எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மிஞ்சியின் முத்தங்கள் - கதை திரி

admin

Administrator
Staff member

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா​

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்​

மனதிற்கு தைரியம் தரும் ஹனுமான் மந்திரம் அனு தினமும் சொல்கிறாள் உள்ளுக்குள் உடைந்துகொண்டிருக்கும் இதயத்தை ஓட்ட வைக்க முயற்சிக்கும் மந்திரம்.​

நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைக்க நீண்ட விரல்கள் அப்படியே நின்றது.​

“கொடி… குங்குமம் எங்க!” என்றவன் பின்னிலிருந்து அணைத்து கண்ணாடி முன்னில் நிறுத்தத் தலை நிமிராமல் நின்றவள்.​

“இன்னும் சாமி கும்பிடல கீழ போய்க் கும்பிட்டுட்டு வெச்சுக்குறேன்” என்றாள் குரலே எழும்பாமல்.​

அவள் தாடையை பிடித்து நிமிர்த்தியவன் “நான் அத கேக்கல இதைக் கேட்டேன்” என்று சிந்தூரத்தை எடுத்து அவள் நெற்றி வகிட்டில் வைத்தான்.​

அதற்கு இணையாக அவள் வதனமும் சிவந்தது “நான் இங்க குங்குமம் வைக்கவேயில்லயே” என்றான் அவள் கன்னத்தை விரால் வருடிக்கொண்டே, முகத்தை மூடிக்கொண்டாள் கொடிமலர்.​

மனதை மயக்கும் அவன் சிரிப்பொலி செவியைத் தீண்டி இதயத்தை நிறைத்து மெல்ல மெல்ல தேய்ந்து மறைந்தது.​

சட்டென்று நினைவுகள் அறுபட நடுங்கும் விரல்களால் உச்சியில் குங்குமத்தை வைத்தவள் விழிகள் இரு முத்துக்களை சிதறவிட்டது.​

“வந்துடுங்க தனியா என்னால முடியல, உங்க கொடிமலர் வாடிக் கருகி காணாமலே போய்டுவேன் போல” என்றவள் அப்படியே தரையில் மடிந்து அமர்ந்து தேம்பினாள்.​

அவன் அருகில் இல்லாமல் மூன்று வருடங்களும் பத்து மாதங்களும் கடந்துவிட்டது வந்துவிடுவான் என்ற நம்பிக்கையும் வர வேண்டும் என்று வேண்டுதலும் மட்டுமே அவள் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறது.​

இட்லி மாவில் உப்பைச் சரி பார்த்த பார்வதி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி விறகடுப்பில் வைத்தார், வேலை ஒன்றும் ஓடவில்லை விழிகள் நொடிக்கொருமுறை மாடி படிகளில் பதிந்து மீண்டது.​

மூன்றாம் முறை அவர் திரும்பிப் பார்க்கையில் அவர் பின்னே நின்றிருந்தாள் கொடிமலர்,அவள் முகத்தைப் பார்த்தவருக்கு மனதை பிசைந்தது அவரைத் தாண்டிச் சென்று இட்லிக்கு ஊற்றிவைத்தவள் காரச்சட்டினுக்கு தயார் செய்துகொண்டிருந்தாள்.​

பக்கத்தில் தேங்காயை துருவிக்கொண்டிருந்த பார்வதியின் பார்வை அவள் பாதங்களில் பதிந்தது மெட்டி இல்லாத பாதத்தைவிட அதிலிருந்து ஒலித்துக்கொண்டிருந்த சங்கீதம் நின்றுபோனதே அவர் விழிகளை நிறைத்தது.​

“மா… கொலுசுல முத்து இல்லாம வாங்குங்க மெட்டி நிறைய முத்து வெச்சு வாங்குங்க” என்ற மகனின் வார்த்தைகள் இப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருந்தது,அப்படியே வாங்கியிருந்தார் பார்வதி.​

இந்த வீட்டில் அவள் கால் வைத்த தருணத்திலிருந்து அந்த மெட்டியின் ஒலி அவள் வரவைச் சொல்லிக்கொண்டே இருக்கும்,இப்பொழுது வீடே நிசம்பதமாய்.​

“அந்தத் தரித்திரம் பிடிச்சவளை மெட்டியை கழட்டி வைக்கச் சொல்லு புருஷன் என்ன நிலமைல இருக்கானே தெரியல ஜல் ஜல்லனு இந்தச் சத்தத்தோட நடக்க வெக்கமா இல்லையா” என்ற மாமனாரின் வார்த்தையில் நிறைந்த சபையில் ஆயிரம் பேர் வாழ்த்த அவள் பாதங்களைக் கையில் ஏந்தி அவன் அணிவித்த மிஞ்சியை நிறையும் விழிகளோடு அவிழ்த்துப் பார்வதியின் கையில் கொடுத்திருந்தாள் கொடிமலர்.​

மகனுக்கு விருப்பமான அந்த மிஞ்சியை வெள்ளி பேழையில் பத்திரப்படுத்தி “இத திரும்ப மருமக கால்ல போட்டுவிடவாவது என் மகனை நீங்க அழைச்சுட்டு வரணும்” என்று இறைவனிடம் வேண்டுதல் வைத்திருந்தார் பார்வதி.​

மிக்ஸியின் சத்தத்தில் திரும்பிப் பார்த்தார் பார்வதி, இப்பொழுதெல்லாம் நினைவுகளின் சுழலுக்குள்ளே மூழ்கி கிடக்கின்றனர் மருமகளும் மாமியாரும், கார சட்னி அரைத்து முடித்து தேங்காய் சட்னிக்கு அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் மலர், ஒரு அடுப்பில் இட்லி வெந்துகொண்டிருக்க மற்றொன்றில் சாதம் இருந்தது.​

அது கொஞ்சம் பெரிய அடுக்களை கேஸ் அடுப்பு ஒரு பக்கம் இருக்க இடப்பக்கம் விரக்கடுப்பும் இருந்தது, புகை உள்ளே நிறையாமல் வெளியேற வழி செய்து அழகாகக் கட்டப்பட்டிருந்தது.​

இட்லிகளை வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைத்தவள் சட்னியை கிண்ணங்களில் எடுத்துவைத்தாள், வேகவேகமாக உள்ளே வந்த மூத்த மருமகள் நிர்மலா சாதத்தை சிறிய கிண்ணத்தில் எடுத்துத் தயிரை அதில் ஊற்றிக் கிளற தொடங்க.​

“ஏன்மா தினமும் அந்தப் புள்ளைக்கு தயிர் சாதம் குடுக்குறியே ஏன் இந்த வீட்ல காய் இல்லையா இல்ல புள்ளைக்கு குடுக்கக்கூடாதுன்னு யாரவது சொன்னோமா” என்றார் பார்வதி.​

அவரை நிமிர்ந்து பார்த்தவள் கொடிமலரையும் ஒரு முறை ஆழ்ந்து பார்த்துவிட்டு “என்ன பண்ண அத்தை நேரம் ஆயிடுது சாதம் வடிக்குறவங்க ஏதாவது ஒரு குழம்பும் காலையிலே செய்யலாம் எதுக்கு செய்யணும்னு யோசிச்சுட்டு இருக்கவங்கள என்ன சொல்ல, நான் குழந்தையை எழுப்பிக் குளிக்கவெச்சு கிளப்பறதுக்குள்ள டையர்ட் ஆயிடுது” என்றவளை பார்க்க ஆத்திரமாக வந்தது.​

“காலைல அடுப்படி பக்கமே வரமாட்ற, உன் புள்ளதான… அதுக்கு என்னவேணும் என்ன பிடிக்கும்னு ஒரு அம்மாவா உனக்குத் தெரியணும், ஸ்கூல் போற குழந்தைக்கு ஒழுங்கா சாப்பாடு குடுத்து விடணும்னு அக்கறை இருக்குற அம்மாக்கு எப்படி காலைல தூக்கம் வரும்” என்க.​

உள்ளுக்குள் எரிச்சல் மண்டினாலும் வெளியில் காட்டமுடியவில்லை அப்படியெல்லாம் மாமியாரிடம் குரல் உயர்த்த முடியாது.​

“அதிலயும் அவளைப் பாத்துட்டே சொல்ற? போனாப்போகுது சின்னக் குழந்தைக்குச் சோறு இல்லாம இருக்க கூடாதுனு அவ தினமும் சாதம் வடிச்சு வெக்குறா இனிமே செய்யமாட்டா உனக்கு வேணும்னா நீயே வந்துசெய்” என்றார் பார்வதி.​

நிர்மலாவை ஒரு பொருட்டாகக் கூட நினைக்காத கொடிமலர் தோட்டத்திற்கு சென்று பவிழமல்லி மலர்களைக் கூடையில் நிறைத்துக்கொண்டு உள்ளே நுழைய, அவள் வழியை மறித்து நின்ற பார்வதி பாலை அவள் கையில் கொடுத்துக் “குடி” என்றார் கட்டளையாக.​

மறுக்காமல் அதை வாங்கி பருகியவள் அவரை நிற்க வைத்துக் காலில் விழுந்து வணங்க, மணக்கோலத்தில் மகனுடன் நின்ற நினைவில் நெஞ்சம் விம்மியது அவளை அணைத்து தூக்கியவருக்கு வார்த்தைகள் வரவில்லை.​

கொடிமலரின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தவர் சக்கரை பொங்கலை ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து அவளிடம் நீட்டினார் வாங்கிக்கொண்டவள் இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கும் சிவன் கோவிலுக்கு நடந்தாள்.​

முகத்தை வெட்டிக்கொண்ட நிர்மலா ஆறு வயதான மகள் அமலாவுக்கு காலை உணவை ஊட்டிவிட்டு கணவனுடன் அவளை அனுப்பி வைத்தாள், குழந்தையைப் பள்ளியில்விட்டு வந்தவன் குளித்துத் தயாராகி வர அனைவரும் உணவு மேசையில் சாப்பிட அமர்ந்தனர்.​

குடும்பத்தலைவர் ராஜவேலு நடுநாயகமாக அமர்ந்திருக்க மூத்தமகன் ஆதவனும் மருமகள் நிர்மலாவும் உடன் அமர்ந்தனர், உணவைப் பரிமாறிக்கொண்டிருந்த பார்வதிக்கு ‘ஒருவருக்கு கூடவா நினைவு இல்லை என்ன ஜென்மங்கள்’ என்ற வருத்தம் எழுந்தது.​

இரண்டு வகை சட்னியிலும் இட்லியை குளிக்கவைத்து விழுங்கிக்கொண்டிருந்த கணவனின் தலையில் அனைத்தையும் எடுத்துக் கொட்டினால் என்ன என்று தோன்றியது.​

கடவுளுக்கு வைத்த பிரசாதத்தை எடுத்து வந்து அனைவருக்கும் பரிமாற “என்ன பார்வதி இன்னைக்கு சக்கரை பொங்கல் எல்லாம் செஞ்சிருக்க, ஆமா உன் மறுமவ செவ்வாய் வெள்ளி மட்டும்தானே கோவிலே கதின்னு கிடப்பா… இன்னைக்கு புதன்தானே இன்னைக்கு எதுக்கு போயிருக்கா” என்றவரை கூர்மையாகப் பார்த்த பார்வதி.​

“இன்னைக்கு என் புள்ள அதிவீரனுக்கும் கொடிமலருக்கும் கல்யாண நாள்” என்றார் குரல் இடற.​

“அவனை மொத்தமா மறந்துடீங்கள்ல எல்லாரும், பெத்தவளுக்கும் கட்டினவளுக்கும் தானே கவலை எல்லாம் உங்களுக்கு என்ன” என்றவர் முகம் கோபத்தில் சிவந்து கிடந்தது.​

“என்ன ரொம்ப பேசுற ஏதோ இந்த ஒரு விஷயத்தை மறந்துட்டோம் அதுக்காக அவன் மேல எங்களுக்கு அக்கறை இல்லன்னு அர்த்தமா? கட்டினவளுக்கு என்னடி கஷ்டம்? அவ வந்த நேரம்தான் என் மகனுக்கு இப்படியொரு நிலைமை வரக் காரணம்” என்று மனைவியிடம் கத்தியவர் அறைக்குள் சென்று கதைவடைத்தார்.​

பார்வதி தளர்ந்த நடையோடு தோட்டத்தில் சென்று அமர்ந்துகொண்டார்.​

கோவிலுக்கு நடந்து கொண்டிருந்த கொடிமலரின் மனதில் கணவனின் குறும்பு மின்னும் வழிகளும் பளீர் சிரிப்பும் மின்னி மின்னி மறைந்தது, பாதை தெரியாமல் விழிகள் கலங்க புடவை தலைப்பில் முகத்தை அழுந்தத் துடைத்தாள்.​

அவளுக்கு முன்னில் நடந்துகொண்டிருந்த வயதான பாட்டி ஒரு கையில் சிறிய பையைப் பிடித்துக்கொண்டு நடக்க முடியாமல் தடுமாற வேக எட்டுக்களில் அவரை நெருங்கியவள் “குடுங்க பாட்டி” என்று அவர் கையில் இருந்த பையை வாங்கிக்கொண்டு அவரை அணைத்து பிடித்துக்கொண்டு நடந்தாள்.​

“எங்க போகணும்” என்றவள் கேள்விக்குக் “கோவிலுக்குதாண்டியம்மா, உடம்ப தூக்கி நடக்கவே கஷ்டமா இருக்கு இருந்தாலும் ஒரு நாள் ஈசனை பாக்கலானாலும் மனசு அடிச்சுக்குது” என்றார்.​

நிறைந்த சுமங்கலி மஞ்சள் பூசிய முகம் மடிசார் சுற்றி கைநிறைய கண்ணாடி வளவிகள் அணிந்து, பெரிய பொட்டு வைத்துக் கொண்டையை சுற்றி மல்லிகை பூச்சுற்றி அந்த அதிகாலையில் இத்தனை அழகாகத் தயாராகி வந்திருந்தார்.​

அவரைக் கோவிலின் உள்ளே அழைத்துச்சென்று விட்டவள் “கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா சாமி கும்பிடுங்க பாட்டி” என்று எழுந்துகொள்ள அவள் கையைப் பற்றித் தன் முன்னே அமர்த்தியவர்.​

முழம் பூவை எடுத்து அவள் தலையில் சூடி “தீர்க்கச் சுமங்கலியா குழந்தை குட்டியோட நல்லா வாழுடியம்மா” என்று ஆசிர்வதிக்க அவர் காலில் அப்படியே விழுந்த கொடிமலரின் அழுகை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.​

“அம்மாடி ஏன்மா?” என்று அவர் பதற அவர்களை நெருங்கிய பூசாரி “அம்மாடி மலர் இந்த வாழ்த்து வீண் போகாது, உன் வீட்டுக்காரர் எந்த ஆபத்தும் இல்லாம உன்கிட்ட வந்துடுவார் மனசை தளரவிடாதமா” என்க.​

சிறிது நேரத்தில் தன்னை மீட்டுக்கொண்டவள் “உங்க வாக்கு பலிக்கட்டும்மா உங்க வாக்கு பலிக்கட்டும்” என்று சன்னிதி நோக்கி நடந்தாள்.​

“என்னாச்சு?” என்ற பாட்டியைப் பார்த்த ஐயர் .​

“அந்தப் புள்ளயாண்டான் கொலை முயற்சி வழக்குல ஜெயில்ல இருக்கான்” என்க.​

“என்ன சொல்றீங்க” என்றார் அவர் அதிர்ச்சியாக.​

“ஹ்ம்ம், அதும் இங்கயில்ல துபாய்ல தூக்குத்தண்டனை விதிச்சுருக்காங்க, புருஷன் உயிரைக் காப்பாத்த அந்தச் சாவித்திரி எமன் கூட போராடினமாதிரிக் கடவுள் கூடப் போராடுது இந்தப் பொண்ணு”.​

“தங்கமான பிள்ளைகள் ஏன்தான் இப்படி சோதிக்கிறானோ, சொக்கா உன் விளையாட்டை நிறுத்தி அந்தப் புள்ளைக்கு நிம்மதியை குடுப்பா” என்ற ஐயர் உள்ளே சென்றார்.​

தூணில் சாய்ந்தமர்ந்து பூக்களைக் கட்டிக்கொண்டிருந்த கொடிமலரில் பார்வை நிலைத்தது அவருக்கு, கட்டிக்கொண்டிருந்த பவிழமல்லி முழுதும் அவள் விழிநீரில் நனைந்து கொண்டிருந்தது.​

 
ஆஹா என்ன இது ஆரம்பமே கொஞ்சம் சோகமான பதிவு,அறிவீர்,துபாய்ல வேலைக்கு சென்ற இடத்தில பிரச்சனையில் மாட்டிக்கிட்டு?அவனுடைய அம்மாதவிர வீட்ல இருக்கிறவங்க சரியில்லே குடிநீர் நான்கு வருடங்களாக காத்திருக்கரலா, 🤔🤔🤔
 

Advi

Well-known member
என்ன இவளோ சோகம்🤧🤧🤧🤧, பாவம் பாரு & கொடி🥺🥺🥺🥺🥺🥺

ச்சைக் என்ன மனுஷங்க எல்லாம்😬😬😬😬😬

நிம்மி அப்படியே இருக்கணும் பம்மி, அதை விட்டுட்டு கொடியை பேசினா🤬🤬🤬🤬🤬🤬

வீரா சீக்கிரம் வாடா.....
 

NNK-50

Moderator
ஆஹா என்ன இது ஆரம்பமே கொஞ்சம் சோகமான பதிவு,அறிவீர்,துபாய்ல வேலைக்கு சென்ற இடத்தில பிரச்சனையில் மாட்டிக்கிட்டு?அவனுடைய அம்மாதவிர வீட்ல இருக்கிறவங்க சரியில்லே குடிநீர் நான்கு வருடங்களாக காத்திருக்கரலா, 🤔🤔🤔
Nandri saki ❤️❤️
 

NNK-50

Moderator
என்ன இவளோ சோகம்🤧🤧🤧🤧, பாவம் பாரு & கொடி🥺🥺🥺🥺🥺🥺

ச்சைக் என்ன மனுஷங்க எல்லாம்😬😬😬😬😬

நிம்மி அப்படியே இருக்கணும் பம்மி, அதை விட்டுட்டு கொடியை பேசினா🤬🤬🤬🤬🤬🤬

வீரா சீக்கிரம் வாடா.....
Maaridum sis, Nandri 🙏❤️
 

Mathykarthy

Well-known member
Interesting start..
பாவம் கொடி... புருஷன் ஜெயில்ல தூக்கு தண்டனை கைதி.... மாமியார் வீட்டுல மாமியார் தவிர யாரும் ஆதரவு இல்லை.... 🥺🥺🥺🥺🥺🥺🥺
அதி வந்துடுவான்னு நம்பிக்கையில காத்திருக்கா... ☹️

ராஜவேலு மகன் ஜெயிலுக்கு போனதுக்கு மருமக ராசி தான் காரணம்னு அவளை கஷ்டப்படுத்துறாரு
...😤😤😤😤

நிம்மி டூ மச்.... 😬😬😬
 

NNK-50

Moderator
Interesting start..
பாவம் கொடி... புருஷன் ஜெயில்ல தூக்கு தண்டனை கைதி.... மாமியார் வீட்டுல மாமியார் தவிர யாரும் ஆதரவு இல்லை.... 🥺🥺🥺🥺🥺🥺🥺
அதி வந்துடுவான்னு நம்பிக்கையில காத்திருக்கா... ☹️

ராஜவேலு மகன் ஜெயிலுக்கு போனதுக்கு மருமக ராசி தான் காரணம்னு அவளை கஷ்டப்படுத்துறாரு
...😤😤😤😤

நிம்மி டூ மச்.... 😬😬😬
நன்றி சகி ❤️❤️❤️
 
Top