எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கானல் நீரில் காகித ஓடம் கதை திரி

Status
Not open for further replies.

NNK-90

Moderator
ஹாய் பேபிஸ் நானும் வந்துட்டேன். தை முதல் நாள் பொங்கல் அன்று கதையை ஆரம்பிக்கிறேன். படிச்சிட்டு உங்களுடைய உற்சாகத்தை எனக்கு கொடுங்கள்.

அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

அப்புறம் பேபிஸ் இது ஒரு ஹாரர் கலந்த பேண்டஸி கதை சோ லாஜீக் எல்லாம் எதிர்பார்க்காதீங்க. சந்தோஷமா வாங்க படிச்சிட்டு ஜாலியா வந்து கமெண்ட் பண்ணுங்க.அத்தியாயம்- 1

வெள்ளிக்கிழமை இரவு முழு சித்ரா பௌர்ணமி நிலவு தங்க நிறம் போல் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியான இந்நாளில் தான் பூமியில் இருந்து பூநீறு உருவாகும். ஆதி காலத்திலே ஒருவித உப்பு தோன்றும் என்று சித்தர்கள் பெரும் தவத்தால் கண்டுப்பிடித்து இருந்தனர். பின்னர் அதற்கு பூநீறு என்று பெயரிட்டு இருந்தனர்.

இப்படிப்பட்ட அறியா உப்பின் சக்தியை பெறுவதற்காகவே, பல வருடங்கள் தவம் இருந்து தியானம் செய்த பல சித்தர்கள் நம்பிமலை, கொல்லிமலை, பொதிகை மலை, தீர்த்த மலை, திருவண்ணாமலை, சதுரகிரி மலை, இலங்கையில் கதிர்காமம், கபிலவத்தை, வேலோடு மலை உள்பட பல்வேறு மலைகளில் வலம் வருவார்கள்.

இதில் பாதி சித்தர்கள் மனிதன் கண்களுக்கு அகப்படுவார்கள். சிலர் தெய்வத்தின் சக்தி அருள் கிடைத்து நம் கண்களுக்கு தெரியாமல் வலம் வருவார்கள்.

அப்படி வலம் வருபவர்களை நாம் தெரிந்தோ தெரியாமலோ தொந்தரவு செய்து விட்டோம்... ஆக்ரோஷம் கொண்டு நம் பக்க நியாயத்தை கூட கருத்தில் கொள்ளாமல் சாபத்தை கொடுத்து விடுவார்கள்.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேர்வதால் கடலில் நீராடுவது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கணித்து உள்ளனர்.

கடலில் நீராடினால் இதுவரை சம்பாதித்த பாவங்கள் அனைத்தையும் கரைத்து விடலாம் என்பது ஐதீகம்.

அன்றைய தினம் கடலில் புனித நீராட வருபவர்களுக்காக சித்தர்கள், ரிஷிகள் தயாராக காத்து இருப்பார்கள் என புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே கடலில் புனித நீராடினால் சித்தர்களின் ஆசி பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.

அன்றைய தினம் "மூலிகை குளியல்" செய்வதால் அனைத்து வித தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறுவதாக போகர் சொல்கிறார்.

சித்தர்கள் மட்டுமில்லை. சித்தர்களால் சாபம் பெற்று தண்டனை அனுபவித்துக் கொண்டு இருக்கும் மானிட பிறவிகளும் மூலிகை குளியலால் சாபத்திலிருந்து விமோச்சனம் பெறலாம்.

அதே போல் சித்ரா பௌர்ணமியான இன்றைய நாள் இரவு பல சித்தர்கள் மூலிகை குளியலுக்காக சென்றுக் கொண்டு இருக்க,

அந்நேரம் பல வருடங்களாக பாதுகாப்பாக பார்த்துக் கொண்டு இருந்த சிவனின் நெற்றிக்கண் பதிக்கப்பட்ட நீல நிற கல்லை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு இருட்டான பாதையில் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடிக் கொண்டு இருந்தாள் சைதன்யா.

"சைத்து இன்னும் கொஞ்ச தூரம் தான்டி. கடல் பக்கம் போயிட்டா போதும், அந்த பௌர்ணமி வெளிச்சம் இந்த கல்லுல பட்டு உயிர்த்தெழும். அதுக்கு அப்புறம் அந்த சிவனே எல்லாத்தையும் பார்த்துப்பார். உன்னோட நம்பிக்கையை மட்டும் விட்டுறாதே" என்று தனக்கு தானே தைரியத்தை கூறியபடி மூச்சு வாங்க ஓடிக் கொண்டு இருந்தாலும், சிவப்பெருமான் மீது அதீத பக்திக் கொண்ட சைதன்யாவின் நம்பிக்கை அவளே அறியாமல் உயிர் பயத்தில் சிறிது சிறிதாக இழக்க தொடங்கியது என்னவோ உண்மை தான்.

தன் பக்தியின் நம்பிக்கை குறைந்துக் கொண்டு போவதை உணர்ந்த சிவனின் நெற்றிக்கண் நீல நிற கல் மீதம் இருந்த தன் பிரகாசத்தை இழந்து போக, மேலும் சோதனைக்கு ஆளானாள் சைதன்யா.

எப்பொழுதுமே தன் மீது அதிகபடியான அன்பையும் பக்தியையும் வைத்து இருக்கும் பக்தர்களை மிகவும் சோதித்து பார்ப்பது தானே அந்த சிவனின் வேலையே. எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் அதாவது உயிரே போகும் நிலை வந்தால் கூட அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மட்டும் அவர் பக்தர்கள் இழந்து விடவும் மறந்து விடவும் கூடாது என்று கர்வம் கொண்டவர் ஆயிற்றே அந்த சிவன்.

அப்படி இருக்க தன் நெற்றிக்கண்ணின் நீல நிற கல்லின் ஒரு பகுதியை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு இருப்பவளுக்கு எப்படி அந்த நெற்றிக்கண் உரியவரின் மீது நம்பிக்கை குறையலாம்.

வெகுதூரம் ஓடியவளுக்கு கடல் கண்ணில் படாமல் அது ஒரு பக்கம் ஆட்டம் காட்ட, அந்த மாணிக்கம் நிறைந்த கல்லை களவாடுவதற்காக பின்னாலே துரத்திக் கொண்டு வந்தவர்கள் இப்பொழுது சைதன்யாவிற்கு மிக அருகில் வந்து விட்டார்கள்.

அவளால் அதற்கு மேல் சுத்தமாக ஓட காலில் தெம்பு இல்லாமல் போக, மூச்சு வாங்கியபடி அங்கே இரண்டு பக்கமும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்களுக்கு நடுவில் ஒளிந்துக் கொண்டு வாயை பொற்றியபடி மூச்சு வாங்கினாள்.

விடும் மூச்சு சத்தம் கூட திருடர்களுக்கு கேட்க கூடாதென்று வாயை பொற்றியளுக்கு மூச்சு வேறு அடைத்துக் கொண்டது.

சட்டென்று பொற்றிய கரத்தை எடுத்து பெரு மூச்சு விட்டாள். பின் சுற்றி முற்றி தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தாள்.

அப்பொழுது அவள் தலை முடியை பிடித்து இழுத்துக் கொண்டே "டேய் ஆடு இங்கே இருக்கு" என்று குரல் கொடுத்தான் அவளை துரத்த வந்தவர்களில் ஒருவன்.

மாட்டிக் கொண்டதை உணர்ந்த சைதன்யாயோ தன் தலை முடியை பிடித்து இருந்தவனிடம் வலியில் "அண்ணா முடியை இழுக்காதீங்க அண்ணா ரொம்ப வலிக்குது" என்று தன் முடியை அவன் கையிலிருந்து பிரிக்க முயன்றாள்.

அண்ணா என்ற சொல்லை கேட்டதுமே அந்த திருடனுக்கு கண் வேர்த்து போய் நீர்த்துளிகள் கோர்த்து "அண்ணாவா?" என்று மிகுந்த பாசத்துடன் கேட்டான்.

அதை கேட்டு சட்டென்று சைதன்யா தலையை நிமிர்த்தி பார்த்து 'ஓ அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் வீக்னெஸா இவன்' என்று நினைத்தவளுக்கு புது நம்பிக்கை பிறக்க, "ஆமா அண்ணா. நீங்க அப்படியே என்னோட அண்ணன் சுப்ரமணி போலவே ரொம்ப அழகா கொழு கொழுனு இருக்கீங்க. அவனுக்கு நான்னா ரொம்ப உயிரு. எனக்கு சின்னதா வலி..." என்று சொல்லியவள் உடனே "ஸ்ஸ்ஸ்..." என்று அவன் பிடித்து இருந்த முடியை பார்வையால் காட்டி "வலினா கூட சுப்ரமணியால தாங்கிக்கவே முடியாது. உங்களை போல தான் அவனுக்கும் சட்டுனு கண்ணெல்லாம் வேர்த்திடும்" என்று கூற,

அடுத்த கணம் அவள் தலை முடியை பிடித்து இருந்த கையை எடுத்தவன் மெல்ல நாய் குட்டியை தடவி விடுவது போல் வலித்த இடத்தை தடவி கொடுத்து "இப்போ வலிக்குதாம்மா?" என்று கேட்டான்.

அவளோ கண்களில் நீலிக் கண்ணீரை வர வைத்துக் கொண்டு "இ... இல்லை அண்ணா... இல்லை" என்று அந்த சரோஜா தேவி அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு நடித்தாள் சைதன்யா.

ஆனால் அவள் மனமோ 'சண்டாள புடிச்ச பையன், எருமைமாட்டு கையை என் தலையில் வச்சி தடவி, தலையை கலைச்சி விட்டானே ச்ச' என்று உள்ளுக்குள் திட்டியவள் அங்கே நின்ற கார் கண்ணாடியை பார்த்து கலைந்த தலை முடியை சரி செய்தாள்.

அச்சமயம் அவர்கள் அருகில் ஓடி வந்த மற்ற ரவுடிகள் "ஏய் ஒழுங்கா அந்த மாணிக்க கல்லை கொடுடி" என்று கத்திக் கொண்டு சைதன்யாவை நெருங்க, சட்டென்று சைதன்யா அவளுக்கு கிடைத்த புதிய அண்ணன் பின்னால் ஒளிந்துக் கொண்டு பாப்பா போல் பாவமாக முகத்தை வைத்து அவனை நிமிர்ந்து பார்த்து "அண்ணா..." என்றாள்.

அவ்வளவுதான் அந்த ஒற்றை வார்த்தையில் ஆயிரம் யானை பலம் வந்தது போல் அவனின் புத்தம் புதிய தங்கையை நெருங்கி வந்தவனின் நெஞ்சில் எட்டி உதைத்தவன் "யாரை அடிக்க வர? அவ இப்போ எனக்கு தங்கச்சிடா" என்று கர்ஜித்தான்.

அதை கேட்டு மற்றவர்கள் அதிர்ந்து போக, அடி வாங்கி கீழே நெஞ்சை பிடித்துக் கொண்டு உருண்டவன் அந்த வலியிலும் "ஏய் அந்த பொண்ணு கிட்ட யாரும் போகாதீங்கடா. இவன் எந்த அளவுக்கு தொழில நேர்மையா இருப்பானோ அதை விட தங்கச்சி பாசம் முத்தி போய் மூளை இழந்த முட்டாப் பையன்" என்று கத்தினான்.

அதை கேட்டு யார் அதிர்ச்சி ஆனார்களோ இல்லையோ அதிகபடியான மின்னல் தாக்கி ஆடிபோனது என்னவோ சைதன்யா தான்.

'அய்யோ இவன் அண்ணன் சைக்கோவா!' என்று கண்கள் விரிய தனக்குள்ளே கேட்டுக் கொண்டவள் அடுத்த நொடி அடி வாங்கியவன் அருகில் ஓடிச் சென்று கொலை செய்ய வந்தவர்களிடமே "அய்யோ அண்ணா தெரியாம அவரை அண்ணானு சொல்லிட்டேன். ப்ளீஸ் முதல என்னை காப்பாத்துங்க" என்று மெதுவாக கேட்டாள்.

சைதன்யா அருகில் வந்ததும் தரையில் கையை ஊன்றியபடி பின்னால் சென்றவன் "ஏம்மா கொஞ்சம் தள்ளி போ. அப்புறம் உன்னை போட வந்த நாங்க தான் இவன் கையால உயிரை விடணும்" என்று இப்பொழுது அவன் கெஞ்ச ஆரம்பிக்க,

சுற்றி நின்றவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. குழப்பத்துடன் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக் கொள்ள, அப்பொழுது "என்னடா சொன்ன என் தங்கச்சிகிட்ட?" என்று கர்ஜனையோடு கேட்டுக் கொண்டே கீழே விழுந்தவனின் அருகில் வந்தான் அந்த அண்ணன்.

அவன் வருவதை பார்த்ததுமே அனைவரும் தலைதெறிக்க ஓட, அவர்கள் பின்னால் இப்பொழுது அவர்களை துரத்திக் கொண்டு,

"அய்யோ என்னைய காப்பாத்தாமலே போறீங்களே" என்று கத்திக் கொண்டே ஓடினாள் சைதன்யா.

சைதன்யாவின் பின்னால் அந்த பெரிய உடலை வைத்துக் கொண்டு ஓட முடியாமல் ஓடியபடி "தங்கச்சிம்மா நீ எங்க போற? அண்ணன் இங்கே இருக்கேன்" என்று வர, அவனை திரும்பி திரும்பி பார்த்தபடி ஓடியவளின் மீது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் சைதன்யாவை அடித்து தூக்கியது.
 

NNK-90

Moderator
அத்தியாயம்- 2

ஏழு நட்சத்திர ஹோட்டலில் உள்ள கார் பார்க்கிங்கில் மிடுக்காக நடந்து வந்துக் கொண்டு இருந்தான் அகத்தியன்.

அவன் அருகில் சிறிது தள்ளாடியபடி "ஏன் மச்சி நீயும் தான் குடிச்சி இருக்க. ஆனால் ஸ்டடியா நடக்குற. பட் நானு இவ்வளவு தான்" என்று தன் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் குறைத்துக் காட்டி "குடிச்சேன், என்னால மட்டும் நேரா நடக்கவே முடியல. ஒரு வேளை பாதையை வளைச்சி வளைச்சி கட்டி வச்சி இருக்கான்னுங்களா?" என்று குடி போதையில் விக்கிக் கொண்டே பேசினான் கார்த்திக்.

அதற்குள் கார் அருகில் வந்த அகத்தியன் கார் கதவை திறந்துக் கொண்டு "எனக்கு என்னுடைய லிமிட் தெரியும் கார்த்திக். உனக்கு உன்னுடைய லிமிட் தாண்டிடும் அவ்வளவு தான் வித்தியாசம். சரி கார்ல ஏறு உன்னை ட்ராப் பண்ணிட்டு நான் கிளம்புறேன். நைட் ஒரு கிளைண்ட் மீட்டிங் இருக்கு. அதுக்கு போய் நான் ரெடியாகணும்" என்று சொல்லிக் கொண்டே காரை எடுத்தான்.

கார்த்திக்கோ நண்பன் அருகில் அமர்ந்தபடி "இப்படி பேய் போல வேலை செஞ்சு பணத்தை சேர்த்து என்னடா பண்ண போற? உனக்கு என்ன குடும்பமா இருக்கு?" என்று அதீத போதையில் தன்னையும் மீறி கார்த்திக் கேட்டு விட,

நண்பனின் கேள்வி சட்டென்று வலியை ஏற்படுத்தினாலும் அதை அடக்கிக் கொண்டு "குடும்பம் இருந்தா தான் பணத்தை சம்பாதிச்சி சேர்த்து வைக்கணுமா என்ன?" என்று கேட்டவனின் கோபத்தின் அளவு கார் சீறி பாய்ந்த வேகத்தில் தெரிந்தது.

அகத்தியன் அனைவராலும் வரவேற்க கூடிய ஆண்மகன் தான். அனைத்து அம்சங்களும் அவனுக்கு கச்சிதமாக இருந்தது. பார்த்ததும் பெண்கள் பித்து பிடித்து போகும் அளவுக்கு ஆணழகன் தான் அவன். பெண்கள் என்ன? ஆண்களும் அவனின் அழகில் மயங்கி தான் இருந்தார்கள். அழகில் மட்டும் போதைக் கொள்ள மாட்டார்கள் அவனிடத்தில், அவனின் ஆளுமையும் அகந்தையையும் பார்த்து பிரமித்து போய் இருக்கிறார்கள்.

அதனாலே சில பணக்கார ஆண்களுக்கு அகத்தியன் என்றாலே பிடிக்காது. ஒரு சிலருக்கு அகத்தியனை பிடிக்கவும் செய்தது.

பிடிக்காதவர்கள் அவனை வீழ்த்தி விட்டு அவன் இடத்திற்கு தான் வர வேண்டுமென்று ஆசைக் கொண்டு உள்ளனர்.

பிடித்தவர்கள் அவன் மீது இனக் கவர்ச்சி விருப்பம் உடையவர்கள்.

அதில் அகத்தியனின் நண்பன் கார்த்திக்கும் அடங்குவான். ஆனால் என்ன மற்ற முதலைகள் போல் இல்லாமல், நண்பன் அழகின் மீதும் கர்வத்தின் மீதும் பொறாமை மட்டும் கொண்டு இருப்பவன். மற்றபடி அகத்தியன் என்றால் கார்த்திக்கு அத்தனை பிரியம்.

அதற்காக கார்த்திக் தன்னினப் பால் கவர்ச்சி கொண்டவன் அல்ல. நண்பனை பிடிக்கும் அவ்வளவே தான்.

அகத்தியன் இல்லாமல் கார்த்திக் எங்கும் சென்றதில்லை. அகத்தியனும் அப்படி தான் கார்த்திக் இருந்தால் மட்டுமே பார்ட்டிகளில் கலந்துக் கொள்வான்.

நண்பன் மீதும் நண்பனின் குடும்பத்தின் மீதும் அதிகம் பாசமும் அக்கறையும் கொண்டவன் அகத்தியன். சிறு வயதிலிருந்தே குடும்பத்தை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்தவனுக்கு வரமாக கிடைத்தவர்கள் தான் கார்த்திக்கின் குடும்பம்.

இதோ இப்பொழுது கூட, கார்த்திக்கின் பெண் தோழி ஒருவளுக்கு பிறந்த நாள் என்று தான் அகத்தியனை வலுக்கட்டாயமாக உடன் அழைத்து வந்து இருந்தான் கார்த்திக். வந்து இருந்தான் என்று சொல்வதை விட, அவனையே அறியாமல் அழைத்து வர வைத்து இருந்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.

கார்த்திக்கின் தோழியின் பெயர் ஜான்வி. பணத்திலே புரளுபவள். தாத்தா வழி செல்வாக்கு கொண்டவளின் பின்னால் அலையாத ஆண்களே இல்லை. அதில் கார்த்திக்கும் அடக்கம்.

எப்படியாவது ஜான்வியை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறான் கார்த்திக்.

ஆனால் ஜான்வியின் பார்வையில் சிக்கியது என்னவோ நம் அகத்தியன் தான். அவனின் அழகிலும் மிடுக்கிலும் வெகுவாக அவன் பால் கவரப்பட்டவள், அவனை தன் கைக்குள் வைத்துக் கொண்டு கர்வத்தோடு வலம் வர வேண்டும் என்று பேராசைக் கொண்டு இருக்கிறாள்.

ஆனால் அகத்தியன் பெண்களையும் சரி ஆண்களையும் சரி அவனை நெருங்க விட்டதில்லை கார்த்திக் மற்றும் கார்த்திக்கின் குடும்பத்தை தவிர. மற்றவர்களை ஒரு எல்லைக்குள் வைத்து இருப்பவன் அவன். இரு பாலினம் மீது விருப்பம் கொள்ளாதவன்.

தனிமையை வெகுவாக விரும்புபவன். இப்பொழுது வரை தனிமையில் தான் வாழ்கிறான்.

ஆனால் இனி...

அந்த இருளான சாலையில் காரை வேகமாக ஓட்டிக் கொண்டு வந்தவனின் கவனம் தன்னையும் அறியாமல் அந்த முழு நிலா பௌர்ணமியின் மீது செல்ல, அவன் கார் அந்நொடி சாலையில் ஓடி வந்துக் கொண்டு இருந்த சைதன்யாவின் மீது ஏறியது.

சைதன்யாவிற்கு முன்னால் ஓடிக் கொண்டு இருந்தவர்கள் கார் வேகமாக வருவதை பார்த்ததுமே விலகிச் செல்ல, பின்னால் ஓடி வந்த சைதன்யா சுதாரிப்பதற்குள் அகத்தியனின் கார் அவளை தூக்கி வீசி இருந்தது.

பெரிய சத்தத்துடன் கார் நிற்க, அகத்தியனும் கார்த்திக்கும் ஸ்தம்பித்து போய் விட்டனர்.

கார்த்திக்கோ "டேய்..." என்று நண்பனை பார்க்க,

அகத்தியனோ அவசர அவசரமாக இருக்கை பட்டையை கழட்டிக் கொண்டு வெளியேற போனான்.

சட்டென்று நண்பனின் கரத்தை பிடித்து தடுத்த கார்த்திக் "எங்கே போற?" என்று பயத்தில் கேட்டான்.

அவனை கடுப்பாக பார்த்த அகத்தியன் "லூசாடா நீ? அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுனு பார்க்க வேணாமா?" என்று சொல்லிக் கொண்டே நண்பனின் கரத்தை தட்டிவிட்டு கீழே இறங்கி வந்தவன் குருதி வழிய அந்த தார் ரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சைதன்யாவின் அருகில் வேகமாக ஓடினான்.

கார் அடித்து தூக்கியதில் சைதன்யா பத்தடி தள்ளிக் கொண்டு போய் விழ, இதை பார்த்த ரௌடிகளோ அங்கே வரிசையாக நின்று இருந்த கார்களுக்கு பின்னால் சென்று ஒளிந்துக் கொண்டனர்.

ஆனால் சைதன்யாவின் அருகில் திடீரென்று முளைத்த அண்ணன் மட்டும் மண்டியிட்டு சிறு பிள்ளை போல் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு "தங்கச்சிம்மா... தங்கச்சிம்மா..." என்று தேம்பி தேம்பி அழுதபடி அமர்ந்து இருந்தான்.

அவனை விசித்திரமாக பார்த்தபடி வந்த அகத்தியன் சைதன்யாவின் அருகில் அமர்ந்து அவளை திருப்பினான்.

தன் உயிர் போகும் நிலையிலும் சைதன்யா அந்த கல்லை தன் நெஞ்சோடு அணைத்தபடியே கெட்டியாக பிடித்துக் கொண்டு இருந்தாள்.

முகம் எல்லாம் உதிரம். பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தவளை பார்த்து, அகத்தியனின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்க, அவளை தொட்டு திருப்பியதில் ரத்தம் படிந்த தன் கரத்தை வலித்த இதயத்தின் மீது வைத்து அழுத்தினான்.

அதில் சைதன்யாவின் குருதி அகத்தியனின் இதயப்பகுதியின் மீது ஒட்டிக் கொண்ட கணம், பெரிய மூச்சோடு கண்களை திறந்த சைதன்யா முதலில் பார்த்தது என்னவோ அகத்தியனை தான்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி அகத்தியனை பார்த்தவள் கரம் தானாக எழுந்து அவன் கன்னத்தை வருடி கொடுத்து "வந்துட்டீங்களா அகத்தியன்? உங்களை தேடி தான் வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே அவள் இதயத்தோடு அணைத்து இருந்த அந்த நீல நிற கல்லை அவன் கரத்தில் திணித்து இருவரின் கரத்தையும் இணைத்தபடி இருந்த கல்லை அவனின் இதயத்தின் அருகில் எடுத்துச் சென்று அழுத்திக் கொண்டு "இது உங்களுக்கு சேர வேண்டியது. பத்திரமா பார்த்துக்கோங்க" என சொல்லிவிட்டு அவள் தலை அப்படியே அவன் மடி மீது சாய்ந்தது.

இவ்வளவு நேரம் ஒளி இழந்து இருந்த அந்த நீல நிறம் தன்மை கொண்ட நெற்றிக்கண் குருதி வழிந்த இருவரின் கரத்தோடு சேர்த்தபடி காளையவனின் உயிர் துடிப்பு பகுதியோடு வைத்த அந்த கணம் மீண்டும் ஒளிர தொடங்கியது.
 

NNK-90

Moderator
அத்தியாயம் - 3

சைதன்யா கொடுத்த நீல நிற கல்லையும் அவளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்த அகத்தியன் அருகில் வந்த கார்த்திக் "டேய் என்னடா பண்ற? வாடா போயிடலாம்" என்று தங்களை யாராவது கவனிக்கிறார்களா என சுற்றி முற்றி பார்த்தான் கார்த்திக்.

ஆனால் அகத்தியனோ அவளை விட்டுச் செல்ல மனம் இல்லாமல் "ஹாஸ்பிடல் கொண்டு போலாம்டா" என்று சொன்னவன் அப்பொழுது தான் சைதன்யாவின் முகத்தை ஆழமாக பார்த்தான்.

பின் தன் நண்பனை திரும்பி பார்த்து "இந்த பொண்ணை எனக்கு ஏற்கனவே தெரியும்டா" என்று சொன்னதை கேட்டு அதிர்ந்த கார்த்திக்,

"ஏற்கனவே தெரியுமா? எப்படி?" என்று கேட்டான்.

அகத்தியனோ "இன்னிக்கு காலையில தான் பார்த்தேன். கிளைன்ட் மீட்டிங் கேன்சல் ஆயிடுச்சுனு அப்செட்ல உன்னை பார்க்க வரும் போது கார் பார்க்கிங்ல என்று நடந்ததை சுருக்கமாக சொல்ல ஆரம்பித்தான்.

பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அவன் காரில் அகத்தியன் கதவை திறந்துக் கொண்டு ஏறிய கணம் வேகாக யாரோ ஒரு பெண் காரில் ஏறி பதற்றமாக அமர்ந்தாள்.

திடீரென்று தன் காரில் ஏறிய முகமூடி அணிந்து இருந்த பெண்ணை பார்த்த அகத்தியன்,

"ஹலோ யாரு நீ? ஒழுங்கா காரை விட்டு இறங்கு" என்று மிரட்டினான்.

சைதன்யாவோ உயிர் பயத்தில் அகத்தியனின் இருக்கரத்தையும் பிடித்துக் கொண்டு "ப்ளீஸ் ப்ளீஸ் என்னை கொலை பண்ண வரானுங்க சார். ஒரு இரண்டு நிமிஷம் மட்டும் காருக்குள்ள ஒளிஞ்சிக்கிறேன்" என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.

அகத்தியனோ இரக்கம் என்பது துளியும் இல்லாமல் "உன்னை கொலை பண்ண வந்தா எனக்கு என்ன வந்துச்சு? ஃபர்ஸ்ட் காரிலிருந்து இறங்கு. முன்ன பின்ன தெரியாத உனக்கு நான் ஏன் உதவி செய்யணும்?" என்று முகத்தை அருவெறுப்பாக வைத்துக் கொண்டு பேசியவனை வெறுப்பாக பார்த்த சைதன்யா,

"ச்சீ நீயெல்லாம் மனுஷனா? ஒரு அழகான வயசு பொண்ணு உயிருக்கு ஆபத்துனு உன் கிட்ட வந்து உதவி கேட்டா, மனசாட்சியே இல்லாமல் இருக்க. ஒரு இரண்டு நிமிஷம் உன்னோட கார்ல நான் ஒளிஞ்சிட்டு இருக்கிறதினால என்ன வந்திட போகுது?" என்று கோபத்துடன் கேட்க,

ஏற்கனவே சரியில்லாத மனநிலையில் இருந்த அகத்தியன், முன் பின் தெரியாத ஒரு பெண் தன்னை கேவலமாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் விறுவிறுவென காரிலிருந்து இறங்கியவன் அங்கே கட்டை, கத்தி, அருவாளோடு சைதன்யாவை தேடிக் கொண்டு இருந்தவனை நோக்கி சொடக்கிட்டு படும் நக்கலாக,

"ஹலோ பாஸ் நீங்க தேடுற அந்த அழகான திருட்டுப் பொண்ணு என் கார்ல தான் மறைஞ்சி இருக்கா. வந்து அவளை பிடிச்சிட்டு போங்க" என்று சொன்னதை கேட்டு சைதன்யாவிற்கு தூக்கிவாரி போட்டது.

'அட மூளையில்லாத முட்டாப் பையலே. விட்டா இவனே கையை பிடிச்சி அவனுங்க கிட்ட பிடிச்சி கொடுப்பான் போல. ஒரு உதவி கேட்டது தப்பா' என்று தன் மனதிற்குள் புலம்பிக் கொண்டே அடுத்த பக்கம் கதவை திறந்துக் கொண்டு மீண்டும் அங்கே இருந்து ஓட தொடங்கினாள் சைதன்யா.

அவள் ஓடுவதை திரும்பி பார்த்த அகத்தியன் அப்பொழுது தான் அவள் முகத்தை மறைத்து இருந்த துணி விலக, அவள் முகத்தை பார்த்தான்.

தெளிவாக இல்லை என்றாலும் பார்த்ததுமே கண்டுபிடிக்கும் அளவிற்கு அகத்தியனின் மனதில் அவளின் வதனம் பதிந்து இருந்தது. பின் காரை எடுத்துக் கொண்டு அங்கே இருந்து கிளம்பினான் அகத்தியன்.

அகத்தியன் சொன்னதை கேட்ட கார்த்திக்கோ "அடப்பாவி காப்பாத்த சொன்ன பொண்ணை நீயே போட்டு தள்ளிட்ட" என்று கேட்ட நண்பனை நிமிர்ந்து முறைத்து பார்த்த அகத்தியன் "டேய் விட்டா நான் தான் வேணும்னே ஆளை வச்சி இவளை மர்டர் பண்ண சொன்னது போல நீயே வாக்குமூலம் கொடுப்ப போல" என்று கோபமாக கேட்டான்.

கார்த்திக்கோ அமைதியாக நண்பனை முறைத்து பார்த்தவன் "அடிச்ச போதை எல்லாம் தெளிஞ்சுடுச்சி" என்று சொல்லிக் கொண்டே அகத்தியனை பார்த்து "இன்னும் ஏன்டா இப்படியே அந்த பொண்ணை மடியில தாங்கிட்டு இருக்க? எழுந்து வா போகலாம். இங்கே சுத்தி சிசிடிவி கேமரா இல்ல. ஆள் நடமாட்டமும் இல்ல. இவளை நீ கொலை செஞ்சதுக்கு எந்த ஆதாரமும் இல்லை. சோ இப்படியே எஸ்கேப் ஆகிடலாம் வந்திடு" என்று பேசியவனின் பார்வை அப்பொழுது தான் அங்கே தடிமாடு போன்ற உருவத்தில் இருந்த ஒருவன் சிறு பிள்ளை போல் அழுதுக் கொண்டு இருப்பதை பார்த்து "ஆனால் இங்கே ஒருத்தன் இருக்கான்டா" என்றான்.

அப்பொழுது அந்த திடீர் அண்ணனோ "சார் ப்ளீஸ் சார் எப்படியாவது என் தங்கச்சியை காப்பாத்துங்க" என்று வாய் திறந்து பேச ஆரம்பிக்க,

"டேய் நான் சொல்றதை கேளு இவளை இப்படியே விட்டுட்டு வந்திடு" என்று கார்த்திக் மீண்டும் கூறினான்.

அகத்தியனோ கார்த்திக் சொன்னதை கேட்டு சற்று கோபத்துடன் "பைத்தியம் மாதிரி பேசாதடா. தப்பு நம்ம மேல" என்று சொன்னதை கேட்ட கார்த்திக் இடைபுகுந்து "உன் மேல" என்று திருத்தினான்.

அகத்தியனோ தன் கோபத்தை இழுத்து பிடித்து வைத்து கண்களை அழுத்தமாக மூடி திறந்தவன் "சரி என் மேல தப்பை வச்சிட்டு அப்படியே விட்டு வர சொல்றீயா?"

"காலையில அப்படி தானேடா விட்டு போன? இப்போ மட்டும் என்ன அக்கறை?" என்று கேட்ட நண்பனை பார்த்தவனின் கோபம் எல்லைகளை கடந்து போனது.

ஆத்திரமாக பற்களை கடித்த அகத்தியன் "அப்போ இருந்த சூழ்நிலை வேற. இப்போ இருக்கிற நிலைமை வேற. ஆக்சிடென்ட் பண்ணிட்டு அப்படியே விட்டு வர சொல்ற. அந்த பொண்ணுக்கு இன்னும் உயிர் இருக்கு. ஹாஸ்பிடல் கொண்டு போனா காப்பாத்திடலாம்" என்றான்.

அந்த அண்ணனோ இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டு மட்டும் இருப்பதை பார்த்தபடி "யாராவது ஒருத்தர் என் தங்கச்சியை காப்பாத்துங்க சார். இல்லைனா விடுங்க நானே அவளை ஹாஸ்பிட்டல் கொண்டு போறேன்" என்று சைதன்யாவை தூக்க வர,

அவனை சட்டென்று தடுத்த அகத்தியன் "நானே கொண்டு போறேன்" என்றான்.

அதை கேட்ட கார்த்திக்கோ "இது தேவையில்லாத வேலை அகத்தியன். மர்டர் கேஸாக வாய்ப்பு இருக்கு. நாளைக்கே பேப்பரில் 'பிஸ்னஸ் மேன் மிஸ்டர் அகத்தியன் குடி போதையில் அழகான இளம் பெண்ணின் மீது காரை ஏற்றி கொலை செய்து விட்டார்' என நியூஸ் வரும். அந்த நியூஸை உன்னோட ஷேர் ஹோல்டர் எல்லாம் பார்த்தாங்கனு வை உன் பிஸ்னஸ் என்னவாகும் தெரியுமா?" என்று கேட்டான்.

கார்த்திக்குக்கோ எப்படியாவது அங்கே இருந்து தப்பித்து போக வேண்டும் என்ற எண்ணம். தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக் கொண்டு திண்டாட அவன் தயாராக இல்லை.
அதிலும் நம் பத்திரிக்கை ஆட்களை பற்றி தெரியாதா என்ன? சிறு துரும்பை பெரியதாக்க எந்த எல்லைக்கும் போவார்கள் அல்லவா.

கார்த்திக் சொன்னதை கேட்ட அகத்தியனுக்கு எரிச்சலாக இருந்தது. நண்பனை முறைத்து பார்த்து "நீ கிளம்பு கார்த்திக். எந்த பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே சைதன்யாவை தன் கரங்களில் ஏந்தினான்.

அப்பொழுது மயக்கம் தெளிந்து மெல்ல இமைகளை திறந்த சைதன்யா "அ...கத்...தியன்" என்று சொல்லிக் கொண்டே மீண்டும் இமைகளை அழுத்தமாக மூடிக் கொண்டாள்.

தன் பெயரை சொல்லி கூப்பிட்டதும் அகத்தியனின் புருவம் இடுங்க 'இவளுக்கு எப்படி என்னை தெரியும்?' என்று யோசிக்க, கார்த்திக்கும் இதே கேள்வியை தான் கேட்டான்.

அகத்தியனோ உதட்டை பிதுக்கி தெரியாது என்று இருப்பக்கமும் தலையை ஆட்டியவன் நண்பனிடம் கார் கதவை திறக்க சொன்னான்.

கார்த்திக்கோ "இப்போவும் சொல்றேன். இது நமக்கு தேவையில்லாத வேலை அகத்தியா. இவளை இப்படியே விட்டுரு அதான் அவள் அண்ணன் இருக்கான்ல அவன் பார்த்துப்பான். நீ போய் எந்த பிரச்சனையிலும் மாட்டிக்காத" என்று திரும்ப திரும்ப கூறியதை கேட்டு தன் உயிர் நண்பனை முதல் முறை வெறுப்பாக பார்க்க ஆரம்பித்தான் அகத்தியன்.

பின் அங்கே அவர்களுடன் தவிப்பாக நின்று இருந்தவனிடம் கார் கதவை திறக்க சொல்ல, அவனும் சென்று அவசரமாக கதவை திறந்து விட்டான். அந்த அண்ணனும் சைதன்யாவின் அருகில் அமர்ந்து அவள் தலையை தன் மடியில் வைத்து மெதுவாக வருடிக் கொடுக்க ஆரம்பித்தான்.

சைதன்யாவை பின்னிருக்கையில் கிடத்திய அகத்தியன் அவனை விசித்திரமாக பார்த்தபடி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து நண்பனை முறைத்து பார்த்தான்.

கார்த்திக்கோ சுற்றி முற்றி பார்த்து விட்டு வேறு வழியில்லாமல் காருக்குள் நண்பன் அருகில் அமர, அகத்தியனின் கார் அந்த இடத்திலிருந்து சீறி பாய்ந்தது.

அகத்தியனின் கார் சென்றதும் தான் மறைந்து இருந்த ரவுடிகள் வெளியே வந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பின் அதில் இருந்த ஒருவனோ தன் கைப்பேசியில் யாரோ ஒருவருக்கு அழைப்பு விடுத்து நடந்ததை கூறியவன் "அந்த தங்கச்சி சென்டிமென்ட் பைத்தியக்காரன் நந்தீசரனும் அவங்க கூட போயிட்டான் பாஸ். அந்த கல்லும் நீங்க யார்கிட்ட போய் சேர கூடாதுனு இவ்வளவும் பண்ணீங்களோ இப்போ அவன் கிட்டையே சேர்ந்துடுச்சி பாஸ். அந்த சைதன்யா சொன்ன மாதிரி சேர்த்துட்டாள்" என்று கூறியதை கேட்டவன் கைப்பேசி அங்கே இருந்த சுவரின் மீது பட்டு தூள் தூளாக பறந்தது.

அழைப்பில் இருந்தவனோ பயங்கரமான சத்தம் கேட்டு திடுக்கிட்டவன் அடுத்த நொடி அழைப்பை துண்டித்து விட்டு அவனுடன் இருந்த ஆட்களை அழைத்துக் கொண்டு அகத்தியன் போன திசையை நோக்கிச் சென்றனர்.

அதே சமயம் அங்கே கடலில் நீராட செல்ல இருந்த ஒரு சித்தரோ பலமாக சிரித்தபடி "அவனோட சாபத்தை நீக்க போராடி அவன் கிட்டையே போய் சேர்ந்துட்ட போல" என்று முழு பௌர்ணமி நிலவைப் பார்த்து சத்தமாக கத்தினார்.
 

NNK-90

Moderator
அத்தியாயம்- 4

அவர்கள் சென்ற சாலையில் இருப்பக்கமும் ஒரு மருத்துவமனை கூட மூவரின் கண்களிலும் புலப்படவில்லை. எத்திசையில் நோக்கினாலும் அனைத்தும் இருளாகவே இருந்தது.

அகத்தியனுக்கோ மிச்சம் மீதம் இருந்த பொறுமை வேறு சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்க, கார்த்திக் மீண்டும் பழைய புராணம் பாட ஆரம்பித்து விட்டான்.

"இங்க பாரு அகத்தியா ஒரு ஹாஸ்பிடல் கூட காணோம். சொல்றதை கேளு இந்த பொண்ணையும் அந்த ஆளையும் அப்படியே இங்கேயே இறக்கி விட்டுடுவோம்" என்று சொல்லிக் கொண்டே இருந்தவனை முறைத்து பார்த்த அகத்தியன் மீண்டும் சாலையில் கண் பதித்தான்.

அப்பொழுது சற்று தொலைவில் ஒரு வீடு போன்ற அமைப்பு கொண்ட இடத்தில் பச்சை நிறம் கொண்ட விளக்கு மின்னிக் கொண்டு இருக்க, அதை பார்த்த அகத்தியனுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை பிறந்தது போல் அந்த இடத்தை நோக்கி காரை வேகமாக செலுத்தினான்.

அந்த இடத்தை நெருங்க நெருங்க அவன் நினைத்தது போலவே அது சிறிய மருத்துவமனைகளில் வெளியே மின்னும் மருத்துவமனையை குறிப்பிடும் குறியீடு என்று தெளிவாக தெரிந்தது.

உடனே காரை நிறுத்திய அகத்தியன் அவசரமாக கீழே இறங்கி பின் இருக்கைக்கு சென்று சைதன்யாவை இருக்கரத்தாலும் தூக்கிக் கொண்டு உள்ளே போக முயன்றான்.

ஆனால் கதவு தாழ்ப்பாள் போட்டு இருப்பதை உணர்ந்த அகத்தியன் நண்பனை முறைத்து பார்க்க, உடன் கார்த்திக்கோ "டேய் கதவு பூட்டு போட்டு இருந்தா நான் என்னடா செய்ய முடியும்?" என்று அவசரமாக கேட்டான்.

அகத்தியனோ சைதன்யாவை கரங்களில் வைத்துக் கொண்டு சுற்றி முற்றி யாராவது இருக்கிறார்களா என்று தேட ஆரம்பித்தான்.

ஆனால் கண்ணுக்கு எட்டின தூரம் வரை ஒருத்தரும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லாமல் போக, மிகவும் சோர்ந்து போன அகத்தியனின் நம்பிக்கை ஏனோ சிறிது குறைய ஆரம்பித்தது.

அந்நேரம் முகத்தை தீவிரமாக வைத்து இருந்த கார்த்திக் "அகத்தியா ஒரு ஐடியா. நீ இந்த பொண்ணை இப்படியே விட்டு வர போறதில்லைனு தெரிஞ்சுடுச்சி. அதனால என்ன பண்ணுவோம் இவளை தூக்கிட்டு நேரா உன் வீட்டுக்கு போயிடலாம். அப்புறம் என்னோட டாக்டர் ப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான்ல அவனை வர சொல்லி வீட்ல வச்சே இந்த பொண்ணுக்கு ட்ரீட்மென்ட் பார்க்கலாம்" என்று கூறியதை கேட்டு ஒரு நொடி யோசித்தவன் பின் கார்த்திக்கை பார்த்து,

"இப்போ தான் உருப்படியா ஒரு விஷயத்தை சொல்லி இருக்க" என்று சொல்லிக் கொண்டே மீண்டும் சைதன்யாவை காரில் கிடத்தி விட்டு காரை எடுக்க போக, அப்பொழுது கண்ணீர் மல்க நந்தீசரன் யாருடனோ கைப்பேசியில் பேசிவிட்டு வருவதை பார்த்த அகத்தியன் "சீக்கிரம் கார்ல ஏறுங்க. உங்க தங்கச்சியை எப்படியாவது காப்பாத்திடலாம்" என்று கூறினான்.

நந்தீசரனோ இல்லை என்பது போல் இருப்பக்கம் தலையை ஆட்டியவன் "இந்த பொண்ணு என் தங்கச்சி இல்ல சார். நான் கொலை பண்ண வந்த பொண்ணு" என்று சொன்னதை கேட்டு அகத்தியனுக்கும் கார்த்திக்கும் தூக்கி வாரி போட்டது.

"அடப்பாவி கொலை பண்ண வந்த பொண்ணை கொலை பண்ண முடியாம ஆக்சிடென்ட் ஆகிடுச்சினா இவ்வளவு நேரம் அழுதுக்கிட்டு இருந்த" என்று கார்த்திக் கேட்க,

அகத்தியனோ "அப்போ இவ்வளவு நேரம் ஒரு கொலைகாரனையா பக்கத்துல வச்சிட்டு சுத்திட்டு இருந்தோம்" என்று இருவரும் மாறி மாறி சொல்ல, நந்தீசரனும் சிறு பிள்ளை போலவே அழுதுக் கொண்டு கண்ணீரை துடைத்தபடி,

"கொலை பண்ண வந்தவன் தான் சார் நான். ஆனால் இந்த புள்ள என்னை பார்த்து அண்ணன்னு சொல்லிடுச்சி. எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா சார். அப்படியே இவளை போலவே இருப்பா. இவ அண்ணன் சொன்னதும் எனக்கு என் தங்கச்சி ஞாபகம் வந்துடுச்சி சார். யாராவது என்னை அண்ணன் சொல்லிட்டா, அண்ணனோட மெட்டீரியலுக்கு உடனே மாறிடுவேன் சார்" என்று சொன்னதை கேட்டு மற்ற இருவரின் முகமும் அஷ்டகோணலாக மாற,

"இது ரொம்ப பழசா இருந்தாலும் இப்போ பார்க்கும் போது புதுசா தான் இருக்கு. சரி அதான் அண்ணன் மெட்டீரியலுக்கு தாவிட்டீங்கல்ல வாங்க போகலாம். நம்ம நேரத்தை கடத்த கடத்த நீங்க கொலை பண்ண வந்த உங்க தங்கச்சிக்கு தான் ஆபத்து" என்று கூறிய கார்த்திக்கை கேவலமாக முறைத்து பார்த்தான் அகத்தியன்.

கார்த்திக்கோ "என்ன உண்மையை தானேடா சொன்னேன்" என்று நண்பனை நோக்க, அகத்தியனோ "இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேனோ எல்லாம் பைத்தியங்களாவே மீட் பண்ணிட்டு இருக்கேன்" என்று புலம்பியவன்,

"சரி இப்போ நீங்க என்ன பண்ண போறீங்க. நிச்சயமா ஒரு கொலைகாரனை இதுக்கு மேல என் கூட வச்சிட்டு நான் சுத்த தயாரா இல்லை" என்று உறுதியாக கூறியதை கேட்ட கார்த்திக்,

"அப்போ நீ தான்..." என்று பேச வந்தவனை மூடும்படி சைகை செய்து விட்டு நந்தீசரனை பார்த்தான்.

அவனோ "நானே நினைச்சாலும் இப்போ உங்க கூட வர முடியாது சார். என்னோட பாஸ் என்னை உடனே வர சொல்லி உத்தரவு போட்டு இருக்காரு. நான் உடனே போகணும். நீங்க இந்த பொண்ணை காப்பாத்தினதும் எனக்கு ஒரு தகவல் சொல்லுங்க" என்று தன் கைப்பேசி இலக்கத்தை கொடுக்க,

"ஏன் கொலை பண்ணி போடவா?" என்று கார்த்திக் கேட்டான்.

கார்த்திக்கை முறைத்து பார்த்த நந்தீசரன் "இந்த பொண்ணை கொலை பண்றனோ இல்லையோ முதல உன்னை போட்டு தள்ளுறேன்" என்று மிரட்டவும் கார்த்திக் உடனே அகத்தியன் பின்னால் சென்று நின்றுக் கொண்டான்.

அகத்தியனோ "கார்த்திக் கார்ல ஏறு" என்றவன் நந்தீசரனை கோபமாக பார்த்து விட்டு தன் காரை எடுத்துக் கொண்டு அங்கே இருந்து புறப்பட, அவர்கள் பின்னாலே வந்த ரவுடிகளோ நந்தீசரனை சுழன்றுக் கொண்டனர்.

பின் அவனை அங்கே இருந்து அழைத்துக் கொண்டு நேராக தங்கள் முதலாளி இருக்கும் இடத்தை நோக்கிச் செல்ல,

அகத்தியனுக்கோ ஆயிரம் கேள்விகள் இப்பொழுது மனதிற்குள் சுழன்றுக் கொண்டு இருந்தது.

'யார் இந்த பெண்? எதற்காக என்னை தேடி வந்தாள்? என்னை எப்படி தெரியும்? ஏதோ ஒன்னு என் கையில கொடுத்தாளே' என்ற கேள்விகளோடு தன் மேல் சட்டையின் பாக்கெட்டை தடவினான், அதனுள் சைதன்யா கொடுத்த கல் இருக்க, அதை தன் நெஞ்சோடு தட்டிக் கொடுத்தவன் வாகனம் சரியாக அகத்தியனின் பங்களாவின் முன் வந்து நின்றது.

முதலாளியின் கார் சத்தத்தை வைத்தே அந்த வீட்டின் காவலாளி ஓடி வந்து கேட்டை திறந்து விட, அகத்தியனும் காரை எடுத்துக் கொண்டு உள்ளேச் சென்றான்.

பின் காரிலிருந்து இறங்கிய அகத்தியன் பின்னிருக்கைக்கு சென்று சைதன்யாவை தூக்கிக் கொண்டு வீட்டினுள் செல்ல, கார்த்திக்கோ விருப்பமே இல்லாமல் அவர்கள் பின்னால் நடந்தான்.

இதை நுழைவாயின் அருகில் நின்று பார்த்துக் கொண்டு இருந்த காவலாளியோ "என்ன இது நம்ம ஐயாவுக்கு பொம்பளைங்க பழக்கம் எல்லாம் இல்லையே. இப்போ என்ன புதுசா ஒரு பெண்ணை தூக்கிட்டு போறாரு. என்ன விஷயமா இருக்கும். ஒருவேளை இந்த கார்த்திக் சாரோட பழகுற பொண்ணா இருக்குமோ. எல்லாம் இந்த கார்த்திக் சாரை சொல்லணும். நல்லா இருக்கிற எங்க ஐயாவையும் கெடுத்து விடுறாரு" என்று அவ்வீட்டின் காவலாளி கார்த்திக்கை திட்ட, இதே போல் தான் வீட்டின் உள்ளே இருந்த மற்ற பணியாளர்களும் அகத்தியன் ஒரு பெண்ணை தூக்கிக் கொண்டு மாடி ஏறி போவதை பார்த்து தங்களுக்குள் கிசுகிசுத்தபடி சொல்லி வைத்தது போல் கார்த்திக்கையே திட்டினார்கள்.

தங்கள் முதலாளிக்காக இவ்வளவு நேரம் தங்கள் உறக்கத்தை விட்டு முழித்துக் கொண்டு இருந்தவர்களுக்கு இப்பொழுது மெல்ல மெல்ல உறக்கம் எட்டி பார்க்க, அகத்தியன் சாப்பிட வருவானா இல்லையா என்று தெரியாமல் முழித்தபடி இருந்தார்கள்.

அகத்தியனோ நேராக சைதன்யாவை அவன் அறைக்கு அழைத்துச் சென்று மெத்தையில் கிடத்தி விட்டு இடுப்பில் இருக்கரத்தையும் வைத்து "உப்..." என்று ஊதியவன் கழுத்தை இருப்பக்கமும் திருப்பி நெட்டி முறித்து "கார்த்திக் உன்னோட ப்ரெண்டுக்கு கால் பண்ணுடா" என்று சொல்லிக் கொண்டே திரும்பி பார்த்தவனுக்கு கடும் சினமே வந்து விட்டது.

என்ன தான் கார்த்திக்கு போதை சற்று தெளிந்து இருந்தாலும், அதன் தாக்கம் இருக்க தானே செய்யும். இவ்வளவு நேரம் மட்டையாகாமல் இருந்ததே பெரிய விடயம் அல்லவா. அதனால் தான் என்னவோ அகத்தியனின் அறைக்குள் நுழைந்ததுமே அப்படியே அங்கே இருந்த குட்டி சோபாவில் சரிந்தவன் தன்னையும் மீறி நொடியில் உறங்கி விட்டான்.

அதை பார்த்த அகத்தியனுக்கு தான் நண்பனின் மீது கொலைவெறி ஆனது. ஆனாலும் என்ன செய்திட முடியும் போதையின் பிடியில் மட்டையாகி விட்டான் என்று புரிந்துக் கொண்ட அகத்தியன் மூச்சை நன்றாக இழுத்து விட்டு சைதன்யாவை பார்த்தான்.

அவளை பார்த்தால் அடிப்பட்டது போல் மயக்கத்தில் இல்லாமல் நிம்மதியாக உறங்குவது போல் தெரிய, "இப்போ இவ மயக்கத்துல இருக்காளா இல்லை நல்லா தூங்கிட்டு இருக்காளா" என்று புலம்பியவன் இதற்கு மேல் நண்பனை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்று புரிந்துக் கொண்டு தன் கைப்பேசியை எடுத்து அவனுக்கு தெரிந்த மருத்துவரை வர வைக்கலாம் என நினைத்தான்.

ஆனால் கைப்பேசியோ தன் சக்தி குறைந்து உயிர் இல்லாமல் இருக்க, அதை பார்த்து மேலும் கடுப்பான அகத்தியன் இதற்கு பிறகு இப்படியே விட்டால் சரியாக வராது என எண்ணியவன், தானே கலத்தில் இறங்க தயாரானான்.

சட்டையின் கை மடிப்பை இருப்பக்கமும் மடக்கி விட்டவன், அறைக்கு வெளியேச் சென்று "வெதுவெதுப்பான தண்ணீயும் அப்புறம் காயத்தை சுத்தப்படுத்தி அதுக்கு மேல போட்டு விடுற மருந்தையும் கொண்டு வாங்க" என்று உரக்க கத்தியவன் மீண்டும் உள்ளேச் சென்று சைதன்யாவை பார்த்தான்.

முதல் முறை அவன் அறைக்குள் ஒரு பெண் நுழைந்து இருக்கிறாள். அதுவும் அவனின் சொகுசான மெத்தையில் படுத்து கிடந்தவளை இப்பொழுது தான் நிதானமாக பார்க்க தொடங்கினான் அகத்தியன்.

தலை முடியெல்லாம் கலைந்து நெற்றியின் ஓரத்தில் ரத்தம் வழிய, மூடிய இமைகள் சிறு அசைவும் இன்றி, நாசியின் நுழைவாயிலிலும் உதிரம் வழிந்து காய்ந்து இருக்க, உதடோ யாரோ கடித்து வைத்தது போல் வீங்கி இருப்பதை பார்த்தவனுக்கு சட்டென்று புரையேறி விட, அடுத்து அவன் கருவிழி பெண்ணவளின் கழுத்தின் பக்கம் செல்ல போன கணம்,

"ஐயா சுடுதண்ணி" என்று பணியாளரின் பணிவான குரல் அவனை தடுத்தது.

இருமியபடி தலையை தட்டிக் கொண்டே அவரை திரும்பி பார்த்தவனின் பார்வை ஏனோ அவனே அறியாமல் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தது.

எதனால் இந்த சினம் என்று அவனுக்கே தெரியவில்லை.

ஒருவேளை பெண்ணின் மீது இருந்த அவனின் சிந்தனையை கலைத்து விட்டதால் வந்த கோபமாக இருக்குமோ?

அவரை உள்ளே வர விட்ட அகத்தியன், சைதன்யாவிற்கு தேவையான முதலுதவியை செய்து தலையில் கட்டு போட்டு விட்டவன் அடிப்பட்டு இருந்த இடத்தில் எல்லாம் மருந்துகளை தடவினான்.

பின் அவரிடம் அனைத்தையும் எடுத்து போக சொல்லிவிட்டு அவரை அங்கே இருந்து அனுப்பினான்.

அந்த பணியாள் சென்றதும் ஒருமுறை சைதன்யாவை திரும்பி பார்க்க, அப்பொழுது அவளின் இமை சிறிதாக அசைவு கொடுப்பது போல் இருக்க, உடனே ஒரு ஆர்வத்தில் அவளை நெருங்கியவன் "ஏய்..." என்று அவள் கன்னத்தை தட்டிய கணம், சட்டென்று அவன் கரத்தை பிடித்த சைதன்யா அப்படியே அவனை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவள் அகத்தியனை கட்டிபிடித்தபடியே மறுபக்கம் திரும்பி அவன் மார்பில் முகம் புதைத்து மிகவும் வசதியாக கண்களை மூடினாள் சைதன்யா.

இதை எதையும் எதிர்பார்க்காத அகத்தியனோ திகைத்து போக, முதல் முறை ஒரு பெண்ணின் அணைப்பும் வாசமும் அவனின் இதய துடிப்பை அதிகரிக்க செய்ய, அதில் அந்த நீல நிற கல் மிகவும் பிரகாசமாக மின்ன ஆரம்பித்தது.

அதன் தாக்கத்தால் அடிப்பட்டு இருந்த சைதன்யாவின் காயங்கள் தானாக சரியாக மெல்ல அவளின் மூடிய இமைகளை திறந்து நிமிர்ந்து அகத்தியனை பார்த்தாள் சைதன்யா.
 

NNK-90

Moderator
அத்தியாயம்- 5

இருளடைந்த நடுசாமத்தில் வயதான தோற்றம் கொண்ட ஆண் பெண் இருவர் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அவசரமாக அந்த காட்டுப்பகுதிக்குள் நுழைந்தார்கள்.

போகும் வழியில் அவர்கள் பாதையில் கவனம் இருந்தாலும் இதயமோ திக் திக் என்று வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

சுமார் அரை மணி நேரத்தில் கடக்க வேண்டிய குதிரையூற்றை அவர்களின் வேக நடையில் இருபது நிமிடத்தில் கடந்து மேலும் வழுக்குபாறை வழியாக சங்கிலி பாறைக்குச் சென்றடைந்தார்கள். பாதை வழுக்கும் என்பதாலும் வழியில் சிறு சிறு நீரோடைகள் ஓடுவதாலும் இதன் பின் சிறிது மெல்ல நடக்க ஆரம்பித்தார்கள்.

சங்கிலி பாறையைத் தொடர்ந்து கோரக்நாத் குகைக்கு அடைந்து இருக்க, இருவருக்குமே மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே, இருவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.

அதில் அந்த பெரியவரோ "முத்தே நீ குகைக்கு பக்கத்திலே இருடி. நான் பாறை நீர் வழியை தாண்டி போய் இரட்டை லிங்கம் குகைக்கு பக்கத்துல நம்ம சித்தர் இருக்காரானு பார்த்துட்டு சேதி என்னனு கேட்டு வரேன்" என்று தன் துணைவியின் உடல் நலம் கருதி முத்தையா கூற,

கணவனை முறைத்து பார்த்த முத்தழகோ "எனக்கு வயசாகிடுச்சி தான்ய்யா. அதுக்காக என் புள்ளைக்கு என்னாச்சினு தெரிஞ்சுக்காம நான் விட போறதில்லை. இந்த காடுகளின் காக்கும் தெய்வமான வனதுர்க்கை, மலைகளின் காவல் தெய்வமான பிலாவடி கருப்பசாமி என்னை நம்ம சித்தர் கிட்ட அழைச்சி போகும்" என்று அந்த வயதிலும் தொடர்ந்து மேல்நோக்கி நடந்தார்.

சொல் பேச்சை கேட்க மாட்டாள் என்று தெரிந்து மனைவியின் பின்னால் முத்தையாவும் மூச்சு வாங்க ஏற, பதினைந்து நிமிடத்தில் அடைய வேண்டிய சுந்தர மகாலிங்கம் கோயிலை அரைமணி நேரம் கடந்து தான் அடைந்தார்கள் இருவரும்.

ஆரம்பத்தில் இருந்த வேக நடை இப்பொழுது இரு பெரியவர்களிடமும் இல்லை. சோர்ந்து போய் விட்டார்கள்.

சந்தான மகாலிங்கம் கோயிலை கடந்து பெரிய மகாலிங்கம் சன்னிதானத்தை அடைந்தவர்களுக்கு அதற்கு மேல் நடக்க முடியாமல் சோர்வாக அங்கே இருந்த பாறையின் மீது அமர்ந்தவர்கள் சுற்றிமுற்றி பார்த்தார்கள். கண்ணுக்கு எட்டின தூரம் வரை அவர்கள் தேடி வந்த சித்தர் அகப்படவேயில்லை.

ஆம் அது சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். மலைகள் அடங்கிய காட்டுப் பகுதி கிராமம் அது.

அதில் வசித்துக் கொண்டு இருப்பவர்கள் தான் இந்த முத்தையாவும் முத்தழகும். சிவனின் மீது அதீத பக்தி கொண்டவர்கள்.

கண்மூடிக் கொண்டு சிவனுக்காக எதையும் செய்ய கூடியவர்கள் இருவரும். எதுவாக இருந்தாலும் அந்த சிவன் பார்த்துக் கொள்வார் என்று பெரும் நம்பிக்கை உடையவர்கள்.

சிறிது நேரம் ஓய்வுக்கு பின் இருவரும் மெல்ல எழுந்துக் கொள்ள, அப்பொழுது பாறைக்கு அந்த புறத்திலிருந்து "சோர்வு போய் விட்டதா?" என்று ஒரு குரல் கேட்க, இருவருக்குமே தூக்கி வாரி போட்டது.

உடனே பாறையின் பின்னால் சென்றவர்கள் அங்கே தியானத்தில் அமர்ந்து இருந்த சித்தரை பார்த்ததுமே பணிவாக மண்டியிட்டு தரையில் குனிந்தபடி,

"சித்தர் சாமி எங்களை மன்னிச்சிடுங்க. நீங்க அமர்ந்து இருந்த பாறை மேல நாங்க ஓய்வு எடுக்க உட்கார்ந்துட்டோம். மன்னிச்சிடுங்க சித்தர் சாமி" என்று இருவருமே பயத்துடன் வணங்கினர்.

அவரோ இமைகளை திறக்காமலே "என்ன செய்திக்காக என்னை தேடி வந்தீர்கள்?" என்று கேட்க,

அவர்களோ மேலும் பணிவான குரலில் "குடிசையில ஏத்தி வச்ச சிவனோட விளக்கு தானா கீழே விழுந்து உடைஞ்சி போயிடுச்சி சாமி. அதை பார்த்ததிலிருந்து எங்களுக்கு மனசு என்னவோ செய்யுது. எங்க பிள்ளைக்கு ஏதாவது ஆபத்தாகி இருக்குமோனு பயமா இருக்கு. நீங்க தான் இதுக்கு ஒரு நல்ல பதிலை சொல்லணும்" என்று கேட்டனர்.

அவரோ இமைகளை திறக்காமலே "இப்போ நீ எந்த பிள்ளைக்காக கவலைப்படுகிறாய் முத்தழகு?" என்று கேட்டு அவர்களை அதிர வைக்க, இருவருக்குமே இப்பொழுது ஒரு வார்த்தை கூட வெளி வரவில்லை.

அதை உணர்ந்த சித்தரோ "போ... போ, எது நடக்கணும்னு விதி இருக்கோ அது நடந்து தான் ஆகணும்" என்று கூறியவர் பலமாக சிரித்தபடி அங்கே இருந்து மெல்ல மெல்ல மறைந்தார்.

முத்தையாவும் முத்தழகும் நிமிர்ந்து சித்தர் அமர்ந்து இருந்த இடத்தை நோக்க, அந்த இடம் வெறுமையாக இருப்பதை பார்த்து அவர்கள் மனமும் வெறுமை சூழ்ந்துக் கொண்டது.

அவர்களுக்கான பதில் கிடைத்தும் கிடைக்காமலும் புரிந்தும் புரியாமலும் அங்கே இருந்து தளர்ந்த நடையோடு மீண்டும் அவர்கள் குடிசையை நோக்கிச் சென்றார்கள்.

மெல்ல விழிகளை திறந்த சைதன்யாவோ தனதருகில் மிகவும் நெருக்கமாக படுத்து இருந்த அகத்தியனை பார்த்தவள் புருவம் சுருங்க, எதுவும் கூறாமல் மீண்டும் விழிகளை மூடிக் கொள்ள,

அவளையே பார்த்துக் கொண்டு இருந்த அகத்தியனின் மனமோ 'ஒருவேளை திரும்ப மயங்கிட்டாளோ. இவளுக்கு நிறைய அடிப்பட்டு இருந்துச்சே. முதல இவளை தூக்கும் போது தையல் போடுற அளவுக்கு வெட்டு இருந்துச்சி. ஆனால் நான் மருந்து போடும் போது அந்த காயத்தை காணுமே? காயம் எப்படி தானா மறையும்?' என்று நினைத்து முடிப்பதற்குள் "ஆ..." என்று கத்திக் கொண்டே அவனை எட்டி உதைத்து மெத்தையிலிருந்து கீழே தள்ளி இருந்தாள் சைதன்யா.

அவள் பேய் போல் எட்டி உதைத்ததில் உருண்டு கீழே விழுந்த அகத்தியனும் சைதன்யாவுடன் சேர்ந்து "ஆ... அய்யோ அம்மா" என்று தொடையை பிடித்துக் கொண்டு உருள, சைதன்யாவோ அடுத்த கணம் போர்வையுடன் எழுந்து நின்றவள் குதித்தபடி தான் எங்கே இருக்கிறோம் என்று சுற்றி முற்றி பார்த்தாள்.

இருவரின் சத்தத்திலும் மெதுவாக கண்களை திறந்து பார்த்த கார்த்திக்கோ, சைதன்யா வெள்ளை போர்வையுடன் திரும்பி நின்று குதித்துக் கொண்டு இருப்பதை பார்த்து பேய் தான் என்று பயந்து போனவன்,

"அய்யோ பேய்... பேய்... பேய், யாராவது என்னை காப்பாத்துங்க" என்று அவனும் ஒரு பக்கம் கத்த ஆரம்பிக்க, அவன் குரல் கேட்டு திரும்பி பார்த்த சைதன்யாவும் மீண்டும் கத்திக் கொண்டே கட்டிலிலிருந்து கீழே இறங்க, மூவரின் அலறல் சத்தமும் கேட்டு அந்த வீடே அதிர ஆரம்பித்தது.

கார்த்திக்கோ "பேய்" என்று கத்திக் கொண்டே அவசரமாக எழுந்து நிற்க, சைதன்யாவோ "எங்கே பேய்?" என்று கேட்டுக் கொண்டு பயத்தில் அவனை வந்து கட்டிக் கொண்டாள்.

அதில் கார்த்திக் மேலும் பயந்து போய் கண்களை இறுக மூடிக் கொண்டு, அந்த பயத்தில் "நீ தான்டி பேய்" என சொல்லிக் கொண்டே சைதன்யாவை பிடித்து ஆவேசமாக தள்ளி விட்டான்.

அவன் தள்ளி விட்ட வேகத்தில் சைதன்யா அந்த மெத்தையிலே சென்று விழுந்தவள் அப்படியே மயங்கி விட, அதை பார்த்த அகத்தியனோ திகைத்து போய் எழுந்து நின்றான்.

ஆனால் அவனால் சுத்தமாக நிற்க கூட முடியவில்லை. அப்படி ஒரு வலி தொடை இடுக்கில்.

கால்கள் இரண்டையும் குறுக்கிக் கொண்டு நின்றவன் கோபமாக நண்பனை முறைத்து பார்த்து,

"கொஞ்சம் கூட அறிவு இல்லையாடா உனக்கு? அந்த பொண்ணை பார்த்தா பேய் போலவா இருக்கு? இப்போ தான் அவளே மயக்கம் தெளிஞ்சு எழுந்தா. அதுக்குள்ள திரும்ப தள்ளி விட்டு மயக்கமாகிட்டா" என்று சொன்னபடி நொண்டிக் கொண்டு சைதன்யாவின் அருகில் சென்றான் அகத்தியன்.

கார்த்திக்கோ இப்பொழுது தான் முழு போதையும் உறக்கமும் தெளிந்து சைதன்யாவை பார்த்தான்.

மெத்தையில் பப்பரப்பாயென்று கைகால்கள் எல்லாம் விரித்தபடி, முடியெல்லாம் முகத்தில் படர்ந்து மயங்கி இருந்தவளை பார்த்து உள்ளுக்குள் திக்கென்றாலும் ஒரு மூச்சுடன், "இவளை பார்த்ததுமே பேயை பார்க்கிற போல இருந்துச்சிடா. அதான் பயத்துல என்ன பண்றேன் தெரியாம பிடிச்சி தள்ளிவிட்டேன்" என்று சொல்லிக் கொண்டே சைதன்யாவின் அருகில் வர முயன்றவனை தடுத்த அகத்தியன்,

"கிட்ட வராத. நானே பார்த்துக்கிறேன்" என்று கூறி விட்டு மிகவும் கஷ்டப்பட்டு அவளை இழுத்து நன்றாக படுக்க வைத்தவன் அவள் ஆடைகள் விலகி இருப்பதை பார்த்து சங்கடத்துடன் ஒரு போர்வையை எடுத்து போர்த்தி விட்டு குளிரூட்டியை போட்டு விட்டான்.

கார்த்திக்கோ "இப்போ எதுக்கு ஏசியை போடுற. அதான் ரூமே கூலிங்கா இருக்கே. எனக்கு ஒன்னும் வேர்த்து போகலடா" என்றவனை முறைத்து பார்த்து,

"உனக்காக இல்ல. இவளுக்காக" என்றவன் "நீ எவ்வளவு ஃபோர்ஸ்ஸா தள்ளி விட்டு இருந்தா இவ இப்படி சட்டுனு மயங்கி போய் இருப்பா" என்று தன்னையும் அறியாமல் யாரென்று தெரியாத பெண்ணை நினைத்து கவலைக் கொண்டான் அகத்தியன்.

கார்த்திக்கோ "ஏய் நான் அவ்வளவு வேகமா எல்லாம் தள்ளி விடலடா. அவ ஸ்ட்ராங்கா இல்ல. அதான் நான் தள்ளினதும் மயங்கிட்டா" என்று சொன்னதை கேட்டு அகத்தியன் நண்பனை முறைத்துக் கொண்டே நிற்க முடியாமல் நின்று இருந்தான்.

அவன் ஒரு மாதிரி நெளிந்தபடி நின்று இருப்பதை பார்த்த கார்த்திக் "ஆமா நீ ஏன் இப்படி கோணல் மானலா நின்னுட்டு இருக்க?" என்று கேட்டு நண்பனை ஆராய்ந்தான்.

அவனோ 'சைதன்யா எட்டி உதைச்சதை சொன்னா கிண்டல் பண்ணியே சாகடிச்சிடுவான்' என்று நினைத்து அமைதியாக இருக்க நினைத்தவனின் மனம் மீண்டும் 'இவ ஸ்ட்ராங்கா இல்லனு எப்படி சொல்றான் இவன். ஒரே உதையில என் நாடி நரம்பெல்லாம் டேமேஜ் ஆகிடுச்சு. ஆனால் இவன் ஒரே தள்ளு தான் தள்ளி விட்டான். அதுக்கே இவ மயங்கி போயிட்டாளே. ஒருவேளை கார்த்திக் சொன்ன மாதிரி இவ ஸ்ட்ராங் இல்லையோ? இல்லனா கார்த்திக் அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கானா என்ன? அப்போ ஒரு பொண்ணு கிட்ட அடிவாங்குற அளவுக்கு நம்ம ஸ்ட்ராங் இல்லாம போயிட்டோமா?' என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டு இருந்தான் அகத்தியன்.

அப்பொழுது கார்த்திக் "சரிடா டாக்டருக்கு போன் பண்ணி வர சொல்லுவோம். இந்த பொண்ணுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கணும்ல" என்று சொன்னதை கேட்டு,

"என் போன் ஆப்பாகிடுச்சிடா. சார்ஜ் போட்டு இருக்கேன்" என்று அகத்தியன் கூற,

"ஓகேடா லேண்ட்லைன்ல இருந்து கால் பண்ண வேண்டியது தானே?" என்று கேட்டான்.

அதை கேட்ட அகத்தியனோ "நம்பர் ஞாபகம் இல்லடா" என்றிட,

"சரிடா என் போன்ல இருந்து பண்ணுவோம்" என்று சொல்லிக் கொண்டே கைப்பேசியை எடுத்தான்.

உடனே அகத்தியன் தடுத்து "உன் கண்ணை நல்லா திறந்து அவளை பாரு. எங்கேயாவது அடிப்பட்ட மாதிரி காயமோ தழும்போ ரத்தமோ இருக்கானு" என்று சொன்னதை கேட்டு கார்த்திக்கும் சைதன்யாவை உற்று பார்த்தான்.

ஆம் அகத்தியன் கூறியது போல் சைதன்யாவின் உடம்பில் சிறு நகக்கீறல் கூட எங்கேயும் இல்லை.

அதை பார்த்து அதிர்ச்சியுடன் நண்பனை பார்த்த கார்த்திக் "இது எப்படிடா சாத்தியம்?" என்று நடுங்கும் குரலில் கேட்டான்.

அகத்தியனும் எனக்கு தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்கியவன் "சரி இவ இங்கேயே தூங்கட்டும். காலையில எழுந்ததும் நம்ம எல்லாத்தையும் விசாரிச்சி தெரிஞ்சிக்கலாம். இப்போ நம்ம அடுத்த ரூம்ல போய் ரெஸ்ட் எடுப்போம்" என்று கூறி அதிர்ந்து நின்று இருந்த நண்பனை இழுத்துக் கொண்டு பக்கத்து அறைக்குள் நுழைந்தான்.

கார்த்திக்கோ அதிர்ச்சியிலிருந்து மீண்டு வராதவன் "மச்சி இது ஏதோ தப்பா தெரியல" என்று சொல்ல,

"எஸ் கார்த்திக். பட் என்னனு சரியா தெரியாம நம்ம எந்த மூவ்வும் எடுக்க முடியாது" என்றான்.

"நம்ப ஏன் போலீஸ்கிட்ட போக கூடாது?" என்று கேட்ட கார்த்திக்கை வெட்டுவது போல் பார்த்த அகத்தியன்,

"போனா உடனே நம்மள தான் பிடிச்சி ஜெயில போடுவாங்க" என்றான்.

"அதுவும் சரிதான்" என்று சொன்ன கார்த்திக்கிடம் "இப்போ தூங்கு கார்த்திக், எதுவா இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கலாம்" என்றவன் தன் மாற்று உடையை எடுக்க அவன் அறை நோக்கிச் சென்றான் அகத்தியன்.

கார்த்திக்கும் யோசனையோடு அப்படியே அங்கே இருந்த மெத்தையில் படுத்து விட, அகத்தியனோ மெதுவாக அவன் அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளேச் சென்று கபோர்டில் உள்ள அவன் ஆடையை எடுத்தவன் கரம் அணிந்து இருந்த சட்டை பாக்கெட் எதிலோ உரசவும் பாக்கெட்டிலிருந்த கல்லை எடுத்து பார்த்தான்.

நீல நிறத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்த கல்லை பார்த்தவன் விழி அப்படியே நகர்ந்து அங்கே துயில் கொண்டு இருந்தவளில் படிந்தது.

'இதை எதுக்கு என் கிட்ட கொடுத்தா? இந்த கல் பார்க்க விலைமதிக்க முடியாத பொக்கிஷம் போல இருக்கு. ஒருவேளை இந்த கல்லை தேடி தான் காலையில் இவளை துரத்திட்டு வந்தானுங்களா?' என்று தீவிர சிந்தனையுடன் அந்த நீல நிற கல்லை பத்திரமாக அவன் கபோர்டினுள் உள்ள சிறு லாக்கரில் வைத்து பூட்டினான் அகத்தியன்.
 

NNK-90

Moderator
அத்தியாயம்- 6

மறுநாள் காலையில் அந்த அரண்மனை போன்று இருந்த பங்களாவில் உள்ள பணியாளர்கள் தங்களுக்குள் நேற்று நடந்ததை பற்றி கிசுகிசுத்துக் கொண்டே வேலைகளை செய்தனர்.

அதில் ஒருவரோ "நேத்து ஐயா ரூமுல இருந்து ஒரே சத்தமா வந்துச்சில. அப்படி ஐயாவும் அவர் ப்ரெண்டும் சேர்ந்து அந்த பொண்ணை என்ன பண்ணாங்களோ தெரியல" என்று சொல்ல,

உடனே மற்றவரோ "ஆமாக்கா ரொம்ப சத்தமா இருந்துச்சு. அதுவும் அந்த பொண்ணோட குரல் தான் ரொம்ப அதிகமா வந்துச்சு. பாவம் அந்த புள்ளை. நைட் இரண்டு பேரும் சேர்ந்து அந்த பொண்ணை என்னவெல்லாம் சித்திரவதை பண்ணாங்களோ" என்று அவர்கள் கற்பனைக்குச் சென்று விட,

இன்னொரு பணிப்பெண்ணோ "அது எப்படிக்கா இரண்டு பேரும் சேர்ந்து ஒரே பெண்ணை..." என்று ஏதோ பேச வந்தவளின் வார்த்தைகள் மாடிப்படியை பார்த்ததும் அப்படியே நின்று விட்டது.

பேசிக் கொண்டு இருந்தவள் கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்ததுமே மற்றவர்களுக்கும் புரிந்தது அவர்கள் முதலாளி வருகிறார் என்று.

அதனால் மற்றவர்களும் தங்கள் வாயை மூடிக் கொண்டு பரப்பரப்பாக வேலையை செய்ய ஆரம்பித்தனர்.

அந்நேரம் "ஆமா யாரு அந்த இரண்டு பேரும் ஒரு பொண்ணும் என்ன பண்ணாங்க?" என்று அவர்கள் அருகில் புதியவளின் குரல் கேட்க,

பேசிக் கொண்டு இருந்த மூவருக்குமே தூக்கிவாரி போட, சட்டென்று மூவரும் நிமிர்ந்து அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர் அவள் கேட்ட கேள்வியில்.

அங்கே தலைமுடியெல்லாம் கலைந்து, ஆடைகள் முழுவதும் கசங்கி, தூங்கி எழுந்ததில் அவள் வதனம் சற்று உப்பி போய், தலையை சொரிந்தபடி நின்று இருந்தது வேறு யாருமில்லை நம் சைதன்யாவே தான்.

ஏற்கனவே கண்டமேனிக்கு அவர்கள் கற்பனையில் திளைத்து இருந்தவர்களுக்கு விடிந்ததும் சைதன்யா வந்து நின்ற கோலத்தை பார்த்ததும் மேலும் அவர்கள் கற்பனைக்கு தீனி போட்டது போல் ஆகிவிட்டது.

அவள் நின்று இருந்த கோலத்தை பார்க்கும் யாருக்குமே அப்படி ஒரு கற்பனை தான் மனதிற்குள் ஓடும்.

அதில் ஒருவரின் மனதிலோ 'நம்ம என்ன அவ்வளவு சத்தமாவா பேசினோம். அய்யோ இந்த பொண்ணுக்கே கேட்டு இருக்குனா? அப்போ நம்ம ஐயாவுக்கும் கேட்டு இருக்குமா? அப்படி கேட்டு இருந்தா நம்ம வேலை?' என்று பணிபுரியும் வேலையை பற்றி சிந்தித்து கவலைக் கொள்ள ஆரம்பித்தாள்.

மற்றவரோ 'அய்யோ நாங்க பேசினதை ஐயா கிட்ட போட்டு கொடுத்திடுவாங்களா?' என்று படபடப்புடன் நிற்க,

இன்னொருவரோ 'ஆத்தி இன்னிக்கு என் வேலை போறது உறுதி போலவே' என்று மூவரும் பயந்துக் கொண்டு இருந்தனர்.

சைதன்யா கேட்டதுக்கான பதில் வராமல் போக, அடுத்து "ஆமா இது யாரோட வீடு?" என்று சுற்றிமுற்றி பார்த்துக் கொண்டே கேட்டாள் பெண்ணவள்.

அதை கேட்டு மூவரில் ஒருவளோ "இது எங்க ஐயா வீடு" என்று கூற,

"யார் உங்க ஐயா?" என்று அடுத்த கேள்வி கேட்டாள்.

'ஒரே சமயத்தில் இரண்டு பேர் கூட இருந்தா எப்படி தெரியும்?' என்று ஒரு பணியாளர் மனதில் நினைத்துக் கொண்டே, "நேத்து நைட் உங்களை தூக்கிட்டு வந்தாங்களே அவங்க தான்" என்று சொன்னதை கேட்டு முகத்தை சுழித்தவள்,

"தூக்கிட்டு வந்தாங்களா?" என்று கேட்டுக் கொண்டே இருக்கும் போது நேற்று இரவு அகத்தியனுக்கு உதவி செய்த பணியாள் அவசரமாக அங்கே ஓடி வந்தார்.

"ஆமாங்கம்மா, நீங்க நேத்து நைட் மயக்கத்தில் இருந்தீங்க. உங்களுக்கு அடிப்பட்டு இருந்துச்சி. எங்க ஐயாவும் அவர் ப்ரெண்டும் தான் உங்களை காப்பாத்தி இங்கே அழைச்சி வந்து மருந்தெல்லாம் போட்டாங்க. இப்போ உங்களுக்கு எப்படிம்மா இருக்கு?" என்று பேசிக் கொண்டே சைதன்யாவின் காயத்தை ஆராய்ந்தவரின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்துக் கொண்டது.

அதை கேட்டு மூன்று பணிப்பெண்களோ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள,

சைதன்யாவோ குனிந்து தன் உடலை பார்த்தாள். முகத்தை தொட்டு பார்த்தாள், கால்களை நீட்டி பார்த்தாள், கரங்களை உயர்த்தி திருப்பி திருப்பி பார்த்தாள் எங்கேயும் அடிப்பட்டதிற்கான அடையாளமே இல்லை. ஏன் சிறு கீறல் கூட இல்லை. தன் உடலை முழுமையாக பரிசோதித்த சைதன்யா இப்பொழுது நிமிர்ந்து எதிரே வியப்புடன் நின்று இருந்தவரை பார்த்து,

"எனக்கு அடியே படலையே?" என்றாள்.

அந்த பணியாளுக்குமே அதிர்ச்சி தானே? நேற்று இரவு உயிர் இருக்கிறதா இல்லையா என்று இருந்த பெண்ணா இது? என்று வியப்பாக பார்த்துக் கொண்டே, "அதான்ம்மா எனக்கும் புரியல. ஆனால் நைட் நான் தான் அகத்தியன் ஐயா கூட இருந்து உங்களுக்கு மருந்து போட உதவி பண்ணேன்" என்று சொன்னதை கேட்ட சைதன்யாவின் உதடோ,

"அகத்தியனா?" என்று முணுமுணுத்தது. ஆனால் அவள் நினைவுகளில் நடந்த சம்பவம் எதுவுமே பதியவில்லை. அவ்வளவு ஏன் அவள் யாரென்றே அவள் மறந்து போனது தான் விதியே?

அங்கே நின்று இருந்த அனைவரையும் மாறி மாறி பார்த்தவள் மிரட்சியுடன் "உண்மைய சொல்லுங்க. யார் நீங்க எல்லாம். ஏன் எனக்கு எதுவுமே நினைவுல இல்ல. என்னை எதுக்கு இங்கே கடத்திட்டு வந்தீங்க? ஆமா முதல நான் யாரு?" என்று மீண்டும் மீண்டும் இதே கேள்வியை கேட்டு கத்த ஆரம்பித்து விட்டாள் சைதன்யா.

நினைவு இழக்கும் அனைவருக்கும் உருவான அச்சம் தான் இப்பொழுது சைதன்யாவிடமும். ஆனால் என்ன இவளின் பயம் அதிகபடியாக மாற, யாரிடமும் பதில் வராமல் போகவும் பலமாக கத்த ஆரம்பித்து விட்டாள்.

அவள் போடும் சத்தம் கேட்டு உள்ளே வெளியே என்று வேலை செய்யும் அனைத்து பணியாளர்களும் அங்கே குவிந்து விட, கூட்டத்தை பார்த்ததுமே சிறுப்பிள்ளை போல் மேலும் அவள் சத்தம் அதிகமாக மேல் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அகத்தியன் சட்டென்று எழுந்துக் கொண்டான்.

கார்த்திக்கோ "டேய் யாராவது அந்த ரேடியோவை ஆஃப் பண்ணுங்கடா" என்று கத்தி விட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.

கீழே சத்தம் இன்னும் அதிகமாக ஆரம்பிக்க, மெத்தையிலிருந்து தாவி எழுந்த அகத்தியன் அவசர அவசரமாக கீழே சென்றான்.

அங்கே சைதன்யா பயத்தில் மேஜையின் மீது இருந்த கத்தியை கையில் எடுத்து எதிரே இருந்தவர்களை பார்த்து நீட்டியபடி கத்திக் கொண்டு இருக்க,

அதை அதிர்ச்சியுடன் பார்த்துவிட்டு அவசரமாக அவள் அருகில் வந்த அகத்தியன் நொடியும் தாமதிக்காமல் அவள் கரத்திலிருந்த கத்தியை உருவி தூரம் எறிந்து விட்டு அவளின் இரு பக்க தோள்களையும் பிடித்து தன்னை பார்க்க வைத்தான் அகத்தியன்.

சட்டென்று ஒரு தொடுதலில் சைதன்யாவின் சத்தம் அடங்கி போக, அகத்தியனின் தொடுதலில் அவள் உடல் சில்லிட்டு போனது.

பயத்தில் கோலிக்குண்டு கருவிழியை அங்கும் இங்கும் உருட்டிக் கொண்டு இருந்தவளை பார்த்த அகத்தியன் "என்னாச்சி? ஏன் இப்படி கத்திட்டு இருக்க? உனக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சா?" என்று அடுக்கு அடுக்கான கேள்விகளை கேட்டான்.

அவளோ அவனை இமைக்காமல் பார்த்தபடி நின்று இருந்தவள் கரம் தானாக மேலெழும்பி அவன் கன்னத்தை ஆசையாக தொட்டு பார்த்து "நீங்க இன்னும் சாகலையா?" என்று கேட்டாளே பார்க்கலாம், சுற்றி இருந்த அனைவருக்குமே தூக்கிவாரி போட்டது.

அகத்தியனுக்கோ சுருக்கென்று கோபம் எழ, அவளை தீயாய் முறைத்து பார்த்தான்.

காலையில் எழுந்தவுடனே இவ்வார்த்தைகளை கேட்டால் யாருக்கு தான் கோபம் வராது. அதிலும் கோபத்திற்கே தலைவனாக இருப்பவனிடமே இக்கேள்வியை கேட்டால் எப்படி?

"என்ன உளறிக்கிட்டு இருக்க?" என்று பற்களை நறநறவென கடித்தபடி அவன் கேட்க,

அவளோ அமைதியாக நிற்காமல், அவன் மேனியில் முழுவதும் அவள் கரத்தை மேயவிட்டாள்.

அதில் அவன் நெளிய ஆரம்பிக்க, சுற்றி இருந்தவர்களோ கூச்சத்தில் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டனர்.

ஏற்கனவே அங்கே இருப்பவர்கள், இருவரை பற்றியும் அவர்கள் கற்பனைக்கு நினைத்துக் கொண்டு இருக்க, இவளோ அதை உறுதி செய்யும் வகையில் விடிந்ததுமே நடு கூடாரத்தில் அவன் தேகத்தில் தன் விரல்களை நடனமாட விட்டு இருந்தாள்.

அகத்தியனுக்கோ அவளின் தொடுகை சங்கோஜமாக மாற, கோபம் தலைக்கேறியவன் போல் அவளை பிடித்து கோபமாக தள்ளி விட்டான்.

சைதன்யாவோ அவன் தள்ளி விட்டதெல்லாம் கருத்தில் கொள்ளாமல் "அப்போ நீங்க இன்னும் சாகலையா அகத்தியன்?" என்று முகம் பிரகாசிக்க கேட்டாள்.

"நான் ஏன்டி சாகணும்?" என்று அகத்தியன் கோபமாக கேட்க, சட்டென்று அவள் தலையில் ஏதோ இடி விழுந்து வலியை கொடுப்பது போல் தலையில் சுள்லென்று வலி வர, தலையை இரு கையிலும் பிடித்துக் கொண்டு "ஆ..." என்று கத்த ஆரம்பித்தாள் சைதன்யா.

அவளின் அந்த 'ஆ..." என்ற சத்தமே பெரிய மைக்செட் போட்டது போல் அனைவரின் காதிலும் ரீங்காரம் அடிக்க, அலாரமே இல்லாமல் கடுப்புடன் மேலே இருந்த அறையில் கார்த்திக் எழுந்து அமர்ந்து காதுகளை இருக்கரத்தாலும் பொற்றிக் கொண்டு,

"எவன்டா அது இவ்வளவு பெரிய அலாரமை வச்சிது. காது கொய்ங்னு... இருக்கு" என்று அந்த அறையை சுற்றி சுற்றி அலாரத்தை நிறுத்துவதற்காக தேடினான்.

ஆனால் சத்தம் அந்த அறையிலிருந்து வரவில்லை என்று உணர்ந்தவன், ஒலி வரும் இடத்தை நோக்கி நடந்தான்.

கிட்ட நெருங்க நெருங்க சத்தம் அதிகமாக, காதில் 'ங்...' என்ற ஒலி மட்டுமே இப்பொழுது அவனுக்கு கேட்டது.

அவனுக்கே இப்படி என்றால் சைதன்யாவின் அருகில் நின்று இருந்த அகத்தியனும் மற்றவர்களும் எந்த நிலையில் இருப்பார்கள்.

சந்தேகமே வேண்டாம் அனைவரின் காதுகளிலும் ரத்தம் வாரத குறை தான்.

அகத்தியனுக்கோ காலையில் இப்படி ஒரு இம்சையிடம் சிக்கிக் கொண்டது நினைத்து கடுப்பாக இருக்க, அவள் இடும் சத்தத்தில் சைதன்யாவின் அருகில் கூட அவனால் செல்ல முடியவில்லை.

கார்த்திக்கோ மேல் படியிலிருந்து இக்காட்சியை பார்த்தவனுக்கு "யப்பா... இது குரலா இல்ல மைக்கே இல்லாத ஸ்பீக்கரா? இந்த கிழி கிழிக்குறா" என்று முணுமுணுத்தவன் எதற்கு வம்பு என்று கீழே செல்லாமல் மீண்டும் அறைக்குள் நுழைந்தவன் செவிகளை நன்றாக பொற்றிக் கொண்டான்.

பணியாட்களோ அவள் கத்துவதை தாக்கு பிடிக்க முடியாமல் ஒவ்வொருவராக வெளியேறிச் செல்ல அகத்தியனால் தான் அவளை அப்படியே விட்டுச் செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு சைதன்யாவின் அருகில் சென்றவன் அவள் வாயை பொற்றினான்.

அப்படி இருந்தும் அவள் கத்தும் சத்தம் வெளியே கேட்க, அவள் காதருகே சென்று "இப்போ எதுக்குடி இப்படி கத்திக்கிட்டு இருக்க?" என்று எரிச்சலாக கேட்டான்.

அவளோ அதே சத்தத்துடன் "எனக்கு ரொம்ப தலை வலிக்குது அகத்திதிதியயயன்ன்ன்ன்" என்று கத்த,

"அய்யோ கொஞ்சம் கத்துறதை நிறுத்து. அப்போ தான் தலை வலி போகும். இப்படி கத்துனா தலை வலிக்காம என்னாகும்?" என்று கூறியவனுக்கு,

அவள் கத்தும் சத்தத்தை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் திணறி தான் போனான் அகத்தியன்.
 

NNK-90

Moderator
அத்தியாயம்- 7

அடுத்த அரைமணி நேரத்தில் சமத்துப்பிள்ளையாக டைனீங் டேபிள் மீது அமர்ந்து பரப்பி கிடந்த உணவுகளை வேக வேகமாக வாய்க்குள் திணித்துக் கொண்டு இருந்தாள் சைதன்யா.

ஆம் பசியில் தான் அவள் அப்படி ஒரு கூச்சல் போட்டுக் கொண்டு இருந்தாள். கடும்பசியில் வயிற்று வலியை விட தலைவலி அவளுக்கு ஏற்பட, அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் கத்த ஆரம்பித்து விட்டாள்.

அகத்தியனுக்கு அவளின் கத்தலை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் முழித்தவனின் மூளையோ ஒரு கணம் பொறுமையாக யோசித்து, அவளை பிடித்து "உனக்கு பசிக்குதா என்ன?" என்று கேட்டான்.

பசி என்ற சொல்லை கேட்டதுமே சைதன்யாவின் விழி சற்று பிரகாசிக்க, தலை டிங்கு டிங்கென்று மேலும் கீழும் ஆம் என்பது போல் ஆடியது.

அடுத்த அரை மணி நேரத்தில் பணிப்பெண்கள் தங்கள் முதலாளியின் உத்தரவுபடி சைதன்யாவிற்கு தேவையான உணவுகளை தயாரித்து மேஜை மீது வைக்க, அதை மிளிரும் நயனங்களால் பார்த்தவள் பல் கூட துலக்காமல் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.

அவள் அப்படி உண்பதை எதிரே அமர்ந்து முகத்தை சுழித்தபடி பார்த்துக் கொண்டு இருந்த அகத்தியனோ "பசிக்காகவா அப்படி கூச்சல் போட்டுக்கிட்டு இருந்த?" என்று கேட்டான்.

"ம்..." என்று பேசி நேரத்தை வீணடிக்க விரும்பாமல் சாப்பிடுவதிலே குறியாக இருந்தாள் சைதன்யா.

ஆனால் அகத்தியனோ அடுத்தபடியாக "அது எப்படி என்னை மட்டும் ஞாபகம் இருக்கு? ஆனால் உன்னை மறந்துட்ட?" என்று கேட்க, அவசரமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள் கரம் அப்படியே தடைப்படு நிற்க, விழிகளோ அவனை ஏறிட்டு பார்த்து விட்டு எதுவும் கூறாமல் மீண்டும் உண்பதில் கவனத்தை செலுத்தியது.

அகத்தியனுக்கோ கடுப்பாகி விட "கேட்கிறேன்ல" என்று கர்ஜித்தவன் "நீ யாருனு தெரியல எனக்கு. உன்ன பார்த்ததிலிருந்து எனக்கு தலைவலி தான். இதுல அந்த ரவுடிங்க வேற, எப்போ உன்னை போட்டு தள்ள வர போறானுங்கனு தெரியல" என்று பேசிக் கொண்டு இருந்தவனை பார்த்தபடி பெரிய சைஸ் முட்டை ஒன்றை அப்படியே எடுத்து தன் வாய்க்குள் திணித்துக் கொண்டாள் சைதன்யா.

சைதன்யாவின் செயல் அகத்தியனின் கோபத்திற்கு தீனி போட்டது போல் ஆக, உணவு மேஜை மீது ஆக்ரோஷமாக இரு கரத்தையும் தட்டிக் கொண்டே எழுந்தவன், ஒருவர் பசியில் சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை கருத்தில் கொள்ளாமல் அங்கே நின்று இருந்த பணிப்பெண்களை பார்த்து "அடுத்த பைவ் செகண்ட்ல டேபிள் மேல இருக்கிற எல்லா உணவையும் எடுத்திட்டு போகணும். இனி இவ சாப்பிடுறதுக்கு என் அனுமதி இல்லாமல் ஒரு சின்ன பிஸ்கெட் கூட கொடுக்க கூடாது" என்று சொன்னதை கேட்டு அதிர்ந்து போனவர்கள், அகத்தியன் மீது இருந்த பயத்தில் கடகடவென மேஜை மீது இருந்த உணவு பாத்திரங்களை அவசர அவசரமாக எடுத்து உள்ளே வைக்க ஆரம்பித்தனர்.

அதை பார்த்த சைதன்யாவிற்கு கோபம் துளிர்க்க மெதுவான குரலில் "எனக்கு இப்போ சாப்பாடு வேணும் அகத்தியன்" என்று அழுத்தமாக கூறினாள்.

அவள் மெதுவாக கூறினாலும் அது தெளிவாக அவன் காதில் விழ அவளின் விழிகளை பார்த்துக் கொண்டே இரு கரத்தையும் டேபிள் மீது வைத்து அவளை நோக்கி குனிந்தவன் "சாப்பாடு வேணும்னா நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. அப்படி பதில் சொல்லிட்டா இன்னிக்கு ஒரு நாள் இங்கேயே தங்கிட்டு நல்லா வயிறார சாப்பிட்டு போகலாம்" என்று சாப்பிடுவதற்காக டீல் பேசினான் அந்த கோபக்காரன்.

அதை கேட்ட சைதன்யாவோ அவனை பார்த்து நக்கலாக "சரி கேளுங்க. ஆனால் எண்ணி மூணே கேள்வி தான்" என்றவள் மூன்று விரல்களை தூக்கி காட்டி மற்றொரு கரத்தால் அங்கே இருந்த தண்ணீரை எடுத்து வாயில் மெலிதாக ஊற்ற ஆரம்பித்தாள்.

ஆனால் குடித்த தண்ணீர் தொண்டைக்குள் இறங்கியது போலவே அகத்தியனுக்கு தெரியவில்லை.

தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டே இருக்கிறாளே தவிர அவள் தொண்டை குழி ஏறி இறங்காமல் அப்படியே ஆணி அடித்தது போல் ஒரே இடத்தில் நின்று இருக்க, அவனோ தலையை உலுக்கி விட்டு மீண்டும் பார்த்தான்.

இப்பொழுதும் அவள் தொண்டை குழி அப்படியே தான் இருக்க, திகைப்புடன் தண்ணீரை குடித்துக் கொண்டு இருந்தவளை பார்த்தவன்,

"ஆமா நீ தண்ணீ குடிச்சிட்டு இருக்க. ஆனால் உன்னோட தொண்டை குழி ஏறி இறங்காம அப்படியே நிக்குதே?" என்று வியப்பாக கேட்டான்.

அந்த கணம் அவள் தொண்டை குழி ஏறி இறங்கி வாயிக்குள் அவள் அடக்கி வைத்து இருந்த மொத்த தண்ணீரும் டக்கென்று வயிற்றுக்குள் செல்ல, சைதன்யாவோ "அது ஒன்னுமில்லை எனக்கு தண்ணீயை வாய்க்குள்ள வச்சி அடக்குற திறமை இருக்கு அதான்" என்று கூறிவிட்டு "ஒரு கேள்வி முடிஞ்சுது" என்று அசால்ட்டாக பதில் அளித்தவள் மூன்று விரலில் ஒன்றை மடக்கினாள்.

அதை கேட்டு அகத்தியன் அதிர்ச்சி அடைந்து கோபமான குரலில் "ஏய் என்ன விளையாடுறீயா?" என்று அடுத்து கேட்க,

"இல்ல உங்க முன்னாடி பாதி சாப்பாடு சாப்பிட்ட கையோடு உட்கார்ந்து நீங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லிட்டு இருக்கேன். அப்புறம் இரண்டாவது கேள்வி முடிஞ்சுது" என்று நிதானமாக இரண்டாம் விரலை மடக்கிக் கொண்டு அவள் கூற, அதில் மிகவும் கடுப்பாகி போனவன்,

"என்னை பார்த்தா என்ன பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா? இதெல்லாம் கேள்வினு பதில் சொல்லிட்டு இருக்க" என்று கர்ஜனையாக கத்தியவனின் கோபத்தை தூண்டி விடுவது போல்,

"உங்களை பார்க்கும் போது பைத்தியம் மாதிரி தெரியல. ஆனா கேள்வி கேட்கும் போது கொஞ்சம் அப்படி தான் தெரியுது. இப்போ மூணு கேள்வி முடிஞ்சுது நான் சாப்பிடலாம்ல" என்று மூன்றாம் விரலையும் மடித்து விட்டு கேட்டவளை கடும் சினத்தோடு முறைத்து பார்த்துக் கொண்டு நின்றான் அகத்தியன்.

அவனுக்கோ ஆத்திரம் கட்டுக்கடங்காமல் எகிறிக் கொண்டே போக, அதற்கு மேல் அங்கே நின்றால் அவளை எதாவது காயப்படுத்தி விடுவோமோ என்று அந்த கோபத்திலும் சற்று நிதானமாக யோசித்தவன் திரும்பி பணிப்பெண்களை பார்த்து இரு கரத்தையும் விரித்து,

"அண்டா நிறைய சோத்தை ஆக்கி கொட்டுங்க. தின்னுக்கிட்டே இருக்கட்டும்" என்று எரிச்சலாக கத்திவிட்டு மாடி ஏறிச் சென்றான்.

அவன் கூறி விட்டுச் செல்வதை "ஹான்..." என்று வாயை பிளந்து பார்த்துக் கொண்டு நின்ற பணிப்பெண்களை நோக்கி,

"அதான் உங்க பாஸே சொல்லிட்டாருல. போய் அண்டாவுல சோறு கிண்டுங்க" என்று மிகுந்த நக்கலாக கூறியவள் விழி அவள் முன்னே மாடிபடி ஏறிக் கொண்டு இருந்த அகத்தியன் மீது புன்னகையுடன் படிந்து,

'எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த கோபம் மட்டும் உங்களை விட்டு போகவே இல்லை அகத்தியன். ஆனாலும் இப்போ இருக்கிற அகத்தியனுக்கு கோபம் மட்டும் தான் முன்னாடி நிக்குது. ஆனால் என்னுடைய அகத்தியனுக்கு இந்த கோபத்துக்கு முன்ன அவனுடைய காதல் தான் முன்னாடி நிற்கும். அந்த காதலுக்காக தான் நான்...' என்று நினைத்தவளின் வார்த்தைகள் தொண்டையில் அடைத்துக் கொண்டது.

விழி மூடி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள் பணிப்பெண்களை பார்த்து "மிச்சம் எடுத்துட்டு போன சாப்பாட்டை கொண்டு வாங்க" என்று சட்டமாக கூறினாள்.

அவர்களும் அங்கே நடப்பது எதுவுமே புரியாமல் மீண்டும் அனைத்து உணவுகளையும் மேசை மீது அடுக்கினர்.

மேலே வந்த அகத்தியனுக்கோ கோபம். யாரென்று தெரியாத ஒரு பெண்ணை வீட்டில் வைத்து இருப்பது அவனுக்கு துளியும் பிடிக்கவில்லை விருப்பமுமில்லை. வெளியே போ என்று அவள் கழுத்தை பிடித்து தள்ளி விட அவனுக்கு ஒரு நொடி போதும், ஆனால் அதை செய்ய விடாமல் அவன் மனம் எதோ ஒரு தடை போட்டுக் கொண்டே இருந்தது.

நொடியில் ஒருவரின் மனதை காயப்படுத்திட கூடியவன் தான் அகத்தியன்.

இவளையும் காயப்படுத்தி வீட்டை விட்டு துரத்த நினைக்கிறான், ஆனால் அவளை காயப்படுத்த விடாமல் எதோ ஒன்று அவனை உள்ளுக்குள் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கிறது.

அது என்னவென்று தான் அவனுக்கும் விளங்கவில்லை.

அந்த கோபம் தான், சாப்பிட்டுக் கொண்டு இருந்தவளின் சாப்பாட்டை பறிதெடுத்தது.

சரி கேள்வி கேட்டாவது அவளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் என்று எண்ணியே கேள்விக் கேட்க நினைத்து மொக்கை வாங்கிக் கொண்டு வந்து இப்பொழுது சினத்தோடு நிற்கிறான்.

கார்த்திக்கோ நண்பனின் கோபத்தை அறியாமல் "என்ன வாய்டா அந்த பொண்ணுக்கு. பஜாரி மாதிரி கத்திக்கிட்டு இருக்கா. ஸ்ஸப்பா... காதுல இருந்து ரத்தமே வந்துடுச்சி. பொண்ணா அது பேய் மாதிரி இருக்கா" என்று அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டு இருக்க, அதை எதையும் காதில் வாங்காத அகத்தியனோ,

"கார்த்திக் எனக்கு இன்னிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. கண்டிப்பா கேன்ஸல் பண்ண முடியாது. நான் அட்டன்ட் பண்ணி தான் ஆகணும். சோ நான் மீட்டிங் முடிச்சிட்டு வரதுக்குள்ள அந்த பொண்ணை எப்படியாவது வீட்ல இருந்து துரத்தி விட்டுடு" என்று மிகவும் தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தவனை மலைப்பாக பார்த்த கார்த்திக்,

"எதே நான் துரத்தணுமா? என்னடா விளையாடுறீயா? கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி பார்த்தல எப்படி காட்டு கத்து கத்தினானு. என்னால எல்லாம் அந்த பஜாரி கூட மல்லுக்கட்ட முடியாது. அதுவும் இல்லாமல் நான் நேத்து நைட்ல இருந்து வீட்டுக்கே போகல. சோ நான் கிளம்புறேன்" என்று கிளம்ப போனவனின் கரத்தை பிடித்து தடுத்த அகத்தியன் சிடுசிடுவென,

"அம்மா கிட்ட நான் பேசிக்கிறேன். அவளை இங்கே இருந்து அனுப்புற வழியை பாரு. நீ மட்டும் அந்த பொண்ணை வீட்டை விட்டு துரத்திட்டனா, நீ பிக்கப் பண்ண நினைச்ச அந்த ஜான்வியை சொடுக்கு போடுற நேரத்துல உனக்கு பிக்கப் பண்ணி விடுறேன்" என்று சைதன்யாவை வீட்டை விட்டு துரத்த நண்பனிடம் டீல் பேசினான் அகத்தியன்.

ஆனால் அவன் மனமோ 'அய்யோ ஒருத்தியை விரட்டி அடிக்கிறதுக்கு என்ன என்ன வேலை எல்லாம் செய்ய வேண்டி இருக்கு' என்று தன்னை தானே துப்பிக் கொண்டது.

ஜான்வி என்ற பெயரை கேட்டதுமே கார்த்திக்கு அனைத்துமே மறந்து போய் விட்டது.

கண்கள் மின்ன "நிஜமா தான் சொல்றீயா? அந்த பைத்தியக்காரியை நான் விரட்டி அடிச்சிட்டா நீ எனக்கு ஜான்வியை செட் பண்ணி குடுப்பியா?" என்று கேட்டான்.

அகத்தியனுக்கோ உள்ளுக்குள் கேவலமாக இருந்தாலும் ஆம் என்று தலையை ஆட்டியவன் கலந்தாய்விற்கு நேரமாவதை உணர்ந்து அவசர அவசரமாக குளித்து விட்டு தயாராகிச் சென்றான்.

கீழே இறங்கும் போது அங்கே டிவியின் முன் கால் ஆட்டியபடி கையில் முறுக்கு அடங்கிய கிண்ணத்தை வைத்து சாப்பிட்டுக் கொண்டு அரண்மனை படத்தை பார்த்துக் கொண்டு இருந்த சைதன்யாவை பார்த்து 'யார் வீட்ல, யார் அதிகாரமா உட்கார்ந்து டிவி பார்த்துட்டு இருக்கிறது' என்று பொறிந்தாலும் அவளை முறைத்துக் கொண்டே வெளியேச் சென்றான்.

நண்பன் சென்றதும் மாடியில் நின்று டிவி பார்த்துக் கொண்டு இருந்த சைதன்யாவை நோட்டமிட்ட கார்த்திக் 'பேய் படம் பார்த்துட்டு இருக்கியா? பாரு பாரு அந்த பேயை வச்சே உன்னை இந்த வீட்டை விட்டு ஓட விடுறேன். நீ ஓடினதும் ஜான்வி எனக்கு தான்' என்று ஒரே குஷியாக சைதன்யாவை அகத்தியன் அரண்மனையிலிருந்து வெளியேற்ற திட்டம் போட ஆரம்பித்தான்.
 

NNK-90

Moderator
அத்தியாயம்- 8

அலுவலகத்தில் மீட்டிங் அறையில் ஒரு இன்வெஸ்ட்மென்ட் பத்தின மும்மரமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த அகத்தியனின் கைப்பேசி "ப்புர்ர்... ப்புர்" என்று ஒலி எழுப்ப, அதை கண்டுக் கொள்ளாத அகத்தியன் தன் எதிரே அமர்ந்து இருந்த வியாபாரியிடம் டீலை பத்தி மட்டும் பேசினான்.

அவரோ அகத்தியனின் கைப்பேசி சிறு அதிர்வை கொடுத்துக் கொண்டு இருப்பதை கவனித்தவர் "சார் உங்களுக்கு போன் வருது" என்று கூற,

"இட்ஸ் ஓகே சரவணன். அப்புறம் பேசிக்கிறேன்" என்று தொடர்பை அலட்சியம் செய்தான்.

சரவணனோ "ஏதாவது முக்கியமான காலா இருக்க போகுது சார்" என்று சொல்ல, அகத்தியனும் கைப்பேசி திரையில் ஒளிர்ந்துக் கொண்டு இருந்த கார்த்திக்கின் பெயரை பார்த்து விட்டு முகம் சுருக்கியவன் மனம்,

'ஒருவேளை அந்த பொண்ணை வீட்டை விட்டு விரட்டி அடிச்சிட்டானா? அதை பத்தி சொல்ல தான் போன் பண்றானோ? ஆனால் இரண்டு மணி நேரத்துல எப்படி அந்த பொண்ணை வெளியே அனுப்பி இருப்பான். அவளோட நீல கல்லு வேற நம்ம கிட்ட தானே இருக்கு. அதை வாங்காம எப்படி போய் இருப்பா' என்று சிந்தனைகள் ஓட, சரவணனிடம் "எக்ஸ்க்யூஸ் மீ" என சொல்லி விட்டு கைப்பேசியை எடுத்துக் கொண்டு ஜன்னல் பக்கம் வந்தான்.

அதற்குள் கார்த்திக் நான்கு ஐந்து தடவை அழைத்து விட்டு இருந்தான்.

அகத்தியன் அழைப்பை ஏற்காமல் இருப்பதை பார்த்து கடுப்பான கார்த்திக், "இங்கே ஒருத்தன் உயிருக்கு போராடிட்டு இருக்கான். இவனுக்கு மீட்டிங் முக்கியமா போச்சா?" என்று ஒரு பக்கம் முகம் முழுவதும் வீங்கி, சிறு பிள்ளை போல் அழுதுக் கொண்டே மீண்டும் அகத்தியனுக்கு தொடர்பு கொண்டான்.

இம்முறை அகத்தியன் அழைப்பை ஏற்று 'ஹலோ' என்று சொல்லும் முன் "மச்சான்... என்னை எப்படியாவது காப்பாத்துடா" என்று வீங்கி போன வாயோடு 'ஓவென்று' ஒப்பாரி வைத்தான் கார்த்திக்.

கார்த்திக்கின் சத்தத்தில் காதிலிருந்து சிறிது கைப்பேசியை தள்ளி பிடித்தவன் பற்களை கடித்துக் கொண்டு "நீ எது சொல்றதா இருந்தாலும் தமிழ்ல சொல்லு. இல்லையா இங்கிலீஷ்ல சொல்லு. எனக்கு கொரியன் லாங்வேஜ் எல்லாம் தெரியாது" என்று சொன்னானே பார்க்கலாம்.

அவ்வளவு தான் கார்த்திக்கோ அதிர்ந்து போய் "எதே கொரியன் லாங்வேஜ்ஜா?" என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்டவன் 'ஓவென்று' மீண்டும் அழ ஆரம்பித்து விட்டான்.

அகத்தியனோ நெற்றியை நீவிக் கொண்டு திரும்பி சரவணனை பார்க்க, அவரோ கைப்பேசியில் மூழ்கி இருக்க, கார்த்திக்கிடம் மெல்லிய குரலில் "இப்போ எதுக்குடா பொம்பளைங்க மாதிரி ஒப்பாரி வச்சிட்டு இருக்க?" என்று எரிச்சலாக கேட்டான்.

எதிர்முனையில் பட்டென்று அழைப்பை துண்டித்து இருந்தான் கார்த்திக்.

அதை பார்த்த அகத்தியனோ "என்ன கேட்டுட்டேனு இப்போ போனை கட் பண்ணான்" என்று அவன் முணுமுணுத்து முடிப்பதற்குள் வீடியோ காலில் அகத்தியனுக்கு அழைத்து இருந்தான் கார்த்திக்.

அகத்தியனுக்கோ எரிச்சல் மேல் எரிச்சலாக இருந்தது. ஆனாலும் நண்பன் அழுதுக் கொண்டு பேசியது அவன் நினைவில் இருக்க, காதில் ப்ளூடூத்தை பொருத்திக் கொண்டு கைப்பேசியை தன் முன் வைத்து அழைப்பை ஏற்று நண்பனின் முகத்தை பார்த்த அகத்தியனுக்கு தூக்கிவாரி போட்டது.

விழிகள் விரிய "என்னடா இது முகம் எல்லாம் வீங்கி போய் இருக்கு?" என்று சற்று சத்தமாக கேட்டு விட, சரவணனோ என்னவென்று அகத்தியனை திரும்பி பார்த்தான்.

அதை கவனித்த அகத்தியன் நண்பனிடம் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு, சரவணனை பார்த்து "ஒரு பைவ் மினிட்ஸ்" என்று அனுமதி வாங்கிக் கொண்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்தவன் எதிரே இருந்த அவன் அறைக்குள் நுழைந்த அடுத்த கணம் மீண்டும் கைப்பேசியை உயர்த்தி நண்பனை பார்த்தான்.

கார்த்திக்கோ இப்பொழுது வரை அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டு இருக்க, அதில் கோபம் கொண்ட அகத்தியன் "ச்சீ பொண்ணு மாதிரி அழாம என்னாச்சினு சொல்லு. ஆமா உன் முகத்துல யாரு இப்படி பிராண்டி வச்சது?" என்று கேட்டான்.

கார்த்திக்கோ கண்ணீரை துடைத்துக் கொண்டு "அரண்மனை பேய்டா" என சொன்னதை கேட்டு அகத்தியன் குழப்பத்தோடு "இல்ல எனக்கு புரியல" என்றான்.

அதை கேட்ட கார்த்திக் இந்த இரண்டு மணி நேரத்தில் என்ன நடந்தது என்று சுருக்கமாக நண்பனிடம் கூற ஆரம்பிக்க,

நாம் விரிவாக பார்க்க ஆரம்பிக்கலாம்...

அகத்தியன் போனதும் சைதன்யாவை மாடியிலிருந்து பார்த்துக் கொண்டு நின்று இருந்த கார்த்திக்கோ அவளை எப்படி இந்த வீட்டை விட்டு துரத்தி விடுவது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தவனின் பார்வை டிவியில் ஓடிக் கொண்டு இருந்த அரண்மனை பேய் படத்தின் மீது படிந்தது.

அதை பார்த்த கார்த்திக் "செம ஐடியா. பொண்ணுங்களுக்கு இந்த பேய், கரப்பான் பூச்சி, கம்பளி பூச்சி, வண்டு பூச்சினா பயம். இந்த வீட்ல கம்பளி பூச்சி கரப்பான் பூச்சி இருக்க வாய்ப்பில்லை. சோ நம்மளே பேய் மாதிரி வேஷம் போட்டு போய் அவளை பயப்பட வச்சி இங்கே இருந்து ஒரே விரட்டு தான் விரட்டி விட்டுடலாம்" என்று படும் குஷியாக திட்டம் போட ஆரம்பித்தவன் பேய் வேஷம் போடுவதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கைப்பேசியில் கூகுள் மூலம் தேட ஆரம்பித்தான்.

அப்பொழுது அவன் தலைக்கு மேல் ஏதோ ஒன்று தலையை வைத்து அழுத்தியபடி நிற்பதை உணர்ந்தவன் திடுக்கிட்டு போனான்.

தன் தலைமீது என்ன அழுத்திக் கொண்டு இருக்கிறது என்று மெல்ல கரத்தை உயர்த்தி தடவி பார்த்தவனுக்கு ஏதோ ஒன்று பிசுபிசுவென்று இருக்க, அதை எடுத்து பார்த்தான்.

சிவப்பு நிறத்தில் ரத்தம் போல் இருப்பதை பார்த்தவனுக்கு தூக்கிவாரி போட்டது.

தன் தலைமீது எதோ ஒரு பெரிய பூச்சி செத்து விழுந்து இருப்பதாக நினைத்து சற்று பயம் கொண்ட மனமோ 'ஆனா செத்த பூச்சி உர்... உருனு சத்தம் போடுமா என்ன?' என்று நினைத்தவன் மூளையோ அது என்னவாக இருக்ககூடும் என யோசித்தபடி தன் கைப்பேசியின் கேமராவை ஆன் செய்து தலைக்கு மேல் உயர்த்தி பிடித்து ஒரு புகைப்படத்தை எடுத்து பார்த்தான்.

பார்த்தவன் விழிகள் பெரியதாக விரிந்து அப்படியே அதிர்ச்சியில் இருக்க, கரங்களோ நடுங்க ஆரம்பிக்க... துடித்துக் கொண்டு இருந்த இதயம் துடிப்பதை நிறுத்தி விட்டது போல் அப்படியே ஸ்தம்பித்து போய் அமர்ந்து இருந்தவனின் முகம் வெளிறி போனது.

நடுங்கிய உதடு "ஈ... ஈஈ... ஈஈஈ... மேக்கப் போட்ட ஹன்சிகா பேய் தானே அது" என்று சொன்னவனின் தலைமீது எறி அமர்ந்து இருந்த அந்த பேயோ அவன் தலையை பிடிச்சி டிங்கு டிங்கு என்று ஆட்டி அவனை அலற வைக்க, எழுந்து ஓடி தப்பிக்க பார்த்தவனை எந்த பக்கம் ஓடினாலும் அது சுவராக மாறி அவனின் முகத்தின் மீது முட்டி மோதி அவனுக்கு பலமாக அடிபட வைத்தது.

கார்த்திக்கோ சத்தமாக "என்னை காப்பாத்துங்க..." என்று கத்தினாலும் ஒருவருக்குமே அவனின் கதறல் கேட்கவேயில்லை.

கீழே அதே சமயம் சைதன்யா பலத்த குரலில் சிரித்தபடி பார்த்துக் கொண்டு இருந்ததும் அதே போன்ற ஒரு காட்சி தான். (ஸ்டோரூமில் சந்தானம் அடிவாங்கும் காட்சி)

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அவனை புரட்டி அடித்த பேயே டயர்டாகி 'ச்சீ பே. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே' என கடுப்பாக அங்கே இருந்து பறந்துச் செல்ல, அதை விழி விரித்து பார்த்தவனுக்கு ஈரக்குலை நடுங்கி போனது.

நடந்ததை அழுதுக் கொண்டே சொன்னவனோ "சீக்கிரமா வாடா என்னை வந்து காப்பாத்து. நம்ம வீட்ல பேய் இருக்கு மச்சான். அதை நான் என் இரண்டு கண்ணால பார்த்தேன். பேயை பத்தி பேசின என்னையே இந்த புரட்டு புரட்டி இருக்குனா, பேய் படத்த பார்த்துட்டு இருந்த அந்த பஜாரியை என்ன காட்டு காட்டுச்சோ தெரியலையே" என்று நெளிந்துக் கொண்டு கூறினான் கார்த்திக்.

அகத்தியனோ முகம் சுருங்க கார்த்திக் சொன்னதை யோசித்தவனுக்கு ஏனோ பேயின் மீது எல்லாம் சுத்தமாக நம்பிக்கை இல்லை.

ஆனால் நண்பன் இருந்த கோலத்தை பார்த்தவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

ஏதோ ஒன்று தவறாக நடந்து இருக்கிறது என்று உணர்ந்தவன் கார்த்திக்கிடம் "வரேன்" என்று மட்டும் கூறி அழைப்பை வைத்து விட்டு, உடனே தன் மடிக்கணினியில் வீட்டில் பொருத்தி வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா மூலம் என்ன நடந்து இருக்கும் என்று ஆராய தொடங்கினான்.

கார்த்திக் கூறியது போல் படம் பார்த்துக் கொண்டு இருந்த சைதன்யாவை முறைத்து விட்டு அவன் அறைக்குள் செல்வது வரைக்கும் தெளிவாக இருக்க. அதன் பிறகு கார்த்திக் சென்ற அறையின் சிசிடிவியில் ஏதோ கோளாறு வந்தது போல் க்ரீச் என்ற சத்தத்துடன் அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து, அதாவது கார்த்திக் அகத்தியனுக்கு தொடர்புக் கொண்ட நேரத்திலிருந்து காட்ட ஆரம்பித்தது.

அகத்தியனோ அதிர்ச்சியாக வீடியோவை மீண்டும் பின்னோக்கி ஓட விட்டு பார்த்தான். அப்போதும் அதே போல் வர, சந்தேகமாக மற்ற கேமராவை ஆராய்ந்தான். அனைத்துமே நன்றாக வேலை செய்தது.

அந்த சமயம் சைதன்யா எழுந்து டிவி அருகில் சென்று வேறு ஏதாவது சிடி கிடைக்கிறதா என்று டிவி மேசையின் ட்ராவை திறந்து தேடுவது தெரிய, அவள் என்ன செய்கிறாள் என்று உற்று பார்த்தவனுக்கு அவள் அடுத்து டிவியில் ஓட விட்ட படத்தின் பெயர் தெளிவாக தெரியவும் இங்கே கார்த்திக்கின் அறையில் இருந்த கேமரா ஸ்கிரீன் மெல்ல மெல்ல பொரி பொரியாக மாறுவதை பார்த்து திகைத்து போய் விட்டான் அகத்தியன்.

சட்டென சைதன்யா ப்ளே செய்த படத்தின் பெயரை பார்த்துக் கொண்டே "தி கான்ஜுரிங்" என்று உச்சரித்த அந்த கணம்,

கார்த்திக்கின் அறையில் மீண்டும் அலறல் சத்தம் வர தொடங்கியது.
 

NNK-90

Moderator
அத்தியாயம்- 9

திகைத்து போன அகத்தியன், கார்த்திக்கு அவசர அவசரமாக கைப்பேசியில் தொடர்பு கொள்ள, அதுவோ "நீங்கள் அழைக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்" என்று வர, அழைப்பு போகாமல் இருப்பதை பார்த்து அதிர்ந்தே விட்டான்.

இப்படியே இருந்தால் சரி வராது என்று எண்ணியவன், தன் காரியதரிசியை அழைத்து "மிஸ்டர் சரவணன் கூட இருந்த மீட்டிங்கை உடனே கேன்சல் பண்ணிடுங்க. நான் அவசரமா வெளியே போக வேண்டியது இருக்கு. சரவணன் கூட இன்னொரு நாள் மீட்டிங்க்கு ஸ்கெடியூல் போட்டுடுங்க" என்று பரபரப்பாக கூறிக் கொண்டே தன் காரின் சாவியையும் கைப்பேசியையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான் அகத்தியன்.

அப்பொழுது காரியதரிசி நித்திஷோ "ஆனால் சார், இது பல கோடி இன்வெஸ்ட்மென்ட் பத்தின ப்ராஜெக்ட். நீங்க அவரோட ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மென்ட் பண்றதா சொல்லி தான் இன்னிக்கு அப்பாயின்மென்ட் போட்டோம். திடீர்னு கேன்சல் பண்ண சொன்னா" என்று அவன் பேசிக் கொண்டே அகத்தியன் பின்னால் சென்றான்.

அகத்தியனோ கார் கதவை திறந்துக் கொண்டே "பணம் கொடுக்கிறது நம்ம. சோ வாங்கணும் நினைக்கிறவங்க கொஞ்சம் வெயிட் பண்றதுல தப்பு இல்லையே" என்று சொல்லி விட்டு பட்டென்று கதவை அடித்து சாத்தியவன் புயல் வேகத்தில் காரை செலுத்த தொடங்கினான்.

தன் முதலாளி கூறி விட்டுச் செல்வதை கேட்டு உறைந்து போன நித்திஷோ "என்னாச்சி இவருக்கு. எப்போவும் நம்ம கிட்ட பணம் இருக்குனு ஒருத்தரை எதுக்காகவும் வெயிட் பண்ண வைக்க கூடாதுனு சொல்றவரு. இன்னிக்கு எதிர்மறையா பேசிட்டு போறாரே?" என்று குழப்பத்துடன் அதே சமயம் சிறு சங்கடத்துடன் சரவணனை காணச் சென்றான்.

அகத்தியன் அவசர வேலையாக சென்றதையும் மீட்டிங்கை இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம் என்று கூறியதையும் பணிவாக சரவணனிடம் எடுத்து சொல்ல,

அவனோ தொழிலில் போட வேண்டிய முதலீட்டை நினைவில் நிறுத்தி தன் ஆதங்கத்தை மறைத்துக் கொண்டு "இட்ஸ் ஓகே நித்திஷ். இன்னொரு நாள் பார்த்துக்கலாம்" என்று சொன்னவன் விறுவிறுவென அங்கே இருந்து வெளியேறினான்.

வெளியே வந்தவன் தன் கைப்பேசியை எடுத்து 'மிஸ்டர் டெவில்' என்ற பெயர் சேமித்து வைத்து இருந்த எண்ணுக்கு அழைத்தான்.

எதிர்முனையில் தொடர்பு ஒரே அழைப்பில் ஏற்கப்பட சரவணனோ "சாரி பாஸ், அந்த அகத்தியனை நிறுத்தி வைக்க முடியல. ஆபிசிலிருந்து கிளம்பிட்டான். எங்கே போறான்னு தெரியல. இந்த டீல் மட்டும் ஓகே ஆகி இருந்துச்சினா" என்று சொல்லிக் கொண்டே உயரமான அந்த கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்து "தியன் கேப்பிடல் லிமிடெட் (வர்த்தக மூலதனம்) கம்பெனி நமக்கு சொந்தமாகி இருக்கும். அப்புறம் அந்த அகத்தியனையும் போட்டு தள்ளி இருக்கலாம்" என்று பற்களை கடித்துக் கொண்டு கூறினான்.

அதை கேட்ட மிஸ்டர் டெவில் "முட்டாள்" என்று மட்டும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவன் அருகில் நின்று இருந்த அவனின் பி.ஏவிடம் "அகத்தியனை ஃபாலோ பண்ண சொல்லு. ஒருவேளை அவன் அவனோட வீட்டுக்கு போற மாதிரி தெரிஞ்சா, அகத்தியனை வீட்டுக்கு போக விடாம தடுக்க சொல்லு. தடுக்க முடியலனா போட்டுற சொல்லு. எப்படியோ முப்பது வயசுல சாக போறவன் தானே. சோ நம்ம ஒரு மாசத்துக்கு முன்னாடி நல்லபடியா நரகத்துக்கு வழி அனுப்பி வச்சிடலாம்" என்று சொல்லி சத்தமாக சிரித்தான் அவன்.

அதை கேட்ட பி.ஏ வும் அகத்தியனின் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்த ஆட்களுக்கு அழைத்து விவரங்களை கூறி முடித்தான்.

அதே நேரம் இங்கே கார்த்திக்கோ யார் பெத்த பிள்ளையோ, என்ற ரேஞ்சில் அடிகள் வாங்கிக் கொண்டு மூக்கில் ரத்தம் வழிய அழுதுக் கொண்டே சிக்னல் கிடைத்த போனிலிருந்து நண்பனுக்கு அழைத்தான்.

அகத்தியன் என்ன தான் அதிவேகமாக காரை ஓட்ட தொடங்கினாலும் நேரம் ஆக ஆக திடீரென்று அவன் காருக்கு முன்னும் பின்னும் நிறைய கருப்பு கலர் கார்கள் ஊர்ந்துக் கொண்டு இருப்பதை பார்த்து தன் காரின் வேகத்தை குறைத்தவன் கடுப்பாக ஹாரன் அடித்துக் கொண்டு இருந்தான்.

"இவனுங்க வேற. நேரம் காலம் தெரியாம விளையாடிட்டு இருக்கானுங்க" என்று எரிச்சல் அடைந்தான்.

சரியாக கார்த்திக்கிடமிருந்து அழைப்பு வரவும் இம்முறை தாமதிக்காமல் உடனே அழைப்பை ஏற்றான்.

கார்த்திக்கோ "மச்சான்..." என்று பெரும் குரலோடு அழ ஆரம்பிக்க, அகத்தியனோ "என்னடா இந்த முறை காஞ்சுரிங்கா?" என்று ஒரு யூகத்தில் தான் கேட்டான்.

அதை கேட்ட கார்த்திக் "ஆமாடா..." என்று அழ ஆரம்பித்தவன் "சீக்கிரமா வாடா. என்னால அடி தாங்க முடியல. இங்கே என்ன நடந்துட்டு இருக்குனு புரியலடா. எல்லாமே மர்மமா இருக்கு. என்னால இந்த ரூமை விட்டு வெளியே போகவே முடியலடா. அப்படி என்னடா இருக்கு இந்த ரூம்ல" என்று சுற்றி முற்றி பார்த்து அழுதபடியே கேட்டான்.

அப்பொழுது தான் திடீரென்று அகத்தியனுக்கு அந்த கல் ஞாபகம் வர, 'ஒருவேளை அந்த கல்லால இருக்குமோ? அது என்ன சூனியம் செய்த கல்லா?' என்று யோசிக்க தொடங்கியவன், "வந்துட்டே இருக்கேன்டா. நான் வர வரைக்கும் நீ வாய் திறந்து எதை பத்தியும் பேசாதே. வாயை பொத்திக்கிட்டு அமைதியா இரு. நீ என்ன பேசுறீயோ அது தான் உனக்கு நடந்துட்டு இருக்கு" என்று கூறிவிட்டு அழைப்பை வைத்தான்.

கார்த்திக்கோ அடிப்பட்ட இடுப்பை பிடித்துக் கொண்டு அகத்தியனின் அறையை பயத்துடன் சுற்றி பார்த்தான்.

ஆம் காலையில் அகத்தியன் போனதும், சைதன்யாவை முறைத்துக் கொண்டு திட்டம் போட நுழைந்த இடம், அகத்தியனின் பழைய அறை தான். அதாவது நேற்று இரவு சைதன்யாவையும் அந்த நீல நிற கல்லையும் வைத்து இருந்த அதே அறை தான் அது.

அகத்தியன் கூறியது போல் வாயை பொற்றிக் கொண்டு கண்களை மூடி ஒரு ஓரமாக அமர்ந்து விட்டான் கார்த்திக்.

இங்கே இவ்வளவு கலவரங்கள் நடந்துக் கொண்டு இருக்க, அங்கே ஹாலில் அமர்ந்து படம் பார்த்து சலித்து விட்டது போல் சோம்பல் விட்ட சைதன்யா, எழுந்து மதிய சாப்பாடு தயாராகி விட்டதா என்று சமையல் அறையில் காணச் சென்றாள்.

சைதன்யா வருவதை பார்த்ததும் அனைவரும் சற்று பதற்றமடைய அவளோ "மதியம் என்ன சாப்பாடு?" என்று கேட்டுக் கொண்டே சமைத்து வைத்து இருந்த பாத்திரங்களை திறந்து பார்த்து முகத்தை சுழித்தாள்.

"என்ன எல்லாமே காய்கறியா இருக்கு? இந்த நான்வெஜ் எல்லாம் சமைக்க மாட்டீங்களா?" என்று கேட்டாள்.

அவர்களோ "ஐயா வெஜிடேரியன்ம்மா" என்று கூற, சைதன்யாவோ "அட நானும் தான் வெஜிடேரியன். ஆனால் இந்த மட்டன், மீன், கோழி வாசனை எல்லாம் ரொம்ப பிடிக்கும். இத்தன நாள் சாப்பிட முடியாம போச்சு. இப்போ என்ன தெரியல இதெல்லாம் சாப்பிடணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. சோ எனக்காக மட்டன் சுக்கா செஞ்சி தரீங்களா?" என்று ஆசையாக கேட்டவளை பாவமாக பார்த்து இல்லை என்பது போல் தலையை ஆட்டினார்கள்.

அதை பார்த்த சைதன்யாவிற்கு சிறு கோபம் எட்டி பார்க்க, அந்நேரம் வீட்டினுள் திபு திபுவென்று ஆட்கள் நுழையும் சத்தம் கேட்டு என்னவென்று வெளியேச் சென்று பார்த்தாள்.

முன்னறையில் ஒரு பத்து பதினைந்து பேர் கத்தி கட்டையோடு வந்து நிற்பதை பார்த்து விழிகளை விரித்தவள் "இவனுங்க இங்கேயும் வந்துட்டானுங்களா? அய்யோ அந்த கல் வேற இங்கே தானே இருக்கு. அதை எடுத்துட்டு போக வந்துட்டானுங்களா? இப்போ என்ன செய்யுறது அகத்தியன் வேற வீட்ல இல்ல. அந்த கார்த்திக்" என்று மேல் மாடியை பார்த்து "அவன் இப்போ சண்டை போடுற நிலையில் இல்லையே. என்ன செய்யலாம் நம்ம தான் சமாளிக்கணும் போலவே" என்று முணுமுணுத்தவள், ஆழ்ந்து மூச்சை எடுத்துக் கொண்டு "சரி சமாளிப்போம். எவ்வளவு பண்ணியாச்சி இதை பண்ண மாட்டோமா?" என்று கெத்தாக அவர்கள் முன் சென்று நின்றாள்.

சைதன்யாவை பார்த்ததுமே அனைவரும் திகைத்து போய் இரண்டடி பின்னால் செல்ல, அந்த கூட்டத்தில் இருந்த நந்தீசர் மட்டும் சைதன்யாவை பார்த்ததுமே "தங்கச்சிம்மா..." என்று அழைத்துக் கொண்டே அவள் அருகில் போக நினைத்தவனை தடுத்து,

"பாஸ் சொன்னது ஞாபகம் இல்லையா?" என்று கேட்டான் அருகில் நின்று இருந்தவன்.

அவனை திரும்பி முறைத்து பார்த்த நந்தீசரோ வேறு வழியில்லாமல் அமைதியாக நின்று விட, அதை கேலியாக பார்த்த சைதன்யா,

"என்னுடைய அகத்தியன் வரதுக்கு முன்னாடி எல்லாரும் இங்கே இருந்து ஓடி போயிடுங்க. இல்ல அவன் கையால அடிவாங்கியே செத்துடுவீங்கடா. அவனோட அடி ஒவ்வொன்னும் இடி போல இருக்கும்" என்று அங்கும் இங்கும் நடந்துக் கொண்டே வசனம் பேசினாள்.

அப்பொழுது கார்த்திக்கின் அறை கதவு தானாக திறக்கப்பட, அடுத்த கணம் விழுந்து எழுந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடி வந்து படிகளில் வேகமாக கீழே இறங்கியவன் சைதன்யாவின் அருகில் வந்து நின்றதும் அப்படியே அதிர்ந்து நின்று, அழுது விடும் குரலில்,

"யாருடா நீங்க எல்லாம். இப்போ தான்டா பேய் கிட்ட அடிவாங்கிட்டு வந்து இருக்கேன். அதுக்குள்ள கட்டை அருவாளோடு வந்து நிக்கிறீங்க. கொஞ்சம் கூட கேப் விட மாட்டீங்களாடா? அடிவாங்க கூட என் கிட்ட தெம்பு இல்லடா" என்று ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான்.

கார்த்திக்கின் நிலைமையை பார்த்து அந்த ரவுடிகளே பாவமாக ஒரே சமயத்தில் "ச்சு... ச்சு... ச்சு..." என்று கொட்டி "ரொம்ப புரட்டி எடுத்துடுச்சோ?" என்று சரியாக கேட்டனர்.

அவனோ "ரொம்ப ரொம்ப..." என்று சொல்ல. கூட்டத்தின் தலைவன் போல் இருந்தவனோ "சரி நீ ஓரமா போய் உட்காரு. உன்னை நாங்க அடிக்க மாட்டோம். எங்களோட டீலிங் எல்லாம் இந்த சைதன்யாவோட முடிச்சிக்கிறோம்" என்று கார்த்திக்கிற்கு பாவம் பார்த்தனர்.

கார்த்திக்கோ அருவாள் கட்டையோடு சுற்றி நின்றிருந்த ஆட்களை பார்த்துவிட்டு, அந்த நிலையிலும் ஒரு பெண் முன்னால் தன் கெத்தை விட்டு கொடுக்க கூடாதென்று நெஞ்சை நிமிர்த்தியபடி "எந்த டீலிங்கா இருந்தாலும் என் கிட்ட பேசுங்க. போயும் போயும் ஒரு பொண்ணு கிட்ட உங்க வீரத்தை காட்ட போறீங்களா? ஆம்பளைங்களாடா நீங்க?" என்று வலியை மறைத்துக் கொண்டு வீர வசனம் பேசியவனை,

"ஸ்ஸப்பா..." என்று சுண்டுவிரலை காதில் குடைந்தபடி பார்த்தான் அந்த தலைவன்.

"இவனுக்கு இன்னும் என்ன சீனுனே தெரியல போல. இங்க பாரு நீ பேய் கிட்ட அடிவாங்கிட்டு வந்து இருக்கனு தான் உனக்கு பாவம் பார்த்தோம். ஏன்னா பேயோட அடி எப்படி இருக்கும்னு இங்கே நிக்கிற ஒவ்வொருத்தனுக்குமே நல்லாவே தெரியும்" என்று சொன்னதை கேட்ட கார்த்திக்கோ,

"அப்போ நீங்க எல்லாம் என் இனமாடா?" என்று பாசமாக கேட்டான்.

அனைவரும் சிறுப்பிள்ளைகள் போல் ஆம் என்று தலையை ஆட்ட, "பாசக்கார பயலுங்க" என்று சொன்ன கார்த்திக்கை கேவலமாக பார்த்த சைதன்யா,

"இவனுங்களா பாசக்கார பையலுங்க. இவனுங்க உன்னோட ப்ரெண்ட் அதான் அகத்தியனை போட்டு தள்ள வந்து இருக்கானுங்க" என்று சொன்னதும் திகைத்து போய்,

"என்னது?" என்று கேட்டான்.

சைதன்யாவோ "என்ன என்னது? உண்மைய தான் சொல்றேன். இவனுங்க இங்க பாசமழை பொழிய வரல. நம்மள பாயசம் பண்ண வந்து இருக்கானுங்க" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ரவுடிகளில் ஒருவன் முன்னே வந்து சைதன்யாவை அடிக்க கட்டையை ஏந்த, சட்டென்று சுதாரித்த சைதன்யாவோ அருகில் அதிர்ச்சியுடன் நின்று இருந்த கார்த்திக்கை பிடித்து தன் முன் நிறுத்தவும் ஏந்திய கட்டை அவனின் தலையை பதம் பார்க்கவும் அதே நேரம் அகத்தியன் வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது.

வாசலில் வந்து நின்ற அகத்தியனின் கண்ணில் பட்டது என்னவோ ஒரு ரவுடி கார்த்திக்கின் மண்டையை அடித்து உடைப்பது தான்.

அதை பார்த்து விட்டு அமைதியாக நின்று விடுவானா என்ன அகத்தியன். அடுத்த கணம் என்ன ஏது என்று எதை பற்றியும் விசாரிக்காமல் மின்னல் வேகத்தில் உள்ளே புகுந்து கார்த்திக்கின் தலையில் கட்டையை வைத்து அடித்தவனின் முதுகில் ஒரே ஏத்து தான் ஏத்தி குப்புற விழ வைத்தான்.

அதன் பின் அங்கே பேச்சுவார்த்தைக்கு என்ன வேலை அடிதடி சண்டை தான்.

கார்த்திக்கோ ரத்தம் வழியும் தன் தலையை இருக்கரத்தாலும் பிடித்தபடி பின்னால் நின்று இருந்த சைதன்யாவை திரும்பி பார்த்து, "நான் பாட்டுக்கு பேய் கிட்ட அடிவாங்கிட்டு சிவனேனு தானே கிடந்தேன். என்னைய வீர வசனம் எல்லாம் பேச வச்சிட்டு, அடி வாங்கவும் விட்டு ரத்தம் வழிய விட்டியே. அப்படி நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்?" என்று கேட்டான்.

சைதன்யாவோ அவனை பாவமாக பார்த்து "வீர வசனம் பேச சொன்னது நான் இல்லையே. அப்புறம் ப்ரெண்டுக்காக ரத்தம் எல்லாம் கொட்ட மாட்டீங்களா?" என்று கேட்டவளை வெட்டுவது போல் பார்த்து விட்டு திரும்பி நண்பனை பார்த்தான்.

அங்கே அவனோ ரவுடிகளுடன் சண்டை போட ஆரம்பித்து விட, கார்த்திக்கோ "அய்யோ இவன் வேற எதை பத்தியும் விசாரிக்காம அடிச்சிட்டு இருக்கானே" என்று நொந்து போய் அப்படியே படிக்கட்டில் அமர்ந்து விட்டான்.

சைதன்யாவோ அகத்தியன் சண்டை போடுவதை பார்த்து விட்டு 'இப்போ எதுக்கு ஆடு தானா போய் என்னைய வெட்டுங்கடானு தலையை கொடுக்குதுனு தெரியலையே' என்று யோசித்தவள் சுற்றி பரபரப்பாக சண்டையிட்டுக் கொண்டு இருந்தவர்களை நோட்டமிட ஆரம்பித்தவளின் பார்வை கூர்மையானது.

முதுகை காட்டி சண்டை போட்டு கொண்டு இருந்த அகத்தியனை நோக்கி ஆவேசமாக நந்தீசர் பள பளவென மின்னும் கூர்மையான கத்தியை குத்துவது போல் உயர்த்திக் கொண்டு போக, அதை கவனித்த சைதன்யாவோ சலிப்பாக இருப்பக்கமும் தலையை ஆட்டியவள் "நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா? அதான் ஹீரோயின் இங்கே இருக்கேனே. ஹீரோக்கு ஒரு ஆபத்துனா ஹீரோயின் சும்மா விட்டுருவாளா?" என்று தனக்கு தானே கெத்தாக பேசிக் கொண்டு அகத்தியனுக்கும் நந்தீசருக்கும் நடுவில் சென்று சண்டையிட தயாராக, அதற்குள் கார்த்திக்கும் நந்தீசர் அகத்தியனை தாக்க வருவதை பார்த்து விட்டவன்,

பயத்தில் "அகத்தியா?" என்று கத்தி விட, அவனின் சத்தத்தில் அகத்தியன் திரும்பி பார்க்க, அகத்தியனை குத்துவதற்காக முன்னே நோக்கிய கத்தியோடு நந்தீசரும் கார்த்திக் இருக்கும் திசையை திரும்பி நோக்க, நடுவில் சென்று சைதன்யாவும் அதே நேரம் இருவருக்கும் இடையில் வந்து நிற்கவும் அகத்தியனை கொலை செய்ய வந்த நந்தீசரின் கூர்மையான கத்தி, சைதன்யாவை தாக்கிக் கொண்டு அவளின் இடுப்பின் பின் பக்கம் வந்து நின்றது.

இக்காட்சியை பார்த்த அனைவரும் ஸ்தம்பித்து போய் நிற்க, கார்த்திக்கோ விழிகளை விரித்து உறைந்து போய் அப்படியே நின்று விட, நந்தீசரோ திடுக்கிட்டு கத்தியிலிருந்து கையை எடுக்க,

அகத்தியனுக்கு துடித்துக் கொண்டு இருந்த இதயம் துடிப்பதையே நிறுத்தி விட்டது போல் அவன் நாடி நரம்பு மொத்தமும் தன் துடிப்பே செயலிழந்தது போல் இருந்தது.
 

NNK-90

Moderator
அத்தியாயம்- 10

நந்தீசர் அகத்தியனை கத்தியால் குத்துவதற்கு பதில் சைதன்யாவை குத்தி விட, அதை பார்த்த மற்ற ரவுடிகளோ திடுக்கிட்டு போய், அங்கே இருந்து வெளியே ஓட ஆரம்பித்தவர்களில் சிலர் நந்தீசர் அதிர்ந்து அப்படியே நின்று இருப்பதை பார்த்து, அவனையும் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து தலைத்தெறிக்க ஓடி விட்டனர்.

அவர்கள் மட்டுமா? அவ்வீட்டின் பணியாளர்களும் திகைத்து போய், பயத்தில் ஒவ்வொருவராக வெளியேறி விட, அதிர்ந்து போன கார்த்திக்கோ உதடு நடுங்க,

"எ...ன்...ன ரத்...தமே வரல" என்று சொன்னவன் உறைந்து போய் நின்று இருந்த அகத்தியனை பயந்த விழிகளோடு பார்த்தான்.

அகத்தியனுக்கும் பேரதிர்ச்சி தான். கத்தியால் காயப்பட்டும் ஒரு துளி உதிரம் கூட அவள் மேனியிலிருந்து உதிரவில்லையே என்று உறைந்து போய் பார்த்தவன் விழி ஏன் என்று தெரியாமல், விழி நீர் சுரக்க, ஒற்றை கண்ணிலிருந்து வழியும் நீரோடு ஏறிட்டு சைதன்யாவின் நயனங்களை நோக்கினான்.

அத்தனை நேரம் நின்ற இடத்திலிருந்து ஆடவனின் முகத்தின் உணர்வுகளையே பார்த்துக் கொண்டு அப்படியே நின்று இருந்த சைதன்யாவின் கண்களில் அத்தனை வலிகள் தேக்கிக் கொண்டு தன் எதிரே வலி நிறைந்து பார்வையோடு நின்று இருந்த அகத்தியனை பார்த்தாள்.

இருவரின் விழிகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள, இருவருக்குமே சொல்லில் அடங்காத வலி ஏற்பட, சைதன்யாவோ ஆழமாக அகத்தியனையே பார்த்தவள் மனம் 'என்னை மன்னிச்சிடுங்க அகத்தியன். நீங்க எனக்கு கொடுத்த வலியை நான் உங்களுக்கு கொடுத்துட்டேன்' என்று உணர்வுபூர்வமாக நினைத்தாள்.

அவள் நயனங்களை பார்த்துக் கொண்டு நின்று இருந்த அகத்தியனின் கண் முன் மின்னல் போல் 'நான் உனக்கு இந்த வலியை கொடுத்து இருக்க கூடாதுடி. என்னை மன்னிச்சிடு' என்று குருதி வழியும் அவன் பிம்பம் வந்துச் செல்ல, ஆடி போன அகத்தியன் பாதம் தடுமாறி பின்னால் நகர, அதற்குள் கார்த்திக்கோ நண்பனின் அருகில் வந்தவன்,

"டேய் என்னடா பேயை இவ்வளவு நேரம் வெறிக்க பார்த்து சைட் அடிச்சிட்டு இருக்க? வாடா இங்கே இருந்து ஓடிடலாம்" என சொல்லி அகத்தியனை கட்டாயப்படுத்தி அங்கே இருந்து இழுத்துக் கொண்டுச் சென்றான்.

அகத்தியனுக்கோ தன்னை சுற்றி என்ன நடந்துக் கொண்டு இருக்கிறது என்று கூட உணராது, உயிரே இல்லாத ஆன்மாவின் நேத்திரங்களையே பார்த்தபடி நண்பனின் இழுப்புக்குச் சென்றான்.

சைதன்யாவும் அவனின் விழிகளை மட்டுமே பார்த்தபடி இருக்க, அகத்தியனின் உடல் மறையும் நொடி கூட இருவரின் நயனங்களும் ஒன்றோடு ஒன்று ஆழமாக ஒன்றிக் கொண்டது.

அகத்தியன் வீட்டை விட்டு வெளியேறியதும் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்ட சைதன்யா குனிந்து தன் வயிற்றில் சொருகி இருந்த கத்தியை உருவி எடுத்து தூர வீசியவள்,

"எது நடக்க கூடாதுனு நினைச்சேனோ அது நடந்துடுச்சி. அகத்தியனுக்கு இப்போ என்ன பதில் சொல்றது? அய்யோ அவனால இந்த வலியை தாங்கிக்க முடியாதே? நான் ஏற்கனவே செத்து போயிட்டேன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவார்?" என்று தலையை இருக் கரத்தாலும் பிடித்துக் கொண்டு அப்படியே அங்கே இருந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்தவள் எண்ணங்கள் முழுவதுமே இப்பொழுது அகத்தியனை பற்றி தான்.

அதே நேரம் நண்பனை அந்த வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்த கார்த்திக்கோ, அகத்தியனை காரில் உட்கார வைத்து, தானும் காரில் ஏறியவன் வேகமாக அங்கே இருந்து காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

நுழைவாயிலை தாண்டும் போது, வேலையாட்கள் அங்கே கைகளை பிசைந்துக் கொண்டு பயத்துடன் நின்று இருப்பதை பார்த்தவன் காரை நிறுத்தி விட்டு கண்ணாடியை மட்டும் கீழே இறக்கி அவர்களை பார்த்து "பேயிக்கு பயந்து எவனாவது ஒருத்தன் இங்கே இருந்து போனாலும் அவனுக்கு சமாதி தான். ஒழுங்கா உள்ளே போய் அந்த பேயை பிடிச்சி வைங்க. நாங்க போய் பேய் பிடிக்கிறவரை அழைச்சி வரோம்" என்று தன் பயத்தை மறைத்துக் கொண்டு மிரட்டி விட்டுச் சென்றான்.

அவர்களோ விக்கித்து போய் நிற்க, கார்த்திக்கோ வேகமாக காரை கிளப்பி இருந்தான்.

நேராக அகத்தியன் கம்பெனிக்கு தான் நண்பனை அழைத்து வந்தான். அவனுக்கும் இச்சமயத்தில் வேறு எங்குச் செல்வது என்று தெரியவில்லை. அவன் வீட்டிற்குச் செல்வது இப்பொழுது நல்லதுக்கில்லை என்று உணர்ந்தவன், வேறு வழியின்றி கம்பெனிக்கே அழைத்து வந்து விட்டான்.

கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு சிலை போல் அமர்ந்து இருந்த நண்பனை உலுக்கியவன்,

"டேய் அகத்தியா?" என்று அகத்தியனை உசுப்ப, கோமாவில் இருந்து எழுந்தது போல் அதிர்ந்து திரும்பியவன் கார்த்திக்கை பார்த்து, "என்னடா" என்று அமைதியாக கேட்கவும்,

கார்த்திக் அதிர்ச்சியாக "என்னடாவா? டேய் என்ன ஆச்சு உனக்கு? மந்திரிச்சி விட்டவன் போல இருக்க. பேயை பார்த்து பயந்துட்டியாடா? அதான் நண்பன் நான் இருக்கேன்ல. உன்னை அந்த பேய் கிட்ட இருந்து காப்பாத்தி தூரமா அழைச்சி வந்துட்டேன்" என்று சொன்னவனை எந்த சலனமும் இல்லாமல் பார்த்து விட்டு மீண்டும் முன்னோக்கி திரும்பிக் கொண்டு தீவிரமாக எதை பற்றியோ யோசிக்க ஆரம்பித்தான் அகத்தியன்.

அந்நேரம் அவன் கைப்பேசி அலற, யாரென்று எடுத்து பார்த்தவன் புருவம் சுருங்கியது.

கார்த்திக்கும் எட்டி யாரென்று பார்த்தான். அதில் பைரவன் என்று இருக்க, "இப்போ எதுக்குடா இவன் கால் பண்றான்?" என்று கேட்டான்.

"தெரியல" என்று சொன்ன அகத்தியன் அழைப்பை ஏற்று ஒன்றும் பேசாமல் அமைதியாக ஒலிபெருக்கியில் போட்டான்.

எதிர்முனையிலும் அமைதியாக இருக்க, சற்று எரிச்சல் அடைந்த அகத்தியன் "ஹலோ" என்றான்.

"பரவாயில்லை பேசிட்ட" என்று கம்பீரமான ஒரு குரல் ஒலிக்க,

அதை கேட்டு பொறுமை இழந்த கார்த்திக் "பேசுறதுக்கு தானே போன் பண்ண?" என்று கேட்டான்.

"ஓ உன்னோட ஜால்ராவும் உன் கூட தான் இருக்கானா? இந்நேரம் பேயை பார்த்த ஷாக்குல துண்டை காணும் துணியை காணும்னு ஓடி போய் இருப்பான்ல நினைச்சேன். இன்னுமா உன் கூட ஒட்டிக்கிட்டு இருக்கான்" என்று நக்கலாக பேசியதை கேட்டு அகத்தியனும் கார்த்திக்கும் அதிர்ந்து தான் போனார்கள்.

கார்த்திக்கோ 'இவனுக்கு எப்படி தெரியும்?' என்று யோசிக்க,

"அப்போ உனக்கு எல்லாமே தெரிஞ்சு இருக்கு ரைட்?" என்று அகத்தியன் சரியாக கேட்க,

சத்தமாக சிரித்த பைரவனோ "எதிரியை வீழ்த்தணும்னு முடிவு பண்ணிட்டா அவனை பத்தின விவரங்களை விரல் நுனியில் தெரிஞ்சு வச்சி இருக்கணும் அகத்தியன். உனக்கு தெரியாததா என்ன?" என்று சொன்னவனிடம்,

"அப்போ அந்த பொண்ணை பத்தியும் தெரிஞ்சி வச்சி இருக்க சரியா?" என்று கேட்டான்.

"கண்டிப்பா" என்று திமிராக கூறிய பைரவன் "இன்னொரு இன்ட்ரஸ்டிங்கான விஷயம் சொல்லட்டா?" என்று கேட்டு பைரவன் நிறுத்த, அகத்தியன் அமைதியாக அவன் என்ன சொல்ல போகிறான் என்று எதுவும் நடுவில் பேசாமல் இருந்தான்.

பைரவனோ "சைதன்யாவை கொலை பண்ணதே நீ தான். அது உனக்கு தெரியுமா? தெரியாது. ஆனா எனக்கு தெரியும்" என்று சொல்லி சத்தமாக சிரித்தவன் முன் இருந்த சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்து ஊதினான்.

அகத்தியனின் முகம் யோசனையில் சுருங்கி "சைதன்யாவா...?" என்று கேள்வியோடு நிறுத்தினான்.

அவனுக்கு தான் இதுவரை அவளின் பெயர் கூட என்னவென்று தெரியாது அல்லவா.

அதை கேட்ட பைரவனோ ஏளனமாக "அதான் இப்போ ஒரு பேயை பார்த்து பயந்து போய் வீட்டை விட்டு ஓடி வந்தீங்களே அந்த பேயே தான்" என்று சொன்னவன் சட்டென்று அமைதியாக மாறி தீவிர குரலில்

"ஆனா அகத்தியன் இன்னிக்கு சைதன்யாவால நீ மிஸ்ஸாகிட்ட. பட் உன்னோட சாவு கன்பார்ம்" என்றான்.

அதற்கு மேல் பைரவன் பேசுவதை கேட்க விரும்பாத அகத்தியன் "ம்... ம்... ஐயம் வெயிட்டிங்" என்று கூறிவிட்டு பட்டென்று அழைப்பை துண்டித்து விட்டு "அந்த பொண்ணு பேய் என்கிற வரைக்கும் பைரவனுக்கு தெரிஞ்சி இருக்கு. அப்போ அவளை பத்தியும் தெரிஞ்சி இருக்கும். நான் எப்போ சைதன்யாவை கொலை பண்ணேன்?" என்று கேட்டான் கார்த்திக்கிடம்.

பைரவன் சொன்னதை அதிர்ச்சியுடன் கேட்டபடி அமர்ந்து இருந்த கார்த்திக்கோ நண்பனின் கேள்விக்கு "கூடவே இருந்த எனக்கே எப்போனு தெரியலடா?" என்று சொன்ன நண்பனை ஒரு முறைப்புடன் பார்த்தான் அகத்தியன்.

பின் காரிலிருந்து இறங்கியவன் சுற்றி வந்து கார்த்திக்கை கீழே இறங்கும்படி சொல்ல, அவனும் "எதுக்குடா?" என்று கேட்டபடி கார் கதவை திறந்துக் கொண்டு கீழே இறங்கினான்.

"வீட்டுக்கு போறேன்" என்று சொன்னதை கேட்டு பயந்த கார்த்திக்,

"இப்போ எதுக்குடா வீட்டுக்கு போற? அங்க பேய் இருக்குடா" என்றான்.

"அதுக்கு?" என்று கேட்ட அகத்தியனிடம்,

"இப்போ அது உன்னோட வீடு இல்லை. பேய் வீடு. நம்ம பேய் ஓட்டுற யாரையாவது அழைச்சி போய் அந்த பேயை விரட்டி விட்டு அப்புறம் நம்ம விட்டுக்குள்ள போகலாம்" என்று பயத்துடன் சொன்னான் கார்த்திக்.

"அது என்னோட வீடு கார்த்திக். ஒரு பேய்க்காக எல்லாம் என் வீட்டை விட்டுக் கொடுக்க முடியாது. அண்ட் என்னை சுத்தி என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்கணும்னா வீட்டுக்கு போய் தான் ஆகணும். நீ கூட வரதா இருந்தா வா. இல்லனா நான் மட்டும் போறேன்" என்றவன் கார்த்திக்கின் பதிலை கூட கேட்காமல் காரை எடுத்துக் கொண்டு அங்கே இருந்து புறப்பட்டே விட்டான் அகத்தியன்.

கார் போவதை அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்த கார்த்திக், "அடேய் அங்க பேய் இருக்குடா..." என கத்தியது காற்றில் தான் பறந்தது.

எவ்வளவு வேகமாக காரை ஓட்டிக் கொண்டு வந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அடுத்த பதினைந்து நிமிடத்தில் வீட்டினுள் நுழைந்து இருந்தான் அகத்தியன்.

உள்ளே வந்தவன் "சைதன்யா... சைதன்யா..." என்று கத்தியபடி வீட்டிற்கு வர,

அவளின் பெயரை முதல் முறை உச்சரித்ததை கேட்டு வலி நிறைந்த இதழ் புன்னகையோடு செவிக்குள் வாங்கிக் கொண்டாள் சைதன்யா.
 

NNK-90

Moderator
அத்தியாயம்- 11

"சைதன்யா... சைதன்யா" என்று அழைத்துக் கொண்டே வந்த அகத்தியன் ஒரு நொடி அப்படியே நின்று விட்டான். அங்கே அவனுக்காக காத்திருப்பது போல் அவள் சோபாவில் அமர்ந்துக் கொண்டு வாசலையே வெறித்து பார்த்தபடி இருந்தாள்.

சைதன்யாவை பார்த்ததுமே அவனுக்குள் சிறு பதற்றம் உண்டானது. அவளை பார்த்து அவன் பயப்படவில்லை. ஆனால் இதயத்துடிப்பின் வேகத்தால் பதற்றம் ஏற்பட்டது.

ஏன் இந்த பதற்றம் என்று தன்னை தானே அமைதியாக்கி ஆழ்ந்து மூச்சை எடுத்து விட்டவன் மெல்ல அவளை நோக்கிச் சென்றான்.

அகத்தியன் தன் அருகில் வருவதை பார்த்து எழுந்து நின்ற சைதன்யாவோ அவன் முகத்தை தான் குறுகுறுவென பார்த்தாள்.

தன்னை கண்டு பயம் கொள்கிறானா? என்ற எண்ணத்தில் அவனையே பார்த்தபடி நின்று இருந்தவள் முன் சொடக்கிட்டு அவன் கண்களை பார்க்க வைத்தான்.

இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று ஆழமாக உரசிக் கொள்ள, அந்நொடி 'உந்தன் மைதீட்டிய நயனங்கள் என்னை வசியம் செய்வதின் மாயம் என்னவோ?' என்று அவனின் பிம்பம் மீண்டும் மின்னல் போல் அவன் கண்களுக்குள் வந்துச் செல்ல, அதில் சற்று தடுமாறி பின்னால் விழ போனவனின் தோள்களை பிடித்து "பார்த்துங்க" என்று நிறுத்தினாள் சைதன்யா.

அவளின் தொடுகையில் சட்டென்று நிதானத்திற்கு வந்தவன் பட்டென சைதன்யா பிடித்து இருந்த கரத்தை வேகமாக தட்டி விட்டான்.

கோபத்துடன் "யாரு நீ? எதுக்காக இங்க வந்து இருக்க? நீ ஒரு ஆன்மாவா?" என்று பற்களை கடித்து கேட்டான்.

சைதன்யாவோ கைகளை பிசைந்துக் கொண்டு என்ன கூறுவது எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் திணறி போனாள்.

'இவருக்கு உண்மை என்னனு தெரிய வேண்டிய நேரம் வந்துடுச்சா?' என்று எண்ணியவள் தலை நிமிர்ந்து எதிரே கோபமாக நின்று இருந்தவனை பார்த்தாள்.

அகத்தியனோ "இப்போ சொல்ல போறீயா? இல்லையா? நீ பேயா இருந்தா, கார்த்திக் மாதிரியும் மத்தவங்க மாதிரியும் பயந்து ஓடி போவேனு நினைச்சியா? இது என்னுடைய சாம்ராஜ்ஜியம். இந்த இடத்தை விட்டு உன்னை விரட்டாம விட மாட்டேன். ஆனால் அதுக்கு முன்னாடி எனக்கு உண்மை என்னனு தெரிஞ்சாகணும். நீயும், அந்த கல்லும் என்னை தேடி எதற்காக வந்தீங்கனு நான் தெரிஞ்சிக்கிட்டே ஆகணும். அதிலும் அந்த பைரவனுக்கு உன்னை பத்தின எல்லா விஷயமும் தெரிஞ்சி இருக்கு. சோ அப்போ உனக்கும் அவனை பத்தி தெரிஞ்சி இருக்கும்னு தான் நினைக்கிறேன்" என்று சொன்னதை கேட்டு திகைத்து போனாள் சைதன்யா.

திகைப்புடனே "அந்த பைரவன் திரும்ப வந்துட்டானா?" என்று கேட்டாள்.

அகத்தியனோ "திரும்ப வந்துட்டானா? புரியல" என்று கேள்வியோடு நிறுத்தி அழுத்தமாக அவளை பார்த்தான்.

அவனின் பார்வையின் அழுத்தமே கேள்விக்கான அனைத்து விடைகளையும் கூறியே ஆக வேண்டும் என்பது போல் உத்தரவாக தெரிய, சைதன்யாவோ மூச்சை நன்றாக இழுத்து விட்டவள் இமையை மூடி ஒரு கணம் அப்படியே நின்றாள்.

அவள் செவிகளிலோ "பதில் தெரிந்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது யாழிசை" என்று கேட்கவும் உதட்டில் மெல்லிய புன்முறுவல் தோன்ற, தெளிவான சிந்தனையோடு அகத்தியனை பார்த்தவள், "உட்கார்ந்துட்டு பேசலாமே. ஆனால் நான் பேசி முடிக்கிற வரைக்கும் நீங்க நடுவில் எதுவும் பேச கூடாது. கேட்கவும் கூடாது" என சொல்லியவள் அவன் கரம் பற்றி அமர வைத்து அவளும் அவனின் அருகாமையிலே அமர்ந்தவள் அவன் கரத்தை பிடித்து இருந்த கையை அகற்றாமல் அகத்தியனின் முன்ஜென்ம கதையை கூற தொடங்கினாள்.

**********************************

"மிகப்பெரிய மாமுனிவரின் வம்சா வழியில் பிறந்தவர் தான் நீங்களும் உங்கள் உடன் பிறந்த பைரவனும்.

சித்தர்களுக்கெல்லாம் முதன்மையான தலைவர் அவர்.

ஞானத்திற்கும், அறிவிற்கும் அதிபதி. அறம்,பொருள், இன்பம் என நாடி வருபவருக்கு அள்ளிக் கொடுக்கும் ஈசனின் தீவிர பக்தன் அவர்.

அப்படிப்பட்ட மாமுனிவரின் வம்சத்தை சேர்ந்த பைரவனுக்கு இதில் எதிலுமே நம்பிக்கை இல்லாமல் போனது தான் விதி. ஆனால் நீங்கள் உங்களுடைய முன்னோரின் ஞானம் பெற்று இருந்ததால் அந்த மாமுனிவரை போல் நீங்களும் ஒரு தீவிர சிவன் பக்தனாக மாற முயன்றுக் கொண்டு இருந்த சமயம்" என்று அகத்தியனின் பூர்வ ஜென்ம கதையை சுருக்கமாக விவரிக்க ஆரம்பித்தாள் சைதன்யா.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயில் மற்றும் மலைகள் அடங்கிய காட்டுப் பகுதி கிராமம் அது.

அங்கே வசித்து வந்த தம்பதியருக்கு அகத்தியன், பைரவன் என்னும் இரட்டையர்கள் பிறந்தார்கள்.

இவர்கள் பிறந்து வளர்ந்த சிறு காலத்திலே கோவிலை பராமரித்துக் கொண்டிருந்த அவர்கள் தாய்,தந்தை இறைவனிடம் சரணடைந்து விட, அதன் பிறகு இருவருமே ஒருவருக்கு ஒருவர் துணையாகி போனார்கள்.

அகத்தியன் அவனின் வம்சத்தின் மூத்தவரரான மாமுனிவரின் ஞானத்தையும் அருளையும் பரிபூரணமாக பெற்று இருந்ததால், அனைத்திலும் சிறந்தவனாகவே திகழ்ந்தான்.

ஆனால் பைரவனோ அகத்தியனிற்கு நேர் எதிர். எதிலும் நம்பிக்கை என்று ஒருதுளி கூட வைக்காதவன். தன் தாய், தந்தை இறப்பிற்கு காரணம் அந்த ஈசன் தான் என்று அவர் மீது வெறுப்பை வளர்க்க ஆரம்பித்தான்.

அதன் விளைவு நன்மையை விடுத்து தீமையின் பாதையை நோக்கி அவனை அழைத்துச் சென்றது.

அகத்தியன் எவ்வளவு அறிவுரைகளை நிதானமாக எடுத்து கூறியும் தமையனின் சொல் பேச்சை கேட்காமல் மந்திரம் தந்திரம் என்று அதன் பின்னால் சென்று விட, அகத்தியனுக்கு தான் உள்ளுக்குள் பயம் குடிக் கொண்டது.

இப்படி இளையவன் ஈசனை எதிர்த்து அனைத்து காரியங்களையும் செய்துக் கொண்டு இருக்கிறானே அதன் விளைவு பைரவனுக்கு எப்படிப்பட்ட பலனை கொடுக்கும் என்று அகத்தியனால் சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை.

பைரவனை எண்ணி கவலையில் சுற்றிக் கொண்டு இருந்தவனின் கவனம் ஒரு நாள் ஆற்றுபாதையின் பக்கம் செல்ல, அங்கே நீராடிக் கொண்டு இருந்த மங்கையின் உடல்வனப்பில் தன்னையே மறந்து போன அகத்தியனின் சிந்தனைகள் வேறு எங்கோ செல்ல, திடுக்கிட்டு போன அகத்தியன்,

"சிவ சிவ..." என்று திரும்பிக் கொண்டு நெஞ்சில் கை வைத்து காற்றை ஊதி தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவன் மனமோ 'ச்சைக் என்னது இது. ஒரு பூவுடலை கண்டு மதிமயங்கி போய் விட்டேன். துணையவளின் வனப்புகளை மட்டுமே உரிமையாக ரசிக்க வேண்டும். ஆனால் நானோ யாரென்று தெரியாத ஆடவளின் வனப்புகளை பார்த்து மெய் மறந்துவிட்டேனே. அப்படி என்றால் இந்த மாயோள் தான் எந்தன் சரிபாதியோ?' என்ற கேள்வியோடு சிந்தனையில் நின்று இருந்தவன் முன் தன் உடலை முழுமையாக உடைகளால் மறைத்துக் கொண்டு அவன் முன் முறைத்தபடி வந்து நின்றாள் யாழிசை.

ஆம் எதிர்காலத்தின் சைதன்யா தான் கடந்த காலத்தின் யாழிசை ஆவாள்.

தன் முன்பு நீராடிய ஈரம் சொட்ட சொட்ட நின்று இருந்தவளை நிமிர்ந்து பார்த்தவன் தலை சட்டென்று மண்ணை நோக்கி குனிந்துக் கொள்ள, அதை பார்த்த யாழிசையோ,

"இத்தனை நேரம் எம்மை ரசித்து விட்டு இப்பொழுது மண்ணை பார்ப்பதின் அர்த்தம் என்னவோ?" என்றவள் "ஒருவேளை மண்ணென்று என்னை நினைத்து பார்த்து விட்டீரோ?" என்று கேலியாக கேட்டாள்.

அதை கேட்டு திகைத்து போன அகத்தியன் "அப்படி இல்லை பூமகளே" என்று ஆரம்பித்தவனை பார்த்து ஆச்சர்யத்துடன்,

"அட நான் பூவரசனின் மகள் என்று சரியாக எவ்வாறு கூறினீர். என்னை பின்தொடர்ந்துக் கொண்டு இருக்கிறீர்களா என்ன?" என்று சற்று அதட்டலாக யாழிசை கேட்கவும்,

அதிர்ந்து போன அகத்தியன் மண்ணை பார்த்தபடி இல்லை என்று வேகமாக தலையை ஆட்டினான்.

'பூவரசனின் மகளா இவள்? எப்பொழுதும் குடிசையில் தானே இருப்பாள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இன்று தான் நேரில் கண்டு இருக்கிறேன். அதுவும் இவ்வாறு...' என்று மீண்டும் அவன் எண்ணங்கள் வேறு எங்கோ செல்ல தலையை உலுக்கி தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தான் அகத்தியன்.

யாழிசையோ ஆடவனின் செய்கைகளை வெகுவாக கவனித்தபடி அவன் பால் ஈர்த்த இதயத்தை இழுத்து பிடித்துக் கொண்டு மெலிந்த குரலில் "முழுமையாக கண்டு விட்டீரா?" என்று மறைமுகமாக கேட்டாள்.

யாழிசை எதை பற்றி அறிய விரும்புகிறாள் என்று புரிந்துக் கொண்ட அகத்தியன் ஒரு முறை கூட தலையை நிமிர்த்தாது ஆம் என்று தலையை ஆட்ட, அதை கேட்டு விழிகளை விரித்தாலும், உள்ளுக்குள் நாணம் ஏற்பட, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

"அப்படியென்றால் எம்மை நீர் தான் மணமுடிக்க வேண்டும்" என்று கூறினாள்.

அதை கேட்டு சட்டென்று தலை நிமிர்த்தி பார்த்த அகத்தியன், காந்தையவளின் நயனங்களை பார்த்து சரியென்பது போல் தலையை ஆட்ட, யாழிசையோ "விரைவாக வந்து என் தந்தையிடம் விவாகத்தை பற்றி பேசுங்கள்" என்று கூறிவிட்டு சிட்டாக அங்கே இருந்து ஓடியேவிட்டாள் யாழிசை.

அதற்கு மேல் அவளாலும் அவன் முன்பு நாணத்தை மறைத்துக் கொண்டு நிற்க முடியவில்லை போல்.

முதல் முறை தன் மேனியை தீண்டிய ஒரு ஆடவனின் பார்வையை எண்ணி வெட்கம் கொள்ள, முதல் பார்வையில் தோன்றும் காதல் போல் அவர்களுக்குள்ளும் நேசம் விதைய ஆரம்பித்தது.
 
Status
Not open for further replies.
Top