எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மலடியின் மகளே! - கதை திரி

Status
Not open for further replies.

NNK-19

Moderator
மலடியின் மகளே


அத்தியாயம் - 1


அந்த நிசப்தமான இரவில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த சூரியபிரகாஷ் தூக்கத்தில் புரண்டவன் கைகளால் படுக்கையை துளாவ அருகில் காலியாக இருப்பதை உணர்ந்து பதறி எழுந்தான்.


பதறி எழுந்தவன் அறை கதவு மூடி இருப்பதை கண்டு குளியலறையை பார்த்தவன் அதுவும் மூடி இருந்தது.


யோசனையுடன் பால்கனிக்கு விரைந்தான்.


அவன் தேடிக் கொண்டிருந்த அவன் காதல் மனைவி கைகளை கட்டிக் கொண்டு பால்கனியில் நின்றிருந்தாள்.


அவளை பின்னிருந்து அணைத்தவன் “மதி தூங்காம என்ன பண்ற?” என்றான்.


வலிய வரவழைத்த புன்னகையுடன் “இன்னைக்கு பௌர்ணமி நிலா அழகா இருக்கு அதான் பார்த்துட்டு இருக்கேன்” என்றாள் புன்னகையுடன்.


“என்னோட வெண்மதிய விடவா அந்த மதி அழகு! ஒரு நிலவே நிலவை ரசிக்கிறதே. அடடா ஆச்சரியகுறி!” என அவளை பார்த்து கண் சிமிட்டினான்.


அவனை நோக்கி மெலிதாக சிரித்துவிட்டு மீண்டும் திரும்பி நின்றாள்.


அவள் தோளில் கை போட்டவன் “மணி இரண்டாச்சு இவ்ளோ நேரம் தூங்காம என்ன பண்ற?” என்றான்.


“எனக்கு தூக்கம் வரல சும்மா எப்படி படுக்கறது அதான் இங்க வந்து நின்னுட்டுருக்கேன்” என்றாள்.


“மதி ஏதாவது பிரச்சனையா? கொஞ்ச நாளா நானும் பார்க்கிறேன் என்னமோ யோசிச்சிட்டே இருக்க. சரியா தூங்கறதில்லை எதாவது பெரிய பிரச்சனையா?” என்றான் கேள்வியாக.


“நான் நல்லா இருக்கேன் எனக்கு என்ன பிரச்சனை இருக்க போகுது தூக்கம் வரலனு இங்க வந்தேன் அதுக்கு போய் இவ்ளோ கேள்வியா?” என்றாள் சலிப்பாக.


“மேடம்க்கு தூக்கம் வரலயா அது எப்படி தூக்கம் வராம இருக்கும்னுனா பார்க்கிறேன்” என அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.


வெட்கத்துடன் அவனை தள்ளிவிட்டவள் “சூர்யா என்ன பண்றீங்க இது பால்கனி” என்றாள் கூச்சத்துடன்.


“ஆஹான் எத்தனை வருஷமானாலும் உனக்கு இந்த வெட்கம் போகாது” என்றவன் அவள் எதிர்பார்க்காத நேரம் அவளை கைகளில் ஏந்தி இருந்தான்.


“என்னடீ ஆச்சு உனக்கு இவ்ளோ மெலிஞ்சிட்ட” என்றான் யோசனையுடன் .


“அதெல்லாம் இல்ல எப்பவும் போல தான் இருக்கேன்” என்றாள் .


“அடியேய் உன்னை அடிக்கடி தூக்குற எனக்கு தெரியாதா?” என்றதும் இருவரும் சேர்ந்து சிரித்தனர்.


அவளை படுக்கையில் இறக்கிவிட்டவனின் கண்களில் தெரிந்த தாபத்தில் வெட்கத்துடன் திரும்பினாள்.


“மதி” என அவளை தன்னை நோக்கி திருப்பியவன் அவள் மேல் சரிந்தான்.


முதலில் நெற்றி முத்தத்தில் ஆரம்பித்தவன் அவள் சிப்பி இமைகளில் முத்தமிட்டவன் பின் அவள் இதழ்களில் இளைப்பாறினான்.


இதழ் முத்தத்தில் ஆரம்பித்து ஆடைகள் விலக ஆனந்த ஆலிங்கனத்தில் சஞ்சரித்து கலைந்த ஓவியமாக தன் மார்பில் துயில் கொண்டிருந்த நிலவு பெண்ணின் நெற்றியில் முத்தமிட்டான்.


கலைந்து கிடந்த தன் ஓவியப்பாவையை அணைத்துக் கொண்டு கண் அயர்ந்தான் சூர்யாபிரகாஷ்.ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனை “சூர்யா சூர்யா விடிஞ்சிருச்சு” என அவனை தொட்டு உசிப்பினாள் வெண்மதி.


தன் எதிரே தலைக்குளித்து ஈர கூந்தலில் துண்டு கட்டி முகப்பொலிவுடன் மஞ்சள் மணம் மணக்க அறக்கு நிற சிபான் புடவையில் நின்றிருந்தவளை பார்க்க அவனுக்கு திகட்டவில்லை.


படுக்கையில் படுத்தபடி அவளை பார்த்தவன் அவளை தன் மேல் இழுத்துப் போட்டுக்கொள்ள அவனிடமிருந்து திமிறி விடுபட்டாள்.


“சூர்யா நேரமாச்சு ப்ளீஸ் ஆரம்பிக்காதீங்க. நான் ஏற்கனவே குளிச்சிட்டேன். நீங்க முதல்ல காபிய குடிங்க” என்றதை காதில் வாங்காமல் அவனுக்கு வேண்டியதை பெற்றுக் கொண்டு அவளை விட்டு விலகினான்.காபி ஆறி ஆடை படர்ந்து அவலாக கிடந்தது.


கலைந்த புடவை முந்தானையை அள்ளி எடுத்தவளை குறும்புடன் பார்த்து “திரும்ப குளிச்சிரு” என கண்ணடித்தான்.


மீண்டும் குளித்து புடவை மாற்றி சென்றவளை மாமியாரும் ஓரகத்தியும் பார்த்த பார்வையில் கூசிப்போனாள்.


சமையலறைக்கு விரைந்த வெண்மதி ஓரகத்திக்கு காபி தயாரித்து எடுத்துச் சென்றாள்.


காபியை வாங்கிக் கொண்டு அவளை மேலிருந்து கீழாக அளவிட்ட கவிதா “மறுபடியும் குளிச்சு புடவை மாத்திருக்க போல” என்றவளுக்கு என்ன பதில் கொடுப்பது என தெரியாமல் முழித்தாள் வெண்மதி.


“ஆமா இவளுக்கு நேத்துதான் கல்யாணம் ஆகிருக்கு பாரு திரும்பத் திரும்ப குளிக்க.. மலட்டு மாடு என் பையன மயக்கி தலையணை மந்திரம் போட்ருக்கா அப்புறம் திரும்பத் திரும்ப குளிக்காம என்ன பண்ணுவா?” என மாமியார் பார்வதி கடிந்ததும் கொல்லென சிரித்தாள் கவிதா.


“ஏய்! எங்க மூஞ்சிய பாக்காம சீக்கிரம் டிபன் ரெடி பண்ணு” என நொடித்துக் கொண்டு அவளை விரட்டினாள் பார்வதி.


கண்ணீருடன் சமையலறைக்குள் சென்று முடங்கினாள் வெண்மதி.


அங்கு நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த பவானி அவளைக் கண்டு வருத்தத்துடன் அவள் கையை பிடித்து ஆறுதல் சொல்ல முயன்றார்.


“என்ன பவானிக்கா எதுவும் வேணுமா?” என்றாள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.


“கவலைப்படாதே மதிம்மா உன்னோட நல்ல மனசுக்கு எல்லாமே மாறும். கண்டிப்பா உனக்கு ஒரு மழலைச் செல்வம் கிடைக்கும் அழாதே” என்றார்.


“அதெல்லாம் ஒன்னுமில்லக்கா இந்தாங்க இந்த பாத்திரத்தை கழுவிடுங்க” என அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகரப்போனாள்.


“மதிம்மா நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத தம்பிகிட்ட இதெல்லாம் சொல்லலாம் தானே” என ஆரம்பித்தவர் வெண்மதி பார்த்த பார்வையில் பேசாமல் வாயை மூடிக்கொண்டார்.

தொடரும்...
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 2


“அக்கா நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிருக்கேன் விட்ருங்க சீக்கிரமா போய் பாத்திரத்தை கழுவுங்க கடகடனு வேலைய பார்க்கணும் எல்லாரும் சாப்பிட வந்துருவாங்க” என்றாள் கண்டிப்புடன்.


“மதிமா நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்” என ஆரம்பித்தவரை தடுத்து “அக்கா போதும் உங்களுக்கு சொன்னா புரியாதா போய் வேலையை பாருங்க” என கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.


“நல்லதுக்கு சொல்றதை கூட இந்த பொண்ணு புரிஞ்சிக்காது” என மனத்தாங்கலுடன் அங்கிருந்து விலகினார் பவானி.


அவ்வளவு தான் பேச்சு முடிந்தது என பரபரப்பாக சமையலை பார்க்கத் துவங்கினாள் வெண்மதி.


வீட்டில் சமையலை தவிர அனைத்து வேலைக்கும் ஆட்கள் வைத்திருக்கிறான் சூரிய பிரகாஷ்.


அது எல்லாம் அவன் வீட்டிலிருக்கும் வரை. அவன் வேலைக்கு கிளம்பிவிட்டால் போதும் வேலை மொத்தத்தையும் வென்மதியிடம் தான் வாங்குவார் பார்வதி.


சூர்ய பிரகாஷ் வெண்மதி இருவரின் திருமணமும் காதல் திருமணம்.


வெண்மதிக்கு தன் தாய் தந்தை யாரென தெரியாது அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட அறியாத பேதை அவள்.


கருணை இல்லத்தில் வளர்ந்த வெண்மதி சூரிய பிரகாஷின் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தாள்.


வெண்மதியின் நல்ல குணத்தில் பண்பில் ஈர்க்கப்பட்டு காதலில் விழுந்தான் சூர்யா.


தாய் தகப்பன் சொத்து சுகம் ஏதுமில்லா வெண்மதியை பார்வதிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.


அதிலும் வசதியும் வளமையும் நிறைந்த கவிதாவுக்கு ஒன்னுமில்லாத வெண்மதியை கண்டால் ஆகாது.


கவிதாவின் கணவன் சந்துருவுக்கு தம்பியின் காதல் திருமணம் வருத்தம் தான் எனினும் தம்பியின் மனதை ஈர்த்த பெண்ணிடம் முகம் திருப்புவதில்லை.


சூரிய பிரகாஷுக்கு இரு சகோதரிகள் தேவிகா, மல்லிகா. இருவரும் பார்வதி கவிதாவை தூக்கி சாப்பிட்டு விடுவார்கள். இருவரும் அப்படிப்பட்ட சீரியல் வில்லிகள்.


இவர்களின் தந்தை சந்திரமோகன் சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பில் இறந்துவிட்டார்.


மொத்தத்தில் சூரிய பிரகாஷ் சந்துருவை தவிர மற்ற அனைவருமே வில்லத்தனமானவர்கள்.


இங்கு நடப்பது தெரிந்தால் சூர்யா அனைவரையும் உண்டு இல்லையென ஆக்கிவிடுவான். ஆனால் வெண்மதி தனக்கு தான் யாருமில்லை சூரிய பிரகாஷை அவன் குடும்பத்திலிருந்து பிரிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தால்.


அதனால் தனக்கு நடக்கும் கொடுமை எதையும் வெண்மதி கணவனின் பார்வைக்கு கொண்டு செல்வதில்லை.


அலுவலகம் செல்வதற்கு தயாராகி சாப்பிட வந்தான் சூர்யா.


மனைவி பரிமாறும் இட்லி சட்னி சாம்பாரை ரசித்து உண்டான் சூர்யா.


மதி நீயும் நேரத்தோட சாப்பிடு என அவளையும் சாப்பிட சொன்னான்.


“நீங்க சாப்பிடுங்க சூர்யா நான் அத்தை கூட அப்புறமா சாப்பிடுறேன்” என மறுத்து அவனை சாப்பிட வைத்தாள். சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு சென்றான் சூர்யா.


அவன் சாப்பிட்ட தட்டை கழுவ போட்டுவிட்டு அவன் கிளம்புவதற்க்கு அவன் லேப்டாப் பேகை எடுத்துக் கொடுத்தாள்.


“மதி மதியம் சாப்பாடு கொண்டு வந்துரு” என அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு விடைபெற்றான் சூர்யா.


அவன் கிளம்பியதும் வேலைகளை பரபரப்பாக பார்க்க துவங்கினாள்.


மனம் நிலையில்லாமல் தவிக்க வேலை பார்த்துக் கொண்டிருந்தவள் கவிதாவின் மகன் வைபவ்வின் அழுகை சத்தத்தில் சுய உணர்வுக்கு வந்தாள்.


கவிதா குளிக்க சென்றிருந்தாள் அவளின் மூன்று வயது குழந்தையின் அழுகை கண்டு மனம் பொருக்காமல் குழந்தையை கைகளில் அள்ளி சமாதானப்படுத்தினாள்.


“தங்க குட்டி சித்தி கிட்ட வாங்க. ஏன்டா ராஜா அழறீங்க வேண்டாம் தங்கம்” என சமாதானப்படுத்த குழந்தை அழுகையை நிறுத்தி அவள் பேசுவதை உற்று கவனித்தது.


குழந்தையை முத்தமிட நெருங்க அவளிடமிருந்து வெடுக்கென வைபவ்வை பிடிங்கினாள் கவிதா.


“ஏய் சனியனே என் பிள்ளைய தொடாதேனு எத்தனை தடவை உனக்கு சொல்லிருக்கேன். உனக்கே வயித்துல ஒரு புழு பூச்சி கூட இல்லை. உன் விளங்காத கையால என்
பிள்ளைய ஏன்டீ தூக்கின” என அவளை பிடித்து கீழே தள்ளிவிட்டாள் கவிதா.


“ஐயோ அம்மா” என அவள் தள்ளிவிட்ட வேகத்தில் தூர சென்று விழுந்தாள் மதி.


சத்தம் கேட்டு என்னவோ ஏதோவென பதறி ஓடி வந்தார் பார்வதி.


“அத்தை பாருங்க இவளை என் பிள்ளையை தொடக்கூடாதுனு எத்தனை தடவை சொல்லிருப்போம் நம்ம பேச்சை கொஞ்சம் கூட மதிக்காம என் புள்ளைய தூக்கிருக்கா. இவளுக்கு பொறாமை கேடுகெட்ட மனசு. நமக்கு பிள்ளை இல்ல இவளுக்கு மட்டும் பிள்ளை இருக்குனு பொறாமை.‌ என் பிள்ளைய கொல்லக்கூட தயங்கமாட்டா” என நீலிக்கண்ணீர் வடித்தாள் கவிதா.


“அநாதை நாயே என் பேரனை உன் கையால தொட்டியா” என மாறி மாறி அவள் கன்னத்தில் அறைந்தார் பார்வதி.


அவர் அறைந்ததை விட அனாதை என்னும் சொல் அவளை மறிக்க செய்தது.


“ஐயோ! படுபாவி என் பேரனை ஏன்டீ தூக்கின உன் கைபட்ட தோஷம் என் பேரனுக்கு வந்து அவனுக்கு என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு. உனக்கு என்ன கவலை நீ பெத்திருந்தா பிள்ளையோட அருமை தெரியும். நீ தான் தரிசு நிலமாச்சே. உனக்கு எங்க பிள்ளையோட அருமை தெரியும்” என அவளை வார்த்தையால் கடித்து குதறினார் பார்வதி.


“வாங்க அத்தை போகலாம் இவ பார்வை கூட என் பிள்ளை மேல படக்கூடாது. முதல்ல என் பிள்ளைக்கு என்னனு பார்க்கலாம்” என மாமியாரிடம் பிள்ளைய கொடுத்தாள் கவிதா.


தன் மாமியாரிடம் அடி வாங்கிய வெண்மதியை மிதப்பாக பார்த்து அங்கிருந்து அகன்றாள் கவிதா.


அவர்கள் வெளியேறியதும் குமுறி அழுதாள் வெண்மதி.தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 3


அழுதால் மனபாரம் குறையும் என சொல்வார்கள் எவ்வளவு அழுதும் வெண்மதியின் மனதில் உள்ள ரணம் குறையவில்லை.


வெகு நேரம் அழுதவளுக்கு வேலைகள் நினைவு வர கண்ணை துடைத்துக்கொண்டு எழும்ப முயன்றவளுக்கு எழ முடியவில்லை.


நிற்க முடியாமல் தடுமாற அவளுக்கு கை கொடுத்து உதவினார் பவானி.


பவானியின் பார்வை அவளை குற்றம் சாட்டியது.


எனினும் அதைக் கண்டு கொள்ளாதவள் போல “அக்கா இன்னைக்கு ஒரு நாள் நீங்க சாப்பாடு ரெடி பண்றீர்களா? நான் அவருக்கு கொண்டு போய் கொடுத்துட்டு வர்றேன்” என்றவளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை பவானி.


“என்னாச்சு அக்கா? நான் கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்லாம என்னையே அப்படி பார்க்கிறீங்க” என்றாள் அவர் பார்வையின் அர்த்தம் புரிந்தும்.


“மதிம்மா நீ இந்த வீட்டோட மருமக நான் இந்த வீட்டு வேலைக்காரி. நீ தான் என்னோட முதலாளி. இதை செய் அதை செய்னு என்னை வேலை வாங்காம செய்றீங்களான்னு கேட்கிற என்ன பொண்ணும்மா நீ” என அவளை கடிந்தார்.


“என்னக்கா நீங்க வேலைக்காரினு சொல்றீங்க என்னைக்காவது உங்கள நான் அப்படி நடத்துறேனா? என்றாள் மதி வருத்தமாக.


“அதை தான் நானும் சொல்றேன். நீ இந்த வீட்டோட மருமக உன்னை அவங்க ரெண்டு பேரும் என்ன பேச்சு பேசுறாங்க. வேலைக்காரி எனக்கே அவங்க பேசினத கேட்டு நெஞ்சு பதறுது கண்ணு. நீ அமைதியா இருக்க தயவுசெஞ்சு சூர்யா தம்பிட்ட சொல்லிடு மதிமா”


“இவுங்களாம் உன்னை பேசுறத பார்த்தா என் ஈரக்குலையே நடுங்குது. உனக்கு சொல்ல விருப்பம் இல்லனா விட்ரு பரவாயில்ல ஆனா இன்னைக்கு நடந்ததை நான் சூர்யா தம்பிட்ட சொல்லத் தான் போறேன். இனியும் உன் முட்டாள்தனமான அமைதிய கண்டுக்காம இருந்தா நான் மனுஷியே இல்ல” என்றார் கோபமாக.


“அக்கா போதும் இதுக்கு மேல இதை பத்தி பேச வேண்டாம். நீங்க இங்க நடந்ததை பத்தி அவர்கிட்ட ஏதாவது சொன்னீங்க என்னை உயிரோட பார்க்கவே முடியாது” என்றாள் உறுதியாக.


“மதிமா என்ன பேச்சு பேசுற. தம்பி உன் மேல உயிரையே வச்சிருக்கு. நீ இப்படி ஒரு வார்த்தை சொன்னதை தம்பி கேட்டுருந்துச்சு தாங்குமா என்னமா இதெல்லாம்” என்றார் வேதனையுடன்.


“எந்த பிறவில என்ன பாவம் செய்தேனோ அம்மா அப்பா யாருனு தெரியாம அவங்க இருக்காங்களா இல்லையா எனக்குனு ரத்த உறவுகள் உண்டா? ஏன் நான் முறையா பிறந்த குழந்தை தானா இப்படி எதுவுமே தெரியாம இருக்கேன். யாரு செஞ்ச புண்ணியமோ தெரியல சூர்யா எனக்கு கிடைச்சிருக்காரு. உறவுகளே இல்லாத எனக்கு உறவா உயிரா அவரு கிடைச்சிருக்காரு”


“எனக்கு தான் உறவுகளே கிடையாது அவருக்குனு இருக்க உறவுகளை அவருகிட்ட இருந்து பிரிக்கணுமா? இதெல்லாம் அவருக்கு தெரிஞ்சா கோபப்படுவாரு சண்டை போடுவாரு குடும்பம் உடையும் வேண்டாக்கா. எனக்காக தயவு செஞ்சு இதை இப்படியே விட்ருங்க” என்றாள் கெஞ்சலாக.


“உன்னோட நல்ல மனசை இங்க யாருமே புரிஞ்சுக்கலையே” என வருந்தினார் பவானி.


பவானியிடம் என்ன சமைக்க வேண்டும் என சொல்லியவள் எப்பவும் போல தன் துக்கத்தை பூஜையறைக்கு சென்று கடவுளிடம் கொட்ட சென்றாள்.


“கடவுளே உனக்கு கண்ணு இருக்கா இல்லையா? இங்க நடக்கிறத பார்க்கிற தானே. அத்தை என்னை அனாதைனு சொல்றாங்க. நான் என்ன தப்பு பண்ணினேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நான் தூக்கினா வைபவ்க்கு ஏதாவது ஆகிடுமா. யாரு யாருக்கோ குழந்தை பாக்கியம் தர்ற வயசு கோளாறுள தப்பு பண்ணி கலைக்கிறவுங்களுக்கு கூட குழந்தை கொடுக்கிற”


“உன்னை மட்டும் நம்பி உன்னையே சரணமடைஞ்சு நீயே கதினு இருக்கேன். எவ்வளவு பூஜை விரதம் இருக்கேன் கொஞ்சம் கூடவா உனக்கு மனசு இறங்கல எனக்கு ஒரே ஒரு ரத்த உறவாய் எனக்கு ஒரு குழந்தை தர மாட்டியா” என மடியந்தி கண்ணீர்விட்டு கதறினாள்.


இவள் கதறலை கேட்டால் மழை கூட மனம் இறங்கிவிடும் ஆனால் இந்த குடும்பத்து பெண்களுக்கு மனமிறங்காது.


சும்மாவா சொன்னார்கள் பெண்ணுக்கு பெண்ணே எதிரி.


எவ்வளவு நேரம் இறைவனிடம் மனக்குமுறலை இறக்கி வைத்தாளோ பவானியின் குரலில் சுயநினைவுக்கு வந்தாள்.


“தம்பிக்கு சாப்பாடு எடுத்து வச்சுட்டேன் நீ எடுத்துட்டு கிளம்பு” என்றார்.


“சரி” என தலையசைத்தாள் மதி.


வெளியேறப் போன மதி என்ன நினைத்தாலோ “அக்கா தயவு செஞ்சி கெஞ்சி கேட்கிறேன் என் மேல உள்ள அக்கறைல அவர்கிட்ட இது எதையும் சொல்லிடாதீங்க” என வேண்டினாள்.


“இல்லம்மா நீ இவ்ளோ சொன்னதுக்கு அப்புறம் நான் தம்பி கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன். நீ கவலைப்படாதே கண்டிப்பா கடவுள் உனக்காக மனசு இறங்குவாரு கண்ணு. நீ தம்பிக்கு சாப்பாடு கொண்டு போ” என அவளை அனுப்பி வைத்தார்.


அவசர அவசரமாக சாப்பாட்டு பையை எடுத்துக்கொண்டு கணவனது அலுவலகத்திற்கு விரைந்தாள் வெண்மதி.


மனைவி பரிமாறிய உணவை ஒரு வாய் தான் உண்டிருப்பான் “என்ன மதி இன்னைக்கு நீ சமைக்கல போல” என்றான் அவள் முகத்தை கூர்மையாக நோக்கியபடி.


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 4


மனைவி பரிமாறிய உணவை ஒரு வாய் தான் உண்டிருப்பான் “இன்னைக்கு நீ சமைக்கல போல” என்றான் அவள் முகத்தை கூர்மையாக நோக்கியபடி.


ஒரு நொடி திருதிருவென முழித்தவள் லேசாக சிரித்தபடி “எப்படி கண்டுபிடிச்சீங்க?”“என் பொண்டாட்டி சமையல் எனக்கு தெரியாதா? எத்தனை வருஷமா சாப்பிடறேன். சாப்பாட்டோட வாசத்தை வச்சு என் பொண்டாட்டி சமையலா இல்லையான்னு சொல்லிடுவேன்” என்றதும் சிரித்து விட்டாள்.


“ஹான்” என்றாள் கேலியாக.


“பேச்சை மாத்தாதே நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என்றான்.


“ சரி உங்களுக்கு நூறு மார்க் பவானிக்கா தான் இன்னைக்கு சமைச்சாங்க” என்றாள்.


“ஏன் எப்பவும் கிச்சன் என்னோட ராஜ்ஜியம்னு அங்கேயே குடியிருப்ப ஆச்சரியமா இருக்கே. ஓய் நிமிர்ந்து பாரு என்னை” என அவள் முகத்தை நிமிர்த்தினான்.


“மூஞ்சி கண்ணெல்லாம் சிவந்திருக்கு அழுதியா” என்றான் கவலையுடன்.


“நான் என்ன அழுமூஞ்சியா? நான் ஏன் அழ போறேன்? பயங்கர தலைவலி அதான் அக்காவை சமைக்க சொன்னேன்” என்றாள் தலையை பிடித்துக் கொண்டு.


பாதி உணவில் பதறி எழுந்தவன் அவளை நெருங்கி “என்னம்மா ஆச்சு தலைவலியோட ஏன் அலையற? போன் பண்ணிருக்கலாமே வீட்டுக்கு வந்து இருப்பேனே” என்றான் கவலையுடன்.


“பரவாயில்லை இதில என்ன இருக்கு பாதி சாப்பாட்டில் ஏன் எழுந்திருக்கீங்க? நீங்க போய் சாப்பிடுங்க” என்றவளை பேசவிடாமல் தடுத்தவன் “ரொம்ப வலிக்குதா” என்றான் கவலையுடன்.


“லேசா தான் வலிக்குது கொஞ்ச நேரம் படுத்தா சரியாகிடும்” என்றவள் அவன் அக்கறையில் நெகிழ்ந்து போயிருந்தாள்.


“நீ எதுவும் சாப்பிட்டுருக்கமாட்ட முதல்ல சாப்பாடு” என அவள் வாயில் உணவை திணித்தான். வேண்டாம் என மறுத்தவளை அடக்கியவன் அவளுக்கு உணவை ஊட்டிவிட்டு அவனிடமிருந்த தலைவலி மாத்திரையை கொடுத்தான்.


அவள் அவன் கொடுத்த மாத்திரையை வாங்கிப் போட்டாள்.


தலைவலி தைலத்தை அவளுக்கு தேய்த்து அவள் தலையை இதமாக பிடித்துவிட்டான்.


அவன் அலுவலக அறையனுள் இருந்த ஓய்வறைக்குள் அவளை அழைத்துச் சென்றான்.


“வீட்டுக்கு போனா நீ சுத்தமா ரெஸ்ட் எடுக்க மாட்ட. பேசாம இங்க படுத்து ரெஸ்ட் எடு” என அவளை அங்கிருந்த பெட்டில் படுக்க வைத்தான்.


அவள் தலையை இதமாக பிடித்துவிட்டபடி “எதுவும் பிரச்சனையா? என்கிட்ட எதையும் மறைக்கிறியா? வீட்ல உனக்கு ஏதாவது மன கஷ்டம் இருக்கா?” எனக் கேட்டவன் உள்ளுணர்வு அவனுக்கு ஏதோ சரியில்லை என உணர்த்தியது.


“சாதாரண தலைவலி நீங்க தேவையில்லாம யோசிச்சு குழப்பிக்கிறீங்க” என்றாள்.


சிறிது நேரத்தில் அவள் தூங்கியதை உணர்ந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.


“நீ ஏதோ என்கிட்ட மறைக்கிற. சொல்ல முடியாத அளவுக்கு உனக்கு என்ன பிரச்சனைனு சுத்தமா புரியல. வாயத் திறந்து சொன்னாதானே எனக்கு தெரியும்” என்றவனின் மனம் முழுவதும் வேதனையில் நிரம்பியது.


இவளிடமிருந்து எப்படி விஷயத்தை வாங்குவது என அவனுக்கு தெரியவில்லை. சொல்ல வேண்டும் என நினைப்பவளிடம் விஷயத்தை வாங்கலாம் மறைக்க வேண்டும் எனக் கங்கனம் கட்டியிருப்பவளிடமிருந்து எப்படி விஷயத்தை வாங்க முடியும்.


தலைக்கு மேல் வேலைகள் அவனை இழுக்க அதில் மூழ்கினான்.


மனதின் இறுக்கம் தளர்ந்து நிம்மதியாக ஆழ்ந்து உறங்கினாள் வெண்மதி.


நல்ல தூக்கத்தில் புரண்டவளுக்கு முழிப்பு வர அலுவலகம் வந்து படுத்தது நினைவு வர பதறி எழுந்து வெளியே வந்தாள்.


சூர்ய பிரகாஷ் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.


“நல்லா தூங்கினியா நவ் ஃபீலிங் பெட்டர்?” என கேட்டான்.


“நல்லா தூங்கிட்டேன் இப்ப பிரெஷ்ஷா இருக்கு. சரி சூர்யா நேரமாச்சு நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என கிளம்ப தயாரானாள்.


“இரு மதி அவ்வளவுதான் வேலை முடிஞ்சது நானும் வர்றேன் சேர்ந்து போகலாம்” என அவளை தடுத்தான்.


மதியம் வந்தவள் இரவு எட்டு மணி தாண்டிவிட்டது. மாமியாரும் ஓரகத்தியும் என்ன பேசுவார்களோ என அவளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.


காரை சீரான வேகத்தில் ஓட்டிச் சென்றான் சூர்யா.


மௌனமாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள் வெண்மதி.


“மதி என்கிட்ட ஏதாவது சொல்லனுமா?” என்றான் மீண்டும்.


“என்ன சொல்லணும் எனக்கு புரியல” என்றாள்.


“இல்ல ஏதாவது சொல்ல வந்து என்கிட்ட சொல்ல முடியாம தவிக்கிறியான்னு கேட்கிறேன்” என்றான் அழுத்தத்துடன்.


“அதெல்லாம் எதுவுமில்ல ஏதாவது சொல்லனும்னா உங்க கிட்ட சொல்லாம யாரு கிட்ட சொல்லப் போறேன்” என்றவளின் கண்கள் அவனை நேருக்கு நேர் சந்திக்கவில்லை.


அதிலேயே அவனுக்கு உறுதியாக தெரிந்து விட்டது விஷயம் தன் கை மீறி சென்றுவிட்டது.


இனி இவளிடம் கேட்டு பயனில்லை தானே கண்டுபிடிக்க வேண்டுமென முடிவெடுத்தான்.


இருவரும் வீட்டிற்குள் நுழைய அவள் முகத்திலிருந்த தெளிவை கண்டு பார்வதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.


உள்ளே நுழைந்த சூர்யாவை தடுத்த பார்வதி “மல்லிகாவுக்கு வர்ற வெள்ளிக்கிழமை வளைகாப்பு பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம் அன்னைக்கும் வேலை வேலைனு ஓடாதே. வெள்ளிக்கிழமை மல்லிகா வீட்டுக்கு போய் வளைகாப்பு போட்டு அவளை இங்க கூட்டிட்டு வரணும்”


“அவளுக்கு அண்ணனா மட்டுமில்லாம அப்பா ஸ்தானத்துல இருந்து நீயும் சந்துருவும் தான் எல்லாம் செய்யணும்” என்றார் பார்வதி குரலில் தேன் ஒழுக.


“சரிம்மா எல்லா ஏற்படும் பண்ணுங்க நாம்ம எல்லாருமா போய் ஜாம் ஜாம்னு அவ வளைகாப்பை நடத்தலாம்” என அங்கிருந்து சென்றான்.


இரவு எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் தானும் சாப்பிடலாம் என சாப்பிட அமர்ந்தாள் வெண்மதி.


மூக்கு வேர்த்தது போல அங்கு வந்து சேர்ந்தார் பார்வதி.


“ஏய் என்னடீ உன் புருஷனோட நல்ல ஊர் சுத்திட்டு வந்தியா?” என்றார்.


அலுவலகத்தில் தான் உறங்கியதை எப்படி சொல்வது என தெரியாமல் முழித்தாள்.


“சரி நீ என்னமோ பண்ணித்தொலை. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது உன் புருஷன் கிட்ட என்ன சொல்லுவியோ தெரியாது. என் பொண்ணு வளைகாப்புக்கு நீ வரக்கூடாது உன்னோட பார்வை பட்டா கூட அது என் பொண்ணுக்கு நல்லதில்லை. அதனால நீ வரக்கூடாது அவ வளைகாப்புல நீ கலந்துக்க கூடாது” என்றார் சற்றும் இறக்கமில்லாமல்.


“அவன் கிட்ட நான் சொன்னதை சொல்லாம நீயே சொல்ற மாதிரி ஏதாவது சொல்லற புரியுதா?” என்றார்.


மனதில் சுருக்கென வலிக்க “சரி அத்தை நான் வரல” என்றவளின் மனம் முழுவதும் வேதனையில் வெம்பியது.


“சரி சரி நீ நல்ல கொட்டிக்கோ. வேளா வேளைக்கு சரியா கொட்டிக்கோ. நல்ல திண்ணு வயித்தை நிறைச்சிக்கோ. காஞ்சி தரிசா கிடக்குற வயிறு. வயித்துல ஒரு புழு பூச்சி கூட இல்லைனு வருத்தமில்லாம வயித்த வளரு” என விஷத்தை கக்கி விட்டு சென்றார்.


சாப்பிட அமர்ந்தவள் சாப்பிடாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள்.


தொடரும்..
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 5


எப்படி வளைகாப்புக்கு வரமாட்டேன் என கணவனிடம் சொல்வது என யோசனையில் இருந்தாள்.


அவன் இவளுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தான்.


அடுத்தடுத்து மனைவி செய்யப் போகும் காரியம் தெரிந்தால் அவன் ருத்ரதாண்டவம் ஆடி விடுவான்.


இரவு படுக்கைக்கு வந்த மனைவியை கை அணைப்புக்குள் கொண்டு வந்தான்.


அவள் தலைகோதி தூங்க வைத்தவனின் தூக்கம் பறிபோனது.


எப்படியும் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டுமென முடிவெடுத்தான்.


மறுநாள் அலுவலகத்திலிருந்து வந்தவன் அவளுக்கு புடவை நகைகள் வாங்கி வந்தான்.


“மதி மல்லிகா வளைகாப்புக்கு இந்த புடவை நகையெல்லாம் போட்டுக்கு” என அவள் கையில் கொடுத்தான்.


“எதுக்கு சூர்யா இவ்வளவு என்கிட்ட ஏற்கனவே நிறைய புடவை இருக்கு” என மறுத்தாள்.


“புடவை நகையெல்லாம் வேண்டாம்னு சொல்ற பொண்ணுங்கலாம் இன்னுமா இருக்காங்களா?” என்றான் கேலியாக.


“எப்பவும் உங்களுக்கு என்னை கேலி பண்றதே வேலையா போச்சு” என்றாள் சலிப்புடன்.


“சரி நீ இதெல்லாம் எடுத்து கப்போர்ட்ல வை நான் ப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்” என குளியலறைக்குள் சென்றான்.


“சூர்யா உங்கட்ட நான் எப்படி வளைகாப்புக்கு வரமாட்டேனு சொல்லுவேன்” என கலங்கி அழுதாள்.


என்ன காரணம் சொல்வது என புரியாமல் கலங்கி நின்றாள்.


வளைகாப்பு நாளும் வந்தது என்ன செய்வது என யோசனையில் இருந்தவள் படுக்கையை விட்டு எழவில்லை.


கணவனிடம் அசைவு தெரிய தூங்குவதுபோல பாசாங்கு செய்தாள்.


காலையில் தினமும் காபியுடன் தன்னை எழுப்பும் மனைவி நேரம் கடந்தும் தூங்குவதைக் கண்டு யோசனையுடன் சுருங்கியது.


“மதி மதிம்மா எழுந்திரி” என அவளை உலுக்கி எழுப்பினான்.


கணவன் எழுப்பியதும் பதறி எழாமல் “என்ன” என்றாள் பொறுமையாக.


“என்ன இன்னைக்கு இவ்வளவு நேரம் தூங்குற சீக்கிரம் எழும்பு மல்லிகா வளைகாப்புக்கு எழுந்து கிளம்புடா” என அவளை கிளம்ப சொன்னான் சூர்யா.


“என்னனு தெரியலை சூர்யா ரொம்ப தலை சுத்தலா இருக்கு எனக்கு சுத்தமா எழுந்திரிக்க கூட முடியலை” என்றாள் சோர்வாக.


“என்ன மதி இப்படி சொல்ற கொஞ்சம் எழுந்து கிளம்பு. கொஞ்ச நேரம் நம்ம போயிட்டு வந்துடலாம். வந்து நான் உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் இப்ப ப்ளீஸ் கிளம்புடா” என அவளை வற்புறுத்தி கிளம்ப சொன்னான்.


வேறு வழியில்லாமல் மதி கிளம்பத் தயாரானாள்.


மனைவி சோர்வுடன் வெகுநேரமாக தயாராவதை கண்டு நிஜமாகவே அவளுக்கு உடம்பு சரியில்லை என கலங்கினான்.


இன்னைக்கு கட்டாயம் இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் என முடிவு செய்தான்.


“அவனும் தயாரானவன் பார்வதி அழைக்க கீழே செல்லப் போனவன் நீ ரெடியாகிட்டு கீழே வா” என சொன்னவன் பார்வதியிடம் சென்றான்.


மதி வேறு வழியின்றி தயாராகி வந்தவள் “சாரி சூர்யா நான் பண்ண போறது பெரிய தப்பு தயவு செஞ்சு என்னை மன்னிச்சிருங்க. என்னை வெறுத்துறாதீங்க. எனக்கு வேற வழி தெரியலை” என கண்ணை மூடியவள் “ஆஆஆ” என்ற அலறலுடன் படிக்கட்டில் உருண்டு விழுந்தாள்.


அவள் அலறல் சத்தம் கேட்டு சூர்யாவும் சந்துருவும் பதறி ஓடி வந்தனர்.


மனைவியின் நிலையை கண்டு பதறி துடித்தான் சூர்யா.


“தலைசுத்தல்னு சொன்னாலே கூட இருந்து கூட்டிட்டு வந்துருக்கணும்” மனைவி தலைசுற்றி கீழே விழுந்து விட்டாள் என நினைத்தவன் அவளிடம் விரைந்து ஓடினான்.


மனைவி செய்த காரியம் தெரிந்தால் என்ன செய்வானோ.


அவளிடம் ஓடி வந்தவன் மனைவியை கையில் தூக்கப் போனான். அவன் தொட்டதும் அவள் அலறிய அலறலில் பயந்து போய் அவள் கால்ல பார்க்க அவள் கால்கள் பயங்கரமாக வீங்கி இருந்தது.


அவள் கால்களின் வீக்கத்தை கவனித்த சந்துரு “சூர்யா அவ கால்ல பாரு பிராக்சர்னு நினைக்கிறேன் சீக்கிரம் தூக்குடா” என்றான்.


சாவகாசமாக வந்த பார்வதி “என்னாச்சுப்பா கிளம்பலாமா” என்றார்.


“அம்மா இவ மாடி படிக்கட்டிலிருந்து விழுந்துட்டா. கால் ரொம்ப வீங்கிருக்கு ப்ராக்சர்னு நினைக்கிறேன். நீங்க கிளம்புங்க நான் இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்” என்றான் சூர்யா.


“ஆமாடா நீ உடனே மதிய தூக்கிட்டு ஹாஸ்பிடல் போ நாங்க வளைகாப்புக்கு போயிட்டு வந்துடறோம். அவ பாவம் வலியில் ரொம்ப துடிக்கிறா நீ அவளை பாரு” என்றான் சந்துரு.


“சூர்யா நீ இல்லாம நாங்க மட்டும் எப்படி” என்றார் பார்வதி கோபமாக.


மனைவியின் நிலை கண்டு பதற்றத்தில் இருந்தவன் தன் தாய் “நீ இல்லாம எப்படி என்றாரே தவிர நீங்க இல்லாம எப்படி” என கேட்கவில்லை.

மற்ற நேரமாக இருந்தால் கவனித்திருப்பான்.


“சூர்யா நீங்க அத்தை கூட போயிட்டு வாங்க வந்து நம்ம ஹாஸ்பிடல் போகலாம்” என்றாள் வலியில் கண்களை சுருக்கியபடி.


“மதி நீ என்ன பேசுற சூழ்நிலை சரியில்லைன்னா என்ன பண்ண முடியும் நாங்க போயிட்டு வர்றோம். நீ சூர்யா கூட ஹாஸ்பிடல் போமா. சூர்யா நீ டாக்டரை பார்த்துட்டு என்னனு கால் பண்ணி சொல்லு” என்றான் சந்துரு.


“அம்மா கிளம்புங்க நம்ம போகலாம்” என பார்வதியையும் கவிதாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.


கிளம்பும் முன் வெண்மதியை பார்த்த பார்வதியின் பார்வை நெருப்பை கக்கியது. மாமியாரின் பார்வை வெண்மதியை அச்சுறுத்தியது.


மாமியார் பார்த்த பார்வையில் வெண்மதி பயந்து நடுங்கினாள்.


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 6


சந்துரு,கவிதா, பார்வதி மூவரும் வளைகாப்புக்கு கிளம்பினர்.


மனைவியை கையில் அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான் சூர்யா.


அதற்குள் மதி வலியில் துடித்து கதறி விட்டாள்.


அவளை பரிசோதித்த மருத்துவர் ப்ராக்சர் எனக்கூறி வலது காலில் மாவு கட்டு போட்டார்.


மேலும் விழுந்த வேகத்தில் இடது கையில் அடிபட்டு அதிலும் கட்டு போட்டிருந்தனர்.


கணவனிடம் உண்மையை சொல்ல தைரியம் இல்லாமல் ஏதோ யோசித்து ஏதோ செய்து தன்னை இதுபோல வருத்திக் கொண்டாள் முட்டாள் பெண்.


மருத்துவமனையில் இருந்து கைத்தாங்கலாக அவளை அழைத்து வந்து அறையில் படுக்க வைத்தான்.


அதிகமான வலியில் அவளால் படுக்க கூட முடியவில்லை. வலியில் அவளுக்கு கண்ணீர் சொரிந்தது.


பெயின் கில்லர் போட்டதன் உதவியால் சிறிது நேரம் உறங்கினாள்.


வளைகாப்பு முடிந்து வந்த பார்வதி அவனிடம் ஆடித்தீர்த்தார்.


“உன் மனசுல என்னதான் நினைச்சிட்டுருக்க அவ கால்ல லேசா அடிபட்டுருச்சு. அதுக்கு உன் தங்கச்சி வளைகாப்புக்கு கூட வர மாட்டியா” என்றார் பார்வதி கோபமாக.


“சூர்யா நா சொல்றேனு தப்பா எடுத்துக்காதே. நீ பண்றது தப்புனு உனக்கே தோணலையா? ஏன் வளைகாப்புக்கு வந்துட்டு உன் பொண்டாட்டிய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனா ஆகாதா. நல்லா தானே இருக்கா செத்தா போயிட்டா இவ்ளோ டிராமா பண்ற” என்றாள் கவிதா.


“அண்ணி என்ன பேச்சு பேசுறீங்க” என்றான் சூர்யா கோபமாக.


“ஏய்! கவிதா உனக்கு அறிவில்லை வாய மூடு. அவளுக்கு என்னாச்சு எப்படி இருக்கானு விசாரிக்காம நீ பாட்டுக்கு லூசு மாதிரி உளர்ற” என அவளை கடிந்தான் சந்துரு.


“என்னை ஏன் அடக்குறீங்க? அண்ணன் தன் சொந்த தங்கச்சி வளைகாப்புக்கு வரலைனு உன் தங்கச்சிக்கு வருத்தம். தங்கச்சி வளைகாப்புக்கு வராத அண்ணன் எனக்கு தேவையே இல்லை. நான் அம்மா வீட்டுக்கு பிரசவத்துக்கு வரமாட்டேன் எனக்கு பிரசவத்துக்கு பிறந்த வீடே வேண்டாம். என் புருஷன் வீட்டிலேயே இருக்கிறேனு அவ கோபப்பட்டு இங்க வர மாட்டேன்னு சொல்லிட்டா” என்றாள் கவிதா.


“சூர்யா இவ சொல்றதெல்லாம் நீ பெருசா எடுத்துக்காதே. மல்லிகாவுக்கு அவ புருஷனை விட்டுட்டு இங்க வர்றதுக்கு இஷ்டம் இல்லை அதனால அங்கேயே இருந்துக்கறேனு சொல்லிட்டா. அதுக்கு நீ வராதது ஒரு சாக்கு அவ்வளவுதான்” என்றான் சந்துரு.


“இதை விடு நீ சொல்லு மதி எப்படி இருக்கா? டாக்டர் என்ன சொன்னாங்க” என்றான் சந்துரு.


“கால் கைலாம் நல்ல அடிபட்டுருக்குனு சொல்லி கட்டு போட்ருக்காங்க புல் ரெஸ்ட்ல இருக்க சொல்லிருக்காங்க” என்றான் சோகமாக.


“கவலைப்படாத சரியாகிடும்” என தம்பியை தேற்றினான் சந்துரு.


சரியென அண்ணனிடம் தலையசைத்துவிட்டு தன் அறைக்கு சென்றான்.


சந்துரு சென்றதும் “பார்த்தீங்களா அத்தை நீங்க அவளை வரக்கூடாதுனு சொன்னீங்கனு மனசுல வஞ்சம் வச்சு உங்க பையனையும் வரவிடாம பண்ணிட்டா. சரியான ஆளுதான்” என பார்வதியை ஏத்திவிட்டாள் கவிதா.


மருமகள் ஏத்திவிட்டதில் பார்வதியின் மனம் எரிமலையாக எரிந்தது.


“பவானிக்கா அவ நல்ல தூங்குறா நீங்க கொஞ்சம் அவளை பக்கத்துல இருந்து பார்த்துக்கோங்க. எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு போயிட்டு ஒரு மணி நேரத்துல வந்துடறேன். பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கோங்க. அவளை தனியாவிட்டு எங்கேயும் போகாதீங்க. ஏதாவதுனா எனக்கு கூப்பிடுங்க நான் வந்துடுறேன்” என உறக்கத்திலிருந்து மனைவியை பார்த்துவிட்டு சென்றான்.


வலி எடுக்க தூங்க முடியாமல் முழித்தாள் மதி.அவளை கோபமாக பார்த்து முறைத்தார் பவானி.


“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா மதி லூசா நீ ஏன் இப்படி பண்ண?” என்றார் கோபமாக.


“அக்கா நான் என்ன பண்ணேன் தெரியாம தான்” என ஆரம்பித்தாள்.


“போதும் நிறுத்து பொய் சொல்லாதே. உன் மாமியார் உன்னை வளைகாப்புக்கு வரக்கூடாதுனு சொன்னாங்க உன் புருஷன்ட்ட என்ன காரணம் சொல்றதுனு தெரியாம படிக்கட்டில் உருண்டுட்ட” என்றார் சரியாக.


அவர் சரியாக சொன்னதும் தலை குனிந்தாள் மதி.


“ஒன்னு நீ உன் புருஷன்ட்ட உண்மைய சொல்லிருக்கணும் இல்லையா ஏதாவது சாக்கு சொல்லி போகாம இருக்கணும் இல்லையா புருஷன் கூட தானே போறோம்னு தைரியமா போயிருக்கணும். அதை விட்டுட்டு இப்படி பண்ணிருக்க ஒன்னுகிடக்க ஒன்னு ஆகிருந்தா என்ன பண்ணிருப்ப என்றார் கோபமாக.


“என்ன பண்றதுனு தெரியாம வேற வழி இல்லாம இப்படி பண்ணிட்டேன்” என்றாள் தலைகுனிந்து.


“படிச்ச பொண்ணு தானே நீ முட்டாளா நீ? கால் கையில அடிபட்டுருச்சு சரி தலையில் அடைப்பட்டிருந்தா என்ன பண்ணிருப்ப? பெருசா ஏதாவதுனா தம்பி என்ன பண்ணிருக்கும்" என்றார் கோபமாக.


“ஐயோ! அக்கா என்ன பண்றதுனு தெரியாம தான் இப்படி பண்ணிட்டேன். நான் மட்டும் வேணும்னு பண்ணேன்னு சூர்யாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவரு என்னை வெறுத்துருவாரு” என அழுதாள்.


“இவ்வளவு பயம் இருக்கவ ஏன் இப்படி பண்ணனும்” என்றார் கோபமாக.


அதற்கு மதி ஏதோ சொல்லப் போக சரியாக அங்கே வந்தார் பார்வதி.


“பவானி எனக்கு ஒரு ஜூஸ் போட்டு கொண்டு வா” என பவானியை அங்கிருந்து கிளப்ப முயன்றார் பார்வதி.


“அம்மா தம்பி மதிய பக்கத்துல இருந்து பார்த்துக்க சொன்னாரு” என தயங்கினார் பவானி.


“நான் தான் சொல்றேன்ல போய் ஜூஸ் எடுத்துட்டு வா நான் பாத்துக்குறேன்” என அவளை அனுப்பினார் பார்வதி.


இந்தம்மா இன்னும் என்னெல்லாம் விஷத்தை கக்கப் போகுதோ என புலம்பியபடி வெளியேறினார் பவானி.


“சரியான கைகாரிடி நீ உன்னை வரக்கூடாதுனு சொன்னதுக்கு படியிலிருந்து உருண்டு என் பையனையும் அவ தங்கச்சி வளைகாப்புக்கே வரவிடாம பண்ணிட்ல்ல நீ எல்லாம் நல்லாருப்பியா நீ நாசமாதான் போவ” என்றார் கோபமாக.


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 7


“உன்னை வரக்கூடாதுனு சொன்னதுக்கு என் பையனையும் அவன் தங்கச்சி வளைகாப்புக்கே வரவிடாம பண்ணிட்டியே நீயெல்லாம் நல்லாருப்பியா?” என்றார் பார்வதி கோபமாக.


“அத்தை ஏன் இப்படி பேசுறீங்க? நான் அவரை உங்க கூட போக தானே சொன்னேன். அவரு கேட்கல இதுல என்னோட தப்பு என்ன இருக்கு” என்றாள் மதி பாவமாக.


“நடிக்காதடி உனக்கு ஏதாவதுனா அவன் துடிச்சு போயிடுவான்னு தெரிஞ்சு தானே வேணும்னு அடிப்பட்டு அவனை வரவிடாம பண்ண. நீ வராத பங்ஷனுக்கு உன் புருஷனும் வரக்கூடாதுனு நினைச்சிருக்கியே எவ்ளோ கெட்ட புத்தி உனக்கு” என அவள் கன்னத்தில் இடித்தார்.


“இல்ல அத்தை நான் வேணும்னு பண்ணல” என்றாள் கண்ணீருடன்.


“பேசாதடீ! நீ பேசாதே நீயெல்லாம் வாய திறக்கவே கூடாது. என் மூஞ்ச பார்த்து நேருக்கு நேர் பேச உனக்கு என்ன தகுதி இருக்கு” என்றார்.


அவர் அப்படி சொன்னதும் பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள்.


“ஊமை ஊரை கெடுக்கும் சும்மாவா சொன்னாங்க. நீ ஊமையா இருந்து என் குடும்பத்தை கெடுத்த. உன்னால தான் உன்னால மட்டும்தான் என் பொண்ணு பிரசவத்துக்கு கூட இங்க வர முடியாம போச்சு. விடமாட்டேன் டீ நீ இன்னைக்கு பண்ணதுக்கு உன்னை பழிவாங்காம விடமாட்டேன்” என்றார் வெறுப்பாக.


“நான் சொல்றத கொஞ்சம்” என ஆரம்பித்தவள் அவர் பார்த்த பார்வையில் வாயை மூடினாள்.


“உன்னை வாய திறக்க கூடாதுனு சொன்னேன். யாரு உன் பக்கத்துல இருக்க தைரியத்துல இந்த ஆட்டம் போடுறியோ அவனை உன்கிட்ட இருந்து பிரிச்சு உன்னை அனாதையா ஆக்கி அவனை வச்சே உன்னை வெளிய தள்ளி நடுத் தெருவுல நிறுத்தல என் பேரு பார்வதி இல்லை”


“அனாதை நாய்க்கு ராஜ வாழ்க்கை கேட்குது ஆள் மயக்கி” என்றதும் மதிக்கு தாங்க முடியவில்லை.


“அத்தை போதும் இதுவரை நீங்க பேசுனதெல்லாம் பொறுத்துக்கிட்டேன் பரவாயில்லை என்னை என்ன வேணா சொல்லுங்க ஆனா அனாதைனு மட்டும் சொல்லாதீங்க” என்றாள்.


“ரோஷம் வேற வருதோ உனக்கு? பணக்கார புருஷன் கிடைச்சா ரோஷம் எல்லாம் வரத்தான் செய்யும். வலிக்குதா உனக்கு நல்ல வலிக்கட்டும். அனாதைனு தாண்டி உன்னை சொல்லுவேன். அனாதைய அனாதைனு சொல்லாம வேற எப்படி சொல்றது? அனாதை நாய் தாண்டி நீ கேட்க நாதியத்த அனாதைடீ நீ” என்றார் பார்வதி வெறுப்புடன்.


“போதும் நிறுத்துங்க இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட நீங்க பேசக்கூடாது. அவரோட அம்மான்ற ஒரே காரணத்துக்காக பொறுமையா போறேன். சும்மா சும்மா அனாதைனு சொல்றீங்களே உங்க பையன் இருக்கும்போது நான் எப்படி நான் அநாதை ஆவேன். நீங்க இப்படி பேசுறது அவருக்கு தெரிஞ்சா உங்களுக்கு தான் உங்க பையன் இல்லாம தனி மரமா நிற்க போறீங்க” என்றாள் கோபமாக.


“ஏய்! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை தனிமரமா நிற்கவைப்பேன்னு சொல்லுவ” என அவள் கன்னத்தில் மாறி மாறி அறைய அடி வாங்கியவள் படுக்கையில் விழுந்தாள். படுக்கையில் விழுந்தவள் கையை ஊனிவிட்டாள். கையை ஊன்றியதில் வலி தாங்காமல் கதறி அழுதாள்.


அப்பொழுதுதான் வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்த சூர்யா மனைவியின் அலறல் சத்தத்தில் தன் அறைக்கு ஓடினான்.


அவன் ஓடிய வேகத்தில் பவானியும் விரைந்தார்.


மனைவியின் கை அவள் உடலுக்கு கீழ் இருக்க எழுந்திருக்க முடியாமல் வலியில் அலறிக் கொண்டிருந்தாள்.


முதலில் அவளிடம் விரைந்து அவளை தூக்கி சாய்த்து அமர வைத்தான்.


பவானி அவளுக்கு சாய்வாக தலைகாணி எடுத்து வைத்தார்.


“அக்கா உங்களை நான் அவ பக்கத்துல இருந்து பார்த்துக்க சொன்னேன்ல ஏன் அவளை தனியா விட்டுட்டு போனீங்க? உங்களால அவளை பார்த்துக்க முடியாதுன்னு சொல்லிருந்தா நான் எங்கேயும் போகாம அவ கூட இருந்திருப்பேனே” என்றான் கோபமாக.


“இல்ல தம்பி நான் மதிமா பக்கத்துல தான் இருந்தேன். அம்மா தான் ஜூஸ் வேணும்னு கேட்டாங்க. நான் இல்ல வேண்டாம் தம்பி இங்கே மதி கூட இருக்க சொன்னாங்கன்னு சொன்னேன். அம்மா தான் என்னை கட்டாயப்படுத்திய அனுப்பினாங்க” என்றார் பாவமாக.


“நீங்க போய் வேலையை பாருங்க நான் இவளை பார்த்துக்கிறேன்” என அவரை அனுப்பினான்.


அங்கிருந்து பார்வதியும் வெளியேறப் போக “அம்மா ஒரு நிமிஷம் நில்லுங்க. மதி உங்க கண்ணு முன்னாடி வலில கத்துறா பக்கத்துல நின்னு பார்த்துட்டு இருக்கீங்க” என்றான் கோபமாக.


“சூர்யா நான்” என ஆரம்பித்தவர் அவன் பார்த்த பார்வையில் வாயை அடக்கினார்.


“சும்மா ஏதாவது பொய் சொல்லாதீங்க. அவ சத்தம் கேட்டு கீழே இருந்து நான் ஓடி வந்தேன். பவானி அக்காக்கு கூட சத்தம் கேட்டு ஓடி வந்துருக்காங்க. பக்கத்துல நிக்கிற நீங்க பதறாம சிலை மாதிரி நிக்கிறீங்க. முதல்ல இந்த நேரத்துல நீங்க எதுக்கு எங்க ரூமுக்கு வந்தீங்க? மதி எப்படி விழுந்து கிடந்தா? ஒழுங்கா உண்மைய சொல்லுங்க” என்றான் கோபமாக.


அவர் பதிலேதும் பேசாமல் திருதிருவென முழித்தார்.


அவரின் திருட்டு முழியில் மேலும் கோபமானான் சூர்யா.


“சூர்யா தேவையில்லாம ஏன் இவ்ளோ கோபம்? எனக்கு அடிபட்டுருக்குனு அத்தை பார்க்க வந்தாங்க. அத்தையை பார்த்ததும் எழுந்திருக்க முயற்சி பண்ணேன் ஆனா சரியா எழுந்திருக்க முடியாமல் தடுமாறிட்டேன்” என கணவனிடம் மாமியாரை காப்பாற்ற முயன்றாள்.


“சரி நீ தடுமாறி விழுந்த நம்புறேன். ஆனா அதை பார்த்தும் ஏன் இவங்க உனக்கு உதவி பண்ணாம கல்லு மாதிரி பார்த்துட்டு இருந்தாங்க. இன்னும் ஏதாவது காரணம் சொல்லாதே மதி உன் மண்ணாங்கட்டி காரணம் எனக்கு தேவையில்லை. நீங்க முதல்ல இங்கிருந்து வெளியே போங்க. அவ்வளவு கோபம் வருது எனக்கு. இன்னும் என்னை தப்பா எதுவும் பேச வைக்காதீங்க” என்றான் கோபமாக.


மகன் பேசிய பேச்சில் விக்கித்துப் போய் நின்றார் பார்வதி.


“இனி எங்க ரூம்க்கு நீங்க வரக்கூடாது. முதல்ல வெளியே போங்க” என அவரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக துரத்தினான்.


மனைவி வலியில் துடிக்க இரக்கமில்லாமல் தன் தாய் பார்த்துக் கொண்டிருந்ததை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அவனுக்கு ஆத்திரம் சற்றும் குறையவில்லை. தாய் வெளியேறியதும் மனைவியை முறைத்தான்.


“இப்ப எதுக்கு என்னை முறைக்கிறீங்க?” என்றாள் பாவமாக.


“அவுங்க வந்தா நீ உடனே எழுந்திருக்கணுமா? அடிபட்ட கை காலோட உனக்கு மாமியாருக்கு மரியாதை கொடுக்கிறது ரொம்ப முக்கியமோ?” என்றான் கோபமாக.


“அம்மா உன்னை ஏதாவது கஷ்டப்படுத்துறாங்களா? அப்படி ஏதாவதுனா உண்மைய சொல்லுடீ” என்றான் அவள் கையை பற்றி கொண்டு.கணவனிடம் உண்மையை சொல்வாளா வெண்மதி?


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 8


“அம்மா உன்னை எதுவும் கஷ்டப்படுத்தறாங்களா? அப்படி ஏதாவதுனா உண்மைய சொல்லுடீ” என அவள் கையை பற்றிக் கொண்டு கேட்டான் சூர்யா.


“ஐயோ! அதெல்லாம் ஒன்னுமில்லை அத்தை என்னை என்ன சொல்ல போறாங்க” என்றாள் பதறியபடி.


அவள் பதறியதில் ஏதோ உள்ளது என அவனுக்கு தோன்றியது.


“நீ சொல்ற நான் நம்புறேன்” என்றான் சூர்யா.


“சரிமா நீ படுத்து ரெஸ்ட் எடு” என அவளை தூங்க சொன்னான்.


“சூர்யா நீங்க என் பக்கத்துல இருங்களேன் தனியா இருக்க ஏதோ போல இருக்கு” என்றாள் வருத்தமாக.


“நான் எங்கயும் போகல இங்கதான் உன் பக்கத்துல இருக்கேன்” என அவள் கையை பற்றிக்கொண்டு தலையை தடவி கொடுத்து தூங்க வைத்தான்.


“அம்மா ஏன் இவகிட்ட இப்படி நடந்துக்கிறாங்க அவங்களுக்கு என்னதான் பிரச்சினையோ?” என யோசித்தவன் தூங்குபவள் நெற்றியில் முத்தமிட்டான்.


பல வருடங்கள் கடந்து அவளுக்கு ஓய்வு கிடைத்தது.


நேரத்துக்கு அவளுக்கு தேவையான மருந்து மாத்திரை கொடுப்பது உணவை ஊட்டுவது பாத்ரூம் அழைத்துச் செல்வது என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தான் சூர்யா.


அவள் காலில் அடிபட்ட நேரத்தில் மல்லிகாவுக்கு பிரசவ வலி வந்து சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.


நல்லவேளை வெண்மதி ஓய்வில் இருந்ததால் அவள் மல்லிகாவின் குழந்தையை பார்க்க போகக்கூடாது என பார்வதி சர்ச்சையை கிளப்பவில்லை.


வீட்டில் உள்ள அனைவரும் குழந்தையை பார்த்து விட்டு வந்தனர்.


சூர்யாவுக்கு வெண்மதியை உடனிருந்து கவனிக்க வேண்டும் அதனால் அவன் தங்கையை காண தாமதமாக சென்றான்.


அதில் மல்லிகாவுக்கு மன வருத்தம்.


“என்ன அண்ணா தங்கச்சிக்கு குழந்தை பிறந்திருக்கு மருமகனை பார்க்க ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க. என்ன உங்க ஆசை பொண்டாட்டி சொன்னாளா தங்கச்சிய பார்க்க போககூடாதுனு. உங்ககிட்ட போய் கேட்கிறேனே நீங்க தான் என் வளைகாப்புக்கே வரலையே அந்த அளவுக்கு உங்களை மயக்கி வச்சிருக்கா” என்றாள் மல்லிகா உதட்டை சுழித்து.


“ஏய்! ஒழுங்கு மரியாதையா பார்த்து பேசு. அவ உனக்கு அண்ணி. உன் அண்ணன் பொண்டாட்டிய அவ இவனு மரியாதை இல்லாம பேசுவியா? நான் உனக்கு அண்ணன் கொஞ்சம் கூட வெட்கமில்லாம மயக்கி வச்சிருக்கானு நாக்கு கூசாம பேசுற. பிள்ளை பெத்தவனு பார்க்கிறேன் இதே மத்த நேரமா இருந்தா நீ பேசின பேச்சுக்கு செவிட்டுலயே அரைஞ்சிருப்பேன்” என்றான் கோபமாக.


“அண்ணா அவளுக்காக என்கிட்ட கோபப்படுறீங்க” என்றாள் கோபமாக.


“ஏய்! உன் காது என்ன டம்மாரம்மா? மரியாதை கொடுத்து பேசுனு எத்தனை தடவை சொல்றது? உன்னை போய் பார்க்க வந்தேன் பாரு என்னை சொல்லணும்” என அவன் வாங்கி வந்த பொருட்களை அங்கிருந்த மேசையில் வைத்து விட்டு கிளம்பினான்.


“இவளுக்கு இருக்கிறது நாக்கா இல்ல தேள் கொடுக்கா? சொன்னா புரிஞ்சுக்காத ஜென்மம். என்கிட்டயே இப்படி பேசுறா. இவளையெல்லாம் அடிச்சு வளர்த்திருக்கணும்” என புலம்பினான்.


சூர்யா அங்கு நடந்ததை பற்றி மனைவியிடம் எதுவும் சொல்லவில்லை. ஏற்கனவே முடியாமல் இருப்பவளை அதுவும் இதுவும் சொல்லி வருத்த அவன் விரும்பவில்லை.


மேலும் நாட்கள் செல்ல மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கட்டு பிரித்து அழைத்து வந்தான்.


அவள் கால்களுக்கு தடவ மருந்து எடுத்து வந்தான்.


“சூர்யா அதை என்கிட்ட கொடுங்க நான் போட்டுக்கிறேன். நீங்க உங்க வேலையை பாருங்க” என்றாள்.


“ஷ்ஷ் மூச் வாய திறக்க கூடாது. எனக்கு உடம்பு சரியில்லன்னா என்னை எப்படி பார்த்துக்கிற. என்னை ஒழுங்கா எப்படி பார்த்து பார்த்து கவனிக்கிற அதே மாதிரி நான் உன்னை பார்த்துக்க வேண்டாமா?” என அவள் மறுப்பை பொருட்படுத்தாமல் அவள் கால்களை எடுத்து தன் மடியில் வைத்து மருந்து தேய்த்து மசாஜ் செய்தான்.


மருத்துவர்கள் அறிவுறுத்திய பிசியோதெரபி சிகிச்சைகளை செய்ய துணை இருந்தான். வலியில் அவள் துவண்டு போகாமல் பார்த்துக் கொண்டான்.


“மெது மெதுவாக அவள் கை பற்றி நடக்க வைத்தான். வலியில் அவள் சிணுங்கி அழுக அவளை ஊக்கப்படுத்தி நடக்க வைத்தான்.


அவளை எந்த வேலையும் செய்யவிடாமல் பார்த்து பார்த்து கவனித்தான்.


சூர்யா அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்ததால் பார்வதியால் வெண்மதியை நோகடிக்க முடியவில்லை.


மகன் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்குவதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.


அமர்ந்த இடத்தில் அவளுக்கு அனைத்தும் கிடைப்பதைக் கண்டு பொறாமையில் வெந்தாள் கவிதா.

(உனக்கும் உட்கார்ந்த இடத்துல எல்லாம் வேணும்னா நீயும் படிக்கட்டுல் உருண்டு அங்கபிரதட்சணம் பண்ணு)

இதெல்லாம் திருந்தாத ஜென்மம்.


மெல்ல மெல்ல வெண்மதியின் உடல்நிலை தேறி வந்தது. தானாக நடக்கும் அளவுக்கு முன்னேறி வந்தாள்.


“சூர்யா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என அன்றைய இரவில் கணவனின் கையணைப்பில் இருந்தபடி பேச்சை ஆரம்பித்தாள்.


“என்ன மேடம் புதுசா பர்மிஷன்லாம் கேக்குறீங்க? என்னனு சொல்லு என செல்லமாக அவள் மூக்கை பிடித்து ஆட்டினான் சூர்யா.


“ஸ்ஸ்” என போலியாக சிணுங்கினாள்.


“சூர்யா நம்ம ஹாஸ்பிடல் போகலாமா?” என்றாள் தயக்கமாக.


“ஹாஸ்பிடல் போகணுமா என்னாச்சு? உடம்பு முடியலையா? என்றான் அவள் முகத்தை கையில் ஏந்தியபடி கவலையுடன்.


“சூர்யா நான் வந்து” என தயங்கினாள்.


“என்ன நான் வந்து நீ வந்துனு பேசி பழகுற அதான் வந்துட்டியே என்னனு சொல்லுமா” என்றான்.


“சூர்யா நமக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷமாச்சு ஆனா நமக்கு குழந்தை இல்லை. எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்ம ரொம்ப சந்தோஷமா தான் இருக்கோம் ஆனா என்னனு தெரியல எனக்கு குழந்தை நிக்கல. நம்ம ஹாஸ்பிடல் போய் என்னனு பார்க்கலாமே” என தயக்கமாக கேட்டபடி கணவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.


திருமணமாகி இத்தனை வருடங்களில் பார்த்திராத கணவனின் கோப முகத்தை பார்த்து அரண்டுவிட்டாள் வெண்மதி.


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 9


“நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கோம் ஆனா எனக்கு குழந்தை நிக்கல. நம்ம ஹாஸ்பிடல் போய் என்னனு பார்க்கலாமே” என தயக்கமாக கேட்டபடி கணவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.


திருமணமாகி இத்தனை வருடங்களில் பார்த்திராத கணவனின் கோபம் முகத்தை பார்த்து அரண்டுவிட்டாள் வெண்மதி.


“முடியாது முடியவே முடியாது” என அவள் கோரிக்கையை தயவு தாட்சண்யமின்றி மறுத்தான்.


கணவன் மறுப்பான் என கொஞ்சம் கூட எதிர்பார்க்காதவள் அவன் கூறியதை கேட்டு நொந்து போனாள்.


“சூர்யா ப்ளீஸ் உங்களை கெஞ்சி கேட்கிறேன் எத்தனையோ தடவை என்கிட்ட உனக்கு அது வேணுமா இது வேணுமானு கேட்டிருப்பீங்க. எப்ப உனக்கு எது வேணும்னாலும் என்கிட்ட கேளு உனக்கு செய்றேன்னு சொன்னீங்க தானே? எனக்கு குழந்தை வேணும் சூர்யா ப்ளீஸ் நம்ம டாக்டர் கிட்ட போகலாம்” என கெஞ்ச ஆரம்பித்தாள்.


“மதி என்னை நிமிர்ந்து பாரு. நம்ம சந்தோஷமா இருக்கோம். நம்ம தாம்பத்திய வாழ்க்கைல எந்த பிரச்சனையும் இல்லை. கண்டிப்பா நமக்கு இயற்கையா குழந்தை பிறக்கும் அதுவரை பொறுமையாக இரு” என அவளை சமாதானப்படுத்த முயற்சித்தான்.


“என்ன பேசுறீங்க சூர்யா பொறுமையா இருக்கணுமா? இன்னும் எத்தனை வருஷத்துக்கு பொறுமையா காத்திருக்கணும். என் வேதனை உங்களுக்கு கொஞ்சம் கூட புரியலையா?” என்றாள் பரிதவிப்புடன்.


“நமக்குன்னு குழந்தை பிறந்தால் தானா சந்துருண்ணா பிள்ளை நமக்கு யாரோவா அதுவும் நம்ம பிள்ளை மாதிரி தானே” என அழும் குழந்தைக்கு சாக்லேட் தந்து சமாதானப்படுத்துவது போல சமாதானப்படுத்த முயன்றான்.


“இல்ல சூர்யா அது உங்க அண்ணன் பிள்ளை மட்டும் தான் நம்ம புள்ள மாதிரினு நம்ம சொல்லிக்கலாமே தவிர அது நம்ம பிள்ளை ஆகிடாது. எனக்கே எனக்குனு எனக்கு மட்டுமே சொந்தமான நம்ம குழந்தை வேணும்” என அவன் கையை பிடித்து வேண்டினாள்.


மனைவியின் மனதில் இந்த அளவுக்கு குழந்தை பற்றிய ஏக்கம் இருக்கும் என யோசிக்கவில்லை சூர்யா.


“எனக்கு அம்மா அப்பா இருக்காங்களா இல்லையா நான் முறையா பிறந்த குழந்தையா இல்ல முறை தவறி பிறந்த குழந்தையா? இப்படி என்னை பத்தி எதுவுமே எனக்கு தெரியாது. ஆசிரமத்துக்கு வர்ற யாராவது தர்ற பழைய துணிய போட்டுகிட்டு அவுங்க தர்ற சாப்பாட்ட சாப்பிட்டு அவங்க காசுல படிச்சு இரவலா கிடைக்கிற பொருளை வைத்து இரவல் வாழ்க்கை வாழ்ந்தேன் அதை நினைச்சு என்னைக்குமே நான் வருத்தப்பட்டது இல்லை”


“ வாழ்க்கைல எல்லாத்தையுமே இரவலா அனுபவிச்ச எனக்கு ஒரே ஒரு ரத்த உறவு கூட இல்லையே எனக்கே எனக்குனு ஒரு குழந்தை வேணும்னு ஆசைப்படுறேன்”


“நமக்கு சொந்தமில்லாத உங்க அண்ணன் பிள்ளைய நம்ம பிள்ளையா நினைச்சுக்கலாம்னு சொல்றீங்களே அந்த குழந்தைகிட்ட நம்ம உரிமை எடுத்துக்க முடியுமா? என்ன இருந்தாலும் அது அவுங்க குழந்தை. நமக்கு ஒரு குழந்தை வேணும். அது கூட எனக்கு சொந்தமில்லாத இரவல் குழந்தையா தான் இருக்குமா?” என அவன் காலை பிடித்துக் கொண்டு கதற ஆரம்பித்தாள்.


மனைவியின் கதறலை கண்டு சூர்யாவின் கண்களும் கலங்கியது. மனைவியை தான் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என வருந்தினான்.


தான் உடைந்து போனால் மனைவியை தேற்ற முடியாது என தன்னை தேற்றிக்கொள்ள முயன்றான்.


“இங்க பாரு மதி அழக்கூடாது. நான் சொன்னா கேட்ப தானே. நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண விஷயமில்லை நமக்குள்ள இது ஒரு பெரிய பிளவை உண்டு பண்ணிடும் சொன்னா கேளுமா” என அவளை சமாதானப்படுத்த முயன்றான்.


இவ்வளவு சொல்லியும் கணவன் தன் பேச்சை கேட்கவில்லை என கோபம் பெறுக அவன் கையை தட்டி விட்டாள்.


“ஓஹோ என் பேச்சைக் கேட்க மாட்டீங்க. நீங்க கூட என்னை புரிஞ்சுக்க மாட்டீங்களா? நீங்க என்ன சொன்னாலும் சரி எனக்கு குழந்தை வேணும் நம்ம ஹாஸ்பிடல் போக தான் போறோம் நான் ட்ரீட்மென்ட் எடுத்துக்க போறேன்” என்றாள் சற்றே குரல் உயர்த்தி.


“வெண்மதி என் பொறுமைக்கும் அளவு இருக்கு என்னை கோபப்படுத்தி பார்க்காதே. அது உனக்கு நல்லதில்லை” என அவளை எச்சரித்தான் சூர்யா.


“என்ன மிரட்டுறீங்களா? முடியாது சூர்யா நீங்க என்ன சொன்னாலும் சரி இந்த விஷயத்துல நான் உங்க பேச்சை கேட்கிறதா இல்லை. நான் டாக்டரை பார்க்க தான் போறேன். எனக்கு குழந்தை வேணும் வேணும் வேணும் எனக் கத்தினாள் வெண்மதி.


“ஏய்! கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்றேன் சொல்ல சொல்ல கேட்காம நீ சொன்னதையே சொல்லிட்டு இருக்க. ஒழுங்கா சொன்ன பேச்சைக் கேளு. என்னை கோபப்படுத்தாம பேசாம போய் படு” என அந்த பேச்சை முடிக்க முற்பட்டான்.


அது அவளை மேலும் கோபப்படுத்தியது.


“சாரி சூர்யா நீங்க என்னை பத்தி என்ன நினைச்சாலும் பரவால்ல இந்த விஷயத்துல உங்க பேச்சை நான் கேட்க மாட்டேன். நான் ஹாஸ்பிடல் போக தான் போறேன். என் உயிரே போனாலும் சரி நான் ட்ரீட்மென்ட் எடுத்துக்க தான் போறேன்” என்றவளின் பேச்சில் கோபத்தின் உச்சிக்கே சென்றான்.


“ஏய்” என அவளை அறைய கை ஓங்கினான்.


அவன் கை ஓங்கியதும் அவள் பார்வையில் தெரிந்த மிரட்சியில் உடைந்து போனான் சூர்யா.


“ஏன்டீ சொன்னா புரிஞ்சுக்க மாட்ற? நீ நினைக்கிற விஷயம் அவ்வளவு சாதாரணமில்லை அதுல எவ்வளவு ரிஸ்க் இருக்குனு உனக்கு புரியல. வேண்டாம் கண்ணம்மா நான் எது சொன்னாலும் நம்ம நன்மைக்காக தான் சொல்லுவேன்” என அவளிடம் பொறுமையாக எடுத்து சொன்னான்.


“எனக்காக இதுவரைக்கும் நான் உங்ககிட்ட எதுவுமே கேட்டதில்லை. முதல் தடவையா கேட்கிறேன் எனக்காக இதை மட்டும் செய்யுங்க” என வேண்டினாள்.


“உனக்காக இந்த ஒரு விஷயத்தை தவிர எது வேணும்னாலும் நான் செய்ய தயாரா இருக்கேன். ஆனா இது மட்டும் என்னால முடியாது. குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும். டிரீட்மென்ட் எடுத்து குழந்தை பெத்துக்கறது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றான் சூர்யா ஆணித்தரமாக.


“இது தான் உங்க முடிவா? அப்ப என்னோட முடிவையும் கேளுங்க. இதுக்கு நீங்க ஒத்துக்கிற வரைக்கும் எத்தனை நாள் ஆனாலும் சரி நான் சாப்பிட மாட்டேன்” என கணவனை கண்டு கொள்ளாமல் அவனுக்கு முதுகை காட்டி திரும்பி படுத்தாள்.


முதல்முறையாக கணவன் மனைவி இருவரின் உறவில் பெரும் விரிசல் விழுந்தது.


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 10“இதுக்கு நீங்க ஒத்துக்கிற வரை எத்தனை நாள் ஆனாலும் நான் சாப்பிட மாட்டேன்” என கணவனை கண்டு கொள்ளாமல் திரும்பி படுத்தாள்.


முதல் முறையாக இருவருக்கும் இடையே பெரும் விரிசல் வந்துவிடுமோ என பயந்தான். இரவெல்லாம் தூக்கமின்றி தவித்தான் சூர்யா.


இதுவரை மனைவி குழந்தைக்கான ஏக்கத்தை அனிடம் பகிர்ந்ததில்லை. அவளை சமாதானப்படுத்தும் வழி அறியாமல் தவித்தான்.


மனைவியின் ஏக்கம் புரிந்தாலும் செய்வதறியாது உடைந்து போனான்.


மறுநாள் காபி கொண்டு வந்து கொடுத்த மனைவியின் ஜீவனில்லாத பார்வை அவனை வதைத்தது.


தயவு செஞ்சு மூஞ்சை இப்படி வச்சுக்காத என அவன் மனம் குமுறியது.


மனைவியின் சோக முகத்தை பார்த்தவனால் பொறுக்க முடியவில்லை காபியை குடிக்காமல் அப்படியே வைத்து விட்டான்.


ஆடை படிந்த காபி கோப்பையை கண்டு விரக்தியுடன் அதை எடுத்துச் சென்றாள்.


அழுது அழுது வீங்கி போயிருந்தவளின் முகத்தை கண்டு பார்வதிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.


மருமகளின் வேதனையை கண்டு மகிழ்ச்சியடைந்தது அந்த அற்ப ஜென்மம்.


மனைவி அன்ன ஆகாரமின்றி தவிப்பதை கண்டு அவனால் உண்ண முடியவில்லை அவனும் உணவை தவிர்த்தான்.


“சாப்பிட வாங்க” என எங்கயோ பார்த்து அவனை அழைத்தாள்.


“எனக்கு வேண்டாம் நீ எப்ப சாப்பிடுறியா நானும் அப்ப தான் சாப்பிடுவேன்” என்றவன் எதுவும் சாப்பிடாமல் கிளம்பினான்.


இரண்டு நாளாக இருவருமே எதுவும் சாப்பிடவில்லை. சாப்பிடாமல் அனைத்து வேலையும் செய்து கொண்டிருந்தாள்.


இரண்டு நாள் கழித்து மூன்றாவது நாள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அவள் உடல் ஒத்துழைக்கவில்லை.


கண்ணாடியை பார்த்து தலைவாரிக் கொண்டிருந்தவன் அருகில் கேட்ட பொத்தென்ற சத்தத்தில் திரும்பியவன் மயங்கி விழுந்து கிடந்த மனைவியை கண்டு பதறியடித்து ஓடினான் சூர்யா.


“மதி மதி கண்ணை திறந்து பாருமா” என அவள் கன்னத்தில் தட்டினான்.


அவளிடம் எந்த அசைவும் இல்லாததை கண்டு பயந்துவிட்டான் சூர்யா.


“ஏன்டீ உனக்கு இவ்ளோ பிடிவாதம்” என அவள் முகத்தில் தண்ணீரை தெளித்தான்.


அவளிடம் அசைவு தெரிந்ததும் தான் அவனுக்கு நிம்மதி தோன்றியது.


மனைவியின் மயக்கம் தெளிந்ததும் அவன் கொண்டு வந்த உணவை அவள் வாயருகே கொண்டு சென்றான்.

மாட்டேன் என மறுத்து தலையசைத்தாள்.


“நானும் ரெண்டு நாளா சாப்பிடல. நீ சாப்பிடற வரை கண்டிப்பா நானும் சாப்பிடமாட்டேன் இது உன் மேல சத்தியம்” என அவள் தலையில் கை வைத்து சத்தியம் செய்தான் சூர்யா.


மறுபடியும் தோற்றுவிட்டோம் என்ற வேதனையுடன் வேறு வழியின்றி கணவனுக்காக வாயை திறந்து உணவை வாங்கினாள்.


அவள் உணவை வாங்கியதும் முகத்தில் புன்சிரிப்புடன் தானும் உண்டான்.


“மதி எதுவும் யோசிக்காதே உன் நல்ல மனசுக்கு சீக்கிரம் நல்லது நடக்கும்” என அவளை தேற்ற முயற்சித்தான்.


அவன் முயற்சியெல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது. அவள் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பை கொண்டு வர அவனால் முடியவில்லை.


நாளுக்கு நாள் அவள் மனநிலை மோசமானது. எப்பொழுதும் ஏதாவது சிந்தித்துக் கொண்டு தூங்காமல் சோக சித்திரமாக இருப்பவளை கண்டு அவனுக்கு வேதனையாக இருந்தது.


“மதிவா நம்ம வெளிய எங்கயாவது போயிட்டு வரலாம்” என அவளை அழைத்தான் சூர்யா.


“நான் வரலை” என அங்கிருந்து அகன்றாள் வெண்மதி.


என்னதான் இருவரும் இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் இருவரும் தங்கள் இயல்பை தொலைத்து வேதனையில் துடித்தனர்.


அவன் எங்கு அழைத்தாலும் அவள் வருவதில்லை. கேட்ட கேள்விக்கு ஏனோ தானோ என அவள் பேருக்கு பதிலளிப்பது அவனை எரிச்சல் படுத்தியது.


“ஏய்! என்ன தான்டீ உனக்கு பிரச்சனை? குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும்னு சொல்லிட்டேன். அப்புறம் ஏன்டீ மூஞ்சை தூக்கி வச்சிருக்க? வரவர உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கலை ஏன்டா வீட்டுக்கு வர்றோம்னு எரிச்சலா வருது” என சுவற்றில் ஓங்கி கையை குத்தினான்.


அவன் சொன்ன வார்த்தையில் நெருப்பு பட்டது போல துடித்துப் போனாள் வெண்மதி.


அவள் முகத்தைப் பார்த்ததும் கோபத்தில் என்ன வார்த்தை பேசிவிட்டோம் என நொந்து போனான் சூர்யா.


“சாரிமா ப்ளீஸ் மன்னிச்சுடு. உன்னை இப்படி பார்க்க முடியலை அதான் கோபத்துல ஏதோ பேசிட்டேன். சாரிடா கண்ணம்மா இந்த பிரச்சனைக்கு என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன். நீ மூஞ்சை இப்படி வச்சுக்காதே பார்க்க சகிக்கலை” என்றான்.


“என் மூஞ்சே அப்படிதான். அப்படி ஒன்னும் கஷ்டப்பட்டு என் மூஞ்சை பார்க்க வேண்டாம்” என மூக்கை உறிஞ்சினாள்.


“அடியேய் அழகு ராட்சசி சாரிடி கோச்சுக்காதே. என் தங்கம்ல” என சமாதானத்துக்கு அடி போட்டான் சூர்யா.


கணவனின் லூட்டியில் அவளும் சமாதானத்துக்கு உடன்பட்டு அவன் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டாள்.


அவன் தானும் அவள் வேலையை கையில் எடுத்துக் கொண்டான். அவளை முத்தம் மழையில் குளிப்பாட்டினான்.


பிரச்சனையை ஒதுக்கி வைத்து ஒருவருக்காக ஒருவர் தங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டனர்.


அன்று காலை வேளையில் டைனிங் டேபிளில் வெண்மதி உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.


பார்வதியின் அருகே கவிதா அமர்ந்திருக்க அவளருகே சந்துரு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.


சாப்பிட வந்த சூர்யாவுக்கு போன் வர அதை எடுத்து பேசிக் கொண்டிருந்தான்.


பரிமாறிக் கொண்டிருந்த வெண்மதி திடீரென அவசரமாக எங்கோ ஓடினாள்.


எதற்கு இவள் இவ்வளவு அவசரமாக ஓடுகிறாள் என அனைவரும் திரும்பி பார்த்தனர்.


அங்கு விளையாடிக் கொண்டிருந்த வைபவ் கைக்கு உடைந்த பொம்மை காரின் குட்டி டயர் கிடைக்க அதை வாயில் போட்டுவிட்டான்.


அதை கண்டு பதறிய மதி அவனிடம் விரைந்து குழந்தையின் வாயில் கைவிட்டு அந்த குட்டி டயரை வெளியே எடுத்தாள்.


அவ்வளவுதான் ஆங்காரம் வந்தவளாக சாப்பிட்டுக் கொண்டிருந்த எச்சில் கையால் மதியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் கவிதா.


கவிதாவின் செய்கையில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.


“ஏய்! அனாதை நாயே உன்னை என் பையனை தொடக்கூடாதுனு எத்தனை தடவை சொல்றது” என மீண்டும் அவள் மறுகன்னத்தில் அடித்தாள் கவிதா.


அங்கு நடப்பதை கண்டு கண்கள் சிவக்க கோபத்துடன் சூர்யா கவிதாவை அறைய கை ஓங்கினான்.


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 11


“ஏய்! அனாதை நாயே உன்னை என் பையனை தொடாதேனு எத்தனை தடவை சொல்றது” என அவள் கன்னத்தில் எச்சில் கையால் அறைந்தாள் கவிதா.

அவ்வளவுதான் கண்கள் சிவக்க கோபத்துடன் சூர்யா கவிதாவை அறைய கை ஓங்கினான்.

“சூர்யா என்னடா பண்ற அவ உன் அண்ணி அவளை அடிக்க கை ஓங்குற” என அவன் கையை பிடித்து தடுத்தான் சந்துரு.

“விடுண்ணா என் பொண்டாட்டிய கைநீட்டி அடிக்கறதை வேடிக்கை பார்த்துட்டுருக்க சொல்றியா” என அவனிடம் திமிறினான் சூர்யா.

“சூர்யா அமைதியா இரு” என அவனை அடக்கினான் சந்துரு.

“உங்க தம்பி என்னை அடிக்க கை ஓங்குறான் நீங்க எல்லாரும் கண்டுக்காம இருக்கிறீங்க” என எகிறினாள் கவிதா.

“ஏய்! நீயெல்லாம் மனுஷியாடி” என அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான் சந்துரு.

“டேய் விடுடா என்ன பண்ற” என அவனை தடுத்தார் பார்வதி.

“விடுங்கம்மா” என அவரை ஒதுக்கி தள்ளினான் “மனுஷியாடீ நீ? உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் தம்பி பொண்டாட்டிய கைநீட்டி அடிப்ப. அவ வைபவ்வ தொடக்கூடாதா பைத்தியமாடி நீ. ஏன்டீ இப்படி சொன்ன ஒழுங்கு மரியாதையா வாயைத் திறந்து பேசித்தொலை” என கவிதாவை உலுக்கினான் சந்துரு.

“விடுங்க என்னை. ஏன் இப்படி மிருகம் மாதிரி நடந்துக்கிறீங்க? அவளுக்கு என்ன தகுதி இருக்கு. அவளே ஒரு அனாதை ஒன்னுமில்லாதவ. அவளே பிள்ளை இல்லாதவ அவ கையால என் பிள்ளையை தொடலாமா அதான் என் பிள்ளைய தொடக்கூடாதுன்னு சொன்னேன்” என்றதும் மீண்டும் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் சந்துரு.

“உன் பிள்ளைய ஒழுங்கா பார்த்துக்க வக்கில்லாம தின்னுட்டு இருந்த. அவ குழந்தை வாயில எதையோ போடுறத பார்த்து பதறி ஓடி வந்து குழந்தை அதை முழுங்காம தடுக்குறா அவளை பாராட்டாம அடிக்கிற நீ. அறிவில்லை உனக்கு. ஏன்டீ பத்து மாசம் சுமந்து பெத்த உனக்கு துடிக்கலை ஆனா அவ பதறி துடிச்சு பிள்ளைய காப்பாத்தினா அவளுக்கு குழந்தை இல்ல என் பிள்ளைய தொடக்கூடாதுன்னு சொல்ற வெட்கமா இல்லை நீயெல்லாம் என்னடீ ஜென்மம்” என்றான் சந்துரு காரி உமிழாத குறையாக.

“என்னதான் இருந்தாலும் அவ என்னை மாதிரி வசதியானவ இல்லை அவளுக்கு யாருமில்லை அதான்” என்றாள் கவிதா.

“அவளுக்கு யாருமில்லை அனாதைனு சொல்லிட்டு திரியிற அவளுக்கு சூர்யா இருக்கான் அவ நம்ம குடும்பத்து பெண். இன்னொருவாட்டி ஒன்னுமில்லாதவனு சொன்ன உன்னை அடிச்சு கொன்னுடுவேன். நீ பணக்காரி வசதியான வீட்டு பொண்ணு அதுக்கு என்ன பண்ணனும் அவார்டு தரலாமா உனக்கு. யாருமே இல்லாம படிச்சு முன்னேறி பண்போட வாழற அவ மனுஷியா இல்லை எல்லாம் இருந்தும் மத்தவங்க மனசை காயப்படுத்துற நீ மனுஷியா?”

“பெத்தவங்க தன்னை அனாதையா விட்டுட்டு போனா கூட நல்ல மனுஷியா வாழ்ந்து அவங்களுக்கு பெருமை சேர்த்திருக்கா மதி ஆனா நீ உன்னை தாங்குற பெத்தவங்களுக்கும் புருஷனுக்கும் அவமானத்தை தான் தேடித் தந்திருக்க. என்னமோ உன் பிள்ளை உன் பிள்ளைனு சொல்ற அவன் எனக்கு பிள்ளை இல்லையா? இல்லை அவனை வேற யாருக்கும்…” என்றான் சந்துரு.

“என்னங்க ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதீங்க” என அழுதாள் கவிதா.

“இப்ப தெரியுதா வார்த்தையால காயப்படுத்தினா எவ்வளவு வலிக்கும்னு இனியாவது வாயை அடக்கு இல்லை நடக்கிறதே வேற” என்றான் சந்துரு கோபமாக.

“சாரிமா மன்னிச்சிடு” என்றான் மதியின் முகத்தை பார்த்து வருத்தமாக.

“மாமா அண்ணா” என்றனர் வெண்மதியும் சூர்யாவும் ஒரு சேர.

“இல்லம்மா அவ பண்ண தப்புக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்” என தன் மனைவியின் பேச்சால் தலைகுனிந்து நின்றான் சந்துரு.

“விடுங்க மாமா இனி இதை நம்ம பேச வேண்டாம்” என்றாள் மதி.

“இதுதான் முதலும் கடைசியும் மதிக்கு நான் இருக்கேன். இனி அவளை யாரும் மரியாதை இல்லாம நடத்துனா நடக்கிறதே வேற” என்றான் சூர்யா கோபமாக.

“அவ என்னோட சரி பாதி இனி அவளை பத்தி ஏதாவது பேசினா அண்ணினோ இல்ல அம்மானோ பார்க்கமாட்டேன் மரியாதை கெட்டுரும் ஜாக்கிரதை” என கோபமாக கத்திவிட்டு மதியின் கையை பிடித்து இழுத்துச் சென்றான்.

“இந்த வீட்ல என்னதான் நடக்குது? அம்மா உன்னை புரிஞ்சுக்கலனு மட்டும் தான் நான் நினைச்சிட்டுருந்தேன். இங்க என்னதான் நடக்குது அண்ணி உன்னை கை நீட்டி அடிக்கிறாங்க எத்தனை நாளா இதெல்லாம் நடக்குது. நான் என்னத்துக்கு புருஷன்னு இருக்கேன். அதனால தான் அன்னைக்கு வைபவ்வ நம்ம புள்ளை ஆகிட மாட்டான்னு சொன்னியா சொல்லு?” என்றான்.

“ஆமாம்” என தலையசைத்தாள்.

“ஏன்டீ என்கிட்ட எதுவுமே சொல்லலை” என அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.

“சூர்யா எல்லாரோட பேச்சும் எனக்கு வருத்தமா இருக்கு. இவங்க பேச பேச எனக்கு குழந்தை ஏக்கம் ஜாஸ்தி ஆகுது. இவங்கள மாதிரி ஆட்கள் நம்மை காயப்படுத்தலனா கூட இவ்வளவு ஏக்கம் வராதோ என்னவோ தெரியலை” என தனது வருத்தத்தை எடுத்துரைத்தாள் மதி.

“மதி நீ நினைக்கிற மாதிரி ட்ரீட்மெண்ட் எடுத்து மனசையும் உடம்பையும் வேதனைப்படுத்தி ரணப்படுத்தி தான் நம்ம குழந்தை பெத்துக்கணுமா? குழந்தை வேணும்னு நீ ஏங்குற மாதிரி பெத்தவங்க வேணும்னு ஏங்குற எத்தனையோ குழந்தைகள் இருக்காங்க. அவுங்களாம் தாய் பாசத்துக்காக ஏங்கி தவிக்கிறாங்க. நம்ம ஏன் அது மாதிரி ஒரு குழந்தையை வளர்க்கக்கூடாது” என்றான் சூர்யா.

“சூர்யா நீங்க நிஜமாதான் சொல்றீங்களா யாரோ ஒருத்தரோட குழந்தைய வளர்க்க உங்களுக்கு சம்மதமா?” என்றாள் தயக்கத்துடன்.

“நீயே இப்படி பேசுறது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. உன்னோட குழந்தை பருவத்துல உனக்குனு பெத்தவங்க இருந்தா நல்லா இருக்கும்னு எத்தனை முறை நினைச்சிருப்ப. அதே நிலமைல இருக்கக்கூடிய ஒரு குழந்தையோட நிலைய நம்ம நினைச்சா மாத்தலாம்” என்றான் சூர்யா.

அவன் சொன்னதை கேட்டதும் மதி சிலிர்த்துப் போனாள்.

“சரி சூர்யா அப்ப நாளைக்கே நம்ம ஏதாவது ஆசிரமத்துக்கு போய் குழந்தைய கூட்டிட்டு வரலாமா?” என்றாள் உற்சாகத்துடன்.

“மறுபடியும் நீ தப்பா தான் யோசிக்கிற. படத்துல வர்ற மாதிரி ஏதாவது ஆசிரமத்துக்கு போய் குழந்தையை தத்து எடுத்துக்க முடியாது. ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கிறோம்னா அதை முறையா சட்டப்படி செய்யனும்”

“முறையில்லாம பணம் கொடுத்து குழந்தைய தத்தெடுக்கிறது சட்டப்படி தப்பு. நம்ம ஒரு குழந்தைய எடுத்துட்டு வந்து வளர்த்துட்டு இரண்டு வருஷம் கழிச்சு பெத்தவ வந்து அவ குழந்தைனு கேட்டா நம்மளால ஒண்ணுமே பண்ண முடியாது குழந்தைய அவுங்ககிட்ட கொடுத்து தான் ஆகணும். அவுங்க கஷ்டத்துக்கு பணம் வாங்கிட்டு குழந்தைய கொடுத்துருவாங்க அப்புறம் சில வருஷம் கழிச்சு வருத்தப்படுவாங்க. அவுங்க குழந்தை அவுங்களுக்கு வேணும்னு நினைப்பாங்க. நம்ம ஒரு குழந்தைட்ட ஒட்டுமொத்த அன்பை செலுத்தி வளர்க்கவிட்டு அதை நம்மகிட்ட இருந்து பிரிச்சா நம்மளால தாங்க முடியாது அதனால எதையும் முறையா சட்டப்படி செய்யணும்” என்றான் சூர்யா.

“அப்ப நம்ம என்ன பண்ணனும் சூர்யா” என்றாள் யோசனையாக.

“அதுக்கு கரானு(CARA - Central Adoption Resource Authority) ஒரு வெப்சைட் இருக்கு. இந்தியால உள்ள பிஏபினு (PAP - Prospective Adoptive Parents) சொல்லுவாங்க அவங்க இதுல குழந்தையை தத்தெடுக்க முறையா பதிவு பண்ணனும்” என அவளுக்கு விளக்க ஆரம்பி
த்தான்.

தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 12


“அதுக்கு கரானு(CARA - Central Adoption Resource Authority) ஒரு வெப்சைட் இருக்கு. இந்தியால உள்ள பிஏபினு (PAP - Prospective Adoptive Parents) சொல்லுவாங்க அவங்க இதுல குழந்தையை தத்தெடுக்க முறையா பதிவு பண்ணனும்” என அவளுக்கு விளக்க ஆரம்பித்தான்.


“எப்படி கிட்னி டரன்ஸ்பலன்டேசன்க்கு கிட்னி தேவைப்பட்டா முறையா பதிவு பண்ணி வெய்ட் பண்ணுவாங்களோ அதுபோல பண்ணனும்” என தத்தெடுப்பது பற்றி சொன்னான்.


“இதுல நம்ம பதிவு பண்ணா நமக்கு குழந்தை எப்ப கிடைக்கும்” என்றவளின் குரலில் ஆர்வம் மேலோங்கி இருந்தது.


“நம்மை போல நிறைய தம்பதிகள் அதுல பதிவு பண்ணிருப்பாங்க அந்த வரிசையில் நம்ம முறை வரும் போது நமக்கு குழந்தை கிடைக்கும் அதுவரைக்கும் நம்ம காத்திருக்கணும். வா வா இன்னைக்கே நம்ம பதிவு பண்ணலாம்” என தனது லேப்டாப்பை எடுத்து (CARA)வில் பதிவு செய்தான் சூர்யா.


கரா தளத்தில் பதிவு செய்ததும் விரலை உயர்த்தி தம்ஸ்அப் காட்டினான்.


“ என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அன்பான தேவதைக்கு என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்” என அவள் நெற்றியில் அழுத்தமான முத்திரையை பதித்து வாழ்த்தினான்.


“இதைவிட எனக்கு சிறந்த பரிசு எதுவுமே இருக்க முடியாது. நமக்கு ஒரு குழந்தை கிடைக்கப் போகுது இதைவிட எனக்கு வேற என்ன சந்தோஷம் இருக்க முடியும்” என சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தாள் மதி.


“நம்ம இப்ப அடாப்ஷனுக்கு பதிவு பண்ணிட்டோம் நம்ம பெயர் வர்ற வரைக்கும் நம்ம பொறுமையா காத்திருக்கணும். ஒருவேளை நமக்கு வாய்ப்பிருந்தா அதுக்கு முன்னாடியே இயற்கையா நமக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பிருக்கு. ஆனா எதுவா இருந்தாலும் உனக்கு நான் எப்பவும் துணை இருப்பேன் அதை மட்டும் மறந்துடாதே” என்றான் சூர்யா.


“என்னைவிட உங்களை நான் அதிகமா நம்புறேன்” என்றவள் பின்னாளில் தன்னுடைய நம்பிக்கையை கைவிட்டுவிடுவாள் என இருவரும் அப்போது அறியவில்லை.


“சாரி மன்னிச்சிடுங்க இனி இப்படி பண்ண மாட்டேன் என்னை மன்னிச்சிடுங்க” என சந்துருவிடம் மன்னிப்பை யாசித்தாள் கவிதா.


“உன்னோட சாரி எல்லா தப்பையும் சரி பண்ணிடுமா மதியோட இடத்துல உன்னை வச்சு பாரு. உன்னை இப்படி காயப்படுத்தினா உனக்கு எப்படி இருக்கும். அந்த பொண்ணு பாவம் உனக்கு எப்படிடீ மனசு வந்துச்சு” என்றான் சந்துரு வருத்தமாக.


“அத்தைக்கு மதிய சுத்தமா பிடிக்கலை அவளை எப்பவுமே திட்டிக்கிட்டே இருப்பாங்க நானும் அவளை திட்டி கஷ்டப்படுத்தினா அத்தை மனசுல இடம் பிடிக்கலாம்னு நினைச்சு இப்படி பண்ணிட்டேன். எனக்கு இருக்க வசதிக்கு அத்தைக்கு என்னை பிடிச்சிருக்கு. இதெல்லாம் சேர்ந்து எனக்கு ஒரு ஆணவத்தை கொடுத்துடுச்சு. என்னோட முக்கியத்துவம் எங்கயும் இருக்கணும்னு நினைச்சு இப்படிலாம் பண்ணிட்டேன்” என அழுதாள் கவிதா.


“நீ நல்ல பேரு வாங்க இன்னொருத்திய காயப்படுத்துவியா அசிங்கமா இல்லை உனக்கு. இன்னைக்கு மாமியார்ட்ட நல்ல பேரு வாங்க அவளை அடிச்ச திட்டின. நாளைக்கே இன்னும் நல்ல பேரு வாங்க அவளையும் சூர்யாவையும் பிரித்து வைப்பியா இல்லை அந்த அப்பாவி பொண்ணை கொலை பண்ணிடுவியா?” என்றான் கோபமாக.


“மாட்டேன்” என தலையசைத்தாள்.


“எப்படி உன்னை நம்புறது? இவ்வளவு பண்ணவ இதை பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம். எனக்கு கூட சூர்யா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டது வருத்தம் அதுவும் அவ நம்ம வசதிக்கு ஏத்த அளவு இல்லனு ஆரம்பத்துல ஒரு நெருடல் இருந்துச்சு. ஆனா என் தம்பி மனசுல இந்த அளவுக்கு ஒரு பொண்ணு இடம் பிடிச்சிருக்கானா அவ எப்பேர்பட்டவளா இருப்பானு நான் புரிஞ்சுகிட்டேன்” என்றதும் தலைகுனிந்தாள் கவிதா.


“இந்த அளவுக்கு நீ அந்த பொண்ணை பாடா படுத்தியும் அவ இதுவரை உன்னை பத்தி என்கிட்ட எதுவுமே சொன்னதில்லை. கண்டிப்பா சூர்யாகிட்டயும் சொல்லிருக்க மாட்டா சொல்லிருந்தா இந்நேரம் உன்னை உண்டு இல்லைனு பண்ணிருப்பான்” என்றதும் அவளுக்கு வருத்தமாக இருந்தது.


“நான் வேணும்னு பண்ணல” என அழுதாள் கவிதா.


“நீ வேணும்னு பண்ணல மதி வேண்டாம்னு தான் இவ்வளவும் பண்ணிருக்க. நானும் சூர்யாவும் அங்கதான் நிக்கிறோம் ஆனா கொஞ்சம் கூட பயமில்லாம அவளை கைநீட்டி அடிச்சு அவமானப் படுத்துறனா உனக்கு எவ்ளோ தெனாவட்டு இருக்கும். உன்னை பார்க்கவே எனக்கு அருவருப்பா இருக்கு”


“அந்த பொண்ணுக்கு குழந்தையில்லைனா அவளுக்கு ஆதரவா இருக்கணும் இல்லையா வாயை மூடிட்டு சும்மா இருக்கணும். அவளை நோகடிச்சு நோகடிச்சு.. சே கடவுள் உனக்கு போய் பிள்ளைய குடுத்துருக்காரு பாரு. உனக்கு பிள்ளை இருந்துட்டா மட்டும் நீ முழுமையான பெண்ணாகிடுவியா? முதல்ல மனுஷியா நடந்துக்கோ நீயெல்லாம் மனுஷ ஜென்மமே இல்லை இன்னொருத்தர் வலிய பார்த்து ஆனந்தப்படுற சாடிஸ்ட்” என்றான் தலையில் அடித்துக் கொண்டு.


தான் செய்த செயலின் வீரியத்தில் கூசி கூனிக்குறுகி போய் நின்றாள்.


“நான் ஏன் சூர்யா உன்னை அடிக்க வந்தப்ப தடுத்தேன்னு தெரியுமா?” என்றான்.


தெரியாது என்பது போல தலையசைத்தாள் கவிதா.


“அண்ணினா அம்மாவுக்கு சமம். நீ அம்மா ஸ்தானத்துல நடந்துக்காம இருக்கலாம் ஆனா தாய் ஸ்தானத்துல இருக்க அண்ணிய அடிச்சு அந்த பாவமும் கஷ்டமும் அவன் தலையில விழ வேண்டாம்னு தான் அவனை தடுத்தேன்”


“நான் மட்டும் தடுக்கலைனா அங்கயே அவன் உன்னை அடிச்சு கொன்னுருப்பான். ஒரு பெண்ணுக்கு பிள்ளையில்லைனா என்ன அதுல உனக்கு என்ன பிரச்சனை? நீ இவ்வளவு பண்ணிருக்க அப்படியிருந்தும் எல்லா வேலையும் அந்த பொண்ணு செய்யுது அது ஒரு ஏமாளி. என்னைக்காவது ஒரு நாள் நான் மட்டும் தான் இந்த வீட்டு மருமகளா? நான் மட்டும் ஏன் இந்த வீட்டில்ல எல்லா வேலையும் செய்யணும்ன்னு என்னைக்காவது கேட்டுருக்குமா கேட்டதில்லை அந்த அளவுக்கு அது ஒரு அப்பாவி பொண்ணு”


“குழந்தையில்லைனா என்ன உனக்கு நாங்க இருக்கோம் பார்த்துக்கலாம்னு அந்த பிள்ளைக்கு தைரியம் சொல்லாம அவளை குத்தி குத்தி பேசி நோகடிச்சு அவளை கஷ்டப்படுத்திருக்க பெண்ணுக்கு பெண்னே தான் எதிரி” என்றதும் கணவனின் பேச்சில் குற்ற உணர்வில் அவன் காலில் விழுந்து கதறி அழுதாள் கவிதா.


“நீலிக்கண்ணீர் வடிக்காதே ஒரே ஒருநாள் உன்னை திட்டினதும் உனக்கு தாங்க முடியலை இத்தனை வருஷமா அந்த பிள்ளைய இப்படி பேசியே கொன்னுருக்கியே நீயெல்லாம் பொண்ணா பிசாசுடீ”


“இப்ப சொல்றேன் நல்ல கேட்டுக்கு நீ தான் இந்த குடும்பத்துக்கு தகுதியில்லாதவ. இன்னொரு பெண்ணை காயப்படுத்துற நீ எனக்கு பொண்டாட்டியா இருக்கவே லாய்க்கு இல்லாதவ. இனி வைபவ்க்காக மட்டும் தான் உனக்கு இந்த வீட்ல இடம் ஆனா என் மனசுல உனக்கு இடம் கிடையாது.


“ஊருக்கு தான் நம்ம புருஷன் பொண்டாட்டி ஆனா நாலு சுவத்துக்குள்ள நீ யாரோ நான் யாரோ வைபவ்க்காக உன்னை விட்டு வச்சிருக்கேன் அதையும் கெடுத்துக்காதே” என அவளை தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றான்.


கணவன் தன்னை உதறிவிட்டு சென்றதும் கதறி அழுதாள் கவிதா.


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 13


“ஊருக்கு தான் நம்ம புருஷன் பொண்டாட்டி ஆனா நாலு சுவத்துக்குள்ள நீ யாரோ நான் யாரோ வைபவ்க்காக உன்னை விட்டு வச்சிருக்கேன் அதையும் கெடுத்துக்காதே” என அவளை தள்ளி விட்டு அங்கிருந்து சென்றான்.


கணவன் தன்னை உதறி சென்றதும் கதறி அழுதாள் கவிதா.


கெடுவான் கேடு நினைப்பான். மதிக்கு தீங்கு நினைத்தாள். மதியின் நிம்மதியை கெடுக்க நினைத்து அவள் வாழ்க்கையை அவளே கெடுத்துக் கொண்டாள்.


மதியை தனக்கு கீழ் போட்டு மிதிக்க நினைத்து தன் மேல் உயிரையே வைத்திருந்த கணவனின் ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்து விட்டாள் கவிதா.


இந்த நிமிடம் அவள் திருந்திவிட்டாளா என்பது அவளுக்கே தெரியவில்லை. ஆனால் இனியும் மதியை கொடுமைப்படுத்தினால் தன் கணவன் தனக்கில்லை என்பதை மட்டும் யோசித்தாள்.


ஒரே எப்பிசோடில் திருந்தும் அளவுக்கு அவள் நல்லவள் இல்லையே. ஏதாவது செய்து கணவனின் கோபத்தை குறைக்க வேண்டும் என்பதை மட்டும் யோசித்தாள்.


கராவில் பதிவு செய்ததும் விரைவில் தன் வாழ்க்கையில் ஒரு மழலைச் செல்வம் வந்து மகிழ்ச்சியுடன் இருப்போம் என்ற துள்ளலுடன் இருந்தாள் வெண்மதி.


மனைவியின் முகத்திலிருந்த மகிழ்ச்சியை கண்டு அவனுக்கு ஆனந்தமாக இருந்தது.


சந்துரு சூர்யா இருவருமே வெண்மதிக்கு ஆதரவாக இருப்பது பார்வதிக்கு வயித்தெரிச்சலை கிளப்பியது “மாயக்காரி கைகாரி நடிச்சு நடிச்சு எல்லாரையும் தன் பக்கம் திருப்பி வச்சிருக்கா” என கோபத்தில் பொறுமிக் கொண்டிருந்தார்.


“கவிதா பார்த்தியா அவளை சொன்னதும் அண்ணினு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம உன்னை அடிக்க வர்றான் சூர்யா. அதுக்கும் மேல ஒரு படி போய் சந்துரு உன்னை கை நீட்டி அடிக்கிறான். இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை ஒருவேளை சந்துருவுக்கும் வெண்மதிக்கும் ஏதாவது கள்ள தொடர்பு இருக்குமோ” என கவிதாவின் மனதில் விஷத்தை விதைக்க முனைந்தார்.


கொஞ்சம் கூட கூச்சநாச்சம் இல்லாமல் வீட்டிற்கு வாழ வந்த மருமகளையும் மகனையும் தவறாக பேசுகிறோம் என்ற எண்ணமில்லாமல் கவிதாவை ஏத்தி விட முயன்றார் பார்வதி.


“அத்தை போதும் நிறுத்துங்க கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம என்ன பேச்சு பேசறீங்க? நீங்க மட்டும் இப்படி பேசினீங்கனு தெரிஞ்சா உங்க பிள்ளைகள் உங்களை கொன்னே போற்றுவாங்க. உங்க பிள்ளைய பத்தி உங்களுக்கு தெரியாம இருக்கலாம் ஆனா எனக்கு என் புருஷனை நல்ல தெரியும். மதி எப்படியோ எனக்கு தெரியாது ஆனா என் புருஷன் இன்னொருத்தியை அதுவும் தன்னோட தம்பி பொண்டாட்டியை தப்பா பார்க்கிற அளவுக்கு அவர் கேவலமானவர் இல்லை. உங்க கலகமூட்ற வேலைய மதிகிட்ட வச்சுக்கோங்க என்கிட்டல்லாம் இந்த வேலை வேண்டாம்” என ஆவேசமாக கத்திவிட்டு அங்கிருந்து சென்றாள் கவிதா.


“கிழவி சரியான விஷமி இதுகிட்ட ஜாக்கிரதையா இருக்கணும். எனக்கும் என் புருஷனுக்கும் சண்டை மூட்ட பார்க்குது. ஏற்கனவே இங்க பிச்சிட்டு போயிட்டுருக்கு இதுல இது வேற” என மாமியாரை மனதிற்குள் வருத்தெடுத்தாள்.


இங்கு ஒருபக்கம் கவிதா மாமியாரை வறுத்தெடுக்க வெண்மதியை எவ்வாறு வீட்டை விட்டு துரத்துவது என யோசித்தார் பார்வதி.


கவிதா வாங்கிய அடியை பார்த்தும் இவர் திருந்தவில்லை.


தத்தெடுப்பதில் தங்களுடைய பெயர் வரிசையில் எப்போது வரும் என ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தாள் வெண்மதி.


அவள் நேரமோ என்னவோ அவர்கள் பெயர் வர தாமதமாகி கொண்டே சென்றது. அது அவளை சோர்வடைய செய்தது.


தத்தெடுப்பதில் தாமதமானாலும் ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்திருப்பதால் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கை தொய்வில்லாமல் சென்று கொண்டிருந்தது.


தினமும் காலை எழுந்ததும் அவள் சூர்யாவிடம் கேட்கும் முதல் கேள்வி “லிஸ்ட்ல நம்ம பெயர் வந்துடுச்சா” என்பது தான் அவனுக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.


நாளாக நாளாக அவள் நம்பிக்கையில் தொய்வு விழ ஆரம்பித்தது. மறுபடியும் இறுக்கமாக மாற ஆரம்பித்தாள். அவள் நடவடிக்கைகளை கண்டு கிலி அடைந்தான் சூர்யா.


அவள் எப்போதும் மன அழுத்தத்துடன் காணப்பட்டாள்.


அவனை பொருத்தவரை குழந்தை ஒரு விஷயமேயில்லை. அவளின் காதலும் துணையும் அவன் வாழ்க்கை முழுமைக்கும் போதும்.


அவன் இயல்பாக இருந்தான் ஆனால் அவள் தன் உயிர்ப்பை தொலைத்துவிட்டாள்.


ஒவ்வொரு முறை உறவு கொள்ளும் போதும் அவளிடம் இறுக்கம் தென்படும். அவள் அவ்வளவு இறுக்கத்துடன் இருக்க உறவு வேண்டாமென மறுத்தால் மேலும் உடைந்துவிடுவாள் என பொறுத்து போவான்.


அவள் மனம் முழுவதும் குழந்தை வேண்டும் கர்ப்பமாக வேண்டும் என்ற அழுத்தம் மட்டுமே நிறைந்திருந்தது.


ஒவ்வொரு முறையும் உறவின் முடிவில் “இந்த முறை நான் கர்ப்பம் ஆகிடுவேன் தானே” என அவள் கேட்கும் போது அவன் உயிர் போகும் வலியை அனுபவித்தான்.


“உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்” என அவளை தேற்றுவான்.


“ஒருவேளை இந்த மாசம் குழந்தை தங்கலைனா என்ன பண்றது” என்பாள் பாவமாக.


“அதனால என்ன பரவாயில்லை நம்ம தத்தெடுத்துக்கலாம்” என்பான் அவளை சமாதானப்படுத்தும் விதமாக.


“அப்ப எனக்கு குழந்தை உண்டாகாது அப்படித்தானே” என அழ ஆரம்பிப்பாள்.


“அப்படியில்லமா கண்டிப்பா நீ கர்ப்பம் ஆவ ஒருவேளை ஆகலைன்னா பரவாயில்லை நம்ம தத்தெடுத்துக்கலாம்னு சொன்னேன்” என அவளை தேற்ற முயற்சி செய்வான். அவனால் முயற்சி மட்டுமே செய்ய முடியும் அவள் தானே அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.


ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாறுபவர்களின் வலியை வார்த்தையில் வடிக்க முடியாது.


உடல் இளைத்து எலும்பு துருத்தி பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தாள்.


அவள் ஏக்கத்தை போக்கும் வழியறியாது தவித்தான். ஆரம்பத்திலேயே குழந்தையை பற்றி யோசித்து கவலைப்படுகிறாள் என தெரிந்திருந்தால் ஏதோ ஒரு வகையில் தேற்றி இருப்பான். தற்போது காலம் கடந்து மன அழுத்தத்திற்கு உள்ளானாள் மதி.


சந்துரு கூட அவளின் மாற்றத்தை கவனித்துவிட்டு சூர்யாவிடம் பேசினான்.


“மதி ஏன் இப்படி இருக்கா? அவ ஆள் ரொம்ப மெலிஞ்சு பரிதாபமா இருக்கா. அவளுக்கு உடம்பு எதுவும் சரியில்லையா இல்ல உங்களுக்குள்ள எதுவும் பிரச்சனையா?” என இலைமறை காயாக சந்துரு விசாரித்தான்.


அண்ணனிடம் தங்கள் அந்தரங்கத்தை பற்றி பேச விரும்பவில்லை.


“அதெல்லாம் ஒன்னுமில்லை” என முடித்துவிட்டான் சூர்யா.


“ஒன்னும் இல்லனு நீதான் சொல்ற ஆனா எனக்கு என்னமோ சரியா படல அவ என்ன பண்றோம்னு கூட கவனமில்லாம இருக்கா நம்ம ஒன்னு கேட்டா அவ ஒன்னு செய்றா. அன்னைக்கு சட்னி கேட்டா சாம்பார் ஊத்துறா. எனக்கு என்னமோ பயமா இருக்கு என்னனு சரியா சொல்லத் தெரியல ஆனா அவளை கவனமா பாத்துக்கோ. இதுக்கு மேல உனக்கு எப்படி சொல்றதுனு தெரியல” என அங்கிருந்து சென்றான் சந்துரு.


பெருமூச்சுடன் தன்னறைக்கு சென்றான் சூர்யா.


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 14


“மதி ஏன் இப்படி இருக்க? சிரிச்சு பேசி சந்தோஷமா இருக்கலாமே” என்றான் சூர்யா.


“எனக்கு என்ன நல்லா தானே இருக்கேன்” என்றாள்.


“ஊகூம் நீ சரியா இல்லடீ ஏதோ பஞ்சத்துல அடிபட்டவ மாதிரி பரிதாபமா இருக்க” என்றான் கலக்கமாக.


“அதெல்லாம் ஒன்னுமில்ல நல்லா தான் இருக்கேன்” என அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.


பொதுவாக ஒரு தம்பதிக்கு குழந்தையில்லை என்றால் பெரும்பாலும் ஆண்களை எதுவும் பேசுவதில்லை பெண்களை பேசி பேசி நோகடித்து அவர்கள் ஏதோ பெண்ணாக இருக்கவே லாயிக்கில்லாதவர்கள் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி விடுகின்றனர்.


அவளை எல்லோரும் பேசி பேசி நோகடித்து உடைந்து போய்விட்டாள்.


முன்பெல்லாம் மாதவிடாய் நாட்களில் கணவனுக்கு தெரியாமல் அழுவாள் தற்போது நேரடியாக கணவனின் மடியில் விழுந்து கதறி அழுவாள்.


ஒவ்வொரு முறை மாதவிடாய் வரும்போதும் அவளுக்கு ஏமாற்றமாக இருக்கும் அவள் உடைந்து வருந்துவதை கண்டு அவளை விட அவன் பரிதவித்து துடித்து போவான்.


“இந்த மாசமும் பீரியட்ஸ் வந்துருச்சு ஒரு குழந்தை பெத்துக்க முடியாம நான் ஏன் வாழணும்? இதுக்கு என்னை என் அம்மா கர்ப்பத்திலே கலைச்சிருக்கலாம் ஒன்னுமே இல்லாம நான் ஏன் வாழணும்” என அவன் மடியில் தலைசாய்த்து அழுதாள்.


“என் அம்மாவுக்கு நான் வேண்டாம் அதான் என்னை பெத்து அனாதையா தூக்கி போட்டுட்டா நாளைக்கு நீங்களும் என்னை வேண்டாம்னு தூக்கி போட்ருவீங்க” என மனஅழுத்தத்தில் உளர ஆரம்பித்தாள்.


“எதுக்குடீ இப்படி உளர்ற நீ என்னோட உயிர் நான் எப்படி உன்னை விடுவேன் பைத்தியம் போல பேசின என்கிட்ட அடி வாங்குவ” என்பவனுக்கு கண் கலங்கியது.


சூர்யா எவ்வளவோ முயற்சித்தும் அவனால் அவளை வேற விஷயத்தில் கவனம் செலுத்த வைக்க முடியவில்லை.


இப்படியே சென்றால் அவள் கரைந்து காணாமல் போய்விடுவாள் அவனை பயமுறுத்தும் வகையில் அவள் நடவடிக்கைகள் இருந்தது.


இரண்டு மூன்று நாட்கள் மாதவிடாய் தள்ளி சென்றால் கூட ஒருவேளை தான் கர்ப்பமாக இருப்போமோ என ஏங்கி அவனை கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவி வாங்கி வர சொல்லுவாள்.


அன்று காலை எழுந்ததும் “சூர்யா நாலு நாள் டேட் தள்ளி போயிருக்கு கிட் வாங்கிட்டு வாங்க” என அவள் கேட்டதும் அவனுக்கு ஐயோ என இருந்தது.


கருவியில் ஆசையுடன் பரிசோதனை செய்பவள் அதில் ஒரு கோட்டை கண்டு ஏமாற்றத்துடன் தன் தோள் சாய்ந்து கதறுபவளை தேற்ற வழியறியாது குமுறுவான்.


ஒவ்வொரு முறையும் பரிசோதித்து ஏமாற்றத்தை சந்திப்பவர்களுக்கு மட்டுமே அந்த வேதனை புரியும்.


இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணி பார்க்கலாமா என கேட்டால் அவள் மேலும் வருந்துவாள் என எதுவும் சொல்லாமல் அவள் கேட்டதை வாங்கிக் கொடுத்தான்.


கர்ப்பத்தை பரிசோதிக்கும் கருவியை எடுத்துக்கொண்டு பரபரப்புடன் குளியலறைக்குள் நுழைந்தாள் வெண்மதி. இந்த முறையாவது தனது ஆசை ஈடேறிவிடாதா என்ற பரிதவிப்பு அவளுக்கு.


ஒருவேளை கருவியில் நெகட்டிவ் என வந்தால் மனைவி எவ்வாறு தாங்குவாள். அவளுக்காகவாது அந்த கருவியில் இரு கோடுகள் வரவேண்டும் என கடவுளிடம் வேண்டினான்.


மனைவி வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை என்றதும் அவனுக்கு புரிந்துவிட்டது.


நேரம் செல்ல செல்ல பொறுக்க முடியாமல் அவன் கதவை தட்டினான். அழுதழுது கண்கள் சிவந்து கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.


படுக்கையில் அமர்ந்தவள் அவன் முகம் பார்த்து “இல்லை” என தலையசைத்தவள் கிட்டை தூக்கி எறிந்தாள்.


நிற்காமல் மனைவியின் கண்ணிலிருந்து வழியும் கண்ணீரை நிறுத்தும் வகையறியாது துடித்தான்.


“ஷ்ஷ் இப்ப என்னாச்சு அழாதே. இது இல்லன்னா என்ன நமக்கு வயசிருக்கு அதுவும் இல்லைனா நம்ம தத்தெடுத்துக்கலாம். நீ இப்படி அழுதழுது உடம்பை கெடுத்துக்காதே” என அவளை சமாதானப்படுத்தினான்.


“பயமா இருக்கு சூர்யா எனக்கு குழந்தையில்லாம போயிடுமோ? நான் தாயாகவே மாட்டேனா என்னை நினைச்சு எனக்கே அசிங்கமா இருக்கு. எனக்கே என்னை சுத்தமா பிடிக்கலை நான் பொண்ணா வாழவே தகுதி இல்லாதவ மாதிரி எனக்கு தோணுது” என்றாள்.


“முட்டாள் என்ன பேசுற? உன் பேச்சு என்னை எவ்வளவு காயப்படுத்ததுனு உனக்கு புரியுதா இல்லையா? லூசு மாதிரி பேசுற. அப்ப குழந்தையில்லனா அவங்க வாழவே தகுதி இல்லாதவங்களா? பைத்தியமாடீ நீ இப்ப உனக்கு என்ன குறை? அப்படியே ஒருவேளை உனக்கோ எனக்கோ ஏதாவது பிரச்சனை இருந்தா கூட அது நம்மளோட தப்பில்லை"


“உனக்கு நான் இருக்கேன் எனக்கு நீ இருக்கனு புரிஞ்சுகிட்டு சந்தோஷமா வாழணும் அதான்டீ வாழ்க்கை. நம்ம சந்தோஷம் நம்மகிட்ட தான் இருக்கு நம்ம சந்தோஷத்தை வெளியே தேடினா கிடைக்காது. நம்ம சந்தோஷத்தை நம்மகிட்ட தேடணும்”


“நம்மள சந்தோஷமா வச்சுக்குறதும் வச்சுக்காததும் நம்ம கைல தான் இருக்கு. வாழறது ஒரு வாழ்க்கை அதை சந்தோஷமா வச்சுக்கலாமே. உன்னையும் கஷ்டப்படுத்தி என்னையும் கஷ்டப்படுத்தாதே”


“நான் காதலிச்ச மதி நீயில்லை. நான் காதலிச்சவ என்ன பிரச்சனை வந்தாலும் தைரியமா தன்னம்பிக்கையா எதிர்த்து நிற்பா. அந்த மதி எங்க போனா. என்னை கல்யாணம் பண்ணி உன்னோட நம்பிக்கையும் தைரியத்தையும் தொலைச்சிட்டியா? இது என்னை தலைகுனிய வைக்குது. நான் கையாலாகாதவன்னு தோணுதுடீ. அது உனக்கு புரியலையா? கட்டின பொண்டாட்டிய சந்தோஷமா பார்த்துக்க முடியலன்னா அதைவிட ஒரு புருஷனுக்கு வேற அசிங்கம் இல்லை” என்றவன் அங்கிருந்து எழுந்து சென்றான்.


மதிக்கு முழுதாக இயல்புக்கு திரும்ப முடியவில்லை எனினும் சூர்யாவுக்காக நடிக்க முயற்சி செய்தாள். கணவனுக்கு மறைத்த அவளது கண்ணீர் அவள் தலையணைக்கு மட்டுமே தெரியும்.


ஆரம்பத்திலேயே குழந்தையை பற்றி பேசி பேசி அனைவரும் அவள் மனதை காயப்படுத்துவதை கணவனிடம் தெரிவித்திருந்தால் என்றோ அவள் மனதை தேற்ற வைத்து அதிலிருந்து அவளை வெளிக்கொண்டு வந்திருப்பான்.


மனதில் கவலைகளையும் அழுக்கையும் தேற்றி வைக்க வலியும் வேதனையும் தான் மிஞ்சும்.


கணவனிடம் தன் மனதை மறைத்து உச்சகட்ட மனஅழுத்தத்துக்கு ஆளானாள்.


நம் மனதில் ஏதேனும் கஷ்டமோ கவலையோ அதிகமாகும் போது அதை யாரிடமாவது பகிர்ந்தால் மட்டுமே மனஅழுத்தம் குறையும். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் யாரிடமாவது கட்டாயம் நம் மனதை வெளிப்படுத்த வேண்டும். நம் மனதின் கசடை இறக்கி வைக்க வேண்டும். இல்லை என்றால் நமக்கு மட்டுமல்ல நம்மை சார்ந்தவர்களுக்கும் நம்மால் வேதனை மட்டுமே கிடைக்கும்.


அடுத்தடுத்து மதி செய்த காரியத்தில் அவள் கழுத்தை கொலை வெறியோடு சூர்யா நெறிப்பான் என யாரேனும் சொல்லி இருந்தால் அவனே கூட அதை நம்பி இருக்கமாட்டான்.


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 15


கவிதா எவ்வளவோ முயற்சித்தும் சந்துரு அவளிடம் முகம் கொடுத்து பேசவில்லை அவனுக்கு நிச்சயமாக தெரியும் அவள் திருந்தவில்லை தன் கோபத்தை தணிக்க வேண்டுமென்று மட்டும் அமைதியாக உள்ளாள்.


அதனால் அவன் அவளிடம் மனமிறங்காமல் இருந்தான் அதுவும் நல்லதுக்கு தான் போல கவிதா அடக்கியே வாசித்தாள்.


“என்ன நம்ம இவ்வளவு கெஞ்சியும் இந்த மனுஷன் மனமிறங்க மாட்டேங்கிறார். நமக்கு திடீர்னு நல்லவளா மாறவும் தெரியலை அன்னைக்கு எல்லாரும் இருக்கும் போது மதிய அடிச்சிருக்க கூடாது பேசாம அவளை தனியா கூட்டிட்டு போய் அடிச்சிருக்கணும்" என தன்னையே நொந்து கொண்டாள்.


அப்போதும் தான் செய்தது தவறு என அவள் உணரவில்லை அனைவரின் முன்பும் அவளை அடித்திருக்கக் கூடாது என வருத்தப்பட்டாள்.


சிலர் முடிந்தளவு தவறே செய்யாமல் இருப்பார்கள் சிலர் தவறுகளை செய்துவிட்டு அதை திருத்த முயற்சி செய்வார்கள் சிலர் மற்றவர்களுக்கு தெரியாமல் மாட்டிக்கொள்ளாமல் எவ்வாறு தவறு செய்யலாம் என யோசிப்பார்கள் இதில் கவிதா கடைசி ரகம்.


கணவன் முன்பு மதியை வேலை ஏவாமல் தானே வேலை செய்வது போல பாசாங்கு செய்தாள் கவிதா.


அவன் அதை கண்டு கொள்ளாமல் “நான் யாருனு உனக்கு தெரியும் நீ யாருனு எனக்கு தெரியும் நம்ம யாருனு ஊருக்கே தெரியும்” என அவளது கேவலமான நடிப்பை மதிக்காமல் கடந்து விடுவான் சந்துரு.


மதி தன் கவலைகளை மறைத்து கஷ்டப்பட்டு நடிக்க பழகிக் கொண்டாள். தான் அழுதாளோ வருத்தப்பட்டாளோ கணவன் கவலைப்படுகிறான் என்பதால் தனது கவலைகளை தனக்குள் புதைத்து தன் உயிர்ப்பை மொத்தமாக தொலைத்து விட்டாள்.


அன்று தனிமையில் மதி என்ன நினைத்தாளோ ஒரு குட்டி குஷன் தலையணையை சுருட்டி தன் சேலையை விலக்கி வயிற்றில் வைத்து புடவையை கட்டி மூடினாள்.


“பாப்பா என்ன பண்றீங்க அம்மா பேசுறது உங்களுக்கு கேட்க்குதா? நீங்க உங்க அப்பா மாதிரியே அம்மாவுக்கு தொல்லை கொடுக்காம சமத்தா இருக்கணும். அப்பா ராத்திரி உங்களுக்கு முத்தம் கொடுப்பாரு” என கண்ணாடியில் தெரிந்த தன் மேடிட்ட வயிற்றை பார்த்து பேசிக்கொண்டிருந்தாள்.


பிறகு என்ன யோசித்தாளோ தெரியவில்லை அங்கிருந்த முக்காலியில் அமர்ந்தவள் ஒரு கிண்ணத்தில் கரைத்து வைத்திருந்த சந்தனத்தை எடுத்து தன் கன்னத்தில் தானே தடவிக் கொண்டாள்.


அங்கிருந்த கண்ணாடி வளையல்களை எடுத்து தன் இரு கைகளிலும் போட்டுக் கொண்டாள்.


தன் கைகளில் இருந்த வளையல்களை பார்த்தவள் தன் மேடிட்ட வயிற்றுக்கு அருகே கொண்டு சென்றவள் கலகலவென வளையல்களை குலுக்கினாள்.


“உங்களுக்கு வளையல் சத்தம் கேட்குதா. உங்களுக்கு இந்த சத்தம் பிடிச்சிருக்கா அதான் உதைக்கிறீங்களா?” என மீண்டும் வளையல்களை குலுக்கினாள்.


“இன்னைக்கு அம்மாவுக்கு வளைகாப்பு. தங்ககுட்டி நீங்க ஹேப்பியா?” என்றாள்.


“பாப்பா உனக்கு என்ன பிடிக்கலையா? அதான் அம்மா வயித்துல வர்ற மாட்டேங்கறீங்களா? அம்மா பாவம் தானே அம்மா வயித்துல வந்துடுடா தங்கம். என்னடா எனக்கு நானே வளைகாப்பு பண்றேனு பார்க்கிறாயா? இதெல்லாம் என் வாழ்க்கையில நடக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு ஆனா உனக்கு தான் அம்மாவ பிடிக்கல அதான் அம்மாகிட்ட வர மாட்டேங்குற. நீ அம்மாகிட்ட வந்தா தானே அம்மாக்கு இந்த மாதிரி வளைகாப்பு செய்வாங்க இல்லன்னா இப்படித்தான் எனக்கு நானே செஞ்சுக்கணும்” என்றவள் விரக்தியுடன் வயிற்றிலிருந்த தலையணையை வெளியே எடுத்து தூக்கி போட்டாள்.


அவள் பேசிய அனைத்தையும் அறை வாயிலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த சூர்யா அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.


அவன் கண்கள் அருவியாக நீரை பொழிந்தது “என்னடீ இதெல்லாம்” என அவன் மனம் துடித்தது.


இப்பொழுது அவளிடம் ஆறுதல் சொல்ல சென்றாள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவாள் என்ற பயத்தில் அவன் வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து சென்றான்.


இரவு தூங்காமல் மொட்டை மாடியில் நின்று இருளை வெறித்திக் கொண்டிருந்தான் சூர்யா.


“தூங்காம இங்க என்ன பண்ற?” என அங்கு வந்தான் சந்துரு.


“நான் தூங்கறது இருக்கட்டும் சார் தூங்காம இங்க என்ன பண்றீங்க அண்ணியோட இன்னும் சமாதானமாகலையா?” என்றான் சூர்யா.


“அதுக்குள்ள சமாதானமாகிட்டா மறுபடியும் ஆட ஆரம்பிச்சிடுவா கொஞ்ச நாள் இப்படியே இருக்கட்டும் அப்பதான் புத்தி வரும்” என்றான் சந்துரு சலிப்பாக.


“ நீ இப்படி கோபப்பட்டு அதுக்கும் மதி தலைய உருட்ட போறாங்க” என்றான் சூர்யா.


“அவ வாங்குன அடி நான் பேசாம இருக்கது எல்லாமே அவளை யோசிக்க வைக்கும். இப்பவே நான் இறங்கி போன இவன் கோபம் இவ்வளவுதான்னு நமக்கு தெரியாம ஆட்டம் போடுவா. இப்ப கூட அவ தப்பை முழுசா உணரவில்லை. நான் சரியா பேச மாட்டேங்கறது மட்டும் தான் அவளுக்கு இப்ப வருத்தம் மற்றபடி அவ திருந்தலாம் இல்லை. கொஞ்ச நாள் ஆனா தான் இப்படி செஞ்சிருக்க கூடாதுன்னு உணர்ந்து திருந்துவா” என்றான் சந்துரு.


சந்துரு சொன்னதை கேட்டதும் லேசாக சிரித்தான் சூர்யா.


“நான் என் பொண்டாட்டி கூட சமாதானமாகுறது இருக்கட்டும் நீ ஏன்டா தூங்காம இருக்க” என்றதும் எதுவும் பேசாமல் திரும்பி நின்றான்.


“என்னடா உன்னை தான் கேட்கிறேன் எதுவும் பேசாம இருக்க” என அவன் தோள் தொட்டு திருப்பினான் சந்துரு.


“டேய் என்னடா கண்ணு கலங்கிருக்கு மதி கூட எதுவும் சண்டை போட்டியா?” என்றான் சந்துரு.


அவ்வளவுதான் அண்ணனை கட்டிப்பிடித்து குலுங்கி அழுதான் சூர்யா.


“சூர்யா என்னடா ஆச்சு? ஏன் அழற எனக்கு பயமா இருக்குடா. என்னனு சொல்லு எனக்கு மனசெல்லாம் பதறுது” என படபடத்தான் சந்துரு.


வேறு வழியில்லாமல் அண்ணனிடம் மனம் திறக்க முற்பட்டான். மதியின் இன்றைய நடவடிக்கையை சொன்னான்.


அவன் சொன்னதை கேட்டதும் சந்துருவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.


“அவ ரொம்ப டிப்ரஷன்ல இருக்கா எனகிட்ட காட்டிக்க கூடாதுனு எனக்கு தெரியாம அழறா. அவ பண்றதெல்லாம் பார்த்தா எனக்கு பயமாருக்கு. நிறைய தடவை அவ முகம் சரியில்லைனு ஏன் சோகமா இருக்கான்னு கேட்டு பார்த்திருக்கேன் ஏதாவது காரணம் சொல்லி சமாளிச்சிடுவா. சொல்லப்போனா நான் குழந்தைய பத்தி யோசிச்சதே இல்ல என்கிட்ட யாருமே அதை பத்தி கேட்டதில்லை. அதனால வரும் போது வரட்டும்னு நான் இருந்தேன் ஆனா மதி கிட்ட குழந்தைய பத்தி எல்லாரும் பேசி பேசி அவளை இப்படி ஆக்கிருப்பாங்கன்னு நான் நினைக்கல” என்றான் சூர்யா விரக்தியுடன்.


“அவ உன்கிட்ட இது பத்தி ஒரு தடவை கூடவா மனசுவிட்டு பேசினதில்லை” என்றான் சந்துரு சந்தேகமாக.


“ஊகூம் இல்ல பைத்தியக்காரி இதுதான் விஷயம்னு அவ லேசா கூட என்கிட்ட சொன்னதில்லை. இப்பதான் கொஞ்ச நாளா இதைப்பற்றி என்கிட்ட பேசுறா. ஆரம்பத்திலேயே என்கிட்ட சொல்லிருந்தா இவ்ளோ தூரம் இந்த விஷயத்தை வளர விட்டுருக்க மாட்டேன். எப்பவோ பிரச்சினையை சரி பண்ணிருப்பேன்” என்றான் விரக்தியாக.


“நீயே இப்படி பேசினா எப்படி? அதெல்லாம் ஒன்னுமில்ல மதிய சரி பண்ணிடலாம். அவளுக்கு நீ தான் ஆறுதலா இருக்கணும். அவளை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போ கவுன்சிலிங் வேணுமானு கேளு எதுனாலும் பாத்துக்கலாம் அவளுக்கு நம்ம இருக்கோம்” என தம்பியை நல்ல அண்ணனாக தேற்றினான் சந்துரு.


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 16


“நீயே இப்படி பேசினா எப்படிடா? இதெல்லாம் ஒன்னுமே இல்லை மதியை நம்ம சரி பண்ணிடலாம். நீ சீக்கிரமா அவளை சைகேட்ரிஸ்ட் கிட்ட கவுன்சிலிங் கூட்டிட்டு போ எதுனாலும் நம்ம பார்த்துக்கலாம். அவளுக்கு நம்ம இருக்கோம். நீயே உடைஞ்சு போனா எப்படி? தைரியமா இருடா” என தம்பியை தேற்றினான் நல்ல அண்ணனாக.


“சரிண்ணா நானும் அதை தான் யோசிச்சிருக்கேன்” என்றான் சூர்யா.


“ஒன்னும் கவலைப்படாதே நம்ம சரி பண்ணிடலாம் அப்புறம் சூர்யா இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். யாருக்கும் தெரியாம அவளை கூட்டிட்டு போயிட்டு வா. நம்ம வீட்ல என் பொண்டாட்டிக்கோ அம்மாவுக்கோ தெரிஞ்சா ஆடித் தீர்த்திருவாங்க உனக்கு தெரியாதது எதுவுமில்லை எதுனாலும் நல்ல யோசிச்சு முடிவு பண்ணு. ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட சொல்லு” என தம்பிக்கு தோள் கொடுத்தான் சந்துரு.


“தாங்க்ஸ்ண்ணா” என அண்ணனை அணைத்தான் சூர்யா.


இவர்கள் இங்கு ஒரு முடிவெடுத்திருக்க அடுத்து மதி செய்த செயலில் கோபத்தின் உச்சிக்கே சென்ற அவள் கழுத்தை நெறித்தான் சூர்யா.


சந்துருவிடம் பேசிவிட்டு தன்னறைக்கு வந்த போது மதி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். அவள் உறங்க அவன் தூக்கத்தை தொலைத்து அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.


சூர்யா சந்துரு இருவரும் அலுவலகம் சென்றதும் வெண்மதியை தேடி வந்தார் பார்வதி.


“ஏய்! இங்க வா உனக்கு எவ்வளவு வேணும்” என்றார் கோபமாக. அவர் சத்தத்தில் கவிதாவும் அங்கு நடப்பதை கவனித்தாள்.


“எனக்கு புரியலத்தை” என்றால் மதி அறியாமையுடன்.


“என் பையனை விட்டு விலகிப் போக எவ்வளவு எதிர்பார்க்கிற” என்றதும் அவரை அதிர்ச்சியுடன் நோக்கினாள்.


“சொல்லு எவ்வளவு வேணுமோ செட்டில் பண்றேன். பணத்தை வாங்கிட்டு என் பையன் வாழ்க்கைய விட்டு போயிடு” என்றதும் மதிக்கு கோபம் வந்தது.


“எங்களை தொந்தரவு பண்ணாம நிம்மதியா வாழவிட நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க” என்றாள் எகத்தாலமாக.


“ஏய் என்னடீ பேசுற” என்றார் பார்வதி கோபமாக.


“நீங்க பேசுனதுக்கு நான் பதில் சொன்னேன் அவ்வளவுதான்” என்றாள் அமைதியாக.


“ நீ என் பையன் வாழ்க்கைய விட்டு போய் தான் ஆகணும்” என்றார் உறுதியாக.


“முடியாதுனு நான் சொன்னா?” என்றாள் மதி.


“சொல்லிடுவியா முடியாதுனு சொல்லித்தான் பாரேன். நீ போய் தான்டீ ஆகணும் இந்த வீட்டை விட்டு என் பையன் வாழ்க்கைய விட்டு நீ போகணும். அதுக்கு அப்புறம் என் பையனுக்கு நான் இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க போறேன்” என்றார் உறுதியாக.


அதைக் கேட்டு சிரித்த மதி “உங்களால முடியும்னு நம்புறீங்களா? உங்க பையனோட வாழ்க்கைல என்னை தவிர வேற ஒருத்திய உங்க கனவுல கூட கொண்டு வர முடியாது. உங்களால முடிஞ்சா முயற்சி பண்ணி தான் பாருங்களேன்” என்றாள் சவால் விடும் தொனியில்.


“என்ன என் பையன் உன் பக்கம் இருக்க ஆணவத்துல பேசுறியா? உனக்கு உன் புருஷன் மேல உண்மையான அன்பிருந்தா அவன் குழந்தை குட்டினு நல்லாருக்கணும்னு நினைச்சு அவனை விட்டு விலகி போயிடு. நீயா போனா மானம் மரியாதையோட போகலாம் நானா உன்னை வெளியே அனுப்பினா உன் பேரு கெட்டு அசிங்கப்பட்டு நடத்தை கெட்டவனு பேரோட வெளிய போவ” என்றார் மனசாட்சியின்றி. அவரை அடிபட்ட பார்வையுடன் ஏறிட்டாள் வெண்மதி.


“என்ன பார்க்குற ரொம்ப சுலபமா உன்னை தப்பானவளா காட்டுவேன். உனக்கு வேசி பட்டம் கட்டுவேன். என் பையன உன்னை தப்பானவனு நம்ப வைப்பேன். அவனே உன்னை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளுவான். இல்லை முடியாதுனு சொன்னா நாளைக்கே உன் பெட்ரூம்ல இருந்து ஒருத்தன் வெளியே வருவான் அதை சூர்யா பார்ப்பான். ஏன் சந்துருவுக்கும் உனக்கும் தப்பான தொடர்பு இருக்குனு கூட நம்ப வைப்பேன்” என்றார் ஈவு இரக்கமின்றி.


அவர் மனம் முழுவதும் அவளை துரத்தி விட வேண்டும் என்ற வெறி நிறைந்திருந்தது. தன் மகன் வாழ்க்கையை தானே கெடுக்கிறோம் என்பதை அவர் சிறிதும் உணரவில்லை.


“உன்னை மாதிரி குழந்தை பெத்துக்க வக்கில்லாத மலடிக்கு என் வீட்ல இடமில்லை. என் பையனுக்கு நான் நல்ல பணக்கார பொண்ணா அவனுக்கு குழந்தை பெத்து தரக்கூடிய தகுதி உள்ள பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க போறேன். நீயே நல்ல யோசிச்சு முடிவு பண்ணு. மானம் மரியாதையோட வெளியே போறியா இல்ல வேசி பட்டம் வாங்கி என் பையனே உன்னை கழுத்த பிடிச்சு வெளியே தள்ள விட்டு போறியான்னு யோசிச்சிக்கோ” என்றதும் அழுது கொண்டே அங்கிருந்து ஓடினாள் மதி.


அவள் அழுது கொண்டே ஓடுவதை இளக்காரமாக பார்த்துக் கொண்டிருந்தார் பார்வதி.


“அத்தை உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா? அவளை உங்களுக்கு பிடிக்கல திட்டினீங்க கோபப்பட்டீங்க சரி ஆனா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம நடத்தைகெட்டவனு பழி போடுவேன்னு சொல்றீங்க. உங்களுக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க ஒரு பெண்ணோட மானத்தோட விளையாடாதீங்க. இதுல தேவையில்லாம என் புருஷன் பேரை வேற இழுக்கிறீங்க. நீங்க இப்படி திட்டம் போடுவது தெரிஞ்சா உங்க மகன்கள் ரெண்டு பேரும் உங்களை கொன்னே போற்றுவாங்க” என்றாள் கவிதா எச்சரிக்கும் விதமாக.


“எனக்கே பாடம் எடுக்குறீயா உன் வேலைய பார்த்துட்டு போ. இங்க நடந்ததை யாருகிட்டயாவது சொன்ன அப்புறம் நீ இந்த வீட்ல இருக்கமாட்ட” என அவளை விரட்டினார் பார்வதி.


கோபமாக ஏதோ முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் கவிதா.


இதைப்பற்றி சந்துருவிடம் சொல்லிவிடலாமா என யோசித்தாள் கவிதா பின்பு “வேண்டாம் அவர் ஏற்கனவே என் மேல கோபமா இருக்காரு இது வேற தெரிஞ்சா நானும் அத்தை கூட கூட்டுனு நினைச்சிடுவாரு” என பேசாமல் இருக்க முடிவு செய்தாள். தான் மறைத்த விஷயம் கணவனை மேலும் கோபமடைய செய்யும் என உணராமல் போனாள்.


ஒருவேளை கவிதா நடந்ததை சொல்லிருந்தால் சந்துருவின் கோபம் கொஞ்சமாவது குறைந்திருக்கும்.


அன்று இரவு ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த கணவனை கண்டு அவனை இறுக அணைத்தாள் மதி.


“என்னாச்சு மதிக்கு திடீருனு என் மேல காதல் பழைய பொழியுறா” என்றான் சிரிப்புடன்.


“என் மனசுல இருக்க சோகத்தை மூட்டை கட்டி வச்சிட்டு என் புருஷனை என் மனசு முழுக்க கட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள் கண்ணில் காதலை தேக்கி வைத்து.


“இப்பவாது என் பொண்டாட்டிக்கு என் மேல கருணை வந்துச்சு” என்றான் சிரிப்புடன்.


அன்றைய இரவு தன் காதலில் கணவனை திக்குமுக்காட வைத்தாள் மதி. அவனை தூங்கவிடாமல் மீண்டும் மீண்டும் அவனை நாடினாள்.


“ஓய் அசத்துறடீ” என்றவன் வெகுநாள் கழித்து நிம்மதியுடன் உறங்க அவள் தூக்கம் இழந்து கொட்ட கொட்ட விழித்திருந்தாள்.


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 17


காலையில் சூர்யா எழும்புவதற்கு முன்பே எழும்புபவள் அன்று எழுந்தரிக்காமல் அவன் கையணைப்பில் உறங்கிக் கொண்டிருந்தாள்.


தன் மார்பில் உணர்ந்த அழுத்தத்தில் கண்விழித்த சூர்யா தன் மார்பை மஞ்சமாக்கி உறங்கும் மனைவியை குனிந்து பார்த்தான். அவளை எழுப்ப மனமின்றி சும்மா படுத்து கிடந்தான்.


நேரம் சென்று சூர்ய வெளிச்சம் முகத்தில் அடிக்க கண்களை சுருக்கியவள் தன்னை அணைத்து படுத்திருந்த கணவனை கண்டு புன்னகைத்தாள்.


மெதுவாய் தன் பட்டு போன்ற மிருதுவான இதழ்களால் அவன் காதை உரசினாள் மதி.


அதில் தன்உணர்வுக்கு வந்தவன் “என்னடி ஆச்சு மேடம் ரொமான்ஸ்லாம் பண்றீங்க. எப்பவும் எழுந்ததும் விடுங்கன்னு தள்ளி விட்டுட்டு ஓடுவ. இன்னைக்கு என்ன பஜக்னு கம் போட்ட மாதிரி ஒட்டிட்டு இருக்க” என்றான் புருவத்தை ஏற்றி இறக்கி.


“இதுல சார்க்கு சந்தோஷமில்லையா?” என அவன் மூக்கோடு தன் மூக்கை வைத்து உரசினாள்.


“ஏதோ ட்ரை பண்ற இது கூட நல்லா தான் இருக்கு” என அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்திரை பதித்தான்.


“சரி நான் போய் குளிச்சிட்டு உங்களுக்கு காபி எடுத்துட்டு வர்றேன்” என அவனிடமிருந்து விலகியவள் அவன் எதிர்பாராத நேரத்தில் அவன் கன்னத்தில் முத்தமிட்டு ஓடினாள்.


அவள் செயலில் சத்தம் போட்டு சிரித்தான் சூர்யா. இனி தன் மனைவியை விரைவில் மீட்டுவிடலாம் என நம்பினான்.


அடுத்த அவள் செய்யப் போகும் காரியம் தெரிந்தால் என்ன செய்வானோ.


காலை உணவை உண்டு முடித்து தயாராகி அலுவலகம் செல்லப் போனவனை தடுத்து அவன் முகத்தை கைகளில் தாங்கி அவன் கண்களை காதலுடன் பார்த்தவள் அவன் இதழில் ஆழ்ந்த முத்திரை பதித்தாள்.


“சாரி சூர்யா என்னை மன்னிச்சிடுங்க எனக்கு வேற வழி தெரியலை” என்றாள் மனதிற்குள்.


முதலில் அவள் செயலில் அதிர்ச்சியான சூர்யா பின்பு அவள் செயலை தன் கைகளில் எடுத்துக் கொண்டான்.


சிறிது நேரம் கழித்து அவளை விட்டு விலகியவன் “அடியே என் சட்டையை போட்டு எப்படி கசக்கி வச்சிருக்க” என்றான் அவளை செல்லமாக முறைத்து.


“பரவால்ல சட்டை கசங்கினா வேற மாத்திக்கலாம் இந்தாங்க பிடிங்க இதை மாத்திட்டு கிளம்புங்க” என வேறு சட்டையை அவன் கையில் திணித்தாள்.


“ராட்சசி என்னை உசுப்பேத்துற” என்றவன் சட்டையை மாற்றினான்.


“ஒழுங்கா படுத்து ரெஸ்ட் எடு சீக்கிரம் வந்துடுறேன்” என அவளிடம் விடைபெற்று கிளம்பினான்.


சூர்யா கிளம்பியதும் சிறிது நேரம் யோசித்து ஒரு முடிவெடுத்தாள்.


ஒரு முடிவுடன் கவிதாவின் அறைக் கதவை தட்டினாள்.


சந்துரு தான் கதவை திறந்தான். கவிதா அங்கு துணியை மடித்துக் கொண்டிருந்தாள். தங்கள் அறை பக்கம் வராதவள் வந்திருப்பதை கண்டு சந்துரு அவளை யோசனையுடன் பார்த்தான்.


“சொல்லு மதி” என்றான் சந்துரு.


“மாமா வைபவ்வ தர்றீங்களா கொஞ்ச நேரம் நான் அவனை வச்சிக்கிறேன்” என்றாள் தயக்கமாக.


அவள் மன அழுத்தத்தை சூர்யாவின் வாயால் கேட்டு அறிந்தவன் எதுவும் கேட்காமல் வைபவ்வை தூக்கிக் கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தான்.


வைபவ்வுடன் வெளியேறியவளை யோசனையுடன் பார்த்தாள் கவிதா.


வைபவ்வை தன் கைக்குள் வைத்து கொஞ்சி தீர்த்தாள்.


ஒரு மணி நேரம் கழித்து வைபவ்வை கவிதாவிடம் கொடுத்துவிட்டு சென்றாள்.


அவள் முகத்தை கூர்ந்து பார்த்தாள் கவிதா. அவளின் முதுகை துளைக்கும் பார்வையை உணர்ந்தும் கவனிக்காதது போல கடந்து சென்றாள் மதி.


கவிதாவுக்கு மதியின் செய்கை எதையோ தவறாக உணர்த்தியது.


சந்துரு முதல் நாள் இரவு வெகுநேரம் வேலை பார்த்துவிட்டு தாமதமாக உறங்கியதால் அன்றைய தினம் அலுவலகத்துக்கு செல்லவில்லை.


மதிய உணவு நேரம் நெருங்க என்ன சமையல் என பார்ப்பதற்காக வந்தாள் கவிதா.


சமையலறையில் பவானி மட்டும் வேலை பார்த்துக் கொண்டிருக்க மதியை அங்கு காணாமல் யோசனைக்கு உள்ளானாள்.


“என்ன சமையல்” என பவானியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள் கவிதா.


“நீங்க சமைக்கிறீங்க மதி எங்க காணோம்?” என விசாரித்தாள்.


“ஒரு பத்து மணி போல அவுங்க ரூமுக்கு போனாங்க அப்புறம் அவங்க கீழ வரலை” என்றாள் பவானி.


“சாப்பாடு என்ன செய்யணும்னு உங்கட்ட ஏதாவது சொன்னாளா?” என்றாள்.


“இல்லம்மா அவுங்க எதுவும் சொல்லலை மேல ரூமுக்கு போய்ட்டாங்க. அவுங்க சமைக்கல என்ன செய்யணும்னு எனக்கு சொல்லவும் இல்லை. அதனால நானே சமைச்சிட்டேன்” என்றதும் கவிதாவுக்கு பதறியது.


அங்கிருந்து வெளியேற போனவள் பவானியிடம் “நீங்க போய் அவ ரூம்ல என்ன பண்றானு பார்த்துட்டு சாப்பிட வர சொல்லுங்க” என அவரை அனுப்பி வைத்தாள்.


ஒருவேளை நேற்று மாமியார் பேசிய பேச்சில் யாருக்கும் தெரியாமல் வீட்டை வெளியேறி இருப்பாளோ அதனால் தான் என்றும் இல்லாத திருநாளாக வைபவ்வை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாலோ என யோசித்தாள்.


பவானி சென்ற சிறிது நேரத்தில் அவர் அலறல் சத்தத்தில் படபடவென வந்து கவிதாவுக்கு.


அவரின் அலறல் சத்தத்தில் சந்துருவும் கவிதாவும் ஓடி வந்தனர்.


“பவானிக்கா சத்தம் மாதிரி இருக்கு எதுக்கு கத்துனாங்க?” என மனைவியிடம் கேட்டான் சந்துரு.


“மதி ரூமுக்கு போனாங்க என்னனு தெரியலை வாங்க நம்ம போய் பார்க்கலாம்” என கணவனுடன் அங்கு விரைந்தாள்.


“கவிதாம்மா தம்பி யாராவது இங்கே ஓடி வாங்க “ என மீண்டும் சத்தம் போட்டு அழைத்தார் பவானி.


இருவரும் என்னமோ ஏதோவென பதறி ஓடினர். கவிதாவும் சந்துருவும் கண்டது சுயநினைவின்றி விழுந்து கிடந்த மதியை தான்.


கவிதாவின் விழிகள் பார்த்த திசையில் தன் பார்த்த சந்துரு கண்டது அங்கே காலியாக கிடந்த தூக்க மாத்திரைகளை கண்டு அதிர்ச்சியடைந்தான் சந்துரு.


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 18


“என்னங்க மதிய தூக்குங்க ஹாஸ்பிடல் போகலாம்” என அவனை உலுக்கினாள் கவிதா.


சுய உணர்வுக்கு வந்த சந்துரு அவளை தூக்கிக் கொண்டு ஓட அவன் பின்னே கவிதாவும் பவானியும் ஓடினர்.


பதற்றத்துடன் காரை ஓட்டினான் சந்துரு இவளுக்கு ஏதாவதென்றால் தன் தம்பி எப்படித் தாங்குவான் என பயந்தான்.


தான் தங்கை போல நினைத்த பெண் இப்படித் தவறான முடிவெடுத்து விட்டாளே என வருந்தினான்.


பவானி மதியின் முகத்தில் தண்ணீர் தெளிக்க கவிதா மதியின் கன்னத்தில் படபடவென தட்டினாள் “மதி கண்ணை திற” என வேகமாக தட்ட அவளிடம் சுத்தமாக அசைவில்லை.


பார்வதி பேசியதை கணவனிடமோ சூர்யாவிடமோ சொல்லிருந்தாள் மதி இப்படி செய்திருக்க மாட்டாளே என குற்ற உணர்வில் தவித்தாள் கவிதா.


கவிதாவுக்கு தான் மட்டுமே பெரிது மதியை விட எல்லா விதத்திலும் தான் சிறந்தவள் என்ற அகங்காரமே தவிர மதி உயிருடன் இருக்கக் கூடாது என்பது போன்ற யோசனையெல்லாம் கவிதாவுக்கு சுத்தமாக கிடையாது.


மதியை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார்கள்.


வெளியே சந்துரு கவிதா பவானி கவலையுடன் நின்றனர்.


சூர்யாவுக்கு தகவல் சொல்ல அவனுக்கு பலமுறை அழைத்தும் அவன் அலைபேசியை எடுக்கவில்லை.


சூர்யா அலைபேசியை சைலன்ட்டில் வைத்துவிட்டு மீட்டிங்கில் இருந்தான்.


வேறுவழியின்றி மேனேஜர் ஜீவாவுக்கு அழைத்தான் சந்துரு.


“ஹலோ சார் சொல்லுங்க” என அழைப்பை ஏற்றான் ஜீவா.


“ஜீவா சூர்யா பக்கத்துல இருக்கியா” என்றான்.


“ஆமாம் சார்” என்றான்.


“கொஞ்சம் தனியா வந்து பேசு” என்ற சந்துருவின் குரலிருந்த பதற்றத்தை உணர்ந்து தனியாக பேச சென்றான் ஜீவா.


“ஒரு எமர்ஜென்சி மதிய ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம். என்ன விஷயம்னு சூர்யாட்ட சொல்லாத. அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வா. ப்ளீஸ் அவனை ட்ரைவ் பண்ண விடாதே நீயே ட்ரைவ் பண்ணு” என்றவன் போனை வைத்து விட்டான்.


“சார்” என ஜீவா அழைத்ததும் மீட்டிங்கில் இருந்தவன் என்ன என்பது போல நிமிர்ந்தான்.


“சந்துரு சார் கால் பண்ணாங்க ஒரு எமர்ஜென்சி நம்மள உடனே கிளம்பி வர சொன்னாங்க” என்றதும் யோசனையுடன் தன் அலைபேசியை எடுத்து பார்க்க அதில் சந்துருவிடமிருந்து பல தவற விட்ட அழைப்புகள் வந்திருந்தது.


யோசனையுடன் சந்துருவுக்கு அழைக்க அவன் எடுக்கவில்லை.


“என்ன விஷயம்னு சொன்னாங்களா?” எனக் கேட்டான்.


“இல்ல சார் என்கிட்ட ஒன்னும் சொல்லல வாங்க நம்ம உடனே கிளம்பலாம்” என அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினான் ஜீவா.


கார் வீட்டுக்கு செல்லும் வழியில் செல்லாமல் வேறு பாதையில் செல்வதை கண்டு "வீட்டுக்கு போகாம எங்க போற?" என்றான் சூர்யா.


“சந்துரு சார் நம்மள வர சொன்ன இடத்துக்குத் தான் போறேன்” என ஹாஸ்பிடல் வாசலில் வண்டியை நிறுத்தினான்.


“யாருக்கு என்னாச்சு” என்ற யோசனையுடன் மருத்துவமனைக்குள் விரைந்தான். ஒரு அறை வாசலில் சந்துரு கவிதா பவானி மூவரும் பதற்றத்துடன் நின்றனர்.


சந்துருவிடம் விரைந்த சூர்யா “யாருக்கு என்னாச்சு” என்றான் பதற்றமாக.


சூர்யாவுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஜீவாவை பார்த்து “தேங்ஸ்! ஜீவா நீ கிளம்பு” என அவனை அனுப்பி வைத்தான் சந்துரு.


“யாருக்கு என்னாச்சு மதி எங்க?” என்றவன் மற்றவர்கள் முகத்திலிருந்த கவலையை பார்த்து “சொல்லுண்ணா மதி எங்க?” என சந்துருவின் சட்டையை பிடித்தான் சூர்யா.


“மதி சூசைட் பண்ண ட்ரை பண்ணிருக்கா டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க” என்றதும் நிலைகுலைந்து போய் நின்றான் சூர்யா.


தாங்க முடியாத துயரத்துடன் தலையை தாங்கிக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் சூர்யா.


“கவலைப்படாதே மதிக்கு ஒன்னுமாகாது” என தம்பியை தேற்றினான்.


அங்கிருந்த அறைக்கதவை திறந்து வெளியே வந்த மருத்துவரிடம் சந்துருவும் சூர்யாவும் ஓடினர்.


“டாக்டர் மதி எப்படி இருக்கா?” எனக் கேட்டான் சந்துரு.


“கிரிட்டிக்கல் கண்டிஷன்ல இருக்காங்க இருபத்தி நாலு மணி நேரம் கழிச்சு தான் எதுனாலும் சொல்ல முடியும். வீ வில் ட்ரை அவர் பெஸ்ட்” என்றவர் அங்கிருந்து சென்றார்.


அனைவரையும் பரிதவிக்க வைத்துவிட்டாள். எல்லோரையும் பயமுறுத்திவிட்டு மறுநாள் கண் விழித்தாள் வெண்மதி.


அவளை பரிசோதித்த மருத்துவர்

“இனி பயப்படுவதற்கு ஒன்னுமில்லை அவுங்கள அழைச்சிட்டு போகலாம்” என்றார்.


அவளிருந்த அறைக்குள் நுழைந்த சூர்யா தலைகுனிந்து அமர்ந்திருந்த மனைவியை தலை முதல் கால் வரை பார்த்துவிட்டு அவள் நலமுடன் இருப்பதை உறுதி செய்துவிட்டு அவளை மாறி மாறி அறைந்தான்.


“ஏன்டீ இப்படி பண்ண? எப்படிடீ உனக்கு மனசு வந்துச்சு” என்றவன் அவளை மாறி மாறி அறைய சத்தம் கேட்டு சந்துரு விரைய அவனைத் தொடர்ந்து கவிதாவும் பவானியும் உடன் சென்றனர்.


அவர்கள் உள்ளே சென்றபோது “என்னைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காம ஏன்டீ இப்படி பண்ண?” என அவள் கழுத்தை நெறித்தான் சூர்யா.


“என்னடா பண்ற அவளை விடு” என அரும்பாடுபட்டு அவனை அவளிடமிருந்து பிரித்தான் சந்துரு.


“நீ கொஞ்சம் அமைதியா இரு. அவளே இப்பதான் செத்து பிழைச்சு வந்திருக்கா. நீ இப்படி ரியாக்ட் பண்ணா அவ என்ன பண்ணுவா?” என தம்பியை ஆசுவாசப்படுத்தினான்.


“ஏன்மா இப்படி முடிவெடுத்த? நீ போய் இப்படி பண்ணலாமா?” எனக் கேட்டான் சந்துரு.


“கேட்கிறோம்ல சொல்லித் தொலை. உனக்கு என்ன இப்போ ட்ரீட்மெண்ட் எடுக்கணும். குழந்தை பெத்துக்கணும் அவ்வளவுதானே அதுக்கு தானே இதெல்லாம். ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம் போதுமா” என்றான் சூர்யா கோபமாக.


“ சொல்லுமா நீ சொன்னாதானே என்னனு தெரியும்” என பொறுமையாக விசாரித்தான் சந்துரு.


“அவுங்க சொல்லமாட்டாங்க நான் சொல்றேன் தம்பி” என பவானி ஆரம்பத்திலிருந்து நேற்று வரை நடந்த அனைத்தையும் கூறினார்.


அவர் கூறியதை கேட்டுக் கொண்டிருந்த சூர்யாவுக்கும் சந்துருவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.


“பவானிக்கா என்ன சொல்றாங்க நீ வேணும்னு தான் படிக்கட்டிலிருந்து விழுந்தியா? அம்மா இப்படில்லாம் உன்கிட்ட சொன்னாங்களா?” என்றான் சூர்யா கோபமாக.


அழுதுக்கொண்டே ஆமாம் என தலையசைத்தவள் “இவ்வளவு நாள் நடந்தது கூட பரவாயில்லை ஆனா நேத்து உங்க அம்மா பேசுனதை என்னால தாங்கவே முடியலை அதான் இப்படி பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க” என அழுதாள் மதி.


“என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமே” என்றான் சூர்யா வருத்தமாக.


சந்துரு கோபமாக கவிதாவை பார்த்து “உனக்கு நேத்து அம்மா பேசுனது தெரியுமா?” என சந்தேகமாக கேட்டான்.


அவள் குற்ற உணர்வில் தலைகுனிய அதுவே அவன் கேள்விக்கான பதிலை சொல்லியது.


“அப்போ உனக்கு அம்மா பேசுனது தெரிஞ்சிருக்கு தெரிஞ்சும் என்கிட்ட எதுவுமே சொல்லல. சரி என்கிட்ட சொல்லல சூர்யாட்டயாவது சொல்லிருந்தா நாங்க எதாவது பண்ணிருப்போம். இவளுக்கு ஏதாவது ஆகிருந்தா என்ன பண்ணிருப்ப?” என்றான் சந்துரு கோபமாக.


“இல்லங்க நீங்க ஏற்கனவே என் மேல கோவமா இருந்தீங்க. இதை நான் சொன்னா நான் தான் இதுக்கெல்லாம் காரணம்னு என்கிட்ட கோபப்படுவீங்களோனு பயந்து போய் நான் சொல்லல” என்றாள் குற்றஉணர்வுடன்.


“என்கிட்ட உண்மைய சொல்லிருந்தா மதிய இப்படி ஒரு முடிவெடுக்க நாங்க விட்டுருக்க மாட்டோம். உன் மேல எனக்கு இருந்த கோபம் கொஞ்சமாவது குறைந்திருக்கும் ஆனா நீ இப்படி பண்ணி என்னை இன்னும் கோபப்படுத்துற. இதுவே சொல்லுது நீ இன்னும் திருந்தல. அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகிருந்தா அவளை நீ திருப்பி கொடுத்திருப்பியா” எனக் கோபப்பட்டான் சந்துரு.


“போதும் சூர்யா நீ அந்த வீட்ல இருந்ததும் போதும் மதி பட்டதும் போதும். மதிய தனியா கூட்டிட்டு போயிரு. இனியாவது நீயும் மதியும் தனியா போய் நிம்மதியா இருங்க” என்றான் சந்துரு.


சூர்யா மதியுடன் தனிக்குடித்தனம் செல்வானா?


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 19


முழு வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்த சூர்யாவின் மனம் கோபத்தில் கொந்தளித்தது.


சர்ரென சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.


மதியிடம் திரும்பியவன் “நீ வண்டிய விட்டு இறங்கக்கூடாது இங்கேயே இரு நானே வருவேன்” என கோபத்துடன் கார் கதவை அறைந்து சாத்தினான்.


வீட்டில் ஒருவரையும் காணாமல் மாறி மாறி சந்துரு கவிதா இருவருக்கும் போன் அடித்து ஓய்ந்து ஒருவரும் எடுக்கவில்லை என்றதும் “என்னாச்சு யாரையும் காணோம் எங்க போய் தொலைஞ்சாங்க” என புலம்பிக் கொண்டிருந்தார் பார்வதி.


கோபமாக வீட்டிற்குள் நுழைந்த சூர்யாவும் கூடவே வந்த சந்துரு கவிதாவை கண்டு புருவத்தை சுருக்கினார்.


“எல்லாருமா சேர்ந்து எங்க போயிட்டு வர்றீங்க எங்க போறீங்க என்னன்னு கூட சொல்லிட்டு போக மாட்டீங்களா?” என கத்தி கொண்டு இருக்க “படார்!” என்ற சத்தத்தில் தன் பேச்சை நிறுத்தினார்.


அவன் ஆக்ரோஷத்தில் பம்மி பயந்து போய் ஒடுங்கினார்.


“ நீங்கல்லாம் மனுஷ ஜென்மமா? வெட்கமா இல்லை?” என அங்கிருந்த பொருட்களை கோபத்துடன் தள்ளிவிட்டான்.


“சூர்யா நான் உன் அம்மா அந்த மரியாதையில்லாம என்ன பேசுற? அவன் பேசுறத கேட்டுட்டு நீயும் அமைதியா நிக்கிற” என்றார் சந்துருவிடம்.


அவர் கேட்டதற்கு சந்துரு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.


“மதிட்ட என்ன பேச்சு பேசிருக்கீங்க வெட்கமா இல்ல நீங்கல்லாம் ஒரு தாயா? என்ன பேசிருக்கீங்க. பைத்தியக்காரி என்கிட்ட ஒன்னும் சொல்லாம சாக முடிவு பண்ணி தூக்க மாத்திரை சாப்பிட்டுருக்கா” என்றான் கோபமாக.


“சரியான கைக்காரி அவளை நம்பாதே கொஞ்சமா மாத்திரை சாப்பிட்டு டிராமா பண்ணிருக்கா. அவளாம் சாகமாட்டா” என்றதும் அனைவருக்கும் ச்சீ என்றிருந்தது.


“கொஞ்சம் கூட உனக்கு மனசாட்சி இல்லை. ஈவு இரக்கமில்லாம இப்படி பேசிருக்க. அவ பாவம்மா அப்பாவி பொண்ணு இவ்வளவு அசிங்கமா பேசிருக்க. அவளை என் தங்கச்சி மாதிரி நினைச்சிட்ருக்கேன் அவளை என்னோட சேர்த்துவச்சு பேசுவேன் தப்பானவனு சொல்லுவேனு அசிங்கமா பேசிருக்கீங்க. உங்களுக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க தானே. உங்களை பார்க்கவே எனக்கு அசிங்கமா இருக்கு” என்றான் சந்துரு கோபமாக.


“போதும் நீங்க பண்ணது பேசினதெல்லாம் போதும். நீங்களா தேடிருந்தா கூட என்னோட மதி மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சிருக்கமாட்டா. நீங்க மட்டும் கொஞ்சம் பாசமா அவளை நடத்திருந்தீங்கன்னா அவ உங்களுக்கு அன்பை கொட்டி கொடுத்திருப்பா. ஆனா நீங்க அவளை தேளா கொட்டுறீங்க. அப்படி என்ன வன்மம் உங்களுக்கு” என்றான் சூர்யா கோபமாக.


“ஆமாம் நான் அப்படித்தான் பேசினேன் அதுக்கு என்ன இப்ப. எனக்கு அவளை சுத்தமா பிடிக்கல அதான் இப்படி பண்ணேன். உனக்கு அவ வேண்டாம் அவளை விட்டுரு அம்மா உனக்கு வேற நல்ல வசதியான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நீயும் குழந்தை குட்டினு சந்தோஷமா இருக்கலாம்” என்றார்.


அவர் பேச பேச உச்சகட்ட கோபத்துக்கு உள்ளான சூர்யா அங்கிருந்த பிளவர்வாஸை பார்வதி அருகில் போட்டு உடைத்தான்.


அது அவரின் தலையில் போட்டு உடைத்திருக்க வேண்டியது என்பதை உணர்ந்து அமைதியானார்.


“இனி நான் இந்த வீட்ல இருக்கமாட்டேன் என் பொண்டாட்டிக்கு மரியாதை இல்லாத இடத்தில நான் இருக்க மாட்டேன். இனி உங்களுக்கு ஒரு பையன் மட்டும் தான்” என்ற சூர்யா அவர் பேசுவதற்கு கூட அவகாசம் தராமல் அங்கிருந்து வெளியேறினான்.


“இவன் எங்க போறான்?" என்றார் பார்வதி சந்துருவிடம்


அவரை கோபமாக முறைத்த சந்துரு “சீக்கிரமா என்னையும் அனுப்பி வச்சிட்டு உங்க இஷ்டத்துக்கு இருங்க” என அங்கிருந்து வெளியேறினான்.


நம்ம இப்ப எங்க போறோம்?" என்றாள் மதி


“ நம்ம ரெண்டு பேரு மட்டும் தனியா நிம்மதியா சந்தோஷமா இருக்க போறோம்” என்றதும் அவனை ஒரு மாதிரியாக பார்த்தாள்.


“எல்லாம் என்னால தானே” என்றாள் வருத்தமாக.


“உன்னையெல்லாம் திருத்த முடியாது. உன்னால இல்லை எல்லாம் அவங்களால தான் நம்ம அங்கிருந்தா நம்ம ரெண்டு பேருக்கும் நிம்மதி இருக்காது. இதுதான் நமக்கும் நல்லது அவங்களுக்கும் நல்லது” என்றான் உறுதியாக.


என்ன சொல்வது என தெரியாமல் அமைதியாக இருந்தாள் வெண்மதி.


அவன் மனம் அவளை சந்தித்த தினத்துக்கு சென்றது.


அவளை முதன் முதலில் அவன் அலுவலகத்தில் சந்தித்தான். அவன் அலுவலகத்துக்கு இன்டர்வியூக்கு வந்திருந்தாள் வெண்மதி.


“எக்ஸ்க்யூஸ்மீ சார்” என்ற குரலில் நிமிர்ந்தவன் தன் எதிரே நின்ற வெண்மதியை நிமிர்ந்து பார்த்தான்.


முதல் பார்வையிலே அவனை ஈர்த்தாள் வெண்மதி காதல் என சொல்வதற்கில்லை ஆனால் ஏதோ ஒரு வகையில் அவனை ஈர்த்துவிட்டாள் வெண்மதி.


அவன் கேட்ட கேள்விகளுக்கு தங்கு தடையின்றி பதிலளித்தவளை அவனுக்கு பிடித்திருந்தது.


“மிஸ் வெண்மதி கங்கிராஜுலேசன் யூ ஆர் அப்பாயிண்டட்” என அவளுக்கு கை கொடுக்க அவள் தயக்கத்துடன் கை கொடுத்தாள். அவனுக்கு மின்சாரம் பாய்ந்த உணர்வு.


“மிஸ் வெண்மதி உங்க வீடு எங்க?” என அவன் கேட்டதும் “ஹாஸ்டல்ல இருக்கேன் சார்” என்றதும் மேற்கொண்டு எந்த கேள்வியும் கேட்காமல் சரி என தலையசைத்தான்.


அவள் வேலை பார்ப்பதிலிருந்த நேர்த்தி அவள் பொறுமை அனைத்தையும் கண்டு அவள் மேல் அவனுக்கு பிரியம் கூடிக் கொண்டே சென்றது.


அன்று அலுவலகம் முடிந்து கிளம்பியவளை “மதி நானும் கிளம்பிட்டேன் வா உன்னை ட்ராப் பண்றேன்” என்றோ அவளை ஒருமையில் அழைக்க துவங்கியிருந்தான்.


“இருக்கட்டும் சார் நான் கிளம்புறேன்” என கிளம்ப போனவளை தடுத்தான்.


“மதி உன்கிட்ட கொஞ்சம் பேசணும். என் கூட வா நான் உன்னை டிராப் பண்றேன்னு சொல்றேன் தானே” என அவளை அழைத்துச் சென்றான்.


சிறிது தூரம் சென்றதும் காரை ஓரமாக நிறுத்தியவன் “மதி ஐ லவ் யூ” என்றான்.


அவள் விழிகள் அப்பட்டமான அதிர்ச்சியில் விரிந்தது.


“சார்” என்றாள் பயத்துடன்.


“எஸ் மதி ஐ லவ் யூ. ஐம் இன் டீப் லவ் வித் யூ. நீ இல்லாம என்னால வாழ முடியாதுன்ற அளவுக்கு உன் மேல உயிரையே வச்சிருக்கேன். என்னோட லைஃபை உன் கூட ஷேர் பண்ணிக்க ஆசைப்படுகிறேன்” என்றான் கண்ணில் காதலை தேக்கி வைத்து.


“சாரி சார் இது சரி வராது. உங்க மனசை சலனப்படுத்துற மாதிரி நான் நடந்துருந்தா என்னை மன்னிச்சிடுங்க” என்றவள் அவன் பேசுவதற்கு கூட வாய்ப்பளிக்காமல் கார் கதவை திறந்து இறங்கியவள் அவன் கூப்பிட கூப்பிட நிற்காமல் விறுவிறுவென நடந்தாள்.


மறுநாள் அலுவலகத்துக்கு வந்தவளை அழைத்தான். அவளை ஆழ்ந்து பார்க்க தலை குனிந்தாள்.


“சொல்லு மதி நேத்து நான் பேச வர்றதை கூட முழுசா கேட்காம நீ பாட்டுக்கு போயிட்ட. பொறுமையா நின்னு ஒழுங்கா பதில் சொல்லிட்டு போகணும்னு தோணலையா? சரி இப்ப சொல்லு உனக்கு ஏன் என்னை பிடிக்கலை?” என்றான்.


“சார் இது சரி வராது ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க” என்றாள் கவலையாக.


“சார் நான் ஆசிரமத்துல வளர்ந்த பொண்ணு. நான் குழந்தையா ஆசிரமத்து வாசல்ல கிடந்தேனாம். எனக்கு அம்மா அப்பா யாரு அவங்க உயிரோடு இருக்காங்களா இல்லையா எதுவுமே தெரியாது. ஏன் நான் முறையா பிறந்தனானு கூட தெரியாது. என்னை பத்தி எனக்கு எதுவுமே சரியா தெரியாது. சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்துல இருக்க நீங்க என்னை உங்க வாழ்க்கை துணையா தேர்ந்தெடுக்கிறது சரி வராது சார். இதை இதோட விட்டுருங்க” என்றாள்.


“மதி இதெல்லாம் ஒரு காரணமா சொல்லு. சும்மா இது சரி வராது சரி வராதுனா என்ன அர்த்தம்” என்றான்.


“ இதுல உன் தப்பு எதுவுமே இல்ல. நீ ஒரு அற்புதமான பொண்ணு. உன்னை போல ஒருத்தி கூட வாழ நான் கொடுத்து வச்சிருக்கணும். நல்ல யோசிச்சு உன் முடிவை சொல்லு. என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. எவ்வளவு நாள் ஆனாலும் சரி உன் மனசு மாறுவதற்கு நான் காத்திருப்பேன்” என்றான் சூர்யா.


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 20


என்றாவது மதி மனம் மாறி தன் காதலை ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தான் சூர்யா.


மதிக்கு சூர்யாவை பிடித்திருந்தாலும் அவள் மனதில் உள்ள தயக்கம் அவன் காதலை ஏற்றுக்கொள்ள இடம் தரவில்லை.


அவன் காதல் பார்வையை கண்டும் காணாமல் இருந்தாள் வெண்மதி. ஆனால் அது கூட அவளுக்கு ஏதோ போலிருக்க கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தாள். சரியாக யோசிக்காமல் எடுத்த முடிவு அவளுக்கு ஆபத்தை விளைவித்தது.


வெண்மதி அன்று அலுவலகத்துக்கு வரவில்லை. பொதுவாக அவள் விடுப்பு எடுக்கிறாள் என்றாள் தகவல் சொல்லுவாள். தகவல் ஏதும் சொல்லாமல் அவள் வராமலிருப்பதைக் கண்டு அவளுக்கு உடல் நிலை சரியில்லையோ என கவலைபட்டான் சூர்யா.


அவளுக்கு அழைக்க அழைப்பு சென்று கொண்டே இருந்தது அவள் எடுக்கவில்லை.


உடம்பு தான் சரியில்லை போல என்ற முடிவுக்கு வந்தவன் மாலை அவள் ஹாஸ்டல் சென்று விசாரிக்கலாம் என நினைத்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.


அலைபேசி சத்தத்தில் கலைந்தவன் திரையில் மதியின் எண்ணை கண்டு சிரித்துக் கொண்டே அழைப்பை ஏற்றான்.


“ஹலோ சார் நான் மதி. நான் வெளிய வந்து ஜூஸ் மயக்கம் இங்க தப்பா இருக்கு.. எனக்கு பயமா.. என்னை காப்பாத்துங்க எனக்கு பயமா இருக்கு” என்றாள் குளறலாக.


அவள் கோர்வையாக பேசாமல் உளறுவதைக் கண்டு அவள் ஆபத்திலிருப்பதை உணர்ந்தான்.


அவளை கலவரப்படுத்தாமல் “மதி உடனே லொகேஷன் வாட்ஸ்அப்ல அனுப்பு பயப்படாதே தைரியமா இரு நான் வந்துடுவேன்” என்றவன் அவள் அனுப்பிய லோக்கேஷனுக்கு விரைந்தான்.


அவள் அனுப்பிய இடத்திற்கு செல்வதற்குள் அவன் பயந்து பரிதவித்தது போனது அவனுக்கு மட்டுமே தெரியும்.


அது ஒரு சிறிய அலுவலகம். அங்கு அவன் சென்றபோது மதி மயக்கத்திலிருக்க அவளிடம் ஒருவன் தவறாக நடக்க முயன்றதை கண்டு அவனை புரட்டி எடுத்துவிட்டு மதியை தூக்கிக் கொண்டு சென்றான் சூர்யா.


மயக்கம் தெளிந்த மதி மருத்துவமனையிலிருப்பதை உணர்ந்து பயத்துடன் குனிந்து தன்னை ஆராய “பயப்படாதே உனக்கு ஒன்னுமாகலை” என அவளருகில் சென்றான் சூர்யா.


“சோ என்னை விட்டு போகணும்னு வேற வேலை தேடி போயிருக்க” என்றான் சூர்யா.


“என்னால உங்கள வேண்டான்னு சொல்லிட்டு உங்க பக்கத்தில இருந்து வேலை பார்க்க முடியல அதனால உங்களை விட்டு தள்ளி இருக்கலாம்னு முடிவு பண்ணி இப்படி ஒரு ஆபத்துல மாட்டிக்கிட்டேன்” என்றாள் தலை குனிந்து கொண்டு.


“உனக்கு ஒரு ஆபத்துனா ஏன் போலீசை கூப்பிடாம என்னை கூப்பிட்டேன்னு யோசிச்சு பாரு உனக்கே உன் மனசு புரியும். எங்க என் பக்கத்திலிருந்தா உன்னையும் மீறி உன் மனசு எனக்கு தெரிஞ்சிடுமோனு பயந்துதானே ஓடின” என்றான் சூர்யா.


அவள் இருந்த படுக்கையிலிருந்து தட்டுத் தடுமாறி எழுந்து அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.


“என் மனசுக்குள்ள எப்பவோ நீங்க வந்துட்டீங்க ஆனா இதெல்லாம் சரி வராதுன்னு பயந்து இப்படி பண்ணிட்டேன். இப்ப சொல்றேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். ஐ லவ் யூ சூர்யா. என்னால நீங்க இல்லாம வாழ முடியாது” என்றதும் அவன் புன்னகையுடன் கண் சிமிட்டினான்.


“நிஜமா எனக்கு தப்பா ஒன்னும் நடக்கலை தானே” என்றாள் சந்தேகமாக தன்னை ஆராய்ந்து கொண்டே.


“சத்தியமா உனக்கு ஒன்னும் நடக்கலை. அப்படியே ஏதாவது நடந்திருந்தா கூட உன்னை நான் விட்டுருக்க மாட்டேன். காதல் மனசு சம்பந்தப்பட்டது. இனி என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு எந்த தடையும் இல்லைனு நம்புகிறேன்” என்றான்.


“நான் உங்களை ரொம்ப ரொம்ப காதலிக்கிறேன். உங்க வீட்ல என்னை ஏத்துக்க மாட்டாங்கன்னு பயந்து தான் விலகிப் போக முடிவு பண்ணேன். இனி உங்களை விட்டு என் உயிர் இருக்கிற வரை பிரிய மாட்டேன். நம்ம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்?” எனக் கேட்டாள் வெண்மதி.


“சீக்கிரமே” என்றவன் வீட்டில் பேச பார்வதி ஒத்துக்கொள்ளவில்லை.


சூர்யா அவரிடம் தெளிவாக “எனக்கு உங்க ஆசீர்வாதம் வேணும்னு நினைச்சுதான் உங்ககிட்ட பேசிட்டுருக்கேன் நீங்க ஒத்துக்கலைன்னா நானா போய் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றான்.


சந்துருவுக்கும் இப்படி யாருமில்லாத பெண்ணை தம்பி திருமணம் செய்வதில் பெரிதாக விருப்பமில்லை.


எனினும் இது தம்பியின் வாழ்க்கை சூர்யா அவன் வாழ்க்கையை அவன் விருப்பப்படி வாழ வேண்டும் என முடிவெடுத்து தாயிடம் பேசி சம்மதிக்க வைத்தான் சந்துரு.


கவிதா, பார்வதி, மல்லிகா, தேவிகா யாருக்கும் வெண்மதியை பிடிக்கவில்லை. அவளை இளக்காரமாக பார்த்தனர்.


“உன் அம்மா அப்பா பேரு கூட உனக்கு தெரியாதா? அவங்கள நீ பார்த்ததே இல்லையா? அனாதை ஒன்னுமில்லாதவ. முறை தவறி பிறந்தவ. பிறந்தநாள் கூட தெரியாதவ” என பலவகையில் பேசி அவளை நோகடித்தனர் பெண்கள் கூட்டணி.


ஆரம்பத்தில் முழு மனசாக அவர்களின் திருமணத்தை ஏற்காத சந்துரு வெண்மதியின் நல்ல குணத்தை கண்டு அவளை தன் சகோதரியாகவே ஏற்றுக் கொண்டான்.


மதி ஒரு போதும் சூர்யாவிடம் தன்னை இப்படி பேசுகிறார்கள் என சொன்னதில்லை.


தங்கள் இல்லற வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருப்பதாக சூர்யா நினைக்க இங்கே எல்லோரும் குழந்தையில்லை என வாய்க்கு வந்தபடி பேச மதி மனஉளைச்சலுக்கு உள்ளானாள்.


சூர்யா மதியை தனியாக அழைத்து வந்து விட்டான் இனியாவது அவர்கள் வாழ்க்கை நிம்மதியாக செல்ல வேண்டும்.


ஒரு பிரம்மாண்டமான அழகிய வீட்டின் முன் காரை நிறுத்தினான் சூர்யா.


“வா நம்ம உள்ள போகலாம். இனி நம்ம இங்கதான் சந்தோஷமா இருக்க போறோம்” என அவளை கைப்பிடித்து அழைத்துச் சென்று அமர வைத்தான்.


“நாளைக்கே பவானி அக்காவ இங்க வர சொல்லலாம்” என்றான் சூர்யா.


“ சாரி சூர்யா நான் அப்படி பண்ணிருக்க கூடாது. யோசிக்காம அவசரப்பட்டுட்டேன்” என வருத்தப்பட்டாள் வெண்மதி.


“நீ என்ன சொன்னாலும் இந்த விஷயத்துல எனக்கு உன் மேல கோபம் குறையவே குறையாது. நீ பண்ணது ரொம்ப தப்பு. நீ இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு கூட நீ யோசிக்கல. கொஞ்சமாவது என்னை பத்தி யோசிச்சிருந்தா நீ இப்படி பண்ணிருக்க மாட்ட. நீ என்கிட்ட உண்மையை சொல்லிருக்கணும். யாரு என்ன சொல்லிருந்தாலும் நீ அதை என்கிட்ட சொல்லிருக்கணும் அதைவிட்டுட்டு இப்படி முட்டாள்தனமா நீ சாக முடிவெடுத்ததை என்னால ஏத்துக்கவே முடியாது” என்றான் விரக்தியாக.


“சாரி சூர்யா குடும்பம் பிரிய கூடாதுன்னு” என மதி ஆரம்பிக்க “என்னை ஒரேடியா பிரிய முடிவு பண்ணிட்ட” என முடித்தான் சூர்யா.


“சரி விடு நடந்து முடிஞ்சத பத்தி பேச வேண்டாம் நாளைக்கே நம்ம டாக்டர கன்சல்ட் பண்ணலாம்” என்றான் சூர்யா.


சரி என மகிழ்ச்சியுடன் தலையசைத்தாள் வெண்மதி.


அவள் மகிழ்ச்சி நிலைக்குமா?


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 21


சி.ஆர்.சி (CRC) கருத்தரித்தல் மையம் டாக்டரின் எதிரில் சூர்யாவும் வெண்மதியும் அமர்ந்திருந்தனர்.


“நீங்க ரெண்டு பேரும் சரியான நேரத்தில் தான் எங்ககிட்ட வந்திருக்கீங்க. நேச்சுரல் கன்சப்ஷனுக்கு முயற்சி பண்ணி உங்களுக்கு நடக்கலை. இனி நாம் மருத்துவரீதியா முயற்சி பண்றதுதான் சரியா இருக்கும் என்றார் மருத்துவர் பிரேமா.


“சரி டாக்டர் இப்ப நம்ம என்ன பண்ணலாம்” எனக் கேட்டாள் வெண்மதி.


“உங்க ரெண்டு பேருக்கும் சில பேசிக் டெஸ்ட் எடுத்துருக்கோம் அது நார்மலா இருக்கு. மதி உங்களுக்கு இன்டர்னல் சோனோகிராபி (Internal sonography) எடுப்போம். உங்களோட ஓவுல்யூசன் (Ovulation) பீரியட் கண்டுபிடிச்சு சொல்லுவோம்” என்றார்.


“ஓகே டாக்டர்” என அவர் கூறுவதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள் மதி.


“நாங்க சொல்ற அந்த தேதிகளில் நீங்க ரிலேஷன்ஷிப்ல இருந்தா கருத்தரிக்க வாய்ப்பு அதிகம். இதை ட்ரை பண்ணி பார்க்கலாம் ஒர்க் அவுட் ஆகலனா அடுத்த ஆப்ஷன் ஐயூஐ (IUI)

ஐவிஎப் (IVF) ப்ரோசிஜர் இருக்கு. இந்த ட்ரீட்மென்ட்க்கு எங்ககிட்ட வேரியஸ் பேக்கேஜஸ் இருக்கு” என அவர் பேச பேச சூர்யாவுக்கு எரிச்சலாக வந்தது.


அவனுக்கு பணம் பெரிய விஷயமில்லை. இது மதியின் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. அவன் ட்ரீட்மென்ட்க்கு மறுத்ததற்கு இதுவே முக்கிய காரணம்.


“இந்த ட்ரீட்மெண்ட் பண்ணா கண்டிப்பா எனக்கு குழந்தை பிறக்கும் தானே” என்றாள் மதி ஏக்கமாக.


சூர்யாவுக்கு அவளை முட்டாள் என திட்டும் அளவு கோபம் வந்தது.


“கண்டிப்பா மதி உங்களுக்கு குழந்தை பிறக்கும். எங்ககிட்ட ட்ரீட்மென்ட் எடுக்குற எல்லாருக்கும் நல்ல ரிசல்ட் கிடைச்சிருக்கு. எங்ககிட்ட சக்ஸஸ் ரேட் ரொம்ப அதிகம்” என்றார் பிரேமா.


“ஓகே மிஸ்டர் சூர்யா நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க நான் மதிக்கிட்ட கொஞ்சம் பேசணும். இது ஒரு பேசிக் கவுன்சிலிங் தான். நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க இவங்க கிட்ட பேசிட்டு உங்கள கூப்பிடுறேன். கவுன்சிலிங் முடிச்சிட்டு எக்ஸ்பர்ட் வீடியோ கான்பிரன்ஸ் அரேஞ்ச் பண்றேன்” என்றவர் சூர்யாவை வெளியே அனுப்பினார்.


வெளியேறியதும் மதியிடம் அவள் லாஸ்ட் மந்த் பீரியட் (எல்.எம்.பி) என அனைத்தையும் கேட்டுக் கொண்டார்.


மருத்துவர் அவளிடம் பேச்சு கொடுக்க அவள் தன்னுடைய குழந்தை பற்றிய ஏக்கத்தை சொன்னாள் பிரேமாவும் அவள் மனஉளைச்சலை நன்கு புரிந்து கொண்டார்.


“டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ட்ரீட்மெண்ட் பெயின்புல்லா இருந்தா கூட நான் தாங்கிப்பேன். எங்களுக்கு கட்டாயம் ஒரு குழந்தை வேண்டும்" என்றதும் மருத்துவரின் முகத்தில் பிரகாசமான சிரிப்பு வந்தது.


“மதி நீங்க உங்கள பத்தியும் உங்க ஹஸ்பண்ட் பத்தியும் எதுவுமே சொல்லலை” என்றதும் மதி வெள்ளந்தியாக அவளைப் பற்றியும் அவள் கணவன் அவனது தொழில் வசதி வாய்ப்பு முதல் தாங்கள் தனியாக வந்தது வரை அனைத்தையும் அவரிடம் ஒப்பித்தாள்.


“நீங்க ஒன்னும் வொரி பண்ணிக்காதீங்க நிச்சயம் உங்களுக்கு குழந்தை உண்டு. உங்க டேட்ஸ் எல்லாம் ஓகே அதனால உங்களுக்கு இப்பவே இன்டர்னல் சோனோகிராபி பண்ணலாம்” என்றவர் சூர்யாவை அழைத்தார்.


“உங்க வைப்புக்கு இப்ப இன்டர்நெல் சோனகிராபி பண்ணிடலாம். அவுங்க வெஜினா உள்ள ஒரு டிவைஸ் செலுத்துவோம் இதுல இவங்களோட யூட்ரஸ், ஓவரீஸ், டியூப்ஸ், சர்விக்ஸ், பெல்விக் ஏரியா எல்லாத்தையும் எங்களால பார்க்க முடியும். அவுங்களோட எக் டெவலப்மென்ட் பாலிகல் டெவலப்மென்ட் எல்லாத்தையுமே மானிட்டர் பண்ண முடியும்" என்றவர் மதியை அழைத்துச் சென்று அவளுக்கு இன்டர்னல் சோனாகிராபி செய்தார்.


“மதிக்கு ரெகுலரா பாலிக்கல் டெவலப்மெண்ட் மானிட்டர் பண்ணனும். இன்னைக்கு டெஸ்ட் பண்ணியாச்சு மறுபடியும் நாளைக்கு வாங்க இதேபோல மானிட்டர் பண்ணனும். அதுக்கு அப்புறம் சரியான தேதிகள் கொடுப்போம் அப்ப நீங்க உறவில் ஈடுபட்டீங்கன்னா மதி கருத்தரிக்க வாய்ப்பு அதிகம். சோ மறக்காம நாளைக்கு நீங்க வாங்க. இப்ப மதிக்கு ஒரு இன்ஜெக்ஷன் போடணும்” என்றார்.


“இது என்ன இன்ஜெக்ஷன் எதுக்காக போடுறீங்க?” என விசாரித்தான் சூர்யா.


“இது நார்மல் இன்ஜெக்ஷன் தான் பயப்படுறதுக்கு ஒன்னுமில்ல ஓவல்யூசன்க்கு முன்னாடி இந்த இன்ஜெக்ஷன் போடணும்” என்றதும் சூர்யா சரி என தலையசைக்க மதிக்கு ஊசி செலுத்தப்பட்டது.


“நாளைக்கு பாலிக்குலர் மானிட்டரிங் பண்றதுக்கு இதே டைமுக்கு வந்துருங்க” என அவர்களை அனுப்பி வைத்தார் பிரேமா.


“தேங்க்யூ டாக்டர்” என அவரிடம் விடை பெற்றனர்.


காரில் திருப்பி செல்லும்போது மதி மகிழ்ச்சியுடன் “சூர்யா நமக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க போகுது. எனக்கும் நம்பிக்கை வந்துருச்சு டாக்டர் ரொம்ப பாசிட்டிவ்வா பேசினாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என பேசிக் கொண்டிருக்க அவன் எதுவும் பேசாமல் அமைதியாக வருவதை கண்டு “என்னாச்சு சூர்யா எதுவும் பேசாம வர்றீங்க” எனக் கேட்டாள்.


“மதி எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கலை. அந்த டாக்டர் பேசுற விதமே கொஞ்சம் கூட சரியில்லை. ஏதோ பியூட்டி பார்லர் மாதிரி அந்த பேக்கேஜ் இருக்கு இந்த பேக்கேஜ் இருக்குன்னு சொல்றாங்க. அவங்க டேட் சொல்றோம் அப்ப நீங்க ஒன்னு சேருங்கன்னு சொல்றது எனக்கு பிடிக்கலை. அது நம்மளோட அந்தரங்கம் டைம் டேபிள் போட்டு புருஷன் பொண்டாட்டி ஒண்ணா இருக்கிறது சரி வராது. இது நம்ம உறவையே அசிங்கப்படுத்துற மாதிரி எனக்கு தோணுது. எனக்கு இதுல சுத்தமா உடன்பாடில்லை” என்றான் சூர்யா.


“ப்ளீஸ் சூர்யா நமக்கு குழந்தை பிறக்கும் வரை தான் இதெல்லாம். எனக்காக கொஞ்ச நாள் இந்த கஷ்டத்தை பொறுத்துக்கோங்க” என கண்ணை சுருக்கி கெஞ்சினாள் மதி.


“சரி உனக்காக இதுக்கு ஒத்துக்குறேன். ஆனா அதுக்கு நடுவுல கரால (CARA) நமக்கு குழந்தை கிடைச்சா அதோட ட்ரீட்மெண்ட் நிறுத்திரனும் அதுக்கு பிறகும் ட்ரீட்மெண்ட் எடுப்பேன்னு நீ பிடிவாதம் பிடிக்கக்கூடாது” என்றான் சூர்யா.


“சரி சூர்யா கரால நமக்கு குழந்தை கிடைச்சா அதுக்கு அப்புறம் நான் ட்ரீட்மெண்ட்ட நிறுத்திடுவேன்” என சம்மதித்தாள் வெண்மதி.


சிஆர்சி கருத்தரித்தல் மையத்தில் பிரேமா அமர்ந்திருக்க வளர்மதி என்ற மருத்துவரும் சீதா என்ற நர்சும் உடன் இருந்தனர்.


“இப்ப வந்துட்டு போன பேஷண்ட் வெண்மதிக்கு குழந்தை பெத்துக்கணும்னு ரொம்ப ஆசை. அவ ஹஸ்பண்ட் சூர்யா நல்ல ரிச். வசதிக்கு எந்த ஒரு குறையும் இல்ல. அந்த பொண்ண கொஞ்சம் கேன்வாஸ் பண்ணா போதும் நம்ம சொல்ற எல்லாத்துக்கும் ஒத்துப்பா” என்றார் பிரேமா.


“வெண்மதியோட ரிப்போர்ட்ல எதுவும் ப்ராப்ளம் இருக்கா?” என விசாரித்தார் வளர்மதி.


“அவுங்க ரெண்டு பேரோட ரிப்போர்ட்சும் கம்ப்லீட்லி நார்மல். மதிக்கு எந்த பிரச்சனையும் இல்லை அவகிட்ட என்னென்னமோ பேசிருக்காங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துருக்கா. அதனால தான் அவ கன்சீவ் ஆகல. அந்த பொண்ணுக்கு அமைதியான மனநிலை இருந்தாலே போதும் அவ நார்மலாவே கன்சீவ் ஆகிடுவா” என்றார் பிரேமா.


“அப்படிலாம் நார்மலா கன்சீவானா நம்ம பொழப்பு என்னாகிறது” என்றார் வளர்மதி.


உடனே நர்ஸ் சீதா “மேடம் அப்ப பாலிக்குலர் மானிட்டரிங் பண்ணி சரியான தேதியில அவங்க ஒண்ணா இருந்து மதி நார்மலா கன்சீவ் ஆகிட்டானா என்ன பண்றது”


“நான் இருக்கும் போது அவ எப்படி நார்மலா கன்சீவ் ஆவா. பாலிக்குலர் மானிட்டரிங் பண்ணுவோம். நம்ம சொல்ற அந்த டேட்ஸ்ல அவங்க ஒன்னு சேர்ந்தா கூட மதி கன்சீவ் ஆகமாட்டா. மதிக்கு நான் இப்ப என்ன இன்ஜெக்ஷன் போட்டன்னு நினைக்கிற. அவ கன்சீவ் ஆகக்கூடாதுனு தான் நான் இன்ஜெக்ஷனே போட்டேன். நாளைக்கும் அவளுக்கு இதே இன்ஜெக்ஷனை தான் போடப் போறேன். அவ கன்சீவ் ஆகாம இருக்குறதுக்கான மருந்து தான் கொடுக்கப் போறேன். எதுவும் தெரியாம மதியும் அதை சாப்பிடப் போறா. இயற்கையா இவளை மாதிரி வசதியான ஆட்கள் கருத்தரிச்சா நமக்கு வேலை இல்லாம போயிடும்” என சிரித்தார் பிரேமா.


“அப்ப இந்த வெண்மதியை வச்சு அவ தலைல எல்லா டிரீட்மெண்ட்டையும் கட்டி நம்ம லாபம் சம்பாதிக்க வேண்டியது தான்” என வளர்மதி சிரிக்க உடன்சேர்ந்து பிரேமாவும் சீதாவும் சிரித்தனர்.


குழந்தையில்லாத பெண்களின் கண்ணீர் தான் இது போன்ற கருத்தரித்தல் மையங்களில் இன்வெஸ்ட்மென்ட்


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 22


மறுநாள் பாலிக்குலர் மானிட்டரிங்க்கு மதி தயாராகிக் கொண்டிருந்தாள். “நீங்க ஆபீஸ் கிளம்புங்க சூர்யா டெஸ்ட் தானே நானே போயிட்டு வர்றேன். அதான் பவானிக்கா இருக்காங்களே அவுங்கள கூட்டிட்டு போயிட்டு வர்றேன்” என அவனை கிளம்ப சொன்னாள்.


“இல்ல மதி நீ தனியா போக வேண்டாம் நான் கூட வர்றேன்” என்றான் சூர்யா.


“சூர்யா இது சாதாரண டெஸ்ட் தானே நான் போயிட்டு வர்றேன் நீங்க கூட வந்தா டாக்டர் அப்படி பேசுறாங்க இப்படி பேசுறாங்க எனக்கு விருப்பம் இல்லை அது இதுன்னு என்னை டென்ஷன் பண்ணுவீங்க. நானே போயிட்டு வந்து கால் பண்றேன்” என பேசி அவனை அனுப்பி வைத்துவிட்டு தான் மட்டும் மருத்துவமனைக்கு சென்றாள்.


“ஹலோ டாக்டர்” என பிரேமாவுக்கு எதிரே அமர்ந்தாள் வெண்மதி.


அவளைக் கண்டு சிரித்தவர் அவளுக்கு பாலிக்குலர் மானிட்டரிங் செய்தார்.


“ஓகே மதி நான் டேட்ஸ் கொடுத்துருக்கேன் அன்னைக்கு கம்பல்சரி நீங்க தாம்பத்திய உறவு வச்சுக்கோங்க. நர்ஸ் உங்களுக்கு இன்ஜெக்ஷன் போடுவாங்க. நான் கொடுக்குற டேப்லட்ஸ் மறக்காம எடுத்துக்கோங்க. இன்கஏஸ் இது ஒத்து வரலைனா அடுத்த ஸ்டெப் ஐயூஐ ஆர் ஐவிஎஃப் எது உங்களுக்கு செட் ஆகுதோ அதான் பண்ணனும் அதுக்கு உங்க மைண்ட்ட தயாரா வச்சுக்குங்க” என்றார்.


“டாக்டர் அப்ப இந்த டைம் என்னால கன்சீவ் ஆக முடியாதா?” என்றாள் பயத்துடன்.


அவள் பயத்தை கண்டு சிரித்தார் பிரேமா.


“அப்படி இல்ல மதி இப்ப நீங்க கன்சீவ் ஆகிட்டா வெல் அண்ட் குட் ஆனா ஒருவேளை ஆகலனா அடுத்த ஆப்ஷன் இது இருக்குன்னு சொல்றேன். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும்” என அவளை தேற்றினார் பிரேமா.


“நீ எப்படி இந்த முறை கர்ப்பமாகுறனு பார்க்கிறேன்” என சிரித்துக் கொண்டார் பிரேமா.


கணவனுக்கு அழைத்து மருத்துவமனை சென்று வந்ததை தெரிவித்துவிட்டு வீட்டில் வேலைகளை பார்த்தாள்.


“மதிமா இப்பதான் எனக்கு சந்தோஷமா இருக்கு. இந்நேரம் அங்க இருந்தா அந்த ராட்சசிங்க உன்னை பிச்சு பிடிங்கிருப்பாங்க. இப்பதான் உன் முகத்துல சிரிப்ப பார்க்கிறேன். எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு” என்றார் பவானி.


“அக்கா அவங்க சூர்யாவோட அம்மாவும் அண்ணியும் நீங்க இப்படி பேசுறது தெரிஞ்சா சூர்யா என்ன நினைப்பாரு” என்றாள் மதி அதிருப்தியுடன்.


“ஆமா நீ இப்படியே நல்லவளா இரு உனக்கு சிலை எடுப்பாங்க. அவங்க உனக்குத் தான் மாமியார் எனக்கில்லை” என முறுக்கிக் கொண்டார் பவானி.


அன்று இரவு உறங்க வந்த கணவனிடம் “சூர்யா அங்க டேபிள்ல டேப்லெட் வச்சிருக்கேன் அந்த கவரையும் தண்ணியும் கொஞ்சம் எடுத்துட்டு வாங்க” என்றாள்.


அதை எடுத்து வந்து அவளிடம் “என்ன இவ்வளவு டேப்லட்ஸ் இருக்கு?” என்றான் குழப்பமாக.


“இதெல்லாம் நான் சாப்பிடத் தான் கொடுத்துருக்காங்க” என்றாள்.


“அதுக்காக இவ்ளோ டேப்லட்ஸா என்ன டேப்லெட் எதுக்குன்னு விசாரிச்சியா?” என்றான் யோசனையாக.


“ஹெல்த் வீக்கா இருக்குல அதுக்கு அப்புறம் அயன் டேப்லெட், பாலிக் ஆசிட் டேப்லெட், எக் டெவலப்மெண்ட் மெடிசின்ஸ் கொடுத்துருக்காங்க நான் எல்லாம் தெளிவா கேட்டுட்டேன்” என்றாள்.


அவளிடம் தற்போது சாப்பிட வேண்டிய மருந்துகளை கேட்டு அதை தானே பிரித்து அவள் கையில் கொடுத்தான்.


அவளும் மாத்திரையை போட்டு விட்டு தண்ணீர் குடித்தாள்.


அது தன் மனைவி கருத்தரிக்கக் கூடாது என கொடுக்கப்பட்ட மருந்து என தெரியாமல் தானே அதை பிரித்து அவளிடம் கொடுத்திருந்தான்.


“அவ்வளவு தானே மாத்திரை போட்டாச்சுல படுக்கலாம்” என அவளை அணைத்துக் கொண்டு படுத்தான் சூர்யா.


பார்வதி கவிதா இருவரின் தொல்லையில்லாமல் அவர்களின் நாட்கள் அமைதியாக சென்றது.


அன்று இரவு உணவு சாப்பிட்டு முடித்ததும் சூர்யாவிடம் “இன்னைக்கு டாக்டர் கொடுத்த டேட் நம்ம இன்னைக்கு சேர்ந்திருக்கணும்” என அவள் சொன்னதும் அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.


அவர்கள் இருவருமே ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்திருந்தனர் அவளுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசிப்பவன் சூர்யா.


கணவனும் மனைவியும் இணையும் தாம்பத்தியம் அவர்களின் ஒட்டுமொத்த காதலை பகிரும் தருணம் அதை இன்று நீங்கள் இணைய வேண்டும் என வேறொருவர் குறித்து கொடுப்பது ஏனோ அவர்கள் பெட்ரூம்மை யாரோ எட்டிப் பார்ப்பது போன்ற பிம்பத்தை அவனுக்கு ஏற்படுத்தியது இது போன்ற சூழலை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அதில் உள்ள வேதனை புரியும்.


மதிக்குமே அதே நிலை. இன்று இணைய வேண்டும் இன்று வேண்டாம் என பிளான் பண்ணி இணைவது அவளை வருத்தியது. எனினும் குழந்தை ஏக்கத்திற்கு பதில் சில மாதங்கள் இந்த கஷ்டத்தை தாங்கிக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு அவள் எப்போதோ வந்துவிட்டாள்.


அவனுக்கும் இந்த சூழலை கடப்பது வேதனையாக இருந்தது எனினும் அவளுக்காக இதை கடந்து தான் ஆக வேண்டும் என பொறுமையாக இருந்தான்.


இவர்கள் இருவருக்குமே தெரியவில்லை என்னதான் இவர்கள் சரியான தேதிகளில் ப்ளான் பண்ணி இணைந்தால் கூட மதி கர்ப்பமாக மாட்டாள் என்றும் அவளுக்கே தெரியாமல் கர்ப்பமாகாமல் இருப்பதற்கான மாத்திரைகளை அவள் உண்டு கொண்டிருக்கிறாள் எனத் தெரிந்தால் அவர்கள் என்ன ஆவார்களோ?


அந்த மாதம் எப்படியும் உண்டாகிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த மதி வீட்டு விலக்கான போது மனமுடைந்துவிட்டாள்.


அவள் முகத்தை வைத்து அவள் மனநிலையை புரிந்து கொண்டான் சூர்யா. “மதி இப்ப தானே ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சோம் இந்த மாசம் இல்லன்னா அடுத்த மாசம். நீ இப்படி உடைந்து போனா எப்படிம்மா தைரியமா இரு” என்றதும் அவள் கண்கலங்கியது.


“ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சுக்கு மதி என்னால வாழ்நாள் முழுசும் கூட எனக்குன்னு ஒரு குழந்தையில்லாம வாழ முடியும் ஆனா நீயில்லாம என்னால ஒரு நொடி கூட வாழ முடியாது அதை என்னைக்கும் மறந்துடாதே” என்றான் சூர்யா.


அவன் கூறியதை நினைவில் வைத்துக் கொள்வாளா வெண்மதி?


தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 23


மேலும் மாதங்கள் கடந்து செல்ல மதி உண்டாகவில்லை. அது அவளை கவலையடைய செய்தது. இதே நிலை தொடர்ந்தால் கடைசி வரை தன் வாழ்க்கையில் ஒரு குழந்தையை அள்ளிக் கொஞ்ச முடியாமல் போய்விடுமோ என பயந்தாள்.


“டாக்டர் நீங்க கொடுத்த மெடிசின்ஸ் உங்க இன்ஸ்ட்ரக்சன் எல்லாம் ஒழுங்கா பாலோ பண்ணேன் ஆனா நான் கன்சீவ் ஆகலயே எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என அவரிடம் அழுதாள் வெண்மதி.


“மதி ஏன் இவ்வளோ எமோஷன் ஆகுற. மெடிக்கல் பீல்டு எவ்வளவோ முன்னேறிட்டு. இப்ப நம்ம பண்ணது பேஸிக் மெத்தேட் இனி நம்ம அட்வான்ஸ்டா போகலாம் ஐயூஐ தான் அடுத்த ஆப்ஷன்” என அவள் மூளையை சலவை செய்ய முயன்றார் பிரேமா.


“சரி பண்ணிடலாம் எப்ப பண்ணலாம்” என்றவளை பார்த்து பிரேமாவுக்கு கேலியாக இருந்தது. “இவளை சம்மதிக்க வைக்க கொஞ்சம் கூட கஷ்டப்படத் தேவையில்லை இவ சரியான முட்டாள்” என அவருக்கு தோன்றியது.


“ஐயூஐ பண்ணிடலாம் சிம்பிள் ப்ரோசிஜர் தான் ஆனா இதுக்கு உங்க ஹஸ்பெண்ட் ஒத்துப்பாரா? எனக்கு என்னமோ அவரு ரொம்ப பயப்படுற மாதிரி தோணுது” என்றார் அவளை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு.


“அவருக்கு என் மேல ரொம்ப பாசம் என் மேல உள்ள அக்கறைல தான் இவ்வளவு கேர் எடுத்துக்கிறாரு. அவரை சம்மதிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நான் கேட்டா அவரு கண்டிப்பா மறுக்க மாட்டாரு. எனக்காக எது வேணாலும் செய்வாரு. அவரை நான் கன்வின்ஸ் பண்றேன். எனக்கு கன்சீவ்வானா போதும்” என்றாள் ஏக்கத்துடன்.


அவளது ஏக்கத்தை வியாபாரமாக பார்க்கும் பிரேமா போன்றவர்களை என்ன பண்ணலாம்?


அன்று இரவு அலுவலகம் விட்டு வந்தவனிடம் “சூர்யா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.


என்ன என்பது போல பார்த்தவனிடம் “நம்ம ஐயூஐ பண்ணலாம்னு தோணுது சூர்யா” என்றதும் அவனுக்கு கோபம் வந்தது.


“இப்ப அதுக்கு என்ன அவசியம்?” தன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்டான்.


“நம்ம ட்ரை பண்ணோம் பேசிக் மெத்தேட் ஒர்க் ஆகல அட்வான்ஸ் மெத்தேர்டு போகலாம். நமக்கும் வயசாகிட்டே போகுது. நம்ம தத்தெடுக்க அப்ளை பண்ணதுல லிஸ்ட்ல நம்ம பேரு இதுவரை வரல எவ்வளவு நாள் வெயிட் பண்ணிட்டு இருக்கது நம்ம ஐயூஐ பண்ணலாம்” என்றாள்.


“ஐயூஐ பண்ணலாம்னு சாதாரணமா சொல்ற. இதுபோல பெயின்புல்லான ட்ரீட்மென்ட் வேண்டாம்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா?” என அவளை சமாதானப்படுத்தினான்.


“சூர்யா இதெல்லாம் ரொம்ப பெயின்புல்லா இருக்காது ப்ளீஸ் சூர்யா நம்ம ஐயூஐ பண்ணிக்கலாம். அப்படியே வலிச்சா கூட நான் தாங்கிப்பேன் எத்தனையோ பேரு இது போல ட்ரீட்மெண்ட் எடுக்குறாங்க. நம்ம குழந்தை முகத்தை பார்த்தா நம்ம கஷ்டம் வலியெல்லாம் மறந்திடும்” என்றாள்.


“முட்டாள்தனமா பேசாதே மதி அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்க அவங்க செஞ்சாங்க இவங்க செஞ்சாங்கன்னு நம்ம செய்ய முடியாது. எல்லாரோட பாடியும் ஒரே மாதிரி இருக்காது. ஒருத்தங்களுக்கு இந்த மெத்தெர்ட் சக்சஸ் ஆச்சுனா நமக்கும் சக்சஸ் ஆகணும்னு இல்லை. அவங்க பாடி ட்ரீட்மெண்ட்ட அக்செப்ட் பண்ணிருக்கும். ஒருவேளை உன்னோட ஹெல்த் ட்ரீட்மெண்ட்க்கு செட் ஆகாம உனக்கு ஏதாவது ஆச்சுனா என்ன பண்ணுவ?” என்றான் கோபமாக.


“அப்படிலாம் எதுவும் ஆகாது சூர்யா. எனக்காக இதை மட்டும் செய்யுங்க ப்ளீஸ்” எனக் கெஞ்சினாள்.


“நான் எது சொன்னாலும் கேட்பதானே. இந்த விஷயத்துல ஏன் உனக்கு இவ்வளவு பிடிவாதம். யோசிக்காம அவசரப்பட்டு முட்டாள்தனமா முடிவெடுக்காதே” என்றான் பொறுமையாக.


“முட்டாள் தான் நான் முட்டாளே தான்” எனக் கத்தினாள் .


“நீங்க ஆம்பள உங்களுக்கு என்னோட உணர்வுகள் புரியாது. எனக்கு மனசெல்லாம் ரொம்ப வலிக்குது. நீங்க ஆம்பள உங்களை யாரும் பெருசா கேள்வி கேட்கல ஆனா என்னை உங்க அம்மா அண்ணி மட்டுமில்ல சொந்த பந்தம் வரவுங்க போறவங்கயெல்லாம் இதை பத்தி தான் பேசுவாங்க. என்கிட்ட இதை தவிர பேச அவுங்களுக்கு வேற விஷயமே கிடையாதா?”


“ கல்யாணமாகி எத்தனை வருஷமாச்சு. உனக்கு எத்தனை குழந்தைகள். ஐயோ உனக்கு இன்னுமா குழந்தையில்லை. அந்த கோவில் போ இந்த கோவில் போ அந்த விரதம் இரு இந்த விரதம் இரு. அந்த ஹாஸ்பிடல் போ. இங்க தான் நான் போனேன் என் சொந்தக்காரங்களுக்கு அங்க தான் பார்த்தோம். இதை தவிர வேற எதையுமே என்கிட்ட பேசமாட்டாங்க. எனக்கும் மனசிருக்கு வருஷக்கணக்கா இப்படியே பேசி பேசி என் மனசு உடைஞ்சிருச்சு. என்னோட வலியையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க” என்றாள் அழுகையுடன்.


“அழாதடி எனக்கு கஷ்டமா இருக்கு” என அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்.


“உன் மனசுல இவ்வளவு வருத்தம் இருந்திருக்கு. எல்லாருமே உன்னை இப்படி பேசுறாங்க உன்னை இப்படி கேள்வி கேட்க்குறாங்கனு நீ சொன்னாதானே எனக்கு தெரியும். உனக்கு ஏதோ கவலைனு நான் கணிக்கலாம் ஆனா உனக்கு என்ன கஷ்டம்னு நீ நேரடியா சொன்னாதானே தெரியும்.”


“ என்கிட்ட குழந்தைய பத்தி இதுவரை யாருமே கேட்டதில்லை அதனால உனக்கு இப்படி ஒரு வருத்தம் இருக்குனு நீ சொல்லாம எனக்கு எப்படிடீ தெரியும். நீ ஆரம்பத்திலேயே உன் மனசுல இப்படி ஒரு கஷ்டமிருக்குனு என்கிட்ட சொல்லிருந்தா இதை இவ்ளோ தூரம் வளர விட்டிருக்கமாட்டேன்” என்றான்.


“என்ன சொல்ல சொல்றீங்க? எல்லாரும் என்கிட்ட அப்படி பேசுறாங்க இப்படி பேசுறாங்க நான் தினமும் மனசுக்குள்ள அழறேன். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வராங்கனாளே பயந்து பயந்து சாகுறேனு சொல்ல சொல்றீங்களா? நான் கஷ்டப்படுறது பத்தாதுனு உங்களையும் சேர்த்து கஷ்டப்படுத்த சொல்றீங்களா?” என்றாள் அழுகையுடன்.


“ஷ்ஷ்ஷ் போதும்மா அழாதே” என்றவனுக்கும் கண் கலங்கியது.


“சும்மா எல்லாரும் தொண தொணன்னு இதை பத்தி பேசாம இருந்தா எனக்கு இவ்ளோ ஏக்கமும் மனஉளைச்சலும் வந்திருக்காதோ என்னமோ தெரியல. ப்ளீஸ் சூர்யா எனக்காக இதுக்கு ஒத்துக்குங்க. எனக்கு ஒன்னுமாகாது. எனக்கு வலிச்சா கூட நான் தாங்கிப்பேன். இதை நம்ம சேர்ந்து ஓவர்கம் பண்ணுவோம். சரினு சொல்லுங்க” என கண்ணீருடன் மடங்கி அமர்ந்தாள் வெண்மதி.


“நான் டாக்டர்ட்ட பேசிட்டேன். நீங்க நினைக்கிற அளவுக்கு இதெல்லாம் கஷ்டமான ப்ரோசிஜர் இல்லை. நீங்க இருக்கும் போது எனக்கு ஒன்னுமாகாது” என பேசிபேசி அவன் மனதை கரைத்தாள்.


கடைசியில் வேறுவழியின்றி அவளுக்காக அவள் கோரிக்கைக்கு சம்மதித்தான் சூர்யா.


“சரி உன் விருப்பப்படி ஐயூஐ பண்ணலாம்” என்றான்.


அவன் இதற்கு சம்மதித்திருக்க கூடாதோ என வருந்தும் நாளும் வந்தது.தொடரும்…
 
Last edited:

NNK-19

Moderator
அத்தியாயம் - 24


“நாங்க ஐயூஐ பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்” என்றான் சூர்யா பிரேமாவிடம்.


“வெரிகுட் நல்ல டெசிஷன் எடுத்துருக்கீங்க” என இருவரையும் பாராட்டினார் பிரேமா.


“இதனால மதியோட ஹெல்த்துக்கு ஏதாவது ப்ராப்ளம் வருமா?” என விசாரித்தான் சூர்யா.


“நீங்க நினைக்கிற அளவு இது பெரிய விஷயமில்லை. வெரி சிம்பிள் ப்ரொசீஜர். இவங்களுக்கு ஓவல்யூசன் ஆரம்பிச்சதும் டிரீட்மென்ட் ஆரம்பிச்சிடலாம். சூர்யா உங்களோட விந்தணுக்களை எடுத்து மதியோட கர்பப்பைல செலுத்துவோம். இது ரொம்பவே நார்மல் ப்ரொசீஜர். நேச்சுரல் கன்சப்ஷன் ஒர்க் ஆகலனா இதைத்தான் பொதுவா எல்லாரும் பண்ணுவாங்க. உங்களோட விந்தணுக்களை இவங்களோட கர்ப்பப்பைல செலுத்தனும். ஓவல்யூசன் டைம்ல தான் கருமுட்டைகள் வெளியாகும் சோ அந்த டைம்ல ப்ரொசீஜர் ஆரம்பிக்கணும். நான் உங்களுக்கு மென்ஷன் பண்ணின டேட்ல வந்துடுங்க” என அவர்களுக்கு விடை கொடுத்தார் பிரேமா.


மீண்டும் மீண்டும் பல தடவை சூர்யா வெண்மதியிடம் கேட்டான் “உனக்கு கட்டாயம் ஐயூஐ பண்ணனுமா? எனக்கு என்னமோ பயமாருக்கு” என்றான்.


“நான்தான் சொல்றேன்ல சூர்யா இதுல பயப்படுற அளவு எதுவுமே இல்ல. டாக்டரும் அதானே சொன்னாங்க” என அவனை சரி கட்டினாள்.


அடுத்த முறை மருத்துவமனை சென்ற போது மதிக்கு ஹச்.சி.ஜி (HCG) ஊசி செலுத்தினார்கள்.


அடுத்தடுத்து அவளுக்கு புரோசிஜர் ஆரம்பிக்கப்பட்டது.


ஐயூஐ முறைப்படி சூர்யாவினுடைய விந்தணுவை மதியுடைய கர்ப்பப்பை வாயிலில் செலுத்தினார்கள்.


அதற்குள் அவளுக்கு ஏகப்பட்ட ஊசி மருந்து மாத்திரைகள் கொடுத்தனர்.


ப்ரோசிஜர் முடிந்ததும் “மதி முடிஞ்ச வரை கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருங்க” என சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் பிரேமா.


மதியை அதிக பழு தூக்கவிடாமல் எந்த வேலையும் செய்யவிடாமல் பார்த்துக் கொண்டான் சூர்யா.


மதிக்கு செலுத்தப்பட்ட இன்ஜெக்ஷனில் மருந்துகள் எல்லாம் அதன் பக்க விளைவை காட்டியது. அவளுக்கு வாந்தி வயிற்று வலி வந்தது. சூர்யாவுக்கு தெரிந்தால் கோபப்படுவான் என அவனிடம் சொல்லாமல் இருந்தாள்.


அன்றிரவு அவளால் சூர்யாவிடம் மறைக்க முடியவில்லை. பலமுறை அவள் தூக்கத்தில் முழித்து வாந்தி எடுப்பதை கண்டு அவன் விசாரிக்க சாப்பிட்டது சேரவில்லை என சமாளித்தாள். நேரம் செல்ல செல்ல வயிற்று வலியில் துடித்து போய்விட்டாள். அதைக் கண்டு அவளை அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான் சூர்யா.


“நத்திங் டீ வொரி மிஸ்டர் சூர்யா. அவங்களுக்கு கொடுத்த மெடிசின் அண்ட் ஹார்மோனல் சேஞ்சஸ்னால தான் இதெல்லாம். இதுல நீங்க பயப்படத் தேவையில்லை” என சூர்யாவே சமாதானப்படுத்தினார் பிரேமா.


மதியிடம் தனியாக “இதுபோல சிகிச்சை எடுக்குறவங்களுக்கு இது சாதாரணம். ட்ரீட்மென்ட்னு வந்தாச்சுன்னா இதெல்லாம் நீங்க தாங்கித் தான் ஆகணும்” என அவளிடம் கண்டிப்புடன் பேசினார் பிரேமா.


மதிக்கு நாட்கள் பதட்டத்துடன் சென்றது.


“சூர்யா ரிசல்ட் பாசிடிவ்வா தானே வரும் கண்டிப்பா சக்சஸ் ஆகிடும் தானே” என பலமுறை கேட்டாள்.


“கண்டிப்பா நடக்கும்டா நீ இவ்ளோ கஷ்டப்பட்டதுக்கு பலன் இல்லாம போகாது. உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்” என அவளை தேற்றினான்.


ஆனால் அவர்கள் இருவரும் எதிர்பார்த்ததுப் போல பாசிட்டிவ் ரிசல்ட் வரவில்லை. மதி உடைந்து போய்விட்டாள்.


சூர்யாவுக்கு மதி கர்ப்பமடையாதது கூட கவலை அளிக்கவில்லை ஆனால் அவள் உடலளவில் பட்டப்பாடு ஒன்றும் இல்லாமல் போனதை அவனால் தாங்க முடியவில்லை. எனினும் தன் துயரை வெளிப்படுத்தாமல் அவளை தேற்றினான்.


அடுத்த முறை மாதவிடாய் வந்த போது வலியில் துவண்டாள். அவளுக்கு நிற்காமல் வரும் ரத்தப்போக்கால் அவள் மயங்கி சரிய பயந்து போன சூர்யா அவளை மருத்துவமனையில் சேர்த்தான்.


ஓவர் பிளீடிங் நிறுத்த அவளுக்கு டிஎன்சி செய்ய வேண்டும் என சொல்ல சரி என சம்மதித்தவன் அவள் நிலை கண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்தான். அவளா நிலை சற்று சீராக விட்டு தான் சற்று தெளிந்தான் சூர்யா.


தற்போது அவளுக்கு ஓய்வு தேவை என இரு மாதங்கள் முழு ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தினார் பிரேமா.


மேலும் இரு மாதங்கள் கழித்து சூர்யாவை கன்வின்ஸ் செய்து ஐவிஎப் க்கு சம்மதிக்க வைத்தாள் வெண்மதி.


அவனுக்கு அதில் துளி கூட விருப்பமில்லை வேறு வழியின்றி அவளுக்காக சம்மதித்தான்.


ஐவிஎப் சிகிச்சைக்கு தரமான கருமுட்டைகளை எடுக்க அவள் தொப்புளில் நாள் கணக்கில் பல இன்ஜெக்ஷனை செலுத்தினார்கள்.


அதன் வலி வேதனையை அவளால் தாங்க முடியவில்லை.


அவளுக்கு (ஓவரி சிடிமுலேட்டிங் இன்ஜெக்ஷன்) ஊசி செலுத்தி கருமுட்டைகளை வெளியே எடுத்து அதை மறுபடியும் அவள் கர்ப்பப்பையில் செலுத்தி அவள் உடல்நிலை உச்சகட்ட ரணமடைந்தது.


தொப்பிலில் அவளுக்கு செலுத்திய ஊசியால் வயிற்றுவலி வாந்தி என துவண்டாள்.


சிகிச்சை ஆரம்பித்த பின் அவள் உடல் மெலிந்து குச்சியாக மாறினாள்.


அவள் வயிற்றை சுற்றி ஊசி குத்திய காயங்கள். அவளை பார்க்க பார்க்க அவனுக்கு ஆற்றாமையாக இருந்தது.


“ஏன்டீ இப்படி உன்னை கஷ்டப்படுத்திகிற? உன் வலியை பார்க்க எனக்கு உயிர் போற வேதனையா இருக்கு” எனக் குமுறினான்.


மதி இவ்வளவு போராடியும் அவன் லட்ச கணக்கில் பணம் செலவழித்தும் ட்ரீட்மெண்ட் பெயிலியர். அவளுக்கு குழந்தை தங்கவில்லை. அவள் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.


“சாரி சூர்யா மதிக்கு ஐவிஎப் பெயிலியர். எல்லாருக்கும் முதல் தடவைலையே ஐவிஎப் சக்சஸ் ஆகாது” என்றவர் “இப்ப மதியோட ஃபெலோபியன் டியூப்ல பிளாக் இருக்கு. உடனே மதிக்கு சர்ஜரி பண்ணனும். இது போல ப்ளாக்கேஜ் லைப் ரிஸ்க். எவ்வளவு சீக்கிரம் சர்ஜரி பண்றோமோ அவ்வளவு நல்லது. உடனே ப்ளாக்கேஜ்ஜ சர்ஜரி பண்ணி ரிமூவ் பண்ணலனா உங்க மதி உங்களுக்கு இல்லை” என பயம்புறுத்த அவன் ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்து சென்று வேறு மருத்துவரிடம் செகண்ட் ஓப்பனியன் கேட்டு வந்தான்.


அவரும் மதிக்கு ப்ளாக் இருப்பதை உறுதி செய்ய உடனே சர்ஜரி செய்ய வேண்டும் என பிரேமாவும் அறிவுறுத்த சூர்யா ஆப்ரேஷனுக்கு சம்மதித்தான்.


மேலும் பல லட்சங்களை ஆபரேஷனுக்கு கட்டினான் சூர்யா. அவன் செகண்ட் ஒப்பினியன் கேட்க செல்வான் என்பதால் தான் பிரேமா உஷாராக ஸ்கேன் ரிப்போர்ட் பக்காவாக தயார் செய்திருந்தார்.


அவன் ஆபரேஷனுக்கு சம்மதித்தது மதியின் உயிருக்கு உலை வைக்கும் என தெரிந்திருந்தால் சம்மதித்திருக்க மாட்டான் . அவன் முடிவு அவன் உயிரானவளை உயிருக்கு போராட வைத்தது.


தொடரும்…

 

NNK-19

Moderator
அத்தியாயம் - 25


“ஹாஸ்பிடலா இது என்ன பண்ணீங்க என் மதிய? என் மதிக்கு ஏதாவது ஆச்சு உங்க யாரையும் உயிரோடு விடமாட்டேன். இந்த ஹாஸ்பிடலையே இல்லாம பண்ணிடுவேன். எனக்கு என் மதி வேணும்” என சண்டை போட்டுக் கொண்டிருந்தான் சூர்யா.


“நாங்க பாத்துட்டு தான் இருக்கோம் ப்ளீஸ் பீ காம்” என அவனை பிரேமா சமாதானப்படுத்த முயல அவன் கோபத்துடன் அவரை அடிக்கப் பாய்ந்தான் அவனை அங்கிருந்தவர்கள் தடுத்து பிடித்தனர்.


சூர்யா உடனே கோபத்துடன் சந்துருவுக்கு அழைத்தான்.


சந்துரு போனை எடுத்ததும் “அண்ணா மதி மதி” என அழுதான் சூர்யா.


“என்னடா ஆச்சு ஏன் அழற?” என பதறினான் சந்துரு.


“மதிய ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்கேன். அவளுக்கு ஆபரேஷன். இங்க ஹாஸ்பிடல்ல எதுவுமே சரி இல்ல. எல்லாமே தப்பாருக்கு. யாரும் எதுவும் சரியா சொல்ல மாட்டேங்கிறாங்க. பயமாருக்கு நீ உடனே வாண்ணா” என திக்கித் திணறி பதட்டத்துடன் பேசினான் சூர்யா.


சூர்யாவின் ருத்ரதாண்டவத்துக்கு காரணம் இருந்தது.


சூர்யா மருத்துவமனையில் சொல்லிய பணத்தை கட்டிவிட்டான் அதன் பின் மதியை ஆபரேஷன் தியேட்டர்க்குள் அழைத்து சென்றனர்.


மதியை ஆபரேஷன் தியேட்டர்க்குள் செல்வதற்கு முன் சூர்யாவிடம் “எனக்கு பயமாருக்கு” என அழுதவளை கண்டு அவனுக்கு கலக்கமாக இருந்தது.


“ஹேய் உனக்கு ஒன்னுமாகாது. உனக்கு நான் இருக்கேன் பயப்படாதே” என அவளை தேற்றினான்.


ஆபரேஷன் தியேட்டருக்குள் மதியை அழைத்து சென்றனர். ஏழு மணி நேரம் சர்ஜரி நடந்தது. ஆபரேஷன் முடிந்து வெளியே வந்த மருத்துவர் பிரேமா “சூர்யா ஆபரேஷன் ஓவர் உங்க வைஃப் நல்லாருக்காங்க” என்றவர் சூர்யாவை மதியை பார்க்க அனுமதிக்கவில்லை.


பலமுறை அவளை பார்க்க அவன் கேட்டும் அனுமதிக்கவில்லை என்றதும் கோபப்பட்டு சண்டை போட்டு மதியை பார்க்க சென்றான்.


பல உபகரணங்களை அவள் உடம்பில் மாட்டி வைத்திருந்தனர்.


அவள் அமைதியாக கண் மூடி இருந்தாள். அவளிடம் எந்த அசைவும் இல்லை பதற்றத்துடன் மதியை நெருங்கியவன் “மதி மதி கண்ணை திறம்மா” என சூர்யா அழைக்க “சூர்யா எனக்கு என்னமோ பண்ணுது. பயமா இருக்கு உங்க பேச்சை நான் கேட்டிருக்கணும் கேட்காம பெரிய தப்பு பண்ணிட்டேன். உங்களை தனியா விட்டுட்டு போயிடுவேன்னு பயமாருக்கு. எனக்குள்ள ஏதோ சரியில்லை. எனக்கு உங்க கூட வாழ ஆசையா இருக்கு ஆனா செத்துடுவனோனு பயமாருக்கு. நான் தான் தப்பு உங்க பேச்சை கேட்காத நான் தான் தப்பானவ” என்றாள் திக்கித் திணறி.


“உனக்கு ஒன்னுமில்லடா. நீ தப்பெல்லாம் கிடையாது. நீ சரி தான்டா. உன்னை அப்படில்லாம் விட மாட்டேன்” என சூர்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே மதியின் உடல் தூக்கிப் போட்டது.


அவன் பயத்துடன் மதியை பார்க்க அவளுக்கு வலிப்பு வந்தது.


அவன் பதறி நர்ஸ் மற்றும் டாக்டரை அழைக்க அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.


மதியை உடனே பரிசோதிக்க மருத்துவர்கள் யாரும் வரவில்லை.


சூர்யா உச்சகட்ட கோபத்தில் கொந்தளித்து சண்டையிட்டான். அவனுக்கு மருத்துவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என்றதும் கோபத்துடன் சந்துருவுக்கு அழைத்தான்.


சூர்யா அழைத்த இருபதாவது நிமிடம் சந்துரு வந்துவிட்டான். அவனுடன் வேறு சில மருத்துவர்களையும் அழைத்து வந்தான்.


சந்துரு சூர்யா இருவரும் மருத்துவ நிர்வாகத்திடம் சண்டையிட்டனர். அவர்கள் சந்துரு அழைத்து வந்த மருத்துவர்களை மதியை பார்க்க அனுமதிக்கவில்லை.


அங்கு கைகலப்பு உண்டாக காவலர்கள் மற்றும் மீடியா வந்துவிட்டது.


காவலர்கள் வந்ததும் சந்துரு காவலர் அர்ஜுனிடம் விரைந்து “நான் தான் சார் கால் பண்ணேன். என் தம்பி வைப்புக்கு சர்ஜரி பண்ணாங்க. அதுக்கப்புறம் அவளுக்கு பிட்ஸ் வந்துட்டு. டாக்டரோ ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்டோ முறையா பதில் சொல்ல மாட்றாங்க. மதியை திருப்பி அவங்க செக் பண்ணலை. நாங்க கூட்டிட்டு வந்த டாக்டரையும் மதிய பார்க்க அனுமதிக்கவில்லை. இங்கே ஏதோ தப்பாருக்கு. ப்ளீஸ் பாஸ்டா மதிக்கு என்னனு நாங்க கூட்டிட்டு வந்த டாக்டர்சை பார்க்க விடுங்க” என சந்துரு பிரச்சனையை பொருமையுடன் விளக்கினான்.


அர்ஜுன் தலையிட்டு சந்துரு அழைத்து வந்த மருத்துவர்களை மதியை பரிசோதிக்க அனுமதித்தான். மறுத்த மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து சந்துரு அழைத்து வந்த மருத்துவர்களை மதியின் நிலவரத்தை அறிய உள்ளே அனுமதித்தான்.


மதியை பரிசோதித்த மருத்துவர்கள் பதட்டத்துடன் வெளியே வந்து சூர்யாவிடம் “உங்க வைப்புக்கு கொடுத்த மெடிசனோட பிரிஸ்கிரிப்ஷன், அவங்களோட ரிப்போர்ட்ஸ் மெடிசின்ஸ் எல்லாம் உடனே வேணும் அர்ஜென்ட்” என பதட்டப்பட சூர்யா தன்னிடமிருந்த மருத்துவ கோப்பை மருத்துவரிடம் தர அதை படித்து பார்த்த மருத்துவர் கோபமாக பிரேமாவை முறைத்தார்.


“அவங்க சாப்பிட்ட மெடிசின்ஸ்ச நான் உடனே பார்க்கணும் குவிக்” என்றவர் குரலிலிருந்த பதட்டத்தை உணர்ந்த சந்துரு பவானியிடம் பேசி மருந்துகளுடன் வர சொன்னான்.


பவானி மதுவுடைய மருந்துகள் மாத்திரை பட்டைகள் அனைத்தையும் ஒரு கவரில் அள்ளிப் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.


பவானி கொண்டு வந்த மருந்துகளை பரிசோதித்த மருத்துவர் சூர்யாவிடம் “உங்க வைப்புக்கு கொடுத்த மெடிசன்ஸ் எதுவுமே அவங்க எடுத்துக்க வேண்டிய மெடிசின்ஸ் இல்லை”


“மதிக்கு கர்ப்பத்தடை மாத்திரைகள் அளவுக்கு அதிகமாக கொடுத்திருக்காங்க. மதி இஸ் எ வெரி நார்மல் அண்ட் ஹெல்த்தி பர்சன். அவங்க இயற்கையா கருத்தரிக்க எல்லா தகுதியும் உள்ளவங்க. கருத்தடை மாத்திரைகள் கொடுத்து அவங்க கர்ப்பம் ஆக விடாமல் பண்ணிருக்காங்க. வேணும்னு ஐயூஐ பண்ணிருக்காங்க”


“ஐயூஐய அவங்க மதியோட ஓவல்யூசன் பீரியட்ல பண்ணலை. கடைசில ஐவிஎஃப்க்கு அவ்வளவு மெடிசன் இன்ஜெக்ஷன் எல்லாம் கொடுத்துருக்காங்க. அது மதியோட ஹெல்த்த ரொம்பவே பாதிப்படைய வச்சுருக்கு. அது மட்டும் இல்லாம மதிக்கு ஃபலோபியன் டியூப்ல எந்த பிளாக்கும் இல்லை. ஃபேக்கா ரிப்போர்ட் ரெடி பண்ணி உங்களை ஏமாத்தி மதிக்கு தேவையில்லாத சர்ஜரி பண்ணிருக்காங்க. அதையும் அவ்ளோ அலட்சியமா பண்ணியிருக்காங்க. அதனால தான் உங்க மிஸர்ஸ் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க அவங்கள இப்ப காப்பாத்துவது ரொம்ப கஷ்டம்” என்றதும் சூர்யா சந்துரு இருவரும் கோபத்தில் கொந்தளித்தனர்.


சூர்யா பெண்னென்று பாராமல் பிரேமாவை கைநீட்டி அடிக்க அர்ஜுன்தான் சூர்யா சந்துரு இருவரையும் அடக்கினான்.


அதே நேரத்தில் கவிதா பார்வதி இருவரும் பிரேக்கிங் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தனர். “சி.ஆர்.சி கருத்தரிப்பு மையத்தில் தவறான சிகிச்சையால் வெண்மதி என்ற இளம் பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். வெண்மதியுடைய கணவர் சூர்யா ஆவேசமாக மருத்துவமனை நிர்வாகத்திடம் சண்டையிட்டார்” என திரையில் சூர்யா மற்றும் மதியின் புகைப்படம் வந்தது‌. மேலும் சூர்யா மற்றும் சந்துரு மருத்துவமனையில் சண்டையிட்ட காட்சிகளை வீடியோவாக கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


வெண்மதி சூர்யாவுக்காக பிழைத்து வருவாளா?


தொடரும்…
 

NNK-19

Moderator
அத்தியாயம் - 26


“சூர்யா உங்க வைஃப் ரொம்ப கிரிட்டிக்கல் கண்டிஷன்ல இருக்காங்க. அவங்களுக்கு சர்ஜரில நிறைய ரத்த இழப்பு ஏற்பட்டுருக்கு. இம்மீடியட்டா அவங்களுக்கு ப்ளட் ஏத்தணும். ஹாஸ்பிடல்ல சொல்றாங்க இப்ப உங்க வைஃப் இருக்க கண்டிஷன்ல அவங்கள வேற ஹாஸ்பிடலுக்கு ஷிஃப்ட் பண்ண முடியாது. இமீடியட்டா அவங்களுக்கு பி பாசிடிவ் ப்ளட் அரேஞ்ச் பண்ணுங்க குயிக்” என்றார்.


சந்துரு அலுவலக ஊழியர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் பேசி ஒருவாறு ப்ளட் அரேஜ் செய்தான்.


மதிக்கு ரத்தம் ஏற்றப்பட்டது ஆனாலும் அவள் உடல்நிலை சீராகவில்லை.


“மிஸ்டர் சூர்யா உங்க மனைவிக்கு பிபி ரொம்ப அதிகமாருக்கு. அவங்க கண்டிஷன் ஸ்டேபிளா இல்லை. அவங்க கிரிட்டிக்கல் ஸ்டேஜ்ல இருக்காங்க நீங்க உங்க கிட்ட கொஞ்சம் பேசிப் பாருங்க. அவங்க பாடி எங்க ட்ரீட்மெண்ட்க்கு கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் பண்ணல சோ நீங்க அவங்க கிட்ட பேசிப் பாருங்க” என்றதும் சூர்யா இதயம் முழுக்க பயத்துடன் அந்த அறைக்குள் நுழைந்தான்.


பல கருவிகள் பொருத்தப்பட்டு ஒரு பக்கம் ரத்தம் ஏறிக் கொண்டிருக்க அவளை பார்க்க அவனுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.


அவள் அருகே சென்று அவள் கையை பிடித்தவன் “மதிம்மா எனக்கு பயமாருக்கு என்னை பயபுறுத்தாதே வந்துடுடி. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன். நீ இல்லன்னா என்னோட உலகமே நின்றும். நான் வாழறதுக்கு காரணமே உன்னோட காதல் தான். நீ என்னோட வாழ்க்கையில வரவிட்டு தான் நான் உயிர்ப்போட இருக்கேன். தயவு செஞ்சு எனக்காக உன்னோட சூர்யாவுக்காக கண்ணு முழிச்சு வந்துரு. நீ மட்டும் என்னை தனியா விட்டுட்டு போனா நானும் உன் கூட வந்துடுவேன் இது சத்தியம். உன் சூர்யா உயிரோட இருக்கணும்னு நீ நினைச்சா பிழைச்சுவா” என்றவன் கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறினான்.


சூர்யா அழுகையுடன் வெளியே வருவதை கண்டு சந்துரு தம்பியை அணைத்து ஆறுதல்படுத்தினான்.


“பயப்படாதேடா அவளால உன்னை தனியா விட்டுட்டு போக முடியாது நல்ல படியா பிழைச்சு வந்துருவா” என சூர்யாவை தேற்றினான்.


நியூஸ் பார்த்துவிட்டு பார்வதியும் கவிதாவும் அறக்கப்பறக்க மருத்துவமனைக்கு வந்தனர்.


அங்கே கண்கள் சிவக்க கண்ணீருடன் நின்ற சூர்யாவை கண்டு அவன் தோள் தொட்டு “என்னடா ஆச்சு?” என்றார் பார்வதி பதட்டத்துடன்.


வெடுக்கென அவர் கையை தட்டி விட்டவன் “எங்க வந்தீங்க?” என்றான் சூர்யா கோபமாக.


“ஏன் சூர்யா அம்மாவ இப்படி எடுத்தெரிஞ்சு பேசுற?” என்றார் வருத்தத்துடன்.


“நடிக்காதீங்க என்ன என் பொண்டாட்டி இன்னும் உயிரோட இருக்காளா இல்லை செத்துட்டாளானு பார்க்க வந்தீங்களா?” என்றான் கோபமாக.


“டேய் நியூஸ்ல பார்த்து விஷயம் தெரிஞ்சு பதறியடிச்சு ஓடி வந்திருக்கோம்டா. எனக்கு அவளை பிடிக்காது தான் ஒத்துக்கிறேன். வசதி இல்லாத அனாதை பொண்ணு நம்ம வீட்டுக்கு வேண்டாம்னு நினைச்சேன். ஆனா அவ சாகணும்னு நான் நினைக்கலடா” என்றார் பாவம் போல.


“அவ இங்க உயிருக்கு போராடிட்டு இருக்கானா அதுக்கு நீங்க தான் காரணம். நீங்க இரண்டு பேரு மட்டும் தான் காரணம்” என அழுத்தி சொன்னான் பார்வதி மற்றும் கவிதா இருவரையும் முறைத்து பார்த்துக் கொண்டு.


“அது எப்படி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம என் பொண்டாட்டிய மலடினு சொல்லிருப்பீங்க நீங்களும் காத்திருந்து பெத்துக்கிட்டவுங்க தானே. உங்களுக்கு கல்யாணமாகி ஏழு வருஷம் கழிச்சு தானே அண்ணன் பிறந்தான். அப்புறம் எப்படி மனசாட்சியை கழட்டி வச்சிட்டு மதிய அப்படிலாம் பேசினீங்க. எத்தனை தடவை எனக்கு தெரியாம மதிய கைநீட்டி அடிச்சிருக்கீங்க. அசிங்கமா இல்ல உங்களுக்கு. உங்களுக்கும் இரண்டு பொண்ணுங்க இருக்காங்க தானே அப்புறம் எப்படி என் பொண்டாட்டியை கொடுமைபடுத்த மனசு வந்துச்சு. உங்களுக்கு ஏதாவது சொல்லனும்னா என்கிட்ட சொல்லிருக்கணும் அதை விட்டுட்டு மதிகிட்ட அவ்ளோ மோசமா பேசி நீங்க ரெண்டு பேரும் கொடுமைப்படுத்திருக்கீங்க. பொம்பளைங்களா நீங்கலாம்” என அவன் கோபத்தில் இருவரும் தலைகுனிந்தனர்.


“அவ பாவம் அப்பாவி பொண்ணு. அவளுக்கு நீங்க இத்துனூண்டு அன்பு கொடுத்திருந்தா அவ உங்களை கொண்டாடிருப்பா. உங்களுக்கு அருமை தெரியல என் மதியோட அருமையை கொண்டாட உங்களுக்கு கொடுத்து வைக்கலை. மனசாட்சியே இல்லாம குழந்தை இல்ல குழந்தை இல்லன்னு பேசி பேசி அவளை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இப்படி மொத்தமா அவளை படுக்க வச்சிட்டீங்களே” எனக் கொதிப்புடன் பேசினான் சூர்யா.


“அவளுக்கு என்ன தலையெழுத்தா இப்படி வந்து சாக கிடக்கணும்னு. அவ இப்படி இருக்கதுக்கு காரணமே நீங்கதான். ஒரு பொண்ணுக்கு குழந்தை இல்லன்னா அதுல என்ன தப்பு. அதுல உங்களுக்கு என்ன வந்துச்சு? எங்களுக்கு குழந்தை இல்லாததுனால உங்க உலகம் நின்னுடுச்சா. சும்மா வெட்கமே இல்லாம அடுத்தவங்க அந்தரங்கத்தில தலையிட்டு அவங்க வாழ்க்கையை நாசமாக்குறது”


“குழந்தையில்லனு என்னோட மதிய மலடி மலடின்னு வாய்க்கு வாய் சொன்னிங்களே என்னை என்னனு சொல்லுவீங்க? பெண்ணுக்கு பெண்ணே தான் எதிரி. மாமியாரும் ஓரகத்தியும்னா கொம்பா முளைச்சிருக்கு. சும்மா வாழ வந்த பொண்ணை கொடுமைப்படுத்தறது. உங்கள மாதிரி ஆட்களையெல்லாம் பிடிச்சு உள்ள போடணும்”


“ஒரு பொண்ணுக்கு குழந்தையில்லனா மலடி கணவனை பிரிஞ்சு வந்தா வாழாவெட்டி புருஷன் செத்தா விதவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணா ஓடுகாலி இப்படி வாய்க்கு வந்தபடி பொண்ணுங்களுக்கு மட்டும் பட்டம் கொடுக்கிறது. ஏன் நீங்க பெத்த பையனை ஆம்பளை இல்லன்னு சொல்றது அதுக்கு மட்டும் உங்களுக்கு வாய் வராது. ஏன்னா அது உங்க ரத்தம் ஆனா வாழ வந்தவ யாரோ தானே யாரோட ரத்தமோ தானே” என கோபப்பட்ட தம்பியை சமாதானப்படுத்த முயன்றான் சந்துரு.


“நீ விடுண்ணா கொஞ்ச நஞ்ச டார்ச்சரா பண்ணிருக்காங்க என் மதியை. அவ ட்ரீட்மெண்ட் எடுத்துக்கணும்னு ஒத்த கால்ல நின்னதுக்கு காரணம் நீங்க மட்டும் தான். அவளை பேசி பேசியே அவ ட்ரீட்மெண்ட் எடுத்தே ஆகணும் என்ற மனநிலைக்கு அவளை கொண்டு வந்தது நீங்களும் இந்த சமூகமும் தான்”


“ஏதாவது விசேஷமா நல்லது கெட்டதா நீ வரக்கூடாது உனக்கு குழந்தை இல்லன்னு சொல்றது. இல்லயா வரவச்சு சபைல அவமானப்படுத்துறது. என்ன மாதிரியான கேடுகெட்ட ஜென்மங்களோ நீங்கல்லாம். நீங்களும் ரெண்டு பொண்ணை பெத்து வச்சிருக்கீங்க நீங்க பண்ண பாவமெல்லாம் உங்க தலையிலேயே வந்து விடியும்” என்றான் கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டு.


“சூர்யா ப்ளீஸ் டென்ஷனாகாதே அமைதியா இரு” என்றான் சந்துரு.


“அண்ணா இப்பவே உன் பொண்டாட்டிய பேசி திருத்த முயற்சி பண்ணு இல்லனா நாளைக்கு உன் பையனோட பொண்டாட்டி இன்னொரு மதியா தான் வாழணும்” என்றான் தன் அண்ணனிடம் கவிதாவை ஏளனமாக பார்த்தபடி.


“ஒழுங்கு மரியாதையா இரண்டு பேரும் இங்கிருந்து வெளிய போயிருங்க. இதுக்கு மேல இங்க இருந்தீங்கனா உறவு வயசுனு மட்டு மரியாதையெல்லாம் பார்க்க மாட்டேன். இப்ப சொல்றேன் காது குளிர கேட்டுக்குங்க உங்க பையன் எப்பவோ செத்துட்டான்”


“ பையன் உயிரையே வச்சிருக்க பொண்ணுன்னு தெரிஞ்சும் அவளை இவ்ளோ பாடுபடுத்திருக்கீங்கனா பையன் வேண்டாம்னு தானே அர்த்தம். இனி நான் செத்தா கூட நீங்க வரக்கூடாது நீங்க செத்தா நான் வரமாட்டேன். இதுக்கு மேலயும் இங்க நிக்காம கிளம்புங்க” என கோபத்தில் கத்தினான் சூர்யா.


“அண்ணா தயவு செஞ்சு அவங்களை கிளம்ப சொல்லுங்க. எனக்கு அவங்கள பார்க்க பார்க்க பத்திட்டு வருது” என்றான் சூர்யா சந்துருவிடம் கோபமாக.


“அவன் தான் இவ்ளோ சொல்றான்ல ஏற்கனவே ஒருத்திய படுக்க வச்சது பத்தலையா. முதல்ல இங்கிருந்து கிளம்புங்க” என அவர்களை அங்கிருந்து கிளப்பினான் சந்துரு.


அவர்கள் வெளியேறிய சற்று நேரத்தில் அவர்களிடம் வந்த மருத்துவர் சூர்யாவிடம் “மிஸ்டர் சூர்யா யுவர் வைஃப் இஸ் அவுட் ஆப் டேஞ்சர். மதியோட கண்டிஷன் இப்ப ஸ்டேபிளா இருக்கு” என்றதும் இருவரும் பெருமூச்சு விட்டனர்.


தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு சந்தோஷத்துடன் கடவுளுக்கு நன்றி கூறினான் சூர்யா.


சூர்யாவின் காதல் மதியை பிழைக்க வைத்து விட்டது.


தொடரும்…
 

NNK-19

Moderator
அத்தியாயம் - 27


“யுவர் வைஃப் இஸ் அவுட் ஆப் டேஞ்சர். மதியோட கண்டிஷன் இப்ப சேடிபிலா இருக்கு” என்றதும் அண்ணன் தம்பி இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


அதற்குப் பிறகு தான் சூர்யா சந்துரு இருவருக்கும் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது.


“மிஸ்டர் சூர்யா நீங்க மட்டும் உங்க வைஃப்ப டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துட்டு வாங்க. அவுங்க இப்ப மயக்கத்துல இருக்காங்க அவங்க கண்ணு முழிக்க விட்டு நீங்க அவங்க கூட இருங்க. அவங்களுக்கு கான்சியஸ் வர விட்டு அவுங்க கண்டிஷன் பார்த்துட்டு அவங்கள வேற ஹாஸ்பிடலுக்கு ஷிஃப்ட் பண்ணிடலாம்” என்றார் அந்த மருத்துவர்.


அவள் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டாலும் அவள் கண் விழிப்பதற்காக காத்திருந்தான் சூர்யா.


மதி கண் விழித்துவிட்டதாக நர்ஸ் கூறியதும் சந்தோஷத்துடன் அவள் இருந்த அறைக்குள் ஓடினான் சூர்யா.


அவள் கண் விழித்து படுக்கையில் படுத்திருப்பதை கண்டு அவன் முகத்தில் சந்தோஷ சிரிப்பு வந்தது.


“சூர்யா” என ஈனஸ்வரத்தில் அவள் குரலை கேட்டு அவளை நெருங்கி மெதுவாக அவள் தோளில் சாய்ந்து கண்ணீர் வடித்தான்.


அவள் தன் தோளில் ஈரத்தை உணர்ந்து பதறி “சூர்யா என்னாச்சு ஏன் அழறீங்க பயந்துட்டீங்களா?” என்றாள் கலக்கமாக.


“செத்துட்டேன்டீ செத்தே போயிட்டேன். நீ கண்ணு முழிக்க விட்டுத் தான் எனக்கு உயிரே வந்துச்சு” என்ற சூர்யாவின் கண்ணில் நிற்காமல் கண்ணீர் வந்தது.


“எனக்கு கேட்டுச்சு சூர்யா நான் மயக்கத்துல இருந்தா கூட நீங்க பேசுறது எனக்கு நல்லவே கேட்டுச்சு. என்னோட ஆழ்மனசுக்கு உங்க பேச்சு புரிஞ்சுது. அதுதான் என்னை நல்லபடியா கண் விழிக்க வைச்சுது” என்றாள் புன்சிரிப்புடன்.


“ஊகூம் உன்னோட நல்ல மனசும் நம்ம ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க உண்மையான காதலும் நேசமும் தான் உன்னை என்கிட்ட கொண்டு வந்துருக்கு” என்றான் சூர்யா கண்களில் காதலுடன்.


“சாரி சூர்யா உங்க பேச்சை நான் கேட்ருக்கணும் உங்க பேச்சை கேட்காதது ரொம்ப தப்பு. உங்க பேச்சை கேட்காம என் இஷ்டப்படி முடிவெடுத்து உங்களை டென்ஷன் பண்ணிட்டேன்ல. சாரி சூர்யா தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க” என்றாள் வருத்தத்துடன்.


“இல்லடா கண்டிப்பா உன் மேல தப்பில்லை. இது எதுக்குமே நீ காரணமில்லை. நீ என்ன எனக்கு தெரியாமலா எல்லாம் பண்ண? நானும் சம்மதிச்சு தானே எல்லாம் பண்ணோம். இது உன்னோட தப்பில்லை கண்ணம்மா இதுக்கு நீ காரணம் கிடையாது இதுக்கு காரணம் இந்த சமுதாயம் தான்டா. உன்னை நீயே தப்பு சொல்லிக்காதே உனக்கு எந்த கில்ட்டி கான்சியஸ்சும் தேவையில்லை” என அவளுக்கு புரிய வைத்தான்.


“சூர்யா நான் நல்லா தானே இருந்தேன் எனக்கு என்னாச்சு?” என்றாள்.


அவளுக்கு என்ன நடந்தது என முழுமையாக தெரியாததால் அங்கு நடந்த அத்தனை குளறுபடிகளையும் சொன்னான். அவளுக்கு தவறான மாத்திரைகள் கொடுத்தது. முறையாக சிகிச்சை அளிக்காதது தேவையில்லாமல் அவளுக்கு ஆபரேஷன் செய்தது மருத்துவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டது சந்துரு வேறு மருத்துவர்களை அழைத்து வந்தது என அனைத்தையும் சொன்னான்.


“செத்துப் பிழைச்சு வந்துருக்கடீ. எனக்கு சாவு பயத்தை காட்டிட்டாங்க” என்றான் கண்ணீருடன்.


“என்ன சூர்யா சொல்றீங்க நமக்கு நடந்தது எவ்வளவு பெரிய அநியாயம். அவங்க கட்ட சொன்ன பணத்தை அப்படியே கட்டினீங்க ஆனா கூட பணத்தை பிடிச்சு இப்படி பண்ணிருக்காங்க. நமக்கே இப்படினா இல்லாதவங்க வந்தா அவங்களை எப்படி நடத்துவாங்க? குழந்தையில்லாதவங்களோட கண்ணீரையும் வலியையும் வச்சு காசு பார்ப்பாங்களா? விடாதீங்க சூர்யா இவங்க யாரையும் சும்மா விடாதிங்க”


“இன்னைக்கு நமக்கு நடந்தது இனி வேற யாருக்கும் நடக்க கூடாது” என்றாள் அழுகையுடன்.


“கண்டிப்பா அவங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன். அவங்களோட முகத்திரையை வெளிச்சம் போட்டுக் காட்டி ஒவ்வொருத்தருக்கும் தண்டனை வாங்கி கொடுப்பேன்” என்றான் சூர்யா உறுதியுடன்.


கதவை தட்டி அனுமதி கேட்டு விட்டு சந்துரு வந்தான்.


“என்னம்மா எப்படி இருக்க இப்ப உடம்பு பரவாயில்லையா?” என விசாரித்தான் சந்துரு.


“இப்ப பரவாயில்லை மாமா” என்றாள் சோர்வுடன்.


“எங்களை இப்படி பயபுறுத்திட்டியேமா நீ நல்லாருக்கேன்னு டாக்டர் சொல்றவரை சூர்யா துடிச்சி போயிட்டான்மா. உடம்பை நல்ல பார்த்துக்கம்மா” என்றான் அக்கறையுடன்.


“சரி மாமா இவரு நடந்ததெல்லாம் சொன்னாரு. எங்களுக்கு நடந்த அநியாயத்தை கேட்டு என்னால தாங்க முடியல. நான் பிழைச்சிட்டேன் போதும்னு இதை இப்படியே விட்டுறாதீங்க. இதுக்கு பின்னாடி இருக்க எல்லாருக்கும் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தண்டனை வாங்கித் தரணும் மாமா” என்றாள் அழுகையுடன்.


“இப்ப எதுக்கு இவ்ளோ எமோஷனல் ஆகுற. முதல்ல எங்க வீட்டு பொண்ணுக்கு இப்படி நடந்துடுச்சுன்னு கோபம் இருந்துச்சு ஆனா இப்ப அப்படியில்லை. நமக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாதுனு தோணுது. கண்டிப்பா நாங்க இதை இப்படியே விட மாட்டோம். நீ ரெஸ்ட் எடும்மா. நாங்க இருக்கோம் உனக்கு. நாங்க இந்த பிரச்சனையை பார்த்துக்கிறோம்” என்றான் சந்துரு.


மதியுடன் அவள் உறங்கும் வரை அருகிலிருந்தவன் அவள் உறங்கியதை உறுதி செய்துவிட்டு நம்பிக்கையான நர்ஸ் மற்றும் டாக்டரை உடனிருக்க சொல்லிவிட்டு வெளியே வந்தான் சூர்யா.


அங்கு அர்ஜுனும் சந்துருவும் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை கண்டு அவர்களை நெருங்கியவன் “நான் பிரஸ் முன்னாடி பேசலாம்னு முடிவு பண்ணிருக்கேன்” என்றான் சூர்யா.


வெளியே மீடியா ஆட்கள் நின்று கொண்டிருந்தனர் மேலும் வேறு சில சேனல் நிருபர்களையும் வரவழைத்தவன் பிரஸ் முன்னிலையில் பேசச் சென்றான்.


“எல்லாருக்கும் வணக்கம் என்னோட பேரு சூர்ய பிரகாஷ் என் மனைவி பெயர் வெண்மதி. எங்களுக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிடுச்சு குழந்தைகள் இல்லை. அதனால நாங்க சி.ஆர்.சி கருத்தரித்தல் மையத்தை நாடி வந்தோம். என் மனைவியும் நானும் பூரண ஆரோக்கியமான தம்பதிகள். என் மனைவிக்கு அளவுக்கு அதிகமான மன உளைச்சல் உண்டு. அது அவுங்களை கர்ப்பமாக விடவில்லை”


“ஆனா இப்படியே வருடங்கள் கடந்ததினால நாங்க இங்க வந்தோம். பூரண ஆரோக்கியமான என் மனைவிக்கு வேண்டுமென்றே கர்ப்பத்தடை மாத்திரைகள் கொடுத்து அவங்கள கர்ப்பம் அடையவிடாம செஞ்சிருக்காங்க”


“ அவங்க இயற்கையா கர்ப்பம் அடைஞ்சிட்டாங்கன்னா இவங்களால பணம் சம்பாதிக்க முடியாதுன்னு இப்படி பண்ணிருக்காங்க. அவங்களுக்கு ஐயூஐ செய்ய வேண்டிய கரெக்டான நேரத்துல செய்யலை”


“ ஐவிஎஃப் செய்யணும்னு சொன்னாங்க அதை செய்வதற்கு அவுங்க சொன்ன பணத்தை நான் கட்டினேன். ஆனா ஐவிஎஃப்யும்‌ அவங்க முறையா செய்யல”


“என் மனைவிக்கு ஃபலோபியன் டியூப்ல பிளாக் இருக்குன்னு போலி ரிப்போர்ட் கொடுத்து எங்களை நம்ப வச்சு அவங்களுக்கு அறுவை சிகிச்சை செஞ்சாங்க. அந்த அறுவை சிகிச்சையையும் முறையா செய்யாம என்னோட மனைவி ஆபத்தான கட்டத்துக்கு போயிட்டாங்க”


“ மருத்துவமனை நிர்வாகம் எங்ககிட்ட ரொம்ப அலட்சியமா நடந்துக்கிட்டாங்க. நாங்க காவல்துறையை அணுகி வேறு மருத்துவர்களை வரவழைத்து அவங்க வெகுவாக போராடி என் மனைவியோட உயிரை காப்பாத்திருக்காங்க”


“நாங்க சி.ஆர்.சி மருத்துவமனை மேலையும் என் மனைவியை அட்டெண்ட் பண்ண டாக்டர் பிரேமா மற்றும் இதர மருத்துவர்கள் மேலயும் க

புகார் கொடுத்துருக்கோம்”


“ஹெல்த் டிபார்ட்மெண்ட் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் இதுல தலையிட்டு சி.ஆர்.சி கருத்தரிப்பு மையத்துக்கு சீல் வைத்து என் மனைவிக்கு சிகிச்சை தந்த மருத்துவர்கள் எல்லாரோட மருத்துவ லைசென்ஸை கேன்சல் செய்யணும். அவங்களுக்கு சட்டப்படி தண்டனையை இந்த அரசாங்கம் வழங்கணும்”


“எங்களைப் போல சமுதாயத்துல நல்ல நிலைல உள்ள முக்கிய புள்ளிக்கே இப்படினா நடுத்தர குடும்பத்தை சேர்ந்த யாராவது இவர்களை நம்பி வந்தா அவங்களோட பொருளும் போய் உயிரும் போய்டும்”


“குழந்தையில்லாத தம்பதிகள் இதுபோல கருத்தரிப்பு மையத்தை நாடி வருவதற்கு காரணம் இந்த சமுதாயம் அவங்களுக்கு தரக்கூடிய பிரஷர். குழந்தையில்லாத பெண்களை ஏன் தீண்டத் தகாதவங்க போல நடத்துறீங்க?”


“ஏதாவது விசேஷம் இருக்கா? எதுவும் நல்ல செய்தி இருக்கா? இன்னுமா குழந்தை இல்லை? இத்தனை வருஷமாச்சு இந்த டாக்டர பாருங்க அந்த டாக்டரை பாருங்கனு அவங்கள ஏதாவது சொல்லிட்டே இருக்காதீங்க”


“ உங்களுக்கு குழந்தை இருக்கிறதால மட்டும் நீங்க பெரிய ஆளா? பச்ச குழந்தையை ரேப் பண்ண காமுகனை காப்பாற்ற நினைக்கிறவ மட்டும் பத்து மாசம் சுமந்து பெத்த தாய் ஆனால் குழந்தையில்லாத பெண் மலடியா?”


“குழந்தையில்லாத பெண்களுக்கும் தாய்மை இருக்கும். அந்த தாய்மையை மதிச்சு அவுங்களை மரியாதையோட நடத்துங்க. அவங்களை ஏதோ பெண்ணா வாழவே லாய்க்கில்லாதவங்க மாதிரி நடத்தாதீங்க”


“இந்த காணொளியை பார்க்கிற யாரும் இனி இதுபோல கேள்விகளை கேட்டு தயவு செஞ்சு கஷ்டப்படுத்தாதீங்க. அவங்களுக்கு நீங்க கொடுக்கிற மெண்டல் பிரஷர் தான் இது போன்ற கருத்தரித்தல் மையத்துக்கு இன்வெஸ்ட்மென்ட். அவர்களுக்கு இந்த சமூகம் பிரஷர் பண்ணி பல போலி விளம்பரங்களை நம்பி இது போன்ற கருத்தரிப்பு மையத்தை நாடி வர்றாங்க. நாங்க வந்தது கூட தமிழகத்தில் உள்ள நம்பர் ஒன் கருத்தரிப்பு மையம்”


“இங்க என் மனைவிக்கு நடந்தது உச்சகட்ட அநீதி. பல கருத்தரிப்பு மையங்கல்ல பேஷன்ஸ்க்கே தெரியாம கருமுட்டை திருடுறாங்க. கருமுட்டை திருட்டுல ஆரம்பிச்சு உயிரிழப்புகள் வரை நடக்குது”


“இது போன்ற கருத்தரிப்பு மையத்தால பாதிக்கப்பட்ட கடைசி தம்பதிகளா நாங்க இருந்துட்டு போறோம். இனி எங்களைப் போல யாரும் பாதிக்கப்படக்கூடாது. இது போன்ற போலி கருத்தரிப்பு மையங்களை ஆய்வு செய்து அவங்க முகத்திரையை கிழிச்சு சட்டம் தண்டிக்கணும்”


“கலர் கலரான போலி விளம்பரங்களை நம்பி கருத்தரிப்பு மையத்தை அணுகி உடம்பை வேதனை படுத்திக்கொள்ளாதீர்கள். உங்கள் உடம்பை ரணமாக்கி கொள்வதை விட பெற்றவர்களுக்காக ஏங்குகிற ஆதரவில்லாத குழந்தைகளை உங்கள் குழந்தைகளாக ஏத்துக்கோங்க. இனியாவது இதுபோன்ற தம்பதிகளுக்கு பிரஷர் தராம முறையா தத்து எடுக்க நினைக்கிறவங்களுக்கு துணையாய் இருந்து ஆதரவு கொடுங்க”


“சொந்தங்களும் சுற்றத்தார்களும் சமூகமும் சப்போர்ட் பண்ணாம தத்தெடுக்க முடியாது. அதனால தயவு செஞ்சு இதுபோல நல்ல முடிவு எடுக்குறவங்களுக்கு துணையா இருங்க”


“இந்தக் காணொளியை பார்க்கிற ஒரு சில பேருகிட்ட மாற்றம் வந்தா கூட போதும் என் மனைவியோட மரண போராட்டத்துக்கு கிடைச்சா பலனா நான் நினைச்சுப்பேன்”


“தமிழக அரசோட பார்வைக்கு இந்த செய்தி சேர்ந்து அவர்கள் தக்க நடவடிக்கைகள் எடுப்பார்கள் என நம்புகிறேன்”


இனியாவது இந்த சமூகம் குழந்தையில்லாத பெண்களை வாழவிடுமா?


தொடரும்…
 

NNK-19

Moderator
அத்தியாயம் - 28


சூர்யா பேசிய காணொளி அனைத்து நியூஸ் மற்றும் யூடியூப் சேனல்களில் வைரல் ஆகியது.


அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த செய்தி பேசப்பட்டு தமிழக அரசின் பார்வைக்கு இந்த செய்தி சென்றடைந்து ஹெல்த் டிபார்ட்மெண்ட் ஆய்வு செய்து சி.ஆர்.சி கருத்தரிப்பு மையத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டுபிடித்து சி.ஆர்.சி கருத்தரிப்பு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.


மேலும் பிரேமா மற்றும் அங்கு கையாடலில் ஈடுபட்ட அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.


மேலும் அவர்கள் உயிருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் சி.ஆர்.சி மருத்துவ ஊழியர்கள் ஹாஸ்பிடல் மேலாளர் வரை அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மதியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் வந்ததும் அவளை வேறு மருத்துவமனைக்கு மாற்றி விட்டான் சூர்யா.


அவள் பூரணமாக குணமடைந்ததும் வீட்டிற்கு அழைத்து வந்தான்.


மறுஜென்மம் எடுத்து உயிர் பிழைத்து வந்தவளை ஆரத்தி எடுத்து வரவேற்றார் பவானி.


வீட்டு வேலை செய்பவராக இருந்தாலும் அவர் உண்மையில் மதிக்கு சகோதரி போன்றவர்.


அவளை பூரண உடல் நலத்துடன் வீட்டிற்கு அழைத்து வரவிட்டு தான் சூர்யாவுக்கு நிம்மதியாக இருந்தது.


கோர்ட்டில் கேஸ் நடந்து இவர்களுக்கு பதினைந்து லட்சம் நஷ்ட ஈடு கிடைத்தது. சூர்யா அதை மறுக்கவில்லை. அந்த பணத்தை வாங்கி ஆதரவில்லாத சிறுவர்களின் படிப்புக்கும் மருத்துவத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கும் செலவழித்தான். அதிலிருந்து ஒரு ரூபாயை கூட தங்களுக்கென எடுப்பதை சூர்யா மதி இருவருமே விரும்பவில்லை.


மதியின் உடல்நிலை முற்றிலும் சரியாகும் வரை அவளை நன்கு கவனித்துக் கொண்டான். அவளுக்கு ஆரோக்கியமான உணவு காய்கறி பழங்கள் என அனைத்தையும் பார்த்து பார்த்து கொடுத்தான்.


அவள் உடல்நிலை ஓரளவுக்கு நன்கு தேறியது.


இரண்டு மாதங்கள் அவள் உடல்நிலையை புரிந்து கொண்டு சூர்யாவும் மதியை நெருங்கவில்லை.


அன்று காலையில் குளித்து முடித்து குளியலறையிலிருந்து பாதி சுற்றி வந்த புடவையுடன் கண்ணாடி முன் நின்றாள்.


ஆழ்ந்த உறக்கத்திலிருந்து சூர்யா சோப்பின் வாசனையை நுகர்ந்து கண் திறந்து பார்க்க தலைக்கு குளித்து ஈரம் சொட்ட சொட்ட உடலில் அங்கங்கு நீர் துளிகளுடன் பாதி மட்டுமே சுற்றிய புடவையுடன் நின்ற மனைவியை கண்டு வேகத்துடன் படுக்கையை விட்டு எழுந்தான்.


அவள் எதிர்பாராத நேரத்தில் பின்னிருந்து அவளை அணைத்தவன் அவளை அப்படியே தூக்கி சுற்றினான்.


“சூர்யா என்ன பண்றீங்க விடுங்க எனக்கு கூச்சமா இருக்கு என்னை இறக்கி விடுங்க” எனக் கத்தினாள் மதி.


“ஊகூம் இனி உன்னை விடறதா இல்லை” என்றான் குறும்புடன்.


“என்னை விட வேண்டாம் ஆனா இறக்கி மட்டும் விட்டுருங்க தலை சுத்துது” என்றதும் அவளை இறக்கி விட்டவன் அவள் முதுகில் பனித்துளி போல அங்கங்கு இருந்த ஈரத்தில் இதழ் பதித்தான்.


அவளது வெற்று முதுகில் அவன் இதழ் பதிக்க உணர்ச்சியில் சிலிர்த்தாள்.


அவள் அங்கங்களில் இருந்த ஈரத்தை உதடுகளால் ஒற்றி எடுத்தான்.


அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவளோடு கட்டிலில் சரிந்தான்.


அவர்களது வாழ்க்கை எந்த பூசல்களும் இல்லாமல் தெளிந்த நீரோடையாக மகிழ்ச்சியுடன் சென்றது.


அன்று சூர்யா முகம் நிறைய சந்தோஷத்துடன் மதியை நெருங்கி வந்தான்.


“மதி உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் இருக்கு என்னனு சொல்லு பார்க்கலாம்?” என அவளைக் கேட்டான் சூர்யா.


என்னவா இருக்கும் என யோசித்தவள் “உங்களுக்கு புது ப்ராஜெக்ட் எதுவும் கிடைச்சிருக்கா? இல்ல பெரிய பிராஃபிட் ஏதாவது கிடைச்சிருக்கா?” எனக் கேட்டாள்.


“ஊகூம் இது வேற விஷயம் நான் சொன்னா நீ சந்தோஷத்துல துள்ளி குதிக்கப் போற” என்றான் உற்சாகத்துடன்.


“அப்படி நான் துள்ளி குதிக்கிற அளவு என்ன விஷயம்னு தெரியலையே?” என்றாள் யோசனையுடன் கண்களை சுருக்கியபடி.


அவள் கைகளை பிடித்துக்கொண்டு வேகமாக சுற்றினான் சூர்யா.


“விடுங்க என்னன்னு சொல்லிட்டு அப்புறம் சுத்துங்க நானும் சந்தோஷப்படுவேன்ல்ல” என்றாள் ஆர்வத்துடன்.


நம்ம கரால (CARA - Central Adoption Resource Authority) அப்ளை பண்ணிருந்தோம் தானே நம்ம பெயர் அதுல வந்துருச்சு. எனக்கு கால் பண்ணிருந்தாங்க டாக்குமெண்டேஷன் அண்ட் விலகல் ப்ரோசிஜர் எல்லாம் முடிச்சுட்டு நமக்கே நமக்கான நம்மளோட குழந்தை வரப்போகுது. எஸ் வீ ஆர் கோயிங் டு பீ பேரண்ட்ஸ் சூன்” என்றான் சந்தோஷத்துடன்.


கண்களில் கண்ணீர் கசிய அவளுக்கு பேச்சு வரவில்லை. வாயடைத்துப் போய் நின்றாள்.


“மதி என்னடீ ஆச்சு” என அவளை உலுக்கினான்.


“சூர்யா நீங்க நிஜமா தான் சொல்றீங்களா?” என்றாள் சந்தேகத்துடன்.


“நிஜமா தான்டா சொல்றேன் நான் பேசி எல்லாம் கன்பார்ம் பண்ணிட்டேன். டாக்குமெண்டேஷன் முடிச்சிட்டு நம்மளோட குழந்தைய முறைப்படி தத்தெடுத்து கூட்டிட்டு வந்துடலாம்” என்றதும் இருவருக்குமே ஆனந்த கண்ணீர் பெருகியது.


“சூர்யா நமக்கே நமக்குனு ஒரு குழந்தையா? இனி நீங்களும் நானும் அப்பா அம்மா” என ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தாள்.


“சூர்யா நீங்க சந்துரு மாமாக்கு கால் பண்ணி சொல்லுங்க மாமா ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்றாள்.


அவனும் சரியென தலையசைத்தான்.


“பவானிக்கா இங்க வாங்களேன். நீங்க அவல் பாயாசம் பண்ணிடுங்க சூர்யாவுக்கு அதான் ரொம்ப பிடிக்கும். நம்ம வீட்டுக்கு சீக்கிரமா ஒரு பாப்பா வரப்போகுதுக்கா நீங்க பாயாசம் பண்ணிடுங்க” என சந்தோஷத்தில் கட்டளையிடும் மனைவியை கண்ணிமைக்காமல் பார்த்தான்.


பவானி அங்கிருந்து அகன்றதும் அவனிடம் திரும்பியவள் “சூர்யா நீங்க” என ஆரம்பித்தவளை “நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க மேடம்?” என்றான் கேலியாக.


“என்னை தூக்கி வேகமாக சுத்துங்க” என்றாள்.


அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தவன் “டேய் சூர்யா உன் காதுல சரியா தான் கேட்டிச்சா” என தன்னையே கேட்டுக் கொண்டான்.


“அதெல்லாம் உங்க காதுல சரியா தான் விழுந்துச்சு. கர்ப்பமா இருக்க பொண்ணுங்க மட்டும் தான் நீங்க அப்பாவாக போறீங்கன்னு சொல்லி புருஷன் பொண்டாட்டிய தூக்கி சுத்தணுமா? நம்மளும் அம்மா அப்பா ஆகப்போறோம்”


“பெத்துக்கிறவங்க மட்டும் தான் பொண்டாட்டிய தூக்கி சுத்தி சந்தோஷப்படனுமா? தத்தெடுத்துக்க போற நம்மளும் நம்ம சந்தோஷத்தை வெளிப்படுத்திக்கலாம் தானே. இன்னும் கூடுதல் சந்தோஷமா நம்ம சந்தோஷத்தை வெளிப்படுத்தலாம் தப்பில்லை” என்றாள் குறும்புடன் கண்சிமிட்டி.


அவள் சொல்வதைக் கேட்டு அவனுக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது.


அவள் கேட்டது போலவே அவளை தூக்கி சுற்ற “நாங்க அம்மா அப்பா ஆகப் போறோம். வீ ஆர் கோயிங் டு பிகம் அ ப்ரொவுட் பேரண்ட்ஸ்” என சத்தம் போட்டவள் கலகலவென நகைத்தாள்.


அவள் மகிழ்ச்சியை கண்டு அவன் மிகவும் சந்தோஷப்பட்டான். அவர்கள் இருவருமே மகிழ்ச்சியுடன் வலம் வந்தனர்.


சந்துருவுக்கு அழைத்த சூர்யா “அண்ணா கரால அடாப்ட்ஷனுக்கு அப்ளை பண்ணிருந்தோம் எங்களோட பேரு லிஸ்ட்ல வந்துருச்சு. டாக்குமெண்டேஷன் முடிச்சிட்டு குழந்தைய கூட்டிட்டு வந்துடலாம்” என்றதும் சந்துருவுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.


“ரொம்ப சந்தோஷமா இருக்குடா. இனியாவது நீ மதி குழந்தைனு குடும்பமா சந்தோஷமா இருக்கணும்” என்றான் சந்துரு உண்மையான அக்கறையுடன்.


“அண்ணா நீங்களும் குழந்தைய கூட்டிட்டு வர எங்க கூட வரணும். நாங்க நல்லாருக்கணும்னு நினைக்கிற நீங்க எங்க கூட வந்தா எங்களுக்கு சந்தோஷமா இருக்கும்” என தன் அண்ணனை உடன் வருமாறு வேண்டினான்.


“கண்டிப்பா நான் வர்றேன்” என்றான் சந்துரு நெகிழ்ச்சியுடன்.


“அண்ணா நீங்க மட்டும் வாங்க. நாங்க நல்லாருக்கணும்னு நினைக்கிற நீங்க மட்டும் வந்தா எங்களுக்கு போதும்” என்றான் சூர்யா.


அதிலேயே தாயும் மனைவியும் உடன் வரக்கூடாது என்ற தம்பியின் கட்டளையை புரிந்து கொண்டவனாக “நான் மட்டும் தான் வருவேன்” என்றவன் சொன்னது போலவே அவன் மட்டும் தனியாக வந்தான்.


டாக்குமெண்டேஷன் முடித்து அழகான கரண்டு வயது பெண் குழந்தையை முறையான ஆவணங்களுடன் முறைப்படி தத்தெடுத்து வந்தனர்.


“சூர்யா நம்ம குழந்தைக்கு நம்ம விருப்பம் போல் பேரு வைக்கலாமே” என ஆசையுடன் கேட்டாள் மதி.


“நானும் இதையே தான் சொல்ல நினைச்சேன் அதுக்குள்ள நீ சொல்லிட்ட. கண்டிப்பா நம்ம ஃபங்ஷன் பண்ணி பேரு வைக்கலாம்” என சந்தோஷத்துடன் சம்மதித்தான் சூர்யா.


“சூர்யா குழந்தைக்கு பெயர்” என ஆரம்பித்தவளை வாயில் விரல் வைத்து அவள் பேச்சை தடுத்தவன் “நான்தான் என் பொண்ணுக்கு பெயர் வைப்பேன். ஏற்கனவே நான் பெயர் செலக்ட் பண்ணிட்டேன்” என்றான்.


அவன் பெயர் தேர்வு செய்து விட்டதாக சொன்னதும் அவள் ஆர்வத்துடன் கேட்க “சர்ப்ரைஸ்” என அவள் வாயடைத்தான்.


நண்பர்கள் அண்ணன் என நெருங்கிய வட்டத்தில் உள்ள தன் நலம் விரும்பிகளை அழைத்து சிறப்பாக விழா எடுத்தவன் குழந்தைக்கு “ஷன்மதி” என பெயர் சூட்டினான் சூர்யா.


அவன் குழந்தைக்கு ஷன்மதி என பெயர் வைத்ததும் ஆனந்த அதிர்ச்சியுடன் “ஏன் ஷன்மதின்னு பேரு வச்சீங்க வேற பேரு வச்சிருக்கலாமே?” என்றாள் சந்தேகமாக.


“இந்தக் குழந்தை நம்ம கைக்கு வரதுக்குள்ள நீ பட்ட உடல் கஷ்டம் மனக் கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. உன் போராட்டத்துக்கு என்னால கொடுக்க முடிஞ்ச சின்ன சந்தோஷம் இது தான். என்னோட முதல் எழுத்து இனிஷியல்னா மதினு உன் பெயர் வர்ற மாதிரி பெயர் வச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றான்.


இனி சூர்யா வெண்மதி ஷன்மதி குடும்பமாக சந்தோஷத்துடன் இருப்பார்கள்.
 

NNK-19

Moderator
எபிலாக்


சூர்யா மதி தங்கள் செல்ல குழந்தை ஷன்மதியுடன் நிம்மதியாக நாட்களை கடத்தினார்கள்.


ஷன்மதியை மிகுந்த அன்புடன் வளர்த்தனர்.


ஷன்மதியும் தாய் தந்தை இருவரிடமும் மிகுந்த பாசத்துடன் இருந்தாள்.


ஷன்மதிக்கு எப்போதும் தாய் தன்னுடன் இருக்க வேண்டும். எப்பொழுதுமே தன் தாயின் முந்தானையை பிடித்துக் கொண்டு சுத்துவாள் ஷன்மதி.


ஷன்மதிக்கு மூன்று வயதிருக்கும் போது சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தவள் தலைசுற்றி மயங்கி விழுந்தாள்.


ஹாலில் தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த ஷன்மதி பொத்தென்ற சத்தத்தில் பயந்து சத்தம் போட்டு அழுதாள்.


அழும் ஷன்மதியை கையில் தூக்கிக்கொண்டு சமையலறைக்குள் ஓடினான் சூர்யா.


அங்கு விழுந்து கிடந்த தாயை கண்டு மேலும் பயந்து அழுதாள் ஷன்மதி.


“தங்ககுட்டி அழாதீங்க அம்மாக்கு என்னனு பார்க்கலாம்” என்றவன் மதியின் கன்னத்தை தட்ட அவளிடம் அசைவில்லை. தண்ணீர் தெளித்தும் அவள் கண் விழிக்கவில்லை என்றதும் பயந்தான் சூர்யா.


அதற்குள் அருகிலுள்ள கடைக்கு சென்று திரும்பி வந்த பவானி ஷன்மதின் அழுகை சத்தம் கேட்டு சமையலறைக்குள் விரைந்து ஓடி வந்து ஷன்மதியை தூக்கினார்.


“அக்கா என்னாச்சுன்னு தெரியல மதி மயக்கம் போட்டு விழுந்துட்டா. தண்ணி தெளிச்சும் கண் முழிக்க மாட்டேங்கறா. நான் அவளை ஹாஸ்பிடல் தூக்கிட்டு போறேன். நீங்க ஷன்மி குட்டிய பார்த்துக்கோங்க” என்றான் சூர்யா.


“அப்பா நானும்” என அழுதாள் ஷன்மதி.


“தம்பி உங்கள விட்டுட்டு பாப்பா இருக்க மாட்டா. ரொம்ப அழுவுறா பாருங்க. நானும் வர்றேன் பாப்பாவ தூக்கிட்டு ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்” என்றார் பவானி.


மருத்துவமனையில் மதியை பரிசோதித்த மருத்துவர்கள் “கங்ராஜுலேசன்ஸ் மிஸ்டர் சூர்யா உங்க வைஃப் பிரக்னன்ட்டா இருக்காங்க” என்றதும் சூர்யாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.


இந்த தருணத்துக்காக மதி எவ்வளவு வலி வேதனைகளை கடந்து வந்தாள் என நினைத்துப் பார்த்தான்.


மதி சந்தோஷத்துடன் கணவனை அணைத்துக் கொண்டு ஆனந்த கண்ணீரில் மிதந்தாள்.


அவளுக்கு கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு ஷன்மதியிடம் சென்று அவளை முத்தமிட்டாள். “ஷன்மதி குட்டி உங்களுக்கும் உங்களை மாதிரியே குட்டி தம்பியோ தங்கச்சியோ வரப்போகுது. அம்மா வயித்துல பாப்பா இருக்காங்க” என்றதும் தாயை அணைத்துக் கொண்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள் ஷன்மதி.


கணவனிடம் வெண்மதி “நமக்கு குழந்தை வரப்போகுது ஷன்மதி மேல நம்ம வச்ச பாசத்துல கடுகளவு கூட குறையக்கூடாது. ஷன்மதி நம்ம வாழ்க்கைல வந்த வசந்தம்” என்றாள் கண்ணீருடன்.


“உனக்கு தோணுதா நம்ம ஷன்னதி மேல வச்ச பாசம் மாறும்னு. மாறவே மாறாதடீ நமக்கு இந்த ரெண்டு குழந்தைகளும் ஒன்னு தான்” என மனைவியை காதலுடன் அணைத்தான்.


“சூர்யா நம்ம அம்மா அப்பாவாக போறோம் என் வயித்துல பாப்பா இருக்கு” என அவள் ஆசைப்பட்டது போலவே அவள் சொல்ல அவன் காதலுடன் அவளை தூக்கி சுற்றினான்.


ஷன்மதி தங்களுக்கு கிடைத்த தருணத்தில் இதே போல நடந்து கொண்டது ஞாபகம் வந்து சிரித்தனர்.


தினமும் மதி வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு முத்தம் கொடுத்து பாசத்தை பகிருவாள் ஷன்மதி. அவள் வாந்தி மயக்கமென துவளும் நேரத்தில் சூர்யா ஷன்மதி இருவருமே அவளுக்கு துணையாக இருந்தனர்.


மதிக்கு ஒன்பதாம் மாதம் தொடங்கியதும் அவள் ஆசைப்பட்டபடி ஊரைக் கூட்டி வளைகாப்பு நடத்தினான்.


அவள் முன்பொருமுறை வயிற்றில் தலையணையை கட்டிக் கொண்டு கண்ணாடியை பார்த்து அவள் செய்தது அவனுக்கு நினைவு வர கண் கலங்கினான் சூர்யா.


“சூர்யா பழசை நினைக்காதே இந்த தருணத்தோட சந்தோஷத்தை முழுசா அனுபவி” என தம்பியின் தோளில் தட்டினான் சந்துரு.


ஒருமுறை பட்டதே போதுமென பார்வதி கவிதா இருவரையும் சூர்யா தன்னருகில் கூட சேர்க்கவில்லை.

காலம் அவர்களுக்கான தண்டனையை கொடுக்கும். மகன் தன்னை முற்றிலும் ஒதுக்கியதை விடவா பெரிய தண்டனை பார்வதிக்கு உண்டு.


ஷன்மதி தானும் அன்னையின் கன்னத்தில் சந்தனம் தடவி வளையல் போட்டாள்.


சூர்யா தானும் கண்கள் நிறைய காதலுடன் சந்தனத்தை அழுத்தமாக அவள் கன்னத்தில் தடவி கையில் கண்ணாடி வளையல்களை மாட்டிய போது இருவரின் உள்ளமும் நிறைந்தது.


சந்துருவை தந்தை ஸ்தானத்தில் வைத்து அவனிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள்.


ஒரு நாள் நள்ளிரவில் பிரசவ வலி வந்து மதி கதறித் துடிக்க பயந்து போனான் சூர்யா.


தாயின் அழுகையை கண்டு ஷன்மதியும் அழுதாள். மதியை கையில் அள்ளிக் கொண்டவன் பவானியையும் ஷன்மதியையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.


மதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு சிசேரியன் செய்ய வேண்டும் என்றனர்.


சூர்யா பயத்தில் உடைந்து போய்விட்டான். ஷன்மதி அழுது கொண்டே இருந்தாள். பவானி சந்துருவுக்கு அழைத்து தகவல் சொன்னதும் அவன் மருத்துவமனைக்கு விரைந்து வந்தான்.


“அண்ணா மதிக்கு சிசேரியன் பண்ணனும்னு சொல்லி ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டு போய்ருக்காங்க எனக்கு பயமாருக்கு” என அண்ணனை அணைத்துக் கொண்டு அழுதான் சூர்யா.


தந்தை அழுவதை கண்டு தானும் அழுதபடி “பெரியப்பா அம்மா” என சந்துருவின் காலை கட்டிக்கொண்டு அழுதாள் ஷன்மதி.


குழந்தையை அள்ளி கையில் தூக்கியவன் “அழாதீங்க குட்டிமா இப்ப அம்மாவும் பாப்பாவும் வந்துருவாங்க” என ஷன்மதியை சமாதானப்படுத்தினான் சந்துரு.


“சூர்யா பாப்பா உன்னை பார்த்து பயந்து அழறா அமைதியா இரு மதிக்கு ஒன்னுமாகாது” என்றான் சந்துரு.


ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்த மருத்துவர் சூர்யாவிடம் “ உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. உங்க வைஃப்பும் குழந்தையும் நல்லாருக்காங்க” என்றதும் சூர்யாவுக்கு நிம்மதியாக இருந்தது.


மதிக்கு மயக்கம் தெளிந்ததும் சூர்யாவும் ஷன்மதியும் ஆளுக்கு ஒரு பக்க தோளில் சாய்ந்து அழுதனர்.


“அம்மா நல்லா இருக்கேன் இப்ப ஏன் ரெண்டு பேரும் அழறீங்க? சூர்யா நீங்களும் அழுது பாப்பாவ அழ வைக்காதீங்க” என கண்டித்தாள் மதி.


“ஷன்மீ குட்டி பாப்பாவ பார்த்தீங்களா?” என ஆசையுடன் கேட்டாள் மதி.


“ஆமா நான் பார்த்தேன். க்யூட்டான டால் மாதிரி இருக்கா குட்டி பாப்பா. நானும் கேர்ள் குட்டி பாப்பாவும் கேர்ள் ஜாலி ஜாலி” என குதித்தாள்.


ஷன்மதிக்கு ஏக குஷி ஹாஸ்பிடல் நர்ஸ் அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து “எனக்கு தங்கச்சி பாப்பா பிறந்துருக்கு” என சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.


ஒரு நல்ல நாளில் சூர்யா தன் பெண்ணரசிக்கு மகிழ்மதி என பெயர் சூட்டினான்.


சந்துரு எப்போதும் போல விளையாட்டாக ஷன்மதியிடம் “நீங்க டாடிஸ் லிட்டில் பிரின்சஸா” எனக் கேட்டான்.


“நோ பெரியப்பா நானும் மகிழ்மதியும் மம்மி டாடிஸ் லிட்டில் பிரின்சஸ். வீ லவ் போத் ஆஃப் தெம்” என்றாள் தன் பெரியப்பாவிடம்.


அதைக் கேட்டு சூர்யா மதி இருவரும் சிரித்தனர். மகிழ்மதி ஏதோ தனக்கும் புரிந்தது போல கைதட்டி சிரித்தாள்.


இதே போல சூர்யாவின் வாழ்க்கை தன் மூன்று மதிகளுடன் என்றென்றும் சந்தோஷமாக தொடரட்டும்.


முற்றும்…


இந்தக் கதையில் வரும் மதிக்கு சூர்யா போல அன்பான துணைவன் கிடைத்தான். அவன் துணையுடன் இந்த மதியின் வாழ்க்கைக்கு தீர்வு கிடைத்தது. ஆனால் நாட்டில் மதி போல எத்தனையோ பெண்கள் உள்ளனர். அவர்களுக்கு இந்த சமூகமும் சுற்றமும் சொந்தங்களும் துணையாக நிற்க வேண்டும். இனியாவது குழந்தையில்லாத தம்பதியர்களை நோகடிக்க பேசி நிம்மதியாக இருப்பவர்களின் வாழ்க்கையில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். முடிந்தால் அவர்களுக்கு துணையாக இருங்கள் இல்லையென்றால் அமைதியாக கடந்து விடுங்கள்.

மாற்றம் நம்மிடம் தொடங்கட்டுமே.

 

NNK-19

Moderator
CARA - Central Adoption Resource Authority


முறையாக சட்டப்படி குழந்தையை தத்தெடுக்க (CARA) தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பணம் கொடுத்து குழந்தையை தத்தெடுப்பது சட்டப்படி தவறு.


திருமணமான தம்பதிகள் விவாகரத்தானவர்கள் சிங்கிள்ஸ் என யார் வேண்டுமானாலும் குழந்தையை தத்தெடுக்கலாம்.


(CARA)வில் பதிவு செய்ய தேவைப்படும் ஆவணங்கள்.


நீங்கள் திருமணம் ஆனவர்களாக இருந்தால் தேவைப்படும் ஆவணங்கள்


கணவன் மனைவி இருவரது

பர்த் சர்டிபிகேட்

(இருப்பிடச் சான்றிதழ்)

ஆதார் கார்டு

ஓட்டர் ஐடி

பேன் கார்டு

மேரேஜ் சர்டிபிகேட்

வருமான சான்றிதழ்

தம்பதிகள் இருவரது புகைப்படம்

பதிவு பெற்ற மருத்துவரிடம் நல்ல மனநிலையில் உள்ளதாக வாங்கிய சான்றிதழ்


சிங்கிள்ஸ் ஆக இருந்தால் தேவைப்படும் ஆவணங்கள்

பர்த் சர்டிபிகேட்

(இருப்பிடச் சான்றிதழ்)

ஆதார் கார்டு

ஓட்டர் ஐடி

பேன் கார்டு

விவாகரத்தானவர்களாக இருந்தால் டிவோர்ஸ் ஆர்டர்

தம்பதிகளில் யாரேனும் ஒருவர் இறந்திருந்தால் டெத் சர்டிபிகேட்

வருமான சான்றிதழ்

புகைப்படம்

பதிவு பெற்ற மருத்துவரிடம் நல்ல மனநிலையில் உள்ளதாக வாங்கிய சான்றிதழ்


உங்கள் பகுதியில் உள்ள சிறப்பு தத்தெடுப்பு அமைப்பிலிருந்து உங்களை அணுகுவார்கள்.


உங்களது குடும்பச் சூழல் தத்தெடுக்கக்கூடிய குழந்தையின் பாதுகாப்பு என அனைத்தையும் உறுதி செய்ய மூன்று மாத காலம் தொடர்ந்து ஆய்வு செய்வார்கள்.


அவர்கள் ஆய்வு செய்து ரிப்போர்ட் அளித்ததும் கோர்ட் ஆர்டர் கிடைக்கும்.


கோர்ட் ஆர்டர் கிடைத்த தினம் முதல் அந்தக் குழந்தை சட்டப்படி தத்தெடுத்தவர்களின் குழந்தை ஆகும்.

வேறு யாரும் அந்த குழந்தையிடம் உரிமை கோர முடியாது.


எந்த மாதிரியான குழந்தைகளை தத்தெடுக்கலாம்?


18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தத்தெடுக்கலாம்

சரண்டர் பண்ணப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்கலாம்.

தாய் தந்தை இல்லாத குழந்தைகளை தத்தெடுக்கலாம்.

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்கலாம்.

பிசிகலி சேலஞ்ஜ்டு குழந்தைகளை தத்தெடுக்கலாம்.


யாரெல்லாம் குழந்தைகளை தத்தெடுக்கலாம்?


சிங்கிள் மேல் (male)

சிங்கிள் ஃபீமேல் (female)

திருமணமானவர்கள்


வயது


தம்பதிகள் இருவரது வயதை கூட்டினால் 90க்குள் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தத்தெடுக்கலாம்.


தம்பதிகள் இருவரது வயதை கூட்டினால் 100க்குள் இருந்தால் 4 முதல் 8 வயதிற்குள் உள்ள குழந்தைகளை தத்தெடுக்கலாம்.


தம்பதிகள் இருபது வயதை கூட்டினால் 110க்குள் வந்தால் 8 முதல் 18 வயதிற்குள் உள்ள குழந்தைகளை தத்தெடுக்கலாம்.


சிங்கிள்ஸ் :

சிங்கிள் மேல்(male) ஆண் குழந்தையை மட்டுமே தத்தெடுக்க முடியும்.


சிங்கிள் பீமேல்(female) ஆண் அல்லது பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம்.


சிங்கிள்ஸ் குழந்தைகளை தத்தெடுக்க குறைந்தது 25 வயதாகி இருக்க வேண்டும்.


நீங்கள் சிங்கிள்ஸாக இருந்தால் 25-45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தால் நாலு வயதிற்குள் உள்ள குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம்.


நீங்கள் 50-54 வயது உடையவர்கள் என்றால் 4-8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளலாம்.


நீங்கள் 55 வயது உடையவர்கள் என்றால் 8-18 வயது வரை உள்ள குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளலாம்.


55 வயதிற்கு மேல் உள்ள சிங்கல்ஸ்களால் குழந்தையை தத்தெடுக்க முடியாது.


உறவினர்களது குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தையின் சம்மதத்துடன் வழக்கறிஞரிடம் அபிடவிட் (Affidavit) வாங்க வேண்டும்.


திருமணமானவர்கள் திருமணம் ஆகி குறைந்தது இரண்டு வருடங்கள் கடந்திருக்க வேண்டும்.


குழந்தையை தத்தெடுக்க விரும்புபவர்கள் முறையாக தத்தெடுக்கவும். சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்யாதீர்கள்.


நீங்கள் முறையாக தத்தெடுக்க விரும்பினால்
www.cara.nic.in
என்ற தளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யலாம்.

 
பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் சகி ,எல்லாருமே வாசிங்க,இதுபோல கதைகள் கொண்டாடப்படனும்
 

NNK-19

Moderator
பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் சகி ,எல்லாருமே வாசிங்க,இதுபோல கதைகள் கொண்டாடப்படனும்
நன்றி
 

NNK-19

Moderator
பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் சகி ,எல்லாருமே வாசிங்க,இதுபோல கதைகள் கொண்டாடப்படனும்
தாங்கள் என் கதையை பாராட்டியது மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏
 
Status
Not open for further replies.
Top