எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன் மிட்டாய் 1 - கதை தீரி

NNK-53

New member
தேன்மிட்டாய் 1

தேதி பிப்ரவரி 13, 1998.
இரவு 11..
தஞ்சைப் பேருந்து நிலையம்…

அப்பேருந்து நிலையம் கூட்டமின்றி விருச்சோடி கிடந்தது. ஆங்காங்கே பேருந்துகள் உறங்கிக் கொண்டிருக்க, ஒரு இடத்தில் மட்டும் சிறிய வெளிச்சம்.

அவ்வெளிச்சத்தில் அரிதாரம் பூசிய மலராய் பெண்கள் பலர் நின்றிருக்க, விட்டில் பூச்சியாய் ஆண்கள் அங்கே குலும்பினர்.

வயது வித்தியாசமின்றி வயோதிகன் முதல் விடலை வரை அவ்விடம் நோட்டமிட, “வ்வா வ்வா..” சைரன் சத்தம் காதைப் பிளக்க, போலிஸ் ஜீப் அவ்விடம் வந்து சேர்ந்தது.

அச்சத்தம் கேட்டு ஆளுக்கு ஒரு திசையில் அடித்து பிடித்துக் கொண்டு ஓட, ஓரே ஒருத்தி மட்டும் அவ்விடம் ஆணி அடித்தது போல் அசையாமல் நின்றாள் அவள் தான் நம் கதையின் நாயகி சுதா ராணி.

“இந்தம்மா வா, வந்து வண்டியில் ஏறு.” கொஞ்சம் சதைப்பிடிப்புள்ள பெண் போலிஸ் அவளை அழைக்க, “ஏன்? நான் ஏன் வரனும்?” போலிஸைப் பார்த்தும் அசராமல் இருந்தவள் நிமிர்வுடன் கேள்வி எழுப்பிட, “அதெல்லாம் ஸ்டேசனில் வச்சி பேசிக்கலாம். வா மொத.” என்ற அந்தப் பெண் போலிஸ், அவள் மறுக்க மறுக்க இழுத்து வந்து வேனில் ஏற்றினர்.

அரை மணி நேரமே கடந்திருக்கும் இப்போது அவள் தஞ்சையிலிருக்கும் ஒரு காவல் நிலையத்தில்.

அங்கிருக்கும் ஒரு நீள் இருக்கையில் வலுக்கட்டாயமாக அமர வைக்கப் பட்டிருந்தாள் சுதா.

சிறிது நேரத்தில் ஒரே பரபரப்பு.. காவலர் மத்தியில் சிறிது கலவரம்.

“ஏய் பொண்ணே இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு எழுந்து நில்லு.” என்று ஒரு பெண் போலிஸ் அரட்டவும் வேறு வழியின்றி இவளும் எழுந்து நிற்க, நாற்பது வயதிற்கும் இன்ஸ்பெக்டர் அப்துல் கரீம் மிகக் கம்பீரமாக உள்ளே வந்தமர்ந்தார்.

“என்னய்யா ரோத்துக்குப் போயிட்டு வந்திடீங்களா?” கோப்புகளைப் புரட்டியபடியே தனக்குக் கீழ் இருப்பவர்களை அவர் அரட்ட, “சார்ப் பஸ் ஸ்டாண்ட்க்கு ரோத்துப் போனவங்க மட்டும் தான் வந்திருக்காங்க.” பவ்வியமாகப் பதிலளித்தார் ஏட்டு ஏகாம்பரம்.

“ஓஹ் நைட்டான போதும் இதுங்க பிரச்சினைப் பெரும் பிரச்சினையை இருக்கு. எத்தனைய்ய மாட்டுச்சு?”

“ஒன்னே ஒன்னு தான் சார். மத்தது எல்லாம் சத்தம் வந்ததும் பறந்திடுச்சுங்க.”

“வாட்? இதைச் சொல்ல வெட்கமா இல்லை. எங்க அந்த ஏட்டம்மா?” கர்ஜனையாக அவர் அழைக்கவும், சுதாராணியை இழுத்துக் கொண்டு போய் அப்துல் கரீம் முன் நிறுத்தினாள் ஏட்டம்மா சாந்தகுமாரி.

“சார்… அது வந்து சார். நான் போறதுக்குள்ள எல்லாப் பொண்ணுங்களும் ஓடிருச்சுங்க இருந்தும் நான் விடலையே, பின்னாடியே விரட்டி போயி இந்தப் பொண்ணைப் பிடிச்சிட்டு வந்துட்டேன் சார்.” சாந்தகுமாரி வீண் ஜம்பம் அடிக்க, “பொய்..” ஏட்டம்மாவிற்குப் பின்னாலிருந்து தைரியமாகப் பேசினச் சுதா ராணியின் அதரங்கள்.

சத்தம் வந்ததும் தலைச் சாய்த்து ஏட்டம்மாவை விலகி சுதாராணியை நோக்கினார் அவர்.

“இங்க வா.” என்பது போல் இரு விரலால் சைகைக் காட்ட, ஏட்டம்மா சாந்தகுமாரியை விளக்கிவிட்டு அவருக்கு முன் கம்பீரமாக நின்றாள் சுதா.

“ஏட்டம்மா பொய் சொல்றாங்க னு சொல்றீயே. எங்க, அங்க நடந்த உண்மையை நீயே சொல்லு.” என்றவரின் கண்கள் அவளை மேலிருந்து கீழ் வரை அளவிட்டன.

“நான் ஓடலாம் இல்ல. சும்மா தான் நின்னுக்கிட்டு இருந்தேன். இவங்க தான் நான் சொல்லச் சொல்லக் கேட்காம இங்க அழைச்சிட்டு வந்துட்டாங்க.” ஏட்டம்மாவைப் பார்த்தபடி இவள் பேசிட, புருவம் சுருக்கியவர், “ஆமா நீ எதுக்கு அங்க நின்ன?” என்று கேட்க, “லாஸ்ட் பஸ் போயிடுச்சு சார். பஸ் ஸ்டாண்ட முழுக்க ஓரே இருட்டு. அதோடு வேறு எங்கேயும் பொண்ணுங்க இல்ல அங்க தான் பொண்ணுங்க இருந்தாங்க. அதான் அங்க நின்னேன்.” நிமிர்வாகப் பதில் கொடுப்பவளை இமை மூடாது பார்த்தனர் மற்ற போலிஸார்கள். பின்ன போலிஸ் ஸ்டேசன் என்றால் பல ஆண்களுக்கே நடுக்கும். இவளோ பெண் அதுவும் பருவ பெண். சிறிதும் பயமின்றித் தைரியமாக இருப்பவளைப் பார்க்கப் பார்க்க அவர்களுக்கு ஆச்சரியம் தான்.

அவளின் தைரியத்தைக் கண்களால் மெச்சியபடியே“அந்தப் பொண்ணுங்க என்ன தொழில் செய்றவங்க னு தெரியுமா?” என்று அப்துல் கேள்வி எழுப்ப, “முதத் தெரியாது சார். கூட்டமா பொண்ணுங்க இருக்கவும் நானும் போய் அங்க நின்றேன். அங்க போன பிறகு தான் தெரிந்தது அவங்க எல்லாம் தப்பான பொண்ணுங்க என்று.” அமைதியாகப் பதில் கொடுத்தாள் இவள்.

“தெரிந்தும் வேற இடத்திற்குப் போகலையா?” பேப்பர் வெய்ட்டைச் சுற்றியபடியே கேள்வி எழுப்பியவரின் கண்கள் இன்னும் அவளிடம் தான். அவளை முற்றும் முழுதாய் அளவிட்டன.

“இரட்டுக்குள் இருப்பதற்குப் பதில் அந்தப் பெண்களுக்குப் பக்கத்திலிருப்பது பாதுகாப்பா இருக்கும் னு தோணுச்சு. அதான்.”

“பாதுகாப்பு அதுவும் அந்தப் பொண்ணுங்களுக்குப் பக்கத்தில்.. இத நான் நம்பனும்.” பிரம்பைப் பிடித்துக் கொண்டு மிரட்டும் தோணியில் அவர்க் கேட்டிட, “நிச்சயமா சார். ஒரு முறை முறைச்சதும் அந்தப் பொண்ணுங்க எல்லாம் விலகிடுச்சுங்க. இரண்டு அடி அடிக்கவும் ஜோல்லு வடிச்சிட்டு வந்த ஆம்பிள்ளைங்க எல்லாம் ஓடிப் போயிட்டாங்க. இதுவே இருட்டுனக் கூட இரண்டு அடி போடனும் வாய் கிழியக் கத்தனும். இது தேவையா?” தோரணையாகப் பயமின்றிப் பேசுபவளைப் பார்க்க ஆச்சரியம் தான் அவருக்கு. இருப்பினும் அதை வெளிக்காட்ட விரும்பாதவர் அடுத்த வேள்வி கணைகளைத் தெளிவாக எய்தார்.

“இவ்வளவு தெளிவா பேசுறா? இந்த மாதிரி அன்டைம்ல இப்படி வெளியே வருவது தப்பு னு உனக்குத் தெரியாதா? ஆமா எதுக்காகப் பஸ் ஸ்டாண்ட்டுக்கு வந்த?”

“நான் கோயம்புத்தூர்ப் போகனும் சார். நான் வந்த பஸ் நடுவுல ரிப்பெர் ஆகிடுச்சு. அதான் இவ்வளவு லேட்டு. நான் வந்த நேரத்தில் கோயம்புத்தூருக்குப் பஸ் இல்லையாம். நாலு மணிக்குத் தான் இனி பஸ் வரும் னு சொன்னாங்க அதுவரை எங்க போகனும் னு தெரியல. அதான் அவங்க கூட இருந்தேன்.”

“எந்த ஊரு?”

“பட்டுக்கோட்டை பக்கத்தில் நாட்டுச்சாலைச் சார்.”

“ஓஹ் நான் ஒட்டபிடாரம் தான், ஆமா எதுக்குக் கோயம்புத்தூர்ப் போற?”

“அங்க ஒருத்தரைப் பார்க்கனும் சார். அதான்..” இதற்கு மட்டும் அவளின் தலைத் தானாகக் கவிழ, “ம்ஹும்.. என்ன எதுவும் லவ்வா?” கேலியாக வினவினார் அவர்.

“ம்ம்..” என்றவளின் கண்கள் மிளிர்ந்தன. கன்னம் சிவந்தன. பொன்னிற மேனி சிலிர்த்தன.

“ம்ம்..சரி தான். உன்ன மாதிரி தான் இப்ப பல பொண்ணுங்க காதல் கிதல் னு வாழ்க்கையைக் கெடுத்துங்க. ஏட்டம்மா அந்தப் பொண்ணோட பேக்-க வாங்கிச் செக் பண்ணுங்க.” கட்டளையிட்டபடியே அவர் அவளைப் பார்க்க, “எந்தப் பதட்டமுமின்றித் தனது லெதர்ப் பேக்- ஐ நீட்டினாள் சுதா ராணி.

அந்த ஏட்டம்மா சாந்தமாரியும் அவளது பையைப் பிரித்துப் பார்க்க, ஓரே ஒரு தாவணி, ஒரு சில பலகாரச் சம்படம், கொஞ்சம் பணம் இவ்வளவு தான் அதிலிருந்தது.

பாக்ஸைப் பார்த்ததும் அவரது புருவம் முடிச்சிட்டன.

“ஒருவேளை கஞ்ச ஏதாவது இருக்குமோ.” என்று எண்ணம் அவருக்கு வர, ஏட்டம்மாவைப் பார்த்து, “அந்தப் பாக்ஸைத் திறந்து பாரு.” கட்டளையிட்டவர் ஊடுருவும் பார்வையுடன் அந்தப் பையை நோக்கினார்.

அந்தம்மாவும் அந்தச் சம்படத்தைத் திறந்து பார்க்க, ஒவ்வொரு சம்படத்திலும் முறுக்கு சீடை என்று விதவிதமாய் பலகாரங்கள். ஒரு சில சம்படத்தில் ஊறுகாய், புளியோதரை மசாலா போன்று உடனே சாதத்துடன் கலந்து சாப்பிட உதவும் மசாலாக்கள்.

இதை எல்லாம் பார்த்து ஸ்டேசனில் இருப்பவர்கள் அனைவரும் கேலியாகச் சிரிக்க, முகம் சுருங்கியது இவளுக்கு.

அப்துலுக்கும் சிரிப்பு தான்.

சிரித்த முகமாய் “என்னது இதெல்லாம்?” என்று வினவ, குனிந்த தலையாய் “இதெல்லாம் அவருக்குப் பிடிக்கும் அதான்..” வெட்கத்தில் வார்த்தைகளை மென்று விழுங்கினாள் சுதா.

“ம்ஹும்..” மெல்லிய சிரிப்பை இதழோரம் தவழ விட்டவர். “நாங்களும் இப்ப அங்க தான் கிளம்புகிறோம் பேசாம எங்க கூட வரியா?” நிதானமாக வினவினார் அப்துல்.

சட்டென்று தலை நிமிர்ந்தவள் சந்தோசமாக “ம்ம்..” என்று தலையாட்டிட, “ம்ம்.. போயி அங்க உட்காரு. இன்னும் கொஞ்ச நேரத்தில் வேன் ரெடியாகிடும் நாம எல்லாரும் சேர்ந்து போகலாம்..”
நட்பாகச் சிரித்தபடியே அவர்.

“தாங்கியு சார்..” கண்கள் மின்னிட நன்றிக் கூறியவள் சிரித்த முகமாய் நீள் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

“என்ன சார் அந்தப் பொண்ணையும் நம்ம கூட அழைச்சிட்டுப் போகலாம் னு சொல்றீங்க?” அவள் சென்றதும் ஏட்டு அப்துல் கரீமிடம் வினவிட, “அந்தப் பொண்ண பார்த்தா தப்பான பொண்ணு மாதிரி இல்ல. நல்ல பொண்ணு, அதோட பார்க்கச் சின்ன பொண்ணா வேற இருக்கு. நாமும் அங்க தானே போக போறோம். போகும் போது அந்தப் பொண்ணையும் அழைச்சிட்டுப் போயிடுவோம். வேன் ரெடியாகிடுச்சா?”

“இன்னும் அஞ்சு நிமிஷத்தில் ரெடியாகிடும் சார்.” பதில் கொடுத்தார் ஏட்டு ஏகாம்பரம்.

அந்தப் பச்சை நிற போலிஸ் வேனுக்கு நடுவிலிருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் சுதா. அவள் அருகில் அவளது வயதை ஒத்த வயதில் ஒரு பெண் போலிஸ் வந்து அமர, “ஹய் அக்கா.” உடனே இவள் நட்பு கரம் நீட்ட,

“ஏய் என்ன ஏன் அக்கா என்கிற, எனக்கும் உன் வயசு தான் இருக்கும். என் பெயரு ஜான்சி. சும்மா ஜான்சினே கூப்பிடு. ஆமா உன் பெயர் என்ன?” நட்பாகவே அவளும் கேட்க,

“என் பெயர்ச் சுதா ராணி. ஆமா ஜான்சி நீங்க எல்லாம் எதுக்குக் கோயம்புத்தூர்ப் போறீங்க.”

“அதுவா நாளைக்கு அங்க ஒரு பெரிய கட்சியுடைய மீட்டிங் இருக்கு. அதுக்கு பந்தோபஸ்துக்குத் தான் கிளம்புறோம்.” பதில் கொடுத்தாள் அப்பெண் போலிஸ் ஜான்சி.

அடுத்து நடக்கப் போகும் ஒரு வரலாற்றுப் பேரழிவு சம்பவத்தை அறியாத அந்த வாகனமோ, ஒரு நல்ல விநாயகர்ப் பாட்டுடன் தனது பயணத்தைக் கோயம்புத்தூர் நோக்கி அடி எடுத்து வைத்தது…

தொடரும்...
 
ஆரம்பமே வித்தியாசமாக இருந்தது 😍😍சுதாராணிதான் ஹீரோயின்🤔,பேரழிவு சம்பவம்???
 

Mathykarthy

Well-known member
Interesting start 🤩🤩🤩
சுதா செம bold.... நிஜமாவே காதலனைத் தேடி தான் போறாளா.... அதுவும் போலீஸ் வேன் ல... அந்த மீட்டிங்க்கு தான் அவளும் போறாளா.... 🤔🤔🙄🙄🙄
 
Top