எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 1

NNK046

Moderator

அத்தியாயம் -1​

கழுத்தில் கொசு கடிக்க பட்டென தூக்கத்தில் இருந்து விழித்தான் விஷ்ணு. கழுத்தை தேய்த்தவனிற்கு அவனின் வேர்வை பிசுபிசுவென கையோடு ஒட்ட, நெற்றி சுருங்கி மேலே அண்ணாந்து பார்த்தான். ஃபேன் ஓடவில்லை.​

' ஏய்.. மீனா கரண்ட் போயிருச்சு டி " சமையல் கட்டில் இருந்த கேட்ட மனோகரியின் குரலில் சிறு சலிப்போடு பெருமூச்சொன்றை விட்ட விஷ்ணு , எழுந்து அவன் படுத்திருந்த பாயை மடித்து வைத்தான்.​

"மா.. எனக்கே தெரியும் எதுக்கு என்கிட்ட சொல்லுற? சும்மா டிஸ்டர்ப் பண்ணாதம்மா. நானே சன்டே ஒருநாள் தான் லீவு, அதுலயும் பிரீயா இருக்க முடியலைனு கடுப்புல்ல இருக்கேன்." பதினொன்றாவது படிக்கும் மீனா அவளின் பையாலஜி ரெகார்ட்டிற்கு படம் வரைந்து கொண்டே திரும்ப கத்த,​

" ஆமா ஆமா அப்படியே கலெக்டர் வேல பாக்கறா! இவள நாங்க டிஸ்டர்ப் பண்ணுறோம். குழம்புக்கு மொளவு அரைக்கனும், ஆட்டங்கல்ல போய் கழுவி வுடு..! நா வனக்குனத எடுத்துட்டு வரேன். "​

" ம்ப்ச் போம்மா " என சலித்து கொண்டாலும் வேலையை செய்ய தவறவில்லை. ஒரு சின்ன பக்கெட்டில் தண்ணீரை பிடித்து கொண்டு வந்தவள், சுத்தமாக ஆட்டாங்கல்லை கழுவி விட்டாள்.​

மறுபடியும் ரெகார்ட் வரையும் வேலையை தொடரலாம் என அவள் உட்கார போக, வேகமாக அவள் அருகில் வந்த மனோகரி, அவளின் கையில் காஃபி டம்பளரை திணித்தாள்.​

" அண்ணே எந்திரிச்சிருச்சா!? " ஆச்சிரியமாக கேள்வி கேட்டவள், மணியை பார்க்க காலை எட்டு என காட்டியது.​

" எப்படிம்மா ஞாயித்து கிழம அதுவுமா இவளோ சீக்கரம் எந்திரிச்சிட்டான்? எப்போவும் மதிய சாப்பாடுக்கு தானே எந்திரிக்கும்!? " மோவாயை தேத்து கொண்டே அவள் கேள்வி கேட்க,​

அவள் முதுகில் ஒரு அடி போட்ட மனோகரி, " அவன் இவன்னு சொல்லாதனு எத்தன தடவ சொல்லி இருக்கேன்..! போ போய் சீக்கிரம் கொடு தம்பி அப்போவே எந்திரிச்சிட்டான் " என்றார் படபடப்பாக.​

"ம்ம்க்கும் ரொம்பதேன் பாசம்!" என சலித்து கொண்டவள் மனோகரியிடம் இருந்து காஃபி டம்பளரை பிடிங்கி அண்ணனிடம் ஓடினாள்.​

சரியான தூக்கம் இல்லாததால் ஏற்கனவே கருவளையம் விழுந்திருந்த அவனின் கண்கள் இன்னும் சிவப்பேரி இருந்தது.​

குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு அடித்து கழுவியவன், மிச்சம் இருந்த கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் விரட்டிவிட்டான். முகத்தை துடைக்க கூட தோன்றாமல் அப்படியே வெளி திண்ணையில் வந்து அமர்ந்தான் விஷ்ணு.​

" அண்ணே காஃபி..!" மீனா டம்பளரை நீட்ட அதை வாங்கி பருகினான். சுடாக உள்ளே காஃபி போனால் தான் அந்த நாளே அவனிற்கு தொடங்கும். எப்பொழுதும் சுறுக் சூடோடு தான் குடிப்பான். அதனாலேயே மனோகரி அவன் எழுந்த உடனேயே எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை எல்லாம் விடுத்து, முதல் வேலையாக அவனிற்கு பிடித்த வகையில் காபி போட்டு கொடுப்பார்.​

ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் தான் இந்த காஃபி கவனிப்பு எல்லாம். மீதி நாட்களில் காலை ஏழு மணிக்கு வேலைக்கு சென்றால் இரவு வீடு வர பத்துக்கு மேல் ஆகி விடும்.மூன்று வேளையும் அவன் வேலை செய்யும் இடத்திலேயே சாப்பிட்டு கொள்வான்.​

" என்னப்பா விஷ்ணு எந்திரிச்சிட்டியா? " வேஷ்டியை மடித்து கட்டி கொண்டே கேட்டார் சிவலிங்கம். விஷ்ணுவின் வீட்டிற்கு நான்கு வீடு தள்ளி தான் இருக்கிறார். சொந்தமாக ஒரு மெக்கானிங் ஷெட்டும் வைத்துள்ளார். பத்தாவது முடித்த உடனே அவரிடம் வேலைக்கு சேர்ந்து விட்டான் விஷ்ணு. ஆறு வருடங்களாக அவரிடம் வேலை பார்த்தவன், அதை விட்டுவிட்டு இந்த நான்கு வருடங்களாக தான் ஹூண்டாய் சர்வீஸ் ஷோ ரூம்மில் வேலைக்கு செல்கிறான். அதில் அவருக்கு துளி கூட விருப்பம் இல்லை.​

நேரடியாகவே அவரின் அதிருப்தியை வெளிக்காட்டி அவனை தன்னோடே வைத்த கொள்ள முயன்றார்.​

"என்ன குறை? சம்பளம் எவளோ வேணும்னு கேளு அவளோ ஏத்தி தரேன். நீ இல்லனா நான் ஷெட்டே நடத்தல்ல போ, எனக்கு அப்றம் இந்த ஷெட்ட நீ நடத்துவனு தான் நம்பிட்டு இருந்தேன்..! இப்படி நடுவுலயே அண்ணன்ன விட்டுட்டு போறேன்னு சொல்லற?" சிவலிங்கமும் அவரால் முடிந்த பல யுக்திகளை பயன்படுத்தினார். ஆனால் அதற்கெல்லாம் துளியும் இசைந்து கொடுக்கவில்லை விஷ்ணு.​

" உங்களுக்கு தேவப்படும் போது சொல்லுங்க நான் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுறேன்..!" அதோடு முடித்து கொண்டான். எப்பொழுதும் விஷ்ணுவின் பேச்சு கத்திரி பேச்சு தான். இத்தனை வருடங்களாக முயன்றும் சிவலிங்கத்தால் விஷ்ணுவோடு ஒரு உறவை ஏற்படுத்தி கொள்ள முடியவில்லை. என் தம்பி என் தம்பி என அவர் எல்லாரிடமும் அவனை பாராட்டி பேசினாலும் அவன் ஒரு போதும் அதை உரிமையாய் எடுத்து கொண்டதும் இல்லை, தன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவரை தலையிடவும் விட்டது இல்லை..!​

விஷ்ணுவை போல் ஒரு பாட்டாளியை விட அவருக்கு தான் மனசு இல்லை. அவ்வப்பொழுது இப்படி விடுமுறை நாட்களில் அவரின் ஷெட் சம்மந்தப்பட்ட வேலைகளுக்கு அவனை கூப்பிட்டு கொள்வார். அவனும் முழு ஈடுப்பாடோடு அதை செய்து முடிப்பான். அதே சமயம் அதற்கான கூலியையும் கராராக பெற்றுக்கொள்வான். அப்படி ஒரு வேலைக்கு கூப்பிட தான் இன்று அவனை தேடி வந்திருந்தார் சிவலிங்கம்.​

" ஒரு அரை மணி நேரம் முன்னாடி வேலை விஷயமா உன்ன கூப்பிட வந்தேன், உன் சித்தி நீ தூங்கிட்டு இருக்க, எந்திரிக்க மாட்ட எதுனாலும் நாளைக்கு வாங்கனு வெரட்டி விட்டிருச்சு..! இப்போ வந்து பாத்தா நீ இங்க உக்காந்து இருக்க? ம்ம்ம்.. கறி குழம்பு வாசம் ஆள தூக்குது என்ன சமையல் வீட்டுல " என்றார் சிரித்து கொண்டே,​

அவரின் சித்தி என்ற அழைப்பில் முகம் இறுகியவன், கடைசி சொட்டு காஃபியையும் ரசித்து குடித்து விட்டு,​

" எங்க வேலை? " தெளிவாக மித்த கேள்விகளை எல்லாம் ஒதுக்கி விட்டு அவனின் தேவைக்கு மட்டும் எதிர் கேள்வி கேட்டான் விஷ்ணு.​

" நம்ம கவுன்ஸலர் வீட்டு கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குதாம், அது தான் அவங்க ராசியான காராம் அதுள்ள தான் இன்னிக்கு போனுமாம். வா வந்து வண்டியில உக்காரு ஒரு எட்டு என்னனு போய் பாத்துட்டு வந்துருவோம். "​

" நீங்க முன்னாடி போங்க நா என் வண்டியில வரேன் " என்றவன் அவரின் பதிலிற்கு காத்திராமல் வீட்டிக்குள் சென்றான்.​

உள்ளே வந்த விஷ்ணு சேரில் மடித்து ஐயரன் செய்து வைத்திருந்த அவனின் சட்டையை எடுத்து மாட்டி கொண்டான். எப்பொழுதும் மிகவும் நேர்த்தியாக தான் உடை அணிவான். நம்மகான மரியாதை என்பது நம் பேச்சிலும் உடையிலும் தான் உள்ளது என்பதில் மிகவும் நம்பிக்கை உள்ளவன். மீனாவிடம் மட்டும் சொல்லி கொண்டு விடை பெற அவனையே பாவமாக பார்த்து கொண்டிருந்தார் மனோகரி.​

விஷ்ணுவின் தாய் அவனிற்கு 6 வயது இருக்கும் பொழுதே மஞ்சகாமாலை நோய் வந்து சிகிச்சைக்கு பலன் இன்றி இறந்து விட்டார். அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து தான் அவனின் தந்தை கணேசனிற்கு மனோகரியை இரண்டாம் திருமணம் செய்து வைத்தார் கணேசனின் தாய் சாவித்ரி. முதலில் இருந்தே விஷ்ணுவிற்கு மனோகரியை கண்டால் பிடிக்காது. அதுவும் அவனின் தந்தையின் இறப்பிற்கு பிறகு சுத்தமாக அவரிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்து கொள்ளவில்லை விஷ்ணு.​

மனோகரியை தள்ளி வைத்தது போல் அண்ணா அண்ணா என தன்னையே சுற்றி வரும் மீனாவை அவனால் ஒதுக்க முடியவில்லை. மீனா தான் இவர்களுக்குள் இருக்கும் பாலம்.​

" கவுன்சிலர் வீடு வரைக்கும் வேலைக்கு போய்டு வரேன்னு அண்ணே சொல்லுச்சு ம்மா"​

" சரி வா,வந்து சாப்பிடு தோச ஊத்தறேன் " என்றவர் சமையல் அறைக்குள் புகுந்துக்கொள்ள மனம் முழுவதும் அவர் மகனிடம் மட்டுமே இருந்தது.​

ஞாயிறு ஒரு நாள்தான் அவனிற்கு விடுமுறை, ஆனால் அதற்கும் சேர்த்தி சனிக்கிழமை இரவு முழுவதும் ஓவர் டைம் பார்த்து விட்டு தான் வருவான். சம்பளம் கொஞ்சம் கூடி வரும் என்று..! இரவெல்லாம் வேலை பார்த்துவிட்டு இன்று அதிகாலை நான்கு மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான். களைப்போடு வந்தவன் தூக்க வெறியில் உடை கூட மாற்றாமல் அப்படியே உறங்கி போனான். ஆனால் அந்த தூக்கமும் கரண்ட் போய் கெட்டு விட, இப்பொழுதும் எழுந்த உடனே சாப்பிடாமல் கொள்ளாமல் வேலைக்கு ஓடும் மகனை பார்த்து நெஞ்சம் கணத்தது.​

என்னை நம்பி தானே உன் தந்தை விட்டு சென்றார். அவன் வயது பையன்கள் எல்லாம் அழகாய் உடை அணிந்து கல்லூரி போகையில் இவன் மட்டும் வேலைக்கு செல்வதை பார்க்க உயிரே போய் விடும் மனோகரிக்கு. ஆனால் என்ன செய்ய முடியும்? இவருக்குள்ளும் ஓர் சுமுகமான உறவு இல்லயே..!? நீ யார் என்னை கேள்வி கேட்க என ஒற்றை கேள்வியில் தூர நிறுத்தியவனை எவ்வளவு முயன்றும் நெருங்க முடியவில்லை மனோகரியால்.​

ஆனால் வரும் சம்பளத்தில் ஒரு ரூபாய் தவறாமல் மீனாவிடம் கொடுத்து விடுவான் விஷ்ணு. மீண்டும் ஓர் அடி மனோகரிக்கு. கணேஷனிற்கு மனைவி என்பதையும் தாண்டி அவனிற்கு தாய் வேண்டும் என்று தானே மனோகரியை திருமணம் முடித்து வைத்தனர். ஒரு தாயாய் நான் தோற்று விட்டேனா? இதை பார்க்கையில் என் கணவர் என்னை மன்னிப்பாரா? நெஞ்சம் பதைபதைதது மனோகரிக்கு.​

என்ன செய்ய வறுமைக்கு முன்னால் தாய் பாசம் எல்லாம் வெறும் தூசு போல் ஆகி விடுகிறதே..!​

கணேசனின் மறைவுக்கு பின் பொருளாதர ரீதியாக மிக பெரிய நெருக்கடியை சந்திதார் மனோகரி.​

கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்தார் கணேசன். சொல்லும் அளவிற்கு ஆடம்பர வாழ்கை இல்லாவிட்டாலும் சாப்பாட்டிற்கு எந்த குறையும் வைத்தது இல்லை. அவர்களின் சின்ன கூட்டில் அழகிய குருவிகளாய் தான் வாழ்ந்து வந்தனர்.​

ஆனால் அவரின் இறப்பு குடும்பத்தின் நிலையை தலைகீழாக மாற்றி விட்டது.​

அவர் இருக்கும் பொழுதே தானும் தன் தனி சம்பாதியத்திற்கு ஏதேனும் வழி வகை செய்திருக்க வேண்டுமோ!? என முதல் முறையாக யோசித்து வருந்தினார் மனோகரி. கையில் இருந்த இறுப்பு பணமும் முக்கால் வாசி கணேசனின் ஈமச்சடங்களிலே கரைந்து விட ரெண்டு பிள்ளைகளையும் வைத்து கொண்டு அடுத்த என்ன செய்வது என்ன மிகவும் தடுமாறு தவித்து கலங்கி போனார். கணேசனின் உறவுகள் அனைவரும் பதினாறம் நாள் முடிந்த உடனே கடமை முடிந்தது என கிளம்பிட, எதிர்பார்த்தது தான் மனதை தேற்றி கொண்டார்.​

கணவன் இறந்த சோகத்தை கூட முழுதாக அனுபவிக்க முடியாமல் விரட்டி அடித்தது அவரின் பொறுப்பு சுமைகள்.​

அருகில் இருந்த சக்கரை மில்லிற்கு கூலி வேலைக்கு போய் சேர்ந்தார் மனோகரி. வேலையில் கூட எவ்வளவு பாகுபாடு ஆம்பளை ஆள் வாங்கும் கூலியில் கால்வாசி தான் இவருக்கு தரப்பட்டது. இரவு பகல் பாராமல் முதுகு உடைய ஒரு மாதம் வேலை பார்த்தும் அவருக்கு கிடைத்த சம்பளம் என்னவோ வெறும் ஐந்தாயிரம் தான்...!​

வீட்டு வாடகை, மளிகை பொருள், பிள்ளைகளின் படிப்பு, வயதான மாமியார், இதர செலவுகள் என கணக்கு பட்டியல் நீண்டு கொண்டே போக கடலில் போட்ட பெருங்காயம் போல் தான் இருந்தது அந்த ஐந்தாயிரம்.​

இவர்கள் வீட்டின் மேலேயே தான் ஹவுஸ் ஓனர் குடும்பமும் குடி இருந்தனர்.​

வாடகை தர முடியவில்லை வேறு ஒரு நல்ல வேலை தேடி கொண்டு அடுத்த மாததிற்குள் எப்படியாவது பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என அவர் கேட்க, கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் ஒரு நாள் கூட தாமதிகாமல் அடுத்த நாளே ஆட்களை வரவழைத்து அவர்கள் வீட்டை வழுகட்டாயமாக காலி செய்ய வைத்தனர். வேறு வீடு தேடுவதற்கு கூட அவகாசம் தரவில்லை.​

உயிரில்லா இந்த பணத்திற்கு தான் எத்தனை சக்தி..! உயிரோடு இருக்கும் மனிதர்களின் உணர்வுகளை குழி தோண்டி புதைக்கவும் முடியும்.​

உயிருக்கு போராடி கொண்டிருப்பவனை உயிர் பிழைக்கவும் வைக்க முடியும்.​

நம்மிடத்தில் ஆதாயம் இருக்கும் வரைக்கும் தான் வரை தான் எதுவும். அது இல்லை என ஆன பின் தூசி தட்டுவது போல் சட்டென அவர்கள் வாழ்வில் இருந்து தூக்கி எறிந்து விடுவர் என்னும் வாழ்க்கை பாடத்தை வலிக்க வலிக்க கற்று கொண்டான் விஷ்ணு. மனோகரிக்கு எப்படியோ, ஆனால் மேல் வீட்டு பாட்டி தாத்தா என்றால் விஷ்ணுவிற்கு மிகவும் இஷ்டம். எந்த பலகாரம் செய்தாலும் சூடு குறைவதற்கு முன்னே அவனிற்கு கொடுத்து விடுவர். ஆனால் அதற்கு முன் அதை செய்ய தேவையான பொருட்கள் வாங்க அவனை தான் அனுப்பி வைப்பர். அப்பொழுது தான் புரிந்தது அவனை அன்பொழுக பேசி அவனை அடிமைப்படுத்தி இருக்கின்றனர் என்று..!​

நிற்கதியாய் இருந்த மனோகரி அடுத்து சென்றது அவள் அம்மா வீட்டிற்கு தான்.​

அவள் அண்ணன் சரவண பெருமாள் அவர்கள் ஹவுஸ் ஓனர் செய்ததை கேட்டு கொதித்து தான் போனார். தான் இருக்கிறேன் என உறுதி மொழி கொடுத்து அரவணைத்தும் கொண்டார் ஆனால் அது எல்லாம் சில மாதங்களுக்கு மட்டுமே..! அவர்கள் இருந்த தெருவிலேயே ஒரு வீடு பார்த்து குடி வைத்தார். அவர்கள் முன்பு இருந்த வீடு அளவுக்கு வசதி இல்லை என்றாலும் அதை பற்றி யோசிக்கும் நிலையில் எல்லாம் அவர் இல்லை. மனோகரி கஷ்டப்படுவதை பார்த்து சாவித்ரியும் தன்னால் முடிந்த வேலை செய்கிறேன், என அவளுடனே கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்தார் . பள்ளி முழு ஆண்டு விடுமுறை என்பதால் இருவரும் வேலைக்கு சென்று விட்டாள் மீனாவை யார் பார்த்து கொள்வது என யோசித்த மனோகரி மீனாவையும் விஷ்ணுவையும் தாய் வீட்டில் தான் விட்டு செல்வார். மனோகரியின் தாய் சிவகாமிக்கு விஷ்ணுவை கண்டாலே பிடிக்காது. ஆனால் மனோகரி அவரின் கோவத்தை விஷ்ணுவிடம் காட்ட விட்டதில்லை. என் மகன் என்ற ஒற்றை வார்த்தையில் அவரை அடக்கிவிடுவார். ஆனால் மனோகரி இல்லாத நேரம் எல்லாம் அவனை ஏச்சு பேச்சு பேசியே கொல்வார் சிவகாமி . " அட்ட பூச்சி மாறி எம்மவ ரத்தத்த குடிக்கறான் " அவன் காதுபடவே பேசி வைத்தார். அன்று வேலைக்கு போய்விட்டு அலுப்பு சலுப்பாக வீடு வந்த மனோகரியிடம் அந்த மாத மளிகை பில்லை நீட்டினார் சிவகாமி.​

" காத்தால விட்டுட்டு போனா பொழுது சாஞ்ச அப்புறம் தான் கூட்டிட்டு போற. என் மவன் ஒருத்தன் சாம்பாதியத்துல்ல தான் எங்க வண்டி ஓடுது. நீ பாட்டுக்கு எவ பெத்த பையனயோ என் வூட்டுல விட்டுட்டு சோறு போட சொன்னா? அந்த அளவுக்கு எல்லாம் ஒன்னும் இங்க கொட்டி கிடக்கல.. கட்டி கொடுத்ததோடு என் கடமை முடிஞ்சி போச்சு. "​

அவரின் நேரடி தாக்குதலில் திகைத்து போனார் மனோகரி. இந்த ஒரு மாத காலமாக தானே அவரின் தயவை எதிர்ப்பாத்திருக்கிறார். அதுவும் சும்மா எல்லாம் ஒன்றும் இல்லையே. பிள்ளைகளை விடும் பொழுதே தன்னால் முடிந்த சிறு சிறு உதவி போல் காய்கறி, பழம் எல்லாம் வாங்கி வைத்து விட்டு தான் போவார். உதவி என்று நிற்கும் பொழுது தான் ஒருவரின் உண்மை குணம் தெரிய வரும் போலும்.​

கண்கள் கரித்து கொண்டு வந்தது மனோகரிக்கு. கணவன் என்ற ஒருவன் இல்லை அல்லது ஒழுங்காக இல்லை என்றால் பெண்களின் திண்டாடம் இதுவே.​

'தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு ' என்பது எவ்வளவு உண்மையாகி போய்விட்டது.​

குழந்தை மீனாவிற்கு வேண்டுமானாலும் நடப்பது எதுவும் தெரியாமல் புரியாமல் இருக்கலாம் ஆனால் பதினைந்து வயது விஷ்ணுவிற்கு எல்லாம் தெளிவாகவே புரிந்தது.​

அந்த பதின்ம வயதிலேயே மனதர்களின் உண்மை முகத்தை பார்த்தவனிற்கு நெஞ்செல்லாம் ரணமாய் வலித்தது.​

ஒருவரின் இயலாமையை எவ்வளவு சீக்கரம் பயன்படுத்தி கொள்கிறது இந்த உலகம்!?​

பள்ளி படிப்பிற்கு ஒரு முகாடு போட்டு விட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்தவன் தான் இன்னும் ஓடி கொண்டே இருக்கிறான்.​

வாழ்கை அவனிற்கு கத்து கொடுத்த மிக பெரிய பாடம் உதவியையும் உரிமையையும் யாரடமும் எதிர்ப்பாக்கவே கூடாது என்பது தான். அதை தெளிவாக புரிந்து தவறாமல் பின்பற்றி வருகிறான் விஷ்ணு..!​

 
Last edited:

Advi

Well-known member
மனோகரி பாவம், அவங்க பக்கம் இருந்து அவங்க சரியா தான் இருக்காங்க.....

அப்ப இதை விஷ்ணு புரிஞ்சிக்கல, ஓகே ....அது அவன் வயசு அப்படி....

ஆன இப்பவுமா????

இது தப்பு டா....

விஷ்ணு ஓட இந்த பழக்கம் 👌👌👌👌👌, கோவபட்டு தப்பான வழியில் போகமா, நல்ல வழியில் போறது👏👏👏👏👏....
 

NNK046

Moderator
மனோகரி பாவம், அவங்க பக்கம் இருந்து அவங்க சரியா தான் இருக்காங்க.....

அப்ப இதை விஷ்ணு புரிஞ்சிக்கல, ஓகே ....அது அவன் வயசு அப்படி....

ஆன இப்பவுமா????

இது தப்பு டா....

விஷ்ணு ஓட இந்த பழக்கம் 👌👌👌👌👌, கோவபட்டு தப்பான வழியில் போகமா, நல்ல வழியில் போறது👏👏👏👏👏....
விஷ்ணு மனோகரி கிட்ட பேசாம இருக்க ஒரு காரணம் இருக்கு டியர்.. அது கதை போக்குல்ல தெரிய வரும்.. 😍😍😍 மிக்க நன்றி உங்கள் விமர்சனத்திற்கு😍😍😍
 

Mathykarthy

Well-known member
அருமையான ஆரம்பம் 😍😍😍
விஷ்ணு கறார் பார்ட்டியா இருக்கான்..... எல்லாரையும் தள்ளியே நிறுத்தி இருக்கான் மனோகரி முதல் கொண்டு....

மனோகரி ரொம்ப நல்லவங்களா இருக்காங்க... விஷ்ணு மேல ரொம்ப பாசம் வச்சுருக்காங்க....
புரிஞ்சும் அவனுக்கு தான் அவங்களை ஏத்துக்க முடியல போல.... சம்பாதிச்ச பணத்தை கூட அப்படியே வீட்ல தானே குடுக்குறான்...

சிவகாமி 😡 பணம் தான் எல்லாம்... ☹️
 
விஷ்ணு😍!!...

நிதர்சனமான உண்மை!!... உதவி கேக்கும் போது தான் உண்மை முகம் தெரியும்💯💯!!...

விஷ்ணு, மனோஹரி குள்ள என்ன பிரச்சினை தெரியலையே🤔🤔!!..

அருமையான ஆரம்பம்😍
 

NNK046

Moderator
அருமையான ஆரம்பம் 😍😍😍
விஷ்ணு கறார் பார்ட்டியா இருக்கான்..... எல்லாரையும் தள்ளியே நிறுத்தி இருக்கான் மனோகரி முதல் கொண்டு....

மனோகரி ரொம்ப நல்லவங்களா இருக்காங்க... விஷ்ணு மேல ரொம்ப பாசம் வச்சுருக்காங்க....
புரிஞ்சும் அவனுக்கு தான் அவங்களை ஏத்துக்க முடியல போல.... சம்பாதிச்ச பணத்தை கூட அப்படியே வீட்ல தானே குடுக்குறான்...

சிவகாமி 😡 பணம் தான் எல்லாம்... ☹️
உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி டியர்.. 😍😍😍
 

NNK046

Moderator
விஷ்ணு😍!!...

நிதர்சனமான உண்மை!!... உதவி கேக்கும் போது தான் உண்மை முகம் தெரியும்💯💯!!...

விஷ்ணு, மனோஹரி குள்ள என்ன பிரச்சினை தெரியலையே🤔🤔!!..

அருமையான ஆரம்பம்😍
உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி டியர்.. 😍😍😍 விஷ்ணு மனோகரி குள்ள இருக்க பிரச்னை கொஞ்சம் லேட்டா தான் தெரிய வரும்..
 

Shamugasree

Well-known member
Very nice start
Vishnu characterization super. Vishnu ku manokari mela enna varutham. Heroine eppo varuvanga.
All the best dear
 

NNK046

Moderator
Very nice start
Vishnu characterization super. Vishnu ku manokari mela enna varutham. Heroine eppo varuvanga.
All the best dear
உங்கள் விமர்சனத்திற்கு மிகவும் நன்றி டியர்.. 😍😍😍
 

Eswari

Active member
Good start.
Veli manithargalai thalli niruththurathu sari....koodavey erukkura manohari ya yen avoid pannraan......
 
Top