எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிரே உன்மத்தங்கொள்ளுதடா! - டீசர்

Status
Not open for further replies.

NNK-95

Moderator

ஹேய் ஜில்லுஸ்.. "உயிரே உன்மத்தங்கொள்ளுதடா" கதையோட குட்டி டீசர்.. படிச்சு பாருங்க!

goddess-love-alone-prosperous-soul-kingdom_869640-1685.jpg

அவனது வெற்று மார்பில் தலைசாய்த்து, அவனது உடலை இரு கரங்களாலும் இறுக்கிப் பிடித்திருந்தவளின் கண்கள் மூடி இருந்தன!

ஆனால் அவனின் கரங்களோ, விரல்களை இறுக்க மூடியபடி, அவளது அணைப்புக்கு எந்தவித பிரதிபலிப்பும் செய்யாது அமைதியாக இருந்தது!.

அதை உணர்ந்தவள் விழிகள், மூடியிருந்த இமைகளுக்குப் பின்னே கண்ணீரைச் சுரக்க ஆரம்பித்தன!

சட்டென அவனிடமிருந்து விலகியவள்..

"ஆயிரம் ஆண்டுகள் பொழிகின்ற காதலை, ஒரே கணநேரத்தில் உம்மீது பொழிந்தவள் நான்..

இக்கடும் பாலையை.. எம் காதலால்.. எம் கருணையால்.. பூஞ்சோலையாக்கி.. உம்மக்கள் வாழ்வாங்கு வாழ வழி செய்தவள்!

முழுதாகப் பத்து திங்கள்.. பத்து திங்கள்.. உம் மனையாளாக.. உம் படுக்கையை பகிர்ந்தவள்..

உம் காதலில் திளைத்து, இன்பத்தில் சுகித்து.. உன் வேகத்தை சகித்து.. உம் மனையாள் என்ற ஒற்றை வார்த்தையில் பூரித்துக் கிடந்த என்னை விட்டு.. இன்று நீ வேறு துணை தேடி இருக்கிறாய்." என்று அவள் கூறியபொழுது, அவனது வலிக்கரத்தை, மற்றொரு பெண்ணின் தளிர்க்கரம் இறுக்க பற்றுவதைக் கண்டவள் கண்கள் தீப்பிழம்பாயின!

"அன்னை மார் சுரக்கும் அமுதைப் போல, தூய்மையான என் அன்பினைத் தூக்கியெறிந்துவிட்டு.. இன்று இவளைத் தேடிய நீ.. இன்னும் ஆயிரமாயிரம் பிறவி எடுத்தாலும், என் அன்பினை பிச்சையாகக் கேட்டும், அந்த அன்பு கிடைக்காது.. உன் வாழ்வில் காதலே கிடைக்காது.. எனக்காகவும், என் அன்புக்காகவும் மட்டுமே தேடித் தவிப்பாய்.. இது என் காதலின் மீது சத்தியம்!

அது போலவே.. உன்னை நான் காதலித்த காரணத்தால்.. இம்மண்ணை சூழ்ந்த பசுமையும்.. வான் சொரிந்த மாரியும் இக்கணமே அற்றுப் போய்.. வெற்று மணலாய்.. அனலவன் தகிக்கும்.. தஞ்சம் கொள்ளும் கடும் பாலையாய் மீண்டும் மாறுக..

இதோ.. என் கண் முன் பற்றி எரிகிறதே.. இந்தத் தீ! உன்னை சுமந்த என் நெஞ்சம், இத்தீயில் கறுகிப் போகும் முன், உம் நிலத்தை, அதே வெம்மை பற்றுக!

இதோ.. எம் காதலுடம்.. எம் உயிரும் கறுகிக் கரைக!" என்று அந்த புவியே அதிரும்படி அரற்றியவள் இமைக்கும் நொடிக்குள் அந்தத் தீக்குள் புகுந்தாள்!

அதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவள் மணவாளனோ, ஓரெட்டு முன்னே வரும் முன், அவனது கரத்தைப் பற்றியிருந்த மற்றவளோ.. பயத்தில் இன்னும் இறுக்கமாக அவனது கரத்தைப் பற்றிக் கொள்ள.. மெல்ல நிதானித்தான் அவனும்!

ஹேய் ஜில்லுஸ்.. இந்த டீசர் பிடிச்சிருந்ததா? அப்படி பிடிச்சிருந்தா, உங்க கருத்துக்களை என்கூட பகிர்ந்துக்கோங்க.. அப்படியே கதைல ஏதாவது புரியலைன்னாலும், என்கிட்டே தயங்காம கேளுங்க..

 
Status
Not open for further replies.
Top