எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே!! 1 - கதை திரி

NNK-82

Moderator

மடி சாயாதே மாயனே!!​

அழகிய வட்ட வெண்ணிலவு கரிய வானில் ஒளிர்ந்து கொண்டிருக்க, இரவின் நிசப்தமும் குளுமையை அணைத்து உயிர்களையும் உச்சி நுகர்ந்து உறங்க வைக்கும் இரவில், பூக்கலால் அலங்கரிக்கப்பட்ட முதலிரவு அறையில், காவேரி நதி கரையில் சயணம் கொண்டிருக்கும் பெருமாள் போல ஒரு கரத்தால் தலையை தாங்கி கொண்டு ஒருக்கழித்து படுத்திருந்தவன் கண்ணில் கண்டதையெல்லாம் தூக்கி போட்டு நொறுக்கும் தன் மனைவியை சலனமே இல்லாமல் பார்த்து கொண்டிருந்தான் இன்பா பாண்டியன்.​

அவள் கழுத்தில் இருந்து வயிறு வரை தொங்கிய புது மஞ்சள் தாலி பாவமாய் விழிக்க, கோபமாய் அனைத்தையும் உடைத்தாள் நன்நிலா.. கண்ணாடி, பூ ஜாடி, தண்ணீர் ஜக் என அனைத்தையும் நொறுக்கியவள் அடுத்து உடைக்க எதுவும் இல்லாமல் போக சுற்றி பார்த்தாள், "இனிமே உடைக்க இந்த ரூம்ல எதுவும் இல்ல.. " என்றான்.​

அவள் கோபமாக பார்க்க "என்ன பிரச்சனை உனக்கு??" ஒன்றும் அறியாதவன் போல முகத்தை வைத்து கொண்டு அவன் கேட்க "எனக்கு உன்ன பிடிக்கல.." அக்னி கக்கும் வார்த்தைகளை கொட்டினாள்.​

"ஓ.. அப்டியா?? ஏன்??" புருவம் தூக்கி கேட்டான்.​

"நீ ஒரு அரக்கன். மனசாட்சியே இல்லாத மிருகம்.." என்றாள் கொஞ்சமும் கோபம் குறையாமல்.​

அவளை அழுத்தமாய் பார்த்தவன் எழுந்து அவள் அருகில் வந்தான். அவன் நெருங்க நெருங்க அவள் பின்னோக்கி நகர, இடை வலைத்து நிறுத்தினான் அவளை. இன்னும் ஒரு அடி எடுத்து வைத்திருந்தாலும் கூட உடைந்து கிடந்த கண்ணாடி துண்டுகள் அவள் பாதத்தை பதம் பார்த்திருக்கும். அதை அவள் உணராமல் அவன் பிடியில் திமிரி கொண்டிருக்க "சா.. ரி.. ஒரே ஒரு தடவ சாரி சொல்லு உன்ன விட்டரேன். சட்ட படி டிவைஸ் கொடுத்தர்றேன்.." என்றான் சலனமே இல்லாமல்.​

விழிகளில் வேந்தனல் சுமந்து நின்ற பெண்ணவள் "நான் எதுக்கு சாரி கேக்கணும்??" என்றாள் பற்களுக்கு நடுவில் வார்த்தைகளை கடித்து துப்பி.​

இதழ் வலைத்தவன் "கை நீட்டி என்ன அடிச்சியே!! அது தப்பு இல்லையா??" என்று கேட்க "கொடுத்த கடனுக்காக வட்டி மேல வட்டி போட்டு அந்த குடும்பத்தை விரட்டி அவங்களுக்காக இருந்த ஒரே வீட்டையும் பறிச்சுகிட்டியே அது தப்பு இல்ல?? நீ நல்லவனா??" என்று கேட்க "அதெல்லாம் தொழில் தர்மம். என் வட்டி தெரிஞ்சு தானே என்கிட்ட கடன் வாங்கினான்.." இயல்பாக அவன் கூறினான்.​

அவன் மார்பில் கை வைத்து தள்ளி "என்கிட்ட நெருங்காத.." விரல் நீட்டி எச்சரித்தாள்.​

"நான் உன் புருஷன் டி.. நான் நெருங்காம வேற யார் நெருங்குவா??" என்று அவளை நெருங்கி சுவரோடு சேர்த்து அனைகட்டி சிறை செய்தவன் "சாரின்னு ஒரே ஒரு வார்த்தை சொல்லு. உன்ன விட்டர்றேன்.. சொல்ல முடியாதுன்னு முரண்டு பிடிச்ச இன்னைக்கு மாதிரி என்னைக்கும் நல்லவனா இருக்க மாட்டேன்.." என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் படி.​

அவள் உறுத்து விழிக்க "இப்டி ஒரு பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு சும்மா இருக்கவன் ஆம்பளையே இல்ல டி.. என்ன ரொம்ப சோதிக்க.. அதனால உன்ன காப்பாத்திக்கணும்னா சாரி சொல்லிட்டு போ. இல்லைன்னா என் கூட வாழறதுக்கு தயார் ஆகிடு.." என்றவன் "முடிவு உன்னோடது தான்.." என்று அவள் கண்ணம் தட்டிவிட்டு சென்றான்.​

கோபத்தில் அவள் முகம் செவ்வானமாய் சிவந்து போனது. "நான் என்ன தப்பு பண்ணேன்.. இவன்கிட்ட நான் ஏன் சாரி சொல்லணும்.. முடியாது.." என்று தன் நிலையில் இருந்து இறங்கி வர கூடாது என்று நினைத்தாள்.​

மூன்று மாதத்திற்கு முன்…​

"ஐயா.. தயவு செஞ்சு கொஞ்சம் கருணை காட்டுங்க ஐயா.. இன்னும் ஒரு மாசம் எனக்கு டைம் கொடுங்க.. என் தலையை அடமானம் வச்சாவது உங்க கடன கொடுத்தர்றேன்.." அந்த குடும்ப தலைவர் நம் நாயகன் இன்பா பாண்டியனின் காலை பிடித்து கெஞ்ச, அவன் மனைவி அழும் பிள்ளைகள் இரண்டையும் அணைத்து கொண்டு அழுது கொண்டிருந்தாள்.​

நீ செத்தா எனக்கென்ன என்ற ரீதியில் அமர்ந்திருந்தவன் "உன் தகுதிக்கு மீறி என்கிட்ட கடன் வாங்கினது முதல் தப்பு, அதுவும் வீட்டு பத்திரத்த வச்சு வாங்கினது ரொம்ப பெரிய தப்பு.. ஒரு வருஷத்துல தர்றேன்னு சொன்ன இன்னையோட ஒரு வருஷம் முடியுது.. ஆனா சல்லி காசு நீ கொடுக்கல. அசலும் வரல, வட்டியும் வரல. அப்போ நா என்ன பண்ணுவேன்னு உனக்கு தெரியும். அப்புறம் என்ன??" என்றான் அந்த குடும்பத்தின் மொத்த பாவத்தையும் வாங்கி கொண்டு.​

"ஐயா.. ஐயா.. எனக்குன்னு இருக்கதே இந்த வீடு ஒன்னு தான்யா.. இதையும் நீங்க எடுத்துக்கிட்டா நான் குடும்பத்தோட தெருவுல தான் நிக்கணும்.. பொண்டாட்டி புள்ள முகத்துக்காக கொஞ்சம் கருணை காட்டுங்க.." மண்டியிட்டு கெஞ்சினார்.​

கருணை தன் அகராதியிலே கிடையாதே.. இதழ் வலைத்தவன் எழுந்து நின்று "அத நீ கடன் வாங்குறதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும்.." என்று கூற, அவன் ஆட்கள் அந்த வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் வீட்டுக்கு வெளியில் அள்ளி போட, அவர்களில் கெஞ்சல், அழுகை எதையுமே கருத்தில் கொள்ளாமல் வீட்டை பூட்டி சாவி எடுத்து கொண்டு சென்றான். வீட்டின் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடைக்க அந்த குடும்பமே தலையில் அடித்து கொண்டு அழுதனர். ஊரே கூடி வேடிக்கை பார்க்க அவர்களை புருவம் தூக்கி முறைத்தான் இன்பா.​

மொத்த கூட்டமும் காற்று பட்ட மேகம் போல கலைந்து செல்ல பெண்ணோருத்தி மட்டும் கோபமாக அவனை நோக்கி வந்தாள்.​

"இவன் எல்லாம் நல்லா இருப்பானா?? நாசமாக போக.. இந்த புள்ளைங்க அழுகை கூட அவ மனச கரைக்கலையே.. இவனும் ஒரு பொம்பள வயித்துல தானே பொறந்தான்.. இவனை பெத்தவ ராட்சசியா தான் இருப்பா.. இவன் வெளங்கவே மாட்டான்.." சாபமாக வாரி இறைத்தனர்.​

தோழி வீட்டுக்கு வந்த நன்நிலா நடந்ததையெல்லாம் பார்த்து வெகுண்டு எழுந்தாள். ஸ்கூட்டயை சைட் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவள் வேக நடையில் அவனை நெருங்கினாள். காரில் ஏற போக போனவனை சுடக்கிட்டு நிறுத்தினாள்.​

இன்பா நின்று அவளை பார்க்க "கந்துவட்டி கொடுக்க கூடாது வாங்க கூடாது. தெரியாதா உனக்கு??" என்று கேட்டவளை உறுத்து பார்த்தவன் கூலர்ஸ் கழட்டிய படி அவள் வெண்ணிலா முகத்தை தான் கண்டான். அவன் பார்வைக்கு பயந்து கலைந்து சென்ற ஈசல் கூட்டத்துக்கு நடுவில் பட்டாம்பூச்சியாக எதிர்த்து நின்று கேள்வி கேட்ட பெண்ணவளை ரசித்து பார்த்தான்.​

"ஹெலோ.. உன்கிட்ட தான் பேசுறேன்.." முகத்துக்கு நேராக சுண்டினாள்.​

சிந்தனை தெளிந்தவன் "என் பெயர் இன்பா பாண்டியன்.. கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட்.." என்றான் புருவம் உயர்த்தி.​

"கந்து வட்டி வசூல் பண்ற உனக்கு என்ன மரியாதை?? கந்து வட்டி சட்டத்துக்கு புறம்பானது.. தெரியாத உனக்கு??" மீண்டும் ஒருமையிலே பேசினாள்.​

அதை மனதில் குறித்து கொண்டவன் "அது வட்டிக்கு வாங்குறவனுக்கு தெரிஞ்சிருக்கணும்.." என்றான் அமர்த்தளாக.​

"ஏழைங்க அவசரத்துக்கு தேவை படுற பணத்தை வச்சு விளையாடுறியா??"​

"ஆமா டி.." என்றான்.​

"டி யா??"​

"என்ன நீ வா போன்னு சொல்லும் போது உன்ன டி சொல்ல கூடாதா??" அவன் கேட்க அவள் பேச வாக்குவாதம் அதிகமாகி போக இறுதியில் அவன் கண்ணத்தில் ஓங்கி அறைந்தாள். இதை எதிர் பாராதவன் அதிர்ச்சி அடைய "நீ டி போட்டு பேசுறதுக்கு நான் ஒன்னும் உன் பொண்டாட்டி இல்ல.. நீ பண்றதுக்கெல்லாம் சீக்கிரம் கம்பி என்ன போற.." என்று எச்சரித்து விட்டு கிளம்பினாள்.​

பற்களை நர நரத்த படி அவளை பார்த்தவன் என்ன ஆனாலும் இவள் தான் என் மனைவி என்று உறுதி கொண்டான். அதோடு நில்லாமல் அவளை பற்றி விசாரிக்க கமிஷனர் மகள் என்று தெரிந்து அவரிடம் பெண் கேட்டு திருமணம் செய்து கொண்டான். கந்துவட்டிகாரனுக்கு கமிஷனர் பெண் கொடுக்க காரணம் அவனின் வாங்கி இருந்த கடன். ஆனால் அது மட்டுமே காரணமா??​

அதிகாலை பொழுது அற்புதமாய் விடிந்தது. விடிவெள்ளி நாயகன் அடி வானில் தோன்றி தன் கிரண கதிர்கள் மூலம் உலகை தன் கொடைக்கு கீழ் கொண்டு வந்து கொண்டிருந்தான். மஞ்சள் வெயில் முகத்தில் பட எழுந்தான் இன்பா.. இமைகளை இருக்கி மூடி திறந்து எழுந்தவன் நேற்றைய நினைவுகளை அசை போட்ட படி அவன் அறைக்கு வந்து பார்க்க அலங்கோலமாக கிடந்தது.​

படுக்கையில் அவள் இல்லை. அவள் எங்கிருப்பாள் என்று தான் அவனுக்கு தெரியுமே. வேலைக்கார பெண்ணை அழைத்து அறையை சுத்தம் செய்ய கூறிவிட்டு மாடிக்கு செல்ல யோகா மேட் விரித்து அதில் தலையை தரையில் வைத்து காலை வானம் நோக்கி உயர்த்தி தலை கீழாக நின்று கொண்டிருந்தாள் நன்நிலா.​

புயலே அடித்தாலும், பூகம்பமே வந்தாலும் காலை இரண்டு மணி நேரம் யோகா.. மாலை இரண்டு மணி நேரம் ஜிம் என்பதை மறக்கவும் மாட்டாள் மாற்றி கொள்ளவும் மாட்டாளே.. அவளை பார்த்தவன் ஜிம்க்கு சென்று தன் உடற்பயிற்சியை ஆரம்பித்தான்.​

யோகா முடித்து குளித்து வந்தவள் தன் பேக் எடுத்து உடைகளை அணிந்து கொண்டாள்.​

"ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும் ரெடியாகு.." என்றான்.​

"நான் எங்கையும் வரல.. வர முடியாது.." கொஞ்சமும் திமிர் குறையாமல் அவள் கூற, திரும்பி அவளை பார்த்தவன் "நீ வர்றியா இல்லையான்னு கேக்கல. வா ன்னு சொன்னேன்.." என்றான் அழுத்தமாய்.​

முடியாது.. என்று சிலுப்பி கொண்டவள் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவனுடன் சென்றாள். வேறு வழி இல்லையே.. ஜன்னல் பக்கம் பார்த்து கொண்டே வந்தாள். "உனக்கு ஏன் என்ன பிடிக்கல??" சாலையில் கவனம் செலுத்திய படி அவன் கேட்க, அவனை முறைத்தவள் "நீ கருவா பய.. அதனால எனக்கு உன்ன பிடிக்கல. போதுமா??" என்றாள் வெறுப்பாக.​

நம் நாயகன் இன்பா பாண்டியன் கருமை நிற கண்ணன். அவள் நன்நிலா என்றால் அவன் கருப்பு நிலா. அழகும் ஆண்மையும் வசீகரமும் பொருந்திய கருப்பு வானவில் அவன். கருந்தேக்கு உடற்கட்டும், திமிர், கர்வம் கொண்ட அவன் பார்வையும் தனி அழகு தான் அவனுக்கு. அந்த பார்வைக்கும் அழகுக்கும் பல பெண்கள் அவன் மடியில் கிடக்க தவம் கிடக்க, அவனோ என் வாழ்வில் ஒரே நிலவு என் நன்நிலா தான் என்று உறுதியாய் நிற்கிறான்.​

அவளை ஒரு கணம் பார்த்தவன் மீண்டும் சாலையில் கவனம் செலுத்தினான் அமைதியாக. ஒரு நடுத்தர வீட்டின் முன் காரை நிறுத்தியவன் தானும் இறங்கி அவளையும் அழைத்து கொண்டு சென்றான். காலிங் பெல் இல்லாத வீட்டில் கதவை அவன் தட்ட நடுத்தர வயது பெண்ணோருத்தி கதவை திறந்தார்.​

அவனை கண்டதும் முகம் மாறியவர் அருகில் நின்றவளை கேள்வியாக பார்த்தார். அவள் கழுத்தில் கிடந்த புது மஞ்சள் தாலி நடந்த சேதி சொல்ல, புருவம் சுருக்கி பார்த்தார்.​

நிலா தோள் வலைத்து "என் பொண்டாட்டி.." என்றான். அந்த பெண் அதிர்ந்து நிற்க, தன் மனைவியை பார்த்தவன் "என் அம்மா.." என்றான்.​

அம்.. மா… வா…நிலா அதிர்ந்தாள்…​

தொடரும்…​

 
Last edited:

Mathykarthy

Well-known member
இன்பா அதிரடி ஹீரோ... 🥰

நிலா தானே வந்து அவன்கிட்ட சிக்கிகிட்டா 😂

கந்து வட்டிக்காரனுக்கு கமிஷனர் பொண்ணா கேட்டவுடனே கொடுத்துட்டாரு...🙄 கமிஷனர் எதுவும் கோல்மால் பண்றாரோ... 🤔

அருமையான ஆரம்பம் 😍😍😍
 
ஆரம்பமே அதிரடி!!... அம்மாவ இப்படி சொல்றானே???....

எழுத்துப்பிழை இருக்கு!!... வாக்கிய பிழையும் இருக்கு!!... செக் பன்னுங்க எழுத்தாளரே!!..
 
Top