எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே!! 3 கதை திரி

NNK-82

Moderator

மாயனே! 3​

டைனிங் டேபிளில் இருந்த உணவை பார்த்து பாவமாய் அவனை பார்த்தாள். மதியம் உன்ன கூட நேரம் இல்லாமல் வேலைகள் இழுத்துவிட்டது. பெயருக்கு கொஞ்சம் உண்டவளுக்கு பசி வயிற்றை கிள்ளியது. மாலை தாமதமாக தான் வீடு வந்தாள். வீடு வந்ததும் குளித்து உடை மாற்றி வந்தவள் சமையல் அறைக்கு சென்று பார்க்க சாப்பாடு எதுவும் இல்லை. பசி நேரத்தில் ஸ்னாக்ஸ் உண்ணவும் விருப்பம் இல்லாமல் அப்படியே அமந்துவிட்டாள்.​

ஒரு கப் சுடு தண்ணீர் கூட அவளுக்கு வைக்க தெரியாது. என்ன சமைக்க முடியும். இரவு வீடு வந்தவன் அவளை பார்க்க பசியில் விழிகள் இரண்டும் கசிந்து போய் இருந்தது. "என்ன?? ஏன் இப்டி இருக்க??" என்று கேட்க "பசிக்குது.. சாப்ட எதுவும் இல்ல.." என்றாள்.​

"சமைச்சு சாப்ட வேண்டியது தானே.." என்றவனை கோபமாக பார்த்தவள் "அறிவாளி வெண்ண.. எனக்கு சமைக்க தெரிஞ்சா நான் ஏன் ஈவினிங்ல இருந்து பசியோட இருக்க போறேன்.. எனக்கு சமைக்க தெரியாது.." என்றாள் பசியின் விலைவாக வந்த கோபத்தில்.​

"சமைக்க தெரியாதுங்குறத கூட எவ்ளோ திமிரா சொல்றா பாரு.." என்று நினைத்தவன் சட்டையை கழற்றி துவைக்க போட்டுவிட்டு கிட்சனுக்குள் நுழைந்தான். "இவன் என்ன பண்ண போறான்??" என்று அவள் பின்னாலே சென்றாள். கோதுமை மாவு எடுத்து சப்பாத்திக்கு பிசைந்து வைத்தான். காய்கறிகள் எடுத்து நறுக்கினான்.​

அவள் பார்த்து கொண்டு நிற்க, "எவ்ளோ நேரம் தான் நிப்ப? இப்டி உக்காரு.. " என அவள் இடை பற்றி தூக்கி சமையல் திண்டில் அமர வைத்தான். இமை சுருக்கி முறைத்தாள். அவனோ கருமமே கண்ணாக குருமா தயார் செய்து கொண்டு சப்பாத்தி தேய்த்து கொண்டிருந்தான். அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள் நிலா.​

கருத்த அலை அலையான கேசம், கருப்பு வைரமாய் ஆணவன் கட்டுடல் தேகம், கழுத்தில் வெள்ளி ஜெயின், கையில் வெள்ளி பட்டை காப்பு, காதில் குட்டி கடுக்கன், வெள்ளை உள் பணியன் கருப்பு தேககாரனுக்கு அம்சமாய் பொருந்தி இருக்க அழகனாய் தெரிந்தான். அவனையே பார்த்து கொண்டிருந்தவள் "எதுக்கு இவ்ளோ தாடி?? ட்ரிம் பண்ணலாம்ல.." என்று கேட்க புருவம் உயர்த்தி விழிகளை நிமிர்த்தி பார்த்தான்.​

அவன் பார்வை கலவரமானவள் நானா அப்டி கேட்டேன்.. என்று நாவை கடித்து கொண்டவள் திரும்பி கொண்டாள். உதட்டைவிட்டு வெளியே வராத சிறு புன்னகையுடன் தன் வேலையை தொடர்ந்தான். அரை மணி நேரத்தில் சூடானா சப்பாத்தி குருமா தயார் செய்து முடித்தான்.​

"நீ சாப்டு.. நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடுக்குறேன்.." என்று விட்டு சென்றான்.​

மருந்துக்கு கூட அவனுக்காக காத்திராமல் தனக்கு பரிமாறி கொண்டு கப கபவென உண்டாள். அவன் குளித்து வரும் முன் உண்டு முடித்திருந்தாள். "காலைல சமைக்க வர்றவங்கள இனிமே நைட்க்கும் சமைக்க வர சொல்றேன்.." என்றான்.​

அவள் தலையை மட்டும் ஆட்டினாள். "ஆமா.. நீ தான் பிட்நஸ்ல ரொம்ப கவனமா இருக்கியே டயட் ஃபுட் எடுத்துக்க மாட்டியா??" என்று கேட்க "டைம்க்கு போதுங்குற அளவுக்கு சாப்பிடுறது தான் ஆரோக்கியமான டயட்." என்று போனை பார்த்த படி கூறினாள். அவளையே பார்த்து கொண்டிருந்தவன் அமைதியாய் உண்டு முடிக்க அவன் அலைபேசி அழைத்தது.​

போனை காதில் வைத்து பேசி கொண்டு பாத்திரங்களை கழுவி வைத்தான். "அந்த ஸ்ரீனிவாசன் வந்திருக்கான் ண்ணே.. மூணு மாசமா நம்ம கண்ணுல படாம சுத்திட்டு இன்னைக்கு திருட்டு பய மாதிரி வீட்டுக்கு வந்திருக்கான்.. தூக்கிரட்டுமா ண்ணே?? " இன்பா ஆள் போன் செய்து கேட்க "வேண்டாம் டா.. அவனுக்கு கொடுத்த டைம் முடிய இன்னும் மூணு நாள் இருக்கு.. அதுக்குள்ள நாப்பது லட்சம் ரெடி பண்ணி கொடுக்க மாட்டான்.. இப்போ ஏதாவது பண்ணா உஷார் ஆகிடுவான். மூணு நாள் ஆகட்டும் அப்புறம் பாத்துக்கலாம்.​

அவன் கடைய வச்சு தானே கடன் வாங்கி இருக்கான். மூணு நாள்ல வட்டியும் முதலுமா செட்டில் பண்ணல, அவன் கடைய எடுத்துக்குவோம்.. இப்போ அவனை டிஸ்டர்ப் பண்ணாத விடு.." என்று இணைப்பை துண்டித்தான்.​

போனை வைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்க, நிலா முறைத்து கொண்டு நின்றாள். "கொஞ்சம் கூட உனக்கு மனசாட்சியே இல்லையா?? ஏன் இப்டி அடுத்தவங்க வயித்துல அடிச்சு சம்பாதிக்கிற??" என்று கேட்க​

"என் பொண்டாட்டி புள்ளைக்கு சொத்து சேர்த்து வைக்கிறேன்.." தோள் குலுக்கி சாதாரணமாய் கூறினான்.​

"இப்டி அடுத்தவங்க பாவத்துல சேர்க்கற சொத்து எனக்கு நம்ம குழந்தைகளுக்கும் வேண்டாம்.." என்று கூற இதழ் விரித்து அர்த்தமாய் சிரித்தான் இன்பா.. தெரிந்தோ தெரியாமலோ அவளே தன் வாயால் ஒப்பு கொண்டாள் தான் உன் மனைவி என்றும் நம் பிள்ளைகள் என்றும். தாமதமாக அதை புரிந்து கொண்டவள் மாட்டி கொண்டு திருட்டு பூனையாக விழித்தாள்.​

அவன் முகத்தை நேர் கொண்டு காண முடியாமல் அவள் செல்ல போக, கரம் பற்றி இழுத்து தன் மீது போட்டு கொண்டான். அவள் திமிர இருக்கி அணைத்தான். "என்ன பிரச்சனை டி உனக்கு இப்போ??" என்று கேட்டவனின் விழிகள் அவள் இதழில் நிலைத்திருக்க, அவளுக்கு பதில் தான் வரவில்லை.​

"இங்க பாரு நிலா.. இது காடு.. இங்க ஒன்ன அடிச்சா தான் ஒன்னு வாழ முடியும். பாவம், இரக்கம் பாத்தா நம்மால இங்க வாழ முடியாது.."என்றான்.​

அவனை பார்த்தவள் "நாம எல்லாரும் மிருகம் இல்ல.. இப்டி பாவம் பண்ணி நீ சம்பாதிக்கிறதால தான் உன் காசு வேண்டாம்னு உன் அம்மா தனியா இருக்காங்க.." என்று கூற கோபம் வந்தது அவனுக்கு.​

அவன் அன்னையை அவன் பிரிந்திருக்க வேறு காரணம் இருக்க, தேவை இல்லாமல் பேசுகிறாள். "பாரு நிலா.. நமக்குள்ள அவங்கள இழுக்காத.." என்றான்.​

"நான் யாரையும் இழுக்கல. என்ன முதல்ல விடுங்க.." என்று அவனிடம் இருந்து விலகி நின்றவள் "எனக்கு உன்ன பிடிக்கல.." என்று படியேறி அவள் அறைக்கு சென்றாள். அவளை பார்த்த படி சிரித்தான்.​

வழக்கம் போல அன்றும் அவள் வேலைக்கு புறப்பட்டு சென்றிருக்க, மாதவி அழைத்தாள். "என்ன??" வெறுப்பாக பேச "ஈவினிங் வீட்டுக்கு வந்துட்டு போ நிலா.." பாசமாக அழைக்க "எனக்கு வேலை இருக்கு.." என்று இணைப்பை துண்டித்தாள்.​

இது எதிர் பார்த்தது தான் என்று நினைத்த மாதவி மீண்டும் அழைக்க அவள் அழைப்பை ஏற்று பேசும் முன் "நாங்க உன் வீட்டுக்கு வர்றோம் நிலா.." என்றார். பதில் கூறாமல் இணைப்பை துண்டித்து விட்டாள்.​

"கட் பண்ணிட்டா அத்த.." மாமியாரிடம் வருத்தமாக கூறினார் மாதவி .​

"விடு.. மாதவி. இதெல்லாம் அவகிட்ட எதிர் பார்த்தது தானே.." என்றவர் "அந்த பொருக்கி பய நம்மள படுத்துண பாட்டுக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு. அதெல்லாம் அவகிட்ட சொல்ல வேண்டாம்.. புருஷன் கூட ஒத்துமையா ஒன்னா இருக்க மட்டும் சொல்லி கொடுக்கலாம்.. படிச்ச பொண்ணு புரிஞ்சுக்குவா.." என்றார் மாதவி மாமியார் ராசாத்தி.​

"என்னவோ.. அவ கோபத்த பாக்கும் போது எனக்கு பயமா இருக்கு.." கவலையாக கூறினார். மகளின் கோபம் தான் அவருக்கு தெரியுமே..​

சொன்னது போலவே மாலை மாமியார் மருமகள் இருவரும் நிலா வீட்டுக்கு வந்தனர். பெயருக்கு கூட இருவரையும் அலைக்காமல் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்திருந்தாள். அவளுக்கு பக்கவாட்டில் இருவரும் அமர்ந்து கொண்டு "என்னாச்சு டா??" பரிவாக மாதவி கேட்க முறைத்தாள்.​

"உன் கோபம் எனக்கு புரியுது. ஆனா அம்மா அப்பா எது பண்ணாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கு டா.. படிச்ச பொண்ணு புரிஞ்சுக்கோ டா.." நாடி பற்றி கொஞ்சினார் மாதவி."எனக்கு இந்த கருப்பன பிடிக்கல.. " என்று அவள் சீற "அப்படியெல்லாம் சொல்ல கூடாது நிலா.. அவர் உன் புருஷன்.. அந்த புள்ளைக்கு கலர் கொஞ்சம் கம்மி.. அத விட வேற என்ன குறை??" என்றவரை கொஞ்சம் கம்மி?? என்று முறைத்தாள்.​

"இங்க பாரு நிலா.. நீ சின்ன பொண்ணு இல்ல. உனக்கு விவரம் தெரியும். படிச்ச பொண்ணு நீ.. புருஷன கைக்குள்ள போட்டுக்குற வழிய பாரு.. அவங்க மொரட்டு தனமா இருந்தாலும் நாம தான் அனுசரிச்சு போகணும். உன் புருஷனுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கோ. நீ பண்றதெல்லாம் அவருக்கு புடிக்கணும். உடம்பு சிலிர்த்து போய்.. உன் மடியில்லையே மயங்கி கிடக்கும்.. அப்டி இருக்கனும் உன் கை வித்த.." என்று கூற அதிர்ச்சியாய் பார்த்தாள் நிலா.​

"என்ன பாக்குற?? இப்போ உள்ள புள்ளைங்க எல்லாம் ஏதேதோ வீடியோ பாக்குறாங்களே.. அத பாத்து கத்துக்கோ.. கட்டில்ல புருஷன்கிட்ட வெக்க படாம நடந்துக்கிட்டா தான் புருஷன முந்தானைல முடிஞ்சு வச்சுக்க முடியும்.." என்று கூற, "இப்போ வாய மூடுறியா இல்லையா??" என்று கத்தினாள்.​

அவள் கத்தலில் ராசாத்தி வாய் மூடி கொள்ள, "கெழவி.. என்ன பேசுற?? பேத்திகிட்ட இப்டி பேச உனக்கு வெக்கமா இல்ல?? என்ன சொன்ன கட்டில்ல சிறப்பா செய்யணுமா??" விழி உருட்டி அவள் கேட்க "இப்படியெல்லாம் சீப்பா நான் நடந்துக்க மாட்டேன். உடம்ப காட்டி என் புருஷன அடிமையா நடத்த மாட்டேன்.. அவன் என்கிட்ட அடங்கி போறது என் அன்பு, பாசம், காதலுக்காக தான் இருக்கணுமே தவிர செடியூஸ் பண்ணி அவர மயக்க நான் ஒன்னும் சீப்பான பொண்ணு இல்ல.. இனிமே இப்டி அட்வைஸ் பண்ணிட்டு வந்த மொத டெட் பாடி நீ தான்.." என்றுவிட்டு எழுந்து சென்றாள்.​

அவளை பார்த்த ராசாத்தி "அசிங்கமா?? எதுல என்ன டி அசிங்கம் இருக்கு. என் அம்மா எனக்கு சொன்னத தானே இவளுக்கு நான் சொன்னேன்.. அசிங்கம்ன்னு சொல்றா.." என்று அவர் பார்க்க அவர்கள் முன் வந்து நின்றான் இன்பா…​

தொடரும்…​

 

Advi

Well-known member
இந்த பிள்ள வாய் தான் சும்மாக்காச்சிக்கும் பிடிக்கல அப்படினு சொல்லுது.....

அவனை லவ் தான் பண்றா, அதை ஏன் மறுக்கரா?????

அவனோட தொழிலா?????
 
இந்த பாட்டி என்ன வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறாங்க???... ரெண்டு பேருக்கும் கோவம் இருக்குற மாதிரியே தெரியலையே???
 

Mathykarthy

Well-known member
பிடிக்கல ன்னு சொல்லிட்டு நல்லா சைட் மட்டும் அடிக்கிறா... 🤣

இன்பாவோட அம்மா பிரிஞ்சு இருக்குறதுக்கு வேற காரணம் இருக்கா 🤔 நானும் இவனோட வட்டித் தொழில் பிடிக்காம தான் தனியா இருக்காங்கன்னு நினைச்சேன்.. 😒
 
Top