எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன் மிட்டாய் காதலி- டீசர்

NNK-53

New member
ஹாய் பிரண்ட்ஸ் நான் NNK 53,

எனது கதையோட தலைப்பு தேனிமிட்டாய் காதலி.

என்ன டா புதுசா இருக்கு ஒருவேளை கதாநாயகி தேன்மிட்டாய் அதிகமா திங்குமோ னு நினைக்காதீங்க.

இன்னைக்கு snacks ன அது biscuit உ, Dark chocolateஉ, பீசா, பர்கரு, laysனு ஒரு லிஸ்ட், அனுமார் வால் மாதிரி நீளும். ஆனா 90s kids ஆன எங்களுடைய காலத்தில் பெரும்பாலும் நாங்க பிரியப்பட்டு வாங்குற சுலபத்தில் கிடைக்கிற snacksன அது தேன்மிட்டாய் தான்ங்க. இது போக ஆசை மிட்டாய் புளிப்பு மிட்டாய், இலந்தை அடைனு நிறையவே இருக்கு. ஆனா அதை எல்லாம் தலைப்பா வச்சா ஒரே சங்கடமா இருக்காது. அதான் அழகா, sweet அ, “தேன் மிட்டாய் காதலி” னு தலைப்பை வச்சிட்டேன். எப்படி தலைப்பு நல்லாயிருக்கா?

“ஓஹ் அப்ப கதை 90s காலக்கட்டத்தில் நடக்கிற மாதிரியா?” என்று தானே கேட்கிறீங்க. ஆமா அதே தாங்க. “ஏன் 90s?” அடுத்த கேள்வி அது தானே.
இருங்க அதுக்கும் நான் பதில் சொல்றேன்.

சமீபத்திய பொற்காலம் ன அது 90s தான்ங்க. No smartphone, No Internet, No tension, No depression, முக்கியமாக No mega serial (note the point)

காலையில விளையாட போனோம் ன மாலை தான் வீடு திரும்புவோம் அதுவும் அம்மா விளக்கமாறோட வந்து முறையா அழைச்சா தான்.

ஊரெல்லாம் ஓட்டு வீடு.. அதுல ஒட்ட போடுறது யாரு நாங்க தாங்க.. (It's me)

கிரிகெட் விளையாட எங்களுக்கு bat உம் Ball உம் தேவையே இல்ல, school exam pad உம் டம்ளருமே போதும். சும்மா high pitch ல அடிச்சி தெருவுக்கு தெரு சண்டை இழுத்துவிட்டு அத வேடிக்கை பார்க்கிற கூட்டம்ங்க நாங்க.

நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது.

எங்களுடைய பொற்காலத்தில் நடக்குற ஒரு காதல் கதையை தான் உங்களுக்காக நான் தூக்கிட்டு வந்திருக்கிறேன்.

நாயகன்: திவாகர், ஊருக்குள் ஒன்னு அடங்கமா திரியுமே அந்த வகையற.

நாயகி: சுதா ராணி. அநியாயம் எங்க நடந்தாலும் அடிச்சி கேட்கிற ஆளுங்க.

மொதலில் சந்தித்து காதலில் உருகும் காதல் தான் என்றாலும் கதைக்குள் ஒரு பெரிய twist இருக்கு. நிச்சயமா உங்க மனசை ஒரு நிமிடம் உறைய வைக்கும் அத மட்டும் நான் உறுதியா சொல்றேன்.


அப்ப என்னங்க January 1 ல இருந்து கதையை ஆரம்பிக்கலாம்ங்களா?
 
Top