எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே!! 2 - கதை திரி

NNK-82

Moderator

மாயனே 2​

அம்மாவா.. என்று அவள் அதிர்ந்து பார்க்க, அவனோ அவள் கரம் பற்றி வீட்டுக்குள் நுழைய போக இருவரையும் நிறுத்தினார் அவன் அன்னை பானுமதி. இருவரையும் அழுத்தமாய் பார்த்தவர் அமைதியாய் அங்கிருந்து சென்றார்.​

"என்ன டா நடக்குது இங்க?? இவன் அம்மா ங்குறான். அந்த அம்மா வீட்டுக்குள்ள நுழைய கூடாதுன்னு சொல்லிட்டு போறாங்க.. தலையே வலிக்குது எனக்கு…" இன்பா பக்கம் திரும்பியவள் "இவன்கிட்ட நிறைய மர்மம் இருக்கு.. மாயன்.." பட்ட பெயர் வைத்தாள்.​

உள்ளே சென்றவர் ஆரத்தி தட்டுடன் வந்தார். ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்து "வலது கால் எடுத்து வச்சு உள்ள வா டா கண்ணு.." என்று அழைக்க அவளும் உள்ளே வந்தாள்.​

மிக சிறிய வீடு. குட்டி குட்டியாய் இரு படுக்கை அறை. அதே அளவு ஹால். குட்டி கிட்சன். விழிகளால் வீட்டை சுற்றி பார்த்தவளுக்கு, "அங்க அவ்ளோ பெரிய வீடு இருக்கு.. அதுல அம்மா கூட வாழலாமே இவன் ஏன் தனியா இருக்கான். இவங்க ஏன் இந்த சின்ன வீட்டுல கஷ்ட படுறாங்க.." என்று நினைத்த படி இன்பாவை பார்க்க முகத்தில் இறுக்கம் கொண்டு அமர்ந்திருந்தான்.​

நேத்து நான் அவ்ளோ திட்டு திட்டுனப்ப ரொம்ப கூலா இருந்தான் இப்போ ஏன் இப்டி இருக்கான்?? ஒரே மர்மமாவே இருக்கே என்று நினைத்து அவள் அமர்ந்திருக்க பால் பழத்துடன் வந்தார் பானுமதி. அவனிடம் பால் கொடுத்து பாதியை குடித்து விட்டு மீதியை அவளுக்கு கொடுக்க சொல்ல முறைத்தாள் நிலா.​

அவளை பார்த்தவன் அவளிடம் பால் டம்ளரை கொடுத்து குடி என்றுவிட்டு எழுந்து சென்றான். அவனை முறைத்த பானுமதி "இவன் என் பேச்சை கேக்கவே மாட்டானா??" மனதிற்குள் ஏங்கியவர் சிறு புன்னகை சிந்தினார்.​

அண்ணா.. என்று ஓடி வந்தனர் சத்யா, சஞ்சய்.. இன்பாவின் தம்பி தங்கை. இரட்டையர்கள் இருவரும். இன்முகத்துடன் அவர்களை அணைத்து கொண்டான். "அண்ணி வந்திருக்காங்களா??" என்று சத்யா ஓடி வந்தாள். நிலாவை கண்டதும் "ஹாய் அண்ணி.." என்று வந்து கட்டி கொண்டாள்.​

சத்யா, சஞ்சய்யை அணைத்து என் தம்பி தங்கச்சி.. என்றான். இது வேறயா?? இன்னும் இவன் என்னென்ன ரகசியங்கள் வச்சிருக்கானோ.. என்று நினைத்தவள் மருந்துக்கு சிரித்து வைத்தாள்.​

மதிய விருந்து தடல் புடலாக தயாராக சிவ சிவாவென அமர்ந்திருந்தாள் நிலா. பறப்பது, ஓடுவது, தாவுவது, நீந்துவது என அணைத்து வகை அசைவத்தையும் சமைத்து அசத்தி இருந்தார் பானுமதி.​

புது பொண்ணு மாப்பிளையை அமர வைத்து உணவு பறிமாறி உன்ன வைத்தார். பெரிதாக யாரிடமும் ஒட்டாமல் தனித்திருந்தாள் நிலா. இன்பா தங்கை தம்பியுடன் பேசி சிரித்து அரட்டை அடித்தான். ஆனால் தாயிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவரும் அவனிடம் பேசவில்லை..​

"அம்மா.. புள்ள தானே அப்புறம் ஏன் பேசிக்க மாட்டிக்கிறாங்க.. கல்யாணத்துக்கு கூட வரலையே! என்னவா இருக்கும்.." என்று யோசிக்க "நிலா.. என்ன டி பண்ற அவங்கள பத்தி உனக்கு என்ன வந்திச்சு.. விடு.. எப்டியோ இருந்திட்டு போறாங்க.." என்று நினைத்து அந்த சிந்தனையை கை விட்டாள்.​

ஒரே இடத்தில் அமர்ந்திருக்க அவளுக்கு போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. வீட்டுக்குள்ளே நடந்தாள். சுவரில் மாட்ட பட்டிருந்த குடும்ப போட்டோவை பார்த்தாள்.​

இன்பா, அவன் தாய், தந்தை, தம்பி தங்களுடன். கிட்ட தட்ட இருபது வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ போல இருந்தது. சத்யா சஞ்சய் கை குழந்தையாக இருந்தனர். அவர்களுக்கு பின்னால் ஒரு மளிகை கடை இருந்தது. அதை பார்த்தவள் இத எங்கையோ பாத்திருக்கோமே… என்று யோசிக்க சிந்தனை பிடி படவில்லை.​

அதுவும் மளிகை அருகில் இருந்த அந்த சிலை, நன்கு பார்த்து பழக்க பட்டது போல இருந்தது. ஆனால் நினைவில் வரவில்லை. அந்த போட்டோ அருகிலே இன்பாவின் தந்தை போட்டோ இருந்தது. பொட்டு வைத்து பூ மாலை போட பட்டிருந்தது. இறந்து விட்டார் என்று நினைத்து கொண்டாள்.​

மாலை மயங்கி இரவும் வந்தது. இரவு உணவும் உண்ண வைத்துவிட்டு தான் மகன் மருமகளை அனுப்பினார் பானுமதி. வீடு திரும்பயில் இருவரிடமும் அமைதி. வீடு வந்ததும் அவள் இறங்கி சென்றுவிட, அவன் கார் பார்க் செய்து கேட் மூடி விட்டு வந்தான். அறைக்குள் வந்ததும் "நான் வேலைக்கு போறேன்.." என்றாள்.​

சட்டை பட்டன்களை கழற்றிய படி கழுத்தை திருப்பி அவன் பார்க்க "இந்த பாவபட்ட கந்து வட்டி காசுல என்னால வாழ முடியாது. சாப்பிடுற சாப்பாடு விஷமா மாறிடும். இந்த காசுல இருந்து சாப்ட நான் விரும்பல. நான் வேலைக்கு போறேன்.. என் காசுல என்னோட தேவைகள நான் பாத்துக்குறேன்.." மூச்சு விடாமல் பேசி முடித்தாள்.​

இதழ் வலைத்து பார்த்தவன் "சாரின்னு ஒரே ஒரு வார்த்தை சொல்லு.. நீ இங்க இருக்க வேண்டிய அவசியமே இல்ல.. நானே உன்ன உன் வீட்டுல கொண்டு போய் விட்டர்றேன்.." என்றான்​

"எந்த தப்பும் பண்ணாம நான் சாரி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.." என்றவள் ட்ரெஸ்ஸிங் அறைக்குள் நுழைந்தாள்.​

"கொஞ்சமாவது திமிரு கொழுப்பு குறையுதா பாரு.." என்று வார்த்தைகளில் இருந்த அழுத்தம் முகத்தில் மனதில் இல்லை. என் பொண்டாட்டிக்கு திமிர் இல்லாம இருந்தா தான் தப்பு.. என்று மூடி இருந்த ட்ரெஸ்ஸிங் அறை கதவை கண்டவன் திமிரழகி டி நீ.. என்றான்.​

உடை மாற்றி வந்து தலையோடு போர்த்தி கொண்டு படுத்து கொண்டாள். அவனோ அவள் உறங்குகிறாள் என்று டி ஷர்டை கழற்றி போட்டான். கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து கொண்டு போன் பேசி கொண்டிருந்தார்.​

திருட்டு காதலி போல தன் கணவனை திருட்டு தனமாக பார்த்து கொண்டிருந்தாள் நிலா.​

கருமையை வெறுக்கும் பெண்கள் கூட அவனின் மை கருமையில் மயங்கி விடுவார்கள். சட சடவென வளர்ந்த கட்டுடல் தேகம் மார்பில் அழகாக படர்ந்திருந்த ரோமங்கள், தினவெடுத்த மார்பு, முறுக்கேறிய புஜங்கள், சற்று அதிகமாகவே வளர்ந்த தாடி, அடர்ந்த வெட்டருவா புருவங்கள், காற்றில் அலையாடும் அழகிய கேசம், இரக்கமற்ற​

விழிகள், கருமை பூசியதாலோ மீசைக்குள் ஒளிந்து கொண்ட கருமை இதழ்கள் என மொத்தமாக அவனை விழியால் அளந்தவளுக்கு கருங்கல்லால் செதுக்கப்பட்ட மாயனின் சிற்பம் என்று நினைத்தாள்.​

"நிலா.. என்ன டி பண்ற?? இந்த கருவா பயகிட்ட நீ நெருங்கவே கூடாது." என்று கண்கள் மூடி படுத்து கொண்டாள்.​

மாடல் அழகர்கள் போல தன்னை சுற்றி வந்த ஆடவர்களை விடுத்து இந்த கருமை கண்ணனிடம் செல்லும் மனதை தடுக்க முடியாமல் தானே அவனிடம் கோபம் கொள்கிறாள். அவன் கந்துவட்டி தொழில் பிடிக்காததும் அவனை விட்டு விலகி இருக்க காரணம்.​

இந்த இடைவெளி தொடருமா??​

மறுநாள்..​

காலையே அவசர அவசரமாக புடவை கட்டி கொண்டு கொண்டிருந்தாள் நிலை. குளித்து தலை துவட்டிய படி வந்த இன்பா "என்ன பண்ற??" என்று கேட்டான்.​

"பாத்தா தெரியல.. சாரீ கட்டுறேன்.." என்று மடங்காத காட்டன் புடவையை சரி செய்ய போராடி கொண்டிருந்தாள். அவனோ எனக்கென்ன என்று பார்க்க "இப்டி பாத்துட்டே நிக்கிறதுக்கு வந்து எடுத்துவிடலாம்ல" எரிச்சாலாக கூற "அத வாய தொறந்து கேக்கலாம்ல.." என்றான்.​

முறைத்தாள். "என்ன பண்ணனும்.." அவள் அருகில் வந்து நின்று கேட்க, "கீழ இருக்க மடிப்ப சரி பண்ணுங்க.." என்றாள். அவளை பார்த்தவன் "பொண்டாட்டிக்கு புடவை எடுத்து விடுறதுக்கு எல்லாம் ஒரு குடுப்பினை வேணும்.." என்று நினைத்து கொண்டு ஒரு கால் குத்து கால் வைத்து, மறுகாலால் மண்டியிட்டு அமர்ந்தான்.​

"என்ன வேலைக்கு போற?? சாரீ கட்டுற அதான் கேட்டேன்.." என்றவனை பார்த்தவள் "அசிடென்ட் ப்ரோபஸர்" என்றாள்.​

"ஓ.." என்றவன் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. குட்டி குட்டியாக அவள் வைத்திருந்த மடிப்பை அழகாக சரி செய்து எடுத்துவிட்டான். முந்தானையை மடிந்தது மேலேற்றி போட்டவள், அதை சரி செய்யாமல் கொசுவைத்தை சரி செய்து கொண்டிருக்க, மண்டியிட்ட படியே நிமிர்ந்து பார்த்தவன் விழிகளுக்கு அவள் அல்வா துண்டு வயிறும், அதில் ஆண்டவன் வைத்த ஒரு பொட்டும் தெரிய சிலிர்த்து எழுந்ததும் ஆடவனின் உணர்வுகள்.​

ஜாக்கெட்க்கு வெளியில் வயிற்றை உரசி கொண்டிருந்த தங்க தாலி "உரிமை இருக்கிறது எடுத்து கொள்" என்று கூற அவள் இடை பற்றி இழுத்து முகம் வயிற்றில் புதய அழுத்தமாய் நாபி குழியில் முத்தம் வைத்தான்.​

திட்டுக்கிட்டாள் நிலா.. அவனை தன்னிடம் இருந்து விலக்க பார்க்க, பின் இடுப்பை அழுத்தி பிடித்து இன்னும் அழுத்தமாய் புதைந்தான். ஆடவன் இதழ் தீண்டலில் சிலிர்த்து போனவள், அப்படியே நிற்க வயிறு விடுத்து மேலேழுந்து வந்தான்.​

அவள் முகம் பார்த்தவன் நாசியோடு நாசி உரசும் நெருக்கத்தில் ஹஸ்கி வாய்ஸ்ஸில் "சாரி சொல்லிட்டு போயிரு.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது. அப்டியே மொத்தமா முழுசா உன்ன எடுத்துப்பேன்.. புருஷன்ங்குற உரிமையோட.." என்றவள் அவள் இதழில் பட்டும் படாமலும் முத்தம் வைத்து சென்றான்.​

அவள் தான் உறைந்து போய் நின்றாள். இவன்கிட்ட இருந்து தூரமா இருக்கணும்.. ஆனா மன்னிப்பு நான் கேக்க மாட்டேன்.. என்று நினைத்த படி பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு சென்றாள்.​

நாட்களும் அதன் போக்கில் சென்றது. தினமும் அவள் தாய் மாதவி போனில் அழைத்து பேசுவார். வேண்டா வெறுப்பாக பேசி வைத்து விடுவாள். தன் விருப்பம் இன்றி இந்த மாயனுக்கு தன்னை மனமுடித்து வைத்துவிட்டானரே என்ற கோபம் அவளுக்கு.​

டாட் லிட்டில் பிரின்செஸ் அவள். ஆனால் என்று தந்தையிடம் பேசுவது கூட இல்ல. அப்பா எது செய்தாலும் நன்மை என்று நினைத்து கொண்டிருந்தவளுக்கு அவள் திருமணத்தை ஏற்று கொள்ள முடியவில்லை.​

கமிஷனர் பிரகாஷின் இந்த திருமண முடிவு சரியானதா?? ஏன்??​

தொடரும்…​

 

Mathykarthy

Well-known member
நிலா மாதிரியே இவனோட அம்மாவுக்கும் வட்டிக்கு கொடுக்குறது பிடிக்கல போல.... அதான் தனியா இருக்காங்க...😒

நிலாவை இன்பாக்கு சின்ன வயசுலயே தெரியுமோ... 🧐🧐🧐
 

NNK-82

Moderator
நிலா மாதிரியே இவனோட அம்மாவுக்கும் வட்டிக்கு கொடுக்குறது பிடிக்கல போல.... அதான் தனியா இருக்காங்க...😒

நிலாவை இன்பாக்கு சின்ன வயசுலயே தெரியுமோ... 🧐🧐🧐
தெரியலாம் 😜😜
 

Advi

Well-known member
அடேய் இன்பா சாரி சொல்லிட்டு போய்டு அப்படினு சொல்லிட்டே இருக்க.....

சொல்லிட போறா டா.....இந்த நிலா பிள்ள என்ன இவளோ இணக்கமாக இருக்கு .....

முன்னாடி இவனை லவ் ஏதும் பண்ணி இருப்பாளா?????

இவன் தொழில் தான் பிடிக்கல போல....

கமிஷ்னர் கூட, மகள் விருப்பத்துக்கு சரினு சொல்லி இருக்கலாம்.....
 
Top