எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மிஞ்சியின் முத்தங்கள்- டீஸர் கதை திரி

Status
Not open for further replies.

NNK-50

Moderator
வணக்கம் நட்புகளே இதோ குட்டி டீஸர்🥰🥰🥰


“என்ன செய்ய பையன் ஜாதக்கத்தோட இந்த பொண்ணு ஜாதகம் தான் சேருது, அவனுக்கும் இந்த சித்திரை மாசம் வந்தா முப்பது வயசு ஆகுது , அதான் இந்த தடவ அவன் ஊருக்கு போறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சுடலாம்னு செஞ்சிட்டேன்” என்று பெருமை பேசினார் ராஜவேலு வந்திருந்த உறவுகளிடம்.

“பொழப்பற்ற நாசுவன் பொண்டாட்டி தலையை செரச்சானாம்… அப்படிதான் இருக்கு உன் புருஷன் கதை” என்றார் பார்த்திபன் தன் அக்கா பார்வதியிடம்.

“ஏலே உன் மாமாடா” என்றவர் தமையனை முறைக்க.

“அப்போ அப்போ ஞாபகப்படுத்து இல்லனா மறந்துடுவேன்” என்றவர்.

“இவர் என்ன சாதனை செஞ்சிட்டார்ன்னு இப்போ அவருக்கு அவரே போஸ்டர் ஓட்டுறாரு” என்றார் மாமனை பார்த்துக்கொண்டே.

“அட சும்மா இருடா ஏதோ இப்போதான் என் மகனுக்கு ஒரு நல்லது நடந்திருக்குன்னு நானே நிம்மதியா இருக்கேன் , கடைசில தங்க விக்கிரகம் மாதிரி ஒரு மஹாலக்ஷ்மியை வீட்டுக்கு கொண்டுவந்துருக்கான்”.

“ஆனாலும் தம்பி நீ கொண்டு வந்த சம்பந்தம் ரொம்ப அருமை, மருமவளை எனக்கு அவ்ளோ பிடிச்சுருக்கு” என்றார் மகிழ்ச்சி தளும்ப.

“சரியாப்போச்சு நா கொண்டுவந்த சம்பந்தமா?? என் மாப்ள அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டான் கொடிமலர்தான் அவன் பொண்டாட்டின்னு”.

“அவன் நடத்திக்கிட்ட அவனோட கல்யாணத்துக்கு எல்லாரும் பட்டுக்கட்டி , பல்ல ஈன்னு காமிச்சு போஸ் கொடுத்து வயிறார சாப்பிட்டு வந்து வம்பு பேசிட்டு இருக்காங்க” என்க.

தமையனை ஆச்சர்யமாக பார்த்த பார்வதி “அஞ்சு வருஷமா!!!! என் புள்ள மனசுல இந்த ஆசை இத்தனை வருஷமா இருந்திருக்கா!, ஏண்டா அஞ்சு வர்ஷம் முன்னாடியே உனக்கு தெரியும்னா அப்போவே என் மவனுக்கு கல்யாணம் பண்ணிருக்கலாம்ல இப்போ ரெண்டு புள்ள இருந்துருக்கும்”.

“எப்போவும் என்னை சொல்லுவ உனக்குத்தான் புத்தி இல்ல” என்ற அக்காவை எதை கொண்டு அடிக்க என்று பார்த்த பார்த்திபன்.

“அந்த புள்ள அப்போ பத்தாப்பு படிச்சுட்டு இருந்துச்சு , சின்ன புள்ளய கல்யாணம் பேசினாங்கன்னு உன் புருஷனையும் உன்னையும் தூக்கி உள்ள வெச்சிருப்பாங்க” என்க.

“ஆமால!” என்று அசடு வழிந்தவர் “ஆனா இந்த மனுஷன் கல்யாணத்துக்கு பொண்ணு பாத்தேன் ஜாதகம் சரியா இல்ல , சரியா இல்லன்னே நாலு வருஷமா சொல்லிட்டு இருந்தாரேடா ,ஒரு வேலை உண்மையா இருக்குமோ” என்ற அக்காவை பார்த்த பார்த்திபன் தலையில் அடித்துக்கொண்டு.

“ஊரையே அடிச்சு ஓலைல போடுற மனுஷனுக்கு…… உரியோடு சேந்து ஊறுகாயும் பறந்துச்சுன்னு சொன்னா நம்புற பொண்டாட்டி” என்றார் கடுப்பாக.

அப்படியென்றால் தன் கணவர் இத்தனை நாட்களாக பொய் சொன்னாரா?, மகனுக்கு திருமணம் செய்ய அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததா “ஏன்” என்ற கேள்வி பார்வதியின் மண்டையை குடைந்தது.


உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் நட்புக்களே - https://narumugainovels.com/index.php?threads/மிஞ்சியின்-முத்தங்கள்-கருத்து-திரி.10721/
 
Status
Not open for further replies.
Top