ஈரோட்டில் உள்ள அந்த தனியார் மருத்துவமனை முன்பு அதற்குரிய சத்தத்துடன் வந்துநின்றது ஆம்புலன்ஸ்.....
ICU பிரிவின் வாயிலில் தன் நினைவுகளை 25 வருடத்திற்கு முன் செலுத்தினார் இராமச்சந்திரன்....
"இந்தாங்க சார் உங்க பாப்பா " என செவிலியர் குழந்தையை கொடுக்க,
கண்களில் ஆனந்த தண்ணீர் வழிய தன் மகளை கைகளில் ஏந்தினார் ராம்.
யார் சொன்னார்கள் பிரசவ வலி பெண்களுக்கு மட்டும் தான் என்று,
மனைவியையும்,குழந்தையையும் நலமோடு பார்க்கும் வரை ஒரு ஆண் அனுபவிக்கும் மனவேதனையும் பிரசவ வலிக்கே ஈடானதே.....
தன் மகளை கைகளில் ஏந்திய ராம், அவளின் பூமி தொடாத சிகப்பு வண்ணப் பிஞ்சு பாதத்தில் தனது இதழ்களை ஒற்றி எடுத்தார்.....