எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காரிருள் கள்வனே - டீஸர்

NNK-87

Moderator

கள்வன் டீஸர் - 01​

"உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தாங்க. இந்த நேரத்துல தனியா காட்டுக்குள்ள வர்றீங்க" என்று கேட்டுக் கொண்டே அவளுடன் நடந்த தீரஜை,பக்கவாட்டாக திரும்பி பார்த்த வீணாவோ,​

"நான் ஒன்னும் தனியா வரலையே. உங்களோட தானே வர்றேன்" என்றால் இதழ்கடையில் பதுக்கிய புன்னகையோடு.​

"என்மேல அவ்வளவு நம்பிக்கையா? ஒருவேளை நீங்க தேடுற அந்த வேற்றுகிரகவாசி நானா இருந்தா என்ன பண்ணுவீங்க?" என்று கேட்டவனை,​

அதே பதுக்கிய புன்னகையுடன் திரும்பி பார்த்தவள்,​

"அப்படி இருந்தா என் வேலை ரொம்பவே சுலபமா முடிஞ்சிரும்" என்று சொல்லிக் கொண்டே அவனை நெருங்க,​

அவள் அருகாமையில் அவன் இதயம் தான் வேகமாக துடித்தது.​

அவள் மூச்சு காற்று, அவன் மார்பில் பட்டு உஷ்ணமாக்கும் அளவு நெருங்கி நின்றவள் செயலை அவன் உணரும் முன்னமே, தாடி அடர்ந்த அவன் கன்னத்தில் தன் தளிர் விரல்களை பதித்துக் கொண்டே, அவன் விழிகளை ஏறிட்டு பார்த்தாள்.​

"இப்படி உங்க பக்கத்துல வந்து, நீங்க இந்த மாதிரி டெம்ப்ட் ஆகி நிற்கும் போது, இன்ஜெக்சன் குத்தி, தோள்ல தூக்கி போட்டு போய்கிட்டே இருப்பேன்" என்று குறும்பு கண்களுடன் சொன்னவளை, எச்சிலை விழுங்கி கொண்டே பார்த்தவன்,​

"நீங்க ரொம்ப டேன்ஜர் ஆன ஆள் தான்" என்றான் எள்ளல் குரலில்.​

சத்தமாக அவள் சிரிக்க, அவன் இதழ்களிலும் மெல்லிய புன்னகை.​

விழிகள் இரண்டும் அவள் மீது காதலாக பதிய, அவள் மைவிழிகளும் அவன் காந்த விழிகளுக்குள் கண்டுண்டு தான் போனது.​

இமைக்க மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் இதழ்களை நோக்கி தீரஜ் தலை சரிய, மங்கையவள் விழிகளும் கள்ளுண்ட போதையில் மயங்க இருந்த சமயம், இருவர் தலைக்கும் மேல் ஏதோ பறந்து சென்ற உணர்வில் சட்டென்று கண்களை திறந்தவள்,​

அவன் மார்பில் கைககளை வைத்து தள்ளி விட்டு கொண்டே அவனை விட்டு விலகி நின்றாள்.​

"தீரஜ்… இப்போ ஏதோ மிருகம் இப்படி பறந்து போச்சுல?" என்று கேட்க,​

அவனோ இல்லை என்று தான் தலையை ஆட்டினான்.​

"இல்ல நான் பார்த்தேன். நான் தேடி வந்தது எனக்கு ரொம்ப பக்கத்துல தான் இருக்குனு தோணுது. சீக்கிரமா வாங்க…" என்று சொல்லிக் கொண்டே அவள் முன்னால் ஓட,​

"ஏங்க நில்லுங்க…" என்றவனும் வேறு வழியில்லாமல் அவள் பின்னால் ஓடினான்.​

 
Top