எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு -டீசர்

NNK-74

Member
வணக்கம் மக்களே!

எல்லோரும் அவங்களுடைய டீசரைப் போட்ட பிறகு ரொம்ப தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.என்னால் முடிந்த வரை விரைவில் அத்தியாயங்களோடு வருகிறேன்.கண்ணுக்குள்ளே கரைந்த நிலவின் முதல் டீசர் இதோ....

எப்படி இருக்குன்னு மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.😍😍😍



கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு -டீசர்


அவனுடைய வாழ்க்கையைப் பற்றி அவர்கள் பேசியதைக் கேட்டு இவனுக்கு கோபமாக வந்தது.இதை எல்லாம் தற்போது முகத்தில் காட்டினால் தேவையில்லாத பிரச்சினையும்,தன்னைப் பற்றிய கிசுகிசுப்பு வரும் என்று அமைதியாக இருந்தான்.



எல்லாவற்றிருக்கும் புன்னகையே பதிலாக தந்தவன் எங்கேயாவது தனிமையில் கொஞ்ச நேரம் நிற்கலாம் என்றெண்ணி தன்னைச் சுற்றிப் பார்க்க எங்கும் மனிதர்களின் தலைகளே நிரம்பி இருக்க அங்கே வெளியே செல்வதற்கான வழி தெரிந்தது.



அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் அங்கிருந்தவர்களிடம் “ஒரு நிமிடம் வந்துடுறேன்” என்று கையில் இருந்த கைப்பேசியை எடுத்து காதில் வைத்துக் கொண்டு ஏதோ முக்கியமான அழைப்பை பேசுவது போல் அந்த இடத்திலிருந்து வெளியேறி வேகமாக நடந்து நேராக ஒரு கட்டிடத்தின் பின்னால் இருந்த மரங்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் போய் நின்றுக் கொண்டான்.



அதுவரை அவன் அடக்கியிருந்த கோபம் முகம் முழுவதும் பரவியிருந்தது.கண்களை மூடி தன் கேசத்தை கைகளால் அழுந்த அழுத்தி பிடித்தான்.



அப்பொழுது யாரோ தனக்கு அருகில் மிகுந்த வேதனையில் அழும் சத்தம் கேட்டது.அதைக் கேட்டவன் ஒருநொடி அப்படியே அமைதியாக நின்றான்.தன் கோபத்தை சட்டென்று மறந்து அந்த அழுகையின் சத்தம் இவனுடைய மனதின் உள்ளே நுழைந்து லேசாக பிசைந்தது.



உடனே அங்கிருப்பவரின் நிலைமையைப் பற்றி எண்ணியவன் ‘தன்னுடைய கண்ணீர் யாருக்கும் தெரியக் கூடாது என்று தானே இவ்வளவு ஒதுக்குப்புறமாக வந்து அதுவும் இவ்வளவு சத்தமாக அழுகிறார்’என்று புரிந்துக் கொண்டான்.




அழுகையின் சத்தம் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேட்டது.எதாவது பேசலாம் என்று சத்தம் வந்த திசையை நோக்கி மெதுவாக அடியை எடுத்து வைத்தவன் ஒரு பத்தடி தள்ளியிருந்த பெரிய மரத்திற்கு பின்னால் ஒரு பெண் கீழே அமர்ந்து தன் தலையை முட்டிற்கு மேல் கவிழ்த்துக் கொண்டு குலுங்கியும் தேம்பியும் அழுதுக் கொண்டிருந்தாள்.



பெரிய மரத்திற்கு இன்னொரு பக்கம் நின்றவன் தன் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து அந்தப் பெண்ணை பார்க்காதவாறு திரும்பி நின்றுக் கொண்டு “ப்ளீஸ் அழாதீங்க இந்தாங்க கண்ணீரை துடைங்க” என்று மெதுவாக தன்மையாகச் சொன்னான்.


முதலில் அது அவளுக்கு கேட்கவில்லை.அவன் திரும்பவும் லேசாக கைக்குட்டையால் தோள்களைத் தட்டி “அழாதீங்க ப்ளீஸ் எல்லாம் சரியாயிடும் கவலைப்படாதீங்க” என்று அவளுக்கு இன்னும் முகத்திற்கு அருகில் தன் ஆறடி உயரத்திற்கு ஏற்ப இருந்த நீண்ட கையால் கொடுத்தான்.



அதுவரை கண்களை மூடி இருட்டில் அமர்ந்திருந்தவளின் முன்னே ஏதோ ஒரு சிறு கீற்றுப் போல் அந்த கைக்குட்டை அவளுக்கு அருகில் வந்தது.


அவள் அப்படியே அதையே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது “நீங்க யாருன்னு நான் பார்க்கலை ப்ளீஸ் அழுகையை நிறுத்தி இந்த கைக்குட்டையை வாங்கி கண்ணீரை துடைங்க” என்றான்.



‘இனிமேல் தனக்கு யாரும் துணையாக இருக்கப் போவதில்லை’ என்று அவமானத்தால் எண்ணி நிலைக்குனிந்து இருந்தவளுக்கு யாரென்றே தெரியாதவனின் அக்கறை முதன்முதலாக புதிதாக இருந்தது.


மெதுவாக தன் கைநீட்டி அந்த வெள்ளைநிற கைக்குட்டையை வாங்கிக் கொண்டாள்.



அவள் வாங்கியதும் தன் கையை விலகிக் கொண்டவன் “ப்ளீஸ் இனிமேல் இப்படி கேவி அழாதீங்க பொண்ணுங்க எப்பவும் அழக் கூடாது தைரியமா எதையும் சமாளிக்கத் தெரியனும் எந்த நேரத்திலும் பிரச்சினைப் பார்த்து பயந்து ஓடாமல் தைரியமா எதிர்த்து நில்லுங்க,பெண்களோட கண்ணீர் விலைமதிக்க முடியாதது அப்படின்னு எங்கம்மா சொல்லுவாங்க அதை ஞாபகம் வைச்சுக்கோங்க அந்த விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை தேவையில்லாத விஷயத்துக்காகவும்,தேவையில்லாதவர்களுக்காகவும் சிந்த விடாதீங்க” என்றான்.



அவன் சொன்ன வார்த்தைகள் ஏனோ ஒருநிமிடம் அப்படியே அவளை அதிர்ச்சி அடையச் செய்தது.இந்த வார்த்தைகள் எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதே என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் அங்கே யாரும் இல்லை தூரத்தில் ஒருவர் அந்த இடத்திலிருந்து கடந்து செல்வதற்கான லேசான உருவமே தெரிந்தது.



மிகுந்த யோசனையோடு அந்த கைக்குட்டையை தன் முகத்தில் அருகில் கொண்டு செல்லும் அதன் வாசம் அவளுக்கு ரொம்ப பிடித்த மிகவும் பழக்கமான ரோஜா இதழின் வாசம் அவளை ஒருநொடி அப்படியே மெய்மறக்க வைத்தது.



இருவிழிகளை மூடி வாசனையை நுகர்ந்தவள் அவளையும் அறியாமல் மனம் லேசாகத் தொடங்கியது.


இருவேறாய் இருப்பவர்கள் வாழ்க்கை என்னும் வானத்தில் ஒன்றாக சேர்ந்திட வாய்ப்புகள் அமையுமா? இல்லை எப்பொழுதும் சந்திக்காத சூரியன் நிலவாக பிரிந்திடுமா? வாழ்வின் வண்ணத்தூரிகையில் நடப்பது என்ன வண்ணமோ? காத்திருப்போம்….
 
Top