எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிறையாடும் மடக்கிளியே - டீசர்

Status
Not open for further replies.

Nnk08

Moderator

சிறையாடும் மடக்கிளியே!

டீசர் 1

1703942039040.jpeg

“சார்! நான் கிளம்பலாமா?” என்றாள் கடுப்பாக.

“வெயிட் மிஸ் நிஹாரிகா! நான் பார்த்துட்டு இருக்கேனே” என்றான் அவளை லஜ்ஜையில்லாமல் பார்த்துக்கொண்டே. அவள் தன்னைக் கண்டுகொண்டாள் என தெரிந்த பிறகு, முழுக்க குளிச்சாச்சு முக்காடு எதற்கு என நினைத்துவிட்டான் போலும்.

“வாட்?” என்றாள் அதிர்ச்சியாக.

“ஃபைல்.. ஃபைல் பார்த்துட்டு இருக்கேனே! டௌட் இருந்தா திரும்பவும் கூப்பிடனுமே. அதான் இங்கயே இருங்க நல்லா பார்த்துக்கிறேன்”

“சார்” என்றாள் இயலாமையுடன் பல்லைக் கடித்துக்கொண்டு.

“ஃபைல் நல்லா பார்த்தான டௌட் கேட்க முடியும். வெயிட் பண்ணுங்க” என ஃபைலை பார்க்க ஆரம்பித்தான் கூடவே அவளையும்.

அவளோ அவனிடம் ஒன்றும் கூறமுடியாமல், தன் உடையில் கவனம் செலுத்தலானாள். மாராப்பை கவனமாக பார்த்தாள் அனைத்தும் சரியாக இருந்தது, இடுப்பில் மட்டும் சேலை இறங்கி எலுமிச்சை நிறம் பல்லைக்காட்டியது என்னைப்பார், என் அழகைப் பாரென. இடுப்பில் சேலையை நன்றாக இழுத்து சொறுகினாள்.

“க்கூம். என்கிட்ட இருந்து மறைக்க உங்கிட்ட எதுவும் இருக்கா நிஹாரிகா மேடம்?” என்றான், அவள் கொடுத்த ஆவணத்தைப் பார்த்துக்கொண்டே, ஆனால் அவளுக்கு தான் தூக்கிவாரிப் போட்டது.

‘இப்போ அவன் என்ன சொன்னான்? நான் இடுப்பை மறைக்கும் போது, மறைக்க எதுவும் இருக்கா என கேட்டா? அவன் எதைக் கேட்கிறான்?’ என்று குழப்பமாக.

“சார் என்ன கேட்டீங்க? எனக்கு சரியா புரியல”

“என்கிட்ட இருந்து மறைக்க உங்கிட்ட எதுவும் இருக்கா? அதாவது என் கிட்ட இருந்து எதுவும் மறைக்கிறீங்களா?” என ஆவணத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.

“இல்ல சார்” என்றாள் வெடுக்கென.

“வெல். இந்த ப்ராபர்ட்டி ஓனர் யாரு?”

“மிஸ்டர். சாமுவேல். என்.ஆர்.ஐ”

“சுயர்?”

“எஸ் சார். டீடெயில்ஸ் அண்ட் புரூஃப் டாகுமெண்ட்ல இருக்கே சார்”

“ஓ.கே யு மே கோ நௌ”

“தங்க் யூ சார்” என விருவிருவென கிளம்பிவிட்டாள். அவனோ ஆவணத்தில் அவள் கொடுத்த தகவல்களையும், ஆதாரங்களையும் புருவ முடிச்சுடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

அவளோ அவள் அறைக்கு வந்த பின்னும் அவனை வசை பாடுவதை நிறுத்தவில்லை. “என்ன நினைச்சு இருக்கான் இவன்? ஒரு மாதிரி பார்க்குறான்? புரியாத மாதிரியே பேசுறான்? அவன் முன்னாடி போகவே கடுப்பா இருக்கு. ச்சை” என புலம்பிக் கொண்டே அவள் வேலைகளை கவனிக்கலானாள்.
 

Nnk08

Moderator
ஹாய் செல்லம்ஸ்

உங்கள் கருத்துகளை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களது விமர்சனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும்

உங்கள் கிளி

Thread 'சிறையாடும் மடக்கிளியே! - கருத்து திரி'
https://www.narumugainovels.com/index.php?threads/சிறையாடும்-மடக்கிளியே-கருத்து-திரி.10497/
 

Nnk08

Moderator

சிறையாடும் மடக்கிளியே!

டீசர் 2

1704008781863.png

நிஹாரிகா தன்னை சுத்தம் செய்துவிட்டு வந்து படுக்கையில் விழுந்தாள். அவள் மனது, நினைவு முழுவதும் அவன் ஒருவன் மட்டுமே!

‘இந்த ஒரு மாசமா தான் எனக்கு உன்னை தெரியுமா ஷிம்ரித்? எனக்கு அப்படி தோனவேயில்ல என்னமோ பிறந்ததிலிருந்தே உன் கையில தவழ்ந்தது போல உணருறேன். முதல் நாள் உன்னை பார்த்ததுமே ஏதோ ஒன்னு என்னை உன்னை நோக்கி இழுத்துச்சு. உன் கிட்ட நெருங்க கூடாது, உன்னோட பழக கூடாது, உன்னை என்னை விட்டு எட்டி நிப்பாட்டனும்னு நினைச்சேன்.

ஆனால் நீ என்னை விடவே இல்லை. உன்னை பார்க்கும்போதெல்லாம் உன்கிட்ட ஓடிவரும் இந்த மனச அடக்கத்தான் கோபம் என்ற முகமுடிய போட்டுட்டு சுத்தினேன். ஆனா இன்னைக்கு மொத்தமா உன்கிட்ட கவுந்திட்டேன்.

இன்னைக்கு உயிருக்கு போராடும் போது கூட என் நினைப்புல யாரும் வரல. உன்கூட வாழாமயே போறோம்னு நினைப்பு மட்டும் தான் என் மனசுல இருந்துச்சு. இதுக்கு பேர் காதல்னா ஆமா உன்னை என் அடிமனசுல இருந்து காதலிக்கிறேன். ஐ லவ் யூ ஷிம்ரித்’ என அவன் நினைவாகவே உறங்கி போனாள் பெண்.

**********

ஷிம்ரித் “நிஹாரிகா! எதுவும் சொல்லனுமா?”

“ஹான். ம்ம். ஆமா” என தடுமாறினாள்.

“சொல்லுங்க என்ன விஷயம்?”

“அது எனக்கு வீட்டில மா.. மாப்பிள்ளை பார்த்திருக்காங்க” என கூறும் போதே அவனை நோட்டம் விட ஆரம்பித்தாள். அவள் எதிர்பார்த்தது அவன் கோபப்படுவான் இல்லை வருத்தப்படுவான் என. ஆனால் அவன் முகத்தில் ஒரு பாவனையும் இல்லாமல் கதை கேட்பது போல கேட்க, மேலே தொடர்வதா, இல்லை சென்றுவிடுவோமா என நினைத்தவள், ஆரம்பித்ததை முடித்துவிடலாம் என நினைத்து அனைத்தையும் கூறி முடித்தாள்.

அவனோ வெகு நிதானமாக எழுந்து அவளருகில் வந்து அவளுக்கு கையை கொடுக்க கையை நீட்டியபடி “வாழ்த்துக்கள்” எனகூறி, அவள் மனதை சில்லு சில்லாக உடைத்துவிட்டான்.
 

Nnk08

Moderator

சிறையாடும் மடக்கிளியே!

டீசர் 3

அவளால் அவள் ஏமாற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன் ஏன் இப்படி நடந்தது என நினைத்து நினைத்து தன்னை தானே வருத்திக் கொண்டாள். அன்று முழுவதும் அவளறையை விட்டு வெளியே வரவில்லை. சாப்பாட்டைக்கூட தவிர்த்துவிட்டாள்.

அன்று மாலை வரை தனிமையில் அழுது கரைந்தவள், தன் இயல்புக்கு மீண்டும் திரும்பி வந்தாள். ‘என் தைரியம் எங்க போச்சு? என் மனவலிமை எங்க போச்சு? என் கம்பீரம் எங்க போச்சு? எவனோ ஒருவன் என்னை ஏமாற்றியதற்கு, நான் ஏன் அழுது கரையவேண்டும்’ என நினைத்தாள்.

ஏமாற்றத்திலிருந்து மீண்டு வந்தவள், கண்ணாடி முன் சென்று நின்றாள். காலையில் அவனுக்காக, அவன் வாங்கி கொடுத்த புடவையில், அழகாக தன்னை அலங்கரித்து, அவனை காண சென்ற கோலம், இப்போது அழுது அழுது அலங்கோலமாக இருந்தது.

அவன் வாங்கி கொடுத்த புடவையை அவள் கட்டிய போது தன்மீது பாந்தமாக பொறுந்தியிருந்தது, இப்போது தன்னை சுற்றி தன்னை கொத்த காத்திருக்கும் பாம்பு போல தெரிந்தது. பரபரவென அவிழ்த்து எரிந்து குளியலறையில் புகுந்தாள். கொட்டும் குளிர் நீரில் அடியில் நின்றாள். எவ்வளவு நேரம் கொட்டும் குளிர் நீரில் நின்றாளோ! உடல் குளிரால் விரைக்கும் நிலையில் உடையை மாற்றி வெளியே வந்தாள்.

சாதாரண பருத்தி உடையின் மேல் குளிருக்கு இதமான அங்கியை அணிந்து, அழுது வீங்கிய விழிகளை ஒப்பனையில் மறைத்தாள். அவன் முன் தன்னை பலகீனமாக காட்ட விரும்பவில்லை அந்த பெண். அவன் முன் கம்பீரமாக நின்ற விரும்பினாள். அவனாலோ, இல்ல அவன் தந்த ஏமாற்றத்தாலோ நான் எந்த நிலையிலும் கீழிறங்கவில்லை என்பதை காட்டிடும் முனைப்பு தான் இருந்தது பெண்ணவளுக்கு.

சாப்பிடும் அறைக்கு சென்றாள். அவனால் நான் ஏன் சாப்பிடாமல் தன் உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்து சென்றாள். அவனைப் பார்க்கக்கூடாது, அப்படியே பார்த்தாலும் அவன் முன் உடைந்துவிடக்கூடாது என மனதில் பல ஒத்திகை பார்த்து சென்றாள்.
 
Status
Not open for further replies.
Top