எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நினைவுகளை நே(யா)சிக்கின்றேன் - கதை திரி

Status
Not open for further replies.

NNK 101

Moderator
வணக்கம் ஸ்வீட்டிஸ்....
நூறுல ஒருத்தார் இல்ல நூற்றி ஒராவாத ஒருத்தர்.....
ஹிஹிஹி எல்லாத்திலையும் late


இருவர் ஓருவர் ஆகும் போது காற்றோடு கரைந்தால்....
 
Last edited:

NNK 101

Moderator

நினைவோ நேசமோ – 01​

மூளையைப் போல் அதிசயமான வஸ்து வேறில்லை. CSF என அழைக்கப்படும் Cerebrospinal fluid மிதக்கும் இது, நாம் உட்கொள்ளும் உணவில் 80 வீதத்தை எடுத்துக் கொள்கின்றது. இதில் சுரக்கும் நாளமில்ல சுரப்பிகள் செய்யும் வேலைகள் ஆச்சரியத்திற்குரியது.

விச்ச்க்.... விச்ச்க்.... லாவகமாகக் வாளை சுழற்றிக் கொண்டிருந்தான். பதினைந்து கிலோ இருக்கும் அந்த ராஜபுரதான வாள் அவன் கைகளில் சுழல புஜங்கள், முதுகு இடுப்பு என அனைத்து தசை நார்களும் முறுக்கி நின்றன.

அவன் வாளை சுழற்றி முடிப்பதற்குள் பார்த்துவிடுவோம். ஆறடி உயரம், ஆறு படிக்கட்டு தேகமில்லை. அதனால் பயனுமில்லை. உடல் பயிற்சியில் இறுகியிருந்த சரீரம், குறுகிய இடுப்பு, நீண்ட கை கால்கள், சதுர தடை நீண்ட மூக்கின் மேல் பளிச்சிட்ட கண்களில் நிரந்தரமாய் ஒரு சோகம்.

“ருத்ரா சார்” மல்லர்களைப் போல் அவனை சுற்றி நின்ற மெய்க்காவலார்கள் நடுவே குட்டியாய் நின்ற உதவியாளன் சத்யாவின் அழைப்பில் வாள் அந்தரத்தில் நிற்க திரும்பி கேள்வியாய் பார்த்தான்.

“கலிபோர்னியா...”

மீண்டும் வாளை சுற்றத் தொடங்கவே “அவர்களில் ஒருவனை பிடித்தாகிவிட்டது” பின்னால் போயிருந்த வாளை சுழற்றி முன்னே எடுத்தவன் கண்கள் அதையே ஒரு பரவசத்துடன் முழுமையாக பார்த்தது. இதே வாள் வளையிட்ட கரங்களில் சுற்றியது கண் முன்னே நிழலாட முகம் இறுக இரு கைகளாலும் அதனை உறையிலிட்டு அதற்குரிய பெட்டியில் வைத்து முட அருகே நின்றிருந்த தடியன்களில் ஒருவன் அதை கவனாமாய் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.

திரும்பிப் பார்க்க அந்திவானத்துடன் அவன் முகம் போட்டியிட்டு சிவந்திருந்தது. ஆனால் அவன் சிவப்பின் காரணம் உடல் பயிற்சியா இல்லை கோபமா என புரியாமல் நின்றான் சத்யா.

அவனோ ஏதும் பேசாது வேக நடையுடன் காரை நெருங்க பின்னாலேயே ஓடினான்.

*****

சட்டோகுவா, லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா

முன்புறம் புல்வெளி, குரோட்டன்களால் பக்க சுவர் என நவீனமயத்துடன் அழகாய் இருந்த அந்த வீட்டினுள் இருந்து குரல் கேட்டது.

“ஈஸ், உள்ளே வா, பாக் ரெடி”

“பிரணவ் ஈஸ் எங்கே”

வெளியே அணிலுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்த சிறுவன் ஓடி வந்தான் “ஐயாம் கமிங்”

*****

‘கிளிக்’

ஓசையுடன் பற்றிக் கொண்ட லைட்டரின் ஒளியில் தென்பட்டது அவன் கண்கள். வேட்டையாடும் சிறுத்தையின் கண்கள். பற்றியதுமே வாயிலிருந்து எடுத்துவிட்டிருந்தான்.

நடுநிசி இருள் சுற்றிலும் நிறைந்திருக்க சற்று தூரத்தில் இருந்த மின்கம்பம் போனால் போகுது என்பது போல் சற்றே வெளிச்சத்தை உமிழ்ந்தது. அந்த கருநிற காரில் சாயந்திருந்தவன் அவன் முன் மண்டியிட்டு இருந்தவன் இல்லை இருபுறமும் பிடித்து பலவந்தமாக மண்டியிட வைக்கப்பட்டிருந்தவனை பார்த்தான்.

“சோ.....?” சற்று இடைவெளி விட்டுக் கேட்டான் “எங்கே”

“க க கலிபோர்னியா”

“ஹ்ம்ம்...”

“இன்னும் ஐந்து மணித்தியாலத்தில் விமானம்”

“....”

“என்னை கொன்னுருவ தெரியும் ஆனா அவள...”

அருகே இருந்தவன் கைகளில் இருந்த கன்னை வாங்கினான்.

டுமீல்....

அருகேயிருந்த மரத்திலிருந்த பறவைகள் ஒருதரம் வட்டமிட்டு விட்டு அமர அந்த கருநிற ஜாக்குவார் சீறிக்கொண்டு சாலையில் பறந்தது.

அந்த இடம் மீண்டும் மயான அமைதியை தத்தெடுத்தது.

உள்ளே அமர்ந்திருந்தவன் மனமோ கொதி நிலையில் இருந்தது. ‘நீ எனக்கு மட்டுமே சொந்தமானவள். இந்த ருத்ரனின் ப்ரோபெர்ட்டி. யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. அது கடவுளாய் இருந்தாலும் சரி’

*****

கலிபோர்னியா விமான நிலையத்தின் சாரதியில்லாத கார்களில் ஒன்றில் அமர்ந்திருந்தான் ருத்ரன். இறங்க வேண்டிய இடம் வந்ததும் தானாகவே கதவு திறக்க இறங்கினான் கூடவே சத்யா.

விமான நிலையத்தை விட்டு வெளியே வர அவர்களுக்கவே காத்திருந்தான் ஜோன். பயில்வானைப் போலிருந்த அவனைப் பார்த்ததும் முகத்தைச் சுழித்த சத்யா “ருத்ரா சார் இவனையாவது என்னை மாதிரி செலக்ட் பண்ணியிருக்க கூடாதா?” அழாத குறையாகக் கேட்டான். அவன் வெறும் ஐந்தடி, சும்மாவே ருத்ரனின் ஆறடி மெய்க்காவலர் நடுவே குட்டியாய் தெரிவான். இப்போது மேலதிகமாக முக்கால் அடி இருக்கும் ஜோனைப் பார்த்து மூக்கால் அழுதான்.

அவனையும் மீறி மலர்ந்த உதடு பிரியாத புன்னகையுடன் முன்னே சென்றான் ருத்ரன்.

சத்யா உறைந்து போய் நின்றான். அவனுக்கு சிரிக்கத் தெரியும் என்பதே மறந்துவிட்டிருந்தது. இந்த ஆறு வருடத்தில் அத்தி பூத்தாற் போல் எப்போதாவது புன்னகைக்கும் போது பார்த்துக் கொண்டால் தான் உண்டு. அவனுக்கும் சிரிக்கத் தெரியும், மனிதப் பிறவி என்பது நினைவில் வரும். மற்ற நேரங்களில் இவனுடன் இருப்பதற்கு பேசமால் ஊமைகளுடன் குடும்பம் நடத்தலாம் என்று கூட நினைத்துக் கொள்வான் சத்யா.

காரில் அமர்ந்து எங்கே போக வேண்டும் என்பது போல் பார்க்கவே “வெயர் ஆர் தே?”

“லாஸ் ஏஞ்சல்”

“கோ” என்றவன் கண்மூடி சீட்டில் சாய்ந்தான்.

கிட்டதட்ட ஆறு வருடங்களின் பின்னர் நேராக பார்க்க போகின்றான். மனம் நிலையில்லாமல் தவித்தது. கூடவே முதல் முறை பார்த்த ஞாபகம்.

****

அன்று தாத்தா அவரின் நண்பர் வீட்டிற்கு அவனையும் அழைத்துச் சென்றிருந்தார்.. பெரியவர்கள் பேசிக் கொள்ள போரடித்தவன் தோட்டத்தில் குருவி பார்த்தவாறே நடந்தான். ஊஞ்சலில் அமர்ந்திருந்தால் அந்த குட்டிப் பெண். சிதைவடைந்த சித்திரமாய் தலையில் கட்டு, கண்களில் கண்ணீர், கையில் ஒரு பொம்மை.

அவள் கண்களில் இருந்த வெறுமை ஏனோ அந்தக் குட்டிப் பையனைப் பாதிக்க அவளருகே ஊஞ்சலில் அமர்ந்தான். அருகே அமர்ந்தவனையே சிறிது நேரம் பார்த்த அந்தப் குட்டிப் பெண் கையை விரித்து காட்டினாள். ‘தூக்கு’ என்பது போல். அவன் மடியிலேயே உறங்கிப் போனாள்.

இரு தாத்தாக்களும் பேரப்பிள்ளைகளைத் தேடி வந்த போது பார்த்தது அவன் மடியில் உறங்க அமைதியாய் தலையை வருடிக் கொண்டிருந்தான். இருவரும் நிம்மதியாய் மூச்சுவிட்டனர்.

****

பப்பி லவ் எல்லாம் இல்லை, ஆனால் எப்படியென்றே தெரியாமல் மனதில் வந்துவிட்டால், இனி அவளை பிரித்து எடுக்க முடியாது. யார் என்ன சொல்வார்கள் என்பதெல்லாம் அவனுக்கு கவலையில்லை. அவளுக்காக எதுவும் செய்வான்.

“சார்” சத்யாவின் அழைப்பில் கண் திறந்து பார்க்க முன்னே கண் காட்டினான் சத்யா.

யாமாக டிரி125 ரக பைக்கில் அமர்ந்து முன்னே ஐந்து வயது பையனை ஏற்றிக் கொண்டிருந்தார் ஒருவர். ஜீன்ஸ், ஜாக்கெட் ஹெல்மெட் என அடையாளம் கண்டுபிடிக்கவே எப்பிஐ தேவைப்படும் போலிருக்க சோம்பலாய் பார்த்தவன் கேட்டான் “யார் இது?”

“நீங்கள் தேடி வந்த நபர்”

“என்ன” அதிர்ச்சியில் நேராக அமர்ந்தவன் ஒரு விரலை சுட்டிக் காட்டி சந்தேகமாய் கேட்டான் “அவளா?”

ஆமோதிப்பாய் தலையாட்டினார்கள் சத்யாவும் ஜோனும். அவன் உதடுகளில் மெல்லிய புன்னகையுடன் குறுக்கே தலையாட்டினான். அவள் இப்படி பைக் ஓடவில்லை என்றால் தான் அதிசயம். அவர்களை பின் தொடர ஜோனுக்கு சைகை செய்தான்.

அவள் முகத்தையோ குழந்தையின் முகத்தையோ பார்க்காத போதும் யாராய் இருக்க கூடும் என்பதை ஊகித்தவன் உடல் எஃகாய் இறுகியது.

சிக்னலில் நின்று கார் பக்க கண்ணாடியை இறக்க, திரும்பிப் பார்த்தவள் ஹெல்மெட் கண்ணாடியை மட்டும் உயர்த்தி புன்னகைத்தாள். நாடு கடந்து வேற்று மனிதர்களின் நடுவே நம் இனத்தவரைக் கண்டால் ஏற்படும் சந்தோசமே தனிதான். பைக்கில் இருந்த சிறுவன் இருவரையும் மாறிமாறிப் பார்த்தான்.

“ஹாய் தமிழா, இங்கே எங்கே” மேலும் பேசுவதற்குள் பச்சை விளக்கு எரிய பைக் நகர்ந்தது.

முன்னிருக்கையில் அமர்ந்திருந்த சத்யா பின்னால் நோக்கினான். கைகள் முஷ்டியாய் இறுக அமர்ந்திருந்தான் ருத்ரன். சிறிது நேரம் போகும் அவளையே பார்த்தவன் ஒரு ஸ்வார்ட்ஸ் கிளப்பின் பெயரைக் கூறி “போவோம்” என்றான்.

காரின் முன் கண்ணாடியில் ஆச்சரியமாகப் பார்த்த ஜோன் மறு பேச்சின்றி காரைச் செலுத்தினான்.

இறங்குவதற்கு முன் கேட்டான் “அங்கே அனுப்பியிருக்கும் ஆட்கள் திறமையானவர்கள் தானே”

“யெஸ் பாஸ்”

“கேர்புல், ஐ டோன்ட் வான்ட் எனி ரிசன்ஸ்”

காரிலிருந்து இறங்கி நிமிர்ந்து பார்க்க முன்னே தெரிந்தது சுவர்ட்ஸ் கிளப்

அன்று கிளப்பே வெறிச்சோடி இருக்க “எங்கே போனார்கள் அனைவரும்” தனக்குத் தானே கேள்வி கேட்டவள் வாள் பயிற்சியைத் தொடங்கினாள்.

நிழல் விழுவதைப் போல் சத்தமின்றி நுழைந்தார்கள் அவர்கள்.

‘கிளங்’ வாளுடன் இன்னொரு வாள் வந்து மோதிய சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

கண்ணைத் தவிர மீதி உடல் கருப்படையில் மறைந்திருக்க இருபது பேர் அவள் முன்னே நிற்க இருவருக்கும் இடையில் நின்றான் ருத்ரன். அவர்களில் ஒருவன் வாளை தட்டிவிட்டதன் அடையாளமாய் அது அவன் முன்னே கிடந்தது.

அவன் கண்களில் தென்பட்ட உறுதியிலும் சற்று முன் வாளைத் தட்டிவிட்ட லாவகத்திலும் முன்னேற யோசிக்க ருத்தரனின் பின்புறமாக ஒருவன் அந்தப் பெண்ணை நெருங்க முயன்றான். முன்னிருந்த கண்ணாடியில் அவதானித்தவன் அவனைத் தடுக்க நேரமில்லை என்பதை உணர்ந்து வாளுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் வந்தான்.

வேகமாய் அவள் இடையைப் பற்றி சுற்ற வாள் அவன் இடது புஜத்தைக் கிழிக்க அவளை தன் முதுகின் பின் தள்ளி வாளை இறுகப் பற்றினான். அடுத்து என்ன நடந்திருக்குமோ, தடதடவென செக்யூரிட்டி கார்ட்ஸ் ஒரு இருபது பேர் கையில் கன்னுடன் உள்ளே வந்தார்கள். அவர்களில் ஐவர் ருத்ரனையும் அந்தப் பெண்ணையும் சுற்றி நிற்க மீதிப் பேர் முகமூஒடிகளை கவனித்தனர்.

கன் சத்தத்திலும் திடிரென மாறிய சூழ்நிலையிலும் குழம்பிப் போன அந்தப் பெண் மூக்கிலிருந்து துளியாய் ரத்தம் வர அவள் கன்னம் தாங்கிக் கொண்டவன் “ஷ்... பிரனா ரிலாக்ஸ், ஒண்ணுமில்லம்மா” அவள் கண்ணைப் பார்த்து ஆறுதல் கூறினான்.

அவள் கண்களில் மெதுவாய் குழப்பம் தென்படுவதையும் மூக்கிலிருந்து ரத்தம் அதிகமாவதையும் கவனித்தவன் சட்டென பிடரியை தாங்கி அவள் இதழுடன் இதழ் கலந்தான். கண்கள் விரிய அவனை விலக்கித் தள்ளிவிட முயன்றாள், முடியவில்லை. அதே நேரம் டென்சன் குறைந்து, அவன் முத்தத்தில் லயித்த மனதையும் அடக்க முடியாமல் திணறினாள்.

அவளுக்கு மூச்சுத் திணற முத்தத்தை நிறுத்தியவன் நெற்றியில் நெற்றி வைத்து புன்னகைத்து அவள் கன்னத்தை நுனி விரலால் வருடினான். அவன் தேன் நிறக் கண்கள் உணர்ச்சியில் இன்னும் அடர் நிறத்திற்கு மாற அவளினுள் இனம் புரியாத உணர்ச்சிக் குவியல்கள்.

“பாஸ்...” என்று வந்த செக்யூரிட்டியின் சத்தத்தில் தன்னிலை உணர்ந்தவள் துள்ளி விலகி உதட்டை அழுந்தித் துடைத்தாள். கண்களில் கோபம் மின்ன முறைக்க அவனோ அதையும் ரசித்திருந்தான்.

“மிஸ்டர் என்னதிது, எனக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கு தெரியுமா?” சீறினாள்.

“அதற்கென்ன” விட்டேத்தியாய் கேட்டான்.

என்ன ரகம் இவன் என்பது போல் பார்க்க இலகுவாகக் கூறினான்.

“பரவாயில்லை அவனை டிவோர்ஸ் பண்ணிடு”

அவன் அழிச்சாட்டியத்தில் கண்ணை விரித்துப் பார்த்தவளுக்கு நிஜமாகவே தலையை சுற்ற அவன் மீதே மயங்கி விழுந்தாள். அத்தனை நேரமிருந்த விளையாடுத்தனம் மறைய அவள் முகத்தையே இமைக்காது நோக்கியவன் இறுக அணைத்துக் கொண்டவன் அவன் கையிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு உதவிக்கு வந்த செக்யூரிட்டியை ஒரு பார்வையில் தள்ளி நிறுத்தி விட்டு காயத்தை அலட்சியம் செய்து அவனே துக்கிக் கொண்டு நடந்தான்.


கருத்து திரி
 
Status
Not open for further replies.
Top