‘கிளிக்’
ஓசையுடன் பற்றிக் கொண்ட லைட்டரின் ஒளியில் தென்பட்டது அவன் கண்கள். வேட்டையாடும் சிறுத்தையின் கண்கள். பற்றியதுமே வாயிலிருந்து எடுத்துவிட்டிருந்தான்.
நடுநிசி இருள் சுற்றிலும் நிறைந்திருக்க சற்று தூரத்தில் இருந்த மின்கம்பம் போனால் போகுது என்பது போல் சற்றே வெளிச்சத்தை உமிழ்ந்தது. அந்த கருநிற காரில் சாயந்திருந்தவன் அவன் முன் மண்டியிட்டு இருந்தவன் இல்லை இருபுறமும் பிடித்து பலவந்தமாக மண்டியிட வைக்கப்பட்டிருந்தவனை பார்த்தான்.
“சோ.....?” சற்று இடைவெளி விட்டுக் கேட்டான் “எங்கே”
“க க கலிபோர்னியா”
“ஹ்ம்ம்...”
“இன்னும் ஐந்து மணித்தியாலத்தில் விமானம்”
அருகே இருந்தவன் கைகளில் இருந்த கன்னை வாங்கினான்.
டுமீல்....
அருகேயிருந்த மரத்திலிருந்த பறவைகள் ஒருதரம் வட்டமிட்டு விட்டு அமர அந்த கருநிற கார் சீறிக்கொண்டு சாலையில் பறந்தது.
அந்த இடம் மீண்டும் மயான அமைதியை தத்தெடுத்தது.
“உனக்கு எத்தனை தரம் தான் சொல்வது? அறிவில்லை”
“நீங்க விக்கிறீங்களா?”
முறைத்துப் பார்க்கவே சட்டென வாயை கையால் மூடி “இல்ல இல்ல” என்றவள் கையிலிருந்த நோட்டில் எழுதியவாறே கேட்டாள் “என்ன என்ன செய்யகூடாது?”
“நீ என்ன செய்கின்றாய்?”
“எழுதி வைக்கின்றேன்”
“சொல்லுங்கள்” நோட்டிலிருந்து நிமிர்ந்து பார்த்தாள்.
“நான் இப்ப பிஸி”
“என்ன டைம் ப்ரீ”
“நைட் பத்து மணி”
அதையும் எழுதியவள் “ம்ம் சரி பத்துமணிக்கு வர்ரன்” போய்விட்டாள்.
“ஹா...” போகும் அவளையே என்ன ரகம் இவள்.... என்பது போல் பார்த்து வைத்தான் அவன்.
அந்த சூப்பர் மார்க்கெட்டில் சுற்றிலும் பார்த்தபடி நின்றிருந்தாள் அந்தப் பெண். அவளருகே சென்றவன் “பிரனா வா போவோம்” இயல்பாய் அழைத்தான்.
திடுக்கிட்டு திரும்பி பார்க்க “என்ன முழிக்கிறாய்? இருவரும் தானே வந்தோம் வா” முகத்தில் குழப்பம் படர சுற்றிப் பார்த்தாள் என்னையா என்பது போல்.
“வா வா போய் திங்க்ஸ் வாங்குவோம்” ட்ராலியை உருட்டியபடி முன்னே செல்ல இன்னும் குழப்பத்தில் நின்றாள் பிரனா.
“உங்கள் பெயர்...”
“இந்த பிரனாவின் ப்ரணவ்” மூக்கில் சுண்டினான்.
இன்னும் குழப்பத்தில் நின்றவளை நெஞ்சோடு அணைத்துக் தலையில் நாடி பதித்து “என்னம்மா?” என்றவன் முகத்தில் ஒரு கணம் சொல்லில் அடங்காத வேதனை தோன்றி மறைய நிமிர்ந்தவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
இந்த அணைப்புக்காய், இதழ் ஒற்றலுக்காய் யுகயுகமாய் காத்திருந்தது போல் ஒரு உணர்வுடன் அவன் தின்மையான நெஞ்சில் தலை சாய்த்தாள் பிரனா.

********