எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பார்த்தவி -02 கதைத்திரி

NNK 67

Moderator
பார்த்தவி-02


கிழக்கே உதித்த சூரியனோ தன்கதிர்களால் புவியெங்கும் வெளிச்சம் பரப்பி, ஒவ்வொரு உயிரினத்திற்கும் தன் வருகையை உணர்த்தி ஒளிகொடுத்து, அந்நாளை உயிர்ப்பிக்கும் வேளையில் இங்கே, பெங்களூருமாநகரின் ஒதுக்குப்புறமான நடுத்தரவர்கத்தினர் வசிக்கும்பகுதியில், அமைந்திருந்தது அந்த மாடிவீடு..! பார்க்கையிலேயே தெரிந்துவிடும், அது நடுத்தரகுடும்பம் வசிக்கும் வீடென்று..! ஆம்..! அந்தளவிற்கு பார்ப்பதற்கு அழகாகவும் கச்சிதமாகவும் கட்டப்பட்டுள்ள அந்தவீட்டில் ஒலித்துக்கொண்டிருந்தது கந்தசஷ்டி கவசம்..


அங்கே பூஜையறையில் வழக்கம்போல் விளக்கேற்றி வழிபட்டுக்கொண்டிருந்தாள் நம் நாயகி மிதிலா.. அப்போதுதான் அறையிலிருந்து எழுந்துவந்த மிதிலாவின் அன்னை வசந்தியோ, அங்கே பயபக்தியோடு இறைவனை வழிபட்டுக் கொண்டிருக்கும் மிதிலாவைக்கண்டு புன்னகைத்து, பின் சமையலறைக்கு செல்ல, அங்கே ஏற்கனவே காபிபோட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தது..! அதனைக்கண்ட வசந்தியோ, "இதெல்லாம் தன்மகளின் வேலை..!" என்று புரிந்துகொண்டு வீட்டைமுழுக்க பார்வையிட, வாசலில் கோலம்போட்டது முதல் வீட்டை கூட்டிப்பெருக்கி சுத்தம்செய்து, சமையலறையிலும் பாத்திரங்களை கழுவிவைத்து காப்பிபோட்டு, காலை உணவுக்கு தேவையானவற்றையெல்லாம் எடுத்து வைத்திருந்தாள்..


பின்னர் பூஜையறையில் இருந்து வெளியேவந்த மிதிலாவைக்கண்ட வசந்தியோ, "மிதிலா..? நீ, எப்போடா எழுந்திருச்ச..? சீக்கிரமாவே எல்லா வேலையும் செஞ்சுமுடிச்சுட்ட போலயே..?" என்றதற்கு, "ஆமாம்மா..! நீ, எந்த வேலையும் செய்யவேண்டாம்..! நான் எல்லாத்தையும் செஞ்சுவச்சுட்டேன்..! காலை டிபனுக்கு, இட்லியும் சட்டியும்கூட ரெடி பண்ணிவச்சாச்சு..! இன்னைக்கு, நம்ம பவிக்கு எக்ஸாம் இருக்குதுல்ல..? அவள் கல்லூரிக்கு நேரமா போக வேண்டியிருக்கும்..? அதனாலதான் எல்லாமே சீக்கிரமா ரெடிபண்ணிட்டேன்..!" என்று சொல்ல, தன் மகளின் பொறுப்புணர்வை நினைத்து பெருமைப்பட்ட வசந்தியோ, அவளது கணவனான சங்கரனுக்கு காப்பியை எடுத்துசென்றாள்..


பின் மிதிலாவோ, "தனது தங்கை பவித்ரா, எக்ஸாமிற்காக படித்துக்கொண்டிருப்பாள்..!" என்று, அவளுக்காக தயாரித்த காப்பியை எடுத்துக்கொண்டு, எப்போதும் பாட்டியுடனேயே சேர்ந்து உறங்கும் தன் தங்கையிடம், காபி கொடுப்பதற்காக பாட்டி அறைக்குசெல்ல, இவ்வளவுநேரம் புன்னகையுடன் இருந்தவளின் முகமோ, திடீரென்று தயக்கமாக மாறியது..! பின்பு கதவை தட்டியவளோ வெளியேயிருந்து, "அம்மாடி பவித்ரா..? காபி கொண்டுவந்திருக்கேன்ம்மா..! கதவைத் திற..!" என்று சொல்ல, அடுத்த ஐந்தாவது நிமிடமே கதவு திறக்கப்பட்டது..! ஆனால், திறந்தது பவித்ரா அல்ல..! அவளது பாட்டியும் சங்கரனின் தாயாருமான வேதவள்ளிதான்..!


அந்தவீட்டை பொருத்தவரையில், சங்கரனும் வசந்தியும் குடும்ப தலைவர்களாக இருந்தாலும், சங்கரனின் தாயார் வேதவள்ளி சொல்வதுதான் சட்டம்..! அவரது பேச்சிற்கு மறுபேச்சு அந்தவீட்டில் எப்போதுமே கிடையாது..! வேதவள்ளிக்கு சங்கரனின் இளையமகள் பவித்ராமீது மட்டும்தான், அளவுகடந்த பிரியம்.. அவள் பிறந்ததிலிருந்தே வேதவள்ளியின் அன்பிலும், அரவணைப்பிலும்தான் வளர்கிறாள்..! பெற்றது வசந்தியாக இருந்தாலும், அவளை வளர்த்தது முழுவதும் வேதவள்ளிதான்..! ஆனால், தனது இளைய பேத்தின்மீது இவ்வளவு பாசத்தைக்காட்டும் வேதவள்ளிக்கு, மூத்த பேத்தியான மிதிலாவை கண்டாலே பிடிக்காது..! அவள் என்னசெய்தாலும், அதில் ஒரு குற்றத்தை கண்டுபிடித்து, வசைபாடினால்தான் தூக்கமேவரும்..! என்றே சொல்லலாம்..


சிறுவயதில் இதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத மிதிலாவோ, வளரவளர தன் பாட்டியின் பாசத்திற்கு ஏங்க ஆரம்பித்தாள்.. ஆனால் வேதவள்ளியை பொருத்தவரை, "மிதிலா எதற்கும் ஆகாத அதிர்ஷ்டமில்லாதவள்..! என்றும், அவளால் இந்தவீட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை..!" என்றும் நினைத்துக்கொண்டு, இன்றளவும் அவள்மீது சுடுசொற்களை மட்டுமே பேசி, வதைத்துக் கொண்டிருக்கிறார் அந்த முதியவள்.. இங்கே அறைக்கதவை திறந்துநின்ற வேதவள்ளியோ, எதிரே கையில் காப்பி கப்போடு நின்றுகொண்டிருக்கும் மிதிலாவைக்கண்டு, "என்ன..? எதுக்கு இப்போ இங்கே வந்த..?" என்று முகத்தை வெறுப்பாக வைத்துக்கொண்டு பேச, "இல்ல பாட்டி..! இன்னைக்கு பவிக்கு எக்ஸாம் இருக்கு..! காலையில 9:00 மணிக்கு காலேஜுக்கு போகணும்..! தூக்கம் முழிச்சு படிச்சிட்டுருப்பாள்..? அவளுக்கு தலை வலிக்கும் இல்ல..? அதுதான் காப்பி எடுத்துட்டுவந்தேன்..!" என்று கூற, "காபி வேண்டுமென்று, பவி உன்கிட்ட கேட்டாளா..? இன்னைக்கு அவளுக்கு எக்ஸாமென்று சொல்ற..? பின்ன நீ, எதுக்கு காலங்காத்தால இங்கேவந்து நிற்கிற..? உன்னோட விளங்காத முகத்தைப்பார்த்தால், அவள் எப்படி இந்த எக்ஸாமில் பாஸ் பண்ணுவா..? முதலில் இங்கேயிருந்து போ..!" என்று கடுமையாக பேச,


இதெல்லாம் அவளுக்கு பழகியதுதானே..? அதனால் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், "சரி பாட்டி..! நான் உள்ளே வரலை.. நீங்களே இந்த காப்பியை பவிகிட்ட கொடுத்துடுங்க..?" என்றதற்கு மிதிலாவை முறைத்த வேதவள்ளியோ, "உனக்கு சொன்னால் புரியாது..! அவள் இன்னும் எழுந்திருக்கவே இல்லை..! நல்லா தூங்கிட்டு இருக்காள்.. எழுந்ததும், உன் சம்பந்தப்பட்ட எதுவும் என்பேத்தி கண்ணுமுன்னாடி வரக்கூடாது..! புரியுதா..? நீ முதலில் இங்கிருந்து போ..!" என்றதும், 'இதற்குமேல் இங்கே நின்றால், இன்னும் கடுமையாக தன்னை திட்டிவிடுவார்..!" என பயந்த மிதிலாவோ, அங்கிருந்து சென்றுவிட்டாள்.


பின்னர் மிதிலாவோ வழக்கம்போல் வீட்டுவேலைகள் அனைத்தும் செய்து முடித்துக்கொண்டிருக்க, அலுவலகத்திற்கு கிளம்பிய சங்கரனோ சாப்பிடுவதற்காக டைனிங்டேபிளில் அமர, வசந்தி அவருக்கு உணவை பரிமாறவும், சாப்பிட்டவுடனேயே, 'இது தன்மகள் மிதிலா செய்த காலை உணவுதான்..!' என்று புரிந்துகொண்ட சங்கரனோ வசந்தியை பார்த்து, "மிதிலா எங்கே..?" என்று கேட்க, தன் தந்தை தன்னை அழைப்பதை புரிந்துகொண்ட மிதிலாவோ, அவசரமாக சமையல் அறையிலிருந்து அவருக்காக சூடாக போட்ட தோசையை எடுத்துவந்து, அவரது தட்டில்வைத்தாள்.. 'தனக்கு தோசைதான் பிடிக்கும்..! என்பதை, புரிந்துகொண்டு இவ்வாறு செய்கிறாள்..!" என்பதை உணர்ந்த சங்கரனோ, ஒவ்வொருவருக்கும் பிடித்தவற்றை, இப்படி பார்த்துபார்த்து செய்யும் மிதிலாவைக்ககண்டு மகிழ்ந்தார்..


அப்போது வசந்தியோ, "இதோ கேட்டீங்க இல்ல..? உங்க பொண்ணு வந்துட்டா பாருங்க..?" என்றதும், மிதிலா தன் தந்தையை பார்த்து, "என்னப்பா..? ஏன் கூப்பிட்டீங்க..?" என்றதும், "ஒன்னும் இல்லடா..? காலையிலிருந்து நீயே எல்லா வேலையும் செஞ்சுட்டயே..? உங்க அம்மா, உனக்கு உதவி செய்யலையா..?" என்று கேட்க, "அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா..! தினமும் அம்மாதானே எல்லா வேலையும் செய்றாங்க..! நான் படிச்சிட்டு, வீட்டில் சும்மாதானே இருக்கேன்ப்பா..? அம்மாவுக்கு உதவியாகவாது இருக்கட்டுமே..? என்றுதான் இப்படி செய்கிறேன்.." என்றதும், தன் மகளின் பொறுப்புணர்வைக்கண்டு, மெச்சிக்கொண்டிருக்கையில், சரியாக அங்கு வந்துசேர்ந்தனர், சங்கரனின் இளையமகள் பவித்ராவும், பாட்டி வேதவள்ளியும்,


அப்போது அங்குவந்த பவித்ராவைக்கண்ட மிதிலாவோ, "பவி குட்டி..? எக்ஸாமுக்கு நல்லா படிச்சிட்டியாடா..?" என்றிட அதற்கு, "ஓ.. படிச்சிட்டேன் அக்கா..!" என்று பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட வேதவள்ளியோ, "அதெல்லாம் என் பேத்தி நல்லா படிச்சிருப்பா..! உன்னைபோல ஒன்னும் அறிவு இல்லாதவள் கிடையாது..! படிச்சிட்டு எந்த வேலைவெட்டிக்கும் போகாமல், வீட்டில் தண்டமா சோத்தை கொட்டிட்டு இருக்கயே..? உன்னைமாதிரி, அவள் ஒன்னும் முட்டாள்கிடையாது..!" என்று வழக்கம்போல் மிதிலாவை குத்திகாட்டி பேசிட,


சங்கரனோ, "அம்மா..? மிதிலா ஒன்னும் படிச்சிட்டு வேலைக்கிடைக்காமல் வீட்டில் இருக்கவில்லைம்மா..! நான்தான், சீக்கிரமே கல்யாணம்பண்ணி அடுத்தவீட்டுக்கு போகப்போற பொண்ணு, இப்போவே ஏன் வேலைக்குபோய் கஷ்டப்படணுமென்று..?, அவளுக்கு கிடைத்த வேலைக்குக்கூட போகவேண்டாம்..! என்று, சொல்லிட்டேன்.." என்றிட, தன் முகவாயை தோள்பட்டையில் இடித்தபடி, முகத்தை வெட்டி திருப்பிக்கொண்ட வேதவள்ளியோ எதுவும் பேசாமல் இருக்க, மிதிலா அனைவருக்கும் உணவு பரிமாறினாள்..


காலை உணவை உண்டுமுடித்து அவரவர் தங்களது பணிக்கு கிளம்பி கொண்டிருந்தபோது சங்கரனிடம் வந்த மிதிலாவோ, "அப்பா இன்னைக்கு என் பிரண்டு கல்யாணமாகி ஊருக்கு போகிறாள்.. என் பிரெண்ட்ஸ் எல்லோரும் அவளோட வெளியே போறாங்க, என்னையும் கூப்பிட்டாங்க, நான் போயிட்டு வரட்டா..?" என்று கேட்க, அதற்கு சங்கரனோ முதலில் "அப்படியா..?" என்று யோசித்து பின் "பத்திரமாக போயிட்டு வாடா..!"என்று சொல்லிவிட்டு, தனது பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் நோட்டை எடுத்து, மிதிலாவிடம் நீட்டியவரோ, "இதை வாங்கிகோம்மா..? வெளியே போற இல்லை..? அங்கே தேவைப்படும்..! எதற்கும் உனக்கு செலவுக்கு வச்சுக்கோ..!" என்று சொல்ல, அருகில் நின்றிருந்த வேதவள்ளியோ, "ஆமா..! இப்போ எதுக்கு இவளுக்கு பணம்கொடுத்து அனுப்புற..? சுத்தம்..! ஏற்கனவே தண்டசோறு..! இப்போ பணம் கொடுத்துவேற அவளை பழக்கிவிடாதே..!" என்று திட்டிய வேதவள்ளியைக்கண்ட சங்கரனோ, "அம்மா..? வயசு பொண்ணு, வெளியில் போகிறா.. கையில் பணம் இருந்தால் சேப்டிதானே..? காலம் கெட்டுகிடக்கும்மா..! புரிஞ்சுக்கோங்க..?" என்றதும், எதுவும்பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டார் அந்த பாட்டி..


அப்போது சாப்பிட்டுமுடித்த பவித்ராவோ, கிளம்பி கல்லூரிக்கு செல்ல தயாரானவள் தனது பாட்டியிடம், "பாட்டி கல்லூரிக்கு போயிட்டுவரேன்..! அப்பா, அம்மா, அக்கா நான் போயிட்டுவரேன்..!" என்றதும், வேதவள்ளியோ தனது சுருக்குபையில் இருந்த 500ரூபாய் தாளை எடுத்து, யாருக்கும் தெரியாமல், பவித்ராவின் கைகளில் திணித்து, "பவி குட்டி..? நல்லபடியா போயிட்டுவாடா..! பரீட்சை முடிந்ததும், உன் பிரண்ட்ஸோட எங்கயோ வெளிய போகணும்னு சொன்னயே..? சாயந்தரம், உங்க அப்பன் வீட்டுக்கு வர்றதுக்குள்ள போயிட்டு வந்துரு..! இதை செலவுக்கு வச்சுக்கோ..!" என்று பணத்தை கொடுத்துவிட்டு வழியனுப்ப, "சரி பாட்டி..!" என்று மண்டையை ஆட்டியவளோ, தனது தந்தை மற்றும் தாயிடம் சொல்லிக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பிச்சென்றாள்.. பின்பு பசுபதிக்கும் அலுவலகத்திற்கு நேரமாகவே, அவரும் கிளம்பிசென்றார்..


பசுபதியுடையது நடுத்தர குடும்பம்..! கனரக உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில், மேனேஜராக பணிபுரிகிறார் பசுபதி..! அவரது வருமானத்தில் தனது இரு பெண்களையும் படிக்கவைத்து, அவர்களுக்கு திருமணம் செய்வதற்கு தேவையான ஓரளவிற்கு பொருள் ஈட்டியுள்ளார்.. மற்றபடி பெரிய அளவிற்கு வசதியானவர் இல்லை..! பட்ஜெட்போட்டு வாழும் குடும்பமானதால், தனது பெண்களையும் கட்டுக்கோப்பாக வளர்த்து வருகிறார்..! என்றுமே தனது பொறுப்பிலிருந்து நீங்காத அவரது மூத்தமகள் மிதிலாவோ, தாய் தந்தை சொல்லிற்கு என்றுமே மறுத்து பேசுவதில்லை..! அவ்வளவு அன்பானவள்..! எல்லோரிடத்திலும் பாசம்காட்டி பழகுபவள்..! ஆனால், அதுக்கு நேர்மாறான இளையமகள் பவித்ராவோ, வேதவள்ளி பாட்டி தரும் செல்லத்தினால், வீட்டில் ஒன்றும் தெரியாதுபோல் இருந்துகொண்டு, வெளியில் செய்யும் அட்டகாசமே வேறு..! என்றே சொல்லலாம்..


இப்படி, துரோகத்தின் மொத்த உருவே குடும்பம்தான்..! என்ற எண்ணத்தோடு அவன் பயணிக்க, குடும்பம்தான் மொத்த வாழ்வின் அடையாளம்..! என்ற நம்பிக்கையில் இவள் பயணிக்க, இருவரும் இணைந்து பயணிக்கும் நாள் வருமா…? பார்க்கலாம்…


தொடரும்…
 

Advi

Well-known member
பாவம் மிதிலா, வேதா பாட்டி😬😬😬😬😬

எப்பா மீட் பண்ணுவாங்க🤩🤩🤩🤩🤩
 
Top