்” என்றாள் கட்டைவிரலை உயர்த்தி,


“அப்படி ஆகலனா…?” வெங்கியின் இடக்கான கேள்விக்கு


“ம்… சரி… எல்லாத்தையும் ஒரு ரேட்டு போட்டு என் சம்பளத்துல கழிச்சிடுங்க…‌” என்றாள் பட்டென,


“இரும்மா… முதல்ல உனக்கு சம்பளம் கொடுக்கலாமா வேணாமான்னு இன்னும் நாங்க முடிவே பண்ணலையே… !” என்றதும் அவள் பேந்தப்பேந்த விழிக்க அதில் திருப்தியானவன் “இந்த ஒரு மாசம் போகட்டும் உன் பர்பாமன்ஸ் பார்த்து அப்புறம் உனக்கு சம்பளம் தர்றதை பத்தி சொல்றோம்” என்றவாறு அவன் வேலையை பார்க்க சென்று விட்டான்.


அவனை உள்ளுக்குள் தாளித்தவள் சமைக்கும் இடம் விரைந்து விட விவேக்கும் அருணும் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


…..


நேரத்துடன் எழுந்து விட்ட ஏஞ்சல் அறைக்குள் குட்டி போட்ட பூனையை போல சுற்றிக்கொண்டு இருந்தாள்., வெளியே அடுக்கலையில் பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருக்கும் மாமியாரின் சத்தம் கேட்க, வெளியே எட்டிப் பார்த்தாள்.


மாமனார் பூஜையறையில் இருப்பது தெரிய, மீண்டும் தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள். ஏற்கனவே கோபத்தில் இருப்பவர் முன்னால் போய் நின்று, அவருக்கு பீபியை ஏற்ற வேண்டாம் என்ற நல்ல மனதோடு, அறைக்குள்ளயே முடங்கி விட, பிரபாவதி சமையலறையை விட்டு வெளியே வந்தார்.


மணியை பார்க்க கடிகார முள்ளின் கூர் முனை ஏழை தொட்டிருந்தது… இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை தன் பிடியிலையே நிலையாக நின்ற பிரபாவதிக்கு, ஹரியும், வெங்கியும் பேசுவதை கேட்டு, கொஞ்சம் தன் பிடியை தளர்த்திக் கொடுப்போம் என்ற எண்ணம் பிறக்க. தானே முதல் அடியை எடுத்து வைத்தார்.


மருமகள் தலையை வெளியே நீட்டி சிறிய மகனை போல எட்டி பார்ப்பதை பார்த்து விட்டவருக்கு, சட்டென சிரிப்பு வந்து விட்டது.

அதை யாருக்கும் தெரியாமல் இதழுக்குள்ளே மறைத்தவர், “இந்தாம்மா பாப்பா இங்க வா…” என்றார் கொஞ்சம் அதட்டல் தோணியில்.


படபடப்புடன் இருந்த ஏஞ்சலுக்கு பிரபாவதி அழைக்கவும், கை கால் எல்லாம் கிடுகிடுக்க ஆரம்பித்து விட்டதில், முகத்தில் பூத்த வியர்வை முத்துக்களுடன் அவர் முன் போய் நின்றாள்.


பூஜை அறையை‌ எட்டி பார்க்க, கணவர் இன்னும் கண்கள் மூடிய நிலையில் அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு, மருமகளின் புறம் திரும்பவர் “ஏன் இப்படி வியர்த்து வழியுது…?” என்றார் அதே அதட்டல் தோணியில்,


“அது வந்து கொஞ்…கொஞ்சம் படபடப்பா இருக்கு” அவள் திக்கி திணற,


“நான் என்ன சிங்கமா புலியா என்னை பார்த்து பயப்புடுற, எல்லாம் உன்னை மாதிரி மனுஷி தான்… நீயெல்லாம் எப்படிம்மா காதலிச்சி கல்யாணம் பண்ண…?” அவளை அதிசயமாக பார்க்க,


“அது வந்து… அது … அவர்…” ஏஞ்சல் இழுத்ததில், ஓரளவு புரிந்து கொண்டவர்,


“அதுக்கு தான்‌ இந்த ஆம்பள பசங்களையே நம்பக் கூடாதுன்றது… வீட்டுல பொட்டி பாம்பா இருக்குதுங்க வெளியே அவுத்து விட்ட காளையாட்டும் சுத்தி இந்த வேலைய பாத்து வைச்சி இருக்குங்க…!!” மகனை ஜாடை மாடையாக திட்டியவர், “அதை விடு சரி நீ குளிச்சிட்டியா…?” என்றார் பிரபா


“ஓ…‌காலையிலையே குளிச்சிட்டேன் ஆண்ட்டி” சிறு பிள்ளையாக மாறி உடனே பதிலை தர.


“சரி… இன்னைக்கு நாள் கிழமை நல்லா இருக்கு… வா, வந்து விளக்கு ஏத்து” என்றவர்,


“கொஞ்சம் இரு, இந்த பூ பொட்டு குங்குமம் இதெல்லாம் வைச்சிப்பல்ல…?” என்றார் பிரபா. ‘எங்கே இதெல்லாம்‌ எனக்கு பழக்கம் இல்லை என்று கூறிவிடுவாளோ’ என்ற தவிப்புடன்.


“ஓ… நான் வைச்சிப்பேனே… சின்ன வயசில் இருந்தே இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆண்ட்டி” என்றாள் மகிழ்ச்சியுடன், அவளுக்கு பிரபாவதி பேசியதே சந்தோஷமாகி இருக்க துள்ளிக் கொண்டு வந்தது பதில்.


கணவர் பூஜை முடிந்து வெளியே வரவும், அவளை பூஜை அறைக்குள் அழைத்துச் சென்றவர் சாமி படத்தின் முன் இருந்த பூவை அவளிடம் கொடுத்து,


“ இதை தலையில் வைச்சிக்க… இந்தா தீ பெட்டி, விளக்கு ஏத்து” என்றார்.


இதையெல்லாம் பார்த்த அரங்கநாதனுக்கு முகம் கோபத்தில் கொந்தளிக்க, விருவிருவென கூடத்தில் சென்று அமர்ந்து விட்டார்.


ஏஞ்சல் பயத்தில் அப்படியே நின்று விட,


“ இங்க பாரு பாப்பா… நீ விளக்கை ஏத்து” என்றார் சட்டமாக, தெரிந்தோ தெரியமலோ வீட்டிற்கு வந்து விட்ட மருமகளை அப்படியே விட மனதில்லை… கணவருக்கு தெரியாமல் செய்யவும் மனமில்லை துணிந்து செயலில் இறங்கி விட்டார் பிரபா.


அவளுக்காக இல்லை என்றாலும் மகனுக்காகவது இதை ஏற்க தானே வேண்டும். அவன் செய்ததில் ஏதோ காரணம் இருக்குமென்று நம்பியவர், அவளுக்கான அங்கீகாரத்தை வழங்க நினைத்தார்.


“ஆண்ட்டி…” அவள் வெகுவாக தயங்க


அவள் தயங்குவதை பார்த்து, “உனக்கு விளக்கை ஏத்த தெரியாதா…?” என்றார். மெலிந்து விட்ட குரலில்,


அவர் குரலில் இருந்த ஏக்கத்தை அறிந்தவள், “இல்ல இல்ல விளக்கை‌ ஏத்த தெரியும்” அவரசரமாக உரைத்தவள், குத்து விளக்கு ஏற்றி கையை கூப்பிட, பிரபாவதியின் மனது அத்தனை நிறைந்து விட்டது.


சிறிது நேர வேண்டுதலுக்கு பின் கண்களை திறக்க, “உன் சாமிய கும்பிடு வேண்டான்னு இந்த வீட்டுல யாரும் சொல்ல மாட்டாங்க ஆனா, இந்த வீட்டுக்கும் ஒரு‌மதிப்பு மரியாதை இருக்கு, பாரம்பரியம் இருக்கு… அது மட்டும் மனசுல வைச்சிக்க,


நாங்க எல்லாம் அந்த காலத்து மனுஷங்க… காதல் கல்யாணத்தை எல்லாம் சரின்னு ஏத்துக்குற‌ பக்குவம்‌ எங்களுக்கு இல்லை… மனசு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு… இருந்தாலும் இது புள்ளைங்க வாழ்க்கை எங்களுக்கும் அக்கரை இருக்கு… எப்படியோ போன்னு விட முடியலை “என்றவர் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு, அவளுக்கு நெற்றி வகுட்டில் குங்குமத்தை வைத்து “சுமங்கலிங்க இங்க குங்குமம் வைக்கனும், என்றார்.


சட்டென ஏஞ்சல் அவர் பாதங்களில் விழுந்து வணங்கிட பதறிய பிரபாவதி, “பாப்பா என்ன என்ன பண்ற எழுத்துரு” என்றார்.


“ப்ளஸ் பண்ணுங்க ஆண்ட்டி” அவள் விடாப்பிடியாக குனிந்தவாறே இருக்க,


பிரபா கணவரை அருகில் வரச்சொல்லி இறைஞ்சுதலாக பார்க்க, அவர் எங்கே இங்கே பார்த்தார். வீம்பாக அமர்ந்திருந்த மனிதரை உள்ளுக்குள் வறுத்தவர், மருமகள் காலில் விழுந்து இருப்பது நியாபகம் வரவும், “தீர்க்க சுமங்கலியா நல்லா இரும்மா என வாழ்த்தியவர் அவளுக்கு குடிக்க காபியை கொடுத்தார். மகன்களுக்கும் கொடுக்க சொல்லி மாடிக்கு அனுப்பி வைத்தார்.

Thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10672/

….
 

NNK-72

Moderator
களிப்பு ♥️ 8

அடுத்த நாள் காலை எந்த வித ஆர்பாட்டமும் இல்லாமல் தன் அறைக்குள்ளயே முடங்கியவள்,


“டேய் அரைமண்டையா… லூசு… லவ் லெட்டர் கொடுத்தது நானுடா கிறுக்கு புடிச்சவனே…!!!” வெங்கியின் போட்டோவை பார்த்து திட்டிக் கொண்டிருந்தவள் ,


“ஆனா, அந்த கிறுக்கு,... கூட இருக்க கிறுக்கனுங்களை சந்தேகப்பட்டு நீ எழுதினியா நீ எழுதினியான்னே கேட்டுக்கிட்டு இருக்கு… சுத்த களிமண்ணா இருக்கானே…‌ இவனை என்ன செய்றது…”தன் முன்னால் சாக்லேட்டை சுவைத்துக் கொண்டிருந்த அந்த குட்டி வாண்டுவிடம் தன் நியாயத்தை கேட்டுக் கொண்டிருந்தாள் உபய்.


சாக்லேட்டை சுவைத்துக் கொண்டிருந்த குட்டி வாண்டோ,


“ஒன்னு செய்யலாம் உபி, அந்த மாமாவை தூரமா நின்னு கல்லை எடுத்து, அடிச்சிட்டு ஓடி வந்துடலாம்” என்றான் தன் மழலை மொழி மாறாமல்


“போற போக்க பாத்த அதைதான் செய்யனும் போல இருக்குடா நியூட்டன்” அவனிடம் நொந்து கொண்டவள்,,


“என்னடா ஒரு பொண்ணு மூனு மாசமா மாங்கு மாங்குனு நம்ம பின்னாடி சுத்தி, சுத்தி, வர்றாளேன்னு கொஞ்சும் கூடவா உள் மனசு சொல்லல… அய்யோ இவனை புடிச்சி, வேற தொலைச்சிடுச்சே, என்ன பண்ண போறேன்னு தெரியலையே!!! இவனுக்கு லவ்வை புரிய வைச்சி… இவனுக்கு லவ் மோடை கொண்டு வர்றதுக்குள்ள, நான் பாதி கிழவி ஆகிடுவேன் போல இருக்கே… ஆண்டவா…” என மேல் நோக்கி கையை நீட்டி பேசிக் கொண்டிருந்தவள், யோசனை வந்தவளாக,


“ பேசாம கடத்தி கொண்டு போய் வைச்சி, இந்த சேது படத்துல வர்ற விக்ரம் மாதிரி லவ்வை கதற கதற சொல்லிடலாமா…??” அவள் யோசனை செய்ய,


“சே… சே… வேணா அப்புறம் வெங்கி அபிதா வா மாறி, அம்மாக்கு சத்தியம் பண்ணி கொடுத்துட்டேன், அவா சொல்ற பொண்ணை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு, தேஞ்ச ரெக்கார்டு மாதிரி சொன்னா நான் என்ன பண்றது…” அவள் பலவாறு மீண்டும் புலம்ப


அவள் புலம்பலின் முடிவில் கேட்ட வார்த்தைகளை வைத்து,


“நீ ஒன்னும் கவலைப்படத உபி நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்…” சாக்லேட்டை சுவைத்துக் கொண்டே அந்த குட்டி வாண்டு வெட்கப்பட்டுக் கொண்டு சொல்ல.


அவன் பேச்சில் சட்டென சிரித்து விட்டவள், “அடிங்க உனக்கு நான் ஜோடியா டா… உபய் சிரித்துக் கொண்டே அவனை அதட்டும் நேரம்,


“சாரு… சாரு…” அறையின் வெளியே இருந்து அவன் அன்னை குரல் கேட்டது.


“டேய் நீயூட்டன் ஓடுடா ஓடுடா… அம்மா கூப்புறா…” அறையின் கதவை திறந்து விட்டவள், தனது புலம்பலை இன்னும் முடித்த பாடில்லை…


…..


வெங்கியின் கஃபேயில் ஶ்ரீ வேலைக்கு சேர்ந்து கிட்ட தட்ட ஒருவாரம் முடிந்திருந்தது… தினமும் ஶ்ரீ ஏதாவது ஒரு புது வித உணவை அறிமுகப்படுத்தி வைத்திருக்க, கஃபேயின் பெயரும் கொஞ்சம் பிரபலம் அடைந்து, வருமானமும் லாபத்தை ஈட்டியிருந்தது.


சமீபகாலமாக வெங்கியின் முழு நேர வேலையே அன்று ஶ்ரீ என்னவிதமான உணவை அறிமுகப்படுத்த போகிறாள் என்பதை சுற்றியே இருக்கும்.

அதை முதல் ஆளாய் சுவைப்பதிலும் தவறமாட்டான்.


மெல்ல மெல்ல அந்த கஃபேவின் ஒரு அங்கமாக மாறிக் கொண்டிருந்தாள் ஶ்ரீ. பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தால் கூட அன்றைய பொழுது அதை சொல்லியே அவளை கடுப்பேற்றிக் கொண்டிருப்பான் வெங்கி. இன்றோ அவளுக்கு சந்திராஷ்டமம் போல ,


சுட்டெரிக்கும் சூரியன் தன் வெப்பத்தை குறைத்துக் கொள்ளும் சாயங்கல நேரம், காற்று பலமாக அடித்ததில் கற்றை குழல் முகத்தில் மோதி விளையாட அதை நாசுக்காக ஒதுக்கி விட்டவள்,


“அண்ணா இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்…” தன் கைகடிகாரத்தை பார்த்தபடி தவிப்புடன் கேட்டாள் ஶ்ரீ.


“எப்படி இருந்தாலும் ஒரு அரைமணி நேரமாவது ஆகும் மா எங்கேயாவது போயிட்டு வர்றதனா வாம்மா…” என்றவர் ட்யூபில் பஞ்சர் ஒட்டும் பணியை தொடர்ந்திட,


‘அச்சோ கடவுளே இன்னைக்கு போய் சேர்ந்தா மாதிரி தானா… அவன் இன்னைக்கு ஃபுல்லா இதைச் சொல்லியே எரிச்சலாக்குவானே..!!!’ அதை நினைத்து ஜெர்க்கானவள்,


“அண்ணா ஏதாவது போட்டு ஒட்டிக் கிட்டி கொடுங்கண்ணா…. வேலைக்கு போகனும் நேரமாச்சி…” அவள் அவசரத்தோடு சொல்ல,


“எம்மா இதென்ன பசை போட்டு ஒட்டுற போஸ்டர்னு நினைச்சியா பொசுக்குன்னு ஒட்டி இந்தாம்மான்னு கையில தர பாத்து தான் ஒட்டனும்மா” என்றார் அவர்.


‘விடிஞ்சிடும்… என சலித்தவளோ “சரிங்கன்னா நீங்க‌ ஒட்டுங்க” என்று வழியில் ஏதாவது ஆட்டோ கிடைக்கிறதா என பார்த்தாள்.


அவள் நேரமோ என்னவோ ஒன்றும் நிற்காமல் சென்றுவிட, போனில் ஊபர் ஆட்டோவை தேடலானாள் அதிலோ நெட்வொர்க் நில்லாமல் சுழன்றுக் கொண்டிருக்க எரிச்சலின் உச்சத்திற்கு சென்று விட்டாள் ஶ்ரீ.


“சே இந்த நெட்வெர்க் வேற சதி பண்ணுதே”முனுமுனுத்துக் கொண்டே அவள் வரும் வண்டிகளை பார்க்க,


பைக்கில் அவ்வழியாக கஃபேவிற்கு வந்துக்கொண்டிருந்த வெங்கியின் கண்களில் சிக்கினாள் ஶ்ரீ .


“இந்த பொண்ணு வேலைக்கு போகாம இங்க என்ன பராக்கு பாத்துக்கிட்டு நிக்குது…!!” யோசனையுடன் அவள்‌ முன்னே சரேலென்று வண்டியை நிறுத்தினான் வெங்கி.


அதில் அதிர்ந்து ஶ்ரீ விலகவும்… “நான் தான்… நான் தான்….” வடிவேலுவின் பாணியில் டையலாக்கை சொல்லி அவளை ஆஸ்வாசப்படுத்தியவன்


“ஆமா…, வேலைக்கு போகாம‌ இங்க என்ன ரோட்டை பராக்கு பாத்துக்கிட்டு நிக்குற …?”என்றான் கேள்வியாக…


“சார்…. அது வந்து… பைக் பஞ்சர் இன்னும் ஹாஃப்னவர் ஆகுமா…” வெங்கி என்ன சொல்லப் போகிறானோ என அவள் தயக்கமாக கூறிட,


“என்னது அரைமணி நேரம் ஆகுமா…!!!

டிசிப்பிளின்னா என்னன்னு தெரியுமா…? பஞ்சுவாளிட்டின்னா என்னன்னு தெரியுமா…? இந்த வெங்கின்னா யாருன்னு தெரியுமா…? இதுக்கெல்லாம் டிக்ஷ்னரியே என்னை பார்த்துதான் எழுதி வைச்சி இருக்காங்க… அப்படிப்பட்ட வெங்கியோட ஷாப்புல வேலை செய்ற உனக்கு கொஞ்சம் கூட பஞ்சுவாளிட்டியே இல்லையேம்மா”, (காலை நேரம் அலாரம் அடித்தாலே அதை அணைத்துவிட்டு பத்து மணி வரையும் தூங்குபவன், ஒழுக்கமின்மையால் தினமும் பிரபாவிடம் பாட்டு வாங்குபவன், மொத்தத்தில் அன்டிசிப்ளினின் மொத்த உருவமாய் நிற்பவன் )” பேசிக்கொண்டே போகவும் அவனை பாவமாக பார்த்தவள்.


“நீங்களே லேட்டா தானே சார் போறிங்க‌…!” என்றாள் மெலிந்த குரலில். எங்கே இதற்கும் ஆத்தாத்தென்று ஆத்துவானோ என எண்ணிக்கொண்டே சொல்லி விட்டாள்,


அதில் தடுமாறியவன், “நான்…நான் முதலாளி…. நான் லேட்டா போகலாம்… ஆனா நீ, லேட்டா போகலாமா‌…?” அவன் குரல் உயர்ந்து விட்டதில், அவனை வேற்று கிரகவாசியை போல பார்த்தவள் தன் தலைவிதியை நொந்துக்கொண்டு,


“அண்ணா இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்‌…” என்றாள் மீண்டும் பஞ்சர் ஒட்டுபவரிடம்,


“எம்மா இன்னும் ஒரு இருபது நிமிஷம் ஆகும்மா… ட்யூப் வேற வீக்கா இருக்கு ரெண்டு இடத்துல பொத்தல் வேற பெருசா இருக்கு…” சொல்லிக்கொண்டே வந்தவர் அருகே நிற்பவனை பார்த்ததும் “தம்பி யாரும்மா..?” என்றார்.


அவரை சங்கடமாக பார்த்தவன் “அவரு என் முதலாளின்ணா” என்றதும்


“நல்லதா போச்சி… சார் இந்த வண்டி ரெடியாக இன்னும் நேரம் எடுக்கும்‌ ஒன்னு செய் சார், இந்த பொண்ணை நீயே கூட்டிக்கிட்டு போயிடு, வரும்போது இந்த பொண்ணு வண்டியை எடுத்துக்கட்டும்… ஏதோ வேலைக்கு அவசரம் போல சுடுதண்ணிய கால்ல கொட்டுனா மாதிரி அவரசப்படுது” ‌என்றார் அவர்,


‘என்னடா வெங்கி, இந்தாளு பொசுக்குன்னு இந்த பொண்ணை ஏத்திக்கிட்டு போக சொல்லிட்டாரு…

விட்டுட்டு போனா மானக்கேடு ஆகிடுமே…!’ யோசனையுடன் இருந்த வெங்கியின் முகத்தை பார்த்தாள் ஶ்ரீ.


அது அவளுக்கு சங்கடத்தை தர அவரை ஒன்றும் சொல்ல முடியாது

“அதெல்லாம் ஒன்னுமில்லை வெங்கி சார்… நீங்க போங்க… நானே ஏதாவது வண்டி வருதான்னு, பாத்து வந்துடுறேன்…” என்றவள் அவனை தாண்டி வேறு ஏதேனும் வண்டி வருகிறதா என்று பார்க்க,


‘நான் தானே வேண்டாம்னு சொல்லனும்… இவ எதுக்கு சொன்னா…? கிரேட் இன்சல்ட்டா வெங்கி’ என நினைத்தவாறு பைக்கை ஒரு முறுக்கு முறுக்கியவன், “ம்கூம் ம்ரும்” செறுமியபடி அங்கேயே நின்றான்.


‘இவரு ஏன் வித்தியாசமா இரும்புறாரு…?’மனதில் நினைத்தவள்,


“என்ன சார் தொண்டையில ஏதாவது செய்யுதா…?” என்றாள் பரிதாபத்துடன்,


“ஆமா கிச் கிச்ன்னு சிக்கலக்கா பண்ணிக்கிட்டு இருக்கு” அவன் நக்கலாக பேசவும்,


அவள் “சார்‌…” என்றிட,


“அட‌ ஏறு‌மா உன்னை கொண்டு போய் எங்கேயும் தள்ளிட மாட்டேன்…” என்றான் இடக்காக,


அதில் அதிர்ந்து விழித்தவள் “சார் நானா…?” ஶ்ரீ வியப்பாக,


“பின்ன ரோட்டுல போறவனையா வம்படியா ஏத்த முடியும்…? ஏறு மா அப்புறம் உன்‌ பாசமலர் என் தங்கச்சிய விட்டுட்டு வந்துட்டியேன்னு ஒப்பாரி வைப்பான்…”அவன் நக்கலடிக்கவும், முகத்தை சுளித்துக்கொண்டே பைக்கில் ஏறி அமர்ந்தாள் ஶ்ரீ.


வெங்கியின் மனதிலோ ‘அய்யோ ஒரு வேகத்துல வண்டியில ஏத்திட்டேன்…. பிரபாவுக்கு மட்டும் நான் ஒரு பொண்ணை ,பைக்குல ஏத்தினேன்னு தெரிஞ்சது, கஃபேக்கு தொடப்பகட்டையோட வருமே…!” மனதின் ஓரத்தில் பயம் இருந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாது சாதரணமாகவே இருந்தவனது மேனி‌ புதுவித ஸ்பரிசத்தை உணர்ந்திட, அவனையும் மீறி வெங்கியின் நாசி அவளது சுகந்தத்தை ஆழ்ந்து அனுபவித்தது.


…..


விடியலுக்கு முன்னர் எழுந்துத்கெள்ளும் பழக்கமே இல்லாதவனை உசிப்பி எழுப்பிக் கொண்டிருந்தது அவனது அலைபேசி. தூக்கத்தில் கண்களை திறக்காமலே அதை அணைத்து விட மறுபடியும் மறுபடியும் ஒலித்து எழுப்பியது…


“அட யாருடா இந்த நேரத்துல பிரபா தான் மார்கழி மாசம் தை மாசம்னு ஸ்பீக்கரை போட்டு உயிர வாங்குதுன்னா எந்த வீணாபோனது போனை போட்டு உயிரை வாங்குது” வாயில் வந்ததை எல்லாம் திட்டிக்கொண்டு போனை எடுத்துப்பார்த்தான்.


இதுவரையிலும் வராத புது எண்ணிலிருந்து அழைப்பு வர, அவன் யோசனையுடன் எடுப்பதற்குள் அது அழைத்து அடங்கிவிட்டது.


‘சரி ஏதாவது முக்கியமான‌ விஷயமா இருந்தா அவங்களே கால் பண்ணுவாங்க…’ என நினைத்தவன் மீண்டும் கும்பகர்ண‌ சேவகம் செய்ய ஆரம்பித்தான்.


அப்போது வாட்ஸப்பில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி வரவும் மீண்டும் சலித்தபடி துயில் கலைந்தவன் அந்த குறுஞ்செய்தியை திறந்து பார்த்தான்.


டேய் மேங்கோ மண்டையா…


அதை படித்ததும் என்னது மேங்கோ மண்டையா அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவன், தன் தலையை அப்படியும் இப்படியுமாக தொட்டு பார்த்து, ‘நம்ம மண்டை அப்படியா இருக்கு…?” நினைத்தபடியே மேலும் படிக்கலானான்.


“உனக்காக கஷ்டப்பட்டு தமிழ்ல, ஒரு காதல் கவிதையை நானே யோசிச்சு எழுதி தந்தா, அந்த எஃபர்ட் எல்லாம் வீணா போற மாதிரி கூட இருக்க கிறுக்கனுங்களை சந்தேகப்பட்ற…!!!”


“என்னது லெட்டர் போட்டது ஒரு பொண்ணா…?” ஷாக்கடித்து போல தலையே உலுக்கி கொண்டவன், “எனக்கென்னடா தெரியும் நான் அம்புட்டு அழகுன்னு….” தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து பேசியவன், மறுபடி படிக்க ஆரம்பித்தான்.


“உன்னை வச்சி காதலுக்கு மரியாதை எடுக்கலாம்னு பார்த்தா, நீ தோஸ்தானாவாக்கிட்டியேடா வெங்கி…


“என்னது தோஸ்த்தானாவா…” அவன் முழித்தபடியே படிக்க


“ஆமா யாரு அவ….? பைக்ல பின்னாடி வச்சி கூட்டிட்டு போற அளவுக்கு முக்கியமானவளா…?. வெள்ளை உருண்டை மாதிரி இருந்துட்டு என் ஆளையே கரெக்ட் பண்ண பாக்குறாளா…? மவனே இன்னொரு முறை அந்த பொண்ணை உன் கூட பார்த்தேன்னு வை…”


பார்த்தா….? தனக்குள்ளையே கேள்வியை கேட்க,


“அப்புறம் என்னோட உண்மையான சுயரூபத்தை பார்ப்ப… ஜாக்கிரதை…” சரி இன்னைக்கு இது போதும் என்ன...? சொன்னது எல்லாம் புரிஞ்சதா…?”


“ ஐ லவ் இட் மேங்கோ மண்டையா… சீ யூ… உம்மா…” டாடா” நாளைக்கு வரேன்”


என வந்திருந்த குறுஞ்செய்தியை படித்தவனுக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை…மிச்சமிருந்த அரைகுறைத் தூக்கமும் பஞ்சு போல் பறந்து விட்டிருந்தது.


“யாருடா இவ …எந்த ஊர்க்காரியா இருப்பா இவ…? இந்த கிழி கிழிக்கிறா…!!”


“போனவாரம், பெண்களால் பிரச்சனை வரும்னு, பிரபா வேற சொல்லுச்சு, நம்மல திசை திருப்ப அது பிரபா சொல்ற பொய்யினுல நினைச்சேன்... உண்மையாலே நம்ம தேடி ஏதோ ஒரு சார்டடே வந்துடுச்சே டா… இனி அது, ஜடை பின்னி, பூ வைச்சி, பொட்டு வைக்காம போவது, போல இருக்கே …”


“போற போக்க பாத்தா, நான் பிரபா கையால தொடப்பக்கட்டைல அடி வாங்குறது உறுதியாகிடும் போலிருக்கே வெங்கி” என தலைக்கு மேல் இருக்கும் பெருமாள் படத்தை பார்த்தான் இந்த வெங்கி…Thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10672/
 
Last edited:

NNK-72

Moderator
களிப்பு❤️ 9

சூரியன் சுல்லென முகத்தில் அடிப்பதுக் கூட தெரியாமல் அலைபேசியையே வெறித்துக் கொண்டிருந்தான் வெங்கி.


அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த ஹரி, வெங்கியின் அமைதியில் சந்தேகம் வர,


“என்னடா…? ஏதோ மந்திரிச்சி விட்டா மாதிரி போனையே பாத்துக்கிட்டு இருக்க…? ஷாப்புக்கு நேரமாகல…?” என்றான் வாட்சை அணிந்துக் கொண்டே.


“ம், போனுக்குள்ள குட்டி சாத்தான் வந்து மிரட்டிட்டு போச்சி, அதான் என்ன ஏதுன்னு பாத்துக்கிட்டு இருக்கேன்…” வெங்கி கிண்டலாக பதிலை தர,


அவனை கடுப்பாக பார்த்த ஹரி, “உன்கிட்ட பேச வந்தேன் பார், என்னை சொல்லனும்,” தலையில் அடித்துக் கொண்டவன், கிளம்புவதில் கவனமாக,


‘போன்ல வந்த மிரட்டலை இவன் கிட்ட சொல்லலாமா வேண்டாமா…? ஏற்கனவே இவனை ரொம்ப படுத்தி இருக்கேன்… அந்த காண்டு எல்லாம் வைச்சி நம்மல பிரபாகிட்ட மாட்டி விட்டுட்டா என்ன பண்றது…’ யோசித்துக் கொண்டிருந்தவன் ‘


“டேய் அண்ணா, இந்த காதலை பத்தி என்ன நினைக்கிற..?” என்றான் சம்மந்தமே இல்லாது… தலையை வாரிக் கொண்டிருந்தவன் அதில் திகைப்பாக,


“நீ…யாடா நீயா…. டா… இந்த கேள்வியை கேக்குற…? என்றான் ஹரி வியப்பு மாறாக் குரலில்,


“ஏன்டா ஏன் நான் எல்லாம் இந்த கேள்வியை கேக்க கூடாதா…?” வெங்கி வெகுண்டு எழ,


“எப்பா சாமி… அடங்கு… உனக்கு என்ன காதலை பத்தி தெரியனும் அவ்வளவு தானே, சொல்றேன் கேளு, அது ஒரு நல்ல பீஃல்… “ ஹரி ஆரம்பிக்கவும்,


“தன்னையும் அறியாமல், கண்களை மூடி ஶ்ரீயின் சுகந்தத்தை அனுபவித்தவனுக்கு, காலையில் வாட்சப்பில் வந்த மெசேஜ், ஞாபகம் வரவும், சட்டென கண்களை திறந்து கை நீட்டி, போதும் என அவனை தடுத்த வெங்கி, “அது உனக்கு…” என்றான் முறைப்புடன்,


“அப்போ உனக்கு…?” ஹரியின் கேள்விக்கு,


அவனை ஏற இறங்க நக்கலாக பார்த்தவன், “இன்னும் முடிவு பண்ணல… பார் யூவர் கைன்ட் இன்ஃபர்மேஷன், உங்கள இந்த வீட்டுல இன்னும் சேத்துக்கல… இதுல லவ்வு இவருக்கு குட் பீலாம்… போ… போய் ஆபீஸுக்கு கிளம்புற‌ வழிய பாரு…” சொல்லிக்கொண்டே கீழே இறங்கியவன், “அம்மா ஒரு காபி…” என கத்திக் கொண்டே வர அரங்கநாதனின் கண்களில் சிக்கிக்கொண்டான் வெங்கி.


மாடியில் இருந்து எட்டி பார்த்த ஹரி, வெங்கியின் நிலையைக் கண்டு சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து விட,


“தருதல… தருதல… இன்னும் குளிக்காமல் தான் சுத்திக்கிட்டு இருக்கா… இதெல்லாம் எப்போ தான் திருந்துமோ…” தலையில் அடித்துக்கொண்டு அவர் வெளியே சென்று விட்டார்.


தலையை அழுந்த கோதிக் கொண்டவன், “நேரம் காலம் புரியாம இவரு வேற, அப்போ அப்போ வந்து கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்து போறாரு…” தன் போக்கில் முனுமுனுத்தபடி, ஏஞ்சல் கொண்டு வந்து நீட்டிய, காபியை சத்திமில்லாது, வாங்கிக் கொண்டு சென்று விட்டான்.

…..வரும் வழியெல்லாம் காலையில் நடந்த நிகழ்வையே நினைத்துக் கொண்டிருந்தவனின் மனம்

ஓரளவு தெளிவுப் பெற்று விட,


‘இவ மிரட்டுனா நாங்க பயந்துடுவோமா… அவ்வளவு பயந்தாகோலின்னு நினைச்சிட்டாளா என்னை?… இவ தான் ரொம்ப தைரியமான பொண்ணாச்சே நேர்ல வந்து அவ லவ்வை சொல்றது… அதென்ன குழந்தைக்கிட்ட லெட்டர் கொடுத்து அனுப்பறது… பெயர் சொல்லாம மெசேஜ் பண்றது… முகத்தை காட்டாம சுத்த விடுறது… இதுக்கெல்லாம் இந்த வெங்கி அசர்ற ஆள் இல்ல… இந்த மாதிரி எத்தனை பேரை பாத்திருப்பேன்… வெங்கிம்மா வெங்கி … என்கிட்ட லவ்வை சொன்ன எத்தனை பேரை தெரிச்சி ஓட வைச்சிருக்கேன் நீயெல்லாம் சுண்டைக்காய்…’ சவடலாக நினைத்தவன், கபேஃவை நெருங்கியிருந்தான்.


வெங்கி விரும்பி வரும் இடம் கஃபே தான். ஆனால் இன்று மிகவும் ஆர்வத்துடன் வந்தான். இரவெல்லாம் தூங்க விடாமல், அந்த சுகந்தத்தையே அனுபவித்தவனது மனம் இன்றும் அவள் வாசம் வேண்டுமென அடம் செய்ய, ஒரு வித ஆர்வத்துடன் கஃபேவிற்கு வந்து விட்டான்.


கஃபேயில் நுழைந்தவனது லேசர் விழிகள், அந்த சுகந்தத்திற்கு சொந்தக்காரியை தேடித் துழாவிக் கொண்டிருந்தது. இறுதிவரை அவன் கண்களுக்கு சிக்காமல் போக, சமையலறை நோக்கி விரைய இருந்தவனை, தேக்கி நிறுத்தியது அருணின் அவசர அழைப்பு.


“டேய்… என்னடா…. வந்தவுடனே கிச்சனுக்கு போற…? கல்லா பக்கம் கூட எட்டிப் பாக்கல எங்ககிட்ட ரெண்டு வார்த்தை பேசல ?”


அருணின் ஆராயும் கேள்வியில் ஒரு நொடி திருதிருத்தாலும், அடுத்த வினாடியே நிலைமையை சாமாளிக்கும் விதமாக,


“இன்னைக்கு என்ன ஸ்பெஷலுன்னு பாக்க போனேன் டா… எப்பவும் உன் பாசமலர் தானே செஞ்சி எடுத்துட்டு வர்றா… அதான் இந்த வாட்டி நானே போய் பார்த்துட்டு வரலாமேன்னு தான்… இப்போ என்ன உங்கிட்ட பேசனும் அவ்வளவு தானே…

என்னங்கடா மச்சான்ஸ் நல்லா இருக்கிங்களாடா…? என்னடா, ரெண்டு பேரும் துரும்பா இளச்சிட்டிங்க…?” இருவரின் தோள்மேலும் கையிட்டு அவர்களின் நலனை விசாரிக்க, அருணும் விவேக்கும் அவனை வித்தியாசமாக பார்த்தனர்.


அவர்கள் முகத்திற்கே நேர சொடுக்கிட்டு, அழைத்தவன், “இது போதுமா…? இப்போ நான் உள்ள போயி திண்ண என்ன ஏது இருக்குன்னு பாத்துட்டு வரேன்…”

அவளை தேடிச் செல்லும் தன் மனதிற்கும் சேர்த்து திண்பதற்காக தான் செல்கிறேன் என்ற எண்ணத்தை விதைத்தவன், சமையல் இடம் நோக்கி நகர்ந்தான்.


“இது சரியில்லையே பையபுள்ள சொல்றது செய்யறதும் வித்தியாசமால இருக்கு…!!!” சொல்லியபடி விவேக் சந்தேகமாக அருணை பார்த்தான்.


அவனும் ஆராய்சி பார்வையுடன் ஆமாமென தலையை ஆட்ட இருவரும் அவன் பின்னாடியே சென்றனர்.


இளமஞ்சள் நிற காட்டன் சுடிதாரில், அவன் கண்களுக்கு இன்று ஶ்ரீ சற்று அழகாக தெரிந்தாள்.


‘என்ன இன்னைக்கு, என் கண்ணுக்கு இவ கொஞ்சம் அழகா தெரியுறா…! இதுவரை அப்படி தெரிஞ்சது இல்லையே நம்ம கண்ணு கோளாறா‌ ஆகிடுச்சா…’ தன் கண்களை அழுந்த கசக்கிக் கொண்டவன், அவளருகில் செல்ல, தலையில் தொப்பியும், கழுத்தில் மாட்டிய ஏப்ரேனுடன் சுய்யத்திற்கு இருந்த மாவை எடுத்து எண்ணெயில் விட்டுக் கொண்டிருந்தாள் அவள்.


சுய்யம் சுடுவதில் மும்மரமாக இருந்தவளுக்கு வெங்கி அருகில் வந்ததோ, இல்லை தன்னையே குறுகுறுவென்று பார்ப்பதோ, தெரியவில்லை… தன் போக்கில் அவள் நின்றிருக்க,


அவளுக்கு சற்று அருகில் இருந்த வெங்கி மூச்சை இழுத்து ஆழ்ந்து சுவாசித்தான்.


அந்தோ பரிதாபம் அவளது வாசத்திற்கு பதில் சுய்யத்தின் வாசனை அவன் மூக்கினை வேகமாக சென்றடைந்தது.


‘சே…. வடசட்டியோட வாசனை வருது…. மனம் சலித்துக் கொண்டது, பின்ன அதுக்குள்ள பர்பீயூம் வாசனையாடா வரும் அதே மனம் அவனுக்கு கவுன்டரும் கொடுக்க, ‘இப்போ என்ன பண்றது…?’ என மூளையை தட்டி யோசித்தவன்….’


அவளது பின்புறம் நின்று தலையை நீட்டி அவளது கழுத்தின் பக்கம் கொண்டு வந்து, எட்டி பார்த்தவன். அவளிடம் பேசுவது போல வாசம் இழுத்தான்.


‘அடப்பாவி வெங்கி நீ ஹீரோ டா… இப்படி வில்லனுங்க செய்றது எல்லாம் செய்றியே… அவன் மனம் கூப்பாடு போட்டாலும், இன்று அவள் வாசம் பிடிக்காமல் போவதில்லை என்று உறுதியுடன் இருந்தான்.


ஶ்ரீயோ அவனது திடீர் செய்கையில் நிலைதடுமாறி “அம்மா” என்ற கூவலுடன் அதிர்ந்து விலகியவள் “சார் நீங்களா…?” என்றாள் அதிர்ச்சி விலகாது,


‘அய்யோ மாட்டிக்கிட்டோமே உள்ளுக்குள் ஒரு நொடி ஜெர்க் ஆனவன், ஏம்மா ஏன் இப்படி…?” கைக்கு எட்டியது மூக்கிற்கு எட்டவில்லையே என்ற அலுப்புடன், வெங்கி கேட்கவும்,


“சார் அதை நான் கேக்கனும், என்ன சார் வேணும் உங்களுக்கு ஏன் இப்படி…?” என்றாள் அலுத்தவளாக .


“அம்மே… கேக்குறாளே…. கேக்குறாளே… என்ன சொல்றது…?’ யோசனையில் இருந்தவன், ஆஹ் நியாபகம் வந்துடுச்சி மூளை குரல் கொடுக்க, முகம் பிரகாசமாகி,


“இன்னைக்கு என்ன ஸ்பெஷலுன்னு பாக்க வந்தேன்…” என்றான் நெருக்கமாக நின்று , அப்படியாவது அவளது மணம் தன் நாசியை நிறைத்துவிடும் என்ற நம்பிக்கையில்,


அவனிடமிருந்து சட்டென விலகி நின்றவள், “அதுக்கு ஏன் சார் இப்படி எட்டி பாத்து பயம்புறுத்துறிங்க… ஒரு நிமிஷம் மூச்சே நின்னுடுச்சி சார்…” என்றாள் தன்னை ஆஸ்வாசப்படுத்தியவளாக,


அவள் தள்ளி நின்று விட்டதில் சுறுசுறுவென பொங்கியது அவனுக்கு ‘ஹோ… மகாராணி கூட எல்லாம் நிக்கமாட்டாங்களோ…!’ மனம் முரண்ட,


‘ஏதே‌ நான் வேணும்னே பயமுறுத்தினா மாதிரி சொல்ற….?’ உள்ளுக்குள் நினைத்து ஒரு நொடி தடுமாறியவன் அடுத்த நிமிடமே “ம்…. உன்னை பயமுறுத்தனும்னு வேண்டுதல்…” கடுப்பாக வந்தது அவனது பதில்..


அவள் செய்கையில், இதுவரை அவன் அறிந்திராத கோவம் என்ற உணர்வு தாக்க… எதையுமே அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவனுக்கு இந்த விஷயத்தை, அவ்வளவு சுலபமாக எடுத்து கொள்ள முடியவில்லை…


“சார்….” அவன் கோவம் எதற்கென அறியாதவள், தயக்கமாக அவனை அழைத்தாள்.


தனக்கும் இந்த கோவம் வித்தியாசமாகபட, “ஒன்னுமில்லை நீ வேலையை பாரு…” என்றபடி வெளியேறி விட்டான். அவனை தொடர்ந்து வந்த இருவருக்கும் இன்று வெங்கியின் நடவடிக்கை விசித்திரமாக தெரிய அவனை பின் தெடர்ந்தனர்.


….கந்த சஷ்டி கவசத்தின் பாடல் வரிகள் அந்த கோவில் முழுவதும் எதிரொலிக்க நந்தினியுடன் கோவிலுக்கு வந்திருந்த உபயின் மனத்தினில் வெங்கியின் நினைவுகள் எதிரொலித்திருந்தது.


கண்களை மூடிக்கொண்டு கடவுளிடம் தன்னையும் வெங்கியையும் சேர்த்து வைக்குமாறு விண்ணப்பம் இட்டுக்கொண்டிருந்தவளை இடைமறித்தது நந்தினியின் குரல்.


“ஹே பால்கோவா….என்னடி சாமி கிட்ட ஹெவி அப்ளிகேஷன் போல… நீ பாட்டுக்கு கண்ணை மூடி சிலை மாதிரி நின்னுக்கிட்டு இருக்க…. டைம் ஆகுதுடி… சீக்கிரம் அப்ளிகேஷனை ஃபில் பண்ணிட்டு வாடி…” கிண்டல் பாதியும் சலிப்பு மீதியுமாக கூறினாள் நந்தினி.


‘ஏண்டி சொல்ல மாட்ட… எனக்கு மாட்டின மாதிரி, உனக்கும் ஒரு மேங்கோ மண்டையன் மாட்டி இருந்தா, என்னை விட உன்னோட அப்ளிகேஷன் டைம் ஜாஸ்தி ஆகி இருக்கும் … என்ன பண்றது தலை எழுத்து நீ கிண்டல் பண்ற மாதிரி என் பிழைப்பு ஆகிடுச்சு’ மனதினில் நினைத்துக் கொண்டவள் முகத்தில் அதைக் காட்டாது “ போதும் … வா…ரொம்ப ஓட்டாத அப்புறம் நானும் உன் பழைய கதை எல்லாம் எடுத்து விட வேண்டி இருக்கும்” விளையாட்டாக அவளை மிரட்டியபடியே, நந்தினியுடன் பிரகாரத்தை விட்டு வெளியேறினாள்.


“அம்மா தாயே உன்னை எதுவும் கேக்கல வா… நந்து கெயெடுத்து கும்பிட்டதும் ,


“அது…அந்த பயம்… இருக்கனும்…” என்றபடி கோவிலை வலம் வந்த இருவரும், கோவில் சுற்றுப் பிரகாரத்தில் அமர்ந்திருந்திட, ஏதேர்ச்சியாக உபயின் கண்களில் அகப்பட்டார் பிரபாவதி.


எப்பொழுது வெங்கியை விரும்ப ஆரம்பித்தாளோ, அப்பொழுதிலிருந்தே வெங்கி குறித்த அத்தனை தகவல்களையும் சேகரித்து விரல் நுனியில் வைத்திருக்கும் உபய்க்கு வெங்கியின் அன்னை‌‌ பிரபாவதியைப் பார்த்ததும் கண்களில் ஒரு பளீச் மின்னல் வெட்டியது.


உபயின்‌ முக மாற்றத்தைக் கவனித்த நந்தினி " என்னடி திடீர்னு உன் முகம் அவங்களைப் பார்த்தவுடனே 1000 வாட்ஸ் பல்ப் போல பிரகாசமா ஆகிடுச்சு...யாரு அவங்க…" உபையிடம், சந்தேகத்துடன் கேட்டாள்.


"அவங்களா….அவங்க...என் ஃப்ரெண்ட்டோட அம்மா…." அத்துடன் நிறுத்திக்கொண்ட உபய் வேறு எதுவும் பேசாமல் எங்கோ வேடிக்கை பார்ப்பது போல் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.


ஆனால் அவளின் கவனம் முழுவதும் பிரபாவின் மேல்தான் படர்ந்திருந்தது.


அங்கு பிரபாவின் மனதிலோ தன் மகன்களைப் பற்றிய கவலையே நிலைக்கொண்டு இருந்தது.


"முருகா...ஏன்பா திடீர்னு எங்க குடும்பத்துல இப்படி குழப்பத்தை கொடுத்துட்ட… மூத்தவன் என்னடான்னா அவன் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டான்… இந்த சின்னவன் என்னடான்னா சொல் பேச்சை கேக்காம சுத்திக்கிட்டு இருக்கான்… என் வீட்டுக்காரரோ அவரோட பிடிவாதத்துல இருந்து வெளிய வரவே மாட்டேன்னு இருக்காரு… மத்தளத்துக்காவது இரண்டு பக்கம் தான் இடி விழும்… எனக்கு எந்த பக்கம் திரும்பினாலும் விழுதே… கொஞ்சம் கருணை காட்டி என் வீட்ல இருக்கு பிரச்சைனையை எல்லாம் தீர்த்துவைப்பா…." மனமுருகி வேண்டிக்கொண்டு இருக்கும்போதே கோவில் மணியின் ஓசை காற்றில் மிதந்து வந்தது.


இந்த சங்கேதமே பிரபாவிற்கு மன ஆறுதலைத் தர அர்ச்சகர் கொடுத்த அர்ச்சனைத்தட்டுடன் அங்கிருந்து சென்றார்.


அப்போது அவரது அர்ச்சனைத் தட்டிலிருந்து பூச்சரம் கீழே விழ அதை பிரபா கவனிக்கவேயில்லை. ஆனால் பிரபாவையே கவனித்துக்கொண்டு இருந்த உபய் சட்டென்று ஓடிச்சென்று அந்த பூச்சரத்தை எடுத்து பிரபாவின் முன் ஓடிவந்து நீட்டினாள்.


பூச்சரத்தை நீட்டிக்கொண்டிருந்த உபயையே சற்று குழப்பத்துடன் பார்த்தார் பிரபா.


"அம்மா இது உங்க அர்ச்சனைத் தட்டுல இருந்து கீழ விழுந்தது… அதைத்தான்மா எடுத்து வந்து கொடுக்கிறேன்” மென்மையான குரலில் கூறினாள் உபய்.


உபய் கூறியதைக் கேட்டவுடன் "அப்படியாம்மா… நான் கவனிக்கலடாம்மா….ரொம்ப தேங்க்ஸ்டா…" அவளின் தலையை வருடியபடி கூறினார் பிரபா…


“பரவாயில்லைம்மா…. இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு” புன்னகை முகம் மாறாமல் கூறிய உபயின் சிரித்த முகம் ஏனோ பிரபாவிற்கு பார்த்த மாத்திரத்தில் மனதில் பதிந்து விட்டிருந்தது.


"சரிடாம்மா…. எப்பவும் இப்படியே சிரிச்ச முகமா இரு…. உனக்கு இந்த சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு… ம்… சரி டா… எனக்கு வீட்டுக்கு நேரம் ஆகுது…. நான் கிளம்பறேன்…" உபயிடம் விடைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றார் பிரபாவதி.


அவர் அங்கிருந்து சென்றவுடன்‌ உபயிடம் வந்த நந்தினி "ஏய் பால்கோவா…. ஒழுங்கா உண்மையை சொல்லு...யாரு அவங்க… உன் ஃப்ரெண்ட்டோட அம்மான்னா ஏற்கனவே அவங்களுக்கு உன்னை தெரிஞ்சு இருக்கும்… ஆனா அவங்க பேசினதைப் பார்த்தா உன்னை புதுசா பாக்குற மாதிரி இல்ல இருக்கு…" அவள் சந்தேகத்துடன் கேட்க…


“அய்யோ ஏன்டி ஏன்…? எப்பா பாரு கேள்விக்கு பொறந்தா மாதிரி கேள்வியா கேட்டுக்கிட்டே இருக்க…? நீ படிச்சி ஐடி ஜாப் க்கு போனதுக்கு பதிலா போலீஸ் வேலைக்கு போயிருக்கலாம்…!! திருடனுங்களையாவது புடிச்சி பேரு வாங்கி இருப்பா…” அவளிடம் குறைப்படவள்,


“எப்பாரு என்னைய சந்தேகமாவே பாக்குறது… நான் அவங்கள போட்டோல தான்டி பாத்திருக்கேன் நேர்ல இல்ல… எனக்கு அவங்கள தெரியும்… அவங்களுக்கு என்னை தெரியாது… போதுமா…. ” மறுபடியும் கேள்வி கனைகளை அடுக்கி விடுவாளோ என பயந்தவள் படபடவென பொறிந்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டாள்.உபயின் பேச்சில் தவறு தன் மேல் தானோ எல்லாவற்றிக்கும் காரணமேயின்றி சந்தேகம் கொள்கிறோமே என நந்துவிற்கே தன் மீது சந்தேகம் வந்து விட, “இருடி… விட்டுட்டு போயிடாத… நானும் வரேன்…” உபயின் பின்னாடியே ஓடாத குறையாக அவளை பின் தொடர்ந்தாள் நந்தினி.

Thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10672/
 

NNK-72

Moderator
களிப்பு ♥️ 10

புதிதாக முளைத்த கோபத்துடன் அந்த இடத்திலிருந்து வெளியேறிய வெங்கி முன்பகுதிக்கு வந்துவிட்டான். அவனை தொடர்ந்து நண்பர்களும் வந்துவிட முகத்தை மூடியபடி கண்களில் கருப்பு நிற கண்ணாடியுடன் அமர்ந்திருந்த பெண்ணை ஏதேர்ச்சியாக பார்த்தான் வெங்கி.

அவன் பார்த்ததும் முகத்தை வேறுபுறமாக திருப்பிக் கொண்டவள், ஏதோ முக்கியமாக போனில் பேசுவதை போன்று தலையை குனிந்துக் கொள்ள, இருக்கும் கோபத்தில் அதை எல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல், பில்லிங் கவுண்டரில் அமர்ந்து விட்டான்.

அங்கு நடப்பதை எல்லாம் அவளும் சுவாரஸ்யமான முகபாவத்துடன் தன் ஆளை ரசித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். “வாவ் எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கான்… ஆனா இந்த தடி பசங்களோட சேர்ந்தாலே கெட்டு போயிடறான்…”
அவனுடன் நின்றிருந்த இருவரையும் திட்டிக்கொண்டே அவனை விழியால் சிறையிட்டு கொண்டிருந்தாள் உபைய்.

“மச்சி இப்போ என்ன நடந்துடுச்சின்னு அந்த பொண்ணு மேல இவ்வளவு கோவப்படுற..?” அருண் புரியாமல் வினவிட,

“டேய் ஏதாவது சொல்லிடப் போறேன்… இன்னைக்கு என்ன ஸ்பெஷலா பண்றான்னு போய் பாத்தது தப்பா…? அதுக்கு அந்த பொண்ணு அப்புடி நடந்துக்குது…!!” மொத்த தவறும் அவள் மேல் தான் என்பது போல வெங்கி பேசினான்.

அங்கு நடந்ததை கண்கூடாக பார்த்திருந்த விவேக் ‘அடப்பாவி..’ என்பது போல வாயில் கைவைத்து, “எப்புடி நடந்துக்குச்சி அந்த பொண்ணு…?” என்றான், அதே தொணியில்

“எ… என்ன செய்றான்னு பக்கத்துல நின்னு பார்த்தது ஒரு தப்பா..? என்னமோ பேயை பார்த்தா மாதிரி கத்துறா…!” அவனிடமிருந்து தடுமாறிக் கொண்டு வந்தது பதில்.

“தப்பு இல்ல ராசா… தப்பே இல்ல… ஆனா நீ, அவமேலையே விழுந்து அடிச்சி பாத்த பத்தியா…, அங்க தான் தப்பு பண்ணிட்ட…” அவன் கன்னம் வழித்து நெட்டி முறித்தான் அருண்.

அவனை தள்ளி விட்ட வெங்கி “இப்போ என்னடா அந்த பொண்ணுக்கு ரொம்ப தான் சப்போர்ட் பண்றிங்க…? என்னமோ வேணும்னே அந்த பொண்ணு மேல விழுந்தா மாதிரியும் இப்போ நான் மறைக்கறா மாதிரியும் இல்ல தெரியது… இதெல்லாம் சுத்தமா நல்லா இல்ல சொல்லிட்டேன்…” அவன் சொல்லிக்கொண்டே நழுவ,
அவனை விடாமல் இழுத்து பிடித்து கொண்ட இருவரும் உண்மைய சொல்லு நீ அந்த பொண்ணை லவ் பண்ற தானே…. அருண் சட்டென கேள்வி கேட்கவும், அதிர்ந்து விழித்த வெங்கி,

“டேய் வதந்திகளை பரப்பி விட்டு அடி வாங்க வச்சிடாதிங்கடா…” அலறாத குறையாக அவர்களிடமிருந்து விடுபட்டவன், இப்போது அங்கு முகத்தை மூடி அமர்ந்திருந்த பெண்ணை எட்டி பார்க்க முயன்றான்.

அவள் அங்கு தான் அமர்ந்திருந்தாள் இவன் சந்தேகம் வலுக்கவும், அவள் அருகில் செல்ல முயல அந்தோ பரிதாபம் அவன் வருவதை முன் புறம் இருந்த கண்ணாடி வழியாக பார்த்தவள் சட்டென எழுந்து சென்று விட்டாள்.

‘சே… இன்னைக்கும் எஸ்கேப்பு…’ கடந்த ஒரு வாரமாக இந்த முகமூடி அணிந்த பெண்ணை இங்கு பார்க்கிறான்… இன்று வந்திருந்த குறுஞ்செய்தியையும் இவளையும் இணைத்து பார்த்ததில் அவன் சந்தேகம் வலுப்பெற்றிட அருகில் வந்த சமயம் அவள் சட்டென மறைந்து விட்டாள். இவனுக்கோ இது வியாபார நேரமாதலால் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணமே இருக்க அங்கிருந்து நகர முடியாத சூழலில் மாட்டிக் கொண்டான்.

உள்ளே சென்று அவள் வாசத்தையும் அனுபவிக்க முடியாமல் வெளியே சென்று அமர்ந்திருந்தவளையும் கண்டுபிடிக்க முடியாமல் அவன் தான் திண்டாடிப் போனான்.

….

இரவு, ஹரி இன்னும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி இருக்கவில்லை… அறைக்குள் இங்கும் அங்கும் குட்டி போட்ட பூனையை போன்று சுற்றிக் கொண்டு இருந்தாள் தென்றல் ஏஞ்சலின்.

மாமியார் வாரி பூசிக்கொள்ளவில்லை என்றாலும் முகம் கொடுத்து பேசும் அளவிற்கு முன்னேறி இருந்தார். அரங்கநாதன் தான் கடுகடுவென்று கோப முகமாகவே சுற்றிக் கொண்டிருந்தார். மகன் மேல் கோபம் இருந்தாலும் மருமகளிடம், அதை காட்டாது இருந்த பிரபாவதியின் மேல் ஒரு தனி மதிப்பே ஏஞ்சலினுக்கு உண்டாகிற்று…

“பாப்பா…” அத்தை அழைக்கவும்,

“இதோ வரேன் அத்தை…”என்ற குரலோடு கூடம் வந்திருந்தாள் ஏஞ்சல்.

ஆண்டி என்றழைத்தவளை அத்தை என அழைக்க சொல்லி இருந்தான் வெங்கி, அதன் படியே இன்று ஏஞ்சலின் களத்தில் இறங்கி இருந்தாள்.


“அண்ணி எங்க அம்மாவுக்கு அத்தைனு உரிமையா கூப்பிட்டிங்கன்னா அப்படியே உச்சி குளிர்ந்து போயிடுவாங்க அவங்களுக்கு பொண்ணு இல்லையேன்னு ஏக்கம் அதிகம்… எனக்கும் எங்க அண்ணனுக்கும் அதிகமா பொண்ணு வேஷம் போட்டு போட்டோ எல்லாம் எடுத்து வைச்சி இருக்காங்க… அதனால நீங்க என்ன பண்றிங்க முதல்ல உங்க ஆண்டியை தூக்கி அடுப்புல போட்டு எரிச்சிட்டு அழகா அத்தைன்னு கூப்பிட்டு எங்க அம்மாவை கவுக்குறிங்க… அப்புறம் அந்த நவீன துர்வாசரை கவுக்குறிங்க… மிஷன் ஸ்டாட்டர்ட்” என வெற்றி குறிகளை எல்லாம் காட்டி தேற்றி அவளை அம்மாவிடம் அனுப்பி வைக்க முடிவு செய்தான் வெங்கி .

“அது சரி… உ… உங்களை என்னன்னு கூப்பிடறது…?” ஏஞ்சலின் கேள்வியாக வெங்கியை‌ பார்த்தாள்.

“காசு எல்லாம் கேக்க மட்டேன் அண்ணி… சும்மா பேரை சொல்லியே கூப்பிடுங்க…” அவன் விளையாட்டாக சொல்ல,

அதில் ஏஞ்சலின் மெல்ல முறுவலிக்க உடன் நின்றிருந்த ஹரி, “டேய் நீ கொஞ்சம் சும்மா இருடா பெயர் சொல்லி கூப்பிட சொல்ற…! அதெல்லாம் வேண்டாம் ஏஞ்சல்மா அம்மா, அப்பவோட தம்பியை தம்பின்னு தான் கூப்பிடுவாங்க உன் கிட்டயும் அதைதான் எதிர்ப்பார்ப்பாங்க அதனால நீ இவனை தம்பின்னே கூப்பிடு” என்றதும்,

“டேய் அண்ணா… ஏண்டா அண்ணியை ஃபோர்ஸ் பண்ற… அண்ணிக்கு எது கம்ஃபர்டபிளோ அப்படி கூப்பிடட்டுமே விடேன்” என்றான் வெங்கி,

அதை மறுத்த ஏஞ்சல், “இனி அவரே சொன்னாலும் உங்களை நான் பெயர் சொல்லி கூப்பிட மாட்டேன்… இந்த வீட்டுக்குன்னு ஒரு பாரம்பரியம், கௌரவம் ,இருக்குன்னு அத்தை எங்கிட்ட வந்த புதுசுலையே சொல்லி இருக்காங்க… அது படி தான் நான் நடந்துக்குவேன்…” என்றவள் “தம்பி நீங்க குளிச்சிட்டு வாங்க அத்தை திட்டப் போறாங்க… என்னங்க நீங்க போய் வேலைக்கு கிளம்புங்க…” இருவருக்கும் வேலையை ஏவியவள் காபி தம்பளர்களை எடுத்துக்கொண்டு மாடியை விட்டு அடுப்படி சென்றிருந்தாள்.

இதோ இப்போது பிரபா அழைக்கவும், சொல்லுங்க அத்தை என சிறுமியை போல பவ்யத்துடன் நின்ற மருமகளின் தோரணையில் சிரிப்பு வந்தாலும், அதை வெளியே காட்டாமல், “என்ன இது…? ஸ்கூல் படிக்கிற பிள்ளையாட்டம் பயந்துக்கிட்டு வந்து நிக்குற…? என்னை பார்த்தா உனக்கு‌ ராட்சசி மாதிரி தெரியுதா…?” தோரணையாக கேட்க,

அதில் அதிர்ந்தவள் “அய்யோ இ…இல்ல அத்த” என்றாள் திகைத்தவளாக,

“சரி அதை விடு… அவன் வர்றதுக்கு நேரம் ஆயிடும் போல இருக்கு நீ சாப்பிடு”

“பாரவாயில்லா அத்த அவர் வந்துடட்டும்…” அவள் தயங்கி நிற்க,

“என்ன பொண்ணு நீ… மணியை பாத்தியா ஒன்பதுக்கு மேல ஆகுது அவன் வர லேட்டா ஆகும்னு சொன்னான் தானே… அதுவரை நீ வயித்தை காயப் போடுவியா…? போய் நீ உட்காந்து சாப்பிடு அவன் வந்தா சாப்பிடுவான்”.

“அத்த அவரு…” அவள் இழுக்க,

“என்ன‌ அவரு… நீ சொன்னா கேட்க மாட்ட வா…” அவளை அழைத்துக் கொண்டு வத்து அமர வைத்து உணவை பரிமாற அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.

இது நாள் வரையிலும் இரவு சீக்கிரமே வரும் ஹரி அவளுடன் தான்‌ உண்ணுவான். அவள் பசி தாங்க மாட்டாள் என்பது ஒரு புறம் இருந்தாலும், தனியாக எடுத்து போட்டு சாப்பிட தயக்கமாக இருக்க அவன் வரும் நேரத்தை எதிர்ப்பார்த்த படியே பசியை அடக்கிபடியே அமர்ந்திருந்தாள்.

அவளது அறையை கடக்கையில் வயிற்றை பிடித்து அவள் அமர்ந்திருந்த விதம் அவளது பசியினை உரைக்க, வலுக்கட்டாயமாக அவளுக்கு உணவை பறிமாறினார் பிரபா. அதில் ஏஞ்சலுக்கு கண்களில் நீர் படலம் உருவானது.

“என்ன பாப்பா உனக்கு பிடிக்கலையா…?”
அவரது தொணியிலையே கேட்க,

அதற்கு எப்போதும் போல நடுக்கம் கொள்ளாதவள், “அத்த உங்கள ஒரே ஒரு முறை கட்டி பிடிச்சிக்கலாமா..?” என்றாள் கண்களில் ஏக்கத்துடன்,

“என்ன பாப்பா… என்ன ஆச்சி…?” பிரபா மனம் இளகி விட்டது.

“விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து இப்படி என் பசியறிஞ்சி யாரும் பரிமாறினதே இல்லை அத்தை… “ என்றவள் பிரபாவை கட்டிக்கொண்டு கண்ணீரை வடிக்க அவளது முதுகை மெல்ல வருடி விட்டு அஸ்வாசப்படுத்தியவர்

“பாப்பா இங்க பாரு… இந்தா இதை அழாம சாப்பிடு…” அவள் வாயில் சாதத்தை வைக்க பிரபாவதியின் கண்களும் கலங்கி இருந்தது.

……

அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு ஶ்ரீயை முறைத்துக் கொண்டே சுற்றி வந்தான் வெங்கி. நண்பர்கள் சொல்லியதையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் அவள் செல்லுமிட்டமெல்லாம், செல்லும் தன் கண்களை தன் கட்டுப்பாட்டில் வைக்கவும், முடியாமல் எரிச்சலுற்றவன் கருப்பு கண்ணாடியை அணிந்துக் கொண்டு ஷாப்பிற்கு வந்திருந்தான்.

அருணும் விவேக்கும் வேலையாக இருக்க ஶ்ரீ இன்னும் ஷாப்பிற்கு வந்திருக்கவில்லை…

ஷாப்பிற்குள் நுழைந்தவனை ஆச்சர்யமாக பார்த்த விவேக் “இவன் என்னடா இப்படி வந்து இருக்கான்…?”. அருணிடம் முனுமுனுக்க,

ஆர்டர் கொடுப்பதில் மும்மரமாக இருந்தவன் “என்னடா பண்ணிட்டு வந்து இருக்கான்…?” என அவனும் தலையை உயர்த்தி பார்க்க உடைக்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்லாமல் ஒரு கூலர்ஸை அணிந்துக் கொண்டு அவர்களிடம் வந்தான்.

“என்னடா கருப்பு கண்ணாடி…?
மெட்ராஸ் ஐயா…? காலைல கூட நல்லா தானே டா இருந்தது உன் கண்ணு??? அதுக்குள்ள எப்படிடா..?”. நண்பனை விசாரித்த அருண், தானே‌ ஒரு முடிவுக்கு வந்துவிட,

“ம் திருச்சி ஐ…. அதான் கண்ணாடி போட்டு இருக்கேன்… வேணுமா…? கொஞ்சம் வாங்கிக்கிறிங்களா…?” வேண்டுமென்று வம்பை வளர்த்தவனின் பார்வை உணவு தயாரிக்கும் இடத்தை சுற்றி வந்தது.

இருவரும் அவனை முறைத்து விட்டு “சீ பே… போயி வேலையை பாரு…” என அவனை விட்டு தங்கள் பணி இடத்திற்கு சென்றனர்.

அவன் தேடும் நபர் கண்களுக்கு அகப்படாமல் போகவும், “என்னடா இன்னைக்கு என்ன ஸ்பெஷலாம்…? உன் பாசமலர் என்ன செய்துக்கிட்டு இருக்கா…?” அருணிடம் பேச்சை வளர்க்க,

“அதான்டா தெரியல… எப்பவும் 4 நாலறைக்குள்ள ஶ்ரீ வந்துடும்… இன்னைக்கு என்ன ஆச்சி தெரியல இன்னும் ஆளை காணலையே…” என்றான் கவலையாக,

புருவம் உயர்த்தி அவனை கிண்டலாக பார்த்த வெங்கி “இதையெல்லாம் அப்ப இருந்த பாசமலர் முதல், இப்ப வந்த நம்ம வீட்டு பிள்ளை படத்துலையே பாத்துட்டோம்… நீ தனியா ரீலை ஓட்டதடா… அப்படியே அண்ணன் தங்கச்சி சென்டிமெண்டுல உருகுறிங்களோ…” அவன் இடக்காக பேசும் நேரம் கஃபேக்குள் நுழைந்தாள் ஶ்ரீ.

“என்னம்மா ஶ்ரீ…. ஏன் லேட்டு…?” அருண் அக்கரையாக விசாரிக்க,

“வர்ற வழில ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சி அண்ணா அதான் லேட்டு…” அவள் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தபடி கூறினாள்,

“ஆக்ஸிடன்டா…!” அதிர்ச்சியானவன் “எங்க ஆச்சி… எப்படி ஆச்சி… ஒழுங்கா பாத்து வரமாட்டியா…? கண்ணு என்ன பின்னாடிய வைச்சி இருக்க…? முதல்ல ஒழுங்கா நில்லு எங்கேயாவது அடி பட்டு இருக்கா…? கை காலுக்கு ஒன்னும் இல்லையே…? முதல்ல அந்த ஓட்ட பைக்கை தூக்கி காய்லாங்கடையில போடு… உருப்படியா ஒன்னை வைச்சி இருக்கியா…?” திட்டிக்கொண்டே அவளை சுத்த விட்டு கை கால் முகத்தை ஆராய்ந்தது வேறு‌யாரும் இல்லை நம்ம வெங்கியே தான்…

அருண் விவேக் வாயில் ஈ போவது கூட தெரியாமல் அதிர்ச்சியில் சிலையாகி வெங்கியையே பார்த்துக்கொண்டிருக்க, .

“சார்… என்ன சார்… எனக்கு இல்ல சார்… ஒன்னுமில்ல சார்… சார்…” அவன் கைகளை தன்னை தொட விடாமல் தடுத்தபடியே ஶ்ரீ சொல்லிக் கொண்டிருந்தாள்.நம்ம வெங்கியின் செவிகளில் அதெல்லாம் எங்கே விழுந்தது.

அவன் பாட்டுக்கு கேள்விகளை அடுக்கிய வண்ணம் இருக்க, “சார் எனக்கு ஒன்னும் இல்லை…” அவன் கைகளை பிடித்து குலுக்கி தன்னிலைக்கு கொண்டு வர, அதிர்ச்சியில் சிலையாகி இருந்த அருண், விவேக் இருவருக்குமே அப்போது தான் தெளிந்தது.

“என்ன டா நடக்குது இங்க…?” அருண் விழித்தபடி கேட்க,

“ஒன்னுமே புரியல… ஏதோ மொழி தெரியாத படத்தை பார்த்தா மாதிரியே ஃபீல் ஆகுதேடா…!” விவேக் அருண் காதை கடித்திட,

“இதை அவங்கிட்ட சொல்லி பாரு அன்னியன் படத்துல வர்ற அம்பி மாதிரி, நானா பண்ணேன் நானா பண்ணேன்னு… வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான்… பேசாம இரு இவன் என்ன தான் பண்றான்னு பாக்கலாம்…” அருண் விவேக்கிடம் ரகிசியமாக கூறினான்.

அவள் குரலை உயர்த்தியதில் தன்னிலை உணர்ந்த வெங்கி, ஶ்ரீ தன் கைகளை பிடித்திருப்பதை பார்த்துவிட்டு,

‘அய்யய்யோ அவசரப்பட்டு கையை புடிச்சிட்டியே டா வெங்கி... இவ நம்மல பத்தி என்ன நினைப்பா…! ஏற்கனவே நடந்த சம்பவமே இன்னும் மறைஞ்ச பாடுல்லை அதுக்குள்ள இன்னொன்ன…!! இப்போ என்ன நடந்தததுன்னு தெரியாத மாதிரியே மெய்ன்டெய்ன் பண்ணுடா வெங்கி… அடிச்சே கேட்டாலும் எனக்கு தெரியாதான்னு சொல்ற அளவுக்கு வெளியே ஸ்டடியா நில்லு தனக்கு தானே தைரியம் சொல்லிக் கொண்டவன்,

“ஏய் என்னம்மா என் கையை பிடிச்சிட்டு இருக்க முதல்ல கை…கையை எடு” வெங்கி ஶ்ரீ யை மிரட்டி தன்‌ கைகளை விடுவிக்க முயன்றான்.

அவன் மிரட்டவும், சட்டென அவன் கரங்களை விட்டவள், “சார் உங்களுக்கு என்ன சார் ஆச்சி… ஏன் ஒரு மாதிரி சம்மந்தமே இல்லாம பேசுறிங்க…” என்றாள் குழப்பமாக,


‘அதான் எனக்கே தெரியலையே…’ மனதிற்குள் ஒரு குரல் ஒலித்தாலும், வெளியே காட்டாமல், “என்ன ஆச்சி… ஒன்னும் ஆகலையே…” என்றவன், அவளை பார்வையால் ஆராய்வதை விடாமல் தொடர்ந்தான்.

அவன் பார்வையில் நெளிந்தவள், “என்ன அண்ணா… போன வாரம் விரோதி மாதிரி எரிஞ்சி எரிஞ்சி விழுந்தாரு … ஆக்ஸிடென்ட் சொன்ன ஒரு வார்த்தைக்கு, இப்போ இப்படி பாக்குறாரு…” குனிந்து அருணிடம் சந்தேகமாக கேட்க,

“எம்மா எங்களுக்கே ஒன்னும் புரியல…! அனேகமா ஏதாவது சாமியாரை பாத்து தான் இவனை மந்திரிக்கனும் போல, எந்த மோகினி அடிச்சுதுன்னு தெரியல… பையபுள்ள ஒருமாதிரி அலையுது…”

“அது இருக்கட்டும் எங்க ஆக்ஸிடன்ட் ஆச்சு… உனக்கு… உனக்கு ஒன்னும் இல்லையே…?” அருண் என்ன ஏதேன்று அவளை விசாரிக்க, காதை கூர்மையாக்கி ஶ்ரீயின் வார்த்தைகளை கேட்க தயாராகினான் வெங்கி.

“எனக்கு‌ ஒன்னும் இல்ல அண்ணா நான் நல்லா தான் இருக்கேன். ஒரு பைக்கு கார் மேல மோதிடுச்சி கொஞ்சம் அடி பலம்தான் அதான் டிராஃபிக் க்ளியர் ஆகி வர்றதுக்கு லேட் ஆகிடுச்சி ணா…”

அவள் காரணத்தை கூறவும் அதில் ஆஸ்வாசமாகியவன், “அதான் ஒன்னும் இல்லையே… போமா போய் வேலையை பாரு… வந்ததே லேட்டு இதுல கதைய சொல்லி டையத்தை வேஸ்ட் பண்ற…”


கோடி கணக்கில் லாபத்தை ஈட்டிய கம்பெனியை அவள் நஷ்ப்படுத்தியது போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூறினான் வெங்கி.

“டேய் இவன் அக்கபோறுக்கு‌ ஒரு எண்டு கார்டே இல்லையா டா…? முடியல…!!!” அருண் அழும் பாவனையில் கூறிட,

“சிம்பிளி வேஸ்ட் மச்சி… சார் ரூட்டே தனி ரூட்..” என்றவாறு விவேக்கும் வெங்கியைப் பார்த்தவாரே கூறினான்.,

ஶ்ரீ யோ நிமிடத்திற்கு மாறும் வெங்கியின் குணத்தை கிரகிக்க முடியாமல் விழித்தபடி அங்கிருந்து உணவு தயாரிக்கும் இடத்திற்கு விரைய அவளையே பின்தொடர்ந்தது வெங்கியின் கூலர்ஸ் அணிந்த கண்கள்.

Thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10672/
 
Last edited:

NNK-72

Moderator
களிப்பு♥️11

இருள் பிரிந்து வெளுக்க தொடங்கி இருந்த அதிகாலை வேலை ஆதவனின் வருகைக்கு மெல்ல வழி வகை செய்துக் கொண்டிருந்தாள் வானமகள்.

இரண்டு மூன்று நாட்களாக பூக்களை கொண்டு வந்து பூஜை அறையில் வைப்பதும், அதை அரங்கநாதன் பார்வையில் கூட தீண்டாது குப்பை கூடையை சென்றடைவதுமாக இருக்க, விக்ரமாதித்தனின் வேதாளமாக, விடா முயற்சியுடன் இன்றும் கொண்டு வந்து வைத்தாள் தென்றல் ஏஞ்சலின்.

அதை சமையலறையிலிருந்து எட்டி பார்த்த மனைவியை பார்வையால் முறைத்த அரங்கநாதன், ஏஞ்சலின் கொண்டு வந்த பூக்களை தீண்டாது, தானே எடுத்து வந்து பூக்களை சுவாமிப் படங்களுக்கு வைத்து, பூஜையை முடித்து வெளியே வந்தவர், ஹாலில் அமர்ந்து அன்றைய நாளிதழை கையில் எடுத்தார்.

எப்போதும் போல் பூஜை முடித்ததும், பிரபா கொண்டு வரும் காபிக்காக காத்திருந்தவர், தன் முன்னால் நீண்டிருந்த காபி கோப்பையை வாங்கி நாளிதழை வாசித்துக் கொண்டே வாயில் வைத்த அடுத்த வினாடி, “பிரபா….” என்ற கர்ஜனையுடன் காபி கோப்பையை கோபமாக தரையில் வீசினார் திருவரங்கநாதன்.

தன் முன்னால் பதட்டத்துடன் நின்றிருந்த ஏஞ்சலை உறுத்து பார்த்தவர், அவளை எதுவும் சொல்லாமல் “பிரபா ஏய்‌ பிரபா…” மனைவியை கோபமாக அழைத்தார்.

“என்னங்க…” என்று வந்த பிரபாவிடம் எரிப்பது போன்ற பார்வையை வீசிய அரங்கநாதன், “என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல…” மனைவியிடம் கொந்தளித்தவர் மருமகளை பார்ப்பதை தவிர்த்தார்.

“ஏங்க…. இப்போ என்ன ஆச்சின்னு ஏன் இப்படி கத்திட்டு இருக்கிங்க….?” புரிந்தும் புரியாதது போல சாந்தமாக வினவினார் பிரபாவதி.

“ஓ… உனக்கு ஒன்னும் தெரியாது அதை நான் நம்பனும்…” மனைவியை கனலுடன் பார்த்தார் ,

“பிபீ இருக்க மனுஷன் காலையிலையே இப்படி கோவப்படலாமா…? இப்போ என்ன ஆயிடுச்சின்னு கோவமா இருக்கிங்க…? என்னால முடியல, ஏதோ போனா போகுதேன்னு எனக்கு ஒத்தாசையா அந்த பொண்ணு ஒரு வாய் காபி கொண்டு வந்து கொடுத்ததுக்கா இப்படி குதிக்குறிங்க…?” பிரபாவதி இளைய மகனை போல் இலகுவாக பேசினார்,

அதில் கொதித்த அரங்கநாதன் “மானம் ரோஷம் இருக்கவன் இதை குடிப்பானாடி அதுக்கு பதில் ஒரு பாட்டில் விஷத்தை குடிச்சிட்டு நிம்மதியா உயிரை விட்டுடுவேன்… கண்டவங்க கையில வாங்கி குடிக்கிற அளவுக்கு அவ்வளவு கதி இல்லாமலா இருக்கேன் நான்….” அமிலமாக வார்த்தைகளை அள்ளி விசிய அரங்கநாதன் சோஃபாவில் கிடந்த துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு வெளியேறி விட்டார்.

ஜீரணித்துக் கொள்ள முடியாத கணவரின் பேச்சில் அதிர்ந்த பிரபா தன்னை நிதானித்துக் கொண்டு சட்டென மருமகளைப் பார்த்தார்.

அரங்கநாதனின் பேச்சிலும் கோபத்திலும் கண்களில் நீருடன் உறைந்திருந்தாள் ஏஞ்சில்.

‘கடவுளே… என்ன சொல்லி தேத்த போறேனோ இந்த பொண்ணை…” என நினைத்துக் கொண்டே, அவள் தோளில் பிரபா தட்டவும் சுயநினைவை பெற்றவள் “அத்தை…” என கலங்கிய விழிகளோடு அவரை அணைத்துக் கொண்டு அழுதாள்.

அவள் முதுகை வருடியவாறு, “இப்போ என்ன ஆயிடுச்சின்னு அழவுற பாப்பா… அவரு அப்படித்தான் கோவம் வந்தா என்ன பேசுறோம் ஏது போசுறோம்னு தெரியாது… இது எல்லாம் சாதாரணம்… நான் கல்யாணம் ஆகி வந்த புதுசுல ஆடத ஆட்டமா… இப்போதான் பசங்க தலை எடுக்கவும் கொஞ்சம் அடங்கி இருக்காரு… இல்ல அந்த பெருமாள் எடுத்த தசாவதாரம் மாதிரி ஒரு நாளுக்கு ஒரு அவதாரம் எடுப்பாரு…” மருமகளை இலகுவாக்க சாதரணமாக பேசினார் பிரபாவதி…

“அத்தை மாமா… என் மேல ரொம்ப கோபமா இருக்காரு…” அவள் கண்ணீர் கன்னத்தை தாண்டியது.

“உன்‌மேல கோவம்னு‌ யார் சொன்னது… பாப்பா…”

“அத்த…” மனதில் வலியோடு அவள் அழைக்க

“இங்க பாரு பாப்பா… அவரு உன் புருஷன் மேல தான் கோவமா இருக்காரு… அதை உன்‌மேல காட்ட முடியாம… என் மேல காட்டிட்டு போறாரு… வேற‌ ஒன்னும் இல்ல.. என்ன இருந்தாலும் அப்பா புள்ளை நீர் அடிச்சி நீர் விலாகது… என்னைக்காவது ஒரு நாள் இதெல்லாம் சரியாகிடும்… சரி வா வந்து காபியை குடி… அப்படியே‌ உன் புருஷனுக்கும்‌ கொழுந்தனுக்கும் இந்த காபியை கொடுத்துட்டு வந்துடு…” இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது போல பேசி அவள் கரங்களில் காபி டிரேவை வைத்து மேல அனுப்பி வைத்தார் பிரபா,

மாமியாரின் பேச்சில் நம்பிக்கை வர தெளிந்த முகத்துடன் மாடியை நோக்கி சென்றாள் ஏஞ்சல்.

‘வரட்டும் அந்த மனுஷனுக்கு இருக்கு… எப்பாரு அந்த புள்ளைய அழவைச்சிக்கிட்டு…’ மனதில் நினைத்த பிரபாவதி, அடுத்த நாளே அரங்கநாதனுக்கு சரியான சிகிச்சையை யோசித்தபடி. அடுப்படிக்குள் சென்று மறைந்தார்.

…..

உபையிடமிருந்து கவிதை மெசேஜ்கள் அவ்வப்போது அவனது வாட்சாப் கதவை தட்டி சென்று கொண்டிருக்க, இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை பில்லிங் கவுன்டரில் ரோஜாப் பூவுடன் ஒரு காதல் கடிதமும் அவனை தேடி வந்துக் கொண்டிருந்ததில்‌ மண்டை குடைந்தது அவனுக்கு .

பிரபாவை வெறுப்பேற்ற அவ்வப்போது ஏதாவது சொல்லி அவரிடம் வாங்கி கட்டிக் கொள்வதே அவனுக்கு சந்தோஷம்… இந்த காதலை எல்லாம் அவன் யோசித்து பார்த்தது கூட இல்லை… அப்படிபட்டவனை காதல் சொல்லி ஒருத்தி சுற்றி வருகையில் அவளை‌ யார் என தெரிந்துக் கொள்ள வேண்டும் என மூளை அறிவுறுத்தியது.

இதில் ஶ்ரீயின் மீது இருப்பது ஈர்ப்பா அல்லது அதையும் தாண்டி தன் மனம் அவளை நேசிக்கின்றதா என்ற உண்மையையும் அறிய வேண்டி இருந்ததில் மந்திரித்து விட்டது போல சில நாட்களாக சுற்றி வந்தவன் அன்று சீக்கிரமே வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.

வண்டி எடுக்க வெளியே வந்த வெங்கி, கைகளை பிசைந்த வண்ணம் நின்றிருந்த, ஶ்ரீயை பார்த்ததும்,

“என்னம்மா இங்க நிக்குற…? வீட்டுக்கு போகுறேன்னு அப்போவே கிளம்பின… இன்னும் போகாம இங்க என்ன செய்ற…?” என்றான் கேள்வியாக,

எப்போதும் முறைப்பும் திருப்புமாக சுற்றி வருபவன், இப்படி கேட்கவும் ‘இவரா…’ என விழித்தவள், “வண்டி பஞ்சர் ஆகிடுச்சி சார்”. என்றாள் உள்சென்ற குரலில்,

இடுப்பில் கை வைத்து தோரணையாக நின்றவன், “கையில ஆணி கீணி ஏதாவது வச்சி இருக்கியா என்ன…? உனக்கு எப்ப பார்த்தாலும் பைக் பஞ்சர் ஆகி நிக்குது” என்றான் கிண்டலாகவே…

அவன் கிண்டலில் கோவம் வர, “சார் நான் சாய்ந்தரம் விடும் போது ஒழுங்கா தான் சார் இருந்தது. எந்த குரங்குக்கு பிறந்த கோட்டான் பிச்சி போட்டு வச்சி இருக்குன்னு தெரியல… முட்டாள் மூதேவி… தண்டம்… தடிமாடி… அவள் கோபத்துடன் திட்டிக்கொண்டே போனாள்.

‘என்ன இவ இப்படி கண்டமேனிக்கு திட்டுறா…’ என மனதில் எண்ணியவனோ, “எம்மா போதும் நிறுத்து… வீட்டுக்கு போக என்னனு யோசிக்காம எதுக்கும்மா இப்படி கண்டவனையும் திட்டிக்கிட்டு நேரத்தை வேஸ்ட் பண்ற…?” அவள் திட்டுவதை நிறுத்தப் பார்த்தான் வெங்கி.

“என்னது கண்டவனையும் திட்டி நேரத்தை வேஸ்ட் பண்றேனா….!!! சார் பஞ்சர் ஆனது என்னோட பைக்கு…. கோவம் வந்தா திட்ட தானே செய்யனும்… அவன் மட்டும் கைல கிடைச்சா தலையை புடிச்சி மாவு அரைக்கிறா மாதிரி அரைச்சிடுவேன் சார்” என்றாள் சற்றும் குறையாத கோபத்துடன்.

‘வெரி டேஞ்சரஸ் கேர்ள்’ மனதில் எண்ணிக் கொண்டவன், “இப்போவே நேரம் ஆகிடுச்சி எப்படி போவ சரி வா போற வழியில இறக்கி விட்டுட்டு போறேன்” போனா போகிறது என்ற ரீதியில் அவன் சர்வ சாதரணமாக அவளை அழைத்தான்.

ஶ்ரீயோ “வேண்டாம் வேண்டாம் சார்‌” என்றாள் பதறிக் கொண்டு,

“என்னம்மா இது… டிராப் பண்றன்னு சொன்னதுக்கா இப்படி பதற்ர…. இது சரியில்லையே…!!” தாடையை தடவிக் கொண்டே அவளை சந்தேகமாக பார்த்தான்.,

“அய்யோ…! அப்படியெல்லாம் இல்ல சார்… நீங்க ஏற்கனவே ரொம்ப டையர்டா இருப்பிங்க அதான் ஏன்னு… அதுவும் இல்லாம இந்த ராத்திரி நேரத்துல பைக்ல ஒன்னா போன நல்லா இருக்காது சார் நான் ஆட்டோ பிடிச்சி போயிடுவேன்… நீங்க போங்க சார்…” என்றாள் தயக்கமாக,

“யார் என்ன சொல்லுவாங்க சொல்லு நான் கேக்குறேன்… எங்க ஷாப்ல வேலை செய்ற பொண்ணு இந்த ராத்திரி நேரத்துல தனியா விட முடியாதும்மா…” என இல்லாத நியாயதர்மம் எல்லாம் பேசி வம்படியாக அவளை பைக்கில் ஏற்றிக் கொண்டான் வெங்கி.

பின்னால் அமர்ந்திருந்தவளுக்கு முள் மேல் அமர்ந்திருப்பதை போன்ற அவஸ்தையில் நெளிய “ஏன் பைக்கை இந்த ஆட்டு ஆட்டுற சரியா உட்காரு” என சற்று குரலை உயர்த்தினான்,

“ம் வரமாட்டேன்னு சொன்னவளை வம்படியா ஏத்திட்டு வந்து பண்ற அழிச்சாட்டியத்தை பாரு…” அவள் வாயிற்குள் முனங்கினாள்.,

கண்ணாடியில் அவள் முகம் பார்க்க கடுகடுவென இருந்தது… வாயிற்குள் ஏதோ முனுமுனுப்பதை பார்த்தவன் “என்ன சொன்ன…? சரியா கேக்கல… சத்தமா சொல்லு…” என மறுபடி உசுப்பினான் அவளை.

அவனை உள்ளுக்குள் மென்று துப்பியவள் வெளியே இளித்தபடியே “நீங்க சரியா ஓட்டுங்கன்னு சொன்னேன் சார்…” அவன் மீதுள்ள கடுப்புகளை எல்லாம் பல்லிடுக்கில் வார்த்தைகளாக வெளியேற்றினாள் ஶ்ரீ ..

“சரி நீ எந்த ஊர்…? உன் கூட பொறந்தவங்க யாரு…? அம்மா அப்பா பத்தி உன்னை பத்தி இதுவரையும் எதுவுமே சொல்லல…?”அவன் பேச்சோடு பேச்சாக அவளை பற்றியும் அவளது குடும்பத்தை பற்றியும் விசாரித்தான்.

‘இப்போ எதுக்கு இதெல்லாம் கேக்குறான்…’ மனதில் எண்ணிக் கொண்டவள், “சொல்லி இருக்கேன் சார் நீங்க தான் கவனிக்கல போல, எனக்கு அப்பா இருக்காரு… அண்ணா அண்ணி இருக்காங்க நான் அண்ணன் கூட தான் இருக்கேன்” என்றாள் வரும் வழியை பார்த்துக்கொண்டே .

“அப்படியா…” அவளை ஆராயும் பாவத்துடன் அவன் கேட்க,

“ஆமா சார்…” ‘அய்யோ இடம் வேற வரமாட்டுங்குதே…’ உள்ளுக்குள் அவள், தவிப்போடு அமர்ந்திருந்தாள்

“சரி ரொம்ப நேரமா போயிட்டே இருக்கோம் உங்க வீடு எங்க இருக்கு…?”

“இதோ இந்த லெஃப்ட் எடுங்க சார்” என்றதும் பைக்கை அங்கே நிறுத்த, வண்டியை விட்டு வேகமாக இறங்கியவள் “ரொம்ப தேங்க்ஸ் சார்…” ஒட்டவைத்த சிரிப்புடன் தன் நன்றியை தெரிவித்து அங்கிருந்து கிளம்ப பார்த்தாள்.

“இதுவா உங்க வீடு…?” வீட்டை பார்த்துக்கொண்டே வெங்கி கேட்க, நகர்ந்திட முடியாமல் வேறு வழியின்றி அங்கேயே நின்றவள்

“இதுதான் சார்… இந்த ராத்திரி நேரத்துல உங்கள வீட்டுக்குள்ள கூப்பிடல முடியல சாரி சார்… அண்ணா கொஞ்சம் ஸ்ரிட்டு… அதான் சார்…” அவள் இறைஞ்சதலுடன் மன்னிப்பை கேட்கவும், அதற்கு மேல் அவளை சங்கடப்படுத்தாமல் திரும்பி விட்டான்.
…..

அதிகாலையே எழுந்து விடும் மனைவி இன்று படுத்துக்கொண்டே இருக்கவும், பூஜையை முடித்து வந்து பார்த்தார் திருவரங்கநாதன்.

“பிரபா …. பிரபா…. என்ன செய்யுது…?” நெற்றி கன்னம் என தொட்டு பார்த்தார் அரங்கநாதன்.

அவர் கன்னத்தை தட்டியதில் மெல்ல கண்களை திறந்தவர் “முடியலங்க… தலை சுத்தது… எந்திரிச்சி உட்கார கஷ்டமா இருக்கு…” காற்று மட்டும் தான் வருகிறது என்ற ரீதியில் மெல்லிய முனங்களாக வந்தது பிரபாவின் பேச்சு சத்தம்.

“என்ன ஆச்சு பிரபா…” பதற்றத்துடன் மனைவியை தாங்கியவர் “டேய் வெங்கி… வெங்கி… டேய்....” என சிறிய மகனை சத்தமிட்டு அழைத்தார்.

அவன் உள்ளே வரவும் “உங்க அம்மாக்கு என்ன செய்யுதுன்னு தெரியல எந்திரிக்க முடியல உட்கார முடியலங்கறா போடா… போய் டாக்டரை கூட்டிக்கிட்டு வாடா” என்றார் தவிப்பாக பயத்தில் முகமெல்லாம் வியர்த்து வழிந்தது அவருக்கு…

“என்னப்பா ஆச்சி நேத்து நைட்டு கூட என் கூட உட்காந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டாங்களே…” அவன் பிரபாவதியின் பிரதாபங்களை எடுத்து விடுவதில் மும்மரமாக இருக்க,

அதில் சுல்லென கோவம் வரப் பெற்றவர், “அதுதான் தெரியலங்கறேன்… போடா நேரத்த கடத்தாம போய் டாக்டரை கூட்டிட்டு வாடா” அவர் துரத்தாத குறையாக வெங்கியை விரட்டி விட்டு, மனைவியின் கரங்களையும் கால்களையும் சூடுபறக்க தேய்த்து விட்டபடி அமர்ந்திருந்தார்.

அப்பாவின் மறு புறம் ஹரி அம்மாவின் கையை பிடித்தபடி சோகமாக அமர்ந்திருந்தான். இதுவரை ஒரு தலைவலி என்று கூட படுத்து பார்க்காதவன் பிராபாவை இவ்வாறு பார்க்கையில் மனம் வலியில் துடித்தது அவனுக்கு..

உள்ளுக்குள் தெய்வத்தை வேண்டியவளாக பயமும் படப்படப்புடனும் ஏஞ்சலின் மாமியார் அருகிலேயே நின்றிருந்தாள்.

அரைமணி நேரத்தில் வெங்கி மருத்துவருடன் வர மற்றவர்களை வெளியே அனுப்பி விட்டு பிரபாவை பரிசோதித்தவர்,

அரங்கநாநனிடம், “ பயப்புடும் படி ஒன்னுமில்லை அவங்களுக்கு பிரஷர் அதிகமாகிடுச்சி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும் வேலைன்னு இழுத்து போட்டுக்க போறாங்க ஒரு ஒருவாரம் உடம்புக்கும் மனசுக்கும் ரெஸ்ட் கொடுங்க வீணாண கவலைகள் கூட உடம்பை பாழ்படுத்திடும்… நல்ல சத்தான உணவை தொடர்ந்து எடுத்துக்கிட்டா போதும்… கொஞ்சம் பார்த்து நடந்துக்குங்க அரங்கநாதன்‌…” அவரிடம் எல்லாவற்றையும் தெளிவாக உரைக்க, செய்வது அறியாது திகைத்து போய் நின்றிருந்தார் அவர்.

குடும்பத்தில் ஒரு பெண் அதுவும் குடும்பத்துக்கு அச்சாணியாக இருப்பவள், ஒரு நாள் முடியவில்லையென்று படுத்து விட்டால் வீட்டு ஆண்களின் நிலை பரிதாபம் தான் ஒரு சுடுதண்ணியை கூட ஒழுங்காக வைக்க தெரியாமல் கை கால்களை சுட்டுக் கொள்ளும் திருவரங்கநாதன் அடுக்கலைக்குள் செல்லவும்,

“மாமா இன்னைக்கு நான் நான் பாத்துக்குறேன்…” வீட்டு பொறுப்பை பொறுப்பான மருமகளாக தென்றல் கையிலெடுக்க சற்று ஆஸ்வாசமாக உணர்ந்தவர், முகத்தை திருப்பிக் கொண்டு மனைவியிடம் சென்றுவிட்டார்.

அன்னையின் கரங்களை கண்களுக்குள்‌ ஒற்றிக் கொண்டவன் அம்மா…. நாங்க பண்ணது தப்புதான், அதுக்காக நீங்க என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க சந்தோஷமா அனுபவிக்குறோம்… ஆனா இப்படி படுத்து மட்டும் இருக்காதிங்க மா முடியல… என்னால தான் நீங்க இப்படி ஆயிட்டிங்க… சாரி மா… சாரிமா… ” என தாயின் கரங்களை கண்களில் ஒத்திக் கொண்டு கலங்கும் பெரிய மகனை பார்க்கையில் அரங்கநாதனுக்கு நெஞ்சம் கனத்து போனது.

‘டேய் போதும் டா அழுதது… அப்பாவை கவுக்க நினைச்சா இவன் கவுந்து கிடக்குறான்’ மனதில் ஓட,


“டேய் அண்ணா அதெல்லாம் அம்மாவுக்கு ஒன்னும் ஆகாதுடா… பிரபா ஸ்டீல் பாடிடா… ” சொல்லிக்கெண்டே பிரபாவின் மறுகையை தன் முகத்தில் பதிந்துக் கொண்ட வெங்கி, அவரை சீண்டுவதற்கு “அம்மா உன் பீத்த புள்ள எப்படி அழுவுறான் பாருமா வாட்டர் டேங்கையே கண்ணுல வைச்சி இருக்கான் மா..." கிண்டலடித்தான்.

தாயின் நடிப்பு‌ அவனுக்கு தெரியாதா என்ன…? அரங்கநாதனை வழிக்கு கொண்டு வர இரண்டு நாட்களாக மண்டையை உடைத்து போட்ட பர்ஃபாமன்ஸ் ஆச்சே…. மகன் எங்கே சிரிக்க வைத்து விடுவானோ என்ற பயத்தில், பெரிய மகன் அறியாதவாறு‌ வெங்கியின் கரங்களில் பட்டென ஒன்றை வைத்தவர், ,டேய்… எழுந்து போடா என்றார் சிறு குரலில்.

ம்..ம்… நடக்கட்டும் நடக்கட்டும் என குறும்பு புன்னகையுடன் தாயை பார்த்து இதழுக்குள் முனுமுனுத்தவன் “சரிடா அண்ணா பாத்துக்கோ…. நான் இப்போ வந்துடுறேன்…” என்றவாறு நண்பர்
களுக்கு போன் செய்ய அறையை விட்டு வெளியே சென்றான்.

Thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10672/
 
Last edited:

NNK-72

Moderator
களிப்பு♥️12

மாலை மயங்கிய சாயங்கால வேளை வானம் மெல்ல இருளை ஆடையாக அணிய தொடங்கி இருந்த இரவு நேரம், வழிமேல் விழி வைத்து வாசலையே பாத்துக் கொண்டிருந்தாள் ஶ்ரீ…


கோபமாக இருந்தாலும் கூடவே சுற்றிக் கொண்டிருப்பவன், இரண்டு நாட்களாக காஃபி ஷாப்பிற்கு வாராததில் அவனை பற்றி கேட்கலாமா, வேண்டாமா, என மூளைக்குள் குறுக்கும் நெடுக்குமாக ஒரு கேள்வியே ஓடிக்கொண்டிருந்தது. தலையில் தட்டி அதை அடக்கியவள், தன் வேலையைத் தொடர, அவளின் பார்வை மட்டும் வாசலையே தொட்டு தொட்டு மீண்டு கொண்டிருந்தது.


அதே நேரம் “என்னம்மா தங்கச்சி இன்னைக்கு‌ என்ன ஸ்பெஷலு….? கேட்டுக்கொண்டே அருண் சமையல் அறைக்குள் நுழைந்தான்.


அவள் எதிர்ப்பார்த்த நபர் இன்னும் வராது போக சோர்ந்து முகத்துடன் இருந்தவள், கேரளா ஸ்பெஷல் உன்னியப்பமும், பருப்பு போலியும் சுரத்தேயின்றி கூறியவளின் பார்வை மீண்டும் வாசலை தொட்டு மீண்டது.


“அடடே…!! புதுசா இருக்கே டேஸ்ட் பண்ணியே ஆகனும்…”. சொன்னவன் பார்வையில் அவள் தேடல் விழ,


“ என்னம்மா தங்கச்சி வாசலையே பாத்துக்கிட்டு இருக்க யாரவது வரேன்னு சொல்லி இருக்காங்களா…?” அவனும் கூடவே சேர்ந்து வாசலை எட்டி பார்த்தான்.


“இல்ல இல்லண்ணா… சும்மா தான் பாத்தேன்… ஆமா என்ன அண்ணா பில்லிங்கில் இன்னைக்கும் நீங்க தான் போல வெங்கி சார் வரலையா…?” ஆர்வத்தை மறைத்துக் கொண்டு, சாதாரணமாக கேட்பது போல கேட்டாள்.


‘ஓ… கதை அப்படி போகுதோ’ மனதில் தோன்றியதை வெளியே சொல்லாமல் தலையை ஆட்டிக் கொண்டே சிரித்த அருண்,


“ஆமாம்மா… வெங்கி அம்மாவுக்கு உடம்புக்கு முடியல அந்த பைய புள்ள ஒரு வாரத்துக்கு இந்த பக்கம் கூட தலைய வைச்சி படுக்க மாட்டான்…” என்றான் அவள் முக மாற்றத்தை அவதானித்தபடி,


“அச்சோ என்ன ஆச்சின்னா அவங்களுக்கு…? முதல் ஆளாக ஶ்ரீ பதறிக்கொண்டு விசாரிக்க அவளை வினோதமாக பார்த்த அருண், “உனக்கு அவங்கள முன்னாடியே தெரியுமாம்மா…?” என வினா எழுப்பிட,.


“இல்லன்னா அவங்கள தெரியாது வெங்கி சாரை தெரியுமில்ல அவங்களுக்கு அம்மான்னா நமக்கும் வேண்டப்பட்டவங்க தானே, அதான் அப்படி கேட்டேன்… வேற ஒன்னுமில்ல இப்போ எப்படி இருக்காங்கணா…?” என்றாள் உணர்வுகளை காட்டாத அமைதியான முகத்துடன்.


“பரவாயில்லைம்மா… சாதரண பிபீ தான் என்ன கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க அதான் கூடவே இருக்கான்… வர்றதுக்கு இன்னும் நாலு ஐஞ்சு நாள் ஆகும் அதுவரை நம்ம தான் ஷாப்பை பாத்துக்கனும்மா, நீ அப்பப்போ பில்லிங் போட வா எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருக்கும்… இந்த விவேக் பைய வேற மந்திரிச்சி விட்டது மாதிரியே திரியுறான்… அவனை எந்த மோகினி பிசாசு அடிச்சிதோ தெரியல…” தன் போக்கில் புலம்பிக் கொண்டு கிட்சனை விட்டு வெளியே நடந்தான் அருண்.


‘பச் இன்னும் நாளு நாளைக்கு உங்கள பாக்க முடியாதா…’ ஏக்கத்துடன் நின்றிருந்தவளுக்கு அங்கு நிற்கவே முடியவில்லை…


…..


திருவரங்கநானின் வயிற்றில் ஏதோ கடமுடாவென உருட்டும் சத்தமெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தது…


இன்று காலையில் ஹோட்டலில் சாப்பிட்டது வேறு வயிற்றிற்கு ஒத்துக் கொள்ளவில்லை போல… இரண்டு முறை ஜீரணமாகாமல் வாந்தி எடுத்தவருக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வர நாக்கு உலர்ந்து விட்டதில் தாகத்துடன் கல்லாவில் அமர்ந்திருந்தார்.


எப்போது ஏஞ்சலின் சமைக்கிறாள் என தெரிந்ததோ அப்போதே வீட்டில் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார். நேற்றும் கூட மூன்று வேளையும் ஹோட்டலில் தான் சாப்பிட்டார் இன்றும் விடாப்பிடியாக சாப்பாட்டு மேசையில் வைத்திருந்த காலை உணவை நிராகரித்து ஹோட்டலில் சாப்பிட்டவரை தான் இந்த பாடு படுத்திக் கொண்டிருந்தது வயிறு…


அடேய் மணி அந்த வென்னீரை கொண்டு வாடா கடை பையனை ஏவியவர், உட்கார முடியாமல் இங்கும் அங்கும் நடந்துக் கொண்டிருந்தார்.


“அண்ணி இங்க தான் உங்க மாமானார் அந்த துர்வாச முனிவர் இருக்குறார்…. உள்ள போங்க எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு முடிச்சிட்டு வந்து துர்வாசரை மீட் பண்றேன்” என்றபடி வெங்கி ஏஞ்சலை இறக்கி விட்டான்.


ஏஞ்சல் உள்ளே செல்லாமல் திருதிருவென முழித்துக் கொண்டு “தம்பி நீங்களும் வாங்களேன்…” என அங்கேயே நின்றிருந்தாள்,


“அய்யோ… அண்ணி என்ன இது உங்க மாமானாருக்கு சாப்பாடு போட போறிங்க… என்னமோ காட்டுக்கு போய் புலிக்கு பல்லை விலக்க சொன்னா மாதிரி துணைக்கு ஆளை கூப்பிட்டு இப்படி திருதிருன்னு முழிக்கிறிங்க…” அவன் சிரிப்பை அடக்கியபடி ஏஞ்சலை பார்த்தான்.


“நீங்க வேற தம்பி… மாமா டெரர் பார்வைக்கு அந்த புலியே தேவாலாம்…” அவள் பூனைக் குட்டியை போல பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள,


அதில் வெடித்து சிரித்தவன் “எச்சூச்மீ… புலி, பூனை இரண்டும் ஒரே இனம் தான் உங்க மாமானார் மிஸ்டர் துர்வாசர் வீட்டில் தான் காச்மூசின்னு கத்துவார்… வெளியே எல்லாம் கௌரவத்துக்கு பேர்டன் ரைட்ஸ் வாங்கினா மாதிரி, அமைதியா நோபல் பிரைசுக்கு நாமினேட் பண்ணவர் கணக்கா இருப்பாரு… சோ நீங்க தைரியமா போங்க…. அப்படியே ஏதாவது கேட்டாலும், இந்த வெங்கி பேரை சொல்லுங்க…”ஏஞ்சலிடம் சவடாலாக சொல்லி வெற்றி குறியை காட்டியவன், சிட்டாய் பறந்து விட ஒரு வித பயத்துடனே கடைக்குள் நுழைந்தாள் ஏஞ்சல்.


அரங்கநாதன் நடந்துக் கொண்டிருப்பது தெரிய அதுவரை தைரியத்துடன் வந்தவள், அவரை பார்த்ததும், கால்கள் துவண்டு நகர மறுத்தது.


‘அய்யோ தெரியாத்தனமா வந்து மாட்டிக்கிட்டோமே… ஏதாவது கேட்டா என்ன பதில் சொல்றது’ முகத்தில் பூத்த வியர்வை முத்துக்களை முந்தானையில் துடைத்தபடி இரும்பு குண்டு கணக்காக கனத்த கால்களை ஒவ்வொரு அடியாக இழுத்து வைத்து அவரை நெருங்கினாள்.


நெஞ்சை நீவி விட்டுக்கொண்டு நடந்துக் கொண்டிருந்தவர் ஏஞ்சல் வருவதை பார்த்ததும் தான் வலியில் இருப்பது கூட அவளுக்கு தெரிய கூடாது என்பதற்காக முகத்தை கடினமாக வைத்துக்கொண்டார்.


உள்ளே வந்தவள், தயக்கமாக மா…மாமா என அழைத்தாள். அவளது பயம் அவளுக்கு எங்கே எல்லோர் முன்னிலையிலும் கண்டபடி கத்தி விடுவாரோ என பயந்தபடி நின்றாள்.


“உன்னை யாரு இங்க வரச் சொன்னது…?” அரங்கநாதன் கோபமாக கேட்க,


“அ… அது அத்தை மாமா…” வார்த்தைகள் தந்தி அடிக்க சாப்பாட்டு கூடை தூக்கி காட்டினாள்.


ஒருசிலர் பாத்திர கடைக்கு வந்திருக்க, புது பெண் என்பதால் பலரது பார்வை அவளையே தொடர்ந்தது.


“உன்னை கேட்டேனா…? எனக்கு வேண்டாம் எடுத்துக்கிட்டு போ…” குரலை அடக்கினாலும் முகத்தில் காட்டிய கடுமை, அவளை கண்கலங்க செய்ய, சுற்றி முற்றி பார்த்தவர், “நாலு பேரு வந்து போற இடத்துல மானத்தை வாங்கவே வந்து இருக்கியா…?” தடித்து வந்தது வார்த்தைகள்.


அவர் கோபத்தில் ஏஞ்சலின், கண்கள் கலங்கி விட, “சாரி மாமா…” என கலங்கிய கண்களை துடைக்கொண்டே “உங்களை எதிர்த்து பேசுறேன்னு கோவப்படாதிங்க, என் மேல தானே கோவம் அதுக்கு உங்களை எதுக்கு வருத்திக்கிறிங்க … ப்ளீஸ் மாமா சாப்பிடுங்க... அத்தையும் ரொம்ப வறுத்தப்படுறாங்க… நீங்க சாப்பிட்டா தான் அவங்க சாப்பிடுவேன்னு சொல்லி அனுப்பிட்டாங்க… உடம்பு முடியாதவங்க அவங்களும் சாப்பிடல ஒரு வாரம் தான் மாமா அப்புறம் அத்தையே சமைக்க ஆரம்பிச்சிடுவாங்க… ப்ளீஸ் மாமா” என்றாள் மன்றாடலாக,


மனைவி சாப்பிடவில்லை எனும் அவள் வார்த்தைகள் அவரை அசைத்ததோ 'சரி ரச சாதமாவது சாப்பிடுவோம்' என சாப்பாடு கேரியரை கடை பையனை வாங்கச் சொல்லியவர், சாப்பிடும் அறைக்குள் சென்றிட அப்பாடா என்றிருந்தது ஏஞ்சலுக்கு.


சுற்றி முற்றிபார்வையை ஓட்டியவளை கடையின் அமைப்பு ஈர்த்தது. ஒவ்வொரு இடமும் பார்த்துக் கொண்டே வந்தவள், சில பொருட்களை ஆசையுடன் தொட்டு தடவி பார்த்தாள்…


கடையில் பணியாள் ஒருவரும் இருக்க, வாங்கிய பொருட்களை பில் போட வந்தவர் முதலாளி இல்லாததால் “அம்மா பில் போடனும் வாங்க” என்றழைத்தார்.


“நானா…” அவள் அதிர்ச்சியாக கேட்க, “ஆமங்கம்மா அய்யா சாப்பிட போயிட்டாரு இந்த மிஷினு பத்தி எனக்கு இன்னும் அவ்வளவா தெரியாது, அய்யா தான் பில்லு போடுவாறு இல்ல மணி போடுவான்… மணி அய்யாக் கூட போயி இருக்கான்… நீங்க போட்டு கொடுங்கம்மா” என்றார் மிகவும் பவ்யமாக ,வந்தவுடனே தெரிந்து விட்டது தன் முதலாளியின் மருமகள் என்று ஊரில் வேறு அரசல் புரசலாக அவர்களின் திருமண நிகழ்வை கேள்விப்பட்டதில் தானே ஒரு முடிவுக்கு வந்தவர் அவளை பில் போட அழைத்தார்,


‘அய்யோ என்ன இவரு நேரம் காலம் தெரியாம என்னை கூப்பிடுறாரு இது மட்டும் மாமாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகுறது ஏற்கனவே வான்டட் லிஸ்டல இருக்கேன் இவரு வேற கிரைம் ரேட்டை ஏத்தி விடுறாரே’ திகைத்து நின்றவள்,


“இல்லண்ணா நீங்க எப்படி போடுவிங்களோ அப்படியே போட்டுறுங்க” என்றாள் பயந்தவாறு…


இதற்கு மேல் வற்புறுத்த முடியாமல் தயக்கமாக அந்த நபர் செல்லவும் அவர் செல்வதை பார்த்தவள், “அண்ணா‌ ஒரு நிமிஷம்” என கல்லாவின் அருகில் சென்றவள், “நான் சொல்றா மாதிரி போடுங்க” என்றவாறு கணிணி முறையில் பில் போடும் முறையை சொல்லி கொடுத்து விட்டு, அங்கிருந்து வரவும் அரங்கநாதன் சாப்பிட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.


“தேங்கஸ் மாமா” என்றவாறு சாப்பாட்டு கூடையை மணியிடமிருந்து வாங்கியவள் திரும்பி நடக்க


“கொஞ்சம் நில்லு” என்றார் அரங்கநாதன் அதிகாரமாய்


திடீரென குரல் கேட்கவும் “மாமா…” அவள், நின்று திரும்பி பார்க்க


“எதுல வந்த எப்படி போவ..?” என்றார் அதே மாறாத தோரனையுடன்


“தம்பி கூப்பிட்டு வந்தாங்க இப்போ…” அவள் இழுக்க


“அவனுக்கு எல்லாமே அரைகுறைதான்… கூட்டிட்டு வந்தானே கூட்டிட்டு போறதுல அக்கரை இருக்க வேண்டாம் தருதல தருதல… ஒன்னுக்கும் உருப்படாம இருக்கான்…” சிறிய மகனை திட்டி தீர்த்தவர்,


“டேய் மணி” என கடையில் வேலை செய்யும் பையனை அழைத்து ஒரு ஆட்டோவை கூட்டி வர சொன்னார்.


அவர் முதலில் வெங்கியை திட்டவும் திருதிருவென விழித்தபடி நின்றிருந்த ஏஞ்சலின் புறம், அவரின் பார்வை செல்ல ‘அய்யோ இந்த பக்கம் பாக்குறாரே… எனக்கு என்ன டோஸ் விழப்போகுதோ தெரியலையே…!’ அவள் பயத்துடன் விழித்தபடி நின்றிருக்க,


“ம்… ஆட்டோல போய்டு…. வீடு தெரியுமா…?” என விசாரித்தார்.


“இல்லை” என்பது போல அவள் தலையை ஆட்டிய நேரம்,


“ஐய்யா ஆட்டோ வந்துடுச்சிங்க” என்றபடி மணி வந்தான்.


“இவங்க கூட விட்டுக்கு போயிட்டு வா” என மணியை அவளுடன் அனுப்பி வைத்தார் அரங்கநாதன்.


ஆயிரம் வருத்தம் இருந்தாலும், தன் மகனை நம்பி வீட்டிற்கு வந்த பெண் தன் மருமகள் என மனதில் பதிய நாட்கள் எடுக்கத்தான் செய்யும் அதற்கு மருமகள் இல்லை என்று ஆகி விடுமா என்ன..‌. இதோ ஒரு பூனைக்குட்டியும் வெளியே வந்து விட்டது…..


…..


மூன்று நாட்களாக அவனை பற்றிய எந்த தகவலும் இல்லை… எப்போதும் கவிதை எழுதி அனுப்பியதும் அவனை பிளாக் செய்பவள், இரண்டு நாட்களாக அவன் பதிலுக்காக பிளாக் செய்யாமல் ஆன்லைனிலையே காத்திருக்கிறாள். என்ன முயன்றும் அவனை பார்க்க முடியவில்லை.…

அந்த சோகத்தில் கையிலிருந்த அலைபேசி அடிப்பது கூட தெரியாமல் வெங்கியை பற்றிய யோசனையில் அமர்ந்திருந்தாள் உபய்.


உபயின் அறைக் கதவை தட்டிய நந்து எந்த அரவமும் இல்லாததால், பால் தம்பளருடன் அவள் அறைக்குள் நுழைந்தவள், போன் அடிப்பதை பார்த்து விட்டு “ஏய் பால்கோவா போன் அடிக்குதுடி” உபயின் தலையில் தட்டவும் அதிர்ந்து நிமிர்ந்தவள், அப்போதுதான் போனை கவனித்தாள்.


‘அச்சோ எவ்வளவு நேரமா அடிச்சிதுன்னு தெரியலையே…!!’. தலையில் தட்டிக் கொண்டவள் உடனே போனை ஆன் செய்து “சாரி சாரிப்பா ஒரு வேலையா இருந்துட்டேன்…” என்றாள் உள்ளார்ந்த எழுந்த வருத்தத்தோடு…


“டேய் குட்டிமா என்ன அப்பாக்கிட்ட போய் சாரியெல்லாம் கேக்குற…” சிரித்தபடியே மகளிடம் பேசியவர், அங்க எல்லாம் ஓகே தானேடா என்றார் அக்கரையாக,


எடுத்த எடுப்பிலையே இங்கிருக்கும் நிலவரத்தை விசாரிக்கவும் சுதாரித்தவள், “ந…நத்திங் பா ஒன்னுமில்ல… இங்க எல்லாம் ஓகே தான் நீங்க இன்னும் தூங்காம என்ன செய்றீங்க...?” தன் மனதை மறைத்தபடி தந்தையிடம் பேசினாள் உபய்.


“தூக்கமே வரல டா ஏதோ மனசை நெருடிக்கிட்டே உன் நினைப்பாவே இருந்தது அதான் உனக்கு போன் பண்ணேன் உன்குரல் கேட்டுட்டேன் ல இப்போ நிம்மதியா தூங்குவேன்…” என்றதும்


அந்த அக்கரையிலும் அன்பிலும் நெகிழ்ந்தவள், அப்பா உங்கள பாக்கனும் போல இருக்கு….” என்றாள் சிறு குழந்தையாக, குரலில் எட்டி பார்த்த ஏக்கத்துடன்.


மனம் உருகி பேசும் மகளின் குரலில் ஏதோ ஒரு தவிப்பையும் ஏக்கத்தையும் அறிந்து கொண்டவர், “என்னடா ஏதாவது பிரச்சனையா… சொல்லுடாமா?” என்றார் மனம் கேளாது…


எங்கோ கண்காணாத தேசத்தில் தனிமையில் இருக்கும் அப்பாவிடம் தன் காதலை சொல்லி அவர் மனதை வருத்தப்பட வைக்க விருப்பமின்றி சட்டென மனநிலையை மாற்றிக் கொண்டவள், “அப்படியெல்லாம் இல்லப்பா சும்மா உங்கள பார்த்தே ரொம்ப நாள் ஆச்சில்ல அதான் ஏதோ மாதிரி இருக்குன்னு கேட்டுட்டேன்… சாரிப்பா உங்க வேலையை பத்தி தெரிஞ்சும் எப்படி இருக்கேன் பாருங்க… கொஞ்சம் கூட அறிவே இல்லை” உபய் தன்னை தானே திட்டிக் கொள்ள,


தனக்காக உற்சாகத்துடன் பேசும் மகளின் முயற்சி புரிந்ததில் மெல்ல நகைத்தவர், “எனக்கும் உன்னை பாக்கனும் போலவே இருக்கு குட்டி மா அப்பா இந்த வாரம் உன்னை பாக்கவே இந்தியா வரேன் டா தங்கம்” என்றார் அன்பு. அதில் அகமகிழ்ந்தவள்,


“உண்மையாவாப்பா… நிஜமாப்பா இந்த வாரம் வறிங்களாப்பா…!!” என்றாள் சிறு குழந்தையின் துள்ளளோடும் ஆர்பரிப்போடும். அவளின் உற்சாகம் அன்பையும் தொற்றிக் கொள்ள,


“ஆமாடா… நிச்சயமா உன்னை பாக்கவே வரேன்” என உறுதி அளித்தவர், “சரி நேரம் ஆகுது நீ படு கண்ணா நாளைக்கு காலேஜ் போகனும்ல” என்றார் அக்கரையாக,


“சரிப்பா… நீங்களும் ரெஸ்ட்‌ எடுங்க ஹெல்த் பாத்துக்கோங்க இங்க நான் ரொம்ப நல்லாவே இருக்கேன் ஓகே வா… கண்ட நேரத்துல தூங்காம எந்திரிச்சி உட்காந்து என்னை பத்தியே யோசிக்காதிங்க உங்களுக்கு வயசு ஆகுது சோ அதுக்கு எத்தா மாதிரி இருங்க” என்றாள் சற்று அதிகாரமாகவே…


“என் பொண்ணு சொன்னா அதுக்கு மறு வார்த்தை உண்டா என்ன…? சரிடா நான் என்னை பாத்துக்குறேன்… நீயும் எதை பத்தியும் யோசிக்காம ஹாப்பியா ஜாலியா லைப்பை என்ஜாய் பண்ணு” மகளிடம் உற்சாகத்துடன் பேசியவர் போனை வைக்க அவளையே குறுகுறுவென பார்த்துக் கொட்டிருந்தாள் நந்து..


“என்ன லுக்கு”. புருவம் உயர்த்தி உபய் நந்துவிடம் கேட்க,


“இல்ல இவ்வளவு நேரம் சோகமா இருந்தா முகமா இதுன்னு பாத்துக்கிட்டு இருக்கேன்…” நந்துவின் நக்கலில் தன்னையும் மீறி சிரித்தவள், ,


“நந்து… நம்ம மைண்ட் எவ்வளவு அப்செட்டா இருந்தாலும் சரி, நமக்கு பிடிச்ச நெருக்கமானவங்க கிட்ட நாலு வார்த்தை பேசினா போதும் ரெஃப்ரெஸ் ஆகிடும்…இப்போ எனக்கு அதுதான் நடந்தது…. உடனே இதுக்கு சைண்டிஸ்ட் மாதிரி ஆராய்ச்சி பண்ண உட்கார்ந்துடாத…” உபய் புன்னகையுடன் தோழியிடம் கூறினாள்.
Thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10672/
 
Last edited:

NNK-72

Moderator
களிப்பு ❤️13

நான்கு ஐந்து நாளாக வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சந்தோஷமாக வலைய வருகிறாள் ஏஞ்சலின். பூஜைக்கு பூக்களை பறிப்பது முதல் மாமானாருக்கு காபி டிபன் வழங்குவதிலிருந்து இரவு உணவு பரிமாறுவது வரை ஏஞ்சலின் பொறுப்பாகி போனதில் தான் இந்த மகிழச்சியே…

எந்த மருமகள் கைப்பட்டதையே அரங்கநாதன் ஒதுக்கி தள்ளினாரோ அவள் கைப்படவே அனைத்தும் அரங்கேறிக் கொண்டிருப்பது தான் அதிசயத்திலும் அதிசயம்.

கணவர் இல்லாத நேரமாக பார்த்து, மருமகளுக்கு கூடமாட ஒத்தாசையாக இருந்தாலும், சமையல் முழுவதும் அவளையே செய்ய வைத்தார் பிரபா...

முதல் நாள் ஏதோ சுமாராக தான் இருக்கும் என நினைத்து ஏஞ்சல் கொண்டு வந்த‌ உணவை உண்ட அரங்கநாதனுக்கு ரச சாதமே அவ்வளவு ருசியாக இருந்ததில் ஆச்சர்யப்பட்டு போனார்..

இருந்தும் இரவு வீடு திரும்பியவர், “உன்னை யாரு சாப்பாட்டை அந்த பொண்ணுக்கிட்ட கொடுத்து அனுப்ப சொன்னது…? என மனைவியிடம் எகிறியவரை மூச்சி விட சிரமப்படுவது போல பார்த்து வைத்த பிரபா,

“என்னால முடியலங்க… எதுக்கு இப்போ சத்தம் போடுறிங்க…?” சத்தம் கேட்கமுடியாமல் அதிர்ந்து நெஞ்சை நீவி விட்டுக் கொள்வது போல நடிக்க, பிரபாவின் முதல் வார்த்தையே அவரை அடக்கி அமர வைத்து விட, அவரது செய்கை வேறு அரங்கநாதனை பயப்படுத்தியதில்.
மனைவியினை கலவரமாக பார்த்தார்.,

“நீங்க சாப்பிடாம இருக்கப்போ நான் மட்டும் எப்படிங்க சாப்பிடறது, அதான் பாப்பாகிட்ட கொடுத்து விட்டேன்…அந்த புள்ளை பொறந்த இடத்துல தான் சுகப்படல வாக்கப்பட்ட இடத்திலாவது நாம நல்லா பாத்துக்க வேண்டாமா…? இப்படி ஒதுக்கி வைச்சி ஒதுக்கி வைச்சி என்ன எடுத்துட்டு போகப்போறோம்…!”

முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கண்கலங்க சொன்னதில் குழப்பமாக மனைவியை ஏறிட,

மேலோட்டமாக அவள் அன்பிற்காக ஏங்குவதை அரங்கநாதனுக்கு உரைத்திட அவருக்கும் ஏஞ்சலை எண்ணி வருத்தமாக தான் இருந்தது..

அதற்கென்று உடனே இறங்கி வர முடியாதே, உடன் பிறந்த பிடிவாதம் தடையாக இருக்க, அவள் செய்யும் பணிவிடைகளை மட்டும் ஏற்றுக் கொள்ள பழகி இருந்தவர், முழுதாய்‌ அவர்களை மன்னித்தபாடில்லை‌‌..

டிபன் கேரியரை துணிக் கொண்டு துடைத்தபடியே சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் ஏஞ்சல்.

தன் நடிப்பை தொடர்ந்தபடி ஹாலில் அமர்ந்திருந்த பிரபா என்ன பாப்பா எல்லாம் எடுத்துக்கிட்டியா… என்றார் மருமகளிடம்,

“எடுத்து வைச்சிட்டேன் அத்தை உங்களுக்கும் சாப்பிட எடுத்து வைச்சிருக்கேன்… தம்பி வந்தா கிளம்ப வேண்டியதுதான்” என்றவள் மாடியை பார்த்தாள்.

‘எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா கேர்ள் பிரெண்ட்ஸ் தானே வாழ்வின் பூஸ்ட் அல்லவா கேர்ள் பிரெண்ட்ஸ் இல்லா வாழ்க்கை வேஸ்ட்டல்லவா….’ உற்சாகத்துடன் விசில் அடித்துக் கொண்டே மடிப்படிகளிலிருந்து வெங்கி இறங்கி வர “தம்பி… போகலாமா…” வெங்கியை அழைத்தாள் ஏஞ்சல்.

அவள் அருகில் ஸ்டைலாக நடந்து வந்தவன், “தாங்கள் என்னை எங்கு அழைக்கிறீர்கள் தெரிந்து கொள்ளலாமா அண்ணியாரே…?” அவன் சுத்த தமிழில் ஏஞ்சிலிடம் பணிவாக கேட்க,

“ம்… என் மாமானாரும் தங்களின் அருமை தகப்பனருமான திருவாளர் திருவரங்கநாதன் அய்யா அவர்களுக்கு, உணவை கொடுக்க வேண்டுமே தம்பி நாம் கிளம்பளாமா…?” அவளும் வெங்கியை போலவே சுத்த தமிழில் பேசிட

“வரவர நீங்க உங்க மாமியாரை போலவே மாறிட்டு வர்றிங்க அண்ணி… ஃப்ளவரோட சேர்ந்த தெர்ட்டும் ஸ்மெல் வருமாம் அதுபோல வெங்கியோட சேர்ந்த நீங்களும் நல்லாவே பேச கத்துக்கிட்டிங்க… கீப்பிடப் அண்ணி” கை தட்டி அவளை பாராட்டிட அவனை சிரிப்புடன் பார்த்தாள் ஏஞ்சல்,

“போதும்டா அவளை கிண்டலடிச்சது‌‌. பாப்பாவை சீக்கிரம் கூட்டிட்டு போ… நேரமாகுது அந்த மனுஷன் வேற சாப்பிடாம இருப்பாரு…” பிரபா வெங்கியை அவசரப்படுத்தினார்.

நிறுத்தி நிதானமாக தலையை கோதி முடியை ஸ்டைலாக நீவி விட்டவன், “அதெல்லாம் பைக் டேக்ஸிக்கு சொல்லியாச்சி இப்ப வந்துடும்… என்றான் தோரணையாகவே,

“ஏதே… டேக்ஸிக்கு சொல்லி இருக்கியா… மூஞ்சி முகம் தெரியாதவங்களோட அனுப்பி வைக்க போறியா அவளை…” பிரபா பல்லைக் கடிக்க,

“எல்லாம் பாத்து பழகின மூஞ்சிதான் இப்போ வந்துடும்…” அவன் சொல்லிக்கொண்டே வாட்ச்சை பார்க்க, அவசரமாக வீட்டிற்குள் நுழைந்த ஹரி,

“என்னடா அவசரமா போன் பண்ணி வீட்டுக்கு வரச் சொன்ன… அம்மாவுக்கு ஒன்னும் இல்லையே…?” பதட்டத்துடன் வந்தவன், பிரபாவின் பக்கத்தில் அமர்ந்தான்,

‘இவன் பார்ஃபாமென்ஸ் ஓவர் பர்ஃபாமென்ஸா இருக்கே வெங்கி…’. மேலே பார்த்து முனுமுனுத்தவன் “எப்பா ராசா அவங்க நல்லாதான் இருக்காங்க… நம்ம அப்பா துர்வாசருக்கு சாப்பாடு கொடுத்து வரனுமாம் அண்ணிய கூட்டிட்டு கிளம்பு” என பட்டென விஷயத்தை போட்டு உடைத்தான் வெங்கி.

“நானா…” ஹரி பாம்பை கண்டவன் போல அதிர…

“பின்ன நானா…? சும்மா சும்மா அந்த டெரர் மூஞ்சையெல்லாம் பாக்க முடியாது… இன்னைக்கு நீ போயிட்டு வா…” ஹரியிடம் நக்கலாக கூறியவன் வாசல் பக்கம் நகர்ந்தான்.

“வரவர உனக்கு வாய்கொழுப்பு அதிகமாகிடுச்சி அப்பான்ற மரியாதை கொஞ்சம் கூட இல்ல…” வெங்கியை பிரபா திட்டவும்.

“பேயிக்கு வாக்காப்பட்டா நீதாம்மா புளிய மரத்துக்கு புளிய மரம் தாவனும், வொய் மீ எல்லாரும் என்னை அவர்கிட்ட கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்க இன்னைக்கு சார் போயி வாங்கி கட்டிக்கிட்டு வரட்டும்” வில்லச்சிரிப்புடன் கூறியவனை உறுத்து பார்த்த ஹரி,

“கொஞ்சம் இரு… ஒரு வாரமா… தேவதாஸ் மாதிரி தாடி விட்டுகிட்டு சோகமா அலைஞ்சிட்டு இருந்த, இன்னைக்கு என்ன ஜூலியட்டை
பார்க்க போற ரோமியோ மாதிரி ஸ்டைலா கிளம்பி இருக்க…” ஹரி சந்தேகமாக தாடையை தடவிக்கொண்டே கேட்கவும்

‘போட்டுக் கொடுத்துட்டானே துரோகி…’ உள்ளுக்குள் அண்ணனை திட்டி தீர்த்தவன், பிரபாவை கலவரமாக பார்த்தான். அவனை முறைத்துக் கொண்டிருந்தவர், “என்னடா அவன் சொல்றதெல்லாம் உண்மையா…?” கேள்வியாக இளைய மகனை பார்த்திட,

அதில் சுதாரித்தவன், “அய்யோ பிரபா… அவன் சொல்றதெல்லாம் நம்புறியே அவன் தப்பிக்க என்னை மாட்டி விடுறான்”. என்றபடியே அங்கிருந்து நழுவி வெளியே ஓட,

மகன் ஏதோ கள்ளத்தனம் செய்கிறான், என்பதை அறிந்துக் கொண்ட பிரபா “மகனே நீ தொடப்பக்கட்டையை மறந்துடாத…” என்றார் சத்தமாக,

அதை காதில் வாங்கிக்கொண்டே வெளியேறியவனோ, மறக்கல மறக்கல கனவுல கூட அதான் ஞாபகம் வருது நொந்தபடியே கஃபேவிற்கு கிளம்பி விட்டான்.
…..

வெங்கியின், பார்வை ஶ்ரீயை சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அருணின் கேலி கிண்டல்களோ இல்லை விவேக்கின் பேச்சுக்களோ அவன் காதில் விழுந்தது போல தெரியவில்லை. பில்லிங் செக்ஷனில் இருந்தவளுக்கு, தன்னை சுற்றியே அவன் உலகம் சுழன்றுக் கொண்டிருப்பது போல தோன்றியது.

காஃபி ஷாப்பில் சற்று கூட்டம் வேறு அதிகமாக இருந்தது. அதில் அதிகம் பேசிக்கொள்ள முடியாமல் வெங்கியும் ஶ்ரீயும் விலகி நிற்க,

“ஹவ் ஸ்வீட் ஆஃப் யூ …” பில்லிங் கவுண்டர் எதிரிலிருந்த ஒருவன் அவளை ரசித்துக் கொண்டிருந்தான்,

“இங்க என்ன பண்ற ஶ்ரீ”
வெகு அருகில் கேட்ட வெங்கியின் குரலில் அதிர்ந்து விழித்த ஶ்ரீ,

“பார்த்தா தெரியல பில் போடுறேன் சார்” என்றவாறு அவள் வேலையை தொடர்ந்திட,

“தள்ளு நான் போடுறேன்… “ கடுகடு முகத்துடன் மானிட்டரின் முன்னால் வந்து நின்றான் வெங்கி.

“பரவாயில்லை சார்… நானே பில் போடுறேன்” என்றவள், எதிரில் இருந்த நபரை பார்த்து சிரித்தவாறே
“ சார்‌ வேற…” இந்த ஐந்தாறு நாட்களுக்கு மொத்தமாக சேர்த்து வைத்து, அவளால் முடிந்தளவு வெங்கியை வெறுப்பேற்றினாள்.

பல்லை கடித்து “நான் தான் நகருன்னு சொல்றேன்ல… இங்க தான் நிப்பேன்னு நின்னா என்ன அர்த்தம் “வெங்கி அவளை முறைத்திட, அங்கிருந்து தள்ளி நின்று அவனை வினோதமாக பார்த்தவள், ‘இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல… இத்தனை நாளு என்னை பாக்கனும் கூட தோணல இப்போ சாருக்கு பொசசிவ்னஸை பாரு’ இதழுக்குள் சிரிப்பை மறைத்துக் கொண்டாள்..

எதிரில் அவளிடம் வழிந்து கொண்டிருந்தவனிடம் “சொல்லுங்க சார்” வெங்கி இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்க,

“அவங்க….” எதிரிலிருந்தவன் இழுவையில்,


‘ எப்பா ராசா எங்க இருந்துடா எனக்குன்னு வர்றிங்க…’ உள்ளுக்குள் அவனை கழுவி ஊற்றியவன்,

“அவங்க வரமாட்டாங்க சார்… உள்ள வொர்க் பாக்க போறாங்க” முகம் மாறாது கூறியவன், யுவர் ஆர்டர் ப்ளீஸ் சார் என்றான் வெங்கி.

“அய்யோ வெங்கி சார் இன்னைக்கு தான் வந்து இருக்கிங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க இது என்னோட வொர்க் அதான் நான் பாக்குறேன்னு சொன்னேன்…” தன் கோபத்தை எல்லாம் ஒன்று திரட்டி அங்கிருந்து போகாமல் அவனுக்கு‌ விளக்கிக் கொண்டு அங்கேயே நின்றாள் ஶ்ரீ.

“போன்னு சென்னேன் ..” அவளுக்கு மட்டும் கேட்கும்‌ குரலில் அவள் உயரம் குனிந்து கூறியதும், அவன் கண்களில் தெரிந்த கோபத்தில் இப்போ என்ன நடந்துடுச்சின்னு சாருக்கு அவ்வளவு கோவம் வருது.. முனுமுனுத்தவள், கையை பிசைந்தபடி காபி தயாரிக்கும் மிஷின் முன் வந்து நின்று விட்டாள்…

ஆர்டரை எடுத்து கொடுத்து விட்டு உள்ளே வந்தவன் யோசனையில் நின்றிருந்த ஶ்ரீயின் கையை பிடித்து தனக்கு வெகு அருகில் நிற்க வைத்து, அவள் கண்களோடு தன் கண்களை மோத விட்டு விழி சண்டையை அரங்கேற்றியவன்,

“அவன் தான் வழியுறான்னு தெரியுதுல்ல… நான் வந்து கேட்டதும் விட்டுட்டு போக வேண்டியது தானே‌…. அங்கேயே நின்னு என்ன பேச்சு வேண்டி கெடக்குது” அவளிடம் காய்ந்திட, அவன் மூச்சின் வெப்பம் அவள் முகத்தில் பட்டு தெறித்தது.

அவன் கையையும் தங்கள் நெருக்கத்தையும் அவள் மாறி மாறி பார்க்க, அவள் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து சட்டென அவளிடமிருந்து கையை எடுத்தவன்,
சற்று இடைவெளி விட்டு நின்று,

“சாரி ஒரு வேகத்துல கையை‌ பிடிச்சிட்டேன்‌… ஆனாலும் நான் போன்னு சொல்லியும் நீ போகாமல் இருந்தது தப்பு தானே”
என்றான் அவள் மை எழுதிய விழிகளில் பார்வையை பதித்து

புருவம் சுருங்கி அவன் செயல்களை பார்த்தவள், “எல்லாரும் உங்கள மாதிரி ஜென்டில் மேனா இருப்பாங்களா சார்… ஒரு சிலர் அப்படி பாக்கத்தான் செய்வாங்க… அதுக்குன்னு எல்லார் கிட்டயும் சண்டைக்கு போக முடியுமா இல்ல எல்லா நேரத்துலையும் உங்கள மாதிரி ஒரு சூப்பர் மேன் வந்து என்னை காப்பத்துவாரா சார்?” வேண்டுமென்றே அவனிடம் குத்தல் பேச்சு பேசிட, அதில் எரிச்சலுற்று கடுப்பாகியவன்,

“உன்னை காப்பாத்த சூப்பர் மேன் தான் வரனுமா நான் போதும் டி” என்றவன் அவள் செவ்விதழில் தன் வன்மையை கடுமையாக இறக்கி இருந்தான்…

“எம்மா தங்கச்சி என்ன காபி மிஷன்ல டிக்காஷன் கீழே வழியறது கூட தெரியமா கண்ணை திறந்துக்கிட்டே கனவு காணுற…” அருண் பதறிக்கொண்டு ஶ்ரீயின் அருகே வந்தான்,

சட்டென சுதாரித்து மிஷினை அணைத்தவள் “அது அது வந்து தெரியாம…” வார்த்தைகள் ஒன்றொடுன்று சேராமல் சண்டித்தனம் செய்தது.

காலையில் வெங்கி கஃபேவிற்கு வருவான் என அருண் கூறியதிலிருந்து அவன் நினைவாகவே இருந்தவளுக்கு அப்போது தான் வெங்கியின் நினைவில் அவள் விழித்துக் கொண்டே கனவு கண்டிருப்பது புரிந்தது. அசடு வழிய தலையில் தட்டிக் கொண்டே வேலையை ஈடுபட,

அப்போது வெளியே வெயிலுக்கு முகத்தை மூடியபடி கூலர்ஸ் அணிந்திருந்த பெண்ணை பைக்கிலிருந்து இறக்கி விட்ட வெங்கி, தானும் ஸ்டைலாக கண்ணாடியை அணிந்துக் கொண்டவன்,

“வலது காலை எடுத்து வைச்சி உள்ள வாமா உபைய்” என பேண்ட் பாக்கெட்டில் ஸ்டைலாக கைவிட்டபடியே அவளுடன் ஒன்றாக கஃபேவிற்குள் நுழைந்தான்.


வாயில் ஈ போவது கூட தெரியாமல் அருண் பார்த்தானென்றால் விவேக்கோ விழிகள் தெறித்து விடும் அளவிற்கு உறுத்து பார்க்க, ஶ்ரீயோ அவர்களை குழப்பமாய் பார்த்தாள்.

“அண்ணா அவங்க…” ஶ்ரீயின் அழைப்பில் அருண் தன்னிலை பெற கண்களை கசக்கிக்கொண்டு அவனை நெருங்கி வந்தவன், “டேய் மாப்ள… ஆளு யாருன்னு கண்டு புடிச்சிட்டியா டா…?” அருகிலிருந்த பெண்ணை பார்த்துக் கொண்டே ஆவலாக கேட்டான்.

“அய்யா யாரு என் கிட்ட நடக்குமா ‌ஒரே வாரத்துல கண்டுபிடிச்சிட்டேன்ல இந்த வெங்கி நினைச்சா முடியாதது இருக்கா என்ன…?” காலரை தூக்கி விட்டுக் கொண்டு வெங்கி பெருமை பேசினான்…

அவனுடன் ஒரு பெண்ணை பார்க்கவும் அதுவும் இத்தனை அருகில் பார்க்கவும், ஶ்ரீயின் முகத்தில் இன்னதென்று உணர்வுகள் சொல்ல முடியாமல் தவிக்க, விழிகள் நீரில் திரையிட்டு, இப்பவோ அப்பவோ‌ என நீர்மணிகள் கன்னத்தில் உருள காத்திருந்தது.

ஶ்ரீயின் மனதை‌ ஓரளவு யூகித்திருந்த அருணுக்கு அவளின் நிலையை பார்த்ததும் வருத்தமாகி விட, “பெருமை பீத்திக்காத எருமை எப்படி கண்டு புடிச்ச அதை சொல்லு…” அவன் கடுப்பாகினான்

“சொல்லாம எங்கடா போகப் போறேன்… முதல்ல வந்தவங்கள கவனிங்க டா” அவர்களை விரட்டினான் வெங்கி.

“டேய் மச்சா என்னடா இதெல்லாம்…?” அப்பெண்ணைப் பார்த்துக்கொண்டே விவேக் பதட்டத்துடன் அவர்களின் முன்னால் வர,

“உன் திருவாயை கொஞ்சம் மூடுறியா…? நானே இப்போ தான்‌ தேவதையை கூட்டிட்டு இங்க வரேன் அதுக்குள்ள உனக்கென்னடா அவசரம்.” அவனையும், பேசவிடாமல் நகர்த்தி விட்டு,

“அவன் கிடக்குறான் நீ உட்காருமா உபைய். இவனுங்க எல்லாம் கேள்விக்கு பொறந்தவனுங்க அவனுங்கள கண்டுக்காத” மற்றவர்களை எல்லாம் நகர்த்திவிட்டு அவளுடன் டேபிளில் அமர்ந்தான் வெங்கி.

தன்னை ஒரு பொருட்டாக கூட எண்ணாத அவனின் நடவடிக்கையிலும் பேச்சிலும் வெகுவாக காயப்பட்டு போனாள் ஶ்ரீ.

கண்களை தாண்டிய நீர்மணிகள் கன்னத்தில் உருண்டு விட, அவனறியாமல் அதைத் துடைத்துக் கொண்டவள், உள்ளே நகரப் பார்க்க,

சுற்றும் முற்றும் திரும்பியவன், “ஏம்மா ஶ்ரீ எங்க போற, உங்களை எல்லாம் இன்ட்ரடீயூஷ் பண்ண தானே கூட்டிட்டு வந்தேன்... அதுக்குள்ள நீ உள்ள போற இன்னும் கொஞ்ச நேரத்துல சலசலன்னு தேனீ கூட்டம் மாதிரி ஷாப்புல ஆளுங்க வந்துடுவாங்க அப்புறம் பேசக்கூட முடியாது. கொஞ்சம் இரு போலாம்” நேரம் காலம் தெரியாமல் வெங்கி ஶ்ரீயின் மனநிலையை சோதிக்க,

உபைய், இது அருண், இது விவேக், ரெண்டு பேரும் என் குளோஸ் பிரெண்டுங்க… கையை கழுத்தை அறுப்பது போல பாவனை செய்தவனை அருண், முதுகில் அடிக்க, விவேக்கோ அவனை கொலை வெறியுடன் முறைத்து பார்த்தான். அவர்களை ஏறெடுத்துக் கூட பார்க்காமல் ஶ்ரீயிடமே‌ அவளது பார்வை மொய்த்தது.

நண்பர்களின் அடிகளையும் பார்வையையும் புறம் தள்ளியவன், “அப்புறம் இது ஶ்ரீ, இந்த கடையில பார்ட் டைம்ல வேலை செய்ற பொண்ணு” என அவளையும் அறிமுகப்படுத்தினான். .

கண்களில் அணிந்திருந்த கூலர்சை கழட்டியவள், ஶ்ரீயை பார்த்து அழகாக புன்னகைத்து, “ஹாய் ஶ்ரீ நான் உபைய்…” என்றாள் சம்பிரதாயமாக,

தன்னையும் மீறி கண்களில் உற்பத்தியாகும் கண்ணீரை அடக்க பெரும்பாடுப்பட்டவள் “ஹாய் நா… நான் ஶ்ரீ….” தங்குதடையின்றி அவளிடம் பதிலை கூறியவள், தன்‌ மனதை மறைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றாள்.

அவளின் முயற்சிகளையெல்லாம் காற்றைப்போல ஊதி தள்ளியவன் “எம்மா ஶ்ரீ எங்க போற இங்க வாம்மா உன் ஸ்பெஷலு அந்த கட்லெட்டு ‘, ம் வேணா வேணாம் அது லேட் ஆகும்… ஆமா இந்த ஆப்பிள்ல பஜ்ஜி போடுவியே அதையே ஹார்ட் ஷேப்புல போட்டுக் கொண்டா, அப்படியே அந்த காதல் சின்னத்துல ரெட் சாசை ஊத்தி ஒரு அம்புக் குறிய போட்டு இரெண்டு பேருக்கும் ஒரே தட்டுல கொண்டு வா பாக்கலாம்” என்றான் அவனுக்கே உரித்தான தோரனையுடன்.

கண்கள் அவளையும் மீறி அவனை இரு நிமிடங்கள் முழுதாய் அளவிட்டது. அலையலையாய் காற்றில் அசைந்தாடும் கேசமும், எப்போதும் எந்த கவலையுமின்றி சிரிக்கும் கண்களும், அவளை அரட்டி மிரட்டும் அதரங்களும் இப்போதும் அவளை இம்சித்ததில் மனம் கலங்கி போனவள் முழுதாய் உலர்ந்த மலரைப்போல வெற்று சருகாய் உணர்ந்தாள்.

ஆனால் தன் உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாமல் அடக்கியவள், சமையலறைக்குள் சட்டென புகுந்து கொண்டாள்.

வாய்விட்டு கூட அழ முடியாது உள்ளுக்குளே அவனை நினைத்து கலங்கிட, தன் சுயநினைவில் இல்லாமல் அனிச்சையாகவே பஜ்ஜி மாவை கலக்கிக் கொண்டிருந்தவளுக்கு கண்களில் நீர் நிற்காமல் வழிந்துக் கொண்டிருக்க,.


“மிஸ்‌. ஶ்ரீ லட்சுமி உபாசனா இன்னும் எதுக்கு இந்த நாடகம்னு நான் தெரிஞ்சிக்கலாமா…?!? இல்லன்னா இன்னும் ஆஸ்கர் லெவல் பர்ஃபார்மென்ஸ் பண்ணிட்டு தான் உங்க அடையாளத்தை ரிவீல் பண்ணுவீங்களா…?!?” திடீரென தன் பின்புறம் கேட்ட வெங்கியின் குரலில் உச்ச
கட்ட அதிர்ச்சியுடன் திரும்பினாள் உபய் என்கிற ஶ்ரீ லட்சுமி உபாசனா


மக்களே படிச்சிட்டு கட்டைய எல்லாம் தூக்கிட்டு வரக் கூடாது.... ஆமா சொல்லிட்டேன்.... மீ பாவம்....

Thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10672/
 
Last edited:

NNK-72

Moderator
களிப்பு ❤️14

மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி இமைக்காமல் அவளையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான் வெங்கி.


இதுவரை கேலி, கிண்டல், முறைப்பு, சிரிப்பு போன்ற பலவித உணர்வுகளை வெளி காட்டிக் கொண்டிருக்கும் அவனது விழிகளோ இன்று அழுத்தம் எனும் புதிய பரிணாமத்தில் தன் மேல் பதியவும் அதன் தீவிரத்தில் உள்ளுக்குள் குளிர் பரவிட, அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தவளுக்கு வார்த்தைகள் பஞ்சமாகி போனது...


“சொல்லுங்க மேடம் இன்னும் எதுக்கு இந்த நாடகம்.. இதையும் நானே கண்டுபிடிக்கனுமா… ம்….” இதழ் வளைத்து புருவம் உயர்த்தி கேட்டவனின் பாவனையில் மீண்டும் விழுந்தவள்,


“அது… உ.. உங்களுக்கு எப்படி இது தெரியும்” எங்கே தன்னை குற்றம் சாட்டிவிடுவானோ என்ற தவிப்பில்

ஒன்றுக்கொன்று முட்டி மோதி வெளியே வர மறுத்த வார்த்தைகளை கடினப்பட்டு முயன்று உதிர்த்தவளுக்கு கண்கள் கலங்கியது.


அவள் எண்ணியது போல அவனது பார்வையும் பேச்சும் இருக்க, ‘அய்யோ வெங்கடேஷ் தப்பா மட்டும் நினைச்சிடாதிங்க ப்ளீஸ்’அவள் மனதிற்குள் கதறியது எல்லாம் அவனுக்கு கேட்கவே இல்லையே….


“ஒரு பக்கம் கூடவே இருந்து என்னை கவனிச்சிருக்க இன்னொரு பக்கம் போன்ல லவ் ப்ரோப்போஸ் பண்ணி என்னை சுத்தல்ல விட்டு முட்டாளாக்கி இருக்க, எதுக்கு இந்த டபுள் ஆக்ஷன் பண்ணேன்னு நீ சொல்லு , இது சிங்கள் ஆக்ஷன் தான்னு எப்படி கண்டுபுடிச்சேன்னு அப்புறமா நான் சொல்றேன்” என்றான் வில்லங்கமாகவே…


அதிர்ச்சியின் பிடியில் சிக்கி இருந்தவளுக்கு, என்ன பேசுவது, எப்படி பேசுவது, அவனை என்ன சொல்லி சமாதானம் செய்வது, ஒன்றுமே புரியவில்லை… அவன் கோபத்தை எண்ணி உபாசனா கைகளை பிசைந்து கொண்டிருந்தாள்,


அவள் தோற்றத்தையும் தவிப்பையும் பார்த்தவனுக்கு இன்னுமே அவள் வாய் திறக்காததால் கோபம் வர,


“என்ன மேடம், இன்னும் என்ன சொல்லி இவனை முட்டாளாக்களாம்னு யோசிச்சிட்டு இருக்கிங்களா இல்லை இவனை பைத்தியக்காரனா ஆக்குறேன்னு யார்கிட்டயாவது பெட் கட்டி இருக்கிங்களா…? ஏன் கேக்குறன்னா, இப்போ அது தானோ ஃபேஷன் ஆகிட்டு இருக்கு… உன் பாஷையில் சொல்லனும்னா பிராங் பண்ணி விளையாடுறது” வார்த்தைகள் என்னும் ஆயுதத்தை வஞ்சகமின்றி அவள் மீது வீசி எறிய அதில் வெகுவாக காயப்பட்டு போன உபாசனா. “ப்ளீஸ் வெங்கடேஷ்… போதும் போதும் நிறுத்துங்க…” என்றாள் தன் உணர்வுகள் மேலிட,


‘வெங்கடேஷா…. கூப்பிடுறதுல கூட உன் மனசாற கூப்பிடலயா… அப்போ இதுவும் நடிப்பா கோபால்...…?” நேரம் காலம் தெரியாமல் உள் மனம் கூக்குரலிட அதை அடக்கி அமர வைத்தவன், அவள் உதிர்க்க போகும் வார்த்தைக்களுக்காக காத்துக் கொண்டிருந்தான்.


“இப்ப என்ன தெரியனும் நான்‌ ஏன்‌ இப்படி பண்ணேன்னு தெரியனும்… அவ்வளவு தானே, சொல்றேன்… சொன்ன பிறகு, அதை நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்”. தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, அவனை பார்த்தவள்,

“ஆறு மாசத்துக்கு முன்னாடி, முதல் முதலா உங்கள ஒரு சினிமா தியேட்டர்ல வைச்சிதான் பார்த்தேன்.” என அவனை முதன் முதலாக பார்த்த நாளிலிருந்து சொல்ல ஆரம்பித்தாள்.


வீல் என்ற அலறலுடன் தோழியின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டிருந்தாள் உபாசனா.


“ஏய் ஶ்ரீ… ஒன்னுமே இல்லடி அங்க பாறேன், அது ஒரு பொம்மை தாண்டி” இறுக்கமாக பிடித்திருந்தவளின் கைகளை தட்டிக்கொடுத்து சமாதானம் செய்தாள் ஸ்வேதா…


“பிசாசே வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல பேய் படத்துக்கு கூட்டிட்டு வந்ததும் இல்லாம முழு படத்தையும் உட்காந்து பாக்க வைக்க டிரை பண்றியா…?” ஸ்வேதாவை முறைத்தவள், படத்தில் வந்த காட்சியை கண்டு மீண்டும் அலறிய அலறலில் அவளை கூட்டி வந்த தன்னையே நொந்துக்கொண்டாள் ஸ்வேதா.


அதே நேரம் அவர்களுக்கு முன்னே இருந்த வரிசையில் சிறு சலசலப்பில் ஆரம்பித்த சத்தம் கொஞ்சம் பெரிதாக மாற அவர்களை கவனிக்கலானாள் உபாசனா.


“சார் நாங்களும் பேமலியோட தான் வந்து இருக்கோம்… இப்போ எழுந்துக்க முடியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்…” நின்றிருந்தவர் சத்தத்தை பெரிது படுத்தி இருக்கவும்,


குடும்பத்துடன் அமர்ந்திருந்தவர், “என்ன சார் என்ன…? அதான் டிக்கெட் ஒன்னு இங்க கொடுத்துடுறேன்னு சொல்றேன் ல அங்க போங்களேன்” அவரும் எகிறிக்கொண்டு முன்னே செல்ல பக்கத்து சீட்டில் இருந்த வெங்கியும் அவனது தோழர்களும் இதை கவனித்தனர்.


இவருமே குடும்பத்துடன் படம் பார்க்க வந்தவர்கள் தான் ஒருத்தர் ஆன்லைனில் முன்பதிவு செய்து வந்திருக்க ஒருவர் நேரடியாக வாங்கி வந்திருந்தார். இவர்கள் வர தாமதம் ஆகவும் காலியாக இருந்த சீட்டில் அவர்கள் உட்கார்ந்து விட அங்கே தொடங்கியது சண்டை,


வெங்கி தன் நண்பர்களுடன் வந்திருந்தான். வாய் பேச்சு மெல்ல முன்னேறி கைகலப்பிற்கு வழிவகை செய்ய எதிர்ப்பாரத நேர்த்தில் உள்ளே புகுந்தான் வெங்கி,


ஸ்கிரீனுக்குள்ளே பேய் சண்டை போடுற நேரத்துல நீங்க இங்க சண்ட போட்டா அங்க பாக்குறதா இல்ல உங்க சண்டைய பாக்குறதா… ஏற்கனவே பயங்கரமான ஹாரர் ஹெபக்ட்ல இருக்கு சார்…” என்றான் சற்று இலகுவான பேச்சில்,


“என்ன தம்பி நக்கலா…? இங்க என்ன போயிட்டு இருக்குன்னு தெரியுமா…?” ஒருவர் கத்த தொடங்கினார்.


“துர்வாசரை சரி கட்டிட்டு தான் படத்துக்கு வந்து இருக்கேன்… சோ இன்னொரு பேயை சரிகட்டிட்டு படம் பாக்கும் திராணி எனக்கு இல்ல சார்…” மறுபடியும் அவன் அதே பாணியில் பேசவும் அவனிடம் கோபத்துடன் பேசிக் கொண்டிருந்தவருக்கு சிரிப்பு வந்து விட, என்ன தம்பி நீங்க பேசிக்கிட்டு இருக்கும் போது சிரிப்பு காமிக்கிறிங்க என்றார் அவர்.


“படத்துக்கு வந்ததே ஸ்ட்ரெஸ் போகும்னு சொன்ன இவனுங்கள நம்பி தான்… ஏற்கனவே நான் பேயை பாத்த பீதியில இருக்கேன் சார்… அந்த பொம்மை வேற மூஞ்சுக்கு முன்னாடி நின்னுட்டு நின்னுட்டு போகுது… இதுல நைட்ல தூங்குவனான்னு தெரியல…இதுல நீங்களும் அடிதடின்னு இறங்கிட்ட பச்ச புள்ள சார் மனசு தாங்காது” அவன் படத்தை வைத்து சூழ்நிலையே இலகுவாக கையாண்டான்.


அவன் நிலையை வடிவேலுவின் பாணியில் சொல்லவும் அனைவரும் கொள்ளென சிரித்து விட்டனர். அந்த நேரம் பார்த்து மின்னல் ஒளிபோன்று வந்த கீற்று வெளிச்சத்தில் அவள் முகம் தெரியவும், அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் பேசிக்கொண்டிருந்ததில், அங்கே சூழலே வேறு விதமாக மாறியது. அதன் பிறகு தன்னுடைய சீட்டை அந்த குடுப்பதினருக்கு கொடுத்தவன், அவளுக்கு ஒரு இருக்கை தள்ளி இருந்த இருக்கையில் அமர்ந்தான்.


முதல் பார்வையிலையே அவனது பேச்சும் நடவடிக்கைகளும் அவளை ஈர்த்தது. எதையும் இலகுவாக எடுத்து செல்லும் அவனது குணம் அவளை வீழ்த்தியதில் அதிசயம் இல்லையே… படத்தை பார்ப்பதை விட அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் உபாசனா. படம் முடியவும் வேறு பாதை வழியாக நண்பர்களுடன் அவன் சென்று விட,


“எங்க போயிட்டான்…” அவனை தேடிக்கொண்டிருந்தவளை ஸ்வேதா என்னவென்று கேட்க, ஒன்னுமில்ல சும்மா தியேட்டரை சுத்தி பார்த்தேன் என சமாளித்து விட்டு அவளுடன் சென்று விட்டாள்.


அதற்கடுத்த ஒருவாரம் எந்த வித மாற்றமுமின்றி சென்றிருந்தது. அவ்வப்போது தியேட்டரில் பேசியவனின் முகம் மனத்திரையில் மின்னி மறையும்… “பச் எல்லாரையும் பாக்குறோம், அதே போலத்தானே அவனும். ஏதோ அவன் பேச்சு புடிச்சதால அவனை பத்தியே யோசிக்கிறேன் போல” எண்ணியவாறே தலையை தட்டி அதை ஒதுக்கி தள்ளியவள், தோழியுடன் கல்லூரி கதைகளை பேசியபடியே இளநீர் கடைக்கு வந்தாள்.


அண்ணா ரெண்டு இளநீர் சொல்லிவிட்டு சுற்றிலும் வேடிக்கை பார்த்தாள். “இங்கே எங்கேயாவது இருப்பானா…? ம்கூம் அவன் பெரிய கிருஷ்ண பரமாத்மா நினைச்ச போதெல்லாம் உன் கண்ணு முன்னாடி வர,” மனம் அவளை கேலி செய்ய பச் வாய மூடு என அதை அடக்கியவள் வேறு புறம் பார்வையை செலுத்தினாள்.


சற்று தூரத்தில் நண்பர்களுடன் பேசி சிரித்துக்கொண்டே வெங்கி ஐஸ்க்ரீம் சாப்பிடுவது தெரிந்தது. நிஜமாவே கிருஷ்ண பரமாத்வா தானா நினைச்சதும் கண்ணு முன்னாடி நிக்குறான். உள் மனம் அவனை கேலி செய்ய வெளி சிரித்து விட்டாள்.


அவனை பார்த்த ஆர்வத்தில் கண்கள் பளிச்சிட, தோழியுடன் வந்திருப்பதை மறந்து அவனை நோக்கி செல்ல இருந்தவளிடம், “ “இந்தா ஶ்ரீ இளநீ…” ஸ்வேதா அவள் கரங்களில் ஒன்றை திணித்த நேரம் அவளுக்கு, போன் வரவும் அதனுடன் உரையாட சற்று ஒதுங்கி நின்றாள்.


ஸ்வேதாவிடமிருந்து இளநீரை பெற்றுக் கொண்டவள் வெங்கி‌ என்ன செய்கிறான் என ஆர்வத்துடன் பார்த்தாள்.


நண்பர்களிடம் சிரித்த முகமாக பேசிக்கெண்டிருந்தவன்‌ முகம் சட்டென மாறவும் என்னவோ எதோவென அவனை உற்று நோக்கினாள்.


“இங்கயே இருங்க டா வரேன்” என்றவன் அவர்களையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம் ஐஸ்கிரீமுடன் சென்றான்.


அடிக்கும் வெய்யிலில் காலில் செருப்புக் கூட இல்லாமல் ஏக்கத்துடன் அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பவனை காணவும் உள்ளுக்குள் ஏதோ பிசையும் உணர்வு அவனை தாக்கியது.


அவன் கரங்களில் ஐஸ்க்ரீம் கொடுத்திட


வேண்டாம்‌ என தலையை ஆட்டி மறுத்தான் அந்த சிறுவன்.


“பரவாயில்லை வாங்கிக்க இந்தா…” என அவன் கரங்களை பிடித்து வைத்தவன் , “டேய் யாரு டா நீ, ஏண்டா இந்த மொட்ட வெய்யிலில் செருப்பு கூட போடாம இங்க நிக்குற…?” என்றான் சுற்றி முற்றி பார்வையை பதிந்தபடி,


வெங்கி கேட்கவும் மிரட்சியாக அவனை பார்த்த சிறுவன், அங்கிருந்து ஓட முயன்றான். அவனை ஒரே தாவலில் பிடித்து நிறுத்திய வெங்கி மீண்டும் அதே கேள்வியை கேட்டான்.


“அண்ணா பதில் சொல்றேன் ஆனா அடிக்க மாட்டிங்களே ப்ளீஸ் ணா அடிச்சிடாதிங்கண்ணா” என்றான் கண்களில் கலவரத்துடன்,


“ஹேய் அடிக்கலாம் மாட்டேன் டா யார் நீ இங்க என்ன பண்ற அதை மட்டும் சொல்லு போதும்”


“என் பெரு கதிர், எங்க ஊர்ல இருந்து சித்தப்பா கூட வந்தேன், அவரு இங்க பள்ளிக் கூடத்துல சேர்த்து விடுறேன்னு கூட்டிட்டு வந்து இப்படியே தூங்கும் போது விட்டுட்டு போயிட்டாரு” என்றான் அழுதுக்கொண்டே,


“ஆமா உனக்கு அம்மா, அப்பா எல்லாம்..” சின்னஞ்சிறு பிஞ்சை எப்படி கேட்பது, என தயக்கமாகவே அவனை கேட்டான்.


“எனக்கு அம்மா அப்பாலாம் இல்ல சித்தப்பா தான்… சித்தி இருக்கு ஆனா அடிக்கும்” என்றான் சற்று சோகமான குரலில்.


ஓரளவு அவன் சூழ்நிலை புரிய கனத்த நெஞ்சோடு அவனை அணைத்துக் கொண்டவன் “உன் ஊர் எதுன்னு உனக்கு தெரியுமாடா..?” என்றான் மனம் கேளாது, தெரிந்தாலும் அங்கு அனுப்பும் எண்ணம் இல்லாதவன், தெரிந்துக் கொள்ளவே கேட்டான்.


ஊரை பற்றிக் கேட்கவும் “எங்க ஊர் துறையூர் அங்க தென்னைமரம் மாமாமரம் கொய்ய மரம் எல்லாம் நிறைய இருக்கும்… மாடு ஆடு கோழி எல்லாம் இருக்கும்… அங்கக் கூட இந்த‌மாதிரி ஐஸ்கிரீம் எல்லாம் வரும் தெரியுமா…?” என்றான் கண்கள் மின்னபரவசமாக,


அவன் தலையை வருடியவன் “சரி இப்போ எங்க இருக்க…?


“இதோ இந்த கடை ஓரத்துல படுத்திருப்பேனா… இருட்டுல ரொம்ப பயமா இருக்கும், அப்புறம் அந்த பைப்பு கிட்ட போய் ஒளிஞ்சிக்குவேன்” ஐஸை சுவைத்துக்கொண்டே கூறினான்.


“சரி என் கூட வர்றியா உன்னை ஒரு நல்ல இடத்துக்கு கூட்டிட்டு போறேன்…”


சந்தோஷமாக தலையை ஆட்டவும் அவனை அள்ளிக்கொண்டவன் நண்பர்களிடம் சென்றான்.


“யாரு டா இந்த பையன்…?” அருண் கேட்டதற்கு “அப்புறம் சொல்றேன் உன் பைக் கீயை கொடு…” என்றதும் அருண் மறுப்பேச்சின்றி பைக் சாவியை கொடுக்க அவனை அழைத்துக்கொண்டு சென்று விட்டான்.


பின்னாடியே செல்லவிருந்த உபாசனாவிடம் “ஏய் எங்கடி போற..? அடிக்கடி உனக்கு என்னமோ ஆகிடுது…” கடிந்து கொண்ட ஸ்வேதா அவளை கையோடு அழைத்துக் கொண்டு வந்தாள், .


என்ன நடந்தது எதற்காக அவனை அழைத்து சென்றான் என அறியாமல் குழம்பியவள், ஸ்வேதாவை முறைத்தாள்.


இப்போதெல்லாம் அவளை அதிகம் தேட வைத்திருந்தான் வெங்கி…

ஒரு மாதம் முழுதாக முடிந்திருந்தது. அவளது தேடலும் நின்றபாடில்லை, நாளை நியூட்டனின் பிறந்தநாள் என்பதால் துணி எடுக்க வந்தவள் அதை வாங்கிக்கொண்டு கடையிலிருந்து வெளியே வந்து, ஆட்டோவிற்காக காத்திருந்தாள்.


அங்கே நான்கு ஐந்து வயது மதிக்கதக்க சிறு பெண் குழந்தை சிரித்து விளையாடிக் கொண்டிருந்து. அதன் அம்மாவும் உடன் இருக்க திடீரென மூச்சிற்கு தவித்த குழந்தை மயங்கி சரிந்தது.


அச்சோ குட்டிமா இவள் ஓடி குழந்தையை தாங்கி பிடித்திட, குழந்தையின்‌ அம்மாவும் பதறியடித்து “அய்யோ சம்மு… என்னடா ஆச்சி உனக்கு..?” என அழ துவங்கி இருந்தவர், அவள் கன்னம் தட்டி எழுப்ப முயன்றார்.


குழந்தைக்கு ஒன்று என்றதும் தாயின் மூளை வேலை செய்யாமல் நின்று விடுவது போல அவருக்கும் ஒன்றும் புரியாமல் போனதில் ஆச்சர்யம் இல்லையே… தன் பிள்ளையை மட்டும் எப்படியாவது எழுப்பி விட வேண்டும் என்ற முனைப்புடன் குழந்தையை அழைத்துக் கொண்டிருந்தார்.


“அக்கா பாப்பாவை தூக்குங்க…” அவள் கூற வருவதற்கு முன்னே கேட்ட வெங்கியின் குரலில் விலுக்கென தலையை உயர்த்தி அவனை பார்த்தாள்.


கனவா இல்லை நினைவா..? இது அவன் தானா..? சற்று நேரத்திற்கு பிரம்மையில் இருந்தவள், அவனையே இமைக்க மறந்து பார்த்தாள்.


வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தியவன், “இதுல பாப்பாவோட வாங்க நான் முன்னாடி போறேன்… பாப்பாவுக்கு ஒன்னும் ஆகாது…” அவருக்கு தைரியம் கூறி அவர்களை‌ ஏற்றி விட்டான்.


அவன் குரலில் சித்தம் தெளிந்தவள் இன்னொரு ஆட்டோவில் அவர்களை பின் தொடர்ந்தாள்.


பதைபதைப்புடன் மருத்துவமனை கூட்டி வந்தவன் குழந்தையை மருத்துவரிடம் கொண்டு போய் காட்டினான்.


குழந்தையை பரிசோதித்தவர், கவலைப்படாதிங்கம்மா குழந்தைக்கு மூச்சி திணறல் தான் அதுல தான் மயக்கம் வந்து இருக்கு குளிர்ச்சியா எதுவும் கொடுக்காதிங்க கவனமா பாத்துக்குங்க என்றவர் சென்று விட,


“ரொம்ப தேங்க்ஸ் தம்பி குழந்தைக்கு இப்படி ஆகவும் ஒரு நிமிஷம் என்ன செய்றதுன்னெ புரியல… நல்ல நேரத்துல தெய்வம் மாதிரி ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்துட்டிங்க” என்றார் கண்களில் நீருடன்.


“தேங்க்ஸ் எல்லாம் வேண்டாங்கா பாப்பாவை பத்திரமா பாத்துக்கோங்க…” என்றவன், அங்கிருந்து சென்று விட்டான். பின்னாடியே அவனை தொடர்ந்து வந்தவள், குழந்தையின் அன்னையிடம் ஒரிரு வார்த்தைகள் பேசி விட்டே அங்கிருந்து சென்றாள்.


அன்று முழுவதும் அவனது நியாபகமே…. கனவில் கூட அவன் முகம் தெரிய அதிர்ந்து விழித்தவள் அதன் பிறகு தூங்கவே இல்லை….


மறுநாள் நீயூட்டனுடன் அறக்கட்டளையின் மூலம் இயங்கும் ஒரு இல்லத்திற்கு நந்து அவளது கணவர் சாகர் மற்றும் சாகரின் பெற்றோர்களுடன் சென்றனர்.


“டேய் நீயூட்டன் போ… போய் அங்கிருக்கும் பசங்களோட பேசு” அவனை அனுப்பி வைத்தவள் தானும் அவனுடன் சென்றாள்.


சிறுவர்களிடம் இனிப்பையும் பரிசுகளையும் வழங்கியவர்கள் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.


அப்போது முகத்தில் மலர்வுடன் துருதுருவென ஒரு சிறுவன் வருவதை பார்த்து விழி விரித்தாள் உபாசனா. அன்று சாலை ஓரத்தில் பரிதாபமாக கண்களில் ஒளியிழந்து நின்றிருந்தவனா இவன், ஆளே மாறி மலர்ச்சியுடன் அல்லவா இருந்தான்.


“டேய் குட்டி இங்க வாயேன்…” ஓடி வரும் அவனை அழைத்தாள்.


“என்னக்கா…?”


“உன்னை யாரு இங்க கூட்டிட்டு வந்து விட்டது…?”


“வெங்கி அண்ணா…”


“வெங்கி யா…?”


“ம் அவரு தான் ரொம்ப சூப்பர் அண்ணா உங்களுக்கு அவரை தெரியுமா…?” பதில் கேள்வி கேட்டான்‌ அந்த பொடியன்..


“ம்கூம் தெரியாது…” அவள் உதடு பிதுக்கி இல்லை என தலை ஆட்டவும்,


“இதோ இப்போ தான் என்னை இறக்கி விட்டு போனாரு நீங்க பாக்கலையா…? சார்டே சன்டே வருவாரு எங்கேயாவது அழைச்சிட்டு போய்ட்டு வருவாரு இப்போ கூட நாங்க பார்க்குக்கு தான் போயிட்டு வந்தோம்” மகிழ்ச்சியுடன் கூறியவன் “ஐ… ஸ்வீட்… அக்கா நான் போறேன்” என்றவாறு அவனுடைய தோழர்களுடன் ஐக்கியமாகி விட்டான்.


கேட்டவளுக்கு என்ன முயன்றும் அவன் மேல் எழும் தன் பிரம்மிப்பை அடக்க முடியவில்லை… அவளது மனம் வெங்கியை சுற்றி வருவதை தடுக்கவும் முடியவில்லை, சில நாட்கள் அவனை பார்க்காமல் இருந்தால் இந்த உணர்வுகள் விலகி விடும் என நினைக்க அது மேலும் அவளை அழுத்தியது….


“இப்படித்தான் நீங்க என் மனசுக்குள்ள வந்திங்க, சரி ஒரு வாரம் பாக்காம உங்கள பத்தி நினைக்காம இருந்தா இதெல்லாம் மறந்துடும்னு முட்டாள் தனமா நினைச்சேன்… ஒரு வாரம் இல்ல ஒரு நாள் தாண்டுறது கூட கஷ்டமா இருந்தது … அதுக்கு அப்புறம் தான் நான் ரொம்ப சீரியஸா உங்களை லவ் பண்றேன்னு புரிஞ்சிக்கிட்டேன்… உங்களை பத்தியும் உங்க வீட்டை பத்தியும் தெரிஞ்சிக்கிட்டேன். காசு, பணம், அந்தஸ்த்து இது எல்லாம் விட உங்க குடும்பம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது… அந்த குடும்பத்துல ஒருத்திய நானும் உங்க கைய கோர்க்கனும்னு ஆசைப்பட்டேன்…”


“உங்ககிட்ட என் காதலை சொல்ல வரும்போது, அதுல உங்களுக்கு சுத்தமா நம்பிக்கை இல்லன்றதை உங்க பிரெண்டுங்ககிட்ட பேசினதுலையே தெரிஞ்சது… உங்ககிட்ட லவ் சொல்ல வந்த பொண்ணை நீங்க படுத்தி வைச்சதையும் பாத்து மிரண்டுட்டேன்… அதுக்கு பிறகு தான் இந்த வேஷம்…” என்றாள் நிமிர்வாக அவன் முகம் பார்த்து,


அவள் நிமிர்வில் ஒரு நொடி அவன் விழுந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவன், “தியேட்டர்ல காமெடியா பேசி பிரச்சனைய சால்வ் பண்ணது, ஒரு பையனுக்கு ஹெல்ப் பண்ணது, குட்டி பொண்ணை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனதை எல்லாம் பார்த்து நீ லவ் பண்ணிட்ட சரி… இந்த மூனு விஷயம் போதுமா…? உன் வாழ்க்கைய என் கையில கொடுக்க” கேள்வியாக அவளை பார்த்தான் வெங்கி,


“கண்ண மூடிக்கிட்டு என் வாழ்க்கைய உங்க கையில கொடுக்கல வெங்கடேஷ்…. தெளிவா சிந்திச்சி, அதுக்கு பிறகு தான் இந்த முடிவுக்கே வந்தேன்… சூழ்நிலைய புரிஞ்சி பேசுற உங்க பக்குவம், அடுத்தவங்களுக்கு உதவும் குணம், சின்ன பிள்ளைங்க போல எப்பவும் சிரிக்க வைக்கிற உங்க பேச்சு, சொந்த கால்ல உழைச்சி நிக்கனும்னு நினைக்கிற உங்க மனசு, இதெல்லாம் பாத்து தான் என் வாழ்க்கைய உங்களோட பகிர்ந்துக்க ஆசைப்பட்டேன்… பரவாயில்லை, உங்களுக்கு‌ என்னை பிடிக்கலனாலும், இந்த கொஞ்ச நாள் உங்க கூட இருந்த மெமரீஸ்லயே நான் ஹேப்பியா இருப்பேன்… ந… நான் போறேன்” கலங்கும் தன் கண்களை துடைக்கொண்டே வாசலை நோக்கி செல்ல, அவள் கரங்களை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் மேலே, பூங்காற்றைப்போல மோதி நின்றாள் உபாசனா.


“வெ…வெங்கடேஷ் என்ன பண்றிங்க….? அவன் கைவளைவிலிருந்து திமிறியபடியே விலக முயன்றாள் உபாசனா.


அவள் திமிறலை எல்லாம் தன் ஒற்றை அணைப்பில் ஒன்றுமில்லாமல் ஆக்கியவன், “நீயா முடிவெடுத்து நீயா விட்டுட்டு போனா என்ன அர்த்தம்… எனக்கு‌ காதல் பிடிக்காதுன்னு இதுவரையும் நான் சொன்னதே இல்ல,.. என் மனசை தொடும் அளவுக்கு எந்த பொண்ணும் இதுவரை என்னை பாதிக்கலன்னு தான் சொன்னேன்… தெளிஞ்ச குளமா இருந்த என் மனசுல முதல் முதலா கல் எரிந்தது யாருன்னு தெரியுமா…?”

அவள் முக வடிவை கைகளால் வருடியபடியே கேட்க , அவள் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தவள் …” தெரியாது என இடவலமாக தலையை அசைத்தாள்.,


“தெரியாதா,..?” அவளை பார்த்துக் கொண்டே குறும்புடன் இதழ் வளைய சிரித்தவன், “இப்போ தெரியும்” என அவள் செந்நிற அதரங்களை பட்டும்‌படாமலும் இவனின் தடித்த அதரங்கள் தீண்டியதில், அவள் உடலில் மின்சாரம் பாய, விழிகள் அதிர்வில் விரிந்துக்கொள்ள, முகம் நாணத்தில் செம்மையை பூசிக்கொண்டது.


அவளை இன்னுமே தன்னுள் புதைத்துக்கொள்ள, அவன் காதலை ஒற்றை இதழ் அணைப்பில் உணர்ந்தவள், தன்னவனை இறுக அணைத்து, அவன் மார்பில் முகம் புதைத்துக் கொள்ள, அந்த நிமிடங்களை பொக்கிஷ தருணங்களாக மனதில் சேமித்தாள்.


“மேடம்… மேடம்…”. அவள் தலையின் மேல் தன் தாடையை பதித்து அவளை அழைக்க,


ம் என்றாள் அவன் மார்பில் சாய்ந்தவரே… “நானா கண்டுபிடிக்கற வரைக்கும் நீ ஏன் உன்னை வெளிப்படுத்திக்கவே இல்லை…? இன்னொரு பொண்ணை கூட்டிட்டு வந்தும், நீ ஏன் ஒன்னும் சொல்லல…?” என்றான் புரியாமல்.


“உங்க கூட இன்னொரு பொண்ணை பார்த்துமே கொஞ்சம் குழம்பிட்டேன்… உங்களுக்கு என்னை புடிக்கும் அது உங்க கண்ணுல பாத்து இருக்கேன்…. ஆனா திடீர்னு இவ தான் உபய்னு ஒரு பொண்ணை கூட்டிட்டுடு வந்து என் கண்ணு முன்னாடி நிறுத்தினதும், என்னால…” குரல் கரகரப்பை வெளிப்படுத்த, அதற்கு மேல் கூற முடியாது தவித்தாள்,


தன் மேல் அவள் வைத்திருந்த காதலை எண்ணிக் உள்ளம் களித்தவன் அவள் முகம் முழுவதும் முத்த ஊர்வலம் நடத்தி ஐ… லவ்…யூ.. ஐ லவ் யூ உபாசனா” தன் காதல் முழுவதும் அவளிடம் வெளிப்படுத்தினான்.


உணர்வுக்குவியாக இருந்தவள், அவனை இறுக அணைத்தபடியே “ஐ… ஐ லவ்யூ வெங்கடேஷ்” என்றாள் முகம் கொள்ளா புன்னகையுடன். அதே நிலையில் சில நிமிடங்கள் கரைய, தன்னிலை மீண்டவள், அவனை விட்டு விலகி “ஆமா அந்த பொண்ணு யாரு என்னை எப்படி கண்டுபிடிச்சிங்க…? என்றாள் தெரிந்துக் கொள்ளும் ஆவலில்,


அவள் தோளின் மீது கரங்களைப் போட்டு தன்னை விட்டு விலகாது அவளை தன் கை வளைவிலையே வைத்துக் கொண்டவன், “உன்னை உங்க வீட்டுல இறக்கி விட வந்தேனே அந்த நைட் நியாபகம் இருக்கா…?”


“ம் ஆமா,”


“உன்னை விட்டுட்டு அப்போவே கிளம்பிட்டேன்னு தானே நீ நினைச்ச…!!”


“அப்போ நீங்க போகலையா…”? அவள் திருதிருவென விழிக்கவும்,


“ம்கூம் போற மாதிரி தான் கொஞ்சம் தூரம் போய் திரும்பி பார்த்தேன் அந்த வீட்டுல இருந்து நீ வெளியே வர்றதை பார்த்ததும் எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருந்தது… அதுவரை உன்னை பத்தி தெளிவா எதுவுமே சொன்னது இல்ல அப்போதுதான் உன்னை ஃபாலோவ் பண்ணா என்னன்னு தோனுச்சி…”


“அப்புறம் என்ன…? அடுத்த நாள்ல இருந்து உன்னை பாலோவ் பண்ண ஆரம்பிச்சேன்… அந்த குட்டி பையன் கூட நீ பேமிலியா வெளியே போகும் போது உன் பெயரை சொல்லி கூப்பிடவும் உன் பெயர் உபய்னு தெரிஞ்சது… ரெண்டு நாளா என வாட்சப் நம்பரை நீ பிளாக் பண்ணவே இல்லை… இந்த நம்பரை டிரேஸ் பண்றது கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது… அண்ணனோட பிரெண்டை பிடிச்சி பேசி உன் நம்பரை டிரேஸ் பண்ணி நீதான்னு கன்பார்ம் பண்ணேன் எப்படி அய்யவோட பார்பாமென்ஸ்..?” அவன் தன் காலரை தூக்கி விட்டு பருத்திவீரன் போஸில் ஸ்டைலாக நிற்கவும்,


“கொஞ்சம் கம்மிதான் அவன் தாடையை இறுக பற்றி கொஞ்சியவள், “ஆமா, அந்த பொண்ணு… யாரு”


“அது விவேக்கோட முறைப்பொண்ணு அவங்க பேரு உபைதா….”


“உபைதாவா…?” அவள் ஆச்சர்ய பாவனையில் கேட்க,


“ம்… ஆமா உன்னோட பெயர்ல பாதி, அதான் தயங்காம அந்த பொண்ணு பெயரை சொல்லி உள்ளே கூப்பிட்டேன்…”


“நம்ம விவேக்கோட அத்தை பொண்ணு… அவங்க வேற மதத்தை சேர்ந்தவரை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு அவங்க குடும்பம் பேசாம இருந்தாங்க இப்போ உபைதாவோட அப்பா இறந்து விட்டாதல் இதே ஊருக்கு வந்துட்டாங்க… சாருக்கும் அந்த பொண்ணு மேல ஒரு இது… தான் அந்த பொண்ணுக்கும் விருப்பம் தான்… ஆனா அவங்க வீட்டுல சம்மதிக்க மாட்டாங்கன்னு யோசிக்கிறான்… அந்த நேரம் தான் இந்த முழுசா முகம் மூடிக்கிட்டு இருக்க பொண்ணோட பேசுறதை நேத்து பாத்துட்டேன் அப்புறம் என்ன முழுசா துப்பறிந்து விஷயத்தை ஸ்மெல் பண்ணிட்டேன்ல” என்றான் தோரணையாக…


அவனை மேலும் கீழுமாக பார்த்தவள், “நீங்க ஸ்மெல் பண்ண அழகை தான் அன்னைக்கு பார்த்து இருக்கேனே… கொஞ்சம் விட்டு இருந்தா எண்ணெய் சட்டில மூக்கை தீச்சி இருப்பிங்க” அவள் வெங்கியை கிண்டலடிக்க,


“அது அது ஒரு ஆர்வத்துல வந்துட்டேன் இது எல்லாமா நியாபகத்துல வைச்சிப்ப…!! சரி சரி அதை விடு, அங்க மூனு டிக்கட்டை விட்டுட்டு வந்து இருக்கோம்… ரெண்டு டிக்கெட் கூட பரவாயில்லை ஒன்னை ஒன்னு பாத்துக்கிட்டாவது இருக்கும்… உன் பாசமலர் தான் என்ன பண்றான்னு தெரியல வா போய் பார்ப்போம்…”

அந்த விஷயத்தை அப்படியே கிடப்பில் போட்டவன் அவளுடன் ஜோடியாக வெளியே வந்தான்.


விவேக் உபைதா ஜோடி,

ஒருவரை முறைத்துக் கொண்டு எதிரெதிராக திரும்பி நின்றிருந்தனர். தலையில் கை வைத்துக்கொண்டு அவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்தான் அருண்.


வெளியே வந்த இருவரும் ஒருவரை ஒருவர் பாரத்து புன்னகைத்துக் கொள்ள, அவர்கள் அருகே சென்றனர்.


வெங்கியை பார்த்ததும் எழுந்த அருண் “என்னடா நடக்குது இங்க…?” குழப்பத்துடன் கேட்க, விலாவரியாக அவர்களின் கதையை சொல்லியவன் விவேக்கை பார்க்க, வெங்கியை முறைத்தான் விவேக்.


“என்னடா இவன் இப்படி பாக்குறான்..?”

அருணின் காதை வெங்கி கடிக்க,


“விழுந்து புராண்டி வைக்காம பாக்குறதோட இருக்கானேன்னு சந்தோஷப்படு” அருண் சொல்லவும் அவனை முறைத்தான் வெங்கி.


“இப்போ எதுக்கு இவ இங்க வந்துருக்கா..? விவேக்கே பேச்சை ஆரம்பித்தான்.


“நான் வந்ததுல இவருக்கு என்ன போச்சாம்…? அவளும் தன் கோவத்தை காட்டினாள்.


“தேவையில்லாம பிரச்சனை வேண்டாம்னு தானே ஒதுங்கி போறேன்…”


“பிரச்சனை வேண்டாமா…? இல்ல நானே வேண்டாமா…? என்னை பிடிக்கலன்னு ஒரு வார்த்தை சொல்ல செல்லுங்கண்ணா இவர் கண்ணுல கூட படாம எங்கேயாவது போறேன்…” அவள் கண்களில் நீரோடு சொல்ல விவேக்கிற்கோ அதை காணவே முடியவில்லை…


“பாருடா சூழ்நிலையை புரிஞ்சிக்காம எப்படி பேசுறா..? இதெல்லாம் வேண்டாம்னு தானே தள்ளி போறேன்…”


“டேய் மாப்ள உனக்கு என்னடா பிரச்சனை புடிக்கலனா நேரடியா சொல்லிடேன் அதை விட்டுட்டு ஏன்டா இப்படி அந்த பொண்ணை அழ வைக்கிற…?” வெங்கி பேச,


“டேய் வீட்டை பத்தி நினைச்சி பாத்தியாடா…?” அவன் ஆரம்பிக்கும் போதே…


“டேய்‌… டேய்… போதும் டா நல்லவனே… அவங்க யாரு உனக்கு அத்தை… உங்க அப்பா யாரு இந்த பொண்ணுக்கு மாமா… எல்லாம் ஒன்னுக்குள்ள‌ ஒன்னு டீக்குள்ள பன்னுன்னு மிங்கிள் ஆகிடுவிங்கடா மச்சா… இப்போவே இந்த வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் பண்டமாற்று எல்லாம் நடக்குதாம்…” அவன் விளையாட்டாகவே அவர்களை சேர்த்து வைக்கும் பணியை தொடங்கி விட்டான்.


விவேக்கிற்கும் பார்த்துக் கொள்ளலாம் என நம்பிக்கை பிறக்க, உபைதாவை காதலாக பார்த்தான்.


வெங்கியிடம் பேச வந்த அருண் அவன் விரல்களும் உபாசனாவின் விரல்களும் ஒன்றொடுன்று கோர்த்திருக்க ஆச்சர்யமாக பார்த்தவன்,


“தனி தனியா போனிங்க வரும்போது கையை பின்னிங்கிட்டு ஜோடியா வந்து நிக்குறிங்க… என்னதான்டா நடக்குது இங்க நீங்க ரெண்டு பேரும் கமிட்டெட நான் மட்டும் தான் சிங்குளா…?” அவன் புலம்பிட,


“டேய் எங்கள விட கவுன்டிங்கள நீதான்டா முதல்ல இருக்க… நாங்களே ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒன்னு தான்டா வைச்சி இருக்கோம்” வெங்கி அருணை வாரினான்.


“ஆமா உங்க அம்மாவோட அந்த துடைப்பக்கட்டைய‌ மறந்து ஓகே பண்ணிட்டியா…?” அவன் நக்கலாக கேட்க,


“அதை ஷேர் பண்ணிக்கதான்‌ ரெண்டு பேர் இருக்காங்களே… மாப்ள”


“அந்த அப்பாவி ஜீவன்கள் யாரோ…?” அருண் அறியாமல் கேட்க


“நீங்கதான்டா…” என கூறியவனோ, அருணின் கரங்களுக்கு அகப்படாமல் காஃபி ஷாப்பை சுற்றி ஓடிட, அவனை துரத்திக்கொண்டு ஓடினான் அருண். அவர்களுடன் விவேக்கும் இணைந்துக்கொள்ள அங்கே சிரிப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமேது….


Thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10672/
 
Last edited:

NNK-72

Moderator
களிப்பு❤️15

“கொஞ்சம் ஸ்பீடா தான் போங்களேங்க எதுக்கு இப்படி பைக்கை உருட்டிட்டு இருங்கிங்க… சைக்கிள்ல போறவங்க கூட நம்மல ஓவர் டேக் பண்ணி போறாங்க” அரைமணி நேரத்தில் கடக்க வேண்டிய தொலைவை முக்கால் மணி நேரமாக கடந்துக் கொண்டிருந்ததில், ஏஞ்சல் கணவனை ஏவினாள்.

“அவனாவது ஏதாவது கோல்மால் பண்ணி எஸ்கேப் ஆகிடுவான்… ஆனா எனக்கு அது கூட வராதே… இப்போ என்ன நடக்குமோன்னு நானே பயந்துக்குட்டு இருக்கேன்… உனக்கு ஸ்பீடா போகனுமா மேடம்” சிறுபிள்ளையின் சாயலில் தந்தையை நினைத்து புலம்பியபடியே மனைவியை பைக் கண்ணாடி வழியே பார்த்தான் ஹரி.

அவனது பாவனையை கண்ணாடி வழியே ரசித்தவள், “சோ ஸ்வீட்…” கணவனை கொஞ்சிய விரல்களில் முத்தம் வைத்தாள் ஏஞ்சல்.

மனைவியின் கொஞ்சலில் தந்தையின் திட்டை கூட மறந்து உடலில் புது ரத்தம் பாய்ந்து வேகத்தை கொடுக்க, அதே சந்தோஷத்தில், வண்டியை வேகமாக செலுத்தியவன், அடுத்த பத்தே நிமிடத்தில் அவர்களது கடை வாசலின் முன்னே வண்டியை நிறுத்தி இருந்தான்.

“நீ உள்ள போ ஏஞ்சல் நான் இங்கேயே வெய்ட் பண்றேன்…” மனைவியை மட்டும் உள்ளே அனுப்பி வைத்திட,

“இவ்வளவு தூரம் வந்துட்டிங்க, உள்ள வாங்க… மாமா ஒன்னும் செல்ல மாட்டாரு… நாலு பேருக்கு முன்னாடி திட்ட மாட்டாருங்க…” மகனுக்கே அவனது தந்தையே பற்றி வகுப்பு எடுத்தாள்‌ ஏஞ்சல்.

அவன் மறுத்து பேச போகும் முன், கடையின் உள்ளே இருந்து மணி, வெளியே வந்தான்.

“அக்கா வந்துட்டிங்களா… வாங்க வாங்க…” அவன் உரிமையோடு, ஏஞ்சலின் கைகளில் இருந்த சாப்பாட்டு கேரியரை வாங்கிக் கொண்டு அவளை உள்ளே அழைத்தான்.

“நீ போ மணி… இவரை கூட்டிக்கிட்டு வர்றேன்” என்றவள், “மாமா ஒன்னும் செல்ல மாட்டாரு ஹரி, நீங்க வாங்க” அவளை வற்புறுத்தி உள்ளே அழைத்துச் சென்றாள்.

முதலில் மருமகள் வருகிறாள் என வாசலை பார்த்தவர், அவள் பின்னோடு ஹரி வரவும் அவனை பாராமல் கேரியருடன் உள்ளே சென்று விட்டார்.

தந்தையின் பாரா முகத்தில் ஹரியின் முகம் சோர்ந்து விட்டதில், ஏஞ்சலுக்கு வருத்தமாக இருந்தது…

“சாரிங்க நான் புத்திக் கெட்டு போய் பண்ண வேலையால நீங்க மாமாகிட்ட பேச முடியாம இருக்கு” உள்ளார்ந்த வருத்தத்துடன் அவள் கூறவும்

“ஹேய் ஏஞ்சல் என்ன இது நீ தான் எனக்கு தைரியம் சொல்லி உள்ள கூட்டிட்டு வந்த, இப்போ நீயே அதை நினைச்சி கலங்களாமா விடு அப்பா புரிஞ்சிக்குவாரு… என்றவாறு மனைவியின் கரங்களை பற்றி அழுத்தம் தந்தான்… அதில் அவள் கலக்கமும் சற்று மட்டுபட்டது.

கடையில் வேலை செய்யும் பெரியவர் அவளை நோக்கி வரவும், அவனிடமிருந்து தன் கரங்களை விடுவித்துக் கொண்டவள், “சொல்லுங்க அண்ணா…” என்றாள்

“அம்மா, நேத்து கேட்டு இருந்திங்களே குட்டி கிருஷ்ணர் விக்ரகம் அது வந்து இருக்கு மா… வந்து பாக்குறிங்களா…?” என்றார் ஆர்வமாக,

“அப்படியா…! வந்துடுச்சா…? அவளும் ஆவலுடன் கேட்டு, “நீங்க போங்கண்ணா நான் வரேன்” என்றவள் கணவனிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து விரைந்தாள்.

“இந்தங்கம்மா…” அவர் சிலையை கையில் கொடுக்கவும் அதன் அழகில் கவரப்பட்டவள், “ரொம்ப அழகா இருக்கு அண்ணா… இதை பில் போட எடுத்து வைங்க நான் வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்… இன்னைக்கு நாள் நல்லா இருக்கு…” என்றாள் அதை ஆசையாக பார்த்துக் கொண்டே

அதற்குள்ள கடைகளில் கொஞ்சம் கூட்டம் வந்து விட “சரி அண்ணா நான் இது எல்லாம் எடுத்து வைச்சிடுறேன்… நீங்க போய் அவங்கள பாருங்க…” அவரை அனுப்பியவள் எங்கே எந்த பொருட்கள் இருக்கிறது என்பதை பார்த்து பார்த்து எடுத்து வைத்தாள்.

இரண்டு மூன்று பெண்கள் பூஜை பொருட்கள் பக்கம் வரவும், “வாங்க வாங்க என்ன வேணும்…” இவளே அவர்களை அணுகினாள். முன் பக்கமாக நின்றுக் கெண்டிருந்த ஹரி, மனைவி என்ன செய்கிறாள் என உள்ளே வந்தான்.

“பெருமாள் உருவம் பதித்த விளக்கு காட்டுங்க… “ அப்படியே சில பொருட்களை சொல்லி அவற்றையும் காட்ட…. சொன்னார்கள்.

“ஓ பெருமாள் படம் மட்டும் போட்ட விளக்கா..? அது ரெண்டு மூனு நாள்ல வரும் வேறு இருக்கு காட்டட்டுமா”

*அப்படியா எங்கே காட்டுங்க பாக்கலாம்…”

“ஒரு நிமிஷம் இருங்க…” என்றவள், அதில் இரண்டு மூன்று ரகங்களை கொண்டு வந்தாள். கூடவே அவர்கள் கேட்டவைகளையும் எடுத்து வந்தாள்.

அவற்றையெல்லாம் பார்த்தவர்கள், “இது… நல்லா இருக்கே…! இது ரொம்ப அழகா இருக்கே…!” பார்ப்பதையெல்லாம் ரசித்தவர்கள், “இதை எடுத்து காட்டும்மா…” என்றதும் அதை எடுத்து பிரித்து அவர்களின் பார்வைக்கு வைத்தாள்.

அதில் அவர்கள் கேட்ட பெருமாள் படம் மட்டுமின்றி அருகே மகாலட்சுமி உருவமும் பதிந்து இருக்கவும், “அக்கா எனக்கு இந்த விளக்கு ரொம்ப புடிச்சி இருக்கு… இதையே எடுத்துக்கலாமே…” என்றாள் முதலாவது நின்றிருந்த பெண்

அவள் கூறவும் மற்றவர்களும் சம்மதம் தர அவர்கள் வாங்கிய மற்ற பூஜை பொருட்களையும் எடுத்துக் கொண்டு பில் போடும் இடத்தில் வைத்தவள், அவளே பில்லும் போட மனைவியின் செய்கைகளை அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி. அதேநேரம் சாப்பிட்டு வெளியே வந்த திருவரங்கநாதனும் அதை தான் பார்த்து கொண்டிருந்தார்.

அவர்கள் கேட்கும் பொருட்களை கொண்டு வந்து கொடுத்ததாகட்டும்,, முகம் மாறாமல் அவர்களுக்கு பதில் சொல்லியதாகட்டும் அவளது நிதானத்தையும் பொறுப்பான செய்கையையும் எண்ணி இருவருமே ஆச்சர்யப்பட்டனர்.

பில்போட்டு அவர்களை அனுப்பியவள் “என்னங்க பணம் கொடுங்க” ஹரியிடம் கேட்கவும், என்ன ஏது என கேட்காமல் அவனும் எடுத்து கொடுத்தான்.

அந்த கிருஷ்ணர் சிலைக்கு பில்லை போட்டு பணத்தை உள்ளே வைத்தவள் கல்லாவை விட்டு கீழே இறங்கிய நேரம் க்கூம் என்ற தொண்டை கனைப்பில் திரும்பியவள் அரங்கநாதனை பார்க்கவும், “சாப்பிட்டிங்களா மாமா” என்றாள்.

“ம் ஆச்சு பாப்பா” என்றவர் மகனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை…
அவளுக்கு குற்றவுணர்வாய் இருக்க, மாமா என அழைக்க போனவளிடம் வேண்டாம் என செய்கையால் தடுத்தவன், கடையே விட்டு வெளியேறி விட, மருமகள் செய்த வியாபாரத்தை பற்றி நினைத்து பெருமைக் கொண்டவருக்கு மகன் வருத்தமாய் வெளியேறியது கூட பெரிதாக தெரியவில்லை .

கடையில் வேலை செய்யும் பெரியவர் “அய்யா அம்மா கிளம்பிட்டாங்களா…?” பரப்பரப்புடன் கேட் வந்தார்.

“ஆமா இப்போ தான் போனாங்க நீ எதுக்கு இப்படி அவசரமா வந்து கேக்குற…” புருவம் சுருங்க எதிரில் நின்றவரை பார்த்தார் அரங்கநாதன்.

“அய்யா இந்த கிருஷ்ணர் சிலைய அம்மா ரொம்ப ஆசைப்பட்டு கேட்டாங்க… வந்தவுடனே கொடுத்துட்டேன்… அதை எடுத்துட்டு போக மறந்துட்டாங்க போல… இதோ பில்லுக் கூட போட்டு வைச்சி இருக்காங்க” பில்லுடன் இருந்த சிலையை எடுத்து காட்டினார் அந்த நபர்.

பலவித எண்ணங்கள் மனதில் சுழன்றடிக்க “சரி வை… நான் கொண்டு போறேன்” என்றவர் சாயங்காலம் கடையை வேலைப் பார்ப்பவரிடம் ஒப்படைந்துவிட்டு சீக்கிரமே வீட்டிற்கு கிளம்பி இருந்தார்.

……


வீட்டு நடுக் கூடத்தில் மாட்டிய கடிகார முள் சரியாக எட்டை தொட்டிருந்தது. ஏஞ்சலை அழைத்து வந்து விட்டுவிட்டு போன ஹரியும் வீடு திரும்பவில்லை, காபி ஷாப்பில் இருந்து வெங்கியும் வீடு திரும்பியிருக்கவில்லல…

‘என்ன ஆச்சின்னு தெரியல கடைக்கு போயிட்டு வந்ததுல இருந்து பிள்ளைங்க முகம் சரியே இல்ல… இந்த ஹரி பைய வந்து கொஞ்ச நேரம் கூட வீட்ல இருக்கல உடனே வெளியே போயிட்டான்…. இந்த மனுஷன் என்னத்தை பேசி தொலைச்சாரோ’’ தன் போக்கில் யோசித்துக் கொண்டே ஹாலில் அமர்ந்து இருந்தார் பிரபாவதி.

இன்று அரங்கநாதன் வேறு சீக்கிரமே வீடு திரும்பியிருந்தார். உள்ளே வந்தவர் மனைவி ஹாலில் இருக்கவும், “பிரபா இந்தா இதை உன் மருமககிட்ட கொடு, கடையில விட்டு வந்துடுச்சாம்… கேசவன் எடுத்து கொடுத்தான்… அதென்ன நம்ம கடையில கூட உன் மருமக காசு கொடுத்து பொருளை வாங்கனுமா…?” முகத்தில் ஒரு எரிச்சல் பரவ மனைவியிடம் ஒரு கவரை நீட்டினார்.

“பாப்பா அப்படி என்ன காசு கொடுத்து வாங்கி இருக்கும்?” என அதை வேகமாக திருந்து பார்த்த பிரபா, உள்ளே இருந்த கிருஷ்ணர் சிலையை பார்த்து அதிசயித்து, “என்னங்க இது…? பாப்பா கிருஷ்ணர் சிலைய வாங்கி இருக்கு…?” என்றார் புரியாதது போல.

“அதுதான் எனக்கும் தெரியல… ஆசைபட்டு கேட்டுதாம்… கொண்டு போய் கொடு” என்றதோடு அவரும் ஹாலில் அமர்ந்தார்.

“பாப்பா…” என்றழைக்க சோர்ந்த முகத்துடன் வந்தாள் ஏஞ்சல்.,

“நீ இதை கடையிலையே விட்டு வந்துட்டியாம் இந்தா மாமா எடுத்து வந்து கொடுத்தாங்க…” ஆராய்ச்சியாக அவள் முகம் பார்த்துக்கொண்டே கையிலிருந்த கவரை அவளை நோக்கி நீட்டினார் பிரபா,

ஏஞ்சல் அதை வாங்கிக்கொண்டு செல்லப் பார்க்க, கொஞ்சம் இருப்பாப்பா இப்போ உனக்கு எதுக்கு இந்த கிருஷ்ணர் சிலை அதுவும் இல்லாம நம்ம கடையிலையே காசு கொடுத்து வாங்கி இருக்க…?” அவருக்கு ஏஞ்சலின் போக்கு புரிந்து இருந்தாலும் கணவர்
உணர வேண்டுமே என கேட்டார்.

தயக்கமாக திருவரங்கநாதனை பார்த்தாள் ஏஞ்சல்… “சொல்லு பாப்பா உனக்கு எதுக்கு இது…” வேண்டுமென்று மருமகளை கேள்வி கேட்டு நிற்க வைத்தார்.

“எனக்கு கிருஷ்ணர் னா ரொம்ப பிடிக்கும் அத்தை” என்றாள் தயங்கியவாறு,

“நீ கிறிஸ்தவ மதத்து பொண்ணு உனக்கு எப்படி கிருஷ்ணரை பிடிக்கும்…?” பிரபா ஏஞ்சலிடம் கேட்ட கேள்விக்கு, மாமானாரின் காதுகள் உன்னிப்பாக மருமகளின் வார்த்தைகளுக்காக காத்திருந்தது.

அந்த நிமிடம் மனதில் தோன்றியதை வார்த்தைகளாக வடிக்க ஆரம்பித்தாள் ஏஞ்சல்.

“எனக்கு கிருஷ்ணரும் கிறிஸ்துவும் வேற வேறய தெரியல அத்த… எங்க மதத்துல இருந்த ஜீஸஸ் ஆடு மேய்ச்சாருன்னா நீங்க தெய்வமா கும்பிடுற கிருஷ்ணர் மாடு மேய்ச்சி இருக்காரு… என் கண்ணுக்கு ரெண்டு பேரும் ஒரே மாதிரியாதான் தெரியுறாங்க,...

நீங்களும் நானும் தெய்வங்களை வழிபடுற வழிபாட்டு முறை வேற வேறய இருக்கலாம்… ஆனா கடவுள் ஒன்னுன்னு தானே சொல்லிக் கொடுத்து இருக்காங்க…” ஏஞ்சலின் வார்த்தைகளில் அரங்கநாதனின் பார்வை மருமகளின் மீது வியப்பாய் படிந்தது.

“பாப்பா… உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்…” வேண்டுமென்றே கணவரின் முன் ஏஞ்சலிடம் வார்த்தைகளை வாங்க முயன்றார் பிரபாவதி.

“வாழ்க்கை எனக்கு நிறைய சொல்லி கொடுத்துடுச்சி அத்த…” என்றவளுக்கு கண்கள் கலங்கி விட்டது…

“பாப்பா…” பிரபா ஆதரவாக ஏஞ்சலை அணைத்துக்கொள்ள, “இந்த மாதிரி ஆதரவான அணைப்பை நினைவு தெரிஞ்சி, நான் அனுபவிச்சதே இல்லை அத்த” என்றவளுக்கு குரல் உடைந்து உடல் நடுங்கி போயிருந்தது.

“வேணாம் பாப்பா…. போதும்…” பிரபா அவளை தடுக்க, “இல்லத்த நான் சொல்லியே ஆகனும்…ப்ளீஸ்” என கெஞ்சியவள், அரங்கநாதனை பார்த்தாள்.

“ கிட்டதட்ட மூனு வயசுலிருந்து உறவுகள் இருந்தும், நா… நான்… ஆனாதையா இருக்கேன்…

அப்பா…. எனக்கு நினைவு தெரியும் முன்னாடியே வேறு ஒரு பொண்ணோட போயிட்டாரு… அதுவரையும் நான் மட்டுமே உலகம்னு இருந்த அம்மா, நான் வளர வளர என் முகத்துல என் அப்பாவை பாக்கவும் அவங்களும் என்னை வெறுக்க ஆரம்பிச்சிட்டாங்க…

அந்த வீட்டுல டிவி சோஃபா சேர் மாதிரி தான் நானும், உயிர் இருந்தும் ஜடப்பொருளா தான் இருந்தேன்… வளர வளர எனக்கு அம்மா வேற குடும்பம்… நான் மட்டும் வேறன்னு லேசா உண்மை தெரிய ஆரம்பிச்சது… அதை சொல்லும் போது அவளது குரலில்
அவ்வளவு வலி… பிரபா அவளின் கரங்களை பற்றிக்கொள்ள இதழ்களை கடித்து தன்னை சீர்படுத்தியவள்,

“நினைவு தெரிஞ்சி நான் சிரிச்சிக் கூட பேசினது இல்லை… வருஷங்களும் போச்சி, இப்படியே என் வாழ்க்கை போயிடுமோன்னு நினைச்சேன்… அப்போ தான் ஹரியை பார்த்தேன்… என் வாழ்க்கையே அழகான மாதிரி இருந்துச்சி… அவர் பேச்சி என் வலியை மறக்க வைச்சிது…” உணர்ச்சிவசத்துடன் ஏஞ்சலின் வார்த்தைகள் வெளிப்பட்டது.

அந்த மாதிரி ஒரு கஷ்டமான நேரத்தில் தான் கிருஷ்ணர் கோவிலுக்கு கூட்டிட்டு போனார்…. அந்த இடத்தில் இருந்த, அமைதியும், அழகும் எனக்கு நிம்மதியை கொடுத்தது. அந்த கோவிலுக்கு அடிக்கடி போக ஆரம்பித்தேன்…

ஹரி, கூட இருக்கறது எனக்கு சந்தோஷத்தை தந்துச்சி… வீட்டுல இருக்கறதை விட அவர் கூட இருக்க நிமிஷத்தை எதிர்ப்பார்த்து காத்திருப்பேன்…

உங்களப்பத்தியும் உங்க குடும்பத்த பத்தியும் சொல்லி சொல்லி இந்த குடும்பத்துல நானும் வாழனும்னு ஆசையா இருந்தது… வாழ்க்கை முழுக்க ஹரியோட சந்தோஷமா வாழனும்னு, பேராசையே வந்துடுச்சி... முடிக்க முடியாமல் அவளது குரல் தழுதழுத்தது.

அப்போ தான் என் காதல் எங்க வீட்டுக்கு தெரிய வந்துச்சி…. , மகளே இல்லாம போனாலும் பரவாயில்லை எனக்கு நான் நினைச்சது தான் நடக்கனும்னு அம்மா என்னை பிடிக்காத கல்யாணம் பண்ணி வைக்க வெளி நாட்டுக்கு கூட்டிட்டு போக திட்டம் போட்டாங்க… சாகுறதை தவிர எனக்கு வேற வழி தெரியல அத்த.,. வாழ்ந்தா ஹரி கூட மட்டும் தான் என் வாழ்க்கை இல்லனா உயிரோடவே இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணி விஷத்தை குடிச்சிட்டேன்….

அவங்களுக்கு விஷயம் தெரியவும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டாங்க… ஹரிக்கு தெரிஞ்சி ஒரு நிர்பந்தத்துல தான் வேற வழியே இல்லாம எங்க கல்யாணம் நடந்துச்சி… அவரு யோசிக்க கூட நான் நேரத்தை கொடுக்கல மாமா பீளீஸ் மாமா அவரை வெறுத்துடாதிங்க நான் பண்ண காரியத்தால தான் அவர் இப்படி ஒரு முடிவுக்கு வந்தாரு…” அவள் அழுத அழுகையில் பிரவபாவதிக்கே கண்கள் கலங்கி விட்டது…

“பாப்பா… இங்க பாரு பாப்பா…” அவளை சமாதானம் செய்தது எதுவும் அங்கே வேலைக்கு எடுபடவில்லல…

“உங்களை பத்தி பேசப்பேச உங்க கூட எல்லாம் இருக்கனும்னு தான் எதையும் யோசிக்காமல் வந்துட்டேன்… வந்த பிறகு தான் தெரியுது ஒரு அழகான குருவிக்கூட்டை கலைச்சிட்டேன்னு .. நான் வந்தது சரியா தப்பா தெரியல... ஆனா உங்களுக்கு சங்கடமா இருக்குன்னு மட்டும் தெரியுது… என்னை மன்னிச்சிடுங்க அத்த… மன்னிச்சிடுங்க மாமா… ஒவ்வொரு நாளும் என்னை ஜீரணிக்க முடியாம நீங்க படுற கஷ்டதை என்னால பாக்க முடியல…. நான் வேனா இந்த வீட்டு விட்டு வெளியே போயிடுறேன் அவரு கூட பேசிடுங்க மாமா… பேசுங்க அத்தை…” என அவர்களின் பாதங்களில் விழப்போக சட்டென குனிந்து அவளை தாங்கிக் கொண்டார் பிரபா.

கண்களில் தவிப்போடு மாமியாரை பார்க்க “என்னப் பாப்பா பண்ற நீ…” பிரபா அவளை கடிந்துக்கொண்டர்.,

விரக்தியில் சிரித்தவள், "நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை கைவிடுவதும் இல்லை" இது பைபிள் சொல்லுது…

"இன்ப துன்பத்தில் எப்போதும் உன் கூடவே இருப்பேன்னு" கீதை சொல்லது

பைபிளா இருந்தால் என்ன...? கீதையா இருந்தால் என்ன...? சொல்ல வந்த கருத்து என்னவோ ஒன்னு தானே அத்த… நாங்க அதை மட்டும் தான் பாத்தோம்... மத்தபடி உங்களை கஷ்டப்படுத்தனும்னு நினைக்கவே இல்லை… எங்களோட கல்யாணம் உங்க ஆசிர்வாதத்தோட நடக்கனும்னு நான் ஆசைப்பட்ட விஷயம் அத்தை" என்றாள் மனதில் வலியோடு….

"ஏன் பாப்பா இப்படி எல்லாம் பேசுற...? நா
னே தேடி எடுத்திருந்தாலும் இப்படி முத்தாட்டம் ஒரு பொண்ணு இந்த குடும்பத்துக்கு கிடைச்சு இருக்காது…
ஏதோ நாங்க எப்பவோ பண்ண புண்ணியம் இந்த குடும்பத்துக்கு நீ கிடைச்சி இருக்க…" அவளை அணைத்துக் கொண்டார் பிரபாவதி.


“எனக்கு ஒரு பொண்ணு இல்லையென்னு நான்‌ வருத்தப்படாத நாளே இல்லை…
ஆனா இப்போ எனக்கு அது தோணவே இல்லை அதான் நீ. வந்துட்டியே… மகளுக்கு மகளா மருமகளுக்கு மருமகளா…” அவள் நெற்றியில் முத்தம் வைத்து முகவடிவை அளந்து திருஷ்டி கழிக்க ஏக்கமாக மாமனாரை பார்த்தாள்.

அவளிடம் பேச வார்த்தைகளை தேடிக்கெண்டிருந்தார் திருவரங்கநாதன் அவளது வாழ்க்கை மனதை அவ்வளவு வறுத்தியது… “இங்க வா பாப்பா…” தன் அருகே அழைக்க ஆச்சர்யமாக மாமனாரை பார்த்தவள் அவர் அருகில் சென்றாள்.

அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்த ஹரியும், வெங்கியும் ஏஞ்சல் அரங்கநாதன் புறம் நிற்கவும் ‘என்னடா உலக அதிசயமா துர்வாசர் பக்கத்துல அண்ணி நிக்குறாங்க’ மனதில் எண்ணியபடியே உள்ளே வந்தான் வெங்கி.

பிள்ளைகள் உள்ளே நுழைந்ததை பார்த்துவிட்ட அரங்கநாதன் .

“ஏன்டா பெரியவனே கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து, இத்தனை நாள் ஆகுது பெத்தவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கனும்னு கூட தோணலையா டா உனக்கு…” உரிமையுடன் தன்னை கடிந்துக் கெண்ட தகப்பனை அதிர்ச்சியில் விழி விரித்து பார்த்தவன், ஏன் எதற்கு என்று கூட கேளாமல் மனைவியுடன் பெற்றவர்களின் காலில் விழுந்து கண்களாலையே மனைவியை என்னவென்று கேட்டான்,

“இந்த சீனை பாக்கும் போதே லைட்டா ஹார்ட் அட்டாக் வர மாதிரியே இருக்கே…” லேசாக தள்ளாடியபடி நெஞ்சை பிடித்துக்கொண்ட வெங்கி பிரபாவின் புறம் சாய்ந்து “என்னம்மா இது என் கண்ணையே என்னால நம்ப முடியல” என்றான் கிண்டலாக,

“டேய் சும்மா இருடா அவரே இப்போதான் மலை இறங்கி இருக்காரு நீ பேசி அவரை ஏத்தி விட்டுடாத” என்றார் பிரபாவதி பல்லை கடித்து,

ஹரியின் கேள்வி‌க்கு, .கண்களை மூடி திறந்து சன்னமாக இதழ் வளைத்தவளின் மேல் பித்தாக விழிகளை அகற்றிக் கொள்ள முடியாமல் காதல் மயக்கத்துடன் அவளையே பார்த்தான் ஹரி,

“டேய் அண்ணா ஆசிர்வாதம் வாங்க கால்ல விழச்சொன்னா, அப்படியே தூங்கிட்டியாடா…?” வேண்டுமென்று வெங்கி சத்தமாக குரல் கொடுத்தான்.

வெங்கியின் மேல் கொலைக் காண்டனா ஹரி பல்லைக் கடித்து எழுந்துக்கொள்ள, முகம் கொள்ளா புன்னகையுடன் எழுந்தாள் ஏஞ்சல்.

“பாப்பா, இனி அப்பா அம்மா இல்ல நான் அனாதை அது இதுன்னு சொல்லக் கூடாது…முக்கியமா அழக்கூடாது… உனக்கு நாங்க மாமானார் மாமியார் மட்டும் இல்ல அம்மா அப்பா புரியாதா…! என்னடா பெரியவனே… உனக்கும் தான் செல்றேன்… பாப்பாவை கண் கலங்காம பாத்துக்க” பெரியவனிடம் கூறிவிட்டு அவர் உள்ளே செல்ல, தந்தை தன்னிடம் பேசியதை நம்ப முடியாமல் ஷாக் அடித்தவனை போல நின்றான் ஹரி.

“துர்வாசர் மாற்றம் பெரிய மாற்றமா இருக்கே…” ஆச்சர்யமாக அன்னையை பார்த்தான் வெங்கி.

பிரபாவதி நடந்ததை சுருக்கமாக சொல்ல அதை புரிந்த ஹரி மனைவியை பார்த்து, ஆறுதலாக கண்களை மூடித் திறந்தான்.

“அடேய் அண்ணா… உன்ன தொரத்தி விட்டுட்டு மொத்த சொத்தையும் நானே ஆட்டைய போட்டுக்கலாம்னு நினைச்சி…. துர்வாசரை மலைப்போல நம்பி இருந்தேன்… இப்படி கவுத்து வுட்டுட்டு போயிட்டாரே…” வெங்கி வேண்டுமென்றே அலுத்துக் கொண்டதும்.

அவன் முதுகில் ஒன்று வைத்த பிரபா, “போயி இருக்குற வேலையை பாரு, நாளை மறு நாள் தை பொறக்குது, ஜோசியரை பாத்து நல்ல நாள் பாக்கனும்” என்றதும், அது எதற்கு என்ற புரிந்துக் கொண்ட ஹரியும் ஏஞ்சலும் கண்களால் காதல் மொழிப் பேசிக்கொண்டனர்.

“அடேய் அண்ணா ஹேப்பியா இருக்க போல …?!?” அவனை ஏஞ்சலை பார்க்கவிடாமல் வெங்கி அவனிடமே பேசவும் தம்பியை முறைத்தான் ஹரி… வெங்கியின் சில்மிஷத்தில் ஏஞ்சல் சிரித்து வைக்க, ஹரி அவளை ஆழ்ந்து நோக்கினான்.

அவர்களின் காதல் பார்வையை பார்த்து, சரி சரி உன் வேலையை பாரு மனமிறங்கி அவர்களுக்கு வழியை விட்டவன்‌,

“ஏன் பிரபா இதே போல நான் ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்தா அப்பாவும் நீயும் இப்படி ஏத்துக்குவிங்க தானே…” அவன் விளையாட்டு போல பிரபாவை கேட்க,

எடு அந்த தொடப்பக்கட்டைய அவர் அந்த பக்கம் இந்த பக்கம் என சுற்றி முற்றி ‌தேடினார்.,

நீயே தொடப்பக்கட்டையில் எவ்வளவு நாள் மா அடிப்ப…? எனக்கும் பொண்டாட்டி கையால அடி வாங்கனும்னு ஆசை இருக்காத…? அவர் அடித்த பந்தை சிக்ஸராக்கி வைத்த, கடுப்பில் அவனை ஏற இறங்க பார்த்த பிரபா அங்கிருந்து நகர்ந்து விட்டார்..

Thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10672/
 
Last edited:

NNK-72

Moderator
களிப்பு ❤️ 16 இறுதி பகுதி....


இதோ அதோவென விளையாட்டாய் மூன்று மாதங்கள் எப்படியோ கடந்து‌ போயிருந்தது. காதல் பறவைகளான ஹரியும் ஏஞ்சலினும் தாம்பத்தியம் எனும் சாகரத்தில் மூழ்கி தினம் தினம் முத்தெடுத்ததில் இதோ இப்போது அவளது மணிவயிற்றிலும் இரண்டு மாத நல்முத்து ஒன்று உருவாகியிருந்தது… தாத்தா பாட்டி ஆகும் சந்தோஷத்தில் அரங்கநாதனும் பிரபாவும் திளைத்திருக்க இங்கே ஒரு காதல் ஜோடி கல்யாணத்தை எப்படி நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கி இருந்தனர்.


தி காஃபி கிளப்… ( The coffee club)


அதிகாலையில் தொடங்கிய ஆதவன் தன் பணியினை சிறப்பாக செய்து முடித்து, குளிர் நிலவுக்கு வழிவிட்டு மேற்கில் மறைந்துக் கொண்டிருந்த மாலை நேரம், அங்கொன்றும் இங்கொன்றுமாக வாடிக்கையாளர்கள் காஃபி அருந்திக்கொண்டிருக்க அருணுக்கோ கடுப்பாக இருந்தது.


உள்ளே வெங்கி உபாசனாவுடன் இருக்க வெளியே விவேக் உபையுடன் இருந்தான். இதெல்லாம் பார்த்த அருணுக்கு சொல்லவா வேண்டும், தீப்பொறி ஆறுமுகம் போல எந்த பக்கம் உரசினாலும் தீ பற்றும் நிலையில் உக்கிரமாக இருந்தான்.


‘இதென்ன காஃபி கிளப்பா…? இல்ல லவ்வர்ஸ் பார்க்கா…? உள்ளே என்னடான்னா அவன் ஜோடியா இருக்கான்… வெளியே என்னடான்னா இவன்‌ ஜோடியா இருக்கான்… நம்ம வாழ்க்கை எதை நோக்கி தான்டா போயிட்டு இருக்கு… காலம் பூராவும் சிங்கிள் தானா!!!’ தன் போக்கில் யோசித்துக் கொண்டிருக்கையில், இன்னொரு‌ ஜோடி உள்ளே நுழைவதை பார்த்தவன், “இதோ வந்துட்டான்ல என் எரியும் வயித்தில் பெட்ரோலை ஊத்தறத்துக்குன்னே…” கடுப்பாக அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அருண்.


அவர்களை தொடர்ந்து அருணை குளிர்விக்கவென ஒரு அழகிய யுவதி ஷாப்பிற்குள் நுழைந்திட, அவன் பார்வை மொத்தம் இப்போது குளுகுளு வெண்பனிபோல குளிர்ந்து விட்டதில், மற்றவர்களை‌ மறந்து விட்டான்.


“விளையாடதிங்க வெங்கடேஷ்… இன்னும் பத்து நாள்ல ஊருக்கு கிளம்பிடுவேன்… அதுக்குள்ள ஏதாவது பண்ணுங்க… அப்பா வேற வந்து இருக்காரு இதுக்கு மேல விஷயத்தை தள்ளி போட முடியாது” உணவுகளை சப்புக்கொட்டி ருசி பார்த்துக் கொண்டிருந்த வெங்கியை உசிப்பினாள் உபாசனா.


உணவை ருசித்துக் கொண்டிருந்தவனுக்கு சட்டென புறை ஏறி விட்டது. “சாப்பிடும் போது ஷாக்கான நீயூசை எல்லாம் சொல்லாதம்மா… பாரு எப்படி புறை ஏறிடுச்சி…” தீவிரமான முகபாவத்துடன் அவன் சிரியாமல் கூறிட,


முதலில் எதையோ சீரியஸாக சொல்லவருகிறான் என உன்னிப்பாய் கவனித்தவள், அவன் வாக்கியத்தை முடிக்கும் போதே கோபத்துடன் அவனை மொத்த ஆரம்பித்திருந்தாள்.


“ஏய் அடிக்காதடி…” அடிக்கும் அவளது பூக்கரங்களைப் பற்றி முத்தம் வைத்து, தன்னவளை பின்னிருந்து அணைத்து கொண்டவன் “இப்போ என்ன நம்ம கல்யாணத்தை பத்தி வீட்டுல பேசனும் அவ்வளவு தானே சரி ஐடியா பண்றேன்” அவள் தோள்வளைவில் தாடையை பதித்து அவளது வாசத்தை தன்னுள் சுகித்தவாறே சமாதானம் செய்தான்,…


“என்ன ஐடியா பண்ண போறிங்க வெங்கடேஷ்…” அவன் அருகாமை தரும் சிலிர்ப்பில் சிவந்தவள், ஆவலாய் கேட்டாள்..


“சொல்றேன்…. சரி மேடம், என்ன பண்ண போறிங்க…? அவளை விலக விடாமல், தன் கையணைப்பில் வைத்தே கேட்க,


அவன் இதயத்துடிப்பை ரசித்தவாறே மார்மீது சாய்ந்திருந்தவளோ “அப்பாக்கு தெரியாம என் லைஃப் ல எதுவும் இல்ல வெங்கடேஷ்… இவரு தான் என் மனசுக்கு புடிஞ்சவருன்னு அவருக்கிட்ட உங்களை கூட்டிட்டு போய் காட்டனும்… கண்டிப்பா அவருக்கும் உங்களை பிடிக்கும்” என்றாள் கண்களில் ஆசையுடன்,


பெருமூச்சு விட்டு அவளளைத் தன் புறம் திருப்பி, முகம் பார்க்க வைத்தவன், “உங்க வீட்டுல எல்லாம் ஓகே தான் ஆனா, இங்க… எனக்கு பிரபாவையும் துர்வாசரையும் நினைக்கும் போது பக்கு பக்குன்னு இருக்கு…” வெங்கியின் புலம்பலை ரசித்தவள், சட்டென அவன் கன்னத்தில் இதழ் பதித்து வெளியே ஓடி விட்டாள்.


அவன் சூழ்நிலையை தெரிந்து தானே விரும்பினாள். அதில் வருத்தம் கொள்ள முடியுமா என்ன..? அவன் பார்த்துக்கொள்வான் என நம்பிக்கையில் இருந்தாள்.


பரிசாக கிடைத்த முத்தத்தில் வெங்கியின் உடலில் அதிர்வலைகள் ஓடி மறைய, “ஏய் நில்லுடி அவள் பின்னாடியே ஓட இருந்தவன், அருண் உள்ளே வரவும், “மச்சான் பாத்துக்க இதோ வந்துடுறேன்” என வெளியே ஓடிவிட்டான்…


“இவனுங்கள…” அந்த யுவதி போய்விட்டாளே, என்ற கடுப்பில் உள்ளே வந்த அருண், இவர்களின் விளையாட்டில் பல்லை கடித்து வேலையைப் பார்த்தான்.


…..


நிமிடத்திற்கு பத்து முறைக்கு மேல் ஹாலில் ஏதோ செய்தி தாளை படிப்பது போல வாசலை பார்த்துக் கொண்டிருந்தான் வெங்கி.


என்றுமில்லாத திருநாளாய் அவன் ஹாலில் உட்கார்ந்து பேப்பரை படிக்கவும், அனைவரும் அவனை வினோதமாக பார்த்தபடியே செல்ல, கடுப்பானவன் “இங்க என்ன சர்கஸா நடக்குது அப்படியே ஷாக்கா பாத்துட்டு போறிங்க” வெங்கி சலித்துக்கொள்ள,


“அதுதான் டா எனக்கும் சந்தேகமா இருக்கு… இந்த எலி எதுக்கு அம்மனமா ஒடுதுன்னே புரியல…” என்றார் பிரபா அவனை ஏற இறங்க பார்த்து,


“எலி என்னைக்குமா ஃபுல் டிரஸ் போட்டு இருக்கு….” ஹாலில் இருந்த ஹரி வெங்கியை பார்த்து சிரித்து விட அண்ணனை முறைத்தான் அவன்.


“போதும் டா அவனை முறைச்சது… போயி ஒழுங்கா கடைக்கு கிளம்புற வழிய பாரு…” என்றவாறே பிரபா உள்ளே சென்று விட, தம்பியின் பார்வை உக்கிரமாவதை உணர்ந்த ஹரி, காலை நேர மசக்கையில் படுத்திருக்கும் மனைவியைக் காண தங்களது அறைக்குள் நுழைந்து விட்டான்…


“அய்யா… அய்யா…” வாசலில் குரல் கேட்கவும், ஆவலாக எட்டி பார்த்த வெங்கி… பார்த்தும் பார்க்காதது போல இருந்தான். அந்த சத்தத்தில் வெளியே வந்த பிரபா வாசலில் நின்றிருந்தவரை பார்க்கவும்


“வாங்க வாங்க தரகரே… உள்ள வாங்க…” அவரை வரவேற்று அமர வைத்தவர், “இவர் ஏன் வந்துருக்காரு…?” என்ற யோசனையோடே கணவரை அழைத்து வர உள்ளே சென்றார்.


மனைவி அழைக்கவும், வெளியே வந்த அரங்கநாதனை பார்த்த வெங்கி, எழுந்து ஒரமாய் நிற்க, “வாங்க நடேசன்” என அவரை வரவேற்றபடியே வந்து சோஃபாவில் அமர்ந்தார் அரங்கநாதன்.


அவரை தொடர்ந்து, ஹரியும் ஹாலுக்கு வர, அண்ணன் தம்பி இருவரும் சத்தமில்லாத ரகசிய பாஷை பேசியபடியே அருகருகே நின்றிருந்தனர்.


“அய்யா ஒரு வரன் வந்து இருக்கு.. நம்ப சின்ன தம்பிக்கு சரியா இருக்கும் பாக்கலாங்கலா…நல்ல இடம்…” என்றார் அவர் வாயெல்லாம் பல்லாக,


அரங்கநாதன் பேசுவதற்கு முன்னமே எழுந்த வெங்கி, “என்னது எனக்கு கல்யாணமா…!?! அதிர்ந்து பார்த்தவன், “என்னோட காபி ஷாப் வேர்ல்ட் லெவல்ல கொண்டு போகறத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ண பாக்குறிங்களே… கல்யாணம் பண்ணிக்கிற வயசா இது… என்னால கண்டிப்பா கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது…” வெங்கி கல்யாணமே வேண்டாம் என அந்தர் பல்டி அடித்தான்.


தம்பியின் நடிப்பு திறமையை ஹரி வாயை பிளந்து பார்க்க, ‘இது நம்ம புள்ளை தானா..!?’ என்ற ரீதியில் பிரபா இளைய மகனை பார்த்திட, அரங்கநாதன் என்ன நடக்கிறது என புரியாமல் பார்த்தார்.


“என்ன தம்பி இப்படி சொல்றீங்க…அது அது நடக்க வேண்டிய நேரத்துல நடந்தாதான் தம்பி வாழ்க்கை நல்லா இருக்கும்… காலம் போன பிறகு நடக்குற எதுவும் வாழ்க்கைல திருப்தி தராது தம்பி… பெரியவங்க சொல்லி வச்சது எல்லாம் நம்ம நல்லதுக்குதான்….” என்ற நடேசன் அரங்கநாதனிடம் திரும்பி “தம்பி ஏதோ புரியாம பேசுதுங்க… நம்ம தான் நாலஞ்சு புத்திமதி சொல்லி அவங்களுக்கு சொல்லித்தரனும்.‌‌.. இப்ப நான் கொண்டு வந்து இருக்குற வரன் நம்ம தம்பிக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்…” அவர் வற்புறுத்தி பேசவும்,


“நான் இன்னும் எவ்வளவோ சாதிக்கனும்னு வெறிக்கொண்டு உழைக்கிறேன்… அம்பானி லெவலுக்கு வரணும்னு நினைக்கிறேன் ஏதேதோ காரணம் சொல்லி எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சி என்னை முடக்க பாக்குறிங்களா… நோ… நெவர் அது எப்பவும் நடக்காது…” இரண்டு முன்று உதார்களை அள்ளி விடவும்,


அதிர்ந்து நின்ற ஹரி “அவார்டா டா கொடுக்குறாங்க இப்படி நடிச்சு தள்ளுற… அவர் உன்னை பார்க்குற பார்வையில் அப்புறம் இந்த பொண்ணே வேண்டாம்னு சொல்லிட போறாரு” வெங்கியின் காதில் சத்தமில்லாமல் பேசவும், உள்ளுக்குள் ஜெர்க்கானவன் தொண்டையைக் கனைத்து தன்னை நிதானப்படுத்தினான்.


வெங்கி தானே அண்ணனிடம் சொல்லி அனைத்தையும் ஏற்பாடு செய்ததது. இதில் அவர் திருமணம் வேண்டாம் என்று விட்டால் அனைத்தும் கெட்டு விடுமே, ‘சரி நடிப்பை அப்படியே மெய்ன்டன் பண்ணுவோம்…’ என‌ மனதில் எண்ணியவன்,


“நீ எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் இப்போதைக்கு என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது அண்ணாஆஆஆஆ” வெங்கி வேண்டும் என்று அண்ணா வில் அழுத்தம் கொடுத்து தந்தையை பார்த்தான்.


அதிர்ந்த பிரபா, மகனின் அடாவடிகளை கிரகிக்க முயன்றார். என்றால், ஒருபடி மேலே சென்ற அரங்கநாதனோ அவனை முறைத்தபடி அமர்ந்திருந்தவர், “பிரபா…” என சத்தம் கொடுக்கவும் கப்சிப் என அடக்கிப் போனான் வெங்கி.


“என்ன உன் புள்ள இப்போ எதுக்கு கல்யாணம் வேண்டாங்குறான்…? ஏன் இவனும் ஏதாவது பொண்ணை பாத்து வைச்சி இருக்கானா…? என்னென்னமோ சம்மந்தமில்லாம பேசுறான்… அப்படி மட்டும் ஏதாவது நினைச்சி இருந்தான்னா அதை இன்னையோட மறந்துட சொல்லு ” கோவமாக பிரபாவதியை பார்த்தார் திருவரங்கநாதன்.


திருவரங்கநாதன் முறைக்கவும் “என்னடா அப்பா சொல்ற மாதிரிதான் நீயும் பண்றியா…?” பிரபாவதி மகனை சாட,


“லவ்வா….? நானா…? அண்ணன் பண்ணி வைச்சது பத்தாதா… நான் வேறையா மா … அப்பா சொல்லை மீறுவேனா உன்னை கஷ்டப்படுத்துவேனா… நீங்க யாரை பாத்து கை காட்டிறிங்களோ அவளையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்…” நான்கைந்து பிட்டுகளை சேர்த்து போடவும் மலை இறங்கிய அரங்கநாதன்,


“நடேசன் நீங்க பொண்ணு வீட்டுல பேசுங்க ஒரு நல்ல நாள் பார்த்து வரோம்” அவர் வாக்கை கொடுக்க, ஜாதகம் பார்த்து நேரம் பார்த்து இன்னும் இரண்டு நாட்களில் ஶ்ரீ லட்சுமி உபாசனாவை பெண் பார்க்கும் படலம் நிகழ இருந்தது…


….


முழு அலங்காரத்தில் கண்ணாடியின் முன் அமர்ந்திருந்த, தன் மகளை விழிகளில் திரண்ட நீர்மணிகளுடன் பார்த்தார் அன்பு..


ஆசையாசையாக வளர்த்த மகள் நாளை வேறு ஒரு வீட்டிற்கு செல்லவிருக்கும் செல்ல மகள் கொள்ளை அழகுடன் மிளிர்வதை காண ஒரு தந்தையாய் நெகிழ்ந்துப் போய் இருந்தார்.

இந்த ஒரு
வருடமாகத் தான் மகளை பிரிந்து இருக்கிறார் அன்பு... தன்னுடனே வைத்துக்கொள்ள கொல்லை ஆசைதான் ஆனால் வியாபாரம் விஷயமாக வெளிநாடு செல்கையில் அவளை தனியாக விட மனமில்லாதவர் தன் நெருங்கிய நண்பனின் வீட்டில் தங்க வைத்து பார்த்துக்கொள்ள இப்போது அவர்கள் வீடே அவளது உலகமானது.

தன் பின்னே நின்றிருந்தவரின் பிம்பம் கண்ணாடி வழியே தெரியவும் “அப்பா…” என நா தாழுதழக்க அழைத்த மகளின் அழைப்பில் தன்னிலைக்கு, மீண்டவர், “என் பொண்ணுக்கு கல்யாண வயசு ஆகிடுச்சின்னு இப்போ தான் எனக்கே தெரியுது…” மகளை கண்டு பூரிப்பில் அவரது முகம் மகிழ்ச்சியில் திளைத்திட,“அங்கிள் இவ சரியான கேடி… லவ் பண்றான்னு என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல தெரியுமா ரொம்ப அழுத்தக்காரி…” அன்புவிடம் அலுத்துக்கொண்டாள் நந்து.


தந்தையின் கையை பிடித்துக் கொண்டவள், “அவர்கிட்டயே நான் யாருன்னு சொல்லாமா தானேப்பா இருந்தேன்… வெங்கடேஷ் என் லவ்வை அக்சப்ட் பண்ணுவாறான்னு தெரியாத போது நான் எப்படிப்பா உங்ககிட்ட எல்லாம் சொல்றது… அது நிறைவேறாம போனா உங்களுக்கு எல்லாம் என்னை நினைச்சி கஷ்டமாயிருக்கும் ல

அதான் யார்கிட்டயும் சொல்லல உங்ககிட்டயும் மறைச்சிட்டேன் சாரி பா”, கண்களை சுருக்கி, மன்னிப்பை வேண்டும், சிறு குழந்தையாக நின்றாள் உபாசனா…


மகளின் சிறு சுணக்கமும் காண சகியாது வாஞ்சையுடன், அவளை பக்கவாட்டாக அணைத்து விடுவித்தவர், “என் பொண்ணு என்கிட்ட ஒரு விஷயத்தை மறைக்கிறான்னா ஏதாவது வலுவான காரணம் இருக்கும்னு … அப்பாவல புரிஞ்சிக்க முடியாதா… என்ன..? ம்…” புருவம் உயர்த்தி மகளை கேட்க,


ஆம் என தலையாட்டிவளிடம் “அப்புறம் எதுக்கு இந்த சோகம்… இன்னைக்கு உனக்கான நாள் இப்படி சோகமா முகத்தை வைச்சிக்கலாமா… எங்கே சிரி பார்க்கலாம்…”


அன்பு அவ்வளவு சொல்லியும் உபாசனா இயல்புக்கு வராமல் அவரிடம் சொல்லதில் வருத்தமாக இருக்க, மகளின் தாடையை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவர்,


“அப்புறம் வெங்கடேஷ் இது நான் லவ் பண்ண பொண்ணு இல்லைன்னு சொல்லிட போறாரு… பாரு… ” அன்பு மகளை வேண்டுமென்றே வம்பு இழுக்கவும் “அப்பா…” என சலுகையாக உபாசனா அவர் மார்மீது சாய்ந்த நேரம்,


“அங்கிள் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க…” சாகரின் செய்தியில் ஹாலுக்கு விரைந்தார் அன்புசெல்வம்.


வெங்கி அவரை ஏற்கெனவே வந்து சந்தித்து, தன்னை பற்றியும் வீட்டின் கெடுபிடிகளையும் பற்றி கூறிவிட்டதில்,மகளின் காதல் நிறைவேற தானும் அவர்களுடன் இணைந்துக் கொண்டார்.


சாகரின் பெற்றோர்களுடன் பேசியபடி இருந்தார் அரங்கநாதன், பிரபாவும் மற்றும் ஏஞ்சலும், பெண்ணை பார்க்கும் ஆர்வத்துடன் அமர்ந்திருக்க, . ஆலிவ் பச்சை நிறத்தில் சட்டையும் பிரௌன் நிற பேண்டில் அலையலையான கேசம் காற்றில் பறக்க, ஹீரோ மெட்டிரியலுக்கான அத்தனை அம்சத்துடன் இருந்த வெங்கி, டென்ஷனாக ஹரியின் பக்கத்தில் அமர்ந்திருந்தான்.
ஹாலுக்கு விரைந்து வந்த அன்பு “வாங்க வாங்க…” சிரித்த முகமாக அரங்கநாதன் குடும்பத்தை வரவேற்றார்.


அவரை பார்த்ததும், அதுவரையிலும் சிரித்த முகமாக பேசிய அரங்கநாதன் யோசனையுடன் முகத்தை சுருக்கினார்.


அன்புவின் முகமும் யோசனைக்கு தாவியது, ஏதோ பார்க்க கூடாத நபரை பார்த்து விட்ட தவிப்பில் இருந்தார் அன்பு.


நீங்க அன்புசெல்வன் தானே என்றார் அரங்கநாதன் தன் சந்தேகத்தை தெளிவித்துக் கொள்ளும் பொருட்டு


ம் என தலை அசைத்து அதை ஆமோதித்த அன்புசெல்வம் , நீ திரு திருவரங்கநாதன் தானே என்றதும் அவரும் ஆம்மென்று தலை அசைக்க அங்கே பெருத்த அமைதி…‌


இருவருக்குள்ளும் ஏதோ ஒரு உருத்தல் பேச முடியாது வார்த்தைகளின்றி அங்கே மௌனம் குடியேற, வெங்கியும் ஹரியும் ஒருவர் முகத்தை ஒருவர் கலவரமாக பார்த்துக்கொண்டனர்.


உள்ளே இருந்த உபாசனாவிற்கு இவ்விஷயம் தெரியாமல் நந்தினியுடனும் நியூட்டனுடனும் தன் டென்ஷனை குறைக்க பேசிக்கொண்டிருந்தாள்.


திருவரங்கநாதனின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் படர்ந்திருந்தது. அதை கவனித்த பிரபா “ஏங்க இங்க எதுவும் பேச வேண்டாம்… அவரை தனியா கூப்பிட்டு பேசுங்க” என்றார் முன் எச்சரிக்கையாக… அவருக்கும் குழப்பமாக இருக்க விஷயம் என்னவென்று தெரியாமல் எதுவும் பேசுக்கூடாதே என்ற தவிப்பில் இருந்தார்.


அரங்கநாதனுக்கும் அதுவே சரியென்று பட்டது, “அன்பு உன்கிட்ட பேசனும் வா” என்றுதும்,


அன்புவிற்கும் பேச வேண்டி இருந்தமையால் ம் என தலையசைக்க “ நீங்க பேசிட்டு இருங்க நாங்க வந்துடுறோம்” என மற்றவர்களிடம் உரைத்துவிட்டு திருவரங்கநாதனுடனும் பிரபாவதியுடனும் அறைக்குள் நுழைந்தார் அன்பு.

….

அறைக்குள் ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது. அதை உடைத்து தானே பேச ஆரம்பித்தார் அரங்கநாதன்.

“அன்பு எனக்கு புரியல எப்படி இது சாத்தியம்” அரங்கநாதன்… குழப்பமாக அன்புச்செல்வத்தை பார்த்தார்.,

அன்புவிற்கு இதை எப்படி கையால்வது என்பது புரியவில்லை... உறவினன் என்ற முறையில் இல்லாவிடினும், தன் பெண்ணை நேசிக்கும் மாப்பிள்ளையின் அப்பா என்ற முறையில் , ஆதி முதல் அந்தம் வரை எல்லாவற்றையுமே சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்க, அமைதியான முகத்துடன் அவர்களை ஏறிட்டார்.

“பொண்ணுக்கு அம்மா இல்லன்னு சொன்னாங்க…” நித்யாவை பத்தி ஓரளவுக்கு எங்களுக்கு தெரியும் அண்ணா… ஆனா இந்த பொண்ணு… நீங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா…? பிரபாவதி தயக்கமாக கேட்க,

நித்யா மட்டும் தான் மா என் பொண்டாட்டி… அவ தான் என் பொண்ணுக்கும் அம்மா… என்றார் அன்பு சற்று அழுத்தமாக,

“புரியல… அப்புறம் இந்த பொண்ணு எப்படி …” அரங்கநாதன் சட்டென்று கேட்டு விட,

“சொல்றேன் திரு எல்லாமே சொல்றேன்… நீ தான் சம்பந்தம் பேச வருவேன்னு எனக்கு தெரியாது… இத்தனை நாள் நானே மறந்திருந்த விஷயத்தை இப்ப சொல்றேன்…

“என் மனைவி நித்தியாவுக்கு குழந்தை பெத்துக்க முடியாதுன்னு தெரிஞ்ச பிறகு எங்களால இங்க இருக்க முடியல… நம்ம சொந்த பந்தம் பத்தி தான் தெரியுமே... அவங்க பார்க்குற பார்வையில என் மனைவி கூனிகுறுகி போறது பிடிக்காம நாங்க கல்கத்தாவுக்கு போயிட்டோம்… அங்கே எங்களோட தொழிலை ஆரம்பிச்சேன்… நல்லபடியா போச்சு… எந்த குறையும் இல்லை… நல்லாவே இருந்தோம்… அப்பதான் எங்க வாழ்க்கையில ஆறு மாச குழந்தையா உபாசனா வந்தா…

எப்பவும் நாங்க பெருசா எந்த பண்டிகையோ விழாக்களையோ கொண்டடுறது இல்லை… அப்படியே செய்தாலும் ஏதாவது ஒரு இல்லத்துக்கோ இல்லை ஆசிரமத்துக்கோ போயிடுவோம் அப்படி எங்க கல்யாண நாளுக்கு நானும் நித்யாவும் ஒரு இல்லத்துக்கு போயிருந்தோம் அங்க தான் எங்க மகளை பார்த்தோம்… எங்களால எங்க பொண்ணை விட்டுட்டு வரமுடியல நித்தியாவுக்கும் ஏக்கமா இருக்க கடவுளா எங்களுக்கு கொடுத்த வரப்பிரசாதமா நாங்களே அந்த குழந்தைய வளர்க்க முடிவு பண்ணோம்… இப்ப வரையும் என் பொண்ணுக்கு விஷயம் தெரியாது… என் ஆஸ்தி அந்தஸ்த்து என் உயிர் எல்லாமே என் பொண்ணுக்கு தான் அவதான் என் உலகம்… அத்தனையையும் உணர்வுக்குவியலாக பேசியவரின் குரலில் நெகிழ்ச்சியும் வலியும் கலந்தே இருந்தது

இவை அனைத்திற்கும் ஒரு இஞ்ச் கூட அசையாது திடமாக நின்றிருந்த அரங்கநாதன் “இந்த கல்யாணம் நடக்காது அன்பு…” உணர்வுகளற்ற மரத்த குரலில் கூறியவர் இதனுடன் அனைத்தும் முடிந்தது என அங்கிருந்து புறப்பட தயாரானார்…

பிரபாவிற்கு அன்புவின் தவிப்பும் பாசமும் புரிய “ஏங்க ஒரு நிமிஷம் இருங்க…” அரங்கநாதனை நிறுத்த பார்த்தார்..

“பிரபா…” அரங்கநாதனின் கர்ஜனையில் சட்டென அவர் வாயை முடிக்கொள்ள,

“ஏன் ஏன்… இந்த கல்யாணம் நடக்காது..?” திருவிடம் பதற்றத்துடன் வினாவினார் அன்பு.

“அன்பு… நீ என்னதான் அருமை பெருமையா வளர்ந்திருந்தாலும் அது உன் பொண்ணு இல்ல அது உனக்கு புரியுதா இல்லையா?…” அரங்கநாதனின் கேள்வியில் வாயடைந்து நின்றார் அன்பு…

“திரு என் பொண்ணு மேல ஒரு குறை சொல்ல முடியாதுப்பா பத்திரை மாத்து தங்கம்… என் வளர்ப்பை நீ நம்பலையா திரு…” தவிப்பாக அரங்கநாதனை பார்த்தார் அன்பு.

“அன்பு இது நீ பெத்த பொண்ணு இல்லை…யாரோ எவரோ பெத்தது…
தெளிவாகவே சொல்றேன், இதுல மறைச்சி பேச ஒன்னும் இல்லை… ஒரு அனாதை ஆசிரமத்தில் பெத்தவங்க குழந்தை விடுறாங்கன்னா என்ன காரணமா இருக்கும் சொல்லு…” தவறான வார்த்தைகளை உபயோகிக்கும்‌ முன்னரே திரு என வேகமாக அதை தடுத்த அன்புச் செல்வம்,

“உபாசனவுக்கு அப்பா இந்த அன்புச்செல்வம் அம்மா நித்யா… இது தான் நிஜம் பத்து மாசம்
இன்னொருத்தர் வயித்துல இருந்ததுனால மட்டும் என் பொண்ணை தப்பா பேச எப்போதும் நான் அனுமதிக்க மாட்டேன் திரு… நித்யா எப்படி வளர்த்தா தெரியுமா இப்போ அம்மா இல்லாத குழந்தை திரு என் பொண்ணு… உன் மனைவி பிரபா என் பொண்ணுக்கு அம்மாவுக்கு அம்மாவா இருப்பாங்கன்னு நினைச்சேன்…”. கோவத்துடன் தொடங்கிய வார்த்தைகளை ஆதங்கத்துடன் ஆற்றமையுடனும் முடித்தார் அன்புச்செல்வம்.

“நீ வளர்த்துனால மட்டும் எல்லாம் மாறிடுமா அன்பு… பொறப்புன்னு ஒன்று இருக்கு… அதை மறந்துடாதே… அது யாராலையும் மாத்த முடியாது….” அரங்கநாதனின் நாக்கு தேள் கொடுக்காய் மாறி கொட்டியது.

“திரு…” அருங்கநாதனின் கையை பிடித்து தன் மகளின் காதலுக்காக தன் உயரத்தையும் மறந்து கெஞ்சப் போகவும் கதவை திறந்துக்கெண்டு உள்ளே நுழைந்தான் வெங்கி.

“தம்பி…” அன்பு சற்று பதற்றத்துடன் அழைக்கவும் “மாமா உங்க கையை கொடுங்க முதல்ல…” அன்புவின் கையை பற்றி குலுக்கிட,

“என்னடி பண்றான் இவன்….” அரங்கநாதன் பிரபாவிடம் பல்லை கடித்தவர் “டேய்…” என்றார் மகனை சற்று அதட்டலாக

“ஒரு நிமிஷம் இருங்கப்பா… மாமா எவ்வளவு பெரிய வேலையை அசால்டா பண்ணி இருக்காரு… இது மாதிரியெல்லாம் பண்றதுக்கு நல்ல மனசு வேணும்பா… நான் பாராட்டிட்டு வரேன்…” அரங்கநாதனை கிடப்பில் போட்டவன் “சூப்பர் மாமா…” என்றான் அன்புவிடம்,

“தம்பி நாங்க…” அன்பு ஆரம்பிக்கவும் புரிஞ்சிடுச்சி மாமா நீங்களும் அப்பாவும் நண்பர்கள்னு ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க உள்ள வந்து இவ்வளவு நேரமாகியும் வெளியே வரலியேன்னு நானே வந்துட்டேன்.. நீங்க பேசின எல்லாத்தையும் கேட்டுட்டேன் உபாசனாவோட கடந்தகாலமும் தெரிஞ்சிடுச்சி… நீங்க பயப்பட வேண்டாம் இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்”. அன்புவிடம், நம்பிக்கையான வார்த்தைகளை கூறியவனை முறைத்த அரங்கநாதன்,

“என்னடா என்ன சொல்ற… நேத்து வரைக்கும் கல்யணாம் வேண்டா அம்பானி ஆகப்போறேன் அதானி ஆகப்போறேன்னு சொல்லிட்டு இருந்த, இன்னைக்கு என்ன…? இந்த சம்மந்தம் நமக்கு சரிப்படாது வா கிளம்பளாம்… என்னடி வாயை பாத்துக்கிட்டே நிக்குற போய் உன் புள்ளைக்கு புத்திமதியை சொல்லி கூட்டிட்டு வா” பிராபாவை ஏவி விட,

“வெங்கி கொஞ்சம் இருடா பேசலாம் அப்பா பேசுறாரு” பிரபா பிள்ளைக்கும் பேச முடியாமல் கணவருக்கும் பேச முடியாமல் தவித்து நின்றார்.

“அதாம்மா நானும் சொல்றேன்… பேசலாம்… பாருங்க.. அப்பாவுக்கு எப்படி வேர்த்து போயிருக்குன்னு கொஞ்சம் உட்காருங்கப்பா பேன் ஓடிட்டு தானே இருக்கு… ஏசியும் ஓகே தான்…” எல்லாவற்றையும் சோதித்தவன்,

“இப்போ விஷயத்துக்கு வரேன்..
இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்றதுக்கு இதெல்லாம் ஒரு காரணமாப்பா… வேற ஏதாவது சொல்லுங்க நான் ஏத்துக்குறேன் இதை சத்தியமா என்னால ஏத்துக்க முடியாதுப்பா… என்றான் வெங்கி திடமாக,

“டேய் நான் உன் அப்பன் டா என்னையே எதிர்த்து பேசுறியா… என்ன இந்த பொண்ணை காதல் கீதல் பண்ணி தொலைச்சிட்டியா…” அவர் கோபத்துடன் கண்டமேனிக்கு கத்தவும்…

“நீங்க சொன்ன பிறகு இந்த பொண்ணையே லவ் பண்ணா தான் என்னன்னு தோணுதுப்பா…” சத்தமில்லாது அவர் தலையில் இடியை இறக்கவும், கோபத்தில் எழுந்தவர், “என்னடி உன் புள்ள என்னன்னமோ பேசுறான்…” என்றார் மனைவியிடம்,

“கொஞ்சம் பொறுமையா யோசிச்சி பாருங்கப்பா அந்த பொண்ணு மேல ஒரு தப்பை உங்களால சொல்ல முடியுமா…? அம்மா அப்பா செய்த தப்புக்கு ஒரு பாவமுமே அறியாத அந்த பொண்ணை தண்டிக்கிறது எந்த விதத்தில நியாயம்… அந்த மாதிரியான இடத்துக்கு அவளே போய் சேர்ந்தாளா.. அவளோட குற்றம் இதுல எந்த இடத்துல இருக்கு நீங்களே சொல்லுங்க…” என்றான் ஆதங்கத்துடன்…. இவ்வளவு நேரமும் இளகுவாக பேசிக்கொண்டிருந்தவனுக்கு அதற்குமேல் பொறுத்து போக முடியவில்லை…

அவனுடைய காதலி, அவனுடைய சுவாசமாய் இருப்பவள், இப்போது எல்லாமுமாக ஆகப்போகிறவள், அவளின் பிறப்பை பற்றி பேச பேச
உள்ளுக்குள் அத்தனை கோபம்… இருந்தும் தந்தையை சமாதானம் செய்ய வேண்டுமே மனம் உந்திட,

“விதை எங்கிருந்து விழுந்தா என்னப்பா செடி நல்ல இடத்தில் தானே வளர்ந்திருக்கு… அவர் வளர்த்ததுல என்ன குறையை கண்டிங்க…” என்றான் அவருக்கு புரியும்படி,

“என் வீட்டு துளசி மாடத்துக்கு துளசி செடியை தேடுறேன் ஆனா எங்கேயோ காட்டுல உருவானது என் வீட்டுல வைக்க பாக்குறியா…” என்றார் அரங்கநாதன் சற்று இளப்பமாகவே,

“வேர் எதுவா இருந்தா என்னப்பா அது துளசி செடின்னு கன்பார்ம் ஆகிடுச்சில்ல அதை தூக்கி மாடத்துல வைச்சி புஜை பண்ண வேண்டியதுதான்” அவரை போல வெங்கியும் பேசினான்.

“என்னடா என்னையே மடக்கப்பாக்குறியா…?”

“அப்படியெல்லாம் இல்லப்பா நான் எனக்கு எது சரின்னு படுதோ அதைத்தான் பேசுறேன்… பெரியாழ்வாரே ஆண்டளை துளசி மாடத்துக்கிட்ட தானே கண்டெடுத்து வளர்த்தர்… அவர் பெத்த பெண்ணாப்பா ஆண்டாள்… இல்லையே…

அப்படி ஆதியும் அந்தமும் யாருன்னு தெரியாத ஆண்டாளையே, நீங்க குடும்பிடுற பெருமாளே தேடி வந்து தன்னோட மனைவியா கட்டிக்கலையா… கடவுளே இந்த மாதிரி ஒரு விஷயத்தை ஏத்துக்கறப்போ நீங்க ஏம்பா இவ்வளவு வீம்பு புடிக்கிறிங்க” என்றான் ஆற்றமையுடன்.

“வெங்கடேசன்னு பெயரை வைச்சதுனால நீ அந்த பெருமாள் ஆகிடுவியா…?” என்றார் அரங்கநாதன் கோபமாக

“ஆனா அவ ஆண்டாள் தான்பா” என்றான் மனதார,

அரங்கநாதன் பேசமுடியாது வாயடைத்து நிற்க, “தம்பி…” என கண்களில் நீர் மல்க வெங்கியை அணைத்துக்கொண்டு கண்ணீரை வடித்தார் அன்புச் செல்வன்.

“என் பொண்ணு நிச்சயம் நல்லா இருப்பா தம்பி…” அவர் நெகிழ்ச்சியுடன் கூறிட, பிரபா இளைய மகனை ஆதூரத்துடன் நோக்கினார்..
அவருக்கும் கணவரின் கருத்தில் அவ்வளவாக உடன்பாடு இல்லை.

தரகரின் மூலம் உபாசனாவின் புகைபடத்தைப் பார்த்ததும் அன்றே அவள் கோவிலில் சந்தித்த பெண் என அறிந்துக் கொண்டவருக்கு, அவளை மிகவும் பிடித்திருந்தது. இந்த ஒற்றைக் காரணத்தை வைத்துக்கொண்டு அவளை வேண்டாம் என்பதா… மனது குழம்பி இருக்க இதோ மகன் இப்போது தெளிவடைய வைத்து விட்டானே பெருமையாக வெங்கியை பார்த்தார் பிரபாவதி.

அன்பு, “திரு….” என அரங்கநாதனை அழைக்கவும் “அவன் தான் சொல்லிட்டானே வாழப்போறது அவன் தானே ம்… நடக்கட்டும்…” நடக்கட்டும்…” வேண்டா வெருப்பாக அன்றைய பெண் பார்க்கும் படலம் நிகழ்ந்திட அன்றே ஒப்பு தாம்புலமும் மாற்றிக் கொள்ளப்பட்டது… அதற்கு அடுத்து வந்த இரண்டு மாதத்திறக்கு பிறகு ஒரு நல்ல நாளில் வெங்கி உபாசனா திருமண தேதியை நிச்சயித்திருந்தனர்.

வெங்கி மற்றவர்களிடம் கேட்டது ஒன்றே ஒன்று தான்… அவள் எப்போதும் அவளை பற்றிய உண்மையை அறியக்கூடாது என்பது மட்டும் தான்.. இருபத்தி இரண்டு வருடம் என் தாய் என் தந்தை என் குடும்பம் என்று மனதில் பதிந்த ஒன்றை, ஒரே நாளில் தனக்கானது இல்லை தெரிய வரும்போது அவள் நடைபிணம் ஆவது உறுதி என்பதை உணர்ந்தவனுக்கு விஷயத்தை அவளிடம் சொல்ல கூடாது என முடிவை எடுத்தான். இந்த முடிவு அவனுக்காக அவனது காதல் தேவதைக்காக எடுத்த முடிவு….

இந்த திருமணத்தை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளா விடினும் அந்த சிறு பெண்ணிடம் போய் உண்மையை உடைக்க மனமில்லாது அதற்கு உடன்பட்டார் அரங்கநாதன். பிரபா எப்போதும் இதை சொல்லப் போவதில்லை அன்பு அவர் மறந்து போன ஒரு விஷயம் ஆயிற்றே... அதனால் எந்த பிரச்சனையுமின்றி சென்றது நாட்கள்

….


“இந்த பூவை வைச்சிவிடு பாப்பா…”

தென்றலிடம் பூவை கொடுத்து இளைய மருமகளுக்கு வைத்து விடக் கூறினார் பிரபாவதி…

புது மஞ்சள் தாலி மார்பில் உறவாட புதுபெண்ணுக்கே உரித்தான நாணத்துடன் தலை குனிந்து
யார் என்ன பேசுகிறார்கள் என எதுவும் மனதில் பதியாது அன்றைய இரவிற்கான பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள் உபாசனா…

இன்று காலை தான் அவள் கழுத்தில் மங்கள நாணை பூட்டி தன்னுடைய சரிபாதி ஆக்கி இருந்தான் வெங்கி. கல்யாண மண்டபத்திலேயே அவன் அடித்த லூட்டிகள் ஏரளமாயிற்றே அங்கயே முகம் சிவந்தவளை மேலும் சிவக்க வைக்கவென இங்கும் அத்தை முறை அண்ணி முறையில் இருக்கும் பெண்கள் அவளை சீண்டிக் கொண்டிருந்தனர்.

“போதும் பொண்ணுங்களா… அவளை பயமுறுத்தி அறைக்கு போக விடாம ஆக்கிடுவிங்க போல இருக்கு…” அதட்டி மிரட்டி ஒருவழியாக பிரபா அவர்களை வெளியேற்றி விட

“ஆல் த பெஸ்ட் தங்கச்சி என் மைத்துனர் பத்திரம்…” என்றபடி ஏஞ்சல் அவள் கரங்களில் பால் சொம்பை கொடுத்து விட்டாள்.

“அக்கா நீங்களுமா…” சிணுங்கினாள் உபாசனா.

அதில் சிரித்த பிரபா “பயப்படாம போ பாப்பா… இவங்க எல்லாம் சும்மா விளையாட்டுக்கு பேசுறாங்க… என் பையன்னு சொல்லல… ஆனா அவன் ரொம்ப தங்கமானவன் என்ன வாய் பேச்சு தான் அதிகமாக இருக்கும்… உன்னை தங்கமா பாத்துக்குவான்…” அவளுக்கு தைரியம் சொல்லி வழியனுப்பி வைக்க, அவர் பாதங்களில் விழுந்து வணங்கியவள், ஒரு விதப்படபடப்புடன், அவன் அறையை நோக்கி முன்னேறி இருந்தாள்.

ஆசையும் நாணமும் போட்டி போட அவன் அறைக்குள் மெல்ல நுழைந்தவளை உள்வாங்கிக் கொண்டது அந்த ஏசி அறை…

‘இன்னைக்கு ரசகுல்லாவ அனுப்புவாங்களா மாட்டாங்களா…? ஆப்பிளை இந்த பக்கமும் அந்த பக்கமும் சுழற்றியபடி தன்னவளின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்த வெங்கி கதவு திறக்கும் சத்தத்தில் வாசலை பார்த்தான்…

மெல்லிய அலங்காரத்தில் அழகிய இளம் மஞ்சள் வர்ணத்தில் உபாசனா அணிருந்திருந்த சேலை அவளின் நிறத்தோடு ஒத்து போய்விட, கைகளில் வீற்றிருந்த பால் சொம்பை பார்த்தவன் சட்டென சிரித்து விட்டான்.

அதுவரையிலும் இரவை நினைத்து தயக்கத்துடன் நின்றிருந்தவள், “என்னாச்சுங்க ஏன் இப்படி சிரிக்கிறிங்க‌…” என்றபடி சாதரணமாக அவன் அருகில் வந்தாள்.

அவளுக்கு இருந்த தயக்கமும் நாணமும் மறைந்து விட இயல்பாக அவன் காதலியாக வெங்கியை நெருங்கி இருந்தாள்.

“நாம லவ் பண்றோம்… அது ஞாபகம் இருக்குங்களா ரசகுல்லா மேடம்…” அவள் கரங்களில் வீற்றிருந்த பால் சொம்பை அவளுக்கே தெரியாமல் வாங்கி வைத்தவன் வேண்டுமென்றே அவளை வம்பிழுத்தான்.

“ம்… இருக்கே…” புரியாமல் தலையாட்டியவளிடம் “அப்புறம் எதுக்கு என்னை புதுசா பாக்குறா மாதிரி இவ்வளவு பயத்தோட பாக்குற…? நான் என்ன இந்த ரசகுல்லாவை கடிச்சி முழுங்கவா உட்கார்ந்து இருக்கேன்…?” கேட்டபடியே அவளை தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டான்.

இவ்வளவு நேரமும் சாதரணமாக அவனோடு உரையாடியவள் சூழ்நிலை புரிந்து விட “அது வந்து…. நீங்க நான்… இது கொஞ்சம் பயமா இருக்கு….” என்றாள் வார்த்தைகள் தந்தியடிக்க,

“ஓ… நான்‌ மட்டும் என்ன இதுல‌ மாஸ்டர் டிகிரியா பண்ணிட்டு வந்தேன்… எனக்கும் புதுசு தாம்மா…” வழக்கமான அவன் குறும்பில் வெங்கியை முறைத்தவள்

“வாய் இந்த வாய் மட்டும் இல்லனா உங்களை எல்லாம் அந்த நாய் தூக்கிட்டு போயிடும்” என்றாள் அவனை தலையனையால் மொத்தியவாறே….

“பாத்து பாத்து படாத இடத்துல பட்டுட போது… இது மொத ராத்திரி மா எனக்கு கடைசி ரத்திரியா ஆக்கிடாத” கிண்டலடித்தவனை மேலும் மொத்தியவள், நினைவு வந்தவளாக, “ஆமா மாமா ஏன் எப்பவும் உர்ருன்னு இருக்காரு… அவருக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையா…?” வருத்தமான குரலில் கேட்க,

“ஏன் உன் மாமானாரு உன்கிட்ட‌ ஏதாவது சொன்னாரா …?” வெங்கி அவசரமாக கேட்டதும்,

“இல்லையே இன்னைக்கு அவர் பார்த்த பார்வையில் தெரிஞ்சது… அவருக்கு ஒருவேளை நம்ம லவ் பண்றோம்னு தெரிஞ்சிடுச்சா என்ன?” என்றாள் கிலியுடன்,

அவனுக்கு பாய்ண்ட் கிடைத்த சந்தோஷத்தில் அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டவன் “ஆமா, அவருக்கு தெரிஞ்சிடுச்சி… நீ என்ன பண்ற அவருகிட்ட எதுவும் கேட்காத…. அவரா எப்போ சமாதானம் ஆகுறாரோ ஆகட்டும் சரியா..”

“ஆனாலும்…” உபாசனா ஏதோ சொல்ல வர “அடியே ரசகுல்லா இன்னைக்கு என்ன நாளு இன்னைக்கு பேசுற பேச்சா இது…”. சட்டென அவள் வளைக்கரங்களை பற்றி இதழ்பதித்தான் வெங்கி. அதன் ஈரத்தில் உடல் சிலிர்த்து மெல்லிய அதிர்வலை உருவாகிட பெண்ணவளின் அங்கங்களில் ஏதேதோ மாற்றத்தை உணர்ந்தவள் அவன் மார்பில் சாய்ந்து மெல்ல விழிகளை மூடிக்கொண்டாள்.

அவள் முக வடிவை தன் கைகளுக்குள் தாங்கிக் கொண்டவன் பட்டும் படாமலும் அவள் விழிகளில் முத்தமிட்டு மெல்ல முன்னேறி அவள் இதழில் தஞ்சம் அடைந்தான்.

உணர்வுகளின் தள்ளாட்டத்தில் அதற்கு மேல் தாள முடியாது தன்னவனை இறுக அணைத்து காற்றும் புக‌ முடியா அளவுக்கு அவனுள் ஒன்றினாள் பாவை.

அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளது வாசத்தில் கிறங்கி போனவன், தன்னை அவளுக்கு உணர வைக்கும் புது முயற்சியில் இறங்கி, முழுமையாக அவளுக்கு‌ தன்னை உணர வைத்து தானும் அவளை உணர்ந்திருந்தான்.

கைவளையின் ஓசைகளும் கால்கொலுசின் சிணுங்கள்களும் அவர்களின் சங்கமத்திற்கு‌ சாட்சியாக இரவின் தனிமையில் நிலவின் துணையோடு அழகிய இல்லறம் தொடங்கியிருந்தனர் அந்த காதல் தம்பதிகள்.

……

ஆறு வருடங்களுக்கு பிறகு

“அத்த மாமா என்ன பண்றாரு…?”.

சமையலில் மும்முரமாக இருந்த மாமியாரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் உபாசனா…

“அவரு என்ன பண்ணுவாரு நீ வர்ற வரைக்கும் உன் புருஷன் கிட்ட கத்திட்டு இருந்தாரு… இப்போ நீங்க பெத்ததுங்கிட்ட கத்திட்டு கிடப்பாரு… நீங்க பெத்ததும் அவனை போல அவரை படுத்துதுங்க” என்றார் சிரித்தவாறே…

அவளும் சிரித்துவிட, “ஆனா ஒன்னு பாப்பா அவன் மட்டும் இல்லன்னா வீடு வீடாவே இருக்காது.. எதையோ மிஸ் பண்ணா மாதிரி இருக்கும்… உனக்கு‌ ஒரே பிரசவத்துல முனு பிள்ளைகன்னு கேள்வி பட்டதுல இருந்து அந்த மனுஷன் கோயிலே கதின்னு கிடந்தாரு… நீ நல்லபடியா பிள்ளை பெத்து வந்ததுக்கு அப்புறம் தன் அவரு அவராவே இருக்காரு… என்ன திட்டினாலும் அவன் மேல தனி பாசம் தான் அவருக்கு…”

அனைத்தையும் சிரித்தபடியே உள்வாங்கி கொண்டிருந்தவள், “இதை எடுத்துட்டு போய் கடையில் இருக்க அக்காகிட்ட கொடுத்துட்டு வந்துடுறேன் அத்த…”

“நீ இரு… இந்த மணி பைய வருவான் அவன் கிட்ட கொடுத்து விடலாம்…” என்றவர் பிள்ளைகளுக்கு உணவை ஊட்ட சென்றார்.

ஏஞ்சலுக்கும் ஹரிக்கும் ஆறு வயதில் ஒரு பெண் பிள்ளையும் மூன்று வயதில் ஒரு ஆண் பிளளையும் இருக்க வெங்கியின் சேட்டைகளை போலவே அவனுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்து தற்போது அவர்களுக்கு வயது ஐந்து…. அடுத்தது ஒரு பெண்ணிற்கு அடி போட்டவனை அவன் வாயில் ஒன்று போட்டு வெங்கியை அடக்கி வைத்திருந்தாள் உபாசனா.

பேரப்பிள்ளைகளையும் மகளையும் பார்க்கவென அன்பு வாரத்திற்கு இரண்டு மூன்று முறை வந்துவிடுவார் அவருக்கு ஏஞ்சலும் ஒரு மகளாகி போனதில் அவளது பிள்ளைகளுக்கும் தாத்தாவாகி போனார்.

அப்பாவிற்கு தப்பாது பிறந்தவர்கள் அரங்கநாதனுக்கு பிபி ஏற்றி விடும் வேலையை செவ்வனே செய்யும் இளைய தலைமுறையினர். அவனது பிள்ளைகள்.


குழந்தைகள் உருவானதும் அதுவும் மூன்று என அறிந்த பின்னர் அரங்கநாதன் தன் பிடிவாதத்தை எல்லாம் மறந்து மருமகளிடம் உறவு பாரட்டி விட வெங்கியிடம்‌ மட்டும் எப்பேதும் போல இருந்தார்.

பெரிய மருமகள் ஏஞ்சல் மாமானாரின் பாத்திரக் கடையை பார்த்துக்கொள்ள மாலை வேளையில் காஃபி ஷாப் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருத்தாள் உபாசனா.

அருணுக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் பிள்ளையும் விவேக்கிற்கும் உபைதாவுடன் திருமணமாகி ஒரு பிள்ளையும் இருந்தது… அவர்களின குடும்பமும் அவர்களின் காதலை ஏற்றுக்கொண்டு இப்போது ஒரே குடும்பமாக வாழ்கின்றனர்.

“இந்தா பாப்பா நீயும் சாப்பிட்டுடு
அவளுக்கும் தட்டில் சாதத்தை போட்டு விட, நீங்களும் உட்காருங்க அத்தை” என்றவள் அவருக்கும் சாதத்தை பரிமாறினாள்.

“மாமா எவ்வளோ மாறி போயிருக்கார்… கல்யாணம் ஆன புதுசுல கொஞ்சம் பயமா தான் இருந்தது… அதுவும் மாமா எப்பவும்‌ முறைச்சிட்டே இருப்பாரா இப்போ எங்க காதலை ஏத்துக்கிட்ட நினைச்சா என்னால நம்பவே முடியல அத்த” என்றாள் பேச்சு வாக்கில்,

சாப்பிட்டு கொண்டிருந்தவருக்கு புரையேறி விட “என்னது காதலிச்சிங்களா…?” மருமகளை அதிர்ச்சியாக பார்க்க,

“ஆமா அத்தை” என்றவள் நடந்ததை சுருக்கமாக சொல்லவும் வெங்கி வரவும் சரியாய் இருந்தது.

அவனை முறைத்தவர், சுற்றியும் முற்றியும் எதையோ தேடினார்.

“என்ன தாய்குலம் எல்லாம் ஒன்னா உட்கார்ந்திருக்கா போல இருக்கு… என்ன விசேஷம்” என்றவாறு டைனிங் டேபிளில் அமர “இதோ வந்துடுறேன்” என்றவாறு எழுந்த பிரபாவை , பார்த்தவன் மனைவியை என்னவென்று கேட்டான்

“அது ஒன்னுமில்லங்க நாம லவ் பண்ணதை பத்தி சொல்லிட்டு இருந்தேன்…”. என்றதும் தான் தாமதம்,

சட்டென திரும்பி தொடப்பக்கட்டையுடன் வரும் பிரபாவை பார்த்தவன் ஜர்க்காகி டைனிங் டேபுளை சுற்றி ஓட அவனை துரத்தினார் பிரபா.

ஏனென்று புரியாமல் பார்த்த உபாசனாவிடம் ஓடிக்கொண்டே அவர் துரத்துவதற்கான காரணத்தை சொல்வும் விழுந்து விழுந்து சிரித்தாள் உபாசனா.

இப்படியே அடி
யும் ஆயுதமாக வெங்கியும் உபாசனாவும் இந்த குடும்பத்தில் சந்தோஷமாக வாழ நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்…..

நன்றி வணக்கம்.Thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/10672/
 
Last edited:
Status
Not open for further replies.
Top