#நறுமுகை # #நிலாக்காலம் 2#
என் நெஞ்சின் ராகம் எங்கே? எங்கே?
டீசர்
ஒன்னும் தெரியாத பாப்பா ஒரு மணிக்கு போட்டாலாம் தாப்பா? அப்படி ஒரு கதையா இல்ல இருக்கு என்று ஒருத்தி கன்னத்தில் கை வைத்து சொல்ல…
அருகிலிருந்த மற்றோருத்தியோ “பஞ்சும்,நெருப்பும் பக்கம் பக்கம் இருந்தா பத்திக்கதானே செய்யும்னு காட்டிட்டாங்களே நான் கூட இதுங்களை என்னவோன்னு நினைச்சேன் கா”....
அக்கா போதும் நிறுத்துங்க அவங்களை இப்படி தப்பா பேசினா நாக்கு அழுகி போயிடும் “போன வாரம் உங்க குழந்தை மருந்து செலவுக்கு அந்த அண்ணாகிட்ட தானே கை நீட்டி காசு வாங்கின நன்றி கூட இல்லாம இப்படி வாய்க்கு வந்த மாதிரி பேசுறீங்களே இது நல்லாவா இருக்கு ”என்றாள் அவள்…
“நீ என்னடி பேச வந்துட்ட நாங்க கண்ணாலே பார்த்ததை இல்லன்னு சொல்ல முடியுமா ,உன்னால அர்த்த ஜாம நேரத்துல ஊரே கார்த்திகை தீபம் கொண்டாடிட்டு இருக்கு. யாரும் இல்லாத இந்த இடத்துல இவங்களுக்கு என்னடி வேலை”என்றாள் முதலில் பேசியவள்…
அட என்னப்பா இங்க ஆம்பளைங்க நிற்கிறது உங்க கண்ணுக்கு தெரியுதா?இல்லையா ? நீங்க மட்டும் பேசிக்கிட்டே போன என்ன அர்த்தம் இதுக்குத் தான் பொம்பளைங்கள பேச விடக்கூடாதுன்னு சொல்லுறது என்றவர் துணியை உதறி தோளில் போட்டவர் முன்னே நின்றவர்களை பார்த்தார் அந்த பெரியவர்….
இங்கே இவர்களின் ஏச்சி,பேச்சுக்கு காரணமானவர்களோ அங்கே ஓர் ஆடவன் இடுப்பில் கட்டியிருந்த வேட்டியும் ,கட் பனியுனுமாக நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தான்…
பெண்ணவளோ ஆணவனின் மேல் சட்டையை அணிந்துக்கொண்டு கண்கள் இரண்டும் குளம் கட்டி நிற்க அங்கே இருந்தவர்களின் யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல் தலைகுனிந்து நின்றாள்….
அந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு நான்கு பேர் வந்து நிற்க அதில் சற்று முதிர்ச்சியுடன் வந்தவரோ “யாருடி அவ நாக்கு மேல் பல்லை போட்டு பேசுனது தைரியம் இருந்தா? முன்னே வந்து சொல்லுங்கடி பார்க்கலாம். ஒரு ஆணும் பொண்ணும் ஒன்னா இருந்தா வாய்க்கு வந்ததை பேசுவிங்களோ? இப்ப பேசுங்கடி பேசுற உங்க நாக்கை இழுத்து வச்சு அறுத்துப்புடுவேன் அறுத்து இவ வீட்டு குப்பை அள்ள துப்பு இல்லாதவளுங்க அடுத்து வீட்டு குப்பையை எட்டி பார்க்க
வந்துட்டாளுங்க…
Thread 'என் நெஞ்சின் ராகம் எங்கே? எங்கே? _கருத்து திரி' https://www.narumugainovels.com/ind...ஞ்சின்-ராகம்-எங்கே-எங்கே-_கருத்து-திரி.10736/