எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மயில் - 1

Status
Not open for further replies.

NNK-71

Moderator
மயில் - 1

“என்னங்க என்னங்க இங்க பாருங்க”

“எதுக்கு டீ இவளோ சீக்கிரம் சண்டே அதுவுமா எழுப்புர?”

“நீங்க எழுத்துருச்சு நான் கைல வச்சு இருக்குறத பாருங்க”

எழுத்து அமர்ந்தவன் கையில் இருக்கும் சாதனத்தை பார்த்ததும் பத்து வருடம் முன்பு அதை வாங்க பட்ட வெட்கம் நியாபகம் வந்தது இப்போதும் அதே வெட்கமும் கொஞ்சம் கர்வமும் சேர்த்து வந்தது

“ஹேய் சூப்பர் டீ ! எப்படி டீ! எவ்ளோ நாளா டவுட் உனக்கு?”

“ஒரு ரெண்டு வாரமா கொஞ்சம் தலை சுத்துது காலையில அதான் நேத்து காலேஜ்ல இருந்து வரும் போது வாங்கிட்டு வந்தேன்”

“சூப்பர் டீ” தன் மனைவியை இழுத்து தன் அருகில் மெத்தையில் அமர்த்தி நைட்டி உடன் அவள் வயிற்றில் கை வைத்து

“ஏண்டி இந்த நைட்டியை போட்டுகிட்டு என் பக்கம் வர பாரு கொஞ்சம் கிஞ்சம் கொஞ்ச எதுக்கும் எனக்கு வழி இல்ல”

அவனின் கைகளை தன் முகத்துக்கு எடுத்து சென்று ஒரு முத்தம் வைத்து “ஏங்க கார்த்திக்கு பத்து வயசு ஆக போகுது இப்போ எப்படி எல்லாரும் என்ன சொல்லுவாங்க?”

“ம்ம்ம் என்ன சொல்லுவாங்க நாம ரெண்டு பேரும் அந்த விசயத்துல கெட்டினு சொல்லுவாங்க”

“என்னங்க!!!! இத நாம கார்த்தி கிட்ட சொல்லணும் இன்னைக்கே சொல்லிடலாம்”
“ம்ம்ம் சரி..”

“அப்புறம் அத்தைக்கு சொல்லணும்”
“ம்ம்ம் சரி..”

“அப்புறம் எங்க வீட்டுக்கும் சொல்லணும்”
“ம்ம்ம் சரி..”

“டாக்டர்கிட்ட அப்பொய்ன்ட்மென்ட் வாங்கணும்”
“ம்ம்ம் சரி..”

“நான் போய் குளிக்கிறேன்!”
“ம்ம்ம் சரி..”

“நான் சொல்லறத்துக்கும் எல்லாம் இப்படி ஆமாம் சாமி போடுறதுனால தான் எல்லாரும் நம்ம வீட்டுல என் ராஜ்ஜியம்ன்னு சொல்லறாங்க”

“அது உண்மை தான ப்ரோபஸ்ஸோர் மேடம் இன்னும் கொஞ்ச நாள்ல பி ஹெச் டி முடிச்சுருவீங்க அப்புறம் என்ன!!!”

“சரி நான் போய் குளிக்கிறேன் - நீங்க கண்ணாவ எழுப்புங்க”

மிக அழகான அம்சமான குடுத்தும் கார்த்தியுடையது அவன் அப்பா மாரி டிப்ளமோ முடித்தவுடன் ஒரு நல்ல தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது பின் இருபத்தி எட்டு வயதில் வரன் பார்க்க தொடங்கியதும் வந்த வரன் தான் பிரபா எம் எஸ்சி இரண்டாம் வருடம் படிக்கும் போது திருமணம்.

முதல் வருட திருமண நாளை கார்த்தியுடன் தான் கொண்டாடினார்கள், ஒண்ணோட நிக்குற என்று பிரபாவின் மாமியார் சொல்லாத விசேஷங்கள் இல்லை அவருக்கு பேத்தி வேண்டும் என்று ஆசை அவருக்கு பிறந்தது மூன்றும் ஆண் அவர்களுக்கு பிறந்த அத்தனையும் ஆண் அதனால் தன் மருமகள்களை மகள் போல் தான் நடத்துவார். கொஞ்சம் நாட்டு புறம். பிரபா குடும்பம் இங்கே சென்னையில் இருக்க மாமியார் இருப்பது ஊரில்.

“கண்ணா காபி குடிக்கிறியா?”

“அப்பா டீ போட்டு இருக்காரும்மா”

“இந்தாடி பாலு”

“கண்ணா உனக்கு குட்டி தம்பியோ இல்ல தங்கையோ வரப்போகுது அம்மாவ இன்னைக்கு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகணும்”

“அப்பா உண்மையா!!! அம்மா ப்ரேகனண்ட்டா ?”

“ஆமா கண்ணா உனக்கு தம்பியோ இல்ல தங்கையோ வர போறாங்க”

“அம்மா பாட்டி கிட்ட சொல்லணும்…” போன்னை எடுத்து கொண்ட சென்ற மகனை பார்த்து

“அம்மா எப்போவும் அவன்கிட்ட தம்பி தங்கச்சி வேணும்னு வேண்டுன்னு சொல்லி சொல்லி அவனுக்கு இது ஒரு விஷயமா தெரியல போல டீ”

பின் தன் பிரசவ காலத்தை தன் கண்ணனுடனும் தன் கணவனுடனும் சிறு சிறு சிரமத்துடன் கடந்தார் பிரபா. பிரபாவின் தாய் கார்த்தி பிறந்து சில வருடங்களில் தவறியதால் பிரபாவின் மாமியார் அவரை கவனிக்க ஆறாம் மாதம் வந்து விட்டார். பிரபாவின் தங்கையும் வேலைக்கு செல்வதால் யாருக்கும் சிரமம் கொடுக்காமல் இந்த முடிவு.


***************************************************************************************************
“மாரி இனி நீயம் உன் மகனும் ஹால்ல படுங்க நானும் பிரபாவும் ரூமுள்ள படுக்குறோம்”

எட்டாம் மாதம் ஆன மனைவிக்கு பிரசவத்துக்கு உதவ வந்த தன் அன்னை சொன்னதை கேட்டு மதியம் நடந்ததை நினைத்து கணவனும் மனைவியும் கண்களால் சிரித்தனர்.

அன்றும் ஞாயிறு மதியம் சாப்பாட்டு கடை முடிந்தவுடன்

“அப்பா நான் கிரௌண்ட்க்கு போறேன்…”

“கண்ணா போயிட்டு ஒரு ஆறு மணிக்குள்ள வந்துரு என்ன”

கண்ணன் சென்றவுடன் சின்ன ரூமில் தன் தாய் உறங்க சென்றதை பார்த்த மாரி டிவி முன் அமர்ந்து இருந்த மனைவியை நெருங்கி அமர்ந்து

“ஏண்டி உனக்கு முடி எல்லாம் நல்லா நீளமா வளந்த மாறி இருக்கு”

பாட்டில் கிரீன் நிறத்தில் அழகிய ஷிபோன் புடவை உடுத்தி முடியை விரித்து விட்டு ஒரு சின்ன கிளிப் கொண்டு உச்சியில் மட்டும் கட்டி தான் போட்டு இருக்கும் இந்த வயிற்று பிள்ளை வேடத்தில் மிகுந்த அழகியாக தெரிந்த தன் முப்பது மூன்று வயது மனைவியை ரசித்து மட்டும் இல்லாது தன் மகவு இருக்கும் வயிற்றை தடவி கொண்டே இதழில் அழுத்த முத்தமிடும் சமயம் தன் அன்னை இருந்த அறை கதவு திறப்பதை பார்த்து இருவரும் விலகினாலும், தன் அன்னை தங்களை பார்த்து விட்டனர் என்பதை உணர்ந்து கண்களால் சிரித்து கொண்டனர்.



*******************************************************************************************************

“கண்ணா பயப்படாத அப்பா உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வர வரைக்கும் வீட்டுல பயப்படாம இரு, பக்கத்து வீட்டு ஆண்ட்டி கிட்ட அம்மா சொல்லி இருக்கேன்”

பிரசவ வலி வந்து தன் கணவர் மாமியாருடன் செல்லும் போது கார்த்தியிடம் சொல்லி சென்ற அந்த பயப்படாத என்ற வார்த்தை அவனின் பயத்தை அதிகரித்தது

“கார்த்தி உனக்கு தம்பி பொறந்துருச்சு, வா அங்கிள் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்” பக்கத்து வீட்டு அங்கிள் உடன் ஹாஸ்பிடல் செல்லும் போது எல்லாம் தன் தம்பியை பார்க்கும் கனவு.

“டேய் கார்த்தி அடுத்து ஒரு தங்கச்சி பொறக்கணும்னு வேண்டு டா” ஹாஸ்பிடல் நுழைந்தவுடன் தன் ஆச்சி சொன்னதை கேட்டு சிரித்தான் கார்த்திக்

அழகிய பாதங்கள் ஆழகான கண்கள் கருமை வண்ண கண்ணாக தான் பார்த்த கார்டூனில் வரும் பொம்மை போன்று இருப்பவனை பார்த்ததும் பிடித்தது கார்த்திக்கு.

எங்கும் அழகான வண்ணங்கள் கொண்டு வரைந்த ஓவியம் போல
ஒரு வாழ்க்கை!
ஒரு குடும்பம்!!
ஒரு வரம்!!!
image.jpg
 
Status
Not open for further replies.
Top