எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாலையிட்ட பந்தம் டீசர்

NNK-100

Moderator

மாலையிட்ட பந்தம் டீசர்

நாயகன் : சத்யமூர்த்தி​

நாயகி : சத்யவாணி​

நாயகனின் தம்பி : வாஞ்சிநாதன்.​

இரு வேறு துருவங்கள் ஒரு புள்ளியில் இணைந்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு வாழ்வு எதிர்பாராமல் அமைகிறது நம் கதையின் நாயகன் நாயகிக்கு.​

முன் பின் எந்த அறிமுகம் இல்லாமல் நடந்து விடும் திடீர் திருமணம் சத்யமூர்த்தி, சத்யவாணியை ஒரே வாழ்க்கை பயணத்தில் இணைக்குமா?​

அண்ணன், தம்பி என இருவர் மட்டுமே குடும்பம் என வாழ்ந்தவர்கள் இடையே புது உறவாய் வரும் பெண்ணை இருவரும் எப்படி புரிந்து ஏற்று கொள்கிறார்கள்.​

பெற்றோர், உடன்பிறந்தோர் என எப்போதும் கலகலப்பாக தன் குடும்பம் மட்டுமே உலகம் என வாழ்ந்தவளுக்கு இப்படி ஆண்கள் மட்டுமே வாழும் குடும்பம் அமைய அதை எப்படி ஏற்று கொள்கிறாள், நாயகியின் வரவு எப்படி அவர்களின் வாழ்வை மாற்றுகிறது என பார்க்கலாம் மாலையிட்ட பந்தம் கதையில்.​

இது என்னுடைய புது முயற்சி தங்கள் அன்பையும், ஆதரவையும் நாடி வந்திருகிறேன் ஆதரவு தாருங்கள்.​

மகிழ்வோடு நன்றி.​

******​

கதையின் சில பகுதிகள்...

அறைக்குள் வந்த சத்யமூர்த்தி சோபாவில் அமர்ந்தபடியே எதிரே சுவற்றை வெறித்து கொண்டிருந்தவளை கண்டு ஒரு நொடி மனம் இரங்கியவன் மறு நொடியே அந்த இரக்கத்துக்காக தன்னை தானே நிந்தித்தும் கொண்டான்.​

பெரும்பான்மையான பெண்களை போல் தன்னை யாரோ பார்க்கும் உள்ளுணர்வு சரியாய் சத்யவாணிக்கும் வேலை செய்ய மெல்ல திரும்பி பார்த்தவள் அங்கே கடுவன் பூனையாய் முகம் இறுக நின்றிருந்தவனை கண்டு அதிர்வோடு தன்னிச்சையாய் எழுந்து நின்றிருந்தாள்.​

சத்யமூர்த்தி "இந்த மரியாதைக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை" என எடுத்தெரிந்து சொல்ல.​

ஆண்ணவனின் பேச்சை கேட்டு ஆத்திரமான சத்யவாணி வேகமாக சோபாவில் நன்றாக உள்ளே தள்ளி சாய்ந்து கால்களையும் சம்மணம் இட்டு அமர்ந்து கொண்டவள் நிமிர்வோடு "வேற எதில் சார் நாங்க குறைச்சல்? பணத்திலா? வசதியிலா? ஆமாம் அது உங்களை விட பற்பல மடங்கு குறைவு தான் ஆனா மானம், மரியாதை, கௌரவத்தில் நாங்க உங்களுக்கு குறைஞ்சவங்க இல்லை பணம் இல்லாதவ, பின்புலம் இல்லாத குடும்பத்தை சேர்ந்தவ தானேனு என் தன்மானத்தை சீண்டி பார்க்காதீங்க அது நல்லதுக்கு இல்லை அப்புறம் தாலி கட்டியாச்சேனு அதுக்கான உரிமையை எடுத்துக்கவும் நினைக்காதீங்க எனக்கு அதையெல்லாம் நினைச்சு பாக்க கூட பிடிக்கலை" என சற்று அதிகாரமாகவே சொன்னாள்.​

சத்யமூர்த்தி உள்ளூர திகைத்து போனான் வசதி குறைவு பணம், வசதிக்கு ஆசைப்பட்டு தான் இந்த அவசர திருமணத்திற்கு இவள் சம்மதித்திருப்பாள் என்கிற அவன் எண்ணம் ஆட்டம் கண்டு விட அந்த நிலையிலும் அவள் அமர்ந்திருக்கும் தோரணை உள்ளூர சிரிப்பை வரவழைத்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் தனக்கென ஒரு இருக்கையை எடுத்து போட்டு அவள் எதிரே அமர்ந்தவன் "என்னை கல்யாணம் செய்துக்க நீ ஏன் சம்மதிச்ச?" என நேரடியாகவே கேட்டான்.​

சத்யவாணி அமைதியாய் தலைகுணிய அவனும் விடாமல் திரும்ப கேட்க​

ஆத்திரமான சத்யவாணி "பெத்த அப்பா காலில் விழும் போது எந்த மகள் தான் சார் சம்மதிக்க மாட்டா" என அழுகையோடு ஆவேசமாகவே பதிலளித்தாள்.​

சத்யமூர்த்தி திகைத்து போனான் இப்படி ஒரு பதில் வரும் என எதிர்பாராதவன்.​

******​

சத்யவாணி "இப்போ ஏன் இவர் தலையில் அடிச்சுக்குறார்?" என்றிட​

சத்யமூர்த்தி "இம் வேண்டுதல் வேற என்ன? இவன் கான்பூர் ஐஐடியில் படிச்சு கோல்ட் மெடல் வாங்கினவன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க உன் கூட சேர்ந்த ஒரே நாளில் உன்னை மாதிரியே சின்னபிள்ளைதனமா நடந்துக்குறான் டேய் வாஞ்சி இதுலாம் சுத்தமா நல்லா இல்லைடா" என இருவரிடமும் கிட்டதட்ட புலம்பினான்.​

சத்யவாணி "பின்னே உங்களை மாதிரியே எப்போதும் வள்வள்னு விழுந்து பிடுங்கிட்டே இருக்கனுமா? இவராவது மனுஷன் மாதிரி பழகட்டுமே என் தம்பி தர்மூ மாதிரியே சிரிக்க சிரிக்க பேசுறாங்க அது பொறுக்கலையா உங்களுக்கு?" என படபடக்க​

சத்யமூர்த்தி "பார் டா என்னை நாய்ங்குறா" என குற்றம் சாட்ட​

சத்யவாணி "இவர் மட்டும் என்னை பன்னினு சொல்ல வந்து மாத்தலையா? நான் கண்டுபிடிச்சுட்டேன்" என சிலிர்த்து கொண்டு எதிர் புகார் கொடுக்க.​

சத்யமூர்த்தி "ஆமாம் இவ பெரிய லேடி ஜேம்ஸ்பாண்ட் பெருசா துப்பறிஞ்சு கண்டுபிடிச்சுட்டா" என பதிலுக்கு சீற​

தனது அண்ணன், அண்ணியின் சண்டையில் வாய் விட்டு பலமாக சிரித்த வாஞ்சிநாதன் வயிற்றை பற்றி கொண்டு "அம்மா முடியலை... போதும்... போதும்... எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது..." என சிரிப்போடு சொன்னான்.​

இருவரும் ஒன்றாக அவனை திரும்பி பார்க்க வாஞ்சிநாதன் சிரிப்பின் விளைவால் வந்த கண்ணீரை துடைத்து கொண்டவன் "இப்படி வாய்விட்டு நான் சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு அண்ணி ரொம்ப நன்றி நீங்க வந்து இந்த வீட்டில் சந்தோஷத்தை கொண்டு வந்துட்டீங்க" என்றான் மென்மையாகவே.​

சத்யமூர்த்தி "நீ என்ன டா வாஞ்சி இப்படி ஆகிட்ட?" என திகைக்க.​

வாஞ்சிநாதன் "இதில் என்ன அண்ணா இருக்கு அண்ணி இயல்பா இருக்காங்க ஜாலியா பேசி, பழகுறாங்க இத்தனை காலமா இறுக்கமாவே இருந்த இந்த வீடு இனி மகிழ்ச்சியா மாறட்டுமே" என சொல்ல​

சத்யமூர்த்தி "என்னமோ போ நீ சந்தோஷமா இருக்க எனக்கு அதுவே போதும்" என முறுவலோடு சொன்னான்.​

சத்யவாணி "என்னை வச்சு காமெடி எதுவும் பண்ணுறீங்களா ரெண்டு பேரும்?" என இருவரையும் சந்தேகமாக கண்களை இடுக்கி பார்த்தபடியே கேட்டாள்.​

******​

இதான் மாலையிட்ட பந்தம் கதையோட குட்டி டீசர் முழு கதையோட அடுத்த வருஷம் சந்திப்போம் நட்பூக்களே...​

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2024 பிறக்கும் புது வருடம் உங்கள் குடும்பத்தில் அனைத்து வளங்களையும் சேர்க்கட்டும்.​

அப்படியே டீசர் பத்தி கொஞ்சம் கமெண்ட் சொல்லிட்டு போங்க...​

டாடா... பாய்.. பாய்.
 

NNK-100

Moderator
நல்ல இருக்கு ஜி, சத்யா vs சத்யா சூப்பர்🥰🥰🥰🥰🥰
நன்றி நட்பே கதையை தொடர்ந்து படிச்சு கமெண்ட்ஸ் சொல்லுங்க 😁😁🙏🙏
 
Top