எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மடி சாயாதே மாயனே!-கருத்து திரி

NNK-82

Moderator

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது..​

 
பிடிக்காத பந்தத்தில் இணையும் ஜோடி!!... அதற்கான காரணம் என்ன!!??... தந்தையே மகளுக்கு எதிராய் இருப்பதற்கான காரணம் என்ன???... இப்படி பல கேள்விகளுடன் தொடங்கும் கதை!!..


பார்த்தபோதெல்லாம் தவறானவனாய் இருப்பவன் தந்தையின் தேர்வாய் இருக்கும் விந்தையை நினைத்து, அவள் உள்ளுனர்வை வைத்து அவனை தெரிந்து கொள்ள முயற்சி செய்யும்பொழுது அறிந்து கொள்ளும் செய்திகள் என்ன??...

சுவாரஸ்யமாக கதையை நடர்த்தி சென்ற விதம் அருமை!!...

சில இடங்களில் கதை அதிவேகமாக சென்றது போல் இருந்தது!... எழுத்து பிழைகள் சில இருந்தது!!...

இறுதியில் தவறு செய்தவனுக்கான தண்டனையும், இவர்களின் நிறைவான வாழ்வும் திருப்தியாக இருந்தது!!..

வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
 

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK82
#மடிசாயாதேமாயனே
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்...
இன்பா பாண்டியன்.. வட்டி தொழில் செய்து வருகிறான்.. கொடுத்த கெடுவில் பணத்தை கொடுக்கவில்லை என்றால் இவன் ஸ்டைலில் அதை வசூலித்து விடுவான்.. பணத்திற்கு ஈடாக பொருளாகவோ.. வீடாகவோ.. அவர்கள் அடமானம் வைத்ததை இவன் மாற்றிக் கொள்வான் தன் பெயருக்கு...அப்படி இவன் செய்வதை மா பாதகமாக எண்ணி அவன் மீது மிகுந்த கோபம் சொல்கிறாள் நன் நிலா..
நிலாவின் தந்தை பிரகாஷ்.. இன்பாவிடம் என்பது லட்சம் கடன் இருப்பதால் கூறி அந்தக் கடனுக்கு பதிலாக இவளை அவனுக்கு திருமணம் முடித்துக் கொடுக்கிறார் பெண் அவளின் சம்மதம் இல்லாமலே.. அவனை பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு அவனிடம் மயங்கி நிற்கிறாள் காதலால்.. தன்னிலை என்ன என்பது புரியாமல் தன்னையே வெறுக்கும் நிலைக்கு செல்கிறாள்.. அவனின் மீது பெண்ணுக்கு ஏற்படும் காதல் எதனால் ஆண் அவனை ஏற்கனவே இவளுக்கு தெரிந்ததால் இருக்குமோ? பணத்திற்கு ஈடாக பெண்ணை திருமணம் செய்து கொண்டானா அல்லது காதலால் அவளை மணமுடித்துக் கொண்டானா என்பது கதையில்.. விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰👏
எழுத்துப் பிழைகளை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
இறுதியில் நிலா.. அவனை மாயன் என்று அழைப்பதற்கான காரணத்தை கூறி இருப்பதில் மாயன் என்று வரவே இல்லை பாண்டியன் என்பதாக இருக்கிறது அது சரிதானா என்பதை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள் அதில் ஏதோ வாக்கிய பிழை இருப்பதாக எனக்கு தோன்றுகிறது..
Good luck 🥰💐🌹
 

priya pandees

Moderator
Nnk82

மாயன் நிலா, மாயன் நிலாவ அவ அப்பாவ மிரட்டி அதிரடியா கல்யாணம் பண்ணிடுறான், அது பிடிக்காம இவ அவனோட சண்டை போடுறா. அப்றம் கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சுடுது, அப்றம் தான் அவங்க அப்பா அவன் சேர்ந்து இவளுக்காக தான் அப்படி ஒரு கல்யாணத்த பண்ணாங்கன்னு. அப்றம் சுபமான‌ நிறைவு.

சின்ன suggestion., முடிஞ்சா Spelling mistakes check பண்ணி பாருங்க.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே...
 
Top