எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 4

NNK046

Moderator

அத்தியாயம் - 4​


சாவித்ரியின் மடி மேல் சுடு தண்ணி கொட்டவும் பதறி போய் அவரை தூக்கி நிறுத்தினான் விஷ்ணு. நல்ல வேளை பெரிய காயம் எதுவும் ஆகவில்லை. அவரும் சுடுப்பட உடனே சட்டென்ன பின்னே நகர்ந்து கொண்டார்.​

விஷ்ணுவிற்கு வேதா செய்த செய்யலில் கோவம் வந்தது. இப்படியா நடந்து கொள்வது சரியாக பார்த்து நடக்க மாட்டாளா!? அவள் என்ன குழந்தையா? இப்படி தட்டி விட்டு ஓட?​

துண்டை எடுத்து ஈரம் பட்ட இடத்தில் துடைத்துவிட்டவன்.​

" ஆயா அப்படியே கொஞ்ச நேரம் படுத்து இருங்க எங்கயாவுது வலிக்குதா? " என்றான் அவரின் உடலை ஆராய்ந்தபடி.​

" அதுலா ஒன்னும் இல்லய்யா " என்றவர் எழ முற்பட, அவரை பிடித்து மீண்டும் படுக்க வைத்தவன், " நா சொல்லறேன்ல.. படுங்க " அவனின் அக்கறையில் மனம் குளிர்ந்தவரின் முகத்தில் அரும்பிய புன்னகை சட்டென மறைய எழுந்தமர்ந்தவர் அவனையும் அருகில் அமர்த்தி கொண்டு,​

" ஐயா ராசா ஒன்னு கேப்பேன் மறக்காம உண்மைய சொல்லனும் ப்பா "​

யோசனையாய் அவன் அவரை ஏறிட்டுப் பார்க்க, " அந்த வேதா புள்ளய கீது உனக்கு புடிச்சி இருக்கா சாமி " என்றார் நேரடியாகவே.​

அவர் கேள்வியில் திகைத்தவன் உடனே மறுப்பாக தலையசைக்க, " அப்படி எதாவுது இருந்தா இப்பவே அந்த நெனப்ப அழிச்சிரு கண்ணு " என்றார் தீர்க்கமாக.​

" ஆயா நான் தான் இல்லைங்கறேன் நீங்க என்னடானா திரும்ப திரும்ப அதேயே சொல்லிட்டு இருக்கீங்க "​

" சரி அப்போ சத்தியம் பண்ணி கொடு அந்த வீட்டு பொண்ணு இங்க மருமகளா வர மாட்டானு.. "​

" சத்தியமா சொல்லறேன் ஆயா என் மனசு முழுக்க நம்ம குடும்பம் மட்டும் தான் இருக்கு வேற எதயும் யோசிக்க எனக்கு நேரம் இல்லை "​

சிவலிங்கம் வைத்திருக்கும் மெக்கானிக் ஷெட்டிற்கு வேலைக்கு சென்று இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் வழக்கம் போல் வேலையை முடித்து வீடு திரும்பி கொண்டிருக்கும் பொழுது யாரோ அவனை அழைப்பது போல் தோன்ற திரும்பி பார்த்தான் விஷ்ணு. வேட்டி சட்டை அணிந்த ஒரு நடுவயது மனிதர் தான் விஷ்ணுவை அழைத்தார்.​

" தம்பி இங்க கொஞ்சம் வாயேன் "​

யோசனையாய் அவர் அருகில் சென்றான் விஷ்ணு.​

" நீ மெக்கானிக் ஷெட்ல தானே வேலை பாக்கற ? "​

அவரின் கேள்விக்கு விஷ்ணு ஆம் என தலையாட்ட ,​

" என் கார் வேற ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது இப்படியே நடு ரோடுலயும் விட்டுட்டு போக முடியாது. கொஞ்சம் சிரமம் பாக்கமா உன் ஷெட் ஆளுங்க யாராச்சி கூப்பிட்டு வரியா? சும்மாலாம் வேணா நா காசு தரேன். " என்றவர் பர்ஸை எடுக்க போக, " நா வேணா ஒரு தடவ என்ன பிரச்னைனு​

பாக்கட்டுங்களா ? " என கேட்டவனை புருவன் தூக்கி ஆச்சிரியமாக பார்த்தார் அவர்.​

" பத்து வருஷமா கார் ஓட்டுற எனக்கே என்ன பிரச்னைனு தெரில. உனக்கு எப்படி தெரியும் "​

" ஒரு தடவ பாக்கறேனே " என்றவன் தயங்கி நிற்க, அப்படி என்ன இந்த சிறியவன் செய்து விட போகிறான் என்ற​

ஆர்வம் அவருள் பொங்க அவனிற்கு வழி விட்டு ஒதுங்கி கொண்டார்.​

சிறிது நேர ஆராய்ச்சிக்கு பின், " பேட்டரி தான் டெட் ஆகிருச்சு.ஜம்ப்பர் கேபிள் போட்டுருக்கேடன் இப்போ சரி ஆகிரும் சார் "​

" பரவாலயே நல்ல கெட்டிகார பையன் தா நீ.." என்றார் மெச்சுதல் பார்வையோடு.​

விஷ்ணுவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இது போல் எல்லாம் யாரும் அவனை பாராட்டியதே இல்லை.​

அதுவும் அவனின் தந்தையின் இறப்பிற்கு பின் விஷ்ணுவின் வாழ்வே திசை மாறி இருக்க, உணமையில் சந்தோசம் என்ற ஒன்றையே மறந்திருந்தான்.​

அவர் பர்ஸில் இருந்து பணத்தை நீட்ட வாங்க மனமே இல்லை விஷ்ணுவிற்கு அவரின் பாராட்டே அவனின் மனதை நிறைத்திருக்க வேண்டாம் என மறுத்து விட்டான்.​

" அட என்னப்பா நீ காசு வேணாங்கற சரி விடு. என் கூட ஒரு எட்டு என் வீட்டுக்கு வா, ஒரு வாய் சாப்பிடு போலாம் " என அழைப்பு விடுக்க,​

யோசனையாய் தயங்கி நின்றான் விஷ்ணு.​

" நீ மேஸ்த்திரி கணேசனோட பையன் தானே? கண்ணகி வீதில தானே நீங்க குடி இருக்கீங்க? உன் குடும்பத்த எனக்கு நல்லா தெரியும்ப்பா பயப்படாம வண்டியில்ல ஏறு " என்றவனின் நம்பிக்கை வார்த்தை விஷ்ணுவின் மனதில் ஆர்வத்தை தூண்டியது. அவர் போட போகும் சாப்பாட்டிற்காக அல்ல, அவரோடு போக போகும் அந்த கார் பயணத்திற்காக தான். எப்பொழுதும் வெளி இருந்தே காரை பார்த்தவனிற்கு அதில் ஏறி போக வேண்டும் என கொள்ளை ஆசை. அது இன்று வாய்ப்பாக அமைய அதை பயன்படுத்தி கொண்டான் விஷ்ணு.​

இரண்டு நிமிடங்களே ஆனாலும் அந்த பயணம் அவன் வாழ்வில் மறக்க முடியாது இனிய பயணமாய் மனதில் பதிந்தது. தானும் ஓர் கார் வாங்க வேண்டும் என்னும் ஆசையையும் அவனுள் விதைத்து சென்றது.​

" செல்வி சாப்பாடு எடுத்து வை " என்றவர் அவனை சாப்பிட வைத்து விட்டு நகர, மனதிருப்தியோடு சாப்பிட்டவன் அவரிடம் நன்றி கூறிவிட்டு கிளம்பினான்.​

கைவசம் எந்த பொருட்களும் இல்லாததல் அவன் தற்காலிகமாக தான் அவர் வண்டி பேட்டரியை சரி செய்திருந்தான். ஆனால் அதை மீண்டும் நன்றாக பழுது பார்த்து சரி செய்ய வேண்டும் என்பதை சொல்லாமல் வந்து விட்டது நியாபகம் வர, மீண்டும் அவர்கள் வீட்டிற்கு விரைந்தான் விஷ்ணு.​

லேசாக திறந்திருந்த கேட்டை முழுதாக திறந்து உள்ளே செல்ல முற்ப்பட்டவன் அவனை பற்றிய பேச்சு அடிபட அப்படியே அமைதியாக நின்றான்.​

" என்னங்க சொல்லுறீங்க? படிப்ப பாதிலயே நிறுத்திட்டானா? இது எல்லாம் என்ன அந்த மனோகரி வேலையா? "​

" அப்படி ஒன்னும் தெரில. அது பாவம் தங்கமான பொண்ணு, ஒரு வார்த்த எதிர்த்து பேச தெரியாது. இவன் தான் படிப்பேராம நடுவுல்லயே வந்துட்டான் போல.. கணேசன் இருந்த வரைக்குமாவுது கொஞ்சம் கட்டுபாடோட அடக்கி வெச்சி இருந்தான். அவன் போன அப்றம் என்ன அவுத்து விட்டு கழுத கணக்கு தான். என்கிட்டயே கணேசன் நேரிய தடவ சொல்லி இருக்கான். சொல் பேச்சு ஒன்னும் கேக்கறது இல்லைனு. தினமும் வீட்டுல சண்டையும் ரகளையுமா தான் இருக்குமாம். யாரயும் மதிக்க மாட்டேங்கறான், புரிஞ்சிக்க மாட்டேங்கறான் எப்படி இவன சரி பண்ணுறதுனே தெரிலனு ரொம்ப பொலம்புவான். பையன் இப்படி அடங்காம இருக்காங்கற வெசனைலயே போய் சேந்துட்டானோ என்னமோ. இப்போ பாரு படிப்பும் இல்லாம ஒழுங்கான வேலையும் இல்லாம இப்படி தருதலையா சுத்திட்டு இருக்கான், ஹ்ம்ம் என்னத்த சொல்ல கனேசன் இருந்திருந்தா அவன் குடும்பத்த இப்படி விட்டுருப்பானா.."​

அதற்கு மேல் அவர் பேசுவதை கேட்க முடியாமல் அங்கிருந்து வேகமாக ஓடினான் விஷ்ணு. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் கால் போன போக்கில் நடந்தவன் ஒரு முட்டு சந்தை அடைந்தான். அவனின் வாழ்வும் அந்த முட்டு சந்தை போல் தான் எந்த வழியும் இல்லாமல் அடைந்து கிடப்பது போல் ஓர் உணர்வு தோன்ற, அப்படியே கீழே அமர்ந்தவன் முட்டியை கட்டி கொண்டு அழுக ஆரம்பித்தான். அப்பாவுடன் இருந்த அந்த கடைசி நொடிகள் அவரின் இறப்பு எல்லாம் அவன் கண் முன் நிழலாடியது.​

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல் இருக்கும் பொழுது எல்லாம் உதாசினம் படுத்தி சுடு சொல் சொல்லி துரத்தி விட்ட தந்தையை அவன் மனம் வெகுவாக தேடியது.​

" அப்.. பா.. அப்பா... அப்பா வேணும்.. " குழந்தை போல் அழுதவனை தேற்ற தான் ஆள் இல்லாமல் போனது.​

இல்லை இவர் சொல்லவது போல் நான் இல்லை , நா கெட்டவன் இல்லை நான் பொறுப்பற்றவன் இல்லை என கத்தி தன்னை நிருபிக்க வேண்டும் என தோன்றியது. அவர் சொன்ன, ' கனேசன் இருந்திருந்தா குடும்பத்த இப்படி விட்டுருப்பானா ' என்ற வார்த்தைகள் அவன் காதில் ரீங்காரமிட்டு கொண்டே இருந்தது. தந்தை பெயர் சொல்லும் பிள்ளை போல் தந்தைக்கு பின் தன் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என அப்பொழுது தீர்மானம் செய்தவன் தான். ஓடுகிறான் ஓடுகிறான் இப்பொழுதும் ஓடுகிறான். இது ஒன்றும் சினிமாவோ கதையோ ஒன்றும் அல்லவே..! நாயகன் முடிவெடுத்த உடனே கார், பங்களா என சகல வசதிகளும் வந்து அமைய. மூன்று பெண்மணிகள் இருக்கும் வீட்டில் ஒற்றை ஆண்மகனாய் குடும்ப பாரத்தை அப்பொழுதிருந்தே சுமந்து கொண்டிருக்கிறான் விஷ்ணு. இருந்தும் கூட அவனால் பெரிதாய் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியவில்லையே என்ற வலி அவனுள் இருந்து கொண்டே தான் இருக்கிறது.​

எல்லோருக்கும் எல்லாம் அமைந்து விடுவதில்லை. சிறுவயதிலேயே படிப்பை விட்டு இந்த தொழிலை கையில் எடுத்தவன். நல்ல அனுபவமும் திறமையும் அதன் மூலம் கிடைத்திருக்க படிப்பில்லை என்ற ஒரே காரணத்திற்காக பல இடங்களில் அவனிற்கு வாய்ப்பும் மறுக்கப்பட்டிருக்கிறது. இதில் யாரை குற்றம் சொல்ல.!?​

மீசை வைத்த ஆண் மகன் அவன் இருக்கையில் சாவித்ரி வேலைக்கு செல்வதை பார்க்க மனம் மிகவும் வலிக்கும் விஷ்ணுவிற்கு.​

இத்தனை வருடங்களில் தன் சுயவிருப்பு வெறுப்பு என ஒன்று இருப்பதையே மறந்து ஓடி கொண்டிருக்கிறான். இதில் காதல், கல்யாணம் எல்லாம் அவன் கனவில் கூட நினைத்து பார்க்காத ஒன்று தான்..!​

ஆம் உண்மையில் குடும்பத்திற்காக ஓடும் பல மகத்துவமான மனங்களுக்கு சுயவாழ்க்கை என்பதே சில சமயம் கானல் நீராய் போய் விடுகிறது. இதில் ஆண் பெண் என்ற வேறுபாடில்லை..!​

வீட்டிற்கு வந்த வேதா சாப்பிட கூட தோன்றாமல், கட்டிலில் சாய்ந்தவள். விட்டத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.​

ஏனோ அவள் மேலேயே அவளிற்கு ஒரு வெறுப்பு. எப்பொழுதும் தைரியமாய், துடிக்காய், நிமிர்வாய் சுற்றி திரிபவள் அவன் இடத்தில் மட்டும் இப்படி தடுமாறுவது அவளிற்கு பிடிக்கவில்லை.​

அதற்கு காரணம் அறிந்தும் அதை மாற்றிகொள்ள முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் பயம்..! எங்கே அவன் தனக்கு கிடைக்காமல் போய் விடுவானோ என்ற பயம் தான் அவளை இப்படி தடுமாற​

வைக்கிறது. விஷ்ணு நினைப்பது போல் அவன் மேல் அவளிற்கு ஆறு மாத காலமாக எல்லாம் ஒன்றும் ஈர்ப்பு இல்லை. தவம் இருந்த பெற்ற ஆறு வருட காதல் அவளுடையது. ஆம் தவம் போல் தான் அவனை மட்டுமே நினைத்து சுவாசித்து வாழ்ந்தவள் இப்பொழுது தான் அவள் விருப்பத்தை மெல்ல மெல்ல அவனிடம் காட்ட தொடங்கி இருந்தாள். ஆனால் அதற்கே அவன் இப்படி ஓர் எதிர்ப்பை காட்டுவது அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.​

முட்டாள் பெண்ணே..! அவன் மனம் அறியாமல் அவன் மேல் ஆசை வளர்த்து கொண்டது உன் தவறா அவன் தவறா!? என மூளை வாதமிட,​

சம்மதம் கேட்ட பின் வருவதா காதல்? இந்த குரங்கு மனம் நம்மிடமே அனுமதி கேட்காமல் பிறரிடம் மனதை தூக்கி கொடுத்து விடுகிறது இதில் எங்கே அவனிடம் போய் கேட்பது..!​

ஆனால் இன்று அவன் காட்டிய ஒதுக்கம் அவள் காதலை பெற பல போராட்டங்களை தாண்டி வர வேண்டும் என்பதை மட்டும் நிச்சயம் அவளிற்கு உணர்த்தியது. விழியோரம் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டவளின் எண்ணங்கள் முதல் முதலில் அவனிடம் காதல் கொண்ட நாளை தேடி சென்றது.​

பணிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த வேதாவிற்கு அன்று முழு ஆண்டு தேர்வு, அக்கௌன்ட்ஸ் எக்ஸாம். விழுந்து விழுந்து படித்துகொண்டிருந்தாள் வேதா. சாப்பிடும் பொழுது கூட படித்து கொண்டே தான் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.​

" முன்னாடியே படிச்சு வெச்சிருக்கனும் கடைசி நேரத்துல்ல சங்கரா பாடுனா இப்படி தான்..! ஒழுங்கா சாப்பாட பாத்து சாப்பிடு டி " அவள் தாய் விஜயா அவளை கடிந்து கொள்ள அவரை முறைத்தவள்,​

" ப்பா.. வாங்க வாங்க டைம் ஆச்சி போலாம் " என வாசலுக்கு ஓடினாள்.​

" சாமி குமிட்டு போடி " என விஜயா கத்தியது எல்லாம் காத்தோடு கரைந்து விட்டது.​

தந்தையுடன் அவள் பைக்கில் போய் கொண்டிருக்க, வளைவில் அவர்கள் திரும்புவதற்குள் ராங் ரூட்டில் வேகமாக வந்த டெம்ப்போ இவர்களை உராசிவிட்டு செல்ல அதில் தடுமாறுவியவர் வண்டியோடு கீழே சாய்ந்தார்.​

வேதாவிற்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது. சுதாரித்து அவள் எழும் முன்னே கூட்டம் கூடி இருந்தது. எழுந்தவள் அவள் தந்தையை தேட அவர் நிலை கண்டு ஒரு நிமிடம் உயிரே போய் விட்டது வேதாவிற்கு.​

" அப்பாஆஆ " என்றவள் அவரை நோக்கி ஓடினாள். அங்கு இருந்த சாக்கடையில் தான் அவர் விழுந்துகிடந்தார்.​

" அப்பா அப்பா கைக்கொடுங்க " என்றவள் அவரை எழுப்ப முயற்சிக்க​

அவரால் எழ முடியவில்லை. காலில் நல்ல அடி.​

" வேதா.. வேதா.. " என்றார் முனுமுனுப்பாக. என்ன செய்வது ஏது செய்வது என ஒன்றும் புரியவில்லை. சகலமும் மறந்தது வேதாவிற்கு. அவளாலும் முழு பலம் கொண்டு அவரை தூக்க முடியவில்லை. அப்பொழுது தான் சட்டென எதுவும் யோசிக்காமல் சாக்கடைக்குள் இறங்கி அவரை தூக்க முயற்சித்து கொண்டிருந்தான் விஷ்ணு.​

அவன் இறங்கியதுமே அருகில் இருந்தவர்களும் உதவிக்கு வர அதற்குள் யாரோ கூப்பிட்டு ஆம்புலன்சும் வந்துவிட்டது. அங்கிருந்த அடிதண்ணி பைப்பில் அவரை சுத்தம் செய்து ஆம்புலன்சில் ஏற்றினர். வேதாவும் ஆம்புலன்சில் ஏற போக அவளை இழுத்து பிடித்தது ஒரு கரம்.​

விஷ்ணு தான் அவளை பிடித்திருந்தான்.​

அவள் கையில் இருந்த சாரய்ப்பை பார்த்து ஒரு துணி சுற்றி விட்டவன்.​

" இன்னிக்கு உனக்கு பப்ளிக் எக்ஸாம் தானே!? டைம் ஆகலயா "​

இங்கு என்ன நடக்கிறது இவன் என்ன பேசி கொண்டிருக்கிறான் என கோவம் எட்டிப்பார்க்க , " அங்க என் அப்பா " என கோவமாய் ஆரம்பித்த வார்த்தை விசும்பலாய் முடிந்தது. இவ்வளவு நேரம் இருந்த பயம், பதட்டத்தில் உறைந்திருந்த கண்ணீர் இப்பொழுது பெருகி வர, " அப்பா கிட்ட போகனும் " என்றாள் தேம்பலாய்.​

" வேதா இங்க பாரு, நா இருக்கேன் நா பாத்துக்கறேன் நீ பயப்பாடமா போய் எக்ஸாம் எழுதிட்டு வா அப்பாக்கு ஒன்னும் ஆகாது சின்ன அடி தான் சரியா போயிரும் " என்றவன் அவள் தோளை ஆதர்வாய் வருடி கொடுக்க, அது வரை இருந்த பயம், கலக்கம் எல்லாம் மறந்து ஒரு வித புது அமைதியை உணர்ந்தாள் வேதா.​

" நிஜமா..!? " என்றவள் அவன் முகத்தை பார்க்க, தலையை மட்டும் ஆட்டினான் விஷ்ணு. சாவி கொடுத்த பொம்மை போல் அவன் சொன்னபடியே செய்தாள் வேதா.​

அங்கு வேதாவின் தந்தைக்கு பதில் வெறு யாராய் இருந்திருந்தாலும் நிச்சயம் உதவி செய்திருப்பான் தான்.​

படிப்பின் மகத்துவம் அறிந்தவன் ஆதலால் அவளை போய் பரீட்சை எழுத சொன்னான். இந்த நிகழ்வு அவனுள் எந்த பாதிப்பையும் உண்டு செய்யவில்லை. ஆனால் டீனேஜ்ஜின் இறுதி பக்கங்களில் இருந்த வேதாவிற்கு அவன் செயலும் சொல்லும் நிச்சயம் அவள் மனதில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியது. இது நாள் வரை அவனை பெரிதாக கண்டிராதவள் அவனின் ஒவ்வொரு செய்யலிலும் அவனை உன்னிப்பாக கவனிக்க தொடங்கினாள்.அது அப்படியே படி படியாக ரசனையாக மாறி பின் விஷ்ணு அவள் வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறி போனான்..!​

பொதுவாகவே பணம் , அழகு , குணம் எல்லாவற்றையும் தாண்டி பெண்களை ஈர்க்கும் மிக பெரிய பண்பு ' பொறுப்பு..!'​

அந்த அடிப்படையில் பார்த்தால் நம் விஷ்ணு மீது அவள் மையல் கொண்டதில் தவறெதும் இல்லை தானே!?​

அவனை முழுதாக அறிந்ததாலோ என்னவோ தன் மனதை சொல்ல மிகவும் அஞ்சினாள். தன் வயது, படிப்பு என எதையும் சொல்லி அவன் நிராகரித்து விட கூடாது என்பதால் தான் இத்தனை ஆண்டுகள் அவள் அமைதி காத்ததே..!​

 
Last edited:

Advi

Well-known member
வேதா காதல் சூப்பர் தான், தப்பு இல்ல....

ஆன அவன் நிலையும் கொஞ்சம் புரிஞ்சிக்கனும் வேதா.....

ஏன்னா அவன் பட்ட இந்த ஒரு அவமானமே இப்படி இருக்கு....

இன்னும் எத்தனையோ......
 

NNK046

Moderator
வேதா காதல் சூப்பர் தான், தப்பு இல்ல....

ஆன அவன் நிலையும் கொஞ்சம் புரிஞ்சிக்கனும் வேதா.....

ஏன்னா அவன் பட்ட இந்த ஒரு அவமானமே இப்படி இருக்கு....

இன்னும் எத்தனையோ......
மிக்க நன்றி டியர் 😍🤩❤️
 
Last edited:

santhinagaraj

Active member
விஷ்ணு முன்னாடி நல்லபடியா பேசிட்டு அவன் போனதுக்கப்புறம் தப்பு தப்பா பேசினது சரி இல்லை நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க.

வேதாவின் நினைவுகள் காதல் வந்த நொடிக்கு சென்றதுனு போட்ட மாதிரி.
விஷ்ணுவோட பிளாஸ்பேக்குக்கும் போட்டு இருக்கலாம் திடீர்னு என்னடா சின்ன வயசுன்னு சொல்றாங்களேன்னு ஒரு நிமிஷம் யோசிச்சேன் அப்புறம்தான் அது பிளாக் பேக்னு தெரிஞ்சிது.

எழுத்துப் பிழை இருக்கு அதை சரி பாருங்க
 

NNK046

Moderator
விஷ்ணு முன்னாடி நல்லபடியா பேசிட்டு அவன் போனதுக்கப்புறம் தப்பு தப்பா பேசினது சரி இல்லை நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க.

வேதாவின் நினைவுகள் காதல் வந்த நொடிக்கு சென்றதுனு போட்ட மாதிரி.
விஷ்ணுவோட பிளாஸ்பேக்குக்கும் போட்டு இருக்கலாம் திடீர்னு என்னடா சின்ன வயசுன்னு சொல்றாங்களேன்னு ஒரு நிமிஷம் யோசிச்சேன் அப்புறம்தான் அது பிளாக் பேக்னு தெரிஞ்சிது.

எழுத்துப் பிழை இருக்கு அதை சரி பாருங்க
நன்றி 😍😍😍
 
இரண்டு பேரும் அவங்கவங்க நிலைல சரியா தான் இருக்காங்க!!... ஆனா வேதா பொறுமையா இருந்து தான் ஆகனும்!!!... அருமையான கதை நகர்வு!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்😍
 

NNK046

Moderator
இரண்டு பேரும் அவங்கவங்க நிலைல சரியா தான் இருக்காங்க!!... ஆனா வேதா பொறுமையா இருந்து தான் ஆகனும்!!!... அருமையான கதை நகர்வு!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்😍
நன்றி 😍😍😍
 

Mathykarthy

Well-known member
விஷ்ணு சின்ன வயசுல அப்பா மேல இருந்த கோபத்துல அவர் சொல் பேச்சு கேட்கமா நடந்துருக்கான்.... 😔
இப்போ இருக்குற விஷ்ணு ரொம்ப பொறுப்பானவன்... 😍

வேதா விளையாட்டுத்தனமா இருந்தாலும் காதல்ல ஸ்ட்ரோங்....
பாட்டிக்கு அவ குடும்பத்தை பிடிக்கல... பேரனுக்கு காதலே பிடிக்கல எப்படி இவங்களை சரிகட்டப் போறாளோ.... 😴😴😴😴😴
 

NNK046

Moderator
விஷ்ணு சின்ன வயசுல அப்பா மேல இருந்த கோபத்துல அவர் சொல் பேச்சு கேட்கமா நடந்துருக்கான்.... 😔
இப்போ இருக்குற விஷ்ணு ரொம்ப பொறுப்பானவன்... 😍

வேதா விளையாட்டுத்தனமா இருந்தாலும் காதல்ல ஸ்ட்ரோங்....
பாட்டிக்கு அவ குடும்பத்தை பிடிக்கல... பேரனுக்கு காதலே பிடிக்கல எப்படி இவங்களை சரிகட்டப் போறாளோ.... 😴😴😴😴😴
நன்றி 😍😍😍
 
Top