எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பிருதுவி பிரளயம் - டீசர் திரி

NNK-40

New member
டீசர் 1:

"பிருதுவி பிரளயம்""ப்ச்! இந்த போலீஸ்காரங்க தொல்லை பெருந்தொல்லையா இருக்கு. சும்மா சும்மா வந்து நின்னா நாங்க வேலையை பார்க்குறதா வேணாமா. டாக்டர்ஸ் உங்க வேலையை பாருங்க" சத்தமாகவே புலம்பி தன் வேலையாட்களை அதட்டிய அந்த பெரியவருக்கு ஐம்பது வயது இருக்கும்.

காதோரம் நரைத்தமுடியும், தங்க ப்ரேமிட்ட கண்ணாடியுமாய் வெண்ணிற கோட் அணிந்திருந்த தன் தோளை ஒரு முறை குழுக்கியவர் வந்தவனை சிறிதும் கண்டுகொள்ளாமல் தன் வேலையை தொடர்ந்தார்.

அவருக்கு மேல் அலட்சியதுடன் அவரை சிறிதும் பொருட்படுத்தாதவன் தன் நீண்ட கால்களால் அழுத்தமான அடிகள் வைத்து அவ்வறையின் ஓரம் இருந்த வேறு ஒரு சிறு அறைக்குள் நுழைய சென்றான்.

"அட! நில்லுங்க சார்! கமிஷனர் சார் நில்லுங்க" கத்திய பெரியவர் கைகளில் அணிந்திருந்த கையுறையை கலற்றியபடி, "என்ன வேணும் உங்களுக்கு?" என முறைப்பாய் விசாரித்தார்.

"டாக்டர்! நீங்க என்ன ஓட்டலா நடத்துறீங்க விதவிதமா டிபன், சாப்பாடுனு கேக்குறதுக்கு. வச்சுருக்குறது நாலு ஃபைல், இரண்டு கம்ப்யூட்டர், ஊதுனா பறந்து போற இரண்டு ஸ்டாஃப். இதுல நான் என் கேஸ் ஃபைலை தான கேப்பேன்"

நக்கலடித்தவனை முறைத்தவர் தன் அருகே வேலை பார்த்துக்கொண்டிருந்தவரிடம்,

"டாக்டர் வேலன்! உயர் அதிகாரியா இருந்துட்டு இத்தனை மெத்தனமா இருக்ககூடாதுனு இவருக்கு சொல்லுபா. கேஸ் ரிப்போர்ட்டை நம்ப ரொம்ப நேரம் முன்னவே இன்ஸ்பெக்டர்.தணிகைசெல்வன் கிட்ட கொடுத்தாச்சுனு சொல்லு"

உறுமியவரின் பேச்சை தூசு போல் நினைத்தான் போலும் தன் இடது கை சுண்டுவிரலை காதுக்குள் விட்டு ஆட்டி 'உஸ்' என ஊதினான்.

"மெத்தனமா இருக்குறதுக்கு நாங்க ஒன்னும் மாமன் கொடுத்த காசுல வேலைக்கு வரல... டாக்டர். வேலன்! அந்த ஈர வெங்காயம் என் கைக்கு வந்து ரொம்ப நேரம் ஆச்சுனு சொல்லுங்க இவர்கிட்ட"

"அப்றம் என்ன தேவைக்கு இங்க வந்திருக்காராம் சாருனு கேளுங்க டாக்டர்.வேலன்"

"டாக்டர். வேலன்! உங்க சாருக்கு வேலை இல்ல சும்மா சும்மா வேலன் வேலன்-னு பினாத்திட்டிருப்பாரு நீங்க போய் உங்க வேலையை பாருங்க" என்றவனின் விழிகளோ தன்முன் இருந்த அறையை தான் நொடிக்கு ஒருமுறை வட்டமிட்டது.


"இங்க பாருங்கள் டாக்டர்.சொக்கலிங்கம் நீங்க கொடுத்த ரிப்போர்ட்ல இறந்தவரோட உடல்நிலை, இறந்த நேரம், இறந்த விதம்னு இதை பத்தி தான் இருக்கு. ஆனா நாங்க இந்த வழக்குல முக்கியமானதா கருதுறது சடலத்தோட நெஞ்சு பகுதில இருக்க 'பச்சை'-யை தான். அதை பத்தின டீடெய்ல்ஸ் கேக்க தான் நானே நேர்ல வந்தேன்"

வழக்கமில்லா வழக்கமாய் தனக்கு பதிலளிப்பவனை கண்டு ஆச்சரியமாய் இருந்தாலும் அதை காட்டி கொள்ளாமல் அவன் சொன்னதை ஆராய சென்றார் சொக்கலிங்கம் என்னும் அந்த பெரியவர்.

இத்தனை நேரம் அவர்கள் அருகில் நின்றிருந்த டாக்டர். வேலன்,

"சார்! நான் தான் அந்த சடலத்தை எக்ஸமைன் பண்ணேன். முதல்ல அந்த வார்த்தைகள் வித்தியாசமா இருக்கேனு பார்த்தேன். அப்றம் இப்போதான் எழுதுறது வரையறதுனு நிறைய உடம்புல பண்ணிக்கிறாங்களேனு நினைச்சிட்டேன். அதனால அதுல ஒன்னும் வித்தியாசமா இல்லை சார்" என்றான்.

"அப்படி எந்த விஷயத்துலையும் நம்ப கவனகுறைவா இருக்ககூடாது டாக்டர்.வேலன். நம்ப கொடுக்குற சின்ன விஷயம் கூட குற்றவாளியை கண்டுபிடிக்க தேவையானதா இருக்கலாம். அதேபோல இந்த கண்ணாடி சுவர்களுக்கு மத்தியில இருக்குற வரை ஒரு விஷயம் முக்கியமா இல்லையானு நான் தான் முடிவு பண்ணனும்" மேல் அதிகாரியாய் கடுமையாய் எச்சரித்தார்.

அவர் சொன்ன கருத்து நம் காவல் ஆய்வாளனுக்கும் நியாயமாய் தோன்றியதில் அவர்களுக்குள் நுழையாமல் நின்றிருந்தான்.

இவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாலும் வேலையிலும் கவனமாய் இருந்தார் டாக்டர்.சொக்கலிங்கம். மஞ்சள் நிறத்தில் இருந்த ஒரு கலவையை எடுத்தவர் அதை பஞ்சில் நனைத்து சடலத்தின் நெஞ்சு பகுதியில் தடவினார்.

இருநிமிடங்கள் இடைவெளிவிட்டர் சின்னஞ்சிறிய கத்தியால் அந்த எமுத்துகளில் ஒன்றில் கோடிட்டவர் சிறுமொட்டுகள் ( buds) மூலம் அவ்விடத்தை துடைத்தார். பூதகண்ணாடியால் அவ்விடத்தை பார்த்தவர்,

"மை குட்னஸ்! இந்த பச்சை குத்தி ரொம்ப நாள் ஆகலை" நிம்மதி பெருமூச்சுடன் அந்த இடத்தில் இருந்து சிறிதளவு தோளை எடுத்து ஒரு சிறு குடுவையில் இட்டு அதில் எதோ கலவை ஊற்றி கலக்கியவர் அதை மோர்ந்து பார்க்க அவர் விழிகள் ஆச்சரியமாய் விரிந்தது.

இத்தனை நேரமாய் அவரின் செயல்களையே பார்த்திருந்த நம் காவல் ஆய்வாளன் 'என்ன?' என்று அருகே வர அவனை கண்டுகொள்ளாமல் அங்கிருந்த கணினியின் முன் அமர்ந்தவர் தன் கையுறைகளை கழட்டிவிட்டு எதையோ தேட தொடங்கினார்.

அவர் தேடியதற்கு என்ன விடை வந்ததோ, "அட இது என்ன இப்படி?" என ஆச்சரியத்துடன் சத்தமிட்டார்.
 

NNK-40

New member
கதையின் தலைப்பு மற்றும் டீசர் பற்றிய தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ் ❤

கருத்து திரி :

 
Top