எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கதைதிரி - பார்தவியே 01

NNK 67

Moderator
பார்தவி-01


கிழக்கில் சூரியன் உதயமானதும் அவன் வரவை, மரக்கிளையில் அமர்ந்திருக்கும் குயில்களோ தன் இனிமையான இசையினால் கானம் பாடி வரவேற்க, காலை நேரவேளையில் பெங்களூரு மாநகரம் முழுவதும், வேலை பரபரப்பில் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு வேகவேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.. இங்கே RR குரூப் ஆஃப் கம்பெனிஸ் அண்ட் ஹோட்டல்ஸ்.. என்ற பொன்னிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பதாகை தாங்கிய, வானுயர்ந்த 25 அடுக்குகளை கொண்ட பிரம்மாண்டமான 7 நட்சத்திர விடுதி கட்டிடத்தின் இருபதாவது மாடியில், அந்த ஹோட்டலில் வேலை செய்யும் முக்கிய ஊழியர்களும் அதிகாரிகளும் தலைகுனிந்தவாறு நின்றிருக்க,


எதிரேயுள்ள மேஜையின்மீது பொன்னிற எழுத்துக்களால் "மிஸ்டர் ராகவ் ரிஷி, சேர்மன் RR குரூப் ஆப் கம்பெனிஸ்.." என்று பொறிக்கப்பட்டிருந்த பலகையைத் தாண்டியுள்ள, சேர்மன் சீட்டில் அமர்ந்து, அவர்களை முறைத்துக் கொண்டிருந்தான் நம் நாயகன் ராகவ்.. அப்போது அங்கிருந்தவர்களில் மூத்த அதிகாரி ஒருவரோ, அவனை சமாதானப்படுத்துவதற்காக முன்வந்து, "சாரி சார்..! இந்த முறை ஏதோ தவறு நடந்துருச்சு..? அடுத்த முறை இந்த தவறு நடக்காம நாங்க பார்த்துக்கிறோம்..!" என்று சமாதானம் கூற,


அவரையும் முறைத்த ராகவோ நிமிர்வாக, "நான் உங்ககிட்ட கேட்டது வேலையைதான்..! எக்ஸ்க்யூஸ்ஸை இல்லை..! புரியுதா..? உங்க எல்லோருடைய கவனக்குறைவால்தான், அவ்வளவு பெரிய ஆர்டர் நம்ம கையைவிட்டு போகப்பார்த்தது..! இந்தமுறை அவர்களிடம் பேசி, எப்படியோ கஷ்டபட்டு ஆர்டரை தக்கவைத்துக் கொண்டாச்சு..! ஆனால் இதேபோல இன்னொரு முறை நடந்ததென்றால், இப்படியெல்லாம் உங்களை கூப்பிட்டு வச்சு பேசிட்டு இருக்கமாட்டேன்..! நேரடியா, நீங்களே உங்க வீட்டுக்கு போக வேண்டியதுதான்..! புரியுதா..? இந்த கம்பெனியில் நீங்க வேலை செய்றீங்க என்றால், உங்களால் இந்த கம்பெனிக்கு லாபம் கிடைக்கவேண்டும்..! மாறாக ஏற்கனவே கிடைக்கும் லாபத்தை கெடுப்பதுபோல உங்கள் வேலை இருந்ததென்றால், அப்படி ஒரு நபர் இந்த கம்பெனிக்கு தேவையில்லை..!" என்று கரராக பேசியவனை, கண்டவர்கள் அனைவருக்கும் எச்சில் விழுங்கியது..!


பின்னர் அவனிடம் மன்னிப்பு கேட்டவர்களோ, "இந்த தவறு மறுபடியும் நடக்காது..!" என்று உறுதி கூறிவிட்டு தங்கள் வேலையை கவனிக்க சென்றுவிட்டனர்.. அப்போது ராகவின் அருகே வந்த அவனுடைய உயிர் நண்பன் நந்தனோ, "டேய் ராகவ்..? கூல் டவுன்டா மச்சி..! அதுதான் சொல்லிட்டாங்கயில்லை..? இனிமேல், இந்த மாதிரி தப்பு நடக்காது..! நீ கொஞ்சம் ரிலாக்ஸாகு..!" என்றிட, தன் நண்பனை கண்ட ராகவோ, "இல்லடா மச்சான்..! அவங்களுக்கு வேண்டுமென்றால், இது சின்ன பிராப்ளமாக இருக்கலாம்..! ஆனால், நமக்கு அப்படி இல்லையே..! இந்த ஹோட்டல் மட்டுமல்ல, நம்ம கம்பெனி மொத்தமும் உருவாக்க நாம எவ்வளவு கஷ்டப்பட்டோமென்று உனக்கு தெரியாதா..? இது எல்லாம் சும்மா வந்துடலடா..? இது சின்ன வயசுலயிருந்து நாம பட்ட கஷ்டத்தோட பலன்..! நம்ம உழைப்போட அங்கீகாரம்..! சின்ன தவறுதானே..? என்று கண்டுகொள்ளாமல் விட்டுட்டா, இதுவே பழகி நாளைக்கு மிகப்பெரிய தவறுக்கு வித்திட்டிடும்..! அதை நாம முளையிலேயே கிள்ளி எரிகிறதுதான் நமக்கு நல்லது..!" என்று சொல்ல,


தன் நண்பனை கண்டுவியந்த நந்தனோ பெருமையாக, "எனக்கு தெரியும்டா..! உழைப்புக்கு நீ கொடுக்கிற முக்கியத்துவம், எனக்கு தெரியாதா என்ன..?" என்று சொல்லிவிட்டு, நட்புடன் ராகவை அணைத்துக்கொண்டான் நந்தன்.. ஆம்..! ராகவும் நந்தனும் சிறுவயது நண்பர்கள்..! ராகவ் பிறந்ததுமே பிரசவத்திலேயே அவனது தாய் உயிரிழந்துவிட, அவனது தந்தை ராகவை பார்த்துக் கொள்வதற்காக இன்னொரு திருமணம் செய்தார்.. ஆனால் வந்தவளோ, அவளுடைய அண்ணன் பேச்சைக் கேட்டுக்கொண்டு சிறு குழந்தை என்றும் பார்க்காமல், ராகவை துன்புறுத்தி வர, நாளடைவில் அவளுக்கும் ஒரு மகன் பிறந்தது..! ஆரம்பத்தில் இருந்தே ராகவை பிடிக்காத அவனுடைய சித்தியோ, தனக்கு குழந்தை பிறந்ததற்கு பின்பு ராகவை ஜென்ம எதிரியாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டார்..!


எதற்கெடுத்தாலும் குற்றம் கூறி அடிப்பதும், வன் சொற்களை கூறி மனதளவில் வதைப்பதுமாக இருக்க, இதையெல்லாம் ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த ராகவின் தந்தையோ, தினசரி ராகவின் மீது அவன் சித்தி சொல்லும் புகார்களை கட்டுப்படுத்த முடியாமல், ராகவை கண்டிக்க ஆரம்பித்தார்..! செய்யாத தவறுக்கு சிறுவயதிலேயே, புரியாமல் தன்னை தண்டிக்கும் தந்தையிடம் தன் நிலையை உணரவைக்க முடியாமல் திணறிய ராகவோ, ஏற்கனவே தாய் இல்லாது அனாதையாகியிருக்க, தந்தை இருந்தும் அனாதை ஆகிப்போனான்..!


நாளுக்குநாள் தன் தந்தை தன்னிடம் பாசம் காட்டாது வெறுத்து ஒதுக்குவதை புரிந்து கொண்ட ராகவிற்கோ சிறுவயதிலேயே வாழ்வு வெறுமை அடைய தொடங்கியது..! அப்படி ஒரு நாள் ராகவிற்கு ஏழு வயது இருக்கும் பொழுது, அவனுடைய சித்தி வேண்டுமென்றே ராகவ் தன் மகனை கீழே தள்ளி விட்டதாக கூறி, கரிக்கட்டையால் சூடு வைக்க முயல அவனுடைய தந்தையோ, அதனை தடுத்து ராகவனை அடித்து, "இனிமேல் இங்கே வராதே..! எங்காவது போய்விடு..!" என்று கூறி, வீட்டைவிட்டு வெளியே தள்ளி அனுப்பிவிட்டார்..


அன்று வீட்டிலிருந்து வெளியேறிய ராகவோ, கேட்பாரின்றி சாலையில் அலைந்து திரிந்து, பின்னர் அங்கிருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் ஏறி இந்த ஊருக்கு வந்து சேர்ந்தான்.. பெங்களூரின் சாலைகளில், கேட்க நாதி இல்லாமல் அலைந்து திரிந்த சிறுவனைக் கண்ட, அடியாட்கள் வைத்து பிழைப்பு நடத்தும் அப்போதைய லோக்கல் தாதாவோ, ராகவை அழைத்து விசாரித்து, அவனைப்பற்றி தெரிந்தபின்பு தன்னுடனே வைத்துக்கொண்டார்..


குழந்தையிலேயே பெற்றவர்களால் கைவிடப்பட்ட ராகவிற்கு, அவனை புரிந்துகொள்ளாத அப்பாவின்மீது வெறுப்பு உண்டாகியது..! பின்னர் அவனை வளர்த்த ரவுடி ராவுத்தரிடம் தொழிலை கற்றுக்கொண்டு, சிறுவயதிலேயே அடிதடி, துப்பாக்கிச்சூடு போன்ற வேலைகளில் ஈடுபட்டான் ராகவ்.. பின்பு நாளாகநாளாக, "தானும் வளர்ந்து, சமூகத்தில் மற்றவர்கள் மதிக்கும்படி, ஒரு பெரிய ஆளாகவேண்டும்..!" என்று நினைத்தவனோ, என்னதான் அடிதடி தொழிலில் ஈடுபட்டாலும், ராவுத்தரின் உதவியோடு பகுதி நேரமாக, அவனுக்கு பிடித்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் கலையை படித்துத்தேர்ந்தான்..


திடம் வாய்ந்த கட்டுமஸ்தான உடலுடன் கூடிய புஜங்களுடன், பார்ப்பதற்கு ஆறடி ஆணழகனாக இருந்தான் ராகவ்.. அவனுடைய மாநிறத்திற்கு ஏற்ற, ஒளிபொருந்திய கண்களோ அவனது அழகை இன்னும் மெருகேற்றிக்காட்ட, காணும் பெண்களெல்லாம் அவனை சுற்றிவந்தாலும், இதுவரை அவன் எந்த பெண்ணையும் ஏறெடுத்து கூட பார்த்ததில்லை..! அவனைப் பொறுத்தவரையில், காதல், குடும்பம் உறவு.. இது அனைத்தும் பொய்யே..! சிறுவயதிலிருந்து, தான் யாருமின்றி தனியாக தவித்த காலங்களில், தன்னுடன் பழகிய தன்வயதை ஒத்த நந்தன் மட்டுமே அவனுடன் நெருங்கிய நண்பன்..! அதனால், அவன் பெரிதாக மதிப்பது நந்தனின் நட்பு மட்டுமே..!


இருவரும் படிப்பு முடித்தபின்பு தங்கள் கடின உழைப்பாலும், அறிவு திறனாலும் ஹோட்டல் துறையில் கால்பதித்து, இன்று எண்ணிலடங்கா உயர்ரக ஐந்து மற்றும் ஏழு நட்சத்திர விடுதிகளும், தனியார் மதுபான விடுதிகளுமென, இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பி, அதன் முடிசூடா மன்னனாக திகழ்கின்றனர்.. இன்றளவிலும் பெங்களூரு மாநகரை பொறுத்தவரையில், ஹோட்டல் தொழிலில் ராகவ் சொல்வதுதான் சட்டம்..! மீறினால், அப்படி ஒருவர் இருந்ததற்கான சான்றே இல்லாமல் அழிக்கப்பட்டு விடுவார்கள்..!


இயற்கையிலேயே முரடனாக வளர்ந்த ராகவிற்கு, மது.. மாது.. என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் போனதுதான் ஆச்சரியம்..! ஆம்..! இந்த உலகில் அவனை வசியப்படுத்தக்கூடிய, எந்த போதையும் இல்லை என்றே சொல்லலாம்..! அடிதடி தொழிலில் ஈடுபட்டாலும், அவனுக்கென்ற தனிமனித ஒழுக்கத்தில் மட்டும் என்றுமே தவறியதில்லை..! மொத்தத்தில் இவன் ஒரு வித்தியாசமான அதிரடிநாயகன் என்றே சொல்லலாம்..!


இங்கே மீட்டிங் முடிந்தபின்பு ராகவ்வோ நந்தனுடன் சேர்ந்து, தனது மற்றொரு 5 நட்சத்திர விடுதியின் கட்டுமான பணிகளை காண்பதற்காக வெளியே சென்றுகொண்டிருந்தபோது, அங்கே வாசலில் கையில் குழந்தையோடு, ஒரு பிச்சைக்காரி நின்று உணவு கேட்டுக் கொண்டிருக்க, அந்த ஹோட்டலின் செக்யூரிட்டியோ அவளை துரத்தி விட்டுக் கொண்டிருந்தான்.. அப்போது அதனைக்கண்ட ராகவோ வேகமாக சென்று, அந்த செக்யூரிட்டியை தடுத்து அந்த பிச்சைக்காரியை பார்க்கையில், அவள் சாப்பிட்டு பல நாட்கள் ஆகியது..! என்று பசியில் வாடிய அவள் முகமே சொல்ல,


உடனே செக்யூரிட்டியிடம் சொல்லி அவளுக்கான உணவை வெளியே கொண்டு வரச்சொன்னான்..! உணவு வெளியே வந்தபின்பு, அதனை பிச்சைக்காரியிடம் கொடுக்க, அதனை மகிழ்வாக வாங்கிக் கொண்டவளோ ராகவைக் கண்டு கையெடுத்து கும்பிட, அவள்முகம் பார்த்த ராகவோ, "உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், இப்படி குழந்தையை வச்சிட்டு பிச்சை எடுக்கிறதைவிட, நான் உங்களுக்கு வேலை போட்டுத்தரேன்..! என்கிட்ட வேலை செய்யுறீங்களா..?" என்று பணிவாக கேட்டிட, அவன் கேள்வியில் அதிர்ந்த பிச்சைக்காரியோ, "தன்னை ஒரு அவமான பொருளாக எண்ணி, வெளியே விரட்டுவோரின் மத்தியில் தனக்கு உணவும் கொடுத்து, பிச்சை எடுப்பது தவறு..! என்று சொல்லாமல், என்னிடம் வேலை செய்கிறீர்களா..?" என்று கேட்பவனை கண்டவளுக்கு, அக்கணம் கடவுளாக தோன்றினான் ராகவ்..!


உடனே தலையசைத்து, அவன் கேள்விக்கு சம்மதித்த அந்த பிச்சைக்காரியோ கண்ணீர் மல்க, "சாமி..? என்னை ஒரு மனுசியா மதிச்சு, வேலை போட்டு கொடுக்கிற உங்க மனசுக்கு, நீங்க பொண்டாட்டி குழந்தையோட, காலம்முழுக்க நல்லா இருக்கணும் சாமி..!" என்று வாழ்த்திட, அந்நேரம் தேவதூதர்கள் "சதாஸ்த்து..!" என்று சொன்னார்களோ..? என்னவோ..? மெல்லிய புன்னகை ஒன்றை இதழில் தவழவிட்டவனோ, தன் செக்யூரிட்டியிடம் அந்த பிச்சைக்கார பெண்ணிற்கு வேலை போட்டுக்கொடுக்கச் சொன்னதாக சொல்லிவிட்டு, அங்கிருந்து காரை கிளம்பினான்..


இதையெல்லாம் கவனித்த நந்தனோ, காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது ராகவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க.. ராகவ்வோ, "டேய்.. நந்தா..? எதுக்குடா என்னை இப்படி பாக்குற..?" என்று கேட்க, "இல்லடா மச்சான்..? உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியலடா..! காலையில் எல்லோரையும், வேலைக்காக திட்டின..? அப்புறம் ரோடில் போற பிச்சைக்காரிக்கு சாப்பாடு போட்டு, கையோடு வேலையும் கொடுக்கிற..?" என்றிட, ராகவோ புன்னகைத்தபடி தன் நண்பனின் முகம்பார்த்து, "காலையில் ஆபீஸில் முதலாளியாக இருந்தேன்டா..! இப்போ அந்தப் பெண்ணிடம் மனிதனாக இருந்தேன்டா..!" என்றிட, இரண்டே வார்த்தையில் தெளிவாக உணர்த்திய தன் நண்பனை பெருமையாக பார்த்தான் நந்தா..


தீயென தகிப்பவனின் மனதிலும் ஈரம் உள்ளதோ…? பார்க்கலாம்…


தொடரும்..?
 
Last edited:
Top