எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் தேனாக மோத- கதை திரி

Status
Not open for further replies.

NNK-70

Moderator

தீராத காதல் தேனாக மோத- டீஸர்

"என்ன மச்சான் வர வர உன் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்ட மாதிரி ஜெகஜோதியா இருக்கு" என்றான் கதிர் தன் நண்பனை பார்த்து.

எப்போதும் சந்திரனின் உதட்டில் மறையாதிருக்கும் குறுநகை, இப்போதெல்லாம் பெரியதாக மாறி, முகம் கொள்ளாப் புன்னகையுடன் வளைய வரும் தன் நண்பனின் உற்சாகம் கதிரினையும் தொற்றிக்கொண்டது.

அப்படியா தெரியுது என்றான் சந்திரன் தன்னைத் தானே கண்ணாடியில் ஆராய்ந்து கொண்டே.

பின்ன, உன்ன பார்க்க போலீஸ்காரன் மாதிரியா தெரியுது? கொஞ்சமாவது விறைப்பாக இருக்க வேண்டாமா? என் நேரமும் சிரிச்சிட்டே இருக்க, சிரிப்பு போலீஸ் மாதிரி."டேய் டேய், அந்த டாக்டர் பொண்ணுகிட்ட இப்படி விழுந்திட்டியே டா" சந்துரு என்றான் கதிர் போலி கோபத்துடன்.

அப்போது சந்திரனின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததை குறிக்கும் விதமாக ஓசை எழுந்தது.

அதில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இதயமே" என்று வந்த செய்தி கண்டு மேலும் உற்சாகம் பொங்க அவள் எண்ணுக்கு அழைக்க துவங்கினான்.

சற்று நேரத்தில் அவன் அழைப்பு ஏற்கப்பட, இதி, உன்ன பார்க்கத்தான் கிளம்பிட்டு இருந்தேன், அதுக்குள்ள ஒரு அவசர கேஸ் பார்க்க வேண்டியதா ஆகிடுச்சு, இப்போ டியூட்டில இருக்கேன், ஈவ்னிங் மீட் பண்ணலாம் என கடகடவென்று பேசி முடித்தாள்.

'ஹேய் இஞ்சி மிட்டாய் ', கூல் கூல், டிக்கெட் புக் பண்ணிருக்கேன் உனக்கு பிடிச்ச சாருக்கான் படத்துக்கு என்றான் துள்ளலாக.

அதில் அவளின் இதழ்கள் மேலும் விரிந்து புன்னகை தொற்றிக்கொண்டது.

சரி சரி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும், சீக்கிரம் வந்து பிக்அப் (Pickup ) பண்ணிகிறேன் என்றான் ஆர்வமாக.

அவளும் மெல்லிய தலையசைப்புடன் சரி என்றாள்.

அவளிடம் பேசி முடித்தவுடன் அன்றைய மாலை பொழுதிற்காக காத்திருக்க துவங்கினான் சந்திரன்.

அவளோ, அவன் தன்னிடம் என்ன கூறுவான் என்பதை எண்ணி கலக்கமுற்றாள்.

அவன் மனதினை அவளிடம் திறந்தால் அவள் எற்பாளா?விடை தெரியா வினாவது....

 
Status
Not open for further replies.
Top