எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கானல் நீரில் காகித ஓடம் டீசர் திரி

Status
Not open for further replies.

NNK-90

Moderator
ஹலோ மக்களே, நானும் வந்துட்டேன் ஒரு குட்டியான டீசரோடு. வாங்க வாங்க வந்து படிச்சிட்டு போங்க.


ஹலோ மக்களே, நான் இந்த போட்டிக்கும் சரி எழுத்துக்கும் சரி ரொம்ப புதுசு. சுருங்க சொல்லனும்னா பேபி போல தான். இப்போ தான் தத்தித்தாவி எழுந்து நடக்க பயலுகிறேன். அதனால இந்த குட்டி பேபியை உங்க வீட்டு பேபியா நினைச்சி எனக்கு சாப்போர்ட் பண்ணுங்க. இப்போ குட்டியான டீசர் உள்ளே போலாமா?அங்கே கடுகு போல் வெடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தவனின் முன் பெரிய டெய்ரி மில்க் சாக்லேட்டை வைத்து விட்டு இரண்டடி பின்னால் சென்று பவ்வியமாக நின்ற அந்த மிக பெரிய ரவுடிகளை பார்த்து பொறுமை இழந்து தான் போனான் அகத்தியன்.

அகத்தியனின் சினத்தை பற்றி கவலைக் கொள்ளாத ரவுடிகளோ "சார் அகத்தியன் சார். ப்ளீஸ் கொஞ்சம் மனசை வைங்க. நாங்களும் பாவம் தானே. நீங்க நினைச்ச எல்லா காரியமும் சீக்கிரம் முடிஞ்சுடும். எங்க பாஸ் உங்களுக்காக அங்கே ரொம்ப ஆவலா வைட் பண்ணிட்டு இருக்காரு. இப்படி வீண் பிடிவாதம் பிடிக்காம ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போங்க" என்று கெஞ்சுதலாக கேட்க,

அகத்தியனோ "செம காண்டுல இருக்கேன். ஒழுங்கு மரியாதையா நீங்க எடுத்துட்டு வந்த திங்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு திரும்பி பார்க்காம போயிடுங்க. இல்லன்னா வைங்க நான் மனுஷனா இருக்க மாட்டான்" என்று கர்ஜீத்தான்.

அவன் ஆக்ரோஷமா பேசிக் கொண்டு இருந்த சமயம் அகத்தியனின் முதுகு புறத்தை சுரண்டி,

"இவங்களை பார்க்கவே பாவமா இருக்கு... ஒன் டே தானே" என்று அவள் சொல்லி முடிக்கும் முன் தன் புறம் கையை உயர்த்தி அவளை அடிக்க சென்றவன் கடும் சினத்தை பற்களை கடித்துக் கட்டுபடித்தியபடி,

"சாவடிச்சிடுவேன்டி உன்னை. ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு இரு. இல்லனு வை" என்று பேசிவனை பார்த்து பயந்து போய் அழ ஆரம்பித்து விட்டாள் சைதன்யா.
 

NNK-90

Moderator
ஹலோ பேபிஸ்... ஹாப்பி நியூ இயர்.

உங்க பேபி நான் அடுத்த குட்டி டீசரோடு வந்துட்டேன். நியூ இயர் அதுவுமா கதை தான் போட முடியல. அதான் டீசராவது போட்டு போலாம் வந்து இருக்கேன்.

டீசருக்குள்ளே போவோமா...

டீசர்...

அவன் உறங்கி விட்டனா என்று தெரிந்துக் கொள்வதற்காக.. நேராக அவன் அறைக்கு சென்றவள் கதவை தட்ட கூட தோன்றாமல் சடாலென்று கதவை திறந்துக் கொண்டு அவன் மெத்தையின் அருகில் சென்று நின்றாள்.

அவனோ அசந்து உறங்கிக் கொண்டிருக்க... அவனையே உற்று நோக்கியவள்,

"இவன் நிஜமா தூங்கிட்டானா? இல்ல நடிக்கிறானா?" என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டவள் விரல் யோசிப்பது போல் தன் தவடையை தடவிக் கொண்டது.

"ஐடியா.. இவன் தூங்கிட்டானா இல்லையானு செக் பண்ணிடலாம்" என்று சொல்லிக் கொண்டே அவன் முகத்தருகே குனிந்தவள் ஆழ்ந்து மூடி இருந்த அவன் இமைகளில் ஒன்றை வலுக்கட்டாயமாக திறந்து பார்த்தாள் சைதன்யா.

தொடுதலை உணர்ந்த அகத்தியனின் உறக்கம் மெல்ல கலைந்து மற்றொரு இமையையும் மெதுவாக திறந்தான்.

அவன் முன் தன் பற்களை காட்டிக் கொண்டு மிக அருகில் அவள் முகத்தை வைத்துக் கொண்டு,

"எனக்கு தெரியும் நீ இன்னும் தூங்கி இருக்க மாட்ட நடிப்பாய்" என சைதன்யா கூற,

அரை உறக்கத்தில் இருந்தவனுக்கோ அவளின் குரல் ராட்சசன் போல் கேட்க, போதாதற்கு அவளின் வதனம் அவன் நெருக்கத்தில் இருக்க..

அரண்டு போய் எழுந்து அமர்ந்தவன் அடுத்த நொடி மெத்தையிலிருந்து குதித்து எழுந்து நின்றான் அகத்தியன்.

அவளோ பொத்தென்று அதே மெத்தையில் குப்பற விழ...

அகத்தியனோ "லூசாடி நீ? இந்த அர்த்த ராத்திரியில் பேய் போல வந்து தூங்கிட்டேனானு கண்ணை திறந்து பார்க்கிற?" என்று கர்ஜீத்தான்.

அவளோ பாவமாக "நான் ஒன்னும் கண்ணை திறக்கல.. இமையை தான்" என்று சொல்ல வர,

"அடிங்" என்று அவன் கரத்தை உயர்த்தியே விட்டான் அவளை அறைவதற்கு.

அவளோ அவனை முறைத்து பார்க்க.. அவளின் முறைப்பை கண்டவன், உயர்த்திய கரத்தை அப்படியே தன் பின்னங்கழுத்தை தடவி கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு,

"காலையிலிருந்து இம்சை பண்ணிட்டு தானே இருக்க. அட்லீஸ்ட் நைட்டாவது என்னை நிம்மதியா தூங்க விடலாம் இல்லையா?" என்று பொறுமையாக கேட்டான்.

அவனின் செயலில் கிளிக் சிரித்தவள் தன் பார்வையை மாற்றிக் கொண்டு "இல்ல எனக்கு. ரொம்ப பசிக்குது அதான். நீ ஏதாவது சமைச்சி தரீயா" என்று
கேட்டாள் சைதன்யா.

அவனோ அதிர்ந்து "வாட் நானா? அதான் அத்தனை வேலைக்காரங்க இருக்காங்கல. அவங்கள யாரையாவது எழுப்பி விடு.. குண்டா குண்டாவா உனக்கு சமைச்சி கொட்டுவாங்க" என்று கடுப்பாக கூறியவன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் சமையல் உடையை அணிந்துக் கொண்டு முகத்தை சிடுசிடுவென வெடிக்க விட்டபடி அவளுக்காக சமைத்துக் கொண்டு இருந்தான் இந்த அகத்தியன்.

அதை பார்த்த பணியாளர்களோ பயத்தில் நடுங்கியபடி நின்றுக் கொண்டு இருந்தனர்.

 

NNK-90

Moderator
ஹலோ பேபிஸ்... அடுத்த குட்டி டீயோட வந்துட்டேன்.

டீசர்- 3

சூடான கடல் மண்ணில் பொறித்து எடுக்கும் வேர்கடலை போல் உள்ளுக்குள் வெடித்துக் கொண்டு இருந்தான் அகத்தியன்.

அவனை கண்டுக் கொள்ளாத சைதன்யாவோ "நீங்க எப்படி இவ்வளவு ஹாட்டா இருக்கீங்க?" என்று கேட்டபடி அவன் எதிரே தொப்பையும் மொட்டையுமாக அமர்ந்து பல்லை காட்டிக் கொண்டு இருந்தவனிடம் வழிந்துக் கொண்டு கேட்டாள்.

சைதன்யா சொன்னதை கேட்டு அந்த மொட்டைக்கு குதுகலமாக இருக்க, இங்கே அகத்தியனுக்கோ வயிற்றில் ஒரு லாரி நெருப்பை தூக்கி கொட்டியது போல் தகதகவென எரிந்துக் கொண்டு இருந்தது.

தன்னுடன் ஒருவன் வந்து இருக்கிறான் என்பதையே மறந்து போன சைதன்யாவோ அந்த மொட்டையின் கரத்தை பிடித்துக் கொண்டு "வாங்க ரூமுக்கு போலாம்" என்று கண்களில் ஆசையை கூட்டி அழைக்க, அவ்வளவு தான் அதற்கு மேல் அகத்தியனால் பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபத்தில் சட்டென்று எழுந்து விட்டான்.

மொட்டையும் சிரித்துக் கொண்டே எழுந்தவன் அகத்தியன் நிற்பதை பார்த்து சைதன்யாவிடம் "பேபி நீ என்னைய தானே ரூமுக்கு கூப்பிட இவன்" என்று ஆரம்பித்தவனின் வார்த்தை அகத்தியனின் அனல் தெறிக்கும் பார்வையில் மாற்றிக் கொண்டு "இவர் ஏன் எழுந்து நிக்குறாரு?" என்று சிணுங்களுடன் கேட்டான்.

அகத்தியனை திரும்பி பார்த்த சைதன்யாவும் அதுவரை இருந்த செல்ல குரலை மாற்றிக் கொண்டு வெறுப்பாக "இப்போ எதுக்கு எழுந்து நிக்குற? ஏன் நான் சந்தோஷமா இருக்கிறதை பார்க்க பொறுக்கலையா உனக்கு. நீ தான் எனக்கு சந்தோஷத்தை கொடுக்க மாட்டிக்கிற. இவர் கொடுக்கிற சந்தோஷத்தையும் ஏன் கெடுக்குற" என்று கேட்டவளை கொலை செய்யும் வெறியோடு பார்த்த அகத்தியன்,

சட்டென்று மொட்டையை பிடித்து இருந்த சைதன்யாவின் கரத்தை பிரித்தெடுத்து "சந்தோஷம் தானே, நானே கொடுக்கிறேன். உனக்கும் இவனுக்கும் சேர்த்து" என்றவனின் பேச்சில் சட்டென்று இடை புகுந்த அந்த மொட்டையன்,

"ச்சீ நான் அந்த மாதிரி ஆம்பளை இல்லை" என்பதையே ஒரு மார்க்கமாக வெட்கப்பட்டு தான் கூறினான்.
 

NNK-90

Moderator
அடுத்த டீசருடன்...

டீசர்...

திடீரென்று தன் காரில் ஏறிய முகமூடி அணிந்து இருந்த பெண்ணை பார்த்த அகத்தியன்,

"ஹலோ யாரு நீ? ஒழுங்கா காரை விட்டு இறங்கு" என்று மிரட்டினான்.

சைதன்யாவோ உயிர் பயத்தில் அகத்தியனின் இருக்கரத்தையும் பிடித்துக் கொண்டு "ப்ளீஸ் ப்ளீஸ் என்னை கொலை பண்ண வரானுங்க சார். ஒரு இரண்டு நிமிஷம் மட்டும் காருக்குள்ள ஒளிஞ்சிக்கிறேன்" என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.

அகத்தியனோ இரக்கம் என்பது துளியும் இல்லாமல் "உன்னை கொலை பண்ண வந்தா எனக்கு என்ன வந்துச்சு? ஃபர்ஸ்ட் காரிலிருந்து இறங்கு. முன்ன பின்ன தெரியாத உனக்கு நான் ஏன் உதவி செய்யனும்?" என்று முகத்தை அறுவெறுப்பாக வைத்துக் கொண்டு பேசியவனை வெறுப்பாக பார்த்த சைதன்யா,

"ச்சீ நீயெல்லாம் மனுஷனா? ஒரு அழகான வயசு பொண்ணு உயிருக்கு ஆபத்துனு உன் கிட்ட வந்து உதவி கேட்டா, மனசாட்சியே இல்லாமல் இருக்க. ஒரு இரண்டு நிமிஷம் உன்னோட கார்ல நான் ஒளிஞ்சிட்டு இருக்கிறதினால என்ன வந்திட போகுது" என்று கோபத்துடன் கேட்க,

ஏற்கனவே சரியில்லாத மனநிலையில் இருந்த அகத்தியன், முன் பின் தெரியாத ஒரு பெண் தன்னை கேவலமாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் விறுவிறுவென காரிலிருந்து இறங்கியவன் அங்கே கட்டை, கத்தி, அருவாளோடு சைதன்யாவை தேடிக் கொண்டு இருந்தவரை நோக்கி சொடுக்கிட்டு படும் நக்கலாக,

"ஹலோ பாஸ் நீங்க தேடுற அந்த அழகான திருட்டு பொண்ணு என் கார்ல தான் மறைஞ்சி இருக்கா. வந்து அவளை பிடிச்சிட்டு போங்க" என்று சொன்னதை கேட்டு சைதன்யாவிற்கு தூக்கிவாரி போட்டது.

'அட மூளையில்லாத முட்டா பையளே. விட்டா இவனே கையை பிடிச்சி அவனுங்க கிட்ட பிடிச்சி கொடுப்பான் போல. ஒரு உதவி கேட்டது தப்பா' என்று தன் மனதிற்குள் புலம்பிக் கொண்டே அடுத்த பக்கம் கதவை திறந்துக் கொண்டு மீண்டும் அங்கே இருந்து ஓட தொடங்கினாள் சைதன்யா.
 
Status
Not open for further replies.
Top