NNK-83 Sudar
Moderator
டீஸர்
அருணாச்சலம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்க, வெளியே தன் அன்னை மாரியம்மாளிடம் வேணி கத்திக் கொண்டிருந்தாள்.
“ஏன்மா, அவனால ஹாஸ்பிட்டல் கூட கூட்டிட்டு போக முடியாதாமா? அவன்பாட்டுக்கு வண்டில ஏத்தி அனுப்பியிருக்கான். வர வழில ஏதாவது ஆச்சுன்னா என்ன பன்றதுன்னு யோசிக்க வேண்டாம். பையன் பையன்னு தலைல தூக்கி வச்சிக்கிட்டு ஆடுனல? பாத்தியா உன் பையன் செஞ்ச வேலய?”
“இல்ல கண்ணு, அவன் வண்டி புடிச்சதுக்கே அவ கத்திட்டு கிடந்தா. அதான் நானும் ஏதும் பேசல.”
“நீ பேசாதமா. சும்மா எரிச்சல கிளப்பிக்கிட்டு.” சுந்தரேசன் வருவதைக் கண்டவள் அமைதியாக இருந்துக் கொண்டார். தன் கணவனாக இருந்தாலும் அவர் முன் தன் அன்னையை கண்டிக்க மனது ஒப்புக்கொள்ளவில்லை.
“வேணி, மருந்துலாம் வாங்கிட்டு வந்துட்டேன். டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று மருந்து பையை வேணியிடம் கொடுத்தார்.
கொடுத்த பையை வாங்கியவர், “மருந்துலாம் சரியா கொடுக்க சொன்னாங்க. நார்மல் வார்டுக்கு மாத்துன அப்ரோம் போய் பாக்கலாம்னு சொன்னாங்க. எப்டியும் நாளைக்கு வீட்டுக்கு அனுப்பி விட்டுடுவாங்க. நீங்க இன்னைக்கு வேலைக்கு?”
“ரெண்டு இடத்துக்கு போன் போட்டேன். இன்னைக்கு தோது இல்லன்னு சொன்னாங்க. பாக்கலாம். மறுபடியும் போன் வந்தா கிளம்புறேன். இல்லன்னா நாளைக்கு பாத்துக்கலாம். அங்க மதி கிளம்பிட்டாளா? தாரணியும் பவியும் சாப்டாங்களா?”
.....
“ஏங்க மாமா, இப்போ எதுக்கு இவள இங்க விட்டுட்டு இருக்காங்க? அவங்க வளர்க்குறத விட்டுட்டு இங்க சின்ன புள்ளய விட்டு இருக்காங்க. அந்த புள்ள ஏங்கிபோய்டாது, அதுவும் அத்தைக்கும் வயசாகுது. அவங்க எப்டி இவள வளர்ப்பாங்க?” வந்த இரண்டாவது நாளே வாழைப்பழத்தில் ஊசியை ஏற்ற ஆரம்பித்தார் சுஜாதா.
“இந்தா, உனக்கு எங்க நோவுது? என் பேத்திய நான் பாத்துக்குறேன். அங்க என் மவ ரெண்டு புள்ளய வச்சுக்கிட்டு கஷ்டப்படுறா. பவிதாவுக்கு தான் உடம்பு சரியில்லன்னு உனக்கு தெரியும்ல. அங்க அவள பாக்கவே நேரம் சரியா இருக்கும். நீ பேசாம உன் வேலைய பாரு.” என்று சத்தம் போட்டதில் ஆரம்பித்தது மாமியார் மருமகள் தகராறு. தினம்தினம் இவர்களுக்கு பஞ்சாயத்து பேசியே விஜயகுமார் ஓய்ந்து போவான்.
அருணாச்சலம் இதில் எதிலும் தலையிடுவதில்லை. அவரைப் பொறுத்தவரை வீடு, வீட்டை விட்டால் பணிபுரியும் இடம். அதற்குமேல் அவருக்கு பேரின்பம் தருமிடம் அவரின் மகளின் வீடு. வேலைக்கு செல்கிறோம் சம்பளத்தை வீட்டில் கொடுக்கின்றோம் மனைவி பார்த்துக் கொள்வாள் என்ற எண்ணமே அவருக்கு தன் மகன் தன்னை பேசும்வரை.