எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாவை கைப்பாவையோ? - டீசர் திரி

Status
Not open for further replies.

NNK18

Moderator

டீசர் 1
தன் கேள்விக்கு பதில் இல்லாமல் போக, எரிச்சலடைந்த கீர்த்தி, ஆரபியின் அலைபேசியை பறிக்க, அப்போது தான் நிகழ்விற்கு வந்ததை போல, “கீரும்மா இன்னுமா நீ கடைக்கு கிளம்பல?” என்று ஆரபி வினவினாள்.

அவளை மேலும் முறைத்த கீர்த்தியோ, “நான் கடைக்கு போயிட்டே வந்துட்டேன் எருமை. சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம, அப்படி எதுல தான் மூழ்கி இருப்பியோ?” என்றாள்.



“ஹ்ம்ம், புகழ்ங்கிற போதையில தான் மூழ்கிட்டேன் கீர்த்து.” என்று ஆரபி கண்ணடிக்க, “க்கும், ஒரு ஓட்டை கதையை எழுதிட்டு, அதுக்கு நாலு பேரு ‘நைஸ்’னு கமெண்ட் பண்ணதுல, உனக்கு புகழ் வந்துடுச்சாமா?” என்று தோழியை கேலி செய்தபடி அவளருகே அமர்ந்தாள் கீர்த்தி.


“ஷு, பொறாமை டி உனக்கு! பாரு, நீயும் தான் ஆஃபிஸ்ல ஓடா தேயுற அளவுக்கு வேலை பார்க்குற. என்னைக்காவது உன் மேனேஜர் பாராட்டியிருக்காரா? இங்க பாரு, ஒரே கதை... அதை இன்னும் முடிக்க கூட இல்ல, அதுக்குள்ள எத்தனை கமெண்ட்ஸ்? இந்த ஸ்பீட்ல போனா, இன்னும் அஞ்சு வருஷத்துல என்னை நீ ‘புக் சைனிங் செரிமனி’ல தான் பார்ப்ப கீர்த்து.” என்று தூங்கி எழுந்து கழுவப்படாத எண்ணெய் படிந்த முகம் மினுமினுக்க கூறினாள் ஆரபி.



“எதே, ‘புக் சைனிங் செரிமனி’யா? கொஞ்சமாச்சும் ரியாலிட்டிக்கு வாடி. அதுவும் இந்த காப்பி கதைக்கு எல்லாம் அவ்ளோ சீன் இல்ல.” என்று கீர்த்தி கூறியதும் பொங்கி விட்டாள் ஆரபி.


“காப்பி கதையா? எவ்ளோ தைரியம் இருந்தா காப்பி கதைன்னு சொல்லுவ? உனக்கு தெரியுமா, மொத்தமே ஏழு ஸ்டோரி லைன் தான் இருக்கு! அதை தான் மாத்தி மாத்தி எழுதணும்.” என்று மூக்கு விடைக்க பேசிய ஆரபியோ, “வந்துட்டா காப்பி கதை பால் கதைன்னு!” என்று முணுமுணுக்க, அவளை பார்த்து சிரித்த கீர்த்தியோ, “ஸ்டோரி லைன் காப்பின்னா பரவால, இங்க ஸ்டோரியே காப்பியா இருந்தா என்ன பண்றது?” என்று மேலும் சீண்டினாள்.


“அப்படி என்ன பெருசா காப்பி அடிச்சுட்டேன்?” என்று ஆரபி வினவ, “பணக்கார ஹீரோ, பாவப்பட்ட ஹீரோயின், சித்தி கொடுமை, தங்கச்சி பொறாமை – இதெல்லாம் சிண்டரெல்லா கதைல வரது தான? இதையே எத்தனை வருஷமா படிக்க?” என்றாள் கீர்த்தி.


“நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்க தெரியுமா? என்னை மட்டுமில்ல ஓர் ஜெனரையே குறை சொல்ற!” என்று ஆரபி உதட்டை பிதுக்க, “சரி, உன் கதைல நீ என்ன புதுசா பண்ணியிருக்க சொல்லு பார்ப்போம்.” என்றாள் கீர்த்தி.




“என்ன இப்படி கேட்டுட்ட? என் கதையில வர வில்லி கேரக்டரை எப்படி செதுக்கி இருக்கேன் பார்த்தியா? யாரா இருந்தாலும் அவளைப் பத்தி படிக்கிறப்போ ஆட்டோமேட்டிக்கா வெறுப்பு வந்துடும். நீ வேணும்னா கமெண்ட்ல பாரேன், முக்கால்வாசி பேரு அவளை திட்டியிருப்பாங்க. இதுவே, அந்த கேரக்டருக்கு கிடைச்ச மிகப்பெரிய வெற்றி தான?” என்று பெருமையாக பேசினாள் ஆரபி.


டீசருக்கான உங்க கருத்துக்களை கீழ இருக்க கருத்து திரியில் பகிருங்க.


 

NNK18

Moderator
டீசர் 2

யாராவது தன்னை பார்த்து விட்டார்களா என்று திரும்பி பார்த்தபடி மின்தூக்கி பக்கம் அவள் திரும்ப, அங்கு அவளை மேலிருந்து கீழ் ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி நின்றிருந்தான் ஆர்யன் மகாதேவ்!


‘ஹையோ! பேய் கிட்டயிருந்து தப்பிச்சு, பூதத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேன் போலயே!’ என்று ஆரபி திகைக்க, வெகு நேரமாக அவள் தயங்கி நிற்பதை கண் சுருங்க பார்த்தவன், கேலிப் புன்னகையுடன், “நீ இப்படி என்னை வச்ச கண்ணு எடுக்காம பார்க்குறதை பார்த்தா, எனக்கு கிடைச்ச தகவல் உண்மை தான் போலவே!” என்று அவளைப் போலவே கூறினான்.


“உண்மையா? என்ன உண்மை?” என்று ஆரபி பதற, மின்தூக்கியின் கதவுகள் மூடாதவாறு இருகைகளையும் வைத்து தடுத்தபடி உள்ளிருந்தபடியே தலையை மட்டும் அவள் புறம் நீட்டி நெருங்கி, “நீ என்னை பார்த்ததும் மயங்கிட்டியாமே!” என்றான்.


அவன் அவளருகே வந்தபோது விட மறந்த மூச்சை, அவன் சொன்னதைக் கேட்டதும் தான் விட்டால், அது அவன் முகத்தை தாக்க, இருவரிடையே சொல்லப்படாத ஏதோ பரிமாறப்பட்ட உணர்வு இருவருக்குமே தோன்றினாலும், அதை பெரிதாக எடுக்கவில்லை இருவருமே.


ஆனால், இக்காட்சியை பார்த்த ஒரு ஜோடி கண்களோ கலங்கிப் போயின!


“ஹலோ, நீங்க என்ன பெரிய மன்மத…” என்று ஆரம்பித்த ஆரபி, அவன் முறைப்பை கண்டதும், “க்கும், அழகுன்னு நினைப்போ? உங்களை விட அழகானவங்களை எல்லாம் நான் பார்த்திருக்கேன்.” என்று சொல்ல வேண்டுமென்று ஏதோ சொல்லி வைக்க, “ஓஹ், நான் அழகா இல்லன்னா, என்னை கல்யாணம் பண்ணனும்னு எதுக்கு துடிக்கிற?” என்று வினவினான் ஆர்யன்.


‘ஆஹா, நம்ம பாயிண்டுக்கு வரான் பையன். எப்படியாவது இந்த லிஃப்ட் டிராவலுக்குள்ள அவனே கல்யாணத்தை நிறுத்துற மாதிரி பண்ணிடனும்.’ என்று எண்ணியபடி, அவனை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவள், “அதே தான் நானும் சொல்றேன். எதுக்கு இந்த கல்யாணம்? சோ,நீங்களே நிறுத்திடுங்க.” என்றாள் ஆரபி.


அவள் அப்படி கூறுவாள் என்று எதிர்பார்க்காத ஆர்யனோ, ஒருநொடி குழம்பி தான் போனான்.


‘நோ, இவ வேற எதுக்கோ பிளான் பண்றா?’ என்று அவன் மூளை எடுத்துரைக்க, “ஓஹ், நான் கல்யாணத்தை நிறுத்தினா, அதை காரணமா வச்சு எங்க கம்பெனி பார்ட்னர்ஷிப்பை உடைக்கலாம்னு புது பிளானா? ஆனா, இப்படி செய்யுறதுக்கு எதுக்கு அதை சாக்கா வச்சு கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிக்கணும்?” என்றான் ஆர்யன்.


“நோ நோ, ஐ ப்ராமிஸ், நம்ம கல்யாணம் நின்னாலும், பிசினஸ்ல எந்த பாதிப்பும் வராது.” என்று ஆரபி உடனடியாக சத்தியம் செய்ய, மீண்டும் அவளருகே வந்து அவள் கண்களை உற்று நோக்கிய ஆர்யனோ, “ஹுஹும், எனக்கு நம்பிக்கை இல்ல. நானெல்லாம் கல்யாணத்தை நிறுத்த மாட்டேன்.” என்றான்.


‘அச்சோ, இவன் ஈஸியா ஒத்துப்பான்னு பார்த்தா, இப்படி பின்வாங்குறானே!’ என்று நொந்த ஆரபியோ, தன்னருகே நின்றவனை நிமிர்ந்து பார்க்க, அவன் பார்வை இப்போதும் அவளை துளையிடுவது போல தான் இருந்தது.


‘என்ன பார்வை டா இது!’ என்று மலைத்த ஆரபியோ, தன் மனம் செல்லும் வழியை உணர்ந்து தலையை குலுக்கிக் கொண்டு, “ப்ச், நான் உங்களுக்கு செட்டாக மாட்டேன்.” என்று கூறினாள் மனமே இல்லாமல்!


அதுவரை அவள் வெளிப்படுத்திய உணர்வுகளையும் பாவங்களையும் இன்ச் இன்ச்சாக அளந்து கொண்டிருந்தவனோ, அவளை அவனருகே இழுத்து, “அப்படியா சொல்ற? வா செக் பண்ணி பார்த்துடுவோம்.” என்று அவர்களின் பிம்பங்களை பிரதிபலித்துக் கொண்டிருந்தது ஆளுயர கண்ணாடியை நோக்கி திருப்பினான்.


ஆறடி உயரமும், அதற்கேற்ற உடல்வாகுடன் அவனும், அவனுள்ளே பொதிந்து விடுபவள் போல குட்டியாக அவளும் இருக்க, “நீங்களே பாருங்க, நம்ம மேட்ச்சே இல்ல.” என்று காரணம் கண்டுபிடித்த உற்சாகம் இருந்தாலும், கொஞ்சம் சுருதி குறைந்தே இருந்தது ஆரபியின் குரலில்.


அவனோ அவன் உயரத்தை குறுக்கிக் கொண்டு, அவள் தோள்வளைவில் அவன் முகம் இருக்குமாறு குனிந்து, “இப்போ ஓகேவா?” என்று கேட்க, அதே சமயம் அந்த மின்தூக்கியின் கதவு திறந்தது.



டீசருக்கான உங்க கருத்துகளை கீழ இருக்க கருத்து திரியில் பகிருங்க.

 

NNK18

Moderator
டீசர் 3


திருத்தப்பட்ட புருவம், அடர்ந்த இமைகளை கொண்ட நயனங்கள், சிறிய மூக்கு, கவர்ச்சியான இதழ்கள், மினுமினுக்கும் கன்னம் என்று கட்டிலில் ஆழ்ந்த சயனத்தில் இருந்த பைரவியின் முகவடிவை அளந்து கொண்டிருந்தாள் வைஷ்ணவி.


அப்போது சட்டென்று கண்விழித்த பைரவியோ எதிரிலிருந்த வைஷ்ணவியை பார்த்து, “இடியட், எத்தனை முறை சொல்லியிருக்கேன், காலைல உன் மூஞ்சியை எனக்கு காட்டக்கூடாதுன்னு? உன் மூஞ்சியை பார்த்தா, நான் போற வேலை முடியுமா? போச்சு, இன்னைக்கு முக்கியமான கான்டிராக்ட் வேற சைன் பண்ணனும். உன் மூஞ்சில வேற முழிச்சுருக்கேன், இனி அந்த காரியம் உருப்பட்ட மாதிரி தான்.” என்று கோபத்தில் பொரிந்து கொண்டிருந்தாள்.


அதைக் கேட்ட வைஷ்ணவியோ உணர்ச்சி துடைத்த முகத்துடன், “சாரி அக்கா...” என்று முடிக்க கூட இல்லை, “யாருக்கு யாரு அக்கா? நீயே ஒரு லோ கிளாஸ்! உனக்கு நான் அக்காவா?” என்று பைரவி கத்திக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தார், பைரவியின் அன்னை லாவண்யா.


“பேபிம்மா, மார்னிங்கே எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க? இப்படி டென்ஷனானா, உன் ‘பியூட்டி ஸ்லீப்’ எல்லாம் வேஸ்ட்டாகிடுமே ஸ்வீட்டி!” என்று லாவண்யா கூற, “ஹெல் வித் இட் மாம். இவளை யாரு என் ரூமுக்கு வர சொன்னது?” என்று பைரவி கத்த, அப்போது தான் அவரின் வளர்ப்பு ‘மகளான’ வைஷ்ணவியை பார்த்தார் லாவண்யா.


“ஹே, நீ பேபி ரூம்ல என்ன பண்ற?” என்று லாவண்யா கேட்க, “க்ரீன் டீ குடுக்க வந்தேன் சித்தி.” என்றாள் வைஷ்ணவி அமைதியாக.


முகத்தை சுழித்தபடி அவளை பார்த்த லாவண்யாவோ பைரவியிடம் திரும்பி, “ப்ச் பேபிம்மா, அதுக்கு எதுக்கு இப்படி கோபப்படுற? அவ உனக்கு வேலை தான செய்யுறா?” என்று வைஷ்ணவியை ‘வேலைக்காரி’யாக்கி விட, மனதிற்குள் மரித்தாலும் வெளியே எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தவில்லை வைஷ்ணவி.


*****


“யூ பாஸ்***, எவ்ளோ தைரியம் இருந்தா என்னை வேண்டாம்னு சொல்லிட்டு அந்த வேலைக்காரியை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லுவ? அண்ட் யூ பி**, எனக்கு அப்போவே தெரியும், என்னோடதை நீ பறிச்சுட்டு போயிடுவன்னு… நோ நோ, இந்த பைரவி எதுலயும் தோற்கக்கூடாது. என்னை இந்தளவு படுத்துன உங்க ரெண்டு பேரையும் சும்மா விடமாட்டேன்.” என்று கத்திய பைரவி, அருகே இருந்த கண்ணாடி போத்தல்களை உடைக்க, அது அவளின் கையை கீறி குருதியை வழியச் செய்தது.



பெருகி வழியும் இரத்தத்தை கண்டு கொள்ளாமல், எதிரே இருந்த இருவரை நோக்கி பைரவி சென்றாள்.



டீசருக்கான உங்க கருத்துகளை கீழ இருக்க கருத்து திரியில் பகிருங்க.
 

NNK18

Moderator
டீசர் 4

தோழியின் எதிர்காலத்தை எண்ணி கவலை கொண்டவளாக, “என்னதான் டி உன் பிளான்? வேலைக்கும் போக மாட்டிங்குற, கல்யாணமும் பண்ண மாட்டிங்குற! என்னதான் உன் எதிர்கால திட்டம்?” என்று கேட்டாள் கீர்த்தி.


“ம்ம்ம், வேலை, கல்யாணம் – இதெல்லாம் எல்லாரும் பண்றது தான? அதுல என்ன புதுசா எக்ஸைட்மெண்ட் இருக்கு? எனக்கு அட்வென்ட்சரஸான வாழ்க்கை வாழனும். பேரு, புகழ் கிடைக்கணும்.” என்று ஆசையில் கண்கள் விரிய கூறிய ஆரபியை, ‘இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ!’ என்னும் வகையில் பார்த்தாள் கீர்த்தி.

*****

மனதிற்குள் பலவற்றை ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவள் பின்னே, “எக்ஸ்யூஸ் மீ.” என்ற கணீர் குரல் கேட்டது.


அந்த குரலே அவளை சுழலுக்குள் தள்ளி விட போதுமானதாக இருக்க, எதிரிலிருந்தவனின் பிம்பமோ ‘பச்சக்கென்று’ மனதிற்குள் ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு இருந்தால், அவளும் என்னதான் செய்வாள்?


சாதாரண பெண்ணால், ஆசைக்கு எத்தனை தூரம் அணைக்கட்ட முடியும்?



*****

“ஹ்ம்ம், நீங்க இப்படி என்னை வச்ச கண்ணு எடுக்காம பார்க்குறதை பார்த்தா, எனக்கு கிடைச்ச தகவல் தான் தப்பு போலவே!” என்று அவள் அவன் எண்ணம் அறியாமல் பேச, இப்போது தன் கைகளை கட்டியபடி, அவளை நேராக பார்க்க ஆரம்பித்து விட்டான்.


அவளை தலையிலிருந்து கால்வரை அவன் பார்க்க, அத்தனை நேரமிருந்த விளையாட்டு காணாமல் போய், ‘ஹையோ, தேவையில்லாம பேசி மாட்டிக்கிட்டோமோ? இவன் எதுக்கு இப்படி பார்க்குறான்? நார்மலா, பொண்ணுங்களை எல்லாம் இப்படி பார்க்க மாட்டானே!’ என்று பதறினாள்.




“கரெக்ட்!” என்று அவன் சொல்ல, திடீரென்று அவன் கூறியதைக் கேட்டவள் திடுக்கிட்டு, என்ன என்பது போல அவனைப் பார்க்க, அவனோ அவளை மூச்சு படும் தூரத்தில் நெருங்கி, மீண்டும் முகவடிவை பார்வையால் அளந்து விட்டு, “பொண்ணுங்களை இப்படி பார்க்க மாட்டேன் தான். ஆனா, நீதான் பொண்ணே இல்லையே!” என்று அவள் காதில் கூறிவிட்டு விலகினான்.

*****

சொடக்கிட்டு அவளை அழைத்த ஆர்யன், “நீ பண்றதுக்கு பேரு காதல்னு சொல்லிட்டு திரியாத. அது அழகான உணர்வு. அழுக்கா இருக்க உன் மனசுல எல்லாம் அந்த உணர்வு ஏற்படவே செய்யாது.” என்று கூறிவிட்டு சென்று விட்டான்.

*****
"ச்சீ, பொண்ணாடி நீ? என்னை நல்லா யூஸ் பண்ணிட்டு, என்னை விட பணக்காரனை பார்த்ததும் என்னை தூக்கி போட்டுட்டேல!” என்று மேலும் கத்தினான் விஷ்வக்.


“ச்சு, என்னமோ ஓருடல் ஈருயிரா காதலிச்சவன் மாதிரி பினாத்திட்டு இருக்காத.” என்று சலிப்புடன் தலையை வருடியவள், “உனக்கு எவ்ளோ வேணுமோ என் பி.ஏ கிட்ட வாங்கிட்டு போ.” என்று அத்துடன் அவனுடனான பேச்சுவார்த்தை முடிந்தது போல அங்கிருந்து செல்ல, அவன் அவளை திட்டுவதை நிறுத்திய பாடில்லை.


*****

ஆர்யனும், “வசந்த், பைரவியை பத்தின பேக்ரவுண்ட் செக் யாரு பண்ணா?” என்று வினவ, வசந்த்தும் குழப்பமான முகபாவத்துடன், “எப்பவும் நமக்கு பண்ற பிரைவேட் டிடெக்டிவ் தான். ஏன் டா?” என்றான்.



“ம்ம்ம், அவங்களை நம்புறதா வேண்டாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.” என்று ஆர்யன் கூற, “டேய் என்னடா சொல்ற? கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா நமக்கு வேலை பார்த்துட்டு இருக்காங்க. இதுவரை, ஒருமுறை கூட அவங்க குடுத்த தகவல் தவறுனதே இல்ல.” என்று வசந்த் அவர்களுக்கு வக்காலத்து வாங்கினான்.


“இந்த முறை தவறி இருக்கோன்னு தான் சொல்றேன்.” என்ற ஆர்யனை பார்த்த வசந்த் வாகனத்தை ஓரமாக நிறுத்தி, “நீ சரியில்ல. இதுக்கு தான் அவளை பார்க்க போகாதன்னு சொன்னேன்.” என்றான்.

*****

“கீர்த்து, உனக்கு ஒண்ணு தெரியுமா? உன்னை வச்சு தான் என் ஹீரோயினை நான் டிசைன் பண்ணியிருக்கேன். கவலைப்படாத, உனக்கும் ஹீரோக்கும் இடையில வர வில்லியை கொன்னு, உன்னை ஹீரோவோட சேர்த்து வச்சுடுவேன்.” என்ற ஆரபியை சரியாக படுக்க வைத்த கீர்த்தியோ, “எனக்கு வில்லின்னா அது நீதான் டி. எப்படி என்னை படுத்துற பாரு!” என்று கூறிவிட்டு அவளறைக்கு சென்று விட்டாள்.



டீசருக்கான உங்க கருத்துகளை கீழ இருக்க கருத்து திரியில் பகிருங்க.
 
Status
Not open for further replies.
Top