எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக - அத்தியாயம் 2

NNK-64

Moderator

அத்தியாயம் 2​

“என்ன தெரியலையா?” என்றான் நிரஞ்சன் வியப்புடன்.​

“உன்னை காரில் கொண்டு போக வந்தவர்கள் யாரு?, அந்த இளைஞன் உன்னோட காதலனா?” என்றான்.​

“இல்லை” என்றாள் மீண்டும் ஒரே வார்த்தையில்​

இவள் என்ன லூசா என்பது போல பார்த்தான்.. “அப்போ அவன் நீங்க இரண்டு பேரும் காதலர்கள், திருமணம் செய்துக்க முடிவெடுத்திருக்கோம்னு சொன்னானே... அப்பவே மறுத்திருக்கலாம் தானே” என்றான்​

“அவன் சொன்னது உண்மை, அதுதான் மறுக்கலை” என்றாள்..​

“நீ எப்பவும் புரியாம தான் இப்படி ஒன்றிரண்டு வார்த்தைல பதில் சொல்வியா?” என்றான் சற்று எரிச்சலான குரலில்..​

அவள் மெளனமாகவே அமர்ந்திருந்தாள். காரை சற்று ஓரமாக நிறுத்தினான் நிரஞ்சன்.​

அவன் காரை நிறுத்தியதும் பதட்டமாக காரின் கதவின் மேல் ஒண்டி கொண்டாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். வெறிச்சோடி இருந்த அந்த பாதையில் இவர்கள் வந்த காரை தவிர வேறில்லை.. அவள் மனம் நொடியில் பலவற்றையும் நினைத்து கலங்க,​

“ப்ளீஸ் என்னை எதுவும் செய்திடாதீங்க” என்று தன் கைகளை வணங்குவது போல கூப்பினாள்.​

அவள் கண்களில் கண்ணீர் கரை புரண்டோட, அயர்ந்து போனான் அவன்.​

இதென்னடா வம்பா போச்சு. இவள் அழறதை பார்த்தால் நான் என்னவோ கடத்திட்டு வந்த மாதிரி எல்லாரும் நினைக்க மாட்டாங்களா? என்று நினைத்தவன் காரை வேகமாக இயக்கினான்.​

“நான் காரை நிறுத்தி உன் மேல் பாய்ஞ்சிடுவேனு நினைச்சியா? என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது?” என்று அடிக்குரலில் சீறினான்​

“நீ எங்கே போகணும்னு சொல்லி தொலை. எங்கே போறதுனு தெரியாமல் காரை ஓட்டிட்டு இருக்கேன். இடம் மட்டும் சொன்னால் போதும் எந்த விளக்கமும் எனக்கு சொல்ல தேவையில்லை” என்றான் அழுத்தமான குரலில்..​

மறுபடியும் அவளிடம் மெளனம். நிரஞ்சனுக்கு பொறுமை பறந்து கொண்டிருந்தது.​

“இப்போ காரை நிறுத்த போறேன்... மறுபடியும் தப்பா நினைச்சு அழ தொடங்காதே! நீ காரை விட்டு இறங்கிக்கோ. எனக்கு நேரமாச்சு, நான் என் வீட்டிற்கு போகணும்” என்றான்.​

அதிர்ச்சியாக அவனை திரும்பி பார்த்தவள், “தனியா என்னை விட்டுட்டு போகாதீங்க ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலாக​

“என் மேல் தான் உனக்கு நம்பிக்கை இல்லையே.. உன்னை விட்டுட்டு போனால் உனக்கு நல்லது தானே?” என்றான் புருவம் உயர்த்தி..​

தலையை குனிந்து கொண்டாள். நம்பிக்கை இருக்குனு சொல்றாளா பாரு என்று நினைத்தவன்...​

“நீ இப்போ எங்கே போகணும்னு சொல்லலைனா, எனக்கு வேற வழி இல்லை” என்றான்.​

“வவந்து எங்கே போறதுனு தெரியாம தான் அந்த இட்லிகடைக்கார அக்கா வீட்டில் இருக்கலாம்னு நினைச்சேன்.. விடியறதுக்குள்ள யோசித்து எங்காவது போகலாம்னு இருந்தேன்” என்றாள் மெல்லிய குரலில்..​

“எங்கே போறதுனு தெரியலையா? ஏன் உனக்கு வீடு இல்லையா? அப்பா அம்மா இல்லையா? அவங்க இந்நேரம் தேடிட்டு தானே இருப்பாங்க?” என்றான்.​

ஆமாம் என்பது போல தலையாட்டினாள்..​

“அப்போ அங்கே போக வேண்டியது தானே?” என்றான் கேள்வியாக.​

“இந்நேரம் நான் வீட்டை விட்டு வந்தது அவர்களுக்கு தெரிந்திருக்கும்.. என்னை வீட்டில் சேர்த்து கொள்வாங்களா என்று தெரியல. அதுதான் தனியாக எங்காவது தங்கி வேலை தேடி கொள்ளலாம்னு நினைக்கிறேன்” என்றாள்.​

ஓ காதலனுடன் ஓடி வந்து விட்டாள். இந்நேரம் அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்று பயப்படுகிறாள். ஆனால் அவனுடன் போவதாக சம்மதித்தவள் ஏன் போகவில்லை. அவனுக்கு குழப்பமாக இருந்தது. கேட்டால் சொல்ல மாட்டாள் என்றே தோன்றியது.​

“சரி என் வீட்டில் இன்றிரவு தங்கி கொள். நான் பணிபுரியும் மருத்துவமனையிலேயே ஒரு வேலை வாங்கி தருகிறேன்” என்று அவன் சொன்னது தான் தாமதம்..​

“அது… உங்க வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?” என்று கேட்டாள் தயக்கத்துடன்​

“நான் மட்டும் தான் பிளாட்டில் தங்கியிருக்கேன், ஏன்?”​

“இல்லை , நான் என் வீட்டுக்கே போயிடுறேன்” என்றாள் அவசரமாக.​

ஒரு கணம் புருவம் நெறித்து அவளை பார்த்தவன் பின்பு தோளை குலுக்கிவிட்டு “உன் இஷ்டம், அட்ரசை சொல்லு” என்றான்.​

அவள் மதுராந்தகம் என்று ஊரின் பெயரை மட்டும் சொல்லவும் காரை திருப்பினான்..”ஏன் காரை திருப்பறீங்க, இதே வழியாக போகலாமே. அந்த பக்கம் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருக்காது” என்றாள்..​

அவளை ஆழ்ந்து பார்த்தபடி காரை ஓட்டினான், “நான் போற வழி சரியானது தான். உனக்கு நம்பிக்கை இல்லைனா இங்கேயே நீ இறங்கிக்கலாம்” என்றான் உணர்ச்சி துடைத்த முகத்துடன்​

அவள் அதன் பின் அவளால் மறுக்க முடியவில்லை என்றாலும். அவனையும் ரோட்டையும் மாறி மாறி பார்த்த படி பதட்டத்துடனே அமர்ந்திருந்தாள்.​

தலையில் மானசீகமாக அடித்து கொண்டவன் காரில் கூகுள் மேப்பை இயக்கினான். அது ஆங்கிலத்தில் வழியையும் சொல்லி சரியான வழியை அம்புகுறியால் காட்டியது.​

கார் அவள் சொன்ன ஊரை நோக்கி சென்று கொண்டிருந்ததை அது தெளிவாக காண்பிக்கவும் சற்றே ஆசுவாசம் அடைந்தாள்.​

விசித்திரமாக அவளை பார்த்தவன், “இப்போ நம்பறியா? என்று கண்களால் அந்த கூகுள் மேப்பை காண்பித்தான்.​

அவள் கன்றிய முகத்துடன் ஆமாம் என்று தலையாட்டினாள்.​

“எல்லாம் கலிகாலம்! மனிதனை யாரும் நம்பாமல், மிஷினையும், இணையதளத்தையுமே நம்பறாங்க” என்று தனக்குள் புலம்பியவாறு காரை செலுத்தினான்.​

கார் ஏரி காத்த ராமர் கோயில் வழியாக செல்லவும் அங்கே இரண்டு பேர் நின்றிருந்தனர்.​

“வண்டியை இங்கே நிறுத்துங்க, அங்கே நிற்கிறது என் அப்பா தான்” என்றாள் அவசரமாக.​

அவன் காரை நிறுத்தவும், அவள் இறங்கினாள். முதலில் யார் என்று பார்த்த முருகேசன் அது தன் மகள் தான் என்று தெரிந்ததும் பாய்ந்து வந்து அவள் தலைமுடியை கொத்தாக பிடித்து கொண்டார்.​

அவள் சத்தம் எழுப்பாமல் அழுது கொண்டிருந்தாள். நிலைமையை உணர்ந்தவனாக நிரஞ்சன் கீழிறங்கி, “நிறுத்துங்க. விடுங்க அந்த பெண்ணை” என்றான்.​

“என்ன தம்பி? காலையில் கல்யாணத்தை வச்சிட்டு ஓடி வந்துட்டா இந்த ஓடுகாலி கழுதை.. மாப்பிள்ளைக்கு நான் என்ன பதில் சொல்றது, நீங்களே சொல்லுங்க?” என்றார் முருகேசன்.​

“பராவாயில்லை, அதுதான் வந்துட்டாளே.. கல்யாணத்தை நிறுத்தமாட்டேன்.. நானே கல்யாணம் செய்துக்கறேன், நீங்க பதறாதீங்க” என்றான் அருகில் இருந்தவன்..​

அப்போது தான் அவனை கவனித்தான் நிரஞ்சன்.. அந்த மனிதன் தலைமுடி எல்லாம் கொட்டி வழுக்கை தலையோடு கருத்த உருவமாக இருந்தார்.. பார்த்தாலே ரவுடி போன்ற தோற்றம். கண்டிப்பாக அவள் தந்தையை விட ஒரு ஐந்து வயதே குறைவாக இருக்கும். நாற்பத்தைந்தை கடந்திருப்பார் என்றே தோன்றியது.​

“இந்த வயதானவரை கல்யாணம் செய்துக்க பிடிக்காமல் தான் தற்கொலை செய்துக்க துணிஞ்சியா நீ?” என்று அவன் அவளை பார்த்து கேட்கவும், அவள் உட்பட அனைவரும் அதிர்ந்தனர்.​

“என்னப்பா சொல்றே?” என்றார் முருகேசன்..​

“உங்க பொண்ணு கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிக்க பார்த்தாங்க. அங்கே வந்த ஒரு காவல் அதிகாரி தான் என்னிடம் இந்த பெண்ணை உங்க வீட்டில் விட்டுட்டு வர சொன்னாங்க​

நாளைக்கு வந்து அவர் பார்க்கிறதா சொன்னாரு. இங்கே நடக்கிறத பார்த்தால் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முயற்சி செய்யறீங்க போல இருக்கே.​

மறுபடியும் இந்த பொண்ணு எதாவது செய்துக்கிட்டா, என்னையும் இல்ல அந்த அதிகாரி விசாரிப்பாரு. நான் எதுக்கும் இப்பவே அவர்கிட்ட போன் செய்து சொல்லிடுறேன்” என்று போனை எடுத்தான்.​

ஓடி வந்து தடுத்தான் அந்த மாப்பிள்ளை. ”அதெல்லாம் வேணாம்பா.. அந்த பெண்ணுக்கு இஷ்டமில்லைனு எனக்கு தெரியாது.. நான் ஊருக்குள்ளே கவுரமாக வாழ்றவன் போலீஸ் கேஸ்னு என்னால அலைய முடியாது” என்றவன் முருகேசனிடம் திரும்பி, “முருகேசா, நீ என்னிடம் வாங்கின பணத்தை சீக்கிரமாக கொடுத்திடு.. இந்த கல்யாணம் நடக்காது” என்று விறுவிறு என்று நடந்தான்.​

அவன் பின்னாடியே முருகேசன் ஓடினார், “மாப்பிள்ளை கொஞ்சம் பொறுங்க.. நான் அவள் கிட்ட பேசி சம்மதிக்க வைக்கிறேன்” என்று கத்தி கொண்டு அவன் பின்னே சென்றார்.​

அவர்களை பார்த்து சிரிப்பு வந்தது நிரஞ்சனுக்கு..”சார்” என்ற குரல் கேட்கவும் வியப்புடன் திரும்பினான். அவளாக அழைத்து பேசுகிறாளே!​

“வந்து ரொம்ப தேங்க்ஸ் என் மேல் எந்த களங்கமும் வராத மாதிரி ஒரு பொய்யை சொல்லி என்னையும் என் வாழ்க்கையையும் காப்பாத்திட்டீங்க.​

நீங்க சொன்ன பின்னாடி தான் எனக்கு தோணுது.. அந்த ராஜூவை நம்பி போனதுக்கு அந்த கடல்லயே விழுந்திருக்கலாம்..அவன் கிட்ட இருந்தும் என்னை காப்பாத்தினதுக்கு நன்றி” என்றாள்​

“அப்ப்பாா.. இவ்வளவு நீளமாக உனக்கு பேச கூட வருமா?” என்றான் ஆச்சரியத்துடன்.​

“நான் உன் பெயர் கெடக்கூடாதுனு ஒரு பொய்யை சொன்னேன். தற்கொலை எப்போதும் எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது. அதை நல்லா புரிஞ்சுக்கோ. ஓரு நாளும் உனக்கு அந்த எண்ணம் வரக்கூடாது புரிஞ்சதா?” என்றான்​

சரி என்பது போல தலையாட்டினாள். “இப்பவாவது சொல்லு.. அந்த ராஜூ உன்னுடைய காதலனா? அவனை நம்பி வந்த நீ, ஏன் அவன் கூட போகலை?” என்று கேட்டான்​

“வீட்டில் இந்த திருமணம் ஏற்பாடு செய்யவும், அதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை. அந்த ராஜூ காதலிப்பதாக சொல்லி கொண்டு எப்போதும் என் பின்னால் வருவான்.. இந்த ஆளை திருமணம் செய்துக்க இந்த ராஜூவை திருமணம் செய்துகிட்டால் என்னனு தோணிச்சு.​

நேற்று தான் அவன் கிட்ட கேட்டேன். நான் உன்னை காதலிக்கலை.. நீ என்னை திருமணம் செய்துகிட்டால், அதற்கு முயற்சிக்கிறேன் என்று சொன்னேன்.​

அவன் தான் என்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகே காத்திரு, நான் உனக்கு அஷ்டலட்சுமி கோயிலில் தாலியை கட்டி மனைவி ஆக்கி கொள்கிறேன்னு சொன்னான்.​

நான் மாலையிலிருந்து காத்துட்டு இருந்தேன்.. அவன் இருட்டற வரைக்கும் வரவில்லை.. அப்புறம் நேரம் ஆயிட்டு, முதல்ல இங்கிருந்து கிளம்பி எங்காவது போய் இருக்கலாம். காலையில் எதாவது கோயில்ல கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னான்.​

எனக்கு நம்பிக்கை இல்லை.. நான் வேணும்னு அலைஞ்சவன் சரியான நேரத்திற்கு வந்து என்னை திருமணம் செய்திருந்தால் அவன் தான் எனக்கு விதிச்சவன்னு போய் இருப்பேன்.. ஏனோ எனக்கு அவன் கூட போக விருப்பம் இல்லை” என்றாள்..​

“இத்தனை தூரம் நீ கஷ்டபடாமல் உங்க அப்பாகிட்டயே இந்த கல்யாணத்தை பண்ணிக்க முடியாதுனு உறுதியாக சொல்லி தடுத்திருக்கலாம் தானே” என்றான்..​

ஆமாம் தானே என்பது போல அவனை பார்த்து விழித்தாள்.. “அவர்கிட்ட நான் எதிர்த்து பேசியதே இல்லை.. அவரை பார்த்தால் எனக்கு பயம்” என்றாள் காற்றாகி போன குரலில்..​

“சரி அப்பானு பயம், அந்த ராஜூ கிட்ட கேட்க வேண்டியது தானே, ஏன்டா சொன்ன நேரத்திற்கு வரலை.. திருமணம் செய்யாமல் உன் கூட வெளியே எல்லாம் என்னால் தங்க முடியாதுனு சொல்றது தானே” என்றான்​

ஆமாம் சொல்லியிருக்கலாம், அது ஏன் தோணாமல் போயிற்று..? அவனுக்கு அவள் ஏதோ துரோகம் செய்து விட்ட மாதிரி கூனி குறுகி நின்றாள். அவளே அவனை வர சொல்லி இப்போது வர மாட்டேன் என்பதால் அவன் கோப படுகிறான் என்று தலை குனிந்து நின்றிருந்தாளே..​

அவள் சுய அலசலில் நின்றிருக்க.. “யாருடன் எந்த நேரத்தில் என்ன பேச வேண்டுமோ அதை அப்போதே பேசி விட வேண்டும்.. நேரம் கடந்த கருத்துக்கும் பதிலுக்கும் சில சமயம் மதிப்பில்லாமல் போய் விடும், புரிந்ததா?” என்றான்..​

அவள் தலையை ஆட்ட, “ஆனால் என்னிடம் மட்டும் முன்னெச்சரிக்கையாக நடந்துகிட்டாய் போல இருக்கு” என்று சிரித்தான்​

அவள் கார் கதவில் ஒட்டிக் கொண்டு “என்னை எதுவும் செய்திடாதீங்கனு” சொன்னதை தான் இப்போது சொல்கிறான் என்று அவளுக்கும் புரிய கன்றிய முகத்துடன் “சாரி” என்றாள் உணர்ந்து.​

“சரி பராவாயில்லை விடு” என்றவன் அவளின் பெயர் அவன் கருத்தில் பதியாததால் “இப்போதாவது உன் பெயரை சொல்றியா?” என்று அவன் கேட்கவும் அவள் பதில் சொல்ல சற்று யோசித்தாள்.​

“என்றைக்காவது உன்னை எங்காவது பார்த்தால், பெசன்ட் நகர் பீச்சில் பார்த்த பொண்ணே என்றா அழைக்க முடியும்?” என்று சிரித்தான்.​

அவனின் அந்த சிரிப்பில் அவள் முகமும் மலர்ந்தது. சிலர் சிரிக்கும் போது பார்த்தாலே போதும் நமக்கும் நம்மை அறியாமல் சிரிப்பு வந்து விடும்.​

“எழிலழகி, எல்லாரும் எழில் என்று கூப்பிடுவாங்க” என்றாள்..​

உருவத்திற்கேற்றாற் போல தான் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று அவனுக்கு தோன்றியது..​

“பெயர் நல்லாயிருக்கு அழகி” என்றான்​

“என்ன அழகியா?” என்றாள் அவள் வியப்புடன் அவனை ஒரு மாதிரி சந்தேகமாக பார்த்து..இதுவரை அவளை அனைவரும் எழில் என்றே அழைத்து பழகி இருந்ததால், அவன் “அழகி” என்று விளிக்கவும் சற்று வித்தியாசமாக பட்டது.​

“நீ அழகாக இருக்கிறதால அழகி-னு கூப்பிடலை.. அழகினு உன் பெயர் முடியறதால அழகினு கூப்பிடுறேன், புரிஞ்சதா அழகி?” என்றான் மென்புன்னகையுடன்.​

அவள் மென்மையாக புன்னகைத்தாள்..அவன் பெயரை அவள் கேட்பாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க அவளோ. அமைதியாக நின்றிருந்தாள்​

“நீ கேட்கலை என்றாலும் நான் சொல்றேன், என் பெயர் நிரஞ்சன், நான் மனநல மருத்துவராக பணிபுரிகிறேன்..இது என்னோட விசிட்டிங் கார்ட்.. உனக்கு எதாவது உதவி தேவை பட்டால் என்னோட நம்பருக்கு நீ என்னை அழைத்து பேசலாம்.. அழகி பேசறேன்னு சொன்னாலே புரிஞ்சுப்பேன், சரியா? “ என்றான்..​

அவளும் சரி என்று தலையை ஆட்டி அவன் கொடுத்த கார்டை கையில் வாங்கி கொண்டாலும் அவனை பார்க்காமல் அவன் பின்னால் பார்த்துக் கொண்டிருந்தாள்.​

அவள் தந்தை முருகேசன் மட்டும் தனியாக அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்​


தொடரும்​

 
Last edited:

Saranyakumar

Active member
ஓ,மாப்பிள்ளையை பிடிக்காததால,பின்னாலயே சுத்தினவனநல்லவனுநினைச்சு அவன்கூடவந்துருக்கா,நல்லவேளையாக அவன்ட்ட இருந்து தப்பிச்சட்டா, அப்பாவைவிட அஞ்சு வயசு குறைந்தமாப்பிள்ளை,டாக்டர்தான் ஹீரோவா?😍😍😍😍
 

NNK-64

Moderator
ஓ,மாப்பிள்ளையை பிடிக்காததால,பின்னாலயே சுத்தினவனநல்லவனுநினைச்சு அவன்கூடவந்துருக்கா,நல்லவேளையாக அவன்ட்ட இருந்து தப்பிச்சட்டா, அப்பாவைவிட அஞ்சு வயசு குறைந்தமாப்பிள்ளை,டாக்டர்தான் ஹீரோவா?😍😍😍😍
Thank you dear, yes Niranjan thaa hero
 

NNK-64

Moderator
இவளுக்கு இருக்குற பிரச்சினையை இவளே வளர்த்துக்குவா போலயே!!... இன்னும் அவ அப்பா வந்து என்ன பன்ன போறாரோ!!???
Ama sis, Thank you for your comments 😊💕🙏
 

santhinagaraj

Well-known member
எழிலோடஅப்பா அவர் வாங்கின கடனுக்காக எழில அந்த வயசானவருக்கு கல்யாணம் பண்ணிவைக்க பார்த்தாரா அதனால தான் ஓடி வந்துட்டாளா

பேச வேண்டிய நேரத்துல பேசாம இப்ப டாக்டர் கேட்டதும் ஆமா கேட்டு இருக்கலாம்,சொல்லி இருக்கலாம்னு
சொல்லிட்டு இருக்கா.
 

NNK-64

Moderator
எழிலோடஅப்பா அவர் வாங்கின கடனுக்காக எழில அந்த வயசானவருக்கு கல்யாணம் பண்ணிவைக்க பார்த்தாரா அதனால தான் ஓடி வந்துட்டாளா

பேச வேண்டிய நேரத்துல பேசாம இப்ப டாக்டர் கேட்டதும் ஆமா கேட்டு இருக்கலாம்,சொல்லி இருக்கலாம்னு
சொல்லிட்டு இருக்கா.
Ama sis, aval thirundhanum inimey thaa.. thank you 💕😊
 

Advi

Well-known member
அட லூசி பாப்பா, இப்படியா இருப்பா நீணு🤦🤦🤦🤦🤦

நிரஞ்சா, கொஞ்சம் இல்ல நிறையவே வழியுது பா....தொடைச்சிக்கோ🤭🤭🤭🤭🤭
 

NNK-64

Moderator
அட லூசி பாப்பா, இப்படியா இருப்பா நீணு🤦🤦🤦🤦🤦

நிரஞ்சா, கொஞ்சம் இல்ல நிறையவே வழியுது பா....தொடைச்சிக்கோ🤭🤭🤭🤭🤭
🤣🤣🤣 Thank you dear 💕
 

Mathykarthy

Well-known member
நல்ல அப்பா 😤😤😤😤😤 அவர் வாங்குன கடனுக்காக பொண்ணை வயசானவனுக்கு கட்டி குடுக்க பார்க்குறாரு 😈

எழில் நெருப்புக்கு பயந்து வாணலியில விழுந்த கதையா ராஜுகிட்ட மாட்டிக்க இருந்தா நல்லவேளை கடைசி நேரத்துல சுதாரிச்சுட்டா... 😴😴

நிரஞ்சன் சூப்பரா பேசி மாப்பிள்ளையை ஓட விட்டான் 🤣
 

NNK-64

Moderator
நல்ல அப்பா 😤😤😤😤😤 அவர் வாங்குன கடனுக்காக பொண்ணை வயசானவனுக்கு கட்டி குடுக்க பார்க்குறாரு 😈

எழில் நெருப்புக்கு பயந்து வாணலியில விழுந்த கதையா ராஜுகிட்ட மாட்டிக்க இருந்தா நல்லவேளை கடைசி நேரத்துல சுதாரிச்சுட்டா... 😴😴

நிரஞ்சன் சூப்பரா பேசி மாப்பிள்ளையை ஓட விட்டான் 🤣
நன்றி சகோ 🥰
 
Top