எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் -டீஸர்

NNK-72

Moderator
குட்டி டீஸர்…. ப்ளீஸ் அட்ஜஸ்ட் கரோ…..
……
“ ஹவ் ஸ்வீட் ஆஃப் யூ …” எதிரிலிருந்தவன் அவளை ரசித்து பேசிக்கொண்டு இருக்கையில்,

“இங்க என்ன பண்ற ஶ்ரீ”

வெகு அருகில் கேட்ட வெங்கியின் குரலில் அதிர்ந்து விழித்தவள்,நெற்றி சுருக்கி அவனைப் பார்த்து,

“பார்த்தா தெரியல பில் போடுறேன் வெங்கடேஷ் ” என்றவள் வேலையை தொடர்ந்திட,

“தள்ளு நான் போடுறேன்… “

அவளை நகரச் சொல்லியவன் கடுகடு முகத்துடன் மானிட்டரின் முன்னால் வர,

“பரவாயில்லை வெங்கடேஷ்… நானே பில் போடுறேன்”

என்றவள் எதிரில் இருந்த நபர்களை பார்த்து சிரித்தவாறே

“ சார்‌ வேற…” என ஆர்டரை கேட்டாள்.

பல்லை கடித்து “நான் தான் நகருன்னு சொல்றேன்ல… இங்க தான் நிப்பேன்னு நின்னா என்ன அர்த்தம் ஶ்ரீ” வழக்கத்திற்கு மாறாக அவளை முறைத்திட அங்கிருந்து தள்ளி நின்று அவனை வினோதமாக பார்த்தாள் ஶ்ரீ.

எதிரில் அவளிடம் வழிந்து கொண்டிருந்தவனிடம் “சொல்லுங்க சார்” என்றான் வெங்கி இழுத்து பிடித்த பொறுமையுடன்,

“அவங்க….” எதிரிலிருந்தவன் இழுவையில்


‘ எப்பா ராசா எங்க இருந்துடா எனக்குன்னு வர்றிங்க…’ உள்ளுக்குள் அவனை கழுவி ஊற்றியவன்,

“அவங்க வரமாட்டாங்க சார்… உள்ள வொர்க் பாக்க போறாங்க” முகம் மாறாது கூறியவன், யுவர் ஆர்டர் ப்ளீஸ் சார் என்றான் வெங்கி.

“அய்யோ வெங்கடேஷ் இது என்னோட வொர்க் அதான் நான் பாக்குறேன்னு சொன்னேன்…” சிணுங்கி அவள் போகாமல் அவனுக்கு‌ விளக்கிக் கொண்டு அங்கேயே நின்றாள்.

“போன்னு சென்னேன் ஶ்ரீ..” அவளுக்கு மட்டும் கேட்கும்‌ குரலில் அவள் உயரம் குனிந்து கூறியதும், அவன் கண்களில் தெரிந்த கோபத்தில் கையை பிசைந்தபடி காபி தயாரிக்கும் மிஷின் முன் வந்து நின்று விட்டாள்… இப்போ என்ன சாருக்கு நடந்துடுச்சின்னு அவ்வளவு கோவம் முனுமுனுத்து கொண்டிருந்தாள்.

ஆர்டரை எடுத்து கொடுத்து விட்டு உள்ளே வந்தவன் யோசனையில் நின்றிருந்த ஶ்ரீயின் கையை கோபத்துடன் பிடித்து தனக்கு வெகு அருகில் நிற்க வைத்தவன்,

“அவன் தான் வழியுறான்னு தெரியுதுல்ல… நான் வந்து கேட்டதும் விட்டுட்டு போக வேண்டியது தானே‌…. அங்கேயே நின்னு என்ன பேச்சு வேண்டி கெடக்குது” அவளிடம் காய்ந்திட,

அவன் மூச்சின் வெப்பம் அவள் முகத்தில் பட்டு தெறிக்க, வெங்கி கோவம் என புது அவதாரத்தை எடுத்தான்.

அவன் கையையும் தங்கள் நெருக்கத்தையும் அவள் மாறி மாறி பார்க்க, அவள் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து சட்டென அவளிடமிருந்து கையை எடுத்தவன்,

சற்று இடைவெளி விட்டு நின்று,

“சாரி ஒரு வேகத்துல கையை‌ பிடிச்சிட்டேன்‌… ஆனாலும் நான் போன்னு சொல்லியும் நீ போகாமல் இருந்தது தப்பு தானே”

என்றான் அவள் மை எழுதிய விழிகளில் பார்வையை பதித்து,

புருவம் சுருங்கி அவன் செயல்களை பார்த்தவள் “அய்யோ வெங்கடேஷ் இந்த ஆங்க்ரி பேஸ், உங்களுக்கு சுத்தமா செட்டே ஆகல…”

“எல்லாரும் உங்கள மாதிரி ஜென்டில் மேனா இருப்பாங்களா… ஒரு சிலர் அப்படி பாக்கத்தான் செய்வாங்க… அதுக்குன்னு எல்லார் கிட்டயும் சண்டைக்கு போக முடியுமா இல்ல எல்லா நேரத்துலயும் உங்கள மாதிரி ஒரு சூப்பர் மேன் வந்து என்னை காப்பத்துவாரா?”


அவள் சொல்லிக் கொண்டு சென்றிட … அதில் எரிச்சலுற்று கடுப்பாகியவன்,

“உன்னை காப்பாத்த சூப்பர் மேன் தான் வரனுமா நான் போதும் டி” என்றவன் அவள் செவ்விதழில் தன் வன்மையை கடுமையாக இறக்கி இருந்தான்..
 
Last edited:

Advi

Well-known member
Aww வெங்கி possessiveness செம்ம டா, ஆனாலும் டீலையேவா😜😜😜😜😜
 

NNK-72

Moderator
Aww வெங்கி possessiveness செம்ம டா, ஆனாலும் டீலையேவா😜😜😜😜😜
Tq so much dear... டீயோ காப்பியோ டியர்... நாம முத்திரையை பதிச்சிடனும் ல...😘😘😘😘
 
Top