எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

AAA -கதை திரி

Status
Not open for further replies.

NNK-81

Moderator

டீசர் 01

"ஏய்! பத்து என்னடி வேலை விட்டு வீட்டுக்கு போகாம இங்க என்ன பண்ற ?"

என்று குரல் கொடுத்தால் பத்மலோசனாவின் ஆரூயிர் தோழி வானதி, நனவுலகுக்கு வந்த

பத்மலோசனாவோ விரக்தியாக சிரித்தபடி வானதி அருகில் வந்தவள்

"நானெல்லாம் வீட்டுக்கு போனாலும் ஒண்ணுதான் போகாட்டியும் ஒண்ணு தான் யாரு எனக்காக

காத்துட்டு இருக்கா ?"

விரக்தியாக பெருமூச்செறிந்தபடி கூற வானதிக்கு இவளது செய்கையை பார்த்து ஒரு வகையில் கோபம்

முகிழ்த்தாலும் அவளது நிலையை எண்ணி வருத்தமும் மேலிட்டு தான் போனது

பத்மலோசனாவின் கலங்கிய தோற்றம் வானதியின் மனதை பிசைய அவளது மனநிலையை மாற்றி

வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பொருட்டு

"ஏன் உன்ன எதிர்பார்க்காம தான் கனியும் உன் அம்மாவும் மாறி மாறி கால் பன்றாங்களா ? அப்பறம்

உன் அப்பா கூட எத்தனை கால் பண்ணிருக்காரு பாரு " என்று தனது மொபைலை பத்மலோசனாவின்

முகத்திற்கு நேராக நீட்ட

அதை பார்த்த லோசனாவின் முகம் பாறையென இறுகி போனது.

**************************************************

எந்த விடயத்திலும் நாட்டமில்லாமல் சபையில் ஒதுங்கி நின்ற பத்மலோசனாவை பார்த்த அவளது

தாய் காயத்ரியின் மனமோ வேதனையில் துடித்து போக அதையெல்லாம் பொருட்டாக கருதாதவளோ

யாருக்கு வந்த விருந்தோ என்று நின்றிருக்க,

அவளை நோக்கி வந்த சிவேஷ் அவளிடம் ஸ்வீட் பாக்ஸை நீட்டியபடி அவளிடம் மன்னிப்பு யாசிக்கும் பார்வையுடன்

"குட்டச்சி ஸ்வீட் எடுத்துக்கோ உன் ஷிவு அப்பாவாக போறேன்" என்றான் வருத்தமும் சந்தோஷமும் கலந்த குரலில் அதை கேட்டதும் கண்ணை மூடி திறந்து தன்னை சமன் செய்தபடி விரக்தி புன்னகையை

இதழோரம் படர விட்டவள் தன் தங்கை கனிவிழியையும் சிவேஷயும் ஒரு கணம் தீர்க்கமாக பார்த்தவள்

"நீங்க ரெண்டுபேருமாவது உங்க குழந்தைக்கு துரோகம் செய்யாத நல்ல அப்பா அம்மாவா இருங்க "

என்று கூறியவள் காயத்ரியையும் சிதம்பரத்தையும் வெற்று பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து நகர காயத்ரியும் சிதம்பரமும் துடித்து தான் போனார்கள்.

*******************************************************************

நிலவின் ஒளியில் வரிவடிவமாக நின்ற ஆடவனை இமைவெட்டாமல் பார்த்திருந்த

பெண்ணவளின் மனமோ மரண வலி வலித்தது. அதற்கு காரணம்

அவனது மார்பு கூட்டில் கோழிக்குஞ்சென அடைக்கலம் புகும் பாக்கியமும் சரி அவனது சிகையை கோதி கொடுக்கும் பாக்கியமும் சரி இப்பிறவியில் மறுக்கப்பட்ட ஒன்றாயிற்றே அதை நினைக்கும் போதே

அவளுக்கு கண்ணீர் பொங்கிக் கொண்டு வந்தது. அதை அரும்பாடுபட்டு அடக்கிய பெண்ணவளோ

அதற்கு மேல் அங்கு நிற்க திராணியற்றவளாய் தனது வீட்டை நோக்கி பயணமானாள்.

*******************************************************

"நீ என்னத்தான் வேணாம்னு என்னை விட்டு ஒதுங்கி போனாலும் உன்ன விடவே மாட்டேன்டி அம்மூ

நீ எனக்கு தான் " என அழுத்தமாக கூறிய ஆதித்தனோ அவளிதழில் ஆழமாக முத்தமிட்டு விலக

அவனை கண் கலங்க பார்த்த பெண்ணவளோ,"அருண் நீங்க நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க நான் ஒரு குப்பை நீங்க இரக்கப்பட்டு தர்ற வாழ்க்கை எனக்கு வேணாம் "

என்று கூறிய வார்த்தைகளின் பலனாய் ஆணவனின் உள்ளமும் உடலும் கொதித்து தான் போனது.மீதி கதையில்...​

**************************************************

ஹாய் மக்களே நான் தான் உங்கள் NNK -81 அம்புஜம், போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த ப்ரஷா அக்காவுக்கு நன்றிகளை கூறிக் கொண்டு போட்டி முடியும் வரை அனைத்து எழுத்தாளர்களுக்கும் உங்கள் ஆதரவையும் வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

https://www.narumugainovels.com/index.php?threads/எல்லோன்-அறியா-அம்புஜமே-கருத்து-திரி.10719/

 
Last edited:

NNK-81

Moderator

அத்தியாயம் 01​

இலங்கையின் எழில் கொஞ்சும் மலையகத்தின் தலைநகரமான கண்டி மாநகரம் அதிகப்படி குளிருமில்லாதா அதே சமயம் அதிகப்படி வெப்பமுமில்லாத மிதமான சீதோஷணத்தில் இரவின் ஏகாந்தத்தில் தெருக்களில் ஆங்காங்கே மின் விளக்குகளும் காரிருளை கிழித்துக் கொண்டு மிதமாக ஒளி வீசிக் கொண்டிருக்க,​

கண்டி தலதா மாளிகையை ஒட்டி அமைந்திருக்கும் கண்டி வாவியை நெடு நேரமாக ரசித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள்​

இருளில் கூட எழிலோவியமாக மின்னிய மங்கையொருத்தி, அவளது வேல் விழிகளோ ரசனையுடன் வாவி நீரில் அழகிய பிம்பமாகத் தெரிந்த மின் விளக்குகளில் பதிய இதழ்களோ மெல்லிய புன்னகையுடன்​

" மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச​

தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ​

மௌனம் வந்ததோநெஞ்சமே பாட்டெழுது…அதில் நாயகன் பேரெழுது​

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற​

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற"​

முணுமுணுத்தபடி கனவுலகில் சஞ்சரிக்க அவளை நனவுலகுக்கு அழைத்து வரும் விதமாக,​

"ஏய்! பத்து என்னடி வேலை விட்டு வீட்டுக்குப் போகாம இங்க என்ன பண்ற ?"​

என்று குரல் கொடுத்தால் பத்மலோசனாவின் ஆரூயிர் தோழி வானதி, நனவுலகுக்கு வந்த​

பத்மலோசனாவோ விரக்தியாகச் சிரித்தபடி வானதி அருகில் வந்தவள்​

"நானெல்லாம் வீட்டுக்குப் போனாலும் ஒண்ணுதான் போகாட்டியும் ஒண்ணு தான் யாரு எனக்காக​

காத்துட்டு இருக்கா ?"​

விரக்தியாகப் பெருமூச்செறிந்தபடி கூற வானதிக்கு இவளது செய்கையைப் பார்த்து ஒரு வகையில் கோபம்​

முகிழ்த்தாலும் அவளது நிலையை எண்ணி வருத்தமும் மேலிட்டுத் தான் போனது.​

பத்மலோசனாவின் கலங்கிய தோற்றம் வானதியின் மனதை பிசைய அவளது மனநிலையை மாற்றி வீட்டிற்கு அனுப்பும் பொருட்டு​

"ஏன் உன்ன எதிர்பார்க்காம தான் கனியும் உன் அம்மாவும் மாறி மாறிக் கால் பன்றாங்களா ? அப்பறம்​

உன் அப்பா கூட எத்தனை கால் பண்ணிருக்காரு பாரு"​

என்று தனது மொபைலை பத்மலோசனாவின் முகத்திற்கு நேராக நீட்ட,​

அதைப் பார்த்த லோசனாவின் முகம் பாறையென இறுகி போக அதை மெல்லிய வெளிச்சத்தில் கூடத் தெளிவாகக் கண்டுக்கொண்ட வானதியோ,​

"என்ன பிரச்னைடி ஏன் முகம் இப்டி போகுது ?" என்றது தான் தாமதம் லோசனாவோ,​

"இப்போ உன் மொபைல தூக்கி உள்ள வைக்குறியா ? கீழ போட்டுச் சுக்கல் சுக்கலா உடைக்கட்டுமா ? "​

என்றாள் எக்கென இறுகிய இரும்பு குரலில் அவளது குரலிலிருந்த உறுதியில் பயந்து போன வானதியோ​

அவளது தொலைப்பேசியை சட்டென அணைத்து அவளது கைப்பையில் போட்டுக் கொண்டே​

வண்டியை விட்டுக் கீழிறங்கிய வானதியோ,​

"பத்து இன்னும் எத்தனை நாளைக்கு இப்டியே வீட்ல உள்ளவங்கள ஒதுக்கி வச்சே வாழப் போற ?"​

என்று முடிக்கும் முன்பே,"சாகுற நொடிவரை"என்றாள் சற்றும் தாமதிக்காது​

வானதி அதிர்ச்சியுடன் பத்மாவின் முகத்தை ஏறிட அவள் முகத்தில் அத்தனை ரௌத்திரம்​

இருந்தும் தனது முயற்சியைக் கைவிடாதவளாக,​

"பத்து எனக்கும் உன்னோட விஷயம் பத்தி ஓரளவு தெரியும் இருந்தும் நீ இத்தனை வருஷம் உன் வீட்டு ஆளுங்கள தண்டிக்கிறது நியாயமில்ல"​

என்று கூறிய அடுத்த நொடி பத்மாவோ கண்களில் கோபம் மின்ன,​

"வானு என் விஷயம் முழுசா தெரியாம வார்த்தைய விடாத சொல்லிட்டேன் எனக்கு நடந்த மாதிரி​

ஒரு விஷயம் உன் வாழ்க்கையில நடந்திருந்தா நீ அந்த வீட்டு பக்கமே போக மாட்ட இதுக்கு மேல​

இந்த விஷயத்தைத் தான் பேசுவேன்னு சொன்னா என் கூடப் பேசாத சொல்லிட்டேன். "​

என்று தீர்க்கமான குரலில் கூறியவளை பார்த்துப் பெருமூச்செறிந்த வானதியோ தற்காலிகமாக​

அக்கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு நக்கலுடன் கலந்த அக்கறை தொனியில்​

"என்ன அம்மணி வீட்டுக்குப் போகப் போறீங்களா ? இல்ல இங்கேயே எவ்வளவு நேரம் நிற்கிறதா உத்தேசம்?"​

என்றபடி அங்கிருந்த கல்பெஞ்சில் அமரப் பத்மாவோ தனது இறுகிய பாவனையை மாற்றாமலேயே​

"இப்போ நான் எவ்வளவு நேரம் நிற்கப் போறேன்னு சொன்னா இந்த அநாதையோட சேர்ந்து நீயும் தெருவுல நிற்கப் போறியா ?"​

என்று கூறிய மறுநொடியே பத்மாவின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது., வானதியின் மெல்லிய கரம்​

"என்னடி நினைச்சுட்டு இருக்க வாய்க்கு வர்றதெல்லாம் பேசுவியா ? யாரு இல்லாட்டியும் உனக்கு அக்காவா அம்மாவா எல்லாமா நான் இருக்கேன்"​

என்றவளை இறுக்கி அணைத்துக் கொண்ட பத்மலோசனாவோ,​

"இந்த வார்த்தை இதுக்கு முன்னாடி ஒருத்தர் வாயிலயிருந்து கேட்டு இருக்கேன் இப்போ​

உன் வாயிலயிருந்து கேக்குறேன் நீயும் என்ன அவங்கள மாதிரியே தள்ளி வச்சுறாத அப்றம் நான் செத்துருவேன்டி "​

என்று கண்ணீருடன் ஏறிட அவளது கண்ணீரை துடைத்து விட்ட வானதியோ​

"அழாதடி நான் இருக்கேன்" என்றவள் பத்மாவை சகஜ நிலைக்கு மாற்றியபடி அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே,​

"என்னடி உன் ஆள பார்க்கப் போகல ? "​

என்றதும் நேரத்தை அறியும் பொருட்டு தனது கைக்கடிகாரத்தை திருப்பி நேரத்தைப் பார்த்தவள் முகமோ​

ஒரு நொடியில் பூவாக மலர்ந்து போனது வானதியை குறும்புடன் நோக்கியவள்​

"இப்போ போனா டைம் சரியா வரும் இப்ப தான் ஆள் கருப்பு சிகரட்டை ஊதி தள்ளிட்டு பால்க்கனில நிப்பாரு"​

என்று கூறியபடி தனது இருச்சக்கர வாகனம் நோக்கிச் செல்ல முற்பட்டவளை​

"ஏய்! பத்து அருண பற்றி இவ்ளோ தெரிஞ்சு வச்சிருக்க எப்போ உன் லவ்வ உன் அருண்கிட்ட சொல்லப் போற?" என்ற வானதியின் கூற்று தடுத்து நிறுத்த​

தலையை இடம் வலமாக அசைத்தபடி திரும்பிய லோசனாவோ வானதியை தீர்க்கமாகப் பார்த்தபடி,​

"எப்பவுமே சொல்லமாட்டேன் வானு, நான் அதுக்கான தகுதிய இழந்து எட்டு வருஷமாகுது"​

என விரக்தியாக மொழிந்தவளை உக்கிர பார்வை பார்த்த வானதியோ,​

"என்னடி எப்போ பார்த்தாலும் எட்டு வருஷத்துக்கு முன்னாடி முன்னாடின்னு அதைப் பத்தி மட்டுமே​

பேசுற ? இங்கே பாரு பத்து எட்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் உன்ன எவ்வளவு தூரம் பாதிச்சிருக்குன்னு எனக்குப் புரியுது இருந்தாலும் மாற முயற்சி பண்ணு ப்ளீஸ்"​

என்று கண் கலங்க கூறிய வானதியை பார்த்து விரக்தி புன்னகை சிந்திய பெண்ணவளின் இதயமோ​

யாருக்கும் தெரியாமல் ரத்தக்கண்ணீர் வடித்தது. அதைக் காட்டிக் கொள்ளாத பெண்ணவளோ தொடர்ந்து​

"சேர்ந்து வாழ்றது தான் காதல்ன்னா அப்போ மீராபாய் துலுக்க நாச்சியார் காதலெல்லாம் காதல் கிடையாதா ? நானும் அதுபோலத் தான்"​

என்றவளை ஒரு வித வலியுடன் நோக்கிய வானதியோ,"பத்மா" என்று ஏதோ பேச எத்தனிக்க​

பத்மலோசனாவோ வலியில் கசங்கிய தன் முகத்தை நொடியில் மாற்றிக் கொண்டு​

"பாய்! வானு நான் என் ஆள பார்க்கணும் இப்போ போனா தான் டைம் சரியா இருக்கும் "​

என்று சிரித்துக் கொண்டே கூறிய பெண்ணவளோ அத்துடன் தோழியுடனான சம்பாஷணையை முடித்துக் கொண்டு தனது இருச்சக்கர வாகனத்தைக் கண்டி நகரத்திலிருந்து சற்று ஒதுக்கு புறமாகக் காணப்படும், அனிவத்தை பகுதியை நோக்கிச் செலுத்த ஆரம்பிக்க அவளது மனமோ ஆதித்த அருணனை சுற்றியே வலம் வரத் தொடங்கியது.​

அவளது எண்ணங்களின் நாயகனோ அவனது தாமரை பெண்ணின் வருகையை அறிந்தானோ என்னவோ​

அவளைக் காக்க வைக்க விரும்பாமல் அவள் கணித்தது போலவே பால்க்கனியில் நின்று ஏதோ சிந்தனையில் உழன்றபடி சிகாரை ஊதி தள்ள,​

காரிகையவளோ நிலவின் ஒளியில் கூட ஆதவனாக ஒளி வீசிய ஆடவனை வழமை போலவே இமைவெட்டாமல் பார்த்திருந்தாள். அவளது வேல் விழிகளும் மனமும் வழமை போலவே வஞ்சனை இல்லாமல் அவளவனை ரசிக்கத் தொடங்கியது.​

ஆறடிக்கும் குறையாமலிருக்கும் அவனது உயரம், தென்றல் காற்று மென்மையாய் வருடிச் செல்லும் அவனது​

அடர்ந்த சிகை, எதிரியைக் குத்திக் கிழிக்கும் அவனது செங்கபில நிற விழிகளும் சிரிக்க தெரியாதென இறுகி நிற்கும் அவனது அழுத்தமான கறுத்த உதடுகள்​

உதடுகளுக்கு நேர் மாறாகச் சந்தனம் கலந்த மாநிறமும் இறுகிய உடற்கட்டுமாய் நின்ற ஆண்மகனை ரசனை பார்வை பார்த்தவளின் மனம் மரண வலி வலித்தது. அதற்குக் காரணம்,​

அவனது மார்பு கூட்டில் கோழிக்குஞ்சென அடைக்கலம் புகும் பாக்கியமும் சரி அவனது சிகையை கோதி கொடுக்கும் பாக்கியமும்​

சரி இப்பிறவியில் மறுக்கப்பட்ட ஒன்றாயிற்றே அதை நினைக்கும் போதே அவளுக்குக் கண்ணீர் பொங்கிக் கொண்டு வந்தது.​

அதை அரும்பாடுபட்டு அடக்கிய பெண்ணவளோ அதற்கு மேல் அங்கு நிற்கத் திராணியற்றவளாய் தனது வண்டியைக் கிளப்ப,​

பெண்ணவளின் கண்களில் கங்கையென வழிந்த விழி நீரும் வழமை போலவே​

காற்றுடன் கலந்து யாருக்கும் தெரியாமல் கரைந்து தான் போனது தன்னவனின் நினைவைச் சுமந்தபடி வீட்டை அடைந்தவளது முகம் நொடிப் பொழுதில் இறுகிப் போனது.​

காரணம் அவளுடைய தாய் காயத்ரி தன் தலையை உணவு மேசையில் கவிழ்த்தியபடி ஆழ்ந்த நித்திரையில் இருக்க, அதை நக்கல் புன்னகையுடன் பார்த்த பெண்ணவளோ தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உணவு மேசைக்கு வந்தவள்​

காயத்ரிக்கு நேரெதிர் கதிரையினருகில் நின்றபடி தனது கையிலிருந்த தட்டில் உணவை​

பரிமாறி அதைக் காயத்திரியினருகில் ஓரு விசை வேகத்துடன் தட்டென வைக்க அச்சத்தத்தில்​

உறக்கம் கலைந்த காயத்ரியும் லோசனாவை கண்ணீரோடு ஏறிட்டு​

'என்னை மன்னிக்க மாட்டியா ? கண்ணா' என்று வழமை போலவே விழியால் இறைஞ்ச,​

அப்பார்வையை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத பத்மாவோ தனது தட்டில் உணவுப் பதார்த்தங்களை​

பரிமாறிக் கொண்டு தனதிருக்கையில் அமர்ந்தபடி காயத்திரியை உணர்ச்சி துடைத்த பார்வை பார்த்தவள்​

"என்ன பார்க்குறீங்க மிஸஸ் சிதம்பரம் ? சாப்பிடுங்க அப்போ தான் நான் சாப்பிட" என்று உறுதியான குரலில் கூற​

காயத்ரிக்கு அவளது கூற்றில் இதழினோரம் கசந்த முறுவல் தோன்றியது. இன்றோ நேற்றோ​

அவள் தனது சொந்த தாயை ராட்சசியை போல் பார்க்கவில்லையே! கடந்த எட்டு வருடங்களாக இவ்வாறு தானே பார்க்கிறாள்.​

என்று நினைத்தவர் வேகவேகமாக உணவை உண்டு முடிக்கப் பத்மாவும் தனது தட்டிலிருந்த உணவுப் பதார்த்தங்களை உண்டு​

முடித்து விட்டு மீதமிருந்த உணவு பதார்த்தங்களைக் குளிர்சாதன பெட்டியில் அடுக்கி வைத்துவிட்டு,​

காயத்ரி கைக்கழுவி விட்டு வரும்வரை அங்கேயே அமர்ந்திருந்தவள்​

இரண்டு ஐயாயிரம் நோட்டுகளை காயத்ரியின் அருகில் வைத்தபடியே​

"இந்த மாச ரூம் வாடகை எடுத்துக்கோங்க"​

என்று கூறி விட்டு மாடியிலிருக்கும் தனது அறையில் தஞ்சம் புகுந்த​

பெண்ணவளோ வழமை போலவே கதவுக்கு இரண்டு தாழ்ப்பாள்களிட்டு விட்டுத் தன்னிடம் இருக்கும் பெரிய மேசையையும்​

கதவை ஒட்டிப் போட்டபடி கண்ணயர்ந்து போனவள் அருணனுடனான கனவு வாழ்க்கையை நிம்மதியாக அனுபவிக்க தொடங்கிய,​

அதே நொடி காயத்ரியோ இரவு முழுவதும் தான் அனுபவிக்கும் நரக வேதனைக்குக் காரணம் தான் செய்த காரியம் தானேயென​

நினைத்தே குற்றவுணர்ச்சியில் உள்ளுக்குள் மறுகியபடியே தூக்கத்தை தொலைத்தார்.​அறியாமல் பூக்கும்...

**********************************************************************************************

ஹாய் மக்களே நான் தான் உங்கள் NNK -81 அம்புஜம், கதையின் முதல் அத்தியாயத்தை பதிந்து விட்டேன் உங்கள் கருத்துக்களை கமெண்ட் செக்க்ஷனில் சொல்லிட்டு போங்க அதே போட்டி முடியும் வரை அனைத்து எழுத்தாளர்களுக்கும் உங்கள் ஆதரவை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

https://www.narumugainovels.com/index.php?threads/எல்லோன்-அறியா-அம்புஜமே-கருத்து-திரி.10719/

 

NNK-81

Moderator

அத்தியாயம் 02​

ஒரு பக்கம் பத்மலோசனா கனவிலேயே அவளது காதல் கண்ணாளனுடன் நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டிருக்க,​

அவளது தாய் காயத்ரியோ மகளின் வழமையான நிராகரிப்பில் நிம்மதியையும் உறக்கத்தையும்​

இழந்து தலையணையில் முகம் புதைத்தபடி கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார்.​

அவரது மனவேதனையை குறைக்கும் விதமாக அந்தக் கரமும் தோளை லேசாக அழுத்தி விட​

அக்கரத்துக்கு சொந்தக்காரரை அறிந்துக் கொண்டவர்போல் காயத்ரியும் அவரது தோள் வளைவில்​

முகம் புதைத்தபடி​

"ஐயோ அத்தான் நான் என்ன பண்ணுவேன் ? என் பொண்ணு என்னையே மாற்றாளா பார்க்குறாளே"​

வழமைப் போலவே கதறியழ காயத்ரியை சமாதானம் செய்யும் விதமாக,​

"காயு எல்லாம் சரியாகும் "என்று ஆறுதலாக அணைத்துக் கொண்டவரை,​

சட்டென நிமிர்ந்து பார்த்த காயத்ரியோ,​

"எப்போ ! அத்தான் சரியாகும் ? நான் செத்த பிறகா ?சொல்லுங்க "​

என்றவர் கண்ணீர் வடித்துக் கொண்டே எழுந்து அமர, அவரை நெருங்கியமர்ந்த சிதம்பரமோ,​

"காயு அவ உன்ன மட்டுமா வெறுக்குறா ? நம்ம எல்லாரையும் தானே வெறுக்குறா​

எனக்கு மட்டும் அவ அப்பானு கூப்பிடணும்னு ஆசையா இருக்காதா ? என்னைக்கு​

என்ன அப்பான்னு கூப்பிடறாளோ அந்தநாள் என் வாழ்நாளின் கடைசிநாளாயிருந்தா கூடச் சந்தோஷமா ஏத்துப்பேன் "​

என்று கூற காயத்ரியோ கண் கலங்கியபடி,​

"நம்ம கடைசி நேரத்துலயாவது நம்ம பொண்ணு நம்மள ஏத்துப்பாளா அத்தான் ?" என்று கேள்வியாக​

நோக்கியவரை இறுக அணைத்துக் கொண்ட சிதம்பரத்தின் முகத்திலோ கவலையின் ரேகைகள்​

'அவ பிடிவாதக்காரி எப்படியும் நம்ம செஞ்ச காரியத்துக்கு நம்மள ஏத்துக்குறது ரொம்ப கஷ்டம் காயு '​

என்று மானசீகமாகக் காயத்ரியிடம் உரைத்தவரின் கண்களிலும் கண்ணீர் தடம், மனதில் பச்சை​

ரணமாய் கடந்தக் காலத்தின் நினைவுகள், இவர்களின் இரவு இவ்வாறு கரைய,​

பத்மாவின் காதலுக்கு உரியவனான ஆதித்த அருணனோ நாளை நடக்கவிருக்கும் அரசாங்க டெண்டருக்கான கொட்டேஷன் தொடர்பான பத்திரங்களை ஒழுங்குப்படுத்தி தனது வீட்டிலிருக்கும் சேப்டி​

லாக்கரில் வைத்தவன் தனது அறையிலிருந்த சாய்விருக்கையில் அமர்ந்து விட்டத்தை வெறித்திருந்தபடியிருக்க,​

அதிகமான வேலைப்பளுவின் நிமித்தம் அவனது உடல் ஓய்வை யாசிக்கச் சாய்விருக்கையில் சாய்ந்தபடியே அவனையுமறியாமல் அவன் கண்ணயர்ந்த நொடி,​

"அருண் என்ன காப்பாத்து ஐயோ! அருண் அருண் "என்று பதினைந்து வயது நிரம்பிய,​

சிறுமியின் ஓலக்குரல் காதில் ஒலிக்க வியர்வையில் குளித்தபடி அடித்துபிடித்துக் கொண்டு எழுந்தவன்​

"நோ நோ" என்று தலையை இறுக பற்றிக் கொண்டு கத்த,​

அதே சமயம் "அருண்" என்று அலறியபடியே​

கனவிலிருந்து விழித்துக் கொண்ட பத்மலோசனாவோ விழிகளை அங்குமிங்கும் உருட்டியபடி நேரத்தைப் பார்க்கக் கடிகாரமோ மணி மூன்றை காட்டியது. அதைப் பார்த்து விட்டு அப்படியே கட்டிலின் மறுப்பக்கம் புரண்டு படுத்தவள் கண்களோ அவளது மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த அவளது பதினைந்தாவது பிறந்த தினத்தன்று எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படத்தில் பதிய,​

அடுத்த நொடியே கட்டிலிலிருந்து எழுந்த பெண்ணவளோ கோபத்துடன் அந்தப் புகைப்படத்தை ஓங்கி நிலத்திலடித்து உடைத்தவள், அந்தச் சிதறிய புகைப்படச் சட்டத்திலிருந்த புகைப்படத்தை மாத்திரம் தனியாகப் பிரித்தெடுத்து தீயிலிட்டு பொசுக்கிய பிறகும் கூட அவளது கோபம் குறைந்தபாடில்லை​

எரியும் புகைப்படத்தை உறுத்தபடியே கோபத்துடனும் வெறுப்புடனும் பத்மா அவ்விரவை கழிக்க,​

அவளைப் போலவே உறக்கமில்லா இரவைக் கழித்த அருணனுடைய மனநிலையோ அவளுக்கு எதிர்மாறாக​

குற்றவுணர்ச்சியிலும் கவலையிலும் தான் கழிந்தது.​

யாருடைய மனநிலையையும் கருத்தில் கொள்ளாத கதிரவனோ தனது கதிர்களைப் பரப்பிக் கொண்டு பூமிக்கு வர, பத்மலோசனாவின் இல்லமோ வழமைக்கு மாறாக அன்று பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.​

பத்மலோசனாவோ அதையெல்லாம் கண்டும் காணாமல் வேலைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.​

பத்மலோசனா, அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் "டாஸ்லிங்" என்னும் நிறுவனத்தில் வேதியியல் ஆய்வகத்தில் வேதியியலாளராகப் பணிபுரிந்து வருகிறாள். சம்பளத்திற்காக வேலைக்கு​

போகிறாளோ இல்லையோ மன அமைதிக்காகப் போகிறாள்.​

வேலைக்குச் செல்ல ஆயத்தமாகி படியிறங்கியவள் கண்கள் நடுக்கூடத்தை ஆராய்ந்தது​

அங்கு அவளது தாய்மாமனும் அவரது குடும்பமும் அமர்திருக்க அவர்களை,​

உணர்ச்சி துடைத்த பார்வை பார்த்தவள் அவர்களைக் கண்டும் காணாது​

இருசக்கர வாகனம் நோக்கிச் செல்ல முற்பட,​

"லோசனா ஒரு நிமிஷம் நில்லு" என்று அவளது அத்தையின் குரல் ஓங்கி ஒலிக்க,​

தனது நடையை நிறுத்திவிட்டு தலையை மட்டும் பக்கவாட்டாகத் திருப்பி விழிகளாலேயே​

'என்ன?' என்று வினவ,​

அவளது தாய்மாமனின் மனைவி சிவகாமிக்கோ பெருத்த அவமானமாகத் தான் போனது​

எட்டு வருடங்களுக்கு முன் அவர்கள் பார்த்த பத்மலோசனாவோ எதைக் கண்டாலும் பயந்து நடுங்குவாள்.​

முக்கியமாக இவர்களைப் பார்த்தாலே அடக்கமாய் பெட்டி பாம்பாய் அடங்கிக் கிடப்பாள்.​

இவளோ சீறிக் கொண்டு அல்லவா நிற்கிறாள்.​

அவளது நிமிர்வில் தனது தன்மானம் அடிப்பட்டு போனதாக எண்ணிய சிவகாமியோ பத்மலோசனாவின்​

அருகில் வந்தவர்,​

"என்ன லோசனா ?பயம் விட்டுப் போச்சா ? உன் உடம்பு வளர்ந்து நிற்கிறதே நாங்க போட்ட பிச்சைல தான்​

நியாபகம் இருக்கட்டும்" என்று ஏகத்துக்கும் நக்கலாகக் கூறியவரை​

மேலிருந்து கீழாக ஒரு முறை நோட்டமிட, அவர் உடையிலிருந்த ஆடம்பரமும் கண்களில் மின்னிய ஆணவமுமே கூறாமல் கூறியது. அவர் தன் தவறை எண்ணி ஒருபோதும் வருந்தவில்லையென​

அதை நொடிப்பொழுதில் அவதானித்த லோசனாவோ அவரிடம் திரும்பி​

"மிசஸ் சிவகாமி சிவசுப்ரமணியம்" என்றதும் திடுக்கிட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்தவரை​

சொடுக்கிட்டு அழைத்த பத்மாவோ,​

"உங்களத்தான் மிஸஸ் சிவகாமி வேற யாரும் இங்கே சிவகாமிங்குற பெயர்ல இருக்காங்களா ? நீங்க மட்டும்தானே சிவகாமி "​

என்று நக்கலாக வினவிய பெண்ணைப் பார்த்த சிவகாமியின் கோபம் கரைபுரண்டு ஓட,​

"ஏய் உன்ன" என்று கூறியபடி கையோங்கிய சிவகாமியின் கையை வளைத்துப் பிடித்து முறுக்கிய பத்மாவோ​

"இங்கே பாருங்க மிஸஸ் சிவசுப்ரமணியம் உங்க பிச்சை காசுல உடம்ப வளர்த்தது அதோ அங்க​

நிற்கிறாங்களே அவங்க மூணு பேரும் நானில்ல சோ அவங்ககிட்ட மட்டும் உங்க அதிகாரம்​

அரட்டல் உருட்டலெல்லாம் வச்சிக்கோங்க என்கிட்ட வச்சிக்காதீங்க நான் இந்த வீட்டுல​

போர்ட்டாகி இருக்கேன் அதனால என்கிட்ட மரியாதையா நடந்துக்கிட்டா ரொம்ப நல்லது"​

என்று கூறியபடியே அவரது கையை உதறி விட்டவள் அதே நிமிர்வுடன் தனது இருசக்கர வாகனத்தை கிளப்பிக் கொண்டு தனது வேலைத்தளத்திற்கு சென்றுவிட,​

சிவசுப்ரமணியமும் சிவகாமியும் காயத்ரியை பிடிப்பிடியெனப் பிடித்து விட்டனர். காயத்ரியின் மனமோ அவர்களது பாவத்தில் பங்கு கொண்டதால் தானே மகளின் அன்பும் பாசமும் எட்டாக்கனியாகி போய் விட்டது. எனக் கூக்குரலிட தான் செய்தது.,​

இருந்தும் தனது அண்ணனையும் அண்ணியையும் பகைத்துக் கொள்ள காயத்ரிக்கு சற்றும் விருப்பமில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை,​

அலுவலகத்திற்கு வந்த பத்மாவிற்கோ உடலெல்லாம் பயத்தில் வியர்த்து நடுங்கிக் கொண்டிருந்தது. இத்தனை காலமாய் உளிக் கொண்டு செதுக்கிய அவளது மன தைரியம் கூடப் புறமுதுகிட்டு ஓடித் தான் போனது சிவசுப்ரமணியத்தையும் அவரது மச்சான் சண்முகநாதனையும் கண்ட நொடி முதல்,​

மீண்டும் என்ன செய்வதென்று தெரியாத கையாறு நிலையில் தவித்துப் போய் நின்றவளை​

ஆதரவாகத் தடவிக் கொடுத்தது. ஒரு கரம் அக்கரத்திற்கு சொந்தக்காரியை அறிந்துக் கொண்ட பத்மாவோ,​

"வானு எனக்குப் பயாமாயிருக்குடி எனக்கு மறுபடியும் அந்த வலிய அனுபவிக்க உடம்புலேயும் சரி​

மனசுலயும் சரி தெம்பில்ல பயமாயிருக்கு உடம்பு உதறுதடி என்னால அந்த வீட்டுக்குப் போக முடியாது "​

என்று கதறியழ, வானதியின் மனக்கண்ணுக்கு முன்னால் வந்துச் சென்றதென்னவோ பதினைந்து​

வயதான சிறுமியாக வேதனையில் கதறி துடித்த பத்மலோசனாவின் விம்பம் தான் அவளை​

இறுக்கி அணைத்துக் கொண்ட வானதியோ,​

"பத்து அழாதடி இப்போ என்ன உன்னால அந்த வீட்ல தங்க முடியாது அவ்ளோ தானே​

வா என் வீட்டுக்குப் போகலாம் நானும் அம்மாவும் மட்டும் தானே இருக்கோம் உனக்கும்​

எந்தப் பிரச்சனையுமில்ல வா "​

என்று உறுதியான குரலில் கூற கண்ணில் ஒரு வித அலைப்புறுதலுடன் வானதியை ஏறிட்டவள்​

"ரொம்ப தேங்க்ஸ் வானதி நீ மட்டுமில்லன்னா" என்று விம்மியவளை​

"அதுதான் நானிருக்கேனே" என்று அணைத்துக் கொண்டவளை பார்த்து​

"இன்னைக்கு ஒரு ஹாப் டே லீவ் கேட்டுட்டு என் திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துருவோமா​

ஏன்னா நைட் அந்த வீட்டுக்குப் போகவே எனக்குப் பயாமாயிருக்குடி"​

என்று கூறியவளின் தேகம் வெளிப்படையாக நடுங்கியது.​

அதைக் கண்டுகொண்ட வானதியோ பத்மாவின் முதுகை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தும்​

பத்மலோசனாவின் பயம் குறைந்தபாடில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை,​

அதே சமயம் அரசாங்க டெண்டரை கைப்பற்றும் நோக்கில் பல தொழில் ஜாம்பவான்கள்​

அந்தக் கன்பெரென்ஸ் அறையில் கூடியிருக்க அவர்களையெல்லாம் பொருட்டாகக் கூட​

மதிக்காமல் நிமிர்ந்து கம்பீரமான தோற்றத்துடன் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்​

தோரணையாக அமர்ந்தவனை ஆழ்ந்து நோக்கியது இருவிழிகள்,​

அதையுணர்ந்த ஆதித்தனோ இன்னும் கம்பீரமாகக் கால்மேல் கால் போட்டு அமர்ந்தவாரே​

அவரை நேருக்கு நேராக நோக்க எதிரிலிருந்தவரோ ஆதித்த அருணணின் ஜாடையில்​

காம்பீரமாண தோற்றத்துடன் இருந்தாலும் வயது மூப்பின் காரணமாகச் சில நரைமுடிகள்​

மாத்திரம் ஆங்காங்கே எட்டிப்பார்த்தது.​

அதை ஒரு வித நக்கலுடன் நோட்டமிட்ட அருணனோ,​

"என்ன வேதாச்சலம் சார் வயசாகிருச்சு போல வயாசன காலத்துல எதுக்கு இவ்ளோ சிரமப்படுறீங்க ? எப்படியும் இந்த டெண்டர் உங்களுக்கில்லைன்னு தெரியும் அப்பறோம் ஏன் வீண் அலைச்சல் ?"​

என்று புருவத்தை ஏற்றி இறக்க, அருணன் அவரைக் கேலி செய்தாலும் அதைக் கூட ரசித்தது பெற்றவர்​

மனம் அவன் ஒரு திட்டத்திற்கான செயல்முறையுடன் வருகிறான் என்று கேள்விப்பட்டால் போதும் அந்த டெண்டர் கிடைக்கிறதோ இல்லையோ மகனின் ஆளுமையை ரசிக்கும் ரசிகனாக வந்து​

அமர்ந்து விடுவார்.​

இப்போதும் கூட மகனைத் தான்ன் கண்கள் அளவிட்டது எதிரிகளைக் கூறுபோடும் விழிகள் அகன்ற​

நெற்றி நேர்த்தியாகவும் சீராகவும் வெட்டப்பட்ட அளவான தாடி அழுத்தமான தடித்த உதடுகள்​

கருமாநிற மேனி, திண்ணிய மார்பும் அகன்றிருந்த தோள்பட்டைகளுமாய் கன்னியர் மனதை களவாடும் மன்மதனாய் நின்றவனை பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவருக்கு,​

ஓவியர்களுக்கு எப்படி தான் வரைந்த ஓவியம் அழகோ பெற்றவர்களுக்கும் தன் பிள்ளைகள்​

எப்படி இருந்தாலும் அழகு தானில்லையா? அவரோ பேசாமல் தன் மகனை ரசித்துக் கொண்டிருக்க,​

அவரது நினைவைக் கலைக்கும் விதமாக, அவர் முன் சொடுக்கிட்ட அருணனோ,​

"என்ன வேதாச்சலம் சார் உங்க அப்பா வேதநாயகம் ஓதுன குடும்ப கௌரவ மந்திரத்துல​

காது செவிடாகிருச்சா ?" என்றான் ஆச்சரியம் கலந்த நக்கலுடன்,​

வேதாச்சலத்தின் முகத்தில் சற்று முன்னிருந்த இலகுத்தன்மை மறைந்தது முகம் கருத்து போக​

அவனை ஏறிட்டவர்​

"மிஸ்டர் ஆதித்த அருணன் நீங்களும் அந்த வேதநாயகம் பேமிலியோட மெம்பர் தான்னு நான் நினைக்குறேன் "​

என்பதில் அழுத்தம் கொடுத்தவரை ஒருவித அதிருப்தியுடன் பார்த்தவனோ,​

"அது பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி இப்போயில்ல "​

என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியவன் அதனைத் தொடர்ந்து அவர் பக்கம் திரும்பாது​

மடிக்கணினியில் பார்வையை பதித்தான்.​

பத்மாவோ வேலைத்தளத்தில் தலைமை வேதியியலாளனாகப் பணியாற்றும் அசேலவின் அருகில்​

நின்றபடி,​

"சர் அத மட ஹால்ப் டே லீவ் எகாக் ஒனே "​

{சார் எனக்கு இன்னைக்கு ஹால்ப் டே லீவ் வேணும்}​

என்றவளை பார்த்துச் சினேகமாகப் புன்னகைத்த அசேலவோ​

"ரீசன் எக கீவோத் தமா தெனவாத நெத்த கியலா ஹித்தன்ன புளுவாங்"​

{காரணத்தைச் சொன்னா தான் லீவை பற்றி யோசிக்கலாம்}​

என்றவனை பார்த்து [இனி வரும் உரையாடல்கள் தமிழில்]​

" ப்ளீஸ் சார் காரணம் இப்போ சொல்ல முடியாது அர்ஜென்ட்" என்று கண்கலங்கியவள்,​

தலையை வருடிக் கொடுத்தவன்​

"இங்கே பாரு உனக்கு என்ன பிரச்சனைனாலும் எங்ககிட்ட சொல்லு அதைத் தீர்த்து வைக்கத் தான்​

நானும் உங்க அண்ணியும் இருக்கோம்"​

என்றவனை வானதி கண்களால் எரிக்க அவனோ அதைக் கண்டுக்கொள்ளாமல்​

"உனக்காக உங்க அண்ணியும் லீவ் எடுத்துருக்கா கூட்டிட்டு போ" என்றவனிடம் சிறு​

தலையசைப்புடன் விடைப்பெற்றவள் வானதியை அழைத்துக் கொண்டு​

தனது வீடு நோக்கிப் புறப்பட்டு விட அடுத்த கணமே யாரோ​

ஒருவருக்கு அழைப்பையேற்படுத்திய அசேலவோ,​

"அவ வீட்ட விட்டு வெளியே வரப் போறா பாஸ்" என்று கூற​

"ம்ம் குட் டிசிஸிஷன் இன்னைக்கு தான் நல்ல முடிவெடுத்திருக்கா அவள பத்தி​

எப்பயும் அப்டேட் பண்ணிகிட்டேயிரு "​

என்று அழைப்பைத் துண்டித்தார். அந்தப் பக்கம் பேசிய மர்ம நபர்,​

யாரையும் கவனிக்காது வீட்டிற்குள் நுழைந்த பத்மாவோ யாரோ ஒருவரில் மோதி விழப்​

போக அவளது கரத்தை இறுக்கி பிடித்தது ஒரு வலிய ஆண்கரம் அதையுணர்ந்த பெண்ணவளோ​

மெதுவாகத் தலையையுயர்த்தி அவரைப் பார்க்க​

அது அவன், யாரை அவள் கனவில் கூடக் காண மறுத்தாலோ யாரை உலகில் அதிகம்​

வெறுக்கிறாளோ அவன் தான் அவளுடைய ஆரூயிர் நண்பனாகயிருந்து துரோகியாக​

மாறிய சிவேஷ்,​

முகத்தில் வயதிற்க்கு ஏற்ற முதிர்ச்சி முதுகில் அவளைக் குத்தி சாய்த்தபோது அவன் பழுப்பு நிறகண்கள் பிரதிபலித்த அதே குற்றவுணர்ச்சியுடன் கூடிய மன்னிப்பை வேண்டும் பார்வை, தன்னை சமநிலைப்படுத்திக் கொண்ட லோசனாவோ அவனது கையை உதறிவிட்டு அவனை​

கண்களால் அளவெடுக்கத் தொடங்கினாள்.​

அடர்ந்த கேசமும் பாதி முகத்தை மறைத்த தாடியுமாய் ஒற்றை காதில் கடுக்கன் வளையமுமாய்​

மார்டன் அரக்கனாய் நின்றவனை பார்த்து உதட்டைச் சுழித்தவளோ,​

ஒன்றும் பேசாமால் அவனைத் தாண்டிச் செல்ல முற்பட​

"குள்ளச்சி சாரிடி" என்ற குரல் அவளை ஒரு நொடி தடுத்து நிறுத்தியது.​
அறியாமல் பூக்கும்...​

 

NNK-81

Moderator

ஹாய் மக்களே நான் தான் உங்கள் NNK -81 அம்புஜம், கதையின் இரண்டாம் அத்தியாயத்தை பதிந்து விட்டேன் உங்கள் கருத்துக்களை கமெண்ட் செக்க்ஷனில் சொல்லிட்டு போங்க எப்படியும் கதைய முடிச்சிருவேன் சோ பயப்படாம படிங்க அதே போல போட்டி முடியும் வரை அனைத்து எழுத்தாளர்களுக்கும் உங்கள் ஆதரவை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். 👇👇👇👇👇

 

NNK-81

Moderator

அத்தியாயம் 03​

அவனைச் சட்டெனத் திரும்பிப் பார்த்த பத்மலோசனாவோ அவனைப் பார்த்து விரக்தி புன்னகையை சிந்திவிட்டு தனதறையை நோக்கிச் சென்றவள் மளமளவெனத் தனது உடைப்பெட்டியை அடுக்கிக் கொண்டிருக்க அவளருகே ஏதோ நிழலாட அதைக் கண்டுகொண்ட பெண்ணவளோ,​

"என்ன ? ஏதாவது பேசணுமா ?" என்று உறுதியான குரலில் வினவியபடி தனது வேலையைத் தொடர​

அவளருகே வந்த சிவேஷோ,​

" குள்ளச்சி ப்ளீஸ் என்கூட பேசுடி நான் செஞ்சது தப்பு தான் அதுக்குன்னு ஒதுக்கி வச்சிறாத"​

என்றவன் குரல் உடைத்தே வந்தது.​

தனக்கு தேவையான அத்தனை பொருட்களையும் அடுக்கியவள் தனது உடைப்பெட்டியை எடுத்துக்​

கொண்டு புறப்பட எத்தனித்த சமயம் அவளது மணிக்கட்டு பகுதியை இறுக பற்றிய சிவேஷோ,​

"எங்க போற குள்ளச்சி ? அதுவும் எனக்குப் பதில் சொல்லாம ?"​

என்றவனை உணர்ச்சி துடைத்த பார்வை பார்த்தவள்​

"அப்படி போன உங்ககிட்ட பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைனு அர்த்தம் மிஸ்டர் சிவேஷ்​

அடுத்து என்ன குள்ளச்சின்னு கூப்பிடாதீங்க கேட்கவே நாராசமாயிருக்கு, என் பெயர் பத்மலோசனா அப்படியே கூப்பிடுங்க "​

என்று மரத்த குரலில் கூற, சிவேஷின் கைகள் தானாக விலகியது.​

"மிஸ்டர் சிவேஷா ? குள்ளச்சி நான் உன் ஷிவுடி என்ன மாற்றானா பார்க்காதடி "​

என்றதும் அவனை உறுத்து விழித்தவள்​

"எட்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவத்த மறந்துருக்க மாட்டிங்கனு நம்புறேன் மிஸ்டர் சிவேஷ் "​

என்றவள் அவன் சிந்தித்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வெளியே​

செல்ல எத்தனிக்க அவளது வழியை மறித்துக் கொண்டு நின்றாள் கனிவிழி,​

அவளைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த பத்மாவோ,​

"மிஸ் சிதம்பரம் நீங்க என் வழிய விட்டு நகர்ந்தா நல்லாயிருக்கும் நான் போகணும் "​

என்றாள் உணர்ச்சியில்லா குரலில், அப்போதும் வழியை மறித்தபடி நின்ற கனிவிழியோ​

"அக்கா ப்ளீஸ்க்கா வீட்ட விட்டுப் போகாதீங்க எங்கள மீறி உங்கள யாரு என்ன செய்ய முடியும் ?"​

என்று கேட்டவளை பார்த்து நக்கலாகப் புன்னகைத்தவள்,​

"எட்டு வருஷத்துக்கு முன்னாடியும் எல்லோரும் வீட்ல தானே இருந்தீங்க ? அப்போ எல்லாரும் என்ன பண்ணீங்கனு ஞாபகமிருக்கா ? "​

என்றதும் கனிவிழி தலைகவிழ்ந்தபடி வழியை விட்டு விலகி நிற்க,​

தனது தங்கையையும் அவளது வருங்கால கணவனையும் பார்த்து​

"வாழ்த்துக்கள் ரெண்டு பேருக்கும்" என்றதும் திடுக்கிட்டு அவளைப் பார்த்த இருவரும்​

'எப்படி உனக்குத் தெரியும் ?' என்பதை போல் பார்த்து வைக்க வெளியே புன்னகையுடன்​

நின்ற பத்மாவின் உள்ளமோ யாருமறியாமல் உள்ளுக்குள் ரத்த கண்ணீர் வடித்தபடி​

'உங்க கல்யாணத்த பத்தி கூட யாரோ கதைக்கிறத வச்சி தான் தெரிஞ்சிக்கணுமில்ல ? அவ்ளோ​

தீண்டத்தகாதவளா போய்ட்டேனில்ல' என்று கதற தான் செய்தது.​

மேலும் அங்கே நின்று அவர்களைச் சங்கடப்படுத்தாது விறுவிறுவெனக் கீழே வந்தவள் வானதியிடம்​

"வாப்போகலாம்" என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வரவும் காயத்ரி சிதம்பரம்​

உட்பட அனைவரும் கனிவிழியின் திருமணத்திற்கு திகதி குறித்துக் கொண்டு வீட்டிற்கு வரவும் சந்தர்ப்பம் சரியாக அமைந்தது.​

உடைப்பெட்டியுடன் கிளம்பிக் கொண்டிருந்த பத்மாவை நோக்கி,​

"கண்ணா எங்கடா போற ? வீட்ல விசேஷத்த வச்சுக்கிட்டு எங்கமா பெட்டியோட கிளம்பிட்ட" என்றபடி அருகில் வந்த பெற்றோரை உதட்டைச் சுழித்து பார்த்த பத்மலோசனாவோ​

"உண்மையான உறவுகளோட இருக்க கிளம்பிட்டேன் மிஸ்டர் அண்ட் மிஸிஸ் சிதம்பரம்"​

என்றாள் உணர்ச்சியற்ற குரலில் அவ்வார்த்தையில் பெரிதும் அடிப்பட்டு போன அவளது​

பெற்றவர்களோ ஏதோ சொல்ல முற்பட அவர்கள் முன் கை நீட்டித் தடுத்தவள்​

"நான் பேசிர்றேன், நான் உங்கள என் அப்பா அம்மாவா நினைச்சு தான் எனக்கு நானே பைத்தியக்காரி முத்திரை குத்திட்டு வாழ்ந்திருக்கேன்,​

ஆனா நீங்க உங்க பொண்ணா நினைச்சிருந்தா ஒரு வர்த்த உன் தங்கச்சிக்கு கல்யாணம்னாவது சொல்லிருப்பீங்க என்னோட​

மனநிலைய பத்தின கவலையிருந்திருந்தா இதோ நிற்கிறாங்களே இவங்கள வேற வீடெடுத்து தங்க வச்சிருப்பீங்க "​

என்று சிவசுப்ரமணியத்தையும் அவரது குடும்பத்தையும் சுட்டிக்காட்டியவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்க அதை விழுங்கிக் கொண்டு,​

"ஒரு பொண்ணு வேலை பார்க்குற இடத்துல, பஸ்ல ஏன்! ஸ்கூல்ல கூடப் பாதுகாப்பில்லாம உணரலாம்​

அது சமூகத்தோட குறை அத திருத்துறது மாத்துறது ரொம்ப கஷ்டம் ஆனா எந்த ஒரு பொண்ணும்​

தன்னோட சொந்த வீட்டையே பாதுகாப்பில்லாம உணரக் கூடாது ஆனா நான் இந்த வீட்ல​

நிம்மதியா தூங்கி எட்டு வருஷத்துக்கு மேல ஆகுது தெரியுமா ? "​

என்று அவள் ஒவ்வொரு விடயமாய் கூற கூற அவளது பெற்றோர்களுக்கு வலித்ததோ இல்லையோ​

வானதிக்கு தான் அதிகமாக வலித்தது. பத்மாவின் கையைப் பிடித்த வானதியோ,​

"இவங்க கிட்ட பேசி ஒரு பிரயோஜனமுமில்லை வா நம்ம வீட்டுக்குப் போகலாம்"​

என்று இழுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர​

"ஒரு நிமிஷம் வானதி"​

என்ற காயத்ரியின் குரலில் இரு தோழிகளினதும் நடை தடைப்படவும் வீட்டினுள்ளேயிருந்த கனிவிழியும் சிவேஷும் வெளியே வரவும் நேரம் சரியாகயிருந்தது.​

காயத்ரியோ அவர்களின் அமைதியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு,​

"லோசனா இன்னைக்கு உன் கூட வர முடிவு பண்ணி வரலாம் ஆனா உங்க வீட்ல என்ன வசதியிருக்கு​

என் மக இந்த வீட்டுல ராஜகுமாரி மாதிரி வளர்ந்திருக்கா அவளால உன்னோட அந்த​

வீட்டுல ரெண்டுநாள் அவளால தாக்குபிடிக்க முடியுமா ? "​

என்றதும் வானதிக்கு தன்னுடைய ஏழ்மை நிலையை நினைத்து மனம் நொந்து தான் போனது அதை​

புரிந்துக் கொண்ட பத்மலோசனாவுக்கோ கோபம் சுர்ரென்று ஏற,​

"மிஸிஸ் சிதம்பரம் கொஞ்சம் நிறுத்துறீங்களா ? இந்தக் கார் இந்தக் கட்டிடமெல்லாம் எப்படி​

வந்ததுன்னு நினைவிருக்கா உங்களுக்கு ? இந்த வீடு வாசல் சொத்து எல்லாம் வந்ததுக்கு அப்பறம்​

தான் என்னோட தூக்கம் போச்சு நிம்மதி போச்சு ஏன் உங்க கையால கொடுக்குற சாப்பாடு கூட நஞ்சா மாறிப் போச்சு​

நிம்மதி சந்தோஷமெல்லாம் நகை நட்டுலயும் சொத்துபத்துலயும் கிடையாது உறவுகள்ட்டயிருக்கு​

அப்படி பார்த்தா என்னோட எட்டு வருஷ வாழ்க்கை அதாவது அழகான வாழ்க்கைய வழிப்பறி​

பண்ண நீங்க என்னோட உறவா? என்ன எட்டு வருஷமா தாயா தாங்கினாளே இவ தான்​

என்னோட உண்மையான உறவு இதோ நிற்கிறாளே இந்த வானதி, இவ என்னோட அக்கா​

இவள யாராவது தப்பா பேசினா அப்பறமா நடக்குறதே வேற"​

என்றவள் சிவேஷ் அருகே வந்து,​

"நட்புன்னா என்ன ? உறவுன்னா என்னான்னு இதோ நிற்கிறாளே என்னோட வானு அவள பார்த்துக் கத்துக்கோ"​

என்றவள் கனிவிழியிடம் திரும்பி,​

"சகோதரின்னு எனக்கு ஒருத்தி மட்டும் தான் இப்பயும் எப்பயும் அது என்னோட வானதி அக்கா மட்டும் தான் நீயில்ல"​

என்றபடி உடைப்பெட்டியை அவர்கள் வந்த கேப்பின் டிக்கியில் வைத்தவள் கேப்பினுள் ஏறப் போக அவளது கையைப் பிடித்துத் தடுத்த சிதம்பரமோ,​

"அம்மாடி இப்ப உன்ன யாரும் எதுவும் பண்ணமாட்டாங்க உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா ? வாடாக் கண்ணா வீட்டுக்குப் போவோம்"​

என்று கெஞ்சியவரை சட்டை செய்யாது உச்சுக் கொட்டிய பெண்ணவளோ,​

"எட்டு வருஷத்துக்கு முன்னாடி நீங்க எனக்கு அந்த நம்பிக்கைய கொடுத்திருக்கனும் ஆனா உங்களுக்கு உங்க வைப்போட சொல் தானே வேதவாக்கு"​

என்று உணர்ச்சி பெருக்கில் பேசியவள் ஒரு நிமிடம் ஆழ்ந்த மூச்செடுத்தபடி உணர்ச்சி துடைத்த குரலில்​

"அதெல்லாம் முடிஞ்ச கதை எதையும் மாத்த முடியாது​

இனி ஒரு நிமிஷம் கூட நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்"​

என்றவள் அவரது பதிலை எதிர்ப்பார்க்காமலே அங்கிருந்து கிளம்பி விட்டாள்.​

அரசாங்க டெண்டரை கைப்பற்றிய சந்தோஷத்துடன் தனது வீட்டிற்கு வந்த ஆதித்தனோ தனது ஓய்வறைக்குள் இருக்கும் ரகசிய அறைக்குள் நுழைந்தவன்,​

"மல்லிகா அக்கா இந்த முறையும் நான் போட்டியில நான் ஜெயிச்சுட்டேன் முந்தியெல்லாம் நீங்கத் தான்​

எனக்கு ஸ்வீட் பண்ணிக் கொடுப்பீங்க இப்ப நான் உங்களுக்குப் பிடிச்ச சாக்லேட் வாங்கி வந்துருக்கேன் "​

என்று பேசிக் கொண்டிருந்தவன் கண்களில் கண்ணீர் தடம் எதிரே அவன் உலகில் அதிகமாக அன்பு​

செலுத்திய மல்லிகா அக்காவின் புகைப்படம் மாலையுடன் சுவரில் மாட்டப்பட்டிருக்க,​

அதைப் பார்த்தப்படியே சிகாரை புகைக்கத் தொடங்கிய ஆதித்தன் கண் முன்னால் அவனது பிள்ளை பருவ காட்சிகள் படமாக விரியத் தொடங்கியது.​

கொழும்பு சினமன் கார்டன், பெரும்பாலான பணக்காரர்களின் வதிவிடமாகத் திகழும் பகுதி​

அங்கு வேதநாயகம் ரெசிடென்சில் தான் அருணனின் இளமைக் காலம் கழிந்தது.​

தாய் தந்தை சித்தி சித்தப்பா அக்கா அண்ணன் எனப் பல உறவுகள் அவனைச் சுற்றியிருந்தும் பிறந்தநாள்​

முதல் வேலையாட்களால் தான் பராமரிக்கப்பட்டான். அவனது உறவுகளாக அவனைச் சுற்றியிருந்த​

அத்தனை பேருக்கும் கடைக்குட்டியான அவனிடம் விளையாடவும் பாசத்தை காட்டவும்​

நேரமில்லை என்பது தான் மிகவும் மோசமான உண்மை, அப்படியான சூழ்நிலையில் வளர்ந்தவனுக்கு​

கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட தேவதை தான் அவனுடைய மல்லிகா அக்கா,​

குணத்தில் மட்டுமல்ல அழகிலும் தேவதை தான் வட்ட முகம் அதில் இயற்க்கையாகவே வில்லென​

வளைந்த அடர்த்தியான புருவம் கூர்நாசி எப்போதும் சிரிக்கும் இதழ்கள் எனக் கருமை கலந்த​

ஒரு அழகான நிறத்துடன் இருக்கும் மல்லிகாவோ அன்பால் செய்யப்பட்டவள் போலவே காட்சியளிப்பாள்.​

அன்றும் எப்போதும் போலப் பள்ளி முடிந்து வந்த எட்டு வயது ஆதித்தன், சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த மல்லிகாவின் கையைச் சுரண்ட, அவனைப் பார்த்துப் புன்னகைத்த மல்லிகாவோ​

அவனருகே மண்டியிட்டு அமர்ந்தபடி, "என்ன அருண் தம்பி ? " என்றாள் கண்களை உருட்டியபடி​

அவளுக்கு எப்போதும் தன்னை 'அக்கா அக்கா' எனச் சுற்றி வரும் ஆதித்தனின் மேல் அன்பு​

அதிகம் அவனது பால் நிறமும் குட்டி குட்டி மின்னல் வெட்டும் கண்களும் அவள் இஷ்ட தெய்வமான​

கண்ணபிரானையே அவளுக்கு நினைவுபடுத்த வந்த நாள் முதல் அவளுடன் ஐக்கியம் ஆகிக்​

கொண்டாள்.​

ஆதித்த அருணனோ அவள் கையில் சிறிய சாக்லேட்டை திணித்தபடி அவளது கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டவன்,​

"இன்னைக்கு ட்ராவிங் காம்பெட்டிஷன்ல எனக்குத் தான் பர்ஸ்ட் பிளேஸ்க்கா அது தான் உங்களுக்குச் சாக்கி "​

என்று கூற அவனது தலையைக் கலைத்து நெற்றியில் முத்தமிட்ட மல்லிகாவோ,​

"இருங்க தம்பி உங்களுக்குப் பிடிச்ச கேசரி பண்ணிக் கொடுக்குறேன்" என்று கூறி விட்டு அவன் கொடுத்த சாக்லேட்டில் பாதியை அவனுக்கு உடைத்து கொடுக்கவும்​

நிகழ்காலத்தில் அவனது கைப்பேசி ஒலிக்கவும் நேரம் சரியாகயிருந்தது நினைவிலிருந்து மீண்டவன்​

கண்கள் கோபத்திலும் கவலையிலும் சிவந்திருந்தது.​

அழைப்பேசி அழைப்பையேற்றவன்​

"ஹலோ" என்றான் கம்பீரமான குரலில்​

அந்தப்பக்கம் என்ன கூறப்பட்டதோ கண்களில் பழிவெறி மின்ன "இப்போவே வாரேன்"​

என்றபடி அழைப்பைத் துண்டித்தவன் அவனுக்குச் சொந்தமான பாழடைந்த இரும்பு குடோனுக்கு​

தான் சென்றான்.​

அங்கே அருணனின் குடோனிலோ, ஆதித்தனின் அண்ணனும் பெரியப்பாவின் மூத்த மகனுமான சித்தார்த் நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டிருக்க, அவனது ஒவ்வொரு நகக்கண்ணிலும் குண்டூசியை சிவேஷ்​

செலுத்திக் கொண்டிருந்தானென்றால் அசேலவோ அவனது ரத்த மாதிரியையெடுத்து ஏதோ பரிசோதனை செய்துக் கொண்டிருந்தான்.​

அறியாமல் பூக்கும்...​

********************************************************************************************************* ஹாய் மக்களே நான் தான் உங்கள் NNK -81 அம்புஜம், கதையின் மூன்றாவது அத்தியாயத்தை பதிந்து விட்டேன் உங்கள் கருத்துக்களை கமெண்ட் செக்க்ஷனில் சொல்லிட்டு போங்க எப்படியும் கதைய முடிச்சிருவேன் சோ பயப்படாம படிங்க, வாரத்துக்கு மூணு யூடி தர ட்ரை பண்றேன் அதே போல போட்டி முடியும் வரை அனைத்து எழுத்தாளர்களுக்கும் உங்கள் ஆதரவை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

 
Status
Not open for further replies.
Top