எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 2

NNK046

Moderator

அத்தியாயம் -2​

கவுன்சிலர் வீட்டில் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பினான் விஷ்ணு.​

அவன் தெருக்குள் நுழையும் பொழுதே சாலையை அடைத்து கொண்டு நின்றது ஒரு கூட்டம்.​

' என்ன ஆச்சு?' என யோசித்தவன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கூட்டத்திற்குள்ளே எட்டி பார்த்தான்.​

" ஏய்.. இன்னா!? சும்மா சொன்னதயே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க!? உன் கூட வெட்டி அரட்ட அடிக்க எல்லாம் எனக்கு டைம் இல்ல. ஒழுங்கா நீ சேதாரம் பண்ணுனத நீயே சரி பண்ணிட்டு போ.. இல்ல ஸ்டேஷனுக்கு நட, அங்க போய் எதுலாம் பேசிக்கலாம். சும்மா இந்த கண்ண கசக்கறது உதட்ட பிதுக்கறதுனு பால்வாடி பப்பி மாறி பண்ணிட்டு இருந்த..! மண்டய பொளந்து மாங்கா சாறு காச்சிருவேன்​

பாத்துக்க..!? "​

நாக்கை மடித்து கண்ணை சுறுக்கி மூக்கை விடைத்து அவள் பேசிய பேச்சில் ஐயனார் தான் பெண் வேடம் போட்டு வந்துவிட்டாரோ என நினைக்க வைக்கிறது..!​

கண்ணை கசக்கி கொண்டு கஷ்டப்பட்டு விழி நீரை வழிய விட்டாமல் அவள் போலீஸ் என மிரட்டிய மிரட்டலில் நடுங்கி போய் அவளையே பார்த்து கொண்டிருந்தாள் சின்ன சிட்டு. ஆம் ஸ்கூல் படிக்கும் வாண்டு ஒன்று தான் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு ஓட்ட தெரியாமல் ஓட்டி, வேதா அவள் வீட்டு வாசலில் நிறப்பி வைத்திருந்த தண்ணீர் குடங்களில் ஏற்றி விட்டாள். மூன்று குடம் கீழே சாய்ந்து தண்ணீர் சிதறி விட. ஒரு குடம் ஸ்கூட்டி டையர் அடியில் நசுங்கி கிடந்தது.​

உடனே அவள் பதறி போய் அவ்விடம் விட்டு நகற முயற்சிக்க. உடும்பு புடியாக அவளை பிடித்து வைத்து கொண்டு வடசட்டி இல்லாமலேயே அவளை வறுத்து கொண்டிருந்தாள் வேதா.​

"ஏம்மா வேதா ஏதோ சின்ன புள்ள தெரியாம பண்ணிருச்சி அத போய் இப்படி பெருசு பண்ணுறியே!? வெறும் ப்ளாஸ்டிக் குடம் தானே அதான் அந்த புள்ள மன்னிப்பு கேட்டுருச்சுல்ல" கூட்டம் கூட பிரச்னையை இதற்கு மேல் பெரிது பண்ண வேண்டாம் என பொதுநலம் கருதி பேசிய ராமசந்திரனிடம் முறைத்த வேதா,​

" என்ன சித்தப்பூ வெறும் ப்ளாஸ்டிக் குடம் தானு நக்கல் அடிக்கறீயா!? நீங்க மட்டும் என்ன வெள்ளி குடத்துல்லையா தண்ணி புடிக்கறீங்க!? உன் வூட்டு குடத்த எடுத்து எனக்கு தரீயா!? நேத்து கோவில் அன்னதானத்துல்ல ரெண்டு வடை எக்ஸ்ட்ரா வேணும்னு கேட்டு கலாட்டா பண்ணவன் தான நீயு..!? எல்லாம் எங்களுக்கு தெரியும் மூக்குக்கு கீழ இருக்க அந்த கெணத்த கொஞ்சம் மூடு " அவள் சட்டென மரியாதை இல்லாமல் பேச வாய் அடித்து போய் நின்றார் ராமசந்திரன்.​

அவர் தோளை இடித்து அவரை வீட்டிற்குள் இழுத்து சென்றாள் அவரின் மனைவி சகுந்தலா.​

"யோவ் வாய வெச்சிட்டு கம்முனே இருக்க மாட்டியா!? இப்போ பாரு அவ எல்லாம் உன்ன பேசுற மாறி இருக்கு..! அந்த ராங்கி மல ஏறிட்டா ஆடி தீக்காம விட மாட்டானு உனக்கு தெரியாதா!? அப்றம் ஏய்யா வாய கொடுத்து குடும்ப மானத்த வாங்குற!? போ உள்ள போ. பிரச்னை முடியற வரைக்கும் உன்ன நா வெளியவே நான் பாக்க கூடாது..! என் புருஷனயே மரியாதை இல்லாம பேசுறியா இரு டி இரு ஊருக்கு போய் இருக்க உன் ஆத்தா அப்பன் நாளைக்கு வரட்டும் அப்போ இருக்கு உனக்கு பூஜை..!" என வேதாவை மனதில் கறுவிகொண்டவள். அடுத்து என்ன நடக்க போகிறது என்ன ஆர்வமாக போய் வெளியே எட்டி பார்த்தாள். அங்கே வேதா அந்த பெண்ணை விடுவதாய் இல்லை.​

"அக்கா ப்ளீஸ் கா தெரியாம பண்ணிட்டேன். நா வீட்டுக்கு போனும் அம்மா தேடுவாங்க" என்றாள் மூக்கை உறுஞ்சி.​

" ஓ அப்போ எங்க வூட்டுல எல்லாம் எங்கம்மா தேடமாட்டாங்களோ!? ஆளாக்கு சைஸ்ல ஆள் இருந்துட்டு பேச்ச பாரு..! நா சொன்னது சொன்னது தான். என் நெளிஞ்சி போன குடத்த சரி பண்ணிட்டு நீ தாரளமா எங்க வேணா போலாம் " காட்டமாக பேசி முடித்தவள் அலட்சிய பார்வை ஒன்றை வீசி விட்டு தன்னை சுற்றி இருந்த கூட்டத்தை ஆராய்ந்தாள்.. விஷ்ணுவின் பார்வை அவள் மேல் தீர்க்கமாக படிந்திருப்பதை பார்த்தவளிற்கு தூக்கி வாரி போட்டது. நிச்சயம் அவனை அங்கு அவள் எதிர்ப்பாக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை என்றால் வீடே கதி என்று தானே கிடப்பான்!? இங்கே எப்படி?என உள்ளுக்குள் எழுத கேள்விக்கு முக்காடு போட்டு முற்று புள்ளி வைத்தவள்,​

" ஓய் சில்லுவண்டு இன்னொரு வாட்டி நீ வண்டி எடுத்துட்டு இங்கயும் அங்கயும் சுத்தறத பாத்தேன். பாத்த எடத்துல்லயே பீஸ் போட்டுருவேன் பாத்துக்க..! போ போ.. பொழச்சி போ.. " என அவசர அவசரமாக அவளை கிளப்பி விட்டு,​

" என்ன இங்க என்ன சர்கஸா நடத்தறாங்க!? யாராவுது பஞ்சாயத்து கூட்டுனா போதுமே உடனே வந்து வேடிக்கை பாக்க வேண்டியது..! போங்கய்யா போங்க, போய் புள்ள குட்டிய படிக்க வைக்கற வேலைய பாருங்க. " என்ன அவர்களையும் துரத்திவிட்டவளின் கண்கள் விஷ்ணுவை தான் தேடியது.​

வேதா.. மனோகரியின் அண்ணன் சரவணபெருமாளின் ஒரே மகள். கல்லூரி முடித்து அரசு வேலைக்கு முயற்சித்து கொண்டிருக்கிறேன் என்ன சொல்லி காலத்தை கடத்தி கொண்டிருக்கிறாள். அவள் தந்தை சரவண பெருமாள் சொந்தமாக ஆட்டோ வைத்து சவாரி செய்கிறார். தாய் விஜயா ஹவுஸ் வைஃப். அம்மா அப்பா இருவரும் அவள் பாட்டி சிவகாமியோடு திருச்சியில் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருக்க, உடன் வர கூப்பிட்டதற்கு,​

" கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம இப்படி பேசறீங்களே!? சொல்லுங்கம்மா நா யாருக்காக படிக்கறேன். எனக்காகவா? நாளா பின்ன என் பொண்ணு கலெக்டர்னு சொல்லி அந்த வசந்தா அக்கா கிட்ட ஃபீரியா பிளவுஸ் தேச்சு போட்டுக்க போறது நானா நீங்களா!? ஜீப் வெச்ச வண்டியில்ல சொகுசா போய் நம்ம சொந்தகாரங்க கிட்ட சீன் போட போறது நானா நீங்களா? நா கலெக்டர் ஆகிட்டா நம்ம ஏரியால கரண்ட் பிரச்னையே வராம ஜாலியா ஃபேனுக்கு அடியில படுத்து இருக்க போறது நானா நீங்களா? சொல்லுங்கம்மா சொல்லுங்க.. சரி உங்களுக்கு புடிக்கலனா சொல்லிருங்க என் கலெக்டர் கனவு எல்லாம் கல்லு போட்டு அள்ளிச்சிட்டு உங்களோட வரேன். இருந்தாலும் நா கலெக்டர்​

ஆனா " என அவள் ஆரம்பிக்க,​

" அய்யோ சாமி நீ வரவே வேணாம் அந்த புக் கட்டி புடிச்சிட்டே உருளு போ " என அவளை விடுத்து அவர்கள் மட்டும் கிளம்பி விட்டனர். ஆனால் வேதா அவர்களோடு போகாமல் இருக்க முக்கிய காரணம் விஷ்ணு. ஆம் விஷ்ணு மீது அவளிற்கு ஒரு ஈர்ப்பு. அது காதலாக எப்பொழுது உருமாறியது எப்படி உருவானது என்னும் ஆராய்ச்சியில் எல்லாம் இறங்க அவள் விரும்பவில்லை. எந்த உணர்வாய் இருந்தாலும் அதை முழுமையாக ஏற்று அப்படியே அனுப்பவிக்க வேண்டும். வீனாக கண்டதை யோசித்து அந்த நொடி இதத்தை இழக்க கூடாது என்பது அவளின் கோட்பாடு.​

விஷ்ணுவிற்கு இப்படி சண்டை போடுவது கத்தி பேசுவது எல்லாம் சுத்தமாக பிடிக்காது. அவன் மேல் தவறு இல்லா விட்டாலும் கூட மன்னிப்பு கேட்டு சண்டையை வளர்க்காமல் உடனே முடிப்பது தான் அவனின் குணம். அவனை கண்ட உடனே அவள் அமைதியாகியது, அவனிற்கு பிடிக்காததை செய்ய கூடாது என்னும் நோக்கூடன் அல்ல.. அவனிடம் இன்றைக்கு பேசியே தீர வேண்டும் என்னும் ஆவலுடன்.​

வீட்டில் தாயும் பாட்டியும் இருக்கையில் காரணமின்றி அவ்வளவு சீக்கிரம் வெளியே செல்ல முடியாது. அதனால் தான் அவர்களை இல்லாத இந்த சமயத்தை பயன்படுத்தி கொள்ள நினைத்தாள்.​

குடுகுடுவென வீட்டிற்குள் ஓடியவள். முதல் வேளையாக அவள் நைட்டியை மாற்றி நல்ல சுடிதார் ஒன்றை அணித்து கொண்டு கண்ணாடி முன்பு வந்து நின்றாள். கொண்டையை அவிழ்த்து ஏதாவது ஸ்டைலாக தலை பின்னலாம் என்ன நினைத்தவளிற்கு எண்ணெய் வைத்த தலை ஒத்துழைக்காததால் மீண்டும் ஓர் உச்சி கொண்டை போட்டவள் முகத்திற்கு மட்டும் பவுடர் அடித்து பொட்டு வைத்து கொண்டாள்.​

" கிச்சு.. டேய்.. கிச்சு.." ராமசந்திரன் வீட்டின் முன்பு நின்று அவர் மகன் கிஷோரை அழைத்து கொண்டிருந்தாள் வேதா.​

" என்ன டி வேணும். இப்போ எதுக்கு எம்மவன் பேர ஏலம் போட்டுட்டு இருக்க!? ஆசையா புள்ள பெத்து கிஷோர்னு பேர் வெச்சா அத நாசம் பண்ணுற மாறி கிச்சி, பிச்சுனு கூப்பிடுற!? " சற்று முன் அவள் கணவனை வேதா திட்டிய கோவம் இன்னும் சகுந்தலாவிற்குள் இருக்க, சற்று காட்டமாகவே வந்தது அவர் குரல்.​

" என் சித்தபூ நாங்க இப்போ அடிச்சிப்போம் அப்றம் ஒட்டிப்போம் அதுலாம் உங்களுக்கு எதுக்கு!!? வழிய விடுங்க கிச்சு எங்க? " என அவள் பாட்டிற்கு சரசரவென வீட்டின் உள்ளே சென்று விட்டாள்.​

அங்கு ஹாலில் டி.வி பார்த்து கொண்டிருந்த ராமசந்திரனிடன் வந்தவள் அவரின் காதை பிடித்து திருகி "ஏன் சித்தப்பூ ஏற்கனவே கொலஸ்ட்ரால் கூடி போச்சுனு மாத்திரை சேத்தி கொடுக்குது அந்த டாக்டரம்மா..! ஆனா நா சொல்ல சொல்ல கேக்காம நேத்து அத்தனை வடை பஜ்ஜினு சாப்பிட்டத்துனால தானே நா உன்ன திட்டுனேன். அது மட்டும் இல்லாம நா கோவமா இருக்கும் போது யார் குறுக்கால வந்தாலும் எனக்கு புடிக்காதுனு உனக்கு தெரியுமா தெரியாதா?? தெரிஞ்ச நீயே இப்படி பண்ணலாமா?டென்ஷன்ல ஏதோ ரெண்டு வார்த்தை பேசி போட்டேன், யார்ட்ட பேசுனேன்? என் சித்திப்பூ கிட்ட தானே? ஏன் சொல்ல எனக்கு உரிமை இல்லையா "​

கண்ணை உருட்டி கொண்டு கெஞ்சுவதை கூட மிரட்டலாக அவள் பேச, சிரிப்பு தான் வந்தது அவருக்கு. ராமசந்திரன் - சகுந்தலா தம்பதியருக்கு வெகு வருடங்களாக புத்திர பாக்கியம் கிட்டவே இல்லை. அவர்கள் இருந்த கிராமத்தை காலி செய்து. இருந்த கொஞ்ச நிலத்தையும் விற்று விட்டு டவுனிற்கு செயற்கை முறை கருத்தரிப்பு (IVF) குழந்தை டிரிட்மென்டிற்காக வந்தனர். டெலிவரி சமயம் நெருங்க ஹாஸ்பிடல் பக்கத்திலேயே வீட்டை மாற்றி கொண்டனர். முதல் முதலில் இவர்கள் தெருவிற்கு குடி வந்த பொழுது, வேதாவிற்கு பத்து வயது. பக்கத்து வீட்டில் குட்டி தம்பி இருக்கிறான் என தெரிந்த உடன் தினம் பள்ளி முடிந்து அவர்கள் வீட்டிற்கு வந்து விடுவாள்.​

ராமசந்திரன் வாடகைக்கு கடை எடுத்து ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். தினமும் காலை மாலை இருவேளையும்​

வீட்டில் மற்றும் கடையில் இருக்கும் சாமி படத்திற்கு பூ மாற்றுவது வழக்கம். அதுவும் மல்லிப்பூ தான் வைப்பார்.​

அன்று மாலை பூ வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்த பொழுது பூவை பார்த்த குட்டி வேதா தனக்கும் வேண்டும் என கேட்க மறுக்காமல் கொடுத்தார்.​

அன்றில் இருந்து தினம் அவளிற்கு பூ கொடுப்பது வழக்கமாக போய் விட்டது.​

ஒரு நாள் மறந்து விட்டால் கூட இப்படி தான் கண்ணை உருட்டி வந்து சண்டையிடுவாள். சாதுவான ராமசந்திரனிடம் இப்படி யாரும் அதட்டி மிரட்டி பேசியதில்லை. அதுவும் சிறு பெண் அவள் பேச மிகவும் பிடித்து போய் விட்டது. பூ கொடுத்து பூ கொடுத்தே சித்தபூ என்னும் அடை மொழியையும் பெற்று கொண்டார்.​

" ஹேய் கிச்சு மேத்ஸ் டவுட் இருக்குனு சொன்னிலடா வா நா கிளீயர் பண்ணுறேன் என்கூட வா " என்றவள் எட்டாவது படிக்கும் கிஷோரை தூக்கத்தில் இருந்து புரட்டி எழுப்பி கொண்டிருந்தாள். தூக்கம் கலைந்து அவன் அவள் சொல்வது புரியாமல் முழித்து கொண்டிருக்க, அவன் கையை பிடித்து இழுத்து அவனை கூட்டி செல்வதிலேயே குறியாக இருந்தாள் வேதா.​

" காலங்காத்தால எங்க டி அவன கூட்டிட்டு போற " அவள் பின்னாடியே வந்து கத்தினார் சகுந்தலா.​

" அந்த சரஸ்வதியே இறங்கி வந்து பாடம் சொல்லி தரேன்ங்கறா. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இப்படி பேசுறீங்க? " என்றவள் அவனின் ஸ்கூல் பையை தோளில் மாட்டி கொண்டு அவனை பல் தேய்க பாத்ரூமிற்குள் அனுப்பி விட,​

" அவன் இன்னும் சாப்பிடவே இல்லை அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்? " அவள் செய்கை புரியாமல் கேட்டார் சகுந்தலா.​

" எங்களுக்கு இருக்கு ஆயிரம் அவசரம் எல்லாமே உங்க கிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா? அதுலா நா அவன சாப்பிட வெச்சிக்கறேன் " என்றவள் ராமசந்திரனிடம் திரும்பி, " சித்தபூ நேத்து திருவிழால ஆஃபர் போட்டு இருந்தான். உனக்கும் ரெண்டு சட்ட எடுத்து வெச்சிருக்கேன். கிச்சு கிட்ட கொடுத்து விடறேன் சரியா. அந்த வெளுத்து போன சிவப்பு சட்டைக்கு இனியோட ஒரு முக்காடு போட்டுரனும் ம்ம் புரிஞ்சிதா? முக்கியமான வேலை இருக்கு நாங்க போய்ட்டு அப்றம் வரோம்"​

என கிஷோரை இழுத்து கொண்டு வெளியே சென்றவள், வாசலை தாண்டுவதற்கு முன் ஒரு நிமிடம் அப்படியே நின்று ஒரு யு டர்ன் அடித்து, " ஹெலோ எக்ஸ்கியூஸ் மீ சகி..என்கிற சகுந்தலா அவர்களே..!என் மேல இருக்க கோவத்துல்ல உங்க புருஷன போட்டு கொடுமைப்படுத்தாதீங்க பாவம் ஏற்கனவே ஜெயில் கைதி மாறி தா உங்க கிட்ட மாட்டிட்டு முழிச்சிட்டு இருக்காரு..!" என்றவள் அதற்கு மேல் நிற்காமல் ஓடி விட்டாள்.​

அவள் சொன்னதை கேட்டு ராமசந்திரன் சத்தமாக சிரிக்க, இன்னும் புசுபுசுவென கோவம் ஏறியது சகுந்தலாவிற்கு,​

" எல்லாம் நீங்க கொடுக்கற இடம் தான். வாய் கொழுப்பு கூடி போச்சு..!" என்ன நொடித்து கொண்டாலும் ஒரு பொழுதும் அவளை வீட்டிற்கு வர கூடாது என்றும் உறவாட கூடாது என்றும் மறுத்ததே இல்லை..!​

ரத்தம் ஒன்றாய் இருந்தால் தான் சொந்தமா? மனம் ஒன்றுப்பட்டாலே அது சொந்தம் தான்..!​

வேதா எப்பொழுதும் இப்படி தான் உறவையும் உரிமையையும் பிறர் தயவின்றி தனதாக்கி கொள்வாள்.​

 
Last edited:

Advi

Well-known member
வாவ் வேதா செம்ம கியூட்🤩🤩🤩🤩

விஷ்ணுவை பார்த்ததும் silent ஆகிட்டாலே 🤭🤭🤭🤭🤭

சிவகாமி பேத்தி வேற, விஷ்ணு என்ன செய்வான்????
 

NNK046

Moderator
வாவ் வேதா செம்ம கியூட்🤩🤩🤩🤩

விஷ்ணுவை பார்த்ததும் silent ஆகிட்டாலே 🤭🤭🤭🤭🤭

சிவகாமி பேத்தி வேற, விஷ்ணு என்ன செய்வான்????
அதானே விஷ்ணு என்ன செய்வான்.. எனக்கும் தெரிலயே பொறுத்திருந்து பாப்போம் 😆😜
உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி டியர் 😍😍😍
 

Mathykarthy

Well-known member
அராத்து வேதா... 🤣🤣🤣🤣🤣 இவ்வளவு நேரம் கலாட்டா பண்ணிட்டு விஷ்ணுவை பார்த்ததும் வடிவேலு மாதிரி பஞ்சாயத்தை கலைச்சு உட்டுட்டா... 🤭😆

க்யூட்டா இருக்கு வேதா சித்தப்பூ bonding... 😍😍😍😍😍


வேதா துருதுன்னு வாயாடியா இருக்கா 🤩 விஷ்ணு அமைதிப் புயல்.... நல்ல காம்போ... 😁
 

NNK046

Moderator
அராத்து வேதா... 🤣🤣🤣🤣🤣 இவ்வளவு நேரம் கலாட்டா பண்ணிட்டு விஷ்ணுவை பார்த்ததும் வடிவேலு மாதிரி பஞ்சாயத்தை கலைச்சு உட்டுட்டா... 🤭😆

க்யூட்டா இருக்கு வேதா சித்தப்பூ bonding... 😍😍😍😍😍


வேதா துருதுன்னு வாயாடியா இருக்கா 🤩 விஷ்ணு அமைதிப் புயல்.... நல்ல காம்போ... 😁
😍😍😍 உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி டியர் 🥰
 
Top