எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 3

NNK046

Moderator

அத்தியாயம் - 3​

வீட்டிற்குள் வந்த விஷ்ணு முதல் வேலையாக குளித்து விட்டு வர, வெளி திண்ணையில் உட்கார்ந்து சின்ன வெங்காயத்தின் சருகை நீக்க அதை முரத்தில் போட்ட புடைத்து கொண்டிருந்த சாவித்ரி மனோகரிக்கு குரல் கொடுத்தார்.​

" மனோகரி என்ன பண்ணுற? இன்னுமா சாப்பாடு எடுத்து வைக்காம இருக்க தம்பி பசியோடு வரும்னு தெரியாதா? " என்றார் அதட்டலாக.​

மனோகரிக்கு எரிச்சலாக வந்தது. வாரா வாரம் இதே பல்லவி தான். எதுவாக இருந்தாலும் அவனிற்கு சூடாக செய்து கொடுக்க வேண்டும் என்பது மனோகரியின் எண்ணம். தாமதிக்கும் அந்த இரண்டு நிமிடத்தில் பேரன் பசியில் வாடி வதங்கி போவது போல் சாவித்ரிக்கு ஓர் பிம்பம். பழைய காலத்து மனுஷி அவர்..! பெரிய விவசாய கூட்டி குடும்பத்தில் வாக்கப்பட்டு அக்மார்க் ஒரிஜினல் மாமியார் கொடுமையை அனுபவித்து வந்தவர். கால மாற்றத்தில் அனைத்தும் மாறி போனாலும் சில விஷயங்கள் மாறாமல் தான் இருந்தது. அதில் மிக முக்கிய ஒன்று அன்பெனும் பெயரில் மறைந்திருக்கும் இந்த அதட்டலும் அதிகாரமும்.​

புரிந்து கொள்ளும் நிலையிலும் அவர் இல்லை. புரிய வைக்கும் அறிவும் மனோகரிக்கும் இல்லை.​

சொந்த தாயிடமே எதிர்த்து பேச தெரியாமல் இருக்கும் வாயில்லா பூச்சி. மாமியாரிடம் தான் பேசி விட போகிறாரா!?​

விஷ்ணு அவரிடம் ஒட்டவில்லை என்பது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை அதற்கான சூழலை சாவித்ரி அமையவிடவில்லை என்பதும்.​

ஒரு பாட்டியாக தன் பேரனிடம் பாசம் கொள்வது நியாயமானதே..! ஆனால் நானே எல்லாம் என முழு உரிமையையும் அவரே எடுத்து கொண்டார். அவரவர் வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும், என்ற பழமொழி உறவுக்குள்ளும் பொருந்தி போகும். அம்மாவாக தன்னை நிலை நாட்டி கொள்ளும் வாய்ப்பை அவர் என்றுமே மனோகரிக்கு அளித்தது இல்லை. இதோ இன்று போல் தான்..! அதே சமயம் மனோகரியும் அந்த உரிமையை நிலைநாட்ட எந்த முயற்சியும் எடுத்து கொண்டதில்லை, வழக்கம் போல் தன்னுள்ளேயே மருகிக்கொள்வார்.​

" உழைக்கற புள்ள வயிறார சாப்பிட வேண்டாமா ஏய்.. மனோ என்ன பண்ணுற இன்னும் சாப்பாடு எடுத்து வைக்காம " வீட்டில் இருப்பது என்னவோ நால்வர் தான் ஆனால் வீதிக்கே கேட்கும் அளவிற்கு கத்தினார் சாவித்ரி.​

தோசை கல்லை வெறித்து பார்த்து கொண்டிருந்தார் மனோகரி. அந்த கல்லை போல் தான் அவரின் மனமும் தீயில் வாடி கொண்டிருந்தது.​

தோசை வார்த்த பின் அது வேக அவகாசம் கொடுக்க வேண்டும் அல்லவா!? வா.. வா என்றால் உடனே உயிர்தெழுந்து விடுமா தோசை!?​

அவருக்கு சாவித்ரியின் பேச்சு எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவர் பயம் எல்லாம் எங்கே அவர் சித்தரிப்பது போல் தன் மகன் தன்னை நினைத்து விடுவானோ என்பதில் தான்.​

சாவித்ரி அருகில் இருந்தால் பாசம் காட்டுகிறேன் என்ற பெயரில் மனோகரியை ஆயிரம் நொட்டு சொல்லுவார் என அறிந்த விஷ்ணு,​

" ஆயா ஒழுங்கா தூங்காம தல எல்லாம் வலிக்குது கொஞ்சம் நொச்சி தழை போட்டு ஆவி வெச்சி தறீங்களா " தனக்கு தேவை என்று சொன்னால் ஒழிய அவனிற்கு சாப்பாடு போடாமல் இடத்தை காலி செய்ய மாட்டார் என நன்கு அறிந்தவன். அதற்கு ஏற்றார் போல் காய் நகர்த்தி அதில் வெற்றியும் கண்டான்.​

" இதோ ராசா இப்போவே போறேன் " என்றவர் நொச்சி தழை பறிக்க கிளம்பிவிட்டார்.​

மீனா அவனிற்கு வந்து பரிமாற, தோசையும் நாட்டு கோழி தண்ணி குழம்புடன் காலை உணவை சிறப்பாகவே முடித்தான் விஷ்ணு.​

சக்கரை மில்லிற்கு சில காலங்கள் வேலைக்கு போய் கொண்டிருந்த மனோகரி இப்பொழுது ஓர் தனியார் கார்மெண்ட்ஸில் கம்ப்யூட்டர் பில் போட்டு லோட் செக் பண்ணும் வேலையில் இருக்கிறார். சொல்லும் அளவிற்கு சம்பளம் இல்லை என்றாலும் வீட்டு செலவிற்கு தாராளமாகவே இருந்தது.​

விஷ்ணு தலைஎடுத்த பின் சில காலங்கள் வேலைக்கு செல்லாமல் இருந்த சாவித்ரி மீனா வயதிற்கு வந்த பின் தன்னால் முடிந்த வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தார். அவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஹோட்டலிற்கு வெங்காயம் இஞ்சி பூண்டு உறிக்கும் வேலைக்கு சேர்ந்து விட்டார்.​

வேண்டாமே என மனோகரி தயங்க,​

" நல்லா இருக்கும் போதே சம்பாரிச்சுக்கிட்டா தான் உண்டு..! வயசு புள்ளய வீட்டில வெச்சிக்கிட்டு காசு வேணானு யாராது சொல்லுவாங்களா?​

எனக்கு என்ன? வைரம் பாஞ்ச கட்ட இன்னும் இருவது வருஷத்துக்கு நல்லாதேன் இருப்பேன். அப்றம் எனக்கு உடம்பு சொனங்கும் போது கஞ்சி ஊத்த தான் என் மருமவளும், பேரனும் இருக்கீங்களே எனக்கென்ன கவல..!? "​

அனைவரும் சேர்ந்து பாடுப்பட்டு உழைக்கும் குடும்பம் இது. என்ன தான் விஷ்ணு பேசிக்கொள்ளவில்லை என்றாலும் பண விஷயத்தில் மனோகரி சொல்லை தட்டியதே இல்லை. சிறு சிறு சீட்டு போடுவது, வட்டிக்கு கைமாத்து கொடுப்பது என சேமிப்பில் மிகவும் கவனமாக இருப்பார். தன் கணவன் இருந்த போது செய்ய விட்டதை ஒரு அனுபவ பாடமாக அறிந்து கற்று கொண்டவர். பண விஷயத்தில் மட்டும் தானும் தன் குடும்பத்தாரும் பிறர் கையை எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் எதிர்ப்பார்த்து நின்றுவிட கூடாது என உறுதியாக இருந்தார். இந்த விஷயத்தில் சாவித்ரியும் மனோகரிக்கு பக்க பலமாக நின்றார் . அவர் சாம்பாதியத்தையும் தன் கை செலவிற்கு போக வீட்டிற்கு தேவையான பொருட்டுகள் வாங்கி போடுவதற்கும் மீதி இருந்தால் ஒரு கிராம் அல்ல இரண்டு கிராம் தங்க நாணயங்களாக வாங்கி வைத்து கொள்வார். மீனாவிற்கு தேவைப்படும் என்று.​

"அத்தே..!" என உற்சாக குரலோடு கிச்சுவுடன் உள்ளே நுழைந்தாள் வேதா.​

அவள் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன் உடனே அறைக்குள் நுழைந்து கொண்டான்.​

'ம்ம்க்கும் ரொம்பதான் ' என நினைத்து கொண்டவள், ' இரு மாமா இன்னிக்கு என்கிட்ட இருந்து எப்படி தப்பிச்சி ஓடுறனு நானு பாக்கறேன் இந்த வேதாவ ஓகே பண்ணாம போயிருவியா நீ..!?' என மனதினுள் சபதமிட்டவள் உரிமையாய் சமையலைறைக்குள் நுழைந்து முதலில் கிச்சுவிற்கு இரண்டு தோசை ஊற்றி கொடுத்து சாப்பிட வைத்தாள்.​

" என்ன விஷயம் வேதா? " என ஈர கைகளை துடைத்து கொண்டே கேட்டார் மனோகரி.​

' காரணம் இருந்தா தான் வரனுமா? உங்க பையன காதல் பண்ணுறனால கூட வராலமே ' என் மைண்ட் வாய்ஸில் கவுன்டர் அடித்தவள், அவளின் இன்ஸ்டன்ட் ரெமிடியான கிச்சுவை காட்டி , " அது ஒன்னும் இல்ல அத்தே. நம்ம கிச்சுவுக்கு மேத்ஸ்ல ஒரு டவுட்டாம்.. கவர்மென்ட் எக்ஸாம்முக்கு பெரிய பெரிய காம்ப்ளிகேட்டட் ஆனா கேள்வி எல்லாம் படிச்சி படிச்சி இந்த மாறி சின்ன சின்ன படிப்பு எல்லாம் மறந்து போச்சா அதான் மீனா கிட்ட கேட்டுட்டு போலாம்னு வந்தோம். நீங்க வேலைய பாருங்க நா கேட்டுக்கறேன் " என்றவள் கிச்சுவை மீனாவிடம் விட்டுவிட்டு விஷ்ணுவை தேடி அவன் அறைக்கு வந்தாள்.​

கட்டிலில் அமர்ந்து போன் பார்த்து கொண்டிருந்தான்.​

" மாமா "​

அவள் அழைப்பு காதில் விழுந்தாலும் மறந்தும் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை அவன்..!​

அவனும் ஒன்றும் அறியா குழந்தை இல்லை கடந்த ஆறு மாதங்களாக அவனையே சுற்றி வரும் அவளின் விழிகள், புதிதாக அவளிடம் இருந்து வரும் இந்த மாமா என்னும் அழைப்பு. சின்ன சின்ன காரணங்களாக தேடி பிடித்து அவனிடம் வந்து பேசுவது. என இருப்பவளின் நோக்கம் புரியாமல் ஒன்றும் இல்லை. ஆனால் அதை வளரவிடும் எண்ணமும் அவனிற்கு இல்லை.​

" மாமா உன்னதான் " என்றவள் அவனை நெருங்க.​

" என்ன அப்படி கூப்பிடாத " என்றான் அமைதியாக.​

சுறுக்கென கோவம் வந்தது வேதாவிற்கு தான் என்ன சொல்ல வருகிறேன் என்று கூட கேட்காமல் இது என்ன இப்படி முகத்தில் அடித்தார் போல் பேசுவது.​

வேதாவின் எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்றுதான் முதலில் அவள் மனதை அவனிடம் சொல்ல வேண்டும். எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக பேசி தீர்த்து கொள்ள வேண்டும். மனதினிலேயே காதல் செடி நட்டு, அதற்கு கண்ணீரிலேயே தண்ணீர் ஊற்றி பூப்பூத்து பெண் தேவதாஸ் போல் ஆகும் எண்ணம் எல்லாம் அவளிற்கு இல்லை. முதலில் காதலை சொல்லுவோம். பிறகு அவன் மனதில் இருப்பதை தெரிந்து கொண்டு எந்த முடிவானாலும் எடுத்து கொள்ளலாம் என்று தான் இருந்தாள் .​

அனால் அவனின் இந்த கத்திரி பேச்சு அவளின் கோவத்தை துண்டிவிட்டது. ஏற்கனவே கோவக்காரி சொல்லவா வேண்டும்.​

" அது எப்படி நீங்க.. " அவள் ஆரம்பிக்கும் முன்,​

" இந்தாப்பா வந்து ஆவி புடி " என இட்லி குண்டாவில் ஆவி பறக்க நொச்சி இழை, மஞ்ச தூள், கல் உப்பு போட்ட கொதி தண்ணீரை கொண்டு வந்தார் சாவித்ரி.​

வேதாவை அங்கு நின்று கொண்டிருப்பதை பார்த்தவர்.​

" ஆம்பள பையன் ரூம்ல உனக்கு என்னடி வேல !" என்றார் காட்டமாக, இன்னும் அவளிற்கு கோவம் தலைக்கு ஏற ரெண்டு வார்த்தை நறுக்கென்று கேட்டு இருப்பாள். ஆனால் முதலில் இவனை சரி கட்ட வேண்டும் என நினைத்தவள் முகத்தை சுளித்து விட்டு மீனாவை தேடி போனாள்.​

மீனா கிச்சுவிற்கு பாடம் சொல்லி கொடுத்து கொண்டிருக்க அவர்கள் அருகில் வந்த அமர்ந்த வேதாவிற்கு இறுப்பு கொள்ளவில்லை.​

' அவன் என்னடானா நா என்ன சொல்ல வரேன்னு கூட காது கொடுத்து கேக்காம மூஞ்சியில அடிச்ச மாறி பேசறான். இது போதாதுனு அந்த தாய் கெழவி வேற நா தீண்டி தகாதவ மாறி ரூம்ம விட்டு வெளியே போக சொல்லுது. என்ன தான் நெனச்சிட்டு இருக்காங்க ரெண்டு பேரும்? ஓஹோ அவளோ என்ன ஒதுக்கி வைக்க பாக்கறாங்களோ.. விட்டுருவேனா நானு? விரும்பம் இல்லாத ஹீரோயின் பின்னாடி தொரத்தி தொரத்தி லவ் பண்ணி கல்யாணம் பண்ணுறது ஆண்டி ஹீரோனா நா ஒரு ஆண்டி ஹீரோயின் டா..!! இப்போ சொல்லுறேன் என் மாமா பொண்டாட்டியா இந்த வீட்டு மருமகளா இங்க காலடி எடுத்து வைக்கல்ல என் ஆயா பேர் சிவகாமி இல்லை..!!'​

என மனதில் சபதமிட்டவள். வெறுவெறுவேன விஷ்ணுவை தேடி அவன் அறைக்கு சென்றாள்.​

அங்கு உடல் முழுவதும் பெட்ஷீட் போர்த்தி கீழே அமர்ந்து ஆவி பிடித்து கொண்டிருந்தான் அவன்.​

இதுவும் நல்லதிற்கு தான் என எண்ணியவள். மெல்ல பூனை போல் சத்தம் வரா வண்ணம் அவன் அருகில் சென்று, " ஓய்.. மாமா நல்லா கேட்டுக்கோ இந்த ஜென்மத்துல்ல நான் தான் உன் பொண்டாட்டி. ஒழுங்கா நா சொல்லுற படி நடந்துகிட்டனா பரவால அத விட்டுட்டு ஏதாவது பிரச்னை " அவள் பேசி கொண்டிருக்கும் போதே பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்க திரும்பி பார்த்தவளிற்கு அதிர்ச்சியில் கண்கள் உறைந்து விட்டது. ஏன் என்றால் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டு அங்கு நின்றிருந்தான் விஷ்ணு.​

'அப்போ இங்க..' என அவள் குனிந்து பார்க்க போர்வையை விலகி அவளை முறைத்து கொண்டிருந்தார் சாவித்ரி..!!​

மனோகரியை அவர் ஏதும் குறை சொல்ல கூடாது என்பதற்கு தானே வெத்து சாக்கு சொல்லி அவரை ஆவி புடிக்க தயார் செய்ய சொன்னது. உண்மையில் அவனிற்கு ஆவி பிடிக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. அதனால் சமாளிப்பாய் பேசி அவரை ஆவி பிடிக்க அமர்த்திவிட்டான். இந்த ஆள் மாறாட்டம் தெரியாமல் வேதா அவள் பாட்டிற்கு வந்து கதையளக்க அனைத்தையும் கேட்ட சாவித்ரிக்கு கோவம் கொந்தளித்தது.​

சும்மாவே சற்று விகாரமாக தான் இருக்கும் அவரின் பார்வை அதுவும் இப்பொழுது ஆவி பிடித்ததின் சுவடாய் முகம் எல்லாம் வேர்த்து ஒழுக அவர் முறைத்த முறைப்பில் வேதாவே சற்று ஆடி தான் போனாள்..!​

அவரின் முறைப்போடு சேர்த்து அவரிடம் உளறி விட்டோமே என்ற பதட்டமும் ஒட்டி கொள்ள வேகமாக அங்கிருந்து செல்கிறேன் பேர்வழி என்று அந்த சுடு தண்ணி குண்டானை தட்டி விட்டு ஓட சாவித்ரியின் மடியிலேயே அது கொட்டி விட்டது.​

" அய்யயோஓ.. " என அவர் அலற,​

" அம்மமாஆஆ.. கொல கேசு.. " என்றவள் கிச்சுவை இழுத்து கொண்டு அவள் வீட்டிற்கு ஓடி விட்டாள்..!​

 
Last edited:

Advi

Well-known member
அடியே, சபதம் எல்லாம் பலமா தான் டா இருக்கு...,..

ஆன நடத்திருவியா?????

ஏன்னா அவனை பார்த்தாலே இப்படி பம்பரையே🤣🤣🤣🤣🤣

பாட்டி🤭🤭🤭🤭🤭
 

NNK046

Moderator
அடியே, சபதம் எல்லாம் பலமா தான் டா இருக்கு...,..

ஆன நடத்திருவியா?????

ஏன்னா அவனை பார்த்தாலே இப்படி பம்பரையே🤣🤣🤣🤣🤣

பாட்டி🤭🤭🤭🤭🤭
சபதத்த எப்படியாவுது நடத்தி முடிக்கனும் டியர்.. 😆😆
 
ஆத்தி!!... சிறப்பா சம்பவம் செஞ்சுட்டு!!... பாட்டி என்ன போகுதோ!!... இருந்தாலும் பாட்டி முகத்தை நீங்க அப்படி சொல்லாம இருந்திருக்கலாம்
 

santhinagaraj

Active member
அவ்வளவு வீரமா சபதமெல்லாம் போட்டுட்டு இப்படி அவனை பார்த்தவுடனே பம்முரயே சபதத்தை எப்படி நிறைவேற்றுவ 🙄🙄

கடைசில அந்த கொலை கேஸ் டயலாக் சூப்பர் 👌👌👌

அங்கங்க கொஞ்சம் எழுத்துப் பிழை இருக்கு அது சரி பார்க்கவும்
 

NNK046

Moderator
ஆத்தி!!... சிறப்பா சம்பவம் செஞ்சுட்டு!!... பாட்டி என்ன போகுதோ!!... இருந்தாலும் பாட்டி முகத்தை நீங்க அப்படி சொல்லாம இருந்திருக்கலாம்
சாரி சிஸ்.. உங்கள ஹர்ட் பண்ணிருந்தா.. இனி கரெக்ட் பண்ணிக்கறேன்.. உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி டியர் 😍😍😍
 

NNK046

Moderator
அவ்வளவு வீரமா சபதமெல்லாம் போட்டுட்டு இப்படி அவனை பார்த்தவுடனே பம்முரயே சபதத்தை எப்படி நிறைவேற்றுவ 🙄🙄

கடைசில அந்த கொலை கேஸ் டயலாக் சூப்பர் 👌👌👌

அங்கங்க கொஞ்சம் எழுத்துப் பிழை இருக்கு அது சரி பார்க்கவும்
உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி டியர்.. 😍😍😍
 

Mathykarthy

Well-known member
விஷ்ணு குடும்பம் அருமையான குடும்பம்.... அத்தனை பேரும் பொறுப்பா உழைக்கிறாங்க.... ❤️
விஷ்ணு பேசலைன்னாலும் மனோகரியை புரிஞ்சு வச்சிருக்கான்....👍

வேதா நீ ஆன்டி ஹீரோயின் இல்ல காமெடி பீஸு... 🤭🤭😝😝 ஒரு சபதம் கூட ஒழுங்கா பண்ணத் தெரியல போமா அங்கிட்டு.... 🤪🤪🤪 சாவிப் பாட்டிக்கே மிரண்டு ஓடுனா பேரனை எப்படி கரெக்ட் பண்ணுவியாம்.... 🤣🤣🤣🤣🤣🤣
 

NNK046

Moderator
விஷ்ணு குடும்பம் அருமையான குடும்பம்.... அத்தனை பேரும் பொறுப்பா உழைக்கிறாங்க.... ❤️
விஷ்ணு பேசலைன்னாலும் மனோகரியை புரிஞ்சு வச்சிருக்கான்....👍

வேதா நீ ஆன்டி ஹீரோயின் இல்ல காமெடி பீஸு... 🤭🤭😝😝 ஒரு சபதம் கூட ஒழுங்கா பண்ணத் தெரியல போமா அங்கிட்டு.... 🤪🤪🤪 சாவிப் பாட்டிக்கே மிரண்டு ஓடுனா பேரனை எப்படி கரெக்ட் பண்ணுவியாம்.... 🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂😂 ஏதாவது தில்லு முல்லு பண்ணி தான்.. 😆 மிக்க நன்றி டியர் உங்கள் விமர்சனத்திற்கு.. 🥰🥰🥰
 

Shamugasree

Well-known member
Vishnu manogari mela pasam vechurukana illaiya. Paati panra vela purinjum yen Atha thadukala. Vedha sariyana vaalu pullaiya iruka. 🤣
 
சாரி சிஸ்.. உங்கள ஹர்ட் பண்ணிருந்தா.. இனி கரெக்ட் பண்ணிக்கறேன்.. உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி டியர் 😍😍😍
Hurt illa sis!!... Atha avoid pannirukalam nu thonunathu avlothan!!... Thanks for the consideration😍
 
Top